All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நின்னுக்கோரி வர்ணம்
 
Notifications
Clear all

நின்னுக்கோரி வர்ணம்

Page 4 / 4
 

Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 44
 
துப்பாக்கியுடன் பங்களாவை விட்டு வெளியே வந்தவள்... சட்டென்று நின்றாள்.
 
திகைத்தாள்.
 
கிரியை எஸ்ஐ துப்பாக்கி முனையில் நிறுத்தியிருந்தார்.
 
எஸ்ஐ: உங்க துப்பாக்கியை ஒழுங்கா இந்த பக்கமா தூக்கி போடுங்க... இல்ல, அனாவசியமா என் துப்பாக்கி பேசும்.
 
தாரிகா துப்பாக்கியை தூக்கி போடாமல், கையில் வைத்தபடி, யோசித்துக் கொண்டிருந்தாள்.
 
கிணற்றின் சைடில் கல்லிலேயே செய்யப்பட்ட படிக்கட்டுகள் வழியாக ரிஷாந்த் மெதுவாக பார்த்து பார்த்து இறங்க, ஜானியும் அவனை பின் தொடர்ந்தான். படிக்கட்டில் லைட்டை அடித்தபடி இறங்கிக் கொண்டிருந்தனர். கும்மிருட்டாக இருந்தது. என்னவென்று சொல்ல முடியாத ஒரு விசித்திர, குடலை பிரட்டும் நாற்றம். மூச்சு முட்டவும் செய்தது. அடிக்கடி இருமினார்கள்.
 
ஜானி கிணற்றுக்குள் லைட்டை அடித்து பார்க்க, கொஞ்சூண்டு கீழே கிடந்த தண்ணீரில் குப்பையும் கூளமுமாக மிதந்து கொண்டிருந்தது.
 
ஜானி:  இந்தக் கச்சடா தண்ணிக்குள்ள தூக்கி போட்டுருந்தா.. கஷ்டம் தான்...
 
ரிஷாந்த்: வேற வாய்ப்பே இல்லை. கிணத்துக்குள்ள தான் போட்டுருப்பான்.
 
ஜானி:  இல்ல ரிஷ். நான் அப்படி நினைக்கல. அவனுங்க தெனாவெட்டு பேச்சையும், சிரிப்பையும் பார்த்தேல்ல. அவனுங்க ஒளிச்சு வச்சிருக்கவங்களை கண்டுபிடிக்க முடியாதுன்கிற தெனாவட்டு. அதனால சும்மா கிணத்துக்குள் மட்டும் தூக்கி போட்டுருக்க மாட்டானுங்க. வேற ஏதோ பண்ணிருக்காங்க.
 
ரிஷ்: என்னண்ணா சொல்ல வரீங்க?
 
ஜானி: சரி விடு. கிணத்துக்குள்ள இறங்கியாச்சு. அடி வரைக்கும் போய் பார்த்திடலாம்... அப்புறம் யோசிப்போம்.
 
இருவரும் பாதி கிணறை தாண்டி, கீழே இறங்கி இருந்தார்கள்.
 
சைடு கற்சுவரில் பிடிமானத்துக்காக கையை தடவிக் கொண்டே வந்த ஜானி, சொரசொரப்பான கல் அல்லாமல் ஏதோ ஒரு வழவழ பகுதியை கை கடந்ததும், நின்றான்... டார்ச்சை சுவரில் திருப்பி அடித்தான். கையால் அந்தப் பகுதியில் தட்டினான். டப்பு டப்பு என்று மரத்தினால் செய்த கார்ட்போர்டை தட்டுவது போல், சத்தம் வந்தது.
 
கீழே சென்று கொண்டிருந்த ரிஷாந்த் நின்று, திரும்பி பார்க்க,
 
"ரிஷ்... கல் இருக்க வேண்டிய இடத்துல கார்டுபோட் இருக்கு. அதுவும் கல் இருக்கிற கலரிலேயே... உத்தேசமாக width 70 cm இருக்கலாம்."
 
ரிஷாந்த் திரும்பவும் மேலே ஏறி வந்தான். இருவரின் மொபைல் வெளிச்சமும் கார்ட் போர்டின் கண்களை கூச வைத்தது. ஓரமாக  ஏதோ துளை போன்ற ஒரு அமைப்பு இருக்க.. ஜானி துளையில் கை வைத்து இழுத்தான்.  கார்டு போடு ஸ்லைடிங் டோர் போல், சர்ரென்று சைடில் தள்ளியது. இருவரும் உள்ளே டார்ச் அடித்துப் பார்க்க... உள்ளே கால்கள் தெரிந்தன. 
 
ஒரு பெண்ணின் கால்கள். முழங்கால் வரை புடவை மேலேறி இருக்க, ரிஷாந்த்திற்கு யார் என்று புரிந்தது
 
அடுத்த நொடி,
 
ரிஷாந்த்: சார் இங்கே வச்சிருக்கானுங்க...என்று ஹை பிச்சில் கத்தினான்.
 
சண்டை போட்டுக் கொண்டிருந்த சூரஜ் சட்டென்று நிறுத்தினான். சகாதேவனை பார்த்தான். பின்பக்க இருட்டுக்குள் ஓட ஆரம்பித்தான். 
 
"டேய் நில்ரா..."
 
சகாதேவன் அவனை விரட்டி கொண்டு சென்றார்.
 
ரிஷாந்த்தின் அலறல் சத்தம், முன்னால் நின்றிருந்த போலீஸ்காரர்களுக்கு கேட்டது. துப்பாக்கி முனையில் நின்றிருந்த கிரி தாரிகாவுக்கு கண்ணை காட்ட... தாரிகா எஸ்ஐ சபாபதியை சுடுவதற்காக துப்பாக்கியை நீட்டினாள். சுதாரித்த சபாபதியின் துப்பாக்கி, முதலில் பேசியது.
 
டுமீல்...
 
தாரிகாவின் வலது கை நடு விரலோடு சேர்த்து, துப்பாக்கியும் தெறித்தது.
 
ஆஆஆஆஆஆ!!!
 
தாரிகா அலறினாள். பிசி ஒருவர் ஓடி சென்று துப்பாக்கியை எடுத்துக் கொண்டார்.
 
சபாபதி: மீதி பேர் பின்பக்கம் போய் என்னாச்சுன்னு பாருங்க.
 
மீதி போலீஸ்காரர்கள் பங்களா பின்பக்கமாக தப தப வென்று ஓடினார்கள்.
 
அதன் பிறகு நடந்த குறிப்பிட தகுந்த சம்பவங்களை ஒரு கிளான்ஸ் பார்த்துவிடலாம்.
 
  1. சுற்று வட்டார போலீஸ் ஸ்டேஷன்களில் இருந்த அனைத்து போலீஸ் ஜீப்புகளும், ஒரு போலீஸ் வேனும், போலீஸ்காரர்களும் பண்ணை வீட்டுக்குள்ளும் வெளியேயும் தான் நின்றிருந்தன, நின்றிருந்தார்கள்.
 
  1. பண்ணை வீட்டை சுற்றி எமர்ஜென்சி விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
"போலீஸ் லைன் டூ நாட் கிராஸ்" என்ற டேப்புகள். விஷயத்தை கேள்விப்பட்டு பத்திரிகைக்காரர்களும், நியூஸ் சேனல்களும் பண்ணை வீட்டின் கேட்டுக்கு வெளியே  குவிந்திருந்தன. அவர்களை கட்டுப்படுத்துவதற்காக தனியாக நாலு போலீஸ்காரர்கள்.
 
  1. கிணற்றுக்குள் தனி தனி அறைகளில் இருந்து, ரெஜினாவும், பிரிக்கெட் டைலரும் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உயிருடன் இருந்ததைப் பார்த்ததும், ஜானியும் ரிஷாந்த்தும் சந்தோஷத்தில் கட்டிப்பிடித்துக் கொண்டார்கள்.
 
  1. பாராமெடிக் டீம் வந்ததும், மீட்கப்பட்ட ரெஜினாவையும், டைலரையும் ஆம்புலன்ஸில் ஏற்றி ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தார்கள். இருவருமே மயக்கத்தில் இருந்தார்கள்.
 
  1. ஹாஸ்பிடலுக்கு போன கார் வந்ததோ வரலையோ... கேட் அருகே நின்றிருந்த பாதயாத்திரை பக்தர்கள், பதறிப் போய் பாதயாத்திரையாகவே மரக்காணம் ஹாஸ்பிடலுக்கு சென்றார்கள். அவ்வளவு போலீஸ் பட்டாளத்தையும் அவர்கள் ஒரு சேர பார்த்ததில்லை என்பதுதான் அவர்கள் பயப் பாத யாத்திரைக்கு காரணம்.
 
அனைத்து சம்பவங்களும் அதிவேகத்தில் நடந்தேறின.
 
ரிஷாந்த் மற்றும் ஜானியை பார்த்து எஸ்ஐ சபாபதி: "இப்போதைக்கு அந்த இங்கிலாந்து பொண்ணையும், ரெஜினாவையும் கொலை செய்ய முயற்சித்ததுக்காக, அப்புறம் கடமையை செய்ய வந்த காவலர்களையும் கொலை செய்ய முயற்சித்ததுக்காக, கிரி, தாரிகா, செக்யூரிட்டி மற்றும் வேலைக்காரியை  கைது செய்றோம். ரெஜினா கண்ணு முழிச்சு சாட்சியம் சொன்னதும், இவங்க ஆசைபடியே மெஜிஸ்ட்ரேட் கிட்ட warrant வாங்கி, பண்ணை வீட்டை ஒரு தூசி தும்பு விடாம தோண்டி துருவுவதற்கு, போலீசும், பாரன்சிக் ஆட்களும்  வந்துருவாங்க. இவனுங்க தான் ஈசிஆர் ரோட்டில் பெண்களை கொலை செய்த சீரியல் கில்லர்கள்னு நிரூபணம் ஆச்சுன்னா... தூக்கு தண்டனை தான். என்னடா முழிச்சிட்டு இருக்கீங்க. போலீஸ்கிட்ட சட்டம் பேசுறீங்களா? இழுத்துட்டு போங்க இவர்களை", என்று சொல்ல, கிரி, தாரிகா, சூரஜ் மற்றும் வேலைக்காரியை மரக்காணம் ஸ்டேஷன் போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொண்டார்கள்.
 
ஜானி, "சார் ஒரு நிமிஷம்... அவங்க கிட்ட ஒரே ஒரு விஷயம் பேசணும்.."
 
சபாபதி: எவ்வளவு நேரம் வேணாலும் பேசுங்க. ஆனா பத்திரிகைக்காரர்கள் வருவதற்கு முன்னால பேசி முடிச்சிடுங்க.
 
ஜானி அவர்கள் நால்வரையும் நெருங்கினான்.
 
தலை குனிந்து நின்றிருந்த கிரியை பார்த்து,
 
"ஏதோ அட்ரஸ் இல்லாத ஊரிலிருந்து வரலடா...   
I am from panchayat union of parappadi.... திருநெல்வேலிக்கு வந்து  கேட்டு பாரு... சும்மா அதிரும்ல.
 
என் பேரு ஜானி, இவன் பெயர் ரிஷாந்த். மறந்தறாத. ஜெயில்ல கம்பி எண்ணும்போது ஒவ்வொரு நாளும் எங்க பேர ஞாபகத்துல வச்சுக்கோ.
 
You bloody bastard... மனுஷங்களா இருக்கிறதுகே  உங்களுக்கு தகுதி கிடையாது. என்ன பாத்து country brute ன்னு சொல்றியா??? இவனுங்க மூஞ்சிய கவர் பண்ணவே விடாதீங்க. எல்லாரும் பாக்கட்டும். காரி துப்பட்டும்..."
 
போலீஸ்காரர்கள் நால்வரையும் தர தரவென இழுத்து சென்றார்கள்.
 
இருவரையும் பெருமையாக பார்த்தபடி நின்ற சகாதேவன், அவர்கள் அருகே நெருங்கி வந்து, கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
 
சகாதேவன்: வெளியே போனீங்கன்னா மீடியாகாரங்க மொய்ச்சுக்குவாங்க. உங்க பிரைவசி போயிடும்.அதனால ஏதாவது ஒரு போலீஸ் ஜீப்ல எஸ்கேப் ஆகி கிளம்பிருங்க.
 
இருவரும் சரி என்றார்கள்.
 
நேரம் நள்ளிரவை தாண்டி இருந்தது.
 
ஒரு மரத்தடியில் இருந்த கற்களில் போய், இருவரும் அமர்ந்தார்கள். சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார்கள். போலீஸ்காரர்கள் பரபரப்பாக, போனும் கையுமாக, அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்ததை பார்த்தார்கள்.
 
ஜானி: கடைசி நேரத்தில் ஏதோ ஐடியா பண்ணி  எப்படியோ அந்த புள்ளைய காப்பாத்திட்ட... எல்லா புகழும் ரிஷாந்த்கே.
 
ரிஷாந்த்: நீங்க இல்லன்னா இவ்வளவு தூரம் வந்திருக்க முடியுமா?
 
ஜானி: எல்லாம் சரி தான் தம்பி, கடைசி நேரத்தில் தோத்து போய் வெளில போகும்போது, உனக்கு அந்த கிணறு சம்பந்தமான ஐடியா வரலைன்னா, கதையே இன்னைக்கு வேற மாதிரில இருந்திருக்கும்.
 
ரிஷாந்த்: உங்களுக்கு அறிவும் ஜாஸ்தி, தன்னடக்கமும் ஜாஸ்தின்னு, வாசகர்கள் கிட்ட establish பண்றீங்களா? 
 
உண்மை என்னன்னு எனக்கு தெரியும், உங்களுக்கு தெரியும், எல்லாருக்கும் தெரியும். அப்படியே அந்த சரத் பயலையும் கொஞ்சம் கவனிச்சு விடுங்க. நேயர் விருப்பம்.
 
"பண்ணிட்டா போச்சு..", சிகரெட் முடியப் போனதால், ஜானி கடைசி இழுப்பை ஆழமாக இழுத்து விட்டு, மிச்சம் இருந்த சிகரெட்டை காற்றில் சுண்டி விட்டான்.
 
தீப்பொறிகள் காற்றில் சிதற, தூரத்து இருட்டுக்குள் போய் விழுந்து, உயிரை விட்டது.
 
பண்ணை வீட்டுக்கு வெளியே பறந்து விரிந்த ஆகாயம், நட்சத்திர அழகிகளுடன் கண் சிமிட்டி கொண்டிருந்தது.
 
தொடரும்


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 45
 
காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு சரத் விறுவிறுவென ஆபீசுக்குள் நுழைந்தான். காலை OMமுடன் மீட்டிங்கு நேரமாகிவிட்டது. அவன் கார் ஆபீஸ் மெயின் கேட்டில் நுழையும் போதே செக்யூரிட்டிகள் அவனை விசித்திரமாக பார்த்ததை கவனித்தான்.
 
ஆபீஸ் வாசலில் நுழைந்து, கேப்பிடீரியாவை கடந்தான். அங்கு இருந்தவர்கள் அவனை கைகாட்டி பேசுவதையும், கேவலமாக பார்ப்பதையும், கவனித்தான். என்னாச்சு இவர்களுக்கு?? ஒரு சிலர் அவனை முறைத்துக் கொண்டிருப்பதையும், பார்த்தான். ஷீபா சமாச்சாரம் வெளியே தெரிந்து விட்டதா? அல்லது, லேப்டாப்பில் உள்ள விஷயங்களை நெட்டில் போட்டு விட்டார்களா?
 
