ஜானகி மந்திரம் 13
மைதிலி தொடர்ந்தாள்.
“வர 15ஆம் தேதி அவங்களுடைய கண்டாலா பங்களாவில் பார்ட்டி நடத்தப் போறதா நேத்து பேசிக்கிட்டு இருந்தாங்க…”
சஞ்சு கைகளை மார்பின் குறுக்காக கட்டிக் கொண்டு,
“அதுக்கு?” என்று கேட்டாள்.
“எப்படியும் கேர்ள்ஸ், பாய்ஸ் ஆட்டம் பாட்டம்… then ஆல்கஹால் இருக்கும். யாருக்கு தெரியும்… drugs கூட இருக்கலாம்,” மைதிலி நிதானமாக சொன்னாள்.
“இந்த விஷயத்தை கலாச்சார காவலர்கள்ன்னு சொல்லிட்டு திரியிறானுங்களே அவங்க கிட்ட போட்டுக் கொடுக்கலாம்."
(சஞ்சுவும் இந்துவும் புரியாமல் பார்க்க...)
"அதான் அந்த ‘மஹாராஷ்ட்ர ஸ்வாபிமான் ரக்ஷக் சங்கடனா’ன்னு ஒரு குரூப் இருக்கே... அவங்கள சொல்றேன்... pune டிஸ்ட்ரிக்ட்ல ரொம்ப ஆக்டிவா இருக்காங்க. போலீசுக்கும் anonymous-ஆ call பண்ணி சொல்லலாம்.”
இந்து கண்களை பெரிதாக்கி,
“ இந்த வருஷ Valentine’s Day-க்கு பார்க்கில் உட்கார்ந்த ஜோடிகளை அடிச்சு வெரட்டி பிரச்சனையாச்சே, அந்த குரூப்பா?” என்று கேட்க,
“அதே,” என்றாள் மைதிலி.
இந்து சஞ்சுவுக்கு விளக்கினாள்,
“Night club, private party, டூரிஸ்டா வர்ற லவ்வர்ஸ்ன்னு தெரிஞ்சா போதும். ‘கலாச்சாரம் கெட்டுப் போகுது’ன்னு சொல்லிட்டு உள்ளே புகுந்து கலாட்டா பண்ணுவாங்க. சின்ன சின்ன விஷயங்களுக்கும் போராட்டம் ஊர்வலம் எல்லாம் நடத்துவாங்க. பெரிய கட்சிகளின் ஆதரவும் மறைமுகமாய் இருக்கு. அதனால இவனுங்க பண்ற அட்ராசிட்டியை தடுக்க முடியல..."
சஞ்சு ஓஹோ என தலையசைத்தாள்.
“நானும் அந்த குரூப் பத்தி கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா இவ்வளவு டீடைல் தெரியாது…”
மைதிலி: 'பொண்ணுங்களும் பசங்களும் சேர்ந்து பங்களாவில் கூத்தடிக்கிறாங்க’ன்னு அவனுங்க ஆபீஸ்க்கு போன் பண்ணி போட்டு கொடுத்தா போதும். டென்ஷன் ஆயிருவாங்க. அவங்க நேர்ல போய் கலாட்டா பண்ண ஆரம்பிச்சா பிரச்சனை பெருசாயிடும். பேப்பர்ல வரும்… டிவில வரும்… காலேஜ் பேரு, DSG குரூப் பெயர் வெளியில கசியும்…. தேவையில்லாம நாறிப் போயிருவாங்க.”
இந்து: Arey baapre!!
மைதிலி: “பிரச்சனை direct-ஆ principal-க்கு போயிரும், இவ கூட சேர்றது பிரெஸ்டிஜ்னு நினைச்சுட்டு இருக்குற பொண்ணுங்க கூட சேரணுமான்னு யோசிப்பாங்க. பேச தயங்குவாங்க. இதுதான் first step.”
சஞ்சுவும் இந்துவும் ஆச்சரியமாக அவளை பார்த்தார்கள்.
இந்து சிரித்தபடி,
“Chutki… நீ எப்பவும் அமைதியா இருக்கறதுனால ஒண்ணுமே தெரியாதுனு நினைச்சா… இவ்வளவு solid-ஆ ஐடியா சொல்றியே! பயங்கரமான ஆளுடி நீ…” என்றாள்.
