All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வாகை சூடவா ரிவ்யூ

Page 6 / 6
 

Sahithya varun
(@sahi-varun)
Active Member Registered
Joined: 16 hours ago
Posts: 6
 

Sahi review

வரமாய் வந்த உயிரே

 

 

 

இது சாதாரணமா நடக்கற கதை தான்..

 

இன்றைய உலகத்துல பல பேரு குழந்தைக்காக ஏங்கறாங்க.. அப்படித்தான் இந்த கதைல வர்ற ஜோடிஸூம். 

 

ஏங்கறவங்களுக்கு குழந்தைக் கிடைக்காததும் கிடைச்சவங்களுக்கு அதோட அருமை தெரியாம இருக்கறதும் தான் நிஜம். அதையும் அழகா சொல்லிக் காட்டுனீங்க.. அதுவும் உனக்கு வேணாம்னு நினைக்கற குழந்தையை எனக்கு குடுக்கறீயா.? அந்த வார்த்தை மட்டும் இன்னும் என்னைய விட்டு போகல.. அதோட வலி என்னனு அனுபவிச்சவங்களுக்குத் தான் தெரியும்..

 

குழந்தை வர்ற மருத்துவம் பார்க்கறது அவ்ளோ ஈசியும் இல்ல.. அதுல எத்தனை வலி எத்தனை கஷ்டம் எத்தனை அழுகை இதெல்லாம் அனுபவிச்சவங்க மட்டும் உணர முடியும்..

 

குழந்தை இல்லைனா மத்தவங்களோட பேச்சை விட மாமியாரோட தேள் கொடுக்கு மாதிரி கொட்டற வார்த்தைகள் எல்லாம் அப்பப்பா.. அதைய கேட்டும் நம்ம அங்கேயே வாழ்றது எல்லாம் கொடுமையிலும் கொடுமை.. இந்த கதைல வர்ற மாமியாரும் சாதாரண மாமியார் தான்.

 

ஆனாலும் கணவன் நம்ம பக்கம் துணை நின்னா எல்லாத்தையும் கடந்தரலாம்.. மனைவியோட வலியை புரிஞ்சுக்கிட்டு அவளுக்கு ஆதரவா நின்னா சக்தியோட குணம் ஜஸ்ட் வாவ்😍 எனக்கு இவனை ரொம்பவே பிடிச்சுது.. ஒரு ஒரு விசயத்திலும் மனைவியை புரிஞ்சுக்கற கணவன் கிடைப்பது எல்லாம்😍😍 

 

எது நம்மகிட்ட இல்லையோ அதைய தான் நம்ம மனசு ஏங்கும்...அதுவும் குழந்தையில்லனா.... 🤧🤧🤧 அதோட வலி நம்மைய உயிரோட கொன்னுரும்..

 

என் பாப்பாக்காக காத்திருக்கற இந்த நேரத்துல இப்படியொரு கதை படிச்சதும் கண்ணுல கண்ணீர்.. ஒரு பெண்ணோட பிறப்பே முழுமலயடையறது அவளோட குழந்தையைப் பார்க்கற நேரத்துல தான்..

 

இது கதையில்ல.. பல பெண்களின் வாழ்க்கையும் இப்படித்தான்.. இந்த கதைக்கரு இப்படி இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை.. கதை ரொம்பவே அருமை டியர்..

 

போட்டியில் வெ

ற்றி பெற வாழ்த்துகள் 

 


   
ReplyQuote
Sahithya varun
(@sahi-varun)
Active Member Registered
Joined: 16 hours ago
Posts: 6
 

Sahi review 

 

கனலை அணைக்க வா கவியே

 

 

தேவ் - ஆராதனா இவ தேவ்கிட்ட தன்னோட காதலைச் சொல்ல அவன் முடியாதுனு கோவப்பட.. கடைசில அவன்கிட்டயே குழந்தையோட சிகிச்சைக்கு வந்து நிற்கறா நம்ம ஆரா.. அவ வாழ்க்கைல என்ன நடந்துச்சு.? அந்த குழந்தை யாரோடது.? தேவ்வுக்கு அவ மேல லவ்வு வந்துச்சா.? ரெண்டு பேரும் மறுபடியும் சேர்ந்தாங்களா.? இதெல கதைல படிச்சு தெரிஞ்சுக்கோங்க..

