ஜானகி மந்திரம் 1
முன்குறிப்பு:
2000 வருடங்களின் ஆரம்ப காலகட்டத்தில் நான் மும்பையில் இருக்கும் போது, என் நண்பன் மூலமாக கேள்விப்பட்ட கதை. அந்த உண்மை கதையில் கற்பனை முலாம் பூசி இருக்கிறேன்.
25 வருடங்களுக்கு முன்னால், உண்மையான காதல்கள் உயிரோடு இருந்த காலகட்டத்தில் நடந்த கதை என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
இப்போதைய காலகட்டங்களில், நிகழ்ந்து கொண்டிருக்கும் (பெரும்பான்மையான) உருட்டு காதல்களை மனதில் வைத்து படித்து cringeசாக தோன்றினால், நிர்வாகம் பொறுப்பல்ல...
2010, March 30
மும்பை சாண்டா குரூஸ் டொமஸ்டிக் ஏர்போர்ட்டில், பெங்களூரில் இருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்கி கொண்டிருந்தது. விமானம் தரையை தொட்டு ஓடி, திரும்பி, வேகம் குறைந்து நின்றதும், மைதிலி ஒரு பெருமூச்சை ரிலீஸ் செய்தாள். அவள் டைம் பார்க்கும் ரிஸ்டு வாட்சில், நாமும் எட்டிப் பார்த்தால், மணி இரவு 7:10. ஜன்னல் வழியே விமான நிலைய கட்டிடங்களும், அதன் கண்ணாடி சுவர்களும் நிறம் நிறமாய் தெரிந்தது.
விமான பயணம் உண்மையிலேயே செம போர். பஸ் ட்ரைனாவது பரவாயில்லை. வயல்கள், வேலை செய்யும் விவசாயிகள், நீர் நிலைகள், தூரத்தில் தெரியும் மலைகள், தோப்புகள், செடி கொடிகள், கிராமங்கள், நகரங்கள், வீடுகள், குடிசைகள், சாலைகள், கையாட்டி சிரிக்கும்
குதூகலக் குழந்தைகள்,
வெட்கத்தை அலசிக் காயப்போடும்
குளத்தங்கரை குயில்கள்
என ஜன்னல் வழி
இயற்கையின் வண்ணங்களுடன்
ஓவியக் கண்காட்சி! எவ்வளவு முறை பயணம் செய்தாலும் சலிக்காது.
விமான பயணத்தில்,
வானம், மேகம், கடல்.. முதல் பயணத்தில் தெரியும் ஆச்சரியம் அதன் பிறகு சத்தியமாக இருக்காது.
ஏர் ஹோஸ்டஸ்களின் செயற்கை புன்னகை, உப்பு சப்பில்லாத உணவு, இயந்திரத்தனமான முகங்கள், பிடிக்காத மேத்ஸ் கிளாசில் இருப்பது போல் வெறுப்படிக்கும் இறுக்கம்.
இன்னொரு தரம் என்ன ஆனாலும் சரி, பிளைட் ட்ராவலை தவிர்க்க வேண்டும்.
முதுகில் படியை தாங்கிய வேன் ஒன்று விமானத்தின் கதவருகே சென்று படியை பொருத்திக்கொள்ள, கதவு திறந்தது, எல்லோரும் படிக்கட்டு வழியாக ரன்வேயில் இறங்க, ஏழாவதாக மைதிலி படிக்கட்டுகளில் இறங்கும்போது, மும்பை ஆகாயத்தை பார்த்தாள். மனசில் வார்த்தையில் வடிக்க முடியாத பாரம். தொண்டையை ஏதோ ஒரு இரும்பு கரம் கவ்வ, உள்ளுக்குள் சொல்ல முடியாத உணக்கம் தோன்றி மறைந்தது.
காலம் எல்லா காயங்களையும் ஆற்றும் என்று சொல்வார்கள், ஆனால் அந்த கோட்பாட்டை சோதிக்கும் அளவுக்கு, நாம் நீண்ட காலம் வாழ்வதில்லை. ஒருவேளை காலம் எல்லா காயங்களை ஆற்றினாலும், காயங்கள் ஏற்படுத்திய தழும்புகளை நிச்சயமாக அழிக்காது.