லப்பு டப்புகளின் வேகம் அதிகமாக, அவனுக்கு வியர்த்துக் கொட்டியது... வழக்கமாக அவன் வந்தாலே, பயந்து போய் விலகிப் போகிறவர்கள், இன்று பயமில்லாமல் கலாய்த்து கொண்டிருக்கிறார்கள். ஹெச்ஆர் ரூம் வாசலில் இரண்டு பேர் நின்றிருந்தார்கள். சரத் வந்ததை பார்த்ததும், அதில் ஒருவன்,
 
"ஏண்டா நீ பண்ண வேலைக்கு எங்கள பாத்து டிசிப்ளினா இல்ல. வேலை ஒழுங்கா செய்யலன்னு வேலைய விட்டு தூக்க முயற்சி பண்றியா?"
 
தூ... என்று சரத் முகத்தில் துப்பினான். எச்சில் அவன் முகத்தில் தெறித்து வழிந்தது.
 
அரை தூக்கத்திலிருந்த சரத் திடுக்கென்று முழித்தான். வால் கிளாக்கில் நேரத்தை பார்த்தான். மணி இரவு ஒன்று.
அதன் பிறகு தூக்கம் வராமல், புரண்டு கொண்டிருந்தான். ஏதோ யோசனைகள் தோன்றி, அவன் கழுத்தை பிடித்து நெறித்து கொண்டிருந்தன.
 
போட்டோக்களை இன்டர்நெட்டில் போட்டு கேவலப்படுத்திடுவானோ? என்னுடைய பசங்க பார்த்தால் என்ன நினைப்பார்கள்???
 
என் ஒய்ப் கிட்ட போன் பண்ணி சொல்லிட்டா என்ன செய்வாள்? உடனே டைவர்ஸ் பண்ணக்கூடிய ஆள் இல்லை. பயங்கர ராங்கிக்காரி. துப்பாக்கிய தூக்கி கொண்டு வந்து, எங்கிருந்தாலும் என்னை சுட்டு கொன்றே விடுவாள்.
 
Company directors க்கு entelnet கம்பெனியுடன் நான் செய்த டீலிங் தெரிந்தால், my career, reputation, everything will be over..
I will end up in jail.
 
சுஷ்மிதாவுடன் அந்த affair விஷயங்கள. ஐயோ!! வெளியே தெரிந்தால், எவ்வளவு பெரிய கேவலம்...
 
ஷீபா போட்டோக்கள் வேற கேமராவில் இருந்துச்சு. அந்த விஷயம் வெளியே கசிந்தால் என்னாவது?
 
நினைக்க நினைக்க திக்கு திக்கென்று இருந்தது. தவித்துக் கொண்டிருந்தான். துடித்துக் கொண்டிருந்தான். பய தேள் கொட்டிக் கொண்டே இருந்தது.
 
படுக்கையில் இருந்து சட்டென்று எழும்பி உக்காந்தான். இனிமேல் காலம் தாழ்த்தக்கூடாது,   அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுத்தால் தானே என் மனைவிக்கு தெரிய வரும். முதல் வேலையாக காலையில் சந்திரகுமார் ஜெயினுக்கு போன் பண்ணி, இருபது லட்ச ரூபாயை ஏதாவது ஒரு பிரன்ட் அக்கவுண்டுக்கு டிரான்ஸ்பர் பண்ண சொல்லி, அந்த பரதேசிங்களுக்கு கொடுத்து, லேப்டாப்பையும் கேமராவை வாங்கிக் கொள்ள வேண்டும்.
 
எப்படா காலை வரும் என்று காத்திருக்க ஆரம்பித்தான்.
 
மறுநாள் காலை 10 மணி
 
நேற்றிரவு ஜானியும், ரிஷாந்த்தும் போலீஸ் ஜீப்பில் எஸ்கேப் ஆகி, பண்ணை வீட்டை விட்டு வெளியே வந்து, யாருக்கும் தெரியாமல்,  ஐயர் வீட்டுக்குள் நுழைவதற்கு பெரும்பாடு ஆகிவிட்டது. காலையில் எழுந்த போதே சூரியன் வஞ்சனையின்றி சிரித்துக் கொண்டிருந்தான். இரவு முழுக்க ரிஷாந்த் கண்ட கெட்ட கனவுகள் சூரிய ஒளியில் கரைந்து போயிருந்தன.
 
ரெஜினாவின் உடல்நிலை  எப்படி இருக்குதுன்னு விசாரிக்கணும். யாரிடம் போன் பண்ணி கேட்பது என்று தெரியவில்லை. நேரில் தான் போக வேண்டும்.
 
வெளியே கேட்டில் பூட்டு போட்டு விட்டு, எகிறி குதித்து உள்ளே நுழைந்தது நல்லதாக போய்விட்டது. மெயின் டோரிலும் முன்பக்கம் பூட்டு போட்டுவிட்டு பின்பக்கமாக உள்ளே நுழைந்து இருந்தார்கள். காலையிலேயே மீடியாகாரர்கள், மைக்குடன் பண்ணை வீட்டுக்காரரை பற்றி கருத்து கேட்பதற்காக கேட்டை தட்டினார்கள்.
 
கேட்டிலும், கதவிலும் வெளிப்பக்கமாக பூட்டு போட்டுருந்தும், சற்று மனம் தளராமல் தட்டி பார்த்தார்கள்.
 
"ECR சீரியல் கில்லர் கைது" ஹெட்லைன் நியூசை பார்த்துவிட்டு, லோகேஷும் வீராசாமியும் கால் பண்ணினார்கள். இரவு நடந்ததை ரிஷாந்த் அவர்களுக்கு விவரித்தான். எப்படியோ நல்லபடியாக முடிந்தது என்று வீராசாமிக்கு சந்தோஷம். லோகேஷுக்கு மட்டும் சின்னதாக வருத்தம். கஷ்டப்பட்டு ஒரு வேலை கிடைத்தது, இப்போது கிரியை அரெஸ்ட் பண்ணினால், கம்பெனியை இழுத்து மூடி விடுவார்களே என்ற வருத்தம்.
 
லோகேஷ் வருத்தத்தை போக்க, ஜானி வழக்கம்போல பழமொழியை சொன்னான். "ஆனாக்க அந்த மடம்,  ஆவாட்டி சந்தை மடம்." 
 
இதை கேட்டதும், தெருவில் தான் நிற்க வேண்டும் போல என்று , அவன் வருத்தம் மேலும் அதிகமானது.
 
ரிஷாந்த் ஜானியைப் பார்த்து,
"அட என்ன நீங்க ?, இப்படியா சமாதானப்படுத்துவாங்க...", போனை வாங்கி, லோகேஷ் ஐ சமாதானப்படுத்தும் விதமாக பேசி வைத்தான்.
 
ரிஷாந்த்: அண்ணே, சூட்டோட சூடா அந்த சரத்துக்கும் ஒரு முடிவு பண்ணுங்க. அவனுக்கெல்லாம் ரெண்டு நாள் கொடுத்ததே தப்பு. ஜிஹெச்க்கு போயி ரெஜினா நிலவரம் என்னனு விசாரிக்கணும். ஆதாரம் ரெடி பண்ண போறேன்னு சொன்னிங்களே, என்ன பண்ணப் போறீங்க?
 
ஜானி: ரொம்ப சிம்பிள்ரா... கேமரா, லேப்டாப் தானே எரிஞ்சு போச்சு. மெயில்ல இருக்கிறதல்லாம் அப்படியே தானே இருக்கும். ஏற்கனவே அவன் மெயில் ஐடியை, பாஸ்வேர்டு, செகண்டரி மெயில் ஐடி, போன் நம்பர் எல்லாமே மாத்திட்டோம். எப்ப வேணா லாகின் பண்ணிக்கலாம். அதுல இருக்கக்கூடிய போட்டோஸ், சேட்டிங்ஸ், மத்த இன்பர்மேஷன் எல்லாம் நம்ம கையில்தான் இருக்கு. அத வச்சு புனிதமா விளையாடலாம். 
 
ரிஷாந்த் தலையில் அடித்துக் கொண்டான். அந்த விஷயத்தை அவன் மறந்தே போனான். 
 
ஜானி:  முதல்ல இங்கிருந்து எஸ்கேப் ஆகி, வெளில போகணும். வேற ஏரியாக்கு போய், போன் பண்ணி அவனுக்கு டார்ச்சர் கொடுக்கலாம்.
 
இருவரும் ரெடியாகி, வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். பண்ணை வீட்டுக்குள்ளும், வெளியேயும் பெருங்கூட்டம். இருவரும் கேட்டை திறந்து பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே வருவதை பார்த்ததும், பண்ணை வீட்டின் முன்னால் நின்றிருந்த மீடியா காரர்கள் மைக், கேமரா சகிதமாக ஓடி வர...
 
ஜானி அவசர அவசரமாக கேட்டை பூட்டி விட்டு, "டேய் வண்டியை எடுறா", என்று கூவினான். ரிஷாந்த் பைக்கை ஸ்டார்ட் பண்ணி செல்ல, ஜானி  பைக் பின் சீட்டில் துள்ளி ரன்னிங்கில் ஏறிக்கொண்டான். பைக் ஈசிஆர் ரோட்டை தொட்டு, பாண்டிச்சேரி நோக்கி திரும்பி, விரைந்தது.
 
"ஆமா... இன்னொரு தடவை சொல்றேன் கேளு. முதலில் மணக்குள விநாயகர் கோயிலுக்கு போ. 100 தோப்புக்கரணம் போடு. தோப்புக்கரணம் போடும்போது, "எல்லா பெண்களும் எனக்கு சகோதரிகள்"ன்னு சொல்லிக்கிட்டே போடு. சத்தமா சொல்லணும். தமிழை தப்பா ஒரு தடவ சொன்னால், ரிஜெக்டட். அதை வீடியோ எடுத்துக்கோ. அந்த வீடியோவை, "naanorupombalaporukki@gmail.com மெயில் ஐடிக்கு அனுப்பு. எங்க சொல்லு. கரெக்ட்டா சொல்றியா பாப்போம்...", என்றான் ஜானி.
 
சரத்: நான் ஒரு பொம்பள பொறுக்கி அட் ஜிமெயில் டாட் காம்.
 
ஜானி:  திரும்ப சொல்லு.
 
சரத்: நான் ஒரு பொம்பள பொறுக்கி.
 
ஜானி: very good. நான் அதை பார்த்து, Ok mail அனுப்புனதும், அஞ்சு லட்ச ரூபாய் எடுத்துக்கிட்டு, குரும்பாபேட்ல இருக்கும் கலாவதி முதியோர் இல்லத்துக்கு போயி, அந்த தொகையை டொனேஷன் கொடுத்து விட்டு, ரிசிப்ட் வாங்கி, அதை ஸ்கேன் பண்ணி, அதே மெயில் ஐடிக்கு அனுப்பனும். இப்போதைக்கு இதுதான் உனக்கு டாஸ்க். அடுத்தது அதுவும் அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் நீ பண்ணனும். அடுத்தது நீ என்ன செய்யணும்னு ஒரு மணி நேரம் கழிச்சு போன் பண்ணி சொல்றேன். இதை ஒன் ஹவருக்குள் நீ செய்ய தவறினால், தெரியும்ல என்ன பண்ணுவேன்னுட்டு தெரியும்ல. 
 
போட்டோக்கள் இன்டர்நெட்டில் சூடாக வெளியிடப்படும். உன் பொண்டாட்டிக்கு தகவல் தெரிவிக்கப்படும். உன் டீலிங்குகள் கம்பெனி மேலதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும். சுஷ்மிதா  சமாச்சாரங்கள், எல்லா காண்டாக்ட்ஸுக்கும் பகிரப்படும்.
 
சரத் கதறினான்.
 
"Oh my god... dont say that ... ஒன் அவர்ல நான் முடிச்சிடுறேன். மெயில் அனுப்புறேன். Pls dont do anything..."
 
ஜானி: One hour ஞாபகம் இருக்கட்டும். ஒரு வினாடி கூட லேட்டாக கூடாது.
 
ஜானி ஃபோனை வைத்ததும், switch off செய்து சிம்மை தனியாக கழட்டி எடுத்து,  பாக்கெட்டில் போட்டுக்கொண்டு,
 
"One hour கழிச்சு இவனை பார்த்துக்கலாம். இப்ப ஜிஹெச்க்கு போய் ரெஜினா நிலைமை எப்படிருக்குன்னு விசாரிப்போம்...", என்றான்.
 
பாண்டிச்சேரி யூனிவர்சிட்டி அருகே, ஒரு டீக்கடையில் நின்று பேசிக் கொண்டிருந்த இருவரும்... பைக்கில் பாண்டி ஜிஎச் க்கு கிளம்பினார்கள்.
 
தொடரும்
 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 46
 
அரை மணி நேரத்தில் ஜிஹெச்க்கு வந்தார்கள். கேட்டிலேயே ரெண்டு போலீஸ்காரர்கள் சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
 
"கடைசில நம்ம இன்ஸ்பெக்டர் தான் செட்டப் பண்ணிக்கிட்டாரு."
 
ஜானி அவர்கள் பேச்சில் குறுக்கிட்டு: சார் நேத்து ஈசிஆர் ரோடு பண்ணை வீட்லருந்து காப்பாற்றப்பட்ட பெண் ரெஜினாவை இங்கேதான் அட்மிட் பண்ணிருக்காங்க. அவங்க எந்த வார்டுல இருக்காங்கன்னு சொல்ல முடியுமா?
 
PC:  நீங்க யாரு பத்திரிகைக்காரர்களா?
 
ஜானி: இல்ல சார். அது என் தங்கச்சி. இப்பதான் விஷயம், கேள்விப்பட்டு வருறேன்.
 
PC: எமர்ஜென்சி வார்டுல ஸ்பெஷல் வார்டு தனியா இருக்கும். அங்க அட்மிட் பண்ணிருக்காங்க.
 
தேங்க்யூ சார் என்று சொல்லிவிட்டு, ஜானியும் ரிஷாந்த்தும் ஜிஹெச்க்குள் சென்றார்கள். இரண்டு போலீஸ்காரர்களும் விட்ட இடத்திலிருந்து சுவாரஸ்ய பேச்சை தொடர்ந்தார்கள்.
 
"இன்ஸ்பெக்டர் அவளை செட்டப் பண்ணிக்கிட்டார்."
 
"அதான் சொல்லிட்டியே, மேல சொல்லு..."
 
ஜி ஹெச் உள்ளே ஸ்பிரிட் வாசம், மருந்து வாசம், நோய் வாசம், மரண வாசம் எல்லாமே கலந்தடித்துக் கொண்டிருந்தது.
 
ஓரமாக நின்றிருந்த அமரர் ஊர்தியில் உள்ளே ஸ்ட்ரெச்சரில் கிடத்தப்பட்டிருந்த யாரையோ பார்த்து, யாரோ அழுது கொண்டிருந்தார்கள்.
 
ஜி ஹெச்சில் எதிர்பட்டவர்களின் கண்களில், பல நாட்கள் தூக்கம் மிச்சம் இருந்தது. அவல குரல்கள், இருமல் சத்தங்கள், சக்கர நாற்காலிகளின் நடமாட்டம், ஸ்ட்ரெச்சர்களின் கட கட சத்தம், அழுக்கு படிந்த சுவர்கள், பான் பராக் துப்பப்பட்ட காரிடர் மூலைகள், என அரசாங்க ஆஸ்பத்திரிக்கு உண்டான அனைத்து அடையாளங்களும் தவறாமல் இருந்தன.
 
