All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

கனவுகள் வெல்ல காரியம் துணை

Page 3 / 3
 

VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Trusted Member Author
Joined: 6 months ago
Posts: 48
Topic starter  

அத்தியாயம் 26

நரசிம்மனின் மகன் பேசிக் கொண்டிருக்கும் போதே.. அவனது அழைப்பைத் துண்டிக்குமாறு அவன் உத்தரவிட்டான்.

 

பின் “எங்கே இருந்து இந்த ஃகால் வந்திருக்கு?” என்று கேட்டான்.

 

அதற்குள்.. இம்மாதிரி சாஃப்ட்வேர்.. கணிணி, சமூகவலைத்தளம், மற்றவர்களின் சமூகவலைத்தள கணக்கை முடக்க.. அல்லது கைப்பற்றவது போன்ற வேலைகளுக்காக அமர்த்தப்பட்ட குழுவை சேர்ந்தவர்கள். அந்த அழைப்பை ஆராய்ந்திருந்தார்கள்.

 

எனவே அவன் கேட்டதும்.. விபரங்களைக் கூறினர்.

 

“ஸார் இந்த ஃகால் எக்ஸேட்டா சென்னையில் இருக்கும் ஆவடி என்ற ஏரியாவில் இருந்து வந்திருக்கிறது. அதன் அட்ரஸ்..” என்று நரசிம்மனின் வீட்டு முகவரியை கூறினர்.

 

மேலும் அவர்கள் தொடர்ந்து “ஸார் ஆல்ரெடி.. இந்த அட்ரஸ் நம்மளோட இம்பார்ன்ட் லிஸ்டில் இருக்கு! இந்த அட்ரஸிற்கு சொந்தமானவர் மிஸ்டர் நரசிம்மன்! அவர் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர். அவர்தான் நான்கு வருடங்களுக்கு முன்.. பவித்ராவுடைய ஆராய்ச்சி தொகுப்பை அனுப்பி வைத்தார். அவர் ஒரு வாரத்திற்கு முன்பு தான் இறந்தார்.” என்ற கூடுதல் தகவல்களையும் கூறினர்.

 

உடனே பரபரப்புற்ற அவன் “அவர் பவித்ராவுடன் கான்டெக்ட்டில் இருந்திருக்கிறாரா என்று செக் செய்யுங்க..” என்று உத்தரவிட்டான்.

 

“நோ ஸார்! அன்றைக்கு பிறகு அவரை கண்காணிச்சதில்.. அவர் கிளியராக இருந்தார். பவித்ராவுடைய புரோஜெக்ட்டை தடுக்க அவரால் ஆன முயற்சியைச் செய்துட்டு தான் இருந்தார். அப்பறம் பவித்ரா ஹாஸ்பெட்டலில் போலீஸார் அட்மிட் செய்த போது.. பார்க்க வந்தவர், கொரனா கெடுபிடி காரணமாக பார்க்கமாலேயே சென்றுவிட்டார். அடுத்து பவித்ரா கழுத்தில் காயம் ஏற்பட்டு அட்மிட் ஆனா போதும்.. பார்க்க வந்தவர்.. இருபது நிமிடங்களில் கிளம்பிவிட்டார் என்று நாம் அவரைக் கண்காணிக்க அனுப்பி வச்ச ஆள் கொடுத்த ரெக்கார்ட்ஸில் இருக்கு! அதற்கு பிறகு.. அவரோட ஆக்டிவிட்டிஸில் எந்த வித மாற்றமும் தெரியாதால்.. அவரைக் கண்காணிப்பதை நிறுத்த சொல்லிட்டோம்.” என்றான்.

 

ஆனால் அவன் கூறியதில் பவித்ரா கழுத்தில் அடிப்பட்ட போது.. பார்க்க வந்திருக்கிறார் என்ற செய்தியில் அவன் பரபரப்புற்றான். 

 

பவித்ராவின் கழுத்தில் இருந்த ஸ்கேன் கோடு பச்சை குத்தியிருந்த தோல் காணாமல் போனதிற்கு காரணமும் புரிந்தது. ஏனெனில் நரசிம்மனின் மகனுக்கு அந்த ஸ்கேன் கோடு கிடைத்ததால் தான்.. அவரது தனிப்பட்ட எண்ணிற்கு அழைப்பு விடுத்திருக்கிறான். 

 

“ஸார் அப்போ.. இத்தனை நாட்கள் நரசிம்மனிடம் தான் இருந்திருக்கு! நாம் அன்னைக்கு மிரட்டியதால்.. இதை வெளியிடாமல் இருந்திருக்கிறார். அவர் இறந்ததும்.. அவருடைய மகன் முட்டாள்தனமாக நம்மிடமே பேசியிருக்கிறான். என்ன செய்யலாம். அவனை கொன்றுவிட்டு.. இந்த ஸ்கேன் கோட்டையும் கைப்பற்றிக் கொண்டு வந்துவிடலாமா!” என்று கேட்டான்.

 

“இதை என்னிடம் கேட்க வேறு செய்யணுமா! கோ அன்ட் ரைட் ஆஃப் ஹிம்!” என்றான்.

 

“அப்போ உடனே இந்தியாவில் இருக்கிற நம்ம..” என்பவனை இடையிட்டவன் “வேண்டாம். அவங்களை கான்டெக்ட் பண்ண வேண்டாம். அவங்க கையில இருக்கிற ஸ்கேன் கோட்டை மட்டும் அழிக்க சொல்லிருங்க! இந்த மேட்டரை இனி நாமளே முடிச்சுரலாம். நாமெல்லாம் உலகம் நம்ம கையில் வரணும் என்று நோக்கத்தோட வொர்க் பண்ணோம் ஆனா அவங்க இந்தியா அவங்க கைக்கு வந்தா போதும் என்று மட்டும் தான் நினைக்கிறாங்க! சோ நாமளே முடிச்சுரலாம். நான்கு வாரத்திற்கு முன்னாடி சேர்ந்த நாலு பசங்களை வச்சு முடிச்சுருங்க! எப்படி முடிக்கிறதுன்னு சொல்லிக் கொடுத்திருங்க..” என்றான்.

 

அடுத்த அரை மணி நேரத்தில் இந்தியாவில் ஆவடியில் உள்ள நரசிம்மனின் தங்கியிருந்த அடுக்கு மாடி கட்டிடத்தில் ஒரு விபத்து நிகழ்ந்தது. ஆறாவது மாடியில் இருந்து நரசிம்மனின் மகன் கால் இடறித் தவறி விழுந்துவிட்டான். அதை தனது கண்களால் பார்த்த சாட்சியாக அடுத்த தெரு பையனும்.. அந்த வழியாக வந்த ஐ டி கம்பெனியில் பணிபுரியும் ஒருவனும் இருந்தார்கள். போதாக்குறைக்கு.. ரீல்ஸ் பைத்தியம் ஒருவன் ரீல்ஸிற்காக நடுதெருவில் ஆடிய பொழுது.. நரசிம்மனின் மகன் தவறி விழுந்தது அதில் தெரிந்தது. எனவே விபத்து என்று ஆம்புலன்ஸ் வந்து இறந்து கிடந்தவனை ஏற்றிக் கொண்டு செல்ல.. அவனின் அன்னை “நான் கடைக்கு போயிட்டு வருவதற்குள் இப்படி ஆகிருச்சே!” என்று தலையில் அடித்துக் கொண்டு அழ பக்கத்து வீட்டார்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.

 

அப்பொழுது நாலு இளைஞர்கள் மட்டும் தனியாக ஒரு கடைக்கு பின்னால் ஒதுங்கினர். அவர்கள் நாலு பேரும் சொல்லி வைத்தாற் போன்று மணிக்கட்டில் கட்டுப் போட்டிருந்தார்கள்.

 

ஒரு இளைஞன் தனது பாக்கெட்டில் இருந்து சிறு பெட்டியை எடுத்தான்.ஒரு இளைஞன் தனது செல்பேசியில் காணொளியை ஓட விட்டான். அந்த பெட்டியை திறந்துக் காட்டவும், அதில் பதப்படுத்து வைக்கப்பட்டிருந்த சிறு தோல் பகுதி இருந்தது. அது பவித்ராவிடம் இருந்து எடுத்தது தான்!

 

காணொளியில் அதைப் பார்த்துக் கொண்டிருந்தவன் “அதை அழிச்சுரு! அவனோட ஃபோன் லேப்டாப் எல்லாம் செக் செய்தீங்களா?” என்று கேட்டான்.

 

“எஸ் ஸார்! அவனோட லேப்டாப்பில் இதோட பிரின்ட் அவுட் இருந்தது. அதை அழிச்சுட்டேன். அவனோட ஃபோனில் இந்த ஸ்கேனை ஃபோட்டோ எடுத்து வைத்திருந்தான். அதையும் அழிச்சுட்டேன்.” 

 

“குட் ஜாப்!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

 

சிறு மூச்சை இழுத்துவிட்டு “இந்த தொல்லையை முடிச்சுட்டோம். இனி பெரிய தொல்லையை முடிக்கணும். அவங்களை நம்ம ஆட்கள் ஃபாலோ பண்ணிட்டு இருக்காங்க தானே?” என்று கேட்டான்.

 

“எஸ் ஸார்! அவங்க இப்போ சிட்னி ஏர்போர்ட்ல மடகாஸ்கர் செல்ல வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..” என்றான்.

 

“ம்ம்! அவங்க தனியா பிரிக்கிறதுக்கு ஏற்பாடு செய்யுங்க! ஐ மீன்.. மூன்று பேரில் அந்த பவித்ராவை கிட்நாப் செய்யுங்க! இல்லைன்னா.. தனியா அடிப்பட்டு ஹாஸ்பெட்டல் அட்மிட் இந்த மாதிரி எதாவது செய்யுங்க..” என்றான்.

 

“ஒகே ஸார்..” என்றுவிட்டு.. அந்த உத்தரவை செயலாற்ற கூறினான்.

 

நரசிம்மனின் மகனை எளிதில் அழித்துவிட்ட நிம்மதி அவர்களுக்கு!

 

ஆனால் அவர்கள் அறிந்திருக்கவில்லை. 

 

நரசிம்மன்.. பவித்ராவின் இந்த நிலைக்கு இவர்கள் தான் காரணம் என்றும் தன்னையும் மிரட்டியதைப் பற்றியும் கூறி ஒரு வீடியோ எடுத்து அதனுடன் இந்த ஸ்கேன் கோட்டையும் எடுத்து அதை பத்திரமாக பென்ட்ரைவில் வைத்துள்ளார். அது தற்பொழுது இறந்து போன நரசிம்மனின் மகன் பென்ட் பாக்கெட்டில் உள்ளது.

 

விக்ரம், பவித்ரா அபினவ் சிட்னி விமானநிலையத்தில் மடகாஸ்கர் செல்லும் விமானத்திற்காக காத்திருந்தார்கள். மடகாஸ்கரில் புயல் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதால் விமானம் செல்வது தாமதமானது. அரை நாள் வரை வரை காத்திருந்தும்.. விமானம் புறப்படவில்லை‌. இன்னும் புயல் ஓயவில்லையோ.. என்று செய்தி பார்த்தவர்கள் கவலைக் கொண்டார்கள். ஏனெனில் மடகாஸ்கரில் புயல் காரணமாக பலத்த மழை பெய்துக் கொண்டிருந்தது. 

 

ஆனால் விக்ரம் மிகத் தீவிரமாக அவனது செல்பேசியை பார்த்துக் கொண்டிருந்தான். மற்றவர்களும் என்ன எது என்று கேட்கவில்லை. ஏனெனில் நேற்று.. அவர்களது எதிரி யார் என்று தெரிந்துவிட்டதாக விக்ரம் கூறியதும்.. நிச்சயம் அவர்கள் யார் என்ன என்ற முழு விபரங்களை ஆராய்ந்துவிட்டு தங்களிடம் கூறுவான் என்று காத்திருந்தார்கள். அதே சமயத்தில் யார் என்று தெரிந்துவிட்டது விக்ரம் கூறியதும் யார் என்று கேட்டு தெரிந்துக் கொள்ள ஆர்வமும் கொள்ளவில்லை. ஏனெனில் அவர்களை யாரோ கண்காணிப்பது போன்ற உணர்வு அவர்களுக்கு இருந்தது. அதனால் வெளிப்படையாக பேசத் தயங்கினார்கள்.

 

விக்ரம் அந்த ஸ்கேன் கோடில் குறிப்பிட்டு இருந்தவர்கள் யார் யார் என்ன என்று பார்த்தவனுக்கு.. இறுதியில் தெரிந்துக் கொண்ட செய்தி திகைப்பையும் சிரிப்பையும் ஒருங்கே கொடுத்தது.

 

அந்த செய்திகளை கிஷோரின் மெயிலுக்கு அனுப்பியவன், திடுமென தனக்கு இரு பக்கமும் அமர்ந்திருந்தவர்களிடம் “நான் ஒருதரம் சொல்லியிருக்கேன் ஞாபகம் இருக்கா! எதற்கும் லீகல் அன்ட் இல்லீகல் வே என்று‌ இரண்டு வழி இருக்கும். உலக நாடுகளை ஒற்றுமைப்படுத்தவும்.. மற்ற நாடுகள் கூட பரஸ்பரமாக இருக்கவும் நிறுவப்பட்டது தான்‌.. ஐநா சபை, யுனெஸ்கோ நிறுவனம்! இந்த மாதிரி இருப்பது லீகல் வே! இதுல இல்லீகலாகவும் ஒரு குழு இயங்குது பவி! அவங்க தான் உனக்கு எதிரா இருக்காங்க..” என்றான்.

 

பவித்ராவும் அபினவ்வும் புரியாமல் பார்க்கவும், விக்ரம் “விளக்கமா சொன்னால் உங்களுக்கு புரியும்.” என்றதும்.. பவித்ரா எச்சரிக்கையுடன் அவனது கையைப் பிடித்து வேண்டாம் என்று தலையை ஆட்டினாள்.

 

அதற்கு சிரித்த விக்ரம் “நம்மை கண்காணிச்சுட்டு தான் இருக்காங்கன்னு தெரியும். ஆனா கவலைப்படாதே.. நம்ம கிட்ட அனுப்பிய வாய்ஸ் ரெக்கார்ட்டை நான் ஆஃப் பண்ணிட்டேன்.” என்று தனது கையில் இருந்த பட்டனை காட்டினான்.

 

அபினவ் “இது?!” என்கவும், விக்ரம் “நீ வாங்கின இயர் ஃபோனில் ஒட்டி இருந்துச்சு! நான் அப்பவே பார்த்து ஆஃப் பண்ணிட்டேன்.” என்றான்.

 

உடனே பவித்ரா பயத்துடன் சுற்றிலும் பார்த்து “அப்போ அந்த ஏர்போர்ட்ல நடந்த மாதிரி அட்டெக் பண்ணுவாங்களோ!” என்றாள்.

 

அதற்கு விக்ரம் “அது சின்ன ஏர்போர்ட்.. ஆனா இது பெரிய ஏர்போர்ட் இங்கே பண்ண மாட்டாங்க..” என்றான்.

 

அபினவ் “அப்போ நம்மளை இந்த பாடுப்படுத்தவங்களைப் பற்றி சொல்லுங்க! எவன் அவன் என்று எனக்கு தெரிந்தாகணும்.” என்றான்.

 

அதற்கு விக்ரம் “எவன் என்று கேட்காதே.. எவன்கள் என்று கேளு!” என்றவன், தொடர்ந்து கூற ஆரம்பித்தான்.

 

“இது பெரிய சோஷியல் நெட்வொர்க்.. இந்த இயக்கத்தில் மொத்தம் எத்தனைப் பேர் இருக்கிறாங்க என்று தெரியுமா! மொத்தம் இருபதாயிரம் பேருக்கு  மேலே இருக்கும். அவங்க இதுவரை என்னனென்ன செய்திருக்காங்க.. என்ற டிடெய்ல்ஸ் வரை இருக்கு! நான் கால்வாசி தான் பார்த்திருக்கேன். அவங்க எப்படிப்பட்டவங்க என்றால்.. முக்கியமான ஆட்கள் தான் பெரிய ஆட்கள் தான்.. ஆனா பெரிய பதவியிலோ.. முக்கியமான பதவியிலோ இருக்க மாட்டாங்க! ஆனா அதற்கான எல்லா தகுதியும் இருக்கும். சிம்பிளா சொல்லணும் என்றால்.. கவுர்மென்ட் ஆபிஸில் கலெக்டர் தான் பெரிய பதவி.. ஆனா அவரை விட.. அவரோட பி ஏ க்கு தான் எல்லாம் தெரியும். அந்த பி.ஏ இவங்க இயக்கத்தில் இருக்கிறாங்க! பெரிய தொழிலதிபர்கள், டாக்டர்ஸ், மிலிட்டரி ஆபிஸர்ஸ், பாலிடிஷியன்ஸ் மட்டுமில்லை.. ஸ்போர்ட்ஸ் பர்சனாலிட்டிஸ், ஆக்டர்ஸ் கூட இருக்காங்க..” என்றான்.

 

பவித்ரா “இவங்கெல்லாம்.. இப்படி இயக்கம் ஒண்ணு ஆரம்பிச்சு என்ன செய்யப் போகிறாங்க?” என்று கேட்டாள்.

 

“இவங்களோட சில ஆக்டிவிட்டிஸ் பற்றி டிடெய்ல்ஸ் இருந்துச்சு! அதைப் படிச்சதில் இருந்து என்ன தெரிஞ்சதுன்னா.. ஐநா சபை மாதிரி இந்த உலகத்தில் இருக்கிற நாடுகளை கன்ட்ரோல் பண்ண நினைக்கிறாங்க!” என்றான்.

 

“என்ன ஆக்டிவிட்டிஸ்?”

 

“பெரிய அளவில் என்றால் பார்த்தால்.. நாடுகளுக்கு இடையே ஆனா தொழில் முறை ஒப்பந்தத்தில் தலையிட்டுருக்காங்க, நாடுகளுக்கு இடையே நடக்கிற போரில் தலையிடுவாங்க! பிரசிடன்ட் எலெக்ஷன்ல ஒரு நாட்டோட பிரசிடன்ட் வாங்குகிற வோட்ஸ் வச்சு.. அந்த பிரசிடன்ட்க்கு மரியாதை என்கிற பெயரில் காக்கா பிடிக்கிறாங்க.. எதுக்கு என்றால்.. அந்த நாட்டில் மற்ற நாடுகள் முதலீடு செய்வதற்கு! அப்பறம் ஒரு நாட்டோட ப்யுட்டிஷியன் புரோடெக்ட்ஸ்  விற்கணுமா.. அப்போ அந்த நாட்டோட சார்பா கலந்துக்கிட்ட பொண்ணுக்கு உலக அழகி பட்டம் கொடுப்பாங்க.. இல்லைன்னா.. அந்த நாட்டில இருக்கிற மாடலிங்ஸ் மற்றும் சினிமா உலக மக்களால் கவரப்படும். முதல்ல இந்தியா இந்த லிஸ்டில் இருந்துச்சு.. இப்போ சௌத்கொரியா இருக்கு! இந்த வேலைகளைச் செய்ய இந்த இயக்கத்தை சேர்ந்த ஆட்கள் செயல்படுவாங்க! அதாவது அவங்க கைக் காட்டுகிற விசயம் தான் நடக்கணும்.. என்று நினைக்கிறாங்க! அதற்கு கமிஷனும் அவர்களுக்கு உண்டு. லாபத்தில் பங்கும் உண்டு! சில சமயம்.. முதலீடு செய்யும் நிறுவனம் அவங்களுடையது ஆகவும் இருக்கலாம்.” என்றான்.

 

அதைக் கேட்டு இருவரும் வாயைப் பிளந்தார்கள்.

 

பவித்ரா “இவங்க எதுக்கு நான் பண்ர ரீசர்ச்சில் தலையிடராங்க! ஒரு உண்மையைத் தானே நிரூபிக்க நினைக்கிறேன்.” என்றாள்.

 

அதற்கு விக்ரம் “இது நாம் முதல்ல பேசிட்டது தான் பவி! உன்னோட ரீசர்ச் வெற்றிப் பெற்றால்.. தமிழ் மொழி தான் முதல் மொழி.. தமிழர் இனம் தான் முதல் இனம் என்று நிரூபிக்கப்படும். அப்படி நிரூபிக்கப்பட்ட.. கவனம் முழுவதும்.. நம் பக்கம் திரும்பும்! எப்படி ப்யுட்டி புரோடெக்ட்ஸ் சேல்ஸ் ஆன மாதிரி.. தமிழ் பரவும்! அந்த கவனத்தை அவங்க தர விரும்பலை… அதுதான் காரணமா இருக்கும். இதற்காக அவங்க பெரும்புள்ளிகளிடம் இருந்து ஸ்பான்சர்ஸ் கிடைச்சுருக்கலாம்.” என்றான்.

 

அதற்கு பவித்ரா “அந்த டாக்டர் நார்த் இன்டியாகாரன் கிட்ட ஒருமுறை பேசினதை நான் கேட்டிருக்கேன். இந்தியாகாரனும் பணம் வாங்கிட்டு அவனுக்கு வேலை செய்யறானா!” என்றாள்.

 

விக்ரம் “பணம் வாங்கிட்டு வேலை செய்கிறானா.. இல்லை இவனும் பணம் கொடுத்து வேலை வாங்குகிறானா!” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டான்.

 

இருவரின் விழிகளும் ஆச்சரியத்தில் அகன்றன.

 

“இந்தியாவில் ஹிந்தி மொழி தான் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும். முதன்னை மொழி தமிழ் இருக்கக் கூடாது என்பதற்காக இதுவரைக்கும் போவாங்களா..” என்று ஆத்திரத்துடன் பவித்ரா கேட்டாள்.

 

“முதல்ல இங்கிருந்து தான் ஆரம்பித்திருக்கும் பவி! ஹிந்தி திணிப்பு ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்கும் பொழுது.. உலகத்தின் பொது மொழி ஏன் இந்தியாவில் முதன் மொழியாக இருக்கக் கூடாது என்றும்.. தமிழ் மற்றும் தமிழர் தான் முதன்மையாக இருக்க வேண்டும் என்று உலகம் முழுவதும் ஆதரவு கிடைக்க கூடாதுன்னு என்ன செய்வாங்களோ.. அதைத் தான் செய்துட்டு இருக்கிறாங்க..” என்றான்.

