All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தீரா காதலின் தேடல்..? , தேடல் - 10.

 

VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Estimable Member Author
Joined: 8 months ago
Posts: 43
Topic starter  

 

 

தேடல் - 10

 

மருத்தவமனையில் அவளுக்கான சிகிச்சை முடிந்ததும் இரு ஆடவர்களும் உள்ளே வந்து மயக்க நிலையில் வாடிய மலராக படுத்திருந்தவளை காண, சசியோ அவளருகில் நாற்காலி போட்டு அமர்ந்து வலி நிறைந்த விழிகளில் கண்ணீர் வடிய, அவளை கண்டு கொண்டிருப்பதை கண்ட ஆதிக்கோ, நண்பர்கள் இருவரையும் இந்நிலையில் காண பிடிக்காததால் மருந்தகத்திற்கு சென்று மருத்துவர் கூறிய மருந்துகளை வாங்கி வருகிறேன் என்று நண்பனிடம் பார்த்து கொள்ளேன்று கூறிவிட்டு வெளியே வந்தான்.

 

அவன் சென்றதும் பெண்ணவளின் கரத்தை தன் கரத்திற்குள் வைத்து அழுத்தியவனோ “ஏன்டி.. என்ன இப்படி லவ் பண்ற.. வேண்டாம்டி.. நான் உன்னோட காதலுக்கு கொஞ்சம் கூட தகுதியானவன் இல்ல தாருமா.. எனக்காக உன்ன நீயே கஷ்டப்படுத்திறது என்னோட உயிரே போகிற அளவு வலிக்குதுடி.. என்ன மறந்துடுடி..

 

ஏற்கனவே ஒருத்தி சாப்பிட்ட எச்சி பிளேட் உனக்கு வேண்டாம்டி.. என்னால நீ அப்படியொரு நிலைக்கு தள்ளப்பட கூடாதுன்னு தான் உன்னவிட்டு விலகி போறேன்.. பிளீஸ் தாருமா.. என்ன மேலும் சாகடிக்காம என்னவிட்டு போயிடு.. லவ் யூ டி தாருமா.. என்ன மன்னிச்சிடு.. என்னோட காதல உன்கிட்ட சொல்ல முடியாத பாவியாயிட்டேன்” என்று கூறி அவளின் கரத்தில் இதழ் பதித்தவனோ, பற்றிய அவள் கையின் மேல் தலைசாய்த்து உறங்கி போனான்.

 

*******

வெளியே வந்து கண்மூடி அமர்ந்திருந்தவனுக்கோ மகியின் எண்ணம் வர, அழைப்பு விடுத்தான்.

 

அழைப்பு ஏற்கப்பட்டதுமே “தீரா.. இப்போ அவங்க எப்படியிருக்காங்க” என்று அவளிடம் வந்த வார்த்தையை வைத்தே, தனது அழைப்புக்காக தான் காத்திருந்திருப்பாள் என்பதை உணர்ந்து கொண்டவன் “பெருசா ஒன்னும் பிராப்ளம் இல்ல.. கொஞ்சம் பிளட் லாஸானதுலயும் ஸ்ட்ரெஸ்ஃபுல்லா இருக்கிறதுனாலயும் இன்னைக்கு முழுக்க.. அவளுக்கு ரெஸ்ட் தேவைன்னு ஸ்லீபிங் இஞ்செக்சன் கொடுத்துருக்காங்க.. சோ நாளைக்கு தான் கண்முளிப்பா”

 

“ஓகே தீரா.. நீ கூடவேயிருந்து அவங்கள பாத்துக்க.. அவங்களுக்கு கான்ஸ்கியஸ் வந்ததும்.. எனக்கு கன்வே பண்ணு.. அப்புறம் உன்னோட ப்ரெண்ட் கூட இருக்காங்க தான”

 

“ஆமா.. அவகூட தான் இருக்கான்.. நான் மெடிக்கல் வந்தேன்.. உனக்கு இன்பார்ம் பண்ணிட்டு.. நடந்த கலவரத்துல நீ இருக்கிறதே மறந்து வந்துட்டேன்னு ஒரு சாரி கேட்கணும்ன்னு தோணுச்சு அதான் கால் பண்ணினேன்.. அப்புறம் அவ பேசினத கேட்டு உன்னோட ப்ரெண்டுக்கு கஷ்டமா இருந்திருக்கும்ல.. சத்தியம் அவ வருவான்னு எதிர் பாக்கவேயில்ல ரியலி சாரி..”

