All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தீரா காதலின் தேடல்..? , தேடல் - 17.

 

VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 50
Topic starter  

 தேடல் - 17

 

மதியம் வேலையில் மருத்துவமனையிலிருந்து முறைப்படி காலி செய்துவிட்டு நண்பனிடம் சில ஆலோசனைகளுடன் சில மருந்து மாத்திரையும் வாங்கி கொண்டு அனைவரிடமும் விடை பெற்று தன்னவளுடன் விமான நிலையத்திற்கு வந்து விமானம் ஏறி, அவர்களின் இருப்பிடத்தில் அமர்ந்தார்கள்.

 

பெண்ணவள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்திருந்தும் விமானம் புறப்படும் வேலையில் பயந்து ஆடவனின் கரத்தை இறுக பற்றி கொள்ள, அவளை தடுக்காத ஆடவனும் அவளின் செயலை புன்னகை முகமாக ரசித்து கொண்டான்.

 

மெல்ல கண்களை திறந்து, அவன் சிரிப்பதை கண்டு கேலியாக சிரிக்கிறான் என்று எண்ணி, அசடு வழிந்தவள் “அது என்னமோ தெரியல.. எத்தன தடவ பிளைட்ல வந்து பழகினாலும் பிளைட் பறக்க ஆரம்பிக்கும் போது மட்டும் கொஞ்சம் பயம் வருது.. மத்தப்படி ஐ அம் ஸ்ட்ராங் கேர்ள்”

 

“ஓ அப்படியா.. அப்போ விண்டோ வழியா எட்டி பாக்குறது” என்று கூறி எட்டி ஜன்னலை திறக்க முயற்சிக்க,

 

அவன் கையை தட்டிவிட்டவளோ “அய்யோ.. அப்படியே இருக்கட்டும் விடுங்க.. நான் ஒத்துக்குறேன் எனக்கு ஃப்ளைட்னாலே பயம் தான்.. இந்த ஹர்ஷா பையன் தான் நிறைய தடவ சொல்ல சொல்ல கேட்காம கதற வச்சி பிளைட்ல கூட்டி போவான்..

 

ஆனாலும் தர இறங்குறவர மூடுன கண்ண திறக்க மாட்டேன்.. உங்ககிட்ட கெத்த விட்டு கொடுக்க மனசு வராம அப்படி சொல்லிட்டேன்.. பெருசு பண்ணாம அதவிடுங்க” என்று கூறியதை கேட்டு நமட்டு நகை புரிபவனை கண்டு “அது சரி.. என்னோட ஆபீஸ்ல இன்பார்ம் பண்ணிட்டீங்களா”

 

“ம்ம்.. அதெல்லாம் முறைப்படி டாக்டர் சர்டிஃபிகேட்டோட நேருல போய் லீவ் சொல்லிட்டு வந்துட்டேன்”

 

“ஓகே.. பட் காயமாருற வரை தான் லீவ் அதுக்கு அப்புறம் வொர்க் கண்டிநியூ பண்ணுவேன்.. ஆனா பழச ஞாபகம் வருர வரைலாம் போக வேண்டாம்ன்னு சொல்ல கூடாது”

 

“தலைல உள்ள காயமாறவும் கண்டிப்பா நீ வேலைக்கு போகலாம்.. நான் தடுக்கவே மாட்டேன்”

 

“தேங்க் யூ சோ மச் தீரா” என்று கூறியவள், ஒரு நிமிடம் கூட அவனுடன் கோர்திருந்த கைகளை விலக்காமல்,

 

அவன் தோலில் சாய்ந்து கொள்ள, ஆடவனும் பயணத்தை கழிக்க காதில் ஒலிப்பானை மாட்டிவிட்டு மற்றொன்றை அவளுக்கும் கொடுத்து பாட்டை ஒலிக்க விட, பெண்ணவள் அதை கேட்டவாறே உறங்க, அவனும் தான் அமர்ந்திருந்த இருக்கையில் கண்கள் மூடி சாய்ந்து கொண்டான்.

 

***

 

ரெண்டு மணிநேர விமான பயணத்தை முடித்து டெல்லிக்கு வந்து சேர்ந்தவர்கள், வீட்டிற்கு வந்தனர்.

 

வீட்டினுள் அவனுடன் நுழைந்தவள் “இது யாரு வீடு.. உங்க ப்ரெண்ட் வீடா என்ன” 

 

“இல்ல நம்ம வீடு தான்.. வொர்க் விஷயமா டெல்லி அடிக்கடி வருவேன்.. சோ வெளிய ஸ்டே பண்ண முடியாதுன்னு தான் சொந்தமா வீடு வாங்கி போட்டாச்சு..

 

இது மட்டுமில்ல உத்தர்காந்த்ல கூட நமக்கு வீடுயிருக்கு அடிக்கடி தாரா சசிக்கூட அங்க போயிடுவேன்.. தாரா ஹர்ஷா வந்ததும் எல்லாரும் அங்க போகலாம்”

 

“ஓகே..” என்று வீட்டை சுற்றி பார்த்தவள் “நைஸ் ஹவுஸ்.. நம்ம ரூம் எங்க”

 

அதை கேட்டு தூக்கி வாரி போட்டது அவனுக்கு, பின்ன இருவரும் ஒரே அறையில் இருப்பதை பற்றி யோசிக்கவில்லை பெண்ணவள் கூறும் போது தான் ‘ஐயோ’ என்றிருந்தது ஏற்கனவே குற்றயுணர்ச்சியில் துடிப்பவன்,

 

ஒரே அறையிலிருந்து அத்து மீறி விட்டால் என்ன செய்வதென்று அஞ்சி “இங்க நிறைய ரூமிருக்கு உனக்கு எது கம்போர்ட்டபிளா இருக்கோ அதையே நீ யூஸ் பண்ணிக்கலாம்” என்க,

 

அவன் கூறியதை கேட்டு புருவம் உயர்த்தியவளின் மனமோ ‘நமக்கு அடிப்பட்டிருக்கிறதுனால என்கிட்ட வரம்பு மீரிடுவோம்ன்னு பயந்து தனி ரூம் கொடுக்கிறார் போல’ என்று நினைத்தவளுக்கு ‘இவ்வளவு காதல் வைத்து கொண்டு எனக்காக என்னைவிட்டு ஒடுங்கி இருக்க நினைக்கிறானே’ என்று நினைக்கையில் பெண்ணவளுக்கு அவனை இன்னும் பிடித்து போக, புன்னகையுடன்

 

“எனக்கு உங்க ரூம் தான் கம்போர்ட்டபிள்.. எங்க உங்க ரூம்”

 

‘விட மாட்டா போல’ என்று எண்ணி, அவளை அழைத்து கொண்டு தன்னறைக்கு சென்றவன் “நீ ஃப்ரெஷ் ஆயிட்டு ரெஸ்ட் எடு.. எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கு பக்கத்து ரூமில தான் இருப்பேன்.. எதுவேணாலும் கூப்பிடு” என்று கூறிவிட்டு பக்கத்து அறைக்கு வந்தவன்,

 

குளியல் அறைக்குள் புகுந்து தன்னை சுத்தப்படுத்திவிட்டு மடிக்கணினியுடன் அமர்ந்து விட, அவன் சென்றதும் பெண்ணவளும் குளித்துவிட்டு பயண களைப்பால் உண்டான சோர்வை நீக்க, படுத்து உறங்கி விட்டாள்.

 

****

 

சிறிது நேரம் தான் பார்த்து கொண்டிருக்கும் தந்தை அலுவலகத்திற்கான சில வேலைகளை முடித்துவிட்டு படுத்து உறங்கியவனின் நிகழ்வில் பூமியின் முகமே தென்ப்பட சட்டென்று விழித்தவன்,

 

விபத்து நடந்த இடத்தில் கிடைத்த இருவரின் திறன்பேசியை எடுத்து இயக்க முயற்சித்து தோற்றதில் பெண்ணவளின் அறைக்குள் வந்து அவள் நன்றாக உறங்கி கொண்டிருக்கிறாள் என்பதை உறுதி செய்துவிட்டே, 

 

அவர்களின் திறன் பேசியுடன் வெளியே சென்றவன், தன்னுடைய வேலைக்காக பயன்படுத்தும் தொழில்நுட்பம் தெரிந்தவர்களிடம் இரு திறன்பேசியை கொடுத்து அதிலிருக்கும் ‘அனைத்தும் ஒன்று கூட மாறாமல் என்னிடம் வந்து சேர வேண்டும்’ என்று கட்டளையிட்டுவிட்டு வீட்டிற்கு வந்தான்.

 

வீட்டிற்கு வந்து நேராக பெண்ணவளின் அறைக்குள் சென்று, அவள் இன்னும் உறங்கி கொண்டிருக்கிறாள் என்று தொந்திரவு செய்யாமல் அறைக்குள் வந்து, அவள் வீட்டியிலிருந்து எடுத்த அனைத்து கோப்புகளையும் ஆராய தொடங்கினான்.

 

சந்தேகப்படும்படி எதாவது ஆதாரங்கள் சிக்குமா என்று ஒவ்வொரு கோப்புவையும் அலசி ஆராய்ந்தவனின் கண்ணில் ஒரு கோப்புப்பட, அதில் 24 வருடத்திற்கு முன் நடந்த ஒரு விபத்தில் இறந்த பெண்மணியின் இறப்பு பிரேத பரிசோதனை அறிக்கையை கண்டு புருவம் உயர்த்தியவன்

 

“24 வருஷத்துக்கு முன்னால இறந்தவங்க டெத் ரிப்போர்ட் வச்சி என்ன கண்டுபிடிச்சிருப்பா.. இதுக்கும் மகி ஆக்சிடென்டுக்கும் எதாவது லிங்கிருக்குமா.. ஒருவேளை இதபத்தி கண்டுபிடிக்க டிரை பண்ணினதுல கொலை பண்ண முயற்சி பண்ணியிருப்பாங்களோ” என்று எண்ணி,

 

அதை தனியாக எடுத்து வைத்து மற்ற கோப்புகளை ஆராய தொடங்கியவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை தனியாக எடுத்து வைத்த, அந்த விபத்து கோப்புவை எடுத்து அந்த விபத்து நடந்த தேதி மற்றும் இடத்தை கண்டவன், எதையோ சிந்தித்து உறைந்துவிட்டான்.

 

அப்போது உறக்கம் கலைந்து ஆடவனை தேடி வந்தவளோ “தீரா.. பசிக்குது” என்றவாறு அவனருகில் அமர,

 

அவள் வரும் அரவம் கேட்டே அனைத்தையும் ஓரமாக வைத்தவன் “சாரி மகிழ்.. வேலையாலிருந்ததுல டைமானது தெரியல.. பத்து நிமிஷம் டின்னர் ரெடி பண்ணிடுவேன்” என்று கூறி சமையல் அறைக்குள் செல்ல, பெண்ணவளும் பின்னயே சென்றாள்.

 

“மகிழ்.. நீ ரூம்ல இரு.. நான் வரேன்” 

 

“இல்ல இங்கேயே இருக்கேன்” என்று கூறி திண்டியில் ஏறியமர்ந்தாள்.

 

“தோசை மாவு மிக்ஸ் தான் வாங்கினேன்.. உனக்கு தோச ஓகேவா இல்ல வேற எதுவும் வேணுமா” 

 

“இதுவே ஓகே தான் தீரா” என்று கூற, அவனும் தோசைக்கான சட்டினியை செய்துவிட்டு வேகமாக ரெண்டு தோசையை முதலில் சுட்டு தட்டில் சட்னியுடன் வைத்து, அவளிடம் கொடுத்துவிட்டு மீதி தோசையை சுட்டான்.

 

தோசையை பிய்த்து சட்னியில் தோய்த்து இரண்டு வாய் வைத்தவள் “தீரா.. சட்னி செம” என்று மேலும் இரு வாய் சாப்பிட்டுவிட்டு, அடுத்த துண்டை அவனவளின் வாயருகில் கொண்டு செல்ல,

 

“நீ முத சாப்பிடு.. நான் சாப்பிட்டுக்குறேன்”

 

“இல்ல தீரா.. சட்னி செம டேஸ்டாயிருக்கு சோ நான் ஸ்டாபா சாப்பிட்டேயிருப்பேன்.. நீங்க கடைசி வர தோச சுட்டுக்கிட்டே தான் இருக்கணும் சோ சேர்ந்தே சாப்பிடலாம்” என்று கூறியவளின் முகமோ அவன் தயங்குவதில் வாட,

 

அவளிடம் இடைவெளிவிட்டு இருக்க நினைப்பவன், அவளின் முகம் வாடியதை கண்டு அதற்கு மேல் முடியாமல் வாய் திறக்க,

 

அவளும் புன்னகையுடனே அவனுக்கு ஊட்டுவதோடு இருவரும் சேர்ந்து சாப்பிட்டனர்.

 

சாப்பிட்டு முடியவும் அவளுக்கான மருந்து மாத்திரை கொடுக்க, அதை மறுக்காமல் வாயில் போட்டவள் அவனை இழுத்து தன்னருகில் அமர்த்தி கை கோர்த்து “தீரா.. உங்க வொர்க் பத்தியும் ஃபேமிலி பத்தியும் சொல்லுங்க”

 

பெண்ணவளுடன் இருக்கும் நெருக்கத்தில் தடுமாறியவன், பின் தன் நண்பனின் முகத்தை நினைவில் கொண்டு தன்னை கட்டுப்படுத்தி, அவள் கேள்விக்கான பதிலை சொல்ல தொடங்கினான்.

 

தன் ரகசிய வேலை உட்பட அனைத்தையும் கூறிவிட்டு குடும்பத்தினரை பற்றியும் அவர்களின் குணத்தையும் பற்றியும் கூறியவன், அதில் அவளின் பெற்றோர் ஞாபகம் வந்து பெண்ணவள் முகம் வாடியதை கண்டுக்கொண்டு “இன்னைக்கு இது போதும்.. போய் தூங்கு மீதி நாளைக்கு பேசலாம்”

 

“நான் மட்டும் தூங்கவா.. அப்போ நீங்க” 

 

“எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கு” 

 

“பிளீஸ் தீரா.. நான் தூங்குற வரை என்னோட பக்கத்துல இருங்க” என்று கூறி, அவன் மார்பிலே தஞ்சம் புகுந்தாள்.

 

இவ்வணைப்பு அனைத்தும் ஞாபகம் வந்த பின்னும் தொடருமா என்று வருந்தி பெண்ணவள் உறங்கும் வரை காத்திருந்தவன்,

 

அவள் அசந்து உறங்கியதும் அவளிடமிருந்து விலக முயற்சிக்க, பாவை அதை உணர்ந்தாளோ என்னவோ “பிளீஸ் தீரா போகாதீங்க” என்று முணுமுணுக்க, அதில் விலக மனமில்லாதவனின் இதழ்களோ தன்னவளின் பேச்சில் புன்னகைத்து, அவள் தலையை கோதிவிட்டு அப்படியே உறங்கி போனான்.

 

இப்படியே எதை பற்றியும் சிந்திக்காமல் இரு நாட்கள் அவளருகிலே கழித்தவன் வழக்கம் போல் இரவு தன் மார்பில் தஞ்சம் கொள்ளும் பெண்ணவளை தடுக்காமல் அவளுடனே உறங்கினான்.

 

*

 

வழக்கம் போல், காலையில் முதலில் கண்விழித்த, ஆதியோ தன் மார்பை விட்டு ஒரு இஞ்ச் கூட நகராமல் படுத்திருப்பவளை கண்டு முறுவழித்து, அவள் நெற்றியில் இதழ் பதித்து எழுந்து குளியல் அறைக்குள் புகுந்தான்.

 

குளித்து முடித்து வெளியே வரவும் தனக்காக தேநீருடன் காத்து கொண்டிருப்பவளை கண்டு “உன்ன யாரு இப்போ இதெல்லாம் பண்ண சொன்னா.. நான் உன்கிட்ட கேட்டானா” என்று குரல் உயர்த்தியதில் பெண்ணவளின் வாடிய முகத்தை கண்டு அவளருகில் சென்று கன்னம் நிமிர்த்தியவன் “சாரி மகிழ்.. காயமாருற வரை ஸ்ட்ரெஸ் பண்ணிக்காதடி”

 

அவன் கையை தட்டிவிட்டவள் “ஒன்னும் தேவையில்ல.. அதான் திட்டினீங்க தான.. நான் உங்ககிட்ட பேச மாட்டேன்” என்று முகத்தை வெட்டியவளை கண்டு சிரித்தவன்

 

“என் மகிழுக்கு கோவம் போக.. நான் என்ன பண்ணனும்” என்று அவளிடமிருந்த தேநீரை வாங்கி குடிக்க,

 

சற்று யோசித்தவள் “ஹான்.. கிஸ் பண்ணுங்க” என்றதும் குடித்து கொண்டிருந்த தேநீரை துப்பி இருமினான்.

 

“அய்யோ தீரா.. பாத்து” என்று கூறி தலையை தட்டிவிட்டு “இப்போ ஓகேவா”

 

“ஓகே”

 

“சரி.. அப்போ கிஸ் பண்ணுங்க” என்று கூறியதை கேட்டு அதிர்ந்தவனை, கண்டு நமட்டு நகை புரிந்தவள் “என்ன இப்படி பாக்குறீங்க.. நான் தூங்கும் போது தான் திருட்டுதனமா கிஸ் பண்ணுவீங்களா.. இப்போ பண்ணுங்க” என்று கூறி தன் கன்னத்தை காட்ட,

 

“அது அது…”

 

“அப்போ கிஸ் பண்ண மாட்டீங்க.. சரி ஓகே நான் சென்னை கிளம்பி போறேன்.. இனி உங்கள டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன்” என்று கூறி அவள் உடமைகளை அடுக்கியவளை தடுத்து “ஓகே பண்றேன்” என்று பெண்ணவளின் கன்னத்தை நெருங்க,

 

அழைப்புமணி சத்தம் கேட்டதில் “யாருன்னு பாரு” என்று விலகியவனுக்கு ‘அப்பாடா’ என்றிருக்க, 

 

ஏமாந்த பெண்ணவளோ கோபத்தில் இரண்டடி முன்னே சென்று, பின்னே வந்து, அவனை இழுத்து தன்னவனின் கன்னத்தில் தன் இதழை பதித்துவிட்டே சென்றாள்.

 

அவளின் இத்தாக்குதலை எதிர்பாராமல் அதிர்ந்தவன் “தீரா.. தாரா ஹர்ஷா வந்திருக்காங்க” என்றழைப்பிலே சுயநினைவுக்கு வந்தவனின் மூளையோ ‘இதெல்லாம் தப்பு’ என்று உரைக்க,

 

மனமோ ‘இந்நிமிடத்தை அனுபவி’ என்று கூற, தன்னவளின் இதழ்ப்பட்ட இடத்தை தொட்டு பார்த்தவனுக்கு வெட்க புன்னகை பூத்தது.

 

இப்போது, அவர்களை காண கீழே சென்றவன் “வா ஹர்ஷா.. சரவெடி உன் ஆளு வரல”

 

“அவன் தான் வரமாட்டேன்னு உன்கிட்ட சொன்னான் தான.. பின்ன எதுக்கு என் வயிதெரிச்சல கிளப்புற”

 

“சும்மா இருங்க தீரா வந்ததும் வம்பிழுத்துட்டு.. ரெண்டு பேரும் போய் ஃப்ரெஷ் ஆயிட்டு வாங்க.. உங்களுக்கு காபி எடுத்துட்டு வரேன்” என்று கூறி இருவரையும் அனுப்பிவிட்டு சமையல் அறைக்குள் புகுந்தவளின் பின்னயே ஆதி செல்ல,

 

தன் பின் நிழலாடுவதை உணர்ந்து திரும்பியவள் “நீங்க.. இங்க என்ன பண்றீங்க”

 

“அதுவா.. நீ ஒரு கன்னத்தக்கு மட்டும் தண்டனை கொடுத்துட்டு.. இன்னொரு கன்னத்த கணக்குல விட்டுட்டியா அதான் அது கோச்சிக்கிட்டு.. சோ அதோட கோவத்த சரி பண்ணனும் இல்லையா.. அதான் உன்ன தேடி வந்தேன்” என்று கூறி,

 

அவளை நெருங்க பெண்ணவளோ வெட்கித்து படபடக்கும் இதயத்தை மறைத்து கண்கள் மூட, பாவையின் நிலையை கண்டு பித்தம் கொண்டவன், அவளின் சிவந்த இதழை நெருங்கிய சமயம் “ஆதி” என்று தாராவின் குரல் கேட்டு, தன் மடதனத்தை எண்ணி தலையில் அடித்து கொள்ள, கண்கள் திறந்த பாவையோ வட போச்சே என்பது போல் உதட்டை பிதுக்கினாள்.

 

தன்னவளை கண்டு ‘ச்ச.. என்ன காரியம் பண்ண பாத்தேன்.. என்கிட்ட காதல எதிர்பார்க்குற.. சாரி மகிழ் உன்னையும் ஏமாத்துறன்’ என்று மனதிற்குள் மன்னிப்பு வேண்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டவனை, ஏக்கமாக பார்த்தவளின் எண்ணமோ சிறிது நேரம் முன், அவன் செய்ய நினைத்ததை எண்ணி வெட்கப்புன்னகை பூத்தாள்.

 

***

இப்படியே தன் நண்பன் மட்டும் தன்னவனின் தோழியுடன் நேரத்தை கழிக்க,

 

ஆதியோ “தாரா.. நீ மகிழ் கூட தூங்கு.. நான் ஹர்ஷா கூட அடுத்த ரூம்ல படுத்துக்குறேன்” என்க,

 

அதை கேட்டு மகிழ் முகம் சுருங்கியது, அதை கண்ட தாராவோ “நோ வே.. எனக்கு ஒரு சின்ன வேலையிருக்கு அத முடிச்சிட்டு.. நான் என்னோட ரூம்ல தான் தூங்குவேன்” என்று எழுந்து செல்ல, 

 

அவன் தன்னை விலக முயற்சிப்பதை நினைத்து முகத்தை தூக்கி வைத்துக்கொண்ட மகியோ எதுவும் பேசாமல் படுத்து விட, பின் ஹர்ஷாவை அழைத்து கொண்டு தான் வேலைக்காக பயன்படுத்தும் அறைக்குள் நுழைந்தவன்

 

“ஹர்ஷா.. உன்கிட்ட அவ வொர்க் விஷயமா எதாவது 24 இயர்ஸ் முன்னால நடந்த ஆக்சிடென்ட் பத்தி பைண்ட் பண்ணினதா சொன்னாளா”

 

“இல்ல.. அந்த மாதிரி எதுவும் சொல்லல.. ரிசன்டா ஒரு மேரேஜ் பங்ஷனுக்கு போட்டோகிரபரா போக சொல்லி ஹெல்ப் கேட்டா.. அதுவும் இதவச்சி ஒருத்தர் பத்தின டீட்டேல்ஸ் கண்டுபிடிக்கணும்ன்னு சொன்னா.. நானும் அவளோட இந்த புராஜக்ட்காக ஹெல்ப் பண்ணினேன்” என்று கூறியவனின் எண்ணமோ இதழிகாவை நினைக்க,

 

அதற்கு மேல் அங்கியிருக்க முடியாமல் உறங்க போகிறேன் என்று தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் நுழைந்து விட்டான்.

 

அவனின் பதில் கேட்டு பெரிதாக சிந்திக்காதவனோ 24 வருடத்திற்கு முன்னால் நடந்த விபத்தை பற்றி வேற ஏதாவது துப்பு கிடைக்குமா என்று, அவள் வீட்டியிலிருந்து கொண்ட வந்த அனைத்தையும் புரட்டி குழம்பியவனுக்கு ‘தான் இல்லாமல் அவள் எப்படியும் உறங்க மாட்டாள்’ என்பது தோன்ற, வேகமாக எழுந்து அறைக்குள் சென்றவன், அவள் உறங்காமல் இருப்பதை கண்டு “இன்னும் தூங்கல”

 

“தூக்கம் வரல.. நீங்க உங்க வேலைய பாருங்க.. என்ன பத்தி யாரும் கவலப்பட வேண்டாம்” என்று கூறியதை காதில் வாங்காமல்,

 

வளை இழுத்து தன் மார்பில் போட்டு தலையை கோதிவிட, இவ்வளவு நேரம் அவன்மீதிருந்த கோவம் நீங்கி, தன்னவனை இறுக்கி அணைத்துக்கொண்டு உறங்கினாள்.

 

               

            தேடல் தொடரும்..

 

 

இப்படிக்கு,

VSV42😍😍


   
ReplyQuote

You cannot copy content of this page