All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

தீரா காதலின் தேடல்..? , தேடல் - 8.

 

VSV 42 – தீரா காதலின் தேடல்
(@vsv42)
Estimable Member Author
Joined: 8 months ago
Posts: 43
Topic starter  

தேடல் - 8

 

ஆதிரனிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்துவளுக்கோ, நாளை அவனை பார்க்க போகிறோம் என்றதும் துள்ளி குதிக்கும் மனதை நினைத்து வியந்து தனக்கு அவனை பிடித்திருக்கிறதோ என்று கேள்வியை எழுப்பி பதில் தேடியவளின் முகத்தில் ஏனோ வெட்கப்புன்னகை, 

 

தன் மனதில் அதற்கான பதில் கிடைக்கும் முன்னே ஏதோ சிந்தித்த பாவையின் மூளையால் மலர்ந்த முகத்தில், இப்போது சோகம் குடிக்கொள்ள, கையில் வைத்திருந்த அவன் கொடுத்த வருகை அட்டையை ஏக்கமாக பார்த்தவளின் கண்கள் சற்று கலங்க, கண்களை துடைத்தவளின் எண்ணத்தில் ஒரு நாள் பழக்கத்திலே தனக்குள் ஒருவனால் இவ்வளவு உணர்ச்சிகளா? என்றவள், இதற்கு பெயர் தான் காதல் என்பதை உணராத பேதையோ தான் செய்த முட்டாள்தனத்தையும் செய்து கொண்டிருக்கும் முட்டாள் தனத்தையும் எண்ணி மருகியவாறே உறங்கி போனாள்.

 

மறுநாள் காலை பொழுதில் தன்னவளின் தரிசனம் கிடைக்க போகிறது என்ற புத்துணர்ச்சியில் கண் விழித்த ஆதிரனோ, காலை கடன்களை முடித்து குளித்துவிட்டு இடையில் ட்ராக் சூட்டுடன் வெளியே வந்து அலமாரியை திறந்ததுமே, அவளை முதல்முறை சந்தித்த போது, அவளின் ஸ்பரிசம் நிறைந்த சட்டையை அணிந்துவிட்டு ஜெல் கொண்டு தலையை கோதிவிட்டவனுக்கு மாலை தான் அவளை காண வேண்டும் என்பதே அப்போது தான் உரைக்க, “ச்ச.. காலைலையே வர சொல்லி இருக்காலமோ” என்று தான் செய்த மடதனத்தை எண்ணி தலையிலடித்து கொண்டான்.

 

அதோடு சாப்பிட்டுவிட்டு அலுவலகம் சென்று தன் வேலையில் கவனத்தை செலுத்தியவனுக்கு இருப்பு கொள்ளவில்லை, எப்போது மணி ஐந்தாகும் என்று கடிகராத்தை பார்த்து கொண்டிருக்க, அந்த கடிகாரம் இவனை பலிவாங்கியதா என்று தெரியவில்லை “உன் அவசரத்துக்குகெல்லாம் நான் நகர மாட்டேன்..” என்று வீம்பாக மெல்ல நகர தொடங்கிய கடிகாரத்தை தூக்கி உடைத்து விடுவோமா என்றளவு கோவம் வந்தது இருப்பினும் தனக்கான நேரத்திற்காக காத்து கொண்டு கடிகாரத்தை அர்சித்தவாறு,

 

தன்னுடைய அன்றைய பணியை முடித்தவன் ஐந்தாவதற்கு ஒரு மணிநேரம் முன்னாடி அலுவலக அறையிலிருந்த குளியல் அறையில் குளித்துவிட்டு மறுபடியும் அதே சட்டையை அணிந்து தயாராகியவன் பெசன்ட் நகர் கடற்கரைக்கு சென்று அவள் வருகைக்காக காத்து கொண்டிருந்தான்.

 

*****************

 

மாலை தன் வேலையை முடித்துவிட்டு அரைநாள் விடுப்பெடுத்து வீட்டிற்கு வந்த மகி குளியல் அறைக்குள் புகுந்து தன்னை சுத்தப்படுத்திவிட்டு மார்பில் புந்துவாலையுடன் வெளியே வந்து அலமாரியில், எந்த ஆடை அணியலாம் என்று தேடி கொண்டிருந்தவளின் கண்ணில்பட்டது வேற எதுவும் இல்லை அன்று அவன் வாங்கி கொடுத்தா, அதே ஆடை தான்.

