All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

பாரிஜாத மலர் என் கை சேருமா?-51

 

VSV 30 – பாரிஜாத மலர் என் கை சேருமா?
(@vsv30)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 54
Topic starter  

 

அத்தியாயம்:51

 

பைரவ் ஆரபியை அணைத்து கொண்டவன்…அவளை மெதுவாக கை பற்றி அழைத்து கொண்டு…பகவதி சிலை முன்னே வந்து நின்றவன் அங்கே அம்மன் காலடியில் இருந்த குங்குமத்தை எடுத்து…அவள் நெற்றி, வகிட்டில் வைத்து விட்டவன். 

 

பைரவ் “ இப்போ தான் நான் நிங்களை முன்னே விட பிரேமிக்கிறேன்…ஆரபி நிங்களுடைய பிரேமம் காண முடியாத ஒன்று…என் நிலையிலும் நிங்கள் என்னை விட்டு போகவில்லை….

 

ஈ ஜனனம் மட்டுமல்ல ஈரேழு ஜனனமும் நிங்களும் நிங்களுடைய பிரேமம் எனக்கு வேணும்…அதை தான் நான் இப்போ உன் கிட்ட கேட்குனோ (கேட்பது) “...என கேட்டான். 

 

ஆரபி கண்களில் கண்ணீர் வர அவள் அழுகையோடு அவன் மார்பிலே சாய்ந்து கொள்ள…பைரவ் அவளை அணைத்து கொண்டான். 

 

ஆரபி “ இதை நீங்க என் கிட்ட கேட்கலாமா சாம்ராட்?...நீங்க எனக்கு தேவன் தந்த பரிசு அதை எப்பவுமே என் இதயத்தில் இல்லை…உயிருக்குள்ளே வைத்து பாதுகாப்பேன் நீங்க எப்படி இருந்தாலும் என் ராஜகுமாரன் நீங்க தான் “...என்றாள்.

 

அவர்கள் இருவரின் அன்பை கண்டு ஒரு சிலரை தவிர….மற்றவர்களுக்கு பிரமிப்பாக இருந்தது. 

 

தேவன் “ சரி ரவி தம்புரான் இப்போ தான் ரகு அவன் பார்யா மரணத்திற்கு(சாவுக்கு)...காரணம் யாரென தெரிந்து விட்டதே! பைரவ் சட்டப்படி நடவடிக்கை கூட எடுத்து விட்டான்…

 

இனி அவனுக்கு பட்டம் கட்டுவது தான் பாக்கி நம்பூதிரி நல்ல சமயம் (நேரம்) இருக்கா இல்ல முடிந்து விட்டதா?...என கேட்டார். 

 

நம்பூதிரி “ இன்னும் பத்து நிமிஷம் இருக்கு தம்புரான்…பட்சே ஈ ஸ்தலம் (இடம்) அசுதியாக விட்டது(அசுத்தம்) அதை சுத்தப்படுத்த வேணும்…அதற்க்கும் சமயம் (நேரம்) இல்லா “...என்றார். 

 

கஜன் “ நம்பூதிரி என் சொச்சு மோன் ஈ ருத்திரன் போல…ராட்சன்களை(அசுரன்) வேட்டையாடி இருக்கிறான் அவன் பெத்தவங்க ,பார்யா மரணத்திற்க்கும் நியாயம் செய்து விட்டான்…

 

ருத்திரனுக்கு மட்டுமல்ல தாய் பகவதிக்கும் பிடித்தது அநியாயங்களை வேரோடு அழிப்பது…அதனால் அவங்க இதை ஏற்று கொள்வாங்க நீங்க மிகுதி ஆச்சாரம்(சடங்கை) ஆரம்பிங்க. 

 

முன்னா இந்த இடத்தை கொஞ்சம் தண்ணீர் கொண்டு அலச சொல்லு அது போதும் “...என்றார்.. அவர் சொன்னது அனைவருக்கும் சரியென பட்டதால் மற்ற அனைவருமே அதை ஏற்று கொண்டனர்…

 

தண்ணீர் கொண்டு அலசிய பிறகு வேதங்கள், மந்திரங்கள் முழங்க கொம்பு இசைகருவி இசைக்க… ரவிவர்மனின் அரண்மனைக்கு அடுத்த வாரிசாக பைரவ்வுக்கு பட்டம் கட்டினார்கள். 

 

ரவிவர்மனுக்கு ரகுநந்தன் ஞாபகம் வந்தது…இதை போல தான் அவர் கையால் தன் மூத்த மகனுக்கும் பட்டம் கட்டிய நிகழ்வு ஞாபகம் வந்தது…

 

பட்டம் கட்டி முடிய பைரவ், ஆரபி சேர்ந்து பகவதி, ருத்திரனுக்கு பூஜை செய்து விட்டு…பதினொரு தம்புரான்களிடம் வரிசையாக ஆசி பெற்றார்கள். 

 

அடுத்து மீனாட்சி, கார்த்திகாவிடம் பிறகு விஜயன், அருளிடம் அவர்களும்… இனி இதற்க்கு மேலே ஒன்றும் செய்ய முடியாது என அமைதியாக  ஆசி வழங்கினார்கள்…தேவன் அங்கே இருந்தவர்களை பார்த்து. 

 

தேவன் “ நானும் இந்த நல்ல நாளில் ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்…என் மூத்த வாரிசின் ஒரேய பிங்காமி என் சொச்சு மோன் யுவராஜ் அவனுக்கும் நான் அடுத்த வாரம் பட்டம் கட்டலாம் என நினைக்கிறேன்…

 

அதற்க்கு உங்க எல்லோரின் அனுமதிம் ஆசியும் எனக்கு வேணும்” என்றார்…அங்கே இருந்த மற்ற தம்புரான்கள், மக்கள் சந்தோஷமாக சரியென சொன்னார்கள். 

 

கொஞ்ச நேரத்தில் யுவராஜ் கால் பண்ணி சொல்லி இருந்ததால்…கமிஷனர் போலீஸை அனுப்பி இருந்தார் அவர்கள் வந்து ராஜீவ் அவன் ஆளுங்களை அள்ளி கொண்டு போனார்கள்…

 

கொட்டார வழக்கப்படி அன்று ஊருக்கே விருந்து சாப்பாடு நடந்தது கஜன், தேவனை தவிர மற்ற தம்புரான்கள்… தங்கள் அரண்மனைக்கு கிளம்பி விட்டார்கள்….இவர்கள் ரவிவர்மன் அரண்மனைக்கு வர…

 

ரவிவர்மன் “ விஜயா, அருள் எனக்கு இப்போ சத்தியமான (உண்மையான) பதில் வேணும்…இல்லா நான் மோன்கள் என்று கூட பார்க்க மாட்டேன்…பரயுக நிங்கள் தான் உங்க சேட்டன் சேட்டத்தி மரணத்திற்க்கு( சாவுக்கு) காரணமா?....என கேட்டார். 

 

விஜயன் “ எந்து அச்சா சன்சாரிக்குக( பேசுகிறீங்க) ரகுநந்தன் தம்புரான் எங்க சேட்டா…ஆ! …அவர் மேலே கோபம் இருந்தது சத்தியம் பட்சே அது எதனால் அவர் அந்த மக்கள் மேலே அதிக காருண்யம் காட்டியதால் தான்…

 

நாங்க செய்த தப்பு ஒன்று தான் அவங்களை இந்த பூமியை விட்டு காலி பண்ண…ஸ்ரீகங்கா தரவாடுக்கு உதவி செய்தது மட்டும் தான் “...என சொல்லி வாய் மூடவில்லை ரவிவர்மன் தன் கைதடியால் அவர்களை வெளுத்து வாங்க ஆரம்பித்து விட்டார்…அவரை அங்கே இருக்கும் யாருமே தடுக்கவில்லை. 

 

ஆரபி “ சாம்ராட் அவங்க செய்தது தப்பு தான்…என்ன இருந்தாலும் அவங்க உங்க சித்தாப்பாக்கள் போய் தாத்தாவை தடுத்து நிறுத்துங்க…யுவா அண்ணா நீங்களும் போங்க “...என்றாள். 

 

மீனாட்சி “ இல்ல மா இவங்க இரக்கம் காட்டும் எல்லையை தாண்டி விட்டாங்க…என் புருஷன் கெளரவம் பார்ப்பவர் தான் அது போல நியாயத்திற்கு முதல் இடம் கொடுப்பவர்….

 

இவங்க செய்தது தப்பு இல்ல துரோகம் கூட இருந்து குழி பறித்து இருக்கிறாங்க…இவங்களால் தான் என் நந்து, மருமகளை இழுந்தேன் “...என்றார். 

 

பைரவ் “ முத்தச்சன் போதும் விடுங்க என்ன இருந்தாலும் அவங்க என் கொச்சச்சன்கள்…அதை விட அவங்களை விட சொன்ன காரணம் என் தம்பிங்க…

 

தம்பி உடையான் படைக்கு அஞ்சான் அவங்களால் தான் நான் இப்போ உங்க முன்னே சேதாரம் இல்லாமல் நிற்கிறேன் “...என்றான்….ரவிவர்மன் தன் கைதடியை தூக்கி போட்டவர் .

 

ரவிவர்மன் “ இவங்க இனி என் முகத்தில் விழிக்க கூடாது கொட்டாரத்தில் பிறந்து சின்ன புத்தியோடு வாழ்ந்து இருக்கிறாங்க…

 

என் மோன் ரகு சொல்வான் அச்சா நம்ம எல்லாம் மனிதர்கள்… பிறக்கும் போதும் சரி மரிக்கும் போதும் சரி… எதையுமே கொண்டு வருவதும் இல்லா போவது இல்லா என்றான். 

 

அவன் சொன்னது அத்தனையுமே உண்மை தான்…அவன் மனிதர்களை சேர்த்தான் நான் துரோகிகளை சேர்த்து வைத்திருக்கிறேன்…என் சொச்சு மோன் சொன்னது தான் சரி ஆரபி நிங்கள் என் சொச்சு மோள் மட்டுமல்ல…

 

தேவலோகத்து பாரிஜாதமலர்…நிங்களால் தான் ஈ கொட்டாரம் தலை நிமிர்ந்து நிற்கிறது… உங்களை வளர்த்த பாதர், மதர் உண்மையில் கை எடுத்து கும்பிட வேண்டியவங்க…

 

பட்சே ஞான் என் வளர்ப்பு தப்பாகி விட்டது…பட்சே மீனு உன் காருண்யம் ஜெயித்தது விட்டது உன் மோன் ரகுநந்தன், கார்த்திகா உன்னை ஜெயிக்க வைத்து விட்டாங்க…ஆரபி என் சொஞ்சு மோளே ஈ கிழவனுக்கு சமாவனம்(மன்னிப்பு)கொடுக்க வேணும் “...என கேட்டார் பதறி போனவள் 

 

ஆரபி “ தாத்தா என்ன வார்த்தை பேசுகிறீங்க நீங்க என் கிட்ட மன்னிப்பு கேட்பதா?...நீங்க என்ன தப்பு செய்தீங்க மன்னிப்பு கேட்க ஓவ்வொரு பெத்தவங்களும் தாத்தா, பாட்டியும் பிள்ளைங்க, பேரபசங்க மேலே பாசம் உள்ளவங்க…

 

அவங்க சந்தோஷமாக இருக்க வேணும் என நினைப்பாங்க நீங்களும் அப்படி நினைத்து தான் எல்லாம் செய்தீங்க…

 

நீங்க பிறப்பிலே ராஜவம்சம் அப்போ உங்க வீட்டுக்கு வரும் மருமகள், மருமகன் அப்படி தான் இருக்க வேணும் என நினைப்பதில் தப்பு இல்லையே!...

 

சாதாரண ஆளுங்களே பணக்கார இடம் தேடும் போது நீங்க உங்க பேத்திகளை தானே… உங்க பேரன்களுக்கு சொந்தம் விட்டு போக கூடாது என கட்டி கொடுக்க நினைத்தது .

 

இதில் தீடிரென வந்தது நானும் ராதிகாவும் தான்…அப்போ உங்களுக்கு வாக்கு தவறி விட்டோம் என கோபம் வர தானே செய்யும் அதை தப்பு என சொல்ல முடியாது “...என்றாள்…ரவிவர்மன் அருகில் வந்து அவள் தலையில் கை வைத்தவர். 

 

ரவிவர்மன் “ பைரவ் பறஞ்சது சத்தியம் தான் நீ காண கிடைக்காது பெண்குட்டி…என் பேரன் கூட சந்தோஷமாக வாழுமா நான் இதை சந்தோஷமாகவும் மனதாரவும் சொல்கிறேன் “...என்றார்…பிறகு அங்கே நின்ற மாதவனை பார்த்து. 

 

ரவிவர்மன் “ மருமோனே நான் உங்க கிட்ட கொஞ்சம் தனியாக பேச வேணும் இப்போ இல்லா…நான் சில விஷயங்களை தெளிவுபடுத்தி விட்டு உங்க கிட்ட பேசுகிறேன் “...என்றார். 

 

கஜன், தேவன் பிறகு வருவதாக சொல்லி விட்டு கிளம்பி விட்டார்கள்…கிளம்ப போன ராதிகா குடும்பத்தை ரவிவர்மன் வற்புறுத்தி சாப்பிட வைத்து தான்  அனுப்பி வைத்தார்…

 

விஜயன், அருள் தந்தைக்கு பயந்து தங்கள் ரூம்க்குள்ளே அடைந்து விட்டனர்…ரவிவர்மன் பேர பசங்க நான்கு பேரையுமே சந்திக்க வேணும் என்றவர் தன் தனி அறையில் சந்தித்தார். 

 

ரவிவர்மன் “ பைரவ் பரயுக நிங்கள் கிட்ட எனக்கு இரண்டு ஜோதியும்(கேள்வி) இருக்கு…ஒன்று அந்த பார்வதம் (மலையில்) என்ன இருக்கு?.. அடுத்து மருமோன்னுக்கு சிங்கப்பூரில் பிசினஸை விட வேற வேலை என்ன?...

 

இதை எதற்காக தனியாக கேட்கிறேன் என்றால் நம்ம குடும்பத்திற்க்கு இது தெரிய கூடாது என்று…பட்சே ஒரு தம்புரானுக்கு எல்லாம் தெரிந்து இருக்க வேணும் அதற்காக தான் கேட்கிறேன் “...என்றார். 

 

பைரவ் “ உங்க கிட்ட சொல்ல தான் இருந்தேன் முத்தச்சன்…பட்சே நடந்த பிரஸ்னத்தால் எல்லாம் மாறி விட்டது… அது சாதாரண பர்வதம் இல்லா கிரானைட் பர்வதம் அதை தெரிந்து கொண்டு தான்…

 

ஸ்ரீகங்கா தரவாடு அதை அடைய நினைத்தது அடுத்த கேள்விக்கு பதில் எப்படி சொல்வது என தெரியவில்லை முத்தச்சன்…இதில் பல்லவி அம்மாயி ஜீவிதம் அடங்கி இருக்கு வந்து அம்மவானுக்கு இன்னொரு பெண்குட்டி கூட தொடர்பு இருக்கு”...என்றான். 

 

அவன் சொல்லி முடிய அங்கே கடும் அமைதி நிலவியது நிதானமாக…

 

ரவிவர்மன் “ ஓ! இது தான் ஸ்ரீகங்கா தரவாடு பேராசைக்கு காரணமா?...இதற்காக தான் எங்க முன்னோர் மலைஜாதி ஆளுங்களை அங்கே குடி வைத்தாங்களா?...இது விஜயன், அருளுக்கு தெரியுமா?...என கேட்டார். 

 

பிரணவ் “ இல்லா முத்தச்சன் அச்சன் கொச்சச்சனுக்கு தெரியாது…தெரிந்து இருக்க கதா(கதை) வேற மாதிரியாக போய் இருக்கும்…இது ரகு வலியச்சனுக்கு மட்டும் தான் தெரியும் “...என்றான். 

 

ரவிவர்மன் “ நான் செப்பனத்தில் கூட எதிர்பாராத விஷயம் என் மோள்கள் வாழ்க்கை எப்படி போகும் என்று…பகுமானம் பகுமானம் என்று பார்த்து என் இரண்டு மோள்கள் ஜீவிதம் போய் விட்டது…ஒருத்திக்கு பார்த்தாவு உயிரோடு இல்லை அடுத்தவளுக்கு பார்த்தாவு வேறு பெண் குட்டி மேலே ஸ்னேகம். 

 

ஞான் இதை எப்படி மீனு, பல்லவி கிட்ட சொல்வது அவங்களால் தாங்க முடியாது…என் மோள் இந்த விஷயம் கேள்விபட்டால் மரிச்சு போயி ஞான் எந்த செய்யும் “...என கண்கள் கலங்க பேசினார். 

 

பைரவ் அவர் அருகே அமர்ந்தவன் அவர் கைகளை பற்றி கொண்டு…

 

பைரவ் “ முத்தச்சன் என் அம்மாயி ஜீவித்தை ஞான் சரி செய்யும்…நிங்கள் கலங்க வேணாம் அந்த பெண்குட்டியை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து விட்டேன்…

 

அந்த பெண்குட்டி ஸ்ரீகங்கா தரவாடு ஏற்பாடு பண்ணிய ஆளு… அம்மவான் பலவீனத்தை வைத்து காய் நகர்த்த நினைத்து இருக்கிறாங்க…அம்மாவன் இனி எங்க நான்கு பேர் கண் பார்வையில் தான் இருப்பார்”...என்றான். 

 

மலர் பூக்கும்….


   
ReplyQuote

You cannot copy content of this page