மைதிலி கமெண்டுக்கு சிரிப்பை பரிசளித்துவிட்டு தொடர்ந்தாள்.
“இந்த பிரச்சனை வெளியில வந்துச்சுன்னா DSG வெளியில தலை காட்டவே முடியாது. கொஞ்ச நாளைக்கு அமுங்கிருவாங்க. அந்த கேப்புல Step Two implement பண்ணணும்.”
“Step Two????” — சஞ்சு.
“ஸ்ரேயா, சலோனி, பிரணவி… மூணு பேரையும் பிரிச்சு விட்டுட்டா DSG குரூப் தானா கலகலத்து போயிரும்.”
சஞ்சு கண்ணை சிமிட்டினாள்.
“அதுக்கு ஏதாவது ஐடியா ready-ஆ இருக்கா?”
மைதிலி தோளை குலுக்கினாள்.
“அட ஐடியா வராம போயிருமா? முதல்ல Step One ஐ போட்டு தாக்குவோம். அப்புறம் Step Two-க்கு போலாம். என் பிரெண்ட்ஸ் கூட பிரச்சினை பண்றது யாரா இருந்தாலும் சரி... நான் சும்மா விடமாட்டேன்.."
ஒரு நொடி —
சஞ்சுவும் இந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
இவ்வளவு நாட்கள் DSG குரூப்பின் அட்டகாசம் தாங்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தவர்களுக்கு — திடீரென ஒரு வழி கிடைத்திருந்தது.
சஞ்சு திடீரென எழுந்து,
“சூப்பர் சுட்கி!” என்று குதூகலமாக கத்தினாள்.
இருவரும் ஆளுக்கொரு பக்கமாக வந்து மைதிலியை கட்டிப் பிடித்து நசுக்கினார்கள்.
“ஏய் விடுங்க… விடுங்க!” என்று சிரித்தபடியே நகர முயன்றாள் அவள்.
ஆனா அவர்கள் விடவே இல்லை — இன்னும் இறுக்கமாக கட்டிப்பிடித்தபடி, அவள் சிரிப்பை முழுக்க தங்களுக்குள் அடைத்து வைத்தார்கள்.
ஒரு கட்டத்தில், ஒருத்தி ஒரு கன்னத்தில்… இன்னொருத்தி இன்னொரு கன்னத்தில் — முத்தமிட்டு ஈரப்படுத்தினார்கள்.
SSG கல்லூரி – காலை 9:45 AM
பிகாம் பைனல் இயர் கிளாஸ் ரூம் வாசலுக்கு அருகே வந்த மைதிலி உள்ளே நுழையப் போனாள்.
“எக்ஸ்க்யூஸ் மீ!”
என்ற குரல் கேட்டு நின்றாள்.
காரிடாரின் சுவரில் சாய்ந்து, கையில் ஒரு நோட்டு புத்தகம், முகத்தில் தேவையில்லாத அசட்டு சிரிப்பு — டைரக்டர் ஜேம்ஸ் கேமராமேன்.
“யார் நீங்க? உங்க பேர் என்ன?” அவளைப் பார்த்து கேட்டான்.
மைதிலி அமைதியாக பார்த்தாள். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே!
ஞாபகம் வந்தது!
அன்றைக்கு மனோவுடன் பார்த்திருக்கிறாள்.
“முதல்ல நீங்க யாரு? ஏன் இதெல்லாம் கேக்கறீங்க?”
ஜேம்ஸ் கண்ணாடி இல்லாமலேயே imaginary-ஆ சரி செய்யும் பாடி லாங்குவேஜ்.
“விஷயம் இருக்கு. முதல்ல சொல்லுங்க. இந்த காலேஜுக்கு புதுசா இருக்கே… அதனால கேக்குறேன்.”
மைதிலி சுருக்கமாக தன் பெயர், டிபார்ட்மெண்ட், சொந்த ஊர் எல்லாம் சொன்னாள்.
சொல்லிவிட்டு சந்தேகமாக கேட்டாள்.
“சொல்லிட்டேன். என்ன விஷயம் சொல்லுங்க?"
ஜேம்ஸ் சற்று நெருங்கி வந்து, குரலை தழைத்தான்.