 

 

“இட்ஸ் ஓகே தீரா.. அவளுக்கு வருத்தமாயிருந்தாலும்.. உங்க ப்ரெண்தோட ஃபீலிங்ஸ புரிஞ்சிக்கிட்டா.. சோ சரியாயிடுவா.. நீங்க இத நினைச்சி வொர்ரி பண்ணி நைட் சாப்பாட ஸ்கிப் பண்ணிடாதீங்க..” என்று கூறி சிந்தித்தவள் “தீரா.. நான் வேணும்னா உங்க ரெண்டு பேருக்கும் டின்னர் சமச்சி எடுத்துட்டு வரவா” என்று கேட்டவளோ இச்சந்தர்பத்தை பயன்படுத்தி அவனை காண நினைக்க, 

 

அவனுக்கும் கூட இந்நிலையில் அவளுடன் இருக்க வேண்டுமென்று தோன்றினாலும், ஏதோ தயக்கம் எழுந்ததில் “இட்ஸ் ஓகே.. நான் பாத்துக்கிறேன்” என்று தான் கூறியதை கேட்டு “ம்..” என்று தோயிந்து போன குரலை கேட்டு,

 

அதற்கு மேல் முடியாமல், அவளிடம் நாளை பேசுகிறேன் என்று அழைப்பை துண்டித்தவன், மருந்தகத்திற்கு சென்று அவளுக்கான மருந்தை வாங்கிவிட்டு மருத்துவமனை அருகிலிருந்த உணவகத்தில் இருவருக்கும் உணவு வாங்கி வந்தவனோ, சாப்பிட மறுக்கும் நண்பனை வற்புறுத்தி ஊட்டிவிட்டு வெளிய வந்தவனின் தொண்டையில் உணவை இறக்க மனமில்லாமல் அமர்ந்திருந்தவனுக்கு அழைத்த மகியோ,

 

அவன் கூறியதை வைத்து அவன் சாப்பிடவில்லை என்பதை உணர்ந்தவள், தனக்காக சாப்பிடும்படி கெஞ்சி கூத்தாடி சாப்பிட கூற, அவனும் மனமில்லை

யென்றாலும் அவளுக்காக பெயருக்கென்று உணவை முழுங்கினான்.

 

பிறகு அவனின் ஆறுதலுக்காக, அவன் உறங்கும் வரை கதைத்தவளோ அவனிடமிருந்து பதில் வரவில்லையென்றதும் உறங்கிவிட்டான் என்பதை உறுதி செய்துவிட்டே அழைப்பு துண்டித்து, அவளும் உறங்கி போனாள்.

 

மறுநாள் காலையில் தாரணி கண்விழித்ததும் மருத்துவரிடம் கேட்க வேண்டிய ஆலோசனையெல்லாம் கேட்டுவிட்டு, அவளை அழைத்து கொண்டு தாங்கள் மூவரும் இருக்கும் வீட்டிற்கு சென்றார்கள்.

 

பெற்றோரிடம் கூட வேலை அதிகம் ஆதலால் சிறிது நாட்கள் அவர்களை காண வர ஏலாது என்று கூறி, இரு ஆடவர்களும் பெண்ணவளின் உடல் நலத்தை கவனிக்க தொடங்கினர்.

 

சசியோ வேலைக்கு விடுப்பெடுத்துவிட்டு அவளின் அருகிலிருந்தே கவனித்து கொள்ள, பாவையும் அவனை தடுக்கவில்லை என்றாலும் அவன் முகத்தை பார்ப்பதையே தவிர்த்துவிட்டாள்.

 

அவர்களுக்கு தனிமை கொடுக்க நினைத்த ஆதியோ வீட்டியில் சமைப்பதிலிருந்து மற்ற வேலைகளை பார்த்து கொள்வதோடு அவ்வப்போது நண்பியிடம் வந்து பேசி கொள்வான்.