மறுபடியும் ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, லௌன்ஜை நோக்கி சென்றாள். மெருன் நிற சுடிதார், எம்பிராய்டரி வேலைப்பாடு நிறைந்த துப்பட்டா, ரவிவர்மா ஓவிய பெண்களைப் போல், கூந்தல் பின்புறமாக பிரிந்து இருந்தது.
மும்பை விமான நிலையம் மின்சார அபிஷேகத்தில் மின்னியது. லௌன்ஜில், ஆரஞ்சு வர்ண பாலிமர் நாற்காலிகளில் கசங்கல் இல்லாத உடை அணிந்தவர்கள் உட்கார்ந்திருந்தார்கள், நின்றிருந்தார்கள், சின்ன சின்ன குழுக்களாக பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னர் சர்க்யூட் டெலிவிஷன்களில் விமானங்கள் பற்றிய செய்திகள் கம்ப்யூட்டர் எழுத்துகளாக ஓடிக்கொண்டிருந்தன. விமானங்கள் வருவதையும் போவதையும் ஒரு ஐஸ்கிரீம் குரல் அறிவித்துக் கொண்டிருந்தது.
டைட் டி-ஷர்ட் ஜீன்ஸில் சென்ற ஒரு பெண்ணை, கூலிங் கிளாஸ் இளைஞர்கள் குரூப் பார்க்காதது போல் பார்த்தார்கள். யாரோ யாருடைய கைகளையோ பிடித்து குலுக்கினார்கள், யாரோ யாரையோ கட்டிப்பிடித்தார்கள். யாரோ சிரிக்கிறார்கள், யாரோ சிரிக்க வைக்கிறார்கள், ஒரு குழந்தை அழுகிறது, ஒரு தாய் சமாதானப்படுத்துகிறாள், மாலையுடன் ஒரு சிறிய கூட்டம் காத்திருந்தது. ட்ராலிகளில் பெட்டிகளை வைத்து தள்ளிக்கொண்டு சென்றார்கள்.
சுழலும் தடத்தில் பெட்டிகளுக்காக மைதிலி காத்திருந்தாள்.
பெங்களூரு டெக்னோநெட் ஆபீஸ் ட்ரெய்னிங் டிபார்ட்மென்ட் மேனேஜராக இருக்கிறாள். வருடத்திற்கு ஒருமுறை இந்தியாவில் இருக்கும் 10 பிரான்ச் ஆஃபீஸை சேர்ந்த மேனேஜரியல் லெவல் ஆபீஸர்களுக்கு செமினார் cum ஒர்க்ஷாப் மும்பை ஹெட் ஆஃபீஸில் நடக்கும். அதில் கலந்து கொண்டு ஒரு ஸ்பீச் கொடுப்பதற்காகவும், அதன் பிறகு, UK அக்கவுண்ட் ப்ராஜெக்ட் onsite வாய்ப்பு அவளுக்கு கிடைத்திருப்பதால்,
அப்படியே லண்டன் செல்ல இருப்பதாலும் தான் இந்த பயணம்.
போனை உயிர்ப்பித்து, ஹெட் ஆபீஸ் அட்மின் டிபார்ட்மெண்ட்க்கு அவள் வந்து சேர்ந்த தகவலை தெரிவித்தாள். அவள் தங்குவதற்காக ரூம் புக் செய்யப்பட்டிருந்த ஹோட்டல் டீடெயில்ஸ், அவளை அழைத்து செல்வதற்காக அனுப்பப்பட்டிருந்த கம்பெனி கேப் பற்றிய டீடைல்ஸ்சை தெரிவித்து, மெசேஜும் செய்தார்கள்.
கன்வேயர் பெல்ட் அருகே பெட்டிக்களுக்காக நின்றிருந்த மைதிலி சுத்திலும் பார்வையை சுழல விட்டாள்.
இளைஞன் ஒருவன் அவளை ஸ்கேன் செய்தபடி சென்றான். அவன் ஸ்கேனிங்கை மைதிலி கவனித்தாள்.
"பார்க்க கூடாதா? இளைஞன், அதுவும் சின்ன வயசு பையன்... யாருக்கு என்ன பிரச்சனை? சின்ன ஒரு என்டர்டைன்மென்ட் தானே.. பாத்துட்டு போகட்டும்.."