"அன்னைக்கு நானும் எங்க பாஸும் வந்தபோது… இந்த பால்கனியில் இருந்து நீங்க எங்க பாஸை குறுகுறுன்னு பாத்துட்டு இருந்தீங்களே… அதனால தான் கேட்டேன்.”
மைதிலி யோசித்தாள்.
‘ பாஸ்’ன்னா… மனோவா?'
“ஆமா பார்த்தேன்,” சிம்பிளா சொன்னாள்.
அவள் பார்த்ததாக ஒத்து கொண்டதும் ஜேம்ஸ்க்கு உலகளாவிய உற்சாகம்.
மைதிலி: “காலேஜே அவர பத்தி பேசுது. என்ன specialன்னு தெரிஞ்சுக்கத்தான் பாத்தேன். தப்பா?”
ஜேம்ஸ் மறுப்பது போல் தலையசைத்து,
“தப்பில்லை… தப்பில்லை… தப்பே இல்ல! அப்ப பார்த்தது கன்ஃபார்ம் தான் இல்லையா?" என்றான்.
அந்த நேரம் — கிளாஸ் ரூமுக்குள் இருந்து திடீரென்று அதட்டலான குரல்.
“ஏய்!”
வெளியே வந்தாள் ரிதிகா சர்மா — கிளாஸ் ரெப்ப்ரெசெண்டேட்டிவ்.
“என்ன???? எங்க கிளாஸ் பொண்ண கலாச்சிக்கிட்டு இருக்கியா?” என்று அதட்டலாக கேட்டாள்.
ஜேம்ஸ் உடனே நிமிர்ந்து நின்றான்.
“ஹலோ! கலாய்க்கிறேனா? யார் சொன்னா? இது மரியாதை நிமித்த சந்திப்பு.”
ரிதிகா கண்களை சுருக்கி மைதிலியை பார்த்தாள்.
“என்ன மைதிலி?”
மைதிலி சிரித்தாள்.
“yes… casual-ஆ தான் பேசிட்டு இருக்கார்.”
ரிதிகா எக்ஸ்ட்ரா இரண்டு விநாடி ஜேம்ஸை scan பண்ணிவிட்டு,
“ஹூம்…” என்று சொல்லி உள்ளே திரும்பி போனாள்.
அவள் சென்றதும்,
ஜேம்ஸ் லைட்டாக நெளிந்தபடி, குரலை இழுத்தான்.
“நீங்க பார்த்தத… எங்க பாஸும் பார்த்தாரு…
அது சாதாரண ‘Dilwale Dulhania Le Jayenge’ level பார்வை இல்ல…
கொஞ்சம் ‘Pehla Nasha’ feel… கொஞ்சம் ‘Kuch Kuch Hota Hai’ type confusion… மேல கொஞ்சம் ‘Mohabbatein’ background breeze…”
மைதிலி புரியாமல் நின்றாள்.
ஜேம்ஸ் இன்னும் full flow-வில்:
“அந்த balcony shot full ‘Qayamat Se Qayamat Tak’ vibe… அடுத்தது என்ன தெரியுமா? Straight ‘Dil To Pagal Hai’ mode…”
அப்புறம்— story ‘Hum Aapke Hain Kaun’ல இருந்து ‘Kabhi Kabhi’க்கே போயிடும்…”
மைதிலி: “என்ன சொல்றீங்க? புரியலையே?”
ஜேம்ஸ் சிரித்தான்.
“Nothing… trailer தான். பிக்சர் அபி பாக்கி ஹே."
மைதிலி அவன் சொன்னதை டி-கோட் பண்ண முடியாமல், கன்பியூசனில் பார்க்க,
“Anyway… தொடர்ந்து பாருங்க… அடிக்கடி பாருங்க… நான் எங்க லீடர்கிட்ட சொல்லி வைக்கிறேன்.”
அப்படியே பின்னால் ஸ்டெப் பை ஸ்டெப்பாக நடந்து, சிரித்தபடி சென்றான்.
மைதிலி m.v: என்னாச்சு இவனுக்கு? இவனும் பைத்தியம். இவன் பாஸும் பைத்தியம்.
அவளுக்கு குழப்பம். யோசித்தபடியே கிளாஸ் ரூமுக்குள் நுழைந்தாள்.
ஜேம்ஸ் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
இரண்டு அடிகள் போய் —
திடீரென்று நின்றான்.
