All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

[Sticky] மயக்கம் 2

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 weeks ago
Posts: 9
Topic starter  

அத்தியாயம்: 2

 

காஞ்சி மாவட்டம் தான் நம் நாயகி பிறந்த ஊர். 

 

லக்ஷ்மி ஸ்பின்னிங் மில். 

 

அதன் உரிமையாளர் கோதண்டராமன். அவரின் ஒரே ஒரு மகள் தான் கோகோ. வயது 23. Bsc visual communication முடித்து விட்டு MBA படிப்பிலும் பட்டம் வாங்கி விட்டாள்.

 

அது என்ன கோகோ என்று நீங்கள் வினவுவது நன்கு விளங்குகிறது. 

 

"ஆக்சலி என்னோட பேரு கோகிலா. கோகோ என்னோட செல்லப் பேரு. அந்த பேரு வைக்க காரணமா இருந்தது என்னோட தமிழம்மா தான். தமிழ்ல அட்டடென்ஸ் எடுக்கும் போது கோதண்டோட கோகிலாங்கிறதுனால கோ.கோகிலான்னு கூப்பிடுவாங்க. அத என்னோட க்ளாஸ் பசங்க கேட்டு எல்லாரும் கோகோக்கி, கோகெக்கி கோலமாவு கோகிலான்னு கேலி பண்ணாங்க. 

 

அது ஆரம்பத்துல செம்ம கடுப்பா இருந்தது. ஆனா நம்ம கடுப்பு அடுத்தவனுக்கு குளுகுளுன்னு இருக்கவே கூடாது. அதுனால அதையே என்னோட பேரா சுருக்கி வச்சிக்கிட்டேன் கோகோன்னு. எப்படி. ஸ்டைலா இருக்கா?" 

 

இது தான் அவளின் குணம். தன் குறையையே நிறையாக மாற்ற முயல்பவள். 'உன்னால முடியாது' என விளையாட்டிற்கு சொன்னால் கூட, "I did it. " என்று செய்து முடித்துக் காட்டுபவள். 

 

எதிலும் வித்தியாசமாக இருக்க நினைக்கும் ஒரு துடிப்பான ஹைப்பர் ஆக்டிவ்வான மங்கை தான் நம் கோகோ. வாய் துடுக்கு கொஞ்சம் அதிகம் தான். அதை விட அதிகம் அவள் செய்யும் சேட்டை. கையும் காலும் சும்மாவே இருக்காது. இவை அனைத்தையும் காட்டிலும் அவளின் மூளை எதையாவது பரபரவென சிந்தித்துக் கொண்டே இருக்கும். எதற்கும் அலட்டிக் கொள்ளாத அவளுக்கு ஒரு லட்சியம் இருக்கிறது. 

 

அது என்னவென்றால்... 

 

"இந்தியோவோட சிறந்த பிஸ்னஸ் விமென்னா எனக்கு மத்திய அமைச்சர் கையால ஒரு விருது வேணும். அப்றம் இந்தியா மட்டுமில்ல உலகத்தோட பெஸ்ட் மேகசின்ல என்னோட முழு உருவ ஃபோட்டோ போட்டு, என்னோட சாதனைகள பட்டியல் எடுத்து பத்து பக்கத்துக்கு குறையாம என்னப் பத்தின ஒரு ஆர்டிகல் வரனும். அந்த அளவுக்கு சாதிக்கனும்."

 

எதில் என்றால் விளம்பரத்துறையில். 

 

சிறு வயதில் இருந்தே விளம்பரங்களில் மீது கொண்ட மோகம், ஒரு பொருளை எப்படிக் காட்டினால்‌ மக்கள் மத்தியில் பேசப்படும், அதிக வியாபாரம் ஆகும் என்பது போன்ற சந்தைப்படுத்துதலில் அவளின் முழு கவனத்தையும் செல்ல வைத்தது.

 

ரிபேக்கா சனாம். இந்தியாவில் advertising துறையில் சாதித்துக் காட்டி விருதுகள் பல வாங்கிய சாதனைப் பெண்.

 

கோகோவின் ராஜா மாதா. 

 

தினமும் அவரின் புகைப்படத்தில் தான் கண்விழிப்பாள். 

