All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

ராமனின் மோகனம் ஜானக...
 
Notifications
Clear all

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்

 

Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 12 months ago
Posts: 144
Topic starter  
ஜானகி மந்திரம் 1
 
முன்குறிப்பு:   
 
2000 வருடங்களின் ஆரம்ப காலகட்டத்தில் நான் மும்பையில் இருக்கும் போது, என் நண்பன் மூலமாக கேள்விப்பட்ட கதை. அந்த உண்மை கதையில் கற்பனை முலாம் பூசி இருக்கிறேன். 
 
25 வருடங்களுக்கு முன்னால், உண்மையான காதல்கள் உயிரோடு இருந்த காலகட்டத்தில் நடந்த கதை என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
 
இப்போதைய காலகட்டங்களில், நிகழ்ந்து கொண்டிருக்கும் (பெரும்பான்மையான) உருட்டு காதல்களை மனதில் வைத்து படித்து cringeசாக தோன்றினால், நிர்வாகம் பொறுப்பல்ல...
2010, March 30
 
மும்பை சாண்டா குரூஸ் டொமஸ்டிக் ஏர்போர்ட்டில், பெங்களூரில் இருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்கி கொண்டிருந்தது. விமானம் தரையை தொட்டு ஓடி, திரும்பி, வேகம் குறைந்து நின்றதும், மைதிலி ஒரு பெருமூச்சை ரிலீஸ் செய்தாள். அவள் டைம் பார்க்கும் ரிஸ்டு வாட்சில், நாமும் எட்டிப் பார்த்தால், மணி இரவு 7:10. ஜன்னல் வழியே  விமான நிலைய கட்டிடங்களும், அதன் கண்ணாடி சுவர்களும் நிறம் நிறமாய் தெரிந்தது. 
 
விமான பயணம் உண்மையிலேயே செம போர். பஸ் ட்ரைனாவது பரவாயில்லை. வயல்கள்,  வேலை செய்யும் விவசாயிகள், நீர் நிலைகள், தூரத்தில் தெரியும் மலைகள், தோப்புகள், செடி கொடிகள், கிராமங்கள், நகரங்கள், வீடுகள், குடிசைகள், சாலைகள், கையாட்டி சிரிக்கும்
குதூகலக் குழந்தைகள்,
வெட்கத்தை அலசிக் காயப்போடும்
குளத்தங்கரை குயில்கள்
என ஜன்னல் வழி
இயற்கையின் வண்ணங்களுடன்
ஓவியக் கண்காட்சி! எவ்வளவு முறை பயணம் செய்தாலும் சலிக்காது.
 
விமான பயணத்தில், 
வானம், மேகம், கடல்.. முதல் பயணத்தில் தெரியும் ஆச்சரியம் அதன் பிறகு சத்தியமாக இருக்காது.
ஏர் ஹோஸ்டஸ்களின் செயற்கை புன்னகை, உப்பு சப்பில்லாத உணவு,  இயந்திரத்தனமான முகங்கள், பிடிக்காத மேத்ஸ் கிளாசில் இருப்பது போல் வெறுப்படிக்கும் இறுக்கம்.
 
இன்னொரு தரம் என்ன ஆனாலும் சரி, பிளைட் ட்ராவலை  தவிர்க்க வேண்டும். 
 
முதுகில் படியை தாங்கிய வேன் ஒன்று விமானத்தின் கதவருகே சென்று படியை பொருத்திக்கொள்ள, கதவு திறந்தது, எல்லோரும் படிக்கட்டு வழியாக ரன்வேயில் இறங்க, ஏழாவதாக மைதிலி படிக்கட்டுகளில் இறங்கும்போது, மும்பை ஆகாயத்தை பார்த்தாள். மனசில் வார்த்தையில் வடிக்க  முடியாத பாரம். தொண்டையை ஏதோ ஒரு இரும்பு கரம் கவ்வ, உள்ளுக்குள் சொல்ல முடியாத உணக்கம் தோன்றி மறைந்தது.
 
காலம் எல்லா காயங்களையும் ஆற்றும் என்று சொல்வார்கள், ஆனால் அந்த கோட்பாட்டை சோதிக்கும் அளவுக்கு, நாம் நீண்ட காலம் வாழ்வதில்லை. ஒருவேளை காலம் எல்லா காயங்களை ஆற்றினாலும், காயங்கள் ஏற்படுத்திய தழும்புகளை நிச்சயமாக அழிக்காது. 
 
மறுபடியும் ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, லௌன்ஜை நோக்கி சென்றாள். மெருன் நிற  சுடிதார், எம்பிராய்டரி வேலைப்பாடு நிறைந்த துப்பட்டா, ரவிவர்மா ஓவிய பெண்களைப் போல், கூந்தல் பின்புறமாக பிரிந்து இருந்தது. 
 
மும்பை விமான நிலையம் மின்சார அபிஷேகத்தில் மின்னியது. லௌன்ஜில்,   ஆரஞ்சு வர்ண பாலிமர் நாற்காலிகளில் கசங்கல் இல்லாத உடை அணிந்தவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்,  நின்றிருந்தார்கள், சின்ன சின்ன குழுக்களாக பேசிக் கொண்டிருந்தார்கள்.  இன்னர் சர்க்யூட் டெலிவிஷன்களில் விமானங்கள் பற்றிய செய்திகள் கம்ப்யூட்டர் எழுத்துகளாக ஓடிக்கொண்டிருந்தன. விமானங்கள் வருவதையும் போவதையும் ஒரு ஐஸ்கிரீம் குரல் அறிவித்துக் கொண்டிருந்தது.
 
டைட் டி-ஷர்ட் ஜீன்ஸில் சென்ற ஒரு பெண்ணை, கூலிங் கிளாஸ் இளைஞர்கள் குரூப்   பார்க்காதது போல் பார்த்தார்கள். யாரோ யாருடைய கைகளையோ பிடித்து குலுக்கினார்கள், யாரோ யாரையோ கட்டிப்பிடித்தார்கள். யாரோ சிரிக்கிறார்கள், யாரோ சிரிக்க வைக்கிறார்கள், ஒரு குழந்தை அழுகிறது, ஒரு தாய் சமாதானப்படுத்துகிறாள், மாலையுடன் ஒரு சிறிய கூட்டம் காத்திருந்தது. ட்ராலிகளில் பெட்டிகளை வைத்து தள்ளிக்கொண்டு சென்றார்கள்.
சுழலும் தடத்தில் பெட்டிகளுக்காக மைதிலி காத்திருந்தாள். 
 
பெங்களூரு டெக்னோநெட் ஆபீஸ் ட்ரெய்னிங் டிபார்ட்மென்ட் மேனேஜராக இருக்கிறாள். வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் இருக்கும் 10 பிரான்ச் ஆஃபீஸை சேர்ந்த மேனேஜரியல் லெவல் ஆபீஸர்களுக்கு செமினார் cum ஒர்க்ஷாப் மும்பை ஹெட் ஆஃபீஸில் நடக்கும். அதில் கலந்து கொண்டு ஒரு ஸ்பீச் கொடுப்பதற்காகவும், அதன் பிறகு, UK அக்கவுண்ட் ப்ராஜெக்ட் onsite வாய்ப்பு அவளுக்கு கிடைத்திருப்பதால்,
அப்படியே லண்டன் செல்ல இருப்பதாலும் தான் இந்த பயணம்.
 
போனை உயிர்ப்பித்து,  ஹெட் ஆபீஸ் அட்மின் டிபார்ட்மெண்ட்க்கு அவள் வந்து சேர்ந்த தகவலை தெரிவித்தாள். அவள் தங்குவதற்காக ரூம் புக் செய்யப்பட்டிருந்த ஹோட்டல் டீடெயில்ஸ், அவளை அழைத்து செல்வதற்காக அனுப்பப்பட்டிருந்த கம்பெனி கேப் பற்றிய டீடைல்ஸ்சை தெரிவித்து, மெசேஜும் செய்தார்கள்.
 
கன்வேயர் பெல்ட் அருகே பெட்டிக்களுக்காக நின்றிருந்த மைதிலி சுத்திலும் பார்வையை சுழல விட்டாள்.
 
இளைஞன் ஒருவன் அவளை ஸ்கேன் செய்தபடி சென்றான். அவன் ஸ்கேனிங்கை மைதிலி கவனித்தாள்.
 
"பார்க்க கூடாதா? இளைஞன், அதுவும் சின்ன வயசு பையன்... யாருக்கு என்ன பிரச்சனை? சின்ன ஒரு என்டர்டைன்மென்ட் தானே.. பாத்துட்டு போகட்டும்.."
 
யாராலும் கவனிக்கப்படாமல், நிராகரிக்கப்பட்டு, அலட்சியம் செய்யப்பட்ட காலகட்டங்கள் அவள் ஞாபகத்துக்கு வந்தன. 
 
அவளுக்கு சிரிப்பு வந்தது. யாருக்கும் தெரியாத சிரிப்பு.
 
ஒரே பாட்டில் தலைகீழாக எதுவும் மாறிவிடவில்லை. அவள் சார்ந்த உலகத்தை திரும்பி பார்க்க வைக்க ஆறு வருடங்களும்,  தீவிர உழைப்பும், முயற்சியும் அடங்கி இருக்கிறது.
 
வாழ்க்கையின் இந்த கிறுக்குத்தனங்கள் அவளுக்கு  பிடித்திருந்தது. இது கிறுக்கா? இல்லை, சுவாரஸ்யமா? அல்லது manufacturing போது மூளையில் ஏற்பட்ட கோளாறா? 
 
அவ்வளவு ஜனங்களுக்கு மத்தியிலும், மூலையில் நின்றிருந்த ஒரு இளைஞன், அவனருகே நின்ற ஒரு இளைஞி மேல் அவள் பார்வை பதிந்தது.
 
பார்த்ததுமே காதலர்கள் தான் என்று புரிந்தது. இருவரில் யாரோ வெளியூருக்கு செல்கிறார்கள், மற்றவர் அவரை வழியனுப்ப வந்திருக்க வேண்டும்.
 
இயல்பான ஆர்வத்தில் மைதிலி அவர்களைப் பார்த்தாள். அவர்கள் இருவரின் விரல்களும் தொட்டு தொட்டு மீண்டன. வாயால் பேசுவதை விட கண்களால் அதிகம் பேசிக் கொண்டனர். அவள் கண்களில் கண்ணீரின் பளபளப்பு. அவன் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்க, அவள் குழந்தைகள் அடம்பிடிப்பது போல்... இல்லை, இல்லை என்று தலையாட்டிக் கொண்டிருந்தாள். அனேகமாக இவன் தான் எங்கேயோ வெளியூருக்கு போகிறான் போல... அதனால் சமாதானப்படுத்துகிறான் என்று யூகித்தாள்
 
கன்வேயர் பெல்ட்டை விட்டுவிட்டு, மைதிலி முழுவதுமாக அவர்களைப் பார்க்க ஆரம்பித்தாள்.
 
சற்று நேரத்தில் ஏதேதோ பேசி அவன் கேர்ள் பிரண்டை சமாதானப்படுத்தினான். அவள் உதட்டோரம் புன்னகை கசிந்தது.
 
சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு, அவளின் இடுப்பு சரிவில் கை பதித்து கிள்ளினான். அவளும் தொடுதலை ரசித்தாள் என்று தான் மைதிலிக்கு தோன்றியது. இருந்தாலும் போலி கோவத்துடன் கையில் வைத்திருந்த வேலட்டால், அவன் தோளில் ஒரு செல்ல தட்டு தட்டினாள்.
 
"அவ்வளவு வெளிச்ச வெள்ளத்திலும், எவ்வளவு இயல்பா ஒரு லவ் சீன் அரங்கேறிக் கொண்டிருக்கிறது?"
 
அனிச்சையாக மைதிலி இதழோரம் புன்னகை.
 
மறுபடியும் அவன் கையை நீட்ட... சுத்திலும் யாராவது பார்த்துவிடுவார்கள் என்று அவள் தயக்கத்தில் கண்ணைக் காட்ட... அவன் பொருட்படுத்தாமல்,  இடுப்பை நோக்கி கையை நீட்டினான். பட்டென்று அவன் கையை தட்டி விட்டாள்.
 
காதல் நாடகம் தொடர்ந்து கொண்டிருந்தது.
 
பார்க்க பார்க்க மைதிலிக்கு, கண்களில் ஏக்கம். 
 
இப்படித்தானே எனக்கும் நடந்திருக்க வேண்டும்?
 
Alternative ரியாலிட்டியில், இதில் ஒன்று நானாகவும், மற்றொன்று அவனாகவும் இருந்தால் எப்படி இருக்கும்?
 
ஆக்டோபஸ் கரங்களாக... இழப்பின் வேதனை சுற்றி வளைக்க ஆரம்பித்தது.
 
அவளுக்கு ஏற்பட்ட சோகங்களுக்கு, நொந்து போன உள்ளத்துடன், காயம்பட்ட இதயத்துடன், உருக்குலைந்த உடம்புடன், தான் நடமாடிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் என்னதான் உள்ளுக்குள் ஆளை அமிழ்த்தும் அளவுக்கு மனபாரம் இருந்தாலும், புன்னகையை உதட்டில் பூசிக்கொண்டு தான் நடமாடுகிறாள்.
 
கன்வேயர் பெல்டில் அவளுடைய பெட்டிகள் வர, அக்டோபஸை தள்ளிவிட்டு, பெட்டிகளை எடுத்தாள்.
 
ஏர்போர்ட் வெளியே பார்க்கிங்கில், கம்பெனி கார் காத்திருக்கும். காரில் நேராக ஹோட்டலுக்கு சென்று விடலாம் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், கையோடு அவளை வர்ணித்து விடலாம்.
 
அவள் ஒரு நவீன அனாதை. டிசம்பர் வந்தால் 27 வயது. அம்மா, அப்பா, அக்கா,  தங்கை, அண்ணன், தம்பி, யாருமே கிடையாது.  அவள் அம்மாவும் 4 வருடங்களுக்கு முன்னால் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டாள். சொந்தம் என்று இருக்கும் மாமா குடும்பத்தினரிடமும்,  முதலில் இருந்தே அவளுக்கும் அவள் அம்மாவுக்கும் நல்ல உறவு கிடையாது. தற்போது whitefield,  பெங்களூரில் சர்வ வசதிகள் நிறைந்த அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தனியாக ஜாகை.
 
மைதிலி அப்படி ஒன்றும் பிரமாதமான நிறம் என்று சொல்லிவிட முடியாது... திராவிட நிறம், அவள் தைரியமும் நம்பிக்கையும் முகத்தில் தெறிப்பதால், கருப்பு நிறம் dusky டோனாக ஜொலிக்கிறது. சிறுவயதில் கலர் ஷேமிங்கால் அவதிப்பட்டவள்  தான். ஆனால் மாடல்களுக்கு இருப்பது போல் 360 டிகிரியில் அலைபாயும் கூந்தல். அகல அகலமான காதல் கண்கள், அபார நாசி, மாருதியின் ஓவிய பெண்கள் போல் உப்பிய கன்னங்கள். குவிந்த முத்தமிட தூண்டும் உதடுகள். வரிசை தப்பாத பல்வரிசை, அந்தப் பற்களில் தெரிந்த மின்னல்கள், நேர்த்தியான கழுத்து, அதற்கு கீழே!!! 
 
திரண்ட அங்கங்கள். அவள் உடம்பின் திமிறல்களை பற்றி இங்கே சொல்ல ஆரம்பித்தால், அனாவசியமாக வாத்ஸ்யாயனர், அதிவீரராம பாண்டியர் எல்லாம் நினைவுக்கு வருவார்கள். 
 
ஒன்று மட்டும் நிச்சயம், அவள் முகத்தை கொஞ்ச நேரம் உத்து பார்த்தால், "நான்" தெரியாது, நட்பு தெரியும்.
 
ட்ராலியில் அவளின் பெட்டிகளை ஏற்றி வைக்க பயணி ஒருவர் உதவி செய்ய, தள்ளிக்கொண்டே வெளியே வந்தாள். கேப் டிரைவருக்கு போன் செய்யவும், அவன் வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டான்.
 
மைதிலி விமான நிலையத்தை விட்டு வெளிப்பட்ட போது லேசாக தூரிக் கொண்டிருந்தது. தூறலை ஏற்று கொண்டாள். 
 
கட் பண்ணினால், பாண்ட்ரா ஈஸ்ட்டில் இருக்கும், Trident ஹோட்டல் நோக்கி அவளை சுமந்து கொண்டு கம்பெனி கார் சென்று கொண்டிருந்தது. 
 
மும்பை
 
நவீனமான, உயரமான, பளபளப்பான கட்டடங்கள், அகல அகலமான ரஸ்தாக்கள், பெரிய பெரிய பிளைஓவர்கள், கலைத்து விட்ட எறும்பு புற்று போல் ஜன நடமாட்டம், சோடியம் வேப்பரின் மஞ்சள் வெளிச்சம், மெர்க்குரி வேப்பரின் வெள்ளை வெளிச்சம்,  ஓனர்களுக்கு ஓயாமல் உழைக்கும் நீயான் விளம்பரங்கள், பலதரப்பட்ட வாகனங்கள். மும்பையின் உடல் மாறினாலும், முகம் மாறவே இல்லை ஆனால் அதை அனுபவிக்கும் மனநிலையில் அவள் இல்லை.
 
இரண்டு பிசியான ரோடு கைகுலுக்கும் இடத்தில் இருந்தது அந்த ஸ்டார் ஹோட்டல்.  ஹோட்டலின் வாசலில் கேபில் இருந்து உதிர்ந்து, டிரைவருக்கு நன்றி தெரிவித்து, டிப்ஸ் கொடுத்துவிட்டு போனசாக  சிரித்தாள். சிரிப்பில் சினேகம். 
 
பச்சை ஊடுருவிய கண்ணாடி கதவை ஹோட்டல் ஆசாமி திறந்து விட புன்னகைத்தபடியே உள்ளே நுழைந்தாள். பல மேல்தட்டு, வெளிநாட்டு நபர்கள் நடமாடிக் கொண்டிருக்க, ஹோட்டல் ரிசப்ஷனில் செக்கின் செய்தாள். ஹோட்டல் பணியாளர் லக்கேஜை  எடுத்துட்டு வருவாரு, நீங்க முன்னால போங்க என்று ரிசெப்ஷனிஸ்ட் சொன்னதும்,
கீ வாங்கிக்கொண்டு,  லிப்டை நோக்கி சென்றாள்.
 
காத்திருந்தாள், காத்திருந்தாள்,
காத்... லிப்ட் வந்தது, நுழைந்தாள்.
 
நான்காவது மாடியில் வெளிப்பட்டாள். திரும்பிய பக்கமெல்லாம் கிரானைட், தேக்கு கடைசல்கள். சாண்டல்ஸ் சத்தம் அதிகம் எழுப்பாமல், கார்பெட் தரையில்  மெத்து மெத்தென்று நடந்து, ரூம் நம்பர் 111 ஐ திறந்து, உள்ளே நுழைந்தாள்.
 
இரவு 9 மணி
 
ஏர் கண்டிஷன் ரூம். டாய்லட்ட்ரீஸ், காபி கிட், டிஷ்யூ ஃபாக்ஸ், லைட்டிங்குடன்  முழு நீள கண்ணாடி, பிளாட் ஸ்கிரீன் டிவி, பாத்ரோப் என ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அனைத்து வசதிகளும் இருந்தன.
 
சரக்.... ஜன்னல் திரைகளை இரண்டு கைகளால் விலக்கினாள். கண்ணாடி ஜன்னல்களுக்கு வெளியே நீயான்களின் நீல சிகப்பு ஜாலங்கள், வாகனங்களின் வெளிச்ச பொட்டுகள். இடைவெளி விட்டு காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது.
 
இன்னும் மூன்று நாட்கள் தான் இந்திய காற்றை சுவாசிக்க முடியும் அதன் பிறகு நிரந்தரமாக இங்கிலாந்து வாழ்க்கை. எளிமையான வாழ்க்கையே அவளுக்கு போதுமானதாக இருந்தாலும், ஃபாரின் ஆஃபர் வந்தபோது அவள் ஒத்துக் கொண்டதற்கு வேறொரு காரணம் இருக்கிறது. 
 
அது மட்டுமில்லாமல், உள்நாட்டிலேயே தனிமை தான் துணை என்ற போது, வெளிநாட்டில் இருந்தால் என்ன? சொந்த நாட்டில் இருந்தால் என்ன?
 
வாஷிங் மிஷினில் போட்ட துணிகளை போல, எண்ணங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி, பின்னிப்பிணைந்து சுழல ஆரம்பிக்க...
 
Stop....
 
ஜன்னலில் இருந்து நகர்ந்து, சுடிதாரை களைந்து, கிரீன் ஸ்ப்ரூஸ் பைஜாமாவுக்கு மாறினாள்.   களைப்பாக இருந்ததால், கட்டிலில் போய் பொத்தென்று விழுந்தாள். மேகங்களை வைத்து தைத்தார் போல் கட்டில் சுகமாக இருந்தது. டிவியை போட்டு ரிமோட்டை எடுத்து, சேனல்களை குத்துமதிப்பாக மாற்றினாள்.
 
டோர் பெல் சத்தம் கேட்டதும்,  சர்ட்டின் மேல் பட்டன்களை போட்டுக்கொண்டு, கதவை திறந்தாள். சக்கரம் பொருந்திய தள்ளு வண்டியில், நைட் டின்னர் வந்தது. கையுறை அணிந்த பட்லர் கிளாஸில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு serve பண்ணட்டுமா என்று கேட்க, "இல்ல, நானே பண்ணிக்கிறேன்", என்று அவள் சொன்னதும், பவியமாக வணங்கிவிட்டு வெளியேறினான்.
 
சாப்பிடாமல் மறுபடியும் கட்டிலில் போய் விழுந்தாள். அவளின் அழகான வளைவுகளை கட்டில் ஆசையோடு உள்வாங்கிக் கொண்டது.
 
அவளின் செல்போன் டயல்டோனை வெளியிட, திடுக்கென்று முழித்துக் கொண்டாள்.
 
அசதியில் அவளையும் அறியாமல் தூங்கி இருக்கிறாள். டிவியில் ஏதோ கார்ட்டூன் சேனல் ஓடி கொண்டிருக்க, சுவர் கடிகாரத்தை பார்த்தாள். மணி இரவு 10.30.
 
சார்ஜ் போட்டுருந்த செல்போனை உருவி, யார் கால் செய்வது என்று பார்க்க,
 
Call from இந்திரஜா, காலேஜ்மேட், கிளாஸ்மேட், ரூம்மேட். 
 
ஒரு காலத்தில் மைதிலிக்கு எல்லாமே, இந்துவும் சஞ்சுவும் தான். 
 
சஞ்சு???
 
சஞ்சனா.
 
சினிமாவில், கதைகளில்..
சில நேரங்களில், நாயகியை விட... நாயகியின் தோழிகள் அழகாகவும், அம்சமாகவும் அமைந்து விடுவதுண்டு. அப்படின்னா வேறு வழி இல்லை, இந்துவையும் சஞ்சுவையும் பற்றி சொல்லித் தான் ஆக வேண்டும்.
 
இந்துவுக்கு வெண் ரோஜா சருமம், சினிமா நட்சத்திரம் என்று சொன்னால் தாராளமாக நம்பலாம், தைரியமானவள்,
ஹாஸ்டல் காலங்களில் இந்துவின் பெப்பர்மென்ட் மணக்கும் மூச்சுக்காற்றை சுவாசிப்பது மைதிலிக்கு ஒரு அனுபவம்.
 
சஞ்சனாவுக்கு குழந்தைத்தனம் முடியாத முகம், கேட்பரிஸ் குரல், புன்னகை அச்சிடப்பட்டிருக்கும் உதடுகள், அசாத்திய கவர்ச்சியான  பெரிய கண்களின் வெள்ளை பரப்பும், கருப்பு விழி வட்டமும் பார்ப்பவர்களை வரவேற்கும். இருவருக்கும் உடல் ரீதியான சிறப்பம்சங்கள் நிறைய இருந்தாலும், மைதிலிக்கு  இருவரிடமும் அதிகமாக ஈர்த்த விஷயம். அவர்களின் நட்புதான்.
 
காலேஜ் முடிஞ்சதும் மைதிலி பெங்களூரிலும், இந்திரஜா புனேவிலும், சஞ்சனா நாசிக்கிலும்... காலத்தினால் ஆளுக்கொரு பக்கம் தூக்கி அடிக்கப்பட்டார்கள். ஒரு சில வருட தாம்பத்தியம் இந்துவுக்கும் சஞ்சுவுக்கும் உடலில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தினாலும், அவர்கள் முகத்தின் கவர்ச்சி அப்படியே தான் இருந்தது.
 
மறுபடியும் கட்டிலில் படுத்தபடி, காலை அட்டென்ட் செய்து காதுக்கு ஒற்றினாள்.
 
இந்து: எப்படி இருக்க chutki?
 
காலேஜ் காலங்களில் குட்டியா, அன்பா, அவளின் அபிமானத்துடன் இருந்ததால்.... chutki.
 
மைதிலி: Ah you know...Another day another dollar.. நீ எப்படி இருக்க?
 
இந்து:  cant complain...இப்ப எங்க இருக்கிற? 
 
மைதிலி: மும்பை. போன வாரம் சொன்னேனே, அந்த  செமினாருக்காக வந்திருக்கேன்.
 
லண்டனுக்கு நிரந்தரமாக இடம்பெயர்வதை சொன்னால், நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். லண்டன் போனதும், அர்ஜெண்டாக கிளம்ப வேண்டிய சூழ்நிலை என்று சமாளித்துக் கொள்ளலாம். என்ன கொஞ்ச நாள் கோபித்துக் கொண்டு பேசாமல் இருப்பார்கள்! எப்படியாவது சமாதானப்படுத்தி விடலாம். பிரிந்து போவது அவளுக்கும் வலிக்கத்தான் செய்கிறது. இருந்தாலும்... இது வேறொரு வலியை குறைப்பதற்காக அவளே ஏற்றுக் கொள்கிற புதிய வலி.
 
அதென்ன வேறொரு வலி?
 
பொறுங்கள், உங்களுக்கே தெரிய வரும்.
 
இந்து:   "ஏண்டி மும்பை வந்ததை என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா? நான் எதார்த்தமா கால் பண்ண போய், தெரிஞ்சுகிட்டேன்", என்று உரிமையாக கோபித்துக் கொள்ள,
 
மைதிலி: இப்பதான் வந்து சேர்ந்தேன். நாளைக்கு பொறுமையா பேசலாம்ன்னு நெனச்சேன். அது மட்டுமில்லாம ரெண்டு நாள் hectic schedule. உன் ஹஸ்பண்ட் எப்படி இருக்காரு? சிரிஷ் என்ன பண்றான்? மூணு வயசு தானே ஆகுது.
 
இந்து: ஆமா, ராகேஷுக்கு 24 மணி நேரம் பிசினஸ் தான். வாண்டு பையன் இவ்வளவு நேரம் வீட்டையே இரண்டாக்கிட்டு இப்பதான் சாப்பிட்டு படுத்து தூங்குறான். அவனை சமாளிக்கிறதுக்கு வீட்ல என்னையும் சேர்த்து நாலு பேரு.
 
அவளை தவிர்த்து, மீதி 3 பேர், மாமனார், மாமியார், மற்றும் வேலைக்காரி என்று மைதிலிக்கு தெரியும் என்பதால், விவரம் கேட்கவில்லை.
 
இந்து: நேர்ல பாத்து எவ்வளவு நாளாச்சு? இந்த தடவை என்ன பிளான்?
 
மைதிலி: பிளான்ல்லாம் ஒன்னும் இல்ல. ஃப்ரைடே சாட்டர்டே ஆபீஸ்ல வேலை இருக்கும். சண்டே ஈவினிங் அஞ்சு மணிக்கு பிளைட்.
 
இந்து:  இந்த தடவையாவது மீட் பண்ணலாம்ல. சண்டே ப்ரீ தானே... இரு, சஞ்சனாவுக்கு con call போடுறேன்.
 
மைதிலி: ரெண்டு நாளா சரியா தூங்கலடி. Flight  travel வேற. ரொம்ப டயர்டா இருக்கு. உன் ஹஸ்பண்ட்டும் வீட்ல இருப்பாரே. டிஸ்டர்பன்ஸா இருக்கும். நாளைக்கு பேசலாமே.
 
இந்து: அடி பின்னிருவேன், பேசாம இரு. என் புருஷன்  ஆபீஸ் டூர் போயிட்டாரு. ஒரு வாரம் கழிச்சு தான் வருவாப்ல. சஞ்சு ஹஸ்பண்டு தான் பிரான்ஸ்ல இருக்காருல்ல. ராத்திரி மூணு மணிக்கு பண்ணாலும், அவளுக்கு பிரச்சனையே இல்லை. கண்டிப்பா கான்பிரன்ஸ் போடுறேன். ஒரு முக்கியமான விஷயம் இருக்கு.
 
அவளை hold போட்டுவிட்டு, சஞ்சனாவுக்கு கால் செய்து கொண்டிருந்தாள்.
 
போச்சு!!! குறைஞ்சது இரண்டு மணி நேரம்  பேசுவாங்க!
 
இருந்தாலும் அவள் தடுக்கவில்லை. அந்த இரண்டு அழகு பிசாசுகளுக்கும்  கல்லூரி காலத்தில் இருந்தே, மைதிலி மேல் அளவுக்கதிகமான அன்பும், அக்கறையும், உரிமையும் ஜாஸ்தி. 
 
நீங்கள் கொட்டாவிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று புரிகிறது. ஏண்டா இந்த கதையை படிக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்! கரெக்டா? 
 
பரவாயில்லை, கொட்டாவியை ரிலீஸ் செய்து விட்டு, தம் பிடித்து மேற்கொண்டு படியுங்கள்.
 
நம்ம மைதிலி வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை விவரிக்கும் முன்னால், அவளைப் பற்றியும், அவள் நண்பர்களை பற்றியும், அவள் வாழ்க்கை முறை பற்றியும்  தெரிந்து கொள்வது அவசியம் தானே!
 
Wait, கான்பரன்ஸ் கால் கனெக்ட் ஆகிவிட்டது. கல்லூரி தோழிகள் இணைந்தால், இஷ்டத்துக்கு பேசுவார்கள். அதனால் கண்டு கொள்ளாதீர்கள்.
 
வழக்கமான நல விசாரிப்புகளுக்கு பிறகு,
 
சஞ்சனா: எவ்வளவு நாளாச்சு? இப்படி பேசி... ஆளுக்கொரு பக்கம் பிஸி ஆகிட்டோம். விஷயம் தெரியுமா? பிரணவி டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிருக்காளாம்?
 
மைதிலி: எந்த பிரணவி?
 
சஞ்சனா: அதான் நம்ம ஆப்போசிட் குரூப். ஸ்ரேயாவோட லெப்ட் ஹேண்ட். காமர்ஸ் டிபார்ட்மெண்ட் லெக்சரர் ரேவந்தை கல்யாணம் பண்ணிக்கிட்டாளே... அவதான். ரெண்டு பேரும் செப்பரேட் ஆயிட்டாங்களாம். ஒரு வாரம் முன்னால ஒரு கல்யாணத்துல பார்த்தேன். மூக்கு சிந்திகிட்டு நடந்த பிரச்சினைல்லாம் கதை கதையா சொன்னா... ஹாஸ்டல்ல எவ்வளவு பிரச்சனை பண்ணாளுக, இப்ப எங்க பாத்தாலும் மாஞ்சி மாஞ்சி பேசுறா.
 
இந்து: அப்படியா, இது எனக்கு தெரியாதே! நம்ம கம்ப்யூட்டர் லேப் அட்டெண்டர் பசை பிரசாத் (பசவ பிரசாத்தை தான் அப்படி சொல்கிறார்கள்) கண்ணாலேயே ரேப் பண்ணுவானே... stroke வந்திருச்சாம்.
 
சஞ்சு: பொண்ணுங்கள தடவி தடவியே வந்திருக்கும். அப்புறம்... இன்னொரு விஷயம் தெரியுமா?
 
மைதிலி "ம்" கொட்டி கேட்டுக் கொண்டேருக்க, மற்ற இருவரும் மாற்றி மாற்றி சுவாரசியமாக காலேஜ் நண்பர்களின் லைஃப் ஹிஸ்டரியையும் பிரித்து மேய்ந்து கொண்டு இருந்தார்கள்.
 
நினைக்காதே!!! 
அவனை பற்றி நினைக்காதே!! 
 
மனசுக்குள் மெதுவாக கசிய ஆரம்பித்த அந்த எண்ணத்தை தவிர்க்க பார்த்தாள். 
 
புதைத்து வைத்திருந்த இடத்திலிருந்து,
 
மண்ணை கிழித்துக்கொண்டு முளைக்க தயாராக இருந்தான் "அவன்".
 
தொடரும்
 
முன்குறிப்பு:   
 
2000 வருடங்களின் ஆரம்ப காலகட்டத்தில் நான் மும்பையில் இருக்கும் போது, என் நண்பன் மூலமாக கேள்விப்பட்ட கதை. அந்த உண்மை கதையில் கற்பனை முலாம் பூசி இருக்கிறேன். 
 
25 வருடங்களுக்கு முன்னால், உண்மையான காதல்கள் உயிரோடு இருந்த காலகட்டத்தில் நடந்த கதை என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
 
இப்போதைய காலகட்டங்களில், நிகழ்ந்து கொண்டிருக்கும் (பெரும்பான்மையான) உருட்டு காதல்களை மனதில் வைத்து படித்து cringeசாக தோன்றினால், நிர்வாகம் பொறுப்பல்ல...
2010, March 30
 
மும்பை சாண்டா குரூஸ் டொமஸ்டிக் ஏர்போர்ட்டில், பெங்களூரில் இருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்கி கொண்டிருந்தது. விமானம் தரையை தொட்டு ஓடி, திரும்பி, வேகம் குறைந்து நின்றதும், மைதிலி ஒரு பெருமூச்சை ரிலீஸ் செய்தாள். அவள் டைம் பார்க்கும் ரிஸ்டு வாட்சில், நாமும் எட்டிப் பார்த்தால், மணி இரவு 7:10. ஜன்னல் வழியே  விமான நிலைய கட்டிடங்களும், அதன் கண்ணாடி சுவர்களும் நிறம் நிறமாய் தெரிந்தது. 
 
விமான பயணம் உண்மையிலேயே செம போர். பஸ் ட்ரைனாவது பரவாயில்லை. வயல்கள்,  வேலை செய்யும் விவசாயிகள், நீர் நிலைகள், தூரத்தில் தெரியும் மலைகள், தோப்புகள், செடி கொடிகள், கிராமங்கள், நகரங்கள், வீடுகள், குடிசைகள், சாலைகள், கையாட்டி சிரிக்கும்
குதூகலக் குழந்தைகள்,
வெட்கத்தை அலசிக் காயப்போடும்
குளத்தங்கரை குயில்கள்
என ஜன்னல் வழி
இயற்கையின் வண்ணங்களுடன்
ஓவியக் கண்காட்சி! எவ்வளவு முறை பயணம் செய்தாலும் சலிக்காது.
 
விமான பயணத்தில், 
வானம், மேகம், கடல்.. முதல் பயணத்தில் தெரியும் ஆச்சரியம் அதன் பிறகு சத்தியமாக இருக்காது.
ஏர் ஹோஸ்டஸ்களின் செயற்கை புன்னகை, உப்பு சப்பில்லாத உணவு,  இயந்திரத்தனமான முகங்கள், பிடிக்காத மேத்ஸ் கிளாசில் இருப்பது போல் வெறுப்படிக்கும் இறுக்கம்.
 
இன்னொரு தரம் என்ன ஆனாலும் சரி, பிளைட் ட்ராவலை  தவிர்க்க வேண்டும். 
 
முதுகில் படியை தாங்கிய வேன் ஒன்று விமானத்தின் கதவருகே சென்று படியை பொருத்திக்கொள்ள, கதவு திறந்தது, எல்லோரும் படிக்கட்டு வழியாக ரன்வேயில் இறங்க, ஏழாவதாக மைதிலி படிக்கட்டுகளில் இறங்கும்போது, மும்பை ஆகாயத்தை பார்த்தாள். மனசில் வார்த்தையில் வடிக்க  முடியாத பாரம். தொண்டையை ஏதோ ஒரு இரும்பு கரம் கவ்வ, உள்ளுக்குள் சொல்ல முடியாத உணக்கம் தோன்றி மறைந்தது.
 
காலம் எல்லா காயங்களையும் ஆற்றும் என்று சொல்வார்கள், ஆனால் அந்த கோட்பாட்டை சோதிக்கும் அளவுக்கு, நாம் நீண்ட காலம் வாழ்வதில்லை. ஒருவேளை காலம் எல்லா காயங்களை ஆற்றினாலும், காயங்கள் ஏற்படுத்திய தழும்புகளை நிச்சயமாக அழிக்காது. 
 
மறுபடியும் ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, லௌன்ஜை நோக்கி சென்றாள். மெருன் நிற  சுடிதார், எம்பிராய்டரி வேலைப்பாடு நிறைந்த துப்பட்டா, ரவிவர்மா ஓவிய பெண்களைப் போல், கூந்தல் பின்புறமாக பிரிந்து இருந்தது. 
 
மும்பை விமான நிலையம் மின்சார அபிஷேகத்தில் மின்னியது. லௌன்ஜில்,   ஆரஞ்சு வர்ண பாலிமர் நாற்காலிகளில் கசங்கல் இல்லாத உடை அணிந்தவர்கள் உட்கார்ந்திருந்தார்கள்,  நின்றிருந்தார்கள், சின்ன சின்ன குழுக்களாக பேசிக் கொண்டிருந்தார்கள்.  இன்னர் சர்க்யூட் டெலிவிஷன்களில் விமானங்கள் பற்றிய செய்திகள் கம்ப்யூட்டர் எழுத்துகளாக ஓடிக்கொண்டிருந்தன. விமானங்கள் வருவதையும் போவதையும் ஒரு ஐஸ்கிரீம் குரல் அறிவித்துக் கொண்டிருந்தது.
 