“நல்லா ஹேண்டில் பண்ணிட்டேடா ஜேம்ஸ்…” என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டான்
பின்னர், இரண்டு விரலால் தன் நெற்றியை தட்டிக் கொண்டு,
“Director material டா நீ…” என்று தனக்குத்தானே அப்ரிஷியேட் செய்து கொண்டான்.
அதற்குப் பிறகு —
காரிடாரின் மூலையை அடையும் முன்,
இன்னும் ஒருமுறை பின்னால் திரும்பி பார்த்தான்.
மைதிலி உள்ளே போய் விட்டாளா என confirm பண்ணிக் கொண்டு,
ஆஸ்கர் அவார்டு வாங்க போகும் டைரக்டர் போல், ஸ்டைலாக ஆங்கிள் பார்த்தபடியே நடை போட்டு மறைந்தான்.
காரிடாரில் அவனை கடந்து வந்த juniors இருவர்,
“யாருரா இவன் mental!!!!…” என்று ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
SSG கல்லூரி – மெயின் கேண்டீன் | காலை 11:15 |
செகண்ட் ஹவர் முடிந்து பதினைந்து நிமிட பிரேக்.
SSG கேண்டீன் —
ஒரே பெரிய ஹால். குறைந்தது இருபத்தைந்து டேபிள்கள்.
ஒவ்வொரு டேபிளும் நாலு பேர், ஆறு பேர், சில இடங்களில் எட்டு பேர் வரை உட்காரும் அளவு.
மாணவர்களின் அரட்டை சத்தம் ஒரு பக்கம் அலை போல எழுந்து இறங்கி கொண்டிருந்தது.
ஒரு மூலையில் சில “ப்ரொஃபஷனல்” லுக் மாணவர்கள் —
பேக்கில் இருந்து case-study நோட்ஸ் எடுத்து வைத்து, டீ குடித்துக் கொண்டே discussion.
மற்றொரு டேபிளில் junior batch — முழுக்க சிரிப்பு.
சுவர் முழுக்க soft drinks போஸ்டர்கள்.
காஷ் கவுண்டருக்கு முன் சிறிய வரிசை.
அந்த கூட்டத்தில் நடுவே —
ஒரு டேபிளை முழுக்க ஆக்கிரமித்து அமர்ந்திருந்தார்கள்:
பாபி.
மனோ.
சிக்கி.
சந்தீப்.
பிரேம்.
மணிஷ்.
அந்த நாளின் டாப்பிக் — சமீபத்தில் வெளியான ஒரு ஹிந்தி படம்.
மணிஷ்:
“டேய்… அந்த second half beach scene????”
சந்தீப் உடனே:
“செம சீன்ரா மச்சி"
மணிஷ் சிரித்து:
“Director camera வை எங்க வச்சிருக்கான், பாத்தீங்களா?
பிரேம் கூட சேர்ந்து:
காஸ்டியூம்க்கு ப்ரொடியூசர் பட்ஜெட் குடுக்கல போல..
சிக்கி முகம் சுளித்தான்.
“ஏண்டா… ஹீரோயின் என்ன டிரஸ் போட்டுருக்கான்னு பாக்குறதுக்கு தான் சினிமா போவீங்களா? படம் பார்க்க போக மாட்டீங்களா?
மூவரும் ஒரே நேரத்தில் அவனை நோக்கி திரும்பினர்.
சந்தீப்:
“நேத்து cafe ல யாரோ யாரையோ பார்த்து ஜொள்ளு விட்டுட்டு இருந்தாங்களே!!!"
சிக்கி: திருத்தம்.... ஜொள்ளு விடல்லை, நம்ம காலேஜ் பொண்ணு இங்க என்ன பண்றான்னு செக் பண்ணிட்டு இருந்தேன்.
மனிஷ்: நம்பிட்டோம், நம்பிட்டோம்.
அதே நேரம்,
பாபியும் மனோவும் சீரியஸாக ‘கல்ச்சுரல் ஃபண்ட்’ மற்றும் ‘சபான்சர்ஷிப்’ விவரங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
பாபி : “டேய், Cultural fund statement பார்த்தியா? Last event-ல collect பண்ணதுக்கும் expense figureக்கும் match ஆகல.”
மனோ புருவம் சுருக்கினான்.