 

சிறு மென்சிரிப்புடன், அந்த ஆடையை அணிந்துவிட்டு அவனை பார்க்க போகிறோம் என்ற ஆர்வத்தில் எப்போதும் விட,

 

இன்று கொஞ்சம் கூடுதலாகவே தன்னை அலங்கரித்து கொண்டு கண்ணாடியில் தன்னை ரசித்தவளின் மனக்கண்ணில் அவர்களின் முதல் சந்திப்பு தோன்ற பெண்ணவளின் முகத்தில் வெட்கப்புன்னகை, புன்னகை மாறாமல் கடற்கரை நோக்கி வந்தவளோ, வரும் வழியிலிருந்த கடைக்கு சென்று அவனுக்காக உடைகள் வாங்கிவிட்டு அதனுடன் கடற்கரை அடைந்தவள், அவனை தேடி பார்வையை சுழலவிட,

 

அவளின் தேடலின் பலனானவன் கடலை ரசித்தபடி நின்றான்.

 

அவனருகில் சென்று “மிஸ்டர் ஆர்வகோளாறு” என்று அழைக்க, பாவையின் குரல் கேட்டு முகம் மின்ன திரும்பி “ஹாய் மிஸ் சவுண்ட் சரோஜா..” என்று கூறியவனின் கண்கள் தான் கொடுத்த ஆடையில் தன்னை, அவள் சந்திக்க வந்ததில் சந்தோசத்தில் ஆகாயத்தில் மிதக்க, 

 

அவளோ, அவன் அன்று அணிந்திருந்த அதே சட்டையை அணிந்ததை கண்டு பக்கென்று சிரித்து விட,

 

சில வினாடி, அவளின் சிரிப்பில் விழுந்து தன்னையே தொலைத்தவனோ “ஏய்.. இப்போ எதுக்கு சிரிக்கிற”

 

“அன்னைக்கு போட்ட சேம் ஷர்ட் பாத்ததும் நீங்க ஆர்வகோளாறுல பண்ணினதெல்லாம் ஞாபகம் வந்திடுச்சு.. அதான் சிரிப்ப கன்ட்ரோல் பண்ண முடியல” என்று கூறி மறுபடியும் கிளுக் கிளுக்கென்று சிரிக்க,

 

பதிலுக்கு சிரித்தவன் “சரி அது இருக்கட்டும்.. நான் சொன்ன போல நீயே என்ன தேடி வந்துருக்க.. என்ன விஷயம்” என்று கூறி வெற்றி புன்னகையை வீசினான்.

 

அப்போது தான், அன்று விடைபெறும் நேரம் “கண்டிப்பா நீ தான் என்ன தேடி வருவ” என்று அவன் கூறிய வார்த்தைகள் நினைவிற்கு வர, அவன் நினைத்தது நடந்துவிட்டதே என்று தன்னை நொந்து கொண்டவள் “ஓகே ஒத்துக்குறேன்.. நீங்க தான் டாஸ்க்ல வின் பண்ணிட்டீங்க போதுமா”

 

“சரி வா.. அப்படி உக்காந்து வந்த விஷயத்த பத்தி பேசலாம்” என்று கூறி அவளை அழைத்து சென்று ஓரமாக அமர்ந்து சொல்லு என்பது போல் பார்க்க,

 

அவளோ எச்சியை கூட்டி விழுங்கி கொண்டு “சாரி.. உங்ககிட்ட இப்படியொரு விஷயம் கேக்குறது தப்பு தான் பட் எனக்கு வேற வழி தெரியல.. உங்கள மட்டும் ஹெல்ப் பண்ண முடியும்” என்று கூறி அவன் முகம் பார்க்க,

 

‘என்ன சீன் ரொம்ப பெருசா இருக்கு.. ஒருவேளை என்கிட்ட ப்ரொபோஸ் பண்ண போறாளாலோ.. ச்ச இருக்காது ஹெல்ப்ன்னு தான சொன்னா..’ என்று நினைத்து “பத்து பக்கம் டயலாக் பேசாம என்ன விஷயம்ன்னு டைரக்டா சொல்லு”

 

“உங்க ப்ரெண்ட் சஷ்டிக்கு ஃபிக்ஸ் பண்ணியிருக்குற வெட்டிங் கேன்சல் பண்ணனும்” என்று கூறி எங்கே அடித்து விடுவானோ என்ற பயத்தில் கன்னத்தை பொத்திக்கொள்ள,

 

அதைக் கேட்டு “வாட்” என்று அதிர்ந்தவனுக்குள், ஆயிரம் கேள்விகள் எழ, அவளே விளக்கம் அளிக்கட்டும் என்று அவளையே பார்த்திருந்தான்.