டைட் டி-ஷர்ட் ஜீன்ஸில் சென்ற ஒரு பெண்ணை, கூலிங் கிளாஸ் இளைஞர்கள் குரூப்   பார்க்காதது போல் பார்த்தார்கள். யாரோ யாருடைய கைகளையோ பிடித்து குலுக்கினார்கள், யாரோ யாரையோ கட்டிப்பிடித்தார்கள். யாரோ சிரிக்கிறார்கள், யாரோ சிரிக்க வைக்கிறார்கள், ஒரு குழந்தை அழுகிறது, ஒரு தாய் சமாதானப்படுத்துகிறாள், மாலையுடன் ஒரு சிறிய கூட்டம் காத்திருந்தது. ட்ராலிகளில் பெட்டிகளை வைத்து தள்ளிக்கொண்டு சென்றார்கள்.
சுழலும் தடத்தில் பெட்டிகளுக்காக மைதிலி காத்திருந்தாள். 
 
பெங்களூரு டெக்னோநெட் ஆபீஸ் ட்ரெய்னிங் டிபார்ட்மென்ட் மேனேஜராக இருக்கிறாள். வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் இருக்கும் 10 பிரான்ச் ஆஃபீஸை சேர்ந்த மேனேஜரியல் லெவல் ஆபீஸர்களுக்கு செமினார் cum ஒர்க்ஷாப் மும்பை ஹெட் ஆஃபீஸில் நடக்கும். அதில் கலந்து கொண்டு ஒரு ஸ்பீச் கொடுப்பதற்காகவும், அதன் பிறகு, UK அக்கவுண்ட் ப்ராஜெக்ட் onsite வாய்ப்பு அவளுக்கு கிடைத்திருப்பதால்,
அப்படியே லண்டன் செல்ல இருப்பதாலும் தான் இந்த பயணம்.
 
போனை உயிர்ப்பித்து,  ஹெட் ஆபீஸ் அட்மின் டிபார்ட்மெண்ட்க்கு அவள் வந்து சேர்ந்த தகவலை தெரிவித்தாள். அவள் தங்குவதற்காக ரூம் புக் செய்யப்பட்டிருந்த ஹோட்டல் டீடெயில்ஸ், அவளை அழைத்து செல்வதற்காக அனுப்பப்பட்டிருந்த கம்பெனி கேப் பற்றிய டீடைல்ஸ்சை தெரிவித்து, மெசேஜும் செய்தார்கள்.
 
கன்வேயர் பெல்ட் அருகே பெட்டிக்களுக்காக நின்றிருந்த மைதிலி சுத்திலும் பார்வையை சுழல விட்டாள்.
 
இளைஞன் ஒருவன் அவளை ஸ்கேன் செய்தபடி சென்றான். அவன் ஸ்கேனிங்கை மைதிலி கவனித்தாள்.
 
"பார்க்க கூடாதா? இளைஞன், அதுவும் சின்ன வயசு பையன்... யாருக்கு என்ன பிரச்சனை? சின்ன ஒரு என்டர்டைன்மென்ட் தானே.. பாத்துட்டு போகட்டும்.."
 
யாராலும் கவனிக்கப்படாமல், நிராகரிக்கப்பட்டு, அலட்சியம் செய்யப்பட்ட காலகட்டங்கள் அவள் ஞாபகத்துக்கு வந்தன. 
 
அவளுக்கு சிரிப்பு வந்தது. யாருக்கும் தெரியாத சிரிப்பு.
 
ஒரே பாட்டில் தலைகீழாக எதுவும் மாறிவிடவில்லை. அவள் சார்ந்த உலகத்தை திரும்பி பார்க்க வைக்க ஆறு வருடங்களும்,  தீவிர உழைப்பும், முயற்சியும் அடங்கி இருக்கிறது.
 
வாழ்க்கையின் இந்த கிறுக்குத்தனங்கள் அவளுக்கு  பிடித்திருந்தது. இது கிறுக்கா? இல்லை, சுவாரஸ்யமா? அல்லது manufacturing போது மூளையில் ஏற்பட்ட கோளாறா? 
 
அவ்வளவு ஜனங்களுக்கு மத்தியிலும், மூலையில் நின்றிருந்த ஒரு இளைஞன், அவனருகே நின்ற ஒரு இளைஞி மேல் அவள் பார்வை பதிந்தது.
 
பார்த்ததுமே காதலர்கள் தான் என்று புரிந்தது. இருவரில் யாரோ வெளியூருக்கு செல்கிறார்கள், மற்றவர் அவரை வழியனுப்ப வந்திருக்க வேண்டும்.
 
இயல்பான ஆர்வத்தில் மைதிலி அவர்களைப் பார்த்தாள். அவர்கள் இருவரின் விரல்களும் தொட்டு தொட்டு மீண்டன. வாயால் பேசுவதை விட கண்களால் அதிகம் பேசிக் கொண்டனர். அவள் கண்களில் கண்ணீரின் பளபளப்பு. அவன் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்க, அவள் குழந்தைகள் அடம்பிடிப்பது போல்... இல்லை, இல்லை என்று தலையாட்டிக் கொண்டிருந்தாள். அனேகமாக இவன் தான் எங்கேயோ வெளியூருக்கு போகிறான் போல... அதனால் சமாதானப்படுத்துகிறான் என்று யூகித்தாள்
 
கன்வேயர் பெல்ட்டை விட்டுவிட்டு, மைதிலி முழுவதுமாக அவர்களைப் பார்க்க ஆரம்பித்தாள்.
 
சற்று நேரத்தில் ஏதேதோ பேசி அவன் கேர்ள் பிரண்டை சமாதானப்படுத்தினான். அவள் உதட்டோரம் புன்னகை கசிந்தது.
 
சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு, அவளின் இடுப்பு சரிவில் கை பதித்து கிள்ளினான். அவளும் தொடுதலை ரசித்தாள் என்று தான் மைதிலிக்கு தோன்றியது. இருந்தாலும் போலி கோவத்துடன் கையில் வைத்திருந்த வேலட்டால், அவன் தோளில் ஒரு செல்ல தட்டு தட்டினாள்.
 
"அவ்வளவு வெளிச்ச வெள்ளத்திலும், எவ்வளவு இயல்பா ஒரு லவ் சீன் அரங்கேறிக் கொண்டிருக்கிறது?"
 
அனிச்சையாக மைதிலி இதழோரம் புன்னகை.
 
மறுபடியும் அவன் கையை நீட்ட... சுத்திலும் யாராவது பார்த்துவிடுவார்கள் என்று அவள் தயக்கத்தில் கண்ணைக் காட்ட... அவன் பொருட்படுத்தாமல்,  இடுப்பை நோக்கி கையை நீட்டினான். பட்டென்று அவன் கையை தட்டி விட்டாள்.
 
காதல் நாடகம் தொடர்ந்து கொண்டிருந்தது.
 
பார்க்க பார்க்க மைதிலிக்கு, கண்களில் ஏக்கம். 
 
இப்படித்தானே எனக்கும் நடந்திருக்க வேண்டும்?
 
Alternative ரியாலிட்டியில், இதில் ஒன்று நானாகவும், மற்றொன்று அவனாகவும் இருந்தால் எப்படி இருக்கும்?
 
ஆக்டோபஸ் கரங்களாக... இழப்பின் வேதனை சுற்றி வளைக்க ஆரம்பித்தது.
 
அவளுக்கு ஏற்பட்ட சோகங்களுக்கு, நொந்து போன உள்ளத்துடன், காயம்பட்ட இதயத்துடன், உருக்குலைந்த உடம்புடன், தான் நடமாடிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் என்னதான் உள்ளுக்குள் ஆளை அமிழ்த்தும் அளவுக்கு மனபாரம் இருந்தாலும், புன்னகையை உதட்டில் பூசிக்கொண்டு தான் நடமாடுகிறாள்.
 
கன்வேயர் பெல்டில் அவளுடைய பெட்டிகள் வர, அக்டோபஸை தள்ளிவிட்டு, பெட்டிகளை எடுத்தாள்.
 
ஏர்போர்ட் வெளியே பார்க்கிங்கில், கம்பெனி கார் காத்திருக்கும். காரில் நேராக ஹோட்டலுக்கு சென்று விடலாம் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், கையோடு அவளை வர்ணித்து விடலாம்.
 
அவள் ஒரு நவீன அனாதை. டிசம்பர் வந்தால் 27 வயது. அம்மா, அப்பா, அக்கா,  தங்கை, அண்ணன், தம்பி, யாருமே கிடையாது.  அவள் அம்மாவும் 4 வருடங்களுக்கு முன்னால் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டாள். சொந்தம் என்று இருக்கும் மாமா குடும்பத்தினரிடமும்,  முதலில் இருந்தே அவளுக்கும் அவள் அம்மாவுக்கும் நல்ல உறவு கிடையாது. தற்போது whitefield,  பெங்களூரில் சர்வ வசதிகள் நிறைந்த அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தனியாக ஜாகை.
 
மைதிலி அப்படி ஒன்றும் பிரமாதமான நிறம் என்று சொல்லிவிட முடியாது... திராவிட நிறம், அவள் தைரியமும் நம்பிக்கையும் முகத்தில் தெறிப்பதால், கருப்பு நிறம் dusky டோனாக ஜொலிக்கிறது. சிறுவயதில் கலர் ஷேமிங்கால் அவதிப்பட்டவள்  தான். ஆனால் மாடல்களுக்கு இருப்பது போல் 360 டிகிரியில் அலைபாயும் கூந்தல். அகல அகலமான காதல் கண்கள், அபார நாசி, மாருதியின் ஓவிய பெண்கள் போல் உப்பிய கன்னங்கள். குவிந்த முத்தமிட தூண்டும் உதடுகள். வரிசை தப்பாத பல்வரிசை, அந்தப் பற்களில் தெரிந்த மின்னல்கள், நேர்த்தியான கழுத்து, அதற்கு கீழே!!! 
 
திரண்ட அங்கங்கள். அவள் உடம்பின் திமிறல்களை பற்றி இங்கே சொல்ல ஆரம்பித்தால், அனாவசியமாக வாத்ஸ்யாயனர், அதிவீரராம பாண்டியர் எல்லாம் நினைவுக்கு வருவார்கள். 
 
ஒன்று மட்டும் நிச்சயம், அவள் முகத்தை கொஞ்ச நேரம் உத்து பார்த்தால், "நான்" தெரியாது, நட்பு தெரியும்.
 
ட்ராலியில் அவளின் பெட்டிகளை ஏற்றி வைக்க பயணி ஒருவர் உதவி செய்ய, தள்ளிக்கொண்டே வெளியே வந்தாள். கேப் டிரைவருக்கு போன் செய்யவும், அவன் வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டான்.
 
மைதிலி விமான நிலையத்தை விட்டு வெளிப்பட்ட போது லேசாக தூரிக் கொண்டிருந்தது. தூறலை ஏற்று கொண்டாள். 
 
கட் பண்ணினால், பாண்ட்ரா ஈஸ்ட்டில் இருக்கும், Trident ஹோட்டல் நோக்கி அவளை சுமந்து கொண்டு கம்பெனி கார் சென்று கொண்டிருந்தது. 
 
மும்பை
 
நவீனமான, உயரமான, பளபளப்பான கட்டடங்கள், அகல அகலமான ரஸ்தாக்கள், பெரிய பெரிய பிளைஓவர்கள், கலைத்து விட்ட எறும்பு புற்று போல் ஜன நடமாட்டம், சோடியம் வேப்பரின் மஞ்சள் வெளிச்சம், மெர்க்குரி வேப்பரின் வெள்ளை வெளிச்சம்,  ஓனர்களுக்கு ஓயாமல் உழைக்கும் நீயான் விளம்பரங்கள், பலதரப்பட்ட வாகனங்கள். மும்பையின் உடல் மாறினாலும், முகம் மாறவே இல்லை ஆனால் அதை அனுபவிக்கும் மனநிலையில் அவள் இல்லை.
 
இரண்டு பிசியான ரோடு கைகுலுக்கும் இடத்தில் இருந்தது அந்த ஸ்டார் ஹோட்டல்.  ஹோட்டலின் வாசலில் கேபில் இருந்து உதிர்ந்து, டிரைவருக்கு நன்றி தெரிவித்து, டிப்ஸ் கொடுத்துவிட்டு போனசாக  சிரித்தாள். சிரிப்பில் சினேகம். 
 
பச்சை ஊடுருவிய கண்ணாடி கதவை ஹோட்டல் ஆசாமி திறந்து விட புன்னகைத்தபடியே உள்ளே நுழைந்தாள். பல மேல்தட்டு, வெளிநாட்டு நபர்கள் நடமாடிக் கொண்டிருக்க, ஹோட்டல் ரிசப்ஷனில் செக்கின் செய்தாள். ஹோட்டல் பணியாளர் லக்கேஜை  எடுத்துட்டு வருவாரு, நீங்க முன்னால போங்க என்று ரிசெப்ஷனிஸ்ட் சொன்னதும்,
கீ வாங்கிக்கொண்டு,  லிப்டை நோக்கி சென்றாள்.
 
காத்திருந்தாள், காத்திருந்தாள்,
காத்... லிப்ட் வந்தது, நுழைந்தாள்.
 
நான்காவது மாடியில் வெளிப்பட்டாள். திரும்பிய பக்கமெல்லாம் கிரானைட், தேக்கு கடைசல்கள். சாண்டல்ஸ் சத்தம் அதிகம் எழுப்பாமல், கார்பெட் தரையில்  மெத்து மெத்தென்று நடந்து, ரூம் நம்பர் 111 ஐ திறந்து, உள்ளே நுழைந்தாள்.
 
இரவு 9 மணி
 
ஏர் கண்டிஷன் ரூம். டாய்லட்ட்ரீஸ், காபி கிட், டிஷ்யூ ஃபாக்ஸ், லைட்டிங்குடன்  முழு நீள கண்ணாடி, பிளாட் ஸ்கிரீன் டிவி, பாத்ரோப் என ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அனைத்து வசதிகளும் இருந்தன.
 
சரக்.... ஜன்னல் திரைகளை இரண்டு கைகளால் விலக்கினாள். கண்ணாடி ஜன்னல்களுக்கு வெளியே நீயான்களின் நீல சிகப்பு ஜாலங்கள், வாகனங்களின் வெளிச்ச பொட்டுகள். இடைவெளி விட்டு காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது.
 
இன்னும் மூன்று நாட்கள் தான் இந்திய காற்றை சுவாசிக்க முடியும் அதன் பிறகு நிரந்தரமாக இங்கிலாந்து வாழ்க்கை. எளிமையான வாழ்க்கையே அவளுக்கு போதுமானதாக இருந்தாலும், ஃபாரின் ஆஃபர் வந்தபோது அவள் ஒத்துக் கொண்டதற்கு வேறொரு காரணம் இருக்கிறது. 
 
அது மட்டுமில்லாமல், உள்நாட்டிலேயே தனிமை தான் துணை என்ற போது, வெளிநாட்டில் இருந்தால் என்ன? சொந்த நாட்டில் இருந்தால் என்ன?
 
வாஷிங் மிஷினில் போட்ட துணிகளை போல, எண்ணங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி, பின்னிப்பிணைந்து சுழல ஆரம்பிக்க...
 
Stop....
 
ஜன்னலில் இருந்து நகர்ந்து, சுடிதாரை களைந்து, கிரீன் ஸ்ப்ரூஸ் பைஜாமாவுக்கு மாறினாள்.   களைப்பாக இருந்ததால், கட்டிலில் போய் பொத்தென்று விழுந்தாள். மேகங்களை வைத்து தைத்தார் போல் கட்டில் சுகமாக இருந்தது. டிவியை போட்டு ரிமோட்டை எடுத்து, சேனல்களை குத்துமதிப்பாக மாற்றினாள்.
 
டோர் பெல் சத்தம் கேட்டதும்,  சர்ட்டின் மேல் பட்டன்களை போட்டுக்கொண்டு, கதவை திறந்தாள். சக்கரம் பொருந்திய தள்ளு வண்டியில், நைட் டின்னர் வந்தது. கையுறை அணிந்த பட்லர் கிளாஸில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு serve பண்ணட்டுமா என்று கேட்க, "இல்ல, நானே பண்ணிக்கிறேன்", என்று அவள் சொன்னதும், பவியமாக வணங்கிவிட்டு வெளியேறினான்.
 
சாப்பிடாமல் மறுபடியும் கட்டிலில் போய் விழுந்தாள். அவளின் அழகான வளைவுகளை கட்டில் ஆசையோடு உள்வாங்கிக் கொண்டது.
 
அவளின் செல்போன் டயல்டோனை வெளியிட, திடுக்கென்று முழித்துக் கொண்டாள்.
 
அசதியில் அவளையும் அறியாமல் தூங்கி இருக்கிறாள். டிவியில் ஏதோ கார்ட்டூன் சேனல் ஓடி கொண்டிருக்க, சுவர் கடிகாரத்தை பார்த்தாள். மணி இரவு 10.30.
 
சார்ஜ் போட்டுருந்த செல்போனை உருவி, யார் கால் செய்வது என்று பார்க்க,
 
Call from இந்திரஜா, காலேஜ்மேட், கிளாஸ்மேட், ரூம்மேட். 
 
ஒரு காலத்தில் மைதிலிக்கு எல்லாமே, இந்துவும் சஞ்சுவும் தான். 
 
சஞ்சு???
 
சஞ்சனா.
 
சினிமாவில், கதைகளில்..
சில நேரங்களில், நாயகியை விட... நாயகியின் தோழிகள் அழகாகவும், அம்சமாகவும் அமைந்து விடுவதுண்டு. அப்படின்னா வேறு வழி இல்லை, இந்துவையும் சஞ்சுவையும் பற்றி சொல்லித் தான் ஆக வேண்டும்.
 
இந்துவுக்கு வெண் ரோஜா சருமம், சினிமா நட்சத்திரம் என்று சொன்னால் தாராளமாக நம்பலாம், தைரியமானவள்,
ஹாஸ்டல் காலங்களில் இந்துவின் பெப்பர்மென்ட் மணக்கும் மூச்சுக்காற்றை சுவாசிப்பது மைதிலிக்கு ஒரு அனுபவம்.
 
சஞ்சனாவுக்கு குழந்தைத்தனம் முடியாத முகம், கேட்பரிஸ் குரல், புன்னகை அச்சிடப்பட்டிருக்கும் உதடுகள், அசாத்திய கவர்ச்சியான  பெரிய கண்களின் வெள்ளை பரப்பும், கருப்பு விழி வட்டமும் பார்ப்பவர்களை வரவேற்கும். இருவருக்கும் உடல் ரீதியான சிறப்பம்சங்கள் நிறைய இருந்தாலும், மைதிலிக்கு  இருவரிடமும் அதிகமாக ஈர்த்த விஷயம். அவர்களின் நட்புதான்.
 
காலேஜ் முடிஞ்சதும் மைதிலி பெங்களூரிலும், இந்திரஜா புனேவிலும், சஞ்சனா நாசிக்கிலும்... காலத்தினால் ஆளுக்கொரு பக்கம் தூக்கி அடிக்கப்பட்டார்கள். ஒரு சில வருட தாம்பத்தியம் இந்துவுக்கும் சஞ்சுவுக்கும் உடலில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தினாலும், அவர்கள் முகத்தின் கவர்ச்சி அப்படியே தான் இருந்தது.
 
மறுபடியும் கட்டிலில் படுத்தபடி, காலை அட்டென்ட் செய்து காதுக்கு ஒற்றினாள்.
 
இந்து: எப்படி இருக்க chutki?
 
காலேஜ் காலங்களில் குட்டியா, அன்பா, அவளின் அபிமானத்துடன் இருந்ததால்.... chutki.
 
மைதிலி: Ah you know...Another day another dollar.. நீ எப்படி இருக்க?
 
இந்து:  cant complain...இப்ப எங்க இருக்கிற? 
 
மைதிலி: மும்பை. போன வாரம் சொன்னேனே, அந்த  செமினாருக்காக வந்திருக்கேன்.
 
லண்டனுக்கு நிரந்தரமாக இடம்பெயர்வதை சொன்னால், நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். லண்டன் போனதும், அர்ஜெண்டாக கிளம்ப வேண்டிய சூழ்நிலை என்று சமாளித்துக் கொள்ளலாம். என்ன கொஞ்ச நாள் கோபித்துக் கொண்டு பேசாமல் இருப்பார்கள்! எப்படியாவது சமாதானப்படுத்தி விடலாம். பிரிந்து போவது அவளுக்கும் வலிக்கத்தான் செய்கிறது. இருந்தாலும்... இது வேறொரு வலியை குறைப்பதற்காக அவளே ஏற்றுக் கொள்கிற புதிய வலி.
 
அதென்ன வேறொரு வலி?
 
பொறுங்கள், உங்களுக்கே தெரிய வரும்.
 
இந்து:   "ஏண்டி மும்பை வந்ததை என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா? நான் எதார்த்தமா கால் பண்ண போய், தெரிஞ்சுகிட்டேன்", என்று உரிமையாக கோபித்துக் கொள்ள,
 
மைதிலி: இப்பதான் வந்து சேர்ந்தேன். நாளைக்கு பொறுமையா பேசலாம்ன்னு நெனச்சேன். அது மட்டுமில்லாம ரெண்டு நாள் hectic schedule. உன் ஹஸ்பண்ட் எப்படி இருக்காரு? சிரிஷ் என்ன பண்றான்? மூணு வயசு தானே ஆகுது.
 
இந்து: ஆமா, ராகேஷுக்கு 24 மணி நேரம் பிசினஸ் தான். வாண்டு பையன் இவ்வளவு நேரம் வீட்டையே இரண்டாக்கிட்டு இப்பதான் சாப்பிட்டு படுத்து தூங்குறான். அவனை சமாளிக்கிறதுக்கு வீட்ல என்னையும் சேர்த்து நாலு பேரு.
 
அவளை தவிர்த்து, மீதி 3 பேர், மாமனார், மாமியார், மற்றும் வேலைக்காரி என்று மைதிலிக்கு தெரியும் என்பதால், விவரம் கேட்கவில்லை.
 
இந்து: நேர்ல பாத்து எவ்வளவு நாளாச்சு? இந்த தடவை என்ன பிளான்?
 
மைதிலி: பிளான்ல்லாம் ஒன்னும் இல்ல. ஃப்ரைடே சாட்டர்டே ஆபீஸ்ல வேலை இருக்கும். சண்டே ஈவினிங் அஞ்சு மணிக்கு பிளைட்.
 
இந்து:  இந்த தடவையாவது மீட் பண்ணலாம்ல. சண்டே ப்ரீ தானே... இரு, சஞ்சனாவுக்கு con call போடுறேன்.
 
மைதிலி: ரெண்டு நாளா சரியா தூங்கலடி. Flight  travel வேற. ரொம்ப டயர்டா இருக்கு. உன் ஹஸ்பண்ட்டும் வீட்ல இருப்பாரே. டிஸ்டர்பன்ஸா இருக்கும். நாளைக்கு பேசலாமே.
 
இந்து: அடி பின்னிருவேன், பேசாம இரு. என் புருஷன்  ஆபீஸ் டூர் போயிட்டாரு. ஒரு வாரம் கழிச்சு தான் வருவாப்ல. சஞ்சு ஹஸ்பண்டு தான் பிரான்ஸ்ல இருக்காருல்ல. ராத்திரி மூணு மணிக்கு பண்ணாலும், அவளுக்கு பிரச்சனையே இல்லை. கண்டிப்பா கான்பிரன்ஸ் போடுறேன். ஒரு முக்கியமான விஷயம் இருக்கு.
 
அவளை hold போட்டுவிட்டு, சஞ்சனாவுக்கு கால் செய்து கொண்டிருந்தாள்.
 
போச்சு!!! குறைஞ்சது இரண்டு மணி நேரம்  பேசுவாங்க!
 
இருந்தாலும் அவள் தடுக்கவில்லை. அந்த இரண்டு அழகு பிசாசுகளுக்கும்  கல்லூரி காலத்தில் இருந்தே, மைதிலி மேல் அளவுக்கதிகமான அன்பும், அக்கறையும், உரிமையும் ஜாஸ்தி. 
 
நீங்கள் கொட்டாவிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று புரிகிறது. ஏண்டா இந்த கதையை படிக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்! கரெக்டா? 
 
பரவாயில்லை, கொட்டாவியை ரிலீஸ் செய்து விட்டு, தம் பிடித்து மேற்கொண்டு படியுங்கள்.
 
நம்ம மைதிலி வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை விவரிக்கும் முன்னால், அவளைப் பற்றியும், அவள் நண்பர்களை பற்றியும், அவள் வாழ்க்கை முறை பற்றியும்  தெரிந்து கொள்வது அவசியம் தானே!
 
Wait, கான்பரன்ஸ் கால் கனெக்ட் ஆகிவிட்டது. கல்லூரி தோழிகள் இணைந்தால், இஷ்டத்துக்கு பேசுவார்கள். அதனால் கண்டு கொள்ளாதீர்கள்.
 
வழக்கமான நல விசாரிப்புகளுக்கு பிறகு,
 
சஞ்சனா: எவ்வளவு நாளாச்சு? இப்படி பேசி... ஆளுக்கொரு பக்கம் பிஸி ஆகிட்டோம். விஷயம் தெரியுமா? பிரணவி டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிருக்காளாம்?
 
மைதிலி: எந்த பிரணவி?
 
சஞ்சனா: அதான் நம்ம ஆப்போசிட் குரூப். ஸ்ரேயாவோட லெப்ட் ஹேண்ட். காமர்ஸ் டிபார்ட்மெண்ட் லெக்சரர் ரேவந்தை கல்யாணம் பண்ணிக்கிட்டாளே... அவதான். ரெண்டு பேரும் செப்பரேட் ஆயிட்டாங்களாம். ஒரு வாரம் முன்னால ஒரு கல்யாணத்துல பார்த்தேன். மூக்கு சிந்திகிட்டு நடந்த பிரச்சினைல்லாம் கதை கதையா சொன்னா... ஹாஸ்டல்ல எவ்வளவு பிரச்சனை பண்ணாளுக, இப்ப எங்க பாத்தாலும் மாஞ்சி மாஞ்சி பேசுறா.
 
இந்து: அப்படியா, இது எனக்கு தெரியாதே! நம்ம கம்ப்யூட்டர் லேப் அட்டெண்டர் பசை பிரசாத் (பசவ பிரசாத்தை தான் அப்படி சொல்கிறார்கள்) கண்ணாலேயே ரேப் பண்ணுவானே... stroke வந்திருச்சாம்.
 
சஞ்சு: பொண்ணுங்கள தடவி தடவியே வந்திருக்கும். அப்புறம்... இன்னொரு விஷயம் தெரியுமா?
 
மைதிலி "ம்" கொட்டி கேட்டுக் கொண்டேருக்க, மற்ற இருவரும் மாற்றி மாற்றி சுவாரசியமாக காலேஜ் நண்பர்களின் லைஃப் ஹிஸ்டரியையும் பிரித்து மேய்ந்து கொண்டு இருந்தார்கள்.
 
நினைக்காதே!!! 
அவனை பற்றி நினைக்காதே!! 
 
மனசுக்குள் மெதுவாக கசிய ஆரம்பித்த அந்த எண்ணத்தை தவிர்க்க பார்த்தாள். 
 
புதைத்து வைத்திருந்த இடத்திலிருந்து,
 
மண்ணை கிழித்துக்கொண்டு முளைக்க தயாராக இருந்தான் "அவன்".
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 12 months ago
Posts: 144
Topic starter  
ஜானகி மந்திரம் 2
 
அவன்???
 
வேண்டாம்!
 
அவனைப் பற்றி தோன்றும் எண்ணங்களை எதிர்கொள்ள மைதிலி தயாராக இல்லை. போதும்! கஷ்டப்பட்டதெல்லாம் போதும்!
 
சஞ்சுவும் இந்துவும் பேசிக் கொண்டிருக்கும் போது, தன்னை டைவர்ட் செய்து கொள்வதற்காக பட்லர் வைத்து விட்டு சென்ற டின்னர் டேபிளில், என்னவெல்லாம் இருக்கிறது என்று மைதிலி ஒவ்வொன்றாக பார்த்தாள்.
 
பட்டர் நான், சிக்கன் ஹக்கா,
சவுந்தி ஆலூ, முர்க் முசல்லம் போன்ற ஐட்டங்களை பார்த்ததும், சாப்பிட்டுக் கொண்டே "ம்" கொட்டினாள்.
 
கடிகாரத்தில் பெரிய முள்ளும் சின்ன முள்ளும் உருண்டு புரண்டு கொண்டிருக்க.... காலேஜ் நாட்கள் முடிந்து, ஆறு வருடங்களில், முதல் வருடத்தை மட்டும் தான் பேசி முடித்து இருந்தார்கள். இன்னும் ஐந்து வருடங்கள் பாக்கி இருந்தது. மைதிலி சாப்பிட்டு முடித்து விட்டு அவர்கள் பேச்சு கச்சேரியில்  கலந்து கொண்டாள்.
 
கொஞ்சம் கொஞ்சமா அவனுடைய எண்ணங்கள், மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கி போனது.
 
தூங்கிக் கொண்டிருக்கும் டாம், கதவு டப் டப் என்று தட்டப்படும் சத்தத்தை கேட்டு கொட்டாவி விட்டபடியே, எழும்பி சென்று, கதவைத் திறந்து, வெளியே எட்டி பார்க்க, டாமுக்கு தெரியாமல் ஜெர்ரி அதன் காலுக்கடியில் உள்ளே நுழைந்து, டாமை வெளியே தள்ளி கதவை பூட்டி விட்டு கெக் கெக் என்று சிரிக்கிறது.
 
கார்ட்டூன் சேனலில் ஓடும் மேற்கண்ட காட்சியை பார்த்தபடியே, மைதிலி அவர்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தாள்.
 
இந்து: சொல்ல மறந்துட்டேன். எல்லாருமே இப்போ ஒரே ஸ்டேட்டில 200 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கோம். நாம மீட் பண்றதுக்கும் நல்ல வாய்ப்பு வந்திருக்கு. கம்மிங் சண்டே காலேஜ் அலுமினி ரியூனியன் மீட் நடத்துறாங்க. காலேஜ் whatsapp குரூப்பில் போட்டிருந்தாங்க. பாபி கூட போன் பண்ணிருந்தான். நாம அட்டென்ட் பண்ணா என்ன? நம்ம காலேஜ் நண்பர்களை பார்த்த மாதிரி இருக்கும். நாமளும் மீட் பண்ணி ரொம்ப நாளாச்சுல்ல.
 
மைதிலி திடுக்கென்று நிமிர்ந்து உட்கார்ந்தாள்.
 
சஞ்சு: ஆமா திரிஷ்யா கூட சொன்னா, நான் ப்ரீயா தான் இருக்கேன். எனக்கு ஓகே. Chutki தான் சொல்லணும்.
 
மைதிலி தரப்பில் பதில் இல்லை.
 
வெளிநாடு கிளம்ப போகும் சூழ்நிலையில், இவர்களை பார்த்து கொண்டிருந்தால் ஆபத்து. எப்படியாவது உண்மையை கண்டுபிடித்து விடுவார்கள். அதுக்கப்புறம் தடுக்கத்தான் பார்ப்பார்கள்.
 
இந்து: என்னடி, ஏதாவது சொல்லு?
 
இவ்வளவு நாள் மைதிலியை கல்யாணம் பண்ணிக்கோ என்று வற்புறுத்திக் கொண்டிருந்தவர்கள், கொஞ்ச நாளாகத்தான் அவள் மனவோட்டத்தை புரிந்து கேள்வி கேட்காமல் விட்டிருந்தார்கள்.
 
ஏற்கனவே நடந்த கல்யாண சம்பாஷணைகளில் ஒரு குறும்பகுதியாவது உங்களிடம் போட்டுக் காட்டினால் தான், உங்களுக்கு புரியும். அதனால் ஒரு மைக்ரோ பிளாஷ்பேக்.
 
இந்து: காலேஜ்ல நடந்த எல்லா விஷயத்தையும் உன் கூடவே இருந்து நாங்க பார்த்தவங்க. உன் கஷ்டம், எங்க கஷ்டம் தெரியும் தானே. மத்தவங்கள மாதிரி, உன் வாழ்க்கையை பத்தி தெரியாம நாங்க மேம்போக்கா பேசுறவங்க கிடையாது.
அவன் கதை முடிஞ்சுது. Chapter close.  இன்னும் நீ அவனை நெனச்சுக்கிட்டு இருக்கிறதுல ஏதாவது யூஸ் இருக்கா? 
 
சஞ்சு: கரெக்ட், இல்லாதவனையே நினைச்சுகிட்டு இருக்கிறதால தான் இவளுக்கு  கல்யாணம் பண்ணிக்க புடிக்கல?
 
மைதிலி: சேச்சே!! அப்படியெல்லாம் இல்லை... நடந்த விஷயங்களை மறக்கிறதுக்கு முதல்ல கஷ்டமா இருந்தது உண்மைதான். போகப் போக வேற வேலைகள், commitments, work pressure ன்னு நிறைய diversions வந்துருச்சு.  ஓடிக்கிட்டே இருக்கிறதால பழைய விஷயங்களை நினைக்கவே நேரமில்லை. அதெல்லாம் எப்பவோ மறந்தாச்சு. Trust me
 
சஞ்சு: அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு என்ன?
 
இவர்களுக்கெல்லாம் பதில் சொல்வதற்காகவே ஸ்டாண்டர்டாக ஒரு பதிலை மைதிலி தயாரித்து வைத்திருந்தாள்.
 
"கல்யாணம் பண்ணிக்கிறது பத்தி ஒண்ணும் பிரச்சனை இல்ல... ஆனா நான் எதிர்பார்க்கிற மாதிரி, மனசுக்கு புடிச்ச மாதிரி, ஒருத்தன் இன்னும் அமையல. அமைஞ்சா நிச்சயமா பண்ணிக்குவேன்... யாராவது இருந்தா நீங்களே சொல்லுங்க. பேசிப் பார்ப்போம்."
 
கல்யாணம் பண்ணிக்கொள்ள  அவளுக்கு அபிப்பிராயம் இல்லை என்பதும், இது அவர்களுக்காக சொன்ன சால்ஜாப்பு என்பதும், அவர்கள் இருவருக்கும் தற்சமயத்துக்கு தெரியப்போவதில்லை.
 
இந்து: அதெல்லாம் அமைவாங்க chutki. நாங்கல்லாம் மனசுக்கு புடிச்சா கல்யாணம் பண்ணிட்டோம். எப்படியோ மேரேஜ் நடந்துச்சு. இப்ப வேற வழியில்ல, புடிச்சு போச்சு. உனக்காக இன்னொருத்தன் இனிமேயா பொறந்து வரப் போறான்? கல்யாணத்துக்கு நீ ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம். உன் அம்மா இருந்தா, நாங்க சொல்றத தான் சொல்லிருப்பாங்க.
 
மைதிலி: சும்மா ஏனோ தானோன்னு ஏதோ ஒரு கல்யாணத்தை பண்ணிக்கிட்டு வாழ்க்கை நடத்துவதற்கு எனக்கு புடிக்கல. உண்மையிலேயே மனசுக்கு புடிச்ச மாதிரி யாராவது வந்தா, நிச்சயமா பண்ணிக்குவேன்.
 
சஞ்சு: ok accepted. ஆனா நான் ஒரு விஷயம் சொல்றேன். கொஞ்சம் cringeஜா தான் இருக்கும். இருந்தாலும் நான் சொல்றேன்ல கேட்டுக்கோ.  உனக்கு துணையா இருந்த உங்க அம்மாவும் இப்போ இல்லை. நாங்க ரெண்டு பேரும் தான் உன்னோட அம்மா இடத்துல இருக்கோம். நல்லா புரிஞ்சுக்கோ.
 
மைதிலி கண்களில் குப்புக்கென்று நீர் துளிர்த்தது.
 
அவர்களின் அக்கறையை ஏற்றுக் கொண்டாலும், கல்யாண விஷயத்தை மட்டும் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
 
என்னதான் ஸ்டாண்டர்டாக இதே பதிலை அவள் திரும்ப திரும்பி சொன்னாலும், அவர்கள் இருவருக்கும் சந்தேகம் தீரவே இல்லை. 
 
அவ்வப்போது தெரிஞ்ச பையன், உறவுக்கார பையன், என்று இருவரும் மாத்தி மாத்தி அனுப்பும் ப்ரோபோசல்களை எதையாவது காரணம் சொல்லி, தட்டி கழித்துக் கொண்டே இருந்தாள். லண்டன் onsite போகும் offer ஆபீசில் சொன்னவுடன், அவள் ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணமும் கல்யாண விஷயத்தில் இருந்து தப்பிப்பதற்கு தான்.
Cut to the present:
 
இந்து: என்ன chutki... நான் கேட்டுட்டே இருக்கேன்... நீ யோசிச்சிட்டே இருக்க.. நீ தான் பழசல்லாம் மறந்துட்டியே... அப்புறம் காலேஜுக்கு வந்தா என்ன?
 
சரியான பதில் சொல்லவில்லை என்றால், இவர்கள் விட மாட்டார்கள். எமகாதகிகள். எப்படியாவது சமாளிக்க வேண்டும். 
 
இப்போதைக்கு ஆமாம் என்று சொல்லி வைப்போம். மைதிலி அவசரமாக மனசுக்குள் முடிவெடுத்து,
 
"மீட் பண்றது ஓகே... அதுக்காக காலேஜுக்கு போகணுமா? மறந்து போன விஷயங்களை மறுபடியும் ஞாபகப்படுத்துற மாதிரி இருக்கும். அதான் யோசிக்கிறேன்", தயக்கத்தை குரலில் காட்டாமல், பிசிறு தட்டாமல் பேசினாள்.
 
இந்து: எதுக்கு நீ அந்த ஒரு கஷ்டமான விஷயத்தைப் பற்றி மட்டும் நினைச்சுககிட்டே இருக்கணும். அதை ஓரமா எடுத்து வை. நாங்க இருக்கிறோம். மத்த பிரண்ட்ஸ் வருவாங்க. இதெல்லாம் pleasant memories தானே.
 
