All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

முத்தம் 1

 

VSV 3 – முத்தம் ஒன்றை பிச்சு தா
(@vsv3)
Member Author
Joined: 3 weeks ago
Posts: 6
Topic starter  

முத்தம் 1

 

"ஐயோ! ஜெயூ என்ன எங்க கூட்டிட்டு போறீங்க?" என ஒருவன் பேச இன்னொருவர் "ஏய்! அதிரூபன் உன் அம்மாவை எப்படி நீ பேர் சொல்லி கூப்பிடலாம்?" என்றார் ஜெயவள்ளியின் கணவர் வைனவேந்தன். "அப்படி சொல்லுங்க டாடி!" என அதிரூபனின் தங்கை மாதங்கி முன் வந்து தந்தை சார்பில் பேச "என் பையன் என்னை செல்லமாக பெயர் சொல்லி அழைச்சா போதுமே, அப்பாவும் மகளும் கோபத்துல கொந்தளிச்சுடுவீங்க? அதி, இன்னைக்கி உனக்கு பொண்ணு பார்க்க போறோம்." என்றதும் "என்ன பொண்ணு பார்க்க போறீங்களா? ஜெயூ எனக்கு வெறும் இருபத்தெழு வயசு தான் ஆகுது." என்றான் திடமான. ஜெயவள்ளி மற்றும் வைனவேந்தன் தம்பதியர்க்கு திருமணம் முடிந்து ஐந்து வருடத்திற்கு பின்னரே பிறந்தவன் தான் அதிரூபன். இவனது தங்கை இவனுக்கு இரண்டு வயது இருக்கும் போது பிறந்தாள். சிறு வயதில் இருந்து அடிமுடி சண்டைகள் போன்ற பல சம்பவங்கள் வரிசை கட்டி நடந்து ஒரு காலத்தில். பிறகு, அந்த சண்டைகள் அனைத்தும் பாசமாக மாறியது அதிரூபன் மாதங்கியை விட்டு படிப்பிற்காக பிரிந்த பின்னர் தான் அவன் அவளை நினைக்க தொடங்கினான். இதோ, ஒரு வாரத்திற்கு முன் தான் இவனது தங்கைக்கு வரண் வந்தது, அப்போது அவள் எங்கள் இருவரின் திருமணமும் ஒரே மேடையில் நடக்க வேண்டும் என்கிற அந்த கட்டளைக்கு தான் இப்போது இவனுக்கு பெண்பார்க்க செல்கிறார். “மாது ஏன்டி இப்படி பண்ண. நா இப்போ தான் நிலையான சம்பளத்தில் எனக்கு பிடிச்ச வேலையை செஞ்சுட்டு வரேன். அது உனக்கு பொறுக்கலையா?" என தன் தங்கையிடம் செல்லமாக கோபம் கொண்டான். "ஆஹா! தினம் போய் வெட்டியா கத்திட்டு வர, அதுக்கு மாச ஒரு லட்சம்? எப்படி பா?" என தமையனின் ஆசிரியர் பணியை கேலி செய்து பேசினாள். "அப்படி பேசாத மாதங்கி! அவன் பண்ணிட்டு வர உத்தியோகம் பல லட்சம் எதிர்கால இளம் தலைமுறையை உருவாக்கும் உன்னதமான வேலையை, கொச்சபடுத்தி பேசினதுக்கு.. நா நீ கேட்ட ஐஸ்கிரீம் கேக் வாங்கி தரமாட்டேன்." என முடிவாக கூறினார். "டாடி!! என்ன இப்படி சொல்றீங்க?" என குழந்தைதனமாக முகத்தை வைத்து கொண்டு பார்க்க "இப்படி குழந்தை மாதிரி இனி நடந்துக்காத. கல்யாணம் பண்ணி அடுத்த வருஷம் உனக்கு ஒரு குழந்தை பிறக்கும். கொஞ்சம் பொறுப்பா நடந்துக்க பழகு." என ஜெயவள்ளி அறிவுரையை முடிக்கவும் பெண்ணின் வீடு வந்து சேரவும் சரியாக இருந்தது. 

