All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

நைட் லைஃப் - 39

 

VSV 39 – நைட் லைப்
(@vsv39)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 68
Topic starter  

நைட் லைஃப் - 39

ஏற்கனவே யுகிதத்தாவை கடத்தி இருந்ததனால் ஆருத்ரா அவள் பாதுகாப்பிற்காக ட்ரக்கர் ஒன்றை வாங்கி கொடுத்திருந்தாள். அதனால் இப்பொழுது அவர்கள் இருவரும் இருக்கும் இடத்தை சாதனாவிடம் கேட்டு அறிந்துக் கொண்டான் ராகவ். ஜேம்ஸ்சை டீம் உடன் வருமாறு கூறி விட்டு இருவரும் முன்னே காரை எடுத்துக் கொண்டு சென்றார்கள். சாதனா அனுப்பிய இடம் வனப்பகுதியாக இருக்க, காரை ஒரு ஓரத்தில் நிறுத்தி விட்டு காட்டின் உள்ளே ஓடினார்கள். சுற்றி எங்கிலும் ஆள் நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறி ஒன்றுமே இல்லாமல் இருக்க, அவர்கள் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்கவே சிரமமாக இருந்தது. போனில் சரியாக யுகி ட்ரக்கர் சிக்னல் காட்டும் இடத்தில் தான் நின்றார்கள். ஆனால் அவர்கள் நின்ற இடத்தில் இருந்து பார்க்க சுற்றி எங்கிலும் காடாக இருந்தது. ஒரு கட்டிடம், ஒரு ஆள் எதுவுமே இல்லை. மந்திர வித்தை போல் தோன்றியது. நேரம் தாழ்த்த தாழ்த்த ஆருத்ராவையும் யுகியையும் ஏதேனும் செய்து விடுவானோ என்ற பயம் அவர்களுக்கு அதிகரித்தது. 

 

“சிக்னல் இங்க தான் காட்டுது ஆனா இங்க எதுவுமே இல்லையே? ஒரு வேலை செயின் இங்க எங்கையாவது விழுந்து இருக்குமோ?” என பதட்டத்துடன் கேட்டான் மித்திரன். உடனே போனை பார்த்த ராகவ், “இல்ல அது அவ கழுத்துல தான் இருக்கு, அவளோட ஹார்ட் பீட் ரேட் காட்டுது..” என போனை காட்ட குழப்பத்துடன் சுற்றி முற்றி தேடினான். எதர்ச்சியாக கீழே பார்க்க இரும்பு கம்பி ஒன்று தென்பட்டது. அதனை கண்டதும் புன்னகைத்த மித்து, “ராகவ் கண்டு புடிச்சிட்டேன்” என கூறி அந்த இரும்பு கம்பியை மேலே இழுக்க எங்கோ இரும்பு கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அவர்கள் நின்று இருக்கும் இடத்தில் இருந்து சரியாக முப்பது மீட்டரில் ஒரு பாதாள சுரங்கம் போல் இருக்க உடனே இருவரும் அதில் குதித்தார்கள். 

 

பூமிக்கு அடியில் இருட்டாக இருக்கும் என்று எதிர்பார்க்க, அங்கோ மாறாக மின் விளக்குகள் மிளிர்ந்து கொண்டு இருந்தது. சுரங்க பாதை போல் நீள் வடிவில் இருக்க இருவரும் சத்தம் வரமால் அதில் நடந்தார்கள். “மித்து இந்த இடம் இவ்வளவு ரகசியமா இருக்குன்னா கண்டிப்பா இது தான் அவனோட ஹெட் குவாட்டர்ஸ் போல.. பயங்கரமான கில்லாடியா தான் இருக்கான்” என ராகவ் கூறியபடியே முன்னாள் நடந்தான். மித்திரன் அமைதியாய் நடக்க, அவன் காதில் ஒருவன் எள்ளலாக சிரிக்கும் சத்தம் கேட்டது. உடனே அங்கிருந்து சத்தம் வந்த திசையை நோக்கி சென்றார்கள். 