இருவரும் எமர்ஜென்சியில் ஸ்பெஷல் வோர்ட் எங்கே என்று விசாரித்துவிட்டு சென்றார்கள். ஸ்பெஷல் வார்டு போர்ட் பலகீனமாக தொங்கிக் கொண்டிருக்க... வாசலில் எட்டு மாத கர்ப்பத்துடன் ஒரு கான்ஸ்டபிளும், அவருக்கு ஆப்போசிட்டாக நோஞ்சானாக மற்றொரு போலீசும், சேரில் உட்கார்ந்திருந்தார்கள். காக்கிச்சட்டை அணியாமல் இன்னும் ரெண்டு போலீஸ்காரர்கள் பக்கத்தில் நின்றிருந்தார்கள்.
 
வார்டுக்குள் நுழையப்போன இருவரையும், எங்கே போறீங்க என்று கான்ஸ்டபிள் கேட்க,  வெளியே நின்ற போலீஸ்காரர்களிடம் சொன்ன கதையையே ஜானி அவிழ்த்து விட்டான்.
 
கான்ஸ்டபிள்: உள்ள போக முடியாது, வேணும்னா அவங்க அப்பாவும் அம்மாவும் வந்திருக்காங்க. அவங்களை வெளியில் வர சொல்றேன். அவங்க கிட்ட பேசிக்குங்க... என்று சொல்லிவிட்டு உள்ளே தகவல் தெரிவிக்க சென்றார்.
 
ஸ்பெஷல் வார்டில் 8 படுக்கைகள் போடப்பட்டிருந்தன. ஒரு படுக்கைக்கும் இன்னொரு படுக்கைக்கும் இடையே மெல்லியதாக ஒரு திரை. பெரும்பாலும் அந்த திரைகள் திறந்தே இருந்தன.
 
ரெஜினா கண் விழித்திருந்தாள்... அவள் அம்மாவும், அப்பாவும், தங்கச்சியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அம்மாவும் தங்கச்சியும் ஆறுதலாக அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அழுகையின் அனைத்து நீள அகலங்களிலும் சஞ்சரித்த களைப்பு அவர்கள் முகத்தில் தெரிந்தது. கான்ஸ்டபிள் சென்று, ரெஜினாவை பார்ப்பதற்காக, அண்ணன் முறையில் யாரோ வந்திருக்கிறார்கள் என்று சொல்ல... 
 
ரெஜினாவின் அப்பா பீட்டர்:  யாராக இருக்கும் தெரியலையே, நான் போய் பாத்துட்டு வர்றேன்.... கான்ஸ்டபிளுடன் வார்ட்டை விட்டு வெளியே சென்றார்.
 
காரிடரில், வாசலுக்கு சற்று முன்னால் நின்றிருந்த ஜானியையும் ரிஷாந்தையும் பார்த்து, ட்ரே ஒன்றை தூக்கிக் கொண்டு வந்த ஒரு நர்ஸ், "இப்படியெல்லாம் வழியில் குறுக்க நிக்க கூடாது", என்று சத்தம் போட்டுக் கொண்டே உள்ளே சென்றாள்.
 
ரெண்டு பேரும் ஒதுங்கி ஒரு ஓரமாக நின்றார்கள்.
 
வெளியே வந்த கான்ஸ்டபிள் அவர்கள் இருவரையும் நோக்கி கை காட்ட... பீட்டர் அவர்களை நோக்கி சென்றார்.
 
ஜானி: வணக்கம் ஐயா, ரெஜினா இப்ப எப்படி இருக்கா? கண்ணு முழிச்சிட்டாளா?
 
பீட்டர்: தம்பி, நீங்க யாருன்னு தெரியலையே?
 
ஜானி: என் பேரு ஜானி.. இவன் பேரு...
 
பீட்டர் உற்சாக குரலில்: பிரசாந்தா???, என்று கேட்க,
 
ரிஷாந்த்:  இல்லை சார்... ரிஷாந்த்.
 
அடுத்த நொடியில், பீட்டரின் கண்கள் குளமானது. அவர்கள் இருவரின் கையையும் படக்கென்று பிடித்துக் கொண்டார். 
 
"நீங்க தானா தம்பி அது... என் மக கண்ணு முழிச்சதும், உங்கள பத்தி தான் சொன்னா.. சக மனுஷங்க கஷ்டத்துல இருக்கும்போது, என்னன்னு கூட கேட்காதவங்க, அடுத்தவங்கள பத்தி கவலைப் படாதவர்கள் இருக்கிற இந்த உலகத்துல.... சக மனுஷங்களை விடுங்க, சொந்த அண்ணன், தம்பி, உறவு முறை கஷ்டத்தில் இருந்தால் கூட திரும்பி கூட பாக்க மாட்டாங்க. ஆனா நீங்க யாரோ, எவரோ, ஏதோ ஒரு பொண்ணு போன் பண்ணுது, அது யார் என்னன்னு தேடி கண்டுபிடிச்சு, உயிரை பணயம் வச்சி அவளை காப்பாத்திருக்கீங்க பாருங்க, நீங்க தான் சார் எங்க கடவுள்..", உணர்ச்சிவசப்பட்டு அழுதபடி பேசினார்.
 
ஜானி: இது என்ன சார் பெரிய விஷயமா? ஃப்ரீயா விடுங்க. எப்படியோ ரெஜினா நல்லபடியா கிடைச்சிட்டாளே, அதுவே போதும்.
 
பீட்டர்:  இல்ல தம்பி, ரொம்ப ரொம்ப பெரிய விஷயம்.. நான் கூட என் பொண்ண, பெரிய இடத்துல கட்டி குடுத்துட்டோம். அவளை தொந்தரவு பண்ணக்கூடாது. நல்லாத்தான் இருப்பான்னு நினைச்சு கண்டுக்காம விட்டுட்டேன். என் பொண்ணு தனியா மாட்டிக்கிட்டு, எவ்வளவு துடிச்சு போயிருப்பா.. தனக்கு யாருமே இல்லன்னு எவ்வளவு விசனப்பட்டுருப்பா. இந்த கொலைகாரங்களை பத்தி இப்பதானே ஒவ்வொரு விஷயமா தெரிய வருது. தனியா எவ்வளவு மரண வேதனையை அனுபவிச்சிருப்பா. மடத்தில் சேர்ந்து சிஸ்டராகி எல்லாருக்கும் உதவி செய்யணும்னு நினைச்ச பொண்ணு சார் அது.
நீங்க நல்லாருக்கணும்..."
 
உணர்ச்சிவசப்பட்டு அவர் குரல் தழுதழுத்தது. இருவரின் கைகளையும் பிடித்தபடி அழுதார்.
 
ஜானி: சரிங்க சார், நீங்க  உணர்ச்சி வசபடாதீங்க. அமைதியா இருங்க. இப்பதான் எல்லாம் சரியாயிடுச்சுல்ல. அளவுக்கு மீறி உணர்ச்சிவசப்பட்டா, உங்க ஹெல்த்துக்கு தான் ஆபத்து.
 
ரிஷாந்த்தும் அவன் பங்குக்கு ஏதோ சமாதானம் சொல்ல, ஒரு சில நிமிடங்களில் கட்டுப்பாட்டுக்குள் பீட்டர் வந்தார். தோளில் இருந்த துண்டால் கண்ணீரை துடைத்துக் கொண்டார்.
 
பீட்டர்: " நீங்க ஏன் இங்கே நின்னிட்டு இருக்கீங்க? வாங்க உள்ள போலாம்.."
 
ரிஷாந்த்:  இல்ல, போலீஸ் உள்ள விட மாட்டேங்குறாங்க.
 
பீட்டர்: அட வாங்க தம்பி, நான் சொல்லிக்கிறேன்.
 
பீட்டர் அவர்களை கையைப் பிடித்து கூட்டிக் கொண்டு சென்றார். வாசலில் நின்ற போலீசிடம்,
 
"சார் இவங்க நம்ம நெருங்கிய சொந்தம். ரெஜினாவை பார்க்க வந்திருக்காங்க. உள்ள போய் இரண்டு நிமிஷம் காட்டிட்டு வந்துடறேன் சார்."
 
கான்ஸ்டபிள்: சீக்கிரமா வந்துருங்க, பெரிய ஆஃபீசர் இன்னும் ஸ்டேட்மெண்ட் வாங்க வரல. எந்த நேரமும் வந்துருவாரு.
 
பீட்டர் சரிங்க சார் என்று சொல்லிவிட்டு, உள்ளே செல்ல, இருவரும் அவரை பின் தொடர்ந்தார்கள்.
 
ஒரு சில பெட்டுகளில் தான் ஆட்கள் இருந்தார்கள். அவர்களின் அட்டண்டர்கள் பக்கத்திலேயே உட்கார்ந்து இருந்தார்கள். சற்று முன்னால் அவர்களை திட்டிக் கொண்டு உள்ளே நுழைந்த நர்ஸ், அங்கிருந்த ஒருத்தருக்கு பிபி செக் பண்ணி கொண்டிருந்தாள். அவர்களை சந்தேக பார்வை பார்த்தாள்.
 
பீட்டர் கடைசி பெட்டில் இருந்த ரெஜினாவை நோக்கி சென்றார். படுக்கையின் கசப்பு தாங்காமல் ரெஜினா, எழும்பி, சாய்ந்தபடி உட்கார்ந்திருக்க, அவள் அம்மா  தலையை ஆதுரமாக தடவி கொடுத்து பேசிக் கொண்டிருந்தாள்.  அப்பாவுக்கு பின்னால், ரிஷாந்த் வருவதை ரெஜினா பார்த்தாள். 
 
கொஞ்சம் தயக்கத்துடன், கொஞ்சம் பரவசத்துடன், கொஞ்சம் சோகத்துடன், கொஞ்சம் சுய இரக்கத்துடன் அவர்களைப் பார்த்தாள். 
 
அவள் முகம் சலனமின்றி இருந்தது. வெளிப்புறமாக பார்ப்பதற்கு சலனமின்றி அவள் தோன்றினாலும், உள்ளுக்குள் கண்ணுக்குத் தெரியாமல் பூகம்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருந்தன.
 
ரிஷாந்த்தும், ஜானியும் அவளை நெருங்கி கட்டிலின் அருகே வந்து நின்றார்கள்.
 
திடீரென உள்ளுக்குள் என்னமோ டம்மாரென்று உடைந்தது....உதட்டோரம் விம்மல்கள் வெடித்தன.
பண்ணை வீட்டில் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது, அழுதழுது அவளுக்கு கண்ணீர் வற்றிப் போயிருந்தது. இப்போது அழும்போது கூட கண்கள் உலர்ந்து போயிருந்தன. 
 
ஏற்பட்டிருந்த அனுபவத்தினால், இதயத்தின் பல பகுதிகள் மரத்து, காய்ந்து, பாறையாய் இறுகியிருந்தது. ஆனால் எங்கேயோ இருந்த ஒரு இளகிய பகுதியில் நீர் ஆதாரம் மிச்சமிருந்தது.
 
உதடுகளை அழுத்தி மூடி, வெளிப்பட்ட விசும்பல்களை கட்டுப்படுத்தினாள்.
 
ரெஜினாவை பார்த்ததும் ரிஷாந்த் மென்மையாக சிரித்தான். ரெஜினாவின் சலனமின்றி இருந்த  முகத்தில், கல்லெறிந்தது போல் பல்வேறு உணர்ச்சிகள் தோன்றின மறைந்தன. அவளின் அப்பா, அம்மாவுக்கு ஏதோ புரிந்தது. ஏதோ புரியவில்லை. 
 
ரிஷாந்த்:  இப்ப எப்படி இருக்கீங்க?... என்று கேட்டான்.
 
உடனே கட்டிலில் இருந்து எழும்பிய ரெஜினா, ரிஷாந்த்தை நோக்கி வேகமாக சென்றாள். இதயத்தின் இளகிய பகுதி வேலை செய்தது. அவனைப் பார்த்து, கண்ணீர் பெருக்குடன் கை கூப்பினாள். அவன் கால்களில் விழுந்தாள். ரிஷாந்த் பதறி போய் அனிச்சையாக ஒரு ஸ்டெப் பின்னால் போக,  அவள் காலில் விழுந்ததை பார்த்ததும், தோளை பிடித்து, "ஐயோ என்ன இது... எழும்புங்க", என்று பதறி தூக்கினான்.
 
அவள் எழும்பி, கை கூப்பியபடி அவனை நன்றி பார்வை பார்க்க, ரிஷாந்த்துக்கு எல்லார் முன்னிலையிலும் உண்மையிலேயே சங்கோஜமாக இருந்தது. அனைவரின் பார்வையும் அவன் மேலே படிந்தது. அவளின் கூப்பிய கைகளை, ரிஷாந்த் கீழே இறக்கு என்பது போல் சைகை செய்தான்.
 
அவள் கைகளை எடுக்கவில்லை.
 
"எனக்கு எல்லா நம்பிக்கையும் போயிடுச்சு... நான் உயிர் பிழைப்பேன்னு..."
 
ரிஷாந்த் அவளை தடுத்து, "வேண்டாம்... அதை பத்தி பேச வேண்டாம்... இனிமே உங்களுக்கு எல்லாம் நல்லபடியா தான் நடக்கும்."
 
பக்கத்தில் நின்றிருந்த ஜானியை காட்டி,
 
"இவர் தான் ஜானிண்ணா...", என்றான். அவன் காலிலும் விழப்போன ரெஜினாவை, விழாமல், தோளை பிடித்து ஜானி தூக்கி விட்டான்.
 
"அட என்னம்மா நீ ..
பொசுக்கு பொசுக்குன்னு கால்ல விழுற... ஒரு உண்மையை சொல்லப்போனா, நீ கஸ்டமர் கேருக்கு போன் பேசினதை கேட்டதும், நாங்கல்லாம் உன்னுடைய ரசிகர்களா மாறிட்டோம். எவ்வளவு கஷ்டமான, நம்பிக்கையே இல்லாத ஒரு சூழ்நிலையில் கூட... ஒரு பொண்ணு தைரியமா இருக்கிறாளே. அவ யாருன்னு பார்க்கணுமே... அதைத்தான் நினைச்சுட்டு வந்தோம்.. நான் அந்த நிலைமையில் இருந்தன்னா சூசைட் பண்ணிட்டு செத்துருப்பேன். கஷ்டப்படுற பொண்ணுங்களுக்கெல்லாம் நீ ஒரு இன்ஸ்பிரேஷன்... சும்மா தலை நிமிர்ந்து நில்லு... எப்படி???? தலை நிமிர்ந்து...", என்று அழுத்தமாகச் சொன்னான் ஜானி.
 
ரெஜினா  தளர்ச்சியாக சிரித்தாள்.
 
ஜானி: சபாஷ்ரா... அழுதுட்டு இருக்கும் ஒரு அழகு சிலையை, சிரிக்க வச்சிட்டான்டா இந்த ஜானி, என் பேரு பத்தாங்கிளாஸ் ஹிஸ்டரி ஜாக்கிரபி புக்ல வந்துரும்... 
என்று தனக்கு தானே சபாஷ் சொல்லிக் கொண்டான்.
 
ரெஜினா சத்தமாக சிரித்தாள். அவள் சிரிப்பதை, ஆச்சரியமாக பார்த்த அவளின் அப்பா அம்மா கண்களிலும்  கண்ணீர். அதில் ஆனந்தம் என்று குறிக்கப்பட்டு இருந்தது.
 