 

அதோடு தாரணியை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தது என்று அனைத்தையும் மகியிடம் பகிர்ந்ததோடு அழைப்பிலும் பேசி, இரண்டு நாட்கள் கழித்தான்.

 

************

 

தன்னவளின் தமக்கையின் திருமண ஆல்பத்தை தயார்படுத்தியவன், அவளை பூங்காவிற்கு வந்து வாங்கி கொள்ளும்படி கூறி, அவள் வருவதற்கு முன்பாகவே சென்று காத்து கொண்டிருந்தான்.

 

அவள் வந்ததும் கொடுக்க வேண்டியதை கையில் கொடுத்தவனோ “உனக்கு புடிச்ச போலவே.. உன்னோட அக்காவோட எங்கேஜ்மெண்ட் அண்ட் மேரேஜ் ஆல்பம் இருக்கும்.. பாத்துட்டு எல்லாமே பிடிச்சியிருக்கான்னு சொல்லு” என்று எல்லாமே என்ற வார்த்தையை மட்டும் அழுத்தி கூறினான்.

 

‘தன்னையும் பிடித்திருக்கிறதா என்று கூறு’ என்பதையும் மறைமுகமாக கூறியவனை, உணர்ந்து கொண்டவள் புரியாதது போன்றே தலையசைத்தாள்.

 

இப்போது குரலை செருமிய ஹர்ஷாவோ “நான் இன்னைக்கு நைட் பிளைட்ல மும்பை கிளம்புறேன்.. போன வேலை முடியவும் வந்துடுவேன் பட் எவ்வளவு நாளாகும்ன்னு தெரியல..” என்று கூறி அவளை இழுத்து அணைத்தவன் “மிஸ் யூ அண்ட் லவ் யூ லிப்ஸ்” என்று அவள் இதழில் இதழ் பதித்து விலகியவன், நிரந்தர பிரிவாகிவிடுமோ என்று எண்ணியதில் கண்களில் நீர் எட்டி பார்க்க, அவள் அறியாதவண்ணம் துடைத்தவனோ மறுபடியும் அழுத்தமான இதழ் முத்தம் பதித்துவிட்டு அவளிடமிருந்து விடை பெற்றான்.

 

அவணைப்பில் திகைத்து பின் நிதானமடைந்தவள், பதிலுக்கு அணைப்போ முத்தமோ வழங்கவில்லையென்றாலும், அவனின் அணைப்பை தடுக்காதவளின் கண்ணில் அவனின் கண்ணீர்ப்பட்டதில் ‘தன்னை சில நாட்கள் பிரிவதற்கா இக்கண்ணீர்?’ என்ற கேள்வி தோன்றினாலும் கேட்காமலே, அவன் தன்கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.

 

அன்றிரவு நண்பனை விமான நிலையத்திற்கு வழியனுப்பி வைத்தவள், அவன் கண்களில் தெரிந்த சோகத்தை கவனிக்க தவறாதவளோ, அவன் விடை பெற்றதும் வீட்டிற்கு வந்து, மறுநாள் தன்னுடைய பெற்றோரை காண ஊருக்கு செல்வதற்கு தேவையான உடைகளை அடுக்கிவிட்டு வீட்டியிலுள்ள மற்ற வேலைகளை முடித்த மதியோ, நாளை சந்திப்பதாக கூறி சிறிது நேரம் பூமியுடன் உரையாடிவிட்டு உறங்கி போனாள்.

