All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தேவன் உருக்கும் இசை (01)

 

VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 3 months ago
Posts: 59
Topic starter  

அத்தியாயம் 01

 

 

 

இன்றைய வானிலை மாற்றத்தால் எங்கும் கடுமையான மழை பொழிந்து கொண்டிருந்தது..சாலையில் ஓடி கொண்டு இருக்கும் மழைநீரில் கால்கள் மற்றும் உடைகள் நனைந்த போதும் மக்கள் நடந்து சென்று கொண்டு இருந்தனர்..

 

ஒரு சிலர் வண்டியில் தொப்பலாக நனைந்து கொண்டே சென்றனர்.. இன்னும் சிலர் கார் போன்ற வாகனங்களில் மழையில் நனையாமல் பாதுகாப்பாக அமர்ந்திருந்த போதிலும் ஒருவனின் காரில் அடித்து பெய்யும் மழையையும் இடி முழக்கத்தையும் செவிகளில் ஏற்றிக் கொள்ளாது சீட்டில் சாய்ந்து கண்மூடி நெற்றியில் கைவைத்து மெளன நிலையில் அமர்ந்திருந்தான் ஒருவன்..

 

கார் ஸ்டீரியோ ஆடியோ பிளேயரில் இதழியல் FM இல் , மாலை நேரத்திற்கான பாடல்கள் ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தபோது,

 

“  வணக்கம்! இந்த மழையான மாலை நேரத்தில் உங்கள் காதுகளை இனிமையால் நனைப்பது உங்கள் அன்புக்குரிய ஆர்ஜே இசை! வெளியே மழை துளிகள் தரை சிந்தும் ஒலி உங்கள் மனதை தொடுவதாக தோன்றுகிறதா? இதோ, அந்த மழை கவிதையுடன் சேர்த்து, உங்கள் இதயத்தை சுருட்டும் ஒரு பாடல்! ‘ஹே மின்னலே... ’ மின்னலின் சினுங்கலுடன் உங்கள் நினைவுகளை ஓடவிடுவோம். காஃபி, மழை, மற்றும் இந்த அற்புத பாடலோடு உங்கள் மாலை மகிழ்ச்சியாகட்டும்!"

 

‘ஹேய் மின்னலே ஹே மின்னலே

என் கண்ணிலே நெஞ்சிலே

சொல்லோனா கண்ணாலே

 

சக்கரே என் சக்கரே

மெல்மெல்லமாய் செல்லமாய்

கொஞ்சுதே மௌனமே ’ 

 

அமரன் படத்தில் ‘ ஹே மின்னலே!’ பாடல் வரிகள் வானொலியில் ஒலிபரப்பாக ஆரம்பித்தது..

 

அப் பாடல் வரிகள் அவன் செவிகளில் வந்து தீண்டியபோது அழுத்தமாக மூடி இருந்த அவன் அதரங்களில் மின்னலாக ஒளிர்ந்து மறைந்தது ஓர் புன்னகை..

 

ஐந்து நிமிடத்தில் பாடல் முடிவடைந்தவுடன், மழைநேரத்தின் அழகையும், பாடலின் சுகமான தாக்கத்தையும் உணர்த்தும் விதமாக இருந்தது..

 

ஸ்டீரியோ ஆடியோ பிளேயரில் “ மின்னலும் சின்ன சின்ன மழைத்துளிகளும் இந்த மாலை நேரத்தை இன்னும் அழகாக்கும், இல்லையா? ‘ஹே மின்னலே’ பாடல் இதோ உங்கள் இதயத்தின் மெல்லிய ஓசையாக ஆழமாக பதிவாகி விட்டதென்று நம்புகிறேன். மழையையும், இந்த இசையையும் மண்ணின் வாசத்தோடு கலந்துகொள்ளுங்கள். வாழ்க்கையில் மழைநேரங்கள் கிடைக்கும் போது அதை முழுமையாக அனுபவிக்க மறக்காதீர்கள். தொடர்ந்து தங்கியிருங்கள் உங்கள் ஆர்ஜே இசை உடன்... இன்னும் பல அழகான பாடல்களும் கதைகளும் காத்திருக்கின்றன! ”

 

அதன் பிறகு இடைவேளைக்கு பிறகு விளம்பரங்கள் ஒலிபரப்பாக ஆரம்பித்ததும்..நீண்ட மிடுக்குடன் கூடிய விரல் நீண்டு ஆடியோ பிளேயரை நிறுத்தி இருந்தது..