பக்கத்து பெட்க்காரர்கள் ரெஜினா தங்கச்சியை கூப்பிட்டு, என்ன விஷயம் என்று விசாரிக்க, அவள் அக்கா கஸ்டமர் கேருக்கு போன் செய்த கதையில் இருந்து ஆரம்பித்தாள்.
 
தொடரும்
 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 47
 
சிறிது நேரம் பேசிவிட்டு, ரெஜினா மற்றும் அவள் குடும்பத்தினரிடம் விடை பெற்றுக்கொண்டு, ஜானியும் ரிஷாந்த்தும் வார்ட்டை விட்டு வெளியே வந்தார்கள். அவர்கள் நடந்து வெளியே செல்வதை கனத்த மனதுடன், ரெஜினா பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
சுய இரக்கம் அவளை முழுங்கி கொண்டிருந்தது. நினைத்தபடி பேசுவதற்கும், பழகுவதற்கும் அவளுக்கு தகுதி இல்லை என்று அவள் நினைத்துக் கொண்டிருந்தாள். அதனால் அவர்கள் இருவருடன் அளவாகவே பேசினாள். நன்றி தெரிவிப்பதில் மட்டும் குறை வைக்கவில்லை.
 
ஜி ஹெச்சின் நீளமான காரிடரில் நடக்கும் போது, ரிஷாந்த் ஏகத்துக்கு நெகழ்ந்து போயிருந்தான்.  காரிடரில் காற்று மெல்ல வீசிக் கொண்டிருந்தது. ஆங்காங்கே நோயாளிகளின் உறவினர்களும், மருத்துவமனையின் சிம்பந்திகளும் தென்பட்டனர்.
 
ஜெனரல் வார்டு கட்டில்களில் நோயாளிகளும், கட்டிலுக்கு  அடியில் செய்தித்தாள்களை விரித்து உறவினர்களும் படுத்திருந்தனர்.
 
காரிடரை உரசி கொண்டு வளர்ந்திருந்த மரத்தின் கிளைகளில், சிறகடித்து பறந்த, பெயர் தெரியாத பறவை அவன் கவனத்தை ஈர்த்தது. அதன் சிறகடிப்பில் சிறு பதட்டம். அவனுக்கு என்னவோ இணைப்பறவையை தேடி பறப்பது போலிருந்தது. இதுவும் யாரையாச்சும் லவ் பண்ணிருக்குமா? லவ் பண்ணவங்களை இழந்திருக்குமா? காதல் தோல்வியின் கசப்பை அறிந்திருக்குமா?
 
ஜானி: என்னடா என்னாச்சு?
 
ரிஷாந்த்: ஒண்ணும் இல்லண்ணா. ரெஜினாவுக்கு செஞ்சது, சுசிக்கு செஞ்ச மாதிரி, மனசுக்கு ஒரு நிறைவா இருக்கு...
 
நடந்து சென்று கொண்டிருந்த ஜானி சட்டென்று நின்றான். அவன் நின்றதும், ரிஷாந்த்தும் நின்றான்.
 
ஜானி அவனை கூர்மையாக பார்த்து,
"உண்மையை சொல்லு, நீ ரெஜினாவை லவ் பண்றியா?"
 
ரிஷாந்த் காரிடரின் கைப்பிடி சுவரை பிடித்து, திரும்பி நின்றான். பெருமூச்சு விட்டான்.
 
தோள்களை குலுக்கி, "தெரியலண்ணா, ஆனா நான் சுசிய லவ் பண்றேன். எனக்கு ரெஜினாவை பார்க்கும் போது, சுசி நியாபகம் தான் வருது... சுசியை மறக்கக்கூடாதுன்னு நினைக்கிறேன். ஆனா அவளை நினைக்கும் போதெல்லாம், ரெஜினா ஞாபகம் வருது. எனக்கு.. என்ன.. எப்படி சொல்றது... தெரியல....", என்று தடுமாறினான்.
 
ஜானி: ஓகே விடு i understand. ரொம்ப யோசிக்காத. குழம்பாதே. நடக்கணும்னு இருந்தா நடக்கும். தானாகவே நடக்கும். ஆனா நடக்கும் போது, நீ மறுக்கக்கூடாது.
 
ரிஷாந்த் ஜானியை கூர்மையாக பார்த்தபடி, மாட்டேன் என்று தலையாட்டினான்.
 
இருவரும் நடையை தொடர்ந்தார்கள். ஜிஹெச்ஐ விட்டு வெளியே வந்தார்கள்.
 
ரிஷாந்த்: அண்ணே, அந்த பய மெயில் அனுப்பிட்டானான்னு செக் பண்ணனுமே..
 
பக்கத்தில் இருந்த இன்டர்நெட் சென்டருக்குள் புகுந்து, மெயில் செக் பண்ணினார்கள். கரெக்டாக ஒரு மணி நேரத்திற்குள்  தோப்புக்கரணம் போடும் வீடியோவும், 5 லட்சம் டொனேஷன் கொடுத்த ரெசிப்ட்டின் ஸ்கேன் காப்பியும் அனுப்பிருந்தான்.
 
மொபைலை எடுத்து சிம்மை போட்டு சரத்திற்கு ஜானி கால் செய்தான்.
 
"சார், உங்க போனுக்காக தான் அரை மணி நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க சொன்ன மாதிரி கரெக்டா ஒன் ஹவர்ல எல்லா வேலையும் முடிச்சுட்டேன்.."
 
"புடுங்குன... தோப்புக்கரணம் போடும்போது தமிழ் சரியா உச்சரிக்கணும்னு சொன்னேனா, இல்லையா? 17வது தடவை  தோப்புக்கரணம் போடும்போது உச்சரிப்பு திருப்திகரமா இல்ல..."
 
"சார், நீங்க சொன்ன மாதிரி, "எல்லா பெண்களும் எனக்கு சகோதரிகள்", ன்னு கரெக்டா தான் சொன்னேன்..."
 
"பிளடி ராஸ்கல் பொய்யா சொல்ற??? உனக்கு பனிஷ்மென்ட் கொடுக்கிறது தப்பே இல்லை. அரியாங்குப்பம் மாதா கோவிலுக்கு போ.  கெபி முன்னால முட்டிகால் போட்டு அப்படியே 15 நிமிஷம் இருந்து, இதே டயலாக்கை தமிழ் உச்சரிப்பு கரெக்டா சொல்லணும். காலை அசைக்கவோ, உட்காரவோ கூடாது. அதை இப்படியே வீடியோ எடுத்து அதே மெயில் ஐடிக்கு அனுப்பு. அடுத்தது நேரா வீராம்பட்டினம் saint antony orphanage க்கு போ. 5 லட்ச ரூபாய் டொனேஷன் கொடுத்து, ரிசிப்ட் வாங்கி, அதே மெயில் ஐடிக்கு ஸ்கேன் பண்ணி அனுப்பு. இதான் உனக்கு அடுத்த டாஸ்க். இதெல்லாம் அடுத்த ஒரு மணி நேரத்துல நீ பண்ணனும். ஒரு நிமிஷம் லேட் ஆனாலும், என்ன பண்ணுவேன் தெரியும்ல..."
 
சரத்:  ஐயோ சார்...  என்ன பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும்... கண்டிப்பா லேட்டாகாது. அப்படியே அடுத்தடுத்த டாஸ்கை சொல்லிட்டீங்கன்னா... ஒட்டுக்கா எல்லாத்தையும் முடிச்சிடுறேன்.
 
ஜானி: டேய் மயிராண்டி, உன் இஷ்டத்துக்கு டாஸ்க் கொடுக்க முடியாது. என் இஷ்டத்துக்கு தான் கொடுப்பேன். முதலில் இந்த வேலையை முடி. ஒரு மணி நேரம் கழித்து உன்னை காண்டாக்ட் பண்றேன்... எல்லாத்தையும் பண்ணிட்டேனா ஒரு பிரச்சனை இல்லாம லேப்டாப்பையும், கேமராவையும் கொடுத்துட்டு நான் போயிட்டே இருப்பேன்... என்று சொல்லிவிட்டு வைத்தான்.
 
ரிஷாந்த் சிரித்தபடி: அடுத்தது என்னண்ணே தவளக்குப்பம் தர்காவா?..
 
ஜானி: நல்ல ஐடியா தான். அங்க போய் பணத்தை கொடுக்க சொல்லலாம். அவங்க பணமும் வாங்க மாட்டாங்க. Food items, டிரஸ் அல்லது வேறு ஏதாவது பொருளாக தான் வாங்குவாங்க. அஞ்சு லட்சத்துக்கு என்ன பொருட்கள் வேணும்னு கேட்க சொல்லி, ஒரு மணி நேரத்துக்குள் வாங்கி குடுக்க வச்சு, பையனை தெரு தெருவா அலைய விட்டுவிடலாம். சாம்பிளுக்கு அவனோட ரெண்டு போட்டோவ நெட்ல விட்டு டென்ஷனை ஏத்துவோம்.
 
ரிஷாந்த் சிரித்தான்: எப்படில்லாம் ஆபீஸ்ல திமிரா தெனாவெட்டா நடந்துகிட்டு இருந்தான். What a pity!!! இப்படி தெரு தெருவா அலைய விட்டுட்டீங்களே!!! 
 
ச்சு ச்சு என்று போலியாக உச்சி கொட்டினான்.
 
ஜானி: உன் ஆசைப்படி இன்னைக்கு பூரா இவன தெருத்தெருப்பா ஓட விட்டுடலாம்... இந்த ஜென்மத்துக்கு மறக்க மாட்டான். ஆனா நாளைக்கு ஷீபா கால்ல இவனை விழ வைப்பது எப்படின்னு யோசிக்கிறேன். நாம வேற பக்கத்துல நிக்கணும்னு சொல்ற... அப்ப நாம தான் எல்லாத்துக்கும் காரணம்னு தெரிஞ்சுரும். லேப்டாப், கேமராவை கேட்பான். பிரச்சனை இல்லாம உன்னுடைய அந்த ஆசையை எப்படி நிறைவேத்துறதுன்னு யோசிக்கிறேன். 
 
ரிஷாந்த்: நானும் அதான் யோசிச்சேன். எப்படி பண்ண போறீங்கன்னு எனக்கு தெரியலையே...
 
ஒரு சில நிமிடங்கள் யோசித்த ஜானி,
 
"இப்போதைக்கு எனக்கு எந்த ஐடியாவும் தோணல. அதான் mail சமாச்சாரங்கள் இருக்கே. விடு பாத்துக்கலாம்.."
 
ரிஷாந்த்: அண்ணே, சரத் பிரச்சனை முடிஞ்சதும், அடுத்தது நம்ம விஷயங்களைத் தான் பார்க்கணும். எப்படியும்   ஆபீஸ்ல next month OM என்னை இருக்க விட மாட்டான்... சரத்தை சமாளிச்சாலும், OM ஐ சமாளிக்க முடியாது. டீம் பெர்பார்மன்ஸ் இம்ப்ரூவ் பண்ணி காட்ட சொன்னாங்க.  ரெஜினா விஷயத்துக்காக லீவ் போட்டுட்டேன். Resign பண்ணிட்டு, ஒரு மாசம்  இமயமலை பக்கம் டூர் அடிக்கலாம்னு இருக்கேன். பேங்க் பேலன்ஸ் தீர்ந்ததுக்கு அப்புறம் சென்னைக்கு வருவேன்.
 
ஜானி:  டேய், நானும் தான் வரேன்னு சொன்னேனே!! எனக்கும் பாண்டிச்சேரி போர் அடிச்சிருச்சு. இரண்டு பேருமே பேப்பர் போட்டுட்டு கிளம்பிடலாம்.
 
இதற்கிடையே,
 
ஞாயிற்றுக்கிழமை காலையில், சர்ச்சுக்கு போயிட்டு வந்த ஷீபா, மொபைலை எடுத்துப் பார்த்தாள். சரத்திடமிருந்து எந்த மெசேஜும் வந்திருக்கவில்லை.
 
"என்ன இவன்?? இரண்டு நாட்களாக வழக்கத்துக்கு மாறாக நடந்துக்கிறான். வழக்கமாக கால் பண்ணி, மெசேஜ் பண்ணி தொந்தரவு பண்ணுவானே? நேத்து கூட ஆபீசுக்கும் வரல?"
 
"Anyway நமக்கு நல்லது தான்."
 
ஹாலிலிருந்து ஷீபா அம்மாவின் குரல் கேட்டது.
 
"ஏம்மா இன்னைக்கு ஹாஸ்பிடல்ல இருக்கிற ஜான்சி அம்மாவை பாக்கணும்னு சொன்னியே, ஆப்ரேஷன் முடிஞ்சுதா, Cluny hospital தானே?"
 
ஷீபா: ஆமாம்மா, குளூனி ஹாஸ்பிடல் தான். Hysterectomy ஆபரேஷன். நேத்து நல்லபடியா முடிஞ்சுதுன்னு சொன்னா. இன்னைக்கு ஈவினிங் போய் பாக்குறேன்.
 
தொடரும்
 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  

வர்ணம் - 48

 

அரியாங்குப்பம் சர்ச்சில், முட்டிக்கால் போட்டபடி அவர்கள் சொன்னதை செய்து வீடியோ எடுத்த சரத், அங்கேயே அவனுடைய  ஆபீஸ் லேப்டாப்பை ஓபன் செய்து, மெயில் ஐடியில் வீடியோவை அப்லோடு செய்து கொண்டிருந்தான்.

 

இடையே ஆனந்த் கால் செய்ததை கூட அவன் எடுக்கவில்லை. அவனை தலையிட வைத்தால், ஆளை புடிக்கிறேன், ..... (censored) புடிக்கிறேன்னு குழப்பி விட்ருவான். பேசாமல் பணத்தை கொடுத்து விஷயத்தை முடித்துக் கொள்ளலாம்.

 

வேர்வை வழிய, பிபி எகிறி கொண்டிருக்க, சரத் வாட்சில் டைம் பார்த்தான். அவர்கள் சொன்ன கணக்கில், அரை மணி நேரம் முடிந்திருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் வீராம்பட்டினம் அனாதை இல்லத்திற்கு சென்று, பணத்தை கொடுத்து ரிசிப்ட் வாங்க வேண்டும். அதை அப்லோடு செய்ய வேண்டும். நெட் வேறு ஸ்லோவா இருக்குதே!!! ஐயோ!! என்று கத்தினான். பட்டு பட்டுன்னு லேப்டாப்பில் வெறுப்பாக அடித்தான்.

 

ஐயோ!!! இது வேற டேமேஜ் ஆயிட போகுது. அப்புறம் அவனுங்க சொன்னத செய்ய முடியாது.

 

டேய் யாருடா நீங்க???

 

அவன் போன் அடித்தது unknown நம்பர்.

 

எடுத்துப் பேசினான்.

 

ஜானி நக்கலாக, "யாராவது உன்னை போன் பண்ணி பணம் கொடு, அதை செய், இதைச் செய்ன்னு  பிளாக்மெயில் பண்ணா... ஃபர்ஸ்ட் எதை வைத்து பிளாக் மெயில் பண்றாங்களோ அந்த விஷயம், அவன் கிட்ட இருக்கான்னு கேட்டு கன்ஃபார்ம் பண்ணிக்கோணும்.  