 

மறுநாள் காலையில் தன் உடமைகளை எல்லாம் எடுத்து கொண்டு பூமியுடன் மாலை வரை பொழுதை கழித்துவிட்டு, அவனுடன் ரயில் நிலையம் வந்து சேர்ந்தவள் ரயிலுக்காக காத்து கொண்டிருக்க,

அவளை அமரவைத்து அவளருகில் அமர்ந்து கைகோர்த்தவனோ, அவள் முறைப்பதை கண்டு “கட்டிப்பிடிக்க கூடாது.. கிஸ் அடிக்க கூடாது கை கோர்க்கவும் கூடாதா” என்று அவன் கேட்ட பாவனையில் இதழ் கடித்து புன்னகைத்தவளோ கூடாது என்று தலையசைக்க,

 

அவனோ “அப்படி தான்டி புடிப்பேன்” என்று கூறி பிடியை இறுக்க, அவன் செயலில் இதழ் விரித்து சிரித்தவள், அவனிடமிருந்து எந்த வித காமமும் இல்லாததால் இம்முறை அவனை தடுக்காமல் விட்டு விட,

 

தன்னை அவள் தடுக்கவில்லை என்ற திருப்தியில் “மதி பேபி.. சீக்கிரம் சென்னை வந்துடு.. உன்ன ரொம்ப மிஸ் பண்ணுவேன்.. அடிக்கடி கால் பண்ணி பேசு.. அப்புறம் மறக்காம இந்த தடவ நம்ம லவ் மேட்டர வீட்டுல ஓபன் பண்ணிடு.. மிஸ் யூ அண்ட் லவ் யூ” என்று கூறவும் ரயில் வந்துவிட, அவனிடமிருந்த தன் கரத்தை விடுவித்து எழுந்தவளோ “ஓகே பூமி.. கண்டிப்பா இந்த தடவ வீட்டுல பேசிட்டு தான் வருவேன்.. ரீச்சானதும் கால் பண்றேன்.. மிஸ் யூடா.. டேக் கேர்” என்று கூறி ரயிலில் அமர்ந்து பார்வையால் அவனிடமிருந்து விடை பெற, ரயிலும் நகர்ந்தது.

 

ரயில் தன் கண்ணைவிட்டு மறையும் வரை பார்த்திருந்தவனுக்கு இப்பிரிவு மனதில், ஏதோ நெருடல் ஏற்படுத்த அருகேயிருந்த திண்டியில் தலையில் கைவைத்து அமர்ந்தவன், இதுவே கடைசி பிரிவாக இருந்துவிடட்டும், அதன் பிறகு அவளை தன்னருகிலே வைத்து கொள்ள வேண்டுமென்று என்று எண்ணியவன், கூடிய சீக்கிரமே அவளை காண முடியாத நிலைக்கு கொண்டு வரபோகும் விதியின் கணக்கை அறியாமல் போனதே அவனின் பிழையோ?

 

தன்னவளின் நினைவில் அமர்ந்திருந்தவன் அருகில் நிழலாடுவதை உணர்ந்து நிமிர்ந்து எதிர்நிற்பவனை கண்டு மகிழ்ந்தவனோ “டேய் ஆதிரா.. எப்போடா சென்னை வந்த.. ஒரு கால் கூட பண்ணல” என்று கூறி நண்பனை அணைத்து தழுவ,

 

ஆதிரனோ “வந்து அஞ்சு நாள் இருக்கும்டா.. ஆனா அதுக்குள்ள என்னலாமோ நடந்து போச்சு.. அதான் உன்ன பாக்க வர டைம் கிடைக்கல”

 

“என்னாச்சுடா” 

 

நண்பர்கள் இருவரையும் பற்றி கூறிவிட்டு அவர்களை சேர்க்க தான் செய்த காரியத்தையும் கூற,

 

அதை கேட்ட பூமியோ “இந்த டாக்டர என்னடா பண்றது.. பழைய லைஃப் மறக்காம அதை புடிச்சு தொங்கிட்டு இருக்கான்”

 

“நம்ம எதுவும் பண்ண வேண்டாம்.. பெருசா இனி எதுவும் பண்ண மாட்டான் தான் ஒருவேளை எதாவது பண்ணினா தாராவே.. அவன ஹேண்டில் பண்ணிடுவா”

 

“ம்.. வக்கீலுக்கு கொஞ்சம் கோவம் ஜாஸ்தியா தான் வருது.. இருந்தாலும் அவநிலமைலிருந்து யோசிக்கும் போது பாவம் அவளும் என்ன தான் பண்ணுவா..”