யாராலும் கவனிக்கப்படாமல், நிராகரிக்கப்பட்டு, அலட்சியம் செய்யப்பட்ட காலகட்டங்கள் அவள் ஞாபகத்துக்கு வந்தன.
அவளுக்கு சிரிப்பு வந்தது. யாருக்கும் தெரியாத சிரிப்பு.
ஒரே பாட்டில் தலைகீழாக எதுவும் மாறிவிடவில்லை. அவள் சார்ந்த உலகத்தை திரும்பி பார்க்க வைக்க ஆறு வருடங்களும், தீவிர உழைப்பும், முயற்சியும் அடங்கி இருக்கிறது.
வாழ்க்கையின் இந்த கிறுக்குத்தனங்கள் அவளுக்கு பிடித்திருந்தது. இது கிறுக்கா? இல்லை, சுவாரஸ்யமா? அல்லது manufacturing போது மூளையில் ஏற்பட்ட கோளாறா?
அவ்வளவு ஜனங்களுக்கு மத்தியிலும், மூலையில் நின்றிருந்த ஒரு இளைஞன், அவனருகே நின்ற ஒரு இளைஞி மேல் அவள் பார்வை பதிந்தது.
பார்த்ததுமே காதலர்கள் தான் என்று புரிந்தது. இருவரில் யாரோ வெளியூருக்கு செல்கிறார்கள், மற்றவர் அவரை வழியனுப்ப வந்திருக்க வேண்டும்.
இயல்பான ஆர்வத்தில் மைதிலி அவர்களைப் பார்த்தாள். அவர்கள் இருவரின் விரல்களும் தொட்டு தொட்டு மீண்டன. வாயால் பேசுவதை விட கண்களால் அதிகம் பேசிக் கொண்டனர். அவள் கண்களில் கண்ணீரின் பளபளப்பு. அவன் ஏதேதோ சொல்லிக் கொண்டிருக்க, அவள் குழந்தைகள் அடம்பிடிப்பது போல்... இல்லை, இல்லை என்று தலையாட்டிக் கொண்டிருந்தாள். அனேகமாக இவன் தான் எங்கேயோ வெளியூருக்கு போகிறான் போல... அதனால் சமாதானப்படுத்துகிறான் என்று யூகித்தாள்
கன்வேயர் பெல்ட்டை விட்டுவிட்டு, மைதிலி முழுவதுமாக அவர்களைப் பார்க்க ஆரம்பித்தாள்.
சற்று நேரத்தில் ஏதேதோ பேசி அவன் கேர்ள் பிரண்டை சமாதானப்படுத்தினான். அவள் உதட்டோரம் புன்னகை கசிந்தது.
சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு, அவளின் இடுப்பு சரிவில் கை பதித்து கிள்ளினான். அவளும் தொடுதலை ரசித்தாள் என்று தான் மைதிலிக்கு தோன்றியது. இருந்தாலும் போலி கோவத்துடன் கையில் வைத்திருந்த வேலட்டால், அவன் தோளில் ஒரு செல்ல தட்டு தட்டினாள்.
"அவ்வளவு வெளிச்ச வெள்ளத்திலும், எவ்வளவு இயல்பா ஒரு லவ் சீன் அரங்கேறிக் கொண்டிருக்கிறது?"
அனிச்சையாக மைதிலி இதழோரம் புன்னகை.
மறுபடியும் அவன் கையை நீட்ட... சுத்திலும் யாராவது பார்த்துவிடுவார்கள் என்று அவள் தயக்கத்தில் கண்ணைக் காட்ட... அவன் பொருட்படுத்தாமல், இடுப்பை நோக்கி கையை நீட்டினான். பட்டென்று அவன் கையை தட்டி விட்டாள்.
காதல் நாடகம் தொடர்ந்து கொண்டிருந்தது.
பார்க்க பார்க்க மைதிலிக்கு, கண்களில் ஏக்கம்.
இப்படித்தானே எனக்கும் நடந்திருக்க வேண்டும்?
Alternative ரியாலிட்டியில், இதில் ஒன்று நானாகவும், மற்றொன்று அவனாகவும் இருந்தால் எப்படி இருக்கும்?
