All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வரமாய் வந்த உயிரே 29

 

VSV 41 – வரமாய் வந்த உயிரே
(@vsv41)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 45
Topic starter  

அத்தியாயம் 29

 

மறுநாளே காயத்ரியை, அவர்கள் எப்போதும் செல்லும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள் சக்தியும் வைஷ்ணவியும் செல்வமும் இவர்களுடன் வந்தான்.

சக்தி மற்றும் வைஷ்ணவியை பார்த்து லேசாகப் புன்னகைத்த மருத்துவர் அவர்களுடன் வந்த காயத்ரியை கேள்வியாகப் பார்க்க. அவளின் குழந்தையை இவர்கள் தத்தெடுத்துக் கொள்ளப் போவதை பற்றியும் அவள் இவனின் தங்கை என்பதையும் தெரியப்படுத்தியவர்களைப் பார்த்தவர். அவரின் விருப்பமின்மையை முகத்தில் காட்டினார். பின் அவளைச் சில பரிசோதனைகளுக்குச் செவிலியருடன் அனுப்பி வைத்தவர். மனம் கேளாமல் சக்தியிடம்,

 

"ஏன் இந்த முடிவு. நீங்களே ட்ரீட்மென்ட்ட சரியா ஃபாலோ பண்ணி இருந்தா இந்நேரம் உங்களுக்கே ஒரு குழந்தை வந்து இருக்குமே." என்று ஆதங்கமாகக் கேட்க.

"இருக்கட்டும் டாக்டர். இது வைஷ்ணவியின் முடிவு. அதுவும் இல்லாம அவ நிறைய வலி அனுபவிச்சிட்டா. இதுக்கு மேல அவளால வலி தாங்க முடியாது. அவளால முடியுதோ.? இல்லையோ.? என்னால கண்டிப்பா அவளுடைய வலியைப் பார்த்துட்டு இருக்க முடியாது." என்று உறுதியாகக் கூற. இதற்கு மேல் இது அவர்களின் முடிவும் விருப்பமும் என நினைத்தவராக அவர்கள் பரிசோதனை முடித்து வந்தபின்பு மேற்கொண்டு சிகிச்சையைத் தொடர்ந்தார்.

 

ஸ்கேனில் புள்ளியாக இருந்த குழந்தையை வைஷ்ணவி மற்றும் சக்திக்குக் காட்ட ஆனந்தத்தில் கண்கள் கலங்கியது அவர்களுக்கு. இதற்குப் பின் எப்போது வர வேண்டும் என்ற அட்டவணையைப் போட்டுக் கொடுத்து இன்முகத்துடனேயே வழி அனுப்பி வைத்தார்.

 

இரண்டு குழந்தைகளுக்குமே மசக்கை பாடாய்படுத்தியிருந்தது காயத்ரியை ஆனால் இந்தக் குழந்தையை வேண்டாம் என்று அவள் சொன்னதாலோ.? அல்லது இந்த அம்மாவுடன் தனக்கு எந்த உரிமையும் இல்லை என்று இன்னும் வெளிவராத குழந்தைக்குப் புரிந்ததாலோ.? வாந்தி தலைச்சுற்றல் என்று எந்தச் சிரமமும் அவளுக்கு ஏற்படவே இல்லை. 

 