 

சில வினாடிகள் கடந்தும் தன்னை அவன் அடிக்கவில்லையே என்று நினைத்து நிமிர்ந்து பார்க்க, அவனோ மீதி சொல் என்ற ரீதியில் தன்னை பார்த்து கொண்டிருப்பதை கண்டு “உங்க ப்ரெண்டுக்கு பாத்திருக்குற ரித்திக்கா வேற யாருமில்ல என்னோட க்ளோஸ் ப்ரெண்ட் தான்.. அவளுக்கு இந்த கல்யாணத்துல விருப்பமில்ல.. வீட்டுல ஃபோர்ஸ் பண்ணி தான் ஓகே சொல்ல வச்சிருக்காங்க.. நீங்க தான் எப்படியாவது இந்த வெட்டிங் கேன்சல் பண்ண ஹெல்ப் பண்ணனும்” என்று கூறி, அவள் தன்னிடம் கூறிய அனைத்தையும் அவனிடம் ஒபித்து விட,

 

அதை கேட்டு யோசனையில் நெற்றியை நீவியவன் “ஓகே.. அவன் டாக்டர் நேம் அண்ட் அவன் எந்த ஹாஸ்பிடல வொர்க் பண்றாங்குறத தவிர்த்து வேற எதுவுமே உன்னோட ப்ரெண்டுக்கும் உனக்கும் தெரியாது.. அப்படி தான”

 

“ஆமா.. தெரியாது”

 

“அப்போ தெரிஞ்சிக்க.. அவனுக்கு ஏற்கனவே கல்யாணமாகி டிவோர்ஸ் ஆயிடுச்சு.. இப்போ அவனுக்கு நடக்கிறது செகண்ட் மேரேஜ்” என்று கூற,

 

இப்போது அதிர்வது அவள் முறையாகி போனது 

 

“நீங்க சொல்லுறது நிஜமா.. அவருக்கு இது செகண்ட் மேரேஜா”

 

“நான் எதுக்கு உன்கிட்ட பொய் சொல்ல போறேன்”

 

“அவளுக்கு எதுவுமே தெரியாது.. அதோட அவளுக்கு தெரியாம இப்படியொரு விஷயத்த மறைச்சு.. அவ பரண்ட்ஸ் கல்யாணம் பண்ணி வச்சி வாழ்க்கைய கெடுக்க பாத்துருக்காங்க”

 

“பைன்.. அப்போ வெட்டிங் கேன்சல் பண்ணிடலாம்.. பட் அதுக்கு உன் ப்ரெண்ட் நான் சொல்லுற மாதிரி அவன்கிட்ட பேசணும்.. பேசுவாளா?”

 

“என்ன பேசணும்” 

 

அவனோ தன் திட்டத்தை கூறி முடித்ததும் அதிர்ந்தவள் “தீரா.. இது ரொம்ப தப்பு இது சரியா வராது.. இதுனால உங்க ப்ரெண்டுக்கு ஹார்டாகும்.. அது உங்களுக்கு புரியலயா”

 

“புரியுது.. இப்போ வெட்டிங் கேன்சல் பண்ணிடுவ.. அப்புறம் அவன் மறுபடியும் வேற பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணுவான்.. நான் மறுபடியும் கல்யாணத்த நிறுத்தனும்.. இதே ரிபிட் மோட்ல செஞ்சி எனக்கு தான் டைம் வேஸ்ட்”

 

“எனக்கு புரியல.. அவர் இன்னொரு வாழ்க்கைக்குள்ள போகிறது சந்தோசமான விஷயம் தான.. அதுல உங்களுக்கு என்ன பிராப்ளம்”

 

“நீ எப்படியிருந்தாலும்.. எனக்கு நீ தான் வேணும்ன்னு ஏழு வருஷமா லவ் பண்ற ஒருத்தி அவனுக்காக காத்துட்டு இருக்கா.. இந்த கிறுக்கன் அத புரிஞ்சிக்காம சில்லி காரணம் சொல்லி.. அவ லவ்வ ரீஜெக்ட் பண்றது மட்டுமில்லாம கல்யாணம் பண்ணிக்கிற அளவு போறான்..”

 

“இந்த வெட்டிங்.. நான் வேற மாதிரி ஸ்டாப் பண்றேன்.. அதுக்கு அப்புறம் உங்க ப்ரெண்ட்கிட்ட எடுத்து சொல்லி புரிய வைங்க..”

 

“புரிஞ்சும் புரியாத மாதிரி நடிக்கிறவன என்ன பண்றது.. எனக்கு இந்த ஐடியா தான் கரெக்ட்ன்னு தோணுது.. உன்னால எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா முடியாது.. அவ அவன நினைச்சி தினமும் அழுகிறா.. எனக்கு வேதனையா இருக்கு” என்று முகம் வாடியவனை கண்டு “யார் அந்த பொண்ணு.. அன்னைக்கு என் பிரென்டுன்னு சொல்லி.. ஒரு பொண்ண பத்தி சொன்னீங்களே அவங்களா”

 

“ம்ம்.. அவ தான்” என்று கூறி திரும்பியவன் கைகட்டி நின்று கடலையே வெறித்து பார்க்க,

 