ஆக்டோபஸ் கரங்களாக... இழப்பின் வேதனை சுற்றி வளைக்க ஆரம்பித்தது.
அவளுக்கு ஏற்பட்ட சோகங்களுக்கு, நொந்து போன உள்ளத்துடன், காயம்பட்ட இதயத்துடன், உருக்குலைந்த உடம்புடன், தான் நடமாடிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் என்னதான் உள்ளுக்குள் ஆளை அமிழ்த்தும் அளவுக்கு மனபாரம் இருந்தாலும், புன்னகையை உதட்டில் பூசிக்கொண்டு தான் நடமாடுகிறாள்.
கன்வேயர் பெல்டில் அவளுடைய பெட்டிகள் வர, அக்டோபஸை தள்ளிவிட்டு, பெட்டிகளை எடுத்தாள்.
ஏர்போர்ட் வெளியே பார்க்கிங்கில், கம்பெனி கார் காத்திருக்கும். காரில் நேராக ஹோட்டலுக்கு சென்று விடலாம் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், கையோடு அவளை வர்ணித்து விடலாம்.
அவள் ஒரு நவீன அனாதை. டிசம்பர் வந்தால் 27 வயது. அம்மா, அப்பா, அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, யாருமே கிடையாது. அவள் அம்மாவும் 4 வருடங்களுக்கு முன்னால் வாழ்க்கை பயணத்தை முடித்துக் கொண்டாள். சொந்தம் என்று இருக்கும் மாமா குடும்பத்தினரிடமும், முதலில் இருந்தே அவளுக்கும் அவள் அம்மாவுக்கும் நல்ல உறவு கிடையாது. தற்போது whitefield, பெங்களூரில் சர்வ வசதிகள் நிறைந்த அப்பார்ட்மெண்ட் ஒன்றில் தனியாக ஜாகை.
மைதிலி அப்படி ஒன்றும் பிரமாதமான நிறம் என்று சொல்லிவிட முடியாது... திராவிட நிறம், அவள் தைரியமும் நம்பிக்கையும் முகத்தில் தெறிப்பதால், கருப்பு நிறம் dusky டோனாக ஜொலிக்கிறது. சிறுவயதில் கலர் ஷேமிங்கால் அவதிப்பட்டவள் தான். ஆனால் மாடல்களுக்கு இருப்பது போல் 360 டிகிரியில் அலைபாயும் கூந்தல். அகல அகலமான காதல் கண்கள், அபார நாசி, மாருதியின் ஓவிய பெண்கள் போல் உப்பிய கன்னங்கள். குவிந்த முத்தமிட தூண்டும் உதடுகள். வரிசை தப்பாத பல்வரிசை, அந்தப் பற்களில் தெரிந்த மின்னல்கள், நேர்த்தியான கழுத்து, அதற்கு கீழே!!!
திரண்ட அங்கங்கள். அவள் உடம்பின் திமிறல்களை பற்றி இங்கே சொல்ல ஆரம்பித்தால், அனாவசியமாக வாத்ஸ்யாயனர், அதிவீரராம பாண்டியர் எல்லாம் நினைவுக்கு வருவார்கள்.
ஒன்று மட்டும் நிச்சயம், அவள் முகத்தை கொஞ்ச நேரம் உத்து பார்த்தால், "நான்" தெரியாது, நட்பு தெரியும்.
ட்ராலியில் அவளின் பெட்டிகளை ஏற்றி வைக்க பயணி ஒருவர் உதவி செய்ய, தள்ளிக்கொண்டே வெளியே வந்தாள். கேப் டிரைவருக்கு போன் செய்யவும், அவன் வந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டான்.
மைதிலி விமான நிலையத்தை விட்டு வெளிப்பட்ட போது லேசாக தூரிக் கொண்டிருந்தது. தூறலை ஏற்று கொண்டாள்.
கட் பண்ணினால், பாண்ட்ரா ஈஸ்ட்டில் இருக்கும், Trident ஹோட்டல் நோக்கி அவளை சுமந்து கொண்டு கம்பெனி கார் சென்று கொண்டிருந்தது.
