About Me
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
I’m Kavi Chandra. Over the years, I’ve been fortunate to write 26 books and 45 short stories. Writing has always been my way to connect with people, sharing emotions and experiences. I’m grateful for every reader who enjoys my work.
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
அத்தியாயம் 14
(ஹிந்தியில் பேசுகிறார்கள்..)
“என்ன சொல்றீங்க? அங்கே யாரும் இல்லையா? இரவோடு இரவா எல்லாரும் போகிற வரை.. அங்கே என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”
“ஸார்! நாங்க கண்காணிக்கிறதுக்கு யாருக்கும் தெரியக் கூடாதுனு சொன்னீங்க! அந்த விக்ரம் ஏற்பாடு செய்த ஆட்களுக்கு தெரியாம கண்காணிக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டம் என்று தெரியுங்களா! போதாக்குறைக்கு அவன் நேத்து நைட் வந்த போது.. மேலும் நாலு பேரோட வந்தான். காலையில நடந்த இன்ஷிடன்ட்டை விசாரிக்க வந்திருப்பான் என்று நாங்களுக்கும் சற்று தள்ளி இருந்துட்டோம். அப்பறம் அவன் கிளம்பிப் போனான். பின்னே எப்படினு தெரியலை. காலையில் வீட்டில் யாரும் இல்லை ஸார்! நாங்க எங்கேயோ மிஸ் செய்துட்டோம் ஸார்! டொன்ட் வெர்ரி! அவங்க மேரேஸ் முடிச்சுட்டு ஸ்ரீலங்காவிற்கு தானே போவதாக இருந்தது. அங்கே அவங்களைப் பிடிச்சுரோம் ஸார்!”
“முட்டாள்! முட்டாள்! நான் சொன்னது ஞாபகம் இல்லையா! அவங்களுக்கு மேரேஜ்.. ஹனிமூனுக்கு ஸ்ரீலங்கா என்பதெல்லாம்.. நம்மளை ஏமாற்ற பரப்பப்பட்ட கட்டுக்கதைகள்! அவங்க அங்கே ஒன்றும் போயிருக்க மாட்டாங்க! அவன் அவளைக் குணமாக்க.. அந்த ரீசர்ச்சை தொடர இருந்தான். இப்போ அவனைக் கொல்ல முயற்சி.. அப்பறம் பவித்ராவை கொல்ல நடந்த முயற்சி எல்லாம் பார்த்து.. இதுல என்னமோ இருக்கு என்று.. கண்டுப்பிடிச்சுருப்பான். அதனால் தான் போலீஸ் கிட்டக் கூடப் போகலை. எதோ புதையல் என்று நினைச்சுருப்பான் போல! முட்டாள். ஆனா இது புதைக்குழி! அந்த அபினவ்வை வச்சு ரீசர்ச் செய்யப் போகிறான். அதை நாம கண்டுப்பிடிச்சுட்டோம் என்று அவனுக்கு தெரிஞ்சுருச்சுனு நினைக்கிறேன். அதனால தான் இரண்டு நாட்களுக்கு முன்பே கிளம்பிட்டான். ஆனா ஸ்ரீலங்காவிற்கு போயிருக்க மாட்டாங்க! அது நம்மளை ஏமாற்றப் போடப்பட்ட திட்டம்! பவித்ரா எழுதி வச்ச புத்தகத்தில்.. முதலில் கடல்ல என்று தான் இருக்கு! சோ அவங்க அங்கே தான் போயிருப்பாங்க! நைட் கிளம்பியிருந்தால்.. அவங்களால் ரொம்ப தொலைவு போயிருக்க முடியாது. சீக்கிரம் ஆட்களை அனுப்பி.. அவர்களைத் தடுக்க வேண்டும். கவுர்மென்ட்டில் இருந்து சில முக்கிய பிரமுகர்கள் தான் நமக்கு சப்போர்ட்டா இருக்காங்க! எல்லாரும் இல்லை. மற்றவங்க கவனத்திற்கு போவதற்குள் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” என்றான்.
“எஸ் ஸார்! டூரிஸ்ட் என்ற பெயரில் நம்ம ஆட்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து கடலுக்குள் கிளம்பிருவாங்க!” என்றான்.
—----------------
இதே நேரத்தில் ஸ்ரீலங்காவில் மிசிரி என்று அழைக்கப்படும் கிழக்கு கடற்கரை பகுதியில் அபினவ், விக்ரம் மற்றும் பவித்ரா அடைந்திருந்தார்கள்.
அங்கு இருந்த ஹோட்டலில் விக்ரம், பவித்ராவிற்கு ஒரு அறையும் அபினவ்வுக்கு ஒரு அறையும் என்று பதிவு செய்யப்பட்டது. விக்ரமும் பவித்ராவும் ஆளுக்கு ஒரு திசையை பார்த்தார்கள்.
விக்ரம் எங்கோ பார்த்தவாறு “முதல்ல வேற மாதிரி பிளென் போட்டிருந்ததால்.. இப்படி புக் செய்யச் சொன்னேன். நானும் அபினவ்வும் ஒரு அறையில் தங்கிக்கிறோம். நீ ஒரு அறையில் தங்கிக்கோ! பட் பீ கேர் புல்! எங்க இரண்டு பேரில் யாராவது ஒருத்தர் ஃபோன் போட்டு பேசிக் கதவைத் திறக்கச் சொன்னால் மட்டுமே கதவைத் திறக்கணும்.” என்று வேண்டுக்கோள் வைத்தான்.
பின் மூவரும் தங்களது அறையை நோக்கி நடந்தனர். சிறிது நேரம் அமைதியாக வந்த அபினவ் “உங்க இரண்டு பேருக்கும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் தான் என்பதில் இருந்து மாற்றம் இல்லை தானே! அப்பறம் ஏன் இப்படி தடுமாறுகிறீங்க! ப்ரீயா பர்சனல் மேட்டரை பற்றிப் பேசிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன். அஃப்கோர்ஸ்.. இப்போ நாம தொடங்கியிருக்கிற மேட்டர் தான் முக்கியம். அதுக்குன்னு.. உங்க பர்சனல் ஸ்பெசை விட்டுத் தரணும் என்றில்லையே!” என்றான்.
உடனே விக்ரம் பவித்ராவின் கையில் இருந்த சாவியை வாங்கி.. அபினவ்வின் கையில் திணித்து விட்டு.. “வா பவி! அப்போ இப்போவே பேசி முடித்திரலாம்.” என்றுவிட்டு.. அவளது கரம் பற்றி அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் செல்லவும், அவர்களது பொருட்களும் அந்த அறையில் வைக்கப்பட்டன.
அறையின் கதவுச் சாத்தப்பட்டதும்.. இனம் புரியாத உணர்வு ஆட்கொண்டாலும்.. அபினவ் கூறுவது போல்.. இது பேசி முடித்து விட வேண்டிய விசயம் என்று தோன்றியது.
“விக்ரம்..” என்று அவனைப் பார்த்து திரும்புகையில் அவனும் “பவி!” என்று ஆரம்பித்திருந்தான்.
உடனே விக்ரம் “சொல்லு பவி!” என்றான்.
“இல்லை நீங்க முதல்ல..” என்று ஆரம்பித்தவள், சிறு மூச்சை இழுத்துவிட்ட பின் “ஒகே விக்ரம்! நானே சொல்றேன். அதுக்கு முன்னாடி.. ஒன்றை சொல்லிடரேன். என் வாழ்க்கையில் கல்யாண லைஃப் என்று வந்தால் அது நீங்க மட்டும் தான்.. அதுல எந்த மாற்றமும் இல்லை. முதலேயேயும் சரி இப்பவும் சரி.. எனக்கு உங்க கிட்ட இருந்து எனக்கு கிடைச்ச பர்ஸ்ட் இம்பரெஷன்.. நீங்க என்னோட கனவை நிறைவேற்ற போறீங்க என்கிறது தான்! அதனால முதல்ல நன்றி தோணுச்சு.. பிறகு மரியாதை தோணுச்சு. எஸ் கண்டிப்பா உங்களுக்கு என் மனசுல ஸ்பெஷல் இடம் இருக்கு! எனக்கு கஷ்டம் வந்த போதெல்லாம் உங்களைத் தேடியதும் நிஜம்! ஆனா..” என்று நிறுத்தியவள், அவனது முகத்தை பார்க்க இயலாது.. நெற்றியில் கையை வைத்து முகத்தை கொண்டு தலை குனிந்தாள்.
பின் “ஆனா.. ஸாரி விக்ரம்! ரியலி ஸாரி! எனக்கு இன்னும்.. அந்த லவ் வரலை. நீங்க என் மேலே வச்சுருக்கீங்க பாருங்க! அந்த லவ் வரலை. ரியலி ஸாரி!” என்றாள்.
விக்ரம் சட்டென்று தனது கையை நீட்டி.. தலையை தாங்கியிருந்த அவளது கரத்தின் மணிக்கட்டை பற்றியவன், விடாது கரத்தை இழுத்து அவளை அணைத்துக் கொண்டான்.
நிலைகுலைந்த பவித்ராவோ அவனது மார்பில் வந்து விழுந்தாள்.
விக்ரம் அவளை அணைத்தபடி “நான் சொல்ல வேண்டியதை இந்த அணைப்பு சொல்லுதா பவி! உன்னோட மதிப்பு நன்றிக்காக என் கூட இணைந்திருக்க என்பது எனக்கு தேவையில்லாத விசயம் என்று உணர்ந்துதா பவி! நன்றி மரியாதையும் தாண்டி.. ஸ்பெஷல் என்ற வார்த்தையை கேட்டு எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை இந்த அணைப்பு உணர்த்துதா பவி! இது எல்லாத்தையும் விட.. நீ எப்படியிருந்தாலும்.. என்னால் உன்னை விட முடியாது என்பதை இந்த அணைப்பு உணர்த்துதா பவி!” என்று கூற கூற அவனது அணைப்பு இறுகிக் கொண்டே சென்றது.
தனது மார்பு சட்டையில் ஈரத்தை உணர்ந்ததும்.. விக்ரமின் அணைப்பு மேலும் இறுகியது.
சிறிது நேரம் அப்படியே இருவரும் இருந்தனர். அவர்களும் அந்த நிலையை விரும்பினர். சிறிது நேரத்திற்கு பிறகு.. பவித்ரா மெல்ல நிமிரவும், விக்ரம் தனது அணைப்பைத் தளர்த்தினான். நிமிர்ந்த பவித்ரா தனது கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
அவளது கலைந்த முன்னுச்சி முடியை ஒதுக்கி விட்டு விக்ரம் அவளது தோள்கள் இரண்டையும் இறுகப் பற்றி.. “பவித்ரா! இந்த மாதிரி குன்றலை எல்லாம் விடு.. எனக்கு முழு நம்பிக்கை இருக்கு! நீ என்னை விடவும் வெறித்தனமா என்னைக் காதலிக்கப் போகிறே! நாம் இப்போ பெரிய விசயத்தில் இறங்கியிருக்கோம். கொஞ்சம் நம்மளோட வேகம் குறைந்தாலோ, தடுமாறினாலோ.. நம்மை துரத்திட்டு இருக்கிற கும்பல் நம்மை அடக்கி அமுத்திருவாங்க! நம்மளோட சுவடே இல்லாம செய்திருவாங்க! அழிந்து போன பெரிய கண்டத்தோட சுவடுகளை தேடிப் போகப் போகிறோம். சோ நம்மளோட உயிரும், மனமும், திடமும் ரொம்ப முக்கியம். அதுல கவனம் செலுத்து! ஒகே!” என்றுவிட்டு சிறு அழுத்தத்துடன் கரங்களை அகற்றினான்.
விக்ரம் கூறியதைக் கேட்டு.. பவித்ராவின் நெஞ்சில் நிம்மதி மட்டுமில்லாமல் திடமும் பரவுவதை உணர்ந்தாள்.