மைதிலி: அதுக்கில்ல ரெண்டு பேரும் மும்பை வாங்க. Full day டைம் ஸ்பென்ட் பண்ணலாம்... சண்டே ப்ரீயா தான் இருப்பேன். ரெண்டு மணிக்கு நான் கிளம்பினா போதும் ஓகேவா?"
 
எப்படியும் வர மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் அவள் சொல்ல,
 
இந்து: அஞ்சு மணிக்கு தானே பிளைட்ன்னு சொன்னே!
 
அடிப்பாவி! கரெக்டா கேட்ச் பண்றாளே!
 
மைதிலி: ஆமா, அஞ்சு மணிக்கு தான். டிராபிக் பிரச்சனை வந்திடக் கூடாதுல்ல. அதனால சொன்னேன். நீங்க இங்க வாங்களேன் ப்ளீஸ்!
 
சஞ்சு: 
என்னடி பெரிய MNC ல... பெரிய ஆபிஸர்னு தெனாவெட்டா பேசுறியா? எப்பவும் நாங்க சொல்றத தான் நீ கேக்கணும், புரிஞ்சுதா?
 
அவர்கள் இருவரின் அன்புக்கும் என்றைக்குமே அவள் கட்டுப்பட்டவள். ஏன் என்று உங்களுக்கு போக போக தெரியும்.
 
மைதிலி: அதுக்காக இல்ல... மறந்து போன விஷயங்களை எதுக்கு தேவையில்லாமல் கிளறனும்..அதனால் தான் சொன்னேன்!
 
இந்து: Accha...i understand...u got over from that episode...it doesnt bother u anymore இல்ல... அப்படித்தானே சொல்ற? எங்களுக்கு proove பண்ணு. 
 
மைதிலி: எப்படி ப்ரூப் பண்ணனும்?
 
இந்து: simple.  Lets go to this alumini meet. நம்மளும் பழைய பிரண்ட்ஸை பார்த்த மாதிரி இருக்குமே. எவ்வளவு வருஷம் ஆச்சு? சரின்னு சொல்லுடி...
 
இருவரும் விடாமல் வற்புறுத்த, மைதிலி வேறு வழி இல்லாமல் ஓகே என்றாள்.
 
ஹே!!!!! இந்து மற்றும் சஞ்சு தரப்பில் உற்சாக குரல்கள்.  மாத்தி மாத்தி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டு, பத்து நிமிடம் கழித்து போனை வைத்தார்கள். கூட்டு தொலைபேசி அழைப்பு நிறைவு பெற்றது.
 
கட்டிலில் இருந்து எழும்பி, திறந்திருந்த ஜன்னலருகே சென்று பார்த்தாள்.  வெளிச்சத்தை அணிந்து கொண்ட வாகனங்கள், தூரத்து கட்டிடங்கள், வானத்தில் ஆஜராகி இருந்த அவசர நட்சத்திரங்கள், ஒலி துண்டிக்கப்பட்ட விமானம் எல்லாவற்றையும் பார்வையால் வலம் வந்தாள். பின்னர் எங்கேயோ ஒரு புள்ளியில் அவள் பார்வை வெறித்தது.
 
ஒரு முழு நிமிடத்திற்கு பிறகு, பார்வையை மீட்டு, மார்புகள் விம்ம, ஆழமாக மூச்சு விட்டாள்.
 
நினைவுகள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. "Come on think" என்று கட்டளையிட்டு நினைப்பை உருவாக்கவும் முடியாது... "stop thinking" என்று உத்தரவு போட்டு நிறுத்தி வைக்கவும் முடியாது.
 
மனது காற்றென்றால், நினைவுகள் புகை மாதிரி... வாசனை மாதிரி, எங்கிருந்தோ கசியும் பாட்டு சத்தம் மாதிரி... காற்றுக்கு தகுந்த மாதிரி எழும்பும், மிதக்கும், தவழும், சுழலும், கரையும்.
 
மைதிலி மறுபடியும் கட்டிலில் போய் பொத்தென்று விழுந்தாள். கண்களை மூடினாள்.
 
மூன்று வருடங்கள். 
 
மற மற என்று ரெண்டு அழகான ராட்சசிகளும் சொல்வது போல், 
 
மறக்க நினைத்தாலும்  முடியாத.... மறக்கக் கூடாத... மாபெரும் அத்தியாயத்தை அமைத்த மூன்று வருடங்கள். 
 
ஆனால் அந்த அத்தியாயத்தின் கடைசி பத்தி எழுதப்படாமல் நிறைவுற்று இருந்தது.
 
அவள் மறுதலித்த நினைவுகளின் பின்னணியை நினைத்துப் பார்க்கப் போவதின் உத்தேசமாய்..
 
ஜன்னல் பக்கமாக இருந்து மெல்லிய காற்று வீச ஆரம்பிக்க...
 
மைதிலி நினைக்கவே கூடாது என்றிருந்த காட்சி, பயாஸ்கோப் போல அவள் கண் முன்னே விரிந்தது.
 
2003 August 10
 
பறந்து விரிந்த khandala SSG  college. பிரம்மாண்டமான காலேஜ் பில்டிங்கள், அவள் கண்களின் பயாஸ்கோப் ஸ்கிரீனில், ஈஸ்ட்மேன் கலரில் விரிந்தன. 
 
அரையிருளில் இருந்த பில்டிங்கள்,  அவள் கண்களுக்குள் பளிச் பளிச்சென்று புத்துயிர் பெற்றன. காலேஜின் சிமெண்ட் பாதைகளில், மரத்தடி பெஞ்சுகளில், பார்க்கிங்கில், கிரவுண்டில், நிழலோவியங்களாக freeze  ஆகி இருந்தவர்கள் சொடக்கு போட்டது போல், கலர் போட்டோவாக மாறி, பிரேம் பை பிரேமாக உயிர் பெற்றனர்,
 
பழைய பிளாக் அண்ட் வொயிட் silent movie போலிருந்த காட்சிகள், டால்பி டிஜிட்டல் ஸ்டீரியோவில் பேசும் படமாக மாறியது.
 
கல்லூரி வளாகம் முழுக்க சந்தோஷ கூச்சல்கள், வராண்டாக்களில் கூட்டம் கூட்டமாக சிரிப்பு சத்தம். 
சிறு சிறு குழுக்களாக மரத்தடி பெஞ்சுகளில் அரட்டைக் கச்சேரி. காலேஜ் பெல் அடிக்க டைம் இருந்ததால், கேண்டினில் பாட்டு, கூத்து, ஆரவாரம்.
 
காலேஜ் மெயின் கேட் தாண்டி  புயல் வேகத்தில் Ducati ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்று உள்ளே நுழைந்தது. ஆக்சிலரேட்டரை திருகி, விர் விர் என்று இஞ்சின் சத்தமிட்டு புகையை கக்கியபடி பைக் சீறி செல்ல, சிமெண்டு சாலையை ஆக்கிரமித்து சென்றவர்கள் விலகி வழி விட்டார்கள்.   ஆங்காங்கே பேசிக் கொண்டிருந்த சுடி, மிடி, ஜீன்ஸ் அணிந்த இளம் பெண்கள் பரவசமாக அவனைப் பார்க்க, பைக் அலட்சியமாக காற்றில் மிதப்பது போல், பார்க்கிங்கில் நுழைந்தது. அவனுடைய வழக்கமான இடத்தில் பைக்கை பார்க் செய்தான். சைடு மிரரை பார்த்து அலை அலையாய் காற்றில் கலைந்த தலை முடியை கைகளாலேயே கோதி சரி செய்து கொண்டு திரும்பினான். அவன் திரும்பியதும், கண்களுக்கு அணிந்திருந்த கூலர்ஸில் காலை இள வெயிலின் ஒளி கீற்று பட்டு தெறித்து மினுமினுத்தது.
 
காலேஜ் கேம்பஸில் திடீரென்று மின்னல் வெட்டியது போல் பரபரப்பு. கசகசவென கலகலப்பாக இருந்த காலேஜ் கேம்பஸ், டெசிபல் குறைந்து கலகலத்து போனது.
 
பார்க்கிங்கில் இருந்து வெளிப்பட்டு, சிமெண்ட் சாலையில் நடந்து, காலேஜ் மெயின் பில்டிங்கை நோக்கி சென்றவனை பார்த்த பெரும்பான்மையான கேர்ள்ஸ் பெருமூச்சு விட்டார்கள், பேசிக் கொண்டிருந்த ஒரு சில பேர் வார்த்தையை தவற விட்டார்கள், ஒரு சிலர் கையில் வைத்திருந்த வேலட்டையும்  நோட்டையும் தவற விட்டார்கள், நிறைய பேர் மனதை தவற விட்டார்கள்.
 
அணிந்திருந்த கருப்பு லெதர் ஜாக்கெட் காற்றில் படபடக்க சென்றவனின் நடையில்... நளினமும் கம்பீரமும் ஒரு சேர இருந்தது. நண்பர்களுக்கு, தெரிந்த முகங்களுக்கு.. ஹாய், குட்மார்னிங், ஹலோ என்று நட்பை தூவியப்படியே சென்றான். அவனின் ஹாய், ஹலோவை பெற்றுக் கொண்டவர்கள், பூட்டான் பம்பர் லாட்டரி அடித்தது போல் பெருமிதமாக பார்த்துக் கொண்டார்கள். அவன் தங்களின் நண்பன் என்று சொல்லிக் கொள்வதில் ஒரு கௌரவம்.  
 
ரொம்பதான் பீற்றபடுகிறான்.. என்று நீங்கள் நினைக்கலாம். அவனைப் பார்த்தால், அவனுடன் பேசினால், அவனுடன் பழகினால், அப்படி சொல்ல மாட்டீர்கள்! அவன் பெர்சனாலிட்டியை விட... அவனுடைய குணநலன்களுக்கு இன்னும் விசிறிகள் ஜாஸ்தி.
 
அவனைப் பற்றிய வர்ணனைகளை அடுத்த எபிசோடுக்கு தள்ளி வைத்துவிட்டு, மெயின் பில்டிங்க்குள் நுழைபவனை பின்தொடரலாம். 
 
மெயின் பில்டிங் கிரவுண்ட் ப்ளோர் காரிடரில் நடந்து, அங்கு நின்று பேசிக் கொண்டிருந்த பெண்களின் பிபியை ஏற்றிவிட்டு, அவர்களை கடந்து,  பில்டிங் பின் பக்கமாக வந்தான்.
 
வலது பக்கமாக தெரிந்த கம்ப்யூட்டர் சயின்ஸ் ப்ளாக்கை நோக்கி சென்றான். வந்ததுலருந்து கடந்து போகும் வரை, புன்னகை மாறாமல் இருக்கும் அவன் முகத்தை இன்னொரு முறை பார்க்க வேண்டும் போல, பெண்களுக்கு ஒரு பரபரப்பு.
 
அவனின் வருகையை பார்த்த கேர்ள்ஸ் மத்தியில் பிரமிப்பு படர்வதையும், அவர்களை இயல்பாக இருக்க விடாமல் செய்வதையும்,
 
Main building வராண்டாவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த இரண்டு ஃபர்ஸ்ட் இயர் பசங்களுக்கு, உங்களை மாதிரியே நிறைய கேள்விகள்.
 
முதலாமவன்: ஏ கான் ஹே? ஹாலிவுட் ஹீரோ brad pit மாதிரி இருக்கான்? 
 
அவன் கண்களில் எக்கச்சக்க பொறாமை.
 
இரண்டாமவன் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு,
 
"இவரை தெரியாதா? இவ்வளவு நாள் இந்த காலேஜ்ல எந்த சந்துக்குள்ளடா இருந்த?", என்று கேட்க,
 
முதல் பையன்: நான் புதுசுபா. காலேஜ்ல ஜாயின் பண்ணி மூணு நாள் தான் ஆச்சு.
 
இரண்டாமவன்: இவரு நம்ம சீனியர், காலேஜ் ஸ்டூடண்ட் யூனியன் பிரசிடெண்ட், பைக் ரேசர், காலேஜ் கிரிக்கெட் டீம், ஃபுட்பால் டீம் கேப்டன், இன்னும் என்னென்னலாமோ... CS டிபார்ட்மென்ட் பைனல் இயர். ரொம்ப நல்ல டைப்.
 
முதலாமவன்: உங்க ஹாலிவுட் ஹீரோவுக்கு பேரு கிடையாதா?..
 
பெண்கள் எல்லோர் மனதிலும் ரசவாதம் நிகழ்த்துமளவுக்கு பெர்சனாலிட்டியாக இருக்கிறானே என்ற கடுப்பில் கேட்க,
 
அதற்கு இரண்டாமவன்,
 
"பேரு ராம் மனோகர். சுருக்கமா மனோ."
 
கம்ப்யூட்டர் சயின்ஸ் ப்ளாக்கில் ஸ்விட்ச் பேக் படிக்கட்டில் ஏறினான்.  அடுத்த புளோருக்கு மேல் நோக்கி ஏறும் படிக்கட்டை இணைக்கும் லேண்டிங்கில் துள்ளித் திரும்பிய மனோ, அதே வேகத்தில் ஏறி, செகண்ட் ஃப்ளோர் வந்ததும், நின்றான். 
 
செகண்ட் ப்ளோர் வராண்டாவில் சொற்பமாக ஒரு சில பேர் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
 
மனோ கூலிங் கிளாசை மெதுவாக கழட்டினான்.
 
ட்ரிங்ங்ங்ங்....
 
சினிமா ஆரம்பிப்பதற்கு அறிகுறியாக பெல் அடித்தது. மன்னிக்கவும், 
காலேஜில் வகுப்புகள் ஆரம்பிப்பதற்கு அறிவிப்பாக பெல் அடித்தது.
 
மனோவின் முகத்திற்கு டைட் க்ளோசப் போக, பயாஸ்கோப் ஸ்கிரீனை பார்த்து, இடது கன்னத்தில் குழி விழ கவர்ச்சிகரமாக சிரித்தான். ஸ்கிரீன் முழுவதும் அவனுடைய வசீகரம் ததும்பி வழிந்தது.
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 12 months ago
Posts: 144
Topic starter  
ஜானகி மந்திரம் 3
யார் இவன்?
 
முகம் சரியாக தெரியவில்லையே!
 
ஸ்கிரீனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தவனின் முகம், தூரத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்த மைதிலிக்கு சரியாக தெரியவில்லை.
 
இளநீல சாம்பல் நிறத்தில் ஊமையொளியுடன் வானம். தூரத்து பனிமலை முகட்டை உறைந்து படிந்த மேகங்கள் முத்தமிட்டு கொண்டிருக்க, அதன் முன்னால் விதவிதமான நீல வண்ணங்களை கரைத்தது போல், கண்ணடி பரப்பான அடி தளத்துடன் பெரிய ஏரி. மலையின் நிழலும் மேகங்களின் நிழல்களும் ஏரியில் மிதந்து கொண்டிருந்தன.
 
தூக்கிவாரி இரண்டு பக்கமும் பின் போட்டு வைத்திருந்த அவள் கூந்தலின் கூட்டு சேராத உதிரிகளோடு, தவழ்ந்து வந்த காற்று அசைத்து விளையாடிக் கொண்டிருக்க, அணிந்திருந்த வயலட் சுடிதாரில் சிதறியிருந்த  பூக்கள் சிலிர்த்து நிமிர,  எங்கும் எதிலும் பனிப்புகை தூவலின் ஆக்கிரமிப்பு. மொழியில் கொண்டுவர முடியாத சோகமான கவிதைத்தன கனவுவெளி.
 
சுற்றிலும் சிவப்பு, இளஞ்சிவப்பு, ஊதா, ஆரஞ்சு துலிப் மலர்களின் வண்ணச் சிதறல். ஆயிரக்கணக்கான பச்சைக் கரங்களை அசைத்து, பனி காற்றுடன் விளையாடிக் கொண்டிருந்தன  துலிப் செடிகள். இடையிடையே சறுக்கி ஓடி விளையாடிக் கொண்டிருந்த பனி புகையின் குறுக்கீட்டால், அவன் மேகங்களுக்கு நடுவே நிற்பது போல் தோற்ற மயக்கம். 
முகமும் சரியாக தெரியவில்லை. ஆனால் தெரிந்தவரைக்குமே அதன் வசீகரம், அவளின் எண்ணங்களை சிதறசெய்து பரவசமான விழிமயக்கு மந்தத்தன்மை ஏற்படுத்தியது.
 
காற்றில் அசைந்து கொண்டிருந்த துலிப் செடிகளை விலக்கியபடியே கடந்து, அவனை நோக்கி சென்றாள். ஈர உடையை உடுத்திக் கொண்டிருந்தது போல் ஜில்லிப்பு. மனதிற்கு இதமான மெல்லிய இசை எங்கிருந்தோ கசிந்தது. 
 
அவனை நோக்கி கிட்டே செல்ல செல்ல, அவனின் வசீகரம் அதிகரிப்பது அவளுக்கு தெரிந்தது. 
 
நெஞ்சுக்குள் இனம் புரியாத படபடப்பு. விழிகள் அகலமாகின.
 
கிட்டத்தட்ட அவனை நெருங்கி விட்டாள். அவனை கடந்து சென்ற புகை விலக விலக.. அவன் முகம் தெரிய போன கடைசி நொடியில்,
 
"ஏய் என்னடி உட்கார்ந்துகிட்டே தூங்கிட்டு இருக்க", அவள் ரூம்மேட் திஷாவின் குரல் ரூம் வாசலில் கேட்டதும்,
 
சேரில் உட்கார்ந்தபடி, டேபிளில் தலை சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்த மைதிலி, திடுக்கென்று முழித்துக் கொண்டாள்.
 
மேற்படி சம்பவம் நிகழ்ந்து கொண்டிருப்பது SSG காலேஜ் கேம்பஸ் குள்ளயே, அமைதியான ஒரு பிரதேசத்தில் வீற்றிருக்கும் லேடிஸ் ஹாஸ்டலில்...
 
திஷாவும் தான்வியும்... மைதிலியை ஏற இறங்க பார்த்துவிட்டு ரூமுக்குள் நுழைந்தார்கள். இருவரும் ஸ்விம்மிங் காஸ்ட்யூம் இருந்த பேக்கை, கட்டிலில் தூக்கி எறிந்து விட்டு ஆளுக்கொரு பக்கமாக உடைமாற்ற ஆரம்பித்தார்கள்.
 
நீச்சல் போட்டிகளில் பங்கு கொள்வதால், பயிற்சிக்காக h2o ஸ்விம்மிங் கிளப்புக்கு போய் விட்டு வந்திருந்தார்கள். ஸ்விம்மிங் கிளப் இருப்பது ஹாஸ்டலை விட்டு 5 km தள்ளி என்றாலும், ஸ்போர்ட்ஸ் ட்ரைனிங்காக மட்டும் ஹாஸ்டலை விட்டு வெளியே போய்விட்டு வருவதற்கு  ஸ்பெஷல் அனுமதி உண்டு.
 
இருவரையும் பார்த்ததும், தூக்கம் கலைந்து, சங்கடமாக அவர்களை பார்த்து, சம்பிரதாய சிரிப்பு சிரித்தாள். 
 
மீண்டும் ஒரு அதிகாலை கனவு. யாரோ ஒரு அறிமுகமில்லாத அழகான ஆண். இந்த மாதிரி கனவு வந்தது இதுவே முதல் முறை. ஊருக்கு போகும்போதெல்லாம் அம்மா சொல்லும் சிண்ட்ரெல்லா மாதிரியான கதைகள் அவளுக்கு ஞாபகத்துக்கு வந்தன. அப்போதெல்லாம் அவளுக்கு சிரிப்பு தான் வரும். நிஜ வாழ்க்கையில் ராஜகுமாரர்கள் அழகான ராஜகுமாரிகளை தான் தேடி போவார்களே தவிர... அவளை மாதிரி சுமார் மூஞ்சி குமாரிகளை  அல்ல.
 
திஷாவுக்கு ஏற்கனவே டி-ஷர்ட்க்குள் அணிந்திருந்த ப்ரா ஸ்ட்ராப் கழண்டு இருந்ததால், டிஷர்டையும் ப்ராவையும் உருவி சேரில் விசிறி எறிந்தாள்.
 
"அந்த பிராணவிக்கு பிரா கிறுக்கு புடிச்சிருக்கு. எப்ப பாரு, கட்டி புடிச்சி ஹூக்கை கழட்டி  விட்டுறா சனியன். "
 
பிரணவிக்கு அது ஒரு வேடிக்கை. இடம் பொருள் ஏவல் இல்லாமல், ஓடி வந்து கட்டிப்பிடித்து, முதுகு பக்கமாக பிரா ஹூக்கை நைசாக கழட்டி விட்டுவிடுவாள்.  அவள் அதில் எக்ஸ்பர்ட். கழட்டப்பட்டவர்கள் நெளிய வேண்டியரும். அதனால்தான் பிரணவி, 'பிரா'ணவி என்று ஹாஸ்டலில் அன்புடன் அழைக்கப்படுகிறாள்.
 
தான்வி: எல்லாம் ஸ்ரேயா, சலோனி இருக்கிற தைரியம்.  மூணு பேரும் என்ன ஆட்டம் போடுறாளுங்க. எல்லாரையும் சகட்டுமேனிக்கு பேசுறது, இஷ்டத்துக்கு வெளிய போறது வர்றது, யாரையும் மதிக்கிறதில்லை, வார்டனை  என்னமோ சொல்லி மடக்கி போட்டுருக்காங்க. அவ அப்பனுக்கு நாலு கம்பெனி இருக்கு. ஸ்விஸ் பேங்க்ல அக்கவுண்ட். எல்லாம் பண கொழுப்பு. இவர்களை யார் தட்டிக் கேட்கப் போறாங்க?
 
பூத்துவாலையை வாயில் கவ்வியபடி மார்பு பிரதேசத்தை மறைத்தபடி, மார்பில்  என்னமோ பரிசோதித்துக் கொண்டிருந்த திஷா,
 
"நமக்கு மட்டும் பணத்துக்கு என்ன குறைச்சல். அதெல்லாம் இல்ல. ஒருவேளை மனோ இருக்கிற தைரியமா இருக்கும்", என்றாள்.
 
ஆனால் அப்படி இருக்க கூடாது என்ற ஆதங்கமும், அவள் பதிலில் ஒளிந்து இருந்தது.
 
தான்வி: "அவதான் வெளியில சொல்லிட்டு திரியிறா. அவ ஒண்ணும் மனோவின் கேர்ள் ஃபிரண்ட்  கிடையாது. இவதான் அவனை ஈஷிக்கிட்டு இருக்கா. அவன் கண்டுக்கவே மாட்டேங்குறான்... நீ பீல் பண்ணாத நமக்கு இன்னும் சான்ஸ் இருக்கு."
 
திஷா அவளை கடுப்பாக ஏறிட்டு பார்க்க,
 
உடனே தான்வி,
 
"நமக்குன்னா... உனக்குன்னு அர்த்தத்தில் சொன்னேன்" என்று பேச்சை மாற்றினாள்.
 
திஷா: "பிரா ரொம்ப டைட்டாயிடுச்சுடி. ரொம்ப இறுக்குது. அடுத்த சைஸ் வாங்கும் போது, ரேசர் பேக் டைப்ல வாங்கணும்.."
 
தான்வி பெருமூச்சு விட்டபடி: "மாசத்துக்கு ஒரு தடவை சைஸ் மாத்திக்கிட்டே இருக்குற... வளர்ச்சி விகிதம் ரொம்ப அதிகமா இருக்கே. எவனுக்கு கொடுத்து வச்சிருக்கோ.... ஒருவேளை அந்த மனோ தானா?"
 
திஷா: கண்ணு போடாதடி... 
 
மனோ பெயர் அவளுடன் சேர்த்து அடிபட்டதும், திஷா வெட்கப்பட முயற்சி செய்தாள், ஆனால் சுத்தமாக அவளுக்கு செட் ஆகவில்லை. வெட்கம் என்ற பெயரில் வேறு ஏதோ சமாச்சாரம் தான் வெளிப்பட்டது.
 
தான்வி அவளின் நெஞ்சில் கை வைத்து பிளாட்டாக தடவியபடி, "ஒரே சைஸ் ஸ்போர்ட்ஸ் ப்ராவை தான் ரொம்ப நாளா யூஸ் பண்றேன்.... எனக்கு ஸ்லேட் மாதிரில்ல இருக்கு ", என்று பெருமூச்சு விட்டபடி சொல்ல...
 
திஷா அவள் ஆதங்கத்தை புரிந்து கொண்டு, "பிகர் மத்கர் பேட்டா....you will get it soon...."  
 
மைதிலி மைண்ட் வாய்ஸ்: யார் இந்த மனோ?
 
காலேஜே அவனைப் பற்றி தான் பேசுகிறது. வந்ததுல இருந்து அவனைப் பார்க்கவும் இல்லை.
 
மூன்றாவதாக அந்த ரூமில் மைதிலி ஒருத்தி இருந்தாலும், அவளை கண்டுகொள்ளாமல் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பளபள  நிறத்தையும், நடவடிக்கையும் பார்க்கும்போதே பாதாம் பிஸ்தாக்களின் உபயம் தெரிந்தது. பெரிய இடத்துப் பெண்கள். அவர்கள் கவலைப்படுவதற்கு பணத்தைத் தவிர வேறு ஏதாவது பிரச்சனைகள் இருக்கும். 
 
அவர்கள் மட்டுமல்ல, இந்த  காலேஜ் கேர்ள்ஸ் பெரும்பான்மையாக எல்லோருமே கரன்சி காற்றை சுவாசிப்பவர்கள் தான். சம்பந்தமில்லாமல் வந்து மாட்டிக்கொண்டது மைதிலி மட்டும்தான். அதுவும் மூன்றாவது வருடத்தில், ஒரு மாதத்திற்கு முன்னால் தான், அவள் இந்த காலேஜுக்கு டிரான்ஸ்பர் ஸ்டூடண்டாக வந்திருந்தாள்.
 
அங்கிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில், மஞ்சார் பக்கத்தில், வாயில் நுழையாத பெயருடைய ஏதோ ஒரு கிராமம்தான் அவளுடைய ஊர். அங்கே ஒரு லேடிஸ் காலேஜில் தான் முதல் இரண்டு வருடம் பி காம் படித்தாள். காலேஜ் நிதி நெருக்கடி காரணமாகவும், வேறு பல பிரச்சினைகள் காரணமாகவும் இழுத்து மூடப்பட்டது.
அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்களை மும்பை யூனிவர்சிட்டி பொறுப்பெடுத்து, ஸ்பான்சர் செய்து, பல்வேறு காலேஜ்களில் பிரித்து போட்டார்கள். அந்த அடிப்படையில் தான் மைதிலி இந்த காலேஜுக்கு தாரை வார்க்கப்பட்டாள்.
 
நடுத்தர வர்க்கத்து ஆசாமிகள் சந்தர்ப்ப சூழ்நிலையால் பைவ் ஸ்டார் ஹோட்டலுக்குள் நுழைந்தால், எப்படி தடுமாறுவார்களோ? என்ன மனநிலை இருக்குமோ? அதே மனநிலை தான் மைதிலிக்கும்... கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போலிருந்தது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவள் நடுத்தர வர்க்கம் கூட கிடையாது, வறுமையான சூழ்நிலை தான். 
 
அவள் அப்பா மோகன்தாஸ், மைதிலிக்கு ஒரு வயதாக இருக்கும் போதே ஆக்சிடெண்டில் இறந்த பிறகு. ஆதரவு கொடுக்க வேண்டி வருமே என்று சொந்தக்காரர்கள் அனைவரும் கைவிட்டு விட... அனாதரவாக நின்றார்கள். வேறு வழியில்லாமல், சொந்தம் என்றிருந்த ஒரு மாமா வீட்டில் தான், அவள் அம்மா ஜான்சி கைக்குழந்தையுடன் தஞ்சம் புகுந்தாள். 
 
சாகர் மாமா, கட்டில் மேஜை செய்யும் ஒரு ஓட்டை கம்பெனியில் ரொம்ப காலமாக சேரை தேய்த்துக் கொண்டிருந்தார். கமலினி அத்தைக்கு பைனான்ஸ் பிசினஸ். கையில் பணம் விளையாடும். அம்மாவுக்கு பேரில் மட்டும் தான் வீரம். மாமா நல்லவர் தான், ஆனால் அத்தையை பொறுத்தவரையில் அவர்கள் வேண்டாத விருந்தாளி. போதாக்குறைக்கு அத்தைக்கு அமில நாக்கு. தினம் ஒரு கேலி, கிண்டல், சுடுசொல், பிரச்சனை. மாமா வீட்டின் ஆட்சி அதிகாரம் அத்தையிடம் இருப்பதால், அவரால் எதிர் கேள்வி கேட்க முடியாது.  குழந்தையுடன் வந்த ஜான்சியை அடித்து விரட்டாமல், வீட்டில் தங்குவதற்கு இடம் கொடுத்ததற்கு முக்கிய காரணம், வீட்டு வேலைக்கு வருபவர்களின் அதிக சம்பளமும், ரொம்ப நாள் தாங்காமல் ஓடி விடுவதும் தான். தங்குவதற்கு இடம் என்றால், ஸ்டோர் ரூம் பக்கத்தில், கரப்பு நாற்றமும், மட்டமான சுண்ணாம்பும் அடிக்கப்பட்ட ஒரு டஞ்சன் ரூம்.
 
ஜான்சிக்கு கைக்குழந்தையான மைதிலியுடன் தனியே சென்று ஜீவிக்கும் தைரியம் இல்லாமல் போனதால், அண்ணன் வீட்டிலேயே பணிந்து, முடங்கி, சம்பளம் இல்லாத வேலைக்காரியாக எப்படியோ கஷ்ட ஜீவனத்தில் நாட்கள் போய்க் கொண்டிருந்தது. மாமா மகன் சஞ்சீவ் கான்வென்ட் ஸ்கூலுக்கும், மைதிலி கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கும் போய் வந்தார்கள். சஞ்சீவ் அவளை விட ஆறு வருடம் மூத்தவன். மாமா செய்த ஒரே புத்திசாலித்தனமான காரியம், மைதிலியை ஆறாம் வகுப்பில் இருந்து அரசு மாணவிகள் விடுதியில் கொண்டு சேர்த்தது தான். சஞ்சீவின் சேட்டைகள் தான் அதற்கு முக்கியமான காரணம். வீட்டில் இருந்தால், அத்தைக்கு இரண்டு வேலைக்காரி கிடைத்து இருப்பார்கள். கஷ்டம் வரும் போதெல்லாம் மைதிலிக்கு அழுகை வரும். கூடவே அப்பா மீது தான் கோபம் வரும்.
 
'இப்படி அனாதரவாக விட்டுட்டு போயிட்டாரே!'
 
சின்ன வயதில், மைதிலிக்கு தூக்கத்திலிருந்து திடீரென்று முழிப்பு வரும்போது, அம்மா தூங்காமல் அழுது கொண்டிருப்பதை பல நாட்கள் பார்த்திருக்கிறாள்.  
 
அம்மாவின் கண்ணீரை, மைதிலி தன் பிஞ்சு கரங்களால் துடைத்து, அழாதம்மா என்று ஆதரவாக சொன்னாலும், என்ன காரணமாக அழுகிறாள் என்று முதலில் புரியவில்லை. கொஞ்சம் வளர்ந்த பிறகு  பிரச்சனை என்னவென்று புரிந்தது. வழக்கமாக பவுடர் போடாமலேயே பளபளப்பாக இருந்த அம்மாவின் முகம், கூடிய சீக்கிரம் பளபளப்பை இழந்ததன் காரணமும் புரிந்தது.
 
அம்மா எல்லா கஷ்டங்களையும் தனக்காக தான் பொறுத்துக் கொண்டிருக்கிறாள்!
 
ஒரு நாள் ரூமுக்குள், ரொம்பவே தளர்ந்து போய் அவள் அழுது கொண்டிருந்தபோது, "அம்மா, நான் இருக்கேன். நான் என்ன செய்யணும் சொல்லுங்க. அழாதீங்க",  
 
மைதிலி சொன்னதும், ஜான்சிக்கு ஆறுதலாக, நம்பிக்கையாக இருந்தது.
 
என்ன செய்யணும் என்று ஜான்சிக்கு புரிந்தது.
வேலைக்கு அஞ்ச கூடாது என்று தீர்மானித்தாள். கமலி சொல்வதை செய்து கொண்டு, ஒரு மூலையில் முடங்கிக் கொள்ளலாம். எப்படியாவது மைதிலி ஸ்கூலுக்கு போய், படித்து, பாஸாகி பெரிய பதவியில் அமர்ந்ததும்... 
 
அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே,
 
"நாலே துணி தான் இருக்கு. பின்னால பக்கெட்ல வச்சிருக்கேன்... துவைச்சு போட்டுரு",  கமலினியின் குரல் கூடத்திலிருந்து கேட்க,
 
ஜான்சி எழும்பி, ஓடி சென்று, அவள் கைகாட்டிய இடத்தை பார்க்க ஒரு மாதத்திற்கு உண்டான அழுக்கு மலை குவிந்து கிடந்தது.
 
வேலைகள் ஓயப் போவதில்லை. மைதிலி தலை எடுக்கும் வரை நானும் ஓயக்கூடாது.
 
ஜான்சி முகத்தில் முடிவெடுத்த இறுக்கம்.
 
ஒரு முறை எட்டாம் வகுப்பு படிக்கும் போது, லீவ் சமயத்தில், மாமா வீட்டுக்கு மைதிலி அம்மாவிடம் ஒரு முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொள்வதற்காக வந்திருந்தாள். அவள் பெரிய பொண்ணு ஆனது தான் அந்த முக்கியமான விஷயம். அது நல்ல விஷயமா? கெட்ட விஷயமா? என்று கூட அவளுக்கு தெரியவில்லை. அவள் வைத்திருந்த பாவாடை சட்டைகள் ரொம்பவே இறுக்கமாகி போனது. வீட்டுக்கு போய் அம்மாவிடம் சொல்லி, இந்த முறையாவது புது சட்டை வாங்க வேண்டும் என்று நினைப்பில் வந்திருந்தாள்.
 
வீட்டு வாசலை நெருங்கிய போதே வீட்டுக்குள் அத்தையின் காட்டு கூச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டுக்குள் அவள் நுழைந்ததும், அத்தை கத்துவதை நிறுத்திவிட்டு முறைக்க ஆரம்பித்தாள். அம்மாவின் கன்னம் சிவந்திருந்தது. என்ன காரணம் என்று கேட்டபோது கீழே விழுந்து அடிபட்டு விட்டது என்று அம்மா சொன்னாலும், என்ன நடந்திருக்கும் என்று அவளால் ஓரளவுக்கு யூகிக்க முடிந்தது.
 
ஹாலில் அத்தையும், சஞ்சீவ்வும்  அவர்கள் இருவரையும் குறுகுறு என்று பார்த்துக் கொண்டிருக்க, மாமா தலை குனிந்தபடியே உட்கார்ந்து இருந்தார். அத்தை செய்யும் தவறை தட்டிக் கேட்க முடியாததால் ஏற்பட்ட தலை குனிவு.
 
தலை முடி கலைந்து நின்றிருந்த அம்மாவின் கையை ஆதரவாக பிடித்து, ரூமை நோக்கி கூட்டி சென்றாள். 
 
அம்மாவின் கன்னத்தில் கண்ணீரின் உப்பு கோடு தெரிந்தது. அவசரமாக முகத்தை முந்தானையால் துடைத்துக் கொண்டாள்.
 
மகள் முன்னால் அழுது, அவளை காயப்படுத்தி விடக் கூடாது என்பதால், வெடிக்க காத்திருக்கும் விம்மல்களை ஜான்சி உதட்டை மடித்து விழுங்கிக் கொண்டாள். 
 
ரூமுக்குள் நுழைந்து கதவை பூட்டியதும், அம்மாவை கட்டிப்பிடித்து மைதிலி அழ ஆரம்பிக்க... அதுவரை அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டிருந்த ஜான்சியும் அழுதாள்.
 
அம்மாவும் மகளும் கட்டிப்பிடித்து குலுங்கி குலுங்கி அழுதார்கள். ரொம்ப நேரம் அழுதார்கள்.
 
ஹாலில் மாமாவும் அத்தையும் காரசாரமாக பேசுவது கேட்டது. சமீப காலங்களில் ஏற்பட்ட ஆஸ்துமா தொந்தரவு காரணமாக, அம்மாவால் முந்தி மாதிரி ஓடியாடி வேலை செய்ய முடியவில்லை. அதுதான் அத்தையின் கோபத்துக்கு காரணம் என்பதை மைதிலி புரிந்து கொண்டாள்.
 
அம்மாவை கட்டிலில் உட்கார வைத்து,
 
"நான் தலை முடியை பின்னி விடுறேன்ம்மா..", என்றாள்.
 
"உனக்கு எதுக்குமா? நீ இப்பதான் வந்திருக்க. கொஞ்சம் ரெஸ்ட் எடு..."
 
அம்மாவின் கூந்தலை இரண்டு கைகளாலும் அள்ளி, 3 கால்களாகப் பிரித்து பின்ன ஆரம்பித்தாள்.
 
பின்னும் போது,
"மா... நான் ஒண்ணு சொன்னா கோச்சுக்க மாட்டியே", என்று மைதிலி கேட்க,
 
"சொல்லுமா?"
 
"நான் ஸ்கூலுக்கு போகலமா... ஏதாவது வேலைக்கு போறேன். நீ எதுக்கு அடியும் திட்டும் வாங்கணும். நாம வேற எங்கயாச்சும் போயிடலாம். இதுக்கு மேல  எவளும் உன் மேல கை வைக்கிறதுக்கு நான் விடமாட்டேன்..."
 
ஜான்சி திரும்பி செல்வ மகளை பார்த்து, பிரமித்தாள். மைதிலியை கட்டிப்பிடித்து முகமெங்கும் முத்தம் பதித்தாள்.
 
"வேண்டாம் கண்ணா. நான் எப்படியாவது சமாளிச்சுக்குவேன். இதெல்லாம் சின்ன சின்ன அவமானங்கள்... நான் தாங்கிக்குவேன்."
 