மும்பை
நவீனமான, உயரமான, பளபளப்பான கட்டடங்கள், அகல அகலமான ரஸ்தாக்கள், பெரிய பெரிய பிளைஓவர்கள், கலைத்து விட்ட எறும்பு புற்று போல் ஜன நடமாட்டம், சோடியம் வேப்பரின் மஞ்சள் வெளிச்சம், மெர்க்குரி வேப்பரின் வெள்ளை வெளிச்சம், ஓனர்களுக்கு ஓயாமல் உழைக்கும் நீயான் விளம்பரங்கள், பலதரப்பட்ட வாகனங்கள். மும்பையின் உடல் மாறினாலும், முகம் மாறவே இல்லை ஆனால் அதை அனுபவிக்கும் மனநிலையில் அவள் இல்லை.
இரண்டு பிசியான ரோடு கைகுலுக்கும் இடத்தில் இருந்தது அந்த ஸ்டார் ஹோட்டல். ஹோட்டலின் வாசலில் கேபில் இருந்து உதிர்ந்து, டிரைவருக்கு நன்றி தெரிவித்து, டிப்ஸ் கொடுத்துவிட்டு போனசாக சிரித்தாள். சிரிப்பில் சினேகம்.
பச்சை ஊடுருவிய கண்ணாடி கதவை ஹோட்டல் ஆசாமி திறந்து விட புன்னகைத்தபடியே உள்ளே நுழைந்தாள். பல மேல்தட்டு, வெளிநாட்டு நபர்கள் நடமாடிக் கொண்டிருக்க, ஹோட்டல் ரிசப்ஷனில் செக்கின் செய்தாள். ஹோட்டல் பணியாளர் லக்கேஜை எடுத்துட்டு வருவாரு, நீங்க முன்னால போங்க என்று ரிசெப்ஷனிஸ்ட் சொன்னதும்,
கீ வாங்கிக்கொண்டு, லிப்டை நோக்கி சென்றாள்.
காத்திருந்தாள், காத்திருந்தாள்,
காத்... லிப்ட் வந்தது, நுழைந்தாள்.
நான்காவது மாடியில் வெளிப்பட்டாள். திரும்பிய பக்கமெல்லாம் கிரானைட், தேக்கு கடைசல்கள். சாண்டல்ஸ் சத்தம் அதிகம் எழுப்பாமல், கார்பெட் தரையில் மெத்து மெத்தென்று நடந்து, ரூம் நம்பர் 111 ஐ திறந்து, உள்ளே நுழைந்தாள்.
இரவு 9 மணி
ஏர் கண்டிஷன் ரூம். டாய்லட்ட்ரீஸ், காபி கிட், டிஷ்யூ ஃபாக்ஸ், லைட்டிங்குடன் முழு நீள கண்ணாடி, பிளாட் ஸ்கிரீன் டிவி, பாத்ரோப் என ஐந்து நட்சத்திர ஹோட்டலின் அனைத்து வசதிகளும் இருந்தன.
சரக்.... ஜன்னல் திரைகளை இரண்டு கைகளால் விலக்கினாள். கண்ணாடி ஜன்னல்களுக்கு வெளியே நீயான்களின் நீல சிகப்பு ஜாலங்கள், வாகனங்களின் வெளிச்ச பொட்டுகள். இடைவெளி விட்டு காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது.
இன்னும் மூன்று நாட்கள் தான் இந்திய காற்றை சுவாசிக்க முடியும் அதன் பிறகு நிரந்தரமாக இங்கிலாந்து வாழ்க்கை. எளிமையான வாழ்க்கையே அவளுக்கு போதுமானதாக இருந்தாலும், ஃபாரின் ஆஃபர் வந்தபோது அவள் ஒத்துக் கொண்டதற்கு வேறொரு காரணம் இருக்கிறது.
அது மட்டுமில்லாமல், உள்நாட்டிலேயே தனிமை தான் துணை என்ற போது, வெளிநாட்டில் இருந்தால் என்ன? சொந்த நாட்டில் இருந்தால் என்ன?
வாஷிங் மிஷினில் போட்ட துணிகளை போல, எண்ணங்கள் ஒன்றோடு ஒன்று முட்டி மோதி, பின்னிப்பிணைந்து சுழல ஆரம்பிக்க...
Stop....