 "மாப்ள வீட்டுகாரங்க வந்துட்டாங்க மா!" என தேவகி கத்தினாள். "தேவகி!! என்ன அதுக்கு இப்படி தான் கத்துவியா? என்னங்க வாங்க போய் அவங்களை வரவேற்க போவோம்." என தனது கணவன் சுதாகர் உடன் சென்றார் பைரவி. அவர்களை வரவேற்ற பின் சம்மந்திகள் இருவரும் அமர்ந்து "பிரோகர் எல்லாம் சொல்லிருப்பார். இருந்தாலும், சொல்றேன் சம்மந்தி. என் பேரு சுதாகர், இவ என் அன்பான மணைவி பைரவி. இவ எங்க கடைக்குட்டி தேவகி எனக்கு மொத்தம் இரண்டு பொண்கள். மூத்தவள் சானக்கியா இப்போ தான் படிப்பை முடிச்சிருக்கா அவதான் நீங்க பார்க்க வந்த பொண்ணு இவ எங்க இளைய மகள் தேவகிஇன்னும் பேசினேன் அவ்வளவு தான் என் பொண்ணு அடிச்சாலும் அடிப்பா." என்றதோடு சுதாகர் நிறுத்தி கொண்டார். "நானும் என் குடும்பத்தை அறிமுகம் செய்து வைக்கிறேன். நா வைனவேந்தன், இவங்க என் மனைவி ஜெயவள்ளி அப்புறம் இது என் மகன் அதிரூபன் கடைசியா இவ என் செல்ல பொண்ணு மாதங்கி. அதி காலேஜ்ல ஃபிரபச்சரா வேலை பார்த்துட்டு வரான். மாதங்கி தனக்கும் தன் அண்ணாவுக்கும் ஒன்னா தான் திருமணம் நடத்தணும்னு சொல்லிட்டா. அதனால், ஒரே முகூர்த்ததுல இரண்டு கல்யாணம் நடத்தணும்." என தன்னவர் பேசும் போது "நீங்க என் மருமகளை கூட்டிட்டு வாங்க." என ஜெயவள்ளி குறுக்கே புகுந்தார். 

 