குழந்தை வயிற்றில் இருக்கும் சுமை கூட அவளுக்குத் தெரியவில்லை. ஆச்சரியமாகவே உணர்ந்தாள் அவள் இதை. மாதங்கள் செல்லச் செல்ல அனைத்து செலவுகளையும் சக்தியே பார்த்துக் கொண்டான். அவளை மாத பரிசோதனைக்கும் அவனே அழைத்துச் சென்றான். ஒவ்வொரு மாத ஸ்கேனிங் கும் உடன் வரும் வைஷ்ணவியை பார்க்கும் மருத்துவருக்கு மனம் கனிந்து விடும். ஐந்து மாதம் துவங்கிய பிறகும் குழந்தையின் துடிப்பு தெரியவில்லையெனக் கூறிக் கொண்டிருந்த காயத்ரியை பரிசோதித்த மருத்துவர் அருகில் நின்றிருந்த வைஷ்ணவியின் கைகளை எடுத்துக் காயத்ரியின் வயிற்றில் பதிக்க. முதல்முறையாகக் குழந்தையின் துடிப்பை உணர்ந்தாள் காயத்ரி, அவளின் வயிற்றில்.. வைஷ்ணவி, அவளின் கைகளில். இருவருக்குமே இது பெரும் நெகிழ்வாக இருந்தது. 

 

இத்தனை நாள் தன்னால் உணர முடியாமல் இருந்த குழந்தையின் துடிப்பை வைஷ்ணவியின் கைகொண்டு உணர முடிந்ததை நினைத்து முதல்முறையாக வேதனை கொண்டாள் காயத்ரி. தனியாக இருக்கும் நேரத்தில் குழந்தையின் எந்த அசைவையும் உணராதவள் வைஷ்ணவியுடன் இருக்கும் போதும் அவளின் பேச்சுச் சத்தம் கேட்கும்போதும் அதிகமாக உணரத் தொடங்கினாள். ஸ்கேனிங் போதெல்லாம் வைஷ்ணவியும் உடன் இருந்து குழந்தையின் அசைவைக் கண் கொண்டும் கைகொண்டும் உணர்ந்து மகிழ்ந்து விம்மி நிற்பாள் கண்ணீருடன்.

 

ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாமல் இருந்த காயத்ரிக்கு போகப் போக ஒரு விதமான அழுத்தமும் உரிமை உணர்வும் ஏற்பட்டது குழந்தையின் மீது. தான் வேண்டாம் என்று சொன்ன குழந்தை என்பதை சுத்தமாக மறந்து விட்டிருந்தாள் அவள். ஒவ்வொரு மாதமும் அவள் வீட்டிலிருந்து இவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்த சக்தி எட்டு மாதம் தொடங்கியதும் இனி அவளைத் தன் வீட்டில் தங்கும் மாறு கூறி விட. செல்வமும் அதற்கு ஒப்புக்கொள்ள தாய் வீட்டிற்கு வந்துவிட்டாள் காயத்ரி. 

அப்போதெல்லாம் அவள் வயிற்றை தொட்டு குழந்தையின் அசைவை உள்வாங்கிக் கொள்ள விரும்பும் வைஷ்ணவியை நாசுக்காக தவிர்த்து விடுவாள் காயத்ரி. முதலில் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத வைஷ்ணவிக்கு போக போக அவளின் செயல் ஒரு விதமான பயத்தை கொடுத்திருந்தது.

 

 ஒன்பதாம் மாதம் ஸ்கேனிங்க்கு வந்திருந்த வைஷ்ணவியின் முகத்திலிருந்து தவிப்பையும் காயத்ரியின் முகத்திலிருந்து சிந்தனையையும் பார்த்த மருத்துவருக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. வைஷ்ணவியின் கைகளை தட்டிக்கொடுத்து அவளை சமாதானம் செய்தவர். காயத்ரிக்கு ஸ்கேனிங் செய்ய குழந்தையின் அசைவு இல்லாமல் நிசப்தமாக இருந்தது. 

வெளிவருவதற்கு முன்னதாகவே தன் தாய் யார் என்பதை குழந்தை உணர்ந்து இருப்பதாக நினைத்த மருத்துவர் வைஷ்ணவியை அழைத்து அவள் கைகள் கொண்டு வயிற்றை தடவ செய்ய வேகமாக அவள் கைகளை இடித்து தன் இருப்பை உணர்த்தியது குழந்தை. ஏனோ இந்நிகழ்வு கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது காயத்ரிக்கு.

