All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

அத்தியாயம் 1

Page 2 / 2
 

VSV 37 – செந்தணல் தாரிகையே
(@vsv37)
Eminent Member Author
Joined: 5 months ago
Posts: 34
Topic starter  

அத்தியாயம் 15

 

அன்று மீண்டும் டியூட்டியில் சேர்வதற்காகக் கிளம்பிக் கொண்டிருந்தாள் நாச்சி. அதற்கு முதல்நாள் இரவு தான் அஜய் சென்னைக்குக் கிளம்பியிருந்தான். என்னதான் அவன் மீது நேசம் துளிர்க்கவில்லை என்று சொல்லிக் கொண்டாலும் அவனைப் பிரிவது அவளுக்கு அத்தனை இயல்பானதாக இல்லை. பெயர் சொல்லத் தெரியாத உணர்வு நெஞ்சத்தை ஆக்ரமிக்க, அவனிடம் அதை வெளிப்படுத்தவும் முடியாமல் முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு தான் அவனை வழியனுப்பி வைத்தாள். அஜய் அதற்கு நேர்மாறாகக் குறுஞ்சிரிப்பை சுமந்தபடியே கிளம்ப, அதைப் பார்க்கப் பார்க்க அவளுக்கு இன்னும் அதீத கோபம் தான் வந்தது.

 

“ஹேய் வேலை இருக்குடி.. இல்லைன்னா புதுப் பொண்டாட்டியை விட்டுட்டு வேற ஊருக்குப் போக எனக்கு மட்டும் தலையெழுத்தா என்ன?” என்று அஜய் பெரிதாக விரிந்த புன்னகையுடன் கேட்க,

 

“இப்போ உன்கிட்ட இந்த எக்ஸ்ப்ளனேஷன்லாம் நான் கேட்டேனா? என்னவோ நான் உன்னைப் போக வேணாம்னு சொல்ற மாதிரி எக்ஸ்ப்ளைன் பண்ணிட்டு இருக்க” என்று உதட்டைச் சுளித்தாள் நாச்சி.

 

“நீ வாயால சொன்னாதான் எனக்குப் புரியுமா? அதான் முகத்துலயே எழுதி ஒட்டுன மாதிரி தானே சுத்திட்டு இருக்கியே.. நீ தனியா இருந்தா என்னை ஒரு வழி பண்ணிடுவ.. வா வந்து பேக் பண்ண ஹெல்ப் பண்ணு” என்று அவளையும் இழுத்துக் கொண்டவன் கிளம்பும் வரை அவளைத் தனியே விடவே இல்லை. இதோ இன்று அவளும் விடுப்பை முடித்துக் கொண்டு வேலைக்குக் கிளம்பிவிட்டாள்.

 

அஜயைப் பற்றிய நினைவுகள் குறைந்து இப்போது மீண்டும் சாஹித்யா தான் அவளது மூளையை நிறைத்திருந்தாள். வழக்கைப் பற்றிய யோசனையுடன் கீழிறங்கி வந்தவளைத் திகைப்புடன் பார்த்த சண்முகம்,

 

“தவம்” என்று சத்தமாக மனைவியை அழைக்க, உணவு மேஜையில் உணவருந்திக் கொண்டிருந்த தேவ்சரணுடன் சென்று அமர்ந்தாள் நாச்சி.

 

அடுக்களையிலிருந்து வெளியே வந்த தவமணி முதலில் மருமகள் கிளம்பியிருப்பதைப் பார்த்துவிட்டு, “டிஃபன் எடுத்து வைக்கேன்.. சாப்பிட்டுக் கிளம்பும்மா” என்று வேகமாக சாப்பாடை எடுத்து வைக்க, சண்முகம் காதில் புகை வராத குறையாக மனைவியைப் பார்த்தார்

 

“மெதுவா பண்ணுங்க அத்தை.. டைம் நிறையவே இருக்கு” என்று தவமணியிடம் நாச்சி சொல்ல, 

 

‘ஹ்ம்.. இங்க யாரு மருமவ யாரு மாமியாருனு தெரியல… மருமவளுக்கு விழுந்து விழுந்து சேவகம் பண்ணுதா பாரு அவளைச் சொல்லணும்’ என்று தவமணியைக் கரித்துக் கொட்டியபடி இருவரையும் முறைத்துப் பார்த்தார் சண்முகம்.

 

நாச்சி உணவருந்திவிட்டு தவமணியிடமும் தேவ்சரணிடமும் விடைபெற்றுவிட்டு சண்முகத்தைப் பார்க்க, அவர் வேகமாக உள்ளே சென்று விட்டார்.

 

“அவர் அப்படித்தான்மா.. ‌நீ கிளம்பு” என்ற தவமணியிடம் புன்னகைத்துவிட்டு மகனைக் கொஞ்சிவிட்டுக் கிளம்பிவிட்டாள்.

 

மருமகள் கிளம்பியதும் பேரனையும் அனுப்பி வைத்துவிட்டுக் கணவரிடம் சென்ற தவமணிக்கு அப்போதுதான் அவர் அழைத்த ஞாபகமே வந்தது.

 

‘அய்யய்யோ இதுக்கு வேற ஏசுவாரே’ என்று நினைத்தபடியே,

 

“உங்களுக்கும் சாப்பாடு எடுத்து வைக்கவா?” என்று தவமணி கேட்க,

 

“நேத்து வந்த உம்மருமவளுக்கு சாப்பாடு எடுத்து வைப்ப? எனக்கு எடுத்து வைக்க மாட்டியா?” என்று எதிர் கேள்வி கேட்டார் சண்முகம்.

 

‘நான் எப்போ எடுத்து வைக்கமாட்டேனு சொன்னேன்?’ என்று தான் பேசியதைத் திரும்ப மனதிற்குள் ஓட்டிப் பார்த்தவர் விழித்துக் கொண்டு நிற்க,

 

“என்ன அப்படியே நிக்குத? போய் சாப்பாடு எடுத்து வை” என்று முன்னே நடந்தார் சண்முகம்.

 

உணவருந்தும் போதும் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு அவர் உணவருந்த, தவமணி எதுவும் வாய் திறந்து பேசவில்லை. அவர் பேசப் போவதில்லை என்பது புரிந்து, சண்முகமே வாதத்தைத் துவக்கி வைத்தார்.

 

“கல்யாணமாகி மூனாவது நாளே வேலைக்குப் போகணுமா? இதெல்லாம் உனக்குத் தெரிஞ்சுதான் நடக்குதா? என்னை எதுவுமே கேட்காம ஆளாளுக்கு முடிவெடுத்துட்டு இருந்தீங்கனா பொறவு நான் எதுக்கு இந்த வீட்ல?” என்று அவர் கேட்டதும்,

 

“அவனும் வேலைக்குப் போய்ட்டான்.. அவன் இல்லாம மருமவ புள்ள மட்டும் வீட்ல மொட்டு மொட்டுனு உட்காரணுமா? அதுபாட்டுக்கு வேலைக்குப் போறதுல என்ன குத்தத்தைக் கண்டீங்க” என்றார் தவமணி.

 

“ஏட்டி உம்மவன் மருமவ கூடச் சேர்ந்து சேர்ந்து உனக்கும் புத்தி வேலை செய்யாம போயிடுச்சா? இப்பத்தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு. கல்யாணத்து வரமுடியாத சொந்தபந்தம் மாப்பிள்ளை பொண்ணைப் பார்க்க வர்றதும் போறதுமா இருப்பாங்க. கல்யாணம் முடிஞ்ச சுருக்குல உம்மவன் சென்னைக்குப் பொட்டியைக் கட்டிட்டான். உம்மருமவளும் காக்கி உடுப்பைப் போட்டுட்டுக் கிளம்பிட்டா வர்றவங்க உம்மூஞ்சியையும் எம்மூஞ்சியையும் பார்த்துட்டுப் போவாங்களா? இதெல்லாம் உம்புத்திக்கு உரைக்காதா?”

 

‘ம்க்கும்.. எல்லா இக்கன்னாவுக்கும் எதாச்சும் காரணம் கிடைச்சுடுது இந்த மனுசனுக்கு’ என்று மனதிற்குள் சடைத்துக் கொண்டாலும் வெளியே எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார் அவர்.

 

“கல்யாணத்துக்கு ஒரு வாரம் கூட லீவு எடுக்க முடியாதாமா? அவங்க அம்மாவும் அப்பாவும் ஒரு வாரம் லீவுனு சொன்னாங்க.. ‌ அப்போ அது பொய்யா? என்ன எல்லாம் சொல்லி வைச்சுக் கூட்டுக்களவாணித்தனம் பண்ணுதீகளா?” என்று இரைய,

 

“சும்மா சும்மா சம்பந்தி வீட்டை இழுத்துப் பேசாதீங்க.. அதுவே அந்தப் புள்ளைக்குச் சடவா போய்டும். மருமவ சும்மா ஆஃபீஸ் உத்தியோகமா பார்க்குது? போலீஸ் உத்தியோகத்துல இருந்துட்டு நினைச்ச நேரம் வீட்ல உட்கார முடியுமா? ஏதோ முக்கியமான வேலை இருக்காம்.. இல்லைனா லீவ் எடுத்திருப்பேனு சொல்லுச்சு.. போகட்டுமே இப்போ என்ன? சொந்தக்காரங்க வந்தா நான் பதில் சொல்லிக்கிறேன்” என்றார் தவமணி பட்டென்று.

 

அவருக்கு அவரது பயம். தொட்டதெற்கெல்லாம் இவர் நாச்சியின் வீட்டைக் குறைகூற, அது ஏதும் பிரச்சனையாகி மகன் சொன்ன மாதிரி வீட்டோடு மாப்பிள்ளையாகிவிட்டால் அதோடு முடிந்தது கதை. அடுத்து அவரது வாழ்க்கை வெறும் நடைபிணம் தான். தவமணியின் நினைப்பு இப்படியாக இருக்க, சண்முகமோ எல்லாரும் நாச்சியையும் அவளது குடும்பத்தையும் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுவதாக நினைத்தார்.

 

‘ஒரு சொல் சொல்ல விடுதாங்களா? பெரிய சீமையில்லாத சம்பந்தி.. அவங்களுக்காக என்னையே எடுத்தெறிஞ்சு பேசுதாளே.. இத்தனை வருசமா இல்லாத பழக்கம் இப்போ மட்டும் வருதுனா அந்தக் குடும்பம் அம்புட்டு முக்கியமா போய்ட்டா’ என்று மனதிற்குள் கருவியவர் தவமணியை எரிச்சல் குறையாமல் முறைத்துப் பார்த்தார். சண்முகத்தின் பார்வையைத் தவிர்த்தபடி கீழே குனிந்தவாறே அவர் பரிமாற, உர்ரென்று முகத்தை வைத்துக்கொண்டு உணவருந்தியவர், “இப்போ ஒன்னும் தெரியாது.. என்னைக்காவது ஒருநாள் இம்புட்டு இடம் கொடுத்துட்டோமேனு நீங்களே நினைப்பீங்களா இல்லையா பாருங்க” என்று சொன்னதோடு அடுத்து ஒரு சொல் சொல்லவில்லை.

 

தன் அறையில் அமர்ந்திருந்த நாச்சியின் முகம் கோவத்தில் ஜிவுஜிவுவென்று சிவந்திருந்தது. அவளால் நடந்ததை ஜீரணிக்கவே முடியவில்லை. தனக்கு முன்பிருந்த கோப்புகளைத் தூக்கித் தூர எறிந்தவள் கோபம் தாங்காமல் மேசையின் மீது ஓங்கிக் குத்தினாள். ‘ஷிட்’ என்று கத்தியவள் உடனே வெங்கட்ராமனுக்கு அழைத்தாள். அழைப்பு இரண்டு முறையும் எடுக்கப்படாமல் போக, நேராகச் சென்று சந்திப்பது என்று முடிவெடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டாள்.  

 

புயலை ஒத்த தோற்றத்தில் வெங்கட்ராமனின் அறைக்குள் நுழைந்தவள்,

 

“வாட் இஸ் ஹேப்பனிங் சார்? எதுக்காக சாஹித்யா கேஸை சிபிஐ-க்கு மாத்த ஒத்துக்கிட்டீங்க?” என்றாள் ஆதங்கத்துடன்.

 

“நீங்க முதல்ல உட்காருங்க மதி.. பேசுவோம்” என்ற வெங்கட்ராமனிடம்,

 

“என்ன சார் பேசப் போறீங்க? இந்த ஒரே கேஸ்ல என்மேல இருக்க நம்பிக்கை உங்களுக்குக் குறைஞ்சிடுச்சா?” என்றாள் அவள்.

 

“அப்படியில்ல மதி.. இது‌ வேற விஷயம்”

 

“என்ன சார் வேற விஷயம்? நான் இந்த கேஸை சின்சியரா டீல் பண்ணலனு நீங்க நினைக்குறீங்களா?”

 

“நான் என்ன எக்ஸ்ப்ளைன் பண்ணணும்னு நினைக்குறீங்க மதி? உங்களுக்குத் தெரியாதா என்ன நடந்திருக்கும்னு? மேலிடத்துப் ப்ரஷர்.. என்கிட்ட பண்ண முடியுமா முடியாதானு அவங்க கேட்கல.. நீங்க செஞ்சு கிழிச்சது போதும். சிபிஐ கிட்ட ஒப்படைங்கனு முகத்துக்கு நேரா சொல்றாங்க.. சரி உங்களுக்கும் இப்போ தான் உங்க பெர்சனல் லைஃப்ல முக்கியமான கட்டம். இந்தக் கேஸ் இந்த டைம்ல கழுத்தை நெறிச்சுட்டு இருக்க வேணாம். அதான் உங்களுக்கும் பெட்டரா இருக்கும்னு நினைச்சுத்தான் நானும் எதுவும் பேசாம ஷிஃப்ட் பண்ண சம்மதிச்சுட்டேன்”

 

“சார் நீங்க அகெய்ன் பேசிப் பாருங்க சார்.. நான் நிச்சயமா குற்றவாளியைக் கண்டுபிடிச்சிருவேன். எனக்குக் கொஞ்சம் டைம் மட்டும் கொடுங்க”

 

“நம்ம சைட் ரொம்ப வீக் மதி.. இன்னும் நாம முதல் ஸ்டெப்பைக் கூட டச் பண்ணல. எதை வைச்சு அவங்க கிட்ட நான் பேசமுடியும்?”

 

வெட்கட்ராமன் நிலைமையை எடுத்துக் கூற, எதுவும் செய்ய முடியாத கையறுநிலையில் கமிஷனர் அலுவலகத்திலிருந்து கிளம்பி தன்னுடைய அலுவலகத்திற்குச் சென்றாள் அவள். அங்கே அவளைப் பார்க்க சிவராமன் காத்திருந்தான். அவனுக்கு விஷயம் அதுவரை தெரிந்திருக்கவில்லை. அதனால் வழக்கு விஷயமாகத்தான் பார்க்க வந்திருந்தான்.

 

அவனைத் தன்னறைக்கு அழைத்தாள், “இனிமேல் சாஹித்யா கேஸ்ல இன்வால்வ் ஆக வேணாம் சிவராமன்” என்று அறிவுறுத்த, சிவராமன் குழப்பமாகப் பார்த்தான்.

 

“ஏன் மேம்?”

 

“கேஸ் சிபிஐக்கு சேன்ஜ் பண்ணியிருக்காங்க சிவராமன்” 

 

இதனை முகம் மாறாமல் சொல்வதற்கு அவளுக்கு அத்துணை கடினமாக இருந்தது. சிவராமனுக்கும் இது அதிர்ச்சி தான்.

 

“என்னாச்சு மேம் திடீர்னு?” என்றவனிடத்தில்,

 

“மேலிடத்து ப்ரஷர்.. பண்ணிட்டாங்க.. நீங்க மத்த கேஸைப் பாருங்க” என்று மட்டும் சொல்லிவிட்டு அவனை அனுப்பி வைத்தாள்.

 

சிவராமனிடம் எளிதாகச் சொல்லிவிட்டாலும் அவளால் அதை அப்படி எளிதாகக் கடக்க முடியவில்லை. அதற்குமேல் மனம் ஒருநிலைப்பட மறுக்க, அரைநாள் விடுப்பு எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.

 

இதே மனநிலையில் வீட்டிற்குச் செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்துக் காரை எடுத்துக்கொண்டு சுற்றித் திரிந்தவளின் கண் முன்னே ஒரு பூங்கா தெரியவும் காரை பார்க் செய்துவிட்டு உள்ளே சென்றாள். வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும்போது வந்தவள் அந்தி சாயும் நேரம் வரை அங்கேயே தான் ஒரு கற்பலகையில் அமர்ந்திருந்தாள். மெதுமெதுவாக மனம் சமன்பட ஆரம்பித்த நேரம் அவன் வந்தான்.

 

காக்கி உடையில் தொடை மீது குத்துக்கையிட்டு அமர்ந்தவாக்கில் தலை குனிந்தபடி இருந்தவள் தன் முன்னே நிழலாடவும் நிமிர்ந்து பார்த்தாள். எதிரே நின்றிருந்தவனைப் பார்த்ததும் அவளது கண்கள் பெரிதாக விரிந்தன.

 

 ‘ராம்’ என்று அவளது இதழ்கள் தானாக முணுமுணுக்க, அதற்குமேல் அவளால் எதுவும் பேச முடியவில்லை. தொண்டையில் முள் சிக்கிக்கொண்டதைப் போல அப்படியே அமர்ந்திருந்தாள். பேச வேண்டும் என்று அருகில் வந்துவிட்டானே ஒழிய அவனுக்கும் என்ன பேசுவதென்று தெரியவில்லை.  

 

பழைய நினைவுகள் தான் இருவரையும் ஆக்ரமித்திருந்தன. விபத்து ஏற்பட்ட அதிர்ச்சியிலும் அந்த நேரத்து தாழ்வுமனப்பான்மையிலும் ஏதேதோ எண்ணங்கள் அவனை நிலைதடுமாற வைக்க, அதுவே அவன் நாச்சியை இழக்க காரணமாகிவிட்டது. நாட்கள் செல்லச் செல்லத்தான் அவளை இழந்த வருத்தமும் அவன் மீதான தவறும் பூதாகரமாகத் தெரிய, இன்றுவரை அதன் தாக்கம் அவனுக்கு இருந்துகொண்டுதான் இருக்கிறது. நாச்சியின் நெற்றி வகிட்டிலிருந்த குங்குமம் அவளுக்கும் திருமணமாகிவிட்டதை உணர்த்த, நிலைமையை சாதாரணமாக்க முயற்சித்தான் அவன்.

 

ரொம்பவே முயற்சி செய்து, “எப்படி இருக்க?” என்று சாதாரண குரலில் கேட்டவனைப் பார்த்து அவளுக்குத் திகைக்கத்தான் முடிந்தது.

 

‘கொஞ்சம் கூட குற்றவுணர்ச்சி இல்லாம எப்படி இவனால என்கிட்ட வந்து பேச முடியுது?’

 

அப்படி நினைத்த போதிலும் இதழ்கள் தானாக அவனுக்கான பதிலைச் சொல்லத்தான் செய்தது.

 

“நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க?” 

 

அவளது மனதில் அவனது செயல்களுக்கான கோபம் இன்றளவும் இருந்தாலும் அவனை இழந்துவிட்டோம் என்பது மாதிரியான நினைப்பெல்லாம் அறவே இல்லை. அவளது நிகழ்காலம் அஜய். அவன் மாதிரியான கணவன் கிடைத்திருக்கையில் கையை விட்டுப் போனதை நினைத்து வருத்தப்படுவது பெரும் பிழையல்லவா?  

 

“இருக்கேன்” என்றவன் பெருமூச்சு விட்டபடி அவளைப் பார்த்தான்.

 

“சில விஷயங்களை வாழ்க்கைல நாம ரொம்ப லேட்டா தான் உணர ஆரம்பிக்கிறோம். அந்தந்த நேரத்து உணர்வுகளால பெரிய பெரிய முடிவுகளை எடுத்துட்டுக் கடைசில அந்த முடிவை மாத்தி அமைக்கவும் முடியாம செஞ்ச தப்பை சரிசெய்யவும் முடியாம ஒரு மாதிரி குற்றவுணர்ச்சியிலேயே வாழ்க்கை போகுது”

 

பொதுவாக அவன் பேச ஆரம்பிக்க, அவன் சொல்லவரும் உட்கருத்து புரிந்து நாச்சி அமைதியாக இருந்தாள்.

 

“என்ன நாச்சி எதுவுமே பேச மாட்டேங்குற?” என்று கேட்டவனைக் கண்ணோடு கண் நேராகப் பார்த்தவள்,

 

“இதுக்கு என்னை என்ன பதில் சொல்லச் சொல்றீங்க?” என்றாள் கேள்வியாக.