சிறு புன்னகையும் அவளது முகத்தில் தோன்றியது.
“ஒகே! நான் அந்த ரூமுக்கு போயிட்டு அபினவ்வை அனுப்பறேன். அவன் கிட்ட என்னை மேம் என்று கூப்பிட வேண்டான்னு சொல்லுங்க!” என்று தனது உடைமையைத் தூக்கப் போனவளைத் தடுத்த விக்ரம் “ஏன் அங்கே இங்கேயே படுத்துக்கோயேன்! டொன்ட் ஜெர்ரி! நான் கவுச்சில் படுத்துக்கிறேன்.” என்றான்.
அப்பொழுதும் பவித்ரா சிறு தயக்கத்துடன் நிற்கவும், “ஒருத்தரை ஒருத்தர் பார்த்ததுட்டு இருந்தா.. எதாவது மேஜீக் நடக்குதான்னு பார்க்கலாம்.” என்று சிரிக்கவும், பவித்ரா அதற்கு மேல் மறுக்கவில்லை. அங்கேயே தங்கிக் கொண்டாள்.
—------------------
அடுத்த நாள் காலையில் மூவரும் மிசிரி கடற்கரையில் நின்றிருந்தனர். பவித்ரா கூறியதைக் கேட்கும் முன் அந்த கடற்கரை எப்படித் தெரிந்திருக்குமோ என்னவோ.. தற்பொழுது.. இந்த பகுதியுடன் இணைந்திருந்த நிலப்பரப்பு அழித்துப் போனதே நினைவிற்கு வந்தது.
அங்கு தெரிந்த சிறு பாறைத் தீவை சுட்டிக்காட்டிய அபினவ் “அது பேரேட் ராக் தானே!” என்றான்.
“எஸ்..”
விக்ரம் “இந்தியாவுல விவேகானந்தர் பாறைக்கு இருப்பது மாதிரி இதற்கும்.. நிலப்பரப்பு இருந்ததிற்கான தொடர்பு உண்டா!” என்று கேட்டான்.
அதற்கு பவித்ரா “கண்டிப்பாக உண்டு. ஆனா இதோட கதை வேறாக இருக்கலாம்.” என்றாள்.
அபினவ் “என்ன சொல்ல வறீங்க பவித்ரா மே…! சொல்லுங்க பவித்ரா!” என்றான்.
அதற்கு விக்ரமை பார்த்து முறுவலித்துவிட்டு “அதற்கு முன்னாடி இன்னொரு விசயம் சொல்கிறேன். அக்டோபர் 2023ல் ஜப்பானில் கடலுக்கு அடியில் இருக்கிற எரிமலை வெடிச்சதுல செயின் மாதிரி இருக்கிற ஒகசவாரா தீவுகளுக்கு அருகே ஒரு புதிய தீவு உருவாகியிருக்கு! இது அந்த மாதிரி பல நூறு ஆண்டுகளுக்கு முன் உருவானதாக இருக்கலாம். இது மட்டுமில்லை. தீவுகள் என்பதே பொதுவாக.. ஒன்று இணைந்திருந்த நிலப்பரப்புடன் சுனாமி நீரலைகளால் தனியாக பிரிக்கப்பட்டதாக இருக்கும். அல்லது கடலுக்கு அடியில் இருக்கிற எரிமலை வெடித்து புவி தட்டில் அதிர்வு ஏற்பட்டு மேலே வந்த நிலப்பரப்புகளாக இருக்கலாம். ஜப்பானில் இருக்கிற தீவுகள் மட்டுமில்ல இலட்சத்தீவுகளும் அந்தமான் தீவுகளும் அப்படித்தான். ஸ்ரீலங்காவையும் இந்தியாவையும் இணைந்திருந்த நிலப்பரப்பும் சுனாமி அலைகளால் தான் காணாமல் போயிருக்கும் என்பது என்னோட கணிப்பு! இப்போ நான் சொன்னது எல்லாம்.. சையின்ஸ் மூலம் அதிகாரபூர்வமாக எல்லாராலும் ஒத்துக் கொள்ளப்பட்டவை. ஆனா குமரி கண்டம் என்று ஒன்று இருக்கிறதை மட்டும் ஏன் ஏத்துக்க மாட்டேன்கிறாங்க! அது வெறும் கற்பனை.. இதிகாசத்துல கற்பனையா எழுதியதுனு சொல்றாங்க!” என்றவளின் குரலில் வருத்தம் இருந்தது.
அதற்கு விக்ரம் “மனிதர்கள் தோன்றியதற்கு முன் வாழ்ந்த டைனோசர் இருப்பதையே ஒத்துக்கிட்டாங்க! பல்வேறு இதிகாங்களால் இராமர், கிருஷ்ணர், அனுமான் போன்ற கடவுள்கள் இங்கே வாழ்ந்திருக்காங்க! என்றும் முருகர் கோவிச்சுட்டு போய் அமர்ந்த மலை பழனி மலை என்பதை ஏற்றுக் கொண்ட மக்கள் இதற்கு மட்டும் ஏன் ஆதாரங்களை கேட்கிறாங்க!” என்று சிரித்தான்.
அபினவ் “பவித்ரா சொன்ன மாதிரி.. மெஜெரிட்டி ஆனா ஆட்கள் சொல்வது தான் வேதா வாக்கு கான்செஃப்டில் இந்த விசயங்கள் அடக்கிப் போயிருது ஸார்! உலகத்தை பொருத்தவரை.. அமெரிக்காகாரன் சொல்வது தான் சரி.. முதல்ல இரஷ்யா அந்த இடத்துல இருந்தது.. இப்போ அமெரிக்கா இருக்கு! அதுக்கு காரணம் பரப்பளவில் பெரிய பகுதி என்பது தான்! இந்தியாவை பொருத்தவரை வட மாநிலங்கள்!” என்றான்.
பவித்ரா “எஸ்! இதைத் தான் இந்த உலகத்திற்கு உணர்த்த விரும்பினேன். உலகத்துல முதலில் தோன்றிய இனம் தமிழர் இனம் தான்! அதை நிரூபிக்க ஆதாரங்களைத் தேடித் தான் நாம் வந்திருக்கிறோம்.” என்றாள்.
விக்ரம் “ஆல் ரைட்! முதல்ல எங்கிருந்து ஆரம்பிக்கலாம்?” என்று கேட்டான்.
அதற்கு பவித்ரா எதிரே இருந்த காட்டை காட்டினாள்.
அபினவிற்கு புரிந்து விட.. தோளில் மாட்டியிருந்த பையில் இருந்து மூன்று கையுறைகள், மாஸ்க் மற்றும் மூன்று பாலீத்தின் பைகளை, மூன்று வேறு இடுப்பில் பையுடன் கட்ட கூடிய பெல்ட்டை எடுத்தான்.
அதில் ஒன்றை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த விக்ரமிடம் கொடுத்தவன் “இந்த க்ளோவ்ஸையும் மாஸ்க் கையும் போட்டுக்கோங்க ஸார்! இந்த பிளாஸ்டிக் பேக்கும் வாங்கிக்கோங்க! அப்பறம் சின்ன கத்தி, மண் தோண்டுற கருவி, சிசர், சின்ன டார்ச் லைட், தோல் அலர்ஜீக்கு போடர ஆயின்மென்ட், சின்ன வாட்டர் பாட்டில், சின்ன நோட் புக், பென், பூதக்கண்ணாடி, இதெல்லாம் வச்சுருக்கிற சின்ன க்ராஸ் பேக்கும் ஒண்ணு தரேன். போட்டுக்கோங்க!” என்றான்.
பவித்ரா “நம்ம இந்தியாவில் கிழக்கு பக்கம் இருக்கிற கடற்கரை.. பகுதிக்கு அடியில் கடல் உப்பு சேர்ந்து சேர்ந்து அரிச்சுருக்கு! அங்கே விட.. இங்கே அந்த அரிப்பு குறைவாக தான் இருக்கும்.. பார்க்கலாம். எதாவது கிடைக்குமான்னு..” என்றாள்.
அதற்கு சிரித்த விக்ரம் “ஸாரி டு சே திஸ் பவி! டிஸ்கேரேஜ் செய்யலை. நீங்க பல்லாயிரம் வருஷதுக்கு முன்னாடி இருப்பதாக கருதப்படும் குமரி கண்டதோட அடையாளங்களைத் தேடப் போறீங்க! அது அவ்வளவு சீக்கிரம் கிடைச்சுரும் என்று நினைச்சுட்டியா! இல்லை.. எப்படிக் கண்டுப்பிடிப்பே?” என்று கேட்டான்.
பவித்ரா “கஷ்டம் தான்! ரொம்ப கஷ்டம் தான்! ஆனா ட்ரை செய்து பார்க்காம விடக் கூடாது இல்லையா!” என்றாள்.
விக்ரம் “தட்ஸ் த ஸ்பிரிட்!” என்று முறுவலித்தான்.
பின் இருவரும் திரும்பிப் பார்க்கையில் அபினவ் தனது தேடுதலைத் தொடங்கியிருப்பதைக் கண்டனர். புன்னகையுடன் அவர்களும் இணைந்துக் கொண்டார்கள்.
பவித்ரா கூறியது போல்.. கன்னியாகுமரியில் சிம்மாசனம் போன்ற பாறை கிடைத்ததை போன்று கூட எதுவும் அவர்களுக்கு அங்கே கிடைக்கவில்லை. எல்லாம் நவீன உலகத்தின் பாலீதின் குப்பைகளாக கிடைத்தது.
சிறு கற்கள் சங்குகளை கூட பவித்ரா விடவில்லை. அதன் தன்மையை ஆராய்ந்தவாறு சென்றாள்.
அபினவிற்கும் சங்கு தான் கிடைத்தது. வடிவில் வித்தியாசமாக இருக்கவும், அதை எடுத்துப் பார்த்தவனின் கண்கள் திகைப்பில் விரிந்தன.
அது சாதாரண சங்கு தான்! ஆனால் மிகவும் அரிய வகையை சார்ந்தது. அவற்றை எல்லாம் விட.. அவனைத் திகைப்படைய செய்தது.. அதில் வரையப்பட்ட சிறு ஓவியம்! நடுவில் நீளமாக ஒரு கோடு.. அதன் மேல்.. நெளிநெளியாக கதிர்கள் போல் இருந்தன. அதன் அருகே வரையப்பட்டவைகள் சிறியதாக தான் இருந்தது. ஆனால் அழிந்திருந்தது. அபினவ் கண்கள் பளபளக்க அதைப் பத்திரமாக பையில் வைத்தான்.
—-------------------
சற்று தொலைவில் ஆராய்ந்தவாறு சென்று கொண்டிருந்த பவித்ராவின் கண்ணில் பாறையின் இடுக்கில் பாசிப் படர்ந்திருப்பதை பார்த்தாள். பின் தனது பார்வையை அகற்ற முயன்றவளின் பார்வை நிலைக்கொத்தி நின்றன. ஏனெனில் வால் போல் எதோ ஆடியது. பாசி நிறத்தில் உள்ள சிறு மீன் மாட்டிக் கொண்டு விட்டது என்று புரிய.. மெல்ல குனிந்து அவற்றை கையில் எடுத்துப் பார்த்தவள், அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள்.
ஏனெனில் அவளது உள்ளங்கை அளவில் துடித்துக் கொண்டிருந்த மீனின் முகம் மனிதனை போல் இருந்தது. ஆனால் உடல் முழுவதும் செதில்கள் இருந்தன. இடுப்பிற்கு கீழோ மீனை போல் வால் இருந்தது. முழுக்க முழுக்க பாசிப்படர்ந்த பச்சை வண்ணத்தில் அவளது உள்ளங்கையில் துடித்துக் கொண்டிருந்தது.