 

ஆம்! கண்மூடி மெளன நிலையில் இருந்தவன் எழுந்து விட்டிருந்தான்..

 

கைகளை மேலே தூக்கி , கையை மடித்து நீண்ட விரல்களை சொடுக்கு எடுத்து , விழிகளை திறந்து கார் ஜன்னல் வழியாக அடித்து பெய்யும் மழையைப் பார்த்தான்..

 

“ சவொரிங் ” அவன் உதட்டசைவில் சொல்ல , அவன் விழிகளோ பொழியும் மழையினை ரசித்தது...

 

இவற்றையெல்லாம் ஏழாம் உலக அதிசயம் போல் பக்கத்தில் ஒருவன் வாயை பிளந்து வியப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான்..

 

இதே சமயம் வானொலி நிகழ்ச்சியினை ஒலிப்பரப்பாகி முடிந்ததும் செவியில் அணிந்திருந்த ஹெட்செட்டை கழட்டி வைத்து பர பரவென செவியை தேய்த்ததும், காதுகள் சிவந்து போயின...

 

“ வாட் அ ஸ்வீட் வாய்ஸ் பெட்டர் ஆஃப்!” என்றான் கையில் இருந்த சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த சிப்ஸை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு சொன்னான் அங்கு பணிபுரியும் கிரண்..

 

“ தேங்க்ஸ்..பட் தினமும் இதை தானே டா சொல்ற ஒரு சேன்ஜ்க்கு வேற சொல்லலாமே கேட்டு கேட்டு என் காதுக்கே சலிப்பா போயிருச்சு பாரேன்..” நாற்காலியில் எழுந்து நின்று கைகளை மடக்கி அவள் சொல்ல.." இஸ் இட் அடுத்த வாட்டி வேற ஒண்ணு ட்ரை பண்றேன் பெட்டர் ஆஃப்! ” விழிகளை சிமிட்டி, மன்மத சிரிப்பை உதிர்த்தான்..

 

அவனை கேவலமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு கதவை திறந்து வெளியே சென்றாள் அவள்..

 

கிரண் சிப்ஸ் அனைத்தையும் வாயில் அதக்கிக் கொண்டு “ இவளுக்கு லைன் போட்டா நம்மலையே கண்டுக்க மாடேங்குறாளே சோ சாட் நைன்டின் கிட்ஸ் லைஃப் ” சலிப்பாக இரு பக்கமும் தலை அசைத்து விட்டு அவன் அகன்றான்...

 

ஓய்வெடுக்கும் அறைக்குள் நுழைந்தாள் அவள்... உள்ளே ஏசி போட்டு இருக்கவில்லை மழை காரணமாக அதிகமாக குளிராக இருந்தது அது அவளின் மேனியை ஊசி போல் துளைக்க..‘ சுட சுட காஃபி குடிச்சா நல்லா இருக்கும் ’ என்று அவள் மனம் நினைத்தது..

 

அவள் நினைத்தது போலவே சுட சுட காஃபி உடன் ஒரு மென்கரம் நீண்டது.. காஃபியின் வாசனை அவள் நாசியை தீண்டிட..“ வாவ்! காஃபி ஸ்மெல் ம்..ம்..ம்..இப்பவே நாக்குல தித்திப்பா இருக்கே! ” ஒரு வித மயக்கத்தில் அவள் சொல்ல..“ காஃபி கப்பை கைல எடுத்தீனா நானும் காஃபி குடிப்பேன் டி ” அவளின் தோழி காயத்திரி சொல்ல.. பட்டென்று கண்ணைத் திறந்தாள்..

 

“ ஓ..சாரி டி ” காஃபி குவளையை கையில் வாங்கி , இருக்கை ஒன்றில் அமர்ந்து பருக ஆரம்பித்தாள்..

 

“ இன்னைக்கு ஆர்ஜே வொர்க் எப்படி போச்சி ? ” காயத்திரி வினவினாள்..

