All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

காலம் தாண்டிய பயணம் 13

 

VSV 28 – காலம் தாண்டியும் காதலை தேடி
(@vsv28)
Trusted Member Author
Joined: 5 months ago
Posts: 22
Topic starter  

 

 

 

காலம் தாண்டிய பயணம் -13

 

 

 

நால்வரும் அந்தக் காட்டின் பாதை வழியே நடந்து சென்று கொண்டிருந்த நேரம் துயிலனோ "சுவாமி அவனை வீழ்த்த இவருடைய மகன் வேண்டும் என்று கூறினீர்களே பின்னே ஏன் அவரை அங்கேயே விட்டு வந்தீர்கள்?" என்றான் முன்னே கிளைகளை உடைத்து பாதை அமைத்தபடி... 

 

அவரோ "காரணம் உள்ளது துயிலா" என்று மட்டும் சொன்னவர் வேறு எதுவும் பேசவில்லை அமைதியாகவே நடக்கத் தொடங்கினார். 

 

சிறிது நேரம் அமைதியான பயணம்  தொடர, அந்த அமைதியைக் களைத்த வான்மீகியோ எதையோ உணர்ந்தவராக "இதோ நெருங்கி விட்டோம்" என்றவர் சுற்றும் முற்றும் பார்த்தபடி கையில் இருந்த பொடி ஒன்றைத் தூவ, அங்கே அவர்களது உருவம் தன்னால் மறைந்து கொண்டது. 

 

யாரின் கண்களுக்கும் புலப்படாத வகையில் நால்வரும் முன்னோக்கி பயணிக்க, சற்றுத் தொலைவில் பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க, அதில் நடுநாயகமாக ஒருவரின் முதுகு தெரிந்தது. 

 

மித்ரனோ அவன் தான் மார்த்தாண்டன் என்ற ஊகத்துக்கு வந்தவன் சுற்றிப் பார்க்க, அவன் கண்ணில் விழுந்தாள் அவன் மனைவி... 

 

மந்திர கட்டுக்களுடன் அமர வைக்கப்பட்ட யாழினி மீது பார்வையில் விழ, கோபமாக முன்னேறப் போனவனைத் தடுத்தார் வான்மீகி.  

 

அவரோ இடம் வலமாகத் தலையசைக்க, தன் முன்னே தன் மனைவி இருந்து ஒன்றும் செய்யமுடியாத கோபத்தை அடக்க வழி தெரியாமல் பல்லைக் கடித்தப்படி நின்றான் மித்ரன். 

 

வான்மீகியோ "இளவேந்தா அரத்த மோகினியை வரவழைக்க முயற்சி செய்" என்க, அவரும் அங்கேயே அமர்ந்து மந்திரங்களை உச்சரிக்க தொடங்கினார். 

 

அரத்த மோகினியை கட்டுக்குள் கொண்டு வந்தால் இவனைத் தடுக்கலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு... 

 

அவன் இவர்களது எண்ணத்திற்கே அப்பாற்பட்டவன் என்பதை இவர்களுக்கு யார் சொல்வது???

 

இளவேந்தனின் மந்திரம் இரண்டு மூன்று முறை வேலை செய்யாமல் போக, கண்களைத் திறந்து வான்மீகியை இல்லை என்கிற ரீதியில் பார்த்தவர் "சுவாமி என் மந்திரங்கள் அங்கே நுழைய முடியாதபடி கட்டுக்கள் அரத்த மோகினியை சூழ்ந்துள்ளது" என்க, வான்மீகி கண்களை மூடித் திறந்தார். 

 

அடுத்து என்னவென்று அவர் மூளை செயற்படத் தொடங்க, அந்த நேரம் மார்த்தாண்டனின் நாசி எதையோ உணர்ந்து கொண்ட உணர்வில் இதழ்கள் கேலியில் வளைந்தது. 

 

எழுந்து நின்றவனோ இவர்கள் நின்றிருந்த அந்தச் செடி மறைத்த இடத்தைப் பார்த்தபடி திரும்பியவனோ "ஹாஹா... வந்துவிட்டாயா மித்ரா... என்னைத் தேடி... இல்லை இல்லை உன்னைத் தேடி நீயே வந்துவிட்டாயா?" என்று சத்தமாய் சிரித்தான். 

 

விளைவு அடுத்த சில வினாடிகளில் 

மார்த்தாண்டனை தேடி வந்த நால்வரும் மந்திரக் கட்டில் அவன் முன்னே நிற்க வைக்கப்பட்டிருக்க, மித்ரனின் கண்களும் சேர்த்து கட்டப்படிருந்தது. 

 

 

மித்ரனுக்கோ அத்தனை நாள் போராட்டமும், இப்போது கண்முன் அவனவள் கட்டப்பட்டு அங்கே பூஜை நடுவில் அமர வைக்கப்படிருப்பதை பார்த்தும் எதுவும் செய்ய முடியாத கையாளாகாத நிலைமையும் அவனை வெகுவாய் தாக்கக் கொதித்துத் தான் போயிருந்தான். 