 

அபினவ் “இவங்க பார்வைக்கு எப்படிப் போச்சு?” என்று கேட்டான்.

 

விக்ரம் “அதுதான் பவி சொன்னாளே நரசிம்மன்..  அவளோட புராஜெக்ட்ஸை மத்திய அரசு மற்றும் வெளிநாட்டிற்கு அனுப்பி வைத்தார் என்று! அப்போ அவங்க கண்ணில் பட்டிருக்கும். அவங்க கிட்ட இருந்து வந்த மிரட்டலால் அவர் பின்வாங்கியிருக்கிறார். ஆனா உன்னைப் பார்க்க வந்த போது.. உன் கழுத்தில் இருந்த ஸ்கேன் கோட்டை எடுத்துட்டு போயிருக்கிறார்.”

 

“அப்போ இன்னும் அது அவர் கிட்ட தான் இருக்கும். ஆனா அவர் ஏன் எந்த ஆக்ஷனும் எடுக்கலை?” என்று கேட்டாள்.

 

அதற்கு விக்ரம் “இப்போ தான் மட்டும் தெரிஞ்சுட்டு என்ன பண்ணிட்டு இருக்கேன்! சும்மா தானே உட்கார்ந்துட்டு இருக்கேன். வெறும் இதை வச்சுட்டு ஒண்ணும் செய்ய முடியாது. ஸ்ட்ரான்ங் எவிடனஸ் வேணும். நம் மேலே நடந்த தாக்குதலை டெரரிஸ்ட் அட்டெக்கா மாத்தியிருக்காங்க! நம்மளோட ரீசர்ச்சை வெறும் அட்டென்ஷன் கிரியட் செய்வதற்காக கற்பனையான ரீசர்ச் என்று நம்ப வச்சுருக்காங்க! இவங்களை சர்வ சாதாரணமாக எதிர்த்து விட முடியாது. இவங்களை அப்பறம் பார்க்கலாம். முதல்ல இவங்க தடுக்க நினைக்கிறதை சாதிச்சு காட்டணும்.” என்றவனின் குரல் இறுதியில் இறுகியிருந்தது.

 

பவித்ரா கவலையுடன் “அதைத்தான் வெறும் கற்பனை கதை என்று பரப்பி‌ விட்டுட்டாங்களே!” என்றாள்.

 

“அது உண்மை என்று நிரூபிக்க போராடணும் என்று சொன்னதை மறந்துட்டிங்களா!” என்று சிரித்தான்.

 

அதற்கு அபினவ் “ஸார் நீங்க சரியா சொன்னீங்க! பவித்ரா மேம்.. வெற்றியை நெருங்கிட்டோம் என்று சொன்ன போது.. இந்த டைமில் சோர்வு வரும்.. சோர்ந்திடாதேன்னு சொன்னீங்க! இதோ சோர்ந்துட்டாங்க! பட் ஐயம் நாட்! கண்டிப்பா முடிவு வரை போரடிரணும்” என்றான்.

 

“நோ! நோ! ஐயம் ஒகே! நானும் இதை விடப் போவதில்லை. என்ன பண்ணலாம்?” என்று அவனிடமே கேட்டாள்.

 

“இருக்கிற நிலைமையைப் பார்த்தால்.. மடகாஸ்கருக்கு போக முடியாது போல! அதனால இந்தியாவிற்கு போகலாம். இந்த புயல் எல்லாம் ஓய்ந்த பின்.. இந்தியப் பெருங்கடலுக்கு போகப் போகிறோம். அதன்பின் நம்மளோட எவிடனஸை தகுந்த ஆதாரங்களோட வெளியிடப் போகிறோம்.” என்றான்.

 

“அதற்குள் அவங்க நம்மை மறுபடியும் கொல்ல ட்ரை செய்வாங்க! அப்போ எப்படியாவது.. அவங்களைப் பிடிச்சு.. உண்மையை ஒத்துக்க வைக்கணும். அப்போ நம்ம ஆதாரங்களை அவங்களோ வாக்குமூலத்தோட வெளியிட்டா.. அதற்கு பலன் கண்டிப்பா கிடைக்கும்.” என்றான்.

 

அபினவ் “சூப்பர் ஸார்! அப்போ எப்பவும் அலர்ட்டா இருக்கணும்.”

 

“பாஸ்ட்டாவும் இருக்கணும். நாம் இரண்டாக பிரியலாம். நீங்க இரண்டு பேரும்.. இங்கே ஏர்போர்ட் லாக்கர்ல வச்சுருக்கிற.. பானைப் பகுதி அப்பறம் பழங்குடியினர் கொடுத்த கிஃப்ட்டை எடுத்துட்டு கன்னியாகுமரிக்கு போங்க! லிசன் தனியாக எங்கேயும் போய் விடாதீங்க! கிஷோர் கிட்ட சொல்லி சில கார்ட்ஸை கன்னியாகுமரிக்கு வரச் சொல்றேன். அவங்க பாதுகாப்பில் இருங்க! நம்மளோட எதிரிகளை சீக்கிரம் கண்டுபிடிச்சுரலாம். அவங்க மணிக்கட்டில் ஸ்கேன் கோட் இருக்கும். அதை வச்சு.. உஷாரா இருங்க! நான்.. ஸ்ரீலங்காவிற்கு போய்.. அங்கே லாக்கரில் வச்ச அந்த அரிய மீனை எடுத்துட்டு வரேன். அந்த கல் பலகை என்கிட்டவே இருக்கட்டும் அது என்னோட லக்கி சார்ம்!” என்கவும்.. அங்கு சிரிப்பலை பரவியது. 

 

கையில் இருந்ததை அவர்கள் அழித்துவிட்டது அறியாது விக்ரம் கவனம் கூறிக் கொண்டிருந்தான்.

 

விக்ரம் திட்டமிட்டபடி அபினவும் பவித்ராவும் இந்தியாவிற்கும்.. விக்ரம் ஸ்ரீலங்காவிற்கும் பயணப்பட்டார்கள்.

 

லாக்கரில் இருந்தவற்றை எடுத்துவிட்டு பவித்ராவை அழைத்த பொழுது.. கேட்டக் குரலில் விக்ரம் கதி கலங்கிப் போனான்.

 

“உன்கிட்ட இருப்பதை எடுத்துக் கொண்டு உடனே வா.. இல்லைன்னா பவித்ராவையும் அபினவ்வையும் உயிருடன் பார்க்க முடியாது.” 

 

விமானத்தில் ஏறி அங்கு சென்ற மணித்துளிகள் வருடங்களாய் விக்ரமிற்கு கனத்தது.

 

கிஷோர் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலுக்கு விரைந்து மூச்சு வாங்க அறையின் அழைப்பு மணியை அடித்தான். ஒருவன் கதவு திறந்ததும்.. உள்ளே சென்றவன்.. அங்கு பவித்ரா, அபினவ், கிஷோர் ஆகியோர் வாய், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மண்டியிட்டு அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ந்தாலும்.. அவர்களுக்கு வேறு எந்த ஆபத்து இல்லாதிருப்பதைக் கண்டு நிம்மதியும் கொண்டான். 

 

அப்பொழுது அவனுக்கு பின்னால் இருந்தவன், அவனது பின்னங்கழுத்தில் அடிக்கவும்.. மண்டியிட்டு விழுந்தவனின் கரங்களும் கால்களும் வாயும் கட்டப்பட்டு அவர்களுடன் அமர வைக்கப்பட்டான்.

 

அங்கு நின்றிருந்த நான்கு பேரின் மணிக்கட்டிலும் காயம் ஆனதற்காக தழும்பு இருப்பதைக் கண்டு.. எப்படி இவர்கள் ஏமாந்தார்கள்.. என்று புரிந்தது. எதிரிகளும் சுதாரித்து விட்டதும் புரிந்தது.

 

இவர்களிடம் எவ்வாறு தப்பிப்பது என்று சுற்றிலும் பார்த்தவனுக்கு எந்த வழியும் கிடைக்கவில்லை. நான்கு பேரின் கையில் இருந்த கத்தி என்னேரமும் அவர்களைப் பதம் பார்த்து விடும் என்று அவனுக்கு புரிந்தது. அதனால் துடிக்கும் இதயத்தை அவனால் நிறுத்த முடியவில்லை.

 

அவர்கள் நான்கு பேரையும் அழைத்த ஒருவன் அவர்களின் கண் முன்னாடியே பானைப் பகுதியையும் பழங்குடியினர் கொடுத்த பானையையும் உடைத்தான். அவர்களின் பையில் இருந்த செல்பேசியை பெட்ரோல் ஊற்றி எரித்தான்.

 

பவித்ரா மறுப்பாக தலையசைத்தவாறு எழ முற்படவும்.. அவளது தலையில் அடித்து அமர வைத்தார்கள்.

 

அவர்களது உழைப்பை அழிப்பதை மூவரும் தடுக்க இயலாது கண்கள் கலங்க பார்த்தார்கள்.

 

நான்கு பேருக்கும் இதுதான் அவர்களது இறுதி மூச்சு என்று தெரிந்துவிட்டது‌.

 

பின்னர் விக்ரமின் பையில் இருந்த பெட்டியை எடுத்து அதில் இருந்த மீனை அதிசயமாக பார்த்துவிட்டு அதையும் எரித்தார்கள்.

 

பின்னர் கல் பலகையை எடுத்த ஒருவன் அதை இரண்டு கையாலும் தலைக்கு மேலே உயர்த்தி ஓங்கி தரையில் அடித்தான்.

 

அதனால் அதிர்ச்சியில் அவர்களுக்கு அந்த உலகமே ஆடியது போன்று இருந்தது.

 

இல்லை.. உண்மையிலுமே அந்த உலகம் பெருத்த சத்தத்துடன் ஆடியது. 

 

நின்றுக் கொண்டிருந்த அந்த நான்கு பேரும் அதிர்ச்சியுடன் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே ஓடினார்கள்.

 

அங்கிருந்த மேசையும் விளக்குகளும் ஆடின. 

 

அதற்கு பெயர் பூகம்பம்!


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Trusted Member Author
Joined: 6 months ago
Posts: 48
Topic starter  

அத்தியாயம் 27

தங்களது இலட்சியத்திற்காக.. உயிரைப் பற்றிக் கூடக் கவலைப்படாது.. பல ஆபத்துக்களையும் இயற்கை சீற்றங்களையும் தாண்டி வந்து சேகரித்தவைகளை அழிக்கப்படுவதைப் பார்த்து..  அவர்கள் திமிறினர். ஆனால் அவர்களிடம் அடி வாங்கி சோர்ந்து அமர்ந்தார்கள். எதற்காக இவ்வளவு நாட்கள் போராடினார்களோ.. அந்த ஆதாரங்களை அவர்கள் நொடிப் பொழுதில் அழித்து விட்டதை கண்டு.. திக்கித்து தடுக்க இயலாதவர்களாய் அமர்ந்தார்கள். அப்பொழுது.. அவர்களது உள்ளத்தின் உணர்வுகளைப் பிரதிபலிப்பது போன்று.. அவர்களது சுற்றமும் அதிர்வதைக் கண்டு திகைத்து தான் போனார்கள். 

 

இது வெறும் பிரம்மையோ என்ற நினைப்பில் இருந்து.. இல்லை இது கடும் நில அதிர்வு என்று உணர்ந்த நொடி.. அவர்கள் தரையில் உருண்டிருந்தார்கள். விபரீதத்தை உணர்ந்துக் கொண்ட விக்ரம் படுத்த நிலையிலேயே கட்டப்பட்டிருந்த கரங்களை.. உடலைச் சுருக்கி.. கால்கள் வழியாக முன்னால் கொண்டு வந்தான். விரல்களைக் கொண்டு வாயில் இருந்த கட்டை அவிழ்த்தான். இன்னும் நிலஅதிர்வு தொடர்ந்து கொண்டிருந்தது. 

 

“டேபிளுக்கு அடியிலேயோ.. கட்டிலுக்கு அடியிலேயோ பதுங்கிக்கோங்க..” என்று கத்தினான்.

 

அவர்களும் உருண்டு பதுங்கிக் கொண்டார்கள். விக்ரமும் உருண்டு.. நான்கு பேர் கீழே போட்டு விட்டுச் சென்ற கத்தியை எடுத்து கையில் கட்டப்பட்டிருந்த கயிற்றை அறுத்தான். கால்களிலும் அறுத்தவன், கிஷோரின் கரங்களில் இருந்த கயிற்றை அறுத்துக் கொண்டிருக்கும் பொழுது.. மயான அமைதி தோன்றியதை உணர்ந்தான்.

 

தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் அதிர்ந்த பூமி தனது ஆட்டத்தை நிறுத்திவிட்டது. அங்கு இருந்த நான்கு பேரின் முகத்திலும் பீதி ஏற்பட்டது.

 

இம்முறை இயற்கை எதை பலி வாங்கியிருக்கோ.. என்று அவர்களது நெஞ்சு பதறியது.

 

ஒரு கணம் உறைந்து நின்ற விக்ரம் பின்.. விரைந்து பவித்ராவுடைய கயிறுகளையும் அறுத்தான். கிஷோர் அபினவின் கட்டுக்களை அவிழ்த்தான். 

 

அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியைச் சந்தித்திருந்தால் இன்னும் மீண்டு வராமல் சோர்ந்திருந்த பவித்ராவின் தலையை வருடியவன், மெல்ல எழுந்து சன்னலிடம் சென்றான்.

 

சன்னலுக்கு அருகே செல்லவே அவனுக்கு அச்சமாக இருந்தது. நில அதிர்வு விட்டுச் சென்றிருக்கும் விளைவுகளைக் காண மன தைரியம் இல்லாதவனாய் சென்றான்.

 

சன்னலின் வழியாக பார்த்தவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை‌. பார்த்த காட்சி அவனது மூளைக்குள் ஏற மறுத்தது. தலையை உலுக்கி மீண்டும் பார்த்தவனின் விழிகள் அகன்றன.

 

அதிர்ச்சி மாறாமல் பின்னால் எட்டுக்களை எடுத்து வைத்து சென்றவன் மற்ற மூவர்களையும் பார்த்து “வாங்க மாடிக்கு போகலாம்.” என்று கத்திவிட்டு கதவை நோக்கி விரைந்தான்.

 

ஏன் எதற்கு என்று தெரியவில்லை என்றாலும்.. விக்ரம் கத்தியதும்.. பயந்து போன மற்றவர்கள்.. எந்த கேள்வியும் கேட்காமல் அவனின் பின்னால் விரைந்தார்கள்.

 

எட்டு தளங்கள் கொண்ட அந்த ஹோட்டலில் இவர்கள் ஐந்தாம் தளத்தில் இருந்தார்கள். விக்ரமோடு மூச்சு வாங்க மூன்று மாடி ஏறி.. எட்டாம் தளமான மேல் மாடிக்கு சென்றார்கள்.

 

முதலிலேயே ஏறிவிட்ட விக்ரம் சிலையென நின்றுவிட அவனுக்கு பின்னால் சென்றவர்களுக்கு.. விக்ரம் எத்தகைய காட்சியை கண்டு அதிர்ந்து நிற்கிறானோ.. என்று பரிதவித்தனர். நில அதிர்வு செய்து வைத்த கோர தாண்டவத்தை மெல்ல எட்டிப் பார்த்தவர்களுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை.

 

கம்பீரமாக நின்ற நூற்று முப்பத்தி மூன்று அடி உயரம் கொண்ட வள்ளுவர் சிலை தெளிவாக தெரிந்தது. கூடவே விவேகானந்தர் பாறையும்.. நன்றாக தெரிந்தது. 

 

இல்லை.. இல்லை.. ஏதோ மாற்றம் அது என்னவென்று பரபரக்க பார்த்தவர்களுக்கு பின்பே விசயம் புரிந்தது. வள்ளுவர் சிலையை சுற்றிலும் விவேகானந்தர் பாறையை சுற்றிலும் கடல் நீர் இல்லை. பாறையும் மணல் பரப்பும் தான் தெரிந்தது.

 

அப்படியென்றால்.. கடல் உள்வாங்கி உள்ளது.

 

பவித்ரா “விக்ரம்.. கடல் நீர் உள்வாங்கியிருக்கு.. தேங்க் காட்! சுனாமி மாதிரி ஆபத்தானது வரலை.” என்று மகிழ்ச்சியுடன் கூறினாள்.

 

ஆனால் எதிரே தெரிந்தவற்றை கண்ணீரும் உதட்டில் புன்னகையுமாக பார்த்துக் கொண்டிருந்த விக்ரம்.. பவித்ராவின் தோளில் கரத்தை போட்டு “பவி! அங்கே பார்..” என்று கடலைச் சுட்டிக் காட்டினான்.

 

விக்ரம் சுட்டிக்காட்டிய திசையில் பவித்ரா மட்டுமில்லாது அபினவும் கிஷோரும் பார்த்தார்கள்.

 

கடல் நீர் இன்னும் சிறிது தொலைவு வரை உள்வாங்கியிருந்து. ஆதலால் உப்பு கலந்த மணல் மேடு பள்ளமாக சிறிது தொலைவு வரை தெரிந்தது. அதில் குப்பைகளுக்கும் பஞ்சமில்லை. பின் கடல் நீர் தெரிந்தது. கடலுக்குள்.. உற்றுப் பார்த்த பொழுது.. ஏதோ நிலப்பரப்பு போன்று அவர்களுக்கு தெரிந்தது.

 

பவித்ரா உணர்ச்சிவசப்பட்டவளாய்.. விளிம்பைப் பிடித்துக் கொண்டு இன்னும் நன்றாக உற்றுப் பார்த்தாள். தெரிந்துக் கொண்ட மகிழ்ச்சியான விசயத்தை அவளால் நம்ப மட்டுமில்லை.. தாங்கிக் கொள்ளவும் முடியவில்லை. கண்ணீருடன் மூச்சு வாங்க திரும்பி விக்ரமை பார்த்தாள். 

 

கண்களில் எல்லையில்லா மகிழ்ச்சியும் கேள்வியுமாக தன்னைத் திரும்பிப் பார்த்த பவித்ராவை பார்த்த விக்ரம் ஆம் என்று தலையை ஆட்டினான்.

 

அபினவ் சந்தோஷத்தில் கத்தியே விட்டான்.

 

“ஓ மை காட்! கடலில் மூழ்கிய குமரி கண்டம்.. பூகம்பத்தால் மறுபடியும் மேலே வந்துருச்சு..” 

 

சந்தோஷத்தில் கத்தியவனுக்கு நிறுத்த முடியவில்லை. 

 

“ஓ.. மை குட்னஸ்! இயற்கை கொண்டு போன குமரி கண்டத்தை மறுபடியும் இயற்கையே கொடுத்திருக்கு!”

 

திரும்பி விக்ரமை பார்த்தவன் “ஸார்! அப்போ அந்த புயல், எரிமலை வெடிப்பு, அடைமழை போன்ற இயற்கை சீற்றத்திற்கு காரணம்.. இந்த நிலப்பரப்பு மேலே வருவதற்காக தான்! இல்லை.. அந்த மாதிரியான நிகழ்வுகள் வரிசையா வந்ததினால் இந்த நிலப்பரப்பு மேலே வந்துருச்சா! எப்படியோ நம்ம நோக்கம் நிறைவேறிருச்சு!” என்று கைகள் இரண்டையும் மேலே உயர்த்திக் கத்தினான்.

 

கிஷோர் “அவங்க நீங்க கஷ்டப்பட்டு சேகரித்த.. எவிடன்ஸை எல்லாம் அழிச்சாங்க தானே.. உங்களோட ஆராய்ச்சியை கற்பனைக் கதை என்று சொன்னாங்க தானே! இங்கே பாருங்க.. முழுசா அவங்களால் மறுக்க முடியாத மாதிரி எவிடனஸ் இருக்கு! இப்போ என்ன பண்ணுவாங்க! உங்க உழைப்பு எல்லாம் வீண் போகலை. யு ஆர் ஆல் டன் இட்!” என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்.

 

விக்ரம் “பவித்ரா எதற்காக இத்தனை வருடங்களாய்.. தனி ஆளாய் கஷ்டப்பட்டாளோ.. அதற்கான பலன் கிடைச்சுருச்சு!” என்றான்.

 

உடனே பவித்ரா புன்னகையும் கண்ணீருமாக ஓடி வந்து விக்ரமை கட்டிக் கொண்டாள். 

 

அவனும் அவளைத் தன்னுடன் இறுக்கிக் கொண்டான்.

 

பின் அபினவ்வை அழைக்கவும், அவனும் இருவரையும் கட்டிக் கொண்டான்.

 

விக்ரம் “கிஷோர் நீங்களும் வாங்க.. நீங்க இல்லைன்னா.. நாங்க இவ்வளவு சேஃப்பா எதையும் செய்திருக்க முடியாது. அது மட்டுமில்லாம பவித்ராவிற்கு முன்னாடியே இந்த ரீசர்ச் எவ்வளவு முக்கியமானது என்று எனக்கு உணர்த்தியது நீங்க தான்..” என்று அவனையும் சேர்த்து அணைத்துக் கொள்ளவும், தற்பொழுது நான்கு பேரும் வட்டமாக நின்றுக் கொண்டு ஒருவர் தோள் மீது ஒருவர் கையைப் போட்டுக் கொண்டு சந்தோஷத்தில் குதித்தார்கள்.

 

பின் பவித்ரா விக்ரமிடம் “விக்ரம்! நா.. அ.. அங்கே போகலாமா..” என்று ஆர்வத்துடன் கேட்டாள்.

 

அதற்கு அவளது கன்னங்கள் இரண்டையும் பற்றிய விக்ரம் “நாம் போகாமா வேற யார் போவாங்க!” என்றான். பின் அவளை விடுவித்தவனின் முகம் இறுகியது. 

 

“ஆக்சுவலா அவங்க வருவதற்குள்.. நாம அங்கே போயாகணும். இனிமேல் தான் நமக்கு நிறையா வேலை இருக்கு! கம் படீஸ்..” என்றுவிட்டு ஓடவும், அவர்களும் பின்னே விரைந்தார்கள்.

