About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
நைட் லைஃப் - 35
கப்பல் ஒன்று பெரும் சத்தம் எழுப்பிக் கொண்டே கரையை நோக்கி வர அதனை கரையில் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் வாங். மணி பத்து தான் ஆகி இருப்பதனால் நிறைய பேர் அங்கு வணிகம் செய்துக் கொண்டிருந்தார்கள். அவன் கட்டளையின் பெயரில் அனைத்தும் கச்சிதமாக நடந்துக் கொண்டிருந்தது. ஒரு காலை கல்லின் மீது வைத்து, இடுப்பில் கை பதித்திருந்தவன், சிறு படகுகள் கடலில் சென்று வருவதை அமைதியாய் பார்த்துக் கொண்டிருந்தான். சில்லென்று காற்று அவன் கேசத்தை கலைக்க, அதனை கைகளால் அடக்க முற்பட்டபடியே கப்பலில் ஆட்கள் ஏறுவதை பார்த்தபடியே அங்கிருப்பவர்களிடம் பேசினான். இந்த கப்பலில் தான் நாளை அவனின் ஆட்கள் வேறு நாட்டிற்கு செல்ல போகிறார்கள்.
விடியல் நேரத்தில் கப்பல் இங்கிருந்து கிளம்பும். எல்லையை கடக்கும் வரையிலும் அவர்களுக்கு நிம்மதி கொஞ்சமும் கிடையாது. ஊருக்குள் இருப்பவர்களை போல் கடற்படையினரை சமாளிக்க முடியாது. சிறிதாய் ஒன்று தவறினால் கூட நிச்சயம் பெரும் பிரச்சனை ஆகும். அதனால் மிகவும் கவனமாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவனின் ஆட்களிடம் அவர்களுக்கு புரியும் மொழியில் கட்டளையிட்டு கொண்டிருக்க அவனிடம் வந்தான் செங். அவன் கையில் இருக்கும் ஆப்பிள் டேப்லெடை அவனிடம் காட்டியவன், “சார் மித்திரனும் ராகவும் மலேசியா ஃப்ளைட் ஏறி இருக்குறதா தகவல் வந்திருக்கு.. எனக்கு என்னமோ ஏதோ கிளு கிடைச்சி இருக்குமோன்னு தோணுது.. ஏன்னா இந்த மாதிரியான நேரத்துல எதுக்காக ரெண்டு பேரும் மலேசியா போகணும்ன்னு சந்தேகமா இருக்கு” என சீன மொழியில் கூறிட அதனை அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான் வாங். உடனே அவன் மூளை பல கணக்கு போட ஆரம்பித்தது. தன்னை பற்றி அவர்கள் தெரிந்துக் கொண்டால் என்ன செய்ய வேண்டும், அவர்களை எப்படி தடுக்க வேண்டும் என்று பலவாறாக திட்டம் போட்டான். செங்கை பார்த்து மெலிதாய் புன்னகைத்தவன், “லெட் தெம் கோ.. ஐ வில் ஷோ தெம் ஹு இஸ் ரியல் ஓஜி” என்றிட, அவன் சொன்னது புரியாமல் அவனை பார்த்தான் செங்.
இரவு முழுதும் திலக் உடன் ஆருத்ரா, சாதனா, யுகி மூவரும் மருத்துவமனையில் இருந்தார்கள். சித்தார்த் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட, திலக்கை விசாரணைக்கு அழைத்து சென்றார்கள். இதற்கு இடையில் சித்தார்த் அம்மாவும் தங்கையும் மருத்துவமனைக்கு வந்து விட அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்தார்கள்.
ஆருத்ராவிற்கு அழுகை அதிகரித்தது. என்ன தான் அவன் தவறு செய்திருந்தாலும் மனதில் என்றும் அவன் தான் அவளின் குரு. அவனை பார்த்து தான் ஹாக்கிங்கில் விருப்பம் கொண்டு கற்றுக் கொண்டாள். அவனுக்கு இப்படி ஒரு முடிவு வரும் என்று அவள் நினைத்ததே இல்லை. சித்தார்த் அம்மா அழுவதை பார்க்கவே அவர்களுக்கு மனம் வலித்தது. பெற்ற தாய் மாரில் அடித்துக் கொண்டு கதறி அழுவதை பார்க்கவே வேதனையாக இருக்க ஆருத்ராவும் சாதனாவும் அவரை அனைத்துக் கொண்டு ஆறுதல் கூறினார்கள். திலக் சிலை போல் அந்த இடத்திற்கு வந்தான். சித்தார்த் வீட்டில் பிணமாக கிடந்த நிகழ்வே அவனின் மனதை பெரிதாய் பாதித்திருந்தது. என்ன ஆனது ஏதானது என்று சாதனா அவனை விசாரிக்க அதை எதையும் காதில் வாங்காமல் சித்தார்த் அம்மாவையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான். நாளை காலை தான் சித்தார்த் உடல் கிடைக்கும் என்றிட, அனைவரும் மருத்துவமனை வாசலில் காத்திருந்தார்கள்.