 

இப்படி இருவருக்குமா ன மனப்போராட்டத்தில் பிரசவ நாளும் நெருங்கியிருந்தது. அன்றிரவு கணவனின் கைகளில் சுருண்டு இருந்த வைஷ்ணவி அவனை நிமிர்ந்து பார்த்து "ஏங்க..குழந்தை பிறந்த பிறகு காயத்ரி அண்ணி இது என்னோட குழந்தை. நான் கொடுக்க மாட்டேன்னு சொன்னா நாம என்ன செய்றது..?" என்று கேட்டாள் மிகுந்த தவிப்புடன்.

"எதுக்கு திடீர்னு இப்படி ஒரு சந்தேகம் உனக்கு.." என்று அவன் நெற்றி சுருங்க கேள்வியாக கேட்க.

"இல்ல சும்மாதான் கேட்டேன்.."

"ஏன்..? அந்த மாதிரி ஏதாவது நடந்து கொண்டாளா என்ன அவ..?" என்று சரியாக கனித்து கேட்க.

அமைதியாக இருந்தவளின் கண்ணீர் அவன் மார்பை நனைத்தது.

மனைவியை நாடி பிடித்து நிமிர்த்தியவன். 

"அப்படி மட்டும் ஏதாவது நடந்ததுனா..? அவளுடைய உறவே வேண்டாம் என்று வெட்டி விட்டுடுவேன்.." என்றான் உறுதியாக.

"நான் மட்டும் இல்லை. அப்பா அம்மாவையும் சேர்த்து தான் இந்த முடிவை எடுக்க வைப்பேன். அவங்க என் முடிவுக்கு சம்மதிக்கலனா வீட்டை விட்டு கிளம்பிட வேண்டியது தான். நாம ரெண்டு பேரும் மட்டும்.." என்றான் அவள் கண்களைப் பார்த்துக் கொண்டே.

 

அன்று விடுமுறை நாளாக இருக்க அனைவரும் சாவகாசமாக எழுந்து வந்தார்கள். காயத்ரி அன்னை வீட்டுக்கு வந்ததிலிருந்து பவித்ரா பெரும்பாலான நேரங்களை அவளுடனே செலவிட. சமையல் வேலை அனைத்தும் வைஷ்ணவியின் பொறுப்பில் வந்திருந்தது.

மனைவி அவனிடம் தன் மன சஞ்சலங்களை கூறியதிலிருந்து தங்கையைக் கவனித்து பார்க்க ஆரம்பித்தான் சக்தி. அன்று தாமதமாக எழுந்து வந்தவன் காபிக்காக மனைவியைத் தேடி சமையலறைக்கு சென்றவன் அவளிடம் காபியை கேட்டு விட்டுச் சோபாவில் அமர்ந்திருந்த காயத்ரியை அவதானித்துக் கொண்டிருந்தான்.

 

 இரண்டொரு நாளில் பிரசவம் ஆகிவிடும் என மருத்துவர் நாள்குறித்து இருக்க. தன் பெரிய வயிற்றை தடவியபடி இங்கும் அங்கும் கைகளை நகர்த்தி ஆராய்ந்து கொண்டிருந்தவள், பின் மெதுவான குரலில் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள். அவள் செயல்பாடுகளைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு மனம் பாரமாக இருந்தது. அன்னையிடமிருந்து பிள்ளையைப் பிரிக்கிறோமோ என மனம் சஞ்சலமடைய. சில நொடிகள் கனிவாகப் பார்த்தவன் பின் மனைவியின் முகம் மனதில் மின்ன. இந்த முடிவு அவர்களின் முடிவாக இல்லையே தங்கையின் முடிவு தானே இது. என மனதை சமாதானம் செய்தவன். 

 

மனைவியைப் பார்க்க அவனுக்கான காபியை கொடுத்தவள் காயத்ரிக்கு பால் எடுத்துக்கொண்டு அவளை நோக்கிச் சென்றாள். அவளிடம் பாலை கொடுத்துவிட்டு திரும்பியவளின் கை எதேர்ச்சையாக அவளின் வயிற்றில் பட, சுளிரென்ற வலி ஏற்பட்டது அவளுக்கு. "அம்மா."