 

இதில் மார்த்தாண்டனின் புன்னகை வேறு எரிச்சளைக் கொடுக்க  "உனக்கு என்ன வேணும் இப்போ, மரியாதையா என் யாழ விட்டுடு, இல்லனா உன்ன கொல்லக் கூடத் தயங்க மாட்டேன்" என்றான் கோபத்துடன்... 

 

அதற்கும் மார்த்தாண்டனிடம் சத்தமான கேலிச் சிரிப்பு தான்... 

 

"என்னை நீ கொள்வாயா? நன்றாக இருக்கிறதே! என்னை என்னவென்று நினைத்தாய் மித்ரா? இந்த உலகத்தை அடக்கி ஆள பிறந்தவன், பிறப்புக் கொடுக்கப்போகிறவன் யான்... இனிமேல் இந்த உலகம் எங்களை வணங்கும், வணங்க வைப்பேன்" என்றான் கர்வத்துடன்... 

 

மந்திர கட்டில் நின்றிருந்த வான்மீகியோ "மீண்டும் மீண்டும் தவறிழைக்கிறாய் மார்த்தாண்டா, பைரவனின் கோபப்பார்வைக்கு ஆளாகி விட்டாய், உன் அழிவு வெகுதொலைவில் இல்லை" என்றார். 

 

மார்த்தாண்டனோ கோபத்துடன் வான்மீகியைப் பார்த்தவன், "யாருக்கு யார் கையால் அழிவு வான்மீகி? இதற்கான பதில் இன்றே உனக்குக் கிட்டும்... உன் பைரவன் வேண்டுமானால் என்னிடம் உயிர் பிச்சை கேட்கட்டும்" என்று 

உரைத்தபடி அங்குப் பூஜைக்குத் தயாராக இருக்கும் இடத்தில் அமர்ந்தான். 

 

இருள் சூழ்ந்த நேரமதில் அங்கே கரும்புகைகள் அந்த இடத்தைச் சூழ வட்டமிட, ஆந்தைகளின் அலறும் ஓசை அந்த மயான அமைதியைக் களைத்து பயமுறுத்த, யாழினியின் பார்வை மொத்தமும் கண்கள் கட்டப்பட்ட நிலையில் நின்றிருந்த மித்ரனின் மீது தான். 

 

இதழ்களோ "தேவ்" என்ற உச்சரிப்பையும் விடவில்லை... 

 

அவள் வயதுக்கு அவள் அதிகமாகவே இந்தச் சில நாட்களில் பார்த்துவிட்டாள். 

 

என்னதான் அவள் தைரியம் வாய்ந்தவளாக இருந்தாலும், இவை அவள் வயதுக்கு அதிகப்படியானவை தானே! 

 

உண்மையில் துவண்டு தான் போயிருந்தாள், தாய்மையை உணர்ந்து கொண்ட பொழுதுகள் இப்படியா அமைய வேண்டும், அதிலும் அவளவன் உருவத்தில் ஒரு கொடூரனை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை... 

 

உதடுகள் தேவ் என்ற அவன் பெயரைக் கூறி சுவாசம் பெற்றுக்கொண்டனவோ என்னவோ விடாமல் அவன் நாமத்தையே உச்சரித்துக் கொண்டிருந்தாள் பாவை... 

 

அந்த நேரம் கோபமாய் அங்கே வந்து சேர்ந்தாள் அரத்த மோகினி... இல்லை இல்லை வரவழைக்கப்பட்டாள். 

 

"மார்த்தாண்டா என்ன விளையாட்டு இது?" என்று கோபமாய் அவள் கேட்க,  அவனோ புன்னகையுடன் "பதில் தெரிந்து கொண்டே வினவுதல் எங்கனம் சரியாகும் தாயே!" என்றான். 

 

அவளோ "தாயா? அப்படி அழைப்பதற்கு அர்த்தம் உணர்ந்தது போல் தெரியவில்லையே உன் செயல்" என்றான் இன்னும் அடங்காத சீற்றதுடன்... 

 

"என்னைப் பற்றி அறிந்தும் அருகில் வைத்துக்கொண்டது தாங்கள் பிழை தாயே! இப்போதும்  தாய் என்பதற்காகவே இந்த முடிவும் இல்லையேல்" என்று நிறுத்தியவனது முகம் விகாரத்தைத் தத்தெடுத்துக் கொண்டது. 

 

"வேண்டாம் மார்த்தாண்டா தவறிழைக்கிறாய்" என்று உரக்க கத்தியவளின் உடலானது மந்திர கட்டுக்குட்பட்டு அங்கிருந்த பூஜை வட்டத்தினுள் அமரவைக்கப்பட,

 

 

மார்த்தாண்டனோ "தவறா? எது தவறு... என் உயிரை ஆள வைக்க, எதுவும் சரியே! என் மகனை மீண்டும் கொண்டுவர இந்த உலகையே வேண்டுமானாலும் அழிப்பேன்" என்றவன் மீண்டும் மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கி இருந்தான். 

 

 

வான்மீகியோ சட்டென அவன் செய்யப்பபோவதை உணர்ந்தவரோ திடுக்கிட்டுத் தான் போனார். 