 

அங்கே கடற்கரையில் அவர்களைப் போல் பல பேர்.. ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக நின்றிருந்தார்கள். சிலர் உள்வாங்கிய கடல் நீர் மீண்டும் சுனாமியாக வந்துவிடுமோ.. என்ற அச்சத்துடன் நின்றிருந்தார்கள். சிலர் துணிந்து விவேகானந்தர் பாறையை நோக்கியும்.. வள்ளுவர் சிலையை நோக்கியும் சென்றார்கள். சிலர் அவர்களைப் போல் தொலைவில் திடுமென தோன்றிய நிலப்பரப்பை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்குள் அங்கு பத்திரிக்கையாளர்களும் குவிந்திருந்தார்கள்.

 

கூட்டமாக நின்றிருந்த மக்களை விலக்கிக் கொண்டு நான்கு பேரும் முன்னே சென்றார்கள்.

 

அங்கு ஒரு ஊடகத்துறையை சார்ந்த பெண் ஒருவர் ட்ரோன் மூலம் அந்த நிலப்பரப்பை காண ஏற்பாடு செய்துக் கொண்டிருந்தாள். அதைப் பார்த்து அங்கு சென்ற விக்ரம்.. தங்களை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் என்று அறிமுகப்படுத்தி விட்டு.. அவளிடம் அதை வாங்கிப் பார்த்தான். பவித்ராவின் பெயரை கேட்டதும் அவளும் உடனே கொடுத்தாள். அந்த பரபரப்பில் அவர்களும் அதைக் கவனிக்கவில்லை.

 

உள்வாங்கிய நிலப்பரப்பு வரை பயணித்த அந்த ட்ரோன் அடுத்து கொத்தளித்துக் கொண்டிருந்த கடலின் மேல் பயணித்தது. அடுத்து அவர்கள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே.. கடலில் இருந்து மேலே வந்த நிலப்பரப்பின் மேல் சென்றது.

 

பல நுற்றாண்டுகளாக கடலில் மூழ்கி இருந்த நிலப்பரப்பு என்பதால்.. பாசியும்.. பல வண்ணங்களில் கடல் தாவரங்களும் நிறைந்திருந்தது. அதில் சில மீன்களும் செத்து கிடந்தன. சூரிய ஒளிப்பட்டு அந்த மணலே மின்னியது. அது மட்டுமில்லாது.. கப்பலில் பயணம் செய்தவர்கள் தவற விட்ட கனமான இரும்பு பொருட்கள் கூடக் கிடந்தன.

 

கடலுக்கு அடியில் இருந்த நிலம் பெயர்ந்து சிறு சிறு தீவாக மாறுவது.. இயற்கை! இவ்வாறு மாலத்தீவு கூட்டத்திலும்.. அந்தமான் தீவு கூட்டத்திலும், கிழக்கு நாடுகள் பகுதியிலும்.. கடலுக்கு அடியில் வெடிக்கும் எரிமலையின் காரணமாக இவ்வாறு புது தீவுகள் தோன்றியிருக்கின்றன. ஆனால் அவை போல் இவை இல்லை. இது தமிழர்களின் சொத்து! 

 

இது தமிழர்களின் சொத்து என்பதை நிரூபிப்பது போன்று.. ட்ரோன் வழியாக தெரிந்த காட்சியில் பீடம் போன்ற பாறையைக் கண்டனர். மேலும் உடைந்த சக்கரத்தின் ஒரு பகுதியை கண்டதும்.. மூன்று பேரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள். அங்கு சென்று ஆராய்ந்தால்.. இவ்வாறு பல பொக்கிஷங்கள் கிடைக்கும்.. அதைக் கொண்டு.. இந்த நிலப்பரப்பு சாதாரணமாக தோன்றிய தீவு அல்ல! முன்பு இருந்த குமரி கண்டம் என்று நிரூபித்து விடலாம்.. என்று மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே.. இன்னொரு அதிசயத்தை பார்த்தார்கள். 

 

பெரிய மீனின் வால்பகுதி தெரிந்தது. ட்ரொன் செல்ல செல்ல.. அது பச்சை நிறத்தில் மனித முகத்தை கொண்டிருந்தது. பார்த்துக் கொண்டிருந்தவர்களின் விழிகள் தெறித்து விழுந்து போன்று இருந்தது. விக்ரம் அர்த்தத்துடன் பவித்ராவை பார்த்தான். அந்த அரிய வகை மீன் பலத்த சத்தத்துடன் துடித்தவாறு நகர்ந்து.. கடலுக்குள் குதித்தது. 

 

அதற்குள் கிஷோர் லைஃவ் மேப்பை சாட்டிலைட் வீயுவில் பார்த்தான்.

 

இது போன்று மொத்தம் எட்டு நிலப்பரப்புகள் தீவுகளாக மேலே வந்திருந்தன. இங்கே இருந்த நிலப்பரப்பு மொத்தம் முப்பதாயிரம் சதுர கிலோ மீட்டர் கொண்டிருந்தது. மடகாஸ்கருக்கும்.. ஆஸ்திரேலியாவிற்கும் நடுவில் தோன்றிய நிலப்பரப்பு.. இதை விட இரண்டு மடங்கு அதிகமாக இருந்தது போன்று இருந்தது.

 

உடனே விக்ரம் பரபரப்புற்றான்.

 

“அவங்களுக்கு முன்னாடி நாம் முந்திக்கணும். அவங்க வந்து புது தீவு தோன்றியிருக்கு.. என்று கதையே மாற்றி.. ஆராய்ச்சி செய்கிறோம் என்ற பெயரில் இதுல இருக்கிற எவிடன்ஸிற்கு வேற பெயர் கொடுத்திருவாங்க! நாம் க்விக்கா செயல்படணும். நம்மளோடதை அவங்க அழிச்சுட்டாலும்.. அவை கிடைத்த போது.. எடுத்த வீடியோஸ் மற்றும் குறிப்புகளை உடனுக்கு உடன்.. கிஷோருக்கு அனுப்பி வைத்தீங்க தானே! அதெல்லாம் கிஷோர் பத்திரமாக வைத்திருக்கிறான். அதை வெளியிடணும். எப்பவுமே பர்ஸ்ட் இம்பிரஷன் இஸ் த பெஸ்ட் இம்பிரஷன்!” என்றான்.

 

பின் பவித்ராவின் தோளில் கையை வைத்து தன்னைப் பார்க்க வைத்தவன், “பவி! நவ் யுவர் டர்ன்! உன்னோட ரீசர்ச் வெளியே தெரியணும் என்றால்.. பெரிய இம்பெக்ஃட் வேணும் என்று கேட்டே தானே! இதோ பெரிய இம்பெக்ஃட்! நீ பட்ட கஷ்டங்களுக்கு பலன்! இதைச் சரியா யுஸ் செய்துக்கோ! இது உனக்கான நேரம் ஆல் த பெஸ்ட்..” என்றான்.

 

பின் அந்த ஊடகத்துறையை சேர்ந்த பெண்ணிடம் திரும்பி “மேம்! ஒரு ஹெல்ப் செய்ய முடியுமா..” என்று கேட்டான்.

 

அதற்கு அந்த பெண் “நான் உங்களுக்கு ஹெல்ப் செய்வதற்காக தான் இங்கே வந்திருக்கேன்.” என்றாள்.

 

அதைக் கேட்டு நான்கு பேரும் திகைத்தார்கள்.

 

விக்ரம் அந்த பெண்ணின் மணிக்கட்டில் ஸ்கேன் கோடோ.. அல்லது அதை அழித்த தடயமோ இருக்கிறதா என்றுப் பார்த்தான்.

 

அவனது பார்வையைத் தொடர்ந்து பார்த்த அந்த பெண் சிரித்தவாறு “டொன்ட் வெர்ரி ஸார்! நான் அந்த இயக்கத்தை சேர்ந்தவள் இல்லை. ஒரு டு மினிட்ஸ் கொடுங்க! நான் விளக்கமா சீக்கிரம் சொல்லிடரேன்.” என்றாள்.

 

பின் தொடர்ந்து “என் பெயர் நிபாஷினி! நான் ஒரு யு ட்யுப் நீயுஸ் சேனல் வச்சுருக்கேன். எங்களுக்கு டுவன்டி மில்லியன் சப்ஸ்க்ரைபர் இருக்கிறாங்க! நேத்து தெரியாத நபரிடம் இருந்து எங்களுக்கு ஒரு பென்டிரைவ் கிடைச்சுது. நேத்து இறந்துப் போன.. வெங்கட் என்பரின் பான்ட் பாக்கெட்டில் இருந்தது என்று கொடுத்தாங்க! அவர் பீல்டிங்கில் இருந்து தவறி விழுந்துவிட்டதை எந்த வித விசாரணையும் இல்லாமல் நாலு பேர் சொன்ன சாட்சியை வச்சு அவசரமாக முடித்துவிட்டதால்.. அவருக்கு டவுட் வந்து கொடுத்ததாக கூறினார். அவர் தன்னுடைய பெயரையும் அடையாளத்தையும் சொல்லுலை. அந்த பென்ட்ரைவில் நரசிம்மன் என்பவர் முதல்ல பேசினார்.”

 

“பவித்ராவுடைய புரொஜெக்ட் பற்றிச் சொல்லி.. அதை அவர் நான்கு வருஷத்துக்கு முன்னாடி சென்ட்ரல் கவுர்மென்ட்க்கு அனுப்பி வைத்த போது.. ரெஸ்பான்ஸ் கிடைக்காதால்.. வெளிநாட்டில் இருக்கும் ரீசர்ச் சென்டருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் அங்கே இருந்து அவருக்கு மிரட்டல் வந்திருக்கு! இது ஒரு இன தீவிரவாதம் மாதிரி இருக்கு! இதைக் கை விடவில்லை என்றால்.. அரெஸ்ட் செய்யப் போவதாக வந்திருக்கு! உடனே அவர் விட்டுட்டதாக வாக்களித்தாராம். அப்பறம் பவித்ராவையும் ட்ராப் பண்ண சொல்லி வற்புறுத்தியதாகவும்.. ஆனா.. அவங்க கேட்கலை.. இன்னொரு நிறுவனத்தை நாடி.. ஸ்பான்ஸர்ஸ் வாங்கிட்டதா குறிப்பிட்டு இருக்கார். அப்பறம் பவித்ராவிற்கு.. நடந்ததைக் குறிப்பிட்டு.. அதற்கு இவங்க தான் காரணம் என்று ஒரு ஸ்கேன் கோட்டை ஃபோட்டோ எடுத்து அதில் ஜாயின்ட் செய்திருந்தார்.”

 

“ஓ மை காட்! நான் மதியம் உட்கார்ந்து அதைப் பார்க்க ஆரம்பிச்சுது. நைட் பன்னிரெண்டு மணிக்கு தான் முடிச்சேன். ஐயம் டொட்டலி ஷாக்! இப்படியொரு மறைமுக நிழல் கேங்! உலகம் முழுவதும் பரவியிருக்கும் என்று நினைச்சு கூடப் பார்க்கலை.”

 

“அதை செக் செய்ததும்.. அடுத்து பவித்ராவை பற்றிய விபரங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். அப்போ தான் நீங்க ஆஸ்திரேலியாவுல கொடுத்த இன்டர்வியுவை பார்த்தேன். நான் அதை முழுமையாக நம்பறேன். அவங்க உங்களைக் கொல்ல முயற்சி செய்கிறாங்க! உங்களை கான்டெக்ட் செய்ய முடியலை. பவித்ரா கன்னியாகுமரியில் மூன்று வருடங்கள் இருந்திருக்கீங்க! அதனால உங்களைப் பற்றி எதாவது தகவல் கிடைக்குமா என்று இங்கே வந்தேன். ஆனா..” என்று எதிரே இருந்த கடலை காட்டினாள்.

 

பின் “உங்களையும் இங்கே பார்த்துட்டேன். இப்போ சொல்லுங்க.. நான் உங்களுக்கு என்ன ஹெல்ப் செய்யணும்?” என்று கேட்டாள்.

 

விக்ரம் “வாவ்! நம்மளைத் துரத்துக்கிற கும்பலை வெட்ட வெளிச்சம் ஆக்க.. இன்னொரு ப்ரூவ் கிடைச்சுருக்கு! அதை அப்பறம் பார்த்துக்கலாம். இப்போ உங்க சேனல்ல பவித்ராவோட இன்டர்வியு டெலிகாஸ்ட் செய்ய முடியுமா! கூடவே நாங்க சில எவிடனஸ் தருகிறோம். இது குமரி கண்டம் தான் என்று அதையும் டெலிகாஸ்ட் செய்யணும். உங்க இன்டர்வியுல பவித்ரா கிட்ட நீங்க கேட்கிற கேள்விகள் கூட.. நம்மளோட எதிரிகளுக்கு.. சரியான அடியாக இருக்கணும். அதாவது முதல்ல இது குமரி கண்டம் தான் என்பதை நிரூபிக்கிறதுக்கான கேள்விகள்.. அடுத்து இந்த ஆராய்ச்சி மூலம் மற்றவங்களைப் போல் இல்லாமல் பவித்ரா அறிவுறுத்துவது என்ன! அடுத்து.. எங்களை செய்ய விடாமல் தடுத்துட்டு இருக்கிற கும்பலைப் பற்றி நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சொல்லணும். பிகாஸ் நேரடியாக சொன்னால்.. அதையும் கட்டுக்கதை என்று சொல்லியிருவாங்க! அதனால யாரோ செய்யறாங்க என்று மட்டும் சொல்லுங்க! அது யார் என்ற விபரங்களை மெல்ல வெளியிடலாம்.” என்றான்.

 

அதற்கு நிபாஷினி “கண்டிப்பா செய்திரலாம் ஸார்! இதோ இப்பவே ஆரம்பிக்கிறேன்.” என்றுவிட்டு அதற்கு தேவையானதை தயார்படுத்தினாள்.

 

அதற்குள் விக்ரம் அபினவ் மற்றும் கிஷோரிடம் திரும்பி “நீங்க இரண்டு பேரும்.. பக்கத்தில் இருக்கிற எதாவது நெட் சென்டருக்கு போய்.. அங்கே இருக்கிற சிஸ்டத்தில்.. உங்க அக்கவுண்ட்டை ஓப்பன் செய்து.. எல்லா சோஷியல் மீடியாவிலும்.. நிபாஷினியோட யு ட்யுப் சேனல்ல லைஃவ்வா ஓடின இந்த ட்ரோன் ஷாட் வீடியோ லின்க்கை ஷேர் செய்து.. குமரி கண்டம் வந்துவிட்டதாக செய்தியைப் பரப்பணும். உங்க பிரெண்ட்ஸ், ரிலெட்டிவ்ஸ் கிட்டயும்.. இதைச் செய்யச் சொல்லி ரெக்வஸ்ட் வையுங்க! யு ட்யுப்பில் குமரி கண்டம் சம்பந்தமா நிறையா வீடியோஸ் இருக்கு தானே! எத்தனைப் பார்க்கறீங்களோ.. அத்தனை வீடியோஸிலும்.. குமரி கண்டம் மேலே வந்துவிட்டது என்று கூறி மகிழ்ச்சியைத் தெரிவிக்கணும். அப்பறம் ஆஷ்டேக் போட்டு இதைப் பிரபலப்படுத்தணும். இன்னைக்கு ட்ரென்ட் ஆக்கணும். உங்களால் எவ்வளவு வேகமாக செயல்படுத்த முடியுமோ.. அத்தனை சீக்கிரமா செய்தால்.. இன்னும் சந்தோஷம்! நானும் உங்க கூட ஜாயின் ஆகிருப்பேன். ஆனா அதுக்குள்ள எனக்கு இங்கே இன்னொரு வேலை இருக்கு! நிச்சயம் அந்த இயக்கத்தை சேர்ந்தவங்க.. இங்கே வருவாங்க! அவங்களை நான் தடுக்கணும். ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், பாலி கிட்டத் தோன்றியிருக்கிற தீவுகள் கிட்ட இப்போ போக முடியலைன்னாலும்.. இங்கே நடப்பதை நான் தடுக்கணும்.” என்றான்.

 

அபினவ் “ஸார்! இந்த விசயத்தை உலகம் முழுக்க எங்களால் முடிந்த அளவுக்கு பரப்புகிற வேலையை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க இங்கே பார்த்துக்கோங்க!” என்கவும், கிஷோர் “ஸார்! ஜாக்கிரதையாகவும் இருங்க! நாங்க வேலையை முடிச்சுட்டு வரோம்.” என்றுவிட்டு இருவரும் விரைந்தார்கள்.

 

பவித்ரா பேட்டி கொடுக்க தயாராகிக் கொண்டிருந்த வேளையில்.. அந்த இயக்கத்தை சேர்ந்த ஆட்கள்.. விரைந்து வந்துக் கொண்டிருந்தார்கள்.

 

—--------------------------------------------

 

பெரிய திரையில் சாட்டிலைட் வீயுவில் தெரிந்த தீவுகளை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ந்து தான் போனார்கள்.

 

“ஸார்! இங்கே பாருங்க..” என்று தனது செல்பேசியை ஒருவன் காட்டினான்.

 

அதில் நிபாஷினியும் விக்ரமும் இயக்கிய ட்ரோன் வீடியோ ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. அதில் தெரிந்த காட்சிகளைக் கண்டு அவர்கள் உறைந்து நின்றார்கள்.

 

மனிதர்கள் தவற விட்டப் பொருட்கள் பல கடல்நீரில் இருந்த உப்பினால் மக்கி படிந்து கிடந்தாலும்.. அது நிலப்பரப்பாக இருந்திருக்க கூடும் என்பதற்கு சான்றாக பீடத்தையும் பழங்குடியினர் உபயோகித்த சில பொருட்களின் மாதிரியான படிமங்களைப் பார்த்து திகைத்தார்கள். 

 

கடைசியில் பவித்ராவின் கூற்று உண்மையாகி விட்டது.

 

அவர்களுக்கு தெரிந்த உண்மை உலகத்திற்கு புரிந்துவிட்டால்.. உலகம் முழுக்க தற்போதைக்கு பரபரப்பான விசயம் இதுவாகி விடும். அதாவது எங்கு பார்த்தாலும் தமிழ் தமிழர் என்ற பேச்சு தான் முழுக்க இருக்கும். மக்களுக்கு இதைப் பற்றித் தெரிந்துக் கொள்ள ஆர்வம் பிறக்கும். மக்களின் ஆர்வத்தை தடுக்க முடியாது. அவர்கள் இந்த விசயத்தில் ஒன்றிப் போவார்கள். இனி எங்கு தமிழர்களைப் பார்த்தாலும் அவர்கள் தனியாக தெரிவார்கள். தனி மதிப்பு பெருகும். தோற்றத்தால் வேறாக தெரிந்தவர்கள் தற்பொழுது.. மதிப்பால் தனியாக தெரிவார்கள்.

 

அவ்வாறு இருக்க கூடாது என்று வெஞ்சினத்துடன் நினைத்த அவன்!

 

சற்று முன்.. கன்னியாகுமரிக்கு அவர்கள் அனுப்பி வைத்த ஆட்கள்.. அந்த நான்கு பேரையும் கொல்ல முடியவில்லை. அதற்குள் பூகம்பம் வந்துவிட்டது என்று கூறி மன்னிப்பு வேண்டினார்கள். அந்த செய்தியும் அவரது ஆத்திரத்தைக் கிளப்பியிருந்தது.

 

பின் அருகில் இருந்தவனிடம் திரும்பி “இந்தியா மெம்பர்ஸ்க்கு ஃகால் போடு.. இப்போ அவங்க தான் இந்த பிரச்சினையைத் தீர்த்து வைக்கணும். உடனே அவங்களோட கவுர்மென்ட் ரீசர்ச் குழுவை ஸ்பாட்டிற்கு அனுப்ப சொல்லு! அங்கே கெதர் ஆகியிருக்கிற மற்ற மீடியாஸை கலைக்க சொல்லு! நம்ம ஆட்கள் தான் மீடியாஸ் ஆளாகவும், ரீசர்ச்சராகவும் இருக்கணும். எர்த்க்வாக் காரணமாக புதிதாக தீவு தோன்றியிருக்கு.. என்று அழுத்திச் சொல்லு! அஃபிஷலாகவும் பதவியில இருக்கிற அரசியல்வாதி வச்சு பேட்டி கொடுக்கச் சொல்லு! ஆஸ்திரேலியா மடகாஸ்கரில் பிரச்சினை இல்லை. அங்கே புது தீவு தான் தோன்றியிருக்கு.. என்று அறிவிக்க வச்சுரலாம். வெள்ளைக்காரன் என்ன சொன்னாலும் அதுதான் உண்மை அதுதான் சரியாக இருக்கும் என்று நம்பிருவாங்க! நாம் செய்ய வேண்டியது.. கன்னியாகுமரியில் தொல்லை தருகிறவங்களை அகற்றுவது தான்! அப்பறம் கன்னியாகுமரியில் வேற எந்த மீடியாவும்.. குமரி கண்டத்தை பற்றி வாயைத் திறக்க கூடாது. நாம் சொன்ன மாதிரி தான் செய்தி பரவணும். முக்கியமான விசயம் தப்பித்த நாலு பேரோட வாழ்வும் அங்கே முடிந்திருக்க வேண்டும்.” என்று கொக்கரித்தான்.

 

ஆனால்.. அடுத்து இவர்கள் என்ன யோசிப்பார்கள் என்று கணித்த விக்ரம்.. மேலே வந்த நிலப்பரப்பு முன்னால் இருந்த குமரி கண்டம் தான்.. என்று பவித்ராவை பேட்டி கொடுக்க ஏற்பாடு செய்துவிட்டான். இந்த செய்தியை வேகமாக மக்களிடையே பரப்ப.. அபினவ் மற்றும் கிஷோரை அனுப்பி வைத்தான். பின் இதற்கு இடையுறு செய்ய.. அரசாங்கத்தில் இருக்கும் அவர்களது ஆட்களையும்.. அவர்களைக் கொல்ல ஆட்களையும் அனுப்புவார்கள் என்று அவர்களைத் தடுக்க விக்ரம் அங்கு அவர்களுக்காக காத்திருக்கிறான்.