 

இடி முழக்கத்துடன் பொழியும் மழையை ஜன்னல் வழியாக நோக்கி விட்டு, பார்வையை தோழியின் பதித்தவள் “ சில் கிளைமேட்..மழை டைம் உற்சாகமா இருந்துச்சி போரிங் இல்லடி ” காஃபி ஒரு மிடறு விழுங்கினாள்..

 

“ பார்ட் டைம் ஜாப் ஆஹ்..ஆர்ஜேவா வொர்க் பண்ற ஆனா இது உன் பியான்சேக்கு பிடிக்காதுன்னு தெரிஞ்சிருந்தும் நீ இங்கே வர்றது உன் பியான்சேக்கு தெரியுமா? ” என்று காயத்திரி கேட்டாள்..

 

அவளோ கைப் பையில் இருந்த அலைபேசியை எடுத்து அவளிடம் நீட்டினாள்..

 

“ உன் ஃபோனை எனக்கு எதுக்கு தர்ற? ”

 

“ வாட்சப் போய் பாரு புரியும்..” என்றாள் அவள்..

 

வாட்சப் சென்று பார்த்தபோது பத்திற்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள் வந்து குவிந்தன..

 

விழிகளை விரித்து அலைபேசியை பார்த்துக் கொண்டிருந்த காயத்திரி “ என்னடி இவ்வளோ மெசேஜஸ்..‘ சாரி கவி டுடே உன்ன என்னால பிக்கப் பண்ண வர முடியல அர்ஜண்ட் ஆஹ்..கம்பெனி வொர்க் விஷயமா வெளியூர் போக வேண்டிய நிலை சாரி கவி ’ உன் பியான்ஸ்சே அனுப்பி இருக்கார்..அந்த மெசேஜ்க்கு கீழ ஏகப்பட்ட சாரி வரிசை கட்டி நிற்குது..” வியப்பாக அவளை நோக்கி சொன்னாள்..

 

அதனை கேட்ட அவளுக்கு எரிச்சலாக வந்தது..“ ‘ நோ ப்ராப்ளம், ஐ அண்டர்ஸ்டாண்ட் ஆரியன் நீங்க வொர்ரி பண்ணிகாதீங்க! ’ மெசேஜ் அனுப்பி விடு காயு..” என்று சொல்லிவிட்டு காஃபியை பருகினாள்..

 

அவள் சொன்னதையும் செய்துவிட்டு அவளின் அலைபேசியை கொடுக்க.. வாங்கிக் கொண்டாள் அவள்..

 

“ உனக்கு கிடைச்ச பியான்சே ரொம்ப நல்லவர் டி..ஆர்ஜே ஜாப்க்கு நீ வர்றது பிடிக்கலைனாலும் உன்மேல அவ்வளோ கேயரிங்கா இருக்குற பர்சன் இசை அவரை மிஸ் பண்ணிடாத? ” தோழியின் நலனை கருதி அவள் சொல்ல..“ ப்ச்..காயு அப்பாவுக்காக தான் அவர் பேச்சு கேட்டு பேசிட்டு இருக்கேன்..” அவளின் பார்வை காஃபி குவளையை வெறித்து பார்த்தது..

 

“ இசை..”

 

“  அப்பா பார்த்த வரன் அதுவும் ஆரியனை எனக்கு பிடிக்கல்ல காயு ” ஒரு சொட்டு கண்ணீர் காஃபி குவளையில் பட்டு தெறித்தது..

 

“ இசை ” பதறிக் கொண்டு வந்தவள் அவளை அணைத்துக் கொண்டாள் காயத்திரி..

 

“ ஆரியனை பிடிக்கல்ல காயு..அவர் மேல எனக்கு எந்த ஃபீலிங்சும் வரல்ல..ஏதோ அவர் இஷ்டத்துக்கு என்னை ஆட்டி வைக்கிற மாதிரி ஃபீல் ஆகுது காயு அப்பாவுக்காக மட்டும் தான் மேரேஜ்க்கு ஓகே சொல்லி இருக்கேன்..” அவள் முதுகை வருடி “ உனக்கு பிடிக்கலன்னு அப்பாகிட்ட நேரடியாவே சொல்லி இருக்கலாமே இசை.. ஆரியனை மேரேஜ் பண்ணி பிடிக்காத வாழ்க்கையா சகிச்சிகிட்டு வாழ போறீயாடி? ” அவளை தன்னில் இருந்து பிரித்து தாடை பற்றி அவள் கேட்க..