 

"மார்த்தாண்டா" என்று அழைத்தவரின் குரல் கூட நலிந்து தான் ஒலித்தது... 

 

'கூடாது... கூடாது இது நடக்கவே கூடாது' என்று அவர் மனம் கூப்பாடு போட, ஏதேதோ மந்திரங்கள் உச்சரித்து முயற்சி செய்தும் அங்கே அவன் இடத்தில் அவன் கட்டுக்குள் அவரது மந்திரங்கள் கூடச் செயலிழந்து தான் போயிருந்தது. 

 

நடக்கப் போகும் விபரீதத்தைத் தடுக்கும்  வழி அறியாது தவிப்புடன் நின்றிருந்தார். 

 

அவரது தவிப்பை உணர்ந்த இளவேந்தனோ "சுவாமி என்னவாகிற்கு? ஏன் தாங்கள் திடீரென இத்தனை தவிப்புக்குள்ளாகி நிற்கின்றீர்?" என்று வினவ, 

 

அவரோ "மிகப்பெரிய அழிவின் ஆரம்பம் நிகழவிருக்கிறது இளவேந்தா, உன் மூதாதையர்கள் எதைத் தடுத்து நிறுத்தினார்களோ அது நடக்கவிருக்கிறது" என்றவரின் கூற்றில் அருகில் இருந்தவர்கள் புரியாமல் பார்க்க, மித்ரனோ நடப்பதை பார்க்கவும் முடியாமல் அவஸ்தையுடன் தான் நின்றிருந்தான். 

 

 

"புரியவில்லையே சுவாமி?" என்ற இளவேந்தனின் கேள்விக்குப் பதிலாய் "ஆத்ரீக வளவன்" என்றார் வான்மீகி... 

 

அதே நேரம் மார்த்தாண்டனும் அதே பெயரைச் சத்தமாய் உச்சரிக்க, வானம் பலத்த இடிச் சத்தத்துடன் முழங்கியது. 

 

கூடவே சட்டெனத் தோன்றிய மின்னல் கீற்று ஒன்று வானிலிருந்து புறப்பட்டு அரத்த மோகினியின் நெஞ்சினைத் துளைத்தது. 

 

அடுத்து அவர் உடல் தன்னால் காற்றில் மிதக்க, அவரது அத்தனை சக்திகளையும் சிறிது சிறிதாக அந்த மின்னல் உள்வாங்கிக் கொண்டது. 

 

அதற்கிடையில் எதையாவது செய்ய வேண்டும் என்று எண்ணிய வான்மீகிக்கு எதுவுமே புலப்படாமல் போக, யோசிக்கத் தொடங்கியவருக்கு பதில் என்னவோ பூச்சியம் தான். 

 

கண்களை மூடிப் பைரவணை கண்களுக்குள் நிரப்பியவருக்கு சட்டென அந்தக் கிணற்றின் உள்ளேயிருக்கும் குகை ஞாபகம் வர, தன்னால் காலம் கடக்கும் மாலை நினைவில் வந்தது. கூடவே மகிழின் முகமும் வந்து போக, உண்மையில் வியர்த்தது அவருக்கு... 

 

அவர் எதையோ நினைத்துச் செய்திருக்க, இங்கே நடப்பது வேறொன்றல்லாவா??? 

 

சட்டெனக் கண்களைத் திறந்தவரோ மித்ரனிடம் "மித்ரா, அந்த முத்து மாலை எங்கே உள்ளது?" என்று பதற்றமாய் வினவ, அவனோ "என்கிட்ட தான் இருக்கு, என் சட்டைப்பைக்குள்ள சின்னப் பெட்டி ஒன்னு இருக்கு அதுக்குள்ள தான் இருக்கு" என்றான். 

 

அவரோ ஆசுவாசமாய் மூச்சை எடுத்துக்கொண்டவரோ, "நல்லது மித்ரா, அதற்கான தேவை விரைவில் வரும்... கவனமாய் இருந்து கொள், இங்கே எது நடந்தாலும் யாரைக் கொல்ல உனக்கு ஏவப்பட்டாலும்,  உன்னை எதிர்த்துப் போராடுவது யாராக இருந்தாலும் யான் சொல்வதை செய்ய வேண்டியது உன் கடமை, உன் பொறுப்பும் கூட... அதை நினைவில் வைத்துக்கொள்" என்றவர் நடப்பதைக் கவனிக்கத் தொடங்கினார். 

 

அதற்கிடையில் அங்கே மொத்த சக்தியும் உறிஞ்சப்பட்ட பின் அரத்த மோகினியின் உடல் தன்னால் கீழே விழ, அத்தனை சக்தியும் இப்போது நொடி நேர அவகாசமின்றி மார்த்தாண்டனின் உடலினுள் பாய்ந்தது.

 

முற்றாகச் சக்தி வரப்பெற்றவனோ எழுந்து நின்று அந்தக் காடே அதிரும் வண்ணம் கத்தத் தொடங்கினான். 

 

முன்னே கிடந்த அரத்த மோகினியைப் பார்த்துப் புன்னகைத்தவனோ "மிக்க நன்றி தாயே" என்றவனின் குரலில் கேலி... 