 

"முப்பது வயசு‌ கூட அவங்களுக்கு ஆகல. ஆனா அவங்க வயசுல இருக்குற நம்பர விட அதிகமா அவாட்ஸ்ஸ வாங்கி குமிச்சி வச்சிருக்காங்க. " என புகழ் பாடுவாள்.

 

'Think big.' அது தான் கோகோவின் தாரக மந்திரம். 

 

"இத ரத்தன் டாடா ஒரு இன்டர்வியூல சொல்லிருப்பாரு. பொருள தயாரிக்கிறத விட அத சந்தைப்படுத்துற முறை தான் அதிக விற்பனைக்கும், லாபத்துக்கும், வாடிக்கையாளர்கள கவர்வதுக்கும் காரணமா இருக்கும்னு சொன்னாரு." என்பவள் மார்க்கெட்டிங் தொடர்பாக அனைத்தையும் தேடித் தேடி படிப்பாள், பார்ப்பாள், செய்து கொண்டும் இருக்கிறாள். 

 

இவளுக்கு என ஒரு இன்ஸ்டாகிராம் ஐடி உள்ளது. அதில் இவளுக்கு ஒன் மில்லியன் சப்ஸ்கிரைபரும் உள்ளனர். எதற்காக குவிந்த கூட்டம் என்றால் அவள் போட்டும் வித்தியாசமான போஸ்ட்டுக்காவும், வீடியோவிற்காகவும் ரசனையுடன் கூடியவர்கள்.  

 

ஒரு கம்பேனியின் தயாரிப்பை எடுத்து பல விதமாக இன்ட்ரெட்டிங்கான வீடியோக்கைளை க்ரியேட் செய்து தனது ஐடியில் போடுவாள். சில நிமிடங்கள் மட்டுமே நீடிக்கும் அந்த வீடியோ அனைத்து வயதினரையும் கவரும் வண்ணம் இருந்ததால் கிடைத்த பரிசு அந்த உலகலாவிய சப்ஸ்கிரைபர்ஸ். 

 

அவர்கள் தரும் ஊக்கம் தான், "award முக்கியம் கோகோ." என அவளை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது.  

 

விருது வாங்கும் லட்சியம் உருவாகக் காரணம் அவளின் தந்தை கோதண்டராமன் தான். 

 

"அவருக்கு பொம்பளப் பிள்ளன்னா கொஞ்சம் பிடிக்காது. மட்டமா பாப்பாரு. பாக்க மட்டுமில்ல அடிக்கவும் செய்வரு. எனக்கு ஒரு உடன் பிறப்பு இருக்கு. ஆம்பளப்பிள்ளன்னு அதுக்கு செல்லம் அதிகம். படிப்புல படு மட்டும். சிவப்பு கோடு விழுந்து இருபதாவது ரேங்க் எடுக்குற அவனுக்கு பாராட்டு விழா நடத்துற அவரு, எல்லாத்துலயும் முதல் மார்க் வாங்கிட்டு வர்ற என்னோட ரேங்க் கார்டுல வேண்டா வெறுப்பா சைன் போட்டு குடுப்பாரு. 

 

அப்பத்தா முடிவு பண்ணேன். ஒரு நாள் இந்த ஊரும் உலகமும் என்னப் பாத்து வியக்கனும்னு. கண்டிப்பா அது நடக்கும். அத சொர்கத்துல இருந்து எங்கப்பா பாத்து ஆனந்த கண்ணீர் வடிக்கனும்." 

 

'சொர்க்கமா? அப்ப உயிரோட இல்லையா?'

 

"இல்லங்க இறந்து போய்ட்டாரு. பாவம் பொண்ணு சாதிக்கிறத நேர்ல பாக்காம, காத்தோட காத்தா கலந்து பாக்கப் போறாரு." என்றவளின் பார்வை முழுவதும் இப்போழுது அவளின் கணினியில் இருந்தது. விழிகள் இரண்டும் ஆச்சரியத்தைக் காட்டியது.

 

வேகமாக தன் ஃபோனை எடுத்தவள், "இளாத்தான் ஒரு மேட்டரு. நா வர்றேன் இப்பவே."

 

"அதெல்லாம் வேண்டாம். என்னென்னு சொல்லு." என்ற குரல் அந்தப் பக்கம் இளவேந்தனிடம் இருந்து வந்தது.