 

புது சரித்திரத்தை தொடங்க காரணமாக இருக்கும் இவன் நாயகன் தான்!


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Trusted Member Author
Joined: 6 months ago
Posts: 48
Topic starter  

அத்தியாயம் 28

“ஹாய் வியுவர்ஸ்! இன்னைக்கு நம்ம வரலாற்றில் அழிக்க முடியாத முக்கியமான நாளாக இருக்கப் போகிறது. அதற்கு சாட்சியாக நான் இங்கே வருவேன் என்று நினைச்சு கூடப் பார்க்கலை. உங்களுக்கு எல்லாம் தெரிந்திருக்கும். இந்திய பெருங்கடலில் பெரும் பூகம்பம் ஏற்பட்டு கடல் நீர் உள்வாங்கியிருக்கு! அதனால் விளைத்த விளைவு என்ன என்று தெரியுமா! பல நுற்றாண்டுகளுக்கு முன் கடலில் மூழ்கிய குமரி கண்டத்தின் நிலப்பரப்புகள் மேலே வந்திருக்கின்றன. மொத்தம் எட்டு நிலப்பரப்புகள் குட்டி குட்டி தீவு மாதிரி இந்திய பெருங்கடலில் வந்திருக்கு என்று சாட்டிலைட் வீயுவில் தெரியுது. நம்ம கன்னியாகுமரிக்கு பக்கத்தில் இருக்கிறதோட ட்ரொன் புட்ஏஜ்ஜை தான் கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி லைவ்வா பார்த்தீங்க! ஒருவேளை நீங்க பார்க்கலைன்னா.. அந்த புட்ஏஜ்ஜை மிஸ் பண்ணிராமல்.. இந்த லைஃவ் ஷோ முடிந்ததும் கண்டிப்பா பாருங்க! உங்களுக்கு பயங்கர ஷாக் ஆகவும் ஈகர் ஆகவும் இருக்கும். நான் ரொம்ப ஷாக் ஆனேங்க!”

 

“ஒகே! இதைப் பற்றி நான் பேசுவதை விட.. இந்த குமரி கண்டம் பற்றிய ஆராய்ச்சியில் பல வருடங்களாக தன்னை அர்பணித்துக் கொண்ட மிஸ் பவித்ரா கூறுவாங்க!”

 

“வணக்கம் மிஸ் பவித்ரா!”

 

“வணக்கம்!”

 

“நேரடியாக விசயத்திற்கு வரேன்ங்க! இந்த நிலப்பரப்புகள் தென்னகத்தோடு முன்பு இணைந்திருந்த குமரி கண்டத்தை சேர்ந்தது என்று எப்படிச் சொல்றீங்க? முதலில் குமரி கண்டம் என்று ஒன்று இருப்பது உண்மை என்று சொல்றீங்களா?”

 

“முதலில் குமரி கண்டம் என்ற ஒன்று இருந்தது என்பதற்கான சாட்சிகள் சொல்கிறேன். ஆச்சுவலா நம்ம தமிழ் புத்தகத்திலும் வரலாற்று புத்தகத்திலும்.. குமரி கண்டம் அதாவது ஆங்கிலேயரால் லெமூரியா கண்டத்தை பற்றி நிறையா படிச்சுருப்பீங்க! புறநானுறு பாடலில் குமரி கண்டத்தை பற்றி இருக்கிறது. அதே மாதிரி உலகத்தில் இருக்கிற பல பழைய காவியங்களில் எடுத்து படித்துப் பார்த்தீங்க என்றால்.. எல்லாத்திலும் சொல்லி வைத்தாற் போன்று.. உலகத்தில் கடல் நீரால் பேரழிவு ஏற்பட்டு நிலப்பரப்பு கடலில் மூழ்கியிருக்கு என்று குறிப்பிட்டு இருக்கும். அவங்க குமரி கண்டத்தை பற்றித் தான் சொல்லியிருக்காங்க! அது கற்பனை கதை கிடையாது. என் பிரெண்ட் ஒருவர் ஒன்று சொன்னார். மனிதர்கள் தோன்றுவதற்கு முன்.. தோன்றிய டைனோசர்ஸ் இருந்ததையே ஒத்துக்கிட்டிங்க.. இதை ஏன் ஒத்துக்க மாட்டேன்கறீங்க! ஒருவேளை உங்களை ஒத்துக்க வைக்கிறதுக்கும் வேற ஒருத்தர் தான் வரணுமா.. உங்களைச் சேர்ந்தவங்களே சொன்னா.. ஏற்றுக்க மாட்டிங்களா” என்று விக்ரம் கூறியதைக் கூறினாள். பவித்ரா பேட்டியளிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த விக்ரமின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.

 

“ஒகே இப்போ நீங்க முதல்ல கேட்ட கேள்விக்கு வரேன். இந்த நிலப்பரப்பு குமரி கண்டத்தை சேர்ந்தது தான்.. எப்படிச் சொல்கிறேன் என்றால்.. கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி பார்த்த ட்ரொன் புட்டெஜ்ஜில் கடல் பாசியால் புதைந்த செல்ஃபோன்ஸ், டீகப், பாத்திரங்கள்.. இந்த மாதிரி பொருட்களைப் பார்த்தீங்க! அதுல பாசிகள் படிந்த கல் பீடத்தை பார்த்தீங்களா!”

 

“கல் பீடம் என்றால் என்ன மிஸ் பவித்ரா?”

 

“கல் பீடம் என்பது செவ்வக வடிவில் கற்களால் ஆனா.. இருக்கை என்றும் சொல்லலாம்.. நாம் இப்போ பேசிட்டு இருக்கிற பேச்சு வழக்கில் மேசை என்றும் சொல்லலாம். அதோட சைஸ் வச்சு.. கண்டப்பாக அது நான்கு டன் எடை இருக்கும். அதோ மாதிரி சக்கரம் போன்ற பொருளையும்.. கற்படிக்கட்டுகளையும் பார்த்தீங்க! அப்பறம் வாசல்.. அதாவது அந்த காலத்தில் கதவு இல்லை.. ஆனால் ஒரு பகுதிக்கு உள்ளே செல்ல செவ்வக வடிவமாக கற்கள் வைக்கப்பட்டு.. நிற்க வைத்திருப்பார்கள். அந்த மாதிரி வாசலையும் பார்த்திருப்பீங்க! இந்த மாதிரி பாசிகள் மற்றும் கடற்தாவரங்களால் மறைக்கப்பட்ட பல பொக்கிஷங்கள் அங்கே இருக்கு! கவுர்மென்ட் பர்மிஷன் கொடுத்தால்.. அந்த மாதிரி பல அதிசயங்களையும் அற்புதங்களையும் மக்களுக்கு தெரியப்படுத்த நான் ஆவலோட இருக்கிறேன்.”  என்றாள்.

 

நிபாஷினி “வாவ்! நீங்க சொல்வதை வச்சு பார்க்கும் போது.. மொகஞ்சதாரோ என்ற நகரம்.. வெள்ளத்தால் அழிந்தது.. அதோட அடையாளங்கள் பல வருடங்கள் கழித்து கிடைத்தது. அந்த மாதிரிங்களா!”

 

“எக்ஸெட்டிலி! ஆனா இந்த குமரி கண்டம் காலக்கட்டம் மொகஞ்சதாரோ காலக்கட்டத்தை விட இது பழமையானது.”

 

“அப்போ இங்கே வாழ்ந்த மக்களும்.. கலச்சாரமும் தான் பழமையானது என்று சொல்றீங்களா!”

 

“ஆமாம்! இங்கே வாழ்ந்தவங்க தமிழர் இனம் தான்! கண்டிப்பா கிரேக்கமும் இலத்தினும் பழமையான இனமும் மொழியும் தான்! ஆனால் அவர்களை விட மூத்த குடிமக்கள் நம் தமிழ் மக்கள்! மூத்த மொழி மட்டுமில்லை.. உலக பொது மொழியும் நம் தமிழ் மொழி தான்!” என்றாள்.

 

நிபாஷினி “வாவ்! நீங்க சொல்ல சொல்ல பிரமிப்பாக மட்டுமில்லை.. ஒரே கூஸ்பம்ப் ஆகவும் இருக்கு! ஆனா ஒரு விதத்தில் இந்த விசயம் ஆச்சரியமாக கொஞ்சம் அதிர்ச்சியாகவும் இருக்கு! இது எவ்வளவு பெரிய விசயம்.. எவ்வளவு பெரிய பெருமை! ஆனா அந்த மதிப்பும் மரியாதையும் கிடைத்த மாதிரி தெரியலையே. இல்லை இந்த ஜெனரேஷன் ஆளான எனக்கு தெரியலையோ! ஆனா இந்த ஜெனரேஷன் ஆளான எனக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கணுமே!” என்றாள்.

 

பவித்ரா “எஸ்! அதைத் தெரியப்படுத்த தான் நான் இந்த ஆராய்ச்சியில் இறங்கியிருக்கிறேன். உலகம் முழுவதும் சிலரால் ஒத்துக் கொள்ளப்பட்ட விசயம்.. எல்லாரையும் சென்றடைந்து ஒத்துக்க வைக்கணும். அதற்கான சான்றை தேடித் தான் நான்.. நாலு வருஷமா ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறேன். சில சான்றுகளை நாங்க கண்டுப்பிடிச்சுருக்கிறோம்.” என்றவள், பின் தொடர்ந்து “அதுக்கு ரொம்ப உதவியாக என்பதை விட.. இவர் இல்லாம நாங்க எதையும் செய்திருக்க முடியாது.. என்று சொல்லலாம். நான் ஆர்வமா இருந்தேன் என்றாலும்.. அதைச் செயலாக்கம் கொடுத்தவர் இவர் தான் மிஸ்டர் விக்ரம்!” என்று சற்று தள்ளி நின்றிருந்த விக்ரமை கைப் பற்றி அழைத்தாள்.

 

பின் “நாங்க கண்டுப்பிடிச்சதை எல்லாம் உங்களுக்கு கொடுக்கிறேன். மக்கள் கிட்ட அது போய் சேரட்டும். ஆனா எல்லாத்தையும் விடப் பெரிய சான்று இதோ இப்போ கிடைச்சுருக்கு! அங்கே ஆராய்ச்சி செய்ய எனக்கு வேண்டிய வசதிகளைச் செய்துக் கொடுத்தால்.. இந்த நிலப்பரப்பு குமரி கண்டத்தைச் சேர்ந்தது என்பதை நிரூபித்து.. அதை இந்த ஜெனரேஷனுக்கு மட்டுமில்லை. உலகம் முழுக்க இருக்கும் அனைவருக்கும் தெரியப்படுத்துவேன். ” என்றாள்.

 

நிபாஷினி “மேம்! இந்த நேரத்தில் இது சம்பந்தமான இன்னும் இரண்டு விசயங்களை நான் கேட்டுக்கிறேன். நீங்க அடிக்கடி.. கவுர்மென்ட் பர்மிஷன் கொடுத்தால்.. என்று சொல்றீங்க அது ஏன்? இரண்டு நாட்களுக்கு முன்.. உங்களை ரீசர்ச் செய்ய விடாம உங்களைக் கொல்லப் பார்க்கிறாங்க என்று சொல்லியிருந்தீங்க! பட் அது வேற டெரரிஸ்ட் அட்டேக்.. அட்டேன்ஷன் கிரியேட் செய்வதற்காக உங்களைத் தாக்க வரதா சொல்லறீங்க.. என்று ஆஸ்திரேலியா ரிப்போர்ட்டர் சொல்லியிருக்கிறாரே அது ஏன்? என்ன நடக்கிறது?” என்று பவித்ராவின் எதிரிகள் பற்றிய டாப்பிக்கை சரியான நேரத்தில் கொண்டு வந்தாள்.

 

பவித்ரா “உங்களோட இரண்டு கொஸ்டின்ஸிற்கும் ஒரே பதில் தான்! என்னை இந்த ரீசர்ச் செய்ய விடாமல் தடுப்பது இப்போ மட்டுமில்லை. நான்கு வருடத்திற்கு முன் இருந்து நடக்கிறது.” என்றாள்.

 

நிபாஷினி “எதை வச்சு இதைத் தடுக்கிறாக சொல்றீங்க? யார் தடுக்கிறாங்க என்று சொல்றீங்க?” என்று கேட்டாள்.

 

அப்பொழுது விக்ரம் குறுக்கிட்டான்.

 

“அது தான் எங்களுக்கும் தெரியலை. இந்த மாதிரி நிறையா ஆராய்ச்சிகள் செய்திருக்காங்க! ஆனால் எங்களுக்கு மட்டும் ஏன் தடுக்கிறாங்க என்று தெரியலை. ஒருவேளை பவித்ராவோட ஆராய்ச்சியின் நோக்கமும்.. தீவிரமாகவும் இருப்பது காரணமாக இருக்கலாம். ஆனால் நாங்க ஃபேஸ் பண்ணின ஸ்ட்ரகல்ஸ் உண்மை! இந்த முறையும் தடுப்பாங்க என்று தான்.. கவுர்மென்ட் கிட்ட ஹெல்ப் கேட்டு ரெக்வஸ்ட் வைக்கிறோம். இதை நாங்க இரண்டு பேர் மட்டும் ரெக்வஸ்ட்டா வைக்கலை. ஒட்டு மொத்த தமிழர்களின் சார்பாக.. எங்களோட அடையாளத்தையும் எங்களோட சொத்தையும் காப்பாத்துங்க..” என்று அரசாங்கத்தையும் மக்களையும் இந்த விசயத்தில் உள்ளே இழுத்துவிட்டான்.

 

பவித்ரா பேட்டியளிப்பதை அங்கு சுற்றி நின்றிருந்த மக்கள் கேட்டுக் கொண்டு தான் இருந்தார்கள். பவித்ரா பேச பேச.. அவர்களுக்கு ஆர்வம் பெருகியது. கடைசியில் விக்ரம் கூறியதும்.. கைத்தட்டி தங்களது ஆதரவைத் தெரிவித்தார்கள்.

 

பவித்ராவிற்கு விக்ரமின் புத்திசாலித்தனத்தை வியக்காமல் இருக்க முடியவில்லை. அவன் கூறியது போல்.. முதலில் கூறும் கருத்துக்கள் தான் அனைவராலும் முதலில் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதற்கு ஏற்ப.. இதோ மக்கள்.. அவள் பேசியதை ஆர்வத்துடன் கேட்கிறார்கள்.

 

இனி மேலே வந்த நிலப்பரப்பில் ஆராய்ச்சி செய்ய பவித்ரா தடுக்கப்பட்டாலோ.. அவர்களுக்கு ஆபத்து ஏற்பட்டாலோ.. இந்த ஆராய்ச்சி செய்ய விடாமல் தங்களைத் தடுக்கிறார்கள்.. என்று கூறியது உண்மையாகி விடும். வேறு வழியில்லாமல் அரசாங்கம் அவர்களுக்கு உதவி செய்து தான் ஆக வேண்டும். 

 

நிபாஷினி “உங்களுக்கு கவுர்மென்ட் ஹெல்ப் பண்ணுவாங்க என்று நம்புகிறோம். இந்த டெலிகாஸ்ட் மூலம்.. அவங்களுக்கு நானும் என் டீம் மெம்பர்ஸ் மட்டுமில்லை.. இங்கிருக்கிற எல்லா மக்களும் ரெக்வஸ்ட் வைக்கிறோம். தமிழர் பெருமையை சரியாக உலகத்திற்கு சரியாக கொண்டு போய் சேர வேண்டும்.”

 

“ஒகே வீயுவர்ஸ்! அடுத்து பவித்ரா.. குமரி கண்டத்துடன் இணைந்த பகுதி தான்.. ஆஸ்திரேலியாவும் மடகாஸ்கரும்.. என்பதை நிரூபிக்க.. சில எவிடன்ஸை கலெக்ட் செய்திருப்பதாக சொன்னாங்க.. அதை உங்களுக்கு டெலிகாஸ்ட் செய்வோம்.” என்று கூறிக் கொண்டிருக்கும் பொழுதே சிறிது பரபரப்பு ஏற்பட்டது. 

 

வேனில் வந்து இறங்கிய காவலர்கள்.. அங்கிருந்த மக்களை ஒதுக்கினர். கடல்நீர் உள்வாங்கிய மணல் பரப்பில் அலைந்துக் கொண்டிருந்த மக்களை அடித்து விரட்டினர். இவர்களையும் அவர்களது கெமராவை அகற்றும்படி உத்தரவிட்டார்கள். 

 

மற்றொரு வேனில் கெமரா சகிதமாக இறங்கியவர்கள் கெமராவை கடலைப் பார்த்து வைத்தனர். கெமரா முன் மைக்குடன் நின்ற ரிப்போர்ட்டர் அன்று ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக புதியதாக தீவுகள் பிளந்து மேலே வந்திருக்கின்றன.. என்ற ரீதியில் கூற ஆரம்பித்தார்கள். பவித்ரா அதிர்ந்தவளாய் விக்ரமை பார்க்க.. அவனோ பொறு என்பது போல் பார்த்தான். 

 

அந்த ரிப்போர்ட்டர்கள் கூறிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த சுற்றியிருந்த மக்கள் “என்ன சொன்னீங்க புதிய தீவா.. மூழ்கிப் போன குமரி கண்டம் தானே மேலே வந்திருக்கு!” என்றார்கள்.

 

பவித்ரா மற்றும் விக்ரமின் முகத்தில் மலர்ச்சி தோன்றியது.

 

அடுத்து ஹெலிகப்ட்டரில் சிலர் வந்து இறங்கினார்கள்.

 

அவர்களைப் பார்த்ததும்.. பவித்ரா “விக்ரம் இவர்தான் இந்தியாவோட லீடிங் ஆர்காலிஜிஸ்ட் தேவந்திரன்!” என்றாள். விக்ரம் அவரின் கை மணிக்கட்டில் ஏதேனும் தழும்பு போன்றது இருக்கிறதா என்று பார்த்தான். எதுவும் இல்லை என்பதை ஊர்ஜீதம் பண்ணிக் கொண்டான். ஆனால் அவர்களின் உத்தரவின் பெயரில் அவர் வந்திருப்பது புரிந்தது.

 

உடனே காவலர்களை மீறி.. அவர்களைத் தாண்டி கடல் மணல் பரப்பில் நின்ற விக்ரம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களைப் பார்த்து “ப்ளீஸ்! தமிழர்களின் தொன்மையைக் காப்பாற்றுங்க! இது புது தீவு இல்லை.” என்று கத்தினான்.

 

அவனைப் பிடித்து இழுக்க வந்த காவலர்களின் கையில் இருந்து திமிறி.. மீண்டும் “தமிழர்களோட பழமையைக் காப்பாற்றுங்க! இது புது தீவு இல்லை.” என்று கத்தினான். வேறு வழியில்லாது காவலர்கள் விக்ரமை தாக்கவும், தற்பொழுது சுற்றியிருந்த மக்களும் கத்த ஆரம்பித்தார்கள். பவித்ராவும் திமிறிக் கொண்டு ஓடிச் சென்று விக்ரமுடன் நின்றுக் கொள்ள.. மக்கள் கூட்டத்தில் சிலரும் ஓடிச் சென்று நின்றார்கள்.

 

இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அவர்களை பெருமூச்சுடன் பார்த்த தேவந்தரன் ஆங்கிலத்தில் “பவித்ரா! நீங்களும் ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் தானே! அந்த நிலப்பரப்பு இன்னொரு எர்த்க்வாக் வந்தால்.. மறுபடியும் மூழ்குவதற்கு சான்ஸஸ் இருக்கு என்று தெரியும் தானே! அதுக்குள்ள.. அதை நாம் ஆராயணும் என்று தெரியாதா! இப்படி ஆர்ப்பாட்டம் பண்ணிட்டு இருக்கீங்க..” என்று சிறுக் கோபத்துடன் கேட்டார்.

 

பவித்ரா “ஆமா ஸார் அதற்காக தான் நாங்களும் அவசரப்படுகிறோம். குமரி கண்டம்‌ இருந்தது கற்பனை என்று சொன்னவங்க.. இல்லை உண்மே என்று நிரூபிக்கணும்‌. அதற்கு இந்த நிலப்பரப்பை உடனே ஆராயணும். உங்களுக்கு தெரியாதது இல்லை ஸார்! இது குமரி கண்டத்தின் நிலப்பரப்பு என்று உங்களுக்கும் டவுட் இருக்கும். ஆனா உங்க கூட வந்தவங்களில்.. சிலர் கண்டிப்பா.. அந்த நோக்கத்தோட இதை ஆராய்ச்சி பண்ண மாட்டாங்க! அதே மாதிரி அந்த ரிப்போர்ட்டர் பேசினதையும் பார்த்தீங்க தானே! அவங்க புது தீவு என்று சொல்லிட்டு அதை அழுத்தமாக பதிய வைக்கப் பார்க்கிறாங்க! அதே மாதிரி அந்த ட்ரோன் ஷாட்ஸும் பார்த்திருப்பீங்க தானே! நீங்க என்ன நினைக்கறீங்க! நாங்க உங்களைப் போக வேண்டாம் என்று ஆர்ப்பாட்டம் செய்யலை. நானும் என்னோட இவரும் வருகிறோம் என்று தான் சொல்கிறோம். ப்ளீஸ் ஸார்!” என்றாள்.

 

அவருக்கு செல்லும் போது மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவு நினைவிற்கு வந்தது. அது புதிதாக தோன்றிய நிலப்பரப்பு என்று.. அவரிடம் சீக்கிரம் தெரிவித்தால் தான்.. பிரஸ் மீட் வைத்து அறிவிப்பதற்கு சரியாக இருக்கும் என்று கூறினார். ஆனால் தேவந்திரனுக்கு அந்த உத்தரவை கேட்டு சிறு எரிச்சல் தான் வந்தது. 

 

எனவே தற்பொழுது மக்களின் ஆர்ப்பாட்டம் செய்வதையும் அந்த ட்ரொன் ஷாட் காணொளியையும் காரணமாக காட்டி விடலாம். சுதந்திரமாக ஆராய்ச்சியில் ஈடுபட முடிவு செய்தார்.