 

இந்த நாளுக்காகவே அவளுக்குப் பயப்படுவது போல் பணிவது போல் அவன் நடித்தது... 

 

அவளுக்கே தெரியாமல் அவளை வீழ்த்த யாகம் நடத்தினான் அவன்... அவனது மகனை மீண்டும் உயிர்ப்பிக்க அவனுக்குப் பன்மடங்கு  சக்தி தேவை... 

 

 

அங்கே அவர்கள் கூட்டத்தினுள் அவனைவிட அரத்த மோகினியின் சக்தியே உயர்ந்தது... 

 

 

இப்போது மொத்தமும் அவனிடம், அந்த அரக்கனிடம்... 

 

 

சாதாரணமாகவே கொடூரன் அவன் இப்போது கேட்கவும் வேண்டுமா?? 

 

 

அதுவும் அவனுக்குப் போதவில்லை... கோடான கோடி பலிகளின் சக்தியை ஒருங்கே பெற்ற அவன் மகனை முழு சக்தியுடன் திருப்பிக் கொண்டு வர அவனுக்கு நிச்சயம் இது போதாதே! 

 

 

அவனது வலது கரத்தை மேலே உயர்த்த, அங்கிருந்த தீயசக்தி கரும்புகை அனைத்தின் சக்தியும் இப்போது இவனுள் நிறையத் தொடங்கியது. 

 

 

இப்போது மொத்த தீயசக்தியின் ஒட்டுமொத்த உருவாமாய் அவன்... 

 

 

அதுவும் போதாமல் அடுத்து நேராய் மித்ரனின் அருகில் வந்தவன் அவன் கண்களில் கட்டியிருந்த கயிற்றை அகற்றினான். 

 

 

மித்ரனோ இருட்டுக்கு தன் விழிகளைப் பழக்கப்படுத்திப் பார்க்க, தன் முன்னே கொடூரமான தன்னையே காணும் உணர்வு அவனுக்கு... 

 

 

இருவரின் விழிகளும் நேராய் மோத, மித்ரனுக்கோ விழிகளில் ஒரு வலி 

 

 

மார்த்தாண்டனோ "ஹாஹாஹா உன் விழிகளை நேரே கண்டால் என் ஆயுள் ஒன்று குறையுமாம், சாகாவரம்  பெற்றும் அழிவு நெருங்குமாம்... பார்த்தாயா உனக்குப் பிறவி கொடுத்த எனக்கு நீ பாதகம் செய்கிறாய்" என்று புன்னகைத்தவன் மீண்டும் "ஆனால் என்ன செய்வது ஆபத்து  அறிந்தும் உனக்குப் பிறவி கொடுத்து உன்மூலம் என் மகனைக் கொண்டு வர நினைத்தால் உனக்கு நம் கடந்த கால ஞாபகம் வர வில்லையே! இருந்தும்  பரவாயில்லை உன்னால் இப்போது உபயோகம் தான்" என்றவனின் பார்வை அங்கே அமரவைக்கப்படிருந்த யாழினியைத் தொட்டு மீண்டது. 

 

 

கூடவே "இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை,  நம் மகன் தான் உதித்து விட்டானே!" என்க, மித்ரன்  புரியாமல் பார்த்தான். 

 

 

மார்த்தாண்டனோ "நம் மகன் உருவாகிய நல்ல செய்தி இன்னும் உன் காதை அடையவில்லை அல்லவா?? மறந்துவிட்டேனடா" என்று பொய்யாய் ஆச்சரியம் காட்டியவனின் கூற்றில் மித்ரன் குழம்பித் தான் போனான். 

 

 

 

"என்ன சொல்ற?" என்றவனின் குரல் நலிந்து ஒலிக்க, பார்வையோ அங்கே அரைமயக்க நிலையில் இருக்கும் யாழினி மீதுதான்.  அவளும் இவனைத்தான் பார்த்திருந்தாள்.  

 

எத்தனை ஆசையாய் சொல்லி இருக்க வேண்டிய செய்தி. இங்கே இப்படியொரு நிலையிலா தெரிய வேண்டும், உள்ளே வலித்தது அவளுக்கு... 

 

 

மார்த்தாண்டனோ "நம் மனைவி யாழினி வயிற்றில் நம் மகன் உதித்து இரு திங்கள் கடந்துவிட்டதடா மித்ரா, ஆனால் பார் இதை நானே எனக்குத் தெரியப்படுத்த வேண்டிய நிலை...  கருவில் இருக்கும் போதே நம் மகனை அழித்து அவனுக்குப் பாதகம் செய்தவர்களை வேரோடு அழிக்க வேண்டாமா? இப்போது வெளியாகும் அவன் ஆன்மா உக்கிரமாய் இருப்பான்... நான் எண்ணியது போலவே உலகையும் அடக்கி ஆள்வான்" என்றான். 

 

அவன் குரலில் ஏகத்துக்கும் கேலி பரவியிருக்க, இந்த முறை மித்ரனோ பயங்கரமாய் அவனை முறைத்தான். 

 

அவன் முறைப்பின் காரணம் புரிந்துகொண்ட மார்த்தாண்டன் "நீ என்னில் பாதி என்றால் உன் மனைவி நம் மனைவி தானே மித்ரா!" என்று சிரிக்க, அவன் கூற்றில் மித்ரன் பார்வையில் இன்னும் தீர்க்கம் கூடியது. 

 

அவ்வளவு கோபம் அவனுக்கு... அவன் ஒருவன் எத்தனை பேரைப் படுத்துகிறான். 

 

அதிலும் காலம் தாண்டி இத்தனை தூரம் வந்து தாங்கள் கஷ்டப்பட வேண்டிய நிலையும் அவனால் தானே! அவனது பேராசையினால் தானே!

 

இதில் யாழினியை அவன் மனைவி என்கிறான், உள்ளே கொதித்தது. ஒன்றும் செய்ய முடியாத இந்த இழிநிலையை அறவே வெறுத்தான். 

 

மார்த்தண்டனோ "ஆரம்பிக்கலாமா மித்ரா, இறந்த நம் மகனை மீட்டெடுப்போம் அதே உக்கிரத்துடன்" என்றவன்  மித்ரனே எதிர் பார்க்காத நேரத்தில் அவனது கரத்தில் வாளால் ஒரு கீறு போட்டு, வழிந்த அவன் உதிரத்தை தன் மார்பில் பூசிக்கொள்ள, மீண்டும் உருவாகிய மின்னல் இப்போது மார்த்தாண்டனின்  நெஞ்சை துளைத்து சக்தியைக் கூட்டியது. 

 

அவன் விழிகள் நீல நிறத்தில் மாற, அவன் மார்பில் இருந்த மித்ரனின் குருதி தன்னால் மறைந்தது. 

 

"நம் குருதியும் பலம் வாய்ந்தது பார்த்தாயா? வீணாய் நல்லவன் வேஷம் எதற்கு  மித்ரா? நீ விரும்பினால் என்னுள் இணைந்து கொள்ளலாம், என்னை நானே அழிக்க எனக்கு ஆசையா என்ன? புரிந்து கொள்ளடா உன் மேல கொள்ளைப் பிரியம் எனக்கு" என்றவன் அங்கிருந்து அகன்று பூஜை தயாராக இருந்த இடத்தை நெருங்கினான். 

 

 

மந்திரக் கட்டிலிருந்து விடுபடப் போராடிய மித்ரனோ "அவள விடு, அவளுக்கோ என் புள்ளைக்கோ ஏதாச்சும் ஆச்சு" என்று திமிறிய படியே கத்த,  மார்த்தாண்டனோ "நம் மனைவி நம் குழந்தை என்று சொல்லிப்பழகடா, பிரித்துப் பேசி என்னை வதைக்காதே, விளைவு விபரீதம் ஆகலாம்" என்று புன்னகையுடன் சொன்னவன் முகம் சாதாரணமாக இருந்தாலும் அந்தக் குரலில் ஒரு வன்மம்... 

 

 

 

அதே வன்மத்துடன் பூஜை வட்டத்தில் அமர்ந்தான். 

 

 

அடுத்து எப்போதும் போல் அவன் இரத்த துளியை எரிந்த நெருப்பில் விட,  அடுத்த சில வினாடிகளில் அவன் மனைவி மோகினியின் அருவம் தோன்றியது அங்கே! 

 

 

"வளவா, வெற்றி விரைவில்" என்றவள் முன்னே சக்தி இழந்து கிடைக்கும் தாயைக் கண்டு சிறிதும் அதிர்ச்சி என்பதையே முகத்தில் காட்டாதவள் "சக்தி அனைத்தும் எடுத்தாகி விட்டதா? இன்னும் கால தாமதம் ஏனோ?" என்றபடி எந்தப் பாதிப்பும் இல்லாமல் அவளது வலக்கரத்தை உயர்த்த,  மீதி அரை உயிராய் கிடந்த அரத்த மோகினியின் உடலோ காற்றில் உயர்ந்து அழிந்து கரும்புகை ஆனது. 

 

 

மார்த்தாண்டனும் புன்னகையுடன் "உன் வருகைக்கே காத்திருந்தேன் கண்மணி" என்று அவனது வலக்கரத்தை அருபமாய் நின்றிருந்தவளின் வயிற்றினை நோக்கி உயர்த்த, அவள் கரமும் அவள் வயிற்றினை நோக்கி நீண்டது. 

 

 

இரண்டு கரத்திலும் இருந்து தோன்றிய ஒளிக்கதிர் அவள் வயிற்றைத் துளைத்து அங்கிருந்து பெரிதாகத் தோன்றிய ஒளிக்கதிர் இப்போது முன்னே அமர்ந்திருந்த யாழினியின் வயிற்றைத் துளைத்தது.

 

 

அவளோ "அம்மாஆஆஆ" என்று குரலெடுத்து அலற, இங்கே மித்ரனோ "யாழ்ழ்ழ்" என்று அலறினான். 