 

அடுத்து ரிஷி வந்தனா - தன் கிட்ட படிக்க வர்றவ மேல லவ்வுல விழுகறான் ரிஷி.. ஆனா வந்தனா அவனைக் கண்டு பயக்கறா...அவனைக் கண்டா இல்ல அவனோட அந்தஸ்தைக் கண்டா.? ஆனாலும் ரிஷி விடாம பேரண்ட்ஸ் சம்மதத்தோட வந்தனாவைக் கல்யாணமும் செஞ்சுக்கறான்...காதலிச்சவளை அருமையாகவும் பார்த்துக்கறான் எனக்கு இவனை ரொம்ப பிடிச்சுது..

 

கடைசியா ஆர்யன் - லயா இந்த ஜோடியை என்ன சொல்றது.?  லயாவைப் பழி வாங்க இவன் ஆன்டி ஹீரோவா மாறுவானு நினைச்சேன்...ஆனா கடைசில என் நினைப்பு தான் பொய்யா போய்ருச்சு.. ரெண்டு பேரும் வைர வியாபாரி.. சரி அதுல என்னம்மானு நீங்க நினைக்கலாம்.. அதனால் தான் நம்ம ஆர்யன் லயா மேல வன்மமும் வெக்கறான்..

 

அந்த வன்மம் எதற்காகனு நீங்களே தெரிஞ்சுக்கோங்க.. ஆனாலும் இவனை என்ன சொல்றதுனு தெரியல.. இவனோட காதல் மன்னன் அவதாரம் 🤧🤧🤧🤧

 

மொத்தத்துல மூனு ஜோடியைச் சுத்தியே கதை.. ரொம்பவே நல்லா இருந்துச்சு..

 

போட்டியில் வெற்றி பெற

வாழ்த்துகள் 

 


   
ReplyQuote
Sahithya varun
(@sahi-varun)
Active Member Registered
Joined: 16 hours ago
Posts: 6
 

Sahi review 

 

நேசம் வளர்க்க நெஞ்சம் தாராயோ

 

 

இந்த கதையை பத்தி என்ன சொல்றதுனு எனக்கு தெரியல.. படிக்க படிக்க அவ்ளோ ஆத்திரம் வந்துச்சு..

 

தாமரை, மல்லிகா ரெண்டு பேருமே அம்மாவே இல்லை.. அவங்க கணவன்மார்கள் எதுக்கு இருக்காங்கனே தெரியவ.. 

 

ஏம்மா செம்பு உன்னால தங்கச்சியை நினைச்சவன் கூட வாழ முடியலனு தான் வந்தேன் அப்பறம் எப்படிம்மா தங்கச்சியை காதலிச்சவன் தான் வேணும்னு நின்ன.. அது மட்டும் உனக்கு சரியா.? 

 

கண்ணன் இவனைப் பத்தி சொல்றதுக்கும் ஒன்னுமில்ல.. சிம்பிளி வேஸ்ட்..

 

குறிஞ்சி இவளைப் பிடிச்சுது.. இவ தப்புனா நேருக்கு நேரா பேசற விதமும் எனக்குப் பிடிச்சுது..

 

முல்லை இவளை ரொம்பவே பிடிச்சுது.. பாரியோட குடும்பத்தை கேள்வி கேட்டது எல்லாம் அருமை அப்படியே முல்லையே நாலு அப்பு அப்பிருக்கலாம் என் மனசு அடங்கிருக்கும்..

 

நரசிம்மன் இவனைப் பத்தி நான் பேசவே விரும்பல.. அம்மா தங்கச்சினு பாரியோட வாழ்க்கையை நாசம் பண்ணிட்டு கடைசில ரொம்ப நல்லவன் போல பேசறான்.. தூக்கி குப்பைல வீசுங்க இவனை..

 

பாரி இந்த கதைல ரொம்பப் பாவப்பட்ட ஜென்மம்.. இவ பிரகாலதன் கூட வாழ்றதைக் காட்டிருக்கலாம்.. பார்ட் 2 க்கு வெய்ட்டிங்.

 

ஒருத்தரை மோசமா காட்டி இருந்தா பரவால்ல இந்த கதைல எல்லாருமே மோசம்ப்பா.. பாவப்பட்ட ஜென்மம் பாரி மட்டுமே..

 

போட்டியில் வெற்

றி பெற வாழ்த்துகள் 

 


   
ReplyQuote
Sahithya varun
(@sahi-varun)
Active Member Registered
Joined: 16 hours ago
Posts: 6
 

Sahi review 

 

உயிருள்ளவரை யான் உனதே!