 

பூமிக்கு அடியில் நவீன வசதிகளுடன் அவனின் கோட்டையை கட்டி இருந்தான் கிங். அதில் ஒரு சிறிய அறையில் தான் ஆருத்ராவையும் யுகியையும் அடைத்து வைத்திருந்தான். ஆருத்ரா அவனை சீற்றத்துடன் பார்க்க அவனோ அவர்களை பார்த்து நக்கலாய் சிரித்தான். “எதுக்காக டா எங்களை கடத்திட்டு வந்த..” என கோவமாக ஆரூ கத்த, அவளின் முடியை அழுத்தமாக பற்றியவன் அவன் முகத்தருகே நிமிர்த்தி, “யாரு கிட்ட குரலை உயர்த்தி பேசனும்ன்னு தெரிஞ்சி பேசு.. இது என்னோட கோட்ட.. இங்க உன் குரல் அதிகமா கேட்டுச்சு.. அடுத்த நிமிசமே நாக்கை அருத்துருவேன்” என்று எச்சரிக்க ஆருத்ரா வலியில் முகத்தை சுருக்கினாள். “அவளை விடு..” என யுகி கூற கிங் அவளை அடிக்க கை ஓங்கிய நேரம் கதவை உடைத்துக் கொண்டு ராகவும் மித்திரனும் உள்ளே நுழைந்தார்கள். 

 

இருவரும் கையில் துப்பாக்கி உடன் உள்ளே நுழைய அவர்களை கண்டதும் தான் இருவருக்கும் நிம்மதியாய் இருந்தது. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த ஆருத்ரா மித்திரனை பார்த்தபடியே யுகி தோளில் சாய்ந்து அழுதாள். “புத்திசாலி நாய்ங்க சரியா மோப்பம் புடிச்சி இங்க வந்துடுச்சு” என நக்கலாக கிங் கூற ராகவ்வும் மித்திரனும் துப்பாக்கியை அவனை நோக்கி காட்டியபடியே உள்ளே வந்தார்கள். கிங் அசையவே இல்லை. நக்கல் சிரிப்புடனே நின்றான். “உன்ன கிங்ன்னு சொல்றதா இல்ல வாங்ன்னு சொல்றதா இல்ல ஹென்றின்னு சொல்லட்டுமா?” என கேட்டபடியே ஹென்றியை நெருங்கி வர அவனோ அசையாமல் அப்படியே நின்றான். 

 

வாங் பெயரை கேட்டதும் ஆருத்ரா அவனை அதிர்ச்சியாக பார்த்தாள். இத்தனை நாட்களாய் வாங் என்ற பெயரில் அனைத்து வேலையும் செய்தது இவனா என்று ஆச்சரியமாய் இருந்தது. மித்திரன் கண்டுக் கொண்டதை நினைத்து ஹென்றிகே சற்று ஆச்சரியமாய் இருந்தது. “ஃபர்ஸ்ட் டைம் ஒருத்தன் என்னோட அடையாளத்தை சரியா கண்டு புடிச்சி இருக்கான்..” என மெச்சுதலாக கூறிட மித்திரன் அவனுக்கு பின்னே வந்து அவன் நெற்றியில் துப்பாக்கியை வைத்தான். 

 

அடுத்த நொடியே ஹென்றி மித்திரனின் காலை இடறி விட்டு கீழே குனிந்து அவன் முதுகில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவனுக்கு எதிரே வந்து நின்றான். அவனின் திடீர் செயலில் மித்திரன் தடுமாறா, ராகவ் ஹென்றி காலுக்கு அருகே சுட்டான். அதில் பதறிய ஆருத்ரா யுகி தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள். 

இப்பொழுது ராகவிற்கும் மித்திரனுக்கும் எதிரே நின்ற ஹென்றி துப்பாக்கியை மித்திரனை பார்த்து குறி வைக்க ராகவ் அவனை பார்த்து குறி வைத்தான். 

 

“என்ன அவ்ளோ சீக்கிரம் புடிக்கலாம்ன்னு தப்பு கணக்கு போடாதிங்க... இது என்னோட இடம்.. என்னோட அனுமதி இல்லாம இங்க இருந்து யாராலையும் வெளிய போக முடியாது” என சீற்றத்துடன் கூறினான். அதில் எள்ளலாக நகைத்த மித்திரன், “இவ்ளோ தூரம் வர தெரிஞ்ச எனக்கு வெளிய போக தெரியாதா?” என்றான். 

 

“இது கிங்யோட கோட்டை இங்க இருந்து வெளிய போறது அவ்வளவு சுலபம் இல்ல..” என கர்வத்துடன் கூறினான். மித்திரன் கண்ணாலே ஏதோ சமிஞ்சை காட்டிட ராகவ், “பரவாயில்ல எல்லாத்தையும் பக்காவா பிளான் பண்ணி இத்தன வருசமா கோழை மாதிரி அடையாளத்தை மாத்தி மாத்தி தப்பிச்சி இருக்க.. கண்டு பிடிக்க கூடாதுன்னு பாதாளத்துல மறஞ்சி இருக்க” என வேண்டும் என்றே அவனை தூண்டி விட்டான். 

 

இம்மாதிரி தலைகனத்தில் ஆடுபவர்களுக்கு அவர்களின் தன்மானத்தை தீண்டுவது போல் பேசினால் உடனே கோவம் வரும். கோவத்தில் நிச்சயம் கவனம் சிதறும் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என திட்டமிட்டான் மித்திரன். அவன் நினைத்தது போலவே ஹென்றிக்கு கோவம் வந்தது. அவனை சுற்றி இருக்கும் ஆயிரக்கனக்கானோர் அவனை கிங் என்று புகழ்ந்து மரியாதையுடன் நடத்தும் பொழுது இவன் கோழை என்று கூறினால் சுருக்கென்று இருக்காதா? தான் தான் ராஜாவாக இருக்க வேண்டும் என்ற கர்வத்தில் அவனுக்கு அவனே வைத்துக் கொண்ட பெயர் தான் வாங் மற்றும் கிங். போதை பொருள் விவகாரத்தில் அவனை வாங் போலவும், ஆட்களை கடத்தும் வேளையில் அவனை கிங் போலவும் காட்டிக் கொள்வான். அவனை சுற்றி இருக்கும் ஒரு சிலருக்கே அவன் தான் வாங் மற்றும் கிங் என்று தெரியும். இத்தனை நாட்களாய் அவனுடன் டீலிங் செய்த ரோகனுக்கும் சிதம்பரத்திற்கும் கூட கிங் வேறு ஆள் வாங் வேறு ஆள் என்று தான் நினைத்திருந்தார்கள். 

 

வாங் என்ற பெயருக்கு சீன மொழியில் ராஜா என்ற அர்த்தத்தை குறிக்கும். அதே போல் ஹென்றி என்ற பெயருக்கும் ராஜா என்ற அர்த்தத்தை தரும். அனைத்திலும் தாம் தான் ராஜாவாக இருக்க வேண்டும் எண்ணத்தில் பெயரை கூட அவனுக்கு ஏற்றது போல் வைத்துக் கொண்டான். இவர்களின் எண்ணத்தை புரிந்துக் கொண்டவன், மேலும் பேசுவதற்கு முன்பு, அந்த இடத்திற்கு அடித்து பிடித்து ஓடி வந்தான் செங். அவனை கண்டதுமே ராகவ் துப்பாக்கியை அவனை நோக்கி வைத்தான். வந்திருப்பவர்களை கண்டு மேலும் அதிர்ந்தான் செங்.

 

“இங்க என்ன பண்ற?” என ஹென்றி பல்லை கடிக்க, “வாங்.. அது வந்து.. நம்ம மொத்த அக்கௌன்ட் எல்லாத்தையும் சீஸ் பண்ணிட்டாங்க.. நம்ம கப்பல்ல கொண்டு வந்த பசங்களை தாய் போலீஸ் புடிச்சிட்டாங்க.. கிளப் எல்லாத்துக்குமே சீல் வச்சிட்டாங்க” என பதட்டத்துடன் சீன மொழியில் கூறிட அது ஹென்றிக்கு பெரும் அடியாக இருந்தது. கோவத்தில் மித்திரன் பக்கம் திரும்ப அவனோ அவனை பார்த்து நல்லவன் போல் புன்னகைத்தான். உடனே, சினம் கொண்ட ஹென்றி ஆருத்ரா இருக்கும் பக்கம் சரமாரியாக சுட்டான். அவன் செயலில் மித்திரனும் ராகவும் திகைத்தார்கள். நல்லவேளையாக யுகி மற்று ஆரு அமர்ந்திருக்கும் இடத்திற்கு சற்று முன்பு சுட்டிருக்கு அவர்களுக்கு ஒன்றும் ஆகவில்லை. ஆனால் பயத்தில் நடுங்கிக் கொண்டு இருந்தார்கள். 

 

“ஏய் மித்திரன்.. இதை இப்படியே விட்டு போல.. அடுத்த முறை குறி தப்பாது பாத்துக்க” என அடிக்குரலில் கூறினான். கடிகாரத்தை பார்த்த மித்திரன், “விட்டு போறதுக்கா இவ்வளவு தூரம் வந்தேன்” என்று கேட்டபடியே ராகவிடம் கண்ணை காட்ட ராகவ் பின்னாலிருந்து எட்டி உதைத்ததில் ஹென்றி கையில் இருந்த துப்பாக்கி யுகி காலில் சென்று விழுந்தது. செங் ராகவ் பிடியில் இருந்து தப்பித்து ஓட ராகவ் அவனை துரத்திக் கொண்டு ஓடினான். தடுமாறிய ஹென்றியை மித்திரன் அடிக்க துவங்க அங்கு அனல் பறக்கும் சண்டை ஆரம்பித்தது. 

 

செங் உயிரை காப்பாற்றிக் கொள்ள தப்பித்து ஓடிட அவனை சீரும் சிங்கமாய் துரத்திக் கொண்டு ஓடினான் ராகவ். மித்திரன் ஹென்றி முகத்திலே ஓங்கி குத்த கோவம் கொண்டவன் மித்திரன் நெஞ்சிலே எட்டி உதைத்தான். துப்பாக்கியை இடுப்பில் சொருகி வைத்த மித்திரன் அடிக்க வர ஹென்றி அதனை தடுத்தான். 

 

ஓங்கி மித்திரன் வயிற்றிலே, ஹென்றி எட்டி உதைக்க இரண்டடி தள்ளி சென்று விழுந்தான் . உடனே யுகி பக்கம் திரும்பிய ஹென்றி, “ஒழுங்கா கன் குடு டி” என கர்ஜிக்க, “முடியாது போடா” என்றவள் துப்பாக்கியை வாசல் பக்கம் தூக்கி எறிந்தாள். ஆத்திரம் கொண்டவன், அவளை அடிக்க போக மித்திரன் ஹென்றி முடியை கொத்தாக பற்றி அவனை அருகே இருக்கும் சுவற்றில் வேகத்துடன் மோதினான். வாயை பிளந்துக் கொண்டு அவன் அடிப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள் ஆரு. “பொண்டாட்டி என்ன அப்பறம் சைட் அடி, இப்போ எழுந்து இங்க இருந்து ஓடு” என அவளை பார்த்து கண்ணடித்த மித்திரன் ஹென்றி வயிற்றிலே ஓங்கி குத்தினான். அதில் நடப்பிற்கு வந்த ஆரு, யுகியுடன் எழுந்து அந்த அறையை விட்டு வெளியேறினாள். 

 

மித்திரனிடம் நன்றாக அடிவாங்கிக் கொண்டு இருந்தான் ஹென்றி. சாதாரணமாய் இந்தியன் இன்டலிஜன்ஸ்சில் சேர்ந்து விட முடியாதே.. ஹென்றி தெளிந்து அடிப்பதற்கு முன்பு சரமாரியாக அடித்துக் கொண்டு இருந்தான். நான்கு முறை நச் நச்சென்று ஹென்றி தலையை அங்கு இருக்கும் பெரிய மேஜையிலே போட்டு அடிக்க அவன் முகம் முழுவதும் ரத்தம் வழிந்தது. 

 

வெளியே சென்ற ஆருவும் யுகியும் ராகவ் செங்கை அடித்து வெளுத்துக் கொண்டிருப்பதை பார்த்தார்கள். ராகவ்விற்கு ஈடாக செங் சண்டை போட்டுக் கொண்டு இருந்தான். செங் ஒரு கட்டையால் ராகவ்வை அடிக்க வர அதனை கையாலே உடைத்தான் ராகவ். செங் கையை பிடித்து அதனை வளைத்து பிடித்துக் கொண்டிருக்க, “ராகவ் இந்தாங்க கன்” என்று வாசலில் இருந்து எடுத்த துப்பாக்கியை அவனிடம் தூக்கி போட, அதனை வாங்கியவன் செங் காலிலே சுட்டான். 

 

உள்ளே உடலை அசைக்க முடியாத அளவில் ஹென்றி தரையில் விழுந்து கிடக்க அவன் நெஞ்சிலே காலை வைத்து அழுத்தினான் மித்திரன். “அச்சச்சோ கிங்கே இந்த நிலைமையா” என நக்கல் செய்ய ஹென்றி இருமியபடியே ரத்தத்தை கக்கினான். அவனருகே குனிந்து அமர்ந்தவன், “கிங்ன்னு ரொம்ப ஆடுனில.. உனக்கு உன்னோட தகுதி என்னனு நான் காட்டுறேன்.. நாங்க உனக்கு நாய்ங்களா.. இந்தியன் இன்டலிஜன்ஸ் ஆபிசர்ஸ் பவர் என்னனு இனிமேல் தெரியும்.. சின்ன பசங்களை டார்ச்சர் பண்ற.. ஹான்.. டேய் நீ அஷ்வினை ரே*ப் பண்ணப்போ அப்படின்னா என்னனு கூட முழுசா தெரியாத வயசு.. அஷ்வின் மாதிரி எத்தனையோ பசங்க வாழ்க்கைய நீ நாசம் பண்ணி இருக்க.. எனக்கு தெரியும்.. உன் கிட்ட இருந்து எந்த உண்மையும் வராதுன்னு.. ஆனாலும் உன்ன ஏன் தெரியுமா உயிரோட புடிக்குறேன்?” என கேட்டு வில்லத்தனமாய் மித்திரன் சிரிக்க அவனை மிரட்சியுடன் பார்த்தான் ஹென்றி. 

 

“வாவ்.. உன்னோட பயத்தை பாக்கவே நல்லா இருக்கே.. இனிமேல் நீ சாகுற வரை இந்த பயம் உன் கண்ணுல இருக்கணும்.. கூட இருக்குரவுனுக்கே துரோகம் பண்றல்ல.. உன்ன புடிக்க ஹெல்ப் பண்ணாதே ஆல்வின் தான். உன்ன எப்படி கண்டு பிடிச்சோம்ன்னு யோசிக்குறியா?” என கேலியாக கேட்க, ஹென்றி அசைய கூட தெம்பு இல்லாமல் அவனை பார்த்தான். தனது சாவு இப்பொழுது வராது என அவனுக்கு தெரிந்து இருந்தது. எதிரில் இருப்பவன் சாவை வேண்டி யாசகம் கேட்க வைக்காமல் விடமாட்டான் என புரிந்துக் கொண்டான். 

 

கருத்து திரி: 

https://kavichandranovels.com/community/vsv-39-%e0%ae%a8%e0%af%88%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%b2%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-comments/

 


   
ReplyQuote

You cannot copy content of this page