About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
தன்னை வியப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தவனை , அடர்ந்த வளர்ந்த தாடியை அவன் விரல்கள் வருடிக் கொண்டே , இடது பக்க சரிவாக வெட்டப்பட்ட புருவத்தை நிதானமாக உயர்த்தி பக்கத்தில் இருப்பவனை கடை கண்ணால் நோக்கினான்..
அவ்வளவு தான் அப் பார்வையில் அத்தனை கேலிகள் இருப்பதை உணர்ந்தான் அவனின் உதவியாளனாகிய தனுஷ்...
அவனின் விழிகள் சிரித்தது ஆனால் அதரங்கள் இறுக மூடி இருந்தது..“ சார்.. நீங்க சிரிச்சதை இப்ப தான் பாக்குறேன் சார்..” சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டான்..‘ மனசுலேயே நினைச்சி இருக்கலாமோ? வெளிப்படையா அவர் முன்னே சொல்லிட்டேனே! ’ மனதில் நினைக்க.. சற்று உதறல் எடுக்கத்தான் செய்தது..
அவன் அதனை பற்றி பெரிதாக எண்ணவில்லை போலும், “ காரை நேரே ஊருக்கு விடு அங்கே போயிரலாம்..” என்றான் அவன்...‘ ஊருக்கா அங்கே எதுக்காக இருக்குமோ? ’ தனுஷின் மனம் நினைக்காமல் இல்லை..
அத்தோடு, அவன் ஃபேன்ட் பாக்கெட்டில் இருந்த அலைபேசியை அலறியது..அவனின் புருவங்கள் இறங்கி , விழிகள் சுருங்கின ஏதோ சிந்தித்தவனாக பாக்கெட்டில் இருந்த அலைபேசியை கையில் எடுத்ததும், அவனின் விழிகளும் சிரித்தன, இளம் சிவப்பு அதரங்கள் மீசைக்குள் கீற்றான புன்னகையும் சிந்தியது..
அலைபேசியின் திரையில் ‘ ஜானு அம்மா ’ என்ற பெயர் ஒளிர்ந்தது.. அவனின் புன்னகைக்கு காரணமானவள் அப் பெயருக்கு சொந்தக்காரியான அவளே தான்!
அழைப்பு ஏற்று செவியில் வைத்தான் அவன்..“ தேவா! ” அக் குரலில் அவன் மீதான அன்பில் ஒலித்தது..“ சொல்லு ஜானு அம்மா ? ” என்றான்..
“ நானும் உன் மருமகள்களும் மருமகனும் ஃப்ளைட்க்கு வெயிட் பண்ணிட்டு இருக்கோம் ப்பா.. எப்படியும் ஊருக்கு வர நாளை மார்னிங் ஆகிடும்னு நினைக்கிறேன் தேவா அங்கே மழையா? ” என்று கேட்டாள் ஜனார்த்தினி..
கார் உள்ளே இருப்பதால் மழை பொழியும் சத்தம் கேட்கவில்லை அவளுக்கு இருப்பினும் மழை காரணமாக விமானம் செல்லாமல் இருக்கிறது.. அவர்களின் ஊரில் மழை பொழிவதன் காரணமாக இருக்கலாம் என்ற யூகத்திலே அவனிடம் கேட்டது..
“ ஹம்! மழைதான் ஜானு அம்மா அதான் ஃப்ளைட் வர லேட்டாகும்னு நினைக்கிறேன் நீ பொறுமையா பசங்களை கூட்டிட்டு வா அப்புறம் இந்த முறையும் அத்தான் பிஸி தானா? ” என்று அவன் கேட்டான்..
அவளும் பெருமூச்சுடன் “ உனக்கு தெரியும் தானே ப்பா அவரால அவரோட பிஸ்னஸ்சை விட்டு லீவு போட்டு ஊருக்கு வர முடியாது.. அதுனால தான் எப்பையுமே என்னையும் பசங்களையும் ஊருக்கு அனுப்பி வைக்காம இருந்து இருக்காரா உன் அத்தான்? ” அவள் பதில் கேட்டபோது , நிதர்சனம் இதுதான் என்பது அவனுக்கு உரைக்காமல் இல்லையே..