அப்புறம் தான் அவங்க சொன்னபடி செய்யோணும்.. அதுக்கப்புறம் பணம் கொடுக்கோணும். 

சம்ஜா?

 

சரத்: என்ன சார் சொல்றீங்க?

 

ஜானி: லேப்டாப்பை நான் தான் தூக்கிட்டு போனேன்னு உனக்கு தெரியுமா? கேமரா என்கிட்ட தான் இருக்குன்னு உனக்கு தெரியுமா? கன்பார்ம் பண்ணிக்கவே இல்லையே? நீல்லாம் ஆபீஸ்ல எப்படி அவ்வளவு பெரிய பதவில இருக்கிற? முட்டாப் பயலே"

 

சரத் பதறி போய், "என்ன சொல்றீங்க? நீங்க தான் என்னுடைய வைஃப் ஃபோன் நம்பர், சுஷ்மிதா கூட நான் சேட் பண்ண டீடைல்ஸ், எடுத்த போட்டோஸ் பத்தி எல்லாத்தையும் கரெக்டா சொன்னீங்களே..."

 

ஜானி: "சொன்னேன் தான்.. இருந்தாலும் இந்த நிமிஷம் உன் லேப்டாப்பும் கேமராவும் என்கிட்ட இருக்கான்னு நீ கேட்டு கன்பார்ம் பண்ணிருக்கணும். Sample கேட்டுருக்கணும். ஓகே விடு. இனிமே உன்னை யாராவது பிளாக் மெயில் பண்ணா, இந்த தவறை பண்ணாதே. சரி, உன் மெயில் ஐடிக்கு இரண்டு போட்டோ sample அனுப்பிருக்கேன். அத பாரு... இந்த டாஸ்க் முடிக்கிறதுக்கு ஒன் ஹவருக்கு மேல ஒரு செகண்ட் ஆச்சினாலும், அந்த போட்டோவை தான் நெட்ல அப்லோட் பண்ணுவேன். எப்படி ஓகே வான்னு பார்த்து சொல்லு."

 

காலை கட் பண்ணினான். சரத் அவசர அவசரமாக mail ஓபன் பண்ணி பார்க்க, அவன் ஜட்டியோடு நிற்கும் ஒரு போட்டோவும், அரைகுறை உடையில் சுஷ்மிதா தோளில் கைபோட்டு நிற்கும் ஒரு போட்டோவும் இருந்தது.

 

Bastards, டென்ஷன் படுத்துறாங்களே! 😩😩 பேசி பத்து நிமிஷத்தை வேஸ்ட் பண்ணிட்டானுங்க.

 

கால் வந்த நம்பருக்கு போன் பண்ணினாலும், லைன் கிடைக்காது.

 

Plss dont do it...i will do the task perfectly .. என்று மெயில் அனுப்பி விட்டு, கிளம்பினான்

 

இந்தக் குரலை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கு. எங்கே என்று தெரியவில்லை? தலையை பிய்த்துக் கொண்டான்.😖😖

 

லேப்டாப், மொபைல் எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு, காரை நோக்கி ஓடினான்.

 

"எப்புபுபுபுபுடி....", என்று ஜானி கேட்டதும், சூப்பர்ண்ணே என்று ரிஷாந்த் சிரித்ததும்,

😄😄😄 அந்த சீன் முடிவதற்குள், ஓவர்லாப்பில் கேட்டது.

 

சரத் காரை பரபரப்பாக கிளப்பினான். வீராம்பட்டினம் போகும் சாலை நோக்கி திருப்பினான். நேரமின்மை காரணமாக, காரை பதட்டத்தில் தாறுமாறாக ஓட்ட... பைக்கில் வந்தவன், சைக்கிளில் வந்தவன், பாதசாரிகள் எல்லாம், கண்டமேனிக்கு அவன் பிறப்பை சந்தேகப்பட்டார்கள்... அவன் பிறக்கும் போது வந்த வழியை திட்டினார்கள், அவன் ஆணுறுப்பை சாடினார்கள், தாய், தங்கையை வம்புக்கு  இழுத்தார்கள்.

 

ஆபீஸ்ல எவ்வளவு கௌரவமாக இருந்தோம்? என்னைப் பார்த்தாலே எல்லோரும் நடுங்குவார்கள். இப்போ ரோட்டில் போறவன் வர்றவன்ல்லாம் திட்றான். இனிமே எந்த வம்பு தும்புக்கும் போகக்கூடாது. சரத்திற்கு அழுகை அழுகையாக வர,  அடக்கிக் கொண்டான்

 

Overlap: ஜானியும் ரிஷாந்த்தும் ஸ்லோ மோவில் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

 

அனாதை இல்லம் எங்கே இருக்கிறது என்று விசாரித்தபடியே சென்றான். நேரம் போய்க் கொண்டிருந்தது.

 

சரத்துக்கு படபடப்பாக இருந்ததால், லேசாக கண்ணை கட்டியது.  நேற்றிலிருந்து சரியாக சாப்பிடாததால், இன்னும் சோர்வாக இருந்தது. முகத்தை துடைத்துக் கொண்டு காரை ஓட்டினான். லெஃப்ட் சைடில் இருந்த அனாதை இல்லத்தை கவனிக்காமல், ரைட் சைடு பார்த்துக் கொண்டு சென்றான். அதை தாண்டி சென்று, ரோட்டோரமாக ஒருத்தனிடம் விசாரிக்க, வந்த பாதையில் சற்று முன்னால் தான் இருக்குதுன்னு அவர் சொல்ல, தலையில் அடித்துக் கொண்டு காரைத் திருப்பினான். அனாதை இல்லம் வாசல் வந்ததும், சடன் பிரேக் அடித்து நிறுத்தினான். பணம் இருக்கும் பேக்கை தூக்கிக்கொண்டு, அடித்துப் புரண்டு உள்ளே ஓடினான்.

 

பத்து நிமிடத்திற்கு பிறகு,

 

ஆர்பனேஜ் டைரக்டர் பாதர் மைக்கேல், அவரை ஆச்சரியமாக பார்த்து," ஏன் சார் இவ்வளவு பதட்டமா இருக்கீங்க?"

 

சரத்: இன்னைக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள்ள கஷ்டப்படுற குழந்தைகளுக்கு டொனேஷன் கொடுக்கணும்ங்கறது என்னுடைய வேண்டுதல். அது நிறைவேற்றுவதற்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு. அதனால தான் இவ்வளவு பதட்டம். தயவு செய்து சீக்கிரமாக வாங்கிட்டு ரிசிப்ட்டை குடுங்க.

 

பாதர் அவனை திகைப்பாக பார்த்தார். அவர் மனக்கண்ணில், சரத் வானளாவிய அளவுக்கு  உயர்ந்து  மனிதருள் மாணிக்கமாக நின்றார்.

 

இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? 

 

சரத் வாச்சை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

அனாதை இல்லத்தின் குழந்தைகள் ஒரு சில பேர் அவனை சூழ்ந்து கொண்டு, "தேங்க்யூ சார், தேங்க்யூ சார்", என்று சோர்வான முகத்தில், நம்பிக்கை பொங்க நன்றி தெரிவித்தார்கள்.

 

சரத் மனசுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோன்ற. அடுத்த நொடி, அய்யய்யோ டைம் ஆயிடுச்சு என்று அவர்களை விலக்கிவிட்டு ஓடினான்

 

இரவு 7 மணி,

 

ஒயிட் டவுனில், பீச் பக்கத்தில் இருக்கும் க்ளூனி ஹாஸ்பிடல் சென்று, ஜான்சி அம்மா உடல்நலத்தை விசாரித்துவிட்டு, ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

 

அங்கிருந்த ஒரு திருப்பத்தில் ஸ்கூட்டியை திருப்பும் போது, எதிரே வந்த பைக் காரன்,

 

பட்டார்... என்று அவள் ஸ்கூட்டி மேல் மோதி விட.. 

 

ஷீபா நிலைகுலைந்து  கீழே சரியப் போனவள், எப்படியோ சமாளித்து காலை ரோட்டில் ஊன்றி நின்றாள்.

 

கோபமாக அவனை பார்த்து, "ஏம்பா திருப்பத்தில் இப்படித்தான் ஹை ஸ்பீட்ல வருவீங்களா?" என்று கத்த,

 

பைக் காரன் பின்னால் உட்கார்ந்து இருந்த பாக்யா எட்டி பார்த்தாள்.

 

"ஹேய் பாக்கியா... நீயா?"

 

"மேடம் நீங்களா? அடி எதுவும் படலையே...", என்று கேட்டபடியே, பைக் பின் சீட்டில் இருந்து இறங்கி, அவளை நோக்கி வந்தாள். 

 

ஷீபா:  இல்ல, அடி எதுவும் இல்ல. ஜஸ்ட் மிஸ்... 

 

பைக்கில் அவளைப் பார்த்து பளிச்சென்று சிரித்தபடி இருக்கும், தலையில் ஜெல் வைத்த, ஸ்டைலாக டி-ஷர்ட் போட்டிருந்த, Ray ban இளைஞனையும், பாக்யாவையும் மாத்தி மாத்தி ஷீபா பார்த்தாள்.

 

பின்னர்,  சந்தேகமாக

 

"ஆமா யாரு இது?", என்று கேட்டாள்.

 

பாக்யா திருதிருன்னு முழிக்க, ஷீபாவுக்கு புரிந்து போனது. ஓஹோ இதுதான் அவள் பாய் பிரண்டு!!! இவன் தான் அவளின் பிரச்சினைகளுக்கு எல்லாம் காரணம்.

 

Rascal, இவனை சும்மா விடக்கூடாது!!!

 

ஷீபா: இவன் தான் உன் பாய் பிரண்டா? இப்ப கூட உன்னை கட்டாயப்படுத்தி தான் பீச்சுக்கு கூட்டிட்டு வந்துருக்கானா? வசமா மாட்டிக்கிட்டான். சின்ன பொண்ணுனா இஷ்டத்துக்கு மிரட்டுவாங்களா? உனக்கு யாருமே இல்லன்னு நினைச்சுகிட்டானா? இரு, நாலு வார்த்தை நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேட்கிறேன்.

 

பாக்யா எக்கு தப்பாக ஏதாவது ஆகிவிடப் போகிறதென்று அவளின் கையை பிடித்து, "ஐயோ!!! மேடம் வேண்டாம். இப்ப கேட்காதீங்க. இது சரியான இடமில்லை."

 

ஷீபா: பயப்படாத பாக்கியா. உனக்கு அட்வைஸ் பண்ண பண்ண, என்னோட பர்சனல் பிராப்ளங்கள், ஒரு சில விஷயங்களில் நானே தைரியம் ஆயிட்டேன். நீ ஏன் இன்னும் பயப்படுற?? இன்னைக்கே பேசி ஒரு முடிவு எடுத்துருவோம்.

 

மல்யுத்த கோதாவில் குதிக்கப் போவது போல், ஷீபா துப்பட்டாவை எடுத்து இடுப்புக்கு முன்னால் ஒரு முடிச்சு போட்டு கட்டி கொண்டு,  அவனை வெறியோடு பார்த்தாள். 

 

பாக்கியா பதட்டமாக நிற்க, பைக் இளைஞன் என்ன நடக்கிறதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தான்.

 

பாக்கியா ஷீபாவை பிடித்து இழுத்து, அவளை ஆப் பண்ண முயற்சிக்க, அவள் கேட்பதாக இல்லை.

 

இதற்கு மேல் சமாளிக்க முடியாது என்று பாக்யாவுக்கு தோன்ற, பாக்யா அவனைப் பார்த்து, "சுரேஷ் ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு...", என்று சொல்லிவிட்டு, ஷீபா கையை பிடித்து ஓரமாக இழுத்து சென்றாள்.

 

பாக்யா: மேடம், நான் உங்ககிட்ட ஒரு உண்மைய சொல்லணும். தயவு செய்து கொஞ்சம் பொறுமையா கேளுங்க. எல்லாம் ஜானி சார்,  சொன்னதுனால தான் அப்படி பேசினேன். ஆக்சுவலா என்ன நடந்துச்சுன்னா....

 

என்று ஆரம்பித்து... ஆபீஸ் நான்காவது மாடியில் அவள் பேசியதை ஜானி கேட்டது, சரத்துக்கு கொடுத்து கொண்டிருக்கும் ட்ரீட்மென்ட், ஷீபாவுக்கும் பாக்யா மூலமாக கொடுத்த ட்ரீட்மென்ட், எல்லாவற்றையும் வரிசையாக சொன்னாள்.

 

அவள் சொல்வதைக் கேட்க கேட்க... ஷீபாவின் முகம் மாறியது. சற்று முன்னால் இருந்த ஆக்ரோஷ முகம் நெகிழ்ந்து, இலகுவாகி, கண்களில் கண்ணீரின் பளபளப்பு தெரிந்தது. உதடுகளில் விசும்பல்கள் அணை கட்டியிருந்தது.

 

எல்லாவற்றையும் சொல்லி முடித்ததும், பாக்யா: "இதெல்லாம் உங்க கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொன்னாங்க. ஆனா வேற வழியில்லாமல் சொல்லிட்டேன். எல்லாமே உங்க நல்லதுக்காக தான் எங்க சாரும், ஜானி சாரும் பண்ணாங்க. Pls madam தயவு செய்து  பிரச்சனை எதுவும் பண்ணிடாதீங்க, வெளியில் யார்கிட்டயும் சொல்லாதீங்க..."

 

ஷீபா:  இப்ப அவங்க எங்க இருப்பாங்க?... என்று கேட்கும் போது அவள் குரல் கமறியது.

 

பாக்யா: தெரியல மேடம். நீங்க அவங்களுக்கு போன் பண்ணி பாருங்க. 

 

தொடரும்

 



   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 49
 
இரவு 8 மணி
 
எட்டாம் நம்பர் சாராயக் கடைக்கு பக்கத்துல இருக்கும் ஸ்டார் ஒயின்ஸின் பார்..
 
பாருக்குள் கலர் கலர் லைட்டுகள், ஸ்பீக்கர்களில் குத்து பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது, 15 க்கும் மேற்பட்ட டேபிள்கள். நிறைய டேபிள்களில் சிரிப்பு சத்தம். ஒரு சில டேபிள்கள் ரகசியம் பேசிக் கொண்டிருந்தன. ஒரு சில டேபிள்கள் தனிமையில் தவித்தன. ஒரு சில டேபிள்கள் முறைத்துக் கொண்டிருந்தன.
 
ஜானி அண்ட் கோ இருந்த டேபிளில் உற்சாகம் கரைபுரண்டு ஓடியது.
 
லோகேஷ்: எப்படியோ அல்மோஸ்ட் எல்லாத்தையும் முடிச்சிட்டீங்க... நாளைக்கு அந்த மேனேஜர் பயல, உங்க crush கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க வச்சா... ப்ராஜெக்ட் கிளோஸ் ஆயிடும்.
 
ஜானி:  அவளை என் க்ரஷ்னு சொல்லாத.. ஏதோ ரிஷ் சொன்னாங்கறதுக்காக தான் இதை பண்ணுனேன். அவளுக்காகன்னா நிச்சயமா பண்ணிருக்க மாட்டேன். அவ யாரோ... நான் யாரோ... 
என்று கோபத்தில் வெடித்தான். கிளாசில் இருந்த விஸ்கியை, கடகடவென வாயில் கொட்டி கவிழ்த்துக் கொண்டான்.
 
லோகேஷ:  ஓகே பாஸ்... கூல் கூல்.
 