—---------
பவித்ராவும் அபினவ்வும் கடற்கரையில் ஆராய்ந்துக் கொண்டிருக்க.. ஏசி அறையில் அமர்ந்துக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பற்றிப் பேசிப் பழகிமவனுக்கோ.. இப்படித் தேடுவது போரடித்தது. எனவே காட்டிற்குள் சென்றான்.
அடர்ந்த காட்டுக்குள் சென்றுக் கொண்டிருந்தவனுக்கு மிகுந்த குளிர் எடுத்தது. எனவே மார்பிற்கு குறுக்கே கரங்களைக் கட்டியவாறு சென்றுக் கொண்டிருந்தான். ஆனால் ஒரு இடத்திற்கு சென்ற பொழுது.. ஏனோ உஷ்ணமாக இருந்தது. கட்டிக் கொண்டிருந்த கரங்களை நீக்கிக் கொண்டான். அப்பொழுதும் வெம்மையாக இருக்கவும், அணிந்திருந்த லெதர் ஜாக்கெட்டையும் கழற்றி விட்டான். கவனமாக நடந்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரிடத்தில் கால் இடறி விடவும் தடுமாறி விழுந்தான். தரையில் விழுவோம் என்று நினைத்தவனுக்கு.. உடல் தரையில் பட்டு நிற்காமல் சறுக்கி கொண்டே நீண்ட இருளுக்குள் செல்லவும் அதிர்ந்தான்.
ஆம் விக்ரம் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பூமி பிளவுக்குள் சறுக்கி விழுந்துவிட்டான்.
அத்தியாயம் 15
ஏதோ ஆபத்தான பள்ளத்தாக்கில் சென்றுக் கொண்டிருக்கிறோம்.. என்று விக்ரமின் மூளை உணர்ந்த மறுகணம் தானே தற்காக்கும் உணர்வு தோன்றியது. அதனால் சட்டென்று கையை நீட்டி.. தட்டுப்பட்டதை இறுக்கப் பற்றிக் கொள்ள முயன்றான். அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அவன் விழுந்த வேகத்தில் எதையும் பிடிக்க முடியவில்லை. எதிலோ இடித்து அவனது வேகம் தடைப்படவும், சட்டென்று கையை நீட்டி.. அடுத்து கையில் தட்டுப்பட்டதைக் கெட்டியாக பற்றிக் கொண்டான். கால்களால் எதிரே இருந்த மண் தடுப்பில் காலை ஊன்றி.. மேலும் கீழே செல்வதைத் தடுத்தான். அதன் பின்பே தான் எங்கே இருக்கிறேன்.. என்று மெல்ல சுற்றிலும் பார்த்தான்.
பார்த்த வகையில் அதிர்ந்து தான் போனான்.
ஆம்! அவன் பூமி பிளவில் மாட்டிக் கொண்டிருக்கிறான்.
சுமார் ஒன்றரை அடி இடைவெளி மட்டுமே.. கொண்ட அந்த பிளவில் ஆங்காங்கே மரங்களின் வேர் மட்டுமில்லாது.. மண்சரிவு, பலத்த மழை போன்ற காரணங்களால் மண்ணுக்கு அடியில் பல ஆண்டுகளுக்கு முன்.. புதைந்த மரங்களின் கிளைப் பகுதிகள் நீட்டிக் கொண்டிருந்தன. மேற்பரப்பிற்கும்.. அவன் இருக்கும் பகுதிக்கும்.. சுமார் இருபது அடிக்கு மேல் இருக்கும். நல்லவேளையாக இன்னும் ஆழமாக போவதற்குள்.. சுதாரித்து விட்டான். ஆங்காங்கே நீட்டிக் கொண்டிருந்த வேர் ஒன்றில் இடித்ததால் தான்.. அவன் விழுந்த வேகம் குறைந்திருக்கிறது. எனவே இன்னொரு வேரை இறுக்கப்பற்றித் தொங்கிக் கொண்டிருக்கிறான். தனது முழு எடையும் வேரில் ஏற்றாமல்.. காலை எதிரே இருந்த மண் தடுப்பில் ஊன்றியிருந்தான்.
தான் எங்கே இருக்கிறான் என்று புலப்படவும், உதவிக் கேட்டு கத்தினான். சில நிமிடங்கள் கத்திப் பார்த்தவன், தனது பான்ட் பாக்கெட்டில் இருந்த செல்பேசியை எடுக்க முயன்றான்.
ஒரு கையால் பற்றிக் கொண்டு மறுகையை பாக்கெட்டிற்குள் இருந்ததை எடுக்க முயலும் போது.. விழுந்து விடாமல் இருக்க காலுக்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டியது இருந்தது. அதனால் அவன் கால் ஊன்றி இருந்த இடத்தில் சிறு சறுக்கல் ஏற்படவும், மீண்டும் இரு கரங்களைக் கொண்டு கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
பின் மீண்டும் செல்பேசியை எடுக்க முயன்றான். இம்முறை எடுத்துவிட்டவனுக்கு ஒரு கையால் பாஸ்வேர்ட் அழுத்தி.. அன்லாக் செய்ய மிகவும் சிரமமாக இருந்தது. ஆனால் அதிகம் அவசரப்படாமல் மெதுவாகவே செய்தான். கடைசியில் அபினவ் கூடத் தான் பேசினான். எனவே ஸ்பீட் டையலில் முதலில் இருந்த அவனது நம்பரை விரைவாக டயல் செய்து.. ஸ்பீக்கரில் போட்டு டீசர்ட் பாக்கெட்டில் போட்டு விட்டு.. வேரை மீண்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
அபினவ் “விக்ரம் ஸார் எங்கே இருக்கீங்க! சீக்கிரம் வாங்க! யு வோன்ட் பிலீவ் இட்..” என்கையில் விக்ரம் நடுவே கத்தினான்.
“அபி! நான் இங்கே எர்த் க்ரேக்கில் மாட்டிட்டு இருக்கேன்.” என்றான்.
“எ.. எ.. எ.. என்ன சொல்றீங்க!”
“கம் க்விக்..” என்று விக்ரம் கூறுகையில் அவனது பிடி நழுவது போன்று இருந்தது.
“ஸா.. ஸார்.. ஹாங் ஆன் இதோ வந்தறேன்.” என்று காதில் செல்பேசியை வைத்தவாறு காட்டை நோக்கி ஓடினான்.
அதற்குள் எதிரே தென்பட்டவர்களிடம் புமி பிளவு எங்கு இருக்கிறது என்ற விபரத்தைக் கேட்டு அவர்களையும் அழைத்துக் கொண்டு ஓடி வந்தான். அவர்களிடம் அவசரக் கால உதவிக்கு இருக்கும் மீட்பு குழுவின் எண்ணை வாங்கி.. அழைத்து விபரத்தைக் கூறினான். பின்னர் பவித்ராக்கு அழைத்துக் கூறவும், அவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். பின் தன்னைச் சுதாரித்துக் கொண்டு தனக்கு கிடைத்த அரிய வகை மீனை.. கையோடு கொண்டு வந்திருந்த தண்ணீர் நிறைந்த கண்ணாடி பாட்டிலில் போட்டு அதை தனது தோளில் மாட்டியிருந்த பையில் பத்திரமாக வைத்தவாறு காட்டை நோக்கி ஓடி வந்தாள்.
வியர்வையில் நனைத்திருந்த விக்ரமின் கரம்.. நழுவிக் கொண்டிருந்தது. தானே ஏறுவதற்கு எதாவது முயற்சி செய்யலாம்.. என்று நினைக்கவும், அவனால் முடியவில்லை. ஏனெனில் கீழே பிளவின் இடைவெளி இன்னும் அதிகமானது போன்று இருந்தது. இங்கு மண்ணில் புதைந்த வேர்கள் மற்றும் மரத்துண்டுகளின் உதவியால் அவனுக்கு பிடித்துக் கொண்டு நிற்பதற்கு.. முடிகிறது. ஆனால் கீழே அதுப் போன்று எதுவும் இல்லை. அதனால் எதுவும் முயற்சி செய்யத் தயங்கியவனாய்.. தனது முழுபலத்தை சக்தியையும் சேமித்து வைத்துக் கொண்டான். ஒருவேளை.. கை நழுவி விழுந்தாலும்.. எதாவது வழி இருந்து மேலே வர அவனுக்கு சக்தி தேவை என்று நினைத்தான். எந்த உதவியும் வரும் வரை.. சிறிது அசைவும் இன்றி இருப்பது அவனுக்கு புத்திசாலித்தனமாக பட்டது.
பாக்கெட்டில் இருந்த செல்பேசியின் ஸ்பீக்கர் ஆன் செய்து இருந்ததால்.. அபினவ் விக்ரமிற்கு உதவ ஆட்களை அழைத்து வருவது நன்கு கேட்டது. எனவே தைரியமும் நம்பிக்கையுடனும் இருந்தான். அவனது நம்பிக்கை வீண் போகவில்லை. விரைவிலேயே அபினவ்வின் குரல் மேலே கேட்டது.
“ஸார்! ஆர் யு ஆல் ரைட்!”
“எஸ்! ஐயம் ஆல்ரைட்!”
“ஸார்! ஜஸ்ட் ஹாங் ஆன்! மீட்பு குழு இப்போ வந்திருவாங்க! எனக்கு எட்டிப் பார்த்தா.. நீங்க இருக்கிறது தெரியலை. ஆனால் குரல் கேட்குது. தேங்க் காட்! நீங்க ரொம்ப ஆழத்தில் இல்லை.” என்று கத்தி நம்பிக்கை ஊட்டினான்.
“எஸ்! இப்போ வரைக்கும் நான் ஒகே!” என்று பதிலுக்கு கத்தினான்.
அதற்குள் “மூவ்..” என்ற குரல்கள் கேட்கவும், மீட்பு குழுவினர் வந்து விட்டதை விக்ரம் உணர்ந்தான்.
சிறிது நேரத்திலேயே மைக்கில் அவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது கேட்டது.
“ஸார்! பயம் வேண்டாம். இப்போ எங்களோட மீட்பு குழுவினரில் ஒருவர்.. தானும் கட்டிக் கொண்டு.. உங்களை வெளியே கொண்டு வர.. பெல்ட் கொண்ட இன்னொரு கயிறோடு வருவார். அந்த பெல்ட்டை உங்க இடுப்பில் கட்டியதும்.. உங்களை மெல்ல இழுத்துவிடுவோம். பயப்படாதீங்க!”
“ஒகே!” என்று விக்ரம் பதிலுக்கு கத்தினான்.
அவனது பாக்கெட்டில் இருந்த செல்பேசியின் வழியாக அவனது குரல் தெளிவாக கேட்டதில்.. அபினவ்வும் பவித்ராவும் நிம்மதியும் அதே சமயத்தில் இன்னும் விக்ரம் மேலே வராததால் ஏற்பட்ட பயமுமாக நின்றிருந்தார்கள்.
கூறியப்படி மீட்பு குழுவினரில் ஒருவர்.. கயிற்றுடன் பிளவில் இறக்கப்பட்டார்.
அவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த விக்ரம்.. தான் இத்தனை நேரம் மாட்டிக் கொண்டிருந்த பகுதியை ஒருதரம் பார்த்துக் கொண்டான். அவரது இடுப்பில் கட்டியிருந்த டார்ச்சின் மூலம் கும்மிருட்டாக இருந்த அந்த பகுதியில் சிறு வெளிச்சம் நிரம்பியது. இயற்கையாக அவனிடம் இருக்கும் ஆர்வமும் துடிப்பான மனம்.. அவனைக் கீழே பார்க்க துண்டியது.
அப்பொழுது தான் அவனது கண்ணில் அது பட்டது.
அதற்குள் அவனை நெருங்கிய மீட்பு குழுவை சேர்ந்தவர், அவனது இடுப்பில் கட்டிவிட்டார்.