 

 

கூட்டுக் குடும்பம் கதை..

 

அண்ணன் தங்கச்சி ஒரே வீட்டுல கூட்டுக் குடும்பமா இருந்து தன்னோட பசங்களுக்கு கல்யாணம் பண்ணி வெக்க நினைக்கறாங்க.. 

 

ஆனா விஷ்வாக்கு ரேணு மேல காதல் இல்லை.. காதல் இருந்தும் தங்கச்சிக்காக வேணாம்னு சொல்றான்.. இவன் கேரக்டர் சுத்தமா எனக்கு பிடிக்கல...அதே மாதிரி ரேணு கேரக்டர்... வேணாம் விட்டரலாம்.. இவளோட காதலைப் புரிஞ்சுக்காதவன் மேல இவ எதுக்கு இந்தளவுக்கு காதலை வெக்கணும்.?

 

அப்பறம் விஷ்ணு...? இவனைப் பத்தி சொல்றதுக்கு ஒன்னுமில்ல.. பைத்தியம் பிடிச்ச ஹீரோப்பா இவன்.. செம கடுப்பாகிருவீங்க.. 

 

தென்றல்... காதலுக்காக எல்லாத்தையும் தாங்கிட்டு அந்த வீட்டுல இருக்கா...அப்படி என்ன காதலு.? விஷ்ணு மாதிரி ஆளுக மேல் காதலை வெச்சே தப்பு.. இவளையும் எனக்குப் பிடிக்கல..

 

வீட்டுல பெரியவங்க கொஞ்சம் நல்லவங்களா இருக்காங்க.. அதுவும் அந்த பாட்டி இருக்கே உங்க நியாயத்தை தூக்கி குப்பைல போடுங்க.. உங்க பேரனு அவனுக்கு எந்த தண்டனையும் குடுக்காம விட்டாச்சு..

 

இந்த கதையை எழுதுனது யாருப்பா.? அதுவும் தென்றல் கேரக்டரைப் படைச்சது யாருப்பா.? ரொம்ப டென்சன் பண்ணிட்டிங்க.. 

 

இனி கொஞ்சம் தப்பு செஞ்சா தண்டனை கிடைக்கற மாதிரியும் காதலா இருந்தாலும் பெண்கள் நிமிர்ந்து நிற்கற மாதிரியும் எழுதுங்க.. ஆன்டி ஹீரோ படிக்கறவங்களுக்கு ஏத்த கதை தான்... தாராளமா படிக்கலாம்.

 

போட்டியில் வெற்றி பெ

ற வாழ்த்துகள்மா..

 

 

 


   
ReplyQuote
Sahithya varun
(@sahi-varun)
Active Member Registered
Joined: 16 hours ago
Posts: 6
 

Sahi review 

 

நம் காதல் நாணலன்றோ!

 

 

 

இதுவும் பெரிய குடும்ப கதை தான்..

 

கதை முழுக்க முழுக்க நல்லா இருந்துச்சு..

 

அண்ணன் தம்பிக நாலு பேரு.. இவங்களுக்கு ஒரே தங்கச்சி.. அண்ணனுக மட்டுமில்லாம அண்ணிகளோட அன்பு மழைலயும் நனையுற ஆளு. குடுத்து வெச்சவப்பா இவ..

 

குடும்பமே இப்படினா இவளுக்கானவன் அதான் இவளோட கணவன் அவனும் இவளை உள்ளங்கைல வெச்சு தாங்கறாங்க.. 

 

அதீத அன்பு தான் பிரிவை உண்டாக்கும்.. அதே மாதிரி இவங்களுக்குள்ளும் பிரிவு வருது.. 

 

அந்த பிரிவு எதற்காக.? அண்ணன் பேச்சைக் கேட்டு இவ ஏன் அவளோட கணவனை விட்டுட்டு வந்தா.? அதீத பாசம் என்ன செய்யும்.? மறுபடியும் அவங்க சேர்ந்தாங்களா.? இல்லையானு தான் மீதி கதை.

 

கதை ரொம்பவே நல்லா இருந்துச்சு.. எந்த டென்சனும் இல்லாம படிச்சு முடிச்சேன்.. எனக்கு ரொம்பவே பிடிச்சுதுபா.. உங்க எழுத்துநடையும் அழகா இருக்கு..  நம்ம பொற்றாமரையாள் குடும்பம் என் மனசை விட்டு இன்னும் போகல..