 

“ அப்பாவை மீறி எதுவும் பேச முடியாது காயு..அவரோட அன்புக்கு நான் எப்பவும் அடிமை அதுக்காகவே என்ன வேணாலும் செய்யலாம் ஆனா ஆரியனோடான மேரேஜ் அப்புறமான லைஃப் என்னால கனவு காணக்கூட முடியல டி.. நான் சந்தோஷமா வெளிப்படையா என்னை பத்தி பேசுறேன்னா உன்கிட்ட மட்டும் தான் காயு.. அடுத்து ஆர்ஜே இசையா சந்தோஷமா இருக்குற ஒரே இடம் இந்த ரேடியோ ஸ்டேஷன் தான்.. ” என்று கண்ணீரை துடைத்து கொண்டு இதழ் விரித்த சிரிப்புடன் அவள் சொல்ல..

 

“ இசை ” 

 

“ உன்கிட்ட என் மனசுல உள்ளதை பேசி உன்னையும் வேதனைபடுத்துறேன்ல சாரி காயு..” 

 

“ ப்ச் என்னடி நீ! நான் உனக்கு பெஸ்ட் ப்ரண்ட் நியாபகம் இருக்கட்டும்..உன் மனசுல இருக்குறதை நீ சொல்லி நான் கேட்காம எப்படி இசை ?” ஆதங்கமாகக் கேட்டாள் அவளின் தோழி காயத்திரி..

 

“ காயு இதுக்கு போய்..நானும் பைத்தியகாரி மாதிரி உளறிட்டு இருக்கேன்..” தலையில் அடித்துக் கொண்டாள் அவள்..

 

“ இதே போல நீ அழக்கூடாது சரியா..உன் லைஃப் ஆஹ்..நீ தான் முடிவு பண்ணனுமே தவிர மத்தவங்க இல்ல..இதை நீ ப்ரஸ்ட் புரிஞ்சிக்கோ இசை! உன் அப்பா கிட்ட மனம் விட்டு பேசு அதான் உனக்கு நல்லது ட்ரை பண்றீயா டி ? ” மனம் தாளாமல் காயத்ரி கேட்க..

 

பெரு மூச்சுடன் " ட்ரை பண்ணி பாக்குறேன் காயு ” என்றாள் அவள்..

 

“ நீ வீட்டுக்கு போக டைம் ஆகிட்டு..கிளம்பு நாளைக்கு மீட் பண்ணுவோம்..” என்று அவள் சொன்னதும், கைபையை தோளில் குறுக்காக மாட்டிக் கொண்டு ” பாய் காயு ” காயத்ரியிடம் விடைபெற்றுச் சென்றாள் இசைகவி கதையின் நாயகி இவள்..

 

தந்தை மேகநாதன் பெரிய நகை கடை வைத்திருக்கும் பிஸ்னஸ் மேன் ஒருவர்..இவர் மனைவி வினோதினி இருவருக்கும் நான்கு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்..மூத்தவள் இலக்கியா கணவன் சபரி இருவருக்கும் ஒரு பெண் பிள்ளை..இரண்டாமவள் இனியா கணவர் மோஹித் இரண்டு ஆண் பிள்ளைகள்..மூன்றாமவள் கதையின் நாயகி இசைகவி நான்காமவள் இமாயா இதுவே இவர்களின் குடும்பம்...

 

 

 

தொடரும்...

 

 

 

 

 

 


   
ReplyQuote
VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Member Author
Joined: 3 months ago
Posts: 92
 

Super 😍 


   
ReplyQuote
VSV 4 – தேவன் உருக்கும் இசை
(@vsv4)
Member Author
Joined: 3 months ago
Posts: 59
Topic starter  

@vsv11 Thank you sis 😊💕💕💕


   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Member Author
Joined: 3 months ago
Posts: 25
 

@vsv4 

 

Very nice start 


   
ReplyQuote

You cannot copy content of this page