ரிஷாந்த்: இன்னும் என்ன  கோபம்?.. அவங்க தப்பு பண்றோமேங்கற குற்ற உணர்ச்சியில் தானே, நம்ம கூட பேசாம தவிர்த்திட்டாங்க. வேணும்னு செய்யலையே. அதான் இப்ப உண்மை தெரிஞ்சு போச்சுல்ல.. தயவு செய்து கோபத்தை விட்டுட்டு அவங்க கூட பேசுங்க. பாவம்ண்ணா அவங்க. சரத்தை அவங்க கால்ல நாளைக்கு விழ வைக்கணும். அதனால எப்படியும் அவங்க கிட்ட விஷயத்தை சொல்லித்தான் ஆகணும். நான் அவங்க கிட்ட போன் பண்ணி பேசுறேன்...
 
என்று ரிஷ் ஃபோனை பாக்கெட்டில் இருந்து எடுக்க, அவன் போன் அடித்தது. ரிஷாந்தின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
 
"அவங்களுக்கு நூறு ஆயுசு பாஸ்.  அவங்கதான் கால் பண்றாங்க..."
 
ரிஷ் கால் அட்டென்ட் செய்து பேசினான்.
 
"ரிஷ் எங்க இருக்கிற?"
 
"என்ன விஷயம் சொல்லுங்க?? நானே உங்களுக்கு கால் பண்ணனும்னு நெனச்சேன்.."
 
"நீ எங்க இருக்கேன்னு சொல்லு?"
 
"ஏன் பதட்டமா பேசுறீங்க? பொறுமை, பொறுமை. நானும் ஜானிண்ணாவும், ஃபிரண்ட்ஸுடன் எங்க ஏரியா ஸ்டார் ஒயின்ஷாப் பார்ல இருக்கிறோம். ஒரு சின்ன பார்ட்டி நடந்துட்டு இருக்கு. முடிச்சிட்டு நானே உங்களுக்கு கால் பண்றேன்...",
 
ஷீபா ஏதோ பேசுவதற்காக வர, 
 
ரிஷ்: பாருக்குள்ள ரொம்ப சத்தமா இருக்கு. இங்கே வச்சு பொறுமையா பேச முடியாது. நானே ஒரு ஒன் ஹவரில் உங்களுக்கு கால் பண்றேன்... என்று சொல்லிவிட்டு ஃபோனை வைத்தான்.
 
பாக்கியாவிடம் இருந்து இரண்டு மிஸ்டுகால்கள் இருந்தது. அவளுக்கு போன் செய்தான். அவள் எடுக்கவில்லை.
 
ஸ்பீக்கர்களில் "Taxi Taxi " பாட்டு அதிர... பார்ட்டி தொடர்ந்தது.
 
வீராசாமி: அப்ப நீங்க ரெண்டு பேரும், வேலையை resign பண்ணிட்டு இமயமலை trip போறது கன்பார்மா? இனிமே நாம இது மாதிரி அடிக்கடி பாத்துக்க முடியாதா?. நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ண போறேன். 
 
அவன் குரலில் எக்கச்சக்க கவலை. கவலையில் 100% உண்மை கலந்திருந்தது.
 
லோகேஷ் முகத்திலும் சோகம் படர்ந்தது.
 
ரிஷ்: என்ன சாமி? நீயும் செண்டிமெண்டா பேசிட்டுருக்க... ஜாலியா ஒரு டூர் போயிட்டு, திரும்பி வந்து பெங்களூரோ, பாம்பேயோ, ஏதோ ஒரு இடத்துல வேலைக்கு ஜாயின் பண்ணுவோம். அடிக்கடி மீட் பண்ணலன்னா என்ன? லீவு கிடைச்சா நாங்க பாண்டிச்சேரி வர போறோம்... இல்ல, உங்களுக்கு லீவு கிடைச்சா, நீங்க எங்கள பாக்க வர போறீங்க. எல்லாம் பேசிட்டு தானே இருக்க போறோம். அதான் நினைச்ச நேரத்துல பேசுறதுக்கு செல்பேசி இருக்கே.
 
ஜானி:  அதானே..... என்றான்.
 
15 நிமிடங்களுக்கு பிறகு,
 
ஜானி பக்கத்தில் நின்ற அட்டெண்டர் பையனிடம் 
"தம்பி, என் பேரு ஜானி, அதனால நமக்கு ஜானிவாக்கர் விஸ்கி வேணும். ஒரு புல் எடுத்துட்டு வா.."
 
அவன் நகர்ந்ததும், பேச்சுக்கச்சேரி தொடர்ந்தது.
 
திடீரென பாரில் இருந்த அனைத்து டேபிள்களும் ஒட்டுமொத்தமாக அமைதியானது. பாட்டு சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்க... ஜானியும், ரிஷாந்த்தும், மற்ற இருவரும் சுத்தி இருந்தவர்களை பார்த்தார்கள்.
பாரில் இருந்த அனைவரின் பார்வையும் ஒரே திசையை நோக்கி இருந்தது.
 
ஜானி: அப்படி என்னடா கண் சிமிட்டாம பாக்குறானுங்க? 
 
.... என்று திரும்பி அவர்கள் பார்க்கும் திசையை பார்க்க, அதிர்ந்தான்.
ரிஷாந்த் திகைத்தான்.
வீராசாமியும், லோகேஷும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
 
பார் என்ட்ரன்சில் ஷீபா நின்றிருந்தாள். 
 
அழகிய ஷீபா.
 
அழகான மாடர்ன் ஆர்ட் போல் கலைந்திருந்த ஷீபா.
 
மேக்கப் சாதனங்கள், எதன் உதவியும் இல்லாமலேயே, மினுமினுக்கும் ஷீபா.
 
பார்க்கும் எல்லாருமே நட்பு வைத்து கொள்ள ஆசைப்படும் ஷீபா.
 
சூப்பர் பிகர் என்ற அடைமொழியை சுமந்து கொண்டிருக்கும் ஷீபா.
 
ஜானி பட்டென்று தலையை திருப்பிக் கொண்டான். அவளுக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்தான்.
 
"இவ இங்க என்னடா பண்றா?"
 
சுற்றிலும் பரபரப்பாக யாரையோ தேடினாள். குடிமகன்கள் அனைவரும் திகைப்பாக அவளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
யாருடா இந்த சூப்பர் பிகரு? பொண்ணுங்களும் இப்ப தைரியமா பாருக்கு வர ஆரம்பிச்சுட்டாங்களா?
புருஷன தேடி வந்திருக்கிறாளா?
வேற ஏதாவது பிரச்சனையா?
 
பல்வேறு கிசுகிசுப்புகள்.
 
ஷீபாவின் கண்கள் சிவந்து சேறு போல் கலங்கிருப்பதை பார்த்ததும், ரிஷாந்த்திற்கு சங்கடமாக இருந்தது.
 
"அண்ணே அவங்களுக்கு உண்மை தெரிஞ்சு போச்சு போலிருக்கு. பாக்கியா கூட கால் பண்ணிருந்தா, நான் சொல்ல மறந்துட்டேன். உங்களை தான் தேடுறாங்க. போய் என்னன்னு கேளுங்க..."
 
லோகேஷ்: ஆமாண்ணே, உள்ளவர சங்கோஜ பட்டுக்கிட்டு  வாசல்லயே நிக்கிறாங்க.
 
வாசலில் நின்றிருந்த ஷீபாவை, பார் ஊழியர்கள், வருபவர்கள், போபவர்கள்  எல்லாரும் வினோதமாக பார்த்தபடி கடந்து சென்றார்கள். 
 
தொலைந்து போன ஆட்டுக்குட்டியை போல், பரிதாபமாக, அந்நிய முகங்களுக்கிடையே, ஜானியை தேடிக் கொண்டிருந்தாள் ஷீபா.
 
பார் ஊழியன் ஒருவன், அவளிடம் சென்று 
"சரக்கு எதாவது வேணுமா?" என்று கேட்க,
 
"ப்ச் இல்லை...." என்று அவனை பார்க்க கூட செய்யாமல், தலையாட்டினாள்.
 
அங்கிருந்த எல்லா முகங்களும், அவளைக் குறுகுறுவென்று பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தும், அவள் கவலைப்படவில்லை.
 
ஜானியை தேடினாள்.  
 
நடுவே இருந்த டேபிள் ஒன்றில் ரிஷாந்தத்தை பார்த்ததும், மலர்ந்தாள். 
 
ரிஷாந்த்: அண்ணன் ப்ளீஸ்ண்ணே... பாவம் அவங்க. எப்படியும் உள்ளே வர மாட்டாங்க. நீங்க போய் பேசுங்க.
 
ரிஷாந்த் ஹாய் என்பது போல்... அவளைப் பார்த்து கை காண்பித்தான்.
 
அடுத்த நொடி, வெடித்து வரும் விம்மல்களை துப்பட்டாவை எடுத்து, வாயை பொத்தி அடக்கி கொண்டு, அவர்கள் இருந்த டேபிளை நோக்கி ஓடி வந்தாள்.
 
ரிஷாந்த்தும், மற்ற இருவரும் பதட்டமானார்கள். உள்ளே வரமாட்டாள் என்று நினைத்தால், வந்துவிட்டாளே!!
 
பாரில் இருந்த எல்லோரும் வந்த வேலையை விட்டுவிட்டு, கிளாசுகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, என்ன நடக்கிறதென்று  கூர்மையான கத்தி கண்களுடன், பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
ஓடி வந்து ஜானி டேபிள் அருகே நின்றாள். கண்களில்  நீர் முத்துக்கள் வெளியே சிந்தாமல், திரண்டிருந்தன.
 
வேறு வழி இல்லாமல், ஜானி எழும்பி, அவளைப் பார்த்தான்.
 
அவனைப் பார்த்த நொடியில், கண்களில் திரண்டிருந்த அனைத்து கண்ணீரும், டாமை திறந்ததும் பாயும் வெள்ளம் மாதிரி... பொல பொல வென  வடிந்தது.
 
மார்பு அவசர அவசரமாக ஏறி தாழ்ந்து மூச்சிரைப்பதை, வெளியே காட்டாமல் இருக்க சிரமப்பட்டாள்.
 
ஜானி அவள் கண்ணீரை தொட்டு துடைக்கும் தைரியமின்றி, மெல்ல பார்வையை திருப்பிக் கொண்டான்.
 
ஷீபா வைத்த கண் வாங்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பாரில் இருப்பவர்கள் அனைவரும் தன்னைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற விஷயம்,  அவள் எண்ணங்களை வெளிப்படுத்தும் நினைப்பை தடை செய்யவில்லை. வெட்கப்பட வைக்கவில்லை.
 
எதைப் பற்றியும் கவலைப்படாமல் சட்டென்று ஜானியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். தேம்பித் தேம்பி அழுதாள். ஜானி திரும்பி அவளை பார்த்தான். அவளை அந்த கோலத்தில் பார்த்ததும், அவனின் கடுமை காற்றில் கரைந்தது. ரெட்டைவேஷம் கலைந்தது.
 
அவன் காலில் விழப்போனாள், ஜானி பதறி போய், அவள் விழாமல் தோளை தொட்டு தூக்கினான்.
 
ரிஷாந்த் தூரத்தில் இருந்த பார் ஊழியனிடம் கை காமிக்க, அவன் ஸ்பீக்கரில் ஓடிக் கொண்டிருந்த பாட்டை அணைத்தான். ஒட்டுமொத்தமாக அந்த இடமே அமைதியானது. 
 
ஷீபா: உன்ன... நா.. ரொம்...ப கஷ்...டப்...படுத்தி...ட்டேன் என்..னை மன்...னிப்பியா?
 
விக்கி விக்கி அழுதபடி பேசி, கையெடுத்து கும்பிட்டாள்.
 
நான் அழலாம் மாட்டேன், நான் ஜானி. Always i'm cool என்று காட்டிக்கொள்ள அவன் திமிர் ஆசைப்பட்டது. ஆனால் இமைகளுக்குள் விழிகள் நனைவதை அவனால் தடுக்க முடியவில்லை.
 
ஷீபா அவனுடன் பேசாமல் போனதும், அவளிடம் கடுமையாக நடக்க வேண்டும் என்று தான் நினைத்தான். மறக்க வேண்டும் என்று நினைத்தான். வெறுக்க வேண்டும் என்று நினைத்தான். ஆனால் அவளை பார்க்கும் போது, அவள் பேசும்போது, அவனால் நினைத்த மாதிரி நடக்க முடியவில்லை. 
 
அப்படி என்ன அவள் மேல் பெரிய மயிறு ஈர்ப்பு? என்னால் நான் நினைத்த மாதிரி இருக்க முடியாதா என்ற ஈகோ. அதனால் வந்த கடுமை.
 
"எ..ன் கூட ப..ழைய மா..திரி பேசுவியா?"
 
நம்பிக்கை இல்லாமல் ஷீபா கேட்ட போது, அவள் கண்களில் தெரிந்தது கவலையா? ஏக்கமா? சந்தேகமா?  ஜானிக்கு தெரியவில்லை.
 
ஆனால் அவன் மனசின் மேல், திடீரென்று 100 கிலோ வெயிட்டை ஏற்றி வைத்தது போல் மகா பாரம்.
 
இதற்கு மேலும் அவளை கெஞ்ச விடக்கூடாது. 
அவள் அவமானம், என் அவமானம். 
அவள் கஷ்டம். என் கஷ்டம். அவள் கண்ணீர், என் கண்ணீர். 
 
பூமிக்குள் புதைத்து விட்டு அவ்வப்போது வெளிப்பட்ட விஷயங்கள் எல்லாம், இப்போது ஒட்டுமொத்தமாக பிளந்து கொண்டு, வெளியே கை நீட்டுவது போல தோன்றியது. அதுவரை பொத்தி வைத்திருந்த மொட்டுக்கள் சட்டென்று பூத்துக் குலுங்கினார் போலிருந்தது.
 
ஜானி தழுதழுத்த குரலில்: நான் உன் கூட பேசாம யார்கிட்ட பேச போறேன்???.
 
அவனின் ஒவ்வொரு வார்த்தைகளும் தனித்தனியே அவளை சுற்றி வந்து துள்ளுவது போலிருந்தது.
 
ஷீபா முகத்தில் உலர்ந்த புன்னகை.
 
ஷீபா:  உன் கூட பேச கூடாது... கண்டுக்க கூடாது... அப்படில்லாம்... எதுவும்... சரத்... சூழ்நிலை... என்னால...
 
வார்த்தைகள் அவளை கைவிட்டது.. திக்கினாள். திணறினாள்.
 
ஜானி அவளின் உதடுகள் மேல் சுட்டு விரலை வைத்து, உஷ் என்று சைகை செய்தான்.
 
பாரில் ஒட்டுமொத்தமாக அமைதி. அனைவரின் பார்வையும் அவர்கள் மேலே இருந்ததால், வெளிப்படையாக பேசுவதை அவன் விரும்பவில்லை.
 
ஜானி: என்னை பொருத்தவரைக்கும், இந்த ஆபீஸ்க்குள்ள நான் வரும்போது, முதன் முதலா நான் பார்த்த  MLA தான், எனக்கு ஞாபகத்தில் இருக்கிறாள்... வேற எதுவும் எனக்கு ஞாபகத்துல இல்ல.. thats all. 
 
ஷீபா: உன...க்கு எப்...படி நான் நன்...றி சொல்லப் போ...றேன்?
 