 

அவளது பார்வையின் தீவிரம் தாங்க முடியாமலும் அவளது கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமலும் ராம் தலைகுனிந்தான். தவறு செய்துவிட்டேன் என்று சொல்லாமல் சொல்லி தலை குனிந்து நின்றிருப்பவனைப் பார்க்கையில் நாச்சிக்கு ஒருபுறம் பாவமாகவும் இருந்தது.

 

‘எப்படி இருந்தவன்?’

 

என்ன இருந்தாலும் ஒரு காலத்தில் அவனைக் காதலித்தவள் ஆயிற்றே! ஆறுதல் சொல்ல மனம் அறிவுறித்தினாலும் இதழ்களை இறுகப் பூட்டிக் கொண்டாள் அவள்.

 

‘இதைவிட அதிகமா நான் கஷ்டப்பட்டேனே’ என்றவளுக்கு அவள் கலங்கித் தவித்த பொழுதுகள் எல்லாம் நினைவில் வர, எதுவும் பேசாமல் அப்படியே நின்றிருந்தாள்.

 

பூடகமாகப் பேசுவதை விட்டுவிட்டு, “உன்னால முடியுமானு தெரியல.. ஆனா முடிஞ்சா என்னை மன்னிச்சுடு நாச்சி” என்று ராம் நேரடியாக மன்னிப்பை யாசிக்கும் விழிகளுடன் கேட்க, 

 

அதற்குப் பதில் சொல்ல முடியாமல், “நீங்க எங்க இங்க?” என்றாள் நாச்சி பேச்சை மாற்றும் விதமாக.

 

“என் பையனுக்கு காதுகுத்து வச்சிருக்கேன்.. இங்க ஒரு சொந்தக்காரங்களுக்குப் பத்திரிகை வைக்க வந்தோம். இங்க பக்கத்துல தான் அவங்க வீடு. பையனை விளையாட விடுறதுக்காக நானும் என் மனைவியும் இங்கே கூட்டிட்டு வந்தோம்.. அவங்க ரெண்டு பேரும் இப்போதான் கிளம்புறாங்க” என்றவன், அலைபேசியில் அவனது குழந்தையின் புகைப்படத்தைக் காட்டினான். அவனை உரித்து வைத்திருந்தது குழந்தை.

 

“பேரு ஆதித்” என்றவன் முகத்தில் அத்தனை ரசனை. ஏனோ அதை அவளும் ரசித்தாள்.

 

“ரொம்ப க்யூட்டா இருக்கான்”

 

“சேட்டைக்காரனும் கூட..” என்று சொல்லி அவனது காணொளிகள் சிலவற்றைக் காட்ட, நாச்சியும் அதைப் பார்த்துப் புன்னகையோடு ஆமோதித்தாள்.

 

சிறிது நேரம் பழைய விஷயங்களை ஒதுக்கிவிட்டு அவர்களது இன்றைய வாழ்க்கையைப் பற்றி அவன் பேசினான்.

 

“நீ சென்னைல போஸ்ட்டிங்ல இருந்தது எனக்குத் தெரியும்? எப்போ இங்கே ட்ரான்ஸ்ஃபர் வாங்குன?”

 

“டூ இயர்ஸ் ஆகுது”

 

“உண்மையாவே உன்னை இந்த யூனிஃபார்ம்ல பார்க்குறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. அப்போ சொல்ல முடியல இப்போ சொல்றேன். கங்கிராட்ஸ்” என்று அவன் கை நீட்ட, சட்டென்று அவளுக்கு முகம் மாறிவிட்டது.

 

எதை வேண்டாமென்று விட்டுப் பிரிந்தானோ அதற்கு வாழ்த்துகள் சொல்கிறான். கசப்பான சிரிப்பொன்று அவளது இதழ்கடையில் முகிழ்த்தது.

 

“தேங்க்ஸ்”

 

“உன் ஹஸ்பண்ட் என்ன பண்றாங்க? அவரும் யூனிஃபார்ம் செர்வீஸ் தானா?” 

 

ராமின் கேள்வியில் அஜயின் முகம் நினைவில் வந்து போக, அவளது விழிகளில் தானாக கனிவு வந்து இதழ்களும் விரிந்தன.

 

“இல்ல.. ஐடில வொர்க் பண்றாங்க”

 

அவளது முகம் காட்டிய பாவனையில் அவனுக்கு ஆர்வம் அதிகமாக,

 

“லவ் மேரேஜா?” என்றான் ஆர்வம் வழிந்தோடும் குரலில்.

 

“அப்படியும் சொல்லலாம்.. இன்ஃபாக்ட் எங்களுக்குக் கல்யாணமாகி மூனு நாள் தான் ஆகுது”

 

“ஓஹ்.. சொல்லவே இல்ல” என்று பேச்சுவாக்கில் சொன்னவன் பின் நாக்கைக் கடித்துக் கொண்டு,

 

“நான் அவரைப் பார்க்கலாமா?” என்றான்.

 

“ஷ்யர்” என்றவள் அலைபேசியைத் திறந்து அதில் இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்றைக் காட்டினாள்.  

 

அஜயின் கைகளில் திருமாங்கல்யம் இருக்க நாச்சியிடம் ஏதோ பேசுவதைப் போலிருந்தது அந்தப் புகைப்படம். அஜயின் விழிகளில் குறும்பும் சந்தோஷமும் சரிவிகிதமாகக் கலந்திருக்க, நாச்சி புன்னகைத்தபடி அஜயைப் பார்த்தவாறு இருந்தாள். புகைப்படமாகப் பார்க்கும் போதே அது அத்தனை அழகாக இருந்தது.

 

“எக்ஸெலென்ட்.. உங்க ஜோடிப் பொருத்தம் அவ்வளவு அழகா இருக்கு” என்று ரசித்துச் சொன்னவன் அலைபேசியைத் திரும்பத் தராமல் கையில் வைத்து அதைப் பார்த்தபடியே இருந்தான்.

 

நாச்சியை இழந்துவிட்டோம் என்ற ஏக்கமும் தவறு செய்துவிட்டோம் என்ற குற்றக்குறுகுறுப்பும் அவன் மனதில் இன்றளவும் இருக்கிறது தான். ஆனால், அவளை இப்படிக் குடும்பமாகப் பார்த்ததும் அவளது சந்தோஷத்தையும் அறிந்து கொண்டவனதுக்கு இத்தனை நாளாக மனதை அழுத்திக் கொண்டிருந்த குற்றவுணர்வு கொஞ்சமாக மட்டுப்பட்டது என்றே சொல்ல வேண்டும். இப்படியாக இருவரும் பேசிக்கொண்டே வெளியே வந்துவிட்டனர்.  

 

“ஒருநாள் கண்டிப்பா வீட்டுக்கு வரணும் நீங்க ரெண்டு பேரும்.. ஃபங்கஷனுக்கே கூப்பிடணும்னு தான் ஆசை. கல்யாணமாகி மூனு நாள்ல டியூட்டில ஜாய்ன் பண்ணியிருக்கனா ஏதோ முக்கியமான கேஸ் போய்ட்டு இருக்குனு புரிஞ்சுக்க முடியுது. அதான் கூப்பிடல. நீ எப்போ ஃப்ரீயோ அப்போ வாங்க” என்று விடைபெற்றவனிடம்,

 

புன்னகையுடன் தலையசைத்து அவனை வழியனுப்பி வைத்தவள் அவளும் கிளம்பி வீட்டிற்குச் சென்றாள்.

 

வீட்டிற்குள் நுழையும்போதே ஏதோ சரியில்லாததைப் போல அவளுக்குத் தோன்றியது. முன்னடுக்கில் சண்முகம் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். அவரது முகம் வழக்கத்துக்கும் மாறாக அதீத கோபத்தில் சிவந்திருந்தது. தவமணி தலையில் கைவைத்தபடி சோபாவில் அமர்ந்திருந்தார்.

 

நாச்சி உள்ளே நுழைந்ததுமே, “எங்க போய்ட்டு வர்ற?” என்று சண்முகம் உச்சஸ்தாயியில் கத்த,

 

“எதுக்கு இப்படிச் சத்தம் போடுதீக? என்ன கேட்கனாலும் மெதுவா கேட்கத்தான” என்றபடி தவமணி வேகமாக எழுந்து வர, நாச்சி புருவச்சுளிப்புடன் சண்முகத்தைப் பார்த்தாள்.

 

“எங்கே போய்ட்டு வர்றன்னா என்ன கேட்குறீங்க மாமா? டியூட்டிக்குப் போய்ட்டு வரேன்” என்று பொறுமையாகவே அவள் பதில் சொல்ல,

 

“நேதாஜி பார்க்க எப்ப இருந்து போலீஸ் ஸ்டேசனா மாத்துனாக? அங்கேயா உனக்கு டியூட்டி போடுதாங்க?” என்று இரைந்தார் சண்முகம்.

 

காதைச் சுற்றி மூக்கைத் தொடும் கதையாக அவர் பேச வரும் சமாச்சாரம் எதுவென்று இப்போது புரிய, கூர்மையாக மாமனாரைப் பார்த்தாள் நாச்சி.

 

மருமகளின் முகமாற்றத்தைப் பார்த்துவிட்டு, “இதென்னங்க கேள்வி? அங்கே எதாவது வேலை இருக்கும்னு போயிருக்கும் மருமவ.. இதுல என்ன பிரச்சனைனு கொண்டு வந்தீங்க?” என்று தவமணி ஊடே வர,

 

“ஏட்டி கூறுகெட்டவளே.. உம்மருமவ வேலைக்குப் போவாம கண்டவனைப் பார்க்குல பார்க்கத்தான் வேலைக்குப் போறேனு போயிருக்கானு சொல்லுதேன்.. இது உனக்குப் புரியலையா?” என்றவர்,

 

“அந்தக் கருமத்த நானே என் கண்ணால பார்த்தேன். ஏதோ முக்கியமான வேலை இருக்கப்போய்தான் வேலைக்குக் கிளம்புதுனு நீ சொன்னியே.. இதான் அந்த வேலையா?” என்றார் கொதிப்புடன்.

 

சண்முகம் சொன்ன செய்தியில் தவமணி மயக்கம் வராத குறையுடன் நாச்சியைப் பார்த்தார்.

 

‘அய்யோ இந்த மனுசன் எம்புள்ளையை வீட்டோட மாப்பிள்ளையா அனுப்பி வைக்காம விடமாட்டாரு போலயே’ என்று மனதிற்குள்ளாகக் கணவனைத் திட்டியவர்,

 

“தெரிஞ்சவங்கள பார்த்தா பேசுதது ஒரு குத்தமா? என்னங்க நீங்க? எந்தக் காலத்துல இருக்கீங்க? மதியம் சாப்பிடலல அதான் பசில கண்டதை உளருதீங்க.. இருங்க உங்களுக்குச் சாப்பாடு எடுத்து வைக்கிதேன் மொத வேலையா.. நீ உள்ள போய் உடுப்பை மாத்தி செத்த கண்ணசந்துட்டு வாம்மா” என்று இருவரிடமும் பேசிக்கொண்டே தவமணி சேலையை இழுத்துச் சொருகிக்கொண்டு புறப்பட,

 

“நெசமாத்தான் உனக்கு கூறுகெட்டுப் போச்சுனு நினைக்குதேன்.. தெரிஞ்சவங்கன்னா வீட்டுக்குக் கூப்பிட்டு வராம பார்க்குல என்ன பேச்சுங்கேன் குடும்ப பிள்ளைக்கு?” என்று தவமணியையும் சேர்த்துத் திட்டினார் சண்முகம்.  

 

“தேவையில்லாம வார்த்தை விடாதீங்க.. தெரிஞ்சவங்கள எதார்த்தமா பார்த்தேன். பேசுனேன். வீட்டுக்குக் கூட்டிட்டு வந்து உபசரிக்கிற அளவுக்கு முக்கியமானவங்க இல்ல. அதான் வீட்டுக்குக் கூட்டிட்டு வரல. இதுல என்ன தப்பு?” என்றாள் நாச்சி பல்லைக் கடித்துக் கொண்டு.

 

“முக்கியமானவங்க இல்லையா? பொறவு என்ன அந்தப் பையன் கூட அம்புட்டு நேரத்துக்குப் பேச்சு? நீங்க பேசிட்டு வந்ததைப் பார்த்தா அப்படித் தெரியலயே” என்று நிறுத்த, நாச்சியின் பொறுமையைக் கடக்கும் நேரம் இதோ அதோ என்றபடி இருந்தது. சண்முகத்தின் வார்த்தைகள் தடிக்க, நாச்சியின் முகத்தைப் பார்ப்பதும் சண்முகத்தைத் தடுத்து நிறுத்த முயற்சிப்பதுமாக இருந்தார் தவமணி. அவருக்கு நெஞ்செல்லாம் பயம் அப்பிக் கொண்டது.

 

“எப்படித் தெரியல? இல்ல எப்படித் தெரிஞ்சதுனு நீங்க சொல்லுங்க.. பார்க்குற பார்வை சரியா இருந்தா பார்க்குற விஷயமும் சரியா தெரியும். இதென்ன இப்படியொரு கேவலமான மைண்ட்செட்?”

 

“என்னது கேவலமா? யாரைக் கேவலம்னு சொல்லுத? நீ பண்ணுனத விடக் கேவலத்தை நான் ஒன்னும் பண்ணிடல. வேலைக்குப் போறேனுட்டு பார்க்குல கூத்தடிச்சுட்டு வந்தது கேவலமில்ல அதை வீட்டுப் பெரிய மனுசனா கேள்வி கேட்குறது தான் கேவலமா?”

 

“இங்கே பாருங்க.. இதோட நிறுத்திக்கோங்க. கேவலமா பண்றேன்.. கூத்தடிக்கிறேன்னு என்ன வார்த்தைங்க இதெல்லாம்?. வயசுக்குத் தகுந்த பேச்சைப் பேசுங்க”

 

“என்ன பண்ணுவ? உள்ள தூக்கிப் போட்டுடுவியோ? கேவலமா பண்ணுனா கேவலமா பண்ணுதனு தான் சொல்லமுடியும். இங்க பாருமா இதுக்கெல்லாம் இந்த வீடு சரிவராது. ஒழுங்கா இருக்கதா இருந்தா இங்க இரு.. இல்லைன்னா உன் அம்மா வீட்டுக்குப் பொட்டியைக் கட்டு.. எம்பேச்சைக் கேட்காம சீமைல இல்லாத புள்ளையா பார்த்துக் கல்யாணம் பண்ணியிருக்கான் பாரு அவனைச் சொல்லணும்.. உன் யோக்கியதைக்கு யாரும் கல்யாணம் பண்ண சரினு சொல்லலனு தான உங்க வீட்லயே ரெண்டாவது புள்ளைக்குக் கல்யாணத்துக்குப் பார்த்திருக்காங்க.. நான் பெத்து வைச்ச கூறுகெட்டவனுக்கு இந்த சூட்சமம்லாம் எங்க புரியப் போகுது? தேவையில்லாம தானா போய் கிணத்துல விழுந்துட்டான்”

 

சண்முகம் பேசிக்கொண்டே போக, “போதும் நிறுத்துங்க.. இதுக்கு மேலப் பேசுனீங்க…” என்று விரல் நீட்டி எச்சரித்தவள் விறுவிறுவென்று மாடிப்படியேறி தன்னறைக்குச் சென்று பெட்டியில் தன்னுடைய துணிமணிகளையும் பொருட்களையும் எடுத்து வைத்துக் கீழே வந்தாள்.

 

கையில் பெட்டியோடு கீழே வந்த நாச்சியைப் பார்த்ததும் அதிர்ந்து போன தவமணி, வேகமாக நாச்சியின் அருகே சென்றார்.

 

“என்னம்மா இது பெட்டியெல்லாம் கட்டிட்டு வந்துட்ட? அவர் ஏதோ கோவத்துல வார்த்தையை விடுதாரு.. அவருக்குப் பதிலா நான் மன்னிப்புக் கேட்கேன்மா.. எங்கேயும் போய்டாத” என்று கண்ணீரோடு தவமணி கேட்க,

 

“அத்தை.. ப்ளீஸ் நீங்க மன்னிப்புக் கேட்டு என்னை சங்கடப்படுத்தாதீங்க.. இதுக்கு மேலே இங்க இருந்தா அது எனக்கு அசிங்கம்” என்றவள் சண்முகத்தைத் தீப்பார்வை பார்த்துவிட்டு வெளியேறிவிட்டாள்.  

 

நடந்ததை ஜீரணிக்க முடியாமல் தவமணி அப்படியே தரையில் மடிந்து அமர்ந்துவிட, நாச்சி வீட்டை விட்டுச் சென்றது சண்முகத்தை இன்னும் அதிகமாய்க் கோபப்படுத்தியது. 

 

பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சரண்தேவ் நாச்சியைத் தேடியவன் அவள் இல்லை என்றதும்,

 

“மம்மி இன்னும் வரலையா பாட்டி?” என்று தவமணியிடம் கேட்க,

 

“கோமதி பாட்டியைப் பார்க்கப் போயிருக்காங்க கண்ணா.. நாளைக்கு வந்திடுவா” என்று சமாளித்தார் அவர்.

 

“ஓஹ்.. ஓகே” என்று அவன் சாதாரணமாகச் சொல்லிவிட்டு உடைமாற்ற உள்ளே சென்றுவிட்டாலும் நாளை நாச்சி வரவில்லை என்றால் அவனை சமாளிப்பது கடினமே.  

 

அவருக்குத் தேவை விட இப்போது இந்த விஷயத்தை அஜயிடம் எவ்வாறு சொல்வதென்பது தான் சஞ்சலமாக இருந்தது. கோபமெல்லாம் கணவர் மீது திரும்ப அதையும் வெளிப்படுத்த முடியமல் தனக்குள்ளாகவே வைத்து மறுகிக் கொண்டிருந்தார் அவர்.  

 

அன்றிரவே சண்முகத்திடமிருந்து அஜய்க்குத் தகவல் பறந்தது. நாச்சி வீட்டை விட்டுக் கிளம்பிவிட்டதாக அல்ல! தவமணியை மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்திருப்பதாக!!

 

 

கருத்துக்களைப் பகிர:

 

 

https://kavichandranovels.com/community/vsv-37-செந்தணல்-தாரிகையே-comments/செந்தணல்-தாரிகையே-கருத்/paged/2/#post-1076

 

 

 

 

 

 

This post was modified 3 weeks ago by VSV 37 – செந்தணல் தாரிகையே

   
ReplyQuote
VSV 37 – செந்தணல் தாரிகையே
(@vsv37)
Eminent Member Author
Joined: 5 months ago
Posts: 34
Topic starter  

அத்தியாயம் 16

 

அஜயின் அருகில் படுத்திருந்தவளுக்குச் சற்றும் உறக்கம் வரவில்லை. அவனிடம் தெரிகின்ற மாற்றத்தில் அவள்தான் குழம்பிப் போனாள். அவள் வீட்டை விட்டு வந்து மூன்று நாட்கள் ஆகிவிட்டிருந்தன. உன் அப்பா என்னை இப்படியெல்லாம் பேசிவிட்டார் என சிறுபிள்ளை போல அஜயிடம் புகார் சொல்லப் பிடிக்கவில்லை. ஆனாலும் வீட்டை விட்டு வந்ததைத் தெரிவிக்க வேண்டுமே என்றெண்ணி அவள் அழைத்தபோது அவனை ஒருமுறை கூட அழைப்பில் பிடிக்க முடியவில்லை. ஒருமுறை அணைத்து வைத்திருப்பதாக வந்தது. ஒருமுறை தொடர்பு எல்லைக்குள் இல்லை என்று வந்தது. ஒருமுறை அழைப்பு முழுதாகச் சென்றும் எடுக்கப்படவில்லை.  

 

அவளது அழைப்பிற்கு, ‘பிஸி.. கால் யூ லேட்டர்’ என்ற குறுஞ்செய்தி மட்டும் பதில் வர, அவனே அழைக்கட்டும் என்றெண்ணி அடுத்து அவள் அழைக்கவில்லை. தவமணியோ சண்முகமோ யாரோ ஒருவர் நிச்சயம் வீட்டில் நடந்ததைச் சொல்லியிருப்பார்கள். வீட்டை விட்டு வெளியே வந்தது தெரிந்தும் எதுவும் பேசாமல் இருக்கிறானா? இல்லை உண்மையாகவே வேலை அதிகமா இருப்பதால் பேச முடியவில்லையா? இந்தக் கேள்வி மட்டுமே அவளைக் குடைந்து கொண்டிருக்க, அன்று இரவு திடீரென்று அவளது வீட்டிற்கே வந்துவிட்டான் அஜய்.