மைதிலி: இல்லம்மா... அடுத்தவங்களுக்கு நம்ம எதுக்கு கஷ்டம் கொடுக்கணும். எதுக்கு பேச்சு வாங்கணும்? நாம வேற எங்கேயாச்சும் போயி உழைச்சு சாப்பிடலாம். நிம்மதியா இருக்கலாம்.
 
ஜான்சிக்கு மகளைப் பார்க்க பெருமையாக இருந்தது.
 
ஒரு சில நிமிடங்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தவள், பேச ஆரம்பித்தாள்.
 
"இல்லம்மா... நான் சொல்றத கேளு. நாம ஒண்ணும் இவங்களுக்கு கஷ்டம் கொடுக்கல. தர்மத்துக்கு தங்கல. நான் அவங்களுக்கு வேலைக்காரியா உழைச்சு கொட்டுறேன். அதனால்தான்  சாப்பாடு போடுறாங்க.
இப்ப நீ வேலைக்கு போனா... என்ன பெருசா சம்பளம் கிடைச்சிரும். நம்ம வயித்து பொழப்பு வேணும்னா ஓடும். ஆனா நம்மளை கைவிட்ட, கேலி பேசின, இளக்காரமா நடத்துனவங்களுக்கு  பதில் சொல்ல முடியாது. பதில்ன்னா பழிவாங்கறதில்ல. நல்லது சொல்லிக் கொடுக்கணும். அதுக்கு நீ பெரிய ஆளா வரணும். அதுக்கு இதை பத்தில்லாம் கவலைப்படாம நல்லா படிக்கணும். பெரிய கம்பெனில பெரிய ஆபீஸர் ஆகணும்...."
 
"இல்லம்மா... நான் எதுக்கு சொல்றேன்னா..."
 
"நீ இன்னும் சின்ன பொண்ணு கிடையாது. பெரிய பொண்ணு தானே... நான் சொல்றதை கேட்டு தான் ஆகணும். அம்மா மேல சத்தியம்.."
 
எட்டாங்கிளாஸ் படிக்கும் மைதிலி, வாழ்க்கையில் பிரச்சனைகளை மட்டுமே அதிகம் பார்த்த மைதிலி, எங்கேயோ ஒரு அரசு மாணவிகள் விடுதியில் திடீரென்று ஏற்படும் அடிவயிற்று வலி என்னவென்று புரியாமல் முழித்த மைதிலி, உதவிக்கு யாருமே இல்லாத இடத்தில் அனாதையாக வயசுக்கு வந்த மைதிலி, யாரிடம் சொல்வதென்று தெரியாமல் தவித்த மைதிலி, 
 
"நீ பெரிய பொண்ணு தானே... நான் சொன்னது உனக்கு புரியலையா? அம்மா மேல சத்தியம் பண்ணு..." 
மைதிலி கையை பிடித்து அவளின் தலை மேல் அழுத்தி, அம்மா திரும்ப கேட்க,
 
அம்மாவின் முகத்தை தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்த மைதிலி,
 
"நான் பெரிய பொண்ணு ஆயிட்டேன்ம்மா... அம்மா மேல சத்தியம்....."
 
கண்களில் நீர் மல்க சொன்னாள்.
 
ஜான்சி திகைத்து போய் அவளை ஏறிட்டு,
 
"பெரிய பொண்ணா? வயசுக்கு வந்துட்டியா?"
 
மைதிலி ஆமாவென்று தலையாட்டினாள்.
 
"எவ்வளவு நாளாச்சு?", என்று ஜான்சி கேட்க,
 
மைதிலி தயக்கமாக:  நா..லு மா...சம்..
 
மகளைப் பரிதாபமாக பார்த்து ஜான்சி: நாள், நேரம்ல்லாம் ஞாபகம் இருக்கா?, என்று கேட்க,
 
மைதிலி சொன்னாள்.
 
ஜான்சி வெடித்து அழுதபடி:  ஐயோ!!! என் புள்ளைக்கு பக்கத்திலிருந்து மஞ்சத்தண்ணி கூட ஊத்த முடியாம போச்சே! ஆளுக்கொரு பக்கமா பிரிஞ்சு கிடக்குறோமே!!! நான் என்ன பண்ணுவேன்?
 
ஜான்சி அவளை இழுத்து அணைத்துக் கொண்டாள்.
 
இந்த முறை மைதிலி அழவில்லை.
 
பெரிய மனுஷத்தனமாக அம்மா முதுகில் தட்டி கொடுத்து,
 
"உங்க மேல சத்தியம். உங்க விருப்பப்படியே, பெரிய ஆபிஸராகி உங்களை சந்தோஷமா வச்சுக்குவேன்... கேலி பேசினவங்களுக்கும், இளக்காரமா நடத்துனவங்களுக்கும் தகுந்த பதில் சொல்லுவேன்", என்று அவள் சொன்ன அந்த நொடியில் தான்,
 
அவள் உண்மையிலேயே பெரிய பெண்ணானது.....
 
தொடரும்
 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 12 months ago
Posts: 144
Topic starter  
ஜானகி மந்திரம் 4
 
"ஏய் என்னடி நான் சொல்றது கேக்குதா இல்லையா?"
 
தான்வி கத்தியதும், மைதிலி திடுக்கென்று சுதாரித்தாள். 
 
திஷா: இவளுக்கு எப்ப பாரு படுத்துட்டு கனவு காண்றது, நின்னுட்டு கனவு காண்றது, கனவிலேயே வாழ்க்கையை ஒட்டிருவா போலிருக்கே...
 
அம்மாவிடம் சொன்ன வாக்குறுதி மைதிலிக்கு நியாபகத்துக்கு வந்ததும், அவள் நெஞ்சு பல கிலோக்கள் எடை கூடியிருந்தது.
 
தான்வி மைதிலியை பார்த்து. "மகிமா ரூமை கொஞ்சம் கிளீன் பண்ணிரு.. நேத்து நைட்டே சொன்னா.. நான் மறந்துட்டேன். அவ பிராக்டிஸ் முடிஞ்சு வர்றதுக்குள்ள கொஞ்சம் பண்ணிரு. ப்ளீஸ்..."
 
லேடிஸ் ஹாஸ்டலில் ரூம்களை ஆயாக்கள் வாரத்துக்கு ஒரு முறை தான் சுத்தம் பண்ணுவார்கள்.  ரூம்களில் கேர்ள்ஸ் செய்யும் தப்பு தண்டாக்கள் வெளியே தெரிந்துவிடும் என்பதால், பல ரூம்களில் ஆயாக்களை உள்ளே விடுவதே இல்லை. 
 
மைதிலி தயங்கியபடி: காலேஜுக்கு கிளம்பனும் ஆல்ரெடி லேட் ஆயிருச்சு . ஈவினிங் வந்து பண்றேனே... என்றாள்.
 
திஷாவும் தான்வியும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.
 
பின்னர், 
 
தான்வி: நாங்க மட்டும் என்ன மாடு மேய்க்கவா போறோம்? காலேஜுக்கு தான் கிளம்பனும். பத்து நிமிஷ வேலை தானே முடிச்சிரு. நீதான சொன்ன, எல்லார்கூடயும் பழகணும், பிரண்ட்ஷிப் ஆகணும்னு... இந்த மாதிரி சின்ன சின்ன ஹெல்ப் பண்ணா தான்.. எல்லாரும் உன் கூட சீக்கிரமா ஜெல்லாவாங்க... 
 
திஷா: உனக்கு புடிக்கலைன்னா விட்டுட்டு பரவால்ல..We don't want to compel  you.
 
மைதிலி: சே! சே! அப்படில்லாம் எதுவும் இல்லை?  ஏதாவது ஒரு வகையிலயாவது உங்களுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்க முடியுதேன்னு எனக்கு சந்தோஷம் தான்.
 
மைதிலி டிரான்ஸ்பர் ஸ்டுடென்ட் என்பதால், காலேஜுக்கும் ஹாஸ்டலுக்கும் புதுசு. அதுவும் மூன்றாவது வருடத்தில் தான் வந்து சேர்ந்ததால், யாரும் அவளுக்கு பழக்கமில்லை.  மேலும் ஹாஸ்டலில் எல்லாம் பெரிய இடத்து பிள்ளைகளாக இருப்பதால், அவர்களுக்கு முதுகு வளையாது. அதனால் துணி துவைத்து கொடுப்பது, அயன் பண்ணி தருவது, ரூமை சுத்தப்படுத்துவது போன்ற எடுபுடி வேலைகளை செய்கிறாள். அதை அட்வான்டேஜ் எடுக்கும் விதமாக, அவளை நன்றாக பயன்படுத்தி எக்கச்சக்க வேலை வாங்கி கொள்கிறார்கள்.  அவர்கள் பயன்படுத்துவது மட்டுமில்லாமல், வேறு ஒரு சில சீனியர்களுக்கும் அவளை வேலை செய்ய சொல்லி உபயோகப்படுத்திக் கொண்டார்கள்.
 
நட்புக்கு தானே செய்கிறோம் என்று நினைத்ததால் மைதிலிக்கு அதில் பெரிய கஷ்டமில்லை. அது மட்டுமில்லாமல்,  வேலைகள் அவளுக்கு பழக்கம் தான் என்பதால், அவள் குறை சொல்வதில்லை.
 
உன்ன வேலை வாங்குறதுக்காக செய்றாங்கன்னு தெரிஞ்சும், ஏன் செய்யணும் என்று நீங்கள் அவளிடம் கேட்டால் அவள் சொல்லும் பதில்.
 
"பரவாயில்லை, பெரிய இடத்துப் பசங்களுக்கு வேலை செஞ்சு பழக்கம் இருக்காது. நாம செஞ்சு கொடுத்தா அவங்க கிட்ட ஈசியா நட்பாகிற முடியும்.  என் அம்மா ஆசையை நிறைவேற்றனும்... அதுதான் முக்கியம்.. அம்மா எனக்காக அங்க அழுக்கு துணி துவைச்சு போட்டுட்டு இருக்கா... அவளுக்காக நான் இங்க கஷ்டப்படுறது ஒண்ணும் எனக்கு பெரிய விஷயமில்லை..."
 
இப்படித்தான் அவளிடமிருந்து  பதில் வரும். அதுக்கப்புறம் நம்மால் என்ன சொல்ல முடியும்?
 
மைதிலி சரி என்று தலையாட்டியபடி, ரூமை விட்டு வெளியே சென்று, பக்கத்தில் இருந்த மகிமா ரூமை நோக்கி நடந்தாள்.
 
அவள் சென்றதும்,
 
தான்வி:  ஜூனியர் எவளையாச்சும் ஒரு நாள் வேலை வாங்கலாம், ரெண்டு நாள் வேலை வாங்கலாம்... தொடர்ந்து வேலை வாங்குனா ராக்கிங்ன்னு ஏதாவது பிரச்சனையாயிடும். இந்த காலா கவ்வாவை வச்சு தான் ஓட்டணும். வேற வழியே இல்லை
 
Kaala kavva= அண்டங்காக்கை
 
திஷா: அவளுக்கு கலர் மட்டும்தான் கொறச்சல். மத்தபடி நல்ல பாடி ஷேப்.  சீக்கிரம் தெளிஞ்சாலும் தெளிஞ்சுருவா.
 
தான்வி: அதெல்லாம் தெளிய வாய்ப்பே இல்லை. அவ ரேஞ்சுக்கு இந்த காலேஜ் ரொம்ப ரொம்ப ஜாஸ்தின்னு அவளுக்கு தெரியும். அவளுக்கே அந்த காம்ப்ளக்ஸ் இருக்கு. அவளை நம்ம ரூம்ல போட்டப்பவே நான் வேண்டான்னு சொல்லாததுக்கு காரணம். நமக்கு ஒரு வேலைக்காரி கிடைச்சிருச்சேன்னு  தான்.... நம்ம கூட பிரண்ட்ஷிப் கிடைக்கனும்னா சும்மாவா? 
 
திஷா: அதுவும் கரெக்ட் தான். நமக்கு ஒரு அடிமை பெர்மனன்டா இருக்கிறது நல்லது தானே.
 
தான்வி: படே படே தேஷோமே  சோட்டி சோட்டி பாத்தே தோ ஹோத்தி ரகதி ஹை.
 
(ஷாருக்கான் நடித்த இந்தி படத்தின் டயலாக்...
அதற்கு அர்த்தம், பெரிய பெரிய இடங்களில், இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்கள் நடக்கத்தான் செய்யும்)
 
இருவரும் வெடித்து சிரிக்கிறார்கள்.
 
திஷா: சரி சீக்கிரம் ரெடியாகு... எம்ஆர்எப் ரேஸ் முடிஞ்சு  மனோ இன்னைக்கு தான் காலேஜுக்கு வரான்... விஷ் பண்ணனும்.
 
தொடப்பத்தை மறந்து வைத்துவிட்டு சென்றதால், திரும்பி எடுக்க வந்த மைதிலி அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டதும் வெளியே, கதவருகியிலேயே நின்றிருந்தாள்.
 
கேட்க கேட்க கண்களில் நீர் முட்டியது. 
 
காலா கவ்வா, வேலைக்காரி, அடிமை.....
 
போன்ற பெயரடைகள் சுருக் சுருக்கென்று ஊசியாய் குத்தியது.
 
பணமும் அழகும் தான் ஒரு மனிதனை அளக்கும் அளவுகோல்களா? மனசை யாரும் பார்க்க மாட்டார்களா?
 
சே! என்ன உலகம் இது? 
 
ரோபோ போல் திரும்பி, மகிமா ரூமை நோக்கி தளர்ந்து போய் நடக்க ஆரம்பித்தாள். 
 
சிறுவயதில் இருந்தே அவளின் கலர் கான்சன்ட்ரேஷனை பற்றிய கமெண்ட்கள் அவள் காதில் விழுந்திருக்கிறது. வண்ணங்களின் பொலிவுகளில்
வசிய பட்டிருப்பவர்களுக்கு 
அவள் கருமையின் மினுமினுப்பு
புரியப்போவதில்லை. அதற்காக அவர்கள் சொல்வது மாதிரி அண்டங்காக்கை கருப்பு அவள் கிடையாது. மாநிறம் தான். மேனி எழிலை பராமரிக்காததால், கொஞ்சம் Tan ஆகி தெரிகிறாள்.
 
மைதிலி மனதில் நிறைய கேள்விகள்.
 
நீ அழகியா? இல்லை.
வசதியான குடும்பமா? இல்லை.
பேங்க் பேலன்ஸ் இருக்கிறதா? இல்லை
அதிர்ஷ்டம் இருக்கா? இல்லை
திறமைசாலியா? இல்லை.
 
என்கிட்ட வேற என்ன இருக்கு?
 
நம்பிக்கை இருக்கிறதா? இருக்கு.
உழைப்பு இருக்கிறதா? இருக்கு.
 
அப்புறம் என்னடி?
 
இவர்கள் சொல்வதற்கெல்லாம் நீ எதற்கு அழ வேண்டும்?  கண்ணீரை துடைத்துக் கொள். எதற்காகவும் நீ அழக்கூடாது. என்ன வேண்டுமானாலும் சொல்லிட்டு போகட்டும். நான் ரியாக்ட் பண்ண மாட்டேன்.
 
அவர்கள் சொன்ன வேலையை செய்வதற்காக, மகிமா ரூமை நோக்கி நடையை தொடர்ந்தாள்.
 
அதே நேரம், 
 
மூன்று மாடிகள் கொண்ட பில்டிங்குகள் முக்கோண வடிவில் இணைந்தது போலிருக்கும் அந்த லேடிஸ் ஹாஸ்டலின் மூன்றாவது மாடியில், வேறொரு ரூம்.
 
அந்த ரூம் கதவுக்கு வெளியே  வராண்டாவில், 
 
சலோனியும் பிரணவியும் பேசிக் கொண்டிருந்தார்கள். இருவருமே ஜீன்ஸ் அணிந்திருந்தார்கள். Monday அவர்கள் குரூப்பில் ஜீன்ஸ் must... மேலும் ஒரு சில dress codes உண்டு. அவற்றை மிஸ் செய்தால், டாப்லெஸ்ஸாக இரவு முழுவதும் ரூமில் இருக்கும் தண்டனை அளிக்கப்படும். எல்லாம் DSG ரூல்ஸ்.
 
அது என்ன DSG?
 
Diva squad girls.
 
பிரணவியும் சலோனியும்... மேக்கப் சமாச்சாரங்களால் அழகாக தெரியும் அழகிகள் என்பதோடு வர்ணனை, முற்றும்.
 
சலோனி, "SRK டைம் ஆயிட்டுருக்கு", சத்தமாக கத்தினாள்.
 
ரூமுக்குள்ளே இருந்து "Yeah coming" என்று பதில் வந்தது.
 
ஸ்ரேயா ரத்தன்குமார் தான் அந்த SRK. அந்த காலேஜிலேயே நிச்சயமாக டாப் 3 பணக்காரிகளில் அவளும் ஒருத்தி. காலேஜ் ஸ்டுடென்ட் கமிட்டி மெம்பர், லேடிஸ் ஹாஸ்டல் செக்ரட்டரி, மெஸ் கமிட்டி ஹெட் என மனோவுக்கு பிறகு அந்த காலேஜில் செல்வாக்கான நபர். ஸ்ரேயாவின் குடும்ப நிறுவனமான ரத்தன் கோல்ட் ஹவுஸ்க்கு இந்தியா பூராவும் எக்கச்சக்கமான கிளைகள் உண்டு. செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை.
 
ஹாஸ்டலில் தெரிந்த நூற்றுக்கணக்கான ஜன்னல்கள் சிலது மூடி இருந்தன. சிலது திறந்திருந்தது. திறந்திருந்த ஜன்னல்களில் எல்லாம் காலேஜுக்கு கிளம்பும் அவசரம் தெரிந்தது. டிரஸ் மாற்றிக்கொண்டு, உதடுகளுக்கு பெயிண்ட் அடித்துக் கொண்டு, தலை முடியில் ஹேர் டிரையர் யூஸ் பண்ணி கொண்டு, மேக்கப் செய்து கொண்டு தெரிந்தார்கள்.
 
எதிர் பில்டிங் மூன்றாவது மாடி வரன்டாவில் இரண்டு பெண்கள் டெனிம் ஷார்ட்ஸ் அணிந்து, ஏதோ பேஷன் ஷோக்காக வாக்கிங் பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தார்கள். அவர்களும் DSG தான். இன்றைக்கு அவர்கள் காலேஜுக்கு மட்டம் என்று தெரிந்தது. 
திரும்பவும் DSG யா? Wait, அதுக்குத்தானே வரேன்.
 
மேலும் ஒரு சில கேர்ள்ஸ் குளித்து முடித்த கையோடு,  அரைகுறையாக அவசர அவசரமாக சென்று கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் போனில் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள். மற்ற வராண்டாக்களில் மாணவிகள் காலேஜ் கிளம்பி சென்று கொண்டிருப்பது தெரிந்தது.
 
பிரணவி: என்னடி இன்னும் லேட் பண்றா, டைம் ஆயிடுச்சு?
 
ஸ்ரேயா ரூம் கதவை தட்டுவதற்காக சலோனி செல்ல,
 
ரூம் கதவு திறக்கப்பட்டது. ஸ்ரேயா வெளிப்பட்டாள்.  புறாக்கள் விம்ம அவர்களை பார்த்தாள். கூடவே தூக்கலான ஏதோ ஒரு பெர்ஃப்யூம் மணம்.
 
பிரணவியும் சலோனியும் ஒரே நேரத்தில், "வாவ்" என்றார்கள்.
 
ஸ்ரேயாவிடம் இளமை மற்றும் கவர்ச்சியின் ஜுவாலைகள். கேஷுவல் ரவுண்டு நெக் டாப்பும், ஜீன்ஸும் அணிந்திருந்தாள். அவள் கண்ணசைத்தால் லட்சம் பேர் கைகட்டி சேவகம் செய்ய தயாராக இருப்பார்கள் போல... அந்தளவுக்கு அழகு. அவள் அலட்சியம் கூந்தலில் இருந்தே ஆரம்பித்தது. நெற்றியோர முடிக்கற்றைகள் கார் வைப்பர்கள் போல் நெற்றியில் அசைந்து கொண்டிருந்தன. மற்றபடி கண், மூக்கு, உதடு, மார்பு, இடுப்புக்கு... உங்களுக்கு மிகவும் பிடித்தமான உவமைகளை சொல்லிக் கொள்ளுங்கள். அது நிச்சயமாக அவளுக்கு பொருந்தும். மிகவும் அழகாக இருக்கிறாள் என்று விளக்குவதற்கு, பிரம்மதேவன் ஓவர் டைம் வேலை செய்தார் என்று எழுதும் எழுத்தாளர் சங்க விதிக்கேற்ப, அவள் விஷயத்தில் பிரம்மதேவன் ஓவர் டைம் தான் வேலை செய்திருக்கிறார்.
 
இருவரையும் பார்த்த ஸ்ரேயா "Dont say looking hot. Thats usual.. say something vague. I'm bored of direct lines...", என்றாள்.
 
ஒரு சில நொடிகள் யோசித்த Saloni:  “There’s something about you. Colors seem brighter when you're around."
 
ஸ்ரேயா சிரித்தபடி,
"Nice try dude", என்றாள்.
 
ஸ்ரேயா அப்பாவுக்கு சொந்தமாக கண்டாலாவில் கெஸ்ட் ஹவுஸ் ஒன்று இருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவள் தந்தை ஹாஸ்டலில் தான் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். வேறு வழியில்லாமல் இருக்கிறாள். ஆனால் அப்பாவின் செல்வாக்கை பயன்படுத்தி, அவர்கள் புளோரை மொத்தமாக ஸ்ரேயா வாடகைக்கு எடுத்திருந்தாள். காலேஜ் பில்டிங்கை விலைக்கு வாங்க முடியாது என்பதால் தான், வாடகை. அந்த ஃப்ளோரில் இருக்கும் மூன்று ரூம்களில், அவளும் பிரணவியும் சலோனியும்  தங்கியிருக்க, மற்ற ஏழு ரூம்களும் காலியாக தான் இருந்தது. அந்த ஃப்ளோர் பக்கமே அவர்கள் மூவரையும்,  கிளீன் பண்ணும் இரண்டு ஆயாக்களை தவிர, வேறு யாரும் வர மாட்டார்கள். "No entry" போர்டு வைக்காதது மட்டும்தான் குறை.
 
சரி DSG க்கு வருவோம். "Diva squad" என்ற ஸ்ரேயா தலைமையில் இயங்கும் இந்த குரூப்பில் எல்லோரையும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். செலக்ட்டிவ்வாக காலேஜின் உயர் சமூக பெண்கள் மட்டும்தான் சேர்க்கப்படுவார்கள். 
 
அவர்கள் குரூப்பின் மோட்டோ.
 
"Good girls go to heaven, bad girls go everywhere."
 
பாரதி கண்ட புதுமைப் பெண்கள் என்று சொன்னால் பாரதியாரை அவமானப்படுத்திய மாதிரி...
 
DSG என்றால், அமெரிக்கன் காலேஜ்களில் இருக்கும்  fraternities/sororities குரூப் மாதிரி. இன்னும் புரியிற மாதிரி சொல்ல வேண்டும் என்றால்,
லேடிஸ் கிளப் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். DSG குரூப்பின் முக்கிய குறிக்கோள்கள், காலேஜ் மற்றும் ஹாஸ்டலில் குரூப் மெம்பர்கள் சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுப்பது,
கெஸ்ட் ஹவுஸில் நைட் பார்ட்டிஸ், movie nights, spa days, slumber party events and agenda முடிவு செய்வது, bowling in mall, drive-by birthday celebration for squad sisters, எந்த நாளுக்கு என்ன dress code, boyfriend சர்ச்சைகளை தீர்த்து வைப்பது, போன்ற அதி முக்கியமான விஷயங்கள் அவர்கள் குரூப்பில் முடிவெடுப்பார்கள். காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் வெப்சைட்டில், msn messenger மற்றும் yahoo chatடில், அவர்களுக்கென்று தனி chat room கூட உண்டு.
 
DSG குரூப்பின் ஸ்பெஷாலிட்டியே Squad krush party தான்.  chat ரூமில் மெம்பர்கள் ஏற்கனவே பேசி முடிவெடுத்த தினத்தில், ஸ்ரேயாவின் கெஸ்ட் ஹவுஸில் krush party நடக்கும். ஸ்குவாட் மெம்பர்களால் முன்கூட்டியே , அங்கீகரிக்கப்பட்ட தகுதியான பாய் ஃப்ரெண்ட் மெட்டீரியல் boys மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். கிட்டத்தட்ட டேட்டிங் மாதிரி.  இந்த casual cocktail பார்ட்டியில், ஸ்குவாட் மெம்பர்கள், அவர்களின் பாய் பிரண்டுகள், பாய் பிரண்டாக விருப்பப்படுபவர்கள் கலந்து கொள்வார்கள். பாட்டு, ஆட்டம் மற்றும்  சுத்தமான பிளாஸ்டிக் கோப்பைகளில் ஆல்கஹால் ஐட்டங்கள் என இரவு முழுவதும் கூத்து நடக்கும். DSG மெம்பர் கூட்டி வந்த crush வொர்க் அவுட் ஆனாலும், ஸ்குவாட் ஹெட் ஸ்ரேயாவிடம் பெர்மிஷன் வாங்கினால் தான் அடுத்த ஸ்டெப்புக்கே போக முடியும். இல்லையென்றால் முத்தத்தோடு அன்றிரவே முடிந்து விடும். Good times for all squad sisters. எல்லாமே secret. 
 
The Krush party or alcohol news if gets broken out, we are “officially” not squadsisters. இதுதான் party rule.
 
ஸ்ரேயாவின் சாம்ராஜ்யத்துக்கு ஆபத்து ஏற்பட்டால், பார்ட்டிக்கு வரும் பசங்க ஓவரா நடந்தால், பேச்சுவார்த்தைகளில் சரி செய்ய முடியாத பிரச்சினை என்றால், விஷயத்தை பாண்டியாவிடம் சொல்வாள்.  பாண்டியாவுக்கு பக்கத்தில் இருக்கும் லோனாவாலா தான் ஜாகை. பாண்டியா, ஸ்ரேயாவின் கரன்சிக்காக வாலாட்டுபவன். சிறுவயதில் இருந்தே நிழல் மனிதர்களால் வளர்க்கப்பட்டவன். சட்டத்திற்கு புறமான தொழில் எதுவென்றாலும் சமர்த்தாக செய்பவன். அவனுடைய கைத்தடிகள் நாலஞ்சு பேருடன் புல்லட்டில் வந்து இறங்கி, ஸ்ரேயா சொன்ன வேலையை செய்து முடித்து விட்டு கிளம்புவான்.
 
DSG குரூப்புக்கு ஒரு சில விசித்திரமான ரூல்ஸ் உண்டு. கதையின் போக்கில், தேவைப்படுமானால் தெரிந்து கொள்வீர்கள்.
 
ஸ்ரேயாவை பற்றி சுருக்கமாக சொல்வதென்றால், 
 
அவள் காலேஜ் வந்த முதல் மாதத்திலேயே, காலேஜ் கம்ப்யூட்டர் ரூமில் அவளிடம் flirt செய்ய வந்த இளைஞனிடம் அவள் சொன்ன பதில்,
 
"My eyeliner is too expensive to waste over stupid boys like you...get lost"
 
இதிலிருந்தே அவளைப் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும்.
 
"Ok girls, Mano is coming today. அவனை வெல்கம் பண்ண போகணும். Come on lets go...",
என்று ஸ்ரேயா சொன்னதும், மூவரும் கிளம்பினார்கள்.
 
ஸ்ரேயா, 'No shaking', ரூல்ஸ் பிரகாரம், உடல் ஓவராக குலுங்காமல் நடுவில் நடக்க, அவளுக்கு இரு பக்கமும் பிரணவியும் சலோனியும் வந்தார்கள். 
 
மூன்றாவது ப்ளோரிலிருந்து இரண்டாவது ப்ளோருக்கு இறங்கியதும், மெடிக்கல் காலேஜ் டீனுக்கு இருபுறமும் வரும் பயிற்சி டாக்டர்கள் போல், பிரணவியும் சலோனியும் வந்தபடி, 
 
எதிரே வரும் ஹாஸ்டல் பெண்களை "move" என்று அதட்டி கொண்டே நடந்தார்கள்.
 
தவறுதலாக எதிரே வந்த ஹாஸ்டல் பெண்கள், பதட்டமாக ஒதுங்கி வழிவிட்டார்கள்.
 
மாட்டேன்,
நான் எதற்கு நகர வேண்டும்? அது நானல்ல..
ஏமாற்றுகிறது கண்ணாடி.
என்னை எங்கோ ஒளித்து வைத்துவிட்டு, வேறு யாரையோ காட்டுகிறது.
 
மகிமா ரூம் சுவரில் மாட்டப்பட்டிருந்த பெரிய கண்ணாடியில், தன் முகத்தை பார்த்துக் கொண்டிருந்த மைதிலிக்கு தான் மேற்படி ஏமாற்றம். அவள் ரூமை பெருக்கி முடித்துவிட்டு,  கண்ணாடியை பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
கருப்பாக ஒரு முகம் தான் கண்ணாடியில் தெரிந்தது. அவளுக்கு நிறமழுக்கம் தானே தவிர அவலட்சணம் என்று சொல்லிட முடியாது.
 
கண்ணாடி பிம்பம் மௌனமாக அவளைப் பார்த்துக் கொண்டிருக்க, "அது நான் இல்லை", மைதிலி தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள். கண்ணாடிகள் இருக்கும்  அறைகள்
அவளைப் பொருத்தமட்டில் இறுக்கமானது. 
 
எட்டிப் பார்க்கையிலெல்லாம், கண்ணாடிகள்
அவள் உயிருடன் இருப்பதை மட்டும்தான்
உறுதி செய்கின்றன.
 
கடந்த பின்போ, எக்ஸாம் ஹாலில் பரிட்சை பேப்பரை வைத்துக் கொண்டு முழிக்கும் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டூடண்ட் போல,
பிம்பங்களை உதிர்த்து
ஏதுமறியாமல் நிற்கின்றன.
 
இல்லை! இது நான் இல்லை.
 
எனக்கிருக்கும் சின்னஞ்சிறு சிறகுகள் எங்கே?
சிறகடித்து வானம் தொட்டு வரும், வழக்கம் எனக்குண்டு.
 
என் சிறகுகளை இந்த கண்ணாடி காட்டவில்லை!
 
பல்வேறு வண்ணங்கள் எனக்குண்டு.
அன்பை இழைத்து, அழுகையில் ஊறி, அவமதிப்பில் நனைந்து, அறிவில் தெளிவாகும்,
வானவில் வண்ணங்கள்.. 
 
அது எதுவுமே தெரியவில்லையே?
 
கறுப்பு வெள்ளையாய் தானே காட்டுகிறது
கண்ணாடி...
 
பரிகாச பேச்சு பட்டு,
மனசு கிழிந்த
காயங்கள் எனக்குண்டு. தழும்புகளை காட்டாமல்
எதையோ காட்டி
நிற்கிறது...
 
நிஜத்தைக் காட்டும் கண்ணாடி இல்லை இது!
 
வயலட் நிற சுடிதாரும், அதே நிற துப்பட்டாவும் ஹேர் கிளிப்பில் அடக்கிய தலைமுடியும், வெள்ளரி விதை போல சிறிய பொட்டுமாக ரொம்ப சாதாரணமாக இருந்தாள் மைதிலி.
 
"ரூமை கிளீன் பண்ண சொன்னா, கண்ணாடியில் உன் அழகை ரசிச்சிட்டு நிக்கிறீங்களா மேடம்",
கிண்டலாக வாசல் பக்கம் சத்தம் கேட்க, திடுக்கிட்டு மைதிலி திரும்பி பார்த்தாள்.
 
டென்னிஸ் ராக்கெட்டுடன் குட்டை பாவாடையில் மகிமா உள்ளே நுழைய, 
 
மைதிலி சுதாரித்து,
"இல்ல, ரூம் கிளீன் பண்ணிட்டேன். கண்ணாடியை துடைக்கலாமான்னு பாத்துட்டு இருந்தேன்.."
 
மகிமா: oh okkk... தேங்க் யூ
 
மைதிலி: சரி அப்ப நான் கிளம்புறேன். லேட்டாயிடுச்சு...
 
சொல்லிவிட்டு, அவள் பதிலை எதிர்பார்க்காமல், ரூமை விட்டு வெளியே வேகமாகச் சென்று, அவள் ரூமை நோக்கி ஓடினாள்.
 
சுற்றிலும் ஹாஸ்டலில் மாணவிகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.
 
சற்றும் எதிர்பாராத ஒரு தருணத்தில்,
 
படிக்கட்டில் இருந்து ஸ்ரேயா முதலில் ஃபர்ஸ்ட் ப்ளோரில் இறங்க, சலோனி மற்றும் பிரணவி அவளுக்கு பின்னால் வந்தார்கள்.   
 
தட்... ஸ்ரேயா மேல் மைதிலி மோதினாள்.
 
செமத்தியான மோதல்.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 12 months ago
Posts: 144
Topic starter  
ஜானகி மந்திரம் 5
 
Head on collision. நேருக்கு நேரான மோதல்.
 
மோதிய வேகத்தில், ஸ்ரேயா பேலன்ஸ் இல்லாமல் பின்பக்கமாக விழ, பிரணவியும் சலோனியும் பதறிப் போய் அவளை தாங்கிப் பிடித்தார்கள். கீழே விழப்போன மைதிலியோ வராண்டா சுவரை பிடித்து ஸ்டெடியாகிக் கொண்டாள்.
 
திட்டி தீர்த்து விட வேண்டும் என்று தலையுயர்த்திய மூவரையும் பார்த்து,
 
மைதிலி: மன்னிச்சுக்கங்க. காலேஜுக்கு போற அவசரத்துல வந்து மோதிட்டேன். Really sorry...
என்று சொல்லியபடியே எதார்த்தமாக ஸ்ரேயாவின் கைகளை பிடித்தாள்.
 
அவள் உடையையும், நிறத்தையும், பார்த்ததுமே லோ கிளாஸ் என்று ஸ்ரேயா அனுமானித்தாள். அவள் முகத்தில் அருவருப்பு பூரான் ஒன்று ஓடி மறைந்தது. கரண்ட் ஷாக் அடித்தது போல் ஸ்ரேயா கைகளை உதறி, தட்டி விட்டாள். 
மைதிலி மறுபடியும், "சாரி சிஸ்டர்", என்றதும்,
 
சுட்டு பொசுக்குவதை போல் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரேயாவின் முகத்தைப் பார்த்த சலோனி, அவளுடைய மவுத் பீஸாக அவள் சார்பில் கேள்வி கேட்டாள்.
 
"யாருடி நீ? இதுக்கு முன்னால இங்க பார்த்ததே இல்லை.. ஃபர்ஸ்ட் இயரா? எந்த டிபார்ட்மெண்ட்?...."
 
மைதிலி பதட்டமாக, "ட்ரான்ஸ்ஃபர் ஸ்டுடெண்டா வந்திருக்கேன்... பி காம் பைனல் இயர்..."
 
ஜூனியர் மாணவியாக இருந்திருந்தால் இந்நேரம் நடந்திருப்பதே வேறு.
 
பிரணவி: oh yeah.... ஏதோ ஒரு காலேஜ் கிளோஸ் பண்ணிட்டதால அங்கிருந்து அஞ்சாறு பேரு ஸ்பான்சர் ஷிப்ல வந்திருக்காங்களே, அந்த குரூப்பா?
 
மைதிலி பரிதாபமாக ஆமாவென்று தலையசைத்தாள்.
 
ஸ்பான்சர் ஸ்டுடென்ட் என்றதுமே, கஞ்சிக்கு வழி இல்லாத பேமிலி என்று மூவருக்கும் புரிந்து போனது.
 
நாய் தூக்கி கொண்டு போட்ட வஸ்துவை போல், மூவரும் மைதிலியை பார்த்தார்கள். 
சலோனி: பார்த்து வர தெரியாதா? எருமை மாடு மாதிரி வந்து மோதுவியா?
 
மறுபடியும் மன்னிப்பு கேட்டு விட்டு, அவசரமாக அங்கிருந்து நகர்ந்தாள்.
 
வாட்சைப் பார்த்த சலோனி,
 
"இவ கூடல்லாம் இவ்ளோ நேரம் நின்னு பேசுறதே நம்ம ஸ்டேட்டஸுக்கு நம்ம  சரியில்ல. டைம் ஆச்சு. போலாம்.."
 
மூவரும் கிளம்பினார்கள்.
 
எழுத்தாளர் ஐயா, கதை மாந்தர்கள் எல்லாத்தையும் அறிமுகம் பண்ணிட்டீங்க... ஆனா எங்கள பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லலையே ! 
 
ஆமால்ல, எப்படி மறந்தேன்?
 
காலேஜும் கண்டாலாவும் கண்ணீர் வடிக்கும் முன் அவற்றையும் தெரிஞ்சுக்குவோம். SSG காலேஜ், கண்டாலா 
மலைவாசஸ்தலத்தில் கால் பகுதியில் அமைந்திருந்ததால், மேற்கு தொடர்ச்சி மலை அதற்கு அழகான பின்னணியையும் சீதோஷ்ண நிலைமையும் அமைத்துக் கொடுத்திருந்தது.
கண்டாலா மற்றும் லோனாவாலா ஆறு கிலோ மீட்டர் இடைவெளியில் இருக்கும், ஏற்காடு மாதிரி மலை வாசஸ்தலங்கள். Twin hill stations.  சுற்றிலும் மலை குன்றுகள் வெள்ளை குல்லா போட்டுருப்பது போல் மேகங்கள் சூழ்ந்திருக்க... பள்ளத்தாக்கில் எல்லாம் பச்சை நிற காலிபிளவர்களின் சிதறல்.
 
கண்டாலா/ லோனாவாலா மலையின் கால் பகுதியில் பல ஏக்கர் நிலப்பரப்பை விழுங்கி நிர்மாணிக்கப்பட்டிருந்தது SSG  காலேஜ். காலேஜ் கட்டிடங்களுக்கு பின்னணி மலையில் பஞ்சு மேகங்கள் இலக்கில்லாமல் அலைந்து கொண்டிருந்தன.
 