என்று வலியில் அலறியவள், வழி சற்று மட்டுபட்டதும் நன்றாக நிமிர்ந்த அமர. "என்னாச்சு அண்ணி.?" என்று கேட்ட வைஷ்ணவி அவள் வயிற்றை அணைவாகப் பிடிக்க மறுபடியும் அதே வலி ஏற்பட்டது அவளுக்கு. இது பிரசவ வலி என்பதை அறிந்து கொண்டவர்கள் அவளை வேகமாக மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.

 

இதற்கிடையில் ஒரு வாரத்திற்கு முன்புதான் விசாலாட்சிக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது அறுவை சிகிச்சையில். சக்தியும் வைஷ்ணவியும் சென்று அன்னையையும் குழந்தையையும் பார்த்து வந்தார்கள். ஆசையோடு தமக்கையின் குழந்தையைப் பார்க்க வந்த வைஷ்ணவியை பார்த்த வள்ளிக்கு அவளுக்கு இப்படியொரு கொடுப்பினை இல்லாமல் போனதை நினைத்துப் பெருமூச்சு தான் விட முடிந்தது. அங்கிருந்த நாற்காலியில் அவள் அமர்ந்ததும் அவள் கைகளில் குழந்தையைக் கொடுக்கப் பாசத்தோடு வாங்கியவள். அதன் நெற்றியில் முத்தமிட்டு. கணவனைப் பார்க்க, குழந்தையின் விரல்களை மெதுவாகப் பிரித்துச் சில ரூபாய் நோட்டுகளை அதன் கையில் வைத்தான். கெட்டியாகப் பிடித்துக் கொண்டது குழந்தை. 

 

"ஹேய் குட்டி. சித்திய பாருங்க. உங்கள மாதிரியே ஒரு குட்டி குழந்தை எங்க வீட்டுக்கும் இன்னும் கொஞ்ச நாள்ல வந்துடுமே. ஆனால் அது உங்களுக்குத் தம்பியா.? தங்கையா.? என்று தான் தெரியல. நீங்களும் வரப்போற குழந்தையும் ஒற்றுமையா இருக்கணும் சரியா. அனேகமாகத் தாத்தா சொன்ன போல ராஜா கூட்டி தான் வருவாருன்னு நினைக்கிறேன்." என்று கூறினாள் முகம் மகிழ்வில் விகாசிக்க.

 

பிரசவ அறையில் காயத்ரி அனுமதித்திருக்க விட்டு விட்டு வலி வந்து கொண்டிருந்தது அவளுக்கு. மொத்த குடும்பமும் அங்குத் தான் இருந்தார்கள். இவர்களிடம் தலையசைத்து விட்டு மருத்துவர் பிரசவ அறையின் உள் செல்ல. என்ன நினைத்தாரோ நின்று திரும்பி வைஷ்ணவியை பார்த்தவர் 

"வைஷ்ணவி நீங்களும் உள்ள வரலாம்." என்று கூறிவிட்டு.

"சிஸ்டர் அவங்களுக்கு ஸ்டெர்லைட் ஆடை கொடுத்து, உள்ள கூட்டிட்டு வாங்க." என்று கூறிவிட்டு வேகமாக உள் செல்ல. மனம் துள்ள செவிலியரின் பின்னே சென்றாள் கணவனை ஒரு சந்தோஷ பார்வை பார்த்துவிட்டு

 