 

நாச்சி ஏதோ சண்டை போட்டுத்தான் வந்திருக்கிறாள் என்பது வரைக்கும்தான் வீட்டினருக்குத் தெரியும். விஷயம் என்ன ஏதென்று யாரிடமும் அவள் கூறவில்லை. யார் அதைப் பற்றிப் பேச வந்தாலும் அவளது பார்வையே அவர்களை அதற்குமேல் பேசவிடாமல் தடைசெய்துவிட்டது. யாரும் அங்கே அழைத்துக் கேட்க வேண்டாம் என்றும் அவள் சொல்லியிருக்க, மனது கேட்காமல் தவமணிக்கு அழைத்துவிட்டார் சங்கரகோமதி. அந்த அழைப்பும் எடுக்கப்படாமல் போக, நேராகச் சென்று என்ன ஏதென்று கேட்பதற்குத் தயங்கி அவர்கள் மறுகிக் கொண்டிருந்தபோது தான் அஜய் வீட்டிற்கு வந்தான்.

 

வீட்டிற்குள் நுழையும்போதே அவன் முகத்தில் அதீத சோர்வு தெரிய, அவனிடமும் எதுவும் பேச முடியவில்லை. அவர் கேட்கலாம் என்று நினைக்கவும் முடியாமல் நாச்சி வேறு அஜயை ஒட்டிக்கொண்டே திரிந்தாள். உணவு பரிமாறுவது கூட அவளே எடுத்து செய்ய, அஜய் எப்போதும்போல மற்றவர்களிடம் பேசிக்கொண்டே உணவருந்தினான். அவனது பேச்சில் நாச்சி வீட்டை விட்டு வந்தது பற்றி எதுவும் இல்லை. அதனால், அவனும் அதைப் பற்றி பேசுவதைத் தவிர்ப்பதாகவே தோன்ற, சங்கரகோமதி குழம்பிப் போனார். அவருக்கும் மேலே நாச்சி குழம்பிப் போனாள்.  

 

உணவை முடித்ததுமே அனைவரும் அவனை இங்கேயே தங்கச் சொல்ல, மறுக்காமல் சரி என்றவன் நாச்சியிடம் எதுவுமே கேட்காமல் இயல்பு போலவே பேச, வீட்டினருக்கு அந்த வகையில் நிம்மதியாகத்தான் இருந்தது. ஆனால், நாச்சிக்கு அவனிடம் எதுவோ சரியில்லை என்று நன்றாகவே புரிந்தது. அவள் அவர்களுக்கானத் தனிமையை எதிர்நோக்கி காத்திருந்தாள். தனிமையில் எதாவது பேசுவான் என்று எதிர்பார்க்க, அதுவும் இல்லை. படுத்ததும் கண்களை மூடிவிட்டான். அவன் உறங்கவில்லை என்பது அவளுக்கு நிச்சயம்.  

 

‘என்னாச்சு? ஏன் எதுவுமே கேட்கல? எப்போ சென்னையிலிருந்து வந்தான்? என்கிட்ட வர்றதாக ஏன் சொல்லல’ என்று யோசித்துப் புரண்டு புரண்டு படுத்தவளுக்கும் சற்றும் உறக்கம் வந்தபாடில்லை. கண்டிப்பாக விஷயம் தெரிந்திருக்கும். சண்முகம் சொல்லியிருப்பார். இருந்தும் தன்னிடம் ஏன் அதைப்பற்றி பேசவில்லை? யோசித்து யோசித்துக் குழப்பமே மிஞ்சியது. அவனையே எழுப்பிக் கேட்கலாம் என்று அவன் புறம் திரும்பி, அஜய் அவளைத்தான் பார்த்தபடி படுத்திருந்தான்.

 

நாச்சி திரும்பிப் பார்க்கவும் என்ன எனும் விதமாகப் புருவம் உயர்த்தியவன், “தூக்கம் வரலயா உனக்கு?” என்று கேட்க, 

 

“என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்க?” என்று பதில் கேள்வி கேட்டாள் அவள்.

 

“எப்படி இருக்கேன்? நான் நார்மலா தான் இருக்கேன். எதையாவது நீயா யோசிக்காம ஒழுங்கா தூங்கு”

 

“நான் வீட்டை விட்டு வந்துட்டேன். ஏன்னு நீ கேட்கவே இல்லை”

 

“அதுல கேட்க என்ன இருக்கு? அப்பா பேசுனதை அம்மா சொன்னாங்க. அவர் பேசுன பேச்சுக்கு யாரா இருந்தாலும் இந்த முடிவு தான் எடுப்பாங்க” 

 

“அப்போ ஏன் என்மேல கோவமா இருக்க மாதிரி பிஹேவ் பண்ற?”

 

“உன்மேல கோவமா? உளறாதடி”

 

“நான் ஒன்னும் உளறல. நீ நார்மலா இல்ல. அது எனக்கு நல்லாவே தெரியுது”

 

“நான் நார்மலா தான் இருக்கேன்”

 

மீண்டும் மீண்டும் அவன் வாதம் புரிய, அவனருகில் புரண்டு படுத்த நாச்சி அவனது உள்சட்டையைக் கொத்தாகப் பிடித்தாள்.

 

“நார்மலா இருந்தா இப்படித்தான் ஒன்றரை அடி கேப் விட்டு நீ தூங்குவியா?” என்று அவள் கேட்க, வெகுநேரம் கழித்து அஜயின் இதழ்கடையில் சிறு புன்னகை. 

 

“வா” என்று மட்டும் சொன்னவன் அவளை அணைத்துக் கொண்டு கண்களை மூட, அந்த அணைப்பிலும் கூட வித்தியாசத்தைத் தான் உணர்ந்தாள் நாச்சி. அவளுக்கு அது சரியாகப் படவில்லை.

 

“அஜய்”

 

“என்னாச்சு? என்மேல உனக்கு என்ன கோவம்? நான் வீட்டை விட்டு வந்தது தப்புனு நினைக்கிறியா? அப்படினா அதையாவது சொல்லு”

 

நாச்சியின் கேள்வியில் விழிகளைத் திறந்தவன் அவளைக் கூர்மையாகப் பார்த்தான்.

 

“இன்னும் வருஷம் போக நமக்கு ஒரு குழந்தை பிறக்கும்ல நாச்சி?” என்று அஜய் கேட்க, நாச்சி அவனைப் புரியாமல் பார்த்தாள்.  

 

“அவன் வளர்ந்து பெரிசானதும் உனக்கும் அப்பாவுக்கும் அல்லது உனக்கும் எனக்குமே கூட ஏதாவது மனஸ்தாபம்னு வந்து வீட்டை விட்டுப் போறதுனு நீ முடிவெடுத்தா அப்போவும் நம்ம குழந்தையை விட்டுட்டுத்தான் போவியா?” என்று அஜய் கேட்க, நாச்சி திகைத்தாள்.

 

“அ..ஜய்”

 

“கோபமில்ல வருத்தம் தான்.. ரெண்டு நாளா உன்னை எத்தனை முறை கேட்டுட்டான் தெரியுமா?” என்றவனிடம் என்ன பதில் சொல்லுவாள்? உண்மையில் அந்த நேரத்துக் கோபத்தில் தேவ் அவளது நினைவில் இல்லை என்ற உண்மையே அவளைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்ய, “சாரி அஜய்” என்றாள் வருத்தமாக. அஜய் அதற்குப் பதில் சொல்லாமல் அவளை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

 

“நீ இங்க வந்ததுலாம் சரி தான்.. தேவ் பத்தி யோசிக்கலன்றது தான் என் வருத்தம்.. அவன் நம்ம குழந்தை புரியுதா உனக்கு?”

 

“நான் இல்லைன்னு சொன்னேனா? நான் பண்ணதுக்கு எந்தக் காரணமும் சொல்லி நியாயப்படுத்த நான் விரும்பல. நிச்சயம் இனிமேல் இப்படிப் பண்ணமாட்டேன்”

 

அதுவே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. சரி என்பதைப் போல அணைப்பின் இறுக்கத்தை அதிகப்படுத்தினான் அவன்.  

 

அடுத்து அவன் பேசவில்லை என்றதும், “நாம எப்போ அங்கே போறோம்? நாளைக்கு‌ மார்னிங் கிளம்புறோமா?” என்று அவளாகவே கேட்க, மூடியிருந்த விழிகளைத் திறந்தான் அஜய்.

 

“நாம தனியா போய்டலாமா நாச்சி? நீ, நான், தேவ் மட்டும்?” என்று கேட்டவனைப் பைத்தியமா நீ என்பது போலப் பார்வை பார்த்தாள் நாச்சி.

 

“லூசா நீ? நான் சொன்னேனா உன்கிட்ட என்னைத் தனிக்குடித்தனம் கூட்டிட்டுப் போகச் சொல்லி? அத்தை பாவமில்லையா?”

 

“இல்ல அப்பா ரொம்ப பேசிட்டாரு.. ஒரே வீட்ல இருந்தா இன்னும் பேசுவாரு. அவருக்கும் உனக்கும் சரிவராது”

 

“அதே வீட்ல தான் அத்தையும் இருக்காங்க.. அவங்க என்னை அவங்களோட பொண்ணு மாதிரி பார்த்துக்கிறாங்க.. அன்னைக்கு இன்சிடென்ட்ல கூட அத்தை எனக்குத்தான் ரொம்பவே சப்போர்ட் பண்ண ட்ரை பண்ணாங்க.. உங்கப்பா யார் பேச்சைத்தான் கேட்பாரு? வாயா இல்ல விஷ டேங்க்கானு தெரியல.. பேச்செல்லாம் அவ்வளவு விஷம்” என்றவள் அன்று நடந்ததை முழுதாகக் கூறினாள்.

 

வேலையில் நடந்த பிரச்சனை, அரைநாள் விடுப்பு எடுத்து பூங்காவிற்குச் சென்றது, அங்கு ராமை சந்தித்ததுப் பேசியது, வீட்டிற்கு வந்ததும் சண்முகம் பேசியது அனைத்தையும் அவள் கூற, அஜய்க்குத் தான் சங்கடமாகிவிட்டது.

 

“என் கேரக்டர் தப்பா இருக்கதால தான் யாரும் கல்யாணம் பண்ணிக்க முன் வரலயாம்.. எங்க வீட்ல கூட அதான் ஸ்ரீக்கு முன்னாடி வரன் பார்த்தாங்களாம்.. இப்படிச் சொல்றாரு உங்கப்பா” என்றவளுக்கு அன்றைக்கு வராத அழுகை இன்று வந்தது. 

 

“ப்ச் பேசுறவங்க என்ன வேணும்னா பேசட்டும்.. உண்மை என்னனு நமக்குத் தெரியும்ல.. இதுக்கு அழுவாங்களா?” என்று அவளை சமாதானம் செய்து கண்களைத் துடைத்து விட்டவனுக்குத் தந்தை மீதான கோபம் கூடிக்கெண்டே போனது.

 

“உன் அப்பா கிட்ட இனிமேல் நான் பேசவே மாட்டேன் அஜய்.. என்னை நீ கம்பெல் பண்ணக் கூடாது”

 

“மாட்டேன்”

 

“அத்தை வருத்தப்படுவாங்களா?”

 

அடுத்துத் தவமணியைப் பற்றிக் கேட்கவும் அதற்கும் இல்லையென்று தலையசைக்க,

 

“நீ எப்போ சென்னைல இருந்து வந்த? ஏன் ரெண்டு நாளா என் ஃபோன் அட்டெண்ட் பண்ணல?” என்று கேட்டாள் நாச்சி.

 

“நீ கிளம்புன அன்னைக்கு அம்மாவுக்கு திடீர்னு மைல்ட் அட்டாக் மாதிரி வந்திருச்சு..” என்று சொல்லவும்,

 

“வாட்?” என்றபடி எழுந்து அமர்ந்தாள் நாச்சி.  

 

அஜயும் எழுந்து அமர்ந்து, “ஹாஸ்பிடல்ல ஐசியூ-ல சேர்த்திருக்கதா கால் வந்துச்சு.. அன்னைக்கு நைட்டே கிளம்பி வந்துட்டேன்.. இன்னைக்கு தான் டிஸ்சார்ஜ் பண்ணாங்க.. இப்போ ஓகே” என்று சொல்ல, அஜயை உறுத்து விழித்தாள் அவள். அவள் முகம் அப்படியொரு கோபத்தையும் அதிர்ச்சியையும் கலந்த உணர்வைக் காட்டியது.

 

“கொஞ்சமாவது அறிவுனு ஒன்னு இருக்கா உனக்கு? இதைத்தான நீ வந்ததும் சொல்லியிருக்கணும்? உடம்பு முடியாதவங்கள அங்கே விட்டுட்டு நீ ஏன் இங்க வந்த? இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு.. எனக்குக் ஏன் கால் பண்ணி நீ சொல்லல?” என்று அவனைத் திட்டித் தீர்த்தவள்,

 

“முதல்ல கிளம்பு.. நாம அங்க போவோம்” என்று கிளம்ப ஆயத்தமாக,

 

“இப்போவா? லூசு படுடி.. அம்மா இப்போ ஓகே தான். நாளைக்கு மார்னிங் கிளம்பலாம்” என்று அவளைத் தடுத்து நிறுத்தினான் அஜய்.

 

“வாட்? எப்படிடா இப்படி இருக்க நீ? நீ வேணும்னா இங்க இருந்து மாப்பிள்ளை சீராட்டு அனுபவிச்சுட்டுக் காலைல வா.. நான் கிளம்புறேன்” என்று சொல்லிக் கிளம்பியவளுக்கு மனதிற்குள் அத்தனை குற்றவுணர்ச்சி.

 

‘என்னால தான்.. நான் கொஞ்சம் அன்னைக்குப் பொறுமையா இருந்திருக்கணும்.. நான் வீட்டை விட்டுக் கிளம்பவும் தான் அவங்களுக்கு அப்படி ஆகியிருக்குமோ?’ 

 

இப்படி பல எண்ணங்கள் வரிசையாக அணிவகுக்க, அவள் கிளம்பி வெளியே வந்து விட்டாள்.

 

“ஹே சொன்னா கேளுடி.. எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க.. இப்போ வேணாம்” என்று எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் நாச்சி கிளம்பிவிட,

 

“அவங்க கிட்டலாம் சொல்ல வேணாம். நாளைக்கு மார்னிங் கால் பண்ணி சொல்லிக்கலாம்” என்றுவிட்டாள் அவள். வேறு வழியில்லாமல் அவளோடு அவனும் கிளம்ப வேண்டியதாகிற்று. பயண நேரம் முழுவதும் தன்னால்தான் என்ற குற்றவுணர்ச்சியிலேயே அவளுக்குக் கழிய, அவளது முகத்தை அவ்வப்போது பார்த்தபடியே வந்தவன்,

 

“இப்போ எதுக்கு இப்படி முகத்தை வைச்சிருக்க? உன்னாலதான்னு யாரு சொன்னது இப்போ?” என்றான்.

 

“இதை வேற யாராவது வேற சொல்லணுமா? எங்கம்மா சொல்ற மாதிரி எனக்குப் பொறுமை சுத்தமா இல்லாம போய்டுச்சு.. அன்னைக்கு நான் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா? அவங்க என்னை எப்படிப் பார்த்துக்கிட்டாங்க? ஆனா நான் அவங்கள எப்படி ஆக்கி வைச்சிருக்கேன்? அத்தையை எந்த முகத்தை வைச்சுப் பார்ப்பேன்?” என்று பேசிக்கொண்டே போனவளின் குரல் உடையத் துவங்க,

 

“உன்னால இல்ல.. என்னால தான் அப்படி ஆகிடுச்சு அவங்களுக்கு” என்றான் அஜய்.

 

“உன்னாலயா? நீ என்னடா பண்ணுன?”

 

“நம்ம கல்யாணத்துக்கு மறுநாள் உங்க வீட்டுக்குப் போய்ட்டு வந்ததுக்கு அப்பா திட்டினாருல” 

 

“ஆமா”

 

“அப்போ அம்மா வந்து நம்ம கிட்ட பேசுனப்போ இப்படியே எதாவது பிரச்சனை பண்ணிட்டே இருந்தாருனா நான் என் மாமியார் வீட்டுக்கு வீட்டோட மாப்பிள்ளையா போய்டுவேனு சொன்னேன்ல.. அது அன்னைக்கே அவங்கள ரொம்ப அஃபெக்ட் பண்ணியிருக்கு. அதை வெளில காட்டிக்காம உள்ளவே வைச்சு பயந்துட்டு இருந்திருக்காங்க.. இதுல அப்பா இப்படிப் பேசி நீ கோவப்பட்டுக் கிளம்பவும் ரொம்ப பயந்துட்டாங்க.. நானும் அவங்கள விட்டுப் போய்டுவேனு நினைச்சுப் பயந்துட்டாங்க.. அதுல தான் அட்டாக் வந்தது” 

 

அஜய் சொல்லிவிட்டு அமைதியாக, வருத்தப்படுகிறான் என்பது புரிந்து அவன் கை மீது கை வைத்து ஆறுதலாக அழுத்தினாள் நாச்சி.

 

“விளையாட்டா சொன்னதுடி அது.. நான் அவங்கள விட்டுப் போய்டுவேனு எப்படி நினைச்சாங்கனு எனக்கு சுத்தமா புரியல.. கோவமா வருது.. எப்படி நீங்க அப்படி நினைக்கலாம்னு சண்டை போடணும்னு தோனுது. ஆனா, அவங்க நிலைல இருந்து யோசிச்சா அவங்க நிலைமை புரியாம அப்படியொரு வார்த்தையை விட்டிருக்கக் கூடாதுனு என்மேலயே கோபம் வருது. அம்மா கண்டிப்பா பழைய விஷயங்களை நினைச்சுத்தான் குழம்பியிருப்பாங்க” என்றவனுக்குத் தொண்டை அடைத்தது.

 

பழைய விஷயங்கள்..! மேலோட்டமாக சில விஷயங்கள் அவளுக்குத் தெரியும். என்ன நடந்தது எப்படி என்றெல்லாம் அவளுக்குத் தெரியாது. அஜயும் சொன்னதில்லை. அவளும் கேட்டுக்கொள்ளவில்லை. மேலோட்டமாகத் தெரிந்தது கூட ஸ்ரீக்கு வந்த வரன் என்பது மாதிரி அவர்களது குடும்பத்தைப் பற்றி சங்கரகோமதி சொன்னது தான். அதைத்தாண்டி அவளுக்கு வேறேதும் தெரியாது. இப்போதும் கேட்கத் தோன்றவில்லை.  

 

“சரியாகிடும் அஜய்.. என்மேலயும் தப்பு இருக்கு.. நான் வீட்டை விட்டு வெளியே போகாம இருந்திருந்தா அவங்க ஏன் அப்படி யோசிச்சுக் குழப்பியிருக்கப் போறாங்க?”

 

“ப்ச் இல்லடி.. இந்த இஷ்யூ ஆகலனாலும் அந்தப் பயம் அவங்களுக்குள்ள இருந்துட்டே தானே இருக்கும்.. அது இதைவிட வொர்ஸ்ட் கண்டிஷன்ல போய் நிப்பாட்டியிருக்கும்”

 

“அதான் இப்போவே தெரிஞ்சுடுச்சுல.. நாம பேசிப் புரியவைக்கலாம்” 

 

நாச்சி சொன்னதற்குத் தலையசைத்தவன், “இதுல தேவை வேற சமாளிக்க முடியல.. உன்னைப் பார்க்கணும்னு அடம். வேலை விஷயமாக வெளியூர் போயிருக்கதா சொல்லி வைச்சிருக்கேன்.. அம்மாவுக்கும் உடம்பு சரியில்லாம போகவும் ரொம்ப பயந்துட்டான். வீட்ல பார்த்துக்கவும் ஆள் இல்லைனு மூனு நாளா ஸ்கூலுக்கு லீவ் தான் போட்ருக்கான்” என்றான்.

 

தன் ஒருத்தியின் முடிவால் வீட்டில் எத்தனை சங்கடங்கள்? இனிமேல் இதுமாதிரி நடந்துகொள்ளக் கூடாது. கொஞ்சம் பொறுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தனக்குத்தானே அறிவுரை கூறிக் கொண்டவள் சண்முகத்தின் வார்த்தைகளை மறக்க முயற்சித்தாள்.

 

பேசிக்கொண்டே வீட்டிற்கே வந்துவிட்டனர். அந்த நடுநிசியில் அனைவருமே உறக்கத்திலிருக்க, தன்னிடமிருக்கும் மற்றொரு சாவி கொண்டு வீட்டைத் திறந்து உள்ளே சென்றான் அஜய்.