மறுபக்கம், சானக்கியா 'கல்யாணம்! நா கேட்டேனா கடவுளே? இப்ப தான் நா படிச்சு முடிச்சிருக்கேன். இரண்டு வருஷம் கழிச்சு கல்யாணம் பண்ணிக்கலாம் நினைச்சேன். இப்ப என்ன பண்ணுறது..?' என யோசனையில் இருக்கும் அவளை "அக்கா மாமா சூப்பரா இருக்கார். வாவா..நா கூட்டிட்டு போறேன்." என தேவகி சானக்கியாவை அழைத்து சென்றாள். மேலே இருக்கும் மேகத்தை புடவையாக அணிந்து வெள்ளை முத்துகளில் வளையல், தோடு அதோடு வானத்தில் இருந்த அனைத்து நிறங்களும் அவளது மெய்யில் பூசியிருந்தது. நடு நெற்றியில் நெருப்பை மூட்டும் சூரியனை பொட்டாக வைத்திருந்தாள் பாவை. அவளை பார்த்த ஆணவன் 'வாவ்! சானக்கியா..சானக்கியா ஏதோ தந்திரம் செய்தாய்..கூல்டவுன் அதிரூபன் இவகூட தனியா பேசிட்டு உன் ரகசியங்களை பகிர்ந்த பிறகு இவ சரினு சொன்னா இவளை நீ ரசிக்க ஆரம்பிக்கலாம்.' "இவ தான் என் மூத்த மகள் சானக்கியா. மாப்ள நீங்க இவளோட தனியா பேசணுமா?" என சுதாகர் கேட்டதும் "நீங்க சொல்லலைனாலும். நானே கேட்டிருப்பேன். தனியா பேசணும்." இதை பார்த்த மாதங்கி "என்னமோ கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருந்தான். இப்ப என்னடானா பட்டுனு தனியா பேச போய்ட்டான். எப்படி பா?" என குழப்பமாக கேட்டாள். "உன்ன பார்த்ததும் உன் மாப்பிள்ளை கவுந்து விழுகள? அப்படி தான்! உங்க அம்மாவை பார்த்தவுடன் நான் கவுந்து விழுந்தவன் தான்." என தன்னவளை பார்த்து பேசினார் வைனவேந்தன் வெட்கத்தோடு ஜெயவள்ளி "பிள்ளைகள் முன்ன என்ன பேசணும்னு தெரியாது?" என்றதோடு நிறுத்திக்கொண்டார். இருவரும் மாடியில் உள்ள பாவையின் ஊஞ்சலின் அருகில் நின்று "நான் இப்போதைக்கு கல்யாணம் பண்ணிக்க வேணாங்குற முடியல இருக்கேன். உங்களுக்கு என்ன தோணுது?" என அதிரூபனிடம் கேட்க "எனக்குமே வாழ்க்கையில இப்போ தான் வேலை கிடைச்சிருக்கு. உடனே வீட்ல கல்யாணத்துக்கு.. நம்ம வேணா ஏன் வெளி உலகத்துக்கு மட்டும் புருஷன் பொண்டாட்டியா வாழ கூடாது?" "என்ன சொல்றீங்க? நீங்க வெளியுலகத்துக்கு புருஷன் பொண்டாட்டினா அப்போ நான் உங்களுக்கு என்ன பணிவிடை பண்ணனுமா? நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியல?" என சானக்கியா பேச "நான் உங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு? சரி அது ஒரு பக்கம் இருக்கட்டும். எனக்கு சில கண்டிஷன்ஸ் இருக்கு. அந்த கண்டிஷனுக்கு ஓகேன்னா.. நீங்க தாராளமா எனனை கல்யாணம் பண்ணிக்கலாம் மிஸ்டர் அதிரூபன்." "என்ன கண்டிஷன் மிஸ் சானக்கியா?" பாவையவள் ஒவ்வொன்றாக கூற ஆரம்பித்தாள். "கண்டிஷன் நம்பர் ஒன், நான் இப்போ தான் பிஜி முடிச்சு இருக்கேன். எனக்கு முனைவர் பட்டம் வாங்கணும்னு ஆசையா இருக்கு. அதனால, நான் மேற்கொண்டு படிக்கணும். கண்டிஷன் நம்பர் இரண்டு இந்த கல்யாணத்துக்கு அப்புறம் உரசுறது, முத்தம் கொடுக்கிறது, கட்டிப்பிடிக்கிறது, இந்த மாதிரியான எந்த ரொமான்டிக் சீனும் ரெண்டு வருஷத்துக்கு வச்சுக்கவே கூடாது.! கண்டிஷன் நம்பர் த்ரீ நான் இப்படி தான் இருப்பேன்னு ஒரு விதிமுறைப்படி நா வாழ்ந்துட்டு வரேன். அந்த விதிமுறைய மாற்ற கூடாது. முக்கியமா, எனக்கு சமைக்க தெரியாது, வீடு பெருக்க தெரியாது, கோலம் போடத் தெரியாது, என்னை மட்டும் தான் பாத்துக்க தெரியும். அதனால வீட்ல சமைக்க மாட்டேங்குற, எங்க அம்மாக்கு வேலை பாக்க மாட்டேங்கறன்னு கல்யாணத்துக்கு அப்புறம் உங்க அம்மாவுக்கு கொடிபிடிக்க கூடாது! இந்த கண்டிஷன்ஸ் எல்லாம் ஓகேன்னு சொன்னா.. கல்யாணம் பண்ணிப்பேன்!!" என சானக்கியா கூறிய அத்தனை நிபந்தனைகளையும் கேட்டவனுக்கு ஓரளவு திருப்தி தான். ஏனென்றால்.. தனக்கு வரக்கூடிய பெண்ணவள் மேலும் மேலும் படிக்க வைக்க வேண்டும் என்பது அதிரூபனின் ஆசை. அதே சமயம், தனக்கு உரிமை கொடுக்க வேண்டும் என்று அந்தப் பெண் நினைக்க வேண்டும் என்பதும் அவனது எதிர்பார்ப்பும் கூட. ஆனால், தன்னை தொடக்கூடாது! தங்களுக்குள் ஏற்படுகின்ற அந்த உறவுக்கு இரண்டு வருட காலம்.. அவளது அந்த நிபந்தனை மட்டுமே அதிரூபனின் மனதில் ஏதோ ஒரு வித சஞ்சலத்தை தூண்டியது. "எனக்கும் கண்டிஷன்ஸ் எல்லாம் இருக்கு. என்னோட முத கண்டிஷன் உன்னை நான் மேற்கொண்டு படிக்க வைப்பேன் அதுக்கு எந்தவித ரெஸ்ட்ரிக்சன்ஸும் கிடையாது. இரண்டாவது கண்டிஷன் நான் என் தங்கச்சி ரெண்டு பேரும் மேக்சிமம் எங்க அப்பா கூட தான் டைம் ஸ்பென்ட் பண்ணுவோம். அதனால நீ நினைக்கிற மாதிரி அம்மாவுக்கு கொடி பிடிச்சுக்கிட்டு, அம்மா பேச்சு கேட்டுக்கிட்டு இருக்குற பையனா என்னைக்கும் இருக்க மாட்டேன். மூணாவது கண்டிஷன் எனக்கானவள் நீனு இருக்கும்போது உன்னோட சில நேரம் உன் முத்தங்களை பிச்சு தானு கேட்டு நீ எனக்கு தரமாட்டேன்னு சொன்னா நான் என்ன பண்றது? அதுக்குன்னு நீ நா காமவெறி பிடித்தவன் அப்படி எல்லாம் நினைக்க வேண்டாம். திருமணமான புதுசுல தன்னவளோட கொஞ்சம் அப்படி இப்படின்னு இருக்கணும் தானே? அந்த உணர்வு எல்லா பெண்,ஆண் பாலினத்துக்குமே இருக்கும். நீ அதுக்கு ஒரு ஸ்ட்ரிக்ஷன் விட்டால் நான் என்ன பண்ணுவேன்? உனக்கு ஒரு மாப்பிள்ளை கூட அமையாதும்மா! உன்னோட ரெண்டு கண்டிஷனுக்கு நான் ஓகே சொல்லி இருக்கேன்னா..இதுவே என் இடத்துல வேற யாராவது இருந்தா போமா நீயும், உன் கண்டிஷனும் சொல்லிட்டு போயிருப்பான். அதனால.. என்னை தயவு செஞ்சு நீ ஓகே பண்ணிக்கோ. நான் எதிர்பார்த்த எல்லா குவாலிபிகேஷனும் உன்கிட்ட இருக்கு. ஆனா? உங்க செகண்ட் கண்டிஷன் மட்டும் கொஞ்சம் கட் பண்ணுமா.. அதுல பாதி அந்த முத்தம், முத்தம் மட்டும் இருக்கட்டும். உன்கிட்ட தினம் ஒவ்வொரு முத்தம்மா பிச்சு பிச்சு வாங்கிக்கிறேன்." இத்தனை நேரம் அதிரூபன் பேசிய அனைத்தையும் கேட்டு வழக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாக புரிந்தது. பிற்காலத்தில் தனக்கென்று ஏதாவது பிரச்சனை வந்தாலும் தனக்காக உறுதுணையாக இருப்பான் என்ற நம்பிக்கையை அவளின் மனதில் விதைத்த ஒரே காரணத்துக்காக மட்டும் தான் அவனிடம் "இந்த சானக்கியாவுக்கு அதிரூபன பிடிச்சிருக்கு." என்றதும் அவளது கரத்தை பிடித்தவன் அவளது கண்களை பார்க்க விடுக்கென்று கையை எடுத்துவிட்டு கிளம்பி எதார்த்தமாக விழகிசென்றாள். அவளின் இடையை பிடித்து கரத்தை கோர்த்தவன் விழியை நோக்கினான்.