பார்த்துக் கொண்டிருந்த ரிஷாந்த் mind voice:
 
'ஐயோ ஜானிண்ணா!!! எப்ப பாயிண்டுக்கு வர போறீங்க?'
 
வீராசாமி திரும்பி ரிஷாந்தை பார்த்து, "மை மைண்ட் வாய்ஸ், சேம் மைண்ட் வாய்ஸ்",
என்றான்.
 
இருவரும் கைகுலுக்கி கொண்டார்கள்.
 
ஜானி ஷீபாவை குறுகுறுவென்று பார்த்தபடி, "எப்படி சொல்லணும்னு நான் சொல்லவா?"
 
ஷீபா அவன் கண்களுக்குள் பார்த்தாள்.
பழைய ஜானியின் பார்வை திரும்பியிருந்தது. ஆனால் பழைய ஷீபாவாக இன்னும் அவளால் உணர முடியவில்லை. என்ன கேட்க போகிறான் என்று அவன் பார்வை அவளுக்கு உணர்த்தியது.
 
ரிஷாந்த் mind voice: இப்பதான் அண்ணன் பாய்ண்டை புடிச்சிருக்காரு.
 
ஷீபா வாயை பொத்திக்கொண்டு அழுதாள்.
 
பின்னர் சுதாரித்து,
 
"உன்ன மாதிரி ஒருத்தனை, அந்த கேள்வியை கேட்கிற, சந்தர்ப்பத்தை நான் கொடுக்கவே கூடாது?  நான் தான் கேக்கணும், நான் தான் ஏங்கணும். நான் தான் காத்திருக்கணும். ஆனா எனக்கு அந்த தகுதி... நான்  பழைய ஷீபா இல்லையே?", என்றாள்.
 
ஜானி பெருமூச்சு விட்டான். எதை வைத்து இப்படி பேசுகிறாள்? எவனோ ஒருத்தன் இவளை கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டானே... அதனால் பழைய ஷீபாவாக இல்லாமல் போய்விடுவாளா? உடம்பை பிரதானப்படுத்தி தான் எல்லாவற்றையும் யோசிக்க வேண்டுமா? மனசு முக்கியமே இல்லையா? மனசு தான் முக்கியம்னு நான் அவளுக்கு நிரூபிக்கிறேன்.
 
ஜானி அவளை தீர்க்கமாக பார்த்து,
 
"ஆசை ஆசையா நான் எழுதுன கவிதை பேப்பர், என் கையை விட்டு காத்துல பறந்தப்போ, என்னால தாங்க முடிஞ்சது. ஆனால் கவிதையோட வேல்யூ தெரியாத ஒருத்தன் கிட்ட மாட்டி, அவன் பேப்பரை கசக்கி குப்பையிலே போட போனப்ப, தாங்க முடியல... தடுத்தேன்.  கவிதையை மீட்டுட்டேன். எப்படியோ என்னோட கவிதை  எனக்கு கிடைச்சிடுச்சு.  தரங்கெட்டவர்கள் கையில் இருந்ததுனால கவிதையோடு தரம் குறைஞ்சுராது. இப்பவும் அது நான் ஆசை ஆசையா எழுதின அதே பழைய கவிதை தான். அதோட வேல்யூ எனக்கு நல்லாவே தெரியும். நான் பத்திரமா போற்றி பாதுகாத்து வச்சுக்குவேன்",
 
என்று அவன் முடிக்க...
 
அவன் சொன்னதின், உள்ளர்த்தத்தை புரிந்து கொண்ட ஷீபா, ஐயோ என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். கட்டுப்படுத்த முடியாதபடி அழுதாள். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அழுதாள்.
 
ஜானி, ஷ்ஷ் ஷ்ஷ் என்றவளை அமைதிப்படுத்த முயற்சித்தான், முடியவில்லை. அவன் ஆறுதலாக அவள் கையை பிடிக்க,
 
அடுத்த நொடி ஷீபா அவனை ஆவேசமாக அணைத்துக் கொண்டாள்... "உன்னை வாழ்க்கை பூரா விடவே மாட்டேன். நீ எனக்கு தான் சொந்தம். எனக்கு மட்டும்தான் சொந்தம்....", என்று அவளின் அணைப்பின் இறுக்கம் சொல்லியது. 
அணைப்பின் வேகம் சொல்லியது. 
அணைப்பின் அழுத்தம் சொல்லியது.
 
ரிஷாந்த்தும் வீராசாமியும் மறுபடியும் கை குலுக்கி கொண்டார்கள்.
 
காதல் காட்சியை லைவ் ரிலேவாக பார்த்துக் கொண்டிருந்த குடிமகன்களை ரிஷாந்த் பார்த்து, கைதட்டுங்கபா என்று சைகை காண்பிக்க, 
 
அனைவரும் எழுந்து நின்று கரவொலிகளை எழுப்பினார்கள். வீராசாமி cheers என்பது போல் கிளாசை தூக்கி காண்பித்தான். எல்லோரும் சேர்ந்து cheers, cheers என்று கத்தினார்கள். ஏதோ காதலர்களை அவர்கள் தான் ஒன்று சேர்த்து வைத்தது போல், மகிழ்ச்சி வெள்ளம்... ஆர்ப்பரிப்பு.
 
ஜானியும் ஷீபாவும் மாற்றி மாற்றி அணைத்துக் கொண்டார்கள். அவன் அணைப்பில், அவள் பழைய ஷீபாவாக உணர ஆரம்பித்தாள்.
 
லோகேஷ் ஜானி அருகே சென்று,
 
"யாரோ ஒருத்தர்... அவ யாரோ, நான் யாரோன்னு... கொஞ்ச நேரத்துக்கு முன்னால் தான் சொன்னாரு.. எங்கே அந்த மானஸ்தன்?" என்று நக்கலாக கேட்க, ஜானி அணைப்பிலிருந்து விடுபடாமல், அவனை ஒரு மிதி மிதித்தான். லோகேஷ் பக்கத்து டேபிளில் போய் விழுந்து, ஒரு லெக் பீசை கவ்விக் கொண்டு எழும்பினான்.
 
ரிஷாந்தும், வீராசாமியும் சிரித்தார்கள்.
 
ரிஷாந்த்: இப்ப போடுங்கடா பாட்டை... என்று கத்தினான்.
 
சுத்தி இருந்தவர்கள், சட்டசபையில் தட்டுவது போல் டேபிளை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினார்கள். விசில் சத்தம் காதை பிளந்தது.
 
சிலம்பாட்டம் படத்தில் வரும் "வச்சிக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள..." பாட்டு ஸ்பீக்கர்கள் வழியாக அதிர்ந்தது. 
 
ரிஷாந்த், வீராசாமி, மற்றும் லோகேஷ்....கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த ஜானியையும் ஷீபாவையும் சுற்றி சுற்றி நடனமாட ஆரம்பித்தார்கள்.
 
கிரிக்கெட் ஸ்டேடியத்தில், சிஎஸ்கே மேட்சில் டோனி சிக்ஸர் அடிப்பதை பார்த்துக் கொண்டிருப்பது போல்,  பாரில் உற்சாக ஆரவாரம் தொடர்ந்தது.
 
தொடரும்
 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 7 months ago
Posts: 133
Topic starter  
வர்ணம் - 50
 
மறுநாள் காலை 10 மணி.
 
ரிஷாந்த் நீண்ட காரிடரில், HR ரூமுக்கு வெளியே நின்றிருந்தான். காரிடாரின் மறுமுனை கதவுக்கு பின்னால் ஆபீஸ் இயக்கங்கள். HR ரூமுக்குள் யாரும் நுழைந்து விடாதவாறு பார்த்துக் கொள்வது அவனின் பொறுப்பு. HR ரூமுக்குள் நுழைய முயன்ற பிரவீன் உட்பட ஐந்து பேரிடம்," உள்ளே முக்கியமான மீட்டிங் நடக்கிறது. அரை மணி நேரம் கழிச்சு வருமாறு சரத் சார் சொல்ல சொல்லிருக்கிறார்", என்றான். பிரவீனின் சந்தேக  பார்வைக்கு பதிலளிக்க விருப்பமில்லாமல் அலட்சியம் காட்டினான்.
 
HR ரூமின் ஏசி யினால் டெசிபல் குறைக்கப்பட்ட பேச்சு சத்தங்கள்.  பட்டு பட்டென்று  கன்னத்தில் அரையும் சத்தம் மட்டும் ரூமை விட்டு வெளியே கேட்டது.
 
சத்தம் வராமல் அடிக்குமாறு ஷீபாவிடம் சொல்ல முடியாது. நல்லா வாங்கட்டும் என்று ரிஷாந்த் நினைத்துக் கொண்டான்.
 
HR ரூமுக்குள், ஓரமாக சேரில் கால் மேல் கால் போட்டு  ஜானி உட்கார்ந்தபடி,  நாய் கொண்டு வந்து வஸ்துவை பார்ப்பது போல், சரத்தை அருவருப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.
 
ஷீபா சரத்தை நிக்க வைத்து அறைந்து கொண்டிருந்தாள்.
 
"நல்லா புரிஞ்சுக்கோ எல்லா பெண்களையும் பணத்தாலயோ, புத்திசாலித்தனத்தாலையோ படுக்கைக்கு கொண்டு வந்துரலாம்னு மட்டும் நினைக்காதே... அப்படி வந்தவங்க கூட ஏதோ ஒரு கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு தான் நடந்திருப்பாங்க. அழகா இருந்தா, உடனே எப்பாடுபட்டாவது அனுபவிக்கனும்னு  ஆசைப்படுவீங்களா?
 
பொண்ணுங்கள போதை பொருளா நினைக்கிற மனோபாவத்தை மாத்துங்க.  அவளை சக மனுஷியா நினைக்க கத்துக்குங்க. 
 
பொண்ணுங்க போதை பொருளாய் உன்ன மாதிரி ஆம்பளைங்க நினைக்கிறதுல கூட எனக்கு வருத்தமில்லை. ஆனால் எங்க அனுமதி இல்லாம, எங்களை ஏமாற்றி, அனுபவிச்சு, பின்னால எங்களை அடிமைகளை போல் நடத்துறீங்க பாரு... அதுதான் வக்கிரம். உன்ன மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் எவ்வளவு சொன்னாலும் புத்தி வராது. பேசுறது வேஸ்ட். உனக்கும் ஒரு பொண்ணு இருக்கு. மறந்துடாத, நான் வயித்தெரிச்சலில் ஏதாவது சொன்னா பலிச்சுர போகுது. நான் சொல்ல மாட்டேன். அவளை பத்திரமா பாத்துக்கோ.."
 
ரொம்ப நேரம் பேசாமல், முத்தாய்ப்பாக பேசிவிட்டு முடித்துக் கொண்டாள். பேசி முடிச்சிட்டேன் என்பது போல் ஜானியை பார்த்தாள்.
 
ஜானி கைகளை கோர்த்து சொடக்கு போட்டுக் கொண்டு, சேரில் இருந்து எழும்பினான்.
 
"மிஸ்டர் சரத், எனக்கு உங்க மேல தனிப்பட்ட விரோதம் கிடையாது. பழி வாங்கணும்னு தான் ஆரம்பிச்சேன் ஆனா அது கூட என்னுடைய நோக்கம் இல்லை. நல்ல புத்தி சொல்லிக் கொடுக்கணும்னு தான் பிற்பாடு நினைச்சேன். பழி வாங்கணும்னு நினைச்சிருந்தா, உங்களுடைய பர்சனல் விஷயங்கள் என் கையில மாட்னப்ப, சமூக வலைதளங்களில் , இல்லன்னா போஸ்டர் அடிச்சு கூட தெருத்தெருவா ஒட்டிருப்பேன். அப்புறம் நீங்க தூக்குல தான் தொங்க வேண்டி வந்திருக்கும். ஆனா நான் அப்படி செய்யல. நீங்க கொடுத்த 15 லட்சம் கூட... நல்ல காரியங்களுக்குத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கு. அந்த அனாதை குழந்தைகளும், முதியவர்களும், உங்களை தான் வாழ்த்துவாங்க. நான் கேட்ட 20 லட்சத்தில், மீதி 5 லட்சம் உங்களுக்கு நீங்களே கொடுத்துக்குங்க. ஷீபாவுக்கு கடனா கொடுத்த பணம் அது. உங்க மனைவி, மகளுக்காக... நானும் ஷீபாவும் உங்களை மன்னிச்சுட்டோம்."
 
சரத் கண்களில் நீருடன் அவனை நிமிர்ந்து பார்த்தான். அவன் திருந்துவதற்குண்டான அறிகுறிகள் தென்பட்டது.
 
"அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்.  எவனையும் நான் நம்ப மாட்டேன். உங்களை பத்தி ஏதாவது அனாவசியமான விஷயம் என் காதுல விழுந்துச்சுன்னு வச்சுக்குங்க, உங்களுடைய விஷயங்கள் எல்லாம் என்கிட்ட தான் இன்னும் இருக்கு. எப்ப வேணாலும், மறுபடியும் அதிரடி நடவடிக்கை எடுப்பேன். கொஞ்ச நாளைக்கு என்கிட்டயே எல்லா ஆதாரங்களும் இருக்கட்டும். இது சாருக்கு probation period. உங்க மேல எந்த குற்றச்சாட்டும் வராமல் பாத்துக்க வேண்டிய காலகட்டம். அதன் பிறகு நானே அந்த ஆதாரங்களை அழிச்சிடுறேன்.
கடைசியா ஒரு முக்கியமான விஷயம், ஷீபா இப்ப என்னுடைய காதலி. அவளை கொஞ்ச நாளைக்கு, வெறித்தனமா லவ் பண்ணிட்டு, அப்புறமா கல்யாணம் பண்ணிக்கலாம்னு டிசைட் பண்ணிருக்கேன். உங்களுக்கு தான் முதல் பத்திரிகையே ..."
 
ஜானி பேசுவதையே, கண்களால் விழுங்கி கொண்டே, காதல் நட்சத்திரங்கள் மின்ன, ஷீபா பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
ஜானி கதவைத் தட்ட, ரிஷாந்த்  கதவை திறந்து கொண்டு, ரூமுக்குள் வந்தான்.
 
ஜானி: இன்னும் ஒண்ணே  ஒண்ணு தான் பாக்கி இருக்கு. மிஸ்டர் சரத் அதையும் பண்ணிருங்க.
 
சரத் ஷீபாவின் கால்களில் விழ...  அவன் கைகள் காலை தொட்டு விடாதவாறு, ஷீபா இரண்டடி நகர்ந்து கொண்டாள்.
 
ஜானியும்,  ரிஷாந்த்தும் கையை கட்டிக்கொண்டு, ரசித்தார்கள்.
 
ஜானி ரிஷாந்தை பார்த்து, "என்னப்பா உன் கோரிக்கை நிறைவேறிருச்சா?"
 
ரிஷாந்த்:  எஸ் பாஸ்...im satisfied.
 
மூன்று பேரும் resignation லெட்டரை, சரத் மூஞ்சியில் விசிறி அடித்து விட்டு,  HR ரூமை விட்டு வெளிப்பட்டார்கள். HR ரூமின் கதவு அவன் மூஞ்சியில் அடித்தது.
 
ஜானியின் கைகளை கோர்த்தபடி, ஷீபா நடந்து சென்றதை  varsh ஊழியர்கள் ஆச்சரியமாக பார்க்க..
 
அவர்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை.
 