 

"அது ஃபோன்ல சொல்ற மேட்டர் கிடையாது இளாத்தான். காட்டுற மேட்டர். இதோ நானே வர்றேன். நீங்க எங்கயும் போகாதிங்க." என்றவள் வேகவேகமாக தன் துப்பட்டாவை தேடிப் பிடித்து கழுத்தைச் சுற்றி விட்டு தன் அறையை விட்டு வெளியேற, 

 

"மணி பத்தாகுது. எங்கடி இந்த நேரத்துல இந்த ஓட்டம் ஓடுற?" என்றார் அவளின் அன்னை யோகேஸ்வரி. 

 

"அத்த வீட்டுக்கு தா போறேன். அத்தான பாக்க. " என்றபடி நிற்காது ஓடினாள். 

 

அவள் அவளின் அத்தை வீட்டை அடையும் முன் அவளின் குடும்பத்தை பற்றிய சின்ன இன்ரோ.

 

தலை முறை தலைமுறையாக இல்லையென்றாலும் கோதண்டத்தின் குடும்பமும் சற்று வசதியான குடும்பம் தான். சொந்தமாக இரண்டு ஸ்பின்னிங் மில்கள் உண்டு. நூறுக்கும் மேற்பட்ட வேலையாட்களை வைத்து வேலை வாங்கிக் கொண்டிருந்த அவர் எட்டாண்டுகளுக்கு முன் தான் ஒரு விபத்தில் இறந்து போனார். 

 

அவரின் இறப்பு கோகோவின் குடும்பத்திற்கு பெரும் இழப்பாக அமைந்தது. இருந்த இரண்டு மில்லில் ஒன்றை விற்று கடன் என வந்து நின்றவர்களின் கணக்கை முடித்து அனுப்பியாயிற்று. 

 

இப்போது இருக்கும் ஒரே மில்லை வெற்றிகரமாக இயக்க, பணத்துடன் தன் பொண்ணையும் கட்டிக் குடுத்து கோகோவின் அண்ணன் பிரணவனை தங்கள் குடும்பத்து மருமகனாகிக் கொண்டது கோதண்டத்தின் அக்கா குடும்பம். தங்கள் உறவை வலுப்படுத்த தங்கள் மகனுக்கு கோகோவை கேட்டு கோதண்டத்தின் தங்கை குடும்பமும் அவ்வபோது எட்டிப் பார்க்கும்.

 

தாய் யோகேஸ்வரி, அண்ணன் பிரணவன், அண்ணி மாதங்கி என மூவருடன் நால்வராய் அந்த வீட்டில் வாழ்ந்து வருகிறாள். வசதிக்கும் குறைவில்லாத குடும்பத்தில் குறையே கோகோ தான். 

 

"அண்ணா! மில்லு டெவலப் ஆக இந்த மாறி பண்ணா சேல்ஸ் பிச்சுக்கும்." என தன் படிப்பை வைத்து சில பல ஐடியாக்களை வாரி வழங்கிய கோகோவின் பேச்சு பிரணவின் காதைச் சென்றடைந்ததே இல்லை. 

 

'சின்னப் பொண்ணு. இவளுக்கு என்ன தெரிஞ்சிடப் போது.' என நினைத்து அவளின் வியாபாரம் யூக்திகளை அவன் கேட்டதே இல்லை. ஏன் அவள் பேசும் எதையும் வாங்கிக் கொள்வது இல்லை. 

 

"எனக்கு யாரோட காதும் தேவையில்லை." என்றவளுக்காகவே காதை குடுக்க முன் வந்தது இளவேந்தன். 

 

அவன் வேறுயாருமல்ல அவளின் தாய் மாமன் மகன். பக்கத்து தெருவில் தான் வசிக்கிறது அவனின் குடும்பம்‌. 

 

இவளின் ஆர்வத்திற்கு தீனி போட்டவனே‌ அவன் தான். அவளின் பதின்ம வயதிலேயே Fb, insta, twitter, YouTube, telegram என இருக்கும் அத்தனை சோசியல் மிடியாவையும் அவளுக்கு அறிமுகம் செய்து, அதை எப்படி கையாள்வது, அன்வான்டடாக வரும் மெஜ்ஏஜ்களுக்கு எப்படி பதில் தருவது என பலவற்றை கற்றுத் தந்திருக்கிறான். 

 

அவனின் தாய் யசோதா. தந்தை பரஞ்சோதி. ஊருக்குள் பட்டு வியாபாரத்திற்கு பெயர் போன குடும்பம்.  