பின்னர் அவர் ஆங்கிலத்தில் “ஸார்! மெல்ல அந்த வேரில் இருந்து கையை எடுத்துட்டு என்னைப் பிடிச்சுட்டு வாங்க! உங்க ரோப்பை இரண்டு பேரும் என் ரோப்பை இரண்டு பேரும் தான் பிடிச்சுருக்காங்க! பயமில்லாம மேலே வாங்க!” என்றார்.
அவரிடம் விக்ரம் “தேங்க்யு ஸார்! ஒரு சின்ன ரெக்குவஸ்ட்! இன்னும் என்னைக் கொஞ்சம் கீழே இறக்க முடியுமா!” என்றான்.
அதைக் கேட்ட அவர் சிறுக் கோபத்துடன் “என்ன எதாவது பேக் இல்லைன்னா ஃபோனை கீழே போட்டுட்டிங்களா! அது எவ்வளவு முக்கியம் என்றாலும்.. உங்க உயிரை விட முக்கியம் இல்லை. அதெல்லாம் எடுப்பது ரொம்ப கஷ்டம்! ரொம்ப டேன்ஞ்சர்ஸ் கூட.. இது இன்னும் போக போக ஆழம் அதிகம். உங்க அதிர்ஷ்டம் நீங்க நடுவில் மாட்டிக்கிட்டிங்க! இல்லைன்னா.. எங்களால் உங்களை மீட்டிருக்க முடியாது. அதனால் அதை விட்டுட்டு வாங்க போகலாம். இங்கே இருக்கிற எர்த் க்ரேக்கை பார்த்து.. போர்ட் வச்சு.. கம்பி வேறக் கட்டியிருக்கிறோம். நீங்க அதையெல்லாம் பார்த்துட்டு வந்து விழுந்திருக்கீங்க!” என்றார்.
அதற்கு விக்ரம் “ஸார் ப்ளீஸ்! நான் ஃபோர்ட்டை கூடப் பார்க்காம வந்ததிற்கு காரணமே.. நாங்க தேடி வந்தது கிடைக்குமா என்றுப் பார்ப்பதற்காக தான்! ப்ளீஸ் ஸார் என்னைக் கொஞ்சம் கீழே இறக்குங்க! ரொம்பவும் ஆழம் இல்லை. இங்கிருந்து டென் பீட்ஸ் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.” என்றான்.
விக்ரமின் பாக்கெட்டில் ஆன் செய்யப்பட்டு வைத்திருந்த செல்பேசியின் வழியாக இதைக் கேட்டுக் கொண்டிருந்த அபினவ்வும் பவித்ராவும் திகைத்தார்கள்.
அபினவ் “ஸார் என்ன சொல்றீங்க!” என்று கேட்கவும், விக்ரம் “அபி, பவி ஆர் யு இயரிங்! இங்கே நல்ல ஷேப்பா ஒரு கல் பலகை நீட்டிட்டு இருக்கு! அதுல எதோ லெட்டர்ஸ் மாதிரி இருக்கு! மேபி.. அது நாம் தேடி வந்ததிற்கு சம்பந்தப்பட்டதாக கூட இருக்கலாம். ஆனால் நாம் அதைக் கண்டிப்பாக மிஸ் பண்ணக் கூடாது. மேலே இருக்கிறவங்க கிட்டச் சொல்லி இன்னும் என்னைக் கொஞ்சம் கீழே இறக்கச் சொல்லு! அதை எடுத்துட்டு வந்தறேன்.” என்றான்.
பவித்ரா திகைப்புடன் நின்றுவிட அபினவ்.. அங்கு நின்றுக் கொண்டிருந்த மற்ற மீட்பு குழுவினரிடம் வேகமாக சென்றான்.
அவர்களிடம் ஆங்கிலத்தில் “ஸார்! நாங்க ஆராய்ச்சி குழுவை சேர்ந்தவங்க.. இந்தியாவில் இருந்து வந்திருக்கிறோம். இதோ எங்களோட ஐடி கார்ட்! நாங்க தேடி வந்ததிற்கு சம்பந்தப்பட்டது மண்ணில் புதைந்திருக்கு போல! ப்ளீஸ் எங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க! அந்த ரோப்பை கொஞ்சம் கீழே இறக்கினால் அதை எடுத்துவிடலாமாம். ப்ளீஸ் ஸார்!” என்றான்.
அதற்கு அவர் “முட்டாள்களா நீங்க! அவர் எந்த மாதிரியான ஆபத்தான இடத்தில் மாட்டியிருக்கிறார் என்றுத் தெரியுமா!” என்று திட்டினார்.
அபினவ் கையில் வைத்திருந்த செல்பேசியின் வழியாக இதைக் கேட்டுக் கொண்டிருந்த விக்ரம் “ஸார்! உங்க ஆள் கொடுத்த இடுப்பு பெல்ட் போட்டுட்டு தான் இருக்கேன். கொஞ்சம் கீழே இறக்கினால் போதும்.. நான் சேஃப் தான்!” என்று கத்தினான்.
அதற்கு அவர் “அந்த சின்ன லெதர் பெல்ட் உங்களோட மொத்த எடையை எத்தனை நேரம் தாங்கும் என்று நினைக்கறீங்க! டேமிட் சீக்கிரம் பெல்ட் அறுந்திரும். இப்பவே ஆல்ரெடி ரொம்ப நேரம் ஆச்சு! இன்னும் பேசி நேரத்தைக் கடத்தி.. உங்களை இழந்திராதீங்க! கமான் அவங்க இரண்டு பேரையும் மேலே இழுங்க..” என்று உத்தரவிட்டார்.
உடனே அவர்களைப் பற்றியிருந்தவர்கள் இழுக்க ஆரம்பித்தார்கள்.
அபினவ் “ப்ளீஸ் ஸ்டாப்! இனி நாங்க போய் கவுர்மென்ட் கிட்ட பர்மிஷன் வாங்கிட்டு மறுபடியும் இங்கே வருவது.. கஷ்டம்! ப்ளீஸ் ஹெல்ப் அஸ்!” என்று மன்றாடினான்.
அப்பொழுது பவித்ரா “அபினவ்! வேண்டாம் விட்டுரு! அவங்க சொல்றதைப் பார்த்தா பயமா இருக்கு! நமக்கு விக்ரம் தான் முக்கியம்.” என்றாள்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த விக்ரம் “பவி! ஐயம் ஆல்ரைட்!” என்று கத்தினான்.
பதிலுக்கு பவித்ரா “விக்ரம்! ப்ளீஸ் மேலே வாங்க! அதை அப்பறம் பார்த்துக்கலாம்.” என்று கூறுகையில் அந்த பிளவில் சிறு மண் சரிவு ஏற்பட்டது. விக்ரமுடன் வந்துக் கொண்டிருந்தவர் “க்விக்! க்விக்!” என்று கத்தவும், அவர்களை வேகமாக மேலே இழுத்தார்கள்.
அப்பொழுது விக்ரம் சட்டென்று தனது இடுப்பின் பெல்ட்டை கழற்றியவன், அங்கிருந்த வேர்களைப் பிடித்துக் கொண்டு மெதுவாக இறங்க ஆரம்பித்தான்.
உடன் இருந்தவர் கத்தவும், மேலே நின்றுக் கொண்டிருந்த அனைவருக்கும் அவன் செய்த காரியத்தின் வீரியம் புரிந்தது. அபினவ்வும் பவித்ராவும் கூட பயந்துப் போனார்கள். இடுப்பில் பெல்ட் கட்டிக் கொண்டு.. பாதுகாப்பாக இறங்குவது வேறு.. இவ்வாறு இறங்குவது வேறு அல்லவா! எனவே அபினவ் “வேண்டாம் ஸார்!” என்று கத்தினான். அருகில் சென்று எட்டிப் பார்க்கவும் பயந்தார்கள். ஏனெனில் அவர்கள் எட்டிப் பார்க்கும் பொழுது எதாவது மண் சரிவு ஏற்பட்டால் அது விக்ரமுக்கு மேலும் ஆபத்தாக முடிந்துவிடும் எனவே.. அவர்கள் பயத்துடன் அசையாமல் நின்றிருந்தார்கள்.
இது எதைப் பற்றியும் கவலைப்படாத விக்ரமிற்கு.. அந்த கரும்பலகையை எடுப்பது ஒன்றே குறியாக இருந்தது. எனவே மெதுவாக இறங்கிக் கொண்டிருந்தான். விக்ரமை மீட்க வந்தவருக்கு விக்ரமை விட்டுச் செல்ல மனமில்லை. எனவே மெல்ல இறக்க கூறினார்.
மெதுவாக இறங்கிய விக்ரம்.. கரும்பலகையை சென்றடைந்ததும்.. அதை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்த மரத்துண்டை விட்டு எவ்வாறு ஒரு கையால் எடுக்கலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கையில்.. கீழே இறக்கப்பட்டவர், அவனை முறைத்தவாறு அவனது இடுப்பில் பெல்ட்டை கட்டிவிட்டார்.
தலையைத் தாழ்த்தி அவருக்கு நன்றி கூறிவிட்டு.. தற்பொழுது ஒரு கையால் மரத்தை பிடித்துக் கொண்டு.. மறு கையால் பையில் வைத்திருந்த சிறு கத்திக் கொண்டு.. கரும்பலகையை சுற்றியிருந்த மண்ணை கீறி அகற்றினான். விரைவாக செய்தவன், தற்பொழுது அதை மெல்ல ஆட்டியவாறு மீதிப் பாதியையும் வெளியே எடுத்தவன், அதை தனது நெஞ்சோடு பற்றிக் கொண்டான்.
விக்ரம் எடுத்துவிட்டதைப் பார்த்த உடன் இருந்த மீட்பு குழுவை சேர்ந்தவன், இருவரையும் மேலே ஏற்றுமாறு தனது கையில் இருந்த வாக்கி டாக்கியில் கூறவும், இருவரும் மெல்ல ஏற்றப்பட்டார்கள்.
மெல்ல மேலே வந்தவர்களை இருவர் பிடித்து தரையில் இழுத்துப் போட்டனர். விக்ரம் மல்லாந்து படுத்திருக்கவும், அவனை மீட்டவர் “முதல்ல பயந்துட்டு நின்றுட்டு இருந்த மாதிரி இருந்தது. அப்பறம் பார்த்தா.. கிடுகிடுன்னு அதுல எப்படி இறங்கினிங்க?” என்று கேட்டார்.
அதற்கு விக்ரம் மெல்ல எழுந்து “முதல்ல நான் பத்திரமா வெளியேறணும் என்று மட்டும் தான் நினைச்சுட்டு இருந்தேன். அப்பறம் எனக்கு இதை எடுக்கணும் என்ற நோக்கம் இருந்தது. அதனால் மற்றதெல்லாம் நினைவில்லை. அதாவது நாம் என்ன நினைக்கிறோமா.. அதன்படி தான் நாம் மூளையும் மனசும் செயல்படும் ஸார்! எனிவே தேங்க்யு சோ மச்! நீங்க இல்லைன்னா என்னோட காரியம் ஈஸியா இருந்திருக்காது.” என்றான்.
அதற்கு அவர் சிரிப்புடன் அவனது தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டு சென்றார்கள். மற்ற மீட்பு குழுவினரும்.. அவனைத் திட்டினாலும்.. அவனது தைரியத்தைப் பாராட்டினர். சற்றுத் தள்ளி நின்று அபினவ்வும் பவித்ராவும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களைப் பார்த்து புன்னகைத்த விக்ரம் “ஹெ ஏன் அங்கே நின்னுட்டிங்க?” என்றான்.
