About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.

All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
வணக்கம் நட்புகள்!,
வாய்ப்பளித்த கவிமாக்கு நன்றிகள்🙏🙏 இது எனக்கான தனிப்பட்ட சவாலும் கூட. குறிப்பிட்ட காலத்துக்குள் எழுதி முடிக்க வேண்டும் என உங்க வீட்டு பிள்ளையா நினைச்சு ஆசீர்வாதம் பண்ணீட்டு அப்படியே டீயை குடிச்சிட்டு எப்படி இருக்குன்னு கீழே உள்ள லிங்கில் சொல்வீங்களாம்😊😊
அன்புடன்,
VSV36
அன்று ஸ்ரீராம் வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு அவனிடம் தனிமையில் உரையாட அவர்கள் வீட்டுக்கு வந்து இருந்தாள் வைதேகி.
என்னதான் தனது மனதில் இருப்பதை சொல்ல தைரியமாக வந்து விட்டிருந்தாலும் அவனை எதிர்கொள்ள அத்தனை தயக்கமாக இருந்தது.
ஆனால், இதனை விட்டால் மறுபடியும் இப்படி ஒரு வாய்ப்பு அமையுமா என்பதை எண்ணியவளாக அவனது கண்களைப் பார்க்காது பார்வையை அங்கும் இங்குமாய் அலையவிட்டபடி “உன்கிட்ட பேசணும் ராம்..” என்றவளை மேலிருந்து கீழாக பார்த்துவிட்டு “சொல்லு..!” என்ற ஸ்ரீராமின் பார்வையிலும் குரலிலும் இருந்த வித்தியாசத்தை உணராது ஒருவாறு தைரியத்தை திரட்டி,
“நான் உன்னை காதலிக்கிறேன் ராம்..!” என்று திக்கி திணறி அதுவரை மறைத்து வைத்த காதலை சொன்னவள், ஒரு சில நிமிடங்கள் கடந்தும் அவனிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லாமல் போகவும் அலைபாய்ந்த விழிகளை ஒருநிலைப்படுத்தி நிமிர்ந்து அவனை ஏறிட்டவள், முகத்தில் அருவருப்பு, வெறுப்பு, கோபம் என்னும் எதிர்மறையான உணர்வுகள் கொட்டிக் கிடக்க, அடிக்க கையை ஓங்கி இருந்தவனை கண்ணுற்று நெஞ்சம் பலமாக அடித்துக் கொள்ள என்ன சொல்ல போகிறானோ என்று கலவரத்தோடு வாயடைத்து நின்றவளை அசூசையுடன் நோக்கி,
“நீ பிஞ்சிலேயே பழுத்த கேஸ் என சொன்னபோது நான் நம்பவில்லை. ஆனால், நான் வீட்டுல் தனியாக இருக்கிறது தெரிந்து கொண்டு வந்து அதுவும் இந்த பதினைந்து வயதில் இப்படிப் பேசுவதைப் பார்த்தால் அது உண்மை தான் போல..!” உதட்டை கோணலாக வளைத்து உரைத்தவனின் பேச்சிலும் பாவனையிலும் மனதளவில் பெரிதாக அடி வாங்கியவளுக்கு அந்நொடி ஏன் தான் இன்னும் உயிர் வாழ்கின்றோமோ என்ற எண்ணம் தோன்றிவிட விரக்தியின் உச்சத்திற்கே சென்றவளின் கண்களில் கோடாக கண்ணீர் இறங்க, வேதனையின் உச்சத்தில் படபடத்த இதயத்தை அழுத்தி விட்டவளின் அடுத்த கட்ட அதிரடிச் செய்கையில் அதிர்ந்து நின்றவனிடம் “ பிஞ்சில் பழுத்த கேஸில் இதையும் சேர்த்துக்கொள்..!” என்றுவிட்டு அவ்வீட்டில் இருந்து வெளியேறியவளின் நெஞ்சினில் தான் எத்தனை எத்தனை ஏக்கங்கள்..!
கருத்து திரி -
Latest Post: மயக்கம் 2 Our newest member: Silviya Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page