இடம் பேரடைஸ் கிளப்:
கிளப்பிற்கே உரித்தான மங்கிய வண்ண விளக்குகளால் அந்த இடம் மிளிர்ந்து கொண்டிருக்க, அந்த இடத்தின் முதலாளியான கிங் அப்பொழுது தான் வெளியில் இருந்து கிளப் உள்ளே நுழைந்தான். இரண்டு பவுன்சர்கள் அவனுக்கு பாதுகாப்பு வழங்க, அவனை அழைத்துக் கொண்டு முதல் தளத்தில் இருக்கும் விஐபி ஏரியாவிற்கு சென்றார்கள்.
இன்று கிளப்பை மூடி இருப்பதனால் அங்கு வெளியாட்களுக்கு அனுமதி இல்லை. கிங் அவனுக்கே உரித்தான சிம்மாசனத்தில் உண்மையான ராஜா போல் அமர்ந்து கீழே நடப்பவற்றை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அவனுக்கென மொத்தம் பன்னிரெண்டு கே கிளப்பும், ஸ்ட்ரிப் கிளப்பும் இங்கு இருக்கிறது. வருடத்திற்கு இதிலிருந்தே அவனுக்கு முன்னூறு மில்லியன் டாலர் லாபம் கிடைக்கிறது. இது வெறும் கிளப் வருமானம் தான், இந்த கிளப்பில் பல ரகசிய வேலைகளும் நிகழ்கிறது. அதில் முக்கியமான ஒன்று விபச்சாரம். இங்கு பெரும்பாலான ஆட்கள் ஓரினச் சேர்கையாலராக இருக்க அவர்களுக்கென்று தனித்துவமான விபச்சாரம் இங்கு நிகழும். மேற்கத்திய பொழுது போக்கில் ஒரு பங்கான ஸ்ட்ரிப் கிளப்பை முதன் முதலில் இங்கு துவங்கியது இவனே.
கட்டுமஸ்த்தான தேகத்துடன் இருக்கும் ஆடவன் நடு மேடையில் அனைவர் முன்னிலையிலும் ஆடைகளை அகற்றுவதை பொழுது போக்காக கண்டு ரசிக்க பல கூட்டம் இங்கு கூடும். இதில் ஆண்கள் பெண்கள் என இருபாலரும் பார்க்க வருவார்கள். இதில் கூத்து என்னவென்றால், மேற்கொண்டு பணம் கொடுத்தால் ஆடிக் கொண்டே ஆடை அவிழ்ப்பவர்கள் அவர்கள் மடியில் அமர்ந்து ஆடுவார்கள். மேற்கொண்டு காசு கொடுத்தால் அவர்களை தனியறைக்கு அழைத்து செல்வார்கள். இதிலிருந்து தான் அவன் கோடி கோடியாய் சம்பாதிக்கிறான். அவனின் அடுத்த குறிக்கோள் விகாஸ் மாகாணத்தில் அவனுக்கென்று பல கிளப் திறக்க வேண்டும் என்பது தான். விடலை பசங்களை மட்டும் வைத்து தான் அவன் தொழிலை செய்கிறானா என்று கேட்டாள் இல்லை. எந்த எந்த நாட்டில் இருந்து ஆண்களையும் எங்கிருந்து பெண்களையும் கடத்த வேண்டும் என்று அவனுக்கு நன்றாய் தெரியும். ஆசியா கண்டத்தில் இருக்கும் ஆடவர்களுக்கு தான் அதீத வரவேற்பு இருப்பதை கண்டுக் கொண்டவன், ஆசியா முழுவதும் குறிப்பிட்ட நாட்டில் இருந்து விடலையர்களை கடத்திடுவான். உதாரணத்திற்கு., சீனா, தென் கொரியா, நேப்பாள், ஜப்பான், இந்தியா, பிலிப்பைன்ஸ், ரஷ்சியா போன்ற நாடுகளிலிருந்து அவனின் கிளப்பிர்காக ஆட்களை கடத்திடுவான்.