 

“பாரு எல்லாரும் தூங்கிட்டாங்க.. இப்போ நாமளும் போய்த் தூங்கத்தான் போறோம். இதுக்குத்தான் சொன்னேன் மார்னிங் அங்க இருந்து கிளம்பலாம்னு.. காது கொடுத்துக் கேட்டா தான?” என்று அவன் சலித்துக் கொள்ள,

 

“இப்போ கூட்டிட்டு வந்ததுல உனக்கு என்ன குறைஞ்சுப் போய்டுச்சு?” என்று பதில் கேள்வி கேட்டாள் அவள்.

 

“என்ன குறைஞ்சு போச்சா? தூக்கம் போச்சுடி.. மூனு நாளா சரியா தூக்கமில்ல”

 

“அங்க மட்டும் நீ தூங்கவா செஞ்ச? சும்மா வாய் இருக்குனு எதாவது பேசாம வா” என்றபடி அவள் தங்களின் அறைக்குள் நுழைய, அவளைத் தொடர்ந்து வந்தவன் அப்படியே மெத்தையில் விழுந்தான்.

 

நாச்சி மீண்டும் இலகு உடைக்கு மாறிவிட்டு வந்து படுக்கும்போது அவன் உறங்கியிருந்தான். அப்படியொரு அயர்வு! அவனைப் பார்த்தபடியே வெகுநேரம் நின்றிருந்தவள் சத்தம் எழுப்பாமல் அவனருகில் சென்று படுத்துக் கொண்டாள். ஆனால், அந்த அசைவிற்கே அவன் விழித்துவிட, அருகில் படுத்திருந்தவளை இன்னும் அருகில் இழுத்து வளைத்துத் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டு மீண்டும் உறங்க ஆரம்பித்துவிட்டான். 

 

மறுநாள் காலை வழக்கமாக எழும் நேரத்திற்கெல்லாம் எழுந்துவிட்டவள் குளித்துவிட்டுச் சமையல் அறைக்குள் சென்றாள். தவமணியின் வேலைகளை எல்லாம் தனதாக்கிக் கொண்டு காலை உணவிற்குத் தேவையான காய்கறிகளை அரிந்தபடியே மற்றொரு அடுப்பில் பாலைக் காய்ச்சி வைத்தாள். சண்முகம் எழுந்து வந்தபோது நாச்சி காபி போட்டுக் கொண்டிருக்க, எதுவும் பேசாமல் திரும்பி அவரது அறைக்கே சென்றுவிட்டார். அவளும் அவரைக் கவனித்தாள். என்ன பேசினாலும் பதில் பேச வேண்டாம் என்று முகம் இறுக அவரது விஷச் சொற்களுக்குக் காத்திருக்க, அவர் அமைதியாகச் சென்றதில் புருவத்தை உயர்த்தியவள் பின் தோள்களைக் குலுக்கிக் கொண்டு வேலையைத் தொடர்ந்தாள்.

 

உண்மையில் தவமணிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதில் அவர் மிகவும் பயந்து போனார். அதுமட்டுமில்லாமல் அஜய் அவரிடம் முகம் கொடுத்துக்கூடப் பேசுவதில்லை. எப்படி என்று விசாரித்தவனிடம் வீட்டில் நடந்தவற்றை சுருக்கமாகக் கூறி எல்லாம் உன்‌ மனைவியால் தான் என்று அவர் கோபமாகக் கூற, அதற்கே அவன் ஆடித் தீர்த்துவிட்டான்.

 

“என்னைப் பேசுங்கப்பா.. என் பொண்டாட்டியைப் பேசுற வேலை வச்சுக்காதீங்க.. உங்க குப்பை எண்ணத்தை அவ மேல அள்ளி வீசாதீங்க.. அப்புறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்” என்று நேரடியாகவே எச்சரித்தவன் அடுத்து அவரிடம் தேவைக்குக் கூடப் பேசுவதில்லை. தவமணியும் கூட சுயநினைவு வந்ததும் சண்முகத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அஜயிடம் மட்டும் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார். அவனும் மெல்லிய குரலில் அதற்குப் பதில் பேசிக் கொண்டிருக்க, அந்தக் குடும்பத்தில் தான் இல்லையோ என்ற பயமே அவருக்கு வந்துவிட்டது. அதிலேயே ஆள் சற்று அடங்கிப் போனார். தவமணியை வீட்டிற்குக் கூட்டி வந்துவிட்ட பிறகும் கூட அன்னையும் மகனும் சேர்ந்து அவரை ஒதுக்க, சண்முகம் தவித்துப் போனார். ‌ முந்தைய தினம் நாச்சியை அஜய் பார்க்கச் சென்றது கூட தேவ் சொல்லித்தான் அவருக்குத் தெரியும்.  

 

அறைக்குச் சென்றதும், “அந்தப்புள்ள வந்துருக்கு” என்று மனைவியிடம் விரைப்பாகச் சொல்லிவிட்டு முன்னாள் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டார்.  

 

அதுவரை தன் தேவைக்குக் கூட அவரிடம் பேசாத தவமணியின் முகம் அவர் சொன்ன செய்தியில் ஒளிர, சண்முதம் அதைக் குறித்துக் கொண்டார்.

 

“நம்ம நாச்சியா?” என்று தவமணி ஆர்வமாகக் கேட்க, 

 

“ம்ம்” என்று‌ மட்டும் சொன்னார் சண்முகம். 

 

அடுத்த நொடியே படுத்திருந்த தவமணி வேகமாக எழுந்து அடுக்களையை நோக்கிச் சென்றார்.‌‌ அங்கே நாச்சி அனைவருக்கும் காபி தயாரிப்பதைப் பார்த்து அவருக்கு அப்படியொரு சந்தோஷம்!

 

“அட நீ எதுக்கும்மா இதெல்லாம் பண்ணுது? நீ விலகு நான் காபி போடுதேன்” என்று வந்தவரைத் தடுத்தவள்,

 

“பேசாம போய் ரூம்ல ரெஸ்ட் எடுங்க.. எந்த வேலையும் கொஞ்சநாள் நீங்க செய்யக் கூடாது” என்றாள் அவள் கண்டிப்புடன்.

 

“அச்சோ உனக்கு இதெல்லாம் பழக்கம் இருக்காது”

 

“அதுனால என்ன பழகிக்கலாம்.. உங்க அளவுக்கு டேஸ்ட்டா இல்லைனாலும் ஓரளவு நானும் சமைப்பேன். அதை வைச்சு மேனேஜ் பண்ணிக்கலாம்”

 

“டாக்டரே எப்பவும் போல வேலையெல்லாம் செய்யலாம்னு சொல்லிட்டாருமா”

 

“அப்போ டாக்டர் சொல்றதைத் தான் கேட்பீங்களா நீங்க? நான் சொல்றதைக் கேட்க மாட்டீங்களா?”

 

“அய்யோ அப்படியில்லம்மா”

 

“பின்ன வேற எப்படி?. கண்ட கண்ட விஷயத்தை யோசிச்சு இப்படித்தான் உடம்ப கெடுத்துப்பாங்களா?” 

 

நாச்சி கேட்டதும் தவமணி அமைதியானார்.

 

“உங்க புள்ள முதல்ல உங்கள விட்டு வருவாரா? இல்ல நான் தான் தனியா போறதுக்கு சரினு சொல்லுவேனா? அவர் ஏதோ விளையாட்டா பேசுனா அதைப் போட்டு மனசுல கண்டபடி யோசிச்சு இப்போ எங்க வந்து நின்னுருக்கு பாருங்க”

 

“சூடு கண்ட பூனைக்கு சூட்டை நினைச்சுப் பயம் இருக்கத்தானம்மா செய்யும்?”

 

“நீங்க அஜய் அண்ணன் விஷயத்துல இருந்து வெளில வாங்கத்தை.. என்ன நடந்துச்சுனு தெரியல.. ஆனா அது நமக்கு விருப்பமான விஷயம் இல்லைன்னும்போது அதையே நினைச்சுட்டு இருக்கது நம்ம நிம்மதியைத் தான் பாதிக்கும்”

 

நாச்சி சொல்ல, தவமணியும் எதையோ யோசித்தபடி தலையை ஆட்டினார்.

 

“உண்மை தான்மா.. அஜய் அண்ணன் விஷயத்துல நடந்தது தான் இந்த வீட்டையே மொத்தமா திருப்பிப் போட்டுடுச்சு” என்றவருக்குப் பழைய நினைவுகளால் கண்கள் கலங்க ஆரம்பித்தது.

 

“விட்டுடுங்கத்தை.. அதைப் பத்தி யோசிக்காதீங்க” என்றபடி நாச்சி அவரை அணைத்துக் கொள்ள,

 

“முடியலமா.. ரெண்டு பசங்க கண்ணுக்கு நிறைவா.. ஒத்தக் குறை தெரியாமத்தான் வளர்த்தோம். உங்க மாமா என்னதான் துடுக்கா பேசுனாலும் மகன் ரெண்டு பேர் மேல அம்புட்டு பாசம்.. அது எனக்கு மட்டுந்தான் தெரியும். அவனுங்க ஆசைக்கு என்னைக்கும் மறுப்பா நின்னதில்ல. போடுத உடுப்புல இருந்து படிச்ச படிப்பு வரைக்கும் அம்புட்டும் அவனுங்க நினைச்சது தான். ஆசையா இப்படி வளர்த்து இப்போ முகத்தைக் கூடப் பார்க்க முடியாம தூரமா நிக்கிதான் ஒருத்தன்.. நினைச்சாலே நெஞ்ச அழுத்துது.. அஜய் கல்யாணத்துக்குக் கூட ரொம்ப எதிர்பார்த்தோம் வருவான்னு.. மாட்டேனுட்டான்” என்றவரின் தவிப்பு நாச்சிக்குப் புரியவே செய்தது.

 

“ஏன் இப்படித் தனியா இருக்காரு? இங்க வீட்ல உள்ளவங்க மேல கோபமா எதுவும் இருக்காரா? என்னதான் பெரியவங்க மேல கோபமா இருந்தாலும் தேவ் என்ன பண்ணுனான்? அவரோட பையன் மேல கூடவா அவருக்கு கோபம்?”

 

நாச்சியின் வார்த்தைகளில் ஆற்றாமை வெளிப்பட்டது. 

 

“எங்க மேல கோபம்னு இல்லம்மா.. அவனுக்கு விதி மேல தான் கோபம். அவனுக்கு முழுக்க முழுக்க அவங்க அப்பா தான் பார்த்து முடிச்சு வைச்சாரு. லாவண்யா அந்தப் பொண்ணு பேரு.. ரொம்ப அமைதியா இருப்பா.. வீட்ல நடக்குத முதல் கல்யாணம்னு காசைக் காசுனு பார்க்காம தண்ணியா செலவு பண்ணிக் கல்யாணம் முடிச்சு வைச்சோம்.. ஆனா, அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைனே தெரியல.. அந்தப் பொண்ணு சிரிச்சே நான் பார்த்தது இல்ல.. புதுப் பொண்ணுக்கான கலையே முகத்துல இருக்காது. எப்போவும் எதையாவது யோசிச்ச மாதியே இருப்பா.. யார் கூடவும் எதுவும் பேசமாட்டா.. நான் தனியா விடாம எங்கூடவே வைக்க முயற்சி பண்ணுனேன்.. அப்போ சமயத்துல எதாவது பேச்சை வளர்த்து ஏன் இப்படி இருக்கன்னு கேட்டா உடனே முகம் மாறிடும். எப்போ கேட்டாலும் இல்லையே நான் நல்லாதான் இருக்கேன்னு பதில் வர, ஒரு கட்டத்துல நான் கேட்குறதே இல்ல.. ஆனா எனக்கு பயம் வர ஆரம்பிச்சிடுச்சு. நான் பெரியவன் கிட்ட இதைப் பத்தி பேசுனா அவனும் அதுக்கு சரியா பதில் சொல்லல”

 

“ஆறு மாசம் இப்படியே போக,தேவ் நின்னுட்டான்.. குழந்தை தங்குனதுக்கான சந்தோஷத்தைக் கூட அந்தப் பொண்ணுக் கிட்ட பார்க்க முடியல.. ஒன்பதாவது மாசம் வளைகாப்பு முடிஞ்சு அங்க கூட்டிட்டுப் போறதுக்குள்ள தேவ் பிறந்துட்டான். அப்புறம் அவங்க அம்மா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்ட்டாங்க.. நானும் நாசுக்கா அவங்க அம்மா கிட்ட பேசுதப்ப சொல்லிப் பார்த்தேன். என்னனு கேட்குததா சொன்னாங்க..‌. ஆனா அவங்க கிட்டயும் அந்தப் பொண்ணு எதையும் சொல்லல.. சரி மூனு மாசத்துக்கு ஆறு மாசமா கூட அங்க வச்சிருந்து அனுப்புங்க.. ஒருவேளை உங்களலாம் பிரிஞ்சு இருக்கதால தான் சொணங்குது போலனு நானும் சொல்லிட்டேன்.. முதல் நாளு இப்படிச் சொல்லுதேன் மறுநாளு அந்தப் புள்ள தூக்கு மாட்டிக்கிட்டதா சேதி வந்துருச்சு” 

 

இவையெல்லாம் நடந்து ஆறு வருடங்கள் கடந்து இருந்தாலும் இன்றும் அதன் கசப்பு சிறிதும் அவருக்கு மட்டுப்படவில்லை.  

 

“உங்க கிட்ட சொல்லல சரி.. அவங்கம்மா கிட்ட கூட எதுவும் அந்தப் பொண்ணு சொல்லலயா?”

 

“ம்கூம் சொல்லல.. சேதி கேட்டு நாங்களாம் அடிச்சுப் பிடிச்சு ஓடுனா அங்க அதைவிட பெரிய பூகம்பம் வெடிச்சிருச்சு.. அவங்கப்பா நேரா வந்து பெரியவன் சட்டையைப் பிடிச்சு என்னடா பண்ணுன எம்மவள? இப்படிப் பொணமா பார்க்கத்தான் கல்யாணம் பண்ணி வைச்சோமானு கேட்க, இவருக்குக் கோபம் வந்திருச்சு. ரெண்டு வீட்டுக்கும் அங்க பெரிய சண்டை ஆகிடுச்சு.. அஜய் அப்பாவும் சரிக்குச் சரியா பேச ஆரம்பிச்சுட்டாரு. சொந்தத்துல ஒருத்தரு அவ விரும்புனவனுக்கே கட்டி வைச்சிருந்தா புள்ள உயிரோடவாச்சும் இருந்திருக்குமேனு சொல்லி அழ, எங்க கட்டு ஆளுங்க ஆளாளுக்கு அதை வைச்சுப் பேச ஆரம்பிச்சுட்டாங்க. அவங்க விஷயத்தை ஊதிப் பெருசாக்க, மகன் வாழ்க்கையே இப்படி பாழாகிடுச்சேனு இவரும் அதிகமா வார்த்தைகளை விட்டுட்டாரு. அதுக்கும் மேலே போலீஸ் கேஸாகி அவங்களும் எங்கள தான் சந்தேகமா விசாரிச்சாங்க.. அப்புறம் அந்தப் பொண்ணு தனியா எழுதியே வச்சுட்டுப் போயிருந்துச்சு.. என் சாவுக்கு யாருமே காரணமில்ல. என் பையன் என் மாமியார் மாமனார் வீட்ல தான் வளரணும் அப்படினு.. அதுக்கு அப்புறம் கூட தேவை அவங்க வீட்ல தரல. கேஸ் போட்டுத்தான் வாங்குனோம்.. ரெண்டு வீட்டுக்கும் போக்குவரத்து சுத்தமா நின்னு போச்சு” 


   
ReplyQuote
VSV 37 – செந்தணல் தாரிகையே
(@vsv37)
Eminent Member Author
Joined: 5 months ago
Posts: 34
Topic starter  

“அதுல இருந்து வெளில வர்றதுக்கே ரொம்ப நாளாகிடுச்சு.. போலீஸ் கேஸ் வரைக்கும் போயிடுச்சுனு பெரியவனுக்கு ரொம்ப சங்கடம். சொந்தபந்தம்னு யாரையும் பார்க்கவே புள்ள உக்கிப் போய்ட்டான். அவன் பெத்த புள்ளையைக் கூடப் பார்த்தா பொண்டாட்டி நினைப்பு வருதுனு அவனையும் எங்க கிட்ட விட்டுட்டுத் தனியா போய்ட்டான். அப்பப்போ வந்துட்டுப் போவான்னு நாங்களும் அனுப்பி வைச்சோம். ஆனால், அவன் வருஷத்துக்கு ஒரு தடவை வர்றதே அதிசயம்”

 

“பெத்தது ரெண்டு புள்ள.. அதுல ரெண்டாவதும் தனியா போறேனு சொற்னா என்னால தாங்க முடியுமா? அப்புறம் நான் நடைபிணமா திரிய வேண்டியதுதான்” என்றவருக்குத் தொண்டை அடைத்தது.

 

“அந்த சம்மந்தம் அஜய் அப்பா முடிவு பண்ணது தான். சரியா விசாரிக்காம பார்த்துட்டாருனு பெரியவனுக்கு கொஞ்சம் சடவு வேற.. உங்க கல்யாணத்துல அஜய் அவர் கிட்ட எதுவும் கலந்துக்கல.. வேணாம்னு சொல்லியும் பண்ணுதான் அப்படினு அவருக்கு வருத்தம் தான். நாம பெரியவன் வாழ்க்கையை சரியா அமைச்சுக் கொடுக்காம போகவும் தான் சின்னவன் அவன் இஷ்டத்துக்கு ஆடுதான்னு புலம்பிட்டே இருந்தாரு. ஆனா அப்படிலாம் இல்லைன்னு எத்தனைதரம் தான் சொல்லுதது? லாவண்யா இறந்ததுல போலீஸ் கேஸ் ஆச்சுனு சொன்னேன்ல அதுல இருந்து அவருக்குப் போலீஸையும் பிடிக்காது.. லாவண்யா விஷயத்தை வைச்சு யோசிச்சு தான் அவரும் அன்னைக்கு உன்கிட்ட அப்படித் தப்பா பேசிட்டாரு.. தப்பு தான். ரொம்ப தப்பு. அவருக்குப் பதிலா நான் மன்னிப்புக் கேட்குதேன்” 

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போதே சமையலறைக்கு வந்த சண்முகம் மனைவியைப் பார்த்து, “பெரியவன் ஃபோன் பண்ணான்.. இன்னைக்கு அவன் வரானாம் உன்னைப் பார்க்க” என்றவர்,

 

“ஒரு வாரம் இங்க தான் தங்குதேனு சொல்லியிருக்கான்” என்றும் சொல்ல, தவமணிக்கு சந்தோஷத்தில் வானுக்கும் தரைக்கும் குதித்தார்.

 

கருத்துக்களைப் பகிர:

 

https://kavichandranovels.com/community/vsv-37-செந்தணல்-தாரிகையே-comments/செந்தணல்-தாரிகையே-கருத்/paged/2/#post-1076

 

 


   
ReplyQuote
VSV 37 – செந்தணல் தாரிகையே
(@vsv37)
Eminent Member Author
Joined: 5 months ago
Posts: 34
Topic starter  

அத்தியாயம் 17

 

வெகு இயல்பாக நாச்சி அவனை நோக்கிப் புன்னகை புரிந்து வரவேற்க, எதிரிலிருந்தவனுக்குத் தான் அதிர்ச்சியாக இருந்தது. அவனது அதிர்ச்சியை முன்னமே எதிர்பார்த்தவள் போல, நாச்சி புன்னகைத்தாள். அவளுக்கும் அஜயின்‌ அண்ணன்‌ யாரெனத் தெரிந்ததும் முதலில் வியப்பாகத்தானே இருந்தது.

 

“ஹலோ.. நீங்க எப்படி இங்க?” என்று அதிர்ச்சி மாறாமல் கேட்டவன் வேறு யாருமல்ல விஜயராம் கார்த்திக்கேயன் தான்!

 

“உன் தம்பி சம்சாரம் டா” என்று தவமணி அறிமுகப்படுத்தி வைக்க,

 

“அஜய் வொய்ஃப் ஏசிபி-னு யாருமே என்கிட்ட சொல்லலயே” என்று அஜயைக் கேள்வியாகப் பார்த்தான் அவன்.

 

“அதுக்கு நீ வீட்ல இருந்து கால் பண்ணுனா எடுக்கணும்.. எடுத்தாலும் இதெல்லாம் விலாவரியா பேசுற அளவுக்கு நீ டைம் தரியா?” என்று அஜய் அண்ணனை முறைக்க,

 

தவமணி பெரிய மகனிடம், “உனக்கு முன்னாடியே நாச்சியைத் தெரியுமா விஜய்?” என்றார்.