“ பைன் சரி உனக்கு கார் அனுப்பி வைக்கணுமா இல்ல நானே பிக்கப் பண்ணிக்க வரணுமா? ”
“ நானே பசங்களை அழைச்சிட்டு கேப்ல வந்துர்றேன் ” என்றாள் அவள்..
“ ஆஹ் ஓகே..”
“ ஊருக்கு கிளம்பிட்டு இருக்கியா தேவா? ”
“ கார்ல போய்ட்டு தான் இருக்கேன் ஜானு அம்மா..”
“ சரி ஊருக்கு வந்ததும் நாம பேசிக்கலாம்..” என அவள் சொன்னதும் அவனும் சரியென அழைப்பை துண்டித்திருந்தான்..
கார் ஊரை நோக்கி புறப்பட்டது.. மீண்டும் சீட்டில் கண்மூடி சாய்ந்து கொண்டான் அவன் விஷ்ணு தேவன் இவனுக்கு எல்லாமுமாக இருக்கும் தமக்கையாக தாயாக ஒருத்தி ஜனார்த்தனி அவனை விட நான்கு வயது பெரியவள்.. அவனுக்கு இருபத்தி ஒன்பது வயதை தொடுகிறது..
தற்போது அவனின் சொந்த ஊரிற்கே பயணமாகின்றான்..
இதே சமயம் கொட்டும் மழையில் நனைந்து கொண்டு வண்டியில் வந்து சேர்ந்தாள் இசைகவி..
வெளிப்புறப்புறத்தில் கருப்பு நிற நிறப் பூச்சால் பூசப்பட்ட பங்களா முன்பு வீட்டின் வாசலில் வண்டி நின்றது..
வண்டியில் இருந்து இறங்கியவள் மழையங்கியை கழட்டி கையில் எடுத்துக் கொண்டாள்.. தலையில் அணிந்திருந்த தலைகவசத்தை கழட்டியபோது அவளின் கூந்தல் மழையில் நன்றாக நனைந்து இருந்தது..
குடையை எடுத்துச் செல்லாததால் ரேடியோ ஸ்டேஷன் விட்டு வெளியே வந்தவளால் வண்டி நிறுத்தும் இடத்திற்கு நனைந்து கொண்டே ஓடி வர வேண்டியதாகிப் போனது..
அதன் விளைவு இடைக்கு கீழே வளர்ந்து நிற்கும் கூந்தல் நனைவதற்கான காரணம்..
மழையில் நனைந்து இருந்தவளால் அவ்வளவு நேரம் குளிரில் தாக்குப் பிடிக்க முடியவில்லை..
விரைவாக உள்ளே நுழைந்த சமயம் அவளை வழி மறித்தது போல் நின்றார் அவ் வீட்டு மகாராணி வினோதினி..
தாயிடம் மாடிக் கொண்டதால் அவரிடம் என்ன காரணம் கூறி தப்பிவிட இயலும்..விழிகளை அலைபாய விட்டு அமைதியாக நின்றாள்..
“ மாப்பிள்ளை இன்னிக்கு வராத மாதிரி தெரியுது ?..” அவளை உற்று நோக்கி சொன்னார்..
’ ஆஹான்! அம்மா கண்டு பிடிச்சிடாங்களே! ’ என்று அவள் மனம் நினைத்தது..
“ ஆரியன் அவரோட கம்பெனி விஷயமா வெளியூர் போய் இருக்கார் அதான் இன்னிக்கி பிக்கப் பண்ண வரல்ல அம்மா ” என்றாள் அவள்..வீட்டை வேறு காலை எம்பி உள்ளே பார்த்தாள் தாயை தாண்டி ஓடுவதற்கு தான் அதற்கு அவர் வழி விட்டால் தானே!
“ வெந்நீர்ல நல்லா குளிச்சிட்டு வந்து இதோ இங்கே இருக்குற பிளாஸ்டிக் சேர்ல உட்கார்ந்து இரு அவ்வளோ தான் இப்ப ஓடு..” ஒற்றை விரலை நீட்டி அவளை மிரட்டிவிட்டு உள்ளே சென்றார் அவர்..
