About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அனைவருக்கும் வணக்கம் மக்களே...
கதை: கனலை அணைக்க வா கவியே...
இதுதான் நம்ம கதையோட தலைப்பு.கதையிலிருந்து சிறு முன்னோட்டம்.
நாயகன் :தேவ் ஆச்சார்யா
நாயகி: ஆராதனா
நாயகனின் தோழன்: ரிஷிவர்தன்
நாயகியின் தோழி : வந்தனா
டீசர் 1:
தேவ்வும் ரிஷியும் பேசியபடி அறைக்குள் நுழைந்தார்கள்.
தேவ் சாய்வாக நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடினான்.நேற்று இரவிலிருந்து அவசர சிகிச்சை பிரிவில் பணி.விழிகள் ஓய்வுக்கு ஏங்கியது.ரிஷி கைகளை கழுவியவாறு "ஆரா வந்துருக்கா டா குழந்தையோட" என்றான்."ம்ம்ம்' என்றானே தவிர வேறு எதுவும் பேச வில்லை.ரிஷி அவனருகில் வந்து"என்ன மச்சான் தூக்கம் வருதா" என்றான் அவன் தோள் தொட்டு."ம்ப்ச்,இல்ல டா"என்றவன் எழுந்து சென்று கைகளை கழுவி முகத்தை நீரால் அடித்துக்கழுவினான். " அந்தக் குழந்தை அவளோட குழந்தை ன்னு உனக்குத் தோணுதா" என்றான் தீடீரென. ஒரு நிமிடம் ரிஷிக்கு ஒன்றும் புரியவில்லை என்ன சொல்கிறானென்று."என்னடா சொல்ற" என்றான் ."ஆரா எப்படியிருக்கா" என்றான் .ஒரு நிமிடம் விழி சுருக்கி அவனைப் பார்த்தான் ரிஷி " நல்லா இருக்கா டா,ஹஸ்பண்ட் வரலப்போல " என்றான்.அவனை நன்றாக முறைத்தான் தேவ்."ஏன்டா இவ்ளோ பாசமா பாக்குற" என்றான்."ஒன்னுமில்ல, நான் கேட்டதுக்கு இன்னும் நீ பதில் சொல்லல" என்றான். " "ஓஹோ சரி சரி,அந்தக் குழந்தை அவளோடதா இருக்கலாம் , இல்லாமலும் இருக்கலாம், ஆனாலும் உனக்கு ஓவர் கான்பிடன்ஸ் மச்சான், அந்தக் குழந்தை அவளோடது இல்லன்னு உனக்கு எப்படி தெரியும்? அப்புறம் இன்னொன்னு உனக்கு என்ன வயசாச்சி தெரியுமா, இப்படியே போனா நேரா எல்லாரும் உன்னோட அறுபதாம் கல்யாணத்துக்குத் தான் வருவாங்க, ஏற்கனவே நம்ம புரபஷன்ல செட்டில் ஆகுறதுக்குள்ள சொட்ட விழுந்துடும் டா இதுல நீ வேற ரொம்ப லேட் பண்ற டா" என்றான்."வந்தனா என்ன சொன்னா" என்றான் தேவ்."ஒன்னும் பேசிக்கல சாயந்திரம் தான் பேசணும் ஆமா ,ஏதுனாலும் ஃபீல் பண்றியா டா"என்றான்."என்ன ஃபீல் பண்ணனும் "என்றான்."அதானே எங்க நீ ஃபீல் பண்ணிட்டாலும்"என நொடித்துக்கொண்டே தன் பையை எடுத்துக்கொண்டிருந்தாதல் தேவ்வின் முகத்தில் வந்து போன உணர்வை பார்க்கவில்லை ரிஷி.
வணக்கம் நட்பூக்களே 🙏
நம்ம கதையோட முதல் அத்தியாயம் பதிந்து விட்டேன்.படித்து தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.
அத்தியாயம்:1
டெல்லி விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக் கொணடிருந்தது. எத்தனை தலைபோகும் வேலைகள் இந்த மனிதர்களுக்கு.நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள்.விமானத்திற்கான அறிவிப்புகள் வந்துகொண்டே இருந்தது.அவற்றை பார்த்தவாறே ஆராதனா, தன் ஒரு கையில் பயணப் பைகளுடனும் மறுகையில் சூர்யாவுடனும் பார்வையை சுழல விட்டபடி தன் விமானத்திற்கான அறிவிப்பை பார்த்து அந்த பகுதியில் உள்ள நாற்காலியில் அமர்ந்தாள்.
" அம்மூ பசிக்குது"என்றான் சூர்யா .தன் கைப்பையில் இருந்து சிறிய டப்பாவில் உள்ள வெட்டிய ஆப்பிளை அவனுக்கு எடுத்துக்கொடுத்தாள்.அவன் தலையை வாஞ்சையாக வருடி சிறு முத்தம் பதித்தாள்.எதையோ யோசித்திருந்தாள்.பின் தன் அலைபேசி எடுத்து தன் தோழி வந்தனாவிற்கு அழைத்தாள்,"ஹலோ! வந்தனா நானும் சூர்யாவும் ஏர்போர்ட் வந்துட்டோம் ,உன் அட்ரஸ் லொகேஷன் ஷேர் பண்ணு டி நாங்களே வந்திடுறோம்" என்றாள்.
"இங்க எனக்கு ஒரு வேலையும் இல்லை,சோ நான் வந்து பிக்கப் பண்ணிக்குறேன் டி"என்றாள் வந்தனா. ஆராதனாவிற்கு இப்போது இருக்கும் ஒரே உறவு உயிர்த்தோழி வந்தனா மட்டுமே.ஆராதனா டெல்லியிலுள்ள பிரபல மருத்துவமனையில் இருதய சிகிச்சை பிரிவில் பயிற்சி மருத்துவராக இருக்கிறாள்.
சிறிது நேரத்தில் அவள் தன்னுடைய விமானத்திற்கான அறிவிப்பு வரவே சூர்யாவுடன் விமானத்தில் ஏறி அமர்ந்தாள்.சில வருடங்கள் கழித்து இப்போது தான் சென்னைக்குச் செல்கிறாள்.சிறிது நேரத்தில் சூர்யா உறங்கி விடவே, அவள் ஜன்னலோரம் கடந்து செல்லும் மேகங்களைப் பார்த்தாள்.அந்த மேககங்களிடையே மெல்லிய பனிப்படலமாக அவன் முகம் தோன்றியது.எத்தனை காதலுடன் அவனைச் சுற்றிச் சுற்றி வந்தாள்.அத்தனையும் கானல் நீரானதே.இநத காதல் தான் எத்தனை பொல்லாதது.எத்தனை புத்திசாலிகளையும் கோழையாக்கி விடுகிறது .ஆம் ஆராதனா மிகவும் துடிப்பான திறமையான பெண்.அவள் இருக்கும் இடமும் கலகலப்பாக இருக்கும்,தன்னைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பாள்.எந்த நிலையிலும் கலங்காத பெண்.அவள் அப்பா நந்தன்- தாய் சந்திரா இருவரும் வங்கியில் உயர் பதவியில் இருந்து ஒய்வு பெற்றவர்கள்.இருவரும் காதலித்து
அவர்களது வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்கள்.அவர்களுடைய மூத்த மகள் நிவேதா ,இளையவள் ஆராதனா . இருவரும் அவர்களது இளவரசிகளே.அவர்களுடனான அவள் வாழ்க்கை செர்க்கமாக இருந்தது.ஆனால் இன்று???
அவனுடனான கடைசி சந்திப்பை நினைத்துப் பார்த்தாள்.தன் காதலுக்காக இறைஞ்சிய தருணம் அவள் கண்முன் நின்றது.
அன்றோரு நாள் மாலை நேரத்தில் நன்கு மழை அடித்துப்பெய்துக்கொண்டிருந்து.சற்றே ஆள் அரவமற்ற இடம்.அவன் கத்திக்கொண்டிருக்கிறான்.
"ஏய், உனக்கு அறிவில்ல எத்தனை தடவை சொல்றது, எனக்கு உன் மேல எந்த ஒரு இன்ட்ரெஸ்டும் இல்லைன்னு, இந்த காதல் கண்றாவி எல்லாம் நம்பிக்கை இல்லை எனக்கு.உனக்கென்ன டீனேஜ் பொண்ணு ன்னு நினைப்பா , கொஞ்சம் புரபஷனலா இரு ,என் கோவத்த கிளறாம இங்கிருந்து முதல்ல கிளம்புடி எனக்கு வழிய விடு முதல்ல "என்றவாறே அவசரமாக கிளம்பும் போது,
"ப்ளீஸ் நா சொல்றது கேளுங்க "என்று தவிப்புடன் அவசரமாக அவன் கையை பிடித்தாள், "ஏய் சீ டோன்ட் டச் மீ இடியட், அதான் எனக்கு பிடிக்கலன்னு சொல்றேன் ல, உலகத்துல வேற ஆம்பளயே இல்லையா, ஓஓ என்ன கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணி வசதியா செட்டில் ஆயிடலம்ன்னு நினைக்கிறியா? "ம்ம்.." என தன் தாடையை தடவியபடி"இல்ல வேற ஏதாவது என்கிட்ட இருந்து எதிர்பாக்குறியா"என்று வார்த்தையால் அவளை காயப்படுத்தினான்.
" பிளீஸ் ஒரு அஞ்சு நிமிஷம்"
என்று அவள் மீண்டும் அவன் கையை பிடிக்க வர, அவன் வேகமாக கைகளை உதறி தள்ளியதில் நிலை தடுமாறி கீழே தேங்கியிருந்த மழைநீரில் விழுந்தாள்.அவனின் இந்த பரிணாமம் கண்டு அதிர்ந்தே போனாள்.கீழே விழுந்ததில் முழங்கையும் ,உள்ளங்கையும் கூரிய கல்லில்பட்டு இரத்தம் வழிந்தது . அவள் எழுவதற்கு முன் தனது காரினை வேகமாக ரிவர்ஸ் எடுத்ததில் அவள் மீது முழுவதும் மழைநீரோடு சேறும் இறைந்தது.அவள் கீழே விழுந்ததும் அவன் கவனிக்கவில்லை அடிபட்டதும் அவன் கவனிக்கவே இல்லை ,அத்தனை வேகமாக அவன் அந்த இடத்தை விட்டு கிளம்பியிருந்தான்.அவள் மெல்ல புடவையின் தலைப்பை தன் முழங்கை இரத்தத்தில் வைத்து அழுத்தி பிடித்து கொண்டு எழுந்தாள்.எதற்கும் கண் கலங்காதவள் அடிவயிற்றில் இருந்து "ஹோ" வென வெடித்து அழுதாள்.தன்மானத்தையும் ,சுய மரியாதையையும் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவள் இன்று அனைத்தும் தன் காதலுக்காக அவனின் காலடியில் மிதிபட வைத்து கோழையாக நின்றிருந்தாள்.அவன் சென்ற திசையை பார்த்திருந்தாள்.அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழந்தை போல் விழித்திருந்தால்." ஏன் இப்படி ஆனேன்"என மனதினுள் போராடினாள்
உடலில் உள்ள ஜீவன் வற்றயது போல் உணர்ந்தாள்.அடித்த பேய் மழையில் எவ்வாறு வீடு வந்து சேர்ந்தாள் எனத் தெரியவில்லை.அன்றுதான் அவனை கடைசியாக சந்தித்தது.
இதோ நான்காண்டு கழித்து இப்போது தான் சென்னைக்குத் திரும்புகிறாள்.விதி மீண்டும் இங்கு இழுத்து கொண்டு வந்திருக்கிறது அவளை.உள்ளம் இன்றும் தகித்துக் கொண்டுதான் இருக்கிறது அவளுக்கு பார்ப்போம்....
கனல் அணையுமா?.....
Latest Post: VSV45 கனலை அணைக்க வா கவியே Our newest member: Selvi Ong Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page