 

“ஒரு கேஸ் விஷயமா முன்னாடியே மீட் பண்ணியிருக்கேன் அத்தை.. கல்யாணம் முடிஞ்சு அஜய் பழைய ஃபோட்டோஸ் எல்லாம் காட்டிட்டு இருக்கப்போ தான் நானுமே நோட்டிஸ் பண்ணுனேன். எனக்கும் ஷாக் தான்”

 

நாச்சியின் பதிலில், “அந்தக் கேஸ் முடிஞ்சிடுச்சா?” என்று விஜய் அறிந்துகொள்ளும் ஆவலில் கேட்க, நாச்சியின் முகம் மாறியது.

 

அவளது முகமாற்றத்தில், “கான்ஃபிடென்ஷியல்னா சொல்ல வேணாம்” என்றும் அவன் சேர்த்துச் சொல்ல,

 

“வீட்டுக்குள்ள வந்து கேஸ் அது இதுனு என்ன பேச்சு? இப்போதான் வந்திருக்க.. முதல்ல சாப்பிடு வா.. தவம் சாப்பாடு எடுத்து வை” என்று மனைவியை ஏவினார் சண்முகம்.

 

விஜய்க்குப் பிடித்த பதார்த்தங்களாக செய்து ஒரு சிறிய விருந்தே உணவு மேஜையில் தயாராகியிருந்தது. தவமணியும் சண்முகமும் விஜயை விழுந்து விழுந்து உபசரித்தனர். அவரும் எல்லோரிடமும் நன்றாகப் பேசினாலும் அவனது பேச்சில் ஒரு நெருக்கத்தை நாச்சியால் உணர முடியவில்லை. தவமணியைப் பார்க்கத்தான் வந்திருப்பதாகச் சொல்லியிருந்தான். ஆனால், வந்ததும் ஒரு நலம் விசாரிப்பு அவ்வளவே! அதற்கு மேல் பதட்டமோ அல்ல வருத்தமோ அவன் முகத்தில் இல்லை. மனம் தானாக அஜயுடன் அவனை ஒப்பிட்டது. நாச்சியின் பார்வை தன்னைத் தொடர்வதை உணர்ந்த விஜய், அவளைக் கண்டுகொள்ளாமல் உணவருந்தலானான்.

 

மற்றொரு வித்தியாசத்தையும் அவள் உணர்ந்தாள். தேவ் அஜயை எப்போதும் ஒட்டுவான் என்றாலும் விஜய் வந்ததிலிருந்து இன்னும் அதிகமாக அஜயைத் தேடினான். நாச்சி வந்ததிலிருந்தே அஜயையும் தவமணியையும் விடுத்து நாச்சியின் பின்னே சுற்றிக் கொண்டிருந்தவன், இப்போது இருவரையும் விட்டுவிட்டு அஜயுடன் கைகோர்த்து சுற்றியது அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது. தனிமையில் அஜயிடம் அதைக் கேட்கவும் செய்தாள்.

 

“அவனுக்கு ஓரளவு விஷயங்கள் தெரியும்டி.. அவன் ரொம்ப ஷார்ப். எதுக்குனு தெரியலனாலும் அண்ணா அவனை அவாய்ட் பண்றாங்கனு புரிஞ்சு அவர் கிட்டவே போக மாட்டான். அவர் வர்றதே அவனுக்குப் பிடிக்காது. ஆனா சொல்ல மாட்டான். அவன் வாங்கிட்டு வர்ற விளையாட்டுப் பொருளைக் கூடத் தொடமாட்டான்” என்ற அஜயிடம்,

 

“அவர் தான் அப்பான்னு தெரியுமா அவனுக்கு?” என்றாள் நாச்சி இதைக் கேட்கலாமா இல்லை கூடாதா என்ற பாவனையில்.

 

“தெரியும்” என்று அஜய் சொல்லவும், நாச்சிக்கே சங்கடமாகிவிட்டது.  

 

‘நிராகரிப்பை ஏற்றுக்கொள்ளும் வயதா அவனுக்கு? அதிலும் பெற்றவனே ஒதுக்கும் காரணம் புரியாமல் எத்துணை வருத்தப்பட்டிருப்பான்?’ என்று அவனுக்காக இரங்கியவள் அடுத்து அவனைத் தனியே விடாமல் பார்த்துக்கொண்டாள்.

 

அன்றிரவே வீட்டினர் அனைவரும் கூடியிருக்கும்போது தவமணி, “எல்லாரும் இருக்கப்பவே குலதெய்வம் கோவிலுக்குப் போய்ட்டு வந்துடலாம்.. இல்லைன்னா ஆளாளுக்கு ஒரு பக்கமா போய்டுவீங்க” என்று ஆரம்பிக்க, சண்முகமும் அதைத்தான் யோசித்தார். விஜய் வருவதாகச் சொல்லும்போதே அவர் இதை முடிவு செய்திருந்ததார். அதனால் அவரும் சரியென்று சொல்லவே, 

 

“ம்மா உங்க ஹெல்த்தை முதல்ல பார்க்கணும்.. இப்போ என்ன அவசரம் கோவிலுக்கு? நெக்ஸ்ட் மன்த்ல ஒருநாள் போய்க்கலாம்” என்று மறுத்தான் அஜய்.

 

“எனக்கு உடம்பு நல்லாத்தான் இருக்கு. நீ சும்மா என்னை பேசண்ட்டாக்காத.. குடும்பமா ஒன்னு சேருரதே ஆடிக்கு ஒருநாள் அமாவாசைக்கு ஒருநாளுனு இருக்கு.. இதைவிட்டா அப்புறம் என்னைக்குப் போக முடியுமோ?” என்று அஜயை அடக்கியவர் அடுத்து யாரையும் மறுப்பு சொல்ல அனுமதிக்கவில்லை.

 

அஜய் அப்போதும் யோசனையுடனே இருக்க, “கார்ல போய்ட்டு கார்ல வரப் போறோம்.. அத்தையை ரொம்ப ஸ்ட்ரைன் பண்ணாம நான் பார்த்துக்கிறேன் விடு” என்றாள் நாச்சி.

 

“ஆமா.. நாச்சி பார்த்துக்கும்.. சமையலுக்கே ஏத்தி இறக்குன வேலை மட்டும்தான் நான் செஞ்சது.. மத்த எல்லாம் நாச்சி பண்ணது தான்” என்று தவமணி மருமகளைப் பெருமையாகப் பேச, 

 

‘காய்கறி நறுக்கித் தந்ததுலாம் பெரிய சோலியா பேசுதா பாரு’ என முணுமுணுத்துக் கொண்டார் சண்முகம்.

 

இப்படியாக அவர்கள் மறுநாள் குலதெய்வம் கோவிலுக்குச் செல்வது முடிவாகியிருந்தது. ஆனாலும் தனிமையில் அஜய் நாச்சியிடம் புலம்பிக் கொண்டே தான் இருந்தான்.  

 

“டாக்டர் ட்ராவல் பண்ணலாம்னு சொல்லிட்டதா தானே நீயும் சொன்ன? அங்கே போய் நமக்கென்ன வேலை? பொங்கல் வைக்கணும்னு சொன்னாங்க.. நானே வச்சிடுறேன். வேற எந்த வேலையும் அவங்கள செய்ய விடாம பார்த்துக்கிறேன். நீ ஏன் இவ்வளவு குழப்பிக்கிற?” என்று நாச்சி சமாதானம் செய்ய, அஜயின் அலைபேசி இசைத்தது. கார்த்திக் தான் அழைத்திருந்தான்.

 

“கார்த்திக் கூப்பிடுறான்” என்றவனிடம், “ஸ்ரீ சொல்லியிருப்பா” என்றாள் நாச்சி. அவளுக்குத் தலையசைத்தவன் அழைப்பை உயிர்ப்பித்துப் பேச,

 

“என்னண்ணா நீங்க? அம்மாவுக்கு உடம்பு சரியில்லைனு கிளம்பியிருக்கீங்க.. என்கிட்ட ஒருவார்த்தை சொன்னீங்களா? ஸ்ரீ சொல்லித்தான் தெரியுது” என்று எடுத்ததுமே அவன் பொரிய ஆரம்பித்தான்.

 

நாச்சியும் அஜயும் அன்று நடுநிசியில் அவளது வீட்டிலிருந்து கிளம்பியிருந்தாலும் மறுநாள் காலையே அவர்களுக்கு அழைத்துச் சொல்லியிருந்தான் அஜய். தவமணியின் உடல்நிலையைப் பற்றிச் சொல்லியதும் சங்கரகோமதி அவனிடம்,

 

“என்ன தம்பி.. இதை நீங்க நேத்தே சொல்லியிருக்க வேணாமா? நாங்களும் வந்திருப்போம்ல” என்று சடைத்தாலும் உடனே கிளம்பி வந்துவிட்டனர். ஸ்ரீயும் உடன் வந்திருந்தாள். அவள் மூலமாகத் தான் கார்த்திக்கிற்கு விஷயம் தெரியும்.

 

“டேய் டேய்.. காம் டவுன். இப்போ அம்மா ஓகே தான். திடீர்னு கால் வரவும் நான் ஆஃபீஸ்ல இருந்த மாதிரியே கிளம்ப வேண்டியதாகிடுச்சு.. அதான் உனக்குத் தெளிவா சொல்ல முடியல.. அதான் என் மச்சினிச்சி எனக்குப் பதிலா சொல்லிட்டாளே அப்புறம் என்ன?” 

 

“என்னது அவ சொன்னாளா? சண்டை போட்டா அண்ணா.. நீங்க கிளம்பி ஊருக்குப் போனதை ஏன் சொல்லலனு என்கூட சண்டை. நாச்சி அக்கா அவங்க வீட்டுக்குப் போயிருந்ததோ நீங்க ஊருக்கு வந்தது யாருக்கும் தெரியாதுனோ எனக்கு எப்படித் தெரியுமாம்?” என்று கார்த்திக் அஜயிடம் நியாயம் கேட்க,

 

“தப்பு செய்யாம திட்டு வாங்குறதுலாம் ஆண்குலத்துக்குப் புதுசாடா தம்பி?” என்று சிரித்தான் அவன்.

 

“ஸ்ரீயே இப்படினா அவங்க அக்கா ஏசிபி வேற.. உங்க நிலைமையை நினைச்சாத்தான் பாவமா இருக்கு” என்று மறுபுறம் கார்த்திக் சிரிக்க,

 

இதையெல்லாம் ஸ்பீக்கரில் கேட்டுக் கொண்டிருந்த நாச்சியின் முகத்திலும் புன்னகையின் சாயலே தெரிந்தது.

 

“ஸ்பீக்கர்ல நீ பேசுறதைக் கேட்டுட்டுத் தான் இருக்காங்க போலீஸம்மா.. அப்படியே கொஞ்சம் அளவா திட்டச் செல்லி ரெக்கமெண்ட் பண்ணிடு” என்று அஜய் சிரிக்க,

 

“ஹலோ.. ஹல்.. ஹலோ.. அண்ணா கேட்கல.. நீங்க பிஸியா இருப்பீங்க.. இங்க வந்ததும் கூட பேசிக்கலாம்.. நீங்க அங்க வேலையைப் பாருங்க” என்றவன், 

 

அஜய், “டேய்.. டேய்.. இருடா” என்று சொல்லச் சொல்ல அழைப்பைத் துண்டித்துவிட்டான்.

 

சிரித்தபடி அலைபேசியை வைத்தவன், “ஏன் போலீஸம்மா எனக்காக இந்த உலகமே பரிதாபப்படுறதைப் பார்த்தா நான்தான் அவசரப்பட்டுட்டேனோ?” என்று நாச்சியிடம் கேட்க, 

 

அவன் உதடுகளை மட்டும் தனியே இழுத்துப் பிடித்தவள், “வாய் வாய் வாய்.. இந்த வாய் மட்டும் இல்லைன்னா உன்னையெல்லாம் நாய் தூக்கிட்டுப் போயிடும்னு ஒரு பழமொழி சொல்வாங்களே அது உனக்குத்தான் பொருந்தும்” என்று கூற, அவனது கண்கள் இரண்டும் சிரித்தன.

 

“என்ன சிரிப்பு?” என்று அவள் கேட்க, அவன் ஒன்றுமில்லையென தலையசைத்தான்.

 

அவள் பிடித்திருந்த அவனது உதடுகளை விட, அமர்ந்த வாக்கிலேயே அவளது இடையைச் சுற்றிக் கைபோட்டவன் அவளை அருகே இழுத்துக் கொண்டான்.

 

“உனக்கு ஒரு டாப் சீக்ரெட் சொல்லவா போலீஸம்மா?” என்று கேட்டவனின் குரலில் இருந்த அத்தனையும் துள்ளலே!

 

“என்ன சீக்ரெட்?”

 

ஏதாவது ஏடாகூடமாக பேசி வைக்கப் போகிறான் என்று முறைத்துக் கொண்டே கேட்டவள், அவன் சொன்ன பதிலில் புன்னகைத்தாள்.

 

“என்னடி சிரிக்கிற? நிஜமாவே சொல்றேன். யூ லைக்ஸ் மீ” என்று அவன் சொல்ல, 

 

“நான் சொன்னேனா அப்படி?” என்றபடி புருவம் உயர்த்தினாள் நாச்சி.

 

“ப்ச்.. இதெல்லாம் சொல்லித் தெரியணுமா என்ன? ஐ க்னோ” என்றவன் அவளை இறுக அணைத்துக் கொண்டான்.

 

அவனின் அணைப்பிலேயே நின்றபடி, “நான் இல்லைன்னு சொன்னா?” என்று அவள் எதிர்கேள்வி கேட்க,

 

“நான் நம்பமாட்டேன்” என்றான் அவன்.

 

உண்மையில் அவளை எப்படி இவ்வளவு சரியாக அவன் கணிக்கிறான் என்பதே அவளுக்கு அத்துணை ஆச்சரியமாக இருந்தது. கூடவே நிறைவாகவும் இருக்க, நாச்சியின் கரங்கள் தானாக உயர்ந்து அவனது சிகையைக் கோத ஆரம்பித்தன.

 

“போலீஸம்மா..”

 

“ம்ம்”

 

“நான் ஒன்னு கேட்கவா?”

 

“என்ன?”

 

“ஸ்நாக்ஸ் எல்லாம் போதும். ஃபுல் மீல்ஸ் சாப்பிடணும் போல இருக்கு.. ‌ஷல் ஐ?” என்று அஜய் கேட்க, அவன் கேட்ட விதத்திற்குத் தலையில் அடித்துக் கொண்டாலும் அவனை ஏற்கத் தயங்கவில்லை அவள்.

 

அவனது நீண்டநாள் காத்திருப்பெல்லாம் கரை உடைந்த வெள்ளமாய் அவளை மூழ்கடிக்க, அவனது காதலையும் காமத்தையும் தாங்க முடியாமல் திணறிப்போனாள் நாச்சி. தடைகளாய் இருந்த உடைகளையெல்லாம் அவளது தடைகளை மீறிக் களைத்தவன் அவளை முழுதாக ஆட்கொண்டான். மென்மையும் வன்மையும் கலந்த அந்தக் கூடலில் அவளை முழுதாகப் பித்தாக்கி அவனும் பித்தனாகினான். அவனது தேவைகளைக் கூறி அவளது தேவைகளைக் கேட்டு அவன் நடத்தி முடித்திருந்த சங்கமத்தில் நாச்சி முழுதாக அவனிடம் வீழ்ந்தாள். அது கூடல் முடிந்தும் அவனை விட்டு விலகாது படுத்திருந்தவளின் செயலிலேயே தெரிய, அஜய் ரகசியமாய்ப் புன்னகைத்துக் கொண்டவன் அருகில் ஒட்டியவாறு படுத்திருந்தவளைத் தன் மீது அள்ளிப் போட்டுக் கொண்டு அவளது முகம் பார்த்தான். அந்த இருளிலும் நாச்சியின் விழிகளில் நீர் கோர்த்திருந்ததை அவனால் உணர முடிந்தது. 

 

“ஹேய் அழுறியா என்ன?” என்று அதிர்ந்து கேட்டவனுக்கு எந்தப் பதிலும் சொல்லாமல் மீண்டும் அவனது கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டாள் அவள்.

 

“ஹேய் போலீஸம்மா என்னது இது?” என்று அவளைத் தன்னிடமிருந்து பிரிக்கப் பார்த்தான் அஜய்.

 

“ப்ச் அஜய்.. என்னைக் கொஞ்சநேரம் இப்படியே விடு ப்ளீஸ்” 

 

நாச்சியின் குரல் கரகரத்து வெளிவர, “இப்படிலாம் பண்ணுனா நான் பயந்துருவேன்டி.. எதுக்கு நீ அழுற? நான் எதுவும் ஹர்ட் பண்ணிட்டேனா?” என்று கேட்டவன்,

 

“இல்லையே அப்படியெதுவும் பண்ணுன மாதிரி தெரியலயே” என்றும் சொல்ல, நாச்சி முகம் சிவக்க அவனிடமிருந்து பிரிந்து அவன் வாயிலேயே ஒரு அடி போட்டாள்.

 

“சந்தோஷத்துலலாம் உங்க ஊர்ல அழமாட்டாங்களா? கொஞ்சநேரம் இந்த மொமெண்ட்டை என்னை ஃபீல் பண்ண விடேன்டா” என்று நாச்சி சொல்லவும்தான் நிம்மதியானான் அவன்.

 

சந்தோஷம்தான்.. கொள்ளை சந்தோஷம்! அவள் வெறும் சடங்காக, வாழ்க்கையின் அடுத்த கட்டமாக மட்டுமே அவர்களுக்கான கூடலாக நினைத்திருந்தாள். அதற்கும் மேலே அவனை ஏற்றுக்கொள்வது சிரமமாக இருக்குமோ என்றெல்லாம் கூட சில சமயம் குழம்பியிருக்கிறாள். ஆனால், அவளது நினைவெல்லாம் தவறு என்பதைப் போல, அவளைக் கொண்டாடி அவளைக் கொண்டாட வைத்து அவளுடன் சங்கமித்திருந்தான் அஜய். அந்த நிறைவில் தான் அவளது கண்கள் கலங்கியிருந்தது.  

 

“அப்போ சரி.. இந்தக் கோட்டாவுக்கான ஃபீல் போதும். நெக்ஸ்ட் கோட்டா முடிச்சுட்டு மிச்சத்தையும் சேர்த்து மொத்தமா ஃபீல் பண்ணிக்கோ” என்றவன் கணவனின் வேலைகளை மீண்டும் ஆரம்பிக்க, அவனது கரங்களை இறுக்கிப் பிடித்தவள்,

 

“நாளைக்குக் கோவிலுக்குப் போக சீக்கிரம் எழுந்திரிக்கணும். பேசாம தூங்கு” என்றாள் முறைப்பாக.

 

“கார்ல போறப்போ தூங்கிக்கலாம்” என்றவனுக்கு அடுத்து மறுப்புச் சொல்லப் போனவள் வார்த்தைகள் வராமல் திக்கும்படியாக அவளது இதழ்களைச் சிறை செய்திருந்தான் அஜய்.

 

முத்தம் முத்தங்களாக மாற, முற்றுப்புள்ளியைத் தொடர்புள்ளியாக்கி கூடலெனும் கவிதைக்கு அடுத்த வரியை எழுத ஆரம்பித்தான் அஜய். நாச்சியும் விரும்பியே அவனிடம் தொலைய ஆரம்பித்தாள்.

 

—--------------

 

மறுநாள் காலை அவர்கள் திட்டமிட்டபடியே கிளம்பி இதோ மொத்த குடும்பமும் திருச்சிக்கு அவர்களது குலதெய்வக் கோவிலுக்கு வந்துவிட்டனர். நாச்சி சொன்னது மாதிரியே தவமணியை ஒரு வேலையும் செய்யவிடவில்லை. குடும்பமாக இறைவனை தரிசித்துவிட்டுப் பொங்கல் வைக்க சுள்ளியெடுக்கக் கிளம்பிய தவமணியைத் தடுத்த நாச்சி, 

 

“அத்தை நீங்க இருங்க.. நீங்க ரெண்டு பேரும் போய் சுள்ளி எடுத்துட்டு வாங்க” என்று அஜய் மற்றும் விஜயை அனுப்பிவைத்துவிட்டு, பொங்கல் வைப்பதற்கான பாத்திரங்களை விஜயின் கார் டிக்கியிலிருந்து எடுத்து வரச் சென்றாள்.

 

“நான் உங்களுக்கு ஹெல்ப் பண்றேன் மம்மி” என்ற தேவ் அவள் பின்னோடு வர, அவனைக் கட்டியணைத்துக் கொஞ்சியவள் அவனையும் கூட்டிக் கொண்டு சென்றாள்.