 

அதிரூபனே!! அதிகாரனே!! அதிரூபனே!! அதிகாரனே!! சூரை காற்றென வந்தாய் என் சுதந்திரம் மீண்டும் தந்தாய். மாமழையாகி நின்றாய் மதையானை போலே வென்றாய்.. உன் பத்து விரலும் ஆயுதம்..உனை பார்க்கும் போதே பயம் வரும்! நீ தான் ஆணின் இலக்கணம்! நீ துணையாய் நின்றால்..வருமே தலைகணம்!

 

"ரூபன்! எ..என்னை விடுங்க." என்றதும் பூ போலே நிற்க வைக்காமல் அப்படியே கரத்தை எடுத்தான் "ஐயோ!!! சாரி சானக்கியா தப்பு பண்ணிட்டேன்! ஐயம் சாரி." என்றதும் "படுபாவி, கீழ விழவிட்டுட்டு இப்ப சாரி சொல்றீயா? உனக்கு முத்தம் கிடையாதுடா." என்றாள் அழுது கொண்டே. ஆணவன் தன் விருப்பத்தை கூற எல்லையற்ற சந்தோஷத்தோடு செல்லுகையில் அவளது அலைபேசி எண்ணை வாங்க மறந்து போனான் அதிரூபன்.

 

இச்சு தா💋 கொஞ்சம் பிச்சு தா😘

 

https://kavichandranovels.com/community/vsv-comments-and-discussions-vsv-3-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%88-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%a4%e0%ae%be/


   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Member Author
Joined: 3 weeks ago
Posts: 8
 

Nice start.super ma


   
ReplyQuote

You cannot copy content of this page