“Yes... Sponsorship amount mention பண்ணல. Cash entry vague-ஆ இருக்கு.”
பாபி: “Committee meeting-ல இதை raise பண்ணும."
மனோ: “Ok... ஆனா Direct-ஆ accuse பண்ண மாட்டேன். First clarification கேட்கிறேன். Treasurer explain பண்ணட்டும்.”
பாபி தலையசைத்தான்.
“15thக்கு முன்னாடி settle ஆகணும். Proper audit இல்லனா juniors கிட்ட wrong message போயிடும்.”
அந்த “15th” என்ற வார்த்தை,
பக்கத்திலிருந்த சந்தீப், மணிஷ் காதில் விழுந்தது.
சந்தீப் எதிரே இருந்த சிக்கி காதில் விழாமல், மணிஷ்க்கு மட்டும் கேட்கிற மாதிரி வாய்ஸை கம்மி பண்ணி:
“S folder வேணுமா? P folder வேணுமா?"
இருந்தாலும் சிக்கிக்கு கேட்டது.
மணிஷ்:
“S folder"
சந்தீப்: தெரியும்டா... கும்முனு இருந்தா அதைத்தானே செலக்ட் பண்ணுவீங்க.
இருவரும் சலோனியா? பிரணவியா? யாரை செலக்ட் செய்வதென்று சிக்கிக்கு புரியாமல், கோட் வேர்டில் பேசிக் கொண்டிருந்தனர்.
மணிஷ்: சரி ஓகே. பிரச்சனை வேண்டாம். S ஃபோல்டர் லாகின் பண்றது யாருன்னு டாஸ் போட்டு பார்த்துரலாம்.
சந்தீப் ஒத்துக் கொண்டு ஒரு ரூபாய் காயினை எடுத்து சுண்டி விட...
மணிஷ்: “Heads.”
Tails விழுந்தது.
சந்தீப் வெற்றி பெருமிதத்தில் புன்னகைத்தான்.
“Okay. S account இனிமே என் control.”
மணிஷ் ஏமாற்றமடைந்தாலும், சமாளித்துக் கொண்டு:
“Fine. OK. P account நான் பாத்துக்குறேன்", என்றான்.
சிக்கி சந்தேகமாக:
“என்னடா கிளாஸ் பக்கமே போறதில்ல, என்னமோ திடீர்னு படிப்புல அக்கறை வந்த மாதிரி பேசிக்கிறீங்க?"
மணிஷ் சீரியஸாக முகத்தை வைத்தபடி,
“Project submission டா. 15thக்கு login confirm பண்ணணும்.”
சந்தீப் இன்னும் சீரியஸான குரலில்,
“Minimum one first download இல்லனா project incomplete.”
இருவரும் fist bump பண்ணிக் கொண்டார்கள்.
சிக்கி சந்தேக பார்வை பார்த்தபடியே சொன்னான்:
என்னமோ எனக்கு சரியா தோணல!
அந்த நேரம் மனோ கையை தூக்கி,
“அண்ணா… 6 வடா பாவ்! 6 Coke” என்று சத்தமிட,
கவுண்டரிலிருந்து,
“ஓகே பாய்!”
அதே நேரம் —
பிரேம் மட்டும்,
“அண்ணா… எனக்கு மட்டும் ஒரு தோக்ளா பாவ்", என்றான்.
மற்ற ஐந்து பேரும் அவனை மகா ஆச்சரியமாக திரும்பி பார்க்க,
பாபி:
“தோக்ளா and பாவா?"
சந்தீப்:
“நம்ம கேண்டீன்லயா?”
மணிஷ்:
“இது எப்போதிலிருந்து?"
( வடா பாவ் (Vada Pav) என்பது மகாராஷ்டிரா, குறிப்பாக மும்பையின் மிகவும் பிரபலமான, மலிவான Street Food. பொரித்த உருளைக்கிழங்கு வடை (வடா) மற்றும் பன் (பாவ்) ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தோக்ளா என்பது ஒரு குஜராத்தி உணவு வகை. பிரேம் குஜராத்தி பெண்ணான மனிஷாவை கரெக்ட் பண்ண ட்ரை பண்ணி கொண்டிருப்பதால்... அப்பவே குஜராத்தி உணவை சாப்பிட ஆரம்பித்து விட்டான் என்பதுதான் இந்த உள்குறிப்பு)
பாபி சிரித்தபடி:
“தோக்ளா பாவுல ஆரம்பிச்சிருக்கு... அடுத்தது காத்தியா பாவ், தீப்லா பாவ், பாப்ட்டா பாவ்ன்னு போயிட்டே இருக்கும் இனிமே நிறுத்த முடியாது..."