“ ஊஃப்..” காற்றை வாய் வழியாக வெளிவிட்டாள்..” மழை நலைஞ்சதுக்கு என்ன அக்கபோர் ” என்று புலம்பிக் கொண்டே அவள் அறைக்கு நுழைந்து கொண்டாள் இசைகவி..
வினோதினியின் பேச்சைத் தட்டாது குளித்துவிட்டு பிளாஸ்டிக் இருக்கையில் அமர்ந்து கொண்டதும் அவரே மகளின் தலையை துவட்டி, சாம்பிராணி பிடித்துவிட்டார்..
சாம்பிராணி வாசனையில் கண்களை மூடியவள் அப்படியே ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றுவிட்டாள்..
அவளை எழுப்பிட தோணாது சாம்பாராணி தட்டையையும் துணியையும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றார் அவர்...
ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றவளுக்கு நேரம், காலம் தெரியாமல் அவளின் உறக்கத்தில் இம்சை செய்வான் ஒருவன்...
பிரபலமான துணிக்கடை அங்கு இவளுக்கு பிடித்த இளம் நீல நிற ஷர்ட் ஒன்றினை தேடிக் கொண்டு இருக்கும் சமயம் “ இங்கே நீ தேடுற ஸ்கை ப்ளூ ஷர்ட் கிடைக்காது இசை..வொயிட் ஷர்ட் உனக்கு நல்லா எடுப்பா இருக்கும்..” குறுகுறுக்கும் அவன் மீசையும் தாடியும் அவள் செவியில் உரசிட, கூச்சத்தில் சிலிர்த்தாள் பாவையவள்..
“ பிக் அப் த வன் ஐ லைக் வொயிட் கலர் ஷர்ட் இசை..” அவனுக்கு பிடித்த வெள்ளை நிறத்தில் ஒரு ஷர்ட்டை எடுக்குமாறு மீண்டும் சொன்னான்..
அவனை பார்க்க வேண்டும் என்று மன உந்துதலில் விருட்டென்று திரும்பிய வேளையில் அவள் கண்டது அவனின் விழிகளை மட்டுமே, அவ் விழிகள் அவளுக்கு உணர்த்தியது என்னவோ வேறு ஒரு செய்தி அதனை அவளால் படிக்க முடியாமல் போனதே விந்தையிலும் விந்தை..
கனவில் அவன் விழிகளை பார்த்துக் கொண்டு இருந்தவளை நிஜத்தில் அவளை யாரோ பிடித்து உலுக்குவது போல் இருக்கவும் சிரமப்பட்டு கண்களே திறந்து பார்த்தாள் இசைகவி..
அவளின் தங்கை இமாயா நின்றிருந்தாள்..“ மழைல நனைஞ்சியா கவி அதான் தூக்கமோ? என்ன இன்னிக்கும் மாமா கனவுல வந்தாரா அதே வொயிட் ஷர்ட் ” குறும்புடன் விழிகளை சிமிட்டி அவள் கேட்க..
“ அட போடி ! அதே கனவு தான் அந்த கண்ணு தான் என்ன சொல்ல வருதுன்னு எனக்கு புரியவே மாட்டேங்குது..” கடுப்பாக மொழிந்தாள் இசைகவி..
இவளுக்கு வரும் கனவு இன்று நேற்று அல்லவே எப்போது அவளின் தந்தை மேகநாதன் இசைகவிக்கு ஆரியனை பேசி நிச்சயதார்த்தை முடித்து வைத்தாரோ அன்றில் இருந்து ஆரம்பித்த கனவு , அவளை இம்சிக்கும் அவனை இத்தனைக்கும் அவளால் கண்டுபிடிக்க முடியவே இல்லை..
போகும் இடமெல்லாம் தேடி தேடி களைத்து போனாள் அவள்..