வயிற்றில் இருந்த காலத்திலேயே காயத்ரிக்கு எந்தச் சிரமமும் கொடுக்காத குழந்தை. பிரசவ நேரத்திலும் அதிக வலியை கொடுக்காமல் சில நொடிகளில் அவள் வயிற்றில் இருந்து நழுவிக் கொண்டு வெளிவந்திருந்தது. குழந்தை வருவதை எதிர்பார்த்து இருந்த மருத்துவர் அவரின் அருகிலேயே வைஷ்ணவையே நிறுத்திக் கொண்டார். குழந்தை வெளிவரும் நேரத்தை சரியாக கனித்தவர் வைஷ்ணவியின் கைகளைப் பிடித்து வெளிவந்த குழந்தையை ஏந்த வைத்தார். பயத்திலும், பூரிப்பிலும் உடல் புல்லரிக்க நடுங்கும் விரல்களை கட்டுப்படுத்திக் கொண்டு குருதியுடன் வந்த குழந்தையை ஏந்தி நெஞ்சோடு அணைத்துக்கொள்ள. வீறிட்டு அழுதது. அவள் வாசம் உணர்ந்து. தேவதையாக அவள் துயரம் தீர்க்க, அவள் கைசேர்ந்த பெண் குழந்தை.

 

இதை கண்களில் நீர் வழிய பார்த்துக் கொண்டிருந்தாள் காயத்ரி. முகம் எதிர்ப்பை காட்டினாலும் சொல்லால் அதை செயல்படுத்த முடியவில்லை அவளால். 

வைஷ்ணவியிடமிருந்து குழந்தையை வாங்கிய செவிலியர் அதை சுத்தப்படுத்தி பூந்துவலையில் சுற்றி அவளிடம் கொடுக்க. நெஞ்சை முட்டும் தாய்மை உணர்வுடன் வாங்கிக் கொண்டாள். முதலில் தன் கணவனிடம் காட்ட வேண்டும் என்று வேகமாக வெளிவந்தவளுக்கு தாத்தா கூறிய ராஜா குட்டி வராமல் ராணி குட்டி வந்ததில் மகிழ்வு தான். குழந்தையோடு வெளிவந்த மனைவியை ஆவல் மீதுர நெருங்கியவன், 

"பெண் குழந்தை.." என்று மகிழ்வுடன் அவள் வாயசைக்க. அணைத்து பிடித்துக் கொண்டான் தன் இரு பெண்களையும்.

 

காயத்ரிக்கு சுகப்பிரசவமானதால் பெரிதாக எந்தச் சிரமமும் அவளுக்கு இல்லை. குழந்தையும் அனேக நேரங்கள் வைஷ்ணவியிடம் இருக்க. தாய்ப்பால் கொடுக்க மட்டும் தான் அவளை அணுகினார்கள். முதல் நாள் சிறிதளவு சுரந்த தாய்ப்பால் பின் இல்லாமல் குறைந்து போனது. பசியில் அழுத குழந்தைக்குப் புட்டி பால் கொடுக்க மருத்துவர் பரிந்துரைக்க அதையும் வைஷ்ணவியே பார்த்துக் கொண்டாள். இரண்டாம் குழந்தைக்குத் தாய்ப்பால் நிறுத்தும்போது அடுத்த குழந்தை தான் பெற்றுக் கொள்ளப் போவதில்லையே என்று நினைவில் மாத்திரை எடுத்துக் கொள்ள. இப்பொழுது தாய்ப்பால் இல்லாமல் வற்றி போனது அவளுக்கு. 

 

அதுவும் மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது காயத்ரிக்கு. சுகப்பிரசவமானதால் மறுநாளே வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தார்கள் அவளை. வீட்டிற்கு வந்த அடுத்த நாள், யாரிடமும் கொடுக்காமல் அவளே குழந்தையை அடை காப்பது போலத் தன்னுடன் வைத்துக் கொண்டாள். யோசனையான வைஷ்ணவிக்கு அவளிடம் எதிர்த்து எதுவும் பேச முடியவில்லை. ஆனால் அவளின் செயல் இவளுக்குக் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. கணவனிடம் சொன்னால் கோபப்படுவானோ என்று பயந்து இருந்தவளுக்கு என்ன செய்வது என்பது புரியாத நிலை. ஆனால் இது அனைத்தும் செல்வத்தின் கண்களிலிருந்தும் பவித்ராவின் கண்களிலிருந்தும் தப்பவில்லை.