 

போட்டியில் வெற்றி பெற வா

ழ்த்துகள் டியர்..

 


   
ReplyQuote
Sahithya varun
(@sahi-varun)
Active Member Registered
Joined: 16 hours ago
Posts: 6
 

Sahi review 

 

எழுந்திடும் காதல் காவியம்

 

 

 

ஃபீல் குட் ஸ்டோரி.. காதலையும் அதே சமயம் குடும்பமும் எவ்ளோ முக்கியம்னு சொல்லிருக்கீங்க.. 

 

காதலிக்கறது முக்கியமில்லை அதே சமயம் பெற்றோர் சம்பதத்தோட கல்யாணம் பண்றது தான் முக்கியம்.. 

 

திவ்யனோட காதல் ரொம்பவே பிடிச்சுது.. அவனோட பொறுமை காத்திருப்பு எல்லாம் அப்பப்பா.. மொத்தத்துல கதைல இவன் மட்டும் தனியா தெரிஞ்சான்..

 

பிரஹாசினி - காதலிச்சாலும் தன்னை வளர்த்துனவங்கள ஏமாத்த கூடாதுனு அவளோட காதலை சொல்லாம மறைக்கறா..

 

கடைசில ரெண்டு பேரும் குடும்பத்தோட சம்மதத்தோட சேருறது அருமை.. 

 

ரமணி மாதிரி ஆளுகளும் இருக்கத்தான் செய்யறாங்க.. நம்ம நினைச்சது நடக்கலனா வார்த்தை எல்லாம் தேள் கொடுக்கு மாதிரி வெளில வர தான் செய்யும்.. அதுக்கு இவங்களே உதாரணம்.

 

கதை படிக்க நல்லா இருந்துச்சு..

 

போட்டியில் வெற்றி

பெற வாழ்த்துகள் 

 


   
ReplyQuote
Zeenath Sabeeha
(@zeenath)
Active Member Registered
Joined: 3 weeks ago
Posts: 14
 

#வாகைசூடவாபோட்டிக்கதை
#vsv22
#நேசம்வளர்க்கநெஞ்சம்தாராயோ
Kavi Chandra அவர்கள் தளத்தில் நடக்கும் போட்டி கதைகள்.
இப்படி ஒரு கதையை கொடுத்த எழுத்தாளர் யார் என தெரிந்துகொள்ள காத்துக் கொண்டிருக்கிறேன்😔
ரொம்ப ரொம்ப அழுத்தமான கதை. மனம் மிகவும் வருந்தியது பாரிகாக 😔😔 பாரியின் நிலை கண்ணீரை வர வைத்தது. 😭😭😭
பாரிஜாதம்... பாவம் பெண் அவள் இவ்வளவு சோதனை அவளுக்கு கூடாது.. அடுத்த பாகத்திலாவது அவளுக்கு ஒரு நியாயத்தை கூறுங்கள்..
முல்லை  அருமையான கதாபாத்திரம். 🥰
தொடப்ப கட்டைக்கு பட்டு குஞ்சலம் என்பது போல செம்பருத்தி தாமரை என வில்லிகளுக்கு மென்மையான பூவின் பெயர்.😡😡😡 குறிஞ்சி நியாயவாதி நல்லவளாக ஒருத்தி.
தாமரைக்கண்ணன்.. சூழ்நிலையால் தவறு செய்துவிட்டு துடிப்பவன்..
எனக்கு அதிக கோபம் வருவது நரசிம்மன் மேல்தான்.. இவன் ஒழுங்காக இருந்திருந்தால் இவ்வளவு துன்பம் நேர்ந்திருக்காது பாரிஜாதத்திற்கு.. நல்லது தான் இவனைப் போன்ற ஒருவனோடு அவளுக்கு வேண்டாம் ஒரு வாழ்வு.
பிரகலாதன்... மனநல மருத்துவன். இந்த லயன் அவள் வாழ்வில் இணையட்டும். பூவை போல பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வேறு எதுவும் கதை பற்றி சொல்ல தோன்றவில்லை.. கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே
விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகும் நகர்த்தது அதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள். 🥰❤️
Good luck 🥰 🌹


   
ReplyQuote
Page 6 / 6

You cannot copy content of this page