அபினவ் “ஏன்னா! அடப் போங்க ஸார்! நீங்க சொன்னதைப் பார்த்து நானும் ஒரு என்கேரேஜ்ல சொல்லிட்டேன். ஆனா அவங்க சொன்னதை வைத்தும்.. பவித்ரா அழுததை பார்த்தும்.. நீங்க இன்னும் கீழே போயிட்டு இருக்கீங்க.. என்று தெரிந்ததும்.. எனக்கு பயமாகிருச்சு! உங்களை இப்படி முழுசா பார்த்தும் கூட என் பயம் போகலை.” என்று சிரித்தான்.
விக்ரம் அவனுக்கு அருகில் நின்றுக் கொண்டிருந்த பவித்ராவை பார்த்து “ஹெ அழுதியா! என்னை என்கேரேஜ் இல்ல செய்திருக்கணும். இதோ என்னோட முதல் கிஃப்ட்!” என்று தனது கையில் இருந்ததை நீட்டினான்.
ஆனால் அவனது அருகில் வந்த பவித்ரா அவன் நீட்டியதை வாங்காமல்.. அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.
தனது மனதிற்கு பிடித்தமானவளின் முதல் அணைப்பில் விக்ரம் உறைந்து நின்றான்.
அத்தியாயம் 16
மீட்புக் குழுவினர்.. விக்ரமை காப்பாற்றுவதற்காக கட்டியிருந்த கயிறு மட்டும் ஸ்டென்டுகளை கவனமாக சுற்றிக் கொண்டிருந்தார்கள். இந்த பிளவின் போடப்பட்டிருந்த கம்பியின் இடைவெளி அளவை குறைவாகப் போடுவதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
சற்றுத் தள்ளி விக்ரம், அபினவ் மற்றும் பவித்ரா தரையில் அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அபினவ்வும் பவித்ராவும்.. விக்ரம் பிளவில் விழுந்து மீண்டு வந்ததை நம்ப முடியாமல் பேசிக் கொண்டிருக்க.. விக்ரமோ.. பவித்ராவின் அணைப்பை நினைவில் பத்திரப்படுத்திக் கொண்டிருந்தான்.
அப்பொழுது விக்ரம் கொடுத்த கரும்பலகையை வருடிய பவித்ராவின் கரம் நடுங்கியது.
அபினவ் “வாவ் ஸார்! பழமையான தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கிற மாதிரி இருக்கு! இது குமரி கண்டம் இருந்த போது.. எழுதப்பட்டதா என்று தெரியாது. ஆனால் இது நிச்சயம் பழங்காலத்தைச் சேர்ந்ததாக தான் இருக்கும். இதுல ஒட்டியிருக்கிற தூசு.. மணல்களை துடைத்துவிட்டால்.. இதுல இருக்கிறதை படிக்க ட்ரை செய்யலாம்.” என்றான்.
பவித்ரா “ஆமா!” என்று அபினவ்விடம் கூறியவள், சற்றுக் கோபத்துடன் விக்ரமின் புறம் திரும்பி “அப்படியென்ன அவசரம்! அதுதான் இங்கே இருப்பதைப் பார்த்துட்டிங்க தானே! கொஞ்ச நேரம் கழிச்சு.. நம்ம ஐடின்டியை காட்டியே அஃப்ஷியலாவே கீழே இறங்க பிராக்டீக்ஸ் எடுத்துக்கிட்டவங்களை வச்சு.. இறங்கி இதை எடுத்திருக்கலாமே!” என்றாள்.
அதற்கு விக்ரம் “வாவ்! நீயா இதைச் சொல்றே! நீ தானே காலச்சுழற்சியால் மனித வாழ்க்கை மட்டுமில்லை. உலகமும் மாறிட்டு வருதுனு சொன்னவ! இதை இரண்டு மணி நேரம் கழிச்சு எடுக்கப் போனால் அங்கேயே இருக்கும் என்று நினைக்கறீயா பவி!” என்றான்.
பின் தொடர்ந்து “நான் அங்கே இருந்த அரைமணி நேரத்தில் பல மாற்றங்களைப் பார்த்துட்டேன் பவி! சின்ன மண் சரிவு ஏற்பட்டுச்சு! நான் பிடிச்சு ஏறின ஒரு வேர் பிய்ந்து விழுந்துச்சு! அதே மாதிரி இதுவும் கீழே விழுந்திருந்தால் என்ன செய்ய! சில சமயம் வாய்ப்புகள் ஒருதரம் தான் வரும்!” என்றான்.
பின் சற்றுக் குரலைத் தாழ்த்தி “அதை எல்லாத்தையும் விட.. நம்மை ஒரு கும்பல் துரத்திட்டு இருக்கு! அதுக்கு சில கவுர்மென்ட் ஸ்டாப்ஸ் சப்போர்ட் செய்யறாங்க.. என்று தெரியும் தானே! அவங்க நம்மளைப் பிடிக்க டைம் கொடுக்க கூடாது பவி! இந்த இரண்டு மணி நேரம் கூட வேல்யுவானது தான்!” என்றான்.
அபினவ் “உண்மைத் தான் ஸார்! இதை இங்கே இருக்கிற லேப்பிற்கு கொண்டு செக் செய்வது ரிஸ்க் என்று தான் நினைக்கிறேன்.” என்றான்.
விக்ரம் “கண்டிப்பா ரிஸ்க் தான்! நாம குமரி கண்டத்தை பற்றிய ரீசர்ச்சில் இருக்கிறோம்.. என்ற விசயம் லீக் ஆகக் கூடாது. நாம இந்தியாவை விட்டு யாருக்கும் தெரியாமல் ஓடி வந்திருக்கிறோம்.. மறந்துட்டிங்களா! நாம் இங்கே இருப்பது அவங்களுக்கு தெரியக் கூடாது.” என்றான்.
விக்ரம் பிளவில் மாட்டிக் கொண்ட பொழுது.. தனது ஐடென்டியை காட்டி.. பேசியதை அபினவ் மறந்துப் போனான். அதை விக்ரமிற்கு நினைவுப்படுத்தியிருந்தால்.. அடுத்து நிகழப் போவதை அவர்கள் தடுத்திருக்கலாம்.
வரவிருக்கும் சிக்கலைப் பற்றித் தெரியாததால் அவர்கள் தொடர்ந்து அங்கேயே அமர்ந்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அபினவ் “ஆனா அதை இப்படியே பாதுகாக்கிறதுக்கு வசதி நம்ம கிட்ட இல்லையே! அதுவும் எனக்கு கிடைத்திருக்கிற பொருளை நீங்க பார்த்தீங்களா!” என்று தனது பையில் துணியால் பத்திரமாக சுத்தி வைத்ததை மெல்ல வெளியே எடுத்துக் காட்டினான்.
அந்த உடைந்த பானை போன்று இருந்ததில் இருந்த ஓவியம் போன்று இருந்ததைப் பார்த்தும் பவித்ரா “கடவுள் வரைஞ்சுருக்காங்க! அதாவது சூரியன்! முதல்ல சூரியனை தான் கடவுளா நினைப்பாங்க! ஏன்னா.. சூரியன் இல்லாம இருண்டு இருந்த உலகம் காலையில் சூரியன் வந்த பிறகு தான் வெளிச்சம் ஆகுது. அதனால் அந்த சூரியன் தான் நம்மளோட இருளைப் போக்கி வெளிச்சம் தரும் கடவுள் என்று நம்பினாங்க! பூமியின் சுழற்சியால் இரவும் பகலும் வருகிறது என்று அவங்களுக்கு தெரியாது. சூரியனோட கதிர் தான்.. இப்படி நெளிநெளியாக போட்டுக்காங்க!” என்றாள்.
அபினவ் “அப்பறம் இந்த பானையை பார்த்தீங்களா! சுட்ட களிமண் பானை! அதாவது கற்காலத்திற்கும் நாகரிகம் தோன்றிய காலத்திற்கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தது.” என்றான்.
விக்ரம் “வாவ் முதல் ஸ்டெப்பிலேயே இத்தனை ஆதாரங்கள் கிடைக்கும் என்று நினைச்சு பார்க்கலை.” என்றான்.
அப்பொழுது பவித்ரா “எனக்கு கிடைத்திருப்பதை நீங்க இன்னும் பார்க்கலையே..” என்று தனது பையில் இருந்த கண்ணாடி குடுவையை எடுத்தாள்.
அது என்ன என்று ஆர்வத்துடன் பார்த்தவர்களின் கண்கள் அகல விரிந்தன.
ஏனெனில் பச்சை நிறத்தில் வால் மற்றும் துடுப்பு கொண்டிருந்த அந்த மீனின் முகம் வித்தியாசமாக இருந்தது. இன்னும் உற்றுப் பார்த்தப் பொழுது.. அவர்களது விழித் தெறித்து விழுந்து விடும் போன்று இருந்தது.
அதன் முகம் மனித முக ஜாடையில் இருந்தது. அது மட்டுமில்லாது அது நெட்டுக்குத்தலாக நீந்திக் கொண்டிருந்தது.
விக்ரம் அதிர்ச்சி மாறாமல் பவித்ராவை பார்த்து “பவி! நீ பார்த்தாக சொன்ன அந்த வினோத உருவம் இப்படித்தான் இருந்துச்சா?” என்று கேட்டான்.
அதற்கு ஆம் என்று தலையை ஆட்டிய பவித்ரா “ஆனா அது பெரிதாக இருந்தது.” என்றாள்.
விக்ரம் “அப்போ இந்த மீன்.. உன்னைக் கொல்ல வந்தவர்களை வேட்டையாடியிருக்குமோ” என்றான்.
பவித்ராவின் விழியில் திகில் பரவியது. அவளுக்கு ஏதேதோ நினைவுகள் தோன்றியது.
“அதுக்கு பிறகு கூட நான் கப்பல்ல இருந்த போது மறுபடியும் பார்த்த மாதிரி இருக்கிறது விக்ரம்! ஆனால் அது பொய்யா! நிஜமான்னு தெரியலை.” என்று குழப்பத்துடன் கூறவும், விக்ரம் “ஒகே! ஒகே பவி! ரிலேக்ஸ்! நீ இந்த விசயத்தைப் பற்றி யோசிச்சாலே குழம்புகிறே! விடு மெதுவாக யோசிச்சுக்கலாம்.” என்றான்.
அபினவ் “மற்றது எல்லாத்தையும் பாதுகாத்திரலாம். ஆனா இதைப் பாதுக்காக்க முடியாதே!” என்று கவலையுடன் கூறினான்.
விக்ரம் அதை தனது கையில் வாங்கிப் பார்த்து “இது இப்போ உயிரோட இருக்கு! ஆனா.. இது இப்படியே இருக்கணும் என்றால்.. அபினவ் சொன்ன மாதிரி.. அதற்கு வேண்டிய ஏற்பாடு செய்யணும் போல!” என்றான்.
அப்பொழுது சிலர் அவர்களை நோக்கி வருவது போன்று இருந்தது.
உடனே கையில் இருந்தவற்றை.. பையினுள் போட்டு மறைத்து வைத்தார்கள்.
அவர்கள் கையில் கெமராவுடனும் மைக்குடனும் வருவதைப் பார்த்ததும்.. விக்ரம் தலையில் அடித்துக் கொண்டான். எது நடக்கக் கூடாது என்று நினைத்தானோ.. அது நடக்கப் போகிறது. அவர்கள் ஊடகத் துறையைச் சேர்ந்தவர்கள்.. பிளவில் விழுந்து உயிர் பிழைத்த அவனைப் பேட்டிக் காண வருகிறார்கள்.