ஸ்வஸ்திக் வடிவில் நான்கு பில்டிங்குகள் ஒன்றாக இணைத்தது போல் சகல சவுகபாக்கியங்களுடன், இயக்குனர் ஷங்கர் ரேஞ்சுக்கு ஹை பட்ஜெட்டில் திட்டமிட்டு எவனோ ஒரு கட்டிடக்கலைஞன் வடிவமைத்து இருந்தான். காலேஜுக்குள் முதன்முதலாக நுழைபவர்கள் ஏதோ ஊட்டி பொட்டானிக்கல் கார்டனுக்குள் நுழைந்து விட்டது போல் ஒரு உணர்வு ஏற்படும். பணக்காரர்களுக்கு என்று இருக்கும் ரெசிடென்சியல் ஸ்கூல் போல் எல்லா வசதிகளுடன் இருந்தது.
 
பார்ப்பதற்கு அழகாக, கம்பீரமாக, பளபளப்பாக, எளிமையாக என பல்வேறு விதமான கட்டிடங்கள் இருக்கின்றன. எல்லா கட்டிடங்களின் மூலக்கூறும் செங்கல், சிமெண்ட், பெயிண்ட் தான் என்றாலும், ஈர்க்கும் தன்மையில் வேறுபடுகின்றன. ஆனால் SSG காலேஜ் கட்டிடங்கள் ஏனோ பார்ப்பதற்கு பணக்காரத்தனமாகவும், எளிமையாகவும் ஒரு சேர மைதிலிக்கு தெரிந்தது. 
 
பார்க்கும் பார்வையில் தான் எல்லாமே இருக்கிறது. ரெண்டு ஆளுயர  மெயின் கேட் மூடப்பட்டு விட்ட சூழ்நிலையில், வெளி உலகத்தில் இருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, ஒரு மாபெரும் சிறை கூடமாக வேறு மாணவர்களுக்கு தெரியலாம். 
 
நகர அவசரங்களில் இருந்தும், சந்தடிகளில் இருந்தும் தள்ளி அமைந்திருக்கும் காலேஜும், அதன் கட்டிடங்களும், சீராக வெட்டப்பட்ட பச்சை தலை முடியாய் புல்வெளிகள், மரங்கள், குளிர்ச்சி, நிழல், மரங்களை விலாசமாகக் கொண்ட பட்சிகள், செயற்கை நீரூற்றுகள், சிமெண்ட் பெஞ்ச்கள்,  சுற்றிலும் குருவிகளின் அபிஷேகங்கள் என மைதிலியை  பொருத்தமட்டில் பிருந்தாவன் கார்டன் தான்.
 
ஒரு வாரத்திற்கு முன்,
 
லோனாவாலாவிலிருந்து பூனே போகும் ஹைவேயில், சாலும்ரே ஊருக்கு வெளியே போடப்பட்டிருந்த தற்காலிக ரேஸ் ட்ராக்கில் மாணவர்கள், மாணவிகள், ஊர் மக்கள் என பெரும் கூட்டம்.
 
Pune motorsports club நடத்தும் கல்லூரி அளவிலான Dirt track racing event நடந்து கொண்டிருந்தது. FMSCI லைசென்ஸ் இருக்கும் ரேசர்கள் மட்டும்தான் கலந்து கொள்ள முடியும்.
Dirt track என்றால் தனியாக racing track எதுவும் போடாமல்,  மண் தரையையே செப்பனிட்டு  நடத்துவார்கள். ஒரு சில ஏக்கர் நிலப்பரப்பில், மர தடுப்புகள், பல கலர்களில் பேரிகேட் டேப்புகள் வைத்து 12 lapகளாக பிரித்து வைக்கப்பட்டிருந்தது. வீரர்கள் அந்த லேப்பில் சுத்தி சுத்தி வந்து, யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் தான் வின்னர். பல்வேறு நிற கொடிகளுடன் ட்ராக் மார்செல்ஸ், ட்ராக் ஓரங்களில் நின்றிருந்தார்கள்.
 
தகுதி சுற்றுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த ஆறு காலேஜ் பைக் ரேசர்கள், பைனல்ஸ்க்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.  
 
தடுப்புகளை தாண்டி, சற்று தள்ளி பார்வையாளர்கள் உட்காருவதற்கு, தற்காலிக பார்வையாளர்கள் கேலரி அமைக்கப்பட்டு இருந்தாலும், அனைவரும் தடுப்புகளின் அருகே நின்றபடி  தங்களது கல்லூரி பைக் ரேசர்களை கோஷமிட்டு உற்சாகப்படுத்தி கொண்டு இருந்தார்கள். ஸ்டார்ட் லைனுக்கு பக்கவாட்டில் podium. அதில் அறிவிப்பாளர்கள் அமர்ந்திருந்தார்கள். பைனல்ஸ் ஆரம்பிக்க பத்து நிமிடமே இருக்க, ஸ்பீக்கர்களில் அறிவிப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தன. Podium பக்கத்தில் main grand stand. ரேஸ் கிளப் மெம்பர்களும் ஸ்பான்சர்களும் சௌகரியமான சேர்களில், கிராண்ட் ஸ்டாண்டில் அமர்ந்திருந்தார்கள். சேர்களின் பக்கத்தில் கூல்ட்ரிங்க் பாட்டில்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன. ஒரு சில பேர் கைகளில் பைனாகுலர்.   வெற்றி பெற்றவர்களுக்கு கொடுப்பதற்காக கோப்பைகள் டேபிளில் இருந்தன. பின்னால் இருந்த பேனர்களில் ஸ்பான்சர்களின் பெயர்கள்.
 
ஃபைனல்சில் ஆறு காலேஜை சேர்ந்த ரேசர்கள் இருந்தாலும், அனல் பறக்கும் போட்டி SSG காலேஜுக்கும், பூனாவை சேர்ந்த மாடர்ன் காலேஜுக்கும் தான். ரெண்டு காலேஜுக்கும் பரம்பரை பரம்பரையாகவே பகை. இரண்டு தரப்பு ஆதரவாளர்களிடமும் தீப்பொறி பறந்து கொண்டிருக்க.. இதற்கு முன்னால் நடந்த எல்லா ஈவண்டுகளும் பிரச்சனைகளில் தான் முடிந்தது. இந்த முறையும் இரண்டு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட வாய்ப்பு இருந்ததால், பாதுகாப்புக்கு ஆங்காங்கே போலீஸ் தலைகள் தென்பட்டன.
 
ரேஸ் ஆரம்பிக்கும் கிரிட்டுக்கு  பின்னால், அமைக்கப்பட்டிருந்த சாமியானா பந்தலுக்குள்ளே தான் pre-grid ஆக்சன். ரேசில் கலந்து கொள்ளும் ஆறு வீரர்களும் ரெடியாகிக் கொண்டிருந்ததால் சலசலப்பு.
 
ரேசிங் சூட்டை மனோ மாட்டிக் கொண்டிருக்க, பாபி உதவி செய்து கொண்டிருந்தான்.
 
பாபி: எப்படிடா இந்த சூட்டை போட்டுட்டு ஓட்டுற? 10 கிலோ இருக்கும் போலருக்கு.
 
மனோ கிளவுசை அணிந்து கொண்டே சிரித்தான்.
 
சற்று தூரத்தில், மனோவை அடி கண்ணால் பார்த்துக் கொண்டே ஹெல்மெட்டை மாட்டிக் கொண்டிருந்தான் மாடர்ன் காலேஜை சேர்ந்த கிஷன். அவனை வெறியேத்தும் விதத்தில் அவன் நண்பர்கள் ஏதேதோ கிசுகிசுத்து கொண்டிருந்தார்கள்.
 
பாபி: டேய் என்ன ஆனாலும் சரி... விட்றாத கிரிக்கெட் டோர்னமெண்ட் நம்ம அடிச்சோம்.  ஃபுட்பால் கப்பை அவனுங்க அடிச்சுட்டாங்க. Overall championship பார்க்கும்போது ரெண்டு காலேஜ்மே பாயிண்ட்ஸ்  ஈக்வலா போயிட்டுருக்கு... பிரிலிமினரி ரவுண்ட்ல ரெக்கார்ட் டைம்ல கிஷன் அடிச்சிருக்கான். இந்த சீசன்ல ஆறு ரேஸ் வின் பண்ணிருக்கான். உனக்கு இந்த சீசன்ல இதுதான் முதல் ரேஸ். ஃபார்ம்ல வேற நீ இல்லை. எப்படியோ  பிரிலிம்ஸ்ல தேறி பைனல்ஸ்க்கு வந்துட்ட... அவன்ட மட்டும் தோத்திராதே.
 
மனோ: விட்றா பாத்துக்கலாம்..
 
அவனுக்கே உரிய அசால்ட் தனத்துடன் பதில் சொல்ல, ரேஸ் டென்ஷனில் இருப்பதால், அவனை வர்ணிப்பதற்கு சரியான நேரம் இது இல்லை.
 
பாபியை பற்றி சில பல வாக்கியங்களை வீணடிக்காமல், சுருக்கமாக ஒரே வரியில் சொல்வதென்றால்,
 
'செகண்ட் ஹீரோ'
 
அவனை பற்றிய வர்ணிப்புக்கு இது போதுமென்று நினைக்கிறேன்.
 
பாபி: மாடர்ன் காலேஜ் பசங்க, என்னென்ன பேச்சு பேசிட்டு இருக்கானுங்க தெரியுமா? சிக்கி சொன்னான். நீ ஜெயிக்கல்லன்னாலும் பரவால்ல, அவன் கிட்ட தோத்துராத. அவன் சிக்ஸ்த் பிளேஸ் வந்தா... நீ அஞ்சாவது பிளேஸ்ஸாவது அடிக்கணும். இல்லன்னா மானம் போயிரும்.
 
மனோ அதை ஆமோதிக்கும் விதமாக தலையாட்டினாலும்,
 
"ஸ்போர்ட்ஸை காரணமா வச்சு ஏண்டா ரெண்டு காலேஜும் அடிச்சுக்கிறீங்க. அது ஒண்ணு மட்டும் தான் புடிக்கல...", என்றான்.
 
பாபி: தம்பி, இது இன்னைக்கு நேத்து ஏற்பட்ட பிரச்சனை இல்ல. நம்ம சீனியர், அவங்களோட சீனியர்ன்னு இப்படி பல வருஷ பகை... இப்ப கொழுந்து விட்டு எரியுது. யார் நெனச்சாலும் அணைக்க முடியாது.
 
கிஷனின் நண்பர்களும் இவர்களை பார்த்தபடியே அவனுக்கு காதில் ஓதிக் கொண்டிருந்தார்கள். அனேகமாக இதே விஷயமாகத்தான் இருக்கும்.
 
ஹெல்மெட் மாட்டிக் கொண்டு மனோ ரெடியாக, பாபி அவன் தோளில் தட்டி, கை கொடுத்து விட்டு, பார்வையாளர்கள் நிற்கும் தடுப்பை நோக்கி சென்றான்.
 
பார்வையாளர்கள் பிரிவில், மற்ற காலேஜ் ஸ்டுடென்ட்ஸ் கலந்து நின்றிருந்தாலும்....SSG  காலேஜ் பசங்களும், மாடர்ன் காலேஜ் பசங்களும் தனித்தனி குரூப்பாகவே நின்றிருந்தார்கள். இந்தியா பாகிஸ்தான் ரேஞ்சுக்கு முறைத்துக் கொண்டிருந்தார்கள்.
 
மாணவர்கள் கூட்டத்தில்  இருந்த சிக்கி என்கிற சிராக் கிருபால்,   பாபி வருவதை பார்த்ததும்,
 
"டேய், இங்க வாடா", கையசைத்து கூப்பிட்டான்.
 
பாபி கூட்டத்தை விலக்கி, அவனை நோக்கி சென்றான்.
 
பாபி வந்ததும்,
 
சிக்கி: டேய் என்னடா பையன் எங்க பேர காப்பாத்திருவானா? அவனுங்க பேசின பேச்சுக்கு வாய் சுளுக்குற அளவுக்கு பதில் சொல்லிருக்கோம். அதுவும் அந்த ஆந்தைகண்ணன் கேசவ்வுக்கும் எனக்கும் அடிதடி ஆயிருச்சு.. இங்க பாரு... என்று கழுத்தை காண்பித்தான்.
 
கழுத்தில் நக கீறல்கள்.
 
பாபி பதட்டமாக,
"ஏன்டா என்னாச்சு?"
 
சிக்கி: இந்த சீசன்ல ஆறு ரேசிங் ஈவண்டை கிஷன் ரெக்கார்ட் டைம்ல அடிச்சிருக்கான். இதுலயும் ஊதி பரத்திருவோம்னு ஓவரா பேசி வம்பிழுத்துட்டு இருந்தாங்க  கடுப்பாயி அடிக்க போயிட்டேன். போலீஸ் வந்ததால தப்பிச்சான். அவனுங்க கிட்ட மட்டும் தோத்திர கூடாது, சொல்லிட்டல்ல...
 
பாபி: சொல்லிட்டேன். பாப்போம்.
 
சிக்கி: என்னடா இழுக்குற? அவங்க மட்டும் ஜெயிச்சுட்டானுங்கன்னு வச்சுக்க... நம்ம இங்கிருந்து உருப்படியா போய் சேர முடியாது. அவனுங்க விடமாட்டானுங்க. 
 
இருவரும் சற்று தள்ளி நின்றிருந்த மாடர்ன் காலேஜ் குரூப்பை திரும்பி பார்க்க,
 
அவர்கள் "கிஷன், கிஷன்" என்று வாய் ஓயாமல் கத்திக் கொண்டிருந்தார்கள். மேலும் SSG குரூப்பை வெறுப்பேற்றும் விதத்தில், 'பனமரத்துக்கு வவ்வாலா, மாடர்ன் காலேஜுக்கு சவாலா?" போன்ற கருத்தான முழக்கங்களை கூவிக்கொண்டிருந்தார்கள்.
 
சிக்கி பக்கத்தில் இருந்த பிரேம், சந்தீப், மனிஷ் மற்றும் வேறு ஒரு சில எஸ்எஸ்ஜி காலேஜ் நண்பர்களைப் பார்க்க, அவர்கள் அங்கங்கே கலர் கலராக நடமாடிக் கொண்டிருக்கும் பிகர்களை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
சிக்கி கடுப்பாகி, தலையிலடித்துக் கொண்டு, "டேய் எப்படி கூவுறாங்க பாருங்கடா... ஜூஸா வாங்கி  குடிச்சிட்டு, அமைதியா பாத்துட்டு இருக்கீங்களே... bhenchod கூவுங்கடா..."
 
கூவ ஆரம்பித்தார்கள்.
 
அவர்கள் கரைச்சலாக கூவ....இவர்கள் பதிலுக்கு ஆர்ப்பாட்டமாக கூவ... ஒரே களேபரம்.
 
அறிவிப்பாளர்கள் பெயரை அறிவிக்க, ஒவ்வொருவரும் பைக்கில் ஸ்டார்ட் லைனுக்கு வர ஆரம்பித்தார்கள். அதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட காலேஜ் நண்பர்களின் கைதட்டல், கரகோஷம்.
 
கிஷன் suzuki பைக்கில் ஸ்டார்ட் லைனுக்கு வந்தான் மனோ பெயர் அறிவிக்கப்பட்டதும், யமஹா பைக்கில் ஸ்டார்ட் லைனுக்கு வந்து நின்றான். நண்பர்களை பார்த்து கையசைத்தான். நண்பர்கள் தரப்பில் விசில் சத்தம்.
 
ஆக்ஸிலரேட்டரை முறுக்கிக் கொண்ட அனைவரும் தயாராக இருந்தார்கள். மார்ஷல் விசில் அடித்து, செக்கர்ட் கொடியை அசைந்ததும், அனைத்து பைக்குகளும் சீறிப்பாய்ந்தன.
 
அனைவரும் அவர்கள் காலேஜ் ரேசர்களின் பெயரை சொல்லி கத்திக் கூப்பாடு போட்டு, உற்சாகப்படுத்திக் கொண்டிருக்க.. ரேசர்கள் முதல் லேப்பில் சீறி சென்று, lap வளைவில் முட்டி மண்ணில் தேயுமாறு பைக்கை வளைத்து திருப்பி, அடுத்த லேப்புக்குள் நுழைந்தார்கள்.
 
வளைவில் திரும்பிய மனோ,  ஆக்ஸிலரேட்டரை திறுக்கி வில்லிலிருந்து  புறப்பட்ட அம்பு போல் பறந்தான். அவனுக்கு இணையான வேகத்தில் கிஷன்.  இருந்தாலும் மனோ டாப் கியரில் ஃபுல் திராட்டில் கொடுக்கவில்லை, யமஹாவை சரியான ட்யூனிங்கில் வைத்திருந்ததால், முழு முறுக்கு விசை கொடுக்கவில்லை என்றாலும், அவனின் பைக் வேகமாக பாய்ந்தது. இரண்டாவது லேப்பில் மற்ற நால்வரையும் விட, மனோவும் கிஷனும் முன்னணி பெற்று, மூன்றாவது லேப்புக்குள் நுழைந்தார்கள்.
 
லேப்பின் வளைவில், கிட்டத்தட்ட பைக்கை படுக்க  போட்டது போல் வளைத்து, திருப்பி, எழுப்பி, ஓட்டினார்கள்.
 
விர்ரூம்ம்ம்ம்ம்...
 
மூன்றாவது லேப்பை கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து, நான்காவது, ஐந்தாவது என இருவரும் வெகு வேகமாக முன்னேற,
 
முன்னணியில் இருந்த இருவருக்கும், மற்ற நால்வருக்கும் இடையே இருந்த இடைவெளி...  அதிகரித்து இருந்தது.
 
பார்த்துக் கொண்டிருந்த SSG  காலேஜ் பசங்களுக்கும், மாடர்ன் காலேஜ் பசங்களுக்கும் பதட்டம் அதிகரித்தது. தொண்டை கிழியுமாறு கத்தி, இருவரையும் உற்சாகப்படுத்தினார்கள். கேசவ் சிக்கியை வெறுப்பேற்றும் விதத்தில், அவனைப் பார்த்துக் கொண்டே கத்தினான். 
 
கிஷன் பெட்ரோல் டேங்கில் ஏறி உட்கார்ந்து, ஹேண்டில்பாரில் படுக்க போகும் பொசிஷனில் ஓட்ட, அவனுக்கு இணையாக வந்த மனோ ஸ்டெடியாகவே ஓட்டினான்.  ரெண்டு பைக்குகளும் ட்வின் பிரதர்ஸ் போல் ஒட்டிக்கொண்டு சென்றது.
 
மற்ற நால்வரும் ரொம்பவே பின்தங்க, இருவரும் நல்ல முன்னணியில் இருந்தார்கள். புழுதி பறந்தது. தூரத்து பார்வையாளர்களுக்கு முன்னால் செல்லும் இருவரும் சரியாக தெரியாமல் தூசி படலத்துக்குள் தெரிந்தார்கள்.
 
யார் ஜெயிக்கப் போகிறார்? மாடர்ன் காலேஜா SSG காலேஜா?
அறிவிப்பாளரின் கமெண்ட்ரி ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருக்க...
 
இருவரும் இணையாகவே... ஆறு ஏழு எட்டு லேப்பை கடந்தார்கள். வளைவில் படுத்து எழும்பி, 9-வது லேப்புக்குள் நுழைந்தார்கள்.
 
பெரிய சைஸ் டிஜிட்டல் கடிகாரத்தில் ஸ்டாப் வாட்ச் ஓடிக்கொண்டிருந்தது. 
 
அறிவிப்பாளர்:  இதற்கு முன்னால் நடந்த ரேசுகளில் மாடன் காலேஜ் கிஷன் ரெக்கார்ட் டைமில் அடிச்சாரு. இந்த ரேசில் மாடர்ன் காலேஜுக்கும் SSG காலேஜுக்கும் போட்டி கடுமையாக இருக்கும் போலிருக்கிறது. மற்ற நால்வரும் ரொம்பவே பின்தங்கி விட்டார்கள். இன்னும் மூணு லேப் இருக்கிறது... பார்க்கலாம்.
 
வேண்டுமென்றே அதுவரை ஃபுல் ஆக்ஸிலரேஷன் கொடுக்காமல் இருந்த மனோ, ஒன்பதாவது லேப்பில் புல் திராட்டிலில் முறுக்கினான். அதுவரை ஃபுல் ஆக்ஸிலரேஷனில் கைகளை இறுக்கிக் பிடித்திருந்த கிஷனால் அதற்கு மேல் திறுக்க முடியவில்லை. புதிதாக கிடைத்த முறுக்கு விசையால் மனோவின் யமஹா திடீர் ஸ்பீட் எடுத்தது. கிஷனை பின்தள்ளி விட்டு முன்னேற ஆரம்பித்தான்.
 
பத்தாவது லேப்புக்குள் மனோ முதலில் நுழைய, ஒரு நொடி பின்தங்கி கிஷன் நுழைந்தான். அறிவிப்பாளர் மனோ முதலில் முன்னேறுவதை அறிவிக்க,
 
பாபி, சிக்கி மற்றும் SSG காலேஜ் நண்பர்கள் அனைவரும் உற்சாக கூக்குரலிட்டு மாடர்ன் காலேஜ் பசங்களை பார்த்து அளவம் காண்பித்தார்கள். அவர்கள் அனைவரும் வெறுப்பாக பார்த்ததை ரசித்தார்கள்.
 
ஒரு நொடி பின்தங்கி நுழைந்த கிஷன்...
மனோவின் டெக்னிக் புரிந்ததும்,
"I like it brooooo", என்று கத்தினான்.
 
கிஷனும் விடவில்லை.
 
ஆக்ஸிலரேட்டரை குறைத்து, கியரை குறைத்து உடனே ஏற்றி, உச்சபட்ச வேகத்தில் முறுக்கினான். அவன் ஹோண்டா துள்ளி பாய்ந்து மனோவின் யமஹா அருகே உரசியபடி லேண்டானது. 
 
ஒரே ஜம்பில் இடைவெளியை சரி செய்தான்.
 
துள்ளிப் பாய்ந்து வந்து உரசியதால், மனோவுக்கு பேலன்ஸ் மிஸ்ஸாக... அவன் கால் கிஷனின் பைக் சைடில் அழுத்தமாக மிதிபட்டது.
 
கிஷன் தடுமாற, அவன் பைக் கடகடவென கட்டுப்பாடு இழந்து, வளைந்து, ஸ்டெடி பண்ண முடியாமல், ஓரமாக இருந்த மரத்தடுப்புகளின் மேல் 
 
தட் என்று மோத... லேப்பை விட்டு வெளியே சீறிப்பாய்ந்து. 
 
கிஷன் காற்றில் தூக்கி எறியப்பட்டு, லேப்பை விட்டு வெளியே போய், வெகு தூரத்தில் மண்ணில் விழுந்து புரண்டான்.
 
இதற்கிடையே மனோ அவனின் பைக்கை எப்படியோ ஸ்டெடி பண்ணி தொடர்ந்து ஓட்டினான். மற்ற பைக் வீரர்கள் யாரும் அவன் பக்கத்தில் கூட இல்லை.
 
கிஷன் காற்றில் பறப்பதை பார்த்த மாடர்ன் காலேஜ் மாணவர்கள், அதிர்ச்சியில் வாயடைத்து போனார்கள். SSG  காலேஜ் பசங்க மத்தியில் கரகோஷம் காதை கிழித்தது. சிக்கியும், பாபியும் ஹை ஃபை  செய்து கொண்டார்கள்.
 
லேப்பை விட்டு கிஷன் வெளியே சென்று விழுந்ததால், அந்த பகுதியில் இருந்த ட்ராக் மார்ஷல் Disqualify என்று கொடியை உயர்த்திப் பிடித்தார்.
 
மனோ தான் வின்னர் என்று கிட்டத்தட்ட உறுதியானது.
 
தூரத்தில் விழுந்த கிஷன் எழும்பி நின்று, தூசியை தட்டிக்கொண்டு, பார்த்தான். பார்வையில் ஏமாற்றம், உடலில் தோல்வியின் தளர்ச்சி.
 
11வது லேப்புக்குள் நுழைந்திருந்த மனோவுக்கு ரேசில் வெற்றி பெற இன்னும் ஒரு லேப் தான் பாக்கி.
 
அறிவிப்பாளர்: இன்னும் ஒரு லேப் தான்.. எஸ்எஸ்ஜி காலேஜ் மனோ, கிஷனின் ரெக்கார்டு டைமிங்கை முறியடிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
 
தூரத்து தூசி படத்துக்குள் நின்றிருந்த கிஷனை மனோ திரும்பி பார்க்க...
 
மறு நொடி கிளட்சை பிடித்து கியர் பட்டு பட்டென்று குறைத்து, ஸ்கிட் அடித்து, வளைத்து பைக்கை நிறுத்தினான். 
 
ஸ்கிட் அடித்ததால் தூசி படலம். 
 
மனோ பைக்கை ஓரங்கட்டினான். பேரிக்கேட் டேப்பை கடந்து, லேப்பை  விட்டு வெளியே பைக் தள்ளி சென்றான்.  லேப்பை விட்டு வெளியே சென்றதால் மனோவுக்கும் disqualify கொடி உயர்த்தப்பட்டது.
 
சிக்கி புரியாமல் டென்ஷனாக கத்தினான்: டேய் என்னடா பண்றான் இவன்?
 
பாபி: தெரியலைடா... பக்கத்துல கூட எவனும் இல்லையே. என்ன நடக்குதுன்னு தெரியலையே...
 
எதற்காக அவன் அப்படி செய்தான் என்று அவர்களுக்கு தெரியவில்லை. அனைவரும் குழப்பத்தில் இருந்தார்கள்.
 
அறிவிப்பாளர்: முதலில் சென்று கொண்டிருந்த SSG காலேஜ் மனோ ஏன் தானாகவே disqualify ஆனார் என்று தெரியவில்லை. பைக்கில் ஏதாவது பிராப்ளம் இருக்கலாம்....
 
என்று அறிவித்துக் கொண்டிருக்க...
 
அடுத்த ஒரு சில நொடிகளில், பின்தங்கி இருந்த நால்வரும்  ஒவ்வொருவராக, இடைவெளியை குறைத்து, ஒவ்வொரு லேப்பாக கடந்து, 12-வது லேப்புக்கு வந்து வரிசையாக வெற்றிக் கோட்டை தொட்டார்கள். ரேசில் முதல் இரண்டு இடத்தில் வந்தவர்கள், நம்ப முடியாமல் பைக்கை போட்டுவிட்டு, துள்ளி குதித்து கொண்டாடி கொண்டிருந்தார்கள்.
 
ரேஸ் முடிந்ததாக, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 12 months ago
Posts: 144
Topic starter  
ஜானகி மந்திரம் 5 A
 
அறிவிப்பாளர்: எதிர்பாராத விஷயங்கள் எல்லாம் நடந்திருக்கிறது. SSG காலேஜுக்கும், மாடர்ன் காலேஜுக்கும் தான் போட்டி என்று எதிர்பார்த்த நிலையில், முதன்முறையாக மும்பை  சேவியர்ஸ் காலேஜை சேர்ந்த ஜான் பீட்டர் எம்ஆர்எப் கப்பை அடித்திருக்கிறார். அவருக்கு அடுத்து இரண்டாவது இடத்தில்... 
 
என்று தொடர்ந்து அறிவித்துக் கொண்டிருக்க,
 
மாடர்ன் காலேஜ் பசங்களும், எஸ்எஸ்ஜி காலேஜ் பசங்களும் ரேஸ் டிராக்குக்குள் ஓடினார்கள்.
 
ஓரங்கட்டி பைக்கை நிறுத்தியிருந்த மனோவை நோக்கி, கிஷன் சென்றான். ஹெல்மெட்டையும் கிளவுஸயும் கழட்டி பைக்கில் வைத்த மனோ, கிஷனை திரும்பிப் பார்க்க,
 
கிஷனுக்கு மனோவின் நடவடிக்கை புரியவில்லை.
 
"ரேஸ்லருந்து நீயே  தானே disqualify ஆன? பைக்ல ப்ராப்ளம் இருந்த மாதிரி தெரியலையே? அப்படியே இருந்தா கூட இன்னும் ஒரு லேப் தானே தம் புடிச்சு ஓட்டிருக்கலாமே. பக்கத்துல கூட யாருமே இல்லையே i dont understand....whyyyyyyy?..."
 
மனோ, அவனின் வழக்கமான கன்னத்தில் குழி விழும் வசீகர சிரிப்பை உதிர்த்தான்.
 
அவன் பதில் சொல்வதற்குள், அவர்கள் இருவரையும் இரண்டு காலேஜ் பசங்களும் ஓடி வந்து சூழ்ந்தார்கள்.
 
சிக்கி: ஏன்டா? என்னடா ஆச்சு ஏன்டா இப்படி பண்ணுன?
 
மனோ கிஷனைப் பார்த்து:  நான் உன் பைக் மேல கால் வச்சதனாலதான் நீ கண்ட்ரோல் இல்லாம டிராக்கை விட்டு வெளியே போனது. So தப்பு என்னோடது. அதனால் தான் நானும் டிஸ்குவாலிஃபை ஆயிட்டேன்... என்றான்.
 
கிஷன் புரியாமல் அவனைப் பார்த்தான்.
 
சிக்கி: அதுக்காக நீ ஏன் விட்டுக் கொடுத்த? மோட்டார் ஸ்போர்ட்ஸ்ல இது சகஜம் தானே. மத்தவங்க இப்படியா பண்றாங்க?
 
மனோ: விட்டுக் கொடுக்கல.. எது நியாயமோ அத செஞ்சேன்.
 
கிஷன்:  இந்த விஷயம் நீ சொல்லி தானே எனக்கே இப்ப தெரியுது. இல்லன்னா தெரிஞ்சிருக்கவே செய்யாது.  நானா இருந்தா தொடர்ந்து ஓட்டிட்டு போய் ஜெயிச்சிருப்பேன். இன்னும் எனக்கு புரியல. ஏன் நீ இப்படி பண்ணனும்?"
 
மனோ அவனைப் பார்த்து, 
 
"ரேசிங்கும் ஒரு ஸ்போர்ட் தான். ஸ்போர்ட்ஸ்ல ஜெயிக்கிறது தோக்கறது முக்கியம் தான். ஆனா அதைவிட முக்கியம் ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்... என்னை பொறுத்த வரைக்கும், எதுக்காக விளையாடுறோம்ங்கறத விட... எப்படி விளையாடுறோம்ங்கறது தான் முக்கியம்."
 
கிஷன் அவனை ஆச்சரியமாக பார்க்க, மனோ மற்ற பசங்களை நோக்கி திரும்பி,
 
"Remember.... sports are meant to be fun. Don't let something make the sport unfun for you... சின்ன சின்ன விஷயங்களுக்காக  எவ்வளவு நாள் தான் நம்ம ரெண்டு காலேஜும் அடிச்சிக்கிட்டு இருக்கணும். எவ்வளவு பிரச்சனை? எவ்வளவு பஞ்சாயத்து? இதெல்லாம் தேவையா? கிரௌண்ட்ல நடக்கிறத கிரவுண்ட்லயே மறந்திரனும். ஒரு உண்மையான ஸ்போர்ட்ஸ்மேன் கிரவுண்ட்ல மட்டுமில்ல, வாழ்க்கையில் கூட sportive ஆ தான் இருப்பான். எனக்கு கப்பு முக்கியம் இல்ல, நான்  உண்மையான ஸ்போர்ட்ஸ் மேனாங்கறதுதான் தான் முக்கியம். இனிமேலாவது பிரச்சினைகளை விட்டுட்டு, நான் சொன்னதை கொஞ்சம் யோசிச்சு பாருங்க."
 
மனோ பிரசங்கம் செய்யும் தொனியில் பேசாமல், கேஷுவலாக பேச... பாபி, சிக்கி உட்பட எல்லா பசங்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
 
மனோ ரொம்ப பேசாமல் அத்தோடு நிறுத்திக் கொண்டான்.
 
சில பல நொடிகள் அமைதி நீடித்தது.
 
கிஷன் மனோவை நோக்கி சென்று, அவனைத் தோளோடு தோளோக அணைத்து,
 
"Fair play....i like it bro. மாணவர்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கும்போது சின்ன சின்ன விஷயங்களுக்காக எதுக்கு கிரவுண்டுக்கு வெளியில் அடிச்சுக்கணும்... நான் புரிஞ்சுகிட்டேன். இவங்களுக்கும் சீக்கிரம் புரிஞ்சுரும்...."
 
மனோவின் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு, கிஷன் திரும்பி நடந்து செல்ல, அதுவரை ஆக்ரோஷமாக பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு, கலைந்து சென்றார்கள். 
 
எல்லாரும் சென்ற பிறகு,  
 
சிக்கி கழுத்தில் பெற்ற சிராய்ப்பை கை வைத்து பார்த்தான். வலித்தது.
 
"என்னடா இவன் இப்படி தத்துவம் பேசி முடிச்சிட்டான்? அப்ப பதிலடி கொடுக்க முடியாதா?"
 
பாபி: எனக்கு என்னமோ இவன் பண்ணது தான் சரின்னு தோணுது... ஆனா எல்லாரும் திருந்திடுவாங்கன்னு நினைக்கிறியா?
 
மனோ: நான் அப்படி நினைக்கல. வருஷக்கணக்கா இருக்கிற பிரச்சினை ஒரே ஒரு பிரசங்கத்தில் எப்படி மாறும்? சரியாக கொஞ்சம் டைம் ஆகத்தான் செய்யும். ஆனா மாற்றத்திற்கு ஒரு ஆரம்பமா இது  இருக்கட்டுமே.
 
பாபி தலையசைத்தான். அவன் சொன்னதை ஏற்றுக் கொண்டதற்கான தலையசைப்பாய் இருந்தது.
 
பாபி: சரி இங்க நின்னு என்ன பண்றது? வா போலாம்.
 
மனோ: Wait,  ஒரே ஒரு சின்ன வேலை மட்டும் பாக்கி இருக்கு.
 
தூரத்தில் தனியாக சென்று கொண்டிருந்த கிஷனை, மனோ கைதட்டி கூப்பிட... கிஷன் நின்று, திரும்பி பார்த்தான்.
 
"ஒன் மினிட்..' என்று சைகை செய்துவிட்டு அவனை நோக்கி சென்றான்.
 
சிக்கியும், பாபியும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க... மனோ கிஷனை நோக்கி சென்று,
 
"Fair play முக்கியம்தான். ஆனால் போட்டியும் முக்கியம். இன்னும் ஜெயிச்சது நீயா நானான்னு முடிவாகல்லயே. நாளை மறுநாள் இந்த கிரவுண்ட்ல யாருமே இருக்க மாட்டாங்க.  One to one drag race வச்சு பாக்கலாம். வரியா?... நீயும் நானும் மட்டும்... nobody will be there. மோதிப் பார்க்கலாமா?"
 
கிஷன் அவனை கூர்ந்து ஆழமாக பார்த்துவிட்டு, சிரித்தான்.
 
"i like it bro..deal ok", என்று சொல்லிவிட்டு, கை நீட்ட... மனோவும் அவன் கையைப் பற்றி குலுக்கினான்.
 
அவர்களை திரும்பிப் பார்த்த மற்ற மாணவர்கள், ஏதோ நட்பு அடிப்படையில் கைகுலுக்கி கொள்வதாக நினைத்துக் கொண்டனர்.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 12 months ago
Posts: 144
Topic starter  
ஜானகி மந்திரம் 6
 
SSG காலேஜ்
 
கவிழ்த்து போட்ட ப வடிவில் இருக்கும் காலேஜின் பிரதான கட்டிடம். அதன் கால்கள் போல் பின்பக்கமாக வரிசையாக இருக்கும் மற்ற டிபார்ட்மெண்ட் கட்டிடங்கள். ரெண்டு பக்க கட்டிடங்களை கனெக்ட் பண்ணும் ஸ்கைவே பிரிட்ஜ். டிபார்ட்மெண்ட் கட்டிடங்களின் பக்கவாட்டில் பறந்து விரிந்திருக்கும் கிரிக்கெட், ஃபுட்‌பால் மற்றும் வாலிபால், பேஸ்கட்பால் கிரவுண்டுகள். மற்றபடி லைப்ரரி, இன்டர்நெட் சென்டர், கான்பரன்ஸ் ஹால், ஆடிட்டோரியம், ஸ்டுடென்ட்  ஆபீஸ், கல்ச்சுரல் கிளப், ஆர்ட்ஸ் கிளப், rotaract கிளப், நேச்சர் கிளப் என எல்லா வசதிகளும் கொண்ட, பணத்தின் மீது நடப்பவர்களை நம்பி கட்டப்பட்ட நவநாகரிக தனியார் கல்லூரி.
 
வகுப்புகள் ஆரம்பித்திருந்ததால், காலேஜின் மற்ற பகுதிகளில் மாணவர்களின் கூச்சல், சிரிப்பு சத்தங்கள் குறைந்து, தற்காலிக அமைதி நிலைமை திரும்பி இருந்தது. கிளாஸ்களில்  பின் வரிசை மாணவர்கள் கொட்டாவியை அடக்கிக் கொண்டு வகுப்புகளை கவனித்துக் கொண்டிருந்தனர். முன்வரிசை மாணவர்களின் கண்களில் பிளேஸ்மெண்ட்டும், அமெரிக்காவும், டாலர்களும், கோல்டு மெடலும் மிதந்தன. 
 
கேண்டீன், லைப்ரரி மற்றும் கிரவுண்டில், கிளாசுகளுக்கு போகாத சொற்பமான மாணவ மாணவர்கள். லேட்டாக வந்தது, போன் கால், பிடிக்காத சப்ஜெக்ட் என்று அவர்கள் கிளாசுக்கு போகாததற்கு பல்வேறு காரணங்கள்.
 
First hour  நடந்து கொண்டிருக்கும் நேரம். அட்டெண்டர்கள் இரண்டு பேர் சர்குலர் பேப்பரை சுமந்து கொண்டு ஒவ்வொரு கிளாசுக்குள்ளும் நுழைந்து, சுவற்றில் அடிக்கப்பட்ட பந்தாக திரும்பி கொண்டிருந்தனர். ஃபர்ஸ்ட் ஹவரின் போது காலேஜ் பிரின்ஸ்பல் sanjeev kapoor காலேஜ் வராண்டாக்களில் ரவுண்ட்ஸ் வருவது வழக்கம். 
 
