About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
டீசர் 1
தங்களின் கனவு இல்லத்திற்காக எதையெல்லாம் யோசித்து செய்தாள் என்று நிரோஷா பட்டியலிட்டுக் கொண்டிருக்க, அதை கவனிக்காமல் ஏதோ சிந்தனையில் மூழ்கி இருந்தான் ஆத்ரேயன்.
இரண்டு முறை அவன் பெயரை அழைத்தும் அவனிடமிருந்து பதிலில்லாமல் போக, அவனை உலுக்கியவள், “அப்படி என்ன யோசனை மிஸ்டர். ரே? நான் உங்களுக்கு பிடிக்காத மாதிரி ‘ஆதி’ன்னு பெயர் சொல்லிக் கூப்பிடுறதை கூட உணராம அப்படி என்ன தாட் ஓடிட்டு இருக்கு இந்த மூளைக்குள்ள? வேலை பத்தின டென்ஷன் எல்லாம் வாசல்லேயே விட்டுட்டு தான் வீட்டுக்குள்ள நுழையணும்னு சொல்லியிருக்கேன்ல?” என்று கணவனின் மீசையை முறுக்கி விட்டாள் மனைவியானவள்.
“ஷ்… ஆ…” என்று வலியில் கத்தியவன், அதற்கு காரணமானவளை அவனின் ஆளுகைக்குள் கொண்டு வந்து, “போலீஸ் கிட்டயே வயலன்ஸா? டொமேஸ்டிக் வயலன்ஸ் கேஸ்ல உள்ள தள்ளிடவா?” என்றான் ஆத்ரேயன்.
அவன் கூற்று மிரட்டலாக இருந்தாலும், குரல் என்னவோ குழைவாக தான் இருந்தது.
‘தள்ளிடவா’ என்று அவனின் வாய் கேட்டாலும், கரமோ அதற்கு மாறாக அவளை அவனுக்குள் புதைத்துக் கொண்டு, “வான்டடா வந்து தப்பை ஒத்துக்கிட்டதுக்காக வேணும்னா சின்ன பனிஷ்மெண்ட் கொடுக்கவா?” என்று கேட்டது மட்டுமல்லாமல் மாயவளின் உதட்டைக் காயப்படுத்தி விட்டே அவளை விட்டான் அந்த மாயவன்!
“ப்ச், மூஞ்சியை ஜி.இ.எம் மாதிரி வச்சுட்டு இருக்கீங்களேன்னு பாவப்பட்டு கேட்டா, இப்படி தான் பனிஷ் பண்ணுவீங்களா?” என்று சிணுங்கியவளோ, அடுத்த நிமிடமே, “என்ன ஓடிட்டு இருக்கு இந்த மண்டைக்குள்ள?” என்று அவனின் தலையை இதமாக பிடித்து விட்டாள்.
“இப்போ எடுத்திருக்க கேஸ் ரொம்ப இழுக்குது ரோஸ். கல்ப்ரிட் ரொம்ப சுத்தல்ல விடுறான்.” என்று ஆத்ரேயன் தலையை பிடித்துக் கொள்ள, “என்ன கேஸ் ரே?” என்று அசுவாரசியமாக கேட்டாள் நிரோஷா.
“அதான் மீடியா முழுக்க பரபரப்பா அலசிட்டு இருக்க சீரியல் கில்லர் கேஸ் தான்!” என்றான் ஆத்ரேயன்.
*****
தனியே வீட்டில் இருந்தவளுக்கு தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்த சத்தம் பயத்தையும் பதற்றத்தையும் கொடுத்தது.
ஏற்கனவே, முன்தினம் ஏற்பட்ட அனுபவம் வேறு அவளை பயமுறுத்தி இருந்தது. அதுவும் கணவன் துணைக்கு இல்லாத நேரத்தில் சாதாரணமாக நடக்கும் சம்பவங்கள் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்லதாக இருக்கும் அல்லவா?
‘ப்ச், என்னன்னு தெரிஞ்சுக்க பயமா இருக்கு, தெரிஞ்சுக்கலைன்னா பதட்டமா இருக்கு! நேத்து நடந்தையே இந்த ரே பொறுமையா கேட்கல. இதுல, அவனுக்கு வேலை வேற அதிகம், இப்போ கால் பண்ணா கண்டிப்பா திட்டுவான்.’ என்று எண்ணியபடியே மெதுவாக சத்தம் வந்த திசையை நோக்கி நடந்தாள்.
என்னதான் அந்த இடத்தை பலமுறை சுற்றி வந்து விட்டாலும், அவளால் சத்தம் எங்கிருந்து வருகிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதை விட்டுவிட்டு செல்லலாம் என்றாலும் மனம் ஏற்கவில்லை.
ஒருவழியாக இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின்னர், அலமாரிக்கு பின்னே இருந்த அந்த ரகசிய அறையை கண்டு பிடித்தாள் நிரோஷா.
புதிதாக வாங்கிய வீட்டில் அவளுக்கே தெரியாமல் ஒரு ரகசிய அறை!
அதுவே அதிர்ச்சி என்றால், அதற்குள் இருந்த பொருளைக் கண்டு மேலும் அதிர்ந்து தான் போனாள்.
ஏனெனில், முன்தினம் அவளே அவளின் கைகளால் குப்பையில் போட்ட பொருளாகிற்றே!
ஹாய் நட்பூஸ்!
டீசர் எப்படி இருந்துச்சு? ரேவும் ரோஸும் எப்படி பெர்ஃபார்ம் பண்ணாங்கன்னு கீழ இருக்க கருத்து திரில சொல்லுங்க.
https://kavichandranovels.com/community/topicid/35/
Latest Post: VSV45 கனலை அணைக்க வா கவியே Our newest member: Selvi Ong Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page