 

“ஒகே! சீக்கிரம் ரெடியா இரு! அங்கே போவதற்கு.. நம்மளோட செக்யுருக்கு.. ரோப் லைஃப் ஜெக்ட், லைஃப் ஃபோட், இன்னொரு ஹெலிகாப்ட்டர் கேட்டிருக்கேன். அது வந்ததும்.. போகலாம்.” என்றார்.

 

விக்ரமுக்கும் பவித்ராவிற்கும்.. அப்படியொரு நிம்மதி ஏற்பட்டது.

 

எதற்காக இத்தனைப் பாடுப்பட்டாளோ அதற்கான கடைசி படிக்கு வந்துவிட்டாள்.

 

விக்ரமை கண்களில் கண்ணீர் தழும்ப பார்த்தாள்.

—----------------------------------------

 

“வாட்! வாட்! வாட் இஸ் திஸ்! எது நடக்கக் கூடாது என்று இத்தனை வருஷம் போராடினோமோ.. அது நடந்துட்டு இருக்கு! எப்படி இது ஆச்சு! எப்படி எர்த்குவாக் நடந்த ஐந்தாம் நிமிஷம்.. இந்த ட்ரொன் ஷாட்.. இந்த இன்டர்வீயு எல்லாம் சாத்தியமாச்சு! யார் அந்த பொண்ணு? அவங்க நாலு பேரும் நம்ம கஸ்டடியில் தானே இருந்தாங்க! விக்ரம் அந்த ரிப்போர்ட்டரை வரவழைக்கிறதும் சான்ஸ் இல்லை. ஸ்ரீலங்காவில் அவன் லாக்கரில் எடுத்ததும்.. அவன் கூடவே நம்ம ஆட்களையும் அனுப்பிட்டோம். அவன் அங்கிருந்து கன்னியாகுமரி வரும் வரை.. யார் கிட்டயும் ஃபோன் பேசலை. பின்னே எப்படி அந்த ரிப்போர்ட்டர் அங்கே வந்து பேட்டி எடுத்துட்டு இருக்கிறாங்க! எப்படி மிஸ் ஆச்சு? எங்கே மிஸ் ஆச்சு?” என்று கத்தினான்.

 

“ஸார்! நடக்கிறது கண்டிப்பா நமக்கு சாதகமாக இல்லை. அந்த ரிப்போர்ட்டர் எதேச்சையாக வந்திருக்கலாம்.”

 

“எதேச்சையாகவா! முட்டாளா நீ! அந்த பொண்ணு கேட்கிற கேள்வியைப் பார்த்தா.. அப்படியா தெரியுது. அந்த பொண்ணுக்கும் இதைப் பற்றித் தெரிந்திருக்கு! அந்த கிஷோர் கூட்டிட்டு வருவதற்கும் சேன்ஸ் இல்லை. பிகாஸ் கிஷோர் கன்னியாகுமரிக்கு கிளம்பியதும்.. அவனும் நம்ம கட்டுப்பாட்டுக்குள் வந்துட்டான்.”

 

அப்பொழுது “ஸார் இதைப் பாருங்க.. சோஷியல் மீடியாவிலும் இந்த விசயம் வேகமாக பரவிட்டு இருக்கு..” என்று காட்டினான்.

 

அதை வாங்கிப் பார்த்தவன், ஆத்திரத்துடன் ஐஃபோனை ஓங்கி தரையில் வீசியடித்தான்.

 

அப்பொழுது ஒருவன் ஓடி வந்து “ஸார்! ஸாரி டு ஷே திஸ்! ஆனா இந்த விசயத்தை உங்களுக்கு சொல்லியாகணும். நாம் ஏற்பாடு செய்த மீடியாஸ் பீப்பிளையும்.. ரீசர்ச்சர்ஸையும் அங்கே அவங்க வேலையைச் செய்ய விடாமல் விக்ரம் தடுத்துட்டு இருக்கிறான்.”

 

“வாட்!”

 

“அங்கே இருக்கிற மக்களையும்.. அவன் கூடச் சேர்த்துட்டான். அங்கே இருக்கிற சனங்க.. பவித்ராவும் பவித்ராவோட குழுவினரும் தான்! அந்த ஐலென்ட்க்கு போய் ரீசர்ச் செய்யணும் என்று ஆர்ப்பாட்டம் செய்யறாங்க! நாம் ஏற்பாடு செய்த ஆட்கள் பவித்ரா ஆராய்ச்சி செய்ய விடாம தடுத்திருப்பதாக அவங்க பக்கம் சேர்ந்துட்டு நம்ம ஆட்களைத் துரத்தராங்க! அந்த டீமின் ஹெட்டை அவங்க பேசியே சரிப் பண்ணிட்டாங்க! இனி அவர் நம்ம மெம்பர்ஸ் சொல்வதைக் கேட்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.”

 

“விக்ரம்!” என்று அவன் ஆத்திரத்தில் கத்தினான்.

 

“அந்த விக்ரமை சாதாரணமாக எடைப் போடக் கூடாது என்று தெரியும். ஆனா இருபத்தி நான்கு மணி நேரமும் அலர்ட்டா இருந்திருக்கணும். ஒரு செக்ன்ட்டில் எல்லாத்தையும் அவன் பக்கம் திருப்பிட்டான். அந்த கவுர்மென்ட் ஆட்களைக் கூட.. வேற வழியில்லாமல் அவங்க சொல்றபடி கேட்க வச்சுட்டான் தானே..”

 

அவனது அருகில் வந்தவன் தயக்கத்துடன் “ஸார் அப்போ! அவர்களைக் கொல்ல செய்த ஏற்பாடு?!” என்று கேட்கவும், “அதை ட்ராப் செய்யுங்க! இப்போ அவங்க இறந்துட்டா.. அதுவே அவங்களுக்கு சாதகமாக போயிரும். இப்படித்தான் அந்த பவித்ராவையும் கொல்லாம விட்டோம். அதாவது தொடங்கின இடத்துக்கே வந்திருக்கிறோம். எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனா அவங்க சாதிக்க போறாங்க..” என்று ஆத்திரத்துடன் கூறினார்.

 

அங்கு ஒரு நிமிடம் மாயன் அமைதி நிலவியது.

 

ஒருவன் தயக்கத்துடன் பேச ஆரம்பித்தான்.

 

“ஸார் இப்போ என்ன செய்வது! இப்போதைக்கு ஹாட் டாப்பிக் ஏ ஐ தான் என்று உலகத்தில் இருக்கிற பணக்காரங்களை அதுல இன்வஸ்ட் செய்யச் சொல்லியிருக்கிறோமே! தற்பொழுதே.. இதுதான் ட்ரென்டிங் நியுஸாக இருக்கிறது. அந்த விக்ரம் செய்த சதியால்.. குமரி கண்டம் ட்ரென்டிங் நியுஸாக மாறிவிட்டது. இனி இதை மாற்ற முடியாது. என்ன ஸார் செய்வது?” என்று கைகளைப் பிசைந்துக் கொண்டான்.

 

ஏனெனில் இதனால் அவர்களுக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பீடு ஆகும்.

 

சிறிது யோசனையில் ஆழ்ந்த அவன் “விசயத்தைக் கொஞ்சம் வேற மாதிரி மாத்திரலாம். ஆனா இழப்பீட்டை ஒன்றும் செய்ய முடியாது. ஆனா முழு வெற்றியை அவங்களுக்கு கொடுக்க கூடாது என்று கொக்கரித்தான்.

 

“எப்படி ஸார்?” 

 

“நாம் முன்னே சொன்னது தான்! அதைச் செயல்படுத்தி விடலாம். நம்ம கண்ணில் விரலை விட்டு ஆட்டும் விக்ரமை அடக்கிரலாம்.” என்று ஆத்திரத்துடன் சிரித்தான்.

 


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Trusted Member Author
Joined: 6 months ago
Posts: 48
Topic starter  

அத்தியாயம் 29

ஆராய்ச்சி செய்ய தேவையானது வந்துவிட்டால்.. தெரியப்படுத்துமாறும் அதுவரை சிறிது ஓய்வு எடுக்க வேண்டும் என்று விக்ரம் கேட்டப் போது.. சிறு எரிச்சலுடன் திரும்பிய தேவந்தரன்.. அவர்களது களைந்த தோற்றத்தைக் கண்டு.. அவர்கள் ஓய்வு எடுக்கும் இடத்தில் விபரங்களை உதவியாளிடம் தரக் கூறிவிட்டு.. அனுமதி அளித்தார்.

 

பின் நிபாஷினியிடம் சென்ற விக்ரம் அவளையும் அவர்களுடன் ஆராய்ச்சி நடைப்பெறும் இடத்திற்கு வரக் கூறினான். அவள் சந்தோஷமாக ஒத்துக் கொண்டாள். பின் நிபாஷினி தன்னிடம் இருந்த இன்னொரு செல்பேசியை விக்ரமிடம் தரவும்.. அதை வாங்கிப் பத்திரப்படுத்திக் கொண்டான்.

 

பின்.. வர மறுத்த பவித்ராவை பிடிவாதமாக அழைத்துக் கொண்டு.. அவர்கள் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டலுக்கே சென்றான். 

 

“ரொம்ப டையரட்டா இருப்பே.. இந்த இதைச் சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு. நான் போய் கிஷோரையும் அபினவ்வையும் பார்த்துட்டு வரேன். லிசன்.. எந்த காரணத்தை கொண்டும் கதவை திறந்திராதே!” என்று எச்சரித்துவிட்டு செல்ல முயன்றான்.

 

ஆனால் அவனது சட்டையைப் பற்றி நிறுத்திய பவித்ரா “நீ சாப்பிடலையா.. ரெஸ்ட் எடுக்கலையா விக்ரம்!” என்று கேட்டாள்.

 

சிறு முறுவலுடன் அவளது கை விரல்களில் இருந்து தனது சட்டையை மெல்ல விடுவித்தவாறு “கண்டிப்பா ரெஸ்ட் எடுப்பேன் பவித்ரா! நீ அந்த லேன்ட்டில் வொர்க் பண்றதைப் பார்த்த பிறகு! அதுவரை.. நான் இன்னும் நம்ம வெற்றியை ஒத்துக்க மாட்டேன்.” என்றுவிட்டு அகன்றான்.

 

அங்கு நெட் சென்டர் எங்கே என்று கேட்டு.. முகத்தை மறைத்தவாறு விக்ரம் சென்றான். ஏனெனில் தற்பொழுது அந்த இடத்தில் மட்டுமில்லை. உலகமும் முழுவதிற்கும் அவனது முகம் பிரசித்தம்.

 

அவன் சென்ற வேளையில்.. சரியாக.. அபினவ்வும் கிஷோரும் களைந்து போன தோற்றத்துடன் வெளியே வந்தார்கள். அவர்கள் செய்த விசயமும் சாதாரணமான விசயம் இல்லை. 

 

அவர்களைப் பார்த்ததும் மகிழ்ச்சியுடன் விக்ரம் நின்று விட.. அவனைப் பார்த்த அபினவும் கிஷோரும் குதுகலத்துடன் கட்டியணைத்தார்கள்.

 

அபினவ் விக்ரம் தன்னை விட மூத்தவன் என்பதை மறந்தான். கிஷோர் விக்ரம் தனது முதலாளி என்பதை மறந்தான்.

 

விக்ரம் “வெல் டன்! யூ மேட் இட்!” என்றான்.

 

அபினவ் “நாங்க இப்போ தான்.. நீயூஸ் பார்த்துட்டு வந்தோம். பைனலி குமரி கண்டத்தில் கால் வைக்கப் போகிறோம்.” என்றவனின் உடல் சிலிர்த்தது.

 

கிஷோர் “ஸார்! டைமிங் என்று ஒன்று இருக்கு! சரியான நேரத்தில் விரைந்து செயல்பட்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு நீங்க!” என்றான்.

 

“நாம என்று சொல்லு! நாம பெருசா.. வீர சாகசம் எல்லாம் செய்யலை. செய்ய வேண்டிய வேலைகளைத் தள்ளிப் போடாம வேகமா யோசித்து செய்து முடித்தோம். அதற்கான பலன் கிடைச்சுது.”

 

பின் அபினவ்வை பார்த்து “பவித்ராவும் நீயும் அங்கே போய்.. உங்க கனவை நிறைவேற்றுங்க!” என்று சிரித்தான்.

 

கிஷோர் “ஸார் உங்க காரியம் இல்லைன்னா.. இது நிறைவேறியிருக்காது.” என்றான்.

 

அபினவ் “அன்டர்பர்சேன்டேஜ் ட்ரூ!” என்றுவிட்டு “பவித்ரா மேம் எங்கே! நானும் அந்த டீம் கூடப் போய் ஜெயின்ட் ஆகணுமே!” என்று பரபரப்புற்றான்.

 

“எஸ்! எஸ்! அதுக்கு முன்னாடியும் நீயும் கிஷோரும் கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க! பவித்ராவை ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டு தான் வந்திருக்கேன். அபினவ், நான், பவித்ரா அந்த லேண்ட்க்கு போகப் போகிறோம். கிஷோர்.. நாங்க வருவதற்குள்.. உனக்கு இன்னொரு வேலை இருக்கு! நான் அனுப்பிய அந்த ஸ்கேன் கோட் நிபாஷினி கிட்ட இருக்கும். அதை வாங்கி அதுல இருக்கிற டிடெய்ல்ஸை இன்னும் அலசி பார்த்து.. அப்பப்போ எனக்கு இன்பார்ம் பண்ணு! அவங்க இத்தோட நிறுத்த மாட்டாங்க! வேற எதாவது செய்வாங்க! அதற்குள் அவங்களைத் தடுக்கணும்.” என்றான்.

 

கிஷோர் “ஸார்.. நிபாஷினி வைத்திருந்த எவிடன்ஸ் வச்சு.. அதுல நரசிம்மன் ஸார் வாக்குமூலம் கொடுத்திருந்தாங்களே.. அதை வச்சு அவங்களை மாட்டி விட்டுருக்கலாமே!” என்றான்.

 

அதற்கு விக்ரம் “அதை நீங்க பார்த்தீங்க தானே கிஷோர்! இத்தனைப் பேரை.. நரசிம்மன் வாய்மொழி வார்த்தையா சொன்னதை வச்சு.. என்ன கம்பளைன்ட் கொடுக்க சொல்றே! எங்களைப் பற்றிய விபரங்களை எதுக்கு எடுத்து வச்சுருக்கீங்க என்று நம்ம பக்கமே திருப்பி விட்டுருவாங்க! எதுவும் எடுபடாது. அவங்களுக்கு.. நம்ம சென்டரல் கவுர்மென்ட் ஆளுங்க வேற சப்போர்ட்! அவங்க கண்ணுக்கு.. இந்தியா நாட்டுலையே இருந்துட்டு இந்திய மொழி ஹிந்தியை வெறுக்கிறாங்களே.. இன்னும் அவங்க மொழிக்கு அங்கீகாரம் கிடைச்சா.. தமிழை தேசிய மொழி ஆக்குங்க.. என்று போராட்டம் நடத்த ஆரம்பிச்சுருவாங்க என்பது மட்டும் தான் தெரியுது. அது மட்டுமில்லா வெளிநாட்டு கம்பெனியின் கார்ப்பரெட் அரசியல் புரிய மாட்டேன்குது. இப்போதைக்கு கிடைக்கிற பேரையும் இலாபத்தை மட்டும் கணக்கில் வச்சுட்டு.. அவங்க சொல்ற பேச்சை கேட்டுட்டு இருக்கிறாங்க! ஆனா அது எப்படின்னு தெரியுமா.. இரை வச்சு பிடிக்கிறது மாதிரி... மறுபடியும் இந்தியாவை அவங்களுக்கே தெரியாம அவங்க கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் போறாங்க என்பது தெரிய மாட்டேன்குது. அதனால்.. அந்த குரூப்பிற்கு இன்னொரு பெரிய அடி கொடுக்கணும். ஒரு பெரிய ட்ரெப் தான் வைக்கணும். அதற்கு நிறையா யோசிக்கணும். நிறையா வேலை செய்யணும்.” என்று சிந்தனையில் ஆழ்ந்தவன், பின் தலையை உலுக்கி “இப்போதைக்கு அதை விடுங்க.. இப்போ அவங்களுக்கு எதிரான இந்த வெற்றியை கொண்டாடலாம். உங்களுக்கு பத்து நிமிஷம் தான் டைம்! கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க வாங்க..” என்று அழைத்துச் சென்றான்.

 

அவர்களை மற்றொரு அறையில் தங்க கூறிவிட்டு பவித்ரா இருந்த அறையின் கதவைத் தட்டியவன் “பவி இட்ஸ் மீ!” என்றும் குரல் கொடுத்தான்.

 

அவனது குரல் கேட்டு கதவைத் திறந்தவளிடம் “சாப்பிட்டியா? கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தியா.. இல்லை இதைப் பற்றியே நினைச்சுட்டு இருந்தியா! நாலு வருஷமா ரொம்ப பாடுப்பட்டுட்டே பவி! அந்த கனவு நிறைவேற போகுது. கொஞ்சம் ரிலேக்ஸா இரு..” என்று அவளது தலையை வருடிக் கொடுத்தான்.

 

ஆனால் பவித்ராவோ அவனை கண்ணிமைக்கால் பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

ஒவ்வொரு முறையும் எத்தனை பிரச்சினைகளையும், ஆபத்துகளையும் கடந்து வந்திருக்கிறோம் என்று குறிப்பிடுவான்.. ஆனால் அந்த பிரச்சினைகளையும் ஆபத்துகளையும் விக்ரம் இல்லையென்றால் கடந்து வந்திருக்க முடியாது. 

 

கனவு கண்டது அவள்.. ஆனால் அதைக் காரியம் கொண்டு நிறைவேற்றியவன் அவன்! 

 

பதில் எதுவும் கூறாமல் அவனையே அவள் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து “வாட்!” என்று சிரித்தான்.

 

பவித்ரா மெல்ல “பவி! பவி! பவி! இதைத் தான் கடந்த பத்து நாளா.. மூச்சு விடற மாதிரி பேசிட்டே இருக்கே இல்ல! நீ முதன் முதலா ப்ரோபோஸ் பண்ணியது எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு! காதலிக்கிறவளுக்கு பிடித்த விசயத்தைக் கொடுத்து.. ப்ரோபோஸ் பண்ணின! நான் சொன்ன பதிலும் ஞாபகம் இருக்கு! நம்ம காதல் எப்படி இப்படித்தானே உருவாச்சு.. கண்கள் கலந்து.. உணர்வுகள் உணர்ந்து.. உள்ளம் பரிமாறி தான் காதலிக்கணும் என்று இல்லை.. பிடிச்ச விசயத்தை கொடுத்து கூடக் காதலிக்க வைக்கலாம். பிடிச்ச விசயத்தை கொடுத்தவனை அதனாலேயே பிடிச்சு போகலாம்! ஆனா இப்போ.. உன்னைப் பற்றி நினைச்சாலே பலமா எதோ ஸ்வீட் அட்டேக் மாதிரி இருக்கு..” என்றாள்.

 

அவள் கூறிய விதத்தில் அதே உணர்வை தனது இதயத்திலும் தோன்றியதை உணர்ந்த விக்ரம் “நம்ம விசயத்தில் எல்லாம் உல்டா! நாம காதலிக்க ஆரம்பிச்ச பிறகு தான்.. கண்கள் கலந்தன, உணர்வுகள் உணர்ந்தன, உள்ளம் பரிமாறின..” என்று சிரித்தான்.

 

அவன் சிரிப்பதையே பார்த்துக் கொண்டிருந்த பவித்ரா சட்டென்று எம்பி அவனது வலிய உதடுகளில் தனது மெல்லிய இதழ்களை அழுத்த பொதித்தாள். 

 

இதை எதிர்பாராத விக்ரம்.. அவளது முத்த தாக்குதலால்.. அவளோடு இரண்டு எட்டு பின்னே சென்றாலும்.. அவளது இடையில் தனது கரங்களை தவழ விட்டு அணைத்துக் கொண்டான். பின் என்ன நினைத்தானோ.. “பவி! வெயிட்! வெயிட்!” என்று விலகியவனின் கண்களில் தவிப்பும், கெஞ்சலும் இருந்தது.

 

“பவி ப்ளீஸ்! என்னை ரிலேக்ஸ் ஆக்காதே! இன்னும் நமக்கு வேலை இருக்கு! என்னோட விருப்பம் கூடினால்.. அதை கன்ட்ரோல் செய்ய முடியாது.” என்றான்.

 

பவித்ரா “டு யு ஃபீல் ரிலேக்ஸ் நவ்?” என்றுக் கேட்டவள், மீண்டும் அவனது உதடுகளை நாடினாள். இம்முறை சற்று வேகத்துடனும் வன்மையாகவும் அணுகினாள். 

 

அதற்கு மேல்.. விக்ரமினால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சட்டென்று அவளது பின்னந்தலையில் கையை வைத்து.. தன்னுடன் அழுத்திக் கொண்டவன், அவளது மெல்லிய இதழ்களில் தனது உதடுகளை வன்மையாக கலக்க விட்டான்.

 

அதில் இருவருக்குமே.. மூச்சு திணறியது.

 

இருவரின் மேனிக்குள் பெரும் அதிர்வு போராட்டம் நடந்தது.

 

அவளை இதழணைத்தவாறு அவளுடன் படுக்கையில் சரித்தான்.

 

அவனுள் உணர்வுகள் பேயாட்டம் போட்டன.

 

தனது மொத்த காதலையும் அவளிடம் காட்டினான்.

 

அப்பொழுது பலமாக கதவு தட்டப்பட்டது.

 

அந்த சத்தத்தில் அவளிடம் இருந்து பிரிந்து கதவை பார்த்த விக்ரமிற்கு எதோ சரியில்லை என்று தோன்றியது.

 

“கதவை திறங்க மிஸ்டர் விக்ரம் நாங்க.. இந்தியன் இன்டிலிஜென்ஸ் பீரோவில் இருந்து வந்திருக்கிறோம்.”