மாணவர்கள் கிளாசுக்கு வரவில்லை என்றால், கேண்டினோ கிரவுண்ட்டோ வேறு எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் கிளாஸ் நடந்து கொண்டிருக்கும் போது, வராண்டாக்களில் எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது.
 
மேற்கண்ட விஷயத்தை, கோட் சூட் போட்ட பிரின்சி முன்னங்காலை உயர்த்தி, ஜெர்க் அடித்தபடி, மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மாற்றி மாற்றி கர்ஜித்தால் எப்படி இருக்கும்? கற்பனை செய்து கொள்ளுங்கள்.
 
இந்திய சராசரி உயரத்திற்கும் 5 சென்டிமீட்டர்  அதிகம், லேசான முன் வழுக்கை, காதோர நரை, கொஞ்சம் health conscious ஆக இருந்திருந்தால் 50 வயது என்று சொன்னால் யாரும் நம்பியிருக்க மாட்டார்கள்.
 
லேட்டாக வந்த ஒரு சில மாணவர்கள், வரண்டாவில் ரவுண்ட்ஸ் வரும் பிரின்சியை தூரத்திலேயே பார்த்து,  பதறி வந்த வழியே திரும்பி, நழுவினார்கள்.
 
டிசிப்ளின் தான் முக்கியம் என்று கர்ஜிக்கும் தன்னை பார்த்து மாணவர்கள் எல்லாம் பயப்படுகிறார்கள் என்று அவருக்கு ஒரு அபிப்பிராயம். அதுவும் ஓரளவுக்கு உண்மை.  டாலர் கனவுகளில் மிதக்கும் முன்வரிசை மாணவர்கள் மட்டும்தான் அப்படி. பின்வரிசைக்காரர்கள் அவரை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை.
 
ஃபுட்பால் கிரவுண்டில் ஆடியன்ஸ் உட்காரும் கான்கிரீட் கிராண்ட் ஸ்டாண்டில், அவன் அமைதியாக படுத்திருந்தான். அவன் கன்னத்தில் மூன்று நாள் ரோமம். நெற்றியில் யோசனை சுருக்கங்கள். அறிவு ஜீவி என்பதை ஊர்ஜிதப்படுத்துமென்ற நினைப்புடன், அவன் போட்டுருந்த ஸ்பெக்ஸ். 
 
காற்று அடித்ததால் படிக்கட்டு கூடத்தில் விழுந்திருந்த சருகுகள் இடம்பெயர்ந்து கொண்டிருந்தன. பக்கத்திலிருந்த அர்ஜுனா மரத்தின் இலை ஒன்று கிளையிலிருந்து விடுபட்டு காற்றில் ஸ்லோமோவில் மிதந்து, அவன் முகத்தில் லேண்ட் ஆனதால், 
 
திடுக்கென்று கண் முழித்தான்.
 
அரை தூக்கத்தில், அவன் ஓட்டிக் கொண்டிருந்த படம் கலைந்து போனது. கண்களில் குறுகுறுப்பு.
 
டைரக்டர்கள் கேமரா கோணம் பார்ப்பது போல் கைகளை முன்னால் நீட்டி, கோணம் பார்த்தான்.
 
பின்னர் தனக்குத்தானே பேசிக் கொண்டான்.
 
"ஹீரோ ஹீரோயின் introduction கொடுத்தாச்சு. ஆனா ரெண்டு பேரும் இன்னும் சந்திச்சிக்கவே இல்லையே!!!"
 
என்ன செய்யலாம்?
 
யோசித்தபடியே கை கோணத்தை நகர்த்தினான். தூரத்தில் தெரிந்த காலேஜ் பில்டிங்கள் அவன் கைகளின் கேமரா ஆங்கிளுக்குள் சிக்குண்டு வெளியேறின.
 
திடீரென்று,
 
'ஐடியா!!!', வாய்விட்டே கத்தினான்.
 
அதன் பிறகு மைண்ட் வாய்ஸ்.
 
'ஹீரோ ஹீரோயின் சந்திச்சு காதல் வசப்பட போறதா ஆடியன்ஸ் நினைப்பாங்க. NO. சந்திக்கவே போறதில்லை. twist வைக்கிற மாதிரி  ஒருத்தன் குறுக்கிடுறான்! Rom com வரலாற்றிலேயே முதன் முதலாக காதலே இல்லாம ஒரு காதல் கதை....."
 
செமத்தியாக ஒரு ஐடியா பிடித்து விட்ட பெருமிதம், அவன் முகத்தில் வழிந்தது.
 
'வாரே வா!!!... டேய் ஜேம்ஸ் கேமராமேன் பின்றடா! எங்கேயோ போக போற! This will be my first film. எல்லா சென்டர்லயும் சில்வர் ஜூப்ளி தெறிக்க போகுது... முதல் படத்திலேயே Filmfare best director award வாங்குறேன். '
 
நரம்புகளில் மின்சாரம். ஐடியாவை மறப்பதற்குள், பரவசமாக கீழே கிடந்த டைரியை எடுத்து எழுத ஆரம்பித்தான்.
 
மேற்படி ஜேம்ஸ் கேமராமேனின் ஒரிஜினல் பெயர் ஜேம்ஸ் டிசோசா. காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் செல்லப்பா மாதிரி, சினிமா மேலிருந்த அபரிதமான பற்றுதலாலும், Titanic டைரக்டர் ஜேம்ஸ் கேமரான் மேலிருந்த அபிமானத்தாலும், பெயரை மாற்றிக்கொண்டு, விஷுவல் கம்யூனிகேஷன் கோர்ஸில் சேர்ந்து இருந்தான். இப்போது பைனல் இயர்.
 
"டேய் டைரக்டரு....", 
 
எவன்டா அவன் மரியாதை இல்லாம கூப்பிடுறது?
 
நிமிர்ந்து பார்த்தான்.
 
கிரவுண்டில் இருந்து கூப்பிட்டது சிக்கி. அவன் தோஸ்த் தான்.
 
சிக்கியை ஏற்கனவே நீங்கள் ரேசின் போது பார்த்திருப்பீர்கள். அனுமான்ஜீயின் தீவிர பக்தன். நெற்றியில் ஆரஞ்சு திலகம். கைகளில் அனுமார் உருவம் பொறிக்கப்பட்ட ஸ்டோன் பிரேஸ்லெட், கழுத்தில் சில்வர் வயர் வேலைப்பாடுடன் கூடிய அனுமான் துளசி மாலை.
 
சிக்கி: "நம்ம பசங்கள பாத்தியா?"
 
ஜேம்ஸ்: "இல்லையே.... இந்த பக்கம் வரல.."
 
சிக்கி: ஒரு சில நாட்களாகவே சந்தேகப்படும்படியா நடந்துக்குறாங்களே? எங்க போயிருப்பாங்க?
 
சந்தேக கண்ணோடு சுற்றிலும் பார்த்தபடி பேசினான்.
 
Dilipkumar auditorium 
அதே நேரம்
 
காலேஜ் கட்டிடங்களை விட்டு கோபித்துக் கொண்டு தனியாக இருந்தது திலிப்குமார் ஆடிட்டோரியம். ஏர் கண்டிஷன் வசதிகள் கொண்ட ஆடிட்டோரிய ஸ்டேஜும், புஷ் பேக் குஷன் சீட்டுகளும் இருட்டில் மூழ்கியிருந்தன.
 
ஆடிட்டோரியம் பின்பக்கமாக இருந்த கிரீன் ரூமும் இருட்டுக்குள் மூழ்கியிருக்க, உள்ளே டெசிபல் குறைந்த பேச்சு சத்தங்கள் கேட்டது.
 
கிரீன் ரூமுக்குள்ளே நான்கு உருவங்கள். பழைய தமிழ் படங்களில் வரும் வில்லன்களின் முகத்தில் வெளிச்சமடித்து ரத்த களரியாக தோன்றுவது போல், அவர்கள் முகங்கள் மட்டும் இருட்டுக்குள் பளீரிட்டன. உபயம் பாபி மற்றும் மனிஷ் கையில் வைத்திருந்த செல்ஃபோன் டார்ச் வெளிச்சம்.
 
நடுவில் பிரேம் நின்றிருக்க, அவனை சுற்றி மூன்று பேர். அவர்களிடையே அச்சுறுத்தலான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. அனைவரும் நமக்கு அறிமுகமானவர்கள் தான். முந்திய எபிசோடில் பைக் ரேசின்போது பழக்கமான பாபி, சந்தீப் மற்றும் மனிஷ். 
 
நால்வருக்கும் கோதுமை நிறம், அலட்சிய தலை முடி, காதில் கடுக்கன், கிழிஞ்ச ஜீன்ஸ், முறையே balmain, levis, Louis philipe, levis jeans tshirt அணிந்திருந்தனர். யார் யார் என்ன பிராண்ட் போட்டிருந்தனர் என்பது தேவையில்லாதது.
பின்பக்கம் திருப்பிய பேஸ் பால் தொப்பி, புஜத்தில், மணிக்கட்டில், வினோத உருவ டாட்டூவுடன்  பபுள்கம் மெல்லும் கும்பல்.
 
சூழ்நிலையில் விவரிக்க முடியாத கரடுமுரடுத்தனம். அனைவரின் முகங்களிலும் அளவுக்கு மீறிய இறுக்கம்.
 
மீதி மூவரும், பிரேம் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அவனை வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். 
 
சில பல நொடிகளுக்கு பிறகு, அங்கு நிலவிய அமைதியை பாபி உடைத்தான்.
 
பாபி பிரேமை பார்த்து, அழுத்தமான குரலில்: நீ பண்ண போறது சாதாரண விஷயம் கிடையாது. அதனால careless ஆ இருந்துராத.... என்றான்.
 
சந்தீப்: நீ மாட்டுனா, போர்ஜரி, ஆள் மாறாட்டம்ன்னு எல்லாமே சொதப்பிரும்.
 
மனிஷ்: ரொம்ப கேவலமா போயிரும். எவனும் மதிக்க மாட்டான்.
 
பிரேம் அழாத குறையாக," டேய் ஏன்டா பயமுறுத்துறீங்க? என்ன விட்டுருங்கடா... என்றான்
 
பாபி: ஃபிகர் மத்கர்.  நாம போட்ட பிளான்படி நடந்தா எப்படி மாட்டுவ? ஆனது ஆகட்டும். நீ களத்தில் இறங்கு, பிரச்சனை வந்துச்சுன்னா பாத்துக்கலாம்.
 
அனைவர் குரலிலும் தீவிரம் தெரிந்தது.
 
பிரேம் பயத்தில் எச்சில் விழுங்கி கொண்டான்.
 
நடுங்கும் குரலில்,
 
"ஏதோ நீங்க கொடுக்குற தைரியத்துல தான் இறங்குறேன். ஆனாலும் பயமா தான் இருக்கு..."
 
பாபி: விடுறா பாத்துக்கலாம்.
 
பிரேம்: சிக்கி கிட்ட சொல்ல வேண்டாமா?
 
பாபி: வேண்டாம்... அவன் இந்த விஷயத்துக்கு ஒத்து வர மாட்டான்னு உங்களுக்கு தெரியும் தானே... விஷயம் முடிஞ்ச பிறகு சொல்லிக்கலாம்.
project gujju starts from now on.
 
மற்றும் மூவரும் பாபி சொன்னதை ஆமோதித்தார்கள்.
 
பிரேம் தோளில் தட்டிக் கொடுத்த பாபி,
"Arey chodtho yaar... நாங்க உன் கூடவே இருக்கிறோம். ..",
என்று சொல்லி முடிக்கவும்,
 
கிரீச்ச்ச்...
 
கிரீன் ரூமின் கதவு திறக்கவும் சரியாக இருந்தது.
 
அரை இருட்டுக்குள் நின்றிருந்த அனைவரும் அதிர்ச்சியாக திரும்பி பார்க்க,
 
கதவை திறந்து உள்ளே நுழைந்தது சிக்கி. 
 
சிக்கி தான் என்று தெரிந்ததும் அதிர்ச்சியின் அளவு குறைந்தது. பாபி மற்றவர்களை பார்த்து, நான் சமாளித்துக்கொள்கிறேன் என்று கண் காண்பித்தான்.
 
சிக்கியின் பின்னால் வந்தது ஜேம்ஸ் கேமராமேன்.
 
சிக்கி: இங்க என்னடா பண்றீங்க? எல்லா இடமும் தேடி பார்த்துட்டு கடைசில இங்க வரேன்.
 
பாபி: சும்மாதான் வந்தோம்.
 
சிக்கி: போன் பண்ணும்போது கூட எடுக்கல. டெரரிஸ்ட் மாதிரி.... இருட்டுக்குள் என்னடா பண்றீங்க? 
 
ஜேம்ஸ் கிரீன் ரூமின் லைட்டை சுவற்றில் கைகளால் தடவியபடி போட்டான். ஜேம்ஸ் ஒருவனைத் தவிர, மீதி அனைவரும் கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபார்ட்மெண்ட்.
 
பாபி: சைலன்ட்ல போட்டுருப்பேன். கவனிக்கல.
 
சிக்கி:  ரெண்டு நாளா பாக்குறேன். எல்லாரும் கூடி கூடி பேசுறீங்க என்னன்னு கேட்டா சொல்ல மாட்டேங்கறீங்க. ஏதாவது எக்கு தப்பா பண்ணி மாட்டிக்காதீங்க. அவ்வளவுதான் சொல்லுவேன். 
 
ஜேம்ஸ்: As a screenplay writerன்கிற முறையில, இவனுங்க ஏதோ தப்பு தண்டா பண்றதா தான் எனக்கு தோணுது.
 
மனிஷ்: டேய் டைரக்டர்... (மூடு, என்பது போல் சிக்னல் செய்தான்) ... நெக்ஸ்ட் வீக் சரக்கு பார்ட்டி எங்க வச்சுக்கலாம்னு தான் டிஸ்கஸ் பண்ணிட்டு இருந்தோம். வேற ஒண்ணுல்ல.
 
சிக்கி:  "இப்பல்லாம் பாபி காற்று இன்டர்நெட் சென்டர் பக்கம் அதிகமா அடிக்குது. எனக்கென்னமோ சரின்னு படல.
 
பாபி: Nothing like that ரா.  
 
சிக்கி: சரி சரி தம்மை எடு. அடிச்சுட்டு செகண்ட் ஹவராவது கிளாசுக்கு போவோம்.
 
பிரேம்: ரெண்டு தான் இருக்கு.
 
சிக்கி: அட்ஜஸ்ட் பண்ணி அடிப்போம்.
 
பிரேம் 2 சிகரெட்டையும் உருவி வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தினான்.  நெருப்பில் குளிப்பாட்டி, புகை விட, இரண்டு சிகரெட்டை மாற்றி மாற்றி அடித்தார்கள்.
 
ரூமுக்குள் சிகரெட் புகை சுழல ஆரம்பிக்க,
 
சிக்கியும் ஜேம்சையும் தவிர... மற்ற நான்கு பேரும் ஒருவரை ஒருவர் அர்த்தத்துடன் பார்த்துக் கொண்டார்கள்.
 
தீவிரவாதிகள் மாதிரி, இருட்டுக்குள் தனியாக என்ன திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள் என்று கேட்கிறீர்களா?
 
எடுரா அந்த டார்ட்டாய்ஸ் கொசுவத்தி சுருளை, பிளாஷ்பேக் போலாம்.
 
நான்கு நாட்களுக்கு முன்,
 
ஆர்ட்ஸ் பில்டிங் செகண்ட் ஃப்ளோர் வரண்டாவில், லஞ்ச் இன்டர்வெல் நேரம்.
 
அவசரமில்லாத மதிய நேரம். செகண்ட் ப்ளோரில் கதம்ப குரல்கள். அட்மாஸ்பியருக்காக ஒரு சில மாணவிகள் சுவரில் சாய்ந்து நின்றபடி, டாபிக் கிடைக்க விட்டாலும் ஏதோ ஒரு டாபிக்கை பேசி கொண்டிருக்க, மேலும் ஒரு சில பேர் போனில் உருகி கொண்டிருந்தனர்.  மாணவர்கள் சில பேர்  அங்கும் இங்குமாக எதற்காகவோ பிஸியாக சென்று கொண்டிருந்தனர். மேலும் ஒரு சில மாணவர்கள் தூணுக்கு தூண் நின்றபடி மாணவிகளை தெரியாமல் டாவடித்து இருந்தார்கள்.
 
திடீரென
 
"Bloody Gathedo",
(குஜராத்தியில் Donkey என்று அர்த்தம்)
 
என்றொரு குரல் கேட்க,
 
ஃபோனில் இருந்தவர்கள் போனிலேயே இருக்க, பிஸியாக இருந்தவர்கள் பிஸியாகவே இருக்க, டாவடிப்பவர்கள் டாவடித்து கொண்டே இருக்க,
 
ஒரே ஒரு முகம் மட்டும் குரல் வந்த திசையை சட்டென்று திரும்பி பார்த்தது.
 
சத்தமிட்டது பிரேம் தான். வராண்டா ஓரமாக நின்றபடி, கீழே கல்லூரி வளாகத்தில் யாரையோ பார்த்து சத்தமிட்டான்.
 
திரும்பிப் பார்த்தது மனிஷா. மனிஷா மேத்தா. மனிஷாவை பார்த்துவிட்டு, மேத்தா யாரென்று கேட்க கூடாது. கேட்டால், SSG காலேஜுக்குள் ஸ்டுடென்ட்டாக வலம் வரும் தகுதியை இழந்து விடுவீர்கள்.
 
ஃபர்ஸ்ட் இயரில் மனிஷாவை முதன் முதலாக பார்த்தபோது, பிரேமுக்கு மின்னல் வெட்டியதை போல் தோன்றிய விஷயம். 
 
என்ன face cut? என்ன look? என்ன உடலமைப்பு?
Arey baap re!
 
இன்ஸ்டன்ட் அட்ட்ரக்ஷன், இன்ஸ்டன்ட் கிரஷ், இன்ஸ்டன்ட் லவ்.
 
இப்போது மனிஷா பார்த்துக் கொண்டிருப்பதை பிரேமும் கவனித்தான். உள்ளுக்குள் ஹார்மோன்கள் வேலையை காட்டினாலும், கண்டுக்காதது போல்  திரும்பிக் மறுபடியும் குஜராத்தியில் கத்தினான்.
 
"மூர்க பேன்ட்ஸ்"
 
கட் பண்ணினால்,
 
கேண்டீன்.
 
பிரேம்: " டேய் ஆமாண்டா..? நீங்க சொன்னது சரிதான். இவ்வளவு நாள் திரும்பி கூட பாக்கல. இன்னைக்கு நீங்க சொன்னபடி செஞ்சதும்...
திரும்பி பார்த்தா..."
 
பாபி: that's bobby. Coke and burger இன்னும் வரலையே?
 
பிரேம்: என்னடா கோக்?  Evening மலை ஏறலாம். lets go to grill zone. Let me foot the bill.
 
மனிஷுக்கும் சந்தீப்புக்கும் உடனடி உற்சாகம்.இன்னைக்கு இவன் ஏடிஎம் கார்டை கிழிச்சிர வேண்டியது தான்!
 
பார்ட்டி என்றால், கண்டாலா காலேஜ் பசங்க மலைப்பிரதேசமான லோனாவாலாவுக்கு சென்று விடுவார்கள். டூரிஸ்ட் ஸ்பாட் என்பதால் food malls, bars, night clubs என்று குளிரிலும் அதகளப்படும்.
 
பாபி:  இதெல்லாம் ஜுஜுபி!!!! அடுத்த ஐடியா எப்படி ஒர்க் அவுட் ஆகுதுன்னு பாரு.
 
மறுநாள் லஞ்ச் இன்டர்வெல். அதே வரண்டா.  அட்மாஸ்பியரில் வேறு புதிதாக ஒரு சில மாணவர்கள் கடந்து சென்று கொண்டிருந்தனர். மாணவிகள் நின்றிருக்கும்  பொசிஷனும் மாறுபட்டிருந்தது. மற்றபடி அதே செட்டப்.
 
"Arey Gujju bhai", என்று குரல் கேட்க, 
 
மறுபடியும் மனிஷா மட்டும் திரும்பி பார்த்தாள். வரண்டாவில் சென்று கொண்டிருந்த பிரேமை, மனிஷா காதில் விழும்படி,  சத்தமாக கூப்பிட்டது சந்தீப்.
 
பிரேம் திரும்பி வர, இருவரும் மனிஷா அருகே எதார்த்தமாக(?) சந்தித்துக் கொண்டார்கள்
 
"Hi.... கேம் சோ தோஸ்த்?"
 
"ஹூன் சாரோ சும். When are u going to baroda?"
 
"அத்தியாரே நகி. லீவுக்கு தான்..."
 
அவர்களுக்கு பக்கவாட்டில் நின்றிருந்த மனிஷா பார்த்துக் கொண்டிருப்பதை.. இருவரும் கண்டுக்காமல், அவ்வப்போது குஜராத்தியில் எதார்த்தமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
 
மனிஷா முகத்தில் பிரகாசம். பிரேமை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
சந்திப்: "என்ன இந்த பக்கம்?"
 
பிரேம்: " காலேஜ் PA கிளப் இன்னாகரேஷன் இருக்குல. அதுக்கு ட்ராமா போடுறது சம்பந்தமா, இங்கிலீஷ் ப்ரொபசர் மன்மோகனை பார்க்க வந்தேன்."
 
போதுமான அளவுக்கு பேசி முடித்ததும், சந்தீப் Ok bye என்று சொல்லி கிளம்பினான். பிரேமும் கிளம்புவதற்காக திரும்ப, 
 
மனிஷா: one minute.
 
ஒர்க் அவுட் ஆயிடுச்சுரா மன்னாரு!!!
 
பிரேம் ஸ்டைலாக திரும்பி, yes என்றான்.
 
மனிஷா: தமே குஜராத்தி சோ?
 
பிரேம்: ஹான் ஹூன். குஜராத்தி சூம்.
 
மனிஷா: What a surprise!  இவ்ளோ பெரிய காலேஜ்ல..i didnt find anyone.... Nice meeting you..
 
கைகுலுக்க, கை நீட்டினாள்.
 
வெளிநாட்டில் சொந்த ஊர்க்காரனை பார்த்தது போல்,  அவளுக்கு உற்சாகம்... 
 
கனவுகள் நனவாக ஆரம்பித்த சந்தோஷத்துடன், பிரேம் கை நீட்டினான்.
 
cut to canteen,
 
பிரேம் முகமெல்லாம் பூரிப்பு. 
 
"உன் ஐடியா ஒர்க் அவுட் ஆயிடுச்சு. என்னால் நம்பவே முடியல. இவ்வளவு நாள் திரும்பி கூட பாக்கல. ஆனா இப்ப அவளாவே introduce ஆகி, என்ன பத்தி டீடைல்ஸ் எல்லாம் கேட்டு..my god!!! We have even exchanged phone numbers... Thanks bobby."
 
பாபி: "அதான் பாபி.... அவங்க டிபார்ட்மெண்ட்ல இருக்கிற நம்ம informers வச்சு already விசாரிச்சிட்டேன். அவ ஒரு குஜராத்திக்காரின்னு தெரிஞ்சுகிட்டேன். Gujjus பெரும்பாலும் இப்படித்தான். காசு கல்ச்சர் பேமிலி னு ரொம்ப கட்டுப்பாடாக இருப்பாங்க. பாய் ஃப்ரெண்ட் மெட்டீரியல் கூட சொந்த ஊர்காரங்களுக்கு தான் first preference. குஜ்ஜூவாவே ஆக்டிங்கை போடு. இப்ப உள்ள பொண்ணுங்க லவ்வை ஓகே பண்ணினாலும், ஜக்காஸ்  முக்கியம். லவ்வுக்கு ஓகே சொன்னாலும் கன்ஃபார்ம் கிடையாது. ஜக்காஸ் பண்ணாலும் கன்ஃபார்ம் கிடையாது தான், எப்படியாவது அந்த பட்டாகாவை முடிச்சுரு. உன் பெர்பாமன்ஸ்ல தான் அவளை மெயின்டைன் பண்ண முடியும். (ஜக்காஸ் என்றால் மேற்படி மேட்டர் தான்)
 
நீ மும்பை matunga labour camp பார்ட்டின்னு அவளுக்கு இப்போதைக்கு தெரிஞ்சிர கூடாது. எல்லாம் முடிஞ்சதுக்கப்புறம், உன்ன லவ் பண்றதுக்காக தான் இப்படியெல்லாம் பண்ணினேன்னு கைய தூக்கிட்டு சரண்டர் ஆயிரு. ஒர்க் அவுட் ஆயிடும். இந்தா இத வச்சுக்க. இதான் உனக்கு பைபிள்",
 
என்று சொல்லி, ஒரு புக்கை நீட்டினான்.
 
பிரேம் வாங்கிப் பார்க்க,
"How to learn gujarati in 30 days" புத்தகம்.
 
பாபி: எங்க போனாலும் சரி, பல்லு விளக்காம, குளிக்காம போனா கூட பரவால்ல. இந்த புக் இல்லாம போயிறாதே. தலைக்கு வச்சு படுத்துக்க.
 
சந்திப் போலியாக அழும் குரலில்,
 
"சீக்கிரமே நல்ல பாய் பிரண்டுன்னு பெயர் வாங்கி, எங்க பேர காப்பாத்தணும்...Teekayyy", விழாத கண்ணீர் சொட்டை துடைத்துக் கொண்டான்.
 
அவர்கள் டேபிளில் சிரிப்பு சத்தம்.
 
SSG internet cafe
 
ஹாஸ்டலில் இருந்து கிளம்பவே நேரமாகி விட்டதால் மைதிலி  first hour கிளாசுக்கு போக முடியவில்லை. நேரத்தை வீணடிக்காமல், கம்ப்யூட்டர் சென்டருக்கு வந்து யுபிஎஸ்சி எக்ஸாம் விவரங்கள், பொது அறிவு சார்ந்த விஷயங்கள் தெரிந்து கொள்வாள். இப்போதும் அப்படித்தான்.
 
காலேஜ் கம்ப்யூட்டர் சென்டர் தனியாக இருக்கும் லைப்ரரி பில்டிங்கின் மாடியில் இருந்தது. தனித்தனி closed கேபினாக 20 கேபின்கள்.
 
வந்த மெயில்களுக்கு ரிப்ளை செய்து, chatroomகளில் வந்த மெசேஜ்களுக்கு பதில் அனுப்பிவிட்டு, விரல்களை கோர்த்து சொடக்கிட்டு, டெஸ்க் டாப்பில் டைமை பார்த்தாள். First hour முடியப்போகிற நேரம்.
 
பிரவுசிங்கை முடித்துவிட்டு, கேபினை விட்டு வெளிப்பட்டாள். கவுண்டருக்கு சென்று ஒரு மணி நேரத்திற்கான தொகையை கொடுத்துவிட்டு, வாசல் நோக்கி சென்றாள். எதிரே அவளை மாதிரி இரண்டு சீனியர் மாணவிகள். இருவர் முகத்திலும், உடம்பிலும், அபரிதமான செழிப்பு. மைதிலி அணிந்திருந்த சுடிதாரை, விசித்திரமாக ஏற இறங்க பார்த்தார்கள்.
 
மைதிலியின் ஓல்ட் ஃபேஷன் சுடி அவர்கள் முகத்தை சுளிக்க வைத்தது. Flared cuts, bell sleeves, padded shoulders டைப் சுடிதார் எல்லாம் 70, 80களின் ஃபேஷன்.
 
இருவரும் மைதிலி காதில் விழும்படி பேசிக் கொண்டே அவளை கடந்து சென்றார்கள்.
 
"டிரெஸ்ஸை கவனிச்சியா? Bell sleeves superrrrrr"
 
"பசங்கல்லாம் பார்த்தா அப்படியே மயங்கிருவாங்க... Retro style போல..."
 
"போடி... இதுதான் 2003 லேட்டஸ்ட் ஃபேஷன்..."
 
"Shit!!! எங்கேயோ தெருவுல கிடந்தவங்களையெல்லாம், நம்ம காலேஜுக்கு அனுப்பி வச்சிருக்காங்க..."
 
தங்களுக்குள் கலாய்த்து, ஏளனமாக சிரித்தபடி, அவர்கள் சென்றார்கள்.
 
மைதிலி வேதனையில் அப்படியே நின்றாள். அவள் என்ன செய்வாள்? அவளுக்கு கிடைப்பதெல்லாம் செகண்ட் ஹாண்ட் தான். மற்றவர்கள் பயன்படுத்தி விட்டுக் கொடுக்கும் உடைகள் தான் கிடைக்கும். அதை alter செய்து அணிந்து கொள்வாள். தினுசு தினுசாக உடை அணிந்து வருபவர்களை பார்க்கும்போது, அவளுக்கு ஆசையாக தான் இருக்கும். ஆனால் இப்போதைக்கு ஆசைப்பட மட்டும் தான் அவளால் முடியும். 
 
புதுசா கிடைக்கலன்னாலும், atleast அடுத்தவங்க கிண்டல் பண்ணாம இருக்கிற மாதிரி கூட.... நம்மால் இருக்க முடியலையே!
 
முதலில் இந்த மாதிரி high tech காலேஜுக்கு வந்ததே தப்பு!
 
ஒரு சில நொடிகள், சுய பச்சாதாப எண்ண மின்னல்கள். மைதிலிக்கு மனசு கனத்தது. முகத்தில் தாழ்வு மனப்பான்மை மேகம் படர ஆரம்பித்தது. பரிகாசங்கள் அவளுக்கு பழக்கமாகி போயிருந்ததால், சுதாரித்து, மேகத்தை துடைத்து தூர எறிந்தாள். பெருமூச்சுவிட்டு நகர்ந்தாள்.
 
மைதிலியை இரண்டு  அல்டாப்பு மாணவிகளும் கமெண்ட் அடித்து விட்டு சென்ற காட்சியை, மேலும் இரண்டு பேர், சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
அவர்கள் முதல் எபிசோடில் வந்த இந்துவும் சஞ்சுவும்... மைதிலி சோகமாக தளர்ந்து போய் செல்வதை பார்த்ததும், இருவர் முகங்களிலும் அனுதாபம்.
 
இந்து: யாருடி அவ?... ஹாஸ்டல்ல கூட பார்த்திருக்கிறேனே.
 
சஞ்சு: ட்ரான்ஸ்பர் ஸ்டுடென்ட், university ஸ்பான்சர்ல வந்திருக்கிறா. கஷ்டப்படுற family போல, ஆளாளுக்கு கலாய்க்கிறாங்க. பாக்கும்போது பாவமா இருக்கும். அதுவும் அந்த DSG கேர்ள்ஸ் சேட்டை ரொம்ப ஓவர்டி. ஸ்ரேயா இருக்கிற தைரியம்.
 
இந்து கடுப்பாக, மைதிலியை கலாய்த்து விட்டு சென்ற மாணவிகள், பிரவுசிங் செய்வதற்காக ஒரு கேபினை நோக்கி செல்வதைப் பார்த்தாள்.
 
"ரோஷினி...",
 
என்று கூப்பிட... அவள் திரும்பி பார்த்ததும், இங்கே வா என்று சைகை செய்தாள்.
 
இருவரும், இந்துவை நோக்கி அவர்களின் இயல்பான தெனாவட்டுடன் வந்தார்கள்.
 
இந்து உஷ்ணமாக, 
 
"என்னடி ரெண்டு பேருக்கும் பண திமிரா? அவங்கவங்க வசதிக்கு தகுந்தபடி டிரஸ் பண்றாங்க. இதுல கலாய்க்கிறதுக்கு என்ன இருக்கு? உங்க தலையெழுத்து, பணக்கார குடும்பத்தில் பிறந்துட்டீங்க... அதுக்காக கஷ்டப்படுறவங்கள நக்கல் பண்றதா?", என்று கேட்க,
 
ரோஷினி: அவளை கலாய்ச்சா உங்களுக்கு என்ன வந்துச்சு? சும்மா எல்லாத்துலயும் மூக்கை நுழைக்காத என்ன? Mind your own fucking business.
 
சஞ்சு: என்னடி ஓவரா பேசுறீங்க? அவகிட்டன்னு இல்ல.... எவகிட்ட இப்படி பேசினாலும் தப்புதான். நல்லது சொன்னா எகுறுரிங்க.
 
ரோஷினியுடன் வந்த மான்யா,
 
"எப்ப பாரு ரெண்டு பேரும் எங்க கூடவே வம்பு வழக்குறிங்க. அப்புறம் அவ்வளவு தான் சொல்லிட்டேன்..", சுட்டு விரலை உயர்த்தி எச்சரித்தாள்.
 
"என்னடி warning கொடுக்கிற? பெரிய இவளா நீ", இந்து ஒரு பக்கம் எகிற, 
 
மறுபக்கம் ரோஷினி,
 
"ஆமாண்டி Warning தான். இப்ப என்ன பண்ணுவ?..", கையை உயர்த்தி கேட்டபடி இந்துவை நெருங்கினாள்.
 
வார்த்தைகள் மேலும் தடித்தது. கைகலப்பு ஏற்படப் போகும் தருணத்தில்,
 
"சைலன்ஸ்.... என்ன இங்க கலாட்டா!" என்றொரு குரல் வராண்டாவில் இருந்து கேட்க... அனைவரும் திரும்பி பார்த்தார்கள்.
 
லைப்ரரியன் எதார்த்தமாக ரவுண்ட்ஸ் வந்திருந்தார்.
 
ரோஷினி உடனே டோனை மாற்றி, அவரைப் பார்த்து வழிந்தாள்.
 
"நத்திங் சார்... சும்மா பிரண்ட்லியா தான் பேசுறோம்..."
 
லைப்ரரியன் கண்டிப்பான குரலில்: Browse பண்ணி முடிச்சிட்டிங்கன்னா, dont disturb other students. Just get out of here.
 
என்றதும்,
 
இரண்டு தரப்பினரும், ஆக்ரோஷமாக ஒரு சில நொடிகள் பார்த்துக் கொண்டனர்.
 
பின்னர், ஆளுக்கொரு பக்கமாக பிரிந்து சென்றனர்.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 12 months ago
Posts: 144
Topic starter  
ஜானகி மந்திரம் 7
 
லைப்ரரியிலிருந்து வெளிப்பட்ட மைதிலி கிளாஸ் ரூமை நோக்கி நடந்தாள். 
 
மைதிலிக்கு அந்த கல்லூரியிலேயே பிடித்த இடம் இன்டர்நெட் சென்டரின் கேபின்களும், லைப்ரரியும் தான். வெளி உலக வாசனைகளை விலக்கிவிட்டு, தாயின் கருப்பைக்குள் ஒளிவது போல், சுருண்டு, மடங்கி, ஒளிந்து, அவளுக்கு இஷ்டப்பட்ட விஷயங்கள் செய்யலாம்.
வெளியே இரைச்சலிட்டு கொந்தளிக்கும் பேருலகம் அப்போது வெறும் ஒளி ஒலி குறிப்புகளாக அனாமத்தாக   ஓடிக்கொண்டிருக்கும்.
 
பேக்கை ஒரு சைடாக தோளில் போட்டபடி, ஃபுட்பால் கிரௌண்ட்டை கடந்து, காமர்ஸ் பிளாக் நோக்கி சென்று கொண்டிருந்தாள்.
 
டீ ஷர்ட்டை திருப்பி போட்டது போல் உடை அணிந்திருந்த  ஒருவன், அவளை வழிமறித்து,
 
"ரந்தீர் sir bula rahe hein" என்று சொல்லி, சற்று தள்ளியிருந்த வாகை மரத்தடியை கை காண்பித்தான்.
 
யார் இந்த ரந்தீர்?
 
மைதிலி புரியாமல், அவன் கைகாட்டிய திசையில் பார்த்தாள். 10 பேர் இருக்கலாம். மரத்தடியில் இருந்த பெஞ்சில் படுத்தும், உட்கார்ந்தும் சாய்ந்தும் கிடந்தனர். பார்த்ததுமே தெரிந்தது.... சீனியர்ஸ். ஆண் பெண் வித்தியாசத்தை சிரமப்பட்டு கண்டுபிடிக்க வேண்டியதாக இருந்தது. அவர்களின் நடுவே பெரிய பிஸ்தா போல் தெரிந்தவன், மைதிலியை பார்த்து, 'இங்கே வா', என்று கை காண்பித்தான்.
 
இவன் தான் ரந்தீர் போல.... 
 
மைதிலி தயக்கமாக அவர்களைப் பார்த்தாள்.
 
நிச்சயமாய் இது ராகிங் அழைப்புத்தான்...
 
"என்ன மேடம், கூப்பிட்டா வர மாட்டீங்களோ?" என்றான் ஒருவன்.
 
''என்னடா மேடம்? - ஏய்  கருவாச்சி இங்க வாடி!" என்றான்,  இன்னொருவன்.
 
அவர்களை நோக்கி தயங்கித் தயங்கி சென்றாள்.
 
அவர்கள் முன்னால் சென்று நின்றாள். "அட்டேன்சன்...." என்றது ஒரு பான்பராக் வாய். மைதிலி விறைப்பான அட்டென்ஷன் பொசிஷனில் நின்றாள்.
 
மற்றவர்கள் பார்வையில் நக்கல்.
 
கண்ணாடி அணிந்த சீனியர் மாணவி " உன் பேரன்ன?" என்று கேட்க...
 
"மைதிலி.."
 
"என்னது மைதிலி யா? என்னடி பேரு. It doesnt suits u..."
 
அவள் தோளில் மாட்டியிருந்த பேக்கை வாங்கி, தூக்கி போட்டுப் பிடித்து,  சீன் போட்டாள் மற்றொரு மாணவி. பேக்கை திறந்து என்னவெல்லாம் இருக்கிறது என்று பார்த்தாள். ரெண்டு நோட்டு, பென், பென்சில், இத்யாதிகள், லைப்ரரியில் இருந்து எடுத்த European history book, ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் புத்தகம் மற்றும் hair clips, comb போன்ற ஒரு சில மலிவு விலை பெண்கள் சமாச்சாரங்கள். 
 