பிரேம் வெட்கப்பட்டு சிரிக்க,
சிக்கி: அதுக்கு ஏன்டா இப்படி வெட்கப்படுற? @#₹%^& என்று திட்டி விட்டு, அவசரப்பட்டு கெட்ட வார்த்தை பேசியதால் வாயில் தட்டிக் கொண்டு, "ஜெய் பஜ்ரங்பலி" என்றான்.
கேண்டீன் அண்ணா வந்து,
5 வடா பாவ், ஒரு தோக்ளா பாவ் டேபிளில் வைத்தார். அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
சிக்கி சுற்றிலும் மற்ற டேபிளை பார்க்க,
இரண்டு ஜூனியர் பசங்களும் ஒரு பொண்ணும் ஒரு டேபிளில் சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
சிக்கி அந்த டேபிளை பார்த்து முறைக்க....
அவன் பார்ப்பதை சிறு நேரத்தில் கவனித்து விட்டனர்.
அரட்டை சத்தம் குறைந்தது.
“டேய்… சீனியர் சிக்கி பாக்குறாப்புல…”
சொன்னவன் டீ கப்பை எடுத்துக்கொண்டு வேறு டேபிள் நகர்ந்தான்.
அவள் போன் வந்தது மாதிரியே குனிந்து பேச ஆரம்பித்தாள்.
மூன்றாவது பையன் நைசாக கேஷ் கவுண்டருக்கு சென்றான்.
மூன்று விநாடியில் டேபிளில் பேச்சு சத்தம் கலாசானது.
சிக்கி கெத்தாக சிரித்தான்.
“அது... அந்த பயம் இருக்கணும்.."
அதே நேரம் —
டைரக்டர் கேண்டீனுக்குள் நுழைந்தான்.
நேராக, சிக்கியின் அருகே வந்து நின்று, அவன் காதுக்குள் கிசுகிசுத்தான்.
“பாஸ்…”
சிக்கி திரும்பினான்.
ஜேம்ஸ்:
“Balcony பொண்ணு பேரு மைதிலி.”
சிறிய இடைவெளி.
“அது உங்களை தான் சைட் அடிச்சிட்டு இருக்கு.”
மறுபடியும் இடைவெளி.
“Confirm.”
அந்த வார்த்தை சிக்கியின் காதில் விழுந்த நொடி —
அவனுடைய கண்கள் பெரிதானது. உதடு தானாக திறந்தது. உற்சாகம் உடம்பு முழுக்க ஏறியது.
அவன் control பண்ண முடியாமல் —
“ஹா!” என்று உற்சாகத்தில் துள்ளி குதிக்க, கையில் வைத்திருந்த கோக் பாட்டிலும் காற்றில் மேலே பாய்ந்தது.
டேபிளில் இருந்த மற்றவர்கள் குழப்பமாக பார்க்க,
ஜூனியர்கள் திரும்பி பார்த்து திகைத்தார்கள்.
ஒரு ஸ்லோ-மோஷன் காட்சி போல, அந்தப் பாட்டில் சுழன்று மேலெழ, அதிலிருந்த குளிர்பானம் சிதற, கேண்டீன் சத்தங்கள் அடங்கிப் போனது போன்ற ஒரு பிரமை!
பாட்டில் — அந்தரத்தில்.
ஃபிரீஸ் ஃபிரேம்.
கேண்டீன் சத்தம் — மியூட்.
பின்னணியில் ஒரு கற்பனை கோரஸ் வயலின்கள் இசைக்க ஆரம்பிக்க....
கட்.
செப் 15 | மாலை 6.30 மணி
கண்டாலா – ஹில் டாப் பங்களா
வளைந்து வளைந்து மலைப்பாம்பு போல் மேலே ஏறும் மலைச் சாலை.
கீழே பனிமூட்டம் படர்ந்த பள்ளத்தாக்கு.