 

பொங்கல் பானையையும் அரிசி, வெல்லம் மற்றும் இதர பொருட்கள் இருந்த பையையும் எடுத்துக் கீழே வைத்தவள் கரண்டியைத் தேடிக் கொண்டிருக்கும் போது அவள் கண்களில் அது விழுந்தது. ஓர் இடுக்கில் மாட்டியிருந்த துணி அவளை ஈர்க்க, அதன் நிறமும் வடிவமைப்பும் அவளை அதிர்வுறச் செய்தன. சாதாரணமாகப் பார்த்தால் நிச்சயம் தெரியாது. உள்ளிடுக்கில் மாட்டியிருந்தது அது! அவள் இத்தனை தூரம் அதிர்வடையக் காரணம், அந்தத் துணி சாஹித்யா காணாமல் போன அன்று உடுத்தியிருந்த உடையின் ஒரு பகுதியைப் போலிருந்ததால் தான்! 

 

‘எப்படி?’ என்று யோசித்தவளுக்கு நா உலர்ந்து போனது. அவனிடம் சாஹித்யாவைப் பற்றி விசாரித்த போது எவ்வளவு இயல்பாகப் பதில் சொன்னான் என்பதையும் நாச்சியின் மூளை நினைவுப்படுத்த, அடுத்து செயலாற்ள முடியாமல் அப்படியே நின்றுவிட்டாள் அவள்.

 

“மம்மி வாங்க போகலாம்” என்று தேவ் அழைக்கவும்தான் சுயநினைவுக்கு வந்தவள் அவனை அழைத்துக் கெண்டு பொங்கல் வைக்கும் இடத்திற்குச் சென்றாள். விழிகள் தானாக அஜய் வந்துவிட்டானா என்று தேடியது.  

 

அவளது தேடலைக் கவனித்து, “அவன் இன்னும் வரலமா” என்ற தவமணி மேலும் பேச்சுக் கொடுக்க, நாச்சியின் கவனம் தவமணியின் மீது படியவே இல்லை. அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே அண்ணனும் தம்பியும் சுள்ளிகளை எடுத்துக் கொண்டு வந்துவிட்டனர். அடுத்துப் பொங்கல் வைக்கும் வேலை ஆரம்பமாக, நாச்சி தான் பொங்கல் வைத்தாள். அதை சாமிக்குப் படைத்து வழிபட்டவர்கள் அடுத்துத் திருநெல்வேலியை நோக்கிப் பயணமாக ஆரம்பித்தனர்.

 

வழியிலேயே மதிய உணவை முடித்துக் கொள்ளலாம் என்று முடிவாக, பெயர் சொல்லும் ஒரு உணவகத்தில் அனைவரும் இறங்கினர். எல்லோருக்கும் வேண்டியது பார்த்து ஆர்டர் செய்த அஜய், மனைவியின் முகத்தில் தெரிந்த மாற்றத்தில் குழம்பிப் போனான்.

 

யாரும் அறியாமல் அவளருகே குனிந்து, “என்னாச்சு?” என்று கேட்க, முதல் முறையாக அஜயிடம் ஒரு விஷயத்தைச் சொல்வதற்கு அவ்வளவு யோசித்தாள் நாச்சி.

 

தான் யோசிப்பது சரியா என்ற குழப்பம் மேலிட, எதிரே இருந்த விஜயைப் பார்த்தாள். அவன் முகம் நிர்மலமாக இருந்தது. குழப்பம் மேலிட மீண்டும் அஜயைப் பார்த்தாள். அவளது முகத்தைப் பார்த்துவிட்டு அஜய் புருவத்தைச் சுருக்கினான்.

 

“என்னடி ஆச்சு? சொன்னால்தான தெரியும்? அப்பா எதுவும் சொன்னாரா?” என்று கேட்க, இல்லையென்று தலையசைத்தவள் யாரும் அறியாமல் அவனது கரங்களைப் பிடித்துக் கொண்டாள். என்னவென்று தெரியாத போதும் நான் இருக்கிறேன் எனும் விதமாக அவன் அவளது கரங்களைப் பிடித்துக் கொள்ள, நாச்சியின் மனம் சிறிது சமன்பட்டது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தாள்.

 

‘இதுக்கு ஏதாவது காரணம் இருக்கலாம்.. எடுத்ததுமே நாம ஏன் தப்பா யோசிக்கணும்?’ என்று அவளது ஒரு மனம் வாதாட,

 

‘ஒருவேளை நீ யோசிக்கிறது சரியா இருந்தா?’என்று மற்றொரு மனம் கேட்டது.

 

அந்தக் குழப்பத்தின் நடுவே உணவை முடித்தவள் பயணத்தின் போதும் யாருடனும் பேசாமல் அமைதியாகவே வீடுவந்து சேர்ந்தாள். அவளது சந்தேக வட்டத்தில் மிகவும் அழுத்தமாக விஜய் பதிந்தான்.

 

கருத்துக்களைப் பகிர:

 

https://kavichandranovels.com/community/vsv-37-செந்தணல்-தாரிகையே

-comments/செந்தணல்-தாரிகையே-கருத்/#post-231

 

 

 

 

 

 

  

 


   
ReplyQuote
VSV 37 – செந்தணல் தாரிகையே
(@vsv37)
Eminent Member Author
Joined: 5 months ago
Posts: 34
Topic starter  

அத்தியாயம் 18

 

அன்றும் தேவ் தவமணியுடன் உறங்க, அந்த இரவும் அஜயின் தேடல் துவங்கியது. அவளிடம் அவனது தேடலுக்கான எந்த எதிரொலியும் இல்லாததில் அவளை விட்டுப் பிரிந்தவன் குழல்விளக்கை உயிர்ப்பித்தான். இது எதுவுமே கவனத்தில் பதியாது மறுநாள் என்ன செய்ய வேண்டும் என்பது மட்டுமே நாச்சியின் கருத்தை நிரப்பியிருந்தது.  

 

“கோம்ஸ்” என்று உலுக்கிய அஜயை வித்தியாசமாகப் பார்த்தவள் உடனே எழுந்து அமர்ந்தாள்.

 

“எதைப்பத்தி இப்படி தீவிரமா யோசிச்சிட்டு இருக்க? என்ன பிரச்சனை உனக்கு? மதியத்தில இருந்தே நீ சரியில்ல”

 

அவன் நேரடியாக விஷயத்திற்கு வர, அவளது விழிகள் அப்பட்டமான தவிப்பைக் காட்டியது.  

 

அவளது சந்தேகத்தை எப்படி அவனிடம் சொல்வது? ஒருவேளை அவளது சந்தேகமே தவறு என்றாகும்போது அஜய் என்ன நினைப்பான்? இல்லை அவளது சந்தேகம் உண்மையென்றாகிவிட்டால் அவன் எப்படி நம்மை எதிர்கொள்வான்? அதிலும் குடும்பமே விஜயின் வரவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் நாம் நாளை எடுக்கவிருக்கும் முடிவு எப்படிப்பட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும்? தவமணியின் உடல்நிலை வேறு அவளைப் பெரிதும் சங்கடம் கொள்ளச் செய்தது. மகனைப் பிரிந்து இருப்பதையே தாங்க முடியாத ஒருவரிடம் அவரது மகனைப் பற்றிய சந்தேகத்தை எப்படிக் கூறுவது? அது இன்னும் அவரது உடல்நிலையை மோசமாக்கி விடுமோ என்றெல்லாம் அஞ்சிக் கொண்டிருந்தாள் அவள்.

 

மனைவியின் முகத்தில் தெரிந்த பயம் கலந்த தவிப்பில் அவளை இழுத்து அணைத்துக் கொண்டவன், “என்னடி ஆச்சு? ஏன் இப்படித் தவிச்சுப் போய் உட்கார்ந்திருக்க? என்கிட்ட சொல்றதுல என்ன பிரச்சனை?” என்றதும், அதுவரை கட்டுக்குள் இருந்த நாச்சியின் கண்ணீர் சூடாக அவனது நெஞ்சத்தை நனைத்தது.

 

“அஜய்..” என்றவளுக்கு அடுத்துப் பேச்சே வரவில்லை.

 

“எதுவா இருந்தாலும் தைரியமா ஃபேஸ் பண்ணுவ.. நீயா இப்படி உடைஞ்சு போய் அழுதுட்டு இருக்க?” என்றவனிடம் கைகளை நீட்டினாள் அவள்.

 

என்ன ஏதென்று கேட்காமல் உடனே அவளது கைகளைப் பற்றியவன், “நான் இருக்கேன்டி” என்றும் சேர்த்துச் சொல்ல, அவனை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள் அவள். வேறெதுவும் பேசவில்லை.  

 

நாச்சி அந்த இரவு முழுவதும் அவனை விட்டுக் கொஞ்சமும் அகலவில்லை. எதையோ சொல்ல முடியாமல் தவிக்கிறாள் என்பது மட்டும் புரிய, அஜய்க்கும் அந்த இரவில் சற்றும் உறக்கமில்லை. என்ன ஏதென்று புரியாமல் அவனுக்குமே பெரும் குழப்பமாக இருந்தது.  

 

இரவென்று ஒன்று இருந்தால் விடியல் இருக்கத்தானே செய்யும்? மறுநாளும் விடிய, அந்த விடியலில் நாச்சி முற்றிலுமாக அவளது இயல்புக்குத் திரும்பியிருந்தாள். வழக்கமான நேரத்திற்கு முன்னதாகவே காக்கி உடையை அணிந்துக் கிளம்பிவிட்டாள். அவள் கிளம்பும் வரையில் அஜய் அவளையே தான் பார்த்தபடி படுத்திருந்தான். எதற்காக நேற்றிரவு அந்த அளவிற்கு மறுகினாள் என்பது இன்னுமே அவனுக்குப் புதிராக இருந்தது. அதற்கு நேர்மாறாக, அந்த மறுகலின் எச்சம் கூட இன்று அவளது முகத்தில் இல்லை. காக்கி உடையில் கம்பீரமாக அங்கும் இங்கும் வளைய வந்தவளைக் கூர்மையாக அளவிட்டபடி படுத்திருந்தான் அவன். அவனது பார்வை புரிந்தும் அவனைப் பார்க்காமல் அவள் தவிர்த்தது கண்டு யோசனையுடன் படுத்திருந்தான் அவன். அவனது உள்மனம் எதுவோ சரியில்லை என்று அறிவுறித்தியதில் இதுவரை அவன் அனுபவித்திராத ஒரு உணர்வு அவனது நெஞ்சைப் பிசைய ஆரம்பித்தது.  

 

கிளம்பிவிட்டு அவனைப் பார்த்தவள் அவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் வேறுபக்கம் திரும்பிக் கொண்டாள். அவனை நேர்கொண்டு பார்ப்பதைத் தவிர்த்தவள் உடையை சரிசெய்வது போலக் குனிந்தவாறே அவனிடமிருந்து விடைபெற்று வெளியேறியும் வந்துவிட்டாள். நாச்சி கிளம்பி வந்ததும்,

 

“என்னம்மா இன்னைக்கு சீக்கிரமே கிளம்பிட்ட?” என்ற தவமணி அவளுக்கு உணவை எடுத்து வைக்க விரைய, 

 

“அத்தை இதெல்லாம் நானே பார்த்துப்பேனு உங்களுக்கு எத்தனை டைம் சொல்றது?” என்று கடிந்தவள் தனக்கான உணவைத் தானே எடுத்துக் கொண்டு அமர்ந்தாள்.

 

அஜயும் உடைமாற்றி வெளியே வர, அவனுக்குத் தவமணி உணவை எடுத்து வைத்தார். உணவருந்தும் போது மனது கேட்காமல்,

 

“என்கிட்ட எதாவது சொல்லணுமாடி?” என்று அஜய் கேட்க, உணவருந்திக் கொண்டிருந்தவளுக்குப் புரையேறியது.

 

‘பார்த்து’ என்றபடி அவளது தலையைத் தட்டிவிட்டவன் தண்ணீரை அவள் பக்கமாக நகர்த்த, தண்ணீரைக் குடித்தவள் அஜயைப் பார்த்தாள்.  

 

“நீ ஏதோ டிஸ்டர்ப்டா இருக்க மாதிரி இருக்கு.. என்னன்னு சொல்லவும் மாட்டேங்குற.. நான் என்னன்னு நினைக்கிறது?” என்று கேட்டவனிடம்,

 

“வேறொரு கேஸ் டென்ஷன்” என்று மட்டும் சமாளித்தவள் அதற்குமேல் எதையும் கூறாது கிளம்பிவிட்டாள். அன்றைய நாளின் அஜயின் அழைப்புகள் நிராகரிக்கப்பட்டன.  

 

சாஹித்யாவின் வழக்கில் நூலின் எந்த முனையும் இதுவரை இல்லாமல் இருந்தது. இப்போது விஜய் சந்தேக வட்டத்திற்குள் வர, அவனிலிருந்து அந்த வழக்கை ஆராய ஆரம்பித்துவிட்டாள் நாச்சி. தன் சந்தேகத்தைக் கமிஷனரிடம் கூறியவள் விஜயின் வீட்டை ஆய்வு செய்தால் ஏதேனும் தடயம் கிடைக்கலாம் என்றும் கூற,

 

“சர்ச் வாரண்ட் வாங்கிட்டு ப்ரொசீட் பண்ணுங்க மதி” என்றார் அவர்.

 

“அதுக்கெல்லாம் இப்போ நேரமில்லை சார். எமர்ஜென்ஸி கேஸ்னு சொல்லி நான் ப்ரொசீட் பண்றேன்” என்றவள் அடுத்து நிற்கவும் நேரமில்லாமல் அந்த வழக்கில் தன்னை நுழைத்துக் கொண்டாள். சிவராமனும் அவளோடு சேர்ந்து கொண்டான்.

 

கைரேகை நிபுணர்களின் உதவியுடன் விஜயின் வீட்டையே புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தாள் நாச்சி. பழைய பொருட்களையெல்லாம் போட்டு வைத்திருந்த ஓர்‌ அறையில் தேடியபோது அவர்களுக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது.  

 

“மேம்” என்று அழைத்தவனின் அருகில் நாச்சி வேகமாக செல்ல, அவன் சுட்டிக் காட்டியதைப் பார்த்தவள்,

 

“எடுத்து டெஸ்ட்டுக்குக் கொடுங்க க்விக்” என்றுவிட்டு வேறேதும் தென்படுகிறதா என்று தேடினாள்.  

 

சிவராமன் மருந்து மாதிரியான ஒரு பாட்டிலை கையில் எடுத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அவனருகில் வந்தவள் அதை வாங்கித் தானும் பார்த்தாள். Propofol என்று எழுதியிருந்தது. அதைக் கூகிளில் தேட, அவளுக்கு நா உலர்ந்தது.

 

சாஹித்யா எவ்வாறு இறந்திருப்பாள் என்பதெல்லாம் ஒரு ஊகமாக அவளுக்குக் கண் முன்னே விரிந்தது. ஊகமே அவளை அதீதமாகப் பயப்படுத்த, நெஞ்சுக்கூடு காலியான உணர்வு! எதையும் வெளிக்காட்டாமல் இரும்பை ஒத்தவளாக நின்றவள் அந்த மருந்தையும் சாட்சியமாக எடுத்துக் கொண்டாள். இதற்கு மேல் வேறென்ன வேண்டும் என்று நினைத்தவள், சர்ச் வாரண்ட்டிற்குப் பதிலாக அரெஸ்ட் வாரண்ட்டை வாங்கிக் கொண்டு சிவராமனுடன் தன் வீட்டை நோக்கிப் புறப்பட்டாள்.  

 

‘எவ்வளவு பெரிய தப்பை செஞ்சுட்டுக் கொஞ்சமும் மனசாட்சி இல்லாம குடும்பத்தோட வந்து குலாவிட்டு இருக்கான்?’ என்று எண்ணும்போதே அவளுக்கு அத்தனை ஆத்திரமாக வந்தது. அதே ஆத்திரத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவள் அங்கிருந்த யாரையும் பார்க்கவில்லை.  

 

“அரெஸ்ட் ஹிம்” என்று விஜயை நோக்கிக் கைகாட்ட, விஜய் அதிர்ந்து எழுந்தான்.

 

சண்முகமும் தவமணியும் கூட எதுவும் புரியாமல் எழுந்து நிற்க, நாச்சி நின்றிருந்த தோற்றத்தில் அஜயின் உள்ளம் பதைபதைக்க ஆரம்பித்தது.  

 

“என்ன நாச்சி சொல்லுத? அரெஸ்ட்டா எதுக்கு?” என்று தவமணி குரலை உயர்த்தவும் தவமணியைத் திரும்பிப் பார்த்தவள் நிச்சயம் அஜயின் மனைவியாக அந்த வீட்டில் வளைய வந்தவள் இல்லை.

 

“என்ன சொல்றேனு உங்களுக்குப் புரியாது. இவனுக்கு நல்லாவே புரியும்” என்றவள் விஜயை நோக்கிச் சென்றாள்.  

 

“வாட்? எனக்குப் புரியுமா? என்ன புரியும்னு சொல்றீங்க? எனக்கு எதுவும் புரியல. நீங்க எதோ மிஸ்அண்டர்ஸ்டாண்ட் பண்ணியிருக்கீங்கனு நினைக்கிறேன்” என்று விஜய் அப்போதும் தைரியமாகக் கூற, அவனது காதில் ‘ங்ங்ஙொய்ய்ய்’ என்ற சத்தம் கேட்டது.

 

அவள் இப்படி அடிப்பாள் என்று எதிர்பாராதவன் அவளது ஒரு அடிக்கே தடுமாறி கீழே விழுந்துவிட, 

 

“ஏய் என்ன காரியம் செய்யுத? யார் மேல கை வைச்ச? உனக்கு அவ்வளவு ஆகிடுச்சா?” என்றபடி சண்முகம் அவளை அடிக்கப் போக, அஜய் வேகமாக வந்து தந்தையின் கையைப் பிடித்தான்.

 

“ப்பா.. இருங்க பேசுவோம்” என்று சொன்ன சின்ன மகனை அசூயையாகப் பார்த்தார் சண்முகம்.

 

“விடுலே நீ.. இப்பவும் உன் பொஞ்சாதி பின்ன தான் இருக்கியா நீ? உன் அண்ணனை கை நீட்டி அடிச்சிருக்கா.. அவளை அடிக்கப் பாயாம என்னைத்தான தடுக்கப் பார்க்குத.. இப்படியுமாடா பொண்டாட்டி முந்தானைல சுருண்டு கிடக்க.. ச்சீ” என்று அவனையும் ஏசியவர், அவனை உதறித் தள்ளிவிட்டு மீண்டும் நாச்சியை அடிக்கப் பாய, இப்போது சிவராமன் முன்னே வந்து சண்முகத்தின் ஓங்கிய கரங்களைப் பிடித்துக் கொண்டான்.

 

தவமணி நடப்பது புரியாமல் அழுகையில் கரைய, அவள் மனதைக் கல்லாக்கிக் கொண்டு மாமியாரைப் பார்ப்பதைத் தவிர்த்தாள்.

 

“சிவராமன் அவர் கையை விடுங்க” என்று சிவராமனுக்குக் கட்டளையிட்டவள் அவர் முன் வந்து நின்றாள்.

 

“இப்போ உங்க முன்னாடி நிக்கிறது உங்க வீட்டு மருமகள் இல்ல. கண்டபடி பேசுறதும் கையை ஓங்குறதும் கூடவே கூடாது. யாருக்காக என்னைக் கையோங்க வர்றீங்க? இதோ இவனுக்காகவா?” என்று கீழே வீழ்ந்து கிடந்தவனைப் பார்த்தவள் முகத்தில் இரத்தம் பாயத் திரும்பி சண்முகத்தைப் பார்த்தாள்.

 

அவளது அந்த ஆக்ரோஷமும் பார்வையும் அஜயைத் தானாகக் கூனிக் குறுகச் செய்தது. நிச்சயம் விஜய் ஏதோ பெரிய விஷயத்தைச் செய்திருக்கிறான் என்பது புரிய தடதடக்கும் இதயத்துடன் அவளைப் பார்த்தவாறு இருந்தான்.  

 

“கொலை பண்ணிருக்கான் உங்க புள்ள.. சாதாரணமா இல்ல.. ஒரு பொண்ணை ரேப் பண்ணிக் கொலை பண்ணியிருக்கான்” என்று கூற, அங்கிருந்த அனைவருக்குமே உச்சகட்ட அதிர்ச்சி.

 

“இல்ல.. இல்லப்பா.. பொய் சொல்றா இவ” என்று விஜய் வேகமாக மறுக்க,

 

அதிர்ச்சியிலிருந்து வெளிவந்த சண்முகம், “இல்ல.. எம்மவன் அப்படிலாம் பண்ணுதவன் கிடையாது. நீ சொல்லிட்டா நாங்க நம்பணுமா? நீயில்ல அந்தக் கடவுளே சொன்னாலும் நான் நம்பமாட்டேன்“ என்று‌ மறுத்தார்.

 

“அது உங்க விருப்பம். இப்போ இவனை அரெஸ்ட் பண்ண அரெஜ்ட் வாரெண்ட் வாங்கியிருக்கோம். உங்க பையன் தப்பு பண்ணானா இல்லையா? இதெல்லாம் கோர்ட்ல பார்த்துக்கோங்க” என்றவள் விஜயை அடித்து இழுத்துச் செல்லாத குறையாக அழைத்துச் சென்றாள்.  

 

போகும் போது அவளையும் அறியாமல் திரும்பி அஜயைப் பார்த்தாள். அவனது உயிரற்ற விழிகள் அவளை என்னவோ செய்ய, அவனிடம் எதுவும் பேசாமல் ஜீப்பில் ஏறியவள், விஜயின் காரையும் கைப்பற்றி, அதையும் ஒரு முக்கிய ஆதாரமாகப் பதிவு செய்தாள்.

 

அடுத்தகட்ட விசாரணைத் துவங்க, விஜய் விசாரணை முழுவதும் வாயையே திறக்காமல் சாதித்தான். எப்படி மாட்டினோம் என்பது புரியாமல் அவனது மூளை அதிலேயே நிற்க, நாச்சி கண்ணைக் காட்டியதும் இரண்டு காவலர்கள் விசாரணை அறைக்குள் வந்தனர். அவர்களைப் பார்த்தவனுக்கு அடுத்து அங்கு நடக்கவிருப்பது புரியவும் எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி நாச்சியைப் பார்த்தான். அவளது கண்ணசைவிற்காகக் காத்திருப்பவர்களைப் போல அவர்கள் நின்ற விதம் அவனை இன்னும் பயம் கொள்ளச் செய்தது.

 

“என்னை என்ன செய்யப் போறீங்க?” என்று பயத்துடன் அவன் கேட்க,

 

“நாங்க ஒன்னும் செய்யல. நீயா தான் பாத்ரூம்ல வழுக்கி விழப் போற” என்றவள் அவர்களுக்குக் கண்ணைக் காட்டிவிட்டு நகர்ந்துவிட்டாள்.

 

“அம்மாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ” என்ற விஜயின் அலறல் அவளுக்கு நன்றாகக் கேட்டது. அவனது கதறலும் அலறலும் அவளைக் கொஞ்சமும் பாதிக்கவில்லை. சற்று முன்னர் தான் அவளுக்கு தடயவியல் துறையிலிருந்து அறிக்கை வந்திருந்தது. அவர்கள் சந்தேகித்த அனைத்தும் உண்மையென்றாகிவிட்டது.

 

அவன், “சொல்லிடுறேன்.. எல்லாத்தையும் சொல்லிடுறேன். என்னை விட்டுடுங்க” என்று கத்தும் வரைக்கும் அவர்கள் அவனை விடவில்லை. அவன் சொல்லிவிடுகிறேன் என்று சொன்னபோது மீண்டும் அந்த அறைக்குள் வந்தவள் அவன் முன்னே வந்து அமர்ந்தாள்.

 

“சொல்லு” என்றபடி எதிரில் அமர்ந்தவளை நிமிர்ந்தும் பார்க்காமல் விஜய் சொல்ல ஆரம்பித்தான்.

 

“சாஹித்யா என்னோட க்ளினிக்ல தான் தெரப்பிக்காக வந்துட்டு இருந்தா.. அவளுக்கு ஒரு கட்டத்துல என்னைப் பிடிச்சுப்போய் காதலைச் சொன்னா.. ஆனால், நான் ஏத்துக்கல. தெரப்பிக்கு வரும்போதெல்லாம் என்னைக் கன்வின்ஸ் பண்ண ட்ரை பண்ணுவா” என்றவன் எச்சிலை விழுங்கிக் கொண்டு நாச்சியைப் பார்த்தான். அவனுக்கு அன்றைய நாள் நினைவில் ஓடியது.

 

அன்று வேறொரு வேலை இருந்ததால் பாதி நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு விஜய் சென்றுவிட அங்கு வேலை செய்யும் ஒருவன் மட்டுமே இருந்தான். சாஹித்யா எப்போதும்போல தெரப்பிக்காக வந்தவள் விஜய் இல்லையென்றதும் கிளம்பப் போக, அந்தத் தனிமை தந்த தைரியமும் அவளது இளமை விதைத்த ஆசையுமாக அவளை நெருங்க முயற்சித்தான் அந்த ராட்சசன். சாஹித்யா தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் போராட, அவனுடைய பலத்தின் முன் அவளால் வெகுநேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவள் சக்தியெல்லாம் வடிந்த நேரத்தில் சரியாக வெளியே கார் சத்தம் கேட்க, சாஹித்யாவின் விழிகளில் உயிர்ப்பு வந்தது. இருவருக்குமே விஜய் வந்திருக்கிறான் என்பது புரிய, 

 

“விஜய்” என்று கத்தியவள் அடுத்த நொடி, ‘ம்மாஆஆஆ’ என்ற அலறலுடன் மயங்கிச் சரிந்தாள். அவள் சுயநினைவில் இருந்தால் மாட்டிக் கொள்வோம் என்று அருகிலிருந்த கட்டையை எடுத்து அவளது பின் மண்டையில் அடித்து அவளை மயக்கமுறச் செய்தவன் அவளை இழுத்து ஓர் அறையில் போட்டுப் பூட்டிவிட்டு அவசரமாக வெளியே வர, அதற்குள் உள்ளே நுழைந்திருந்தான் விஜய்.

 

“ஏன் பூட்டுற? என்ன சத்தம் கேட்டுச்சு இப்போ? யாரோ கத்துன சத்தம் கேட்டுச்சே.. யாரு?” என்றபடி அவன் முன்னேறி வர,

 

“இல்ல சார். நீங்க கிளம்ப சொன்னதால எல்லா ரூமையும் எப்போவும் போலப் பூட்டிட்டுக் கிளம்புறேன்.. வேற ஒன்னுமில்ல.. சத்தம் எதுவும் வரலயே சார்” என்று சமாளித்தான் அவன்.

 

அவன் பேச்சின் திணறலும் அவன் உடலின் நடுக்கமுமே அவனது பதட்டத்தை வெளிப்படுத்த, விஜய்க்கு எதுவோ சரியில்லை என்று புரிந்துபோனது.

 

“டோர் ஓப்பன்‌ பண்ணு” என்று விஜய் சொல்லியதும் பயத்தில் நடுங்கியவன்,

 

அதற்கு மேல் நடிக்காமல், “சார் தெரியாம பண்ணிட்டேன் சார்.. போலீஸுக்குலாம் போய்டாதீங்க சார்” என்று விஜயின் கால்களில் விழுந்துவிட்டான்.

 

ஏதோ பெரிதான விஷயம் என்பது புரிந்து அவனிடமிருந்து சாவியைப் பறித்தவன் தானே திறக்க, உள்ளே மயக்க நிலையில் படுத்திருந்தாள் சாஹித்யா. உடைகள் ஆங்காங்கே கிழிக்கப்பட்டு, தலைமுடியெல்லாம் கலைந்து அவளிருந்த நிலையே என்ன நிகழ்ந்திருக்கும் என்பதைப் புரிய வைக்க, எங்கே போலீஸை வரவழைத்துவிடுவானோ என்று பயந்து போனான் மற்றவன்.

 

அந்த நிலையில்தான் விஜயின் உள்ளிருந்த அந்த மிருகம் எட்டிப்பார்த்தது. அத்தனை உயிர்ப்புடன் காதலைச் சொன்னவள் மீது வராத மோகம் அவளைக் கிட்டத்தட்ட உயிர் பிரிந்த நிலையை ஒத்தத் தோற்றத்தில் பார்த்ததும் கிளர்ந்து எழுந்தது. அவளைக் காப்பாற்றும் எண்ணம் சற்றும் தோன்றாமல் அவளை அனுபவிக்கும் எண்ணமே அந்தக் கணம் அவனை நிறைத்தது.

 

மோகத்தோடு விஜய் சாஹித்யாவைப் பார்த்ததை அதிர்வுடன் பார்ப்பதாகத் தவறாகக் கணித்தவனோ, “சார் தெரியாம பண்ணிட்டேன் சார்.. என்னை எதுவும் பண்ணிடாதீங்க சார்” என்று கெஞ்ச, 

 

அவனை ஓங்கி அறைந்தவன், “இனி உன்னை இந்த க்ளினிக்ல நான் பார்க்கக் கூடாது” என்று அடித்து விரட்டினான்.  

 

அவனை அடித்து விரட்டியதும் அங்குமிங்கும் நடந்தவன் அடுத்து செய்ய வேண்டியதை வேகமாகக் கணக்கிட்டான். காரைப் பின்பக்கமாக எடுத்து வந்து அவளைக் கார் டிக்கியில் ஏற்றி தன் வீட்டிற்குக் கொண்டு வந்தான்.  

 

அதுவரையிலும் கூட அவளுக்கு மயக்கம் தெளிவில்லை. சாஹித்யாவின் அந்த நிலை விஜயை இன்னும் உற்சாகப்படுத்த, அவளது மயக்கநிலையைப் பயன்படுத்தித் தன் மிருகத்தனத்திற்கு அவளை இரையாக்கினான் அவன். கிட்டத்தட்ட பல வருடங்கள் கடந்து கிடைத்த சுகம் அவனை இன்னும் மூர்க்கமாக்கியது.

 

ஆம்! அவனது மனைவி லாவண்யாவிற்கும் இதே கொடுமை தான் நடந்தேறியது. திருமணம் முடிந்து வாழ்க்கையை வாழ ஆரம்பிக்காமல் அனுதினமும் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி அவளைத் தவிர்த்தவனிடம் ஏனென்று காரணம் கேட்க முடியாமலும் யாரிடம் சொல்வது என்று தெரியாமலும் தனக்குள்ளாக யோசித்து யோசித்து மறுகியவள் அவனது வேஷம் கலைந்த தினம் முதல் செத்து செத்துப் பிழைத்தாள் என்றே சொல்ல வேண்டும். திருமணமான முதல் ஒருமாதம் அவளைத் தவிர்த்தவன் இரண்டாவது மாதம் முதலாக ஒவ்வொரு முறையும் அவளை மயக்கம் கொள்ளச் செய்தே நாட, ஏனென்று காரணம் கேட்டவள் அவன் சொன்ன பதிலில் அதிர்ந்து போனாள். 

 

“ஏன்னா நான் ஒரு நெக்ரோபில் பெர்சன்.. நீ சேலை கட்டி பூ வைச்சு முன்னாடி வந்து நின்னா எனக்கு ஒரு மண்ணும் தோன மாட்டேங்குது. உன்னை இப்படிப் பண்ண தான் எனக்குப் பிடிச்சிருக்கு.. இதுல தான் நான் திருப்தி அடையுறேன்” என்று கத்தியவனைக் கண்டு பயத்தில் உறைந்துபோனாள்.

 

இணையத்தின் உதவியுடன் அவன் சொன்ன விஷயங்களைப் பற்றி இன்னும் அறிந்தவள் அழுகையிலும் பயத்திலுமே நாட்களைக் கடத்தினாள். ஓரிடத்தில் தைரியம் வந்து இந்தத் திருமணமே வேண்டாம் என்று போய்விடலாமா என்று யோசிக்கும்போது வயிற்றில் தேவ் தங்கிவிட, பைத்தியம் பிடிக்காத குறையாக மாறிப் போனாள் லாவண்யா. விஜய் அறைக்குள் இருக்கும்போது அறைக்குள் இருப்பதே அவளுக்குப் பயத்தைத் தர, சரியான உறக்கமும் இல்லாமல் போனது. அந்த அதீத அழுத்தமே அவளது உயிரைப் பாதியாகக் குறைத்துக் கொண்டிருந்தது. தேவ் பிறக்கும் வரைக்கும் பல்லைக் கடித்துக் கொண்டு சமாளித்தவள் அவளது அன்னை வீட்டுக்குச் சென்றதும் தான் கொஞ்சம் நிம்மதியானாள். அதிலும் ஒரு பிரச்சனை வெடித்தது. மூன்று மாதம் முடியும் தருவாயில் தவமணி அழைத்து இன்னும் மூன்று மாதம் கழித்துக் கூட அனுப்பி வையுங்கள் என்று கூற, அன்று இரவே அதற்கான பிரச்சனை அவளது அண்ணன் மனைவி மூலமாக வெடித்தது.

 

“என்ன இன்னும் மூனு மாசமா? என்னால இதுக்கு மேல உங்க தங்கச்சிக்கு ஊழியம் பண்ண முடியாதுங்க.. என்னை என் அப்பன் வீட்ல கொண்டுபோய் விட்டுட்டு உங்க தங்கச்சியைக் குடும்பமா சேர்ந்து சீராட்டுங்க.. என்னை ஆளை விடுங்க” என்று லாவண்யாவின் அண்ணன் மனைவி பெட்டியைக் கட்ட, லாவண்யாவின் பெற்றோர் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நின்றனர். பெற்றோர் மற்றும் அண்ணனின் திண்டாட்டத்தைப் பார்த்தவளுக்கும் வேறு வழியிருக்கவில்லை. அவளே தன் வாயால் அங்கே செல்கிறேன் என்று சொல்லிவிட்டாள்.

 

வாய் வார்த்தையாகச் சொல்லிவிட்டாள் தான்! ஆனால் அதன் பின்னான வாழ்க்கையை நினைத்தாலே அவளுக்கு நெஞ்சமெல்லாம் சில்லிட்டது. அந்த நரகமே வேண்டாம் என்று முடிவெடுத்தவளைத் தன் வாயாலேயே அங்கு போகிறேன் என்று சொல்ல வைத்துவிட்டார்களே என்றெண்ணி அழுதவள் கடைசியில் யாருக்கும் கஷ்டம் தர விருப்பமில்லாமல் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை எடுத்துவிட்டாள்.  

 

பிள்ளை பற்றிய நினைப்பு வரத்தான் செய்தது. அதற்காகத்தான் தெளிவாகக் கடிதம் எழுதி வைத்தாள். தன் பெற்றோரிடம் வளர்ந்தால் அண்ணியிடம் இடிசோறு வாங்கியல்லவா அவன் வளர வேண்டியதாகிவிடும் என்று யோசித்துத் தன் மாமனார் மாமியாரிடம் தான் தன் குழந்தை வளர வேண்டும் என்று கடிதம் எழுதி வைத்தாள். அவளைக் கட்டியவன் எப்படியோ..! ஆனால், அந்த வீட்டில் மற்றவர்களை சற்றும் குறை கூற முடியாது என்பதே அவளது எண்ணமாக இருக்க, நிச்சயம் தன் பிள்ளையை நன்றாக அவர்கள் வளர்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவள் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள் அவள்.

 

அவளது மரணம் விஜய் சற்றும் எதிர்பாராதது தான். ஆனால், அதற்காக அவன் வருந்தவெல்லாம் இல்லை. அவனது வாழ்க்கை அவள் இல்லாமலும் இயங்கத்தான் செய்தது. அவனைப் போன்ற மனித மிருகங்களுக்காகவே பேன்டஸி என்ற பெயரில் ஆயிரமாயிரம் கலவிக் காணொளிகள் அதற்கான தளத்தில் கொட்டிக்கிடக்க, அதன் மூலம் தன் இச்சைகளைத் தணித்துக் கொள்வான்.  

 

சமீபமாக அதிலும் திருப்தி ஏற்படாததைப் போலிருந்த நிலையில் தான் சாஹித்யா அவனிடம் மாட்டினாள். அவளைப் புணர்ந்த போது, அவனது இச்சை தணியாமல் பெருகியதே தவிர குறையவே இல்லை. அவளை மயக்கத்தின் பிடியிலேயே வைத்திருந்தவன் நினைக்கும் போதெல்லாம் அவளை சூறையாடினான். அதீதமாக அவளது உடலுக்குள் செலுத்தப்பட்ட மயக்க மருந்தினால் ஒரு கட்டத்தில் அவளது இதயம் செயலிழந்து போக, அந்த நிலையிலும் அவளை அனுபவித்தான் அவன்.  

 

நடந்த அனைத்தையும் அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, “போதும் ஸ்டாப் இட்” என்று கத்தியபடி எழுந்த நாச்சிக்கு உடல் வெளிப்படையாகவே நடுங்கியது. அந்த இரண்டு பெண்களுக்கு நடந்த கொடுமை தனக்கே நடந்ததைப் போலத் துடித்துப் போனாள் அவள். அவளது முகம் செந்நிறமாக மாறியிருந்தது. இதையெல்லாம் சொல்லும்போது கூட அவன் முகத்தில் எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாதது கண்டு அவளுக்கு ஆத்திரம் பெருக, அவனை ஷூ காலோடு எட்டி உதைத்தாள் அவள். அவன் நாற்காலியோடு கீழே விழ, 

 

“மனுஷனாடா நீ?” என்றவள் ஆத்திரம் தீருமட்டும் அவன் நெஞ்சிலேயே எட்டி மிதித்தாள். அவளது ஒவ்வொரு மிதிக்கும் அவன் பயங்கரமாக அலறினான். வாயெல்லாம் கிழிந்து இரத்தம் வர ஆரம்பிக்க, அவளது ஆவேசத்தைப் பார்த்து பயந்து போன சிவராமன் அவளைத் தடுத்துத் தனியே பிரித்தான்.

 

“மேம்.. கோர்ட்ல ஆஜர் படுத்தணும். அடிச்சே சாவடிச்சுடாதீங்க” என்று சிவராமன் சொல்ல, அவனை விட்டு விலகித் தூரமாக வந்தவளுக்குத் தன்னை ஆசவாசப்படுத்திக் கொள்ள சற்று நேரம் பிடித்தது. கொஞ்சம் மனநிலை சமனிலைக்கு வரவும் வீட்டைப் பற்றிய எண்ணம் தோன்ற, “நீங்க ப்ரொஸிஜரைப் பாருங்க சிவராமன்..  அப்புறம் இவன் கிட்ட வேலை பார்த்த அந்த இன்னொரு நாயையும் அரெஸ்ட் பண்ணி கேஸ் ஃபைல் பண்ணுங்க” என்று அவனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பிவிட்டாள் அவள். 

This post was modified 6 days ago by VSV 37 – செந்தணல் தாரிகையே

   
ReplyQuote
VSV 37 – செந்தணல் தாரிகையே
(@vsv37)
Eminent Member Author
Joined: 5 months ago
Posts: 34
Topic starter  

அத்தியாயம் 19

 

காக்கி உடையைக் கூட மாற்றாமல் தீவிர சிகிச்சைப் பிரிவின் முன்னே தலையைப் பிடித்தவாறு அமர்ந்திருந்தாள் நாச்சி. அவளருகில் அஜய் திக் பிரம்மை பிடித்தவாறு அமர்ந்திருந்தான். அவனால் இன்னும் நாச்சி சொன்ன விஷயங்களை ஜீரணிக்க முடியவில்லை. தாயின் உடல்நிலையை எண்ணி வருத்தப்படுவதா? இல்லை உடன்பிறந்தவனின் கொடூரத்தை எண்ணி வருத்தப்படுவதா? என்று புரியாமல் அவன் இடிந்து போய் அமர்ந்திருந்தான். அவனது ஆழ்மனம் நாச்சி வீட்டிற்கு வந்ததிலிருந்து நிகழ்ந்தவற்றிலேயே நின்று விட்டது.  

 

விஜயைக் கைது செய்து அழைத்துப் போனவள், அன்றிரவு பத்து மணியைத் தாண்டியும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை. இரவு யாருக்கும் உணவு உள்ளே இறங்கவில்லை. அவரவர் தத்தம் நினைவுகளின் சுழலுக்குள் மாட்டித் தவித்தபடி நாச்சியின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்க, தேவிற்கு மட்டும் உணவைக் கொடுத்து உறங்க வைத்தான் அஜய். விஜயைக் கைது செய்த போது அவன் இல்லாததால் அவனுக்கு விஷயம் இன்னும் தெரிந்திருக்கவில்லை.  

 

சண்முகமும் தவமணியும் இடிந்து போய் அமர்ந்திருப்பதைப் பார்த்த அஜய் அவர்களது அருகில் கூடப் போகவில்லை. யாரிடம் பேசினாலும் அவன் உடைந்துவிடுவான். அது எதிரில் இருப்பவரை இன்னும் காயப்படுத்தும் என்றெண்ணி இதழ்களை இறுகப் பூட்டிக் கொண்டான்.  