ஜன்னலில் இருந்து நகர்ந்து, சுடிதாரை களைந்து, கிரீன் ஸ்ப்ரூஸ் பைஜாமாவுக்கு மாறினாள். களைப்பாக இருந்ததால், கட்டிலில் போய் பொத்தென்று விழுந்தாள். மேகங்களை வைத்து தைத்தார் போல் கட்டில் சுகமாக இருந்தது. டிவியை போட்டு ரிமோட்டை எடுத்து, சேனல்களை குத்துமதிப்பாக மாற்றினாள்.
டோர் பெல் சத்தம் கேட்டதும், சர்ட்டின் மேல் பட்டன்களை போட்டுக்கொண்டு, கதவை திறந்தாள். சக்கரம் பொருந்திய தள்ளு வண்டியில், நைட் டின்னர் வந்தது. கையுறை அணிந்த பட்லர் கிளாஸில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு serve பண்ணட்டுமா என்று கேட்க, "இல்ல, நானே பண்ணிக்கிறேன்", என்று அவள் சொன்னதும், பவியமாக வணங்கிவிட்டு வெளியேறினான்.
சாப்பிடாமல் மறுபடியும் கட்டிலில் போய் விழுந்தாள். அவளின் அழகான வளைவுகளை கட்டில் ஆசையோடு உள்வாங்கிக் கொண்டது.
அவளின் செல்போன் டயல்டோனை வெளியிட, திடுக்கென்று முழித்துக் கொண்டாள்.
அசதியில் அவளையும் அறியாமல் தூங்கி இருக்கிறாள். டிவியில் ஏதோ கார்ட்டூன் சேனல் ஓடி கொண்டிருக்க, சுவர் கடிகாரத்தை பார்த்தாள். மணி இரவு 10.30.
சார்ஜ் போட்டுருந்த செல்போனை உருவி, யார் கால் செய்வது என்று பார்க்க,
Call from இந்திரஜா, காலேஜ்மேட், கிளாஸ்மேட், ரூம்மேட்.
ஒரு காலத்தில் மைதிலிக்கு எல்லாமே, இந்துவும் சஞ்சுவும் தான்.
சஞ்சு???
சஞ்சனா.
சினிமாவில், கதைகளில்..
சில நேரங்களில், நாயகியை விட... நாயகியின் தோழிகள் அழகாகவும், அம்சமாகவும் அமைந்து விடுவதுண்டு. அப்படின்னா வேறு வழி இல்லை, இந்துவையும் சஞ்சுவையும் பற்றி சொல்லித் தான் ஆக வேண்டும்.
இந்துவுக்கு வெண் ரோஜா சருமம், சினிமா நட்சத்திரம் என்று சொன்னால் தாராளமாக நம்பலாம், தைரியமானவள்,
ஹாஸ்டல் காலங்களில் இந்துவின் பெப்பர்மென்ட் மணக்கும் மூச்சுக்காற்றை சுவாசிப்பது மைதிலிக்கு ஒரு அனுபவம்.
சஞ்சனாவுக்கு குழந்தைத்தனம் முடியாத முகம், கேட்பரிஸ் குரல், புன்னகை அச்சிடப்பட்டிருக்கும் உதடுகள், அசாத்திய கவர்ச்சியான பெரிய கண்களின் வெள்ளை பரப்பும், கருப்பு விழி வட்டமும் பார்ப்பவர்களை வரவேற்கும். இருவருக்கும் உடல் ரீதியான சிறப்பம்சங்கள் நிறைய இருந்தாலும், மைதிலிக்கு இருவரிடமும் அதிகமாக ஈர்த்த விஷயம். அவர்களின் நட்புதான்.
காலேஜ் முடிஞ்சதும் மைதிலி பெங்களூரிலும், இந்திரஜா புனேவிலும், சஞ்சனா நாசிக்கிலும்... காலத்தினால் ஆளுக்கொரு பக்கம் தூக்கி அடிக்கப்பட்டார்கள். ஒரு சில வருட தாம்பத்தியம் இந்துவுக்கும் சஞ்சுவுக்கும் உடலில் விரும்பத்தகாத மாற்றங்களை ஏற்படுத்தினாலும், அவர்கள் முகத்தின் கவர்ச்சி அப்படியே தான் இருந்தது.