 

ஒருவரும் அறியாமல் இருவருமே கண்டித்தார்கள் காயத்ரியை.

"நீ செய்யறது எதுவும் சரி இல்லை காயத்ரி."

"என்னமா சரி இல்ல.?"

"இந்தக் குழந்தை வேண்டாம்னு கலைக்க தானே முடிவு பண்ண. இப்ப என்ன புதுசா இந்தக் குழந்தை மேல பாசம் உனக்கு."

"அம்மா இது நான் பத்து மாசம் சுமந்து பெத்த குழந்தை. அப்ப எனக்குப் பாசம் இருக்காதா.?" என்றாள் கண்களில் தேங்கி விட்ட கண்ணீருடன்.

 

"ஆனா நீ தான் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டியே. அப்புறம் இப்ப என்ன புதுசா குழந்தை மேல பாசம் வருது உனக்கு. அவளுக்குத் தருவேன் என்று வாக்கு கொடுத்துட்டு பிடிங்கினது போல ஏமாத்தாத. அது மாதிரி ஒரு பாவம் எதுவுமே இல்ல.இது மட்டும் உங்க அண்ணனுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான். அவனோட கோபத்தை வாங்கிக்காதே. அப்புறம் உன்னுடைய உறவே வேண்டாம் என்று உன்னைத் தள்ளி வைத்து விடுவான். அவன் மட்டும் இல்ல நாங்களும்தான்." என்று மகளுக்குக் குட்டு வைத்துவிட்டு வெளியேறினார்.

 

"எனக்குத் தெரியும் டி உன்ன பத்தி. அதனாலதான் ஆரம்பத்திலேயே உன்கிட்ட சத்தியம் வாங்கினேன். அதான் உனக்குப் பால் வரலையே. புட்டி பால் தானே குடிக்குது குழந்தை. உன்னுடைய அவசியம் அதற்குத் தேவையில்லை. தங்கமா பாத்துக்கறதுக்கு இவளுடைய அம்மா வைஷ்ணவி இருக்கா. அதனால நாளைக்கு நம்ம வீட்டுக்குக் கிளம்புறோம். அங்க வந்து நீ ஓய்வெடுத்துக்கோ. 

"என்னங்க." என்று தேம்பியவளிடமிருந்து குழந்தையை வாங்கியவன். 

"என்ன.?என்னங்க. அங்க ரெண்டு குழந்தைங்க காத்துக்கிட்டு இருக்காங்க ஞாபகம் இருக்கா.?" என்றவன்.

"வைஷ்ணவி." என்ற குரல் கொடுக்க.

"அண்ணா…" என்றழைத்தபடி வேகமாக உள்ளே வந்தவளிடம் குழந்தையைக் கொடுத்தவன்.

"உன் அறையில் வச்சுக்கோ மா, குழந்தையை." என்று கொடுத்து அனுப்பினான்.

 

யோசனையாகக் குழந்தையை வாங்கியவள் காயத்ரியை பார்க்கத் தலை குனிந்து அமர்ந்திருந்தாள் அவள். 

"போமா." என்றவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு. மகிழ்வோடு தங்களின் அறைக்கு முதல் முறையாக அழைத்து வந்தாள் தங்களின் தேவதைப் பெண்ணை. குழந்தையை முதன்முறையாகத் தங்களின் அறைக்கு அழைத்து வரும்போது அவள் கணவனும் உடன் இருக்க வேண்டும் என விரும்பியவள். 

ஆனால் அவன் இன்னும் வரவில்லையே என்று அவர்களின் அறை வாயிலில் சிறிது தயங்கி நிற்க. 