 

இளவேந்தன் பட்டப்படிப்பெல்லாம் முடித்தவன். பெரிய இடத்தில் லகரத்தில் சம்பளப் வாங்குகிறான் என்று அந்த வீட்டில் மட்டுமல்ல ஏரியாவிலேயே இளாவிற்கு மதிப்பு அதிகம். அவனின் பேச்சிற்கு மறு பேச்சு பேச மாட்டோம் எனும் அளவிற்கு இருந்தது.  

 

ஒரே மகன். உடன் பிறப்புகள் என யாரும் கிடையாது. ஆனால் ஆறு முறைப் பெண்கள். மாதம் லட்சங்களை கையில் வாங்கும் இருபத்தி எட்டு வயது இளைஞனை கொத்திச் செல்ல போட்டி நிலவிக் கொண்டிருக்கிறது. 

 

என்ன தான் முறைப் பையனாக இருந்தாலும் அந்த போட்டியில் கோகோ பங்கு பெற வில்லை. 

 

'விருது வாங்காம, லவ் பண்ணாம கல்யாணமா? நோ சான்ஸ். அதுலயும் இளாத்தான் நம்ம கேக்டகிரியே கிடையாது. சிடு மூச்சி. நா பண்ற எதையும் ரசிக்கவே மாட்டாரு. எனக்கு என்னையும் ரசிக்கனும், என்னோட செயல்களையும் ரசிக்கனும். அப்படி ஒரு பையன் தான் வேணும். குறிப்பா தம் அடிக்க தெரியாத பையனா அவன் இருக்கனும்.' என்பாள்.

 

அது ஏன் புகைபிடிக்க கூடாது. மற்றவை ஓகே வா? எனக் கேட்டால், “ ஸ்மோக் பண்ற‌ பரதேசிங்க தன்னோட உடம்ப கெடுக்குறது மட்டுமல்லாம சுத்தி இருக்குற காத்தையும் நாசம் பண்ணி, அத சுவாசிக்கிற நிறைய பேருக்கு நோய் வர காரணமா இருக்குற எமனோட தூதுவர்கள். அதுனால அந்த பழக்கம் அறவே கூடாது. “ என்பது அவளின் விளக்கமாக இருக்கும்.

 

இவள் இளாவை வேண்டாம் என்று விட்டாள். அவனுக்கு?. 

 

இளாவிற்கு கோகோவை பிடிக்குமா என்றால் பிடிக்கும். பிடிக்காதா என்றால் பிடிக்காது. 

 

எப்பொழும் துருதுருவென பறக்கும் தன் அத்தை மகளாக அவள் கேட்கும்‌ அனைத்து உதவிகளையும் செய்து தந்து சைன் போர்டு வேலை செய்ய பிடிக்கும். மற்றபடி காதலாக என்ன அவளுடன் நட்பாக கூட இருக்க பிடிக்காது. 

 

அவளின் கையில் ஒரு பொருள் கூட தங்காது. எதையாவது உடைத்து வைத்து விடுவாள். அவனின் பல ஐ பேடுகள் எலக்ட்ரினிக் கடையில் எடைக்குத் தான் போட்டான் இவளால்.

 

அவள் செய்யும் சேட்டைகளை தூர நின்று வேடிக்கை பார்க்கும் பார்வையாளராகவும் அவளுக்கு திசை காட்டியாக மட்டுமே இருக்க விரும்பினான்.

 

 ஒற்றை வரியில் இவர்களுக்கு இடையே உள்ள உறவைச் சொல்ல வேண்டுமென்றால்.. ம்... குஷி படம் பார்த்துண்டா?

 

அதில் விவேக், "ஸ்டாப், கையக் குடு, கிளம்பு... " என ஆண்களை தூர நிற்க வைத்து துரத்தி விடுவாரே அது போல் கோகோவை தூர நிற்க வைத்து சில நொடிகளில் துரத்தி விட்டு விடுவான். 

 

மொத்தத்தில் ஒரு அக்கறை கலந்த அலட்சியம் அவள் மீது உண்டு. 

 

"ஹாய் அத்தை. அத்தான் வந்தத ஏ எங்கிட்ட சொல்லவே இல்ல..." என கத்தியபடி உள்ளே வந்தாள் கோகோ. 

