All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

ராமனின் மோகனம் ஜானக...
 
Notifications
Clear all

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்

Page 2 / 2
 

Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 1 year ago
Posts: 153
Topic starter  
ஜானகி மந்திரம் 11
 
மாலை 3:30 PM | ஆங்கிலோ இந்தியன் காபி ஷாப், கண்டாலா
கண்டாலாவின் அந்த ‘ஆங்கிலோ இந்தியன்’ காபி ஷாப், மலைப்பாதையின் வளைவில் ஒரு பெரிய சைஸ் மரக்குடில் போல  அமைந்திருந்தது. அந்த மதிய வேளையிலும் வெளியே மலை முகடுகளை மேகங்கள் முத்தமிட்டுக் கொண்டிருக்க, காபி ஷாப்பின் உள்ளே வறுத்த காபி கொட்டைகளின் வாசனை கதகதப்பாக நிறைந்திருந்தது. தேக்கு மரத்தால் ஆன சிறிய மேஜைகள், குறைவான வெளிச்சம் தரும் மஞ்சள் நிற விளக்குகள், சுவரில் மாட்டப்பட்டிருந்த பழைய இரும்பு சட்டங்கள் என அந்த இடமே ஒரு இதமான சூழலை தந்தது. ஜன்னல் வழியே பார்த்தால், தூரத்தில் மேகக்கூட்டங்கள் மலை சரிவுகளில் மெல்ல இறங்குவது அழகான ஓவிய காட்சி.
 
கவுண்டரில் நின்றிருந்த மேலாளர் சுரேந்தர் சிங், தன் தடித்த கண்ணாடியை சரிசெய்தபடி மைதிலியை ஒருமுறை மேலிருந்து கீழ் வரை பார்த்தார். 
 
"பாரு மைதிலி, நீ ஒரு காலேஜ் ஸ்டூடண்ட்னு தெரிஞ்சுதான் நான் உனக்கு இந்த பார்ட்-டைம் வேலைக்கு ஒத்துக்குறேன். உன்னோட படிப்பு செலவுக்காக வேலை தேடுறேன்னு சொன்னதால மட்டும்தான் இந்த சலுகை," என்று வட இந்திய தொனி கலந்த கனத்த குரலில் ஆரம்பித்தார்.
 
"ஆனா இங்கே சில ரூல்ஸ் இருக்கு. ஈவினிங் கரெக்டா 4 மணிக்கு நீ இங்கே ரிப்போர்ட் பண்ணனும். 9 மணி வரைக்கும் ஷிப்ட். அப்புறம் ரொம்ப முக்கியமானது, இந்த காபி ஷாப் யூனிஃபார்ம் கண்டிப்பா போட்டுக்கணும். ஸ்டூடண்ட் தானேன்னு வேற எந்த சலுகையும் இங்கே கிடையாது. வர்ற கஸ்டமர்ஸ் எல்லாம் கொஞ்சம் ஹை-கிளாஸ் ஆளுங்க, அவங்ககிட்ட ரொம்ப கண்ணியமா நடந்துக்கணும். சிலரு நார்மலா இருப்பாங்க.. சிலர் டென்ஷனா பேசுவாங்க. அதுக்கெல்லாம் ரெஸ்பான்ஸ் பண்ண கூடாது. பொறுமையா ஹேண்டில் பண்ண தெரியணும் புரியுதா?" என்றார் சுரேந்தர் சிங்.
 
மைதிலி நிம்மதியுடன் தலையாட்டினாள். "Yes sir, கண்டிப்பா கவனிச்சுக்கிறேன்," என்றாள்.  
 
மேனேஜர்: சரிமா, நாளையிலிருந்து வேலைக்கு வந்துரு.
 
அம்மாவுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும், தன் சொந்த செலவுகளைக் கவனித்துக் கொள்ளவும் இந்த வேலை அவளுக்கு ஒரு பெரிய பிடிமானமாக தெரிந்தது.
 
அதே நேரம் | SSG College Campus
 
மாலை மூன்று மணிக்கு காலேஜ் முடிந்திருந்தது.
 
வராண்டாக்களில் காலை முழுக்க குவிந்திருந்த சத்தங்கள், இப்போது ஒரு பழைய ரெக்கார்டு போல தேய்ந்து போயிருந்தது.
 
குப்பை காகிதங்கள் மட்டும் காற்றில் சறுக்கி ஓட, காலேஜ் வளாகம் தன் சுவாசத்தை இழுத்துக் கொண்டு, இரவுக்கான அமைதிக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.
 
கிரிக்கெட் கிரௌண்ட் —
 
முழுக்க காலி.
 
ஆனால்…
 
பக்கத்தில் இருந்த ஃபுட்பால் கிரவுண்ட் உயிருடன் இருந்தது.
 
மனோ, கோல் போஸ்டுக்கு நேராக நின்றிருந்தான்.
 
சிக்கி — கையுறை போட்டுக் கொண்டு, கோல்கீப்பர் பொசிஷனில்.
 
பெனால்டி சூட் அவுட் ப்ராக்டீஸ்.
 
20 யார்டு தூரத்தில்,
 
பந்து தரையில் வைக்கப்பட்டது.
 
மனோ சில அடிகள் பின்னால் சென்று நின்றான்.
 
ஒரு கணம் கோல் போஸ்டை பார்த்தான்.
 
அடுத்த நொடி — சிக்கியின் கண்களை.
 
பந்து அடிக்கப் போகும் காலின் முனை,
 
கோணத்தை சரி பார்த்து,
 
உடல் எடை forward-ஆ shift ஆனது.
 
Run-up.
 
Strike.
 
பந்து —இடது மூலையை நோக்கி, தரையோடு ஒட்டியபடி சென்றது.
 
சிக்கி டைவ் அடித்தான்.
 
ஆனால் அவன் கைகளை உரசிக்கொண்டு சென்று பந்து கோல் போஸ்ட்க்குள் நுழைந்தது.
 
கோல்.
 
“அட பாவி…”
 
சிக்கி பல்லைக் கடித்தான்.
 
அதே நேரம்,
 
கிரவுண்டில் சில ஜூனியர் பசங்க passing drills செய்து கொண்டிருந்தார்கள்.
 
கிரவுண்ட் ஓரத்தில் —
 
பாபி, சந்தீப், மனிஷ் மற்றும் டைரக்டர் ஜேம்ஸ் கேமராமேன்.
 
புல் மேல் உட்கார்ந்து  வம்பளந்து கொண்டிருந்தனர்.
 
சந்தீப் சிரித்தான்.
 
“டேய்… பிரேம் எங்கே?”
 
மனிஷ்: மனிஷாவை ட்ராப் பண்ணுவதற்காக போயிருக்கான்.
 
பாபி: அதுக்குள்ள டிரைவர் டூட்டியா?
 
எல்லாரும் சிரித்தார்கள்.
 
அப்போது, இரண்டு ஜூனியர் பசங்க தலையை சொரிந்தபடி தயங்கி தயங்கி வந்து நின்றார்கள்.
 
ஒருவன் முகத்தில் கடுப்பு தீற்றல்.
 
“சார்... சிக்கி சார் ரொம்ப ரோதன பண்ணுறாரு…”
 
சந்தீப் புருவங்களை உயர்த்தினான்.
 
“என்னடா?”
 
“கேர்ள் ஃப்ரெண்ட் கூட பேசவே முடியல சார்… ரொம்பவே டார்ச்சர் பண்றாரு..."
 
சந்தீப் அவனை சமாதானப்படுத்தும் விதத்தில் தோளை தட்டி,
 
“நம்ம பையனா போயிட்டா…
அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கடா. அவன் கண்ணு முன்னால கடலை போடாதீங்க..." என்றான்.
 
ஆனா அந்த ஜூனியர் விடவில்லை.
 
"இவரை பார்த்து மிரண்டு,
எங்க கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எங்களையே avoid பண்ணுறாங்க.”
 
மனிஷ் சிரித்தபடி சொன்னான்:
 
"ஓ!!! அந்தளவுக்கு ஜூனியர் பசங்கள மிரட்டி வச்சிருக்கானா?"
 
ஜூனியர் இருவரும் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
பாபி முகம் சற்று சீரியஸ் ஆனது.
 
“இல்லடா… இவனுங்க சொல்றது கரெக்டு தான். ரொம்ப ஓவர் டார்ச்சர் தான் பண்றான். ஜூனியர் பசங்கள மிரட்டுறது ஓகே நம்மளையே ஆடர் போடுறானே. எத செஞ்சாலும் இவனுக்கு தெரியாம பண்ண வேண்டியிருக்கு... இல்ல, கொசு மாதிரி காதுக்குள்ள சத்தம் போட்டுக்கிட்டே இருப்பான்.
 
சந்தீப் சந்தேகமாக:
 
“என்னடா அப்படி இவனுக்கு தெரியாம பண்ற?" என்று கேட்க,
 
பாபி: சேட்டிங்கில் ஒரு பிகர் உஷாராகிருக்கு.. பேச்சு பழக்க வழக்கம் எல்லாம் பாத்தா ஏதோ பாரின் பிகர் மாதிரி தெரியுது.  ஆனா இவனுக்கு தெரிஞ்சா டென்ஷன் ஆயிருவானேன்னு மறைச்சு மறைச்சு chat பண்ண வேண்டியதா இருக்கு. 
 
அந்த ஜூனியர் பையன்:
 Kya aap unse darrte ho?” (என்னது... நீங்க அவரைப் பார்த்து பயப்படுறீங்களா?)
 
பாபி:  பயம் ஒரு மயிரும் கிடையாது, பேசியே கழுத்தறுப்பான்.
 
சந்தீப்: “ நான் அப்பவே சந்தேகப்பட்டேன். ஃபாரின் ஃபிகர் மாடர்ன் பிகர்னு மூஞ்ச பாக்குறதுக்கு முன்னாடியே நம்பி chat பண்ணி, நம்ம பசங்க நிறைய பேர் பல்பு வாங்குறாங்க. நீயும் ஏமாந்து போயிராத.
ஏண்டா இவ்ளோ நாளா சொல்லல?"
 
பாபி: “இல்லடா…  just நார்மலா தான் ஓடிட்டு இருக்கு. பிக்கப் பண்ணல. பண்ணுனா…
சொல்ல மாட்டேனா?”
 
ஒரு நொடி pause.
 
“ஆனா சிக்கி மேல இந்த விஷயமா, நிறைய complaint வருது. சிங்கிள் தான் கெத்துன்னு தெனாவெட்டா சுத்திட்டு இருக்கான்.  அவனுக்கு ஒரு வழி பண்ணணும்.”
 
ஜூனியர்கள் இருவரும் அழாத குறையாக, "ஆமாண்ணா, ஏதாவது பண்ணுங்க"என்று கதறினார்கள்.
 
அவர்கள் சொல்லி முடிப்பதற்குள்— ஜேம்ஸ் மந்தகாசமாக சிரித்தான்.
 
“ஏண்டா அழுகுறீங்க? main hoon na... புதுசா directorial touch ஓட ஒரு சீன் வச்சிருக்கேன்.”
 
அனைவரும் அவனை திரும்பிப் பார்த்தார்கள்.
 
ஜேம்ஸ் தொடர்ந்தான்:
 
“கவலைப்படாதீங்க. சிக்கியோட சிங்கிள் ஸ்டேட்டஸை காலி பண்ணா இந்த பிரச்சனை…
smooth-ஆ சரியாகிடும்.”
 
கிரவுண்டுக்குள் கோல் போஸ்டில் நிற்கும் சிக்கியை அவன் பார்த்தபடியே சொல்கிறான்.
 
சிக்கி நெற்றியில் ஆரஞ்சு திலகம். கைகளில் அனுமார் உருவம் பொறித்த ஸ்டோன் பிரேஸ்லெட். கழுத்தில் சில்வர் வயர் வேலைப்பாடுடன் கூடிய அனுமான்–துளசி மாலை.
 
Cut
 
ஜேம்ஸின் மனசுக்குள் Flash.
 
விஷ்—
 
நெற்றியில் இருந்த திலகம் மங்குகிறது… மறைகிறது.
 
கையில் இருந்த பிரேஸ்லெட் காற்றில் கரைந்து விடுகிறது.
 
கழுத்திலிருந்த மாலை மெதுவாக புகையாய் சிதறி மறைகிறது.
 
Cut.
 
அதே சிக்கி.
 
எந்த திலகமும் இல்லை.
 
எந்த சாமி அடையாளமும் இல்லை.
 
அப்போதுதான் வெளியாகி இருந்த "தேரே நாம்" படத்தில் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கும் சல்மான்கான் போல தோற்றம். (நம்மூரில் வெளியான விக்ரம் நடித்த "சேது" படத்தின் ஹிந்தி பதிப்பு)
 
Cut.
 
ஜேம்ஸ்—
 
“இதான் சரியான ஃப்ரேம்…”
 
என்ன பேசுகிறான் என்று புரியாமல் மற்றவர்கள் அவனை பார்த்துக் கொண்டிருந்தனர்.
மாலை 6 PM | SSG லேடீஸ் ஹாஸ்டல்
 
ரூமில் மைதிலி மட்டுமே இருந்தாள். சஞ்சுவும் இந்துவும் பார்லர் போயிருந்தார்கள். அப்போது ரூம் கதவை தட்டிய லேடி அட்டெண்டர், "மைதிலி... ஆபீஸ்ல உனக்கு ஒரு போன் வந்திருக்கு. சீக்கிரம் வா," என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
  
மைதிலி பதட்டத்துடன் ஓடினாள். அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் அந்த  ‘டெலிபோன் ரூமில்’ ஏற்கனவே இரண்டு மாணவிகள் பேசி கொண்டிருந்தார்கள். மைதிலி தன் முறைக்காக காத்திருந்தாள். சரியாக பத்து நிமிடம் கழித்து லேண்ட்லைன் ஃபோன் மீண்டும் சிணுங்கியது.
 
ரிசீவரை எடுத்த மைதிலி, "ஹலோ..." என்றாள்.
மறுமுனையில் மெல்லிய விம்மலுடன் கலந்த ஒரு குரல், 
 
"கண்ணா... மைதிலி..."
 
"அம்மா! நீங்களா? எப்படி இருக்கீங்கம்மா? எங்கருந்து பேசுறீங்க?"
 
மைதிலியின் குரலில் உற்சாகம் கரைபுரண்டது.
 
"நான் நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க? கோயிலுக்கு வந்தேன். வெளியே காயின் பாக்ஸ்ல இருந்து பேசுறேன்... அங்க சாப்பாடெல்லாம் எப்படி இருக்கு? வசதியா இருக்கா?" 
 
ஜான்சியின் குரலில் எப்போதும் இருக்கும் அந்தத் தாய்க்குரிய கவலை தெரிந்தது.
 