Epilogue
 
ஒரு வாரத்திற்கு பிறகு,
 
பாண்டிச்சேரி ரயில்வே ஸ்டேஷன்
மாலை 5 மணிக்கு
 
"பாண்டிச்சேரியில் இருந்து நியூ டெல்லி செல்லும் எக்ஸ்பிரஸ் ட்ரெயின், முதல் பிளாட்பார்மில் இன்னும் சில நிமிடங்களில், புறப்பட தயாராக இருக்கிறது",என்று ஸ்பீக்கர்கள் அறிவித்தன.
 
பயணம் செய்பவர்களும், வழி அனுப்ப வந்தவர்களும் பிளாட்பாரத்தை அடைத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் வாட்டர் பாட்டில், பிஸ்கட் வாங்கிக் கொண்டிருந்தார்கள். டிடிஈக்கள் வழக்கம் போல் தென்படவே இல்லை. கடைசி நிமிடத்தில் எங்கிருந்துதான் வந்து, ட்ரெயினில் ஏறி கொள்வார்களோ தெரியவில்லை.
 
S 4 பெட்டியின் முன்னால், ஜானி, ரிஷாந்த் மற்றும் ஷீபா நின்றிருந்தார்கள். ரயில்வே ஸ்டேஷன் வாசலை பார்த்துக் கொண்டிருந்தார்கள். மூவருக்கும் கொஞ்சம் பதட்டம். அவர்களுக்கிடையே தேவையில்லாத அமைதி நிலவியது.
 
ஜானி அந்த அமைதியை உடைக்கும் பொருட்டு, ஷீபாவை பார்த்து: நாம திரும்பி வர்ற வரைக்கும், உங்க அம்மா சேஃபா இருப்பாங்கல்ல.
 
ஷீபா: ஸ்டெல்லா அத்தை எங்களுக்கு கொஞ்சம் தூரத்து சொந்தம் தான். 2 weeks தானே... அம்மா  சமாளிச்சுக்குவாங்க. 
 
ஜானி: கல்யாணத்துக்கு முன்னால ஹனிமூன் போற பாக்கியம், யாருக்கு கிடைக்கும்?....
என்று சொல்லி, வயிற்றில் முழங்கையால் இடி வாங்கினான்.
 
ரிஷாந்த்: இமயமலைக்கு போய், இயற்கையில் தொலைந்து போலாம்னு  நினைச்சிட்டு இருந்தவனை, கேன்வாஸ் பண்ணி, மனச மாத்தி, டார்ஜிலிங் இழுத்துட்டு போறது, கொஞ்சமும் சரியில்லை... ஆமா சொல்லிட்டேன்.
 
ஜானி: இந்நேரம் உனக்கும் ஆளு செட் ஆயிருந்தா, என்னோட முடிவை நீயும் ஆதரிச்சிருப்ப... இப்ப தனியா வர்றதுனால பொலம்புற.. கரெக்டா?
 
ஜானியும் ரிஷாந்த்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் பார்வையில், நான்கைந்து வருட நட்பு பிரதேசத்து பட்சிகள் ரகசியமாக பேசிக் கொண்டன.
 
ஜானி m.v: ரெஜினா வராம பையன் ரொம்ப பீல் பண்றான்.
 
ஷீபா: என்னடா ரெஜினா கிட்ட டைம் சொல்லிருந்தியா? அவ வருவாளா?
 
ரிஷாந்த் சோர்வாக: காலையில் ஃபோன் பேசும்போது கூட சொன்னேன்.  ட்ரெயின் டைம் 5o clock. டார்ஜிலிங் போறோம். வர்றதுக்கு ரெண்டு வாரம் ஆகும். விருப்பம் இருந்தா நீயும் வா. எல்லாத்தையும் சொல்லிட்டேன். வருவேன்னு அவ உறுதியா சொல்லல. ஆனா எதுக்கும் டிக்கெட் எடுத்து வச்சிருக்கோம்.
 
டெல்லி வரைக்கும் ட்ரெயினில் போய், அங்கிருந்து கல்கட்டா பயணம். கல்கட்டாவில் இருந்து டார்ஜிலிங்க்கு போய், இரண்டு வாரம் அலப்பறை பண்ணிட்டு வருவதாக பிளான்.  ஃபஸ்ட் கிளாசில் நாலு பெர்த் இருக்கும் தனி கூப்பே, ரிஷாந்த் புக் பண்ணிருந்தான். வேறு எந்த தொந்தரவுகளும் இருக்காது. ரயிலுக்குள் தனி பிளாட் மாதிரி. இப்போதைக்கு மூன்று பேர். ரெஜினா வந்தால் நான்காகும்.
 
மறுபடியும் ஸ்பீக்கர்களில் அறிவிப்பு. ட்ரெயின் கிளம்புவதற்கு உண்டான எல்லா முஸ்தீபுகளும் தெரிய,
 
ரிஷாந்த் முகம் தொங்கி போனது.
 
ஜானி அவன் தோளில் தட்டி,
"சரி விடுடா... டூருக்கு போய்ட்டு வந்து பேசிக்கலாம். அவளும் எவ்வளவு பெரிய கஷ்டத்திலிருந்து இப்பதான் மீண்டுருக்கா. ரொம்ப டிப்ரசனா இருக்கும். அதிலிருந்து வெளியே வர வேண்டாமா? அவங்க வீட்லயும் அவ்வளவு தூரம் விடுவாங்களா என்ன?
 
ரிஷாந்த்: டிப்ரஷன்ல இருந்து வெளில வருவதற்காக எவ்வளவோ பேசினேன். ஒரு சேஞ்சா இருக்குமேன்னு தான்  இந்த அவுட்டிங்க்கு நான் அவளை கூப்பிட்டேன்.
 
ட்ரெயின் கொஞ்சம் கொஞ்சமாக நகர ஆரம்பித்தது.
 
ஷீபா: சிக்னல் போட்டாச்சு. ட்ரெயினை எடுக்கப் போறான். வா, போய் ஏறிக்கலாம்.
 
ஷீபா முதலில் போய் ஏறிக்கொள்ள, ஜானி இரண்டாவது ஏறிக்கொண்டான். இருவரும் FC1 கோச் வாசலில் நின்றிருந்தார்கள்.
 
வாசலை பார்த்துக் கொண்டே இருந்த ரிஷாந்த், ட்ரெயினில் ஏறுவதற்காக திரும்பிய நொடி,
 
தூரத்தில், வாசலருகே ரெஜினா முகம் தெரிந்தது. நூற்றுக்கணக்கான பாட்டில்கள் இருந்தாலும், தனியாக தெரியும் இம்பீரியல் ப்ளூ விஸ்கி போல்... அவ்வளவு பேர் மத்தியிலும் அவள் முகம் தனியாக தெரிந்தது.
 
ஸ்டேஷனுக்குள் அரக்கப்பரக்க வேகமாக ஓடி வந்தாள். அவள் கண்கள் அலை பாய்ந்தது.
 
ட்ரெயின் கொஞ்சம் கொஞ்சமா நகர ஆரம்பித்தது.
 
ரிஷாந்த் முகம், மின்னலடிக்கும் அதி வெண்மையில் பூரித்தது.
 
"அண்ணா அவ வந்துட்டாண்ணா.."
 
ஜானியும், ஷீபாவும் வாசலை பார்க்க, ஆமாம் கையில் பேக்குடன் ஓடி வந்து கொண்டிருந்தாள்.
 
ஜானி அவள் ஓடி வந்துருவாளா? இல்லை... செயினை பிடித்து இழுத்து டிரெயினை நிறுத்த வேண்டுமா என்று யோசித்து கொண்டிருந்தான். Distance * speed* time கால்குலேஷன் போட்டுக் கொண்டிருந்தான்.
 
ட்ரெயின் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுக்க ஆரம்பித்தது.
 
ஷீபா: ரிஷ், நீ முதலில் வந்து ஏறு.
 
ஜானி: ஆமாண்டா... நீ வந்து ஏறு. அவளை ஏதாவது ஒரு பெட்டியில் ஏறிக்கொள்ள சொல்லலாம்.
 
ஜானி ட்ரெயினில் இருந்து ஹேய் என்று அவளை நோக்கி கையை காட்ட.... ரிஷாந்த்தும் துள்ளி குதித்து, கையாட்டி, ரெஜி என்று சத்தமிட்டான்.
 
அவள் பார்த்து விட்டாள். அவசர சிரிப்பை உதிர்த்து விட்டு, அவர்களை நோக்கி ஓட ஆரம்பித்தாள். 
 
ரிஷாந்த்தும் போய் ட்ரெயினில் ஏறிக்கொண்டான்.
 
மூவரும் வாசலில் நின்றபடி கமான் கமான் என்று அவளை உற்சாகப்படுத்த, ரெஜினா முகத்தில் சிரிப்புடன், கூந்தல் ஒரு பக்கம் காற்றில் பறக்க... துப்பட்டா மறுபக்கம் பறக்க... சமாளித்து, வழி அனுப்ப வந்தவர்களை இடித்து விடாமல், வளைந்து நெளிந்து ஓடி வந்தாள்.
 
ட்ரெயின் மேலும் வேகம் எடுக்காமல், மிதமான வேகத்தில் பிளாட்பார்மை கடந்து சென்று கொண்டிருந்தது.
 
ரெஜினா S 1 கோச்சை தாண்டி, S 2  கோச்சை பிடித்து,  S 3 கோச் ஐ நெருங்கி, FC கோச்சை தொட்டாள்.
 
பிளாட்பாரத்தில் நின்ற வழி அனுப்ப வந்தவர்கள்  ரெஜினா ட்ரெயினை பிடிக்க ஓடுவதை ஆர்வமாக பார்த்து கொண்டிருக்க... இளைஞர்கள் ஒரு சில பேர் அவள் ஓடும் அழகை பார்த்து மெய் மறந்து போனார்கள். ஜானியும், ஷீபாவும் பெட்டிக்குள் நகர்ந்து கொண்டார்கள். ரிஷாந்த்  பேக்கை தூக்கி போடு என்று கத்தினான். ரெஜினா பேகை தூக்கிப் போட்டாள். அதைப் பிடித்து, உள்ளே கொடுத்தான்.
 
வாசல் படியில் நின்று ரிஷாந்த் அவளுக்காக கையை நீட்ட, ரெஜினாவும் கையை நீட்டியபடி ஓடி வந்தாள்.
 
Come on Regi, come on.
 
ஷீபா கத்தினாள்.
 
ரிஷாந்த்: கையை கொடு, நான் புடிச்சிக்கிறேன்.
 
அவள் கையை எக்கி நீட்ட, இருவரின் கைகளும் உரசி கொண்டன.
 
இருவருக்கும் சிலிர் என்று உள்ளுக்குள் ஏதோ பற்றி கொண்டது.
 
ரிஷாந்த்: கையை கொடு, கையை கொடு.
 
ரெஜினா தம் பிடித்து வேகமாக ஓடி, எட்டி ரிஷாந்தின் கைகளை பிடித்தாள். அவன் கப் பென்று அவளை இழுத்து, இடுப்பில் கை வைத்து, அலேக்காக தூக்கி, உள்ளே இழுத்தான்.
 
பூப்பந்து போல், அவன் மேல் வந்து மோதினாள். அவளை அணைத்த படி ட்ரெயினுக்குள்ளே வந்தான்.
 
ஷீபா அப்பாடா என்று பெருமூச்சு விட்டாள்.
 
அனைவரும் கோச் வாசலில், டாய்லெட் போகும் பகுதியில் சாய்ந்து நின்றபடி, மூச்சு வாங்கிக் கொண்டார்கள். FC கோச்சில் வேறு யாருமே இல்லை.
 
ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். ரிஷாந்தும், ரெஜினாவும் வெட்கப்பட்டு கொண்டார்கள்.
 
ரிஷாந்த்: நான்தான் உனக்கு டைம் ஏற்கனவே சொன்னேனே... ஏன் இவ்வளவு லேட்?
லாஸ்ட் மினிட்ல ரன்னிங்ல தான் வந்து ஏறணுமா?
 
ரெஜினா: டூர் போறேன்னு சொன்னதும் சரின்னு சொல்லிட்டாங்க ஆனா நான் வெறும் டூர் போகல. என் மனசுக்கு பிடிச்சவங்க கூப்பிடுறதுக்காக போறேன்ன்னு... வீட்ல இருக்கிறவங்ககிட்ட புரிய வைக்கிறதுக்கு லேட் ஆயிடுச்சு... 
என்று கன்னம் சிவக்க சொன்னாள்.
 
ஜானியும் ஷீபாவும்..
யே!!! என்று இரு கைகளையும்  உயர்த்தி கோஷமிட்டார்கள்.
 
ரிஷாந்த்தே வெட்கப்பட்டான்.
 
ஷீபா:  அட... அட... இங்கே பாருங்க. ரிஷுக்கு வெட்கப்பட தெரியுமா?
 
ஜானி ரெஜினாவை பார்த்து: நீங்க ரெண்டு பேரும் சந்திக்கணுங்கறதுக்காகவே தான், உங்க வாழ்க்கையில இந்த மாதிரி சம்பவங்கள் நடந்துருக்கு. பழைய விஷயங்களை பத்தி இனிமே யாரும் பேசவே வேண்டாம். பாண்டிச்சேரியோடு கை கழுவி விடுவோம். இனிமே நம்ம வாழ்க்கை புதுசா ஆரம்பிக்கட்டும்.
 
ஷீபா மற்றும் ரெஜினாவின் கண்களில் நம்பிக்கை ஒளி. ரெண்டு பேரும் அர்த்தத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
 
ரிஷாந்த்: பாஸ் சொன்னா கரெக்ட்டா இருக்கும்.
 
ஷீபா: சரி வாங்க, நம்ம கூப்பேக்கு போலாம்.
 
ரிஷாந்த் குறும்பாக: பாஸ், வழக்கமா நீங்க தானே பழமொழி சொல்லுவிங்க. இப்ப பினிஷிங் டச்சா, எங்க ஊர் பழமொழி ஒண்ணு சொல்லட்டுமா?
 
ஜானி "எனக்கே பழமொழியா" என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு,
 
"சொல்லு", என்றான்.
 
ரிஷாந்த்:
அண்ணன் கிட்ட ஆறு மாசம் வாழ்ந்தாலும், 
அண்ணிகிட்ட அரை நாழிகை வாழ்ற மாதிரி வருமா?
 
...என்று கப்பென்று ஷீபாவின் கையை பிடித்து, கண்ணடித்தான்.
 
ஜானி: ஓ!!!! நீ அப்படி வரியா? இப்ப ...
எங்க ஊர் பழமொழியை...நான் சொல்றேன் பாரு.
 
மூவரும் ஜானியை ஆர்வமாக பார்க்க,
 
"அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி, 
தம்பி பொண்டாட்டி, தான் பொண்டாட்டி",  
 
என்று சொல்லிவிட்டு, ரெஜினா கையை பிடித்தான்.
 
ஷீபாவும் ரெஜினாவும் சிரித்தபடி, அவர்களை அடிப்பதற்காக கையை ஓங்க, இருவரும் அவர்கள் கூப்பேயை நோக்கி துள்ளி குதித்து ஓடினார்கள்.
 
"அண்ணா, சத்தியமா இனிமே உங்க கிட்ட பழமொழி சொல்லவே மாட்டேன்", என்று ரிஷாந்த் கத்தியது... 
 
ட்ரெயினின் ஜிகுஜிகு சத்தத்தில் கரைந்து போனது.
 
                                                           (நிறைவடைந்தது)
 
 


   
ReplyQuote
Page 4 / 4

You cannot copy content of this page