அவன் வாடிய முகத்தை காண சகிக்காத பெண்ணவளோ “நான்.. நீ சொன்ன போலவே என் பிரென்ட பேச சொல்லுறேன்.. போதுமா” 

 

“ம்” என்று பதிலை மட்டுமே கூற,

 

“அதான் ஓகே சொல்லிட்டேன்ல.. அப்போ எதுக்கு இப்படி கடல சைட் அடிக்கிற”

 

அதில் மெல்ல புன்னகைத்து, அவள் புறம் திரும்பியவனிடம் தான் வாங்கி வந்ததை அவனிடம் கொடுக்க,

 

அவனோ புருவம் உயர்த்தி, அதனை கையில் வாங்கி என்னவென்று பார்வையிட்டவன் அவளை ‘இது எதுக்கு’ என்பது போல் ஏறிட,

 

“எனக்காக நீ அன்னைக்கு ட்ரெஸ் கொடுத்தா.. இன்னைக்கு உனக்கு எதாவது வாங்கி வரணும்ன்னு தோணிச்சு.. அதான் எனக்கு தெரிஞ்சத வச்சி உனக்கு ஷர்ட் வாங்கியிருக்கேன்.. பிடிச்சியிருக்கா” என்று கேட்க,

 

அவனுக்கோ, அவளையே பிடித்திருக்கிறதா என்று கேட்பது பிரம்மை இருப்பினும் அப்பிரம்மையிலே மிடந்தவன் “பிடிச்சிருக்கு” என்று கூறி பாவையின் முகத்தை ஆராய,

 

அதில் எழும் உணர்ச்சியை அடக்கிவிட்டு “ஓகே தீரா.. அப்போ நான் கிளம்புறேன்.. வீட்டுக்கு போய் ப்ரெண்ட் கிட்ட பேசுறேன்.. அடுத்த மீட்டிங்ல பாக்கலாம்.. பாய்” என்று பறந்துவிட, அவள் மறையும் வரை பார்த்திருந்தவன், அவள் தன்னை “தீரா” என்று அழைத்தால் என்பதே அப்போது தான் செவியில் எட்ட, அந்நிகழ்வை ரசித்தவாறே சிறிது நேரம் நடந்துவிட்டு வீட்டிற்கு சென்றான்.

 

********

 

இரவு உறங்குவதற்கு முன் தோழிக்கு அழைப்பு விடுக்க,

 

மறுபுறம் அழைப்பை ஏற்றவள் “சொல்லு மகி.. அவர பத்தி டீட்டெல்ஸ் கலெக்ட் பண்ணிட்டியா”

 

“அதபத்தி பேச தான் கால் பண்ணினேன்.. இன்னைக்கு சஷ்டிக் ப்ரெண்ட் பாத்து பேசினேன்.. அவர் என்ன சொன்னாருன்னா” என்று ஆரம்பித்து ஆதிரனிடம் பேசியதை அவளிடம் கூற,

 

அவளோ சாதரணமாக “ம் ஓகேடி.. அவர் சொன்ன மாதிரியே பண்ணிடலாம்..”

 

“என்னடி இவ்வளவு ஈசியா சொல்லுற”

 

“அந்த பொண்ணு செவன் இயர்ஸா லவ் பண்ணுது பாவம் தான.. என்னால முடிஞ்ச உதவி” 

 

‘என்ன இவ காதலுக்கு சப்போர்ட் பண்ண இவ்வளவு உருகுறா.. சம்திங் பிஸி’ என்று நினைத்தவள் “சரிடி.. நீ அவர்கிட்ட பேசிட்டு மீட்டிங் எப்போன்னு கன்பார்ம் பண்ணிட்டு சொல்லு”

 

“சொல்லுறேன்டி.. ரொம்ப தேங்க்ஸ்.. எனக்காக இவ்வளவு தூரம் செஞ்ச உனக்கு கோடான கோடி தேங்க்ஸ்”

 

“அடியே ஃபோன்ல செருப்பால அடிக்க முடியாதுங்கிற தைரியத்துல தான பேசுற.. மவளே இனி மூஞ்சில முழிக்காத”

 

“சரி தேங்க்ஸ் சொல்லல.. அப்புறம் அவருக்கு கல்யாணமானத மறைச்சத சொல்லி வீட்ட விட்டு மறுபடியும் ஹாஸ்டல் போயிடுவேன்”

 

“உன் இஷ்டம் போல பண்ணு.. நான் எப்போவும் துணையா இருப்பேன்.. ஹேப்பியா தூங்கு பாய்” என்று கூறி அழைப்பை துண்டித்தனர்.

 

                     தேடல் தொடரும்...

 

இப்படிக்கு 

Vsv42😍😍


   
ReplyQuote

You cannot copy content of this page