 

அதைக் கேட்டு விக்ரமும் பவித்ராவும் திகைத்தார்கள். அப்பொழுது விக்ரமின் செல்பேசிக்கு நிபாஷினியிடம் இருந்து குறுந்தகவல் ஒன்று வந்திருப்பதைப் பார்த்தான். 

 

அதைப் படித்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. 

 

அதில் ‘குமரி கண்டம் ஒன்றே சாட்சி!’ என்று இருந்தது. அதை மீண்டும் படித்தவனுக்கு புரிந்த விசயம் அதிர்ச்சியை தந்தது. உடனே அவசரமாக நிபாஷினியின் யு ட்யுப் சானலில் பார்த்தான். அதில் அவர்கள் ஸ்ரீலங்கா மற்றும் ஆஸ்திரேலியா பழங்குடியினரிடம் எடுத்த காணொளி ஒளிப்பரப்பப்படவில்லை. 

 

மீண்டும் அவனது மூளைக்குள் அந்த வார்த்தை ஓடியது.

 

“குமரி கண்டம் ஒன்றே சாட்சி!”

 

அதற்குள் பலமாக கதவு தட்டப்பட்டது. 

 

“ஹலோ மிஸ்டர் விக்ரம்! உங்களை அட்டேக் பண்ண வந்தாங்கன்னு சொல்லியிருந்தீங்க தானே! அதைப் பற்றி விசாரிக்க தான் வந்திருக்கிறோம்.” என்றார்கள்.

 

உடனே “ஸாரி ஸார்! இதோ வரோம். கொஞ்சம் ஷாக் ஆகிட்டோம்.” என்றவன், அவசரமாக பவித்ராவிடம் திரும்பி “பவி! இதை மட்டும் நல்லா நினைவு வச்சுக்கோ! நாம‌ கஷ்டப்பட்டது, பல ஆபத்துகளைத் தாண்டி வந்தது எல்லாம் மட்டுமில்லை.. நம்ம லவ் உருவாவதற்கு காரணம் குமரி கண்டம் பற்றிய ஆய்வுக்காக தான்! நீ இப்போ அந்த டீமில் இருக்கே! இது நல்ல விசயம்! அதை விட்டுர கூடாது. எனக்காக எதையும் கேட்டதில்லை தானே! இதோ கேட்கிறேன். நீ கண்டிப்பா அந்த டீமில் இருக்கணும். அவங்க கூடப் போகணும். நாம் நினைச்சதை நிறைவேற்றணும்” என்று கிசுகிசுத்து விட்டு.. கதவைத் திறந்தான்.

 

அங்கு நான்கைந்து அதிகாரிகளுடன் உள்ளூர் காவலர் இருவரும் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு அருகே நிபாஷினி, கிஷோர், அபினவ் ஆகியோர் நின்றிருப்பதைப் பார்த்ததும்.. பவித்ராவும் விக்ரமும் அதிர்ந்தார்கள்.‌ நிபாஷினி அழுத்தமாக பார்க்கவும், அதைப் புரிந்துக் கொண்டவன், போல் மெல்ல தலை குனிந்தான்.

 

அவர்கள் அனைவரும் உள்ளே நுழைந்தனர். உள்ளே வந்த அதிகாரி “டொன்ட் வெர்ரி மிஸ்டர் விக்ரம்! சின்ன விசாரணை தான்! அதுக்கு நீங்களெல்லாம் ஒத்துழைக்கணும். எங்க கூட வரணும் அவ்வளவு தான்!” என்றார்.

 

அவருடன் வந்த அதிகாரி ஒருவர் விக்ரமிடம் இருந்த செல்பேசியை வாங்கிக் கொண்டார். அதில் கடைசியாக நிபாஷினியிடம் வந்த குறுந்தகவல் மட்டும் இருந்தது. பின் பவித்ராவிடம் செல்பேசி போன்று எதாவது இருக்கிறதா என்று சோதனை செய்தார்.

 

“ப்ளீஸ் கோ ஆப்ரெட் வித் அஸ்! போகலாமா!” என்று கேட்டார்.

 

விக்ரம் “எதுக்கு விசாரணை ஸார்?” என்று கேட்டான்.

 

அவரது முகம் மாறியது.

 

“ஒகே! ஒப்பனாகவே சொல்கிறேன். நாட்டோட ஒற்றுமையை கலைக்க பார்க்கறீங்க! இனவாதத்தை தூண்டறீங்க என்பதன் கீழ் உங்க ஐந்து பேரையும் அரெஸ்ட் செய்கிறேன்.” என்றார்.

 

அனைவரும் அதிர்ந்து போய் அவரைப் பார்த்தார்கள். விக்ரம் அங்கு வந்திருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களின் கையில் ஸ்கேன் கோட் அல்லது அதை அழித்ததால் ஏற்பட்ட காயமோ தழும்போ இருக்கிறதா என்று பார்த்தான். அப்படி எதுவும் இல்லை. இவர்களின் மேல் யாரோ குற்றம் சுமத்தவும்.. அதை விசாரிக்க வந்திருக்கிறார்கள் என்று புரிந்தது.

 

எனவே விக்ரம் “ஸார்! நீங்க பெரிய பெரிய குற்றத்தை சுமத்தறீங்க! அப்படி நாங்க என்ன செய்தோம்?” என்று கேட்டான்.

 

“மிஸ் பவித்ரா எழுதிய கட்டுரையில் தமிழர்கள் என்று பிரித்து உயர்த்தி காட்டி இனபாகுபாட்டை தூண்டியிருக்கிறாங்க! அதுக்கு நீங்களெல்லாம் துணை போயிருக்கீங்க! இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க கொடுத்த இன்டர்வீயூல அதை உங்க வாயாலேயே ஒத்துக்கிட்டிங்க! அதோட விளைவையும் பார்த்தீங்க! உங்க பின்னாடி நூறு பேர் வந்து நின்றாங்க! பவித்ரா எழுதிய கட்டுரை படி ஆராய்ச்சி நடைப்பெற்றால் புரட்சியே வெடிக்கும். அது இந்திய நாட்டின் ஒற்றுமைக்கு சீர்கெடாக முடியும். சோ யூ‌ ஆர் ஆல் அரெஸ்ட்.. அன்டர் ப்ரோவோக்கிங் ரெஷியல் டிஸ்கிரிமினேஷன்!” என்றார்.

 

அந்த இயக்கம் அவர்களை‌ இன்னொரு விதமாக வளைத்துவிட்டது விக்ரமிற்கு புரிந்தது. தாடை இறுக கோபம் பொங்க அவரைப் பார்த்தான். பவித்ராவிற்கு அவளது காதலே தற்பொழுது தடையாக வந்துவிட்டது புரிந்தது.

 

அவர்களுக்காக ஒதுக்கிய அந்த அழகிய இனித்த ஐந்து நிமிடங்கள்! அந்த நேரத்தில் அவன் சுயநிலையில் இருந்திருந்தால் சுதாரித்திருப்பானோ!

 

அவர்களின் மேல் குற்றம் சுமத்தியதைக் கேட்ட அபினவ் கோபம் கொண்டு “ஸார் இது ரொம்ப அநியாயம்! என்ன சொன்னீங்க! இன பாகுபாட்டை நாங்க தூண்டறோமா! இல்லை ஸார்.. மத்திய அரசு தான் அடக்க பார்க்கிறாங்க!” என்று கத்தினான்.

 

உடனே விக்ரம் மெல்ல “அபினவ்! வார்த்தையை விடாதே! நான் பார்த்துக்கிறேன். நான் மட்டும் பேசறேன்.” என்று‌ அடக்கியவனின் குரல் அழுத்தமாக ஒலித்தது. அந்த அழுத்தம் மற்ற நான்கு பேருக்கும் ஏதோ செய்தி சொல்வது போன்று இருந்தது. ஆனால் மற்றவர்களுக்கு ஏதோ சரியில்லை என்ற உள்ளுணர்வு உணர்த்தியது.

 

பின் அவரிடம் திரும்பிய விக்ரம் “ஸார்.. இது ஒரு தொல்பொருள் ஆராய்ச்சி சம்பந்தபட்ட விசயம்.. இது கூடப் பெரிய பெரிய விசயத்தை இணைக்கறீங்க!” என்றான்.

 

“நீங்க தான் அப்படிச் செய்திருக்கீங்க! தமிழர்கள் என்றுப் பிரித்துப் பேசாமல் இருந்திருந்தால்.. இந்த விசயம் பெரிய ட்ரென்டாக எங்கும் பரவாமல் இருந்திருந்தால்.. இது முக்கியமான ரீசர்ச்சாக முடிந்திருக்கும். அதோட முடிவு என்ன சொல்கிறதோ.. அதன்படி நடக்கும். ஆனா நீங்க இப்படித்தான் செல்லணும். இப்படித்தான் இருக்கணும்.. என்று வழி நடத்தி அது வழியா மற்றவங்க வரணும் என்று கருத்தை சொல்லியிருக்கீங்க மிஸ்டர் விக்ரம்! இது என்ன சாதாரண விசயம் என்று நினைச்சுட்டிங்களா! நீங்க பேசியது பெரிய விசயம்.. அதற்கான பலனையும் அனுபவிச்சு தான் ஆகணும்.” என்று உறுத்து பார்த்தார்.

 

வாயைத் திறந்து பவித்ரா பேச போகும் முன் முந்திக் கொண்டு “நான் அப்படிச் சொல்லுலைன்னா.. அதை வெறும் புதிதாக மேலே வந்த தீவு என்றுச் சொல்லிருவாங்க ஸார்! மீடியாஸ் அப்படித்தான் சொல்லிட்டு இருக்கிறாங்க!” என்று வாதிட்டான்.

 

“யார் என்ன சொன்னாலும்.. ரீசர்ச் ரிசலட் என்று ஒன்று இருக்கு தானே! அதுக்குள்ள யார் உங்களை கிளர்ச்சி ஏற்படுத்த கூறியது! மக்கள் மனதில் தேவையில்லாத விசயத்தை விளைச்சுருக்கீங்க..” என்று கடுமையாக பேசினார்.

 

கிஷோர், அபினவ், பவித்ராவிற்கு புரியவில்லை. நிபாஷினியிடம் இருக்கும் ஆதாரத்தை காட்டினாலே.. இந்த விசயம் எவ்வாறு ஒரு குழுவினரால் ஜோடிக்கப்படுகிறது என்பதை இவர்களிடம் விளக்கி விடலாமே! ஆனால் ஏன் விக்ரம் பணிந்து போகிறான்.. என்று புரியாமல் பார்த்தார்கள்.

 

விக்ரம் “ஒகே ஸார்! ரிசல்ட் வந்து முடிவு செய்யட்டும். நான் சொல்லித் தான் எல்லாரும் நம்பறாங்க என்று நீங்க சொல்வது எனக்கு வேடிக்கையாகவும்.. ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இருக்கு! இனி நான் ஒன்றும் சொல்லப் போவது இல்லை. மேலே வந்திருக்கிற குமரி கண்டம் மட்டுமே சாட்சி! நான் சொன்னது.. மட்டுமில்லை.. எந்த ஆதாரங்களைக் கொடுத்தாலும்.. அது அழிந்து போயிருந்தாலும்.. இப்போ செய்யப் போகிற ரீசர்ச்.. முடிவை சொல்லட்டும்.” என்று மற்றவர்களைப் பார்த்து அழுத்தமாக கூறினான்.

 

விக்ரம் பேசியதைப் புரிந்துக் கொண்ட மற்ற மூவரும் அதிர்ச்சியாக இருந்தது. அவர்களது சான்று அழிக்கப்பட்டிருக்கிறது. இந்த கைது நடவடிக்கை கூட அவர்களது சதியின் பெயரில் நடக்கிறது. 

 

விக்ரம் பேசியதைக் கேட்ட அவர் “காலம் தாழ்த்தி இது உங்களுக்கு புரிந்திருக்கு! அதனால் ஒரு பயனும் இல்லை. எல்லாரும் அமைதியா நடங்க..” என்றார்.

 

விக்ரம் “ஸார் இதுதான் அநியாயம்! எதற்கு நான் செய்ததை மற்றவங்க மேலே பழிப் போடறீங்க! ஒகே ஸார்! நானும் ஓப்பனா சொல்றேன். கர்வத்தோட சொல்றேன். நான்தான்.. இந்த விசயத்தைத் தொடங்கி வைத்தேன். என்னோட விசயத்திற்கு இவர்களைப் பயன்படுத்திக் கொண்டேன். இவர்கள் இது ஒரு ஆராய்ச்சி என்ற நோக்கத்தில் மட்டும் தான் இணைந்தாங்க! ஆனா என்னோட நோக்கமே வேற..” என்றான்.

 

பவித்ரா, அபினவ், கிஷோர், நிபாஷினி ஆகியோர் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்கவும், விக்ரம் “உங்களுக்கு ஷாக்காக தான் இருக்கும். ஆனால் இதுதான் உண்மை! நீங்க எல்லாம் நல்ல விசயத்திற்காக தான் துணை நின்றுக்கீங்க! அதனால் பெருமைப்படுங்க..” என்றான்.

 

அபினவ் அவனிடம் பேச முற்படவும், விக்ரம் கோபத்துடன் அவனைப் பார்த்து “எதுவும் பேசக் கூடாது.. என்று சொன்னேன்னில்ல!” என்றான். பின் பவித்ராவை பார்த்து “நான் சொன்னது ஞாபகம் இருக்கில்ல.” என்று அழுத்தமாக பார்த்தவன், பின் தொடர்ந்து “நான் என்ன செய்கிறேன் என்று தெரிந்து தான் செய்கிறேன். அதனால் என்ன நடக்கும் என்றும் எனக்கு தெரியும். நீங்க உங்க வழியைப் பாருங்க! உங்களை இந்த மிஷன்ல இருந்து விடுவிக்கிறேன்.” என்றான்.

 

அப்பொழுதே விக்ரம் வேறு ஏதோ திட்டமிடுகிறான்.. என்று புரிந்தது. எனவே அமைதியாக ஆனால் என்ன நடக்குமோ.. என்ற பீதியுடன் நின்றிருந்தார்கள்.

 

அந்த அதிகாரி “பவித்ராவும் குற்றவாளி தான்!” என்று சிரித்தார்.

 

விக்ரம் “அப்போ தமிழர்கள் ஒடுக்கப்படுகிறாங்க என்று நினைக்கிற எல்லாரும் குற்றவாளிகள் தான்! பாவம் குமரி கண்டத்தை பற்றி எழுதின பவித்ரா மேல் எல்லா பழியையும் ஏன் போடறீங்க! தமிழ் என்று வாய் வார்த்தை சொன்னால் கூட இங்கே குற்றமா!” என்று கடும் கோபத்துடன் கேட்டான்.

 

பின் தொடர்ந்து விக்ரம் “கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி தமிழர் என்று பிரித்து பேசி.. இனவாதத்தை ஏற்படுத்துவதாக கூறினீங்களே! நாங்க பிரிச்சு பேசலை. நீங்க தான்.. ஒதுக்கறீங்க! அதுக்கு என்ன காரணம்..ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக போராடினோம் என்பதா! இல்லை.. மத்தியில் அமைந்த அரசுக்கு ஆதரவான ஆட்சி இங்கே அமையலை.. என்கிறதுக்காகவா! இதனால் எங்களுக்கு சரியான சலுகை கிடைக்கிறது இல்லை. வரிகளையும் அதிகம் பண்ணிருக்கீங்க! அதை எதிர்த்து எங்களுக்கான அங்கீகாரத்தை தேடினால்.. அது இனவாதத்தை தூண்டுவதா! எங்களுக்கு இந்த கதி என்றால் வோட் வங்கி குறைவாக இருக்கிற கிழக்கு மாநிலங்களை நீங்க மதிக்கிறதே இல்லை. மக்கள் தொகை அதிகமாக இருக்கிற வட மாநிலங்கள் தான் உங்களுக்கு முக்கியம்! உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா வட இந்தியாவில்.. மக்கள் தொகை, பாலிவுட், அம்பானி குடும்பத்தை தவிர வேற ஒன்றும் இல்லை. தென்னகம் தனி நாடாக மாறினால்..” என்கையில் அவர் குறுக்கிட்டார்.

 

அந்த அதிகாரி “போதும் மிஸ்டர் ரொம்ப ஓவரா பேசறீங்க!” என்று எச்சரித்தார்.

 

விக்ரம் “இந்த தீ தான் என் மனசுல கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் பவித்ராவோட ஆய்வு கட்டுரை படித்தேன். நானே போய் தான் அவங்க கிட்ட ஸ்பான்ஸர் செய்கிறோம் என்று சொன்னேன். அதற்கு ரெக்கார்ட்ஸ் கூட இருக்கு! அவங்க கட்டுரையில் இருப்பது நிரூபிக்கப்பட்டால்.. வட மாநிலங்களை விட.. பெரிய நிலப்பரப்பு எங்களுடையது.. அதிக மக்கள் தொகை எங்களுடையது.. என்று பெருமையா நிரூபிக்க நினைச்சேன். அதற்கு என்று நான் இந்தியாவில் அதிகாரத்தை கேட்கலை. அங்கீகாரத்தை தான் கேட்கிறேன். உங்க மொழி உங்களுக்கு.. எங்க மொழி எங்களுக்கு.. அவ்வளவுத்தான்!” என்று பழி முழுவதையும் தன் மேல் போட்டுக் கொண்டதை அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.

 

விக்ரம் தொடர்ந்து “அப்பறம் கொரனா டைமில் நான் இலண்டனில் மாட்டிட்டேன். பவித்ரா கடல் கொள்ளையர்களிடம் மாட்டிக்கிட்டாள்.” என்று விசயத்தை மாற்றினான்.

 

“இந்தியாவுக்கு வந்த பிறகு பவித்ராவை தேடினேன். நாலு வருஷமா தேடின பிறகு கண்டுப்பிடிச்சேன். அபினவின் ஆர்வத்தையும் கிளப்பி விட்டு.. என்னோட இணைச்சுட்டேன். கிஷோருக்கு வேற வழியில்லை.. என் மேனேஜர் அதனால் நான் சொன்னதைத் தான் கேட்டு ஆகணும். மறுபடியும் என்னோட மிஷனை தொடங்கினேன். பவித்ராவை காதலிப்பதாகவும், மேரேஜ் செய்துக் கொள்வதாகவும்.. ஏமாற்றி இதற்கு சம்மதிக்க வைத்தேன்.” என்றான்.

 

விக்ரமின் எச்சரிக்கையை மீறி.. பேச முடியாமல் இருந்த பவித்ரா.. மேலும் விக்ரம் அவர்களது நலனுக்காக பொய்யாக தன் மீது குற்றம் சாட்டிக் கொள்வதைக் கண்டு தாங்கி கொள்ள முடியாமல் அழுதவாறு மண்டியிட்டு அமர்ந்து விட்டாள். மற்றவர்களும் எதுவும் செய்ய முடியாது வாயடைத்தவர்களாய் நின்றிருந்தார்கள்.

 

பவித்ராவின் நிலை உணர்ந்த விக்ரம் ஒரு நொடி தயங்கி பின் தன் பேச்சை தொடர்ந்தான்.

 

“அபினவ், நான், பவித்ரா மூன்று பேரும் ஸ்ரீலங்காவில் இருந்து எங்களோட ஆராய்ச்சியை தொடங்கினோம். அப்பறம் ஆஸ்திரேலியா என்று ஆதாரங்களுக்காக அழைந்தோம். ஆனா இயற்கையே எனக்கு உதவி செய்தது. பெரிய ஆதாரமே கிடைச்சுருச்சு! அப்பறம் நிபாஷினி என்னோட இணைச்சுக்கிட்டேன் அவ யூ ட்யூப் சேனல் மூலமா.. நான் நினைச்சதை பரப்பி விட்டேன். என்னோட உத்தரவின் பேரில் அபினவும் கிஷோரும் சோஷியல் மீடியாவுல செய்தி பரப்பனாங்க! இங்கே இருக்கிற மக்களை உசுப்பேற்றினேன். கூட்டத்தை கூட்டினேன். இப்போ நீங்க இங்கே வந்து நின்றுக்கீங்க! இதுலையே தெரியுது. ஐயம்‌ வொன்! தமிழின் அடையாளத்திற்காக போரடியதை நான் கர்வத்தோட ஒத்துக்கிறேன். அந்த பெருமையை நான் யார் கூடயும் பங்கு போட மாட்டேன். எல்லாவற்றிக்கும் நான் தான் காரணம்! இவங்க நான் சொன்னபடி செய்தாங்க அவ்வளவு தான்! ஒகே இனி இதைப் பற்றிப் பேச மாட்டேன். தானாக இனி பேசப்படும். நீங்க எனக்கு பிராமிஸ் பண்ணிருக்கீங்க! இந்த ஆராய்ச்சி எந்த வித தடங்கல் இல்லாமல் நடக்கும். இந்த டீம்ல பவித்ராவும் அபினவ்வும் இருக்கிறாங்க! அவங்களை விடுங்க! இல்லைன்னா.. உண்மையை மறைக்கிறதுக்காக நீங்க அவங்களைத் தடுக்கறீங்க என்ற குற்றத்தை உங்க மேலே சுமத்துவேன். தேவந்திரன் ஸார் தலைமையில் தான்.. ஆராய்ச்சி பண்ண போறாங்க! உங்களுக்கு இவங்க மேலே நம்பிக்கை இல்லை என்றால் அவர் மேலேயும் நம்பிக்கை இல்லை என்று அர்த்தம்!” என்றான்.

 

அவனை அழுத்தமாக பார்த்த அவர் “அரெஸ்ட் ஹிம்! மற்றவங்களுக்கு ஒரு கொயரி வச்சுட்டு.. அனுப்பிருங்க ஆனா கண்காணிப்பில் வச்சுருங்க! அவங்க இரண்டு பேரையும் தேவந்திரன் ஸார் கிட்ட பேசிட்டு அனுப்பிருங்க!” என்று‌ உத்தரவிட்டார்.