அவள் மைதிலியை இளக்காரமா ஒரு பார்வை பார்த்தாள். மைதிலிக்கு தாழ்வுணர்ச்சியும் கூச்சத்தையும் ஏற்படுத்தும் பார்வை.
 
மறுபடியும் அனைத்தையும் உள்ளே போட்டு, பேகை தூக்கி போட்டு கேட்ச் பிடிக்க ஆரம்பித்தாள்.
 
ரந்தீர்: "ஹேய் ஹேய்.. குழந்தையை ரொம்ப கஷ்டப்படுத்தாதீங்க... மனோவுக்கு தெரிஞ்சா அவ்வளவுதான்  Hey baby, உனக்குப் பாடத் தெரியுமா?"
 
மறுபடியும் மனோவா? 
 
மைதிலி யோசித்துக் கொண்டிருக்க,
 
ரந்தீர்: நான் கேட்டது காதில் விழுந்துச்சா இல்லையா?
 
மைதிலி சுதாரித்து, "தெரியாது சார்", என்றாள்.
 
''டிஸ்கோ பாலே ஹிப்பாப்னு சொல்றாங்களே.. அதுல ஏதாவது தெரியுமா..."
 
"தெரியாது."
 
ரந்தீர்: வேற என்ன தான் தெரியும். திங்க தெரியுமா?
 
மைதிலி கைகட்டி அமைதியாக நின்றாள்.
 
ரந்தீர்: "pyase kauve ki kahani [ பானை தண்ணீரில் கல்லை போட்டு குடிக்கும் புத்திசாலி காகம் கதை)  தெரியுமா?"
 
"தெரியும்..."
 
"அதை சொல்லு..."
 
மைதிலி சொல்ல ஆரம்பிக்க, ரந்தீர் கைகாட்டி இடைமறித்தான்...
 
"இப்படி சொல்லக்கூடாது baby. Ab sabko suna woh kahaani….magar har sentence ke baad - "meri gaand main’ yeh jodna… teekay, chal hoja shuru!” 
 
"எல்லா வாக்கியத்திலும், in my ass, என்பதை சேர்த்து சொல்லவும் (தூய தமிழில் சொல்வதென்றால் பின்பக்க டிக்கி ) 
 
மைதிலிக்கு தொண்டை அடைத்தது.  அவர்கள் சொல்ல சொல்வது பெரிய கஷ்டமில்லை என்றாலும், பெண் என்கிற முறையில்,  தர்ம சங்கடமான, தயக்கமான விஷயம்.
 
பான்பராக் வாயன் - “Ek Kauva pyasa tha, meri gaand main,
 
usne paani dhunda, meri Gaand main….
இப்படி சொல்லு.. ராகமா பாட்டு பாடுற மாதிரி சொல்லணும்."
 
மைதிலி அமைதியாகவே இருக்க,
 
கண்ணாடி மாணவி: என்னடி சீனியர் சொல்றதுக்கு மரியாதை இல்லாம, எனக்கென்னன்னு எருமை மாடு மாதிரி நிக்கிற.
 
மற்றொரு மாணவி:  hey kauva சொல்ல போறியா, இல்லையா?
 
மைதிலி சொல்வதற்காக வாயை திறக்க,
 
"ஏய் என்னடி பண்றீங்க?" என்றொரு குரல் கேட்டது. மைதிலி உட்பட்ட அனைவரும் குரல் வந்த திசையில் திரும்பி பார்த்தார்கள். இந்துவும் சஞ்சுவும் வந்து கொண்டிருந்தனர்.
 
சஞ்சு: What's going on???
 
இந்துவும் சஞ்சுவும் அந்த கூட்டத்தை நெருங்கினார்கள்.
 
கண்ணாடி அவசரமாக:  No harassment... just ஒரு என்டர்டைன்மென்ட் காக ஜாலியா ராக் பண்றோம். Thats all... என்றாள்.
 
பான்பராக்: ஆமா, ஆமா.
 
சஞ்சு: Thats ok. But fyi அவ ஒண்ணும் ஃபர்ஸ்ட் இயர் கிடையாது. She is a final year transfer student. உங்கள மாதிரி அவளும் சீனியர் தான்.
 
அனைவரும் திகைத்தார்கள்.
 
ரந்தீர்: கேம்பஸ்ல இதுக்கு முன்னால பார்த்ததில்லையா, அதான் ஃபர்ஸ்ட் இயர்னு நினைச்சிட்டேன். சாரி பேபி.
 
பேக்கை பறித்தவள் அவளிடம் பேக்கை திரும்ப கொடுக்க, மைதிலி வாங்கிக் கொண்டாள்.
 
இந்துவையும் சஞ்சுவையும் பார்த்து, மைதிலி தேங்க்யூ சொல்லலாமா என்று யோசித்தாள். வார்த்தை வரவில்லை. 
 
இருவரின் கண்களிலும் இனம் புரியாத ஆரம்ப கனிவு. மிக நுட்பமான ஒரு பதட்டம் மைதிலியை ஆட்கொண்டது. 
வேறு ஏதாவது பேசலாமா என்று யோசித்த மைதிலி, 
 
'அவர்கள் ஏதாவது awkward டா  ஃபீல் பண்ணிட்டா?'
 
So பேசவில்லை.
 
இருவரையும் ஹாஸ்டலில்  பார்த்திருக்கிறாள்.
 
பரவாயில்லை, என்னை பத்தில்லாம் கூட அவர்களுக்கு தெரிந்திருக்கிறதே!
 
I thought i am nonexistent.
 
யாராவது அவளிடம் நல்ல விதமாக நடந்து கொண்டால்,  ஏனோ தெரியவில்லை, பதட்டம் வந்துவிடும். ஆணவத்தை சந்தித்த தருணங்கள் தான் ஜாஸ்தி. அன்பை சந்தித்த சந்தர்ப்பங்கள் ரொம்பவே குறைவு என்பதால் தான், அந்த பதட்டம். மைதிலி முகத்தில் குழப்பக் கோடுகள்... கோடுகள் அவசரமாக மறைய, உதட்டோரம் வெளிப்பட இருந்த புன்முறுவலை விழுங்கி கொண்டு, அவளுக்கு மிகவும் பிடித்தமான சுவரை எழுப்பிக் கொண்டாள்.
 
பின்னர்,
 
மைதிலி திரும்பி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து, commerce பில்டிங்கை நோக்கி சென்றாள்.
 
அவளை சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்த இந்து சஞ்சுவிடம், அவளுக்கு மட்டும் கேட்கிற விதத்தில்,
 
"I really feel something inside that girl screams for something...i donno what...",
என்றாள்.
 
சஞ்சு: நானும் அதான் நினைக்கிறேன்.
 
First hour முடிந்ததை அறிவிக்கும் விதமாக  பெல் அடித்தது. வகுப்புகளில் இருந்து ப்ரொபஸர்கள் வெளிப்பட்டு, ஸ்டாப் ரூமை நோக்கி செல்ல, அமைதியாக இருந்த வராண்டாக்களும், காரிடர்களும் மாணவர்களால் சலசலத்தது.
 
ஒரு வாரம் கழித்து வந்ததால், ஒரு ஃபார்மால்டிக்காக ஃபர்ஸ்ட் ஹவரை அட்டென்ட் பண்ணி விட்டு, ராம் மனோகர் கிளாசை விட்டு வெளிப்பட்டான். வராண்டாவில் அவனைப் பார்த்ததும், எதிர்ப்பட்ட மாணவர்கள் நட்பாக புன்னகைத்தார்கள்.
 
மனோவை இதுவரைக்கும் வர்ணிக்கவில்லை. வர்ணிக்காமலேயே அவனைப் பற்றி ஓவராக சொல்லியாகிவிட்டது. அதன்பிறகு கண்கள், உதடு, முகம் என்று பார்ட் பார்ட்டாக வர்ணிக்கும் போது வலுவில்லாத வார்த்தைகளை பயன்படுத்தினால், அவன் அழகை அவமானப்படுத்தியதாகி விடும். 
 
அதனால் அவன் வர்ணிப்பை சுருக்கி ஒரே பத்தியில் அடைப்பதென்றால், மனோ எந்த கூட்டத்திலும் வெளிச்சமாக, தனியாக, கவர்ச்சியாக தெரிவான். ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒட்டுமொத்த சபையையும் தன் பக்கம் ஈர்த்துக் கொள்வான்.  அவன் உஸ்பெக்கிஸ்தான் நாட்டுக்கு சென்றாலும், அவனைப் பற்றி அங்கே யாருக்கும் தெரியவில்லை என்றாலும், எல்லோரும் அவனிடம் வந்து பேச பிரியப்படுவார்கள். அழகையும் தாண்டிய அமைதி, ஸ்டைலயும் தாண்டிய swag, நிதானத்தையும் தாண்டிய துறு துறுத்தனம், சாக்லேட்தனத்தை தாண்டிய ruggedness, அவனுடைய ஸ்பெஷல். 
 
வசதி, வாய்ப்பு, வலிமை, இளமை, அழகு, எல்லாம் இருந்தும் அவனுக்கு கிடைக்காதது, இல்லாதது, ஒன்றே ஒன்றுதான்... Shit, நல்ல விஷயங்கள் பேசும் போது, மனகஷ்டம் தரும் விஷயங்கள் இப்ப எதற்கு?
 
ஒரு நிமிஷம், 
 
CS பிளாக் படிக்கட்டில் ஏதோ பகட்டான ஹீல்ஸின்  டக் டக் சத்தம். யாருன்னு பாப்போம்.
 
படிக்கட்டில் அரேபிய குதிரையாக  ஸ்ரேயா ஏற, அவளுக்கு பக்கவாட்டில் மற்ற இரு DSG கேர்ள்ஸானா சலோனி மற்றும் பிரணவி.
 
படிக்கட்டில் ஏறி, மனோ கிளாஸ் ரூம் வராண்டாவில் திரும்பிய ஸ்ரேயா... எதிரே மனோ வந்து கொண்டிருப்பதை பார்த்ததும், "ஹாய்", கண்களில் 100 வாட்ஸ் மின்சாரத்துடன் உற்சாகமாக கையாட்டினாள்.
 
"ஐயோ இவளா?" மனோவுக்கு சலிப்பு.
 
படோடபம், பவிசு, போலித்தனங்கள், அவனுக்கு சுத்தமாக பிடிப்பதில்லை.
 
மனோவை நெருங்கியதும், side hug பண்ணி,
 
"Long time no see", என்றாள் ஸ்ரேயா.
 
மனோ: ஒரு வாரம் லாங் டைமா?
 
ஸ்ரேயா: ஆமா நீ ஒரு வாரம் வராமல், i felt whole college was really dull...
என்று சொல்லிவிட்டு, சலோனி மற்றும் பிரணவியை திரும்பி பார்க்க
 
இருவரும், " yes, yes", என்றார்கள்.
 
DSG கேர்ள்ஸின் ஒட்டுமொத்த அபிப்ராயம் இதுதான், மனோவும் ஸ்ரேயாவும் காலேஜின் ஸ்டார் அட்ராக்ஷனாக இருப்பதால், இருவருக்கும் இடையே ரிலேஷன்ஷிப் டெவலப் ஆவதுதான் இயற்கையின் நியதி. அவர்களுக்கு கௌரவமும் கூட.
 
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை, பார்த்துக் கொண்டே சென்ற மாணவ மாணவிகள் பெருமூச்சு விட்டபடியே சென்றனர். அவர்களுக்கு மெல்லிய பொறாமை and கடுப்பு!!
 
அதெப்படி திமிங்கலம்? பெரும்பாலும் பணமும் பணமும் தான் கூட்டணி அமைக்கிறது.. அழகும் அழகும் தான் ஒன்று சேருகிறது. இல்லையென்றால்  குறுக்கு மகரந்த சேர்க்கையாக அழகும் பணமும் வேண்டுமானாலும் ஒன்று சேரலாம். சுமார் மூஞ்சி குமாரிகளுக்கு ராஜகுமாரர்கள் வாய்ப்பதில்லை. நிலையெதிர் மாறாக, ராஜகுமாரிகளுக்கு சுமார் மூஞ்சி குமார்கள் அமைவதும் இல்லை. சுற்றிலும் இருந்த வராண்டா பெருமூச்சால் நிரம்பியது.
 
மனோ அவள் சொன்னதை ரசிக்கவில்லை என்று தெரிந்தது.
 
"Is that your best?", என்றான்.
 
ஸ்ரேயா: Nope, its a fact. Actually You’re at the top of my wish list. Dang! U are incredible man. U turn me on more than anyone i've ever been with.
 
மனோ சிரித்தான்.
 
M.V: she is ridiculously flirting without letting off her ego.
 
Btw, Flirting என்பதற்கு சரியான தமிழ் வார்த்தை தான் என்ன? கடலை, ஜொள்ளு, சரசமாடுவது, வழியுதல்.... யாராவது தமிழறிஞர்கள் தயவுசெய்து சீக்கிரமாக உருவாக்குங்கள்.
 
அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்று DSG கேர்ள்ஸ் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்க, அவள் கெத்தை, அவள் நண்பர்கள் முன்னால் மனோ உடைக்க விரும்பவில்லை.
 
பாவம் பொழச்சி போகட்டும் என்ற ஒரே காரணத்தினால்...
 
மனோ: I think we are in a complimenting mood because I believe you are pretty incredible too... என்றான்.
 
அவன் பதிலுக்கு காம்ப்ளிமென்ட் செய்ததும், ஸ்ரேயா முகத்தில் பெருமிதம்.
 
"it is my responsibility to spread beauty in this part of the world..."
 
அவளின் பதிலில், மனோ  கடுப்பானான்.
 
'ரொம்ப தான் ஓவரு பாப்பா!'
 
மனோ: ok..lets catch up some othertime...i have to go and look for my friends. 
 
ஸ்ரேயா: Do you want to meet up for a drink or join my workout sessions?
 
மனோ: thanks for the invite...but i've been busy lately..i will text u later...bye
 
அவர்களிடம் இருந்து விடைபெற்று கிளம்ப போனவனை,
 
ஸ்ரேயா: மனோ, one more thing...
 
மனோ:  yeah...
 
ஸ்ரேயா: PA கிளப் ஸ்பெஷலா இந்த இயர்... ரோமியோ ஜூலியட் டிராமா போடுறதா கேள்விப்பட்டேன். ரோமியோவா எப்படியும் நீ தான் பண்ண போற, ஏன்னா இந்த காலேஜ்ல உன்னை விட்டா அந்த கேரக்டருக்கு வேற ஆள் இல்லை... in that case, i should be the Juliet...ok?
 
இன்ஃபர்மேஷனா? பெர்மிஷனா?
 
ஸ்ரேயா prototype இல் ரெக்வஸ்ட் என்பதே கிடையாது.
 
அவள் எதற்காக அப்படி கேட்கிறாள் என்று மனோ வுக்கு நன்றாகவே தெரிந்தது. நாடகத்தில் வரும் ஜூலியட் கதாபாத்திரம் ஏற்று நடிப்பதலெல்லாம் அவளுக்கு முக்கியமில்லை. தற்போதைக்கு நட்பு ரீதியாக தான் அவன் பேசினாலும், பாய்பிரண்ட் இமேஜைத்தான் ஸ்ரேயா ப்ரொஜெக்ட் செய்கிறாள். மனோவுக்கு தெரியும். அவனிடம் நேரடியாக ப்ரொபோஸ் செய்யவில்லை என்பதால் அதை அவன் மறுக்கவில்லை. அவனுக்கு முக்கியமும் இல்லை. ரோமியோவாக அவன் நடிக்கும் போது ஜூலியட்டாக வேறு யாராவது நடித்தால், காலேஜில் அவள் இமேஜ் காலி.
 
காதலுக்கும் ஈர்ப்புக்கும் இருக்கும் வித்தியாசங்களை மனோ அறிந்தவன்.  நேரடியாகவும், மறைமுகமாகவும் அவனுக்கு வரும் ப்ரோபோசல்களை மனம் நோகாதபடி நிராகரிக்க தெரிந்தவன். ஸ்ரேயாவை பொறுத்த வரையில், லவ் என்பதெல்லாம் ஸ்டேட்டஸ் சிம்பல். நடிகையின் கையில் இருக்கும் நாய்க்குட்டி போல், அவள் சொல்வதெல்லாம் கேட்பதற்கு, பெருமையாக சொல்லிக் கொள்வதற்கு, கொஞ்சுவதற்கு, சேவிப்பதற்கு, ஏவலுக்கு, ஓவலுக்கு ஒரு ஆள் தேவை.
 
Naa, Thats not my type!
 
How to stop her hitting on me?இப்போ வேண்டாம்! நேரடியாக அவள் வெளிப்படுத்தினால் "not interested" என்று மறுத்து விடலாம்.
 
மனோ:  ட்ராமாவுக்கு இன்னும் நிறைய டைம் இருக்கு. நடக்கும்போது பார்க்கலாம். நான் ரோமியோவா ஆக்ட் பண்றத பத்தி இன்னும் டிசைட் பண்ணல. லாஸ்ட் இயர் othello டிராமா போடும்போது...i was really really exhausted...lets see what happens. Ok girls..catch u later. Bye
 
அவர்கள் பதிலை எதிர்பார்க்காமல், அவர்களின் சைடில் நகர்ந்து, படிக்கட்டை நோக்கி வேகமாக சென்றான். மூவரும் அவன் போவதை திரும்பி 
பார்த்தார்கள்.
பார்த்தார்கள்.
பார்த்தார்கள்.
 
சலோனி:  என்ன SRK? எவ்வளவோ பசங்க உன் காலடியில் வந்து விழுறாங்க. இவன் என்னடான்னா நீயே தேடிப் போய் பேசினாலும், சரியா ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேங்குறான்.
 
ஸ்ரேயா: ரெஸ்பான்ஸ் இல்லன்னு சொல்ல முடியாது. He has got feelings for me. பைக் ரேஸ், கிரிக்கெட், ஃபுட்‌பால்னு he is busy. Also, he is not willing to commit himself in a relationship. எங்க போயிடப் போறான்? எப்படியும் I will sweep him off his feet.
 
பிரணவி: We know you will do it. உன்னால மட்டும் தான் செய்ய முடியும். ஆனா ஒரு விஷயத்தை மறந்துடாத. அவன் உன்ன லவ் பண்ணலன்னாலும் பரவால்ல. வேற யாரையும் பண்ணிட கூடாது. ஏற்கனவே நீங்க ரெண்டு பேரும் 'made for each otherன்னு' காலேஜ்ல பேசிட்டு இருக்காங்க. எந்த தப்பும் நடந்திரகூடாது. அப்புறம்  நாம காலேஜ்ல தலை நிமிர்ந்து நடக்க முடியாது.
 
ஸ்ரேயா கடுப்பாக: What are you saying? How can that happen? அவனுக்கு என் மேல இன்ட்ரஸ்ட் இருக்கு. லவ் பண்றதுக்கு தான் அவனுக்கு இன்ட்ரஸ்ட் இல்ல. நான் இவ்வளவு தூரம் அப்ரோச் பண்ணியும், he is not yielding. எனக்கு மேல ஒருத்தி style, grace, charming ஆ இருந்து, அவனை இம்பிரஸ் பண்ணி, என் மேல் இருக்கும் பீலிங்சை மாத்தி, லவ் பண்ண வைக்கிறதல்லாம்  no chance. என்றாள் ஆணித்தரமாக.
 
பிரணவி; just saying SRK, உனக்கு மேல ஒருத்தி அழகா? அதுவும் இந்த காலேஜ்ல? வாய்ப்பே இல்லை.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 12 months ago
Posts: 144
Topic starter  
 ஜானகி மந்திரம் 7 A
 
வாய்ப்பில்லைன்னு சொல்ல முடியாது. அதான் நான் இருக்கனே", என்றாள் மைதிலி.
 
"எப்படித்தான் உன்னால சமாளிக்க முடியுதோ!!!...", அவளை ஆச்சரியமாக பார்த்தபடியே சொன்னாள் கோமல். இருவரும் பேசிக் கொண்டிருந்த லொகேஷன் அவர்களின் கிளாஸ் ரூம் வாசல்.
Final yr Bcomக்கு அடுத்த பீரியட் financial reporting and analysis.   
 
மைதிலி: அதுக்காக தான் ஹாஸ்டல் வார்டன் கிட்ட பெர்மிஷன் கேட்கலாம்ன்னு பார்க்கிறேன். ஈவினிங் டைம்ல கண்டாலாவில் பார்ட் டைம் ஜாப் எதாவது கிடைச்சுச்சுன்னா யூஸ் ஃபுல்லா இருக்கும். Competitive எக்ஸாம்க்கு prepare பண்றதுக்கு, பீஸ் கட்டுறதுக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும். இன்னைக்கு FRA lecturer வரலையா?
 
கோமல்: வரல, இந்த hour ஃப்ரீ தான்.
 
மைதிலி: பேசாம லைப்ரரிலையே இருந்திருக்கலாம்...
 
மைதிலி பேசியபடியே வராண்டாவை பார்க்க. வராண்டாவில் பெருக்கி கொண்டிருந்த ஆயா தலையைப் பிடித்துக் கொண்டு, தடுமாறுவது தெரிந்தது.
 
மைதிலி ஒன் மினிட் என்று கோமலிடம் சொல்லிவிட்டு, ஆயாவை நோக்கி ஓடினாள்.
 
கீழே விழப் போன ஆயாவை தாங்கி பிடித்து, "kya hua?" என்று கேட்க,
 
அவள் பதிலளிக்கவில்லை. அப்படியே கை தாங்கலாக கூட்டி சென்று படிக்கட்டில் உட்கார வைத்தாள். ஆயாவுக்கு 50 வயது இருக்கலாம். அவள் முகத்தில் தளர்ச்சிக்குண்டான அவஸ்தைகள். அவசர மூச்சுகளை வெளியேற்றிக் கொண்டிருந்தாள்.
 
மற்ற மாணவர்கள் சுற்றிலும் பார்த்தபடியே சென்று கொண்டிருந்தனர்.
 
பக்கத்தில் இருந்த வாட்டர் டிஸ்பன்சரில் இருந்து ஒரு கிளாஸ் தண்ணீர் பிடித்துக் கொண்டு வந்து, குடிக்க கொடுத்தாள்.
 
ஆயா அணிந்திருந்த நீல ஹவுஸ் கீப்பிங் யூனிஃபார்மின் பாக்கெட்டில் இருந்து மாத்திரை பட்டை ஒன்றை எடுத்து, ஒரு மாத்திரையை வெளியேற்றி  வாயில் போட்டு, தண்ணீர் குடித்தாள்.
 
அவள் வகுப்பை தவிர மற்ற கிளாஸ் ரூம்களிலும் second hour வகுப்புகள் நடைபெற ஆரம்பித்திருந்தன. சிறிது நேரம் ஆசுவாசபடுத்திக் கொண்ட பிறகு,
 
ஆயா நிமிர்ந்து மைதிலியை பார்த்து,
 
"சுகர் ஜாஸ்தியாச்சுன்னு நினைக்கிறேன். மாத்திரை போட மறந்துட்டேன். ரொம்ப நன்றிமா.."
 
சிரமப்பட்டு எழும்பினாள்.
 
மைதிலியை கனிவாக பார்த்தவள்,
"யார் நீ? இங்க இருக்கிற பெரிய இடத்து பசங்கள மாதிரி தெரியலையே... அவங்கல்லாம் என்னை மாதிரி ஆளுங்க கூட... பேசுறதுக்கே சங்கடப்படுவாங்களே.."
 
மைதிலி அவளின் முன் கதை சுருக்கத்தை, இன்னும் சுருக்கமாக சொன்னாள்.
 
"அதானே பார்த்தேன்... இவங்கள மாதிரி இருந்தா கரிசனமே வராதே.
சரிமா, சூப்பர்வைசர் தேடுவாரு. அப்புறமா பேசறேன்", கிளம்பினாள்.
 
வராண்டா பால்கனி ஓரமாக நின்றிருந்த கோமல் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள். மைதிலி அவளை நோக்கி செல்ல,
 
"You are too kind", என்றாள்.
 
மைதிலி: Anyone else would've done the same.
 
கோமல் எள்ளல் சிரிப்புடன்: Not here bro...not in this college... என்றாள்.
 
இதற்கிடையே,
 
ஆடிட்டோரியத்தில் இருந்து கிளம்பியவர்கள் எல்லாம் ஆளுக்கொரு பக்கமாக சென்று விட.. டைரக்டர் ஜேம்ஸ் கேமராமேனும் சிக்கியும் காலேஜ் நோக்கி சென்றார்கள்... சிக்கி வருவதை பார்த்ததும், ஜோடியாக பேசிக் கொண்டிருந்த ஜூனியர் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் 'அய்யய்யோ' என்று பதட்டமாக தெறித்து ஓடினார்கள்.
 
ஜேம்ஸ் கேமராமேன்: boss, வந்தாலே கெத்து தான்.
 
சிக்கி: நம்ம இருக்கிற ஏரியாவில் லவ் ங்கற பேச்சே இருக்க கூடாது... என்றான் கெத்தாக.
 
டைரக்டர் அவன் போனை எடுத்து பார்க்க, அவனுக்கு ஒரு சில மிஸ்டு கால்கள் இருந்தன... மறுபடியும் பாக்கெட்டுக்குள் போனை போட்டுக் கொண்டான்.
 
மைண்ட் வாய்ஸ்: இந்த மொட்டை பய முன்னால, நம்மாளு கூட பேச முடியாதே... திட்டுவானே.
"Boss, எல்லாரும் கிளாசுக்கு போலாம்னு கிளம்பினானுங்க. போன் வந்ததும் ஆளுக்கொரு பக்கமா தெறிச்சிட்டானுங்க."
 
சிக்கி: கவனிச்சிட்டு தான் இருக்கேன். என்னைக்காவது என் கைல சிக்குவானுங்க. அப்ப கண்டம் தான்.
 
ஜேம்ஸ்: boss, கேட்கணும்னு நினைச்சேன். காலேஜுக்கு வந்த காலத்திலருந்தே அனுமன் பக்தனாவே சிங்கிளா இருக்கீங்களே.... முதல்லருந்தே லவ் உங்களுக்கு பிடிக்காதா?
 
சிக்கி முகத்தில் திடீர் கடுமையும் வெறுப்பும் தோன்றியது. ஆரம்ப காலகட்டங்களில் ஒவ்வொரு முறையும் லவ் ப்ரொபோஸ் பண்ண போய் நேரிலும், போனிலும் அவமானப்பட்ட நாட்கள் ஞாபகத்திற்கு வந்தது. அதனாலேயே லவ்... சீச்சீ!!! இந்த பழம் புளிக்கும். இந்த பிளாஷ்பேக்கை சொன்னால் காரி துப்புவார்கள். அதற்கு பதிலாக சின்ன வயசுலருந்தே அனுமான் பக்தன் என்ற ரேஞ்சில் பில்டப் செய்து வைத்திருந்தான்.
 
சிக்கி:  ஆமா பிடிக்காது. ஜெய் பஜ்ரங் பலி... லவ்ங்கற வார்த்தையே உன் வாயிலிருந்து வரக்கூடாது.... டைரக்டர் வாயில் பட்டென்று அடித்தான்.
 
டைரக்டர் மைண்ட் வாய்ஸ்:  செமத்தியா எங்கயோ வாங்கிருக்கான் போல, அதனாலையே எவனும் லவ் பண்ணா புடிக்கல. இவனை எங்கேயாவது கோர்த்து விட்டாதான் நமக்கு நல்லது.
 
சிக்கி: என்னடா முழிக்கிற?
 
டைரக்டர்: ஹி ஹி இந்த காலத்துல இப்படி ஒரு பையனா?  நீங்க ஒரு மனிதருள்  மாணிக்கம் பாஸ்.
 
சிக்கி: உனக்கு தெரியுது, இங்க எவளுக்கும் தெரியலையே!
 
கைகளால் கேமரா கோணம் பார்த்தான்.
 
Mind voice: ' இவனத்தான் நம்ம கதையோட ட்விஸ்டா வச்சுக்கணும்...'
 
சிக்கி: என்னடா... நான் பீலிங்கா சொல்றேன். நீ ஆங்கிள் பாத்துட்டுருக்க?
 
இருவரும் பேசியபடியே கிரவுண்டை கடந்து காலேஜ் கட்டிடங்களை நெருங்கினார்கள்.
 
எதிரே ஃபுட்பாலுடன் மனோ வருவதை பார்த்ததும், இருவரும் முகம் மலர்ந்தார்கள்.
 
மனோ: எங்கடா... கிளாசுக்கு போறீங்களா?
 
டைரக்டர்: கிளாசுக்கு தான் கிளம்பினோம். ஒவ்வொருத்தனுக்கும் போன் வந்துச்சு... அதோட எஸ்கேப்.
 
மனோ: சரி வாங்க மறுபடியும் கிரவுண்டுக்கே போகலாம். இந்த ஃபுட் பால்ல காத்து கொஞ்சம் கம்மியா இருக்கு. அடிச்சி எடுத்துட்டு வந்துருங்க. நான் முன்னால போறேன்.
 
"ஹேய்... ஹேய்... மனோவை பாக்கணும்னு சொன்னல்ல. அங்க பாரு அதுதான் மனோ.."
 
பால்கனியில் திரும்பி நின்றிருந்த மைதிலி, "எங்க?" என்று அவளை கேட்க,
 
கோமல் கிரவுண்ட்டை கை காண்பித்து,
"அதோ கையில புட்பால் வெச்சிட்டு நிக்கிறான் பாரு, அவன் தான்.."
 
சொல்லும்போதே கோமலுக்கு  போன் வைப்ரேடாக, அவள் எடுத்து பார்த்து, பேச ஆரம்பித்தாள். அவள் கைகாட்டிய திசையில் மைதிலி திரும்பி கிரவுண்டை பார்க்க, ஃபுட்பால் மனோ கையிலிருந்து சிக்கிக்கு மாறியிருந்தது.
 
மனோ அவர்களைக் கடந்து கிரவுண்டை நோக்கி சென்றான்.
 
அதேநேரம், டைரக்டர் எதார்த்தமாக காமர்ஸ் பில்டிங்கை பார்க்க, செகண்ட் ப்ளோர் வராண்டாவில், ஒருத்தி அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்து விட்டான்.
 
டைரக்டர்: பாஸ்ஸ்ஸ்ஸ்....
Bcom பைனல் இயர் ஃபுளோரை பாருங்க. ஒரு பொண்ணு நம்மளை பாத்துட்டுருக்கா.
 
சிக்கி: எங்கடா???...
 
Bcom third year ஃபுளோரை பார்க்க, டைரக்டர் சொன்னது உண்மைதான்... எவளோ ஒருத்தி பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
டைரக்டர்: பாஸ், எனக்கென்னமோ அவ உங்கள தான் பாக்குற மாதிரி இருக்கு.
 
சிக்கி அவளை மெய் மறந்து பார்த்து:  கலர் கம்மி... மத்ததெல்லாம் டபுள் ஓகே...  
 
உதடுகள் வழியாக மைண்ட் வாய்ஸ் கசிந்தது.
 
மைதிலி முகத்தில் ஏமாற்றம்: இவனா மனோ!! என்னென்னல்லாமோ பில்டப் பண்ணாங்க! பாக்குறதுக்கு டம்மி பீஸ் மாதிரி இருக்கான்...
 
சிக்கியும் அவளை பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தாள். சம்பிரதாயத்துக்கு சிரித்தாள்.
 
டைரக்டர் கத்தினான்: ஐயையோ பாஸ், உங்கள பாத்து சிரிக்கிறா...
 
ஒரு பொண்ணு என்ன பாத்து சிரிக்குதா! OMG!!! இந்த மாதிரி இளந்தென்றல் என் வாழ்க்கையில் கிராஸ் ஆனதே  இல்லையே!
 
கலர் மட்டும்தான் கம்மி.. மத்ததெல்லாம் அளவுக்கு அதிகமாவே இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.
 
உறைந்து போய் பார்த்துக் கொண்டிருந்த சிக்கிக்கு... சற்று நேரத்தில் அவன் செய்து கொண்டிருக்கும் கேரக்டர் ஞாபகத்துக்கு வர... வேண்டா வெறுப்பாக சுதாரித்து,
 
கழுத்தில் போட்டிருந்த அனுமன் டாலரை உருட்டியபடி,
 
"எவ சிரிச்சா நமக்கு என்ன? சிங்கிள் தான் கெத்து. வாடா போலாம்..." குரலில் பழைய வீரியம் இல்லை. பரிதாபமாக மைதிலியை பார்த்தபடி நகர்ந்தான்.
 
டைரக்டர் m.v:
சிக்கி சிக்கிட்டான்ன்ன்ன்... இனிமேதான் கதையே ஆரம்பிக்குது.
 
Ready,
 
Lights, camera....AAAACTIONNNNNN.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 12 months ago
Posts: 144
Topic starter  
ஜானகி மந்திரம் 8
லேடிஸ் ஹாஸ்டல் – ஞாயிற்றுக்கிழமை காலை
 
லேடிஸ் ஹாஸ்டல், வாரநாள் பரபரப்பில்லாமல் சற்றே தளர்ந்து கிடந்தது.
காலை நேர வெயில், சுவரோர ஜன்னல்களூடாக சாய்ந்து, சிமெண்ட் தரையில் சின்ன சின்ன ஒளிக்கட்டங்களை போட்டுக் கொண்டிருந்தது.
 
ஒவ்வொரு ப்ளோரிலும் பாத்ரூம் ஏரியா ஜெராக்ஸ் எடுத்து வைத்தது மாதிரி ஒரே வடிவம். பாத்ரூம் ஏரியாவுக்குள் நுழைந்தால் எதிரெதிரே மூன்று பாத்ரூம்கள், மூன்று டாய்லெட்டுகள் – பளபளப்பான டைல்ஸ், ஸ்டீல் கதவுகள், ஏர் ஃப்ரெஷ்னர் வாசனை.
 
ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை காலைன்னா, luxury எல்லாம் ஓரமா தள்ளப்பட்டு, தண்ணீர் வழியும் தரை, நுரையோடு நிறைந்த வாளிகள், சோப்பு–ஷாம்பு கலந்த வாசனைகள் தான் மேலோங்கும்.
 
பாத்ரூம் ஒன்றின் உள்ளே மைதிலி மூச்சிரைக்க துணி துவைத்து கொண்டிருந்தாள். அவளின் ரூம் மேட்ஸ் தான்வி மற்றும் திஷாவின் ஒரு வாரத்து அழுக்குத் துணிகள் பாத்ரூம் உள்ளேயும் வெளியேயும் மலைபோல் குவிந்திருந்தன. 
மைதிலி கைகளில் சோப்பு நுரை.  ஜீன்ஸ், டி-ஷர்ட்கள், கட்- வொர்க் குர்தாக்கள்,  பாட்டியாலா சல்வார்கள் என 2003 ஆம் வருடத்தின் ட்ரெண்ட் அங்கே சிதறி கிடந்தது. மைதிலி ஒரு கனமான நீல நிற பெல்-பாட்டம் ஜீன்ஸை வாளியிலிருந்து வெளியே இழுக்கப் போராடினாள். கஷ்டப்பட்டு வெளியே எடுத்து, அதன் பிடிவாதமான அழுக்கை நீக்க பிரஷ்ஷை வைத்து அழுத்தித் தேய்த்தாள். ஒவ்வொரு முறை பிரஷ்ஷை இழுக்கும்போதும், அவளது மெல்லிய கைகளில் நரம்புகள் புடைக்க, நெற்றியில் அரும்பிய வியர்வை துளிகள் கன்னத்தின் வழியே வழிந்து சோப்பு நுரையோடு சங்கமித்தன.
 
அதே நேரம்,
அந்த பாத்ரூம் ஏரியாவை கடந்து,
சஞ்சுவும் இந்துவும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
சஞ்சுவின் கண்களில், முதலில் பட்டது — பாத்ரூமுக்கு வெளியே குவிந்து கிடக்கும் துணி மலை.
 
இருவரும் நின்றார்கள்.
 
யார்ரா அது, இவ்வளவு டிரஸ் துவைக்கிறது என்று இருவரும் ஆச்சரியமாக உள்ளே சென்று பார்த்தார்கள்.
 
ஒரு பொண்ணு.
மாங்கு மாங்குன்னு.
நாலு மூட்டை துணிகளை துவைக்கிற காட்சி.
 
பாத்ரூமுக்குள் மைதிலியை பார்த்ததும்,
 
“ஏய்… நீயா?”
மைதிலியை நெருங்கி,
“என்ன இவ்வளவும் உன் டிரஸ்ஸா? " என்று இந்து கேட்க,
 
மைதிலி, துணியை பிழிந்தபடியே, அவர்களைப் பார்த்து, 
“ரூம் மேட்ஸ் டிரஸ்… துவைக்க சொன்னாங்க,” என்றாள்.
 
இந்துவின் முகம் மாறியது.
“நீ எதுக்கு துவைக்கணும்? அவங்கள்ல துவைக்கணும்.”
 
மைதிலி, எதார்த்தமாக,
“இல்ல… ஒரு பிரண்ட்லி ஹெல்ப் தானே… அதனால செய்றேன்,” என்றாள்.
 
அந்த பதில், இருவருக்கும் சுத்தமாக பிடிக்கவில்லை. என்ன நடந்திருக்கும் என்று அவர்களால் யூகிக்க முடிந்தது.
 
இந்துவும் சஞ்சுவும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
 
அந்த பார்வையில்,
 
“இவ்வளவு அப்பாவியா இருக்காளே…”
 
என்ற பரிதாபம் மட்டும் மிதந்தது. அவளின் நல்ல மனசை நினைத்து வருந்திய பார்வை.
 
இந்து: அதானே பார்த்தேன்..? இங்கே இருக்கிற எவளுக்கும் வாஷ் பண்ணி பழக்கமே கிடையாது. வாஷிங் வெளியில தான் கொடுப்பாளுங்க.. அதான் இவ்வளவு துணி யாருடா  துவச்சுட்டு இருக்காங்கன்னு சந்தேகத்தில் வந்து பார்த்தோம்...
 
“Look here,” என்று சஞ்சு குரலை சற்றே உயர்த்தினாள்,
 
“அவங்கல்லாம் உன்னை வேலை வாங்குறாங்க. அது உனக்கு புரியலையா?” என்றாள்.
 