 

 

 

வான்மீகியோ நிலைமை கைமீறி போனதை உணர்ந்து கண்களை மூடித் திறந்தவர் "பைரவா கண்மூடி வேடிக்கை பார்ப்பது ஏனோ?" என்று இயலாமையுடன் கேட்டார். 

 

 

அவருக்குத் தெரியுமே ஆத்ரீக வளவனின் கொடிய சக்திபற்றி, அவனைக் கருவில் அழிக்கக் காரணமே அவன் அதீத சக்தியால் உலகம் அழிவுறும் என்று தானே! ஆனால் இன்று மீண்டும் அவன் ஜனனம் நிகழவிருந்தும் தடுக்க முடியாத நிலை... 

 

 

யாழினியின் கதறல் சத்தத்துடனே, அவள் கருவில் இருந்த குழந்தை ஒளிக் கற்றை ஒன்றாக வெளியே வர,  மார்த்தாண்டன் தம்பதியினரின் முகத்தில் பேருவகை… 

 

 

அதனைப் பார்த்தபடியே யாழினி மயங்கிச் சரிய, மித்ரன் பேச்சற்று நின்றிருந்தான். 

 

 

வெளியே வந்த ஒளிகற்றையோ மார்த்தாண்டன் முன்னே வந்து நிற்க, "வருக செல்வமே வருக… ஆத்ரீகா உன் ஆட்சி பெருகட்டும், செல் ஆத்ரீகா உன் முழு ஆன்மாவை நீயாகவே அழைத்து வா, கூடவே உன் தாய்க்குத் தேவையானதையும்" என்ற  மார்த்தாண்டனின் குரலுக்குக் கட்டுப்பட்டபடி அந்த ஒளிக்கற்றை அங்கிருந்து நகர, மித்ரனின் பார்வையும் வலியுடன் அதன் பின்னே சென்றது.

 

 

 

 

இதே நேரம் கோயிலில், "உங்களுக்குத் திருமணம் நடக்கலயா?" என்று பூவிழியிடம் வினவி அவள் முறைப்பை பரிசாகப் பெற்றான் மகிழ்... 

 

 

"இல்லை உங்களப் பார்த்துட்டேன், அப்படியே அப்பாவும் இங்க இருந்தா அவங்களையும் பார்க்கலாம்னு ஒரு ஆசைல கேட்டேன்" என்றான். 

 

 

பூவிழியோ அவன் மனநிலை புரிந்து "திருமணம் இன்னும் ஆகவில்லை, இருக்கும் இடரில் அந்த எண்ணமும் வந்ததில்லை" என்றாள். 

 

 

அவனோ "ஓஓஹோ" என்றவன் அருகில் அமர்ந்திருந்த இனியாவின் கரத்தைப் பற்றி "இவதான் உங்க மருமக, உங்களுக்குப் பிடிச்சிருக்கா? எங்களோட காலத்துக்குப் போனதுக்கு அப்பறம் இவள தான் கட்டிக்கப் போறேன்" என்றான் அத்தனை மகிழ்வுடன்... 

 

 

பூவிழியும்  "மனம் நிறைந்த மகிழ்வுடன் சொல்கிறேன், நீண்ட ஆண்டுகள் அனைத்தும் பெற்று சிறப்பாய் வாழ்வீர்கள்" என்று புன்னகையுடன் ஆசி வழங்கினாள். 

 

 

இனியாவிற்கோ அவன் செய்கையில் புன்னகை தோன்றினாலும் அதனை மறைத்து, கையை உருவப் போராடிவளோ மெல்லிய குரலில் "விடுங்க மகிழ், என்ன இது? மாமாகிட்ட சொல்லிக் கொடுத்துடுவேன்" என்க, அவனும் அவள் காதருகில் குனிந்தவனோ அதே மெல்லிய குரலில் "சொல்லிக்கோ என்ன பண்ணுவாராம் உன் மாமா, உன்ன என்னவோ எல்லாம் பண்ண தோணுது சும்மா கைய மட்டும் பிடிச்சிருக்கேன்னு சந்தோஷப்படு" என்றவன் கன்சிமிட்ட, இனியாவுக்குள்ளோ ஏதோ செய்தது. 

 

 

அதனை மறைக்க அவள் தான் வெகுவாய் போராட வேண்டி இருந்தது. 

 

 

அவனோ அதனைக் கண்டுகொண்டவன் மீண்டும் "ஸ்பைசி பேபி வெளிப்படையாவே வெட்கப்படலாம் தப்பில்லை" என்க, அவன் பேச்சில் விழித்தவளோ அவனைப் பலம் கொண்டு தள்ளிவிட்டாள்... 

 

 

அதில் அட்டகாசமான புன்னகை அவனிடத்தில்... 

 

 

மீண்டும் அவள் கரத்தை அவன் பற்ற, இவள் தடுக்கவென்று நடந்த போர் இறுதியில் அவன் இனிமையானவளின் கரத்தைப் பற்றித் தன்னுள் பொத்தி வைத்த மகிழின் கரத்தினால் முற்றுப்பெற்றது. 

 

 

பூவிலும் மிருதுவாய் அவன் பிடித்திருந்த அவளது கரத்தின் மென்மை, ஆடவனை இனிய அவஸ்தைக்குள்ளாக்கியது.