 

“விடு மச்சான்.. வீட்டுக்கு வந்து அவள பாரு”

 

“கண்டிப்பா வருவேன்டா.. உங்கள விட்டா இந்த அனாதைக்கு யாருயிருக்கா”

 

“அடிச்சி பல்ல பேத்துருவேன்டா.. எத்தன தடவ சொல்லுறேன் அந்த வார்த்தைய சொல்லாதன்னு.. இனி ஒரு தடவ இந்த மாதிரி பேசுன உன் தலைய தாண்டவலாத்துக்கு போட்டுருவேன்”

 

“சரி சரி.. நீ என்ன ஸ்டேஷன் பக்கம்” என்று பேச்சை திசை திருப்ப,

 

“ஒரு முக்கியமான கிளைண்ட செண்ட் ஆஃப் பண்ண வந்தேன்டா” என்று கூறியதை கேட்டு சந்தேகமாக பார்க்கும் நண்பனை கண்டவன் “டேய் பூமிநாதா.. நீ நினைக்கிற மாதிரி எதுவுமே இல்லடா.. நிஜமாலே கிளைண்ட் தான்டா.. சரி உன்னோட ஆள பத்தி சொல்லு”

 

“மச்சான்” என்று விழி விரித்தவனிடம் “எனக்கு எப்போவோ தெரியும்டா.. நீயா வாய திறப்பன்னு தான் வெயிட் பண்ணேன்.. ஆனா நீ ஸ்டேஷன்ல சோக கீதம் வாசிக்கிறது பாத்து மனசு கேட்கல.. அதான் நானே நேரடியா கேக்குறேன்.. இப்போவாது சொல்லுடா”

 

"ஒரு வருஷமா லவ் பண்றேன்டா.. பொண்ணு கொஞ்சம் மாசம் முன்னாடி தான் பச்சை கொடி காட்டினா.. இப்போ கூட அவ ஊருக்கு போறா.. அதான் செண்ட் ஆஃப் பண்ண வந்தேன்.. இந்த முறை வீட்டுல கல்யாணத்த பத்தி பேசிட்டு வரேன்னு சொன்னா அதுக்கப்புறம் உங்க எல்லார்கிட்டயும் சொல்லலாம்ன்னு இருந்தேன்..

 

அவகூட அவளோட ப்ரெண்ட்ஸ் கிட்ட சொல்லவே இல்ல.. கல்யாணத்துக்கு முன்னாடி இப்படியிருக்குறது பிடிக்காதுன்னு ஆயிரம் கண்டிஷன்.. எனக்கும் அதுசரின்னு பட்டுச்சு சோ நானும் அப்படியே ஃபாலோ பண்ணிட்டேன்”

 

“ஓகே மச்சான்.. சீக்கிரமே உன் ஆளோட வந்து நல்ல செய்தி சொல்லு” என்று கூறி சில பல விஷயங்களை பேசிவிட்டு நண்பனிடமிருந்து விடைபெற்றான் பூமிநாதா என்றழைக்கப்பட்ட பூமிநாதன்.

 

சிறு வயதில் பெற்றோரை இழந்ததோடு, அவர்கள் யாரென்று கூட தெரியாமல் ஆசிரமத்தில் வளர்ந்தவன் பள்ளி பருவத்தில் தான் ஆதிரன் அவனுடன் நட்பாக பழக, அவனை தொடர்ந்து தாரா சஷ்டிக் என்று இருவருடனும் பழகி மூவருடனும் நெருங்கிய நட்பு கொண்டவன், அவர்கள் வீட்டியினருடனும் ஒன்றினான்.

 

அதோடு நண்பர்கள் மூவரும் தங்கள் வீட்டிற்கு வரும்படி அழைத்தும், அதற்கு காரணம் கூறி வரமறுத்தவனை வற்புறுத்தாமல் விட்டுவிட்டாலும், நால்வரும் ஒருவரின்றி ஒருவர் இல்லாமல் எக்காரியமும் செய்துக்கொள்ள மாட்டார்கள்.

 

                 தேடல் தொடரும்...

 

இப்படிக்கு 

Vsv42😍😍


   
ReplyQuote

You cannot copy content of this page