"எல்லாம் சூப்பரா இருக்கும்மா. நான் கூட ஒரு பார்ட்-டைம் வேலைக்கு சேர்ந்துட்டேன். கண்டாலாவிலேயே ஒரு காபி ஷாப். அங்க மேனேஜர் strict ஆனா பாக்க நல்ல டைப் மாதிரி தான் தெரியுது," என்று தன் கஷ்டங்களை மறைத்து சொன்னாள் மைதிலி.
 
"அம்மா... மாமா, அத்தை எல்லாம் எப்படி இருக்காங்க? உங்களை ரொம்ப வேலை வாங்குறாங்களா?"
 
மறுமுனையில் ஜான்சி ஒரு கணம் மௌனமானாள். அத்தை கமலினியின் சுடுசொற்களும், அமில நாக்கும் அவளது மனதை அன்றாடம் புண்ணாக்கி கொண்டிருந்தாலும், மகளிடம் அதை சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. சமீப காலமாக ஆஸ்துமா தொந்தரவு அதிகமாகி இருந்தாலும், "அவங்க எல்லாரும் நல்லா இருக்காங்கடா. என்னைப் பார்த்துக்கிறாங்க. நீ எதைப்பத்தியும் கவலைப்படாம நல்லா படி," என்று பொய் சொன்னாள்.
 
மைதிலிக்குத் தெரியும், அம்மா பொய் சொல்கிறாள் என்று. "அம்மா... எனக்கு இங்க சாப்பாட்டுக்கு எல்லாம் பிரச்சனை இல்லை. காபி ஷாப்ல கிடைக்கிற பணத்தை வச்சு நான் சமாளிச்சுக்குவேன். மீதி பணத்தை உங்களுக்குச் செலவுக்கு அனுப்பி வைக்கிறேன். கொஞ்ச நாள் மட்டும் எப்படியாவது பொறுத்துக்குங்கம்மா," என்றாள்.
 
"வேண்டாம்மா. அங்க இருக்கிற பசங்க எல்லாம் பெரிய இடத்து புள்ளைங்க. அவங்க கூட இருக்கும்போது உனக்கு ஏதாவது தேவைப்படும். பணத்தை நீயே வச்சுக்கோ. நான் எப்படியோ சமாளிச்சுக்குவேன்," என்ற ஜான்சியின் குரல் கம்மியது.
 
மைதிலியின் மனக்கண்ணில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது அம்மாவிடம் செய்த அந்த சத்தியம் மின்னியது.
 
'பெரிய ஆபீஸராகி உங்களைச் சந்தோஷமா வச்சுக்குவேன்...'
 
"அம்மா... சீக்கிரம் நான் பெரிய ஆளா வந்துருவேன். அப்புறம் உங்களுக்கு அந்த நரகத்திலிருந்து விடுதலை," என்று சொல்லும்போதே மைதிலியின் கண்கள் பனித்தது.
 
"எனக்குத் தெரியும்டா. என் புள்ளை கண்டிப்பா சாதிப்பா. நீ அழாதம்மா..." என்று சொன்ன ஜான்சி, தன் கண்களில் வழியும் கண்ணீரைத் தன் கிழிந்த முந்தானையால் துடைத்து கொண்டாள்.
 
இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தாலும், இருபுறமும் மௌனம் தான் அதிகம் பேசியது. ரிசீவரை வைக்கும்போது இருவரது இதயம் கனத்திருந்தது. அந்த டெலிபோன் அறையில் மைதிலி மனசுக்குள் பல விஷயங்களை அசை போட்டபடி அசையாமல் நின்றிருந்தாள். எவ்வளவு அடி வாங்கியிருந்தாலும், தளர்ந்து போயிருந்தாலும், அம்மாவின் குரலை கேட்கும்போது அவளுக்குள்  போராட்ட குணம் அதிகரிக்கும்.
வணக்கம்.
 
அத்தியாயம் 11-ன் முக்கிய தலைப்பு செய்திகளை முதலில் சுருக்கமாக காணலாம்:
 
  1. நட்பின் தாராளத்தில் நனைந்து புதிய பொலிவு பெறும் மைதிலி.
 
  1. சுயமரியாதையுடன் மைதிலி தொடங்கும் உழைப்பின் முதல் அத்தியாயம்!
 
  1. கல்லூரி மென்ஸ் ரெஸ்ட் ரூமில் ரகசிய உரையாடல்கள்: ஸ்ரேயாவின் பிடியில் சிக்கத் தயங்கும் மனோ.
 
  1. காபி ஷாப்பில் விரியும் ராஜதந்திர வலை: மனோவை வளைத்து போட ஸ்ரேயா முன்னெடுக்கும் அதிரடியான ‘ஸ்குவாட் க்ரஷ் பார்ட்டி’ திட்டம்.
 
தலைப்பு செய்திகளை இப்போது விரிவாக காணலாம்:
 
Scene 1 – அர்பன் கேர்ள்ஸ் ஷோரூம் | மதியம் இரண்டு மணி
பெரிய ஷோரூம். கண்ணைக் கவரும் நிறங்களில் உடைகள்.
 
ரேக்குகளில் தொங்கும்—
 
Pastel floral குர்த்திகள்
 
Indigo ப்ளாக்-பிரிண்ட் நீளமான டாப்கள்
 
மெல்லிய சிஃபான் துப்பட்டாக்கள்.
 
High waist பலாசோ பேன்ட்கள்
 
Slim-fit ankle ஜீன்ஸ்
 
Rust நிற ஸ்டைலிஷ் ஷ்ரக்
 
பாட்டில்-கிரீன் நிறத்தில் மென்மையான ஜரி வேலைப்பாடுடன் கூடிய ஸ்ட்ரெயிட் குர்த்தி.
 
லாவெண்டர் நிற காடன் கோ-ஆர்ட் செட் (மேல்-கீழ் ஒரே டிசைன் உடை)
 
இன்னும் எக்கச்சக்கமாக....
 
சஞ்சு ஒரு டிரஸ்ஸை மைதிலி மார்புக்கு முன் பிடித்து பார்த்துவிட்டு, ஃபோல்ட் பண்ணி பில்லிங் கவுண்டருக்கு  போடுகிறாள்.
 
இந்துவும் ஒரு டிரெஸ்ஸை எடுத்து மைதிலி முன்னால் வைத்து பார்க்கிறாள்.
 
மைதிலி தயக்கத்துடன்: “வேண்டாம் ப்ளீஸ்… இதெல்லாம் ரொம்ப காஸ்ட்லியா இருக்குற மாதிரி தோணுது…”
 
சஞ்சு: 
“அன்னைக்கே சொன்னோம்ல… நாங்க என்ன செஞ்சாலும் உன்னோட நல்லதுக்குத்தான். இப்ப எங்க கிட்ட இருக்கு — நாங்க பண்றோம். நாளைக்கு உனக்கு வரும்போது எங்களுக்கு செய். இப்ப நாங்க சொல்றதை கேள்.”
 
இந்துவும் அன்பு கட்டளையாக: “No arguments” என்றாள்.
 
மைதிலி கண்களில் கண்ணீரின் பளபளப்பு.
 
Cut.
 
Changing room கர்ட்டன் திறக்கிறது.
 
மைதிலி — soft peach kurti, straight pants அணிந்து வெளிப்பட,
 
சஞ்சு & இந்து அவளை  உற்சாகமாக நெருங்கி— ஆளுக்கொரு side-ல இருந்து அவள் தோள்களில் கை போட்டு குலுக்குகிறார்கள்.
 
திரும்பி கண்ணாடியை பார்க்கிறார்கள் கண்ணாடியில் மூன்று பேரின் ரிப்லெக்ஷன்.
 
சிரிப்பு.
 
பில்லிங் மெஷின்
 
“ட்ர்ர்ர்…” என்று ரசீது வெளியே வருகிறது.
Cut.
 
Scene 2 – Anglo Indian Coffee Shop | மாலை 6 PM
 
காபி ஷாப் பில்லிங் மெஷின்.
 
“ட்ர்ர்ர்…” என்று ரசீது வெளியே வருகிறது.
 
மைதிலியின் கையில் —
காபி ட்ரே.
 
பழுப்பு apron.
 
நீட்டாக பின்னி கட்டப்பட்ட முடி.
 
யூனிஃபார்மில் Name tag – “ மைதிலி”.
 
கையில் வைத்திருந்த ட்ரேயில் இரண்டு cappuccino.
 
காபியில் நுரையால் வரையப்பட்ட ஹார்ட் ஆர்ட்.
 
“டேபிள் நம்பர் ஐந்து.”
 
அவள் ஸ்டெடியாக நடந்து செல்கிறாள்.
 
கப்பை டேபிள் மேல் வைக்கும் போது சிக்கனமான ஒரு ஸ்மைல்.
 
“Thank you, ma’am.”
 
சுற்றிலும் மற்ற டேபிள்களில்,
 
ஒரு லவ் ஜோடி ரகசியம் பேசிக் கொண்டிருந்தது.
 
ஒரு பிஸ்னஸ்மேன் டைரியை பார்த்தபடியே போனில் அப்பாயிண்ட்மெண்ட் சொல்லி கொண்டிருந்தார்.
 
ஒரு இளம் பெண் போன் பேசியபடி யாருக்காகவோ காத்திருந்தாள்.
 
மேனேஜர் சுரேந்தர் சிங் கவுண்டரில் இருந்து மைதிலியை பார்த்து, சின்ன தலையசைப்பு...
பதிலுக்கு மைதிலியின் புன்சிரிப்பு.
 
Cut.
 
Scene 3 – SSG College Rest Room | மாலை 3 PM
 
பழைய டைல்ஸ் சுவர்கள்.
 
எக்ஸாஸ்ட் ஃபேன் — கர....கர
 
தண்ணீர் டேப் — சள...சள
 
பேக்ரவுண்டில் சந்தீப், மனிஷ், பிரேம் — யூரினலில் வரிசையாக கதை பேசியபடி வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
ஃபோர்கிரவுண்டில் பேசினருகே கண்ணாடி முன்னால் மனோ மற்றும் பாபி.
 
மனோ — கண்ணாடியை பார்த்தபடியே பேசினான்.
 
“அந்த ஸ்ரேயா ரொம்ப தொந்தரவு பண்றாடா…  தனியா மீட் பண்ணனும்னு அடிக்கடி insist பண்றா.”
 
பாபி கைகளை துடைத்துக்கொண்டு:
 
“அவளை ஏன் avoid பண்ற? உன் level-க்கு ஈக்குவலா தான் இருக்கா… status-லும், personality-யும் match ஆகுதுல? ஓகே சொல்ல வேண்டியது தானே.”
 
மனோ மெதுவா சிரித்து, மறுப்பது போல் தலையாட்டினான்.
 
“தெரியலடா… அவளை பார்க்கும்போது எந்த feel-யும் வரல. I just don’t feel anything. You can’t force yourself to love someone just because everything looks perfect.”
 
பாபி பேசின் சுவரில் டிக்கியை சாய்த்து திரும்பி நின்று, அவனைப் பார்த்தபடி பேசினான்.
 
“சரி… ஆனா ரொம்ப ignore பண்ணாத. Tomorrow it might turn into something… or it may not. Either way, you can’t cancel things that affect the campus.  அவளையும் மேனேஜ் பண்ணணும்.”
 
சிறிய இடைவேளை விட்டு தொடர்ந்தான்.
 
“Common place-ல meet பண்ணு. Public-ஆ. Neutral-ஆ இருக்கும்.”
 
மனோ புருவம் சுருக்கி:
 
“நான் meet பண்ண ஒத்துக்கிட்டேனா… நான் close ஆகுறேன்னு அவ நினைச்சுக்கலாம்", என்றான்
 
பாபி புன்முறுவலுடன்,
 
“ஓவர் திங்க் பண்றேடா. Coffee shop-ல meet பண்ணலாம்ன்னு சொல்லு. We’ll also be around. Chill.”
 
அப்போதுதான் வேக வேகமாக பாத்ரூமுக்குள் நுழைந்து, ஜிப்பை திறந்தபடியே ஒரு யூரினலை நெருங்கிய  சிக்கி,
 
“டேய் எவன்டா அது? ஒழுங்கா flush பண்ணாம போனது?!” என்று கத்த,
 
பாபி எரிச்சலாக: கொசு தொல்லை தாங்க முடியலடா...
 
Tap திறக்கப்படும் சத்தம். 
தண்ணீர் சுழலும் சத்தம் frame-ஐ நிரப்புகிறது.
 
Cut.
Scene 4 – khandala...High class bistro
 
ஒரு கிரிஸ்டல் கிளாசில் தண்ணீர் நிரம்புகிறது.
 
கண்டாலா மலைச்சரிவை நேராக பார்த்து கொண்டிருக்கும் ஒரு ஹை-கிளாஸ் பிஸ்ட்ரோ.
 
கண்ணாடி சுவர்கள்.
 
மாலையின் பொன் நிற ஒளி கண்ணாடி சுவர்களைத் தாண்டி உள்ளே சரிந்து வந்து, ஸ்ரேயாவின் முகத்தின் ஓரத்தை மெதுவாக தொட்டது.
 
ஸ்ரேயா போன் பேசி முடித்துவிட்டு, போனை  மேசையின் மீது வைத்தாள்.
 
பின்புறம் மெதுவான ஜாஸ் இசை.
 
டேபிள் மீது கிரிஸ்டல் வாட்டர் கிளாஸ் மற்றும் white linen napkin.
 
டேபிளின் மறுபக்கம் சலோனி & பிரணவி அமர்ந்திருந்தனர்.
 
சலோனி சற்று முன்னால் வந்து:
 
“He said yes...?” என்று கேட்க,
 
ஸ்ரேயா சேரை பின்னால் இழுத்து அமர்கிறாள்.க்ரீம் நிறம் கலந்த soft satin crop top; அதற்கு மேட்சிங் ஆன high-waist beige trousers.
 
அவள் மார்புப் பகுதியின் neckline-ல் சொருகி வைத்திருந்த sunglasses-ஐ  மெதுவாக எடுத்தாள்.
 
அந்த அசைவில் விரலில் இருந்த வைர மோதிரம் — சூரிய ஒளியைப் பிடித்து சின்ன தீப்பொறி போல ஜொலித்தது.
 
Sunglasses-ஐ மேசையின் மேல் வைத்தாள் — கவனத்தை ஈர்க்காத மாதிரி… ஆனா கவனத்தை முழுக்க பிடித்த மாதிரி
 
“Yes. Coffee shop. Public place",
 
என்றாள் ஒரு புன்னகையுடன்.
 