மறுபடியும் கட்டிலில் படுத்தபடி, காலை அட்டென்ட் செய்து காதுக்கு ஒற்றினாள்.
இந்து: எப்படி இருக்க chutki?
காலேஜ் காலங்களில் குட்டியா, அன்பா, அவளின் அபிமானத்துடன் இருந்ததால்.... chutki.
மைதிலி: Ah you know...Another day another dollar.. நீ எப்படி இருக்க?
இந்து: cant complain...இப்ப எங்க இருக்கிற?
மைதிலி: மும்பை. போன வாரம் சொன்னேனே, அந்த செமினாருக்காக வந்திருக்கேன்.
லண்டனுக்கு நிரந்தரமாக இடம்பெயர்வதை சொன்னால், நிச்சயம் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். லண்டன் போனதும், அர்ஜெண்டாக கிளம்ப வேண்டிய சூழ்நிலை என்று சமாளித்துக் கொள்ளலாம். என்ன கொஞ்ச நாள் கோபித்துக் கொண்டு பேசாமல் இருப்பார்கள்! எப்படியாவது சமாதானப்படுத்தி விடலாம். பிரிந்து போவது அவளுக்கும் வலிக்கத்தான் செய்கிறது. இருந்தாலும்... இது வேறொரு வலியை குறைப்பதற்காக அவளே ஏற்றுக் கொள்கிற புதிய வலி.
அதென்ன வேறொரு வலி?
பொறுங்கள், உங்களுக்கே தெரிய வரும்.
இந்து: "ஏண்டி மும்பை வந்ததை என்கிட்ட ஒரு வார்த்தை சொன்னியா? நான் எதார்த்தமா கால் பண்ண போய், தெரிஞ்சுகிட்டேன்", என்று உரிமையாக கோபித்துக் கொள்ள,
மைதிலி: இப்பதான் வந்து சேர்ந்தேன். நாளைக்கு பொறுமையா பேசலாம்ன்னு நெனச்சேன். அது மட்டுமில்லாம ரெண்டு நாள் hectic schedule. உன் ஹஸ்பண்ட் எப்படி இருக்காரு? சிரிஷ் என்ன பண்றான்? மூணு வயசு தானே ஆகுது.
இந்து: ஆமா, ராகேஷுக்கு 24 மணி நேரம் பிசினஸ் தான். வாண்டு பையன் இவ்வளவு நேரம் வீட்டையே இரண்டாக்கிட்டு இப்பதான் சாப்பிட்டு படுத்து தூங்குறான். அவனை சமாளிக்கிறதுக்கு வீட்ல என்னையும் சேர்த்து நாலு பேரு.
அவளை தவிர்த்து, மீதி 3 பேர், மாமனார், மாமியார், மற்றும் வேலைக்காரி என்று மைதிலிக்கு தெரியும் என்பதால், விவரம் கேட்கவில்லை.
இந்து: நேர்ல பாத்து எவ்வளவு நாளாச்சு? இந்த தடவை என்ன பிளான்?
மைதிலி: பிளான்ல்லாம் ஒன்னும் இல்ல. ஃப்ரைடே சாட்டர்டே ஆபீஸ்ல வேலை இருக்கும். சண்டே ஈவினிங் அஞ்சு மணிக்கு பிளைட்.
இந்து: இந்த தடவையாவது மீட் பண்ணலாம்ல. சண்டே ப்ரீ தானே... இரு, சஞ்சனாவுக்கு con call போடுறேன்.
மைதிலி: ரெண்டு நாளா சரியா தூங்கலடி. Flight travel வேற. ரொம்ப டயர்டா இருக்கு. உன் ஹஸ்பண்ட்டும் வீட்ல இருப்பாரே. டிஸ்டர்பன்ஸா இருக்கும். நாளைக்கு பேசலாமே.
இந்து: அடி பின்னிருவேன், பேசாம இரு. என் புருஷன் ஆபீஸ் டூர் போயிட்டாரு. ஒரு வாரம் கழிச்சு தான் வருவாப்ல. சஞ்சு ஹஸ்பண்டு தான் பிரான்ஸ்ல இருக்காருல்ல. ராத்திரி மூணு மணிக்கு பண்ணாலும், அவளுக்கு பிரச்சனையே இல்லை. கண்டிப்பா கான்பிரன்ஸ் போடுறேன். ஒரு முக்கியமான விஷயம் இருக்கு.