 

விஜயைக் கைது செய்துவிட்டுப் போனதும், நாச்சியைக் கண்டபடி ஏசிய சண்முகம், உடனடியாக வழக்குரைஞரைப் பார்க்கச் செல்வதாகக் கிளம்ப, அஜய் அவரைத் தடுத்து நிறுத்தினான்.

 

“ப்பா.. நாச்சி வரட்டும். நாம பேசிக்கலாம். என்ன நடந்துச்சுனு தெரியாம அவசரப்பட வேணாம்” என்று அஜய் கூறியதும்,

 

“என்ன பேசுதோம்னு யோசிச்சுப் பேசு அஜய்.. உன் பொஞ்சாதி சொல்லுத மாதிரி உன் அண்ணன் பண்ணியிருப்பானா? நீயும் கடைசில இப்படிப் பேசுதியே” என்று சண்முகம் உடைந்த குரலில் கேட்க, அஜயும் உடைந்துவிட்டான்.

 

“ஏன்ப்பா என்னை சங்கடப்படுத்துறீங்க? உங்களுக்கு அண்ணனைப் பத்தி மட்டும்தான் தெரியும். எனக்கு என் பொண்டாட்டியைப் பத்தியும் தெரியும். நேத்து மதியம் நாம கோவில்ல இருக்கப்ப அவளுக்கு என்னவோ தெரிஞ்சிருக்கு.. அதுல இருந்தே அவ சரியில்ல. அவ நினைச்சிருந்தா அப்பவே நம்ம கிட்ட இப்படினு சொல்லியிருக்கலாம். ஆனால், ஒருவேளை விஜய் நிரபராதியா இருந்து அவ அப்படிப் பழி சொல்லிட்டா நாளைக்கே உங்க முகத்துலயோ என் முகத்துலயோ எப்படி முழிக்கிறதுனு தான் அவ சொல்லல” என்றவனுக்குத் தொண்டை அடைத்தது.

 

“நேத்து சொல்றதுக்கு தயங்கினவ இன்னைக்கு அவ்வளவு உறுதியா அவ சொல்றான்னா என்னால அதை சுத்தப் பொய்னு சொல்ல முடியலப்பா.. எனக்கும் உங்க நிலைமை தான். இப்போ வரை என் மனசு விஜயை அப்படி நினைக்கவும் முடியாம நாச்சி சொல்றதைப் பொய்யினும் நினைக்க முடியாம திண்டாடுது. அவ வரட்டும். அவகிட்ட கேட்கலாம். அதுவரை கொஞ்சம் அமைதியா இருங்க” 

 

அஜய் சொல்லவும் தவமணிக்கு இன்னும் பயம் பிடித்துக் கொண்டது.  

 

“அஜய்.. அப்போ விஜய் அப்படி பண்ணியிருப்பான்னு சொல்லுதியா நீ?” என்று தவமணி கண்ணீர் குரலில் கேட்க, தலையைப் பிடித்தபடி அமர்ந்துவிட்டவன், “எனக்குத் தெரியலமா” என்றபடி தாயோடு சேர்ந்து அழ ஆரம்பித்துவிட்டான்.

 

யாரை யார் தேற்றுவது என்பது புரியாமல் மூவரும் நாச்சியின் வருகைக்குக் காத்திருக்க, வாசலில் கார் சத்தம் கேட்டது. நாச்சி தான்! அவளது வருகையில் மூவருமே இதயம் தடதடக்க அமர்ந்திருந்தனர்.  

 

வீட்டினுள் நுழைந்தவள் மூவருமே ஹாலில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டுத் தானும் உள்ளே செல்லாமல் அங்கேயே நின்றாள்.

 

“அஜய்.. உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்” என்று அஜயை அவள் தனியே அழைக்க, அவன் நகரவே இல்லை.

 

“விஜய் நிஜமாவே ரேப் பண்ணிக் கொலை பண்ணானா?”

 

அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் அவன் கேட்டவிதம் அவளை உலுக்க, அவளால் பதில் பேசவே முடியவில்லை.  

 

“அஜய்.. நம்ம ரூம் போய் பேசலாமே” என்று கெஞ்சும் குரலில் கேட்டவளிடம்,

 

“இங்கேயே சொல்லு நாச்சி. எதுவா இருந்தாலும் எங்க மூனு பேருக்கும் தெரியணும்” என்று அவன் கறாராகக் கூற, தவமணியை சங்கடத்துடன் பார்த்தாள் அவள். அவளது பார்வைக்கான அர்த்தம் புரிய, அஜயும் தவமணியைப் பார்த்தான்.

 

“இல்ல.. எனக்கு உண்மை தெரிஞ்சாகணும். என்னனாலும் இங்கயே சொல்லு நாச்சி” என்று அவர் திண்ணமாகக் கூறினாலும் அவளால் அப்படி எளிதாக நடந்தவைகளைக் கூறிவிடமுடியவில்லை.  

 

இன்னும் சொல்லப்போனால் அவளே இன்னும் விஜய் சொன்னவைகளிலிருந்து வெளியே வரவில்லை. நினைக்கவே பதறும் விஷயத்தைத் தன் குடும்பத்து ஆள் செய்திருக்கிறான் என்று எப்படிச் சொல்லுவாள்? எதுவும் பேசாமல் விஜயின் வாக்குமூலக் காணொளியை அஜயின் கைகளில் தந்தவள் அங்கேயே சோபாவில் அமர்ந்துவிட்டாள்.  

 

தன் கையிலிருந்த காணொளியைப் ப்ளே செய்வதற்கே அஜயின் கரங்கள் நடுங்கின. அவனது இதயத்துடிப்பு அவனுக்கே கேட்க, உடல் இறுக அதைப் ப்ளே செய்தான் அவன்.

 

விஜயின் வாக்குமூலம் முழுதாகப் பதியப்பட்டிருந்தது. நடந்த அனைத்தையும் அவனே கூற மற்றவர்கள் கேட்டனர். அந்த வாக்குமூலத்தை முழுதாகக் கேட்க முடியாமல் லாவண்யாவின் பகுதி வரும்போதே அதை நிறுத்தியவன் கைகளால் வாயைப் பொத்திக்கொண்டு அழ ஆரம்பிக்க, சண்முகத்திற்கு உடலெல்லாம் வியர்த்துப் போனது. தவமணி இடிந்து போய் அமர்ந்துவிட்டார்.

 

‘தன் மகனா இப்படி?’ என்று நினைக்கும்போதே அவர் நெஞ்சில் சுரீரென்று வலியெடுக்க, அதையெல்லாம் உணரும் நிலையில் அவர் இல்லை. லாவண்யாவின் குழந்தை முகம் மீண்டும் மீண்டும் கண்ணுக்குள் வந்து போனது. எவ்வளவு பெரிய கொடுமையில் அந்தப் பெண் இறந்திருக்கிறாள் அந்தப் பெண்? பழைய நிகழ்வுகள் எல்லாம் கண் முன்னே வலம்வர, மீண்டும் சுரீரென்ற வலி. இந்த முறை சற்று பலமாகவே வலிக்க, வலிக்கிறது என்று சொல்வதற்குள்ளாகவே இரத்த அழுத்தம் அதிகரித்து மயங்கிச் சரிந்தார் தவமணி.  

 

“அஜய் அத்தையைப் பாரு” என்றவள் அஜய்க்கும் முன்னதாகச் சென்று தவமணியைத் தாங்கிக் கொள்ள, தவமணி மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.  

 

தேவ் உறங்கிக் கொண்டிருந்ததால் நாச்சி அவர்களுடன் போக முடியவில்லை. உடனே, தன் தந்தைக்கு அழைத்தாள். அந்த நேரத்தில் மகளிடமிருந்து அழைப்பு வரவும் சங்கரநாராயணன் பதறிப் போய் எடுக்க, நிலைமையைச் சுருக்கமாகச் சொன்னவள் அவரை உடனடியாகக் கிளம்பி அவளது வீட்டிற்கு வரச் சொன்னாள். அவர் வரவும் தேவைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு அவளும் மருத்துவமனைக்குச் செல்ல, அதற்குள் முதற்கட்ட சிகிச்சை நடந்து முடிந்திருந்தது.

 

நேராக அஜயிடம் சென்றவள், “டாக்டர் என்ன சொன்னாங்க அஜய்?” என்று கேட்க, 

 

“நாளைக்குக் காலைல தான் சொல்ல முடியும்னு சொல்றாங்க” என்றான் அவன் பயத்துடன்.

 

“ச்சே நீ ஏன் இப்படி பயப்படுற? அதெல்லாம் ஒன்னும் ஆகாது. தைரியமா இரு” என்றவள் அவனருகில் அமர்ந்திருந்த சண்முகத்தைப் பார்த்தாள். அவரது தோற்றம் அவளுக்கு எதுவோ சரியில்லை என்று உணர்த்த,

 

“மாமா அத்தைக்கு எதுவும் ஆகாது. நீங்க ஏன் இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கீங்க? இப்படியொரு விஷயம் நம்ம குடும்பத்துல நடந்திருக்க வேணாம் தான். ஆனா, நடந்திருச்சு. இனிமேல் அடுத்து நடக்க வேண்டியதைத் தான் பார்க்கணும். இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்தா அத்தையை யார் தேத்துறது?” என்று அவரையும் அவள் தேற்ற, சண்முகத்திற்கு முகத்தை எங்கே வைத்துக் கொள்வது என்று தெரியவில்லை.

 

‘இவளைத்தானே தகாத வார்த்தை கொண்டு நான் பேசினேன்? இவளின் வளர்ப்பைப் பற்றித்தானே அவ்வளவு பேசினேன். கடைசியில் என் வளர்ப்பு இப்படி ஊரே சிரிக்கும்படி ஆகிவிட்டதே’ என்று மனதிற்குள்ளாகவே அனைத்தையும் வைத்து உக்கிப் போனார் சண்முகம்.  

 

அவரால் நாச்சியைக் கண்கொண்டு பார்க்கமுடியவில்லை. அவரது குற்றவுணர்வே அவரைக் கொல்ல, ஒரு கட்டத்தில் உடலெல்லாம் வியர்த்துப் போய் மூச்சுக்கே தவிக்க ஆரம்பித்துவிட்டார்.  

 

“அஜய்” என்று அதிர்வுடன் நாச்சி அழைக்க, அப்போதுதான் தந்தையைக் கவனித்தவன்,

 

“ப்பாஆ.. என்ற செய்யுது?” என்று பதட்டத்துடன் அவரை நெருங்க, 

 

“நெஞ்சு வலிக்கு..” என்றவரால் முழுதாகக் கூட அதைச் சொல்ல முடியவில்லை.  

 

“சிஸ்டர்” என்ற நாச்சியின் குரலுக்கு அருகிலிருந்த செவிலியர் ஒருவர் ஓடிவர, அதே மருத்துவமனையில் சண்முகமும் அனுமதிக்கப்பட்டார்.

 

தவமணியின் உடல்நிலையில் கூட மறுநாளே சிறிது முன்னேற்றம் தெரிய, சண்முகம் தான் அனைவரையும் ரொம்பவே சோதித்துவிட்டார். ஒரு பக்கம் சாஹித்யாவின் வழக்கும் கோர்ட் ஹியரிங்கிற்கு வர, அஜய் இங்கே தான் பார்த்துக் கொள்வதாகக் கூறி அவளை அனுப்பி வைத்தான்.

 

கோர்ட் ஹியரிங்கில் விஜயின் காரிலிருந்த சாஹித்யாவின் துணிக் கிழிசல், அவனது வீட்டு ஸ்டோர் ரூமிலிருந்த பழைய கட்டிலில் சிக்கியிருந்த முடி, மயக்கமருந்து என அனைத்து ஆதாரங்களுடன் அவனது வாக்குமூலமும் முக்கிய ஆதாரமாக வைக்கப்பட, அவன் குற்றவாளி என்பது நிரூபணமாகி, ஐபிசி 302 மற்றும் 376-ன் படி அவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  அவனிடம் வேலை செய்தவன் தானே குற்றத்தை ஒப்புக்கொள்ள, அவனுக்கும் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

 

கோர்ட் ஹியரிங் முடிந்ததும் அங்கிருந்தவாறே நாச்சி மருத்துவமனைக்குச் செல்ல, அஜய் அவளிடம் தீர்ப்பு பற்றி விசாரித்தான்.

 

“மரணதண்டனை தான் எக்பெக்ட் பண்ணுனோம். பட், சட்டத்தின் மூலமா சாகலனாலும் கண்டிப்பா இன்னும் கொஞ்சநாள்ல அவன் செத்துட்டதா நியூஸ் வரும்” என்றாள் நாச்சி.

 

அஜய் புரியாமல் பார்க்க, “சாஹித்யா வேற யாருமில்ல. மினிஸ்டர் கேசவ மூர்த்தியோட பொண்ணு தான். அவரோட இல்லீகல் வொய்ஃப்க்கு பொறந்த பொண்ணு. சாஹித்யா அம்மா இறந்து போகவும் ஆசிரமத்துல தான் வளர்ந்திருக்கா.. அந்தப் பெண்ணை அந்தத் தனிமை ரொம்பவே பாதிச்சிருக்கு.. யார் கிட்ட பேசுனாலும் அப்பா யாரு அம்மா யாருன்ற கேள்வி அவளைத் துரத்தவும் ஒரு கட்டத்துல யார் கிட்டயும் பேசாம தனியா அவளை அவளே ஐசோலேட் பண்ணிக்க ஸ்டார்ட் பண்ணியிருக்கா.. அந்த அழுத்தம் தாங்க முடியாம தான் தெரப்பிக்குப் போய்.. அங்க” என்றவள் முடிக்காமல் அப்படியே நிறுத்த, அஜயின் முகம் கசங்கியது.

 

“அவனை என்கூடப் பிறந்தவன்னு சொல்றதுக்கே அருவருப்பா இருக்குடி.. எப்படி எந்தக் குற்றவுணர்ச்சியும் இல்லாம நம்ம கூட அவனால சிரிச்சுப் பேச முடிஞ்சதோ” என்று கூறியவனிடம்,

 

“இது ஒரு சைக்கலாஜிகல் ப்ராப்ளம் அஜய். இதுல எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னன்னா அவனே ஒரு சைக்கியாட்ரிஸ்ட் அப்படின்றது தான். அதனாலதானோ என்னவோ அவனால அவனோட எமோஷன்ஸை டவுட்டே வராத மாதிரி ஹேண்டில் பண்ண முடிஞ்சிருக்கலாம்” என்றாள் வெறுப்புடன்.

 

நாச்சி சொன்னது போலவே, அடுத்த இரண்டு நாட்களில் விஜய் சிறையிலேயே தூக்கிட்டுக் கொண்டதாகவும் மற்றொருவன் அதீத வயிற்றுவலியால் இறந்துவிட்டதாகவும் செய்தி பரவ, உண்மையில் அஜயின் மனம் அப்போதுதான் அமைதியானது. நாச்சியின் மனதும்தான்!

 

____________________

 

“கார்த்திக் வெட்ஸ் ஸ்ரீநிதி”

 

என்று எழுதப்பட்ட அலங்கார எழுத்துக்களை ஆசையுடன் பார்த்தபடி மேடையை அலங்கரித்தவர்களுக்கு மாற்றங்களைக் கூறிக் கொண்டிருந்தாள் நாச்சி. சற்றே மேடிட்ட வயிற்றுடன் அவள் நின்றிருக்க, “மேடம் கொஞ்சம் உள்ளே இருக்கும் என் புள்ளையையும் கவனிங்க.. உங்க தங்கச்சி கல்யாணத்தை ஜாம் ஜாம்னு பண்ணத்தான் உங்க புருஷன் இருக்கானே.. பின்ன ஏன் நீங்க இவ்ளோ அலட்டிக்கிறீங்க?” என்றபடி கையிலிருந்த பழச்சாற்றை அவளிடம் நீட்டினான் அஜய்.

 

புன்னகைத்தபடி வாங்கியவள், “உனக்கு என் பின்னாடி சுத்தவே நேரம் பத்தாது. இதுல உன்னை நம்பி எங்கம்மா இந்தக் கல்யாணப் பொறுப்பையே உன்கிட்ட கொடுத்திருக்காங்க.. சரி நம்ம புருஷன் மானம் போக வேணாம்னு உன் இடத்துல நின்னு நான் பார்த்துட்டு இருக்கேன்” என்று அவனை வாரியவள் அவன் தந்த பழச்சாற்றை வாங்கி மெதுவாகப் பருகலானாள்.

 

அவள் பருகிக் கொண்டிருக்கும்போதே சண்முகம் அவளை உணவருந்த அழைக்க வர, “இப்போ தான் மாமா ஜூஸ் குடிக்கிறேன். கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்றாள் அவள்.

 

“ஏம்லே உங்கம்மா ஜூஸை எப்போ குடுக்கச் சொன்னா.. நீ இப்போதான் வந்து குடுத்தியா? இப்போ ஜூஸைக் குடிச்சா வயித்துக்கு எங்கன பசிக்கும்?” என்று அஜயைத் திட்டவும்,

 

“ஒரு மணி நேரமா இவ கிட்ட இப்போ ஜூஸ் கொண்டு வரவா? இப்போ ஜூஸ் கொண்டு வரவானு கேட்டுட்டு இருக்கேன். உங்க மருமக இப்போ தான் பெர்மிஷன் கொடுத்திருக்காங்க. அவளைத் திட்டாம என்னவே திட்டுங்க” என்று சண்முகத்தை அவன் முறைக்க,

 

“என்னையா? எங்க திட்ட சொல்லேன் பார்ப்போம்” என்றபடியான பார்வையை சண்முகம் அறியாமல் அஜயை நோக்கி வீசினாள் நாச்சி.

 

ஆம்! அந்த நிகழ்விற்குப் பிறகு நிறைய ஏற்ற இறக்கங்கள் அவர்களது குடும்பத்தில்..! சொந்த பந்தங்களின் ஏளனங்களும் கூட! எதையும் நாச்சி தன் குடும்பத்தை எட்டாமல் பார்த்துக் கொண்டாள்.‌‌. வெளியே செல்வதற்கே கூனிக்குறுகிப் போய் இருவரும் வீட்டிற்குள்ளே முடங்க, பேசுபவர்கள் ஆயிரம் பேசட்டும் என்று சொல்லி அவர்களை கூடடையாமல் பார்த்துக் கொண்டாள் நாச்சி. ஏதேனும் சாக்கு சொல்லி இருவரையும் வாரத்தில் ஒருமுறையாகினும் வீட்டை விட்டு அழைத்துச் சென்று விடுவாள். அந்தப் பொழுதுகளிள் எல்லாம் சண்முகத்தின் கண்களில் கண்ணீர் முட்டும். அதற்கும் உரிமையாகக் கடிந்து கொள்பவளைத் தன் மகள் ஸ்தானத்தில் பார்க்க ஆரம்பித்து விட்டார் சண்முகம். காலமும் மெதுவாக அவர்களை அதிலிருந்து வெளியே கொண்டு வர, அவர்களது வாழ்க்கையையே மொத்தமாக மாற்றி எழுதிவிட்டாள் நாச்சி.  

 

இதோ, தேவ் ஆசைப்பட்ட மாதிரியே அவனுக்கு ஒரு தங்கை வரப் போகிறது. அஜய் ஆசைப்பட்ட மாதிரியே நாச்சியை சண்முகம் மனதார ஏற்றுக் கொண்டார். தவமணி தனக்கு அஜய் மட்டுமே மகன் என்பதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். இதற்கெல்லாம் நாச்சி தான் காரணம் என்றால் மிகையில்லை. அதோடு சேர்த்து நாளை நடக்கவிருக்கும் ஸ்ரீ-கார்த்திக் திருமணத்திற்கும் அவள் தான் மூலகர்த்தா என்றால் சற்றும் மிகையில்லை. அவர்களது விஷயம் முன்பே தெரியும் என்றாலும் சங்கரகோமதி அவர்களது காதலுக்குப் பச்சைக் கொடி காட்டாமலே இருந்தார். தாயிடம் பேசி சம்மதம் வாங்கியவள் இதோ தங்கையின் காதல் வாழ்வையும் ஒளிரச் செய்துவிட்டாள். அவர்களும் அஜய் நாச்சியைப் போல மனமொத்த வாழ்வை வாழ்வார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை!!

 

 

 

 

சுபம்!!!!!!!

 

 

 

 

 

கருத்துக்களைப் பகிர:

 

https://kavichandranovels.com/community/vsv-37-செந்தணல்-தாரிகையே-comments/செந்தணல்-தாரிகையே-கருத்/#post-231

 

 

 

This post was modified 2 weeks ago 2 times by VSV 37 – செந்தணல் தாரிகையே
This post was modified 6 days ago by VSV 37 – செந்தணல் தாரிகையே

   
ReplyQuote
Page 2 / 2

You cannot copy content of this page