சட்டென்று அபினவ் மற்றும் பவித்ராவின் புறம் திரும்பியவன் “நீங்க இரண்டு பேரும்.. இதையெல்லாம் எடுத்துட்டு சீக்கிரம் நாம தங்கியிருக்கிற ஹோட்டலுக்கு போங்க! நான் அவங்களைத் தவிர்க்க முடியாது. எதாவது பேசி சமாளிக்கிறேன். நான் உடனே ஹோட்டலுக்கு வர மாட்டேன். நான் வரக் கொஞ்சம் லேட் ஆகும். ஆஸ்திரேலியா போவதற்கு டிக்கெட் புக் செய்துட்டு வரேன். பேக் பண்ணிட்டு ரெடியா இருங்க! நாம் ஹோட்டலையும் காலி செய்துட்டு போகப் போகிறோம்.” என்றுவிட்டு வந்துக் கொண்டிருந்தவர்களை நோக்கிச் சென்றான்.
மீட்பு குழுவினர் முதலில் பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் விக்ரமை அழைக்கவும், கெமராக்கள் விக்ரமின் புறம் திரும்பியது. இயல்பு போல் கையால் முகத்தை மறைத்துவிட்டு மீட்பு குழுவினருக்கு நன்றிக் கூறியவன், அவன் இந்தியாவை சேர்ந்தவன் என்றும்.. இங்கே சுற்றிப் பார்க்க வந்திருந்தாகவும், வந்த இடத்தில் பலகையில் எழுதப்பட்டிருந்ததைப் பார்க்காமல் விழுந்துட்டேன். நல்லவேளை.. நடுவில் இருந்த வேர்களைப் பற்றி நிற்க முடிந்தது. அதற்குள் இவர்கள் வந்து காப்பாற்றினாங்க.. என்று மனதார நன்றிக் கூறினான்.
அப்பொழுது மீட்புக் குழுவைச் சேர்ந்த ஒருவர் “இல்லையே! நீங்க தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆச்சே! உங்க கூட வந்தவங்க.. அவங்களோட ஐடென்டி கார்ட்டை காட்டினாங்க! நீங்க எதையோ தேடி வந்திருக்கீங்க! அதைக் கண்டுப்பிடிச்சுட்டிங்க.. எடுத்துட்டு தான் மேலே வருவீங்கனு அடம் பிடிச்சீங்களே! அதை எடுத்துட்டும் வந்தீங்களே! அதைச் சொல்லுங்க மிஸ்டர்!” என்றான்.
உடனே ஊடகத்துறையினர் “அப்படிங்களா! என்ன எடுத்தீங்க?”
“நீங்க சென்னை தொல்பொருள்ஆராய்ச்சி குழுவை சேர்ந்தவங்களா?”
“எதைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கீங்க?”
“உங்க கூட வந்தவங்க எங்கே?”
என வரிசையாக கேள்விகளை அடுக்கினார்கள்.
தலையில் அடித்துக் கொள்ள உயர்ந்த கையை அடக்கிக் கொண்டு “ஆமாம் ஆராய்ச்சி தான்! யாருக்கும் தெரிய வேண்டாம் என்று நினைச்சோம். நீங்க நினைக்கிற மாதிரி தொல்பொருள் ஆராய்ச்சி இல்லை. தாவரங்கள் மரங்கள்.. அதோட வயது பற்றிய ஆராய்ச்சி குழுவை சேர்ந்தவங்க நாங்க! இதை சின்ன ஹாப்பியா செய்கிறேன். ப்ளீஸ் போதுமே! இப்பவே எல்லாம் சொல்லிட்டா.. அப்பறம் நாங்க ரீலிஸ் செய்யப் போற.. டாக்மென்டரில என்ன இருக்கப் போகுது. எல்லாருக்கும் ரொம்ப தேங்க்ஸ்! நிஜமா என்னைக் காப்பாற்றிய இவங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி!” என்று.. அவர்கள் கேட்டக் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல்.. வேறு ஒரு சம்பந்தமான பதிலைத் தந்தான்.
அவர்கள் மேலும் கேள்விகளைக் கேட்கவும், அதைக் கவனியாதவன் போல்.. அங்கே இருந்த மீட்புக் குழுவினர்களைக் கட்டிப்பிடித்து நன்றிக் கூறிவிட்டு அங்கிருந்து அகன்றான்.
அது அவனுக்கு அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.
அவர்களிடம் இருந்து தப்பிக்க வாடகை கார் ஒன்றைப் பிடித்து அந்த நகரைச் சுற்றி வந்தான். பின் வேறு காரை வாடகைக்கு எடுத்து விமான பயணச்சீட்டு பதிவு செய்யும் இடத்திற்கு சென்று.. அவனது மற்றும் அபினவ் பவித்ராவின் பாஸ்போர்ட் எண்ணை கொடுத்து.. ஆஸ்திரேலியாவிற்கு செல்ல பயணச் சீட்டை பதிவு செய்தான். நாளை மாலையில் தான் பயணச்சீட்டு கிடைத்தது. ஆனால் வேறு வழியில்லாமல் வாங்கிக் கொண்டான். பின் அங்கிருந்து வேறு ஒரு காரை பிடித்து ஹோட்டலை வந்தடைந்தான்.
அதற்குள் அங்கு பூமி பிளவில் ஒருவன் விழுந்துவிட்டதையும்.. அவனைக் காப்பாற்றியதைப் பற்றியும் செய்தி பரவியிருந்தது. விழுந்தவன் ஒரு இந்தியன் என்பதால்.. இந்தியாவிலும் அந்த செய்தி பரவியது.
—---------------------------------------
(ஆங்கிலத்தில்.. அவர்களது உரையாடல்)
“அங்கே என்ன பண்ணிட்டு இருக்கீங்க! இந்த பொண்ணைத் தேடி இரண்டு பேர் போயிருக்காங்களாம். இதை எங்க கிட்ட இன்பார்ம் செய்யலை.?”
“ஸார்! அவங்க இரண்டு பேரில் ஒருத்தன் அவளோட லவ்வர்.. அவங்களுக்கு கல்யாணம் நடக்கப் போகுது. மற்றபடி எந்த மாற்றமும் இல்லை. அதனால் தான் ஸார் சொல்லுலை.”
“இத்தனை வருஷம்.. இந்த மாதிரி அவங்களைத் தேடி யாரும் வரலை. தனியாக இருந்தாங்க! இப்போ அவங்களோட கனெக்ட் ரூட் பெருசாச்சுன்னா என்ன நடக்கும் என்று தெரியும் தானே!”
“எஸ் ஸார்! அதுதான் அவங்க கதையை முடிக்க சொல்லிட்டேன். இனி எந்த சந்தேகமும் வராது. என்ன விசயம் ஏன் என்று போலீஸ் தோண்ட மாட்டாங்கனு நினைக்கிறேன்.”
“எஸ்! குட்! நாலு வருஷம் ஆச்சு! இனியும் அந்த பொண்ணைப் பாதுகாத்து என்ன செய்யப் போகிறோம். அந்த பொண்ணோட பேமலியோட முடிச்சுருங்க! ரோட் ஆக்ஸிடென்ட் ஃபயர் ஆக்ஸிடென்ட் இந்த மாதிரி!”
“எஸ் ஸார்! அதற்கு தான் நேரம் பார்த்துட்டு இருக்கோம்.”
“முடித்ததும் சொல்லுங்க! நாங்க உங்களையும் வாட்ச் பண்ணிட்டு தான் இருக்கோம்.. என்பதை மறந்திராதீங்க..” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
அழைப்பைத் துண்டித்த வெளிநாட்டை சேர்ந்தவன் தனது அருகில் இருந்தவரிடம் “இவங்களை நம்ப முடியாது. இப்பவே கன்னியாகுமரிக்கு நம்ம ஆட்களை அனுப்புங்க! அங்கே என்ன நடக்குனு விசாரிங்க! அவர்களை முடித்துக் கட்ட வேண்டிய வேலைகளைச் செய்யுங்க..” என்று உத்தரவிட்டான்.
அந்த வெள்ளைக்காரன் அழைப்பைத் துண்டித்ததும்.. நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துவிட்டு தனக்கு அருகில் இருந்தவனிடம் திரும்பியவன் ஹிந்தியில் “ஜீ! வெள்ளைக்காரன் கொஞ்சம் மோப்பம் பிடிச்சுட்டான்னு நினைக்கிறேன். அவனுக்கு முழுசா விசயம் தெரிவதற்கு முன்.. நாம இந்த விசயத்தை முடிச்சுரணும்.”
“ஆமாம்! கடலில் தேடிட்டு இருக்காங்க! இதுவரைக்கும் கிடைத்த நீயுஸின்படி அந்த வழியாக எந்த கப்பலும் போகலையாம். அதுதான் குழம்பிட்டு இருக்காங்க!”
“முயற்சியை விட்டுர வேணுன்னா சொல்லுங்க! நாலு வருஷத்துக்கு முன்னாடி இந்திய கவுர்மென்டை ஏமாற்றி.. டூரிஸ்ட் மாதிரி போய்.. அந்த பொண்ணு போயிட்டு இருக்கிற கப்பலை பிடிக்கவே மூணு நாள் ஆச்சு என்கிறதை மறந்திராதீங்க! ஜீ”
“ஆமா! அப்படித்தான் சொல்லியிருக்கேன். அதையும் பார்த்திரணும். அப்பறம் அந்த பொண்ணு உளறிட்டு இருக்கே! யாரோ ஒரு பச்சை மனிதன் வந்தான்னு.. அதுவும் என்னன்னு பார்த்திரணும். இந்த முறையும் வந்து அவளைக் காப்பாத்த வருவான்னு பார்க்கணும்.”
“ஆமாம்! டாக்டர் அந்த பொண்ணு பொய் சொல்லுலை. உண்மைத்தான் சொல்லுது. அது கடற்கன்னியாக இருக்கலானு சொன்னாரே!”
“ம்ம்! அதையும் தான் பார்த்திரலாம்.”
அப்பொழுது ஒருவன் ஓடி வந்து “ஸார்! ஸார்! இதைப் பாருங்க..” என்று கையில் இருந்த செல்பேசியில் ஓடிய காணொளியை காட்டினான். கீழே ஆங்கில மொழிப்பெயர்ப்புடன் அந்த காணொளி ஓடியது.
அது ஸ்ரீலங்காவில் இருந்து வந்த செய்தியில் விக்ரம் பூமி பிளவில் விழுந்து மீட்கப்பட்டதிற்கு நன்றித் தெரிவித்துப் பேசிக் கொண்டிருந்தான். அதுமட்டுமில்லாது.. மீட்பு குழுவை சேர்ந்த ஒருவர்.. ஆராய்ச்சிக்காக வந்திருப்பதைப் பற்றியும் கூறி.. விக்ரம் எதையோ கண்டுப்பிடித்தாகவும், அதையும் எடுத்துவிட்டு தான் மேலே வந்ததை பற்றியும் கூறிக் கொண்டிருந்தார். பின்னர் விக்ரம் சமாளித்ததும்.. அந்த காணொளியில் வந்தது.
அதைக் கண்டு ஆத்திரத்துடன் “ஜீ என்னதிது! எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமோ.. அது நடந்துட்டு இருக்கு! அவன் நம்மை இந்த பக்கம் திருப்பி விட்டுட்டு ஸ்ரீலங்காவிற்கு போயிருக்காங்க! எதையோ கண்டுப்பிடிச்சுட்டான்னு வேறச் சொல்றாங்க..” என்கவும், அவனுக்கு எதிரே அவனை விடவும் கோபத்துடன் எழுந்தான்.