அன்று மதியம் உணவருந்த வந்தவன் மனைவியின் சஞ்சலம் நிறைந்த பார்வையை கண்டவன். ஏதோ சரி இல்லை என்றுணர்ந்து. இதைப் பற்றி இன்று பேசி விட வேண்டும் என்ற நினைவுடன் விரைவாக வீடு வந்தவன், மனைவி குழந்தையை தங்கள் அறை நோக்கி எடுத்துச் செல்வதையும் பின் யோசனையுடன் நிற்பதையும் பார்த்தவன். அவள் மணவோட்டம் அறிந்தவனாக வேகமாக அவள் அருகில் வந்து, இருவரையும் அணைத்து பிடித்த படி தங்களின் அறைக்குள் வலது காலை எடுத்து வைத்து சென்றார்கள் இருவரும்.

 

 அவன் அருகில் வரும்போதே அவன் வாசம் உணர்ந்து நிமிர்ந்து பார்த்தவளுக்கு அவ்வளவு சிரிப்பு முகம் முழுவதும். அந்த சிரிப்பு அவனையும் தொற்றிக்கொள்ள தூக்கத்திலேயே சிரித்து இவர்களோடு சேர்ந்து கொண்டாள் அவர்களின் சின்ன இளவரசியும்.

 

சொன்னது போலவே இரண்டு நாளில் மனைவியை அழைத்துக் கொண்டு தங்கள் வீடு நோக்கிச் சென்றான் செல்வம். 

"என்ன அண்ணா இவ்வளவு சீக்கிரம் அழைச்சிட்டு போறீங்க அண்ணியை. அவங்க உடம்பு இன்னும் கொஞ்சம் தேறட்டுமே."என்று கவலையாகக் கூறியளிடம்.

"இல்லம்மா அங்கேயும் சின்னப் பசங்க ரெண்டு பேர் இருக்காங்க. அம்மாவால தனியா சமாளிக்க முடியாது. அதுவும் இல்லாம அவ தாய்ப்பாலும் கொடுக்கலையே. இவளுடைய அவசியம் இங்க இல்ல. ஆனா அங்க, இவளின் இருப்பு மிகவும் தேவைப்படுது. அங்க போனாலும் முழு ஓய்வில் தான் இருக்க போறா. குழந்தைகளும் அம்மாவோடு இருக்கிற நிம்மதியில் இருப்பாங்க. ரெண்டு பேருமே இவளை ரொம்ப தேடுறாங்க."என்றவனின் விளக்கம் ஏற்றுக் கொள்வதாகவே இருந்தது.

 

காயத்ரியின் முகம் பார்த்தவள் மனம் கேட்காமல்,

"இருந்தாலும் சின்னக் குழந்தையை விட்டுட்டு." என அவள் முடிக்கும் முன்பே 

"குழந்தையுடைய தாய் நீ இருக்க. வேற என்னமா வேணும்.?" என்று கூறி கிளம்பியவனை தடுக்கவில்லை மற்ற யாரும்.

 

பவித்ராவிற்கும் மகளின் போக்கு பிடிக்காததால் ஏற்கனவே கணவனிடம் ஒரு பாடு குறைப்பட்டு தன் ஆதங்கத்தை தீர்த்துக் கொண்டார். சரவணனுக்கும் இந்த முடிவேச் சரி எனப்பட்டது.சக்திக்கும் இரண்டு நாட்கள் முன்பு வைஷ்ணவியின் கண்களில் தெரிந்த அதீத பய உணர்வையும் பரிதவிப்பையும் கண்டவன். தங்கை ஏதோ சொல்லி இருக்கிறாள் என்பதும் அதனால் தான் செல்வத்தின் இந்தத் திடீர் முடிவும் என்பதை ஊகித்தவன். இதுவே அனைவருக்கும் நல்லது என்று நினைத்து, அமைதியாகச் செல்வத்தின் கூற்றுக்குச் சம்மதித்தான்.


   
ReplyQuote

You cannot copy content of this page