கண்டாலா மலைச்சரிவின் அந்த உச்சிப்பகுதி, பனிமூட்டத்தால் ஒரு ‘HD’ பொலிவுடன் ஜொலித்துக் கொண்டிருந்தது.
தூரத்து பள்ளத்தாக்கில், டவுன் பகுதியின் வெளிச்சங்கள் — நட்சத்திரங்கள் போல் சிதறி கிடந்தன.
அந்த உயரத்தில் தனிமையாக எழுந்து நிற்கும் பெரிய பங்களா. அந்தப் பங்களாவிற்குள்ளிருந்து கசிந்த ‘எலக்ட்ரிக் ப்ளூ’ மற்றும் ‘மெஜந்தா’ நிற விளக்குகள், அங்கிருந்த வெள்ளை நிறப் பனிப்படலத்தின் மேல் பட்டு ஒரு மாயாஜால போதையை அந்த சூழலில் உருவாக்கியிருந்தது.
முன்புறம் —
பெரிய இரும்புக் கேட்.
அதனருகே security cabin.
வாட்ச்மேன், டார்ச், போன், எல்லாம் ரெடி.
கேட் திறந்தால் —
நீளமான டிரைவ்வே.
இருபுறமும் trimmed hedge.
ஆனால் —
பங்களாவுக்கு அது மட்டும் தான் entry அல்ல.
பங்களாவுக்கு இரண்டு வழிகள்.
பின்புற entry — பார்க்கிங்க்கு செல்வதற்கான வழி. விரிந்த ஓபன் பார்க்கிங் ஸ்பேஸ். அங்கே ஏற்கனவே 2 கார்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன
ஒரு SUV.
ஒரு luxury sedan.
பங்களா ஹாலில் – Squad Krush party Setup.
டபுள் ஹைட் சீலிங்..
ஹால் நடுவே கிரிஸ்டல் சாண்ட்லியரின் வெளிச்சம்.
சுவரில் கலர் லைட்டுகள்.
ஒரு பக்கம் portable DJ console.
ப்ளூடூத் ஸ்பீக்கரில் ஏதோ ஒரு இங்கிலீஷ் பாப் மிக்ஸ் கேட்டுக் கொண்டிருந்தது.
ஹால் நடுவே இடம் காலியாக வைக்கப்பட்டிருந்தது —
நடனத்துக்காக.
லெப்ட் சைடில் closed bar cabinet. அதற்கு பக்கத்தில் snacks counter, Ice bucket-கள், Mocktail glasses வரிசை மற்றும் Cola, orange, soda bottles.
பக்கத்தில் துணியால் மூடப்பட்டிருந்த bar trolley —
Glass sliding door கதவு வழியாக வெளியில் பள்ளத்தாக்கு விளக்குகள் தெரிகின்றன.
மலைப்பனி அவ்வப்போது கண்ணாடியில் மெல்ல படர்கிறது.
ஸ்ரேயா
சலோனி.
பிரணவி.
திஷா.
தான்வி.
மகிமா.
மகிமாவுக்கு மட்டும் கொஞ்சமாக பதட்டம்.
மேலும் ஒரு சில squad sisters.
பார்ட்டி இன்னும் ஆரம்பிக்காததால், ஆகாஷ் மற்றும் அவனுடன் வந்த ஒரு சில நண்பர்கள் லானில் நின்று பேசிக் கொண்டிருந்தனர் — அனைவரிடமும் பணக்கார செழுமை
ஆகாஷ்: Blazer casual style.
ஹாலில் கேர்ள்ஸ் பேசிக் கொண்டிருந்தனர்.
“இன்னும் வரலையே?” என்று திஷா.
“வருவாங்க,” என்று ஸ்ரேயா நிதானமாக சொன்னாள்.
அனைவரும் மனோவும் அவன் நண்பர்களும் வருவதற்காக காத்திருந்தனர்.
இடைச்செருகல் –
ஒரு மணி நேரத்திற்கு முன்னால்,
கண்டாலா டவுனில் ஒரு காயின் பூத்.
ஒரு ரூபாய் நாணயம்.
சஞ்சு அதை உள்ளே போட்டு நம்பரை டயல் செய்தாள்.
“ஹலோ… மஹாராஷ்ட்ர ஸ்வாபிமான் ரக்ஷக் சங்கடனா அலுவலகமா?”