 

விக்ரமின் கையில் விலங்கிடவும், அபினவ் நெற்றியை கையில் தாங்கியவாறு நின்றுவிட்டான். கிஷோர் அவர்களுக்கு முகத்தைக் காட்டாது வேறு பக்கம் திரும்பி நின்றுக் கொண்டான். நிபாஷினி தலை குனிந்து நின்றுவிட்டாள். பவித்ராவோ.. அப்பொழுது அமர்ந்த நிலையில் தான் அமர்ந்திருந்தாள்.

 

கையில் விலங்கிட்டதும்.. திரும்பி அவர்களைப் பார்த்தான். இனியும் நின்றிருந்தால்.. அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது உண்மை வெளிப்பட்டு விடும் என்று அஞ்சினான். 

 

எனவே “ஆல் த பெஸ்ட்!” என்றவன், தொடர்ந்து எதாவது வரலாற்றை எடுத்து பார்த்தால்.. யாரோ ஒருத்தரோட தியாகத்தால் அது நடந்திருக்கும். இங்கே இந்த வரலாறு என்னோட தியாகத்தில் உருவாகட்டும். கனவுகள் வெல்ல காரியம் துணை!” என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டினான்.

 

“போதும்.. பெரிய சுதந்திர போராட்ட தியாகி மாதிரி என்ன பேச்சு..” என்று அவனை இழுத்து சென்ற பொழுது விக்ரம் உரக்க கத்தினான்.

 

“வாழ்க தமிழ்!”

 

“வளர்க தமிழர் இனம்!”

 

“பெருக அதன் பெருமை!”


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Trusted Member Author
Joined: 6 months ago
Posts: 48
Topic starter  

ஹலோ தோழிகளே.. இந்த கதையுடன் தொடர்ந்து படித்து வந்தவர்களுக்கும்.. கதை முடிந்த பின்.. படித்தவர்களுக்கும் எனது நன்றிகள்..

 

இந்த கதை படித்தவர்களுக்கு தெரியும்.. இது வழக்கமான குடும்ப நாவல் கதை அல்ல! படித்தவர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை இக்கதை கண்டிப்பாக கொடுத்திருக்கும்.. என்று நம்புகிறேன்.

 

ஆரம்பத்திலேயே ஒரு டிக்ளேமர் போட்டேன். இது முழுக்க முழுக்க எனது சொந்த கற்பனையில் உருவான கதை.. இதில் வரும் கருத்துக்கள் எனது சொந்த கருத்துக்கள்.. இது உங்களுக்கும் ஏற்புடையதாக இருந்தால் மகிழ்ச்சியே..

 

இந்த கதை முடிந்துவிட்டதா.. என்று கேட்பவர்களுக்காக இந்த பதில்.. அடுத்து நடப்பதை உங்களது கற்பனைக்கு விடுகிறேன். என்ன நடந்திருக்கும் என்று சொல்லுங்க.. நாளை நான் எபிலாக்குடன் சந்திக்கிறேன். அது உங்களது கற்பனை படி இருந்ததா என்று சொல்லுங்க..

 

பொதுவாக இந்த மாதிரி கதைகளின் முடிவுகள் இப்படித்தான் இருக்கும்.. மீண்டும் அனைவருக்கும் நன்றி..


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Trusted Member Author
Joined: 6 months ago
Posts: 48
Topic starter  

அத்தியாயம் 30

தேம்பி தேம்பி அழுதுக் கொண்டிருந்த பவித்ராவை எவ்வாறு தேற்றுவது என்று அறியாது.. அபினவும் நிபாஷினியும் நின்றிருந்தார்கள். ஏனெனில் அவர்களுக்கும் சிறிதும் ஏற்றுக் கொள்ள முடியாத விசயம் இது!

 

இவர்களது இலட்சியம் நிறைவேற விக்ரம் தன்னையே தியாகம் செய்திருக்கிறான். இவர்களையும் சேர்த்து கைது செய்யப் போகிறோம் என்று அதிகாரி கூறியதும்.. மற்றவர்கள் கைது ஆகாமல் இருப்பதற்காக தன் மீது அனைத்து பழியையும் போட்டுக் கொண்டான். 

 

இந்த சூழ்நிலையில் அதைத் தவிர அவனால் வேறு ஒன்றும் செய்திருக்க முடியாது. ஆனால் அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

 

நிபாஷினி “ஸாரி பவித்ரா! விக்ரமோட இந்த நிலைக்கு நானும் ஒரு வகையில் காரணம்! நான் ரொம்ப அசால்ட்டா இருந்துட்டேன். என் டீம் மேனேஜர் கிட்ட.. நான் வைத்திருந்த எவிடன்ஸ்.. கிஷோர் அனுப்பிய எவிடன்ஸ் என்று எல்லாத்தையும் கொடுத்துவிட்டு.. என்னோட சிஸ்டத்தில் இருந்து டெலிட் செய்துட்டேன். என் டீம் மேனேஜர் இப்படித் துரோகம் செய்வான் என்று நினைச்சு பார்க்கலை. ஏன் இன்னும் அந்த வீடியோஸை டெலிகாஸ்ட் செய்யலைன்னு கேட்டால்.. அதெல்லாம் டெலிட் ஆகிடுச்சுன்னு கூலா பதில் சொல்றான். அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியும் ப்ரோஜனம் இல்லை. அதுக்குள்ள.. அதிகாரிகள் வந்துட்டாங்க.. அதுதான் அவங்களுக்கு டவுட் வராத மாதிரி.. ‘குமரி கண்டம் ஒன்றே சாட்சி’ என்று மேசேஜ் போட்டேன். என் ஃபோனை வாங்கி.. அதைப் பார்த்து என்ன எது எதாவது கோட் வேர்ட்டா என்று விசாரிச்சாங்க! அந்த லேன்ட்டில் ஆராய்ச்சி செய்தால்.. ப்ரூஃப் பண்ணிரலாம் என்கிறதைத் தான் அப்படியே மேசேஜ் பண்ணினேன்.. என்று சமாளித்தேன். ஆனா அந்த குமரி கண்டத்தில் நீங்க கன்டினீயுவா ரீசர்ச் செய்வதற்காக விக்ரம் இப்படிச் செய்வார் என்று கொஞ்சம் கூட நினைச்சு பார்க்கலை.” என்ற போது.. அவளது கண்களில் இருந்தும் கண்ணீர் வழிந்தது.

 

அபினவ் அழுத்த முகத்தை துடைத்துக் கொண்டு “தேவந்திரன் ஸார் பி.ஏ கிட்ட இருந்து ஃபோன் வந்துருச்சு போகலாமா பவித்ரா மேம்!” என்று கேட்டான்.

 

பவித்ரா கண்களில் கண்ணீர் பெருக “எப்படி என்னால் முடியும் அபினவ்! நாலு வருஷத்துக்கு முன்னாடி செய்த துரோகத்தை மறுபடியும் செய்யச் சொல்றீங்களா! நாலு வருஷத்துக்கு முன்னாடி இப்படித்தான்.. என்னோட இலட்சியத்திற்காக அவரோட காதலை விட்டுக் கொடுத்தேன். இப்போ என்னோட இலட்சியத்திற்காக அவரையே விடச் சொல்றீங்களா!” என்றாள்.

 

அபினவ் “மேம் அதுக்காக.. இங்கேயே உட்கார்ந்திருக்க சொல்றீங்களா! எந்த விசயத்திற்காக அவர் இத்தனைப் பாடுப்பட்டரோ.. அதைச் செய்யாம விட்டோம் என்றால்.. அவர் போட்ட எபெஃக்ட் எல்லாம் வீணா போகுமே.. அதைத் தான் அவருக்கு தர விரும்பறீங்களா..” என்று குரலை உயர்த்திக் கேட்டான்.

 

பவித்ரா மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். கடைசியில் விக்ரமை தனது காதலைக் கொண்டு தேக்கி வைத்தது நினைவிற்கு வந்தது. விக்ரமின் இந்த நிலைக்கு அவள் தான் காரணமோ.. என்று மருகினாள்.

 

அபினவ் “மேம்! நீங்க அந்த டீம் கூடப் போகணும் என்றுத் தான்.. இந்த பழியை அவர் மேலே போட்டுக்கிட்டார். நம்மளோட இலட்சியத்துல கடைசி கட்டதிற்கு வந்தாச்சு.. அதுல வெற்றியைத் தான் அவர் விரும்புவார். நீங்க இப்படி உட்கார்ந்துட்டு இருக்கிறதை அல்ல! நீங்க அவர் மேலே அன்பு வச்சுருக்கீங்க என்றால்.. நான் பிரமித்து பார்க்கிற மனிதன் அவர்! அவரை அப்படிக் கூட்டிட்டு போனதைப் பார்க்கிறதுக்கு எனக்கு மட்டும் நல்லாயிருக்கு என்று நினைக்கறீங்களா..” என்று கேட்டான்.

 

அப்பொழுது நிபாஷினி “எனக்கு என்னமோ.. மிஸ்டர் விக்ரமிற்கு ஒன்றும் ஆகாது.. சீக்கிரம் வெளியே வந்திருவார் என்று தான் தோணுது. கிஷோர் பின்னாடியே போயிருக்காரே! அது மட்டுமில்லாம.. இவரை விட கான்டர்வெர்ஸியா பேசினவங்க.. மீடியாஸிற்கு ஃபோஸ் கொடுத்துட்டு டாட்டா காட்டிட்டே போலீஸ் வேனில் ஏறிப் போயிட்டு.. அன்னைக்கு சாயந்திரமே.. வெளி வந்திருக்கிறதைப் பார்த்திருக்கிறேன். மிஸ்டர் விக்ரமும் சீக்கிரமே வந்திருவார். எனக்கு இருக்கிற கில்டி ஃபீல் என்னவென்றால்.. நான் அந்த எவிடன்ஸை பத்திரமா வச்சுருந்தா.. இந்த அரெஸ்ட் நடந்திருக்காதோ..” என்றவளின் கண்கள் கலங்கியது.

 

தற்பொழுது அவளை பவித்ரா தேற்றும்படி ஆகிற்று.

 

“இதுக்கு முன்னாடி நாங்க இந்த மாதிரி நிறையா சந்திச்சுட்டு தான் இதுவரைக்கும் வந்திருக்கிறோம். இது ஒன் ஆஃப் தி ட்ரகிள்! அவ்வளவுத்தான்.. ஆனா..” என்றவள், அவளும் ஒரு தடையாக வந்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் தலைகுனிந்தாள். 

 

அனைத்தையும் தைரியமாக எதிர்கொண்டு தாண்டி வந்தவன், அவளிடம் மட்டும் தோற்று விட்டான்.

 

பின் பவித்ரா தனது மனதில் அழுத்திக் கொண்டிருப்பதைக் கூறினாள். 

 

“அது மட்டும் என்றால் கூட நான் தைரியமாக இருந்திருப்பேன் நிபா! ஆனா இவரோட அரெஸ்ட்க்கு பின்னாடி பெரும் சதி கும்பலே இருக்கே..” என்று கூற கூறவே.. அவளது இதயத்தில் திடுக்கிடும் உணர்வு ஏற்பட்டது.

 

இந்த விசயத்தை நினைத்து தான் மற்றவர்களும் பயந்தார்கள்.

 

அபினவ் “அவருக்கு ஒண்ணும் ஆகாது என்று தைரியமும் நம்பிக்கையும் வையுங்க மேம்! நீங்க இப்படி இருப்பதைத் தான் அவர் விரும்புவாரா?” என்று கேட்டான்.

 

கதவு தட்டப்பட்டதும்.. அவசரமாக விக்ரம் கூறியது பவித்ராவிற்கு நினைவிற்கு வந்தது.

 

‘பவி! இதை மட்டும் நல்லா நினைவு வச்சுக்கோ! நாம‌ கஷ்டப்பட்டது, பல ஆபத்துகளைத் தாண்டி வந்தது எல்லாம் மட்டுமில்லை.. நம்ம லவ் உருவாவதற்கு காரணம் குமரி கண்டம் பற்றிய ஆய்வுக்காக தான்! நீ இப்போ அந்த டீமில் இருக்கே! இது நல்ல விசயம்! அதை விட்டுர கூடாது. எனக்காக எதையும் கேட்டதில்லை தானே! இதோ கேட்கிறேன். நீ கண்டிப்பா அந்த டீமில் இருக்கணும். அவங்க கூடப் போகணும். நாம் நினைச்சதை நிறைவேற்றணும்.’

 

அவனது குரல் மீண்டும் அவளது காதில் ஒலிக்கவும், தனது முகத்தை அழுத்தமாக துடைத்துக் கொண்டு எழுந்த பவித்ரா “போகலாமா அபினவ்! நாம் நினைத்ததை நிறைவேற்றணும். இந்த வெற்றியை கொண்டாடணும். விக்ரமிற்கு இன்னும் திடத்தையும்.. நம்பிக்கையையும் இந்த வெற்றி தரும் பாரு..” என்றாள்.

 

மற்ற இருவரும் நம்பிக்கையுடன் அதை ஒத்துக் கொண்டார்கள்.

 

நிபாஷினி “ஒகே நீங்க இரண்டு பேரும் கிளம்புங்க! என் சேனலை மட்டுமில்லாம.. அங்கே வருவதற்கும் என்னை ஃபேன் பண்ணிட்டாங்க! ஆனா கவலைப்படாதீங்க.. என்னால் இன்னொரு சேனலை என்னோட இன்னொரு ஐடி மூலம் உருவாக்குகிறேன். தொடர்ந்து குமரி கண்டத்திற்கும்.. விக்ரமின் விடுதலைக்கு சப்போர்ட் பண்ணி.. போஸ்ட் போடுகிறேன். நானும் கிஷோரும் அந்த வேலையைப் பார்க்கிறோம். நீங்க இந்த வேலையில் முழு ஈடுபட்டுடன் செய்யுங்க!” என்றாள்.

 

அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தைரியம் கூறிக் கொண்டு கிளம்பினர். அப்பொழுது.. தரையில் ஸ்ரீலங்காவில் விக்ரம் கண்டுப்பிடித்த கல் பலகை கிடந்தது. அவர்களது அனைத்து ஆதாரங்களையும் அழித்தவர்களால் இதை அழிக்க முடியவில்லை. விக்ரம் கூறியது போல்.. இது அதிர்ஷ்டம் வாய்ந்தது தான்! இதன் அதிர்ஷ்டம் விக்ரமை வெளியே கொண்டு வருமா.. என்று எண்ணியவாறு அதை வருடியவள், கையோடு அதை எடுத்துக் கொண்டு சென்றாள்.

 

—---------------------------

 

கால்களில் முழங்கால் வரை.. ஷுவும், கையிலும் முழங்கை வரை கையுறையும், முகத்தில் மாஸ்க், தலையில் தொப்பி, உடலில் சேஃப்டி ஜாக்கெட் அணிந்துக் கொண்டு கடலில் இருந்து மேலே வந்த நிலப்பரப்பில் காலை வைத்த பொழுது.. பவித்ராவின் உடல் சிலிர்த்ததை அவளால் தடுக்க முடியவில்லை. 

 

என்னேரமும் ஆபத்து நிகழலாம் என்பதால் பெரிய கப்பல் ஒன்று அந்த தீவிற்கு அருகிலேயே நின்றது. அதனுடன் இணைக்கப்பட்ட கயிற்றில் அனைவரும் தங்களது இடுப்பில் கட்டிக் கொண்டு ஆராய்ச்சியை மேற்கொண்டார்கள். பகலில் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு விட்டு இரவில் கப்பலில் உறங்கினார்கள். வெளிநாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களை அந்த தீவுக்குள் அனுமதி அளிக்கவில்லை‌.

 

தேவந்திரன் குழுவினருடன் இணைந்து பவித்ராவும், அபினவும் கடற்பாசியை கவனமாக அகற்றினர். தோண்ட தோண்ட தங்கம் என்பது போல்.. கடற்பாசிகளை கஷ்டப்பட்டு அகற்ற அகற்ற.. அழிந்த விட்டதாக நினைத்த பண்டைய மக்கள் வாழ்ந்த வாழ்க்கையின் நினைவுகள், அடையாளங்கள்.. கிடைத்தது அவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது. பல பொருட்கள் உப்பு நீரால் சேதமாகி இருந்தாலும்.. அங்கு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக திகழ்ந்தது. 

 

அவர்களால் கடலில் மூழ்கிப் போன கண்டத்தை மீண்டும் கண்களால் பார்த்தது மட்டுமில்லாது அங்கு நின்று கொண்டு இருந்த உணர்வை அவர்களால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை.

 

சக்கரம் போன்று இறுகி இருந்ததை மெதுவாக அகற்றிய பொழுது.. அதன் அளவை கண்டு வியந்தனர். கடல் உப்பால் அரித்து ஆங்காங்கு உடைந்திருந்தாலும் அதை மெல்ல நிற்க வைத்த பொழுது கம்பீரமாக காட்சியளித்தது. குன்று போல் இருந்தவற்றில் இருந்த கடற்பாசிகளை இருபது பேர் சேர்ந்து பத்து நாட்களில் அகற்றியதில் அவர்களுக்கு கிடைத்த பலன்.. அவர்களை திக்குமுக்காட செய்தது. பாறையில் செதுக்கிய படிக்கட்டுகள்.. படிக்கட்டுகள் ஏறி வாசல் வழியாக சென்றால்.. தரையில் அரைப்பதற்கு செதுக்கிய ஆட்டாங்கல் போன்ற அமைப்பு, சிறு தொட்டி போன்று சதுர வடிவில் இருந்த அமைப்பு.. என்று சில கற்களால் ஆன அமைப்புகள் கிடைத்தன.

 

கண்கள் கலங்க நின்றிருந்த பவித்ராவின் தோளைத் தட்டிக் கொடுத்த தேவந்திரன் “யு டன் இட்! பிடிவதாமா நின்னு.. சாதிச்சுட்டே! நாங்க எல்லாம் கற்பனையாக இருக்கலாம் என்று நினைச்சோம். ஆனா அது கற்பனை இல்லைன்னு நிரூபிச்சுட்டே! உனக்கு உதவி செய்த அந்த பையனையும் பாராட்டரேன்.” என்றுவிட்டு சென்றார். 

 

பவித்ராவின் கண்கள் விக்ரமை நினைத்து கலங்கின.

 

அபினவ்வும் அதே நிலையில் தான் இருந்தான்.

 

அபினவ் “விக்ரம் ஸார் இப்போ எப்படியிருக்கிறார் என்று தெரியலையே! நாம இங்கே வந்து பத்து நாட்கள் ஆச்சு! எந்த விசயமும் இப்போ லீக் ஆகக் கூடாது.. என்று வெளியுலகிற்கு தொடர்பு இல்லாம இருக்கிறோம். வெளியாட்களுக்கும் உள்ளே‌ அனுமதி இல்லை. விக்ரம் ஒகேவா என்று கூடத் தெரியலையே!” என்றான்.

 

அபினவ் வார்த்தைகளால் கூறிவிட.. பவித்ரா மௌனமாய் தனது மனதை உரைத்தாள்.

 

அவர்கள் கண்டுப்பிடித்தவற்றையும்..‌ கப்பலில் பாதுகாத்து வைத்தவற்றையும் தேவந்திரனின் உதவியாளன் கெமராவில் பதிவு செய்துக் கொண்டான். பின் தேவந்திரன் மற்றவர்களை அங்கேயே இருக்க கூறிவிட்டு.. உதவியாளனை அழைத்துக் கொண்டு கரைக்கு சென்றார். அங்கு பல வெளிநாட்டை சேர்ந்த ஊடகத்துறையினர் குவிந்திருந்தனர். 

 

முதலில் அவர் அங்கு வந்திருந்த மத்திய அமைச்சரையும்.. சில அரசியல் பிரமுகர்களையும் சந்தித்து தனது குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தார். பின் மத்திய அமைச்சரை ஆய்வு அறிக்கையின் முடிவை அறிவிக்க கூறினார். அவர் “நீங்களே சொல்லுங்க..” என்று பின் வாங்கினார்.

 

சிறிது முறுவலித்துவிட்டு ஊடகத்துறையினரின் முன் சென்று நின்ற தேவந்திரன் சொன்ன ஒரே வார்த்தை… 

 

“கடலில் மூழ்கிய குமரி கண்டம் மீண்டும் வந்து விட்டன.”

 

உடனே அங்கு பலத்த கைதட்டும் சத்தம் சில நிமிடங்கள் தொடர்ந்து கேட்டன.

 

அவை ஓய்ந்த பின் தேவந்திரன் அடுத்து “அந்த குமரி கண்டத்தில் தமிழர்கள் தான் வாழ்ந்திருக்கிறார்கள். அங்கே தமிழ் மொழியின் பழைய வடிவம் பேசப்பட்டிருக்கு! எழுத்துக்களாலும்.. எழுதப்பட்டிருக்கு! இன்னும் உறுதியான ஆதராங்களை விரைவில் சமர்ப்பிக்கிறோம். அடுத்து.. மேலே வந்த மீதி தீவுகளிலும்.. ஆய்வு நடத்த திட்டமிட்டிக்கிறோம். இந்த தீவில் தொடர்ந்து ஆராய்ச்சி பணிகள் நடைப்பெறும்..” என்றார்.

 

ஊடகத்துறையினர் தொடர்ந்து பல கேள்விகள் கேட்கவும், “உங்களது கேள்விகளுக்கு பிறகு பதிலளிக்கிறேன்.” என்றுவிட்டு சென்றுவிட்டார். கப்பலில் வந்து தீவில் இறங்கியவர், மக்களுக்கு ஆய்வறிக்கையை அறிவித்துவிட்டேன்.. என்று கூறவும்.. இரவு பகலாக உழைத்த அனைவரும் சந்தோஷத்தில் குதித்தனர்.

 

தேவந்திரன் தொடர்ந்து “இந்த கொண்டாட்டத்தை இன்னும் நான்கு நாட்கள் உங்க குடும்பத்தோட கொண்டாட்டிட்டு.. ஐந்தாம் நாள் வந்து சேருங்க! நாம மத்த தீவுகளுக்கு போகப் போகிறோம்.” என்கவும், மற்றவர்கள் ஆராவரித்தார்கள்.