“அவங்களுக்கு நல்லாவே தெரிஞ்சுருச்சு! அவங்களை எதைச் செய்ய விடாமல் தடுக்கிறோம் என்பது நல்லாவே தெரிஞ்சுருச்சு! குமரி கண்டத்தை பற்றிச் சொல்ல மறுக்கிறான் பார். ஏன் தடுக்கிறோம் என்ற காரணத்தையும் கண்டுப்பிடிச்சுருப்பான்னு நினைக்கிறேன். இந்த விக்ரமை ரொம்ப சாதாரணமா எடைப் போட்டுட்டோம். இவன் உள்ளே புகுந்ததும்.. எல்லாம் தலைக்கீழாக மாறியிடுச்சு! எல்லாத்தையும் உடைச்சுட்டான். கப்பல்ல போயிட்டு இருக்கிறவங்களைக் கூப்பிட்டு வருவதற்குள் இவங்க தப்பிச்சு ஓடிருவாங்க! சீக்கிரம் ஸ்ரீலங்காவிற்கு வேற ஆட்களை அனுப்பணும். அங்கேயே இவங்க கதையை முடிக்கணும். அவங்க எதையோ கண்டுப்பிடிச்சுருக்காங்க! அதையும் கைப்பற்றணும். சீக்கிரம்.. சீக்கிரம்!” என்று ஆத்திரத்துடன் கத்தினான்.
அத்தியாயம் 17
ஹோட்டலுக்கு சென்றதும்.. பவித்ராவும் அபினவ்வும் விக்ரம் கூறியது போல்.. அவர்களது உடைமைகளை எடுத்து வைத்துவிட்டு.. விக்ரம் வந்தததும் கிளம்புவதற்கு தயாராக இருந்தார்கள்.
இங்கு வருவதற்கு முன்.. ஒரு ஆக்வரியத்திற்கு சென்று.. கடல் வாழ் மீனை பாதுகாக்க உபயோகிக்கும் இயற்கை கெமிக்கலை வாங்கி வந்து.. ஒரு பாட்டிலில் நீரை நிரப்பி.. அந்த கெமிக்கலையும் அந்த அரிய வகை மீனையும் போட்டு பாதுகாப்பாக வைத்தார்கள். கடல் வாழ் உயிரினங்களைப் பற்றி ஆராய்ந்துக் கொண்டிருப்பவர்களில் நம்பகமான ஒருவரை அணுகி.. இதைப் பற்றிய விபரங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தவர்கள். அதை புகைப்படம் மற்றும் காணொளியாக எடுத்துப் பத்திரப்படுத்திக் கொண்டார்கள்.
பின்னர்.. அபினவ் கண்டெடுத்ததில் இருந்தவற்றை புகைப்படம் எடுத்துக் கொண்டவர்கள். அதைப் பற்றி விக்ரமிடம் கூறிய அவர்களது கருத்துகள்.. மற்றும் தோரயமாக அதற்கு எத்தனை ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இதே போன்று தமிழ்நாட்டில் கண்டெடுத்தவற்றோடு ஒப்பிட்டு இதன் வயது போன்றவற்றை தேதி குறிப்பிட்டு ஆய்வறிக்கையாக எழுதினர்.
அடுத்த விக்ரம் கண்டெடுத்த கரும்பலகையில் இருந்த தூசுகளை பிரஷ் கொண்டு கவனமாக துடைத்தெடுத்தா்கள். அவர்களை ஏமாற்றாது. பழங்கால எழுத்துக்கள் அதில் பொறிக்கப்பட்டிருந்தன.
அதில் செதுக்கியிருந்தது பாதிக்கு மேல் மண் அரிப்பால் அழிந்துப் போயிருக்கவும், அவர்கள் சரியாக படிக்க முடியவில்லை. படிக்க முடிந்தவரை.. ஒரு இடத்தின் பெயர் குறிப்பிட்டு இருந்தது போன்று இருந்தது.
அபினவ் “பவித்ரா மேம்! சைகை மொழி பின் வட்டெழுத்துக்களாக மாறி..பின் தமிழாக மாறுச்சு தானே!” என்றான்.
“ஆமாம் அபினவ்! மூன்றாம் நுற்றாண்டில் இருந்த மக்கள்.. செய்திகளை சொல்லவும்.. எதாவது பொருளை குறிப்பிடவும், ஞாபகம் வச்சுக்கவும்.. அவங்க சொல்ல நினைத்ததை எழுத்து வடிவில் கொண்டு வந்தாங்க! அதுதான் நாளடையில் தமிழ் எழுத்துகளாக மாறியிருக்கு! தமிழ் எழுத்து ஒலியில் இருந்து.. மற்ற மொழிகள் உருவாச்சு! உதாரணமாக அ என்று சொல் பல மொழிகளில் ஒரே மாதிரி சவுண்ட் இருக்கிறதைப் பார்க்கலாம். அதை ஒத்துக்கிறவங்க இன்னும் அதற்காக அங்கீகாரம் கொடுக்கத் தயங்குவது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு!” என்றாள்.
“ம்ம்! இதுல இவ்வளவு பெரிய பாலிடிக்ஸ் இருக்கு என்று நீங்க சொன்ன பிறகு தான் தெரியுது.” என்றான்.
அப்பொழுது விக்ரம் வந்து விடவும்.. அபினவ் “என்ன ஸார்! இவ்வளவு நேரமாகிருச்சு!” என்றான்.
அதற்கு விக்ரம் “யாருக்கும் நான் எங்கே இருக்கிறேன்னு தெரியக் கூடாது அபினவ்! இதுக்கே இப்படின்னு சொல்றே! நாளைக்கு சாயந்திரம் தான்.. பிளைட் டிக்கெட் கிடைச்சுது. அதுவரை நாம் இங்கே சுத்திட்டு தான் இருக்கப் போகிறோம்.” என்றான்.
பவித்ரா “நம்மைத் தேடிட்டு இருக்கிறவங்களுக்கு.. நாம் இங்கே இருக்கிறது தெரிஞ்சுருக்கும் என்று நினைக்கறீங்களா?” என்று கேட்டாள்.
“எய்ட்டி பர்சேன்டேஜ் வாய்ப்பிருக்கு! நாம உஷாரா இருப்பது நல்லது தானே” என்றவன், “நாம இப்போ கண்டுப்பிடிச்சதை கவனமா பேக் பண்ணியாச்சு தானே!”
“எஸ்! அதைப் பற்றிய எங்களோட ஆர்டிக்கிள்ஸையும் கையோடு எழுத்தி வச்சுட்டோம்.” என்று பவித்ரா கூறவும், விக்ரம் “குட்! இந்த விசயத்துல நம்ம முன்னோர் செய்ததை நாம கடைப்பிடிக்கணும். என்ன செய்தாலும்.. அதை எழுத்துப்பூர்வமான சாட்சி வச்சுக்கணும்.” என்று சிரித்தான்.
அபினவ் “கவுண்டமணி செந்தில் ஜோக் தான் எனக்கு ஞாபகம் வருது.” என்று சிரித்தான்.
பின் விக்ரமும் தயாரான பின்.. மூவரும் வாடகை கார் பிடித்துக் கொண்டு ஒரு மணி நேரம் கடற்கரை சாலையில் வலம் வந்தவர்கள்.. விக்ரம் அங்கு இருக்கும் வேறு ஒரு ஹோட்டலில் தங்க இடம் கிடைக்குமா என்று பார்த்துக் கொண்டிருந்தான்.
அதே நேரத்தில் டில்லியில்..
“ஜீ.. இப்போ தான் நம்மளோட ஆட்கள்.. ஸ்ரீலங்காவிற்கு ஃப்ளைட் ஏறியிருக்காங்க! இவங்க போவதற்குள்.. அவங்க சுதாரிச்சுட்டா என்ன செய்ய?”
“நானும் அதுக்கு தான்.. ஹெல்ப்பிற்காக ஸ்ரீலங்காவுல இருக்கிற.. என் பிரண்ட்டை கான்டெக்ட் செய்ய ட்ரை செய்துட்டு இருக்கேன். ஆனா கிடைக்க மாட்டேன்கிறான்.” என்று எரிச்சலுடன் கூறினான்.
“யார் ஜீ அவரு?”
“அவன் அங்கே பெரிய ஆளு! சனங்க நன்மதிப்பை பெற்றவன், அந்த மதிப்பை பெற.. அவன் எத்தனை பொய்கள் சொன்னான்னு எனக்கு தான் தெரியும். என்ன செய்ய பெரும்பான்மையான ஆட்கள் மதிப்பை பெறணும் என்றால்.. இந்த மாதிரி.. உங்க இனம் தான் எங்க இனம் என்று பொய் எல்லாம் சொல்ல வேண்டியது இருக்கு! நம்ம வேலைக்கு அவனை மாதிரியான ஆட்கள் தான் தேவை!” என்று சிரித்தவாறு மீண்டும்.. அழைத்து பார்த்தான்.
இம்முறை அழைப்பை ஏற்றவன் “ஸாரி ஜீ! கொஞ்சம் பிஸியாக இருந்ததால்.. ஃகால் அட்டென்ட் செய்யலை. என்ன விசயம் ஜீ! ஸ்ரீலங்காவிற்கு வரப் போறீங்களா?” என்று கேட்டான்.
“இல்லை.. எனக்கு ஒரு உதவி வேணும். சக்ஸஸா முடிச்சுட்டா.. உன் அக்கவுன்ட் கணிசமான தொகை போடப்படும்.”
“என்ன ஹெல்ப் வேணும் சொல்லுங்க!”
முழு விபரங்களையும் கூறாமல்.. விக்ரம், அபினவ் மற்றும் பவித்ராவை குறப்பிட்டு.. அவர்கள் தொடங்கியிருக்கும் ஆராய்ச்சியை நிறுத்த வேண்டும். அதற்காக அவர்களை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க வேண்டும் என்று கூறி.. அவர்களின் புகைப்படத்தை அனுப்பியதோடு மட்டுமில்லாது.. விக்ரம் அளித்த பேட்டி காணொளியையும் அனுப்பி வைத்தான்.
—--------------------------------------------------------
அவர்கள் சென்றுக் கொண்டிருந்த இடத்திற்கு அருகில் ஹோட்டல் ஒன்றில் அறைகள் காலியாக இருப்பதைப் பார்த்த விக்ரம் அதற்கு செல்பேசியில் அழைத்து பதிவு செய்ய எதானித்தான். அப்பொழுது அவனது செல்பேசிக்கு அறிமுகமில்லாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.
அழைப்பை ஏற்றுக் காதில் வைத்ததும்.. “ஸார் நீங்க கொஞ்ச நேரத்திற்கு முன்னே வேகெட் செய்துட்டு போன ஹோட்டல் மேனேஜர் பேசறேன். நீங்க காலிச் செய்துட்டு போனதும்.. வழக்கம் போல.. சுத்தம் செய்ய எங்களோட ஆட்கள் போனாங்க! அங்கே ஒரு சின்ன பேக்கேஜ் ஒண்ணு இருந்தது. அதை வந்து எடுத்துட்டு போறீங்களா!” என்று கூறினார்.
விக்ரம் பவித்ராவிடம் திரும்பி “எதாவது லக்கேஜ்ஜில் வைத்தது எதாவது மிஸ்ஸிங்கா?” என்று கேட்டான்.
பவித்ரா “இல்லையே! எல்லாமே எடுத்துட்டு வந்துட்டோம். ஆக்சுவலா லக்கேஜ் எண்ணிக்கை அதிகமாகிருச்சு!” என்றாள்.
அதற்குள் அந்த பக்கம் இருந்த மேனேஜர் “ஸார் லக்கேஜில் வைத்தது தவறி விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன். நீங்க அதை வந்து வாங்கிட்டு போயிட்டா.. அந்த ரூமை அடுத்து வரவங்க கிட்ட ஹன்ட் ஒவர் பண்ண முடியும்.”
அதைக் கேட்டுக் கொண்டிருந்த அபினவ் “ஷ்ஷ் ஆ! பவித்ரா மேம்.. நாம ஆர்டிக்கிள்ஸ் சீக்கிரம் எழுதணும் என்று அவசர அவசரமா பேக் பண்ணி வச்சோமே.. அதுல எதாவது மிஸ் ஆகிருக்குமோ! ஏன்னா நாம கடைசி கிளம்பும் போது.. எல்லாம் எடுத்து வச்சுட்டோமா.. என்று பேக்கில் எல்லாத்தையும் வெளியே எடுத்து வச்சு செக் பண்ணிட்டு மறுபடியும் எடுத்து உள்ளே வச்சுட்டு வந்தோம். அப்போ எதையாவது மிஸ் பண்ணிருப்போமா..” என்றான்.