அவளை hold போட்டுவிட்டு, சஞ்சனாவுக்கு கால் செய்து கொண்டிருந்தாள்.
போச்சு!!! குறைஞ்சது இரண்டு மணி நேரம் பேசுவாங்க!
இருந்தாலும் அவள் தடுக்கவில்லை. அந்த இரண்டு அழகு பிசாசுகளுக்கும் கல்லூரி காலத்தில் இருந்தே, மைதிலி மேல் அளவுக்கதிகமான அன்பும், அக்கறையும், உரிமையும் ஜாஸ்தி.
நீங்கள் கொட்டாவிக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறீர்கள் என்று புரிகிறது. ஏண்டா இந்த கதையை படிக்கிறோம் என்று நினைக்கிறீர்கள்! கரெக்டா?
பரவாயில்லை, கொட்டாவியை ரிலீஸ் செய்து விட்டு, தம் பிடித்து மேற்கொண்டு படியுங்கள்.
நம்ம மைதிலி வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை விவரிக்கும் முன்னால், அவளைப் பற்றியும், அவள் நண்பர்களை பற்றியும், அவள் வாழ்க்கை முறை பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம் தானே!
Wait, கான்பரன்ஸ் கால் கனெக்ட் ஆகிவிட்டது. கல்லூரி தோழிகள் இணைந்தால், இஷ்டத்துக்கு பேசுவார்கள். அதனால் கண்டு கொள்ளாதீர்கள்.
வழக்கமான நல விசாரிப்புகளுக்கு பிறகு,
சஞ்சனா: எவ்வளவு நாளாச்சு? இப்படி பேசி... ஆளுக்கொரு பக்கம் பிஸி ஆகிட்டோம். விஷயம் தெரியுமா? பிரணவி டைவர்ஸ்க்கு அப்ளை பண்ணிருக்காளாம்?
மைதிலி: எந்த பிரணவி?
சஞ்சனா: அதான் நம்ம ஆப்போசிட் குரூப். ஸ்ரேயாவோட லெப்ட் ஹேண்ட். காமர்ஸ் டிபார்ட்மெண்ட் லெக்சரர் ரேவந்தை கல்யாணம் பண்ணிக்கிட்டாளே... அவதான். ரெண்டு பேரும் செப்பரேட் ஆயிட்டாங்களாம். ஒரு வாரம் முன்னால ஒரு கல்யாணத்துல பார்த்தேன். மூக்கு சிந்திகிட்டு நடந்த பிரச்சினைல்லாம் கதை கதையா சொன்னா... ஹாஸ்டல்ல எவ்வளவு பிரச்சனை பண்ணாளுக, இப்ப எங்க பாத்தாலும் மாஞ்சி மாஞ்சி பேசுறா.
இந்து: அப்படியா, இது எனக்கு தெரியாதே! நம்ம கம்ப்யூட்டர் லேப் அட்டெண்டர் பசை பிரசாத் (பசவ பிரசாத்தை தான் அப்படி சொல்கிறார்கள்) கண்ணாலேயே ரேப் பண்ணுவானே... stroke வந்திருச்சாம்.
சஞ்சு: பொண்ணுங்கள தடவி தடவியே வந்திருக்கும். அப்புறம்... இன்னொரு விஷயம் தெரியுமா?
மைதிலி "ம்" கொட்டி கேட்டுக் கொண்டேருக்க, மற்ற இருவரும் மாற்றி மாற்றி சுவாரசியமாக காலேஜ் நண்பர்களின் லைஃப் ஹிஸ்டரியையும் பிரித்து மேய்ந்து கொண்டு இருந்தார்கள்.
நினைக்காதே!!!
அவனை பற்றி நினைக்காதே!!
மனசுக்குள் மெதுவாக கசிய ஆரம்பித்த அந்த எண்ணத்தை தவிர்க்க பார்த்தாள்.
புதைத்து வைத்திருந்த இடத்திலிருந்து,
மண்ணை கிழித்துக்கொண்டு முளைக்க தயாராக இருந்தான் "அவன்".
தொடரும்