 

 

பூவிழியோ இவர்களது காதலை கண்டும் காணாமல் அமர்ந்திருக்க, இனியா அவளிடம் பேச்சுக் கொடுத்தாள். 

 

 

அவ்வப்போது மகிழையும் அவன் கரத்தில் சிக்குன்றிருக்கும் தன் கரத்தையும் ஒரு பார்வை பார்த்தபடி பேசிக்கொண்டிருக்க, இருவரையும் புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தான் மகிழ். 

 

 

"அதுசரி பைரவர் நினைச்சா நொடில இந்த மார்த்தாண்டன அழிச்சிடலாமே அப்பறம் ஏன் இவ்வளவு கஷ்டம்... காலம் கடந்து எல்லாம் நடக்குறதுக்கு பதிலா அவரே எல்லாத்தையும் சரி பண்ணிடலாமே" என்று வினவினான் மகிழ்... 

 

 

 

பூவிழியோ புன்னகையுடன் "எல்லாம் காலத்தின் கட்டாயம் மகிழ்... நீயே இதனை யோசித்திருக்கும்போது நம் மூத்தாதையர்கள் யோசிக்காமல் இருப்பார்களா? அதற்கு வாய்ப்புக்கள் உண்டென்னும்போது பைரவர் கைகட்டி வேடிக்கை பார்க்க என்ன அவசியம் வந்தது" என்றாள் 

 

 

அவனோ "அப்படி என்ன காரணம்?" என்று விடாமல் வினவ, அவளோ "மார்த்தாண்டன் சக்தி பொருந்திய வீர வேந்தனை அழித்துச் சாகா வரம் பெற்றவன். அந்தச் சாகா வரத்தை அருள நிர்பந்திக்கப்பட்டவர் எம்பெருமானார் ஈசன்... அப்படி இருக்கையில் அவனை அழிக்க, ஈசனின் அவதாரமான பைரவனால் எங்கனம் முடியும், அந்த ஒரு வரம் தான் இத்தனை நாள் அவன் ஆட்டதுக்கு காரணம்" என்றாள் விளக்கமாக... 

 

 

"ஒரே ஒரு சாகா வரத்த வெச்சிக்கிட்டு என்ன ஆட்டத்தைக் காட்டுறான் அந்த மார்த்து" என்று மகிழ் கிண்டல் பேசிக்கொண்டிருக்கையில், எதிர்பாராத வெளிச்சம் ஒன்று அங்கே பரவி அடங்கியது. 

 

 

அவர்கள் என்னவென்று உணரும் முன்னரே வந்த வெளிச்சம் மறைந்திருக்க,  அதில் இனியாவை பயம் தொற்றிக்கொண்டது. 

 

 

அவளோ கண்களில் மிரட்சியுடன் "என்னாச்சு?" என்று பூவிழியிடம் வினவினாள். 

 

 

அவளோ என்னவென்று அறியாவிட்டாலும் பயம் கொண்டு கேட்கும் அவளைச் சமாதானப் படுத்த எண்ணி, "இங்கு வழமை போல் நடப்பது தான் பயம் வேண்டாம் இனியா" என்று சொன்னாலும் உள்ளே என்னவானது என்று கேள்வி பிறக்கவே செய்தது. 

 

 

பூவிழியின் சமாதான வார்த்தைக்குப் பின்னரே பயம் அகல, பிடித்து வைத்திருந்த மூச்சை வெளியிட்ட இனியாவின் முகம் நொடியில் மாற, எதிரே அமர்ந்திருந்த பூவிழி என்னவென்று கேள்வியாய் பார்த்தாள். 

 

 

இனியாவோ நொடிக்கு நொடி கூடும் வலியில் அவளது கரத்தைப் பார்க்க, அதுவோ மகிழின் கரத்தினுள் கிட்டத்தட்ட நசுங்கும் நிலையில் இருந்தது. 

 

 

அவனோ தலையைக் கவிழ்த்தபடி அமர்ந்திருந்தான். 

 

 

கரத்தை உருவ முயன்றும் முடியாமல் போக, "மகிழ், வலிக்குதுங்க... கைய விடுங்க" என்றவளது குரலுக்கும் அவன் நிமிரவில்லை அப்படியே தான் அமர்ந்திருந்தான். 

 

ஆனால் அவன் கரத்தின் அழுத்தம் மட்டும் கூடிக்கொண்டே போனது... 

 

இனியாவிற்கு ஒரு கட்டத்தின் மேல் வலி பொறுக்க முடியாமல் போக, அழவே தொடங்கி விட்டாள். 

 

பூவிழிக்கு ஏதோ தவறாகப் பட, அவளது குருவாளை உயர்த்தியபடி அவனை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க, அடுத்து அவனது உயர்த்திய அடுத்த கரத்தின் ஆட்டதுக்கு பொம்மை ஆனாள் பூவிழி... 

 

அவன் கரம் உயர்ந்திருந்த தூரத்துக்குப் பூவிழி அந்தரத்தில் பறக்க, அவளது கழுத்திலும் அழுத்தம். 