உடனே பிரணவி உருவங்களை உயர்த்தி:
 
“Interesting… he wants to be safe," என்றாள் குறும்பாக.
 
ஸ்ரேயா: “எஸ்... காபி ஷாப்... பப்ளிக் மீட் ஓகே தான். அவன் safe ஆ இருக்குறதா பீல் பண்ணட்டும்!”
 
சில நொடிகள்  பேச்சற்ற இடைவெளி.
 
ஸ்ரேயா கிளாசை எடுத்து தண்ணீர் ஒரு சிப் குடித்துவிட்டு,
 
“மீட்டிங் நடக்கும் போது…  Krush பார்ட்டிக்கு பர்சனலா அவனை இன்வைட் பண்ணுவேன்", என்றாள்.
 
சலோனி புன்முறுவலுடன் கிளாசை விரலால் சுற்றிக்கொண்டு,
 
“So… the game begins-aa?” என்று கேட்க,
 
ஸ்ரேயா ஜன்னலுக்கு வெளியே மலைகளை ஒரு நொடி பார்த்தாள்.
 
மாலை நேர பொன்னிற சூரிய ஒளி அவள் முகத்தை பாதியாகத் தொட்டது.
 
“He thinks he’s unreachable…”
 
[“அவன் யாராலும் அவனை touch பண்ண முடியாதுன்னு நினைக்கிறான்.”]
 
பிறகு திரும்பி இருவரையும் நேராகப் பார்த்தாள்.
 
“Let’s see… how long that lasts.”
 
[எவ்வளவு நாள் அந்த distance maintain பண்ணுறான் என்று பாத்துக்கலாம்.]
 
பிரணவி மைண்ட் வாய்ஸில் " நமக்கு நல்ல என்டேர்டைன்மென்ட்... ஜாலி" என்று தோன்ற, ஆனால் ஸ்ரேயாவை தூண்டிவிடும் விதமாக,
 
“This is going to be interesting… the beautiful vs the handsome" என்றாள்.
 
ஸ்ரேயா அவள் சொன்னதுக்கு இறுமாப்புடன் தலையாட்டியபடியே  sunglasses-ஐ மீண்டும் அணிந்து கொண்டாள்.
 
11வது எபிசோடு தலைப்புச் செய்திகள் இத்துடன் நிறைவடைந்தது.
 
தொடரும்…
 

உங்களின் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவிடவும்

https://kavichandranovels.com/community/topicid/636/



   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 1 year ago
Posts: 153
Topic starter  

ஜானகி மந்திரம் 11 A

 

Anglo Indian Cafe– மறுநாள் மாலை 5 pm

 

மலைச்சரிவின் பனி, கஃபேயின் கண்ணாடிகளில் ஒரு 'Face Mist போலத் தூவப்பட்டு, வெளியுலகை ஒரு 'செட்டிங் பவுடர்' போல மங்கலாக்கியிருந்தது. ஒரு தேர்ந்த ஒப்பனை கலைஞரின் 'பிளெண்டிங்' வேலைப்பாடு போன்ற அந்தப் பனிப்படலம், கண்ணாடிக்கு ஒரு 'ஏர்-பிரஷ்' பொலிவை கொடுத்திருந்தது.

 

கஃபேயின் உள்ளே மிருதுவான மஞ்சள் லைட்டிங் மற்றும் இதமான ஜாஸ் இசை.

 

பெரிய ரவுண்ட் டேபிளில் —

 

ஸ்ரேயா, சலோனி, பிரணவி.

 

மனோ இன்னும் வந்திருக்கவில்லை.

 

“Practice முடிஞ்சு வர்றேன்… 10 minutes,” என்று அவன் போன் பண்ணி சொல்ல, பேசிவிட்டு ஸ்ரேயா போனை மேசை மீது வைத்தாள்.

 

“Let him come,” என்றாள் பொறுமையாக.

 

ஆனால் அவள் விரல்கள்  கிளாசை மெதுவாக தட்டின — பொறுமையின்மை.

 

பேண்ட்ரி அருகே நின்றிருந்த மைதிலிக்கு லப் டப்...

 

இவங்களா…? இங்க…?

 

அவள் order pad-ஐ கையில் எடுத்தாள்.

 

இந்த table — அவளுடைய section.

 

வேலைதான். Professional-ஆ இரு.

 

மனதை தேற்றிக்கொண்டு அவள் மெதுவாக நடந்து அவர்கள் டேபிள் அருகே சென்றாள்.

 

“Good evening, ma’am...What would you like to have? ”

 

ஸ்ரேயா அவளை நிதானமாக பார்த்தாள்.

 

அவள் வீட்டு வேலைக்காரர்களை பார்ப்பது போல் அந்த பார்வை — 

 

இவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே!

 

பிரணவி அடையாளம் கண்டுபிடித்து விட்டாள்.

 

“நீ SSG காலேஜ் தானே?"

 

மைதிலி ஆமாவென்று மெதுவாக தலையசைத்தாள்.

 

“yes, ma’am.”

 

ஸ்ரேயா நக்கலாக: “Interesting career choice.”

 

பிரணவி:

“Scholarship பத்தலையா? அதனால தான் வேலைக்கு வந்துட்டியா?”

 

சலோனி: காலேஜ் பேர் இப்படில்லாம் கெட்டுப் போகணுமா?

 

மூவரின் குரலும் மென்மை.

ஆனா கத்தி கூர்மை.

 

மைதிலி:

 

“Order சொல்லுங்க ma’am.”

 

ஸ்ரேயா: “Water first. கெஸ்ட் வந்ததும் இதைத்தான் செய்யணும். இது தெரியாதா உனக்கு?"

 

மைதிலி ஜக்கை எடுத்து glass-ஐ நிரப்பினாள்.

 

அவள் glass-ஐ வைக்க முயன்ற அந்த நொடியில்,

ஸ்ரேயா வேண்டுமென்றே கையை நீட்ட, கிளாஷ் ஆகி தண்ணீர் தெறித்து டேபிள் மேலும்

மைதிலியின் apron-லும் சிந்தியது.

 

ஸ்ரேயா: shit!!! பார்த்து பண்ண கூடாதா?

 

சலோனி: “Oops.”

 

மைதிலி அவள் மேல் பட்டிருந்த தண்ணீரை துடைக்க முயல,

 

பிரணவி;

 

“Careful. This place is expensive. முதல்ல டேபிளை கிளீன் பண்ணு"

 

“Sorry ma’am” என்று மைதிலி சொல்லிவிட்டு நாப்கின் எடுத்து டேபிளை துடைக்க ஆரம்பித்தாள்.

 

ஸ்ரேயா அவளைப் பார்த்து தெனாவட்டாக,

 

“Refill. Cold water. வேற கிளாஸ் எடுத்துட்டு வா", என்றாள்.

 

மைதிலி சட்டென்று திரும்பி நடக்க ஆரம்பிக்க, அவள் நடையில் சிறிது கலக்கம்.

 

சில நொடிகளில் திரும்பி வந்தாள்.

 

Glass நிரம்பி இருந்தது.

 

ஸ்ரேயா கிளாசை வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு,

முகம் சுளித்தாள்.

 

“i said...i need cold water"

 

பிரணவி நக்கலாக சிரித்தாள்.

 

"இவளுக்கு இந்த  மாதிரி இடங்கள் புதுசா இருக்கலாம். அதனால கெஸ்ட்டை எப்படி கவனிக்கணும் தெரியல.."

 

சலோனி: yes, training கொஞ்சம் வேணும்.

 

மைதிலி:

 

“சாரி.  நான் வேற கொண்டு வர்ற மேடம்.."

 

“Wait.”

 

ஸ்ரேயா அவளை நிறுத்தினாள். அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தாள். அவளுடைய ஈரமான மேலாடையை பார்த்து மேலும் முகம் சுளித்தாள்.

 

“Uniform wet ஆயிருக்கு. Presentation matters my dear SSG girl... ஃபர்ஸ்ட் டைம்ங்கறதுனால விட்டுடுறேன், இல்லன்னா நான் உங்க மேனேஜர் கிட்ட கம்பளைண்ட் பண்ண வேண்டிருக்கும்.."

 

மைதிலி அமைதியாக நின்று கொண்டிருக்க,

 

சலோனி கைகளை மேசை மீது வைத்து முன்னால் வந்து:

 

“Stand straight. Shoulders back", என்று ஆர்டர் போடும் விதமாக சொன்னாள்.

 

மைதிலி அவள் சொன்னபடி செய்தாள்.

 

பிரணவி:

 

“Smile. High-class customers prefer pleasant staff.”

 

மைதிலி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் சொன்னபடி புன்னகை முகமாக நின்றாள்.

 

ஸ்ரேயா சொடக்கு போட்டு சுட்டு விரல் நீட்டி

 

“Thats better” என்றாள்.

 

அவள் கிளாசை எடுத்து தட்டி காண்பித்து,

 

“Now refill. Properly chilled. And don’t rush. We are waiting", என்றாள்.

 

மைதிலி திரும்பி செல்லும்போது—

 

சலோனி:

 

“இதே மாதிரி இவ கூட இருக்காங்களே, அந்த திமிரு புடிச்ச ரெண்டு கழுதைகளையும் parade எடுக்கணும். அப்பதான் திருந்துவாளுங்க."

 

பிரணவி:

 

“எங்க போயிர போறாளுங்க நிச்சயமா மாட்டத்தான போறாளுங்க"

 

மைதிலி அவர்கள் பேசுவதை கேட்கும் தூரத்தில் தான் இருந்தாள்.

ஆனா திரும்பிப் பார்க்கவில்லை.

 

கண்கள் நனைய முயற்சித்தன. கட்டுப்படுத்தி கொண்டாள்.

அவள் கிளாசில் கோல்ட் வாட்டரை நிரப்பி கொண்டு வந்து அவர்கள் டேபிளில் வைத்தாள்.

 

ஸ்ரேயா கிளாசை எடுத்து ஒரு சிப்.

 

பின்னர் சாவதானமாக சாய்ந்து அமர்ந்தாள்.

 

“Good. See? You can improve.”

 

பிரணவி:

 

“Stand there. இன்னும் ஒரு கெஸ்ட் வரணும். Then we’ll order.”

 

அவர்கள் கட்டளைக்கு கட்டுப்பட்டு, மைதிலி சற்று தள்ளி அமைதியாக நின்றாள்.

 

நேரம் நகர்ந்தது.

 

அவர்களுக்கு அது நேரம் போவதற்கான சிறிய கேளிக்கை. 

 

அவளுக்கு — முழு அவமானம்.

 

ஆனா முகத்தில் — வலிகள் எதையும் வெளியே கசியவிடாதபடி, மிக லாவகமாக அணிந்து கொண்ட ஒரு முகமூடி புன்னகை.

 

ஆனால் அந்த புன்னகையின் பின்னால், உள்ளே ஏதோ ஒன்று மெதுவாக கடினமாகி கொண்டிருந்தது.

 

தொடரும்

 

 

உங்களின் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவிடவும்

https://kavichandranovels.com/community/topicid/636/



   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 1 year ago
Posts: 153
Topic starter  
ஜானகி மந்திரம் 12

Anglo Indian கஃபே – மாலை 5:30
 
கஃபேயின் கண்ணாடி கதவு  தள்ளப்பட, அதன் உச்சியிலிருந்த அந்த சிறிய மணி ஒரு மௌனமான அறையில் விழும் கிரிஸ்டல் கல்லைப் போல ‘டிடிங்’ என்று துள்ளி குதித்து அதிர்ந்தது. 
 
ஸ்ரேயா கையை மேசை மேல் இணைத்து வைத்தபடி இருந்தாள்.
 
அவன் தனியாக வருவான் என்று நினைத்திருந்தாள்.
 
ஆனால்—
 
உள்ளே வந்தது மனோ மட்டும் இல்லை.
 
அவனுடன் பாபி.
 
சிக்கி.
 
சந்தீப்.
 
மனிஷ்.
 
நான்கு பேரும் அவனை தொடர்ந்து வரிசையாக உள்ளே நுழைந்தார்கள்.
 
அந்த நொடி, அங்கிருந்த ஜாஸ் இசை கூட இவர்களுக்கு பின்னணி இசை கோர்ப்பது போல, சில கணங்கள் வேகம் அதிகரித்து அதிரடியாக ஒலித்தது.
 
அவர்களது வருகை, அந்த கஃபேயின் இந்திய பின்னணியில், ஒரு சர்வதேச பிராண்ட் விளம்பரத்தின் காட்சியை போல ஸ்டைலிஷா இருந்தது.
 
ஸ்ரேயாவின் புருவம் சற்றே உயர.... சலோனியும் பிரணவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
 
மனோ வசீகர புன்னகையுடன்,
 
“ஹாய்…” என்றான் இயல்பாக.
 
பாபி கையசைத்தான்.
 
“ஹாய் girls…”
 
நிஜத்தில் சிக்கியை அவர்கள் அழைக்கவே இல்லை. ஆனால், "போற இடத்தில் இந்தப் பசங்க ஏதாவது பொண்ணுங்களை ரூட்டு விடுவார்களோ" என்று செக் பண்ணுவதற்காக அவனே வாலண்டரியாக வந்திருந்தான்.
 
சிக்கி: “Public மீட்டுன்னு சொன்னான். அதான் பப்ளிக் நாங்க கூடவே வந்தோம்” என்றான் அசிங்கமாக சிரித்தபடி.
 
அனைவரும் பக்கத்திலிருந்து chair எடுத்து டேபிளை சுற்றி அமர்ந்தார்கள்.
 
மனோ:  sorry, Practice கொஞ்சம் லேட் ஆயிடுச்சு... என்றான்.
 
ஸ்ரேயா: பரவாயில்ல. நாங்களும் இப்பதான் வந்தோம்...
 
அந்த நொடியில்—
 
மனோவிடம் இருந்து மென்மையான Azzaro visit நறுமணம் காற்றோடு கலந்தது.
 
கையில் ஆர்டர் பேடுடன் நின்றிருந்த மைதிலியின் நாசிகளை நிரடி...
 
அந்த வாசனை அவளுக்குள் ஒரு ரகசிய கையெழுத்தை போட... ஒரு நொடி அவள் கையில் இருந்த பேனா உறைந்து நின்றது.
 
Cut.
 
ட்ரைடென்ட் ஹோட்டல் அறை – 31 மார்ச் 2010 – காலை 7 மணி
 
மைதிலி திடுக்கிட்டு விழித்தாள்!
 
ஜன்னல் திரைகளின் இடுக்கினூடே ஊடுருவிய காலைச் சூரிய ஒளியால் அந்த அறையில் ஒரு மெல்லிய 'ஸ்ட்ரோபிங்' (Strobing) கண்கட்டு வித்தை. படுக்கையின் மேல் விழுந்த அந்த ஒளி, அறைக்கு ஒரு 'லூமினஸ்' (Luminous) பொலிவையும் ஒரு 'ஹை-டெபனிஷன்'  நேர்த்தியையும் கொடுத்திருந்தது.
 
பெரிய வெள்ளை படுக்கையில், மைதிலி மெதுவாக புரண்டாள்.
 
மனதில் இன்னும் அந்த நறுமணம்.
 
ஒரு நீண்ட சோம்பல் முறிவு.
 
அவள் மெதுவாக எழுந்தாள்.
 
Cut.
 
குளியலறை
 
மார்பிள் தரை.
 
கண்ணாடியில் அவள் பிரதிபலிப்பு.
 
ஷவர் திறக்கப்படுகிறது.
 
நீர்ச்சரடுகள் கழுத்து மற்றும் தோள் பகுதியை   தாண்டி, செழுமையான மார்புகளை நனைத்து, அங்கிருந்து லாவகமாக சறுக்கி, செதுக்கப்பட்ட இடுப்பின் வளைவுகளில் ஒரு மின்னல் கோடாக வழிந்து மறைந்தன. மைதிலி அந்த நீரின் ஸ்பரிசத்தை ரசனையுடன் ஏற்றுக்கொண்டாள்.
 
2003-ன் ஹாஸ்டல் பாத்ரூம்களும், அழுக்கு துணிகளும், உடைந்த வாளிகளும், சேதமடைந்த கப்புகளும் இல்லாத சொகுசு இது.
 
கண்ணாடி நோக்கி திரும்புகிறாள்.
 
நீராவி பின்னணியில் —
 
அவள் உருவம் தெரிந்தது.
 
உடல் மட்டுமல்ல,
 
அவள் நிலையும் மாறியிருக்கிறது.
 
சந்தன வாசனை கொண்ட நுரை. அவள் உள்ளங்கைகளில் மலர்கிறது. அதை மெதுவாக கழுத்தின் கீழே இறக்குகிறாள்.
 
ஒரு நொடியில் —
 
நீரின் சுழற்சியில் அவள் உடலின் வளைவுகள் மென்மையான சிற்ப வளைவுகளைப் போல கண்ணாடியில்
ஒளிர்ந்து தெரிகின்றன.
 
அவள் விரல்கள் அவசரம் இல்லாமல் சருமத்தின் மேல் வட்டமிடுகின்றன.
 
வெப்பம்.
 
வாசனை.
 
நிதானம்.
 
நுரை கரைகிறது.
Cut.
 
கண்ணாடி முன்
 
பெரிய வெள்ளை துவாலை
உடலை சுற்றுகிறது.
 
முடி துவாலையில் கட்டப்படுகிறது.
 
மாய்ஸ்சரைசர் கைகளில் கரைந்து உடலில் பரவுகிறது.
 
Cut.
 
அலமாரியை திறந்தாள்.
 
ஒரு நேர்த்தியான மென்-நீல நிற  காட்டன்-லினன் ஷர்ட். அதன் கச்சிதமான பிட்டிங் அவளது தோற்றத்திற்கு ஒரு தொழில்முறை மிடுக்கைத் தந்தது. 
அதற்கேற்றவாறு, நேவி-ப்ளூ நிற ‘ஸ்லிம்-பிட்’ ட்ரௌசர்களை தேர்ந்தெடுத்தாள். 
 
சிறிய முத்து கம்மல்.
கழுத்தில் மெல்லிய தங்க சங்கிலி. 
 
அறையின் வாம்-ஒயிட் வெளிச்சம், அவளது மோதிர விரலின் ஒற்றை வைரத்தில் பட்டு தெறிக்க, ஒரு சிறு தீப்பொறி மின்னல்!
 
அவள் கண்ணாடியில் தன்னை பார்க்கிறாள்.
 
அமைதி.
 
அழகு.
 
ஆதிக்கம்.
 
Cut.
 
இன்டர்காம் ஒலித்தது.
 
“ma'am… பிரேக்‌ஃபாஸ்ட் ரூமுக்கு அனுப்பட்டுமா?”
 
மைதிலி சற்று யோசித்தாள்.
 
“இல்லை… நான் ரெஸ்டாரண்ட் வந்துட்றேன்,” என்றாள் அமைதியாக.
 
ரிசீவர் மெதுவாக அதன் இடத்தில் அமர்ந்தது.
 
காரிடார்.
 
தடித்த கம்பளம்.
 
அவள் ஹீல்ஸ் ஒலி — மெதுவான, நிதானமான “டக்… டக்…”
 
லிப்ட் முன் நின்றாள்.
 
கதவு திறந்தது.
 
உள்ளே நுழைந்தவள், ஸ்டீல் சுவற்றில் தனது பிரதிபலிப்பை பார்த்தாள்.
 
நிமிர்ந்த நன்னடை.. நேர்கொண்ட பார்வை.
 
அழகாக செட் செய்யப்பட்ட முடி.
 
ஜீரோ மேக்கப்.
 
கட்டுப்படுத்தப்பட்ட முகபாவனை.
 
“G” பட்டன் பிரஸ் பண்ணப்பட்டது.
 
லிப்ட் இறங்கியது.
 
ஃப்ளோர் எண்கள் ஒளிர்ந்தன.
 
7… 6… 5…
 
அந்த சில விநாடிகள் —
 
ஒரு அமைதியான இடைவேளை.
 
Restaurant
 
கதவு திறக்கிறது.
 
தரை முதல் கூரை வரை நீண்டிருக்கும் பிரம்மாண்டமான கண்ணாடி சுவர்கள்,  மெல்லிய இசை பின்னணியில் ஒலிக்க, உயர்தர பீங்கான் தட்டுகளும், மெருகேற்றப்பட்ட வெள்ளி ஸ்பூன்களும் மோதிக்கொள்ளும் ‘கிளிங்க்’ சத்தம்.
பஞ்சு போன்ற தடித்த கம்பளங்கள் காலடி சத்தத்தை உள்வாங்கிக் கொள்ள,  காற்றில் இந்தியன், சைனீஸ், கான்டினென்டல் உணவுகளின் வாசனை. வெண்ணிற லினன் துணிகள் விரிக்கப்பட்ட மேஜைகள், துல்லியமாக அடுக்கப்பட்ட கத்திகள், மேஜையின் மையத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிறிய பூச்சாடிகள் என ஒவ்வொரு இன்ச்சிலும் மேல்தட்டு வர்க்கத்தின் வசதியும் கர்வமும் மௌனமாக பறைசாற்றப்பட்டது.
"Good morning, ma’am.”
 
ஒரு பெண் ஸ்டீவர்ட் மரியாதையுடன் சிரித்தாள்.
 
“Complimentary breakfast, ma’am. Table for one?”
 
'Yes' என மைதிலி தலையசைத்தாள்.
 
ஜன்னல் அருகிலான ஒரு மேசை காட்டப்பட... அதை நெருங்கி, அவள் நாற்காலியை இழுத்து அமர்ந்தாள்.
 
அடுத்த சில நொடிகளில்—
 
“மே ஐ டேக் யுவர் ஆர்டர், மாம்?”
 
அதே பெண் ஸ்டீவர்ட், தனது கையில் இருந்த ‘ஆர்டர் பேடை’  லாவகமாக திறந்து பேனாவைப் பிடித்தபடி மைதிலியின் முகத்திற்கு நேராக வந்து நின்றாள்.
 
மைதிலி மெல்ல முகத்தை உயர்த்தினாள்.
அங்கே நின்றிருந்த அந்தப் பெண்... நேர்த்தியான யூனிஃபார்ம், முகத்தில் கடமைக்கான புன்னகை, கையில் ஒரு ஆர்டர் பேடு. 
 
Freeze.
 
மைதிலியின் கண்கள் அந்த ஆர்டர் பேடிலேயே நிலைத்து நின்றன. அந்த ஒரு நொடி, அவளது 2010-ம் ஆண்டின் சொகுசு உலகம் அப்படியே உறைந்து போக... ஏழு வருடங்களுக்கு முன்பு கண்டாலாவின் அந்த ‘ஆங்கிலோ இந்தியன் கஃபே’வில், இதே போன்ற ஒரு ஆர்டர் பேடுடன் ஸ்ரேயாவுக்கு முன்னால் கைகட்டி நின்றிருந்த தனது பழைய பிம்பம் அவளது கண்ணுக்குள் ஒரு மின்னல் அதிர்ச்சியைப் போல வந்து சென்றது.
 
Cut.
2003
 
Anglo Indian Coffee Shop – மாலை
 
பாபி சுத்திலும் காபி ஷாப்பை பார்க்க... அன்றைக்கு பார்த்து நிறைய காலேஜ் பெண்கள் கூட்டம். ஹேர் ஸ்டைலை அட்ஜஸ்ட் பண்ணி, உதடுகளை ஈரப்படுத்தி கொண்டான்.
 
மணிஷ், சந்தீப் இருவரும் ஆல்ரெடி சலோனி, பிரணவியிடம்  ரூட்டு விட ஆரம்பித்திருந்தார்கள்.
 
தனியாக வருவான் என்று எதிர்பார்த்த மனோ, நண்பர்கள் கூட்டத்துடன் வந்ததால் ஸ்ரேயாவுக்கு உள்ளூர கடுப்பு.
 
ஸ்ரேயா முகத்தை சலோனி கவனித்தாள்.
 
டேபிளுக்கு அடியில்  அவள் தொடையில் நைசாக தட்டி —
 
Calm down.
 
ஸ்ரேயா இன்ஸ்டன்ட் புன்னகை ஒன்றை உதிர்த்து,
 
“நான் உன்னிடம் கொஞ்சம் personal-ஆ பேசணும்னு தான் coffee shop வர சொன்னேன்” என்றாள்.
 
மனோ இயல்பாக:
 
“Sorry… என் friends இல்லாம நான் எங்கயும் போறதில்லை. அதனால அவங்களையும் கூட்டிட்டு வந்தேன்.”
 
சலோனி உடனே smooth cover:
 
“That’s okay… நல்லது தான் நாங்களும் உங்க பிரண்ட்ஸ மீட் பண்ண மாதிரி இருக்குமே!"
 
மணிஷ் and சந்தீப் ஸ்ரேயாவின் தோழிகளை மேய்ந்து கொண்டிருப்பதை,
சிக்கி கவனித்து
கண்களை சுருக்கி முறைத்தான்.
 
இருவரும் அவன் முறைப்பதை கவனித்து,
 
“இவன் ஒருத்தன்…” என்று வெறுப்பானார்கள்.
 
மணிஷ் மனசுக்குள்:
 
"அடேய் Cupidu… இவனுக்கு ஒரு வழி பண்ண மாட்டியா?"
 
அந்த நொடி —
 
ஸ்கிரீன் ஓரம் வெள்ளை ஒளி.
 
வெள்ளை சிறகுகள், குறும்பு சிரிப்புடன் Cupid பிரசன்னம்.
 
வில்லின் நாண் இழுக்கப்படுகிறது.
 
ஷ்விஷ்—
 
அம்பு நேராக சென்று சிக்கியின் இதயத்தை துளைக்க,
 
சிக்கி திரும்பி பார்த்தான்.
 
சற்று தள்ளி —
order pad கையில் வைத்தபடி நின்றிருந்த மைதிலி.
 
அவளை பார்த்த அந்த நொடி —
 
அவன் கண்களில் கலர் கலராக பட்டாசு வெடிப்பு.
 
மைதிலியும் சிக்கியை பார்த்து விட்டாள்.
 
அவள் சிக்கியை தான் மனோ என்று நினைத்திருந்ததால்,
 
"மனோ எதற்காக இவர்களுடன் வந்திருக்கிறான்?" என்று அவளுக்கு யோசனை.
 
சிக்கி யாரை அப்படி முழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை கவனித்த சந்தீப்பின் m.v: “ இவன் எங்க இப்படி  பார்த்துட்டு இருக்கான்?”
 
சந்தீப் and மணிஷ் அவனின் பார்வையை பின்தொடர்ந்து பார்க்க...
 
சிக்கி போக்கஸ் முழுவதும் waiter girl.
 
அவளை சிக்கி ஜொள்ளு விட்டுக் கொண்டிருந்ததை பார்த்ததும்,
 
“அடப்பாவி…”
 
அதே நேரம் —
 
ஸ்ரேயா மீண்டும் ஆரம்பிக்க முயன்றாள்.
 
“Actually நான் வர சொன்னது முக்கியமான விஷயம் பேசுவதற்காக... எங்களுடைய கண்டாலா பங்களாவுல இந்த மாசம் 15-ம் தேதி நடக்கப்போற பார்ட்டிக்கு...
 
மைதிலி டேபிள் அருகே வந்து நின்று பணிவான குரலில்,
 
“Good evening, ma’am… order please?” என்றாள்.
 
ஸ்ரேயா கடுப்பாக திரும்பி:
 
“Shit man, Can’t you wait for few minutes? முக்கியமான விஷயம் பேசுறோம். தெரிலயா?" என்று சீறினாள்.
 
மைதிலி ஜெர்க் ஆகி ஒரு அடி பின்வாங்க,
 
மனோ உடனே இடைமறித்து:
 
“Hey… எதுக்காக கோவப்படுற? Cool...அவங்க வேலையை தானே செய்றாங்க.  சாரி"
என்று ஸ்ரேயா சார்பாக மைதிலியிடம் மனோ மன்னிப்பு கேட்டான்.
 
மைதிலி அவனுக்கு பின்னால் நின்றிருந்ததால்,  அரைகுறையாக திரும்பி பேசினானே தவிர அவளின் முகத்தை அப்போதும்  முழுமையாக கவனிக்கவில்லை.
 
சிக்கியும் ஆதரவாக:
 
“ஆமாம்… why tension, no tension? ஆர்டர் எடுக்க வர்றவங்க கிட்ட இப்படியா பொறுப்பில்லாம பேசுறது?"
 
அவன் சொன்னதை கேட்ட மனிஷ் மற்றும் சந்திப் நரவென கடித்தார்கள்.
 
ஸ்ரேயா உடனே சுருதியை குறைத்து:
 
“இல்ல… important matter பேசுறோம். டிஸ்டர்ப் ஆன மாதிரி இருந்துச்சு… that’s why.”
 
மனோ:
 
“Okay… let’s order first.”
 
Menu card திறக்கப்பட்டது.
 
பாபி:
 
“ஒரு cappuccino… extra foam.”
 
சந்தீப்:
 
“Cold coffee with ice cream.”
 
மணிஷ்:
 
“Mocha… strong. Sugar less.”
 
சிக்கி menu-ஐ பார்த்துக் கொண்டே,
 
“Filter coffee கிடைக்குமா?”
 
மனோ சிரித்தபடி:
 
“Hazelnut cappuccino.”
 
சலோனி:
 
“Café latte.”
 
பிரணவி:
 
“Caramel macchiato.”
 
ஸ்ரேயா மெதுவாக:
 
“Flat white.”
 
Snacks list திறக்கப்பட்டது.
 
பாபி:
 
“Veg grilled sandwich.”
 
சந்தீப்:
 
“Cheese garlic toast.”
 
மணிஷ்:
 
“French fries… extra crispy.”
 
சிக்கி:
 
“அதே தான் எனக்கும்...”
 
மனோ:
 
“Chocolate brownie… warm.”
 
சலோனி:
 
“Blueberry muffin.”
 
பிரணவி:
 
“same...”
 
ஸ்ரேயா:
 
“Garlic mushroom sauté.”
 
ஒவ்வொருத்தரும் ஆளுக்கு ஒன்றாக சொல்ல, மைதிலி அனைத்தையும் அமைதியாக note செய்தாள்.
 
கண்களை உயர்த்தாமல்.
 
“Anything else, ma’am?”
 
“That's all.”
 
அவள் யோசனையாக திரும்பி நடந்தாள்.
 
யார் இவன்? 
 
அந்த ‘டிவா’ ஸ்குவாட் இவ்வளவு கேவலமாக நடத்தியபோதும், இவன் எவ்வளவு தன்மையாக தன்னிடம் மன்னிப்பு கேட்டான்!
 
ஆனால் சிக்கியின் பார்வையே அவளுக்கு வெறுப்பாக தான் இருந்தது.
 
பின்னால் —
 
சிக்கியின் பார்வை இன்னும் அவளையே பின்தொடர்ந்தது. 
 
மனோ: ஓகே. இப்ப சொல்லு. என்ன விஷயமா பேசுறதுக்கு கூப்பிட்டே?
 
ஸ்ரேயா நைச்சியமாக ஆரம்பித்தாள், 
 
“மனோ... I usually host parties at my Khandala bungalow for friends. எல்லோரும் வந்துட்டு போயிருக்காங்க. ஆனா நீ இதுவரைக்கும் ஒரு தடவை கூட வந்ததே இல்லை. ‘This makes people in college think that we don’t have a good friendship, or maybe there’s no chance for anything further between us.’ 
 
அது எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. இந்த மாசம் 15-ம் தேதி நடக்கப்போற பார்ட்டிக்கு நீ ஏன் வரக்கூடாது?”
 
மனோவுக்குப் பார்ட்டிகள் என்றாலே அலர்ஜி. ஏற்கனவே பலமுறை அவன் தட்டிக் கழித்திருந்தான். Final year வேறு, இந்த முறை மறுப்பதற்கு சரியான காரணம் இல்லை. பாபி ஏற்கனவே கொடுத்திருந்த ஐடியாவின்படி மனோ சொன்னான்:
 
“SRK... வர்றதைப் பத்தி எனக்குப் பிரச்சனை இல்லை. ஆனா நான் ஏற்கனவே சொன்ன மாதிரி, நான் தனியா எங்கயும் வரமாட்டேன். என் பிரண்ட்ஸும் வருவாங்க, ஓகேவா?”
 
ஸ்ரேயாவுக்கு வேறு வழியில்லை. 
 
“சரி... அவங்களும் வரட்டும்,” என்றாள்.
 
மனோ: then its fine... நான் இந்த தடவை பார்ட்டிக்கு வரேன்.
 
ஸ்ரேயாவின் முகத்தில் ஒரு வெற்றிக் களிப்பு மின்ன, மறுபக்கம் சந்தீப்பும் மணிஷும் சலோனி-பிரணவியிடம் தீவிரமாக கடலை போட்டு கொண்டிருந்தனர்.
 
சிக்கியோ, மைதிலி எப்போது மீண்டும் பேண்டரியிலிருந்து வெளிப்படுவாள் என்று அந்தத் திசையையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
 
-----------------
 
யார் இவன்?
 
முதுகு காட்டி நின்றிருந்தவனை தூரத்தில் நின்ற மைதிலிக்கு சரியாக தெரியவில்லை.
 
ஒரு கனவின் விளிம்பில் நின்ற காட்சி போல.
 
வானம் இளநீல சாம்பல் நிறத்தில் மங்கலாக விரிந்திருந்தது.
 
தூரத்தில் பனியால் மூடப்பட்ட மலைத் தொடர்கள்.
 
அவற்றின் நிழலை கண்ணாடிப் பரப்பை போல அமைதியாக தாங்கியிருந்த ஏரி.
 
மேகங்களும் மலைகளும் ஒன்றாக கரைந்து நிற்கும் அமைதி.
 
அவள் அணிந்திருந்தது —
 
மெல்லிய இளஞ்சிவப்பு கலந்த மரூன் நிற காட்டன் சுடிதார்.
 
கழுத்துப் பகுதியில் சிறிய கைத்தையல் வேலை.
 
துப்பட்டா எளிமையாக தோள்மேல் போட்டிருந்தது.
 
அவள் கூந்தல் முழுவதும் விடப்படவில்லை... சைடில் ஒரு சாதாரண ஹாஃப்-கிளிப் வைத்து,
மீதமிருந்த கூந்தல் இயல்பாக தோள்களில் வழிந்தது.
 
காற்று தீண்டிய போது —
 
கிளிப்பில் பிடி கொடுக்காத சில மென்மையான இழைகள்
கன்னத்தை வருடி, மீண்டும் அவள் தோள்களுக்கு பின்னால் சரிந்தன.
 
சுற்றிலும் வண்ண துளிகள் போல விரிந்திருந்த பல்வேறு மலர்கள் — சிவப்பு, இளஞ்சிவப்பு, ஆரஞ்சு, ஊதா.
 
பனித்தூவல் இடையிடையே மிதந்து வந்து, காட்சியை மறைத்தும் மீண்டும் திறந்தும் கொண்டிருந்தது.
 
அந்த மங்கலான பின்னணியில் —
 
அவன் தூரத்தில் கனவு காட்சியில் தெரிவது போல் அரைகுறையாக தெரிந்தான்.
 
அவள் அவனை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறினாள்.
 
யார் அவன் என்று தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.
 
அவன் முகம் இன்னும் தெளிவாக வேண்டும் என்று அவளது பார்வை போராடியது.
 
நெஞ்சுக்குள் ஓர் அசாதாரண அதிர்வு.
 
கைகளில் ஜில்லிப்பு.
 
மனதை மயக்கும் மெல்லிய இசை எங்கிருந்தோ கசிந்தது
 
பனி மெதுவாக விலகியது.
 
அவன் திரும்பினான்.
 
அங்கே — சிக்கி.
 
மைதிலி திடுக்கிட்டு முழித்தாள்.
 
ஃபுட்பால் கிரவுண்டின் கான்கிரீட் கிராண்ட் ஸ்டாண்டில் படுத்திருந்த டைரக்டர் ஜேம்ஸ் கேமராமேன், கை விரலை காற்றில் சுழற்றி டைரக்டர்கள் போல frame அமைத்தான்.
 
“இது நல்லா வொர்க் அவுட் ஆகும்…” என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டான்.
 
“சிக்கி பாயிண்ட் ஆப் வியூல இந்த மாதிரி ஒரு ட்ரீம்-ஷாட் வச்சிரலாம்.”
 
உண்மையில் ஹீரோவும் ஹீரோயினும் இன்னும் ப்ராப்பரா ஒருவரை ஒருவர் கவனிக்கவே இல்லை.
 
ஆனா சிக்கி?
 
அவன் ஏற்கனவே மனசுக்குள் ஒரு காதல் கதையை ஆரம்பிச்சுட்டான்.
 
“இது பத்தாது. இன்னும் இடையில புகுந்து யாராவது  குழப்பணும்… அப்பதான் அது ரொமான்டிக் டிராமா…” என்று நினைத்தபடி சிரித்தான்.
 
அந்த யோசனை முழுமையடையுமுன்—
 
Cut.
 
SSG கல்லூரி – இன்டர்நெட் சென்டர் | மதியம் 2 PM
 
கீபோர்டு தட்டும் சப்தங்கள்... இடைவிடாமல்.
 
மூலையில் இருக்கும் கேபினில் —
 
பாபி திரைக்கு நெருங்கி உட்கார்ந்திருந்தான்.
 
MSN மெசஞ்சர் விண்டோ திறந்திருக்கிறது.
 
பச்சை மனிதன் சின்னம் — “Online”.
 
Bobby (2:03 PM):
 
ஹாய் 🙂
 
நேத்து மாலை பிரண்டோட ஆங்கிலோ இந்தியன் காபி ஷாப்புக்கு போயிருந்தேன்…
அதனால கொஞ்சம் பிசி ஆயிட்டேன் 😛
 
சில விநாடிகள்…
 
திரையில் — Typing…
 
ரிப்ளை (2:04 PM):
 
அப்படியா? 😉
 
நேத்து ஈவினிங் நானும் அங்கதான் இருந்தேன்…
 
பாபி சற்று நிமிர்ந்து உட்கார்ந்தான்.
 
பாபி: சீரியஸா? :-O
 
நேத்து நிறைய காலேஜ்  பொண்ணுங்க கூட்டம் இருந்துச்சு… அப்போ நீயும் இந்த ஏரியா தானா?
இப்பவாச்சும் நீ யாரு… எந்த college?… சொல்ல மாட்டியா? :-/
 
Nudge!
 
திரை லேசா குலுங்கியது.
 
ரிப்ளை:
 
ஹெ ஹெ… 🙂
 
அதை இவ்வளவு சீக்கிரம் சொல்லிட்டா சுவாரஸ்யம் போயிடுமே…
 
பாபி: அட்லீஸ்ட் உன் போன் நம்பராவது குடு.
 
ரிப்ளை: :-)... தரணும்னு தோணும்போது தருவேன்.
 
பாபி: shit… 😀
எவ்வளவு நாள் இப்படி சாட்டிங்கிலேயே டைம் ஓட்டுறது? நேர்ல எப்போ மீட் பண்ணலாம்? 😉
 
திரையில் —
 
Typing…
 
Typing…
 
ரிப்ளை:
 
மீட் பண்ணலாம்… அதுக்கு நேரம் வரும்… அப்போ பண்ணலாம் 🙂
 
சின்ன (L) சின்னம் மினுங்கியது.
 
பாபி கடுப்பாக சிரித்தான்.
 
மனசுக்குள் — “யாரு இவ?”
 
சாட்டிங் தொடர்ந்தது.
 
அதே நேரத்தில் —
 
சென்டரின் மறுபக்க காபினில் மைதிலி.
 
அவள் முன் திறந்திருந்தது அதே மாதிரி மெசஞ்சர் விண்டோ.
 
அவள் மெதுவாக சில வரிகள் தட்டினாள்.
 
“ஹூம்…”
 
“பார்ப்போம்…”
 
“சரி…”
 
அவள் உதட்டின் ஓரத்தில் சிக்கனமான புன்னகை.
 
திரையைப் பார்த்து ஒரு நொடி யோசித்தாள்.
 
பின் மீண்டும் typing.
 
அதே நேரத்தில் —
 
பாபி திரை முன்னே சாய்ந்து, சிரித்துக்கொண்டே பதில் தட்டிக் கொண்டிருந்தான்.
 
தொடரும்
 
 

உங்களின் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவிடவும்

https://kavichandranovels.com/community/topicid/636/



   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 1 year ago
Posts: 153
Topic starter  

 ஜானகி மந்திரம் 12 A

மறுநாள் காலை – 8:30 | லேடீஸ் ஹாஸ்டல் Room no: 143
 
மறுநாள் காலை – 8:30 AM
 
கதவு ஒருவித ஆக்ரோஷத்துடன் திறக்கப்பட, உள்ளே நுழைந்த இந்துவின் முகம் கறுத்துப்போயிருந்தது. 
 
கையில் இருந்த பையை கட்டிலில் ஓங்கி வீசியெறிந்தவள், மூச்சிரைக்க நின்றாள்.
அப்போது கண்ணாடியின் முன் நின்றிருந்த சஞ்சுவும் மைதிலியும், ஏதோ ஒரு வேடிக்கையான விஷயத்தைப் பேசி சிரித்துக்கொண்டே கல்லூரிக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
“என்னடி டென்ஷனா வர்ற?” என்று சஞ்சு திரும்பி கேட்டாள்.
 
இந்து தன் ஆத்திரத்தை கட்டுப்படுத்த முயன்றபடி, “நான் இப்போதான் அசிஸ்டன்ட் வார்டன் சுனிதா மேம் கிட்ட பேசிட்டு வர்றேன்... அந்த DSG குரூப் நம்மள பத்தி ஒரு கம்ப்ளைன்ட் ரெடி பண்ணிட்டு இருக்காளுங்க!” என்றாள்.
 
சஞ்சுவும் மைதிலியும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
 
“எதுக்கு?” சஞ்சு சற்றே குரல் உயர்த்தினாள்.
 
“நம்ம காலேஜ் பொண்ணு மைதிலி வெளியில போய் ஒரு வெயிட்டரா வேலை பாக்குறது, SSG மாதிரி ஒரு 'Reputed' காலேஜுக்கு தேவையற்ற கறையாம்! இங்க படிக்கிறவங்க எல்லாம் ஹை-கிளாஸ் சொசைட்டி பசங்க... எல்லாரும் அவமானமாக ஃபீல் பண்ணுவாங்களாம். மேடம் permission கொடுத்ததால தானே வெளியில போறா. அந்த permission cancel பண்ண சொல்லப் போறாங்களாம்.”
 
அறைக்குள் ஒரு கனமான நிசப்தம் நிலவியது. 
மைதிலி மெதுவாக,
 
“நேத்து அவங்க என்னை கஃபேல பார்த்த பிறகே இந்த மாதிரி ஏதாவது பண்ணுவாங்களோனு நினைச்சேன்…” என்றாள்.
 
சஞ்சு கடுப்பாக திரும்பினாள்.
 
“அதெல்லாம் ஒன்னும் கிடையாது சுட்கி! நீ எங்க கூட சேராம அமைதியா வேலைக்கு போயிருந்தா உனக்கு பிரச்சனை வந்திருக்காது. நீ எங்க கூட சேர்ந்ததால தான் இப்ப உன்னை target பண்ணுறாங்க!”
 
இந்து:
“அவங்க prestige… high class… gaurav… izzat…ன்னு பேசி பேசி கடுப்பேத்துறாங்க! படிக்கிற பசங்களையும் நிம்மதியா படிக்க விட மாட்டாங்க. இவ எதுக்காக வேலைக்கு போறா? சொந்தக் கால்ல நிக்கணும்னு ஆசைப்பட்டு போறா. அதுல என்ன தப்பு இருக்கு?”
சஞ்சு கட்டிலில் கையை வெறுப்பாக குத்தினாள்.
 
“என்ன பேச்சு… என்ன திமிர்… என்ன தெனாவெட்டு! ஒவ்வொரு தடவையும் நம்ம விஷயத்தில எதிலயாவது மூக்கை நுழைச்சுட்டே இருக்காங்க. நம்மளாலயும் சரியான பதிலடி கொடுக்கவே முடியல. எதுலயாவது  சிக்குவாளுங்கன்னு பார்த்தா மாட்ட மாட்டேங்கிறாளே! காலேஜ் முடியறதுக்குள்ளயாவது ஏதாவது பண்ணி அவங்களோட திமிர அடக்கணும்!”
இந்து சோர்வாக அமர்ந்தாள்.
 
“அவங்க குரூப் ரொம்ப பெருசு… வசதியும் செல்வாக்கும் ஜாஸ்தி. ஈசியா கலைக்க முடியாது. நாம மூணு பேரு தான் இருக்கோம்… என்ன பண்ண முடியும்? பைனல் இயர் வேற, நேரடியா மோதி பிரச்சனையில் சிக்கிக்க கூடாது..."
சஞ்சுவும் ஒரு சில நொடிகள் யோசித்து விட்டு,
 
"அதுவும் சரிதான். ஆனா அவளுக பண்றதுக்கெல்லாம் நாம பதிலடி கொடுக்காம இருக்கிறதால அவளுகளுக்கு இன்னும் குளிர் விட்டு போகுது. எதையும் செய்ய முடியலைன்னு நினைக்கும் போது செம காண்டாகுது.." என்றாள்.
மைதிலி இருவரையும் மாத்தி மாத்தி பார்த்தாள். ஒரே ஹாஸ்டல் என்பதால், இவர்கள் இருவரிடமும் DSG group நிச்சயம் அடிக்கடி மோதி இருப்பார்கள். அதில் யார் பக்கம் நியாயம் இருந்திருக்கும் என்பதை மைதிலிக்கு சொல்லி தெரிய வேண்டியது இல்லை. மைதிலிக்கு DSG குரூப்பை எதிர்க்க வேண்டும் என்ற பெரிய ஆர்வம் எதுவும் இல்லை.
 
ஆனா —
 
இந்து, சஞ்சு இருவரின் முகத்தில் இருந்த கோபமும், விரக்தியும் அவளை கஷ்டப்படுத்தியது. அவர்களுக்காகவாது ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியது.
உண்மையில், மைதிலி ஒன்றும் விவரம் தெரியாதவள் அல்ல. சிறுவயதிலிருந்தே அவள் சந்தித்த வறுமையும்,  அமில பேச்சுகளும், மாமா வீட்டில் அவள் வாழ்ந்த அந்த ஒடுக்கப்பட்ட வாழ்க்கையும் அவளுக்குப் பல கசப்பான பாடங்களை கற்பித்திருந்தன. பிரச்சனைகளை எப்படி கையாள வேண்டும் என்பதும், இக்கட்டான சூழலில் இருந்து லாவகமாக எப்படி வெளியேற வேண்டும் என்பதும் அவளுக்குப் புதுசு கிடையாது. அவளிடம் இருந்த ஒரே பலவீனம் அந்த தாழ்வு மனப்பான்மை மட்டும்தான். பிறவி நிறமும், வறுமையும் அவளை ஒரு குறுகிய கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தது.
 
ஆனால், சஞ்சுவும் இந்துவும் அவளுக்கு கொடுத்த அந்த அளவற்ற நட்பும், நிபந்தனையற்ற அங்கீகாரமும் அந்தத் தாழ்வு மனப்பான்மை எனும் திரையை எப்போதோ கிழித்துவிட்டன. இப்போது அவளது மூளை மிகவும் தெளிவாகவும், கூர்மையாகவும் செயல்பட்டது. தனது தோழிகளின் முகத்தில் இருக்கும் அந்த வேதனையும் விரக்தியும், இப்போது மைதிலியின் சொந்த பிரச்சனையாக மாறியிருந்தது. 
 
அவர்கள் இருவருக்காகவும் எதையும் செய்ய அவள் துணிந்தாள்.
 
அவள் மெதுவாக திரும்பினாள்.
 
“நான் ஒரு ஐடியா சொல்லட்டுமா?"
இருவரும் ஆச்சரியமாக அவளை நோக்கி பார்த்தனர்.
 
இந்து:  நீயா? சரி சொல்லு.
 
மைதிலி:
“குரூப் பெருசா இருக்கலாம். ஆனா அதுல முக்கியமான நபர்கள் மூணு பேர் தான். அவங்களை மட்டும் பிரிச்சிட்டா… குரூப் தானா கலைஞ்சிரும்."
சஞ்சுவும் இந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
 
“எப்படி?” — சஞ்சு கண்களை பெரிதாக்கி கேட்டாள்.
 
மைதிலியின் முகத்தில் அமைதி. ஆனா கண்களில் — ஒரு புதிய தீப்பொறி.
 
 மைதிலி குரலில் ஒரு நிதானமான முதிர்ச்சி இருந்தது.
 
"வசதியும் செல்வாக்கும் அவர்களுக்கு இருக்கலாம். ஆனால், அவங்க காலேஜ்குள்ள ஒரு பாதுகாப்பான கோட்டைக்குள்ள (Safe zone) இருக்குறதால தான் பெரிய அளவில் அவங்களுக்கு பிரச்சினை வரல. அதனாலதான் இஷ்டத்துக்கு ரூல்ஸ் பேசிக்கிட்டு எல்லாரையும் மிரட்டிட்டு இருக்காங்க. தேரை இழுத்து தெருவுல விட்டு சிக்கலில் சிக்க வச்சா சரியாயிடும்... ஆனா ரெண்டு ஸ்டெப்பா பண்ணனும். அக்பர்-பீர்பால் கதையில வர்ற ‘படி லக்கீர் கீச்னா’ (Badi Lakeer Kheenchana) தியரி மாதிரி..."
 
சஞ்சுவும் இந்துவும் புரியாமல் அவளையே பார்த்தனர்.
மைதிலி தொடர்ந்தாள்.
 
"ஒருமுறை அக்பர் தரையில் ஒரு கோட்டை வரைந்து, "இந்த கோட்டை தொடாமலோ அல்லது எதையும் அழிக்காமலோ இதை சிறியதாக்கி காட்ட வேண்டும்"ன்னு சவால் விடுறாரு.
அதற்கு பீர்பால், அக்பர் வரைந்த கோட்டிற்கு பக்கத்திலேயே அதைவிடப் பெரிய ஒரு நீண்ட கோட்டை வரைவார். இப்போது அக்பர் வரைந்த முதல் கோடு தானாகவே சின்னதா தெரியும். அதே tactics இந்த பிரச்சினையில் யூஸ் பண்ணலாம்.
 
DSG குரூப்பின் அதிகாரத்தை நேரடியாக தடுத்து நிறுத்த முயலாமல், அவர்களை விடப் பெரிய ஒரு 'தாக்கத்தை' அல்லது அவர்கள் எதிர்பார்க்காத ஒரு 'நெருக்கடியை' அவங்களுக்கு ஏற்படுத்தி விட்டா அவங்களோட அதிகாரத்தை செல்லா காசா மாத்திரலாம். ஸ்ரேயா கூட சேர்ந்தால் கௌரவம்னு நினைச்சுத்தானே எல்லாரும் அந்த குரூப்ல சேர்றாங்க? ஆனா, அந்த பக்கம் போனா அடுத்தடுத்து வம்பும் வழக்கும் வரும்னு தெரிஞ்சா, எவளாவது அங்கே போய் ஓட்டுவாளா? பயந்து ஓடிடுவாங்க. ஸ்ரேயாவோட செல்வாக்கை விட பெரிய  பயத்தை நாம உருவாக்கணும். இதுதான் ஃபர்ஸ்ட் ஸ்டெப்..
இரண்டாவது ஸ்டெப். ஸ்ரேயா, சலோனி, பிரணவி... இந்த மூணு பேரோட ஒற்றுமைதான் அந்த குரூப்போட பலம். அந்த மூணு பேரையும் பிரிச்சிட்டா, அந்தப் பெரிய குரூப் தானாவே கரைஞ்சு போயிடும். அவங்க ஒவ்வொருத்தருக்கும் ஒரு பலவீனம் இருக்கும். அந்த இடத்தைத் தட்டுனா போதும்...
 
சஞ்சு குழப்பத்துடன் தலையை சொரிந்தபடி கேட்டாள்: "chutki, I really don't get what you're trying to say. Can you be more specific?"
 
மைதிலி விளக்க ஆரம்பித்தாள்.
 
தொடரும்

 

உங்களின் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவிடவும்

https://kavichandranovels.com/community/topicid/636/



   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 1 year ago
Posts: 153
Topic starter  
ஜானகி மந்திரம் 13

மைதிலி தொடர்ந்தாள்.
 
“வர 15ஆம் தேதி அவங்களுடைய கண்டாலா பங்களாவில் பார்ட்டி நடத்தப் போறதா நேத்து பேசிக்கிட்டு இருந்தாங்க…”
 
சஞ்சு கைகளை மார்பின் குறுக்காக கட்டிக் கொண்டு,
 
“அதுக்கு?” என்று கேட்டாள்.
 
“எப்படியும் கேர்ள்ஸ், பாய்ஸ் ஆட்டம் பாட்டம்… then ஆல்கஹால் இருக்கும். யாருக்கு தெரியும்… drugs கூட இருக்கலாம்,” மைதிலி நிதானமாக சொன்னாள்.
 
“இந்த விஷயத்தை கலாச்சார காவலர்கள்ன்னு சொல்லிட்டு திரியிறானுங்களே   அவங்க கிட்ட போட்டுக் கொடுக்கலாம்."
 
(சஞ்சுவும் இந்துவும் புரியாமல் பார்க்க...)
 
"அதான் அந்த ‘மஹாராஷ்ட்ர ஸ்வாபிமான் ரக்ஷக் சங்கடனா’ன்னு ஒரு குரூப் இருக்கே... அவங்கள சொல்றேன்... pune டிஸ்ட்ரிக்ட்ல ரொம்ப ஆக்டிவா இருக்காங்க. போலீசுக்கும் anonymous-ஆ call பண்ணி சொல்லலாம்.”
 
இந்து கண்களை பெரிதாக்கி,
“ இந்த வருஷ Valentine’s Day-க்கு பார்க்கில் உட்கார்ந்த ஜோடிகளை அடிச்சு வெரட்டி பிரச்சனையாச்சே, அந்த குரூப்பா?” என்று கேட்க,
 
“அதே,” என்றாள் மைதிலி.
 
இந்து சஞ்சுவுக்கு விளக்கினாள்,
“Night club, private party, டூரிஸ்டா வர்ற லவ்வர்ஸ்ன்னு தெரிஞ்சா போதும். ‘கலாச்சாரம் கெட்டுப் போகுது’ன்னு சொல்லிட்டு உள்ளே புகுந்து கலாட்டா பண்ணுவாங்க. சின்ன சின்ன விஷயங்களுக்கும் போராட்டம் ஊர்வலம் எல்லாம் நடத்துவாங்க. பெரிய கட்சிகளின் ஆதரவும் மறைமுகமாய் இருக்கு. அதனால இவனுங்க பண்ற அட்ராசிட்டியை தடுக்க முடியல..."
 
சஞ்சு ஓஹோ என தலையசைத்தாள்.
 
“நானும் அந்த குரூப் பத்தி கேள்விப்பட்டு இருக்கேன். ஆனா இவ்வளவு டீடைல் தெரியாது…”
 
மைதிலி: 'பொண்ணுங்களும் பசங்களும் சேர்ந்து பங்களாவில் கூத்தடிக்கிறாங்க’ன்னு அவனுங்க ஆபீஸ்க்கு போன் பண்ணி போட்டு கொடுத்தா போதும். டென்ஷன் ஆயிருவாங்க. அவங்க நேர்ல போய் கலாட்டா பண்ண ஆரம்பிச்சா பிரச்சனை பெருசாயிடும். பேப்பர்ல வரும்… டிவில வரும்… காலேஜ் பேரு, DSG குரூப் பெயர் வெளியில கசியும்…. தேவையில்லாம நாறிப் போயிருவாங்க.”
 
இந்து: Arey baapre!!
 
மைதிலி: “பிரச்சனை direct-ஆ principal-க்கு போயிரும், இவ கூட சேர்றது பிரெஸ்டிஜ்னு  நினைச்சுட்டு இருக்குற பொண்ணுங்க கூட சேரணுமான்னு யோசிப்பாங்க. பேச தயங்குவாங்க. இதுதான் first step.”
 
சஞ்சுவும் இந்துவும் ஆச்சரியமாக அவளை பார்த்தார்கள்.
 
இந்து சிரித்தபடி,
 
“Chutki… நீ எப்பவும் அமைதியா இருக்கறதுனால ஒண்ணுமே தெரியாதுனு நினைச்சா… இவ்வளவு solid-ஆ ஐடியா சொல்றியே! பயங்கரமான ஆளுடி நீ…” என்றாள்.
 
மைதிலி கமெண்டுக்கு சிரிப்பை பரிசளித்துவிட்டு தொடர்ந்தாள்.
 
“இந்த பிரச்சனை வெளியில வந்துச்சுன்னா DSG வெளியில தலை காட்டவே முடியாது. கொஞ்ச நாளைக்கு அமுங்கிருவாங்க. அந்த கேப்புல Step Two implement பண்ணணும்.”
 
“Step Two????” — சஞ்சு.
 
“ஸ்ரேயா, சலோனி, பிரணவி… மூணு பேரையும் பிரிச்சு விட்டுட்டா DSG குரூப் தானா கலகலத்து போயிரும்.”
 
சஞ்சு கண்ணை சிமிட்டினாள்.
 
“அதுக்கு ஏதாவது ஐடியா ready-ஆ இருக்கா?”
 
மைதிலி தோளை குலுக்கினாள்.
 
“அட ஐடியா வராம போயிருமா? முதல்ல Step One ஐ போட்டு தாக்குவோம். அப்புறம் Step Two-க்கு போலாம். என் பிரெண்ட்ஸ் கூட பிரச்சினை பண்றது யாரா இருந்தாலும் சரி... நான் சும்மா விடமாட்டேன்.."
 
ஒரு நொடி —
 
சஞ்சுவும் இந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.
 
இவ்வளவு நாட்கள் DSG குரூப்பின் அட்டகாசம் தாங்காமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தவர்களுக்கு — திடீரென ஒரு வழி கிடைத்திருந்தது.
 
சஞ்சு திடீரென எழுந்து,
 
“சூப்பர் சுட்கி!” என்று குதூகலமாக கத்தினாள்.
 
இருவரும் ஆளுக்கொரு பக்கமாக வந்து மைதிலியை கட்டிப் பிடித்து நசுக்கினார்கள்.
 
“ஏய் விடுங்க… விடுங்க!” என்று சிரித்தபடியே நகர முயன்றாள் அவள்.
 
ஆனா அவர்கள் விடவே இல்லை — இன்னும் இறுக்கமாக கட்டிப்பிடித்தபடி, அவள் சிரிப்பை முழுக்க தங்களுக்குள் அடைத்து வைத்தார்கள்.
 
ஒரு கட்டத்தில், ஒருத்தி ஒரு கன்னத்தில்… இன்னொருத்தி இன்னொரு கன்னத்தில் — முத்தமிட்டு ஈரப்படுத்தினார்கள்.
SSG கல்லூரி – காலை 9:45 AM
 
பிகாம் பைனல் இயர் கிளாஸ் ரூம் வாசலுக்கு அருகே வந்த மைதிலி உள்ளே நுழையப் போனாள்.
 
“எக்ஸ்க்யூஸ் மீ!”
 
என்ற குரல் கேட்டு நின்றாள்.
 
காரிடாரின் சுவரில் சாய்ந்து, கையில் ஒரு நோட்டு புத்தகம், முகத்தில் தேவையில்லாத அசட்டு சிரிப்பு — டைரக்டர் ஜேம்ஸ் கேமராமேன்.
 
“யார் நீங்க? உங்க பேர் என்ன?” அவளைப் பார்த்து கேட்டான்.
 
மைதிலி அமைதியாக பார்த்தாள். எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே!
 
ஞாபகம் வந்தது!
 
அன்றைக்கு மனோவுடன் பார்த்திருக்கிறாள்.
 
“முதல்ல நீங்க யாரு? ஏன் இதெல்லாம் கேக்கறீங்க?”
 
ஜேம்ஸ் கண்ணாடி இல்லாமலேயே imaginary-ஆ சரி செய்யும் பாடி லாங்குவேஜ்.
 
“விஷயம் இருக்கு. முதல்ல சொல்லுங்க. இந்த காலேஜுக்கு புதுசா இருக்கே… அதனால கேக்குறேன்.”
 
மைதிலி சுருக்கமாக தன் பெயர், டிபார்ட்மெண்ட், சொந்த ஊர் எல்லாம் சொன்னாள்.
 
சொல்லிவிட்டு சந்தேகமாக கேட்டாள்.
 
“சொல்லிட்டேன். என்ன விஷயம் சொல்லுங்க?"
 
ஜேம்ஸ் சற்று நெருங்கி வந்து, குரலை தழைத்தான்.
 
"அன்னைக்கு நானும் எங்க பாஸும் வந்தபோது… இந்த பால்கனியில் இருந்து நீங்க எங்க பாஸை குறுகுறுன்னு பாத்துட்டு இருந்தீங்களே… அதனால தான் கேட்டேன்.”
 
மைதிலி யோசித்தாள்.
 
‘ பாஸ்’ன்னா… மனோவா?'
 
“ஆமா பார்த்தேன்,” சிம்பிளா சொன்னாள்.
 
அவள் பார்த்ததாக ஒத்து கொண்டதும் ஜேம்ஸ்க்கு உலகளாவிய உற்சாகம்.
 
மைதிலி: “காலேஜே அவர பத்தி பேசுது. என்ன specialன்னு தெரிஞ்சுக்கத்தான் பாத்தேன். தப்பா?”
 
ஜேம்ஸ் மறுப்பது போல் தலையசைத்து,
 
“தப்பில்லை… தப்பில்லை… தப்பே இல்ல! அப்ப பார்த்தது கன்ஃபார்ம் தான் இல்லையா?" என்றான்.
 
அந்த நேரம் — கிளாஸ் ரூமுக்குள் இருந்து திடீரென்று அதட்டலான குரல்.
 
“ஏய்!”
 
வெளியே வந்தாள் ரிதிகா சர்மா — கிளாஸ் ரெப்ப்ரெசெண்டேட்டிவ்.
 
“என்ன???? எங்க கிளாஸ் பொண்ண கலாச்சிக்கிட்டு இருக்கியா?” என்று அதட்டலாக கேட்டாள்.
 
ஜேம்ஸ் உடனே நிமிர்ந்து நின்றான்.
 
“ஹலோ! கலாய்க்கிறேனா? யார் சொன்னா? இது மரியாதை நிமித்த சந்திப்பு.”
 
ரிதிகா கண்களை சுருக்கி மைதிலியை பார்த்தாள்.
 
“என்ன மைதிலி?”
 
மைதிலி சிரித்தாள்.
 
“yes… casual-ஆ தான் பேசிட்டு இருக்கார்.”
 
ரிதிகா எக்ஸ்ட்ரா இரண்டு விநாடி ஜேம்ஸை scan பண்ணிவிட்டு,
 
“ஹூம்…” என்று சொல்லி உள்ளே திரும்பி போனாள்.
 
அவள் சென்றதும்,
 
ஜேம்ஸ் லைட்டாக நெளிந்தபடி, குரலை இழுத்தான்.
 
“நீங்க பார்த்தத… எங்க பாஸும் பார்த்தாரு…
அது சாதாரண ‘Dilwale Dulhania Le Jayenge’ level பார்வை இல்ல…
 
கொஞ்சம் ‘Pehla Nasha’ feel… கொஞ்சம் ‘Kuch Kuch Hota Hai’ type confusion… மேல கொஞ்சம் ‘Mohabbatein’ background breeze…”
 
மைதிலி புரியாமல் நின்றாள்.
 
ஜேம்ஸ் இன்னும் full  flow-வில்:
 
“அந்த balcony shot full ‘Qayamat Se Qayamat Tak’ vibe… அடுத்தது என்ன தெரியுமா? Straight ‘Dil To Pagal Hai’ mode…”
அப்புறம்— story ‘Hum Aapke Hain Kaun’ல இருந்து ‘Kabhi Kabhi’க்கே போயிடும்…”
 
மைதிலி:  “என்ன சொல்றீங்க? புரியலையே?”
 
ஜேம்ஸ் சிரித்தான்.
 
“Nothing… trailer தான். பிக்சர் அபி பாக்கி ஹே."
 
மைதிலி அவன் சொன்னதை டி-கோட் பண்ண முடியாமல்,  கன்பியூசனில் பார்க்க,
 
“Anyway… தொடர்ந்து பாருங்க… அடிக்கடி பாருங்க… நான் எங்க லீடர்கிட்ட சொல்லி வைக்கிறேன்.”
 
அப்படியே பின்னால் ஸ்டெப் பை ஸ்டெப்பாக நடந்து, சிரித்தபடி சென்றான்.
 
மைதிலி m.v: என்னாச்சு இவனுக்கு? இவனும் பைத்தியம். இவன் பாஸும் பைத்தியம்.
 
அவளுக்கு குழப்பம். யோசித்தபடியே கிளாஸ் ரூமுக்குள் நுழைந்தாள்.
 
ஜேம்ஸ் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
 
இரண்டு அடிகள் போய் —
 
திடீரென்று நின்றான்.
 
“நல்லா ஹேண்டில் பண்ணிட்டேடா ஜேம்ஸ்…” என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டான்
 
பின்னர், இரண்டு விரலால் தன் நெற்றியை தட்டிக் கொண்டு,
 
“Director material டா நீ…” என்று தனக்குத்தானே அப்ரிஷியேட் செய்து கொண்டான்.
 
அதற்குப் பிறகு —
 
காரிடாரின் மூலையை அடையும் முன்,
 
இன்னும் ஒருமுறை பின்னால் திரும்பி பார்த்தான்.
 
மைதிலி உள்ளே போய் விட்டாளா என confirm பண்ணிக் கொண்டு,
 
ஆஸ்கர் அவார்டு வாங்க போகும் டைரக்டர் போல், ஸ்டைலாக  ஆங்கிள் பார்த்தபடியே நடை போட்டு மறைந்தான்.
 
காரிடாரில் அவனை கடந்து வந்த juniors இருவர்,
 
“யாருரா இவன் mental!!!!…” என்று ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
SSG கல்லூரி – மெயின் கேண்டீன் | காலை 11:15 |
 
செகண்ட் ஹவர் முடிந்து பதினைந்து நிமிட பிரேக்.
 
SSG கேண்டீன் —
ஒரே பெரிய ஹால். குறைந்தது இருபத்தைந்து டேபிள்கள்.
 
ஒவ்வொரு டேபிளும் நாலு பேர், ஆறு பேர், சில இடங்களில் எட்டு பேர் வரை உட்காரும் அளவு.
 
மாணவர்களின் அரட்டை சத்தம் ஒரு பக்கம் அலை போல எழுந்து இறங்கி கொண்டிருந்தது.
 
ஒரு மூலையில் சில “ப்ரொஃபஷனல்” லுக் மாணவர்கள் —
 
பேக்கில் இருந்து case-study நோட்ஸ் எடுத்து வைத்து, டீ குடித்துக் கொண்டே discussion.
 
மற்றொரு டேபிளில் junior batch — முழுக்க சிரிப்பு.
 
சுவர் முழுக்க soft drinks போஸ்டர்கள்.
 
காஷ் கவுண்டருக்கு முன் சிறிய வரிசை.
 
அந்த கூட்டத்தில் நடுவே —
 
ஒரு டேபிளை முழுக்க ஆக்கிரமித்து அமர்ந்திருந்தார்கள்:
 
பாபி.
 
மனோ.
 
சிக்கி.
 
சந்தீப்.
 
பிரேம்.
 
மணிஷ்.
 
அந்த நாளின் டாப்பிக் — சமீபத்தில் வெளியான ஒரு ஹிந்தி படம்.
 
மணிஷ்:
 
“டேய்… அந்த second half beach scene????”
 
சந்தீப் உடனே:
 
“செம சீன்ரா மச்சி"
 
மணிஷ் சிரித்து:
 
“Director camera வை எங்க வச்சிருக்கான், பாத்தீங்களா?
 
பிரேம் கூட சேர்ந்து:
 
காஸ்டியூம்க்கு  ப்ரொடியூசர் பட்ஜெட் குடுக்கல போல..
 
சிக்கி முகம் சுளித்தான்.
 
“ஏண்டா…  ஹீரோயின் என்ன டிரஸ் போட்டுருக்கான்னு பாக்குறதுக்கு தான் சினிமா போவீங்களா? படம் பார்க்க போக மாட்டீங்களா?
 
மூவரும் ஒரே நேரத்தில் அவனை நோக்கி திரும்பினர்.
 
சந்தீப்:
 
“நேத்து cafe ல யாரோ யாரையோ பார்த்து ஜொள்ளு விட்டுட்டு இருந்தாங்களே!!!"
 
சிக்கி: திருத்தம்.... ஜொள்ளு விடல்லை, நம்ம காலேஜ் பொண்ணு இங்க என்ன பண்றான்னு செக் பண்ணிட்டு இருந்தேன்.
 
மனிஷ்: நம்பிட்டோம், நம்பிட்டோம்.
 
அதே நேரம்,
 
பாபியும் மனோவும் சீரியஸாக ‘கல்ச்சுரல் ஃபண்ட்’ மற்றும் ‘சபான்சர்ஷிப்’ விவரங்கள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
 
பாபி : “டேய், Cultural fund statement பார்த்தியா? Last event-ல collect பண்ணதுக்கும் expense figureக்கும் match ஆகல.”
 
மனோ புருவம் சுருக்கினான்.
 
“Yes... Sponsorship amount mention பண்ணல. Cash entry vague-ஆ இருக்கு.”
 
பாபி: “Committee meeting-ல இதை raise பண்ணும."
 
மனோ: “Ok... ஆனா Direct-ஆ accuse பண்ண மாட்டேன். First clarification கேட்கிறேன். Treasurer explain பண்ணட்டும்.”
 
பாபி தலையசைத்தான்.
 
“15thக்கு முன்னாடி settle ஆகணும். Proper audit இல்லனா juniors கிட்ட wrong message போயிடும்.”
அந்த “15th” என்ற வார்த்தை,
 
பக்கத்திலிருந்த சந்தீப், மணிஷ் காதில் விழுந்தது.
 
சந்தீப் எதிரே இருந்த சிக்கி காதில் விழாமல், மணிஷ்க்கு மட்டும் கேட்கிற மாதிரி வாய்ஸை கம்மி பண்ணி:
 
“S folder வேணுமா? P folder வேணுமா?"
 
இருந்தாலும் சிக்கிக்கு கேட்டது.
 
மணிஷ்:
 
“S folder"
 
சந்தீப்: தெரியும்டா...  கும்முனு இருந்தா அதைத்தானே செலக்ட் பண்ணுவீங்க.
 
இருவரும் சலோனியா? பிரணவியா? யாரை செலக்ட் செய்வதென்று சிக்கிக்கு புரியாமல், கோட் வேர்டில் பேசிக் கொண்டிருந்தனர்.
 
மணிஷ்: சரி ஓகே. பிரச்சனை வேண்டாம்.  S ஃபோல்டர் லாகின் பண்றது யாருன்னு டாஸ் போட்டு பார்த்துரலாம்.
 
சந்தீப் ஒத்துக் கொண்டு ஒரு ரூபாய் காயினை எடுத்து சுண்டி விட...
 
மணிஷ்: “Heads.”
 
Tails விழுந்தது.
சந்தீப் வெற்றி பெருமிதத்தில் புன்னகைத்தான்.
 
“Okay. S account இனிமே என் control.”
 
மணிஷ் ஏமாற்றமடைந்தாலும், சமாளித்துக் கொண்டு:
 
“Fine. OK. P account நான் பாத்துக்குறேன்", என்றான்.
 
சிக்கி சந்தேகமாக:
 
“என்னடா கிளாஸ் பக்கமே போறதில்ல, என்னமோ திடீர்னு படிப்புல அக்கறை வந்த மாதிரி பேசிக்கிறீங்க?"
 
மணிஷ் சீரியஸாக முகத்தை வைத்தபடி,
 
“Project submission டா. 15thக்கு  login confirm பண்ணணும்.”
 
சந்தீப் இன்னும் சீரியஸான குரலில்,
 
“Minimum one first download இல்லனா project incomplete.”
 
இருவரும் fist bump பண்ணிக் கொண்டார்கள்.
 
சிக்கி சந்தேக பார்வை பார்த்தபடியே சொன்னான்:
என்னமோ எனக்கு சரியா தோணல!
 