 

"இப்பத்தா வந்தான். வந்ததும் உனக்கு தகவல் சொல்லனுமாக்கும்.!" என நொடித்துக் கொண்டார். 

 

"ஆமா! சொன்னாத்தான கரெக்ட் பண்ண முடியும். ஆமா! உங்கண்ணே மக ஜாதகத்த நேத்து யாருக்கும் தெரியாம தூக்கிட்டு போய் ஜோசியர்ட்ட காட்டினிங்களே! என்ன சொன்னான் ஜோசியக்காரென்?. " என்றவள் தரையில் கால் நீட்டி அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த யாசோதவின் எதிரே சம்மணமிட்டு அமர்ந்தாள். 

 

"அது ஒன்னும் பொருந்தலயாம்." எனப் புலம்ப ஆரம்பிக்கும் முன்னரே... 

 

"கட்டம் சரியில்லன்னு சொல்லிருப்பாரே."

 

"ஆமாண்டி! உனக்கு எப்படி தெரியும்." என ஆச்சர்யமாகிப் போனது அவருக்கு.

 

"தோஷம் இருக்கும்னு சொல்லிருப்பாரே."

 

"எப்படி டி புட்டு புட்டு வைக்கிற." 

 

"அப்படிச் சொல்லச் சொல்லி காசு தந்ததே நாந்தா. குடுத்த காசுக்கு கூவித்தன ஆகனும். நா ஒருத்தி தா அத்த மக ன்னு இருக்கும் போதே, உ அண்ணே மகள்களுக்கு முன்னுரிம குடுத்தா! பாத்திட்டு எப்படி இருக்குறது?." 

 

"எது நீ காசு குடுத்து கலச்சி விட்டியா? எவ்ளே தைரியம் இருந்த என்கிட்டயை இப்படி பேசுவ.?" என்றவர் எழுந்து துரத்தும் முன் அவள் சிட்டாக பறந்து விட்டாள்‌ இளாவின் அறைக்கு. 

 

"ஏய் கதவ தட்டாம உள்ள வராதன்னு சொல்லிருக்கேனா இல்லையா? மாடு மாறி முட்டித் தள்ளிட்டு உள்ள வர்ற" என அவன் கத்த. 

 

"அதா மாடுன்னு சொல்டிங்களே அப்றம் எப்படி சூடு சொரன எல்லாம் எதிர் பாக்குறிங்க. " என்றவள் ஹாயாக கட்டிலில் அமர்ந்து அவனின் லேப்டாப்பை எடுக்க, அத வாங்கி பத்திரப்படுத்தியவன், அவளை முறைத்தான். 

 

கோகோவின் இந்த உரிமையான பழக்கத்தை முதலில் அனுமதித்தவன் தான் சில ஆண்டுகளாக தவிர்த்து வருகிறான்.  

 

"என்ன விசயம்.?" என்றான் கடுகடுத்தக் குரலில்.

 

"ஒரு மெயில் வந்திருக்கு. அது உண்மையா பொய்யான்னு பாக்கனும். உண்மையா இருந்தா அதுக்கான ஏற்பாட்ட பண்ணனும். " என்ற படி தன் மொபைலை எடுத்துக் காட்டினாள்‌ கோகோ.

 

உதவி என்றதும் மனம் இலகுவாக மாற, அவள் நீ

ட்டிய ஃபோனை வாங்கி வாசித்துப் பார்த்தவனின் கடுப்பு கோவமாக மாறியது. 

 

"யாரக் கேட்டு நீ அப்ளே பண்ண?." என வீடே அதிரும் படி கத்தவும் வைத்தது.   

மயக்கம் தொடரும்....

 

உங்கள் கருத்துக்களை மறக்காமல் கீழ் உள்ள லிங்கில் பதிவிட்டுச் செல்லுங்கள். 

 

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments/


   
ReplyQuote
VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Member Author
Joined: 3 weeks ago
Posts: 6
 

Ethukku apply pannina 🤔🤔


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 2 weeks ago
Posts: 6
 

என்னவா இருக்கும் 🤔🙄


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 weeks ago
Posts: 9
Topic starter  

@vsv42 நன்றி. அடுத்த எபில தெரிஞ்சிடும்.🥰🥰🙏


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 weeks ago
Posts: 9
Topic starter  

@vsv4 நன்றி. அடுத்த எபில தெரிஞ்சிடும். 🙏


   
ReplyQuote

You cannot copy content of this page