“கண்டாலா நம்பர் 172/5, hilltop தனி பங்களாவில் இன்னைக்கு ராத்திரி பசங்க பொண்ணுங்கல்லாம் சேர்ந்து பாட்டு டான்ஸ்ன்னு கூத்தடிக்க போறாங்க. மற்ற மற்ற விஷயங்களும் இருக்கலாம்… நீங்க இருக்கிற ஏரியால இந்த மாதிரி அநியாயம்ல்லாம் நடக்குது. பாத்துக்கங்க..."
எதிர்முனை: யார் நீ? எங்கருந்து பேசுற?... என்று கேட்க,
சஞ்சு: அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? நம்ம நாட்டோட கலாச்சாரம் கெட்டுப் போகக்கூடாதுன்னு நினைக்கிற ஒரு நலம் விரும்பின்னு வேணா வச்சுக்குங்க?
முகவரி மீண்டும் சொல்லப்பட்டது.
தொலைபேசி வைக்கப்பட்டது.
இந்து — அடுத்த ஃபோன் கால்.
“ஹலோ போலீஸ் ஸ்டேஷனா...?
விஷயம் வேறு மாடுலேஷனில் சொல்லப்பட்டது.
Line cut.
போன் பேசி முடித்ததும் மைதிலி மெதுவாக:
“Step One… done.”
மூவரும் ஹை ஃபை செய்து கொண்டு ஹாஸ்டலை நோக்கி கிளம்பினார்கள்.
கண்டாலா hilltop பங்களா – பின்புற parking.
பின்புற கேட் வழியாக வரிசையாக பைக்குகள் உள்ளே நுழைந்தன.
மனோ.... அவனை தொடர்ந்து,
பாபி.
சந்தீப்.
மணிஷ்.
மொத்தம் 4 பைக்குகள்.
மனோ முன்னால் வர, அவனைத் தொடர்ந்து மற்ற மூவரும் ஒரு ‘கெத்தான’ அணிவகுப்பாக உள்ளே நுழைந்தனர். சிக்கி வந்தால் பார்ட்டியின் Vibe கெட்டுவிடும் என்பதால், அவனை லாவகமாகக் கழட்டிவிட்டு வந்திருந்தார்கள்.
பைக்குகளை சீராக நிறுத்திவிட்டு எஞ்சினை அணைத்தார்கள். மனோ தனது ஹெல்மெட்டை கழற்றி பைக்கின் மேல் வைத்தான்.
கண்களில் இருந்த அந்த விலையுயர்ந்த கூலிங் கிளாஸை ஸ்டைலாகக் கழற்றி, தனது ஷர்ட் பாக்கெட்டில் செருகிக் கொண்டான்.
சந்தீப் தன் தலைமுடியை சரிசெய்தபடி, “மச்சி... பிளேஸ் வேற லெவல்ல இருக்குல்ல? ஸ்ரேயா சரியான ஸ்பாட்டை தான் புடிச்சிருக்கா!” என்றான் உற்சாகமாக.
மணிஷ் ஒரு குறும்பு சிரிப்புடன், “ஆமாடா... ஆனா உள்ள இருக்கிற சரக்கை விட, அந்த ‘S’ and 'P' ஃபோல்டர் மேட்டரை நினைச்சா தான் இப்போவே கிக்கா இருக்கு!” என்று சொல்ல, சிரித்தனர்.
பாபி அவர்களை அடக்கினான்: “டேய்... கொஞ்சம் டீசன்ட்டா இருங்கடா. உள்ள போயிட்டு ஏதாவது கலாட்டா பண்ணி மனோவோட பேரை கெடுத்திடாதீங்க. கெத்து ரொம்ப முக்கியம்!”
“ஓகே... லெட்ஸ் கோ!” — மனோ சொல்ல, நால்வரும் ஜாலியாகத் தங்களுக்குள் கிண்டல் செய்தபடி, பின்புறப் படிக்கட்டை நெருங்கினர்.
அதே நேரத்தில்,
பங்களாவின் உள்ளே இருந்து கசிந்த டிஜே இசையின் அதிரடி vibe அவர்களை ஆட்கொண்டது. ஆட்டத்திற்குத் தயாரான துள்ளலுடன் அவர்கள் உற்சாகமாக உள்ளே நுழைந்தனர்.
தொடரும்
உங்களின் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவிடவும்