All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தீரா காதலின் தேடல்..? , தேடல் - 11 .

 

VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Estimable Member Author
Joined: 8 months ago
Posts: 43
Topic starter  

தேடல் - 11

 

ரயில் சென்னை நிலையத்தை தாண்டியதுமே பெற்றோருக்கு ரயிலில் ஏறிவிட்டேன் என்று குறுஞ்செய்தி அனுப்பியவள், திறன்பேசியில் எதையோ ஏக்கமாக பார்த்து மனதிற்குள் மன்னிப்பு வேண்டியதில் கண்ணீர் வடிய, இருக்கும் இடம் கருதி கண்ணீரை உள்ளிழுத்து இதழ் குவித்து ஊதியவளோ “எதுக்காகவும் பூமிய கல்யாணம் பண்ணிக்குற முடிவ மாத்திக்க மாட்டேன்..” என்று உறுதி எடுத்தவளின் மனமோ, நீ செய்வது தவறு என்று அனைத்தையும் நிகழ்வுப்படுத்தி நெஞ்சை குத்த, குற்றயுணர்ச்சியில் துடிக்கும் மனதை அடக்க வழி தெரியாமல் தத்தளித்தவளோ, பயணத்தை ரசிக்கும் பொருட்டு ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்து தன்னை திசைதிருப்பி கொண்டாள்.

 

இப்படியே ஐந்து மணிநேர பயணத்தை கழித்து மதுரை நிலையத்தில் கால் பதித்தவள், அங்கிருந்து ஆட்டோ பிடித்து வீட்டிற்கு சென்றாள்.

 

தன் வரவையறிந்து தூங்காமல் காத்து கொண்டிருந்த பெற்றோரை அணைத்து கொள்ள, அவளின் தந்தை உலகநாதனோ “மதிமா எப்படிடா இருக்க..”

 

“மிஸ்டர் உலகநாதன் பொண்ணுக்கு என்ன குறை வந்துற போகுது..”

 

“ஏன்டி.. எத்தன தடவ சொல்லியிருக்கேன்.. என் கண்முன்னாடியே என் புருஷன பெயர் சொல்லி கூப்பிடாதன்னு..” என்று மகளிடம் செல்ல சண்டையிட்டார் அவளின் அன்னை மாதவி.

 

“இனி பின்னாடி கூப்பிடுறேன்” என்று மகள் கூறியதை கேட்டு முறைக்கும் மனைவியை கண்டு புன்னகைத்தவரோ “மாதவி.. பிள்ளை வீட்டுக்கு வந்ததுமே ஆரம்பிக்காத போய், அவளுக்கு சாப்பிட எதாவது எடுத்துட்டு வா”

 

“அது ஒன்னுமில்ல.. உங்க மிஸ்ஸஸ்கு கொஞ்சம் பொறாமை உங்கள பெயர சொல்லி கூப்பிட முடியலன்னு.. அப்படி தான மிஸ்ஸஸ் உலகநாதன்” என்று கூறியதை கேட்டு மகளுக்கு வலிக்காமல் வாயில் ரெண்டு போட்ட அன்னையோ “உன் தவள வாய மூடிட்டு வந்து சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடு மீதி மார்னிங் பேசலாம்” என்று மகளை அழைத்து உணவு பரிமாறி, அவள் சாப்பிட்டுவிட்டு உறங்க சென்றதும் பெற்றோர்களும் தங்களின் அறைக்குள் தஞ்சம் புகுந்தார்கள்.

 

இப்படியே ஐந்து நாட்கள் ஊர் நண்பர்களை பார்க்க சென்றது பெற்றோர்களிடம் கேலி பேசுவது இடை இடையே பூமிக்கும் அழைத்து பேசி நாட்களை கழித்தவள், பூமியை பற்றி வீடட்டில் எப்படி பேசுவதென்று தயங்கி நிற்க, மறுபக்கம் பெற்றோரும் அவளிடம் ஏதோ பேச முயற்சி செய்கின்றனர் என்பதையும் அறிந்தவள், இதுவாக இருக்க கூடுமோ என்று ஒரு விஷயத்தை யூகித்து அவர்கள் பேசும் போது தானும் பேசிவிடலாம் என்று முடிவெடுத்து அவர்களின் உரையாடலுக்காக காத்திருந்தாள்.

**********

 

நண்பி மருத்துமனையிலிருந்து வந்து, தன்னவளுடன் மூன்று நாட்கள் தொடர்ந்து அழைப்பு மூலம் மட்டுமே பேசியதில், அவள் முகம் காண துடித்த மனதை அடக்கப்பாடு பட்டு தோற்றவன் நான்காவது நாள் அழைப்பிலே நேரடியாக ‘நாம் சந்திக்கலாமா’ என்று கேட்டுவிட, அவளோ ‘நான் வேலை காரணமாக வெளியூர் வந்திருக்கிறேன் ஆதலால் சந்திக்க ஏலாது என்றும் வேலை முடித்து வந்ததும் தெரிவிக்கிறேன், அப்போது இருவரும் சந்திக்கலாம்’ என்று கூறினாள்.

 

அன்றிலிருந்து நேரில் சந்திக்க முடியவில்லையென்றாலும் தொடர்ந்து நான்கு நாட்கள் அழைப்பு மற்றும் பகிரில் குறுஞ்செய்தி அனுப்பி பேசி கொண்டவன், அவள் திரும்பி வருவதற்குள் அவளுக்கு அதிர்ச்சி கொடுக்க எண்ணியும், இதற்கு மேலும் அவளைவிட்டு பிரிந்திருக்க பொறுமையில்லாதவன் அவளின் புகைப்படத்தோடு பெற்றோரை காண நண்பர்களுடன் வீட்டிற்கு வந்துவிட்டான்.

 

 

காலையிலேயே வீட்டிற்கு வந்த பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் சாப்பாடு பரிமாற, சாப்பிட்டு கொண்டிருந்த தாரணியின் கையிலிருந்த காயம் நண்பன் மற்றும் தன்னவனின் கவனிப்பில் ஆறி உடலும் தேறியிருந்தாலும் காயம் ஏற்பட்ட தடமின்னும் மறையாமல் இருப்பதால் பெற்றோர்கள் தெரியாதவண்ணம் மறைத்தாலும் கண்டு கொண்ட அவளின் அன்னை வைதீஸ்வரி “ஏய்.. என்னடி இது கைல”

 

“ஒன்னுமில்லம்மா.. பைல் எடுக்கும் போது லைட்டா கீரிடுச்சு” என்று பொய் உரைத்தவளை கண்டு இரு ஆடவர்களும் அழுத்த பார்வை பார்த்துவிட்டு சாப்பிடுவதில் கவனம் செலுத்தினர்.

 

இப்படியே நேரங்கள் கடக்க மதிய உணவையும் முடித்துவிட்டு பெரியவர்கள்  சிறியவர்களை சுற்றி அமர்ந்து கொள்ள, ஆதிரனின் தாய் தெய்வாணையோ “சரி யாருக்கு என்ன காரியம் நடக்கணும்ன்னு சொல்லுங்க” என்று பிள்ளைகளின் மனம் புரிந்து கேட்க, தாராவிற்கே விஷயம் தெரியாததால் அவர்களே சொல்லட்டுமென்று அமைதி காக்க, சசியோ நண்பனை சொல் என்பது போல் பார்க்க, அவனோ தங்களை நன்றாக புரிந்த அன்னை கண்டு “எப்படிமா” 

 

அதற்கு பதிலளித்தது என்னவோ தாரணியின் அம்மாவான ஆதிரனின் (அப்பாவின் தங்கை) அத்தை வைதீஸ்வரி தான்.

 

“பின்ன என்னங்கடா.. வீட்டுக்கு வந்து தலைய காட்டிட்டு மட்டும் போறவனுங்க.. ஒன்னு கூடி காலங்காத்தாலயே வந்திருக்கீங்க.. அதுவும் இவங்க வீட்டுக்கு வந்தாலும் நீயெல்லாம் வீட்டுக்கு வருறதே ரர் கேஸ் தான்.. அப்போ உனக்கு தான் ஏதோ காரியம் நடக்கணும்” என்று தன்னை சரியாக கணித்த அத்தை கண்டு புன்னைக்க, 

 

சசியோ “சூப்பர் அத்தை.. நீங்க அம்மாவ விட.. ஒரு படி மேல போயிட்டீங்க” என்று கூறியதை கேட்டு காரபார்வை வீசியதில்,

 

அர்த்தம் புரிந்தவன் “ஹீஹீ டங் ஸ்லீப்பாகிடுச்சுமா” என்று கூறியவன் எதிரே இருப்பவள், அனல் பார்வை வீசியதில் ‘அய்யோ.. அத்தைன்னு கூப்பிட்டா இவங்க முறைக்கிறாங்க.. அம்மான்னு கூப்பிட்டா அவ முறைக்கிறா.. ஆக மொத்தத்துல சல்லி சல்லியா சிதற போறது நம்ம உசுரு தான்’ என்று நினைத்து,

 

“எதுக்கு வம்பு அமைதியா இருந்துப்போம்” என்று கூறிய நண்பனை கண்ட ஆதி பக்கென்று சிரித்து, அவனின் காரபார்வைக்கும் ஆளாகிக்கொள்ள,

 

வைதீஸ்வரியோ “முதல பீடிகைய போடாம என்ன விஷயம்ன்னு சொல்லுடா”

 

“எல்லாம் நல்ல விஷயம் தான் அத்தை” என்று கூறி தன் தாயின் புறம் திரும்பிய ஆதி “அம்மா அன்னைக்கு பொண்ணுங்க போட்டோஸ் கொடுத்தீங்களே.. அதுல இந்த பொண்ணு பிடிச்சிருக்கு” என்று கூறி மகியின் புகைப்படத்தை கொடுக்க,

 

அவரின் விழியோ ஆச்சரியத்தில் விரிய, திருமணமே வேண்டாமென்று கூறியவன் இப்பெண்ணை மட்டும் பிடித்திருக்கிறது என்று கூறியதில் சந்தேகப்பார்வையில் மகனை ஆராய, அதை உணர்ந்தவனோ “இந்த பொண்ணு கூட.. ஏற்கனவே பேசி பழக்கம் உண்டு.. சோ பிடிச்சுருக்கு மேற்கொண்டு அவ வீட்டுல பேசி முடிவெடுங்க” என்று கூறி அருகில் முகம் சுழித்தவாறு மகியின் புகைப்படத்தை பார்த்த அத்தையிடம் “என்ன அத்தை.. பொண்ணு பிடிச்சிருக்கா”

 

“புடிக்கல”

 

“பைன்.. நான் தான குடும்பம் நடத்த போறேன்.. எனக்கு பிடிச்சா போதும்” என்று அவன் கூறியதை கேட்டு வெடுக்கென்று எழுந்து சென்றார் வைதீஸ்வரி.

 

அவரின் இச்செயலுக்கு காரணம் என்னவென்றால் தன் பெண்ணான தாரணியை அண்ணன் மகனான ஆதிரனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசை, இவ்வாசை தாரணியை கருவில் சுமக்கும் போதே அண்ணன் அண்ணியிடம் ஆயிரம் முறை கூறியிருப்பார் “எனக்கு பொண்ணு பிறந்தா உங்க பையன் தான் கட்டிக்கணும்” என்றதில் ஆரம்பித்து, சிறு வயதில் தாரணி மற்றும் ஆதிரனிடம் பேசிக்கொள்ளும் போது கூட, இதை தான் சொல்லுவார் சிறுபிள்ளைகள் என்பதால் ஆரம்பத்தில், இதில் பெரிதாக நட்டாம் கொள்ளவில்லை 

 

ஆனால், அதை உணரும் வயதை தொடும் போது ‘இனி இப்படி எங்கள் இருவருரையும் சேர்த்து வைத்து பேசாதே நாங்கள் எப்போதும் நண்பர்கள் மட்டுமே’ என்று கூறி கண்டிப்பாள். 

 

அதோடு சஷ்டிக்கை விரும்ப தொடங்கியதிலிருந்து அவனை சீண்டும் பொறுத்து அன்னை பேசும் போது ஆதிரனை பிடித்திருப்பது போலவே காட்டிக்கொள்ள, அவளின் எண்ணம் உணர்ந்த ஆதியும் அவளுடன் சேர்ந்து கொள்வான்.

 

அன்னை மேஜையின் மீது வைத்துவிட்டு சென்ற புகைப்படத்தை எடுத்து பார்த்த தாரணியின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, அதை கண்டு காணதது போல் அன்னையிடம் “அம்மா.. பொண்ணு வீட்டுல பேசிட்டு எப்போ பாக்க போலாம்ன்னு சொல்லுங்க” என்று கூறிவிட்டு எழுந்து அவன் அறைக்குள் செல்ல, அவனை பின் தொடர்ந்தே தாரணியும் சென்றாள்.

 

இப்போது தாரணி “டேய்.. இந்த பொண்ணு தான அன்னைக்கு அவ கூட வந்தா.. அப்போ அவள ஏற்கனவே உனக்கு தெரியுமா”

 

“ம்ம் தெரியும்.. உத்தர்காந்துக்கு இன்வெஸ்டிகேஷன் விஷயம் போனேன்ல.. அங்க தான் மீட் பண்ணிக்கிட்டோம்” என்று கூறி அன்று நடந்ததை அவளிடம் கூறியவன் “அதுக்கு அப்புறம் அவ ப்ரெண்டுக்கும் சசிக்கும் ஃபிக்ஸ் பண்ணின மேரேஜ கேன்சல் பண்ண ஹெல்ப் கேட்டு வந்தா” என்று அவள் தோழிக்காக தன்னிடம் உதவி கேட்டதையும், அதற்கு தான் அவளிடம் கூறியதையும் கூறியவனிடம் “அட சண்டாளா எல்லாம் உன் வேலை தானா.. உன்னால அந்த பிள்ளைக்கு சாபம்லாம் விட்டேன்டா”

 

“இது சசிக்கு வச்ச பொறி.. ஆனா நீ வந்து சீன மாத்துவேன்னு நான் என்னத்த கண்டேன்..”

 

“கேஸ் விஷயமா கிளைண்ட மீட் பண்ண ரெஸ்டாரன்ட் போனேன்.. எல்லாம் முடிஞ்சி கிளம்பிற நேரத்துல நீங்க வந்தீங்க.. அவன் ஹாஸ்பிட்டலிருந்து இவ்வளவு சீக்கிரமா ரெஸ்டாரன்ட் வந்திருக்கான்னா ஏதோ சம்திங்க்ன்னு தோணிச்சு.. அதான் உங்களுக்கே தெரியாம உங்களை வேவு பாத்தேன்.. அதுக்குப்புறம் தான் என்னலாமோ நடந்து போச்சு.. இருந்தாலும் நீ அவன ஹார்ட் பண்ணின மாதிரி ஐடியா கொடுத்தது தப்பு தான.. அவன் மனசு எவ்வளவு ஹார்ட் ஆகிருக்கும்”

 

“விடுடி.. இதுவும் நல்லதுக்கு தான்”

 

“சரி விடு.. அவளுக்கும் உன்ன பிடிச்சிருக்கா”

 

“ரெண்டு பேரும் அந்த அளவுக்கு பேசிக்கிட்டது இல்ல.. அவ ஜஸ்ட் பிரெண்ட்லியா தான் பேசுவா.. அவள பர்ஸ்ட் டைம் பாக்கும் போதே பிடிச்சிருச்சு”

 

 

“சரிடா.. நெக்ஸ்ட் டைம் பாக்கும் போது என்னையும் கூட்டிட்டு போ.. அன்னைக்கு நான் பேசினத கேட்டு என்ன தப்பா நினைச்சிருப்பா.. முதல ரெண்டு பேர்கிட்டயும் சாரி கேக்கணும்”

 

“தப்பா நினைக்க வாய்ப்பில்ல.. ஏற்கனவே உன்ன பத்தி எல்லாமே சொல்லிருக்கேன்..”

 

“சரி தான்.. இருந்தாலும் இங்க ஒருத்தி இரத்தம் சிந்தி காதலுக்காக போராடிட்டு இருக்கேன்.. கொஞ்சம் கூட குற்றயுணர்ச்சி இல்லாம எனக்கு முன்னாடி கல்யாணத்துக்கு ரெடியாயிட்டியேடா” என்று சீண்ட

 

“ஹான்.. எள்ளு தான் எண்ணெயுக்கு காயுது.. எலி புழுக்க எதுக்கு காயனும்.. உனக்கு அவன கரெக்ட் பண்ண துப்புல்ல பேசுறா பேசி.. மரியாதையா போடி” என்று பதிலுக்கு அவளை வாரினான்.

 

*****

மனதிற்குள் ஏதோ கலக்கமாகவே இருப்பதால் தோழியிடம் பேசி ஆறுதல் தேட நினைத்து மகிக்கு அழைப்பு விடுத்தாள்.

 

அழைப்பை ஏற்றவளோ “சொல்லுடி ரித்து”

 

“சும்மா தாண்டி.. போர் அடிச்சிது அதான் உனக்கு கால் பண்ணினேன்” என்று கூறியவளின் குரல் சரியில்லை என்பதை உணர்ந்தவள் “லூசு.. இன்னும் அதையே நினைச்சிட்டு இருக்கியா”

 

“தெரியல மகி.. ஆனா அவங்க பேசினது என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது”

 

“அவங்க தெரியாம சொல்லிட்டாங்கடி.. அப்படியே அவங்கவிட்ட சாபம் பலிக்கிறதுக்கு அவங்க ஒன்னும் முனிவர் இல்ல.. இத விட்டுட்டு உன் லவ் பத்தி சொல்லு”

 

“சொல்லுற அளவு ஒண்ணுமில்ல ரொம்ப வருஷமா ஒன் சைடா தான் போகுது” என்று கூறி நாக்கை கடித்தவள் “ஆய்யோ உளறிட்டோமே” என்று நினைத்து “ஹீஹீ டபிள் சைடானதும் சொல்லலாம்ன்னு நினைச்சேன்டி”

 

“நம்பிட்டேன்”

 

“சரி.. நீ எப்படி கண்டுபிடிச்ச”

 

“நீ அந்த டாக்டர் ஆளோட காதலுக்கு உருகுனீயே அப்போவே டவுட் வந்துடுச்சு”

 

“அம்புட்டு வெளிப்படையாவா தெரியுது”

 

“அப்படி தான் போல.. சரி உன் ஆளோட போட்டோ இருந்தா அனுப்பு”

 

“போன் முதல வைரஸ் வந்ததுல எல்லாம் டெலீட் ஆயிடுச்சுடி..போட்டோ சிக்குனதும் அனுப்புறேன்” என்று மேலும் சில கதைகள் பேசி உரையாடிவிட்டே அழைப்பை துண்டித்தனர்.

 

               தேடல் தொடரும்...

 

இப்படிக்கு 

Vsv42😍😍


   
ReplyQuote

You cannot copy content of this page