 

இரு பெண்களும் தவிப்பும் பயமுமாய் அவனையே பார்த்திருக்க, நிமிர்ந்தவனது கண்கள் சிவந்திருக்க முகமோ அக்னி சாயம் பூசி இருந்தது.

 

அவனோ கோணல் சிரிப்புடன் உயர்த்திய அவனது கரத்தை அழுத்த, அந்தரத்தில் தொங்கிய பூவிழியின்  கழுத்தில் அழுத்தம் கூடியது. 

 

அவளுக்கோ மூச்செடுக்கவே சிரமமாகிப் போக, கால்களை உதைத்து விடுபடப் போராடினாள். 

 

அந்த நேரம் கோயில் மணிகள் எல்லாம் சட்டென்று காற்றில் அசைந்தாடி  எழுப்பிய சத்தத்தில் அவன் கவனம் சிதற, அவன் பிடியும் நழுவியது. 

 

தொப்பென்று கீழே விழுந்த பூவிழி, அந்தக் கணத்தைப் பயன்படுத்தி இனியாவின் கரத்தைப் பற்றி இழுத்தவள் உள்ளே பைரவன் சிலை இருக்கும் இடத்தின் சென்று மறைந்துகொண்டாள். 

 

அவன் கவன சிதறல் எல்லாம் ஒரு நிமிடம் தான். அடுத்த நொடி அவன் பார்வையில் காற்று தன்னால் அடங்க, இயங்கி கொண்டிருந்த மணியும் சட்டென அதன் இயக்கத்தை நிறுத்தி இருந்தது. 

 

 

பெண்கள் இருவரும் அங்கே இல்லை என்பதை உணர்ந்தவன் "என்னிடமிருந்தே தப்பித்து விடுவீர்களா??? யான் ஆத்ரீக வளவன், தீய சக்தியின் பிறப்பிடம், இந்த உலகை ஆளப்பிறந்தவன்" என்று உரக்கக் கத்தியவனது வலது கரத்தை உயர்த்தி விரல்களை அவனை நோக்கி மடக்க, அவன் விரல் அசைவுக்கு இனியா தரையோடு தரையாய் இழுபட்டு அவனிடமே வந்தாள். 

 

 

 

பின்னாலேயே பூவிழியும் ஓடிவர, தன்னை நோக்கி வருபவர்களைக் கோரப்புன்னகையுடன் தான் பார்த்தான் அவன். 

 

 

 

அடுத்த சில வினாடிகளின் பின், குனிந்து தன் காலடியருகே வந்த இனியாவின் தலை முடியைப் பற்றி எழுப்பியவன் "என்னிடமிருந்து தப்பிக்க எண்ணம் கொண்டாயா? தவறு... தவறுக்கு தண்டனை என்ன தெரியுமா?" என்று ஏற்ற இரக்கங்களுடன் கேட்டவன் நிச்சயம் அரக்கன் என்றே அவள் உள்ளம் அடித்துக் கொண்டது. 

 

 

 

சற்று முன்னர் தன்னுடன் அத்தனை காதலாய் பேசியவனா அவன்?? இனியாவுக்கோ பயத்திலும் வலியிலும் கண்கள் கலங்க, கலங்கிய அவள் விழிகளையே ஆசை தீரப் பார்த்தவன் இரு கரங்களினாலும் அவளை ஏந்திக் கொண்டான். 

 

 

அவளோ "விடுங்க மகிழ் என்ன பண்றீங்க, வலிக்குதுங்க" என்று அப்போது அழுதாள் பெண்ணவள்... 

 

 

உண்மையிலேயே அத்தனை வலித்தது அவன் பிடி... தரையில் இழுபட்டு வேறு வந்ததில் உடல் வேறு வலிக்க, கண்களில் நீர் குலமாகியது. 

 

 

இதனை எல்லாம் உணர்ந்து வருந்த  அவன் ஒன்றும் மகிழ் இல்லையே! 

 

 

இப்போது இருப்பவன் தான் கொடூர மிருகமான ஆத்ரீகன் ஆகிற்றே! 

 

 

அது அவளுக்கு எங்கே புரிய, அவள் பார்வைக்கு அவன் மகிழ் தானே!... ஆனால் அவனோ கொடூரன் ஆத்ரீக வளவனின் மறுபிறவி... 

 

 

பூவிழிக்கு நிலைமை புரிய, தடுக்கும் வழி அறியாது அவள் தவித்து நின்ற நொடி அவளை ஒரு பார்வை பார்க்க, அவன் பார்வைக்கு கட்டுப்பட்டபடி அவள் உடல் தன்னால் காற்றில் மிதந்தது. 

 

 

அடுத்த நொடி அங்கிருந்து இனியாவுடன் பறந்திருந்தான் ஆத்ரீக வளவன்... 

 

 

கூடவே பூவிழியின் உடலும் பின்னால் சென்றது. 

 

 

 

 

காதலைத் தேடும்... 

 

 

இப்படிக்கு,

உங்கள் VSV-28

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  

 

 


   
ReplyQuote

You cannot copy content of this page