“ இதெல்லாம் ஒரு மேட்டரா கவி.. டைம் அதான் நேரம் வரும்னு சொல்லுவாங்களே நம்ம பெரியவங்க! அப்படி ஒரு நேரம் வரும் அப்ப மாமாவை மீட் பண்ணு இப்ப ஆரியன் கூட கடலை போடு வா ” அவள் கையை பிடித்து இழுத்துச் சென்றாள் இமாயா..
இங்கு விஷ்ணு தேவன் அவன் ஊருக்கு வந்து விட்டிருந்தான்.. அவனின் கார் பழங்காலத்து முறையில் கட்டப்பட்ட வீட்டின் வளாகத்தினுள் கார் நுழைந்தது..
நகரத்தில் இருந்து எப்படி காரில் அமர்ந்து வந்தானோ அசையாது அமர்ந்திருந்தான் விஷ்ணு தேவன்..“ சார் வீட்டுக்கு வந்துட்டோம் ” என்றதும் விழிகளை திறந்து பார்த்தான் வீட்டில் யாரும் இருப்பதாக அவனுக்கு தெரியவில்லை..
காரில் இருந்து இறங்கியவனின் விழிகள் சிவந்து இருந்தது..“ தனுஷ் காரை பார்க் பண்ணிட்டு உள்ள வா ” என்றதும் “ ஓகே சார் ” என்று அவன் சென்றுவிட்டான்..
பாரம்பரிய பழங்காலத்து பங்களா வீடு தேக்கு மரத்திலால் ஆன மரங்களினால் செய்யப்பட்ட கதவுகளும் நாற்காலிகளும் இருந்தன..அது மட்டுமா கூடத்திற்கு வந்தால் அனைவரும் உக்கார்ந்து பேசும் ஓர் இடம் நிலாமுற்றம் சதுர வடிவில் அழகாக இருந்தது..
அதே சமயம் சமயலறையில் இருந்து வெளியே வந்தார் மூத்த பெண்மணி ஒருவர் தோள் சற்று சுருங்கி, தலைமுடி நரைத்திருந்தது..
முந்தானையில் கையை துடைத்துக் கொண்டு வந்தவர் நிலா முற்றத்தை தாண்டி ஆறடி உயரத்தில் ஒருவன் நடந்து வருவதை கண்டவருக்கு அவர் விழிகளில் கண்ணீர் நிறைந்தது..
“ ஐயா விஷ்ணு ! ” அவனை அழைத்ததும், அவன் நடையும் நின்றது..குரல் வந்த திசையை பார்த்தவனின் கண்களில் பாசமும், பிரிவுக்கான ஏக்கமும் ததும்பி நின்றது..அவன் அதரங்கள் விரிக்காத மெல்லிய ஓர் புன்னகை..
“ அம்மாச்சி ” அவனும் அழைக்க..அவன் கால்கள் வேகமாக நடந்து அவரிடம் சென்றது.. விஷ்ணு தேவனின் தாய் வைகையின் அன்னை மணியம்மை..
காசிநாதன், மணியம்மை இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் மூத்தவன் பரந்தாமன் அவரின் மனைவி பூமணி இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவள் சாருமதி இரண்டாமவன் பார்த்தீபன் மூன்றாமவள் சத்தியவாணி இவர்களின் குடும்பம்..அடுத்து இரண்டாமள் பத்மாசினி இவரின் கணவன் வில்லியம் தேசாப் இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் மூத்தவள் ஜனார்த்தனி கணவன் நவீன்ரன் இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளையும் ஒரு
ஆண் குழந்தையும் மட்டுமே..அடுத்து இரண்டாமவன் விஷ்ணு தேவன் இதுவே இவர்களின் குடும்பம்...
தேவன் அவனின் இசை காணும் எந்நாளோ??
தொடரும்🧚🏻🎧
Pothum pothum kanavulaiye kaatti imsai panratha vituttu un maman seekiram un kan munnadi vanthu nikkuren isai 🫣🫣😍 waiting next epi
@vsv42 neega than devava 😉😉 ugga munnadi late entry than kuduppa intha isai😜 thank you da theera 😊💕💕💕
Latest Post: மயக்கம் 2 Our newest member: Silviya Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page