அதைக் கேட்டு பவித்ரா “என்ன சொல்றே அபினவ்! நீ சொல்றதைப் பார்க்கும் போது.. எனக்கு டவுட்டா இருக்கு..” என்றாள்.
இவர்கள் இரண்டு பேரும் பேசிக் கொள்வதைப் பார்த்த விக்ரம் காரை மீண்டும் பழைய ஹோட்டலுக்கு திருப்பக் கூறினான்.
அபினவ் “ஐயம் நாட் சுயர்! இருங்க விக்ரம் செக் செய்துக்கலாம்.” என்றான்.
விக்ரம் “இங்கே மறுபடியும் எல்லா லக்கேஜ்ஜையும் கலைத்துப் பார்ப்பதற்கு.. அங்கே போய் என்னன்னு பார்த்திரலாம்.” என்றான்.
ஹோட்டலுக்கு கார் சென்றடைந்ததும்.. காரில் இருந்து இறங்க முற்பட்ட மற்ற இருவரையும் தடுத்து நிறுத்திய விக்ரம் “சின்ன தின்க்ஸ் எடுக்க.. எதுக்கு மூணு பேர்.. நான் மட்டும் போய் பார்த்துட்டு வந்தறேன்.” என்றுவிட்டு இறங்கிச் சென்றான்.
அங்கே விக்ரமை பார்த்ததும்.. “உங்க ரூமில் தான் வைத்திருக்கிறோம். நாங்க வேற எதையும் டச் செய்யலை. அதுல எதாவது இருந்து டேமேஜ் ஆர் மிஸ் ஆச்சுன்னா நிர்வாகம் பொறுப்பேற்காது. அதனால.. நீங்களே போய் எடுத்துக்கோங்க..” என்றான்.
விக்ரம் “ஒகே!” என்று தோள்களைக் குலுக்கிவிட்டு சென்றான்.
மூலையில் உள்ள அறைக்கு சென்றுக் கொண்டிருந்த பொழுது.. எதோ ஒன்று உறுத்துவது போன்று இருந்தது. அது என்னவென்று நினைவுப்படுத்திக் கொள்ள முயன்றான்.
அவனை அறைக்கு சென்று எடுத்துக் கொள்ள கூறிய மேனேஜர் அவன் அகன்றதும் யாரோக்கு அழைப்பு விடுத்து.. ஒரே வார்த்தையில் சிங்கள மொழியில் கூறிவிட்டு.. வைத்துவிட்டார்.
யோசித்தவாறு நடந்தவனுக்கு இன்னொரு விசயம் உறுத்தியது.
நம்மை யாராவது உற்றுப் பார்த்தால்.. அவர்கள் புறம் திரும்புவது மனித இயல்பு! அது போல அவனை யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போன்று இருந்தது. எனவே வேகமாக நடந்துக் கொண்டிருந்தவன், தனது நடையின் வேகத்தை சிறிது சிறிதாக குறைத்தான்.
அவனது உள்ளுணர்வு கூறியதைப் பொய் கூறவில்லை. அங்கு அறையில் நான்கு ஆட்கள் கையில் ஆயுதத்துடன் காத்திருந்தார்கள்.
அது போக.. இரண்டு ஆட்கள் பவித்ரா மற்றும் அபினவ் இருக்கும் காரை நோக்கி சென்றுக் கொண்டிருந்தார்கள்.
கதையைத் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மிக்க நன்றி.. மன்னிப்பும் கேட்கிறேன். சில வேலைகளின் காரணமாக சிறு விடுப்பு வேண்டும். மார்ச் 15 இல் இருந்து கதையின் தொடர்ந்த அப்டேட்ஸ் தருகிறேன். கோபமும் வருத்தமும் கொள்ளாதீங்க! கண்டிப்பாக இந்த கதையை முடித்துவிடுவேன். நான் மிகவும் இரசித்து எழுதிக் கொண்டிருக்கும் கதை.. முடிக்காமல் விட மாட்டேன்.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பிறகு சந்திக்கிறேன். மன்னிக்கவும், பொறுமையாக காத்திருந்தவர்களுக்கு மிக்க நன்றி.. எனது நிலைமையைப் புரிந்துக் கொண்டீர்கள். இனி இந்த கதையின் அப்டெட்கள் தொடர்ந்து வழக்கம் போல்.. மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒரு முறை வந்துவிடும். ஒரு மாதத்திற்கு பிறகு தருவதால்.. கன்டினியுட்டி சரியா வந்திருக்கா என்று படித்துப் பார்த்து கூறுங்கள்.. கதையின் விறுவிறுப்பும் இனி அதிகமாகும்.. நன்றி..
அத்தியாயம் 18
சிறு தயக்கத்துடன் விக்ரம் நடந்துக் கொண்டிருந்த பொழுது.. கையில் துடைப்பம் மற்றும் வாளியுடன் அவர்கள் தங்கியிருந்த அறைக்கு அருகில் இருந்த அறையில் இருந்து ஒரு பெண் வெளிப்பட்டாள்.
அவனை அடையாளம் கண்டுக் கொண்டவள், அவளுக்கு தெரிந்த தமிழில் “நீங்க இன்னும் ரூம் காலி பண்ணலைங்களா! ரூம் காலியாகிருச்சுன்னு சொன்னாங்க.. உங்க ரூம் கிளின் பண்ணிட்டு தான் இங்கே வந்தேன்.” என்றாள்.
உடனே விக்ரம் அந்த பெண்ணிடம் “என் ரூம்ல நாங்க மிஸ் செய்த பேக்கேஜ் எதாவது இருக்கா?” என்று கேட்டான்.
“இல்லையே!” என்றதும்.. இது அவனை இங்கே வரவழைக்க திட்டமிட்ட சதி என்று தெரிந்துவிட்டது.
விக்ரமின் நடவடிக்கையை சிசிடிவியின் மூலம் கண்காணித்துக் கொண்டிருந்தவன், விக்ரம் அறைக்கு செல்லாமல்… ஒரு பெண்ணிடம் அதுவும்.. அவர்கள் இருந்த அறையை சுத்தம் செய்த பெண்ணிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். விக்ரம் கண்டுப்பிடித்து விட்டான், திட்டம் தோல்வியுற்றது என்று தெரிந்ததும்.. உடனே அறையில் மறைந்து நின்றிருந்தவர்களுக்கு விசயத்தைக் கூறினான்.
அந்த பெண்ணிடம் பேசிவிட்டு.. உடனே விக்ரம் திரும்பி ஓடினான். அடுத்த நிமிடமே.. அறையில் மறைந்திருந்தவர்கள்.. கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்தவர்கள்.. விக்ரமை துரத்த ஆரம்பித்தார்கள்.
காரில் அமர்ந்திருந்த பவித்ராவிடம் அபினவ் “மேம்!” என்று ஆரம்பிக்கவும், “மேம் என்று கூப்பிட்டால் என்கிட்ட பேசாதே!” என்றாள்.
“ஒகே! ஒகே! வேணுன்னா பாருங்க.. இந்த புரொஜெக்ட் மட்டும் வெளியே வந்துட்டா.. உங்களுக்கு ஃபேன்ஸ் அதிகமாகி.. உங்களை எங்கே பார்த்தாலும் துரத்தப் போறாங்க..” என்றான்.
அதற்கு பவித்ரா “ஆல்ரெடி துரத்திட்டு தான் இருக்காங்க!” என்கையில் அவர்கள் அமர்ந்திருந்த காரின் கதவைத் தட்டி.. கண்ணாடியை ஒருவன் இறக்க கூறினான்.
பவித்ரா கண்ணாடியை இறக்கியவாறு “என்ன விசயம்?” என்கையில்.. சட்டென்று கத்தியை அவளது கழுத்தில் வைத்து இறங்குமாறு கூறினான். மற்றொருவன் டிரைவரை கதவை திறக்கச் சொல்லி அவனை இழுத்து வெளியே போட்டான்.
சட்டென்று நிகழ்ந்துவிட்டதில் திகைத்து போன அபினவ் உடனே பவித்ராவின் பக்கம் குனிந்து கார் கண்ணாடியை ஏற்றிவிட்டான். பவித்ராவும் துரிதமாக செயல்பட்டு.. கத்தியை பிடித்தவனின் கையை தட்டிவிட்டாள். அதற்குள் டிரைவரை ஒருவன் இழுத்து வெளியே போட்டுவிட்டு உள்ளே நுழைய முற்படுவதைக் கண்ட அபினவ் சட்டென்று முன்னிருக்கைக்கு பாய்ந்து.. உள்ளே நுழைந்தவனை உதைத்து தள்ளிவிட்டு.. ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து கதவைச் சாத்தியவன், காரை கிளப்பினான்.
பவித்ரா பதட்டத்துடன் “விக்ரம் எங்கே?” என்றாள்.
அபினவ்வும் ஹோட்டலின் வாசலைப் பார்த்தபடி ஓட்டிக் கொண்டிருந்தான். அவர்கள் தள்ளிவிட்ட இருவரும் காரின் பின்னால் துரத்திக் கொண்டு வந்தார்கள்.
அப்பொழுது விக்ரம் ஹோட்டலில் இருந்து ஓடி வருவதைப் பார்த்தார்கள். காரை நிறுத்தி அவனுக்கு நடந்த சம்பவத்தை விளக்க நேரமில்லாமல் சீக்கிரம் வா.. என்று அழைத்தபடி ஹோட்டலுக்கு முன்னால் இருந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தான்.
ஆனால் விக்ரமிற்கு பின்னால் நான்கு ஆட்கள் துரத்திக் கொண்டு வருவதைக் கண்டு இருவரும் திடுக்கிட்டார்கள். விக்ரமும்.. காரை இருவர் துரத்திக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அதற்குள் விக்ரமின் பின்னால் நெருங்கிய ஒருவன், கையில் இருந்த பெரிய கத்தியை ஓங்கினான்.
இலாவகமாக குனிந்து கத்தி வீச்சில் இருந்து தப்பித்த விக்ரம்.. தனது ஓட்டத்தை நிறுத்தவில்லை. காரையும் நிறுத்தாமல் ஹோட்டல் வாளகத்திற்குள்ளவே ஓட்டக் கூறினான்.
இவர்களின் கலவரத்தைக் கண்டு.. ஹோட்டல் செக்யுரிட்டி விசிலை ஊதியவாறு ஓடி வந்தார்.
காரை வளைத்து திருப்பி ஓட்டிய அபினவ்.. விக்ரமை துரத்திக் கொண்டிருந்தவர்களைக் குறி வைத்து ஓட்டினான். கார் தங்களைத் துரத்துவதைக் கண்டு.. அவர்கள் பாதையில் இருந்து குதித்து தப்பித்தார்கள்.
விடாமல் ஓடிச் சென்றுக் கொண்டிருந்த விக்ரமுக்கு அருகில் காரை கொண்டு சென்ற அபினவ் காரின் வேகத்தை சிறிது மட்டுப்படுத்தினான். உடனே பவித்ரா காரின் கதவைத் திறந்துவிடவும்.. விரைந்து விக்ரம் காரில் ஏறினான். விக்ரம் ஏறியதும்.. கார் சீறிப் பாய்ந்தது.
விக்ரம் மூச்சு வாங்கியவாறு “அபினவ்! காரை சின்ன ரோடு சந்து மாதிரி இருக்கிற இடத்திற்குள் திருப்பு! மெயின் ரோட்டில் போவது