 

ஒரு மாதம் ஆராய்ச்சிக்கு பின் கப்பலில் வந்து கன்னியாகுமரியில் இறங்கியவர்களுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. பவித்ராவும் அபினவும் கப்பலில் இருந்து இறங்கியதும்.. அவளை மக்கள் சூழ்ந்துக் கொண்டார்கள். பாதுகாவலர்களின் உதவியுடன் அருகில் வண்டியில் அனுப்பி வைத்தார்கள். விமானம் ஏறி சென்னை வந்து இறங்கினர். அங்கு விமான நிலையத்திலேயே காத்திருந்த தங்களுடைய பெற்றோர்களைக் கண்டு பவித்ராவும், அபினவும் ஓடிச் சென்றுக் கட்டிக் கொண்டார்கள்.

 

பவித்ரா தனது தாயின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டு அழுது தீர்த்தாள். பின் நிமிர்ந்தவளுக்கு தாயின் விசாரிப்பு காதில் விழவில்லை. அவளது கண்கள் விக்ரமை தேடிக் கொண்டிருந்தன.

 

சற்று தொலைவில் கிஷோரும்.. நிபாஷினியும் நின்றிருந்தார்கள். அவர்களுடன் விக்ரம் நிற்கிறானோ என்று ஆர்வத்துடன் அவர்களிடம் ஓடினாள். பவித்ரா ஓடுவதைக் கண்டு அபினவும் அவளின் பின்னால் ஓடி வந்தான்.

 

ஆனால் கண்களில் கண்ணீர் குளம் கட்ட இருவரும் நின்றிருப்பதைப் பார்த்து அதிர்ந்தார்கள்.

 

பவித்ரா “ஏன்? என்னாச்சு? ஏன் இப்படி இருக்கறீங்க? விக்ரம் எங்கே?” என்று வரிசையாக கேள்விகளைக் கேட்டாள்.

 

அப்பொழுதும் அவர்களிடம் இருந்து பதிலளில்லை.

 

அபினவிற்கு திக்கென்று இருந்தது. 

 

“ப்ளீஸ்! இப்படிப் பேசாம நிற்காதீங்க! அவர் ஒகே தானே..” என்று கேட்டான்.

 

நிபாஷினி தனது கையில் இருந்த செல்பேசியை காட்டினாள். அதில் ஒரு மாதத்திற்கு முன்.. அதாவது அவர்கள் ஆராய்ச்சிக்கு சென்ற நாளில் நடந்த செய்தி இருந்தது. 

 

‘விசாரணையின் பொருட்டு.. புறவழி சாலையின் வழியாக விக்ரமை அழைத்து சென்ற காவலர் வேன் ஒன்று என்ஜின் பழுதின் காரணமாக திடுமென தீப்பற்றி வெடித்தது. அதனால் அதில் பயணித்த ஓட்டுநர் உட்பட நான்கு காவலர்களுடன் விக்ரமும் சம்பவ இடத்திலேயே இறந்துப் போனார்.’ என்று இருந்தது.

 

அதைப் படித்துப் பார்த்த பவித்ராவிற்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. நிற்க முடியாமல் கால்கள் துவள மயங்கி கீழே சரிந்தாள். அபினவ்வோ படித்ததை நம்ப முடியாமல் சிலையென நின்றிருந்தான்.

 

—------------------------------------------------------------

 

ஒரு மாதத்திற்கு முன்..

 

மெதுவாக கண்களை திறந்துப் பார்த்த விக்ரமுக்கு கண்களைத் திறந்தும்.. இன்னும் உலகம் இருட்டாக இருப்பது போன்று இருந்தது. இமைகளைத் தட்டித் திறந்துப் பார்க்க முயன்றான். அப்பொழுதும் அப்படியே இருந்தது. பின்பே அவனது கண்கள் கட்டப்பட்டிருக்கிறது புரிந்தது. அதன் பின்பே ஒரு கை மற்றும் ஒரு கால் விலகிடப்பட்டு கட்டிலில் படுக்க வைத்திருப்பதை உணர்ந்தான். எதிலோ பயணம் செய்துக் கொண்டிருப்பதை உணர்ந்து அவனுக்கு திகைப்பாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.

 

தனக்கு என்ன நடந்தது என்பதை நினைவிற்கு கொண்டு வர முயன்றான். அன்று அவனை கைது செய்து அழைத்து கொண்டு செல்லும் முன்..‌‌ விதிமுறைபடி அவனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தார்கள். சத்து குறைப்பாடு இருப்பதைக் கண்டு மருந்து செலுத்தினர்.

 

பின்னர் வேனில் அழைத்து கொண்டு சென்றது வரை நினைவிற்கு வந்தது. அதன்பின் நடந்தது எதுவும் நினைவில்லை. அவ்வாறு எனில் அவனுக்கு செலுத்தப்பட்ட மருந்தில் ஏதோ கலக்கப்பட்டிருக்கிறது. 

 

நிச்சயம் அந்த அதிகாரிகள் நேர்மையான அதிகாரிகள்.. என்பதில் ஐயமில்லை. அவ்வாறு எனில் அவன் அவர்களிடம் இருந்து கடத்தப்பட்டிருக்கலாம். யார் கடத்திருப்பார்கள் என்று யோசிக்க தேவையில்லை. விடை அவனுக்கு தெரிந்துவிட்டது.

 

அவனைக் கொல்ல நினைத்திருந்தால்‌.. மயக்கம் அடைய செய்வதற்கு பதில் கொன்றிருக்கலாம். ஆனால் அவனை கடத்திக் கொண்டு செல்வதால்.. தன்னை எங்கோ அழைத்துக் கொண்டு செல்கிறார்கள் என்று அவனுக்கு புரிந்தது.

 

எனவே மயக்கத்தாலும்.‌.. குழப்பத்தாலும் தளர்ந்த மனதையும் உடலையும் திடப்படுத்திக் கொண்டான். என்ன நடக்கிறது என்று பார்த்து விட முடிவு செய்தான்.

 

அவனுக்கு முழிப்பு வந்ததும்.. இருவர் வந்து அவனது கண்கட்டை அவிழ்த்து விட்டனர். அப்பொழுதே அவன் கப்பலில் பயணம் செய்துக் கொண்டிருப்பது தெரிந்தது. எந்த கேள்வி கேட்டாலும் பதில் வராது என்று தெரிந்திருந்ததலால் அவன் எந்த ஆர்ப்பாட்டமும் பண்ணவில்லை. அவனுக்கு தந்த உணவை அமைதியாக உண்டான். இயற்கை உபாதைகளுக்கு அழைத்துச் சென்றால் அமைதியாக சென்று வந்தான். தனித்து இருந்த நேரத்தில் தனது அன்னையை நினைத்து கவலைக் கொண்டான். அவர்கள் எவ்வாறு தான் இறந்து விட்டதாக வந்த செய்தியை தாங்கினார்களோ.. என்று அவருக்காக கவலைக் கொண்டான் கிஷோரும் அவனது குடும்பமும் அவரைப் பார்த்துக் கொள்வார்கள் என்ற நிம்மதியும் கொண்டான். பின் அவனது நினைவில் பவித்ரா வந்து சென்றாள். அவளது உயிருக்கும் இலட்சியத்துக்கும் இனி எந்த ஆபத்தும் வராது என்று நிம்மதி கொண்டான். பின் கடைசியாக அவளுடன் கழித்த நிமிடங்களில் மீண்டும் மீண்டும் வாழ்ந்தான்.

 

இவ்வாறு மூன்று நாட்கள் கழித்த பின் யாரோ இருவர் வந்து அவனது கண்ணை மீண்டும் கட்டினார்கள். பின் அவனை அழைத்துக் கொண்டு சென்றார்கள். கார் ஒன்றில் ஏற்றினார்கள். வெகுநேரம் பயணத்திற்கு பின்.. எங்கோ நடத்தி சென்றார்கள். ஏஸி காற்றின் குளுமை அவனைத் தழுவியது. பின் லிஃப்டில் எறிக் கிட்டத்தட்ட இருபது மாடி வரை சென்றார்கள்.

 

பின் எங்கோ நடத்திச் சென்று நாற்காலியில் அமர வைத்தார்கள்.

 

அப்பொழுது ஒரு குரல் கேட்டது.

 

“எங்களை மீட் பண்ண ரொம்ப ஈகரா இருந்தீங்க போல.. எந்த இரகளையும் செய்யாமல் அமைதியா இருந்தீங்கன்னு சொன்னாங்க! நானும் இரகளை பண்ணுவீங்க.. இரண்டு அடி போட்டு கூட்டிட்டு வாங்கன்னு ஆர்டர் போட்டிருந்தேன்.” 

 

பின்னர் விக்ரமின் கண்ணில் கட்டியிருந்த கட்டை அவிழ்க்க கூறினான்.

 

கிட்டத்தட்ட நான்கு மணி நேரம்.. வெளிச்சத்தைப் பார்க்காமல் இருந்ததால் கண்களைத் திறக்க முடியாமல் இமைகளை மூடியவாறு குனிந்த விக்ரமுக்கு கூலிங்கிளாஸ் தரப்படவும், அதை அணிந்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தான்.

 

அந்த பெரிய ஹாலில் ஒரு மேசையின் முன் அவன் அமர வைக்கப்பட்டிருக்க.. அவனுக்கு எதிரே சற்று தள்ளி ஏழு எட்டு பேர் அமர்ந்திருந்தார்கள்.

 

அவனிடம் ஐபேட் ஒன்று கொடுத்தார்கள். அதில் இருந்தவற்றைப் படித்தவன் அதிர்ந்து தான் போனான். அவன் விபத்தில் இறந்து விட்டதாக செய்தி அதில் இருந்தது.

 

விக்ரம் யோசனையுடன் பார்த்துக் கொண்டிக்கையில் ஒருவன் எழுந்து “நாங்க எல்லாரும் சேர்ந்து நான்கு வருஷமா தடுத்து வைத்திருந்ததை.. ஒரு மாசத்தில் நீ உடைச்சு ஜெயிருக்கே!” என்று கோபத்துடன் கூறிய

 

 பின் தொடர்ந்து “நாங்கெல்லாம் என்ன செய்தோம். கொலை செய்தோமா.. குண்டு வைத்தோமா.. எதுக்கு எங்க கூடப் போட்டி போடறே! முதலில் சிறிதாக அதாவது ஒரு ஏரியா என்று ஆரம்பித்து.. சிறிது சிறிதாக ஆட்கள் சேர்ந்து இவ்வளவு பெரிய நெட்வொர்க்காக மாற எங்களுக்கு பதினெட்டு வருடங்கள் ஆகின. நாங்கெல்லாம் குடும்ப தலைவர்கள் மாதிரி! குடும்பத்தை வழி நடத்தி செல்வது போல்.. இந்த உலகத்தை வழி நடத்தி செல்கிறோம். நீ தப்பா புரிஞ்சுட்டது தான் பிராப்ளம்! இப்போ குடும்பத்துல இருக்கிறவங்களை வெக்கேஷனுக்கு கூட்டிட்டு போக நினைக்கிற.. இந்த சம்மர் டேஸில் அவங்க டூரிஸ்ட் ஸ்பாட்டிற்கு போக ஆசைப்படராங்க! ஆனா இந்த சம்மர் டேஸில் மலை பிரதேசத்துக்கு போனால் தான் நல்லாயிருக்கும். சோ டூரிஸ்ட் ஸ்பாட்டிற்கு போகிற ரோட்டை ப்ளாக் பண்ணிட்டு.. இதுதான் சரியான வழி என்று மலை பிரதேசத்திற்கு கூட்டிட்டு போவது தப்பான காரியமா! நாங்க அதைத்தான் செய்துட்டு இருக்கோம். அந்த விசயத்துல இன்வஸ்ட் செய்வோம் இலாபம் சம்பாதிப்போம்… சம்பாதிக்க வைப்போம். இதுவரை எந்த தடங்கலும் வந்ததில்லை. நாங்க கை காட்டியது தான் நடந்துட்டு இருந்திருக்கு! இது 2006ல் தொடங்கியது. உலகம் உக்ரைன் இரஷ்யா போரில் அவங்களோட கவனத்தை திருப்பிட்டு இருந்த போது.. செல்ஃபோனில் புது டெக்னாலஜீ அதாவது வைபை வெப் ப்ரௌவுசர் ப்யுச்சர்ஸ் கொண்டு வர ட்ரை பண்ணிட்டு இருக்கிற டீமுக்கு நாங்க தான்.. ஸ்பான்ஸர் செய்து மார்கெட்டிங் செய்து.. பெரிய ஆட்களை கஸ்டமரா பிடித்து.. இதைப் பெரிய அளவில் கொண்டு வந்தோம். இதுவரை இப்படித்தான் உலகத்தோட கவனத்தை திருப்பிட்டு இருக்கிறோம். இது எங்களுக்கு இரண்டாவது தோல்வி! முதல் தோல்வி கொரனாவினால் வந்தது. எல்லாத்தையும் மாத்திருச்சு! இரண்டாவது உன்னாலும்.. இந்த இயற்கையாலும் வந்திருக்கு!”

 

“எங்க திட்டத்தை உடைத்த உன்னைக் கொன்று விடலாம் என்று தான் நினைச்சோம். ஆனா இப்படி யோசிக்கிற மூளை இருக்கிறவனை வேஸ்ட் பண்ண விரும்பலை. அதுதான் உன்னை இங்கே கூட்டிட்டு வரச் சொன்னேன்.”

 

“உலகத்தை பொருத்தவரை நீ இறந்துட்டே மிஸ்டர் விக்ரம்! அப்படி நீ உயிருடன் போனாலும் தேசத் துரோகி.. உன் கூட வந்தவங்களைக் கொன்ற கொலையாளி என்று அரெஸ்ட் செய்யப்படுவே! இதுதான் உன் விதி மிஸ்டர் விக்ரம்..” என்று அவனைப் பார்த்து சிரித்தான்.

 

மெல்ல நிமிர்ந்து பார்த்த விக்ரம் “நீ என் விதியை மாத்த போறீயா!” என்று மட்டும் கேட்டான்.

 

அவன் சற்று திகைத்து தான் போனான்.

 

சிரித்தவாறு “கரெக்ட்டா கெஸ் பண்ணிட்டே! ஆமாம் உன் விதியை மாத்தப் போகிறேன். நீ ஒரு நல்ல டிசைடர்! எங்களோட மூவ்ஸை கரெக்ட்டா கெஸ் பண்ணி எங்களுக்கு பயங்கரமா ஆட்டம் காட்டினே! அதே மாதிரி பிரசன்ஸ் ஆஃப் மைன்ட்டும் பிரமாதம்! நாங்க உனக்கு டஃப் கொடுத்த நேரத்திலும் சிட்டிவேஷனை அழகா மாத்திட்டே! கொஞ்ச நாளைக்கு முன்னாடி எல்லா பழியையும் உன் மேலே போட்டுட்டு பவித்ராவையும் அபினவையும் அவங்க வேலையை செய்ய விட்ட மாதிரி! சோ வெல்கம் டு ஹவர் கிளப்!” என்றான்.

 

பின் தொடர்ந்து “இதை விட்ட உனக்கு வேற வழியில்லை விக்ரம்! எங்களுக்கு உபயோகப்படாத உன் மூளையை சிதறி வெடிக்கவும் தயங்க மாட்டோம்.” என்றான்.

 

விக்ரம் நிதானமாக கேட்டான்.

 

“நான் உங்க கூடச் சேருவதால் எனக்கு என்ன ஃபெனிபிட்?” என்று கேட்டான்.

 

“நீ உயிருடன் இருப்பது தான்!”

 

விக்ரம் பலமாக சிரித்தவாறு “நான் உயிருடன் இருந்தால்.. உங்களுக்கு வேலை செய்யணும்.. என்றால்.. நான் ஏன் உயிருடன் இருக்கணும்! இடியட்ஸ்!” என்றான்.

 

பற்களைக் கடித்து கோபத்தை அடக்கிக் கொண்டு “சரி வேற என்ன வேண்டும்?” என்று கேட்டான்.

 

அதற்கு விக்ரம் “நீங்க எல்லாம் என்ன பிரம்மாக்களா! நீங்க செய்துட்டு இருக்கிறதை பெருமையாகவே என்கிட்ட சொல்றீங்களா! எனக்கு என்ன வேண்டும் என்று கேட்டிங்க தானே! உங்களோட அழிவு!” என்றான்.

 

“அது உன்னால் முடியாது!”

 

“எனக்கு ஒரு வருஷம் டைம் கொடுங்க! உங்களை சிதறடிச்சு காட்டறேன். அப்படியில்லைன்னா நானே வந்து உங்களோட கிளப்பில் சேர்ந்துக்கிறேன்.” என்று ஒப்பந்தம் போட்டான்.

 

அதைக் கேட்டு பலமாக சிரித்தவன் “என்ன போலீஸில் எங்களைப் பற்றிச் சொல்வியா!” என்று கேட்டான்.

 

அதற்கு விக்ரம் “நான் உங்களைப் பற்றி ஆஸ்திரேலியால இருக்கும் போதே கண்டுப்பிடிச்சுட்டேன். என்ன பதில் கிடைச்சுருச்சா..” என்றான்.

 

விக்ரமின் திமிரான பதிலை கேட்டவனுக்கு கோபம் மிகுந்தது. மற்றவர்களும் கோபத்துடன்.. விக்ரமை கொன்று விடுமாறு அறிவுறுத்தினர்.

 

விக்ரம் “ஏன் பயமா இருக்கா!” என்று நக்கலுடன் கேட்டான்.

 

“ஒகே டன்! உன்னோட அடையாளத்தையே அழிச்சுருக்கோம். கையில எதுவும் இல்லை. யாரும் துணை இல்லை. இது வேற நாடு வேற! இங்கே இருந்து நீ எப்படி அதைச் செய்யப் போகிறேன்னு நான் பார்க்கிறேன்.” என்று சிரித்தான்.

 

அதற்கு விக்ரம் “விக்ரம் என்றால் என்னன்னு தெரியுமா! வீரம், வலிமை, புத்திசாலித்தனம் கொண்ட வெற்றியாளன் என்று அர்த்தம்!” என்று முறுவலித்தான்.

 

“லெட் சீ!” என்று அவனது கண்கள் அடுத்த நிமிடமே மீண்டும் கட்டப்பட்டன.

 

வண்டியில் ஏற்றப்பட்டான். சிறிது தொலைவு சென்றதும்.. அவனது கரங்கள் மட்டும் அவிழ்க்கப்பட்டன. பின் வண்டியில் இருந்து தள்ளிவிடப்பட்டான்.

 

விழுந்ததில் ஏற்பட்ட சிராய்ப்பின் காரணமாக கையை உதறிய விக்ரம், கண்களில் கட்டப்பட்டிருந்த கட்டைக் கழற்றினான். மெல்ல எழுந்து சுற்றிலும் பார்த்தான். பரந்த வானத்தில் கழுகுகளும், காகங்களும் பறந்துக் கொண்டிருந்தன. ஒரு பக்கம் குப்பைகள் குவிந்திருக்க.. இன்னொரு பக்கம் சிமெண்ட் சீட் கூரை போட்ட வீடுகள் நெருக்கமாக இருந்தன.

 

அவனைப் பார்த்ததும்.. சிறு பசங்கள் கூட்டம் ஓடி வந்தனர். அவன் என்ன எது என்று பார்க்கும் முன்.. அவனது சட்டை மற்றும் பாக்கெட்டிற்குள் கையை விட்டு துழாவினர்கள். எதுவும் இல்லாதிருப்பதைக் கண்டு திட்டிவிட்டு சென்றுவிட்டார்கள். 

 

அவர்களது முகசாயலைப் பார்த்த பொழுது.. இது கிழக்கு ஆசிய நாடுகள் என்று அவனுக்கு தெரிந்தது.

 

பெருமூச்சை இழுத்துவிட்டவனின் காலடியில் ஏதோ தட்டுப்பட்டது. குனிந்து எடுத்துப் பார்த்தான்.

 

அது ஒரு பத்து ரூபாய் நாணயம்!

 

அந்த சிறுவர்களிடம் இருந்து விழுந்திருக்கலாம். 

 

அப்பொழுது அவனது தலையைத் தொட்டவாறு கழுகு ஒன்று பறந்து சென்றது. இயல்பு போல் குனிந்துக் கொண்டான்.

 

“கல்கி!” என்று யாரோ பெண் யாரையோ அழைத்துக் கொண்டிருந்தாள்.

 

 


   
ReplyQuote
VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Trusted Member Author
Joined: 6 months ago
Posts: 48
Topic starter  

ஹலோ தோழிகளே!

 

இத்துடன் இந்த கதை நிறைவு பெற்றது. இதுவரை தொடர்ந்து படித்தவர்களுக்கு நன்றி.. கதை படித்தவர்கள் இனியாவது எப்படியிருக்கு.. பிடித்ததா என்று கூறினால் மகிழ்வேன். என் உழைப்பிற்கு பலன் உங்களது கருத்துக்களே! இது சற்று கடினமான கதைக்கரு.. முன்பு சொன்னது போல் முழுக்க முழுக்க எனது கற்பனையே! சில உண்மை கருத்துக்களையும் கூறியிருப்பேன். இந்த கதை ஒரு பெரிய விசயத்தை பற்றி என்பதால்.. இன்னும் சில விசயங்களை பற்றி கூறியிருக்கலாம் என்று நீங்கள் நினைத்தால் அதுவும் இந்த கதையின் வெற்றியே..

 

இந்த போட்டியில் வெற்றி பெற வைத்தால் இரண்டாம் பாகத்தில் சந்திக்கிறேன்🤣🤣🤣 எப்படி என் இராஜதந்திரம்😎

 

இந்த கதையின் கதாநாயகன் பேசுவது போன்று ஒரு வசனம் வரும்.. வரலாற்றை எடுத்து பார்த்தால் அது யாரோ ஒருவரது தியாகத்தால் விளைந்திருக்கும். இந்த கதையின் முடிவு இதுதான்..

 

அவன் இன்னும் சரித்திரம் படைப்பான்

 

 


இந்த போட்டியில் பங்கு கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கவி சந்திராவிற்கு மிக்க நன்றி. போட்டியை மிக சிறப்பாக நடத்தியதிற்கு பாராட்டுக்கள்..


   
ReplyQuote
Page 3 / 3

You cannot copy content of this page