அவன் கடுத்தும் ஆட்களை மூன்றாக பிரித்து மூன்று குழுவையும் வேறு வேற வேலைக்கு பயன்படுத்துவான். அஷ்வின் போல் இருந்த ஆட்களை நிறைய பணக்காரர்கள் வீட்டிற்கு அடிமையாக விற்று விடுவான். இவனிடமிருந்து நபர்களை வாங்குபவர்களின் உண்மையான முகவரி இவனுக்கு தெரியாது. பணத்தை ஒரு கையில் வாங்கி விட்டு ஆட்களை மறு கையில் கொடுத்து விடுவான். அடிமையாக வாங்கியவர்களை வாழ்நாள் முழுவது அவர்கள் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்வார்கள். ஒரு சிலர் வேலையாளாக பயன்படுத்த ஒரு சிலருக்கு அஷ்வின்க்கு நேர்ந்தது போல் நடக்கும். சாகும் வரையிலும் அந்த நபருக்கு அடிமையாக இருந்து சாக வேண்டியது தான்.
அடுத்து அழகான தோற்றத்தில் இருப்பவர்களை எல்லாம் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவான். குறிப்பிட்ட காலம் அவனை சேர்ந்த ஆட்கள் அந்த விடலையர்களுக்கு பயிற்சி வளங்குபார்கள். அப்பொழுதிலிருந்தே வலுக்கட்டாயமாக வேறு ஒரு ஆணிடம் உறவு கொள்ள வர்புர்த்துவார்கள். இங்கு வந்த அனைவருக்கும் முதல் வேலையாக தாய் பாசையை கத்து கொடுத்து விடுவார்கள். இதில் இருப்பவர்களுக்கு நன்றாய் ஆடவும் வார்த்தையாலே மற்றவர்களை மயக்கவும் கற்று கொடுப்பார்கள். சொல் பேச்சை கேட்காவிட்டால் மரண வலியை விட கொடிய வலியை கொடுத்திடுவார்கள்.
ஒயினை ருசித்தபடியே கீழே நடந்து கொண்டு இருக்கும் பயிற்சியை பார்த்துக் கொண்டிருந்தான் கிங். அவனின் ஆள் ஒருவன், “கிங் நம்ம சரக்கு ரெடின்னு இன்பார்மேஷன் வந்திருக்கு” என்று ஒருவன் கூறிட, அதில் லேசாய் தலையசைத்தவன் கீழே பயிற்சியை ஒழுங்கா செய்யாமல் தவறு செய்துக் கொண்டிருப்பவனையே பார்த்துக் கொண்டிருந்தான். “கிங், இப்போ சமிபமா அங்க போதை பொருள் மாட்டிக்கிச்சுன்னு பாடர்ல ரொம்ப செக்கிங் பண்றாங்க.. நம்ம வேணும்னா ஒரு ரெண்டு மூணு நாள் தள்ளி போடலாமா?” என நடுக்கத்துடனே தாய் பாசையில் கேட்டான். அதனை கேட்டதுமே கிங்கிற்கு கோவத்தில் கண்கள் சிவந்தது. உடனே ஒயின் பாட்டிலை தூக்கி போட்டு உடைக்க அங்கு இருந்த அனைவருமே மிரட்சியுடன் அவனை பார்த்தார்கள். கிங்கின் கோவத்திற்கு ஆளானால் என்ன ஆகும் என அங்கிருப்பவர்களுக்கு நன்றாய் தெரியும். “இந்த கிங் யாருக்காகவும் பயந்து நிக்க மாட்டான்.. எனக்கு வர வேண்டிய சரக்கு நான் சொன்ன தேதிகுள்ள வந்தாகணும்.. நாளைக்கே அந்த கப்பல் கிளம்பனும்.. குறுக்க எவன் வந்தாலும் கொன்னு போடுங்க.. நாளைக்கு என்ன பண்ணா நம்ம கப்பல் பிரச்சனை இல்லாமல் வருமோ அதை பண்ணுங்க” என அழுத்தமாய் தாய் பாசையில் கூறியவன் திரும்பி தவறாக ஆடிக் கொண்டிருந்த ஆடவனை பார்க்க அவனோ பயத்திலே உறைந்து விட்டான்.
அடுத்ததாக கிங் இன்னொரு ஆள் பக்கம் திரும்பி, “நாளைக்கு அங்க என்ன நாளுன்னு தெரியும்-ல?” என்றிட, “எஸ் கிங்” என பதட்டத்துடன் கூறினான். தன்னிடம் கப்பல் கிளம்புவதை ஒத்தி போட சொன்ன நபரை உருத்து விழித்தவன் அங்கிருந்து கிளம்பிட, கிங்கின் விசுவாசிகள் உடனே அவன் பின்னே சென்றார்கள்.
விடியற்காலையில் ஆருத்ராவும் யுகியும் அவர்கள் வீட்டிற்கு வண்டியில் சென்றுக் கொண்டிருந்தார்கள். இரவு முழுவது மருத்துவமனையிலே இருந்ததனால் இனி வந்ததை விசாரிக்க மறந்தார்கள். அவளுக்கு அழைத்து பார்க்க அவளுக்கு அழைப்பே செல்லவில்லை. கடைசியாக அவளிடம் பேசி விட்டு பதட்டத்துடனே வைத்ததை நினைத்து பார்த்தவள் யுகி உடன் இனியை தேடி வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.
“சீக்கிரம் போ டி.. அவ வேற ஃபோன் எடுக்க மாட்டிங்குரா.. எனக்கு பயமா இருக்கு.. அவ ஆல்வின் கூட தான் மீட்டிங்க்கு போனா. எனக்கு ஏதோ சரி இல்லன்னு தோணுது” என புலம்பியபடியே ஆருத்ரா வர யுகியும் பதட்டத்துடன் வண்டியை ஒட்டியபடியே, “பதட்டபடாத.. அவ ரூம்க்கு வந்து இருப்பாளோ என்னவோ” என்றிட, “இல்ல டி சித் விஷயம் தெரிஞ்சி கண்டிப்பா அவனை பாக்க ஹாஸ்பிடல் வந்திருப்பா.. எனக்கு ஆல்வின் மேல சந்தேகமா இருக்கு.. ஒரு வேல அவன் நம்ம இனிய ஏதாவது பண்ணிட்டா.. சித் இருக்குற இடம் நான் தான் ஆல்வின் கிட்ட தெரியாம உலரிட்டேன்.. இப்போ என்னால தான் சித் இல்ல.. இப்போ இனி அவன் கைல சிக்கி இருக்கா.. எனக்கு பயமா இருக்கு” என்று சொன்னவளுக்கு கண்ணெல்லாம் கலங்க யுகிக்கு பயம் நெஞ்சை கவ்வியது. அந்த சமயம் எங்கோ இருந்து வந்த கார் ஒன்று அவர்கள் முன்னே நிறுத்த இருந்த பதட்டத்தில் சடன் பிரேக் போட்டாள். “ஏய் சாவுகிராக்கி.. குடிச்சிட்டு வந்து எப்படி வண்டிய விடுறான் பாரு” என யுகி திட்டியபடியே வண்டியை வேறு பக்கம் திருப்ப பார்க்க ஆறேழு பேர் முகமூடி அணிந்திருந்தவர்கள் காரில் இருந்து இறங்கி அவர்களை சுற்றி வளைத்தார்கள்.
“ஆத்தி.. யுகி நம்ம மாட்டிக்கிட்டோம்.. பயமா இருக்கு டி” என்றிட, யுகி தையிரியமாக வண்டியை வேகமாய் ஓட்டி அங்கிருந்து தப்பிக்க பார்த்து ஆக்சிலரேட்டரை திருவினாள். வண்டியில் அவள் பறக்க நினைத்த நேரம் திடீரென்று புகை கண்ணை மறைக்க இருவரும் வண்டியிலிருந்து தலைசுற்றலுடன் கீழே விழுந்தார்கள். அடுத்த நொடியிலிருந்து இருள் சூழ்ந்துக்கொள்ள, இருவரும் சுயநினைவு இழந்தார்கள்.
கருத்து திரி:
Latest Post: நேசம் 15 Our newest member: P.Paramu Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page