அந்த நேரம் மனோ கையை தூக்கி,
 
“அண்ணா… 6 வடா பாவ்! 6 Coke” என்று சத்தமிட,
 
கவுண்டரிலிருந்து,
 
“ஓகே பாய்!”
 
அதே நேரம் —
 
பிரேம் மட்டும்,
 
“அண்ணா… எனக்கு மட்டும் ஒரு தோக்ளா பாவ்", என்றான்.
 
மற்ற ஐந்து பேரும் அவனை மகா ஆச்சரியமாக திரும்பி பார்க்க,
 
பாபி:
 
“தோக்ளா and பாவா?"
 
சந்தீப்:
 
“நம்ம கேண்டீன்லயா?”
 
மணிஷ்:
 
“இது எப்போதிலிருந்து?"
 
( வடா பாவ் (Vada Pav) என்பது மகாராஷ்டிரா, குறிப்பாக மும்பையின் மிகவும் பிரபலமான, மலிவான  Street Food.  பொரித்த உருளைக்கிழங்கு வடை (வடா) மற்றும் பன் (பாவ்) ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தோக்ளா என்பது ஒரு குஜராத்தி உணவு வகை.     பிரேம் குஜராத்தி பெண்ணான மனிஷாவை  கரெக்ட் பண்ண ட்ரை பண்ணி கொண்டிருப்பதால்... அப்பவே குஜராத்தி உணவை சாப்பிட ஆரம்பித்து விட்டான் என்பதுதான் இந்த உள்குறிப்பு)
 
பாபி சிரித்தபடி:
 
“தோக்ளா பாவுல ஆரம்பிச்சிருக்கு... அடுத்தது காத்தியா பாவ், தீப்லா பாவ், பாப்ட்டா பாவ்ன்னு போயிட்டே இருக்கும் இனிமே நிறுத்த முடியாது..."
 
பிரேம் வெட்கப்பட்டு சிரிக்க,
 
சிக்கி: அதுக்கு ஏன்டா இப்படி வெட்கப்படுற? @#₹%^& என்று திட்டி விட்டு, அவசரப்பட்டு கெட்ட வார்த்தை பேசியதால் வாயில் தட்டிக் கொண்டு, "ஜெய் பஜ்ரங்பலி" என்றான்.
கேண்டீன் அண்ணா வந்து,
5 வடா பாவ், ஒரு தோக்ளா பாவ் டேபிளில் வைத்தார். அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
 
சிக்கி சுற்றிலும் மற்ற டேபிளை பார்க்க,
 
இரண்டு ஜூனியர் பசங்களும் ஒரு பொண்ணும் ஒரு டேபிளில் சிரித்து பேசிக் கொண்டிருந்தார்கள்.
 
சிக்கி அந்த டேபிளை பார்த்து முறைக்க....
 
அவன் பார்ப்பதை சிறு நேரத்தில் கவனித்து விட்டனர்.
அரட்டை சத்தம் குறைந்தது.
 
“டேய்… சீனியர் சிக்கி பாக்குறாப்புல…”
 
சொன்னவன் டீ கப்பை எடுத்துக்கொண்டு வேறு டேபிள் நகர்ந்தான்.
 
அவள் போன் வந்தது மாதிரியே குனிந்து பேச ஆரம்பித்தாள்.
 
மூன்றாவது பையன் நைசாக கேஷ் கவுண்டருக்கு சென்றான்.
 
மூன்று விநாடியில் டேபிளில் பேச்சு சத்தம் கலாசானது.
 
சிக்கி கெத்தாக சிரித்தான்.
 
“அது... அந்த பயம் இருக்கணும்.."
 
அதே நேரம் —
 
டைரக்டர் கேண்டீனுக்குள் நுழைந்தான்.
 
நேராக, சிக்கியின் அருகே வந்து நின்று, அவன் காதுக்குள் கிசுகிசுத்தான்.
 
“பாஸ்…”
 
சிக்கி திரும்பினான்.
 
ஜேம்ஸ்:
 
“Balcony பொண்ணு பேரு மைதிலி.”
 
சிறிய இடைவெளி.
 
“அது உங்களை தான் சைட் அடிச்சிட்டு இருக்கு.”
 
மறுபடியும் இடைவெளி.
 
“Confirm.”
 
அந்த வார்த்தை சிக்கியின் காதில் விழுந்த நொடி —
 
அவனுடைய கண்கள் பெரிதானது. உதடு தானாக திறந்தது. உற்சாகம் உடம்பு முழுக்க ஏறியது.
 
அவன்  control பண்ண முடியாமல் —
 
“ஹா!” என்று உற்சாகத்தில் துள்ளி குதிக்க, கையில் வைத்திருந்த கோக் பாட்டிலும் காற்றில் மேலே பாய்ந்தது.
 
டேபிளில் இருந்த  மற்றவர்கள்  குழப்பமாக பார்க்க,
ஜூனியர்கள் திரும்பி பார்த்து திகைத்தார்கள்.
 
ஒரு ஸ்லோ-மோஷன் காட்சி போல, அந்தப் பாட்டில் சுழன்று மேலெழ, அதிலிருந்த குளிர்பானம் சிதற, கேண்டீன் சத்தங்கள் அடங்கிப் போனது போன்ற ஒரு பிரமை!
 
பாட்டில் — அந்தரத்தில்.
ஃபிரீஸ் ஃபிரேம்.
 
கேண்டீன் சத்தம் — மியூட்.
 
பின்னணியில் ஒரு கற்பனை கோரஸ் வயலின்கள் இசைக்க ஆரம்பிக்க....
 
கட்.
செப் 15 | மாலை 6.30 மணி
 
கண்டாலா – ஹில் டாப் பங்களா
 
வளைந்து வளைந்து மலைப்பாம்பு போல் மேலே ஏறும் மலைச் சாலை.
 
கீழே பனிமூட்டம் படர்ந்த பள்ளத்தாக்கு.
 
கண்டாலா மலைச்சரிவின் அந்த உச்சிப்பகுதி, பனிமூட்டத்தால் ஒரு ‘HD’ பொலிவுடன் ஜொலித்துக் கொண்டிருந்தது.
 
தூரத்து பள்ளத்தாக்கில், டவுன் பகுதியின் வெளிச்சங்கள் — நட்சத்திரங்கள் போல் சிதறி கிடந்தன.
 
அந்த உயரத்தில் தனிமையாக எழுந்து நிற்கும் பெரிய பங்களா.  அந்தப் பங்களாவிற்குள்ளிருந்து கசிந்த ‘எலக்ட்ரிக் ப்ளூ’  மற்றும் ‘மெஜந்தா’ நிற விளக்குகள், அங்கிருந்த வெள்ளை நிறப் பனிப்படலத்தின் மேல் பட்டு ஒரு மாயாஜால போதையை அந்த சூழலில் உருவாக்கியிருந்தது.
 
முன்புறம் —
 
பெரிய இரும்புக் கேட்.
 
அதனருகே security cabin.
 
வாட்ச்மேன், டார்ச், போன், எல்லாம் ரெடி.
 
கேட் திறந்தால் —
 
நீளமான டிரைவ்வே.
 
இருபுறமும் trimmed hedge.
 
ஆனால் —
 
பங்களாவுக்கு அது மட்டும் தான் entry அல்ல.
 
பங்களாவுக்கு இரண்டு வழிகள்.
 
பின்புற entry — பார்க்கிங்க்கு செல்வதற்கான வழி. விரிந்த ஓபன் பார்க்கிங் ஸ்பேஸ். அங்கே ஏற்கனவே 2 கார்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன
 
ஒரு SUV.
 
ஒரு luxury sedan.
 
பங்களா ஹாலில் – Squad Krush party Setup.
 
டபுள் ஹைட் சீலிங்..
 
ஹால் நடுவே கிரிஸ்டல் சாண்ட்லியரின் வெளிச்சம்.
 
சுவரில் கலர் லைட்டுகள்.
 
ஒரு பக்கம் portable DJ console.
 
ப்ளூடூத் ஸ்பீக்கரில் ஏதோ ஒரு இங்கிலீஷ் பாப் மிக்ஸ் கேட்டுக் கொண்டிருந்தது.
 
ஹால் நடுவே இடம் காலியாக வைக்கப்பட்டிருந்தது —
 
நடனத்துக்காக.
 
லெப்ட் சைடில் closed bar cabinet. அதற்கு பக்கத்தில்  snacks counter, Ice bucket-கள், Mocktail glasses வரிசை மற்றும் Cola, orange, soda bottles.
 
பக்கத்தில் துணியால் மூடப்பட்டிருந்த bar trolley —
 
Glass sliding door கதவு வழியாக வெளியில் பள்ளத்தாக்கு விளக்குகள் தெரிகின்றன.
 
மலைப்பனி அவ்வப்போது கண்ணாடியில் மெல்ல படர்கிறது.
 
ஸ்ரேயா
 
சலோனி.
 
பிரணவி.
 
திஷா.
 
தான்வி.
 
மகிமா.
 
மகிமாவுக்கு மட்டும் கொஞ்சமாக பதட்டம்.
 
மேலும் ஒரு சில squad sisters.
 
பார்ட்டி இன்னும் ஆரம்பிக்காததால், ஆகாஷ் மற்றும் அவனுடன் வந்த ஒரு சில நண்பர்கள் லானில் நின்று பேசிக் கொண்டிருந்தனர் — அனைவரிடமும் பணக்கார செழுமை
 
ஆகாஷ்:  Blazer casual style.
 
ஹாலில் கேர்ள்ஸ் பேசிக் கொண்டிருந்தனர்.
 
“இன்னும் வரலையே?” என்று திஷா.
 
“வருவாங்க,” என்று ஸ்ரேயா நிதானமாக சொன்னாள்.
 
அனைவரும் மனோவும் அவன் நண்பர்களும் வருவதற்காக காத்திருந்தனர்.
 
இடைச்செருகல் –
ஒரு மணி நேரத்திற்கு முன்னால்,
 
கண்டாலா டவுனில் ஒரு காயின் பூத்.
 
ஒரு ரூபாய் நாணயம்.
 
சஞ்சு அதை உள்ளே போட்டு நம்பரை டயல் செய்தாள்.
 
“ஹலோ… மஹாராஷ்ட்ர ஸ்வாபிமான் ரக்ஷக் சங்கடனா அலுவலகமா?”
 
“கண்டாலா  நம்பர் 172/5, hilltop தனி பங்களாவில் இன்னைக்கு ராத்திரி பசங்க பொண்ணுங்கல்லாம் சேர்ந்து பாட்டு டான்ஸ்ன்னு கூத்தடிக்க போறாங்க. மற்ற மற்ற விஷயங்களும் இருக்கலாம்… நீங்க இருக்கிற ஏரியால இந்த மாதிரி அநியாயம்ல்லாம் நடக்குது. பாத்துக்கங்க..."
 
எதிர்முனை: யார் நீ? எங்கருந்து பேசுற?... என்று கேட்க,
 
சஞ்சு: அதெல்லாம் உங்களுக்கு எதுக்கு? நம்ம நாட்டோட கலாச்சாரம் கெட்டுப் போகக்கூடாதுன்னு நினைக்கிற ஒரு நலம் விரும்பின்னு வேணா வச்சுக்குங்க?
 
முகவரி மீண்டும் சொல்லப்பட்டது.
 
தொலைபேசி வைக்கப்பட்டது.
 
இந்து — அடுத்த ஃபோன் கால்.
 
“ஹலோ போலீஸ் ஸ்டேஷனா...?
 
விஷயம் வேறு மாடுலேஷனில் சொல்லப்பட்டது.
 
Line cut.
 
போன் பேசி முடித்ததும் மைதிலி மெதுவாக:
 
“Step One… done.”
 
மூவரும் ஹை ஃபை செய்து கொண்டு ஹாஸ்டலை நோக்கி கிளம்பினார்கள்.
 
கண்டாலா hilltop பங்களா – பின்புற parking.
 
பின்புற கேட் வழியாக வரிசையாக பைக்குகள் உள்ளே நுழைந்தன.
 
மனோ.... அவனை தொடர்ந்து,
 
பாபி.
 
சந்தீப்.
 
மணிஷ்.
 
மொத்தம் 4 பைக்குகள்.
 
மனோ முன்னால் வர, அவனைத் தொடர்ந்து  மற்ற மூவரும் ஒரு ‘கெத்தான’ அணிவகுப்பாக உள்ளே நுழைந்தனர். சிக்கி வந்தால் பார்ட்டியின் Vibe கெட்டுவிடும் என்பதால், அவனை லாவகமாகக் கழட்டிவிட்டு வந்திருந்தார்கள்.
பைக்குகளை சீராக நிறுத்திவிட்டு எஞ்சினை அணைத்தார்கள். மனோ தனது ஹெல்மெட்டை கழற்றி பைக்கின் மேல் வைத்தான்.
 
கண்களில் இருந்த அந்த விலையுயர்ந்த கூலிங் கிளாஸை ஸ்டைலாகக் கழற்றி, தனது ஷர்ட் பாக்கெட்டில் செருகிக் கொண்டான்.
 
சந்தீப் தன் தலைமுடியை சரிசெய்தபடி, “மச்சி... பிளேஸ் வேற லெவல்ல இருக்குல்ல? ஸ்ரேயா சரியான ஸ்பாட்டை தான் புடிச்சிருக்கா!” என்றான் உற்சாகமாக.
 
மணிஷ் ஒரு குறும்பு சிரிப்புடன், “ஆமாடா... ஆனா உள்ள இருக்கிற சரக்கை விட, அந்த ‘S’ and 'P' ஃபோல்டர் மேட்டரை நினைச்சா தான் இப்போவே கிக்கா இருக்கு!” என்று சொல்ல, சிரித்தனர்.
 
பாபி அவர்களை அடக்கினான்: “டேய்... கொஞ்சம் டீசன்ட்டா இருங்கடா. உள்ள போயிட்டு ஏதாவது கலாட்டா பண்ணி மனோவோட பேரை கெடுத்திடாதீங்க. கெத்து ரொம்ப முக்கியம்!”
 
“ஓகே... லெட்ஸ் கோ!” — மனோ சொல்ல, நால்வரும் ஜாலியாகத் தங்களுக்குள் கிண்டல் செய்தபடி,  பின்புறப் படிக்கட்டை நெருங்கினர்.
 
அதே நேரத்தில்,
பங்களாவின் உள்ளே இருந்து கசிந்த டிஜே இசையின் அதிரடி vibe அவர்களை ஆட்கொண்டது. ஆட்டத்திற்குத் தயாரான துள்ளலுடன் அவர்கள் உற்சாகமாக உள்ளே நுழைந்தனர்.
 
தொடரும்
உங்களின் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவிடவும்


   
ReplyQuote
Page 2 / 2

You cannot copy content of this page