மைதிலி பதில் சொல்லவில்லை.
துணியை பிழிந்து, சைடில் வைத்தாள்.
 
 உடனே இந்து,
“ நீ செய்யும் வேலைக்கு உனக்கு பணம் ஏதாவது கொடுக்குறாங்களா?” என்று கேட்டாள்.
மைதிலி,
"சேச்சே அதெல்லாம் இல்லை" என்று தலையாட்டினாள்.
"அவங்களுக்கு என்னால முடிஞ்ச ஒரு ஹெல்ப்பா இருக்கட்டும்ன்னு நினைச்சு பண்றேன்…”
 
அந்த வார்த்தைகள் முடியவும்,
இந்துவின் பொறுமையும் முடிந்தது.
 
“போதும்,” என்றாள்.
 
“அவங்களுக்கு ஹெல்ப் பண்றதுக்கு நீ இங்க வரல. படிக்கிறதுக்காக வந்துருக்க. அவங்களுக்கு fees, அவங்க பேரன்ட்ஸ் பே பண்றாங்கன்னா. உனக்கு பீஸ், கவர்மெண்ட் பே பண்ணுது. அவங்கள மாதிரி நீயும் ஒரு ஸ்டூடன்ட்... வேலைக்காரி கிடையாது."
 
ஒரு நொடி இடைவெளி.
 
“இனிமே அடுத்தவங்க வேலைய நீ பண்றது நான் பார்த்தேனா… வார்டன் கிட்ட  உன்னை ராகிங் பண்றாங்கன்னு சொல்லி....நானே கம்ப்ளைன்ட் பண்ணுவேன்.
நான் சொல்றது புரியுதா?”
 
மைதிலி, எதுவும் பேசவில்லை.
 
அவள் வாழ்க்கையில்,
 
யாரும் அவள் சார்பாக இப்படி கோபப்பட்டதே இல்லை.
 
அவள் கஷ்டம் — அவளுக்கே.
 
அவள் அவமானம் — அவளுக்கே.
 
இப்போ, அவள் கேட்காமலே,
இரண்டு பேர் அவளுக்காக பரிந்து பேசுகிறார்கள்.
 
திடீரென்று மனசுக்குள் ஏதோ ஒன்று கட்டவிழ்ந்து, நெகிழ்ந்தது.
 
அது சந்தோஷமா, பயமா, நன்றி உணர்ச்சியா —
 
அவளுக்கே புரியவில்லை.
 
மறு நொடியிலேயே, அந்த உணர்ச்சியை வெளியில் வர விடக்கூடாது என்று முடிவு செய்தாள்.
 
மற்றவர்களிடம்
பலவீனத்தை வெளிப்படுத்த கூடாது.
 
அதனால், துணியை இன்னும் இறுக்கமாக பிழிந்தாள்.
 
நுரையைப் பார்த்துக்கொண்டே,
எதுவும் நடக்காதது போல இருந்தாள்.
அதேநேரம்,  பாத்ரூம் வெளியே, இன்னொரு குரல்.
 
“இந்த துணிகளையும் துவச்சிடு…”
 
இந்துவும் சஞ்சுவும் ஒரே நேரத்தில் திரும்பிப் பார்த்தார்கள்.
 
பாத்ரூம் வாசலில், கைநிறைய துணிகளுடன் மகிமா.
 
இந்துவின் முகத்தில் இருந்த இறுக்கத்தையும்,
சஞ்சுவின் கண்களில் தெரிந்த கடுப்பையும் பார்த்ததும்,
 
மகிமாவின் முகத்தில் ஒரு கணம் தடுமாற்றம்.
 
இங்கே ஏதோ தப்பா ஆயிடுச்சோன்னு அவளுக்கே புரிந்தது.
 
இந்து, அவளை நேராக பார்த்து,
 
“என்னடி… எல்லாரும் விளையாண்டுட்டு இருக்கீங்களா? அவளும் உங்க மாதிரி பைனல் இயர் ஸ்டுடென்ட் தான். ஏதோ ஃபர்ஸ்ட் இயர் ராக் பண்ற மாதிரி பண்ணிட்டு இருக்கீங்க. ஃபர்ஸ்ட் இயர் பசங்கள கூட இப்படி பண்ண கூடாதுன்னு தான் நான் சொல்லுவேன்.”
 
சஞ்சு:
 
“அதானே… உங்களுக்கு துவைக்கிறதுக்கு ஆளா இல்லை? வெளிய எங்கேயாவது ட்ரை கிளீனர்ஸ் கிட்ட போட்டா, வாஷ் பண்ணி கொடுக்கப் போறாங்க. பணத்துக்கு பஞ்சமா என்ன?"
 
பாத்ரூமுக்குள்ள இருந்து,
நுரை கைகளோடு,,மைதிலி எட்டிப் பார்த்து,
 
“பரவால்ல. ஒண்ணும் பிரச்சனை இல்லை,” என்று சமாளிக்க பார்த்தாள்.
 
மகிமா, சற்று எரிச்சலுடன்,
 
“நான் ஒண்ணும் அவளை கம்பல் பண்ணல.அவ துவைக்கிறதுனால, என் டிரெஸ்ஸை கொடுக்கிறேன். அவளே ஒண்ணும் சொல்லல. உங்களுக்கு என்ன இவ்வளவு கோவம்?”
 
சஞ்சு முகம் இன்னும் கடுமையானது.
 
“எங்களுக்கு கோவமா? இந்த பொண்ணை அனாவசியமா இதுக்கு மேல தொந்தரவு பண்ணீங்கனா…நான் நேரா வார்டன் கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணுவேன். Be careful”
 
அவ்வளவுதான்.
கோபத்தில் விருட்டென்று திரும்பி,
துணிகளுடன் மகிமா அவள் ரூமை நோக்கி நடந்தாள்.
 
அவள் போனதும், மைதிலி பதட்டமாக,
 
“ஐயோ கோச்சிட்டு போய்ட்டாங்க. என்ன இப்படி பண்ணிட்டீங்க? ஏதாவது பிரச்சனையா ஆகிறபோது…”
 
சஞ்சு, அவளைப் பார்த்து,
 
“நான் என்ன தப்பாவா சொன்னேன்? நியாயத்தை தானே கேட்டேன். என்ன பிரச்சனை ஆனாலும் பரவால்ல. நீ பயப்படாதே. எதுனாலும் எங்க கிட்ட வந்து சொல்லு. நாங்க இருக்கோம்.”
 
இந்து: ஆமா எவளாவது  ஏதாச்சும் பேசட்டும், பல்ல தட்டி கைலயே கொடுக்கிறேன்... விடு பாத்துக்கலாம். வரட்டுமா?
 
என்று சொல்லிவிட்டு,
 
இந்து, சஞ்சு இருவரும் திரும்பி நடந்தார்கள்.
 
மைதிலி, அதே இடத்திலேயே நின்றபடி,
கலவர கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
பால்கனியில் நடந்து போகும் வழியில்,
 
இந்து, சஞ்சுவை பார்த்து,
 
“இப்ப வந்தாளே அந்த படாடோ ஃபிகர்…நிச்சயமா போய் போட்டு கொடுத்துருவா. அனேகமா பிரச்சனை வெடிக்கும்.”
 
சஞ்சு அசால்டாக பதிலளித்தாள்.
 
“வெடிக்கட்டும். என்னதான் வெடிக்குதுன்னு பாப்போம்.”
 
இதற்கிடையே,
 
பாத்ரூமில் இருந்து சென்ற மகிமா, நேராக திஷா ரூமுக்குள் புயலாக நுழைந்தாள்.
 
திஷா and தான்வியிடம் பாத்ரூம் ஏரியாவில் நடந்த ஒவ்வொரு வார்த்தையையும்,
ஒவ்வொரு டோனையும்,
முடிந்த அளவு திரித்து, அதிகப்படுத்தி,
கொட்டி தீர்த்தாள்.
 
“அந்த காலா கவ்வா பேசாம நின்னுட்டு தான் இருந்தா.”
 
“ஒரு ரெஸ்பான்ஸ் இல்ல.”
 
“ஆனா எல்லாத்தையும் பார்த்துட்டு இருந்தா.”
 
“இந்துவும் சஞ்சுவும் நம்மள வில்லி ரேஞ்சுக்கு பேசுறதுக்கு அவ தான் காரணம்.”
 
அந்த ரூமில், ஒரு நிமிஷத்துக்குள் 7.5 ரிக்டர் பூகம்பம்.
 
திஷாவின் முகம் சிவந்தது.
தான்வியின் உதடுகள் கோபத்தில் துடித்தன.
 
இருவருக்கும் ஒரே பிரச்சனை தான். மைதிலி சார்பாக வேறு யார் பேசியிருந்தாலும் கூட பிரச்சனை பெரிதாக வெடித்திருக்காது. இந்துவும் சஞ்சுவும் பேசியது தான் காரணம். அந்த ஹாஸ்டலில் DSG குரூப்பை மதிக்காதது அவர்கள் இருவர் மட்டும் தான்.
 
 
ஒரு மணி நேரம் கழித்து,
 
துணி துவைத்து முடித்து,
 
சோர்வோடும், கனத்த மனதோடும் மைதிலி ரூமுக்குள் நுழைந்தாள்.
 
ரூமுக்குள் காலடி எடுத்து வைத்த உடனேயே—
 
“நில்லு.”
 
திஷாவின் குரல்.
 
மைதிலி திகைத்தாள்.
 
“நாங்க என்னமோ உன்னை வேலை வாங்குகிறோம்ன்னு அந்த ரெண்டு........( censored) கேட்டாளுகளாமே. நீ தான் அவங்க கிட்ட இந்த விஷயத்தை சொன்னியா? எல்லாத்தையும் பார்த்துட்டு சும்மா தான் இருந்தியா?”
 
மைதிலி உடனே,
 
“இல்ல… எனக்கு ஒண்ணும் தெரியாது அவங்களா தான் கேட்டாங்க—” என்று தொடங்க,
 
“பொய் பேசாத,” தான்வி குறுக்கிட்டாள்.
 
“நீ சொல்லாம எப்படி இவ்வளவு சீன் நடக்கும்?”
 
“நான் சத்தியமா—”
 
"சுப்...."
 
“நான் ஒண்ணும்—”
 
“போதும்,” திஷா குரல் உயர்ந்தது.
 
“நடிக்காத.”
 
மைதிலி எவ்வளவு பேச முயற்சித்தும் அவளைப் பேச விடவில்லை, அவர்களின் கோபமும் குறையவே இல்லை.
 
ஒவ்வொரு மறுப்பும்,
 
அவர்களுக்கு இன்னும் எரிச்சலாக மாறியது.
 
அந்த டென்ஷன் உச்சத்தில்,
 
“இனிமே நீ இந்த ரூம்ல இருக்க வேண்டாம். வேற ஏதாவது ரூம் பாத்துக்கோ.”
 
அந்த வார்த்தைகளோடு,
திஷா மைதிலியின் துணிகளை எடுத்தாள்.
 
அள்ளி வெளியே வீசினாள்.
மற்ற மாணவிகளைப் போல அந்தத் துணிகளில் பிராண்ட் பெயர்களோ, நறுமணமோ இல்லை. பலமுறை துவைத்து வெளுத்துப் போன பழைய சுடிதார்கள், அடுத்தவர்கள் போட்டு முடித்து செகண்ட் ஹேண்டாக கிடைத்து ஆல்டர் செய்த துணிகள்,  தையல் பிரிந்திருந்தாலும்  அவளே தைத்து போட்டுக் கொண்ட தையல் தழும்புள்ளவை என... அவை ஒவ்வொன்றும் மைதிலியின் ஏழ்மையை ஊர் உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.
 
ஒவ்வொன்றாக அள்ளி வீச... துணிகள் யாரோ இரண்டு பேரின் காலடியில் போய் விழுந்தன.
 
நிமிர்ந்து பார்த்தாள் மைதிலி.
 
கால்களுக்கு சொந்தக்காரர்கள்—
 
சஞ்சுவும் இந்துவும்.
 
மைதிலியின்  கண்கள் தானாகவே ஈரமாயின.
ஆனாலும் அழக்கூடாது என்று தம் பிடித்துக் கொண்டாள்.
 
சஞ்சு, நிலைமையை உணர்ந்து
“நாங்க எதிர்பார்த்த மாதிரி தான் நடக்குது. ச்சே!!! உங்கள மாதிரி சீப்பான ஆட்களை நான் பார்த்ததே இல்லை" என்று சீறினாள்.
 
இந்து, ஒரு படி முன்னே வந்து,
 
மைதிலியை பார்த்து,
 
“அதான் மேடம் சொல்லிட்டாங்களே. இனிமே நீ எதுக்கு இங்க இருக்கணும்? உன் பொருட்களை எல்லாம் அள்ளிக்கிட்டு… எங்க ரூமுக்கு வந்துரு.”
 
அவள் சொன்னதும்.. திஷாவும் தான்வியும்
காட்டமான பார்வை வீசினார்கள்.
 
திஷா ஒரு படி முன்னே வந்து, இந்துவை நேருக்கு நேராக  பார்த்து எச்சரிக்கும் குரலில்:
 
"Look, you both better stay out of this. It’s none of your business. அனாவசியமா மத்தவங்க விஷயத்துல தலையிடாதீங்க... அது உங்களுக்கு நல்லதில்ல" என்றாள்.
 
திஷாவின் அந்த மிரட்டலை இந்து ஒரு ஏளனச் சிரிப்புடன் எதிர்கொண்டாள். சஞ்சுவும் தெனாவட்டாக கைகளை கட்டிக்கொண்டு நின்றாள்.
 
இந்து மிகத் தெளிவாக, அழுத்தமாக ஆங்கிலத்தில் பதிலடி கொடுத்தாள்:
"Listen both of u guys, we are NOT interfering in YOUR business. We are interfering in MAITHILI'S business. And as far as we know, she is not your property!"
 
அதைத்தொடர்ந்து சஞ்சு, "Exactly! So, don't worry about what's 'good' for us. You better worry about what's coming for you if this continues," என்று சொல்லிவிட்டு மைதிலியின் பக்கம் திரும்பினாள்.
 
தன்மானம் சீண்டப்பட்ட கோபத்தில் தான்வி ஏதோ பேச முயல, 
 
இந்து அவளைப் பேசவிடாமல் தடுத்து,
"அனாவசியமா உன் கூட பேசி நேரத்தை வீணாக்க விரும்பல....just back off"
அவளின் பதிலடியில் தான்வி சற்று அதிர்ந்து போனாள்.
 
மைதிலி புரியாமல் இந்துவை பார்க்க....
 
சஞ்சு மைதிலியை பார்த்து: "அதான் சொல்றாள்ல..உன்னோட எல்லாரும் நடக்கிற விதத்தை… நாங்க பார்த்துக்கிட்டே தான் இருக்கோம். உன்னோட அருமை…இவங்களுக்கு புரியல. Jinko doosron ke dard ka koi andaaza hi nahi hota…””
 
பிறகு, உறுதியான குரலில்—
 
“எங்களை பிரண்ட்ஸா நெனச்சேன்னா எங்க ரூமுக்கு வா. என்னோட ரூம் நம்பர் 143. உன் திங்க்ஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு வந்துரு. இன்னும் பத்து நிமிஷத்துக்குள்ள… நாங்க உன்னை எங்க ரூம்ல எதிர்பார்க்கிறோம்.”
 
என்று சொல்லிவிட்டு,
 
இந்துவும் சஞ்சுவும்,
 
திஷாவையும் தான்வியையும் பார்த்து தீப்பொறி தெறிக்கும் முறைப்பு ஒன்றை உதிர்க்க,
 
அந்த முறைப்பில்—
 
எச்சரிக்கையும், சவாலும்,
 
‘இது முடிவல்ல’ன்னு சொல்லாத வார்த்தையும் இருந்தது.
 
பிறகு, அவர்கள் அங்கிருந்து நகர்ந்தார்கள்.
 
பின்னால்,
 
மைதிலி மட்டும்—
சிதறிய துணிகளுக்கும், சிதறிய நம்பிக்கைக்கும் நடுவே கலங்கி நின்றிருந்தாள். என்ன முடிவெடுப்பது என்று அவளுக்கு தெரியவில்லை.
இந்துவையும் சஞ்சுவையும் பார்த்தாலும் பெரிய இடத்துப் பிள்ளைகள் மாதிரி தான் தெரிந்தது. இவர்களை பிரண்ட்ஸாக ஏற்றுக் கொள்ள தகுதி தனக்கு இருக்கிறதா என்று தாழ்வு மனப்பான்மை தான் முதலில் அவளுக்கு தலை தூக்கியது.
 
தான்வியும் திஷாவும் தன்னைத் துரத்தியதை விட, இந்துவும் சஞ்சுவும் தன்னைத் தற்காத்துப் பேசியது அவளுக்குப் புதிய பயத்தைத் தந்தது. அவமானங்கள் அவளுக்குப் பழகிப்போயிருந்தன, ஆனால் இந்தப் புதிய அன்பை ஏற்றுக்கொள்ள அவளுக்கு ரொம்பவே தயக்கம். 
 
என்னால் அவர்களுக்கு ஏன் பிரச்சனை?
 
ஆனால் அவர்கள் அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்  வேறு எங்கே போவது என்ற குழப்பம்.
 
யோசித்தபடியே நின்றிருந்தாள்.
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 12 months ago
Posts: 144
Topic starter  
ஜானகி மந்திரம் 8 A
 
ரூம் நம்பர் 143 
 
SSG லேடிஸ் ஹாஸ்டலின் B Block, மூன்றாவது மாடியில், கார்னர் ரூம்.
மூன்று single cot, ஓரமாக study table, ஒரு பெரிய cupboard, window-க்கு அப்பால் மரங்களின் பச்சை.
 
ஏசி இல்லையென்றாலும்,ceiling fan, inverter light, electric kettle, books shelf, ironing board —
“எல்லா வசதியும் இருக்கு”ன்னு சொல்லும் ரூம்.
 
ஆனால்…
 
அந்த வசதிகளுக்கிடையே chair மேல் வீசப்பட்ட சுடிதார், bed ஓரத்தில் மடிக்காத jeans,
table கீழே slippers, cupboard கதவிலிருந்து தொங்கும் dupatta.
ஒரு சராசரி bachelor girls room-க்கு எவ்வளவு அலங்கோலங்கள் இருக்குமோ அவ்வளவும் இருந்தது.
 
இந்துவும் சஞ்சுவும் உள்ளே இருந்தார்கள்.
அவர்கள் இங்க வந்து இருபது நிமிடம் ஆகியிருந்தது .
 
இந்து மொபைல் ஸ்கிரீனில் டைம் பார்த்தபடியே, “வந்துருவாளா?” என்று கேட்டாள்.
 
சஞ்சு பதில் சொல்லவில்லை.
 
இந்து: “என்னமோ தெரியல… அவளைப் பார்க்கும் போது மனசுக்குள்ள ஒரு இனம் புரியாத பாசம் வருது.”
 
சஞ்சு bed-ல சாய்ந்தபடியே, “எனக்கும் தான்,” என்றாள்.
“வறுமையான familyன்னு தெரியும். ஆனா அதையும் தாண்டி… அவளுக்குள்ள
ஏதோ நிறைய கஷ்டம் இருக்கிற மாதிரி தோணுது. போதாதுக்கு கலர் ஷேமிங், பாடி ஷேமிங்ன்னு பஹுத் பரேஷான் கர்தே ஹைன் (ரொம்ப தொந்தரவு பண்றாங்க). எல்லாருக்கும் பண திமிரு...
ரொம்ப கஷ்டப்படுத்துறாங்களேன்னு  கோவம் தான் வருது. "
 
ஒரு நொடி அமைதி.
 
சஞ்சு: “ எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் அதை வெளியில சொல்லி பரிதாபம் சம்பாதிச்சிக்கிற கேரக்டர் மாதிரியோ, விக்டிம் கார்டு ப்ளே பண்ற கேரக்டர் மாதிரியோ தெரியல. எல்லாத்தையும் உள்ளுக்குள்ள போட்டு அமுக்கிக்கிட்டு கல்லு மாதிரி நிக்கிறா. கிஸி ஸே பாத் தக் நஹி கர்த்தி (யார்கிட்டயும் பேசுறது கூட கிடையாது).  I really like her.
 
இந்து: கஷ்டப்படுற பேமிலில இருந்து வந்ததுனால may be இங்க இருக்கக்கூடிய பணக்கார பசங்களை பார்க்கும்போது அவளே தள்ளி நிக்கிறான்னு நினைக்கிறேன். ஷாயத் வோ டர் ரஹி ஹை (ஒருவேளை அவ பயப்படுறாளோ என்னவோ)... எனக்கு என்ன சந்தேகம்னா
நம்ம பிரண்ட்ஷிப்பை அவ ஏத்துக்குவாளா?" என்றாள்.
 
தங்களையும் இந்த பணத்திமிர் நிறைந்த கூட்டத்தில் ஒரு ஆளாக அவ நினைத்திருப்பாளோ என்ற சந்தேகம் அவர்களுக்கு..
 
இந்து வாசல் பக்கம் திரும்பி, “இருபது நிமிஷம் ஆயிடுச்சு… இன்னும் என்ன பண்றா?…”
என்று சொல்லும் போதே— வாசலில் நிழலாடியது.
 
பெரிய பேக். கையில் புத்தகங்கள். மற்றொரு கையில் ஒரு சிறிய பெட்டி.தூக்க முடியாமல் சற்று தள்ளாடியபடி மைதிலி.
 
அவளைப் பார்த்த அந்த நொடியில—
 
இந்துவும் சஞ்சுவும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் பார்த்துக் கொண்டார்கள்.
 
அந்த காலேஜில், இவர்கள் பார்த்த முகங்கள் எல்லாமே ஆடம்பரமும், அலட்டலும், அதிகாரமும் தான்.
 
ஆனால்—
 
மைதிலி ஒருத்தி முகத்தில் மட்டும் அந்த இடத்துக்கே சம்பந்தமே இல்லாத ஒரு கிராமத்து வாசமும் பாசமும் இருந்தது.
 
அறிவும் அப்பாவித்தனமும் கலந்து அமைதியாக தோன்றும் ஒரு முகம்.அந்த முகம்தான்
இவர்களுக்கு பிடித்திருந்தது.
 
வாசலில் அவள் வந்து நின்ற அந்த நொடியில—
 
அவர்களுக்கு சொல்லாமலேயே தெரிந்து போனது.
அவர்கள் நட்பை ஏற்றுக்கொண்டு வந்து விட்டாள் என்ற மகிழ்ச்சி.
இரவு எட்டு மணி
 
பூனே நகரின் அந்த பணக்காரத்தனமான பகுதியில், நவீன கட்டிடக்கலையின் அபாரமான சாட்சியாக நின்றிருந்தது அந்த பங்களா. அதன் முகப்பில் துருப்பிடிக்காத இரும்பு எழுத்துக்களில் கம்பீரமாகப் பொறிக்கப்பட்டிருந்தது அந்தப் பெயர்: ‘தேஷ்முக் நிவாஸ்’ (Deshmukh Niwas).
பொதுவாக 'நிவாஸ்' என்றால் மங்களகரமான இல்லம் என்று பொருள். ஆனால், இந்த வீடு ஒரு mansion போலிருந்தது. நீல நிறக் கண்ணாடிகளும், கச்சிதமாகச் செதுக்கப்பட்ட சாம்பல் நிறக் கற்களும் பளிங்கு பரப்பை போல் ஜொலிக்கும். வீட்டின் பெயரைக் கொண்ட உலோக எழுத்துக்களின் கீழே பாய்ந்திருந்த மெல்லிய வெளிச்சம், ஒரு விளம்பரப் பலகையைப் போல அதன் உரிமையாளர்களின் அதிகாரத்தை அறிவித்துக் கொண்டிருந்தது.
 
விலையுயர்ந்த கொரியன் கிராஸ் பச்சை நிற மெத்தையைப் போல வீட்டின் முன்னால் பரந்து விரிந்திருந்தது. ஒரு புல் கூட அடுத்ததை விட உயரமாக வளர்ந்துவிடாதபடி, மெக்கானிக்கல் கட்டர்கள் கொண்டு தினமும் தோட்டக்காரனால் செதுக்கப்படும். கோட்டை சுவர் போல உயர்ந்து நிற்கும் காம்பவுண்ட் சுவரில் கரும்பச்சை நிற Hedges. மொத்தத்தில் அந்த வீட்டின் ஒவ்வொரு கல்லும், ஒவ்வொரு புல்லும் பணக்காரத்தனத்தை சத்தமில்லாமல் பிரகடனம் செய்து கொண்டிருந்தன. இவ்வளவு விஸ்தாரமான அறிமுகம் எதற்கென்றால், அதுதான் நம்ம ஹீரோ மனோவின் பங்களா.
 
இரவு 8 மணி.
 
பங்களாவின் வரவேற்பறையில் ஒரு அதிகாரப் போர் நடந்து கொண்டிருந்தது.
 
மனோவின் அப்பா: யஷ்வந்த் ராவ் தேஷ்முக். அவரது கையில் 2003-ன் அந்த தடிமனான Nokia 6600 மொபைல்.
 
அம்மா: சுலோச்சனா தேஷ்முக். கையில் ஒரு வைரக் கல் பதித்த 'கிளட்ச்' பை.
 
"சுலோச்சனா, இந்தத் தடவை டெல்லி பிசினஸ் டூர்ல நீ என் கூட வந்தே ஆகணும். அங்க இருக்கிற இன்வெஸ்டர்ஸ் முன்னாடி நம்ம ஃபேமிலி இமேஜ் ரொம்ப முக்கியம்," - யஷ்வந்த் ராவின் குரலில் அன்பு இல்லை, ஆணை இருந்தது.
 
சுலோச்சனா சிரித்தாள். சிரிப்பில் பெரும்பகுதி கோபம் "உங்க பிசினஸுக்காக நான் ஏன் என் ஃபேஷன் ஷோ கமிட்மென்ட்ஸை விடணும்? நாம ரெண்டு பேரும் ஒண்ணா வெளியில போய் எவ்வளவு வருஷம் ஆச்சுன்னு ஞாபகம் இருக்கா? பிசினஸ் கமிட்மென்ட்ன்ன உடனே கூப்பிடுறீங்க?"
 
அவர்கள் இருவரும் அடிப்படையில் மோசமானவர்கள் இல்லை. ரெண்டு பேருமே செல்வ செழிப்பான் குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். யஷ்வந்த் ராவ் இரவு பகலாக ஃபேமிலி பிசினஸ்க்கு உழைப்பவர், சுலோச்சனா தன் சமூக வட்டத்தில் நற்பெயர் கொண்டவர். ஆனால், எப்போது ஒருவரை ஒருவர் சந்தித்தாலும், அந்த 'நல்ல குணங்கள்' எங்கே போகின்றன என்று மனோவுக்கே தெரியவில்லை. அவர்கள் இருவருக்குமான misunderstanding கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து,  ஈகோ யுத்தமாக பரிணமித்து, பல ஆண்டுகளாக இந்த வீட்டின் சுவர்களை அதிர செய்திருந்தது. சில நேரங்களில் காது ஜவ்வு கிழியுமளவுக்கு சண்டை நடக்கும். இப்போது உங்களுக்கு புரிந்திருக்குமே ஏன் மனோ பைக் ரேஸ், புட்பால், கிரிக்கெட், பிரண்ட்ஸ் என்று வெளியிலேயே சுத்தி கொண்டு இருக்கிறான் என்று...
 
மாடியில் அவனது தனி பெட்ரூம். கீழே நடக்கும் சத்தங்கள் அங்கே கேட்கவில்லை. கதவை மூடிவிட்டு, தனது தனி உலகத்தில் மூழ்கியிருந்தான் மனோ.
காதில் Sony-யின் தடிமனான ஹெட்ஃபோன்கள். 17 இன்ச் CRT மானிட்டரின் நீல நிற வெளிச்சம் அவன் முகத்தில் பிரதிபலித்தது. சிபியு-வின் உள்ளே இருக்கும் ஃபேன் வேகமாகச் சுழலும் சத்தம் அந்த அறையின் நிசப்தத்தைக் கலைத்துக் கொண்டிருந்தது.
 
திரையில்: 'Need for Speed: Hot Pursuit 2'.
 
அவன் ஒரு லம்போர்கினி காரில் போலீஸ் கார்களை முந்திச் செல்ல முயன்று கொண்டிருந்தபோது, திரையின் வலது கீழ் மூலையில் ஒரு 'டிரிங்' என்ற சத்தத்துடன் ஒரு சிறிய விண்டோ பாப்-அப் ஆனது. அது MSN Messenger.
அவனது நண்பர்களின் குரூப் சேட் ஜன்னலில் மெசேஜ்கள் பறந்து கொண்டிருந்தன.
 
சிக்கி (Chikki_Bajrang): "டேய் மனோ! ஆன்லைன்ல இருக்கியா? நாளைக்கு காலேஜ்ல அந்த ரோமியோ ஜூலியட் ஆடிஷன் நடக்குது. ஸ்ரேயா உன்னதான் தேடிட்டு இருக்கா!
 
பாபி (Bobby_Cool): "அவன் எங்க ரிப்ளை பண்ணப்போறான்? இப்போ ஏதாவது ரேசிங் கேம்ல மூழ்கியிருப்பான்..."
 
மனோ ஒரு கணம் கேமை 'பாஸ்' (Pause) செய்தான். தன்  கீபோர்டில் வேகமாக தட்டினான்.
 
மனோ (Mr_phantom): "இருக்கேன்டா. நாளைக்கு காலேஜ்ல மீட் பண்ணலாம். இப்போ ஒரு முக்கியமான போலீஸ் சேஸ்ல  இருக்கேன். Bye!"
 
சிக்கி (Chikki_Bajrang): "டேய் பாபி! அவன் விளையாடிட்டு போகட்டும.  Chat room la ஒரே மொக்கையா இருக்குடா. பிரைவேட் மெசேஜ்ல பேசலாம்..."  
 
பாபி அவனுக்கு ரிப்ளை செய்யவில்லை...
 
சிக்கி (Chikki_Bajrang): டேய் தெரியும்டா! என்ன கழட்டி விட்டுட்டு ஏதோ ஒரு ஃபிகர் கூட தானே பேசிகிட்டு  இருக்க... என்னைக்காவது ஒரு நாள் என்கிட்ட கையும் களவுமா சிக்க போற.. அன்னைக்கு உன்னை உரிக்க போறேன்...
 
இப்போதும் பாபியிடம் நோ ரிப்ளை
 
தொடர்ந்து மெசேஜ் வந்து கொண்டு இருந்ததால், மனோ மெசஞ்சர் விண்டோவை மினிமைஸ் செய்துவிட்டு மீண்டும் கேமில் மூழ்கினான்.
 
சிறிது நேரத்திற்குப் பிறகு,  சுலோச்சனாவின் மெர்சிடிஸ் கார் புறப்படும் சத்தம் ஜன்னல் வழியாக கேட்டது. அதைத் தொடர்ந்து வீட்டில் இடுகாட்டு அமைதி.
 
மனோ மெதுவாக ஹெட்செட்டைக் கழற்றி மேஜையில் வைத்தான். அந்தப் பிரம்மாண்டமான 'தேஷ்முக் நிவாஸ்' மாளிகையை ஒருமுறை நினைத்துப் பார்த்தான். கோடிக்கணக்கான பணம் கொட்டிக் கிடக்கும் அந்த வீட்டில், அவனுக்கு குடிக்க ஒரு கிளாஸ் தண்ணீர் கூட  கிடைக்கப் போவதில்லை. எல்லாருமே பிஸியாக இருக்கிறார்கள் அன்பும் பாசமும் வாய்ப்பே இல்லை. ஒரு சில நொடிகள் நிதர்சனம் தாக்க, அதை ஓரங்கட்டி வைத்து விட்டு மறுபடியும் கேமில் மூழ்கினான்.
SSG காலேஜ் லேடிஸ் ஹாஸ்டல் 
ரூம் நம்பர் 143 – அதே நேரம்
 
மைதிலி சொல்லி முடித்திருந்தாள்.
 
ரூமுக்குள்ள ரொம்ப நேரம் அமைதி
 
யாரும் பேசவில்லை.
 
Fan சுழலும் சத்தம் மட்டும்.
 
சஞ்சு bed-ல உட்கார்ந்திருந்தாள்.
 
இந்து study table ஓரத்தில் நின்றிருந்தாள்.
 
இருவரின் கண்களிலும்
ஈரம்.
 
சஞ்சு தன் கண்களை துடைத்துக் கொண்டு,
“எப்படி… எல்லாத்தையும் தாங்கிக்கிட்ட?” என்று கேட்டாள்.
 
மைதிலி புன்னகைத்தாள்.
 
“தாங்கிக்க முடியல தான்,” என்றாள்.
 
“கொஞ்சம் கொஞ்சமா கத்துக்குறேன்.”
 
சஞ்சு –
 
Sleeveless T-shirt, loose night pants.
 
இந்து – three fourths,  tank top.
 
நடுவில் நின்ற மைதிலி மட்டும்,, துவைத்து துவைத்து கலர் கம்மியாகி போன ஒரு பழைய சுடிதார்.
 
மைதிலி தொடர்ந்தாள்,
“என்னோட லட்சியம் எல்லாம், எப்படியாவது… எங்க அம்மாவுக்காகவாவது
நான் நல்ல நிலைமைக்கு வரணும்,” என்றாள்.
 
“அவளை சந்தோஷமா பாத்துக்கணும். எவ்வளவு நாள் தான் மாமா வீட்ல அவ கஷ்டப்படுவா???..."
 
சஞ்சு மனதில் இனம் புரியாத பாரம்.
 
“இந்த காலேஜுக்கு வருவேன்னு நினைச்சு கூட பாக்கல. எப்படியோ வந்துட்டேன்.  எனக்கு நிறைய குறைகள் இருக்கு. அதையெல்லாம் overcome பண்ண முடியுமான்னு தெரியல. எல்லாம் ஒரு முயற்சி தானே, ஒவ்வொரு நாளும் ஒரு போராட்டம் தான். தத்தளிச்சு நீந்திக்கிட்டு இருக்கேன்."
 
மைதிலியின் அலுப்பான குரலுக்குள்
கொஞ்சூண்டு தன்னம்பிக்கை தெரிந்தது.
 
மைதிலி ஒரு நொடி தயங்கி, “உங்களுக்கு கஷ்டம் வரக்கூடாதுன்னு தான்… முதல்ல நான் தயங்குனேன். எனக்காக யாருக்கும் பிரச்சனை வேண்டாம்.”
 
சஞ்சு உடனே, “என்ன பிரச்சனை? DSG குரூப்பா?”
 
மைதிலி தலையாட்டினாள்.
 
“அவங்கள விடு,” என்றாள் சஞ்சு.
 
“உனக்கு ஏதாவது பண்ணனும் தோணுது.  என்ன வேணும்
சும்மா சொல்லு.”
 
இந்து, “ஆமா. எனக்கு ஏதாவது பண்ணணும்னு தோணுது. என்ன வேணும்?”
 
மைதிலி சொடக்கு போடப் போவது போல் கைவிரல்களை கோர்த்தாள்.
 
பின்னர் தயங்கி தயங்கி “ஒரு ஹெல்ப்… உங்களால பண்ண முடியுமா?” என்று இழுத்தாள்
 
இந்து: “என்ன வேணும்னாலும் கேளு.”
 
மைதிலி: “Competitive exam prepare பண்றேன், நிறைய செலவாகுது. என்னால afford பண்ண முடியல .Part-time job போனா நல்லா இருக்கும். Lonavala ஹோட்டல்ஸ்ல
Part time வேலை கிடைக்கும்னு paper-ல பார்த்தேன்.”
 
ஒரு நொடி.
 
“ஹாஸ்டல்ல இருந்து வெளிய போய் வர
வார்டன் கிட்ட permission
வாங்கித் தர முடியுமா?”
 
இந்து–சஞ்சு ஒருவரை ஒருவர் பார்த்தார்கள்.
 
சஞ்சு புன்னகைத்தாள். “நான் வேற ஏதோ கேட்க போறேன்னு நெனச்சேன். இவ்வளவுதானா?  இதுக்கு எதுக்கு நீ வேலைக்கு போகணும்? என்ன பெரிய செலவு? நாங்க கொடுக்க மாட்டோமா?”
 
மைதிலி மறுப்பாய் தலையாட்டினாள்.
 
“இல்ல. அடுத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்கிறதுக்கு
எனக்கு விருப்பமில்லை.”
 
இந்து சற்று கடுப்பாக, “இதெல்லாம் கஷ்டமே கிடையாது. தண்ட செலவு
எவ்வளவோ பண்றோம்.
ஒரு நல்ல விஷயத்துக்கு help பண்ணா என்ன?”
 
மைதிலி அமைதியாக, “அதெல்லாம் வேண்டாம்.
நான் கேட்ட ஹெல்ப்பை மட்டும் பண்ணுங்க. அது போதும் please.”
 
சஞ்சுவும் இந்துவும் அவளை ஆச்சரியமாக பார்த்தார்கள்.
 
அந்த நிமிடம் வரை அவர்களுக்குத் தெரிந்த உலகம் வேறு. தேவைகளுக்கும், ஆசைகளுக்கும், ஆடம்பரத்திற்கும் அடுத்தவரைச் சார்ந்திருக்கும் மனிதர்களையே அவர்கள் அதிகம் பார்த்திருக்கிறார்கள். ஆனால், தன் முன்னே நிற்பவள் முற்றிலும் வேறானவள் என்பது அவர்களுக்குப் புரிய தொடங்கியது.
'எல்லாவற்றையும் இழந்துவிட்டு நிற்கும் நிலையிலும், இவளால் எப்படி இவ்வளவு உறுதியாக இருக்க முடிகிறது? அவளுக்குக் கொடுக்கப்படும் அனுதாபத்தை விட, தன் சுயமரியாதையே முக்கியம் என்று நினைக்கிறாளே!'
 
வியப்பும்,
 
மரியாதையும்,
 
புதிய நட்பும்
 
மெல்ல உருவாகிக் கொண்டிருந்தது.
 
தொடரும்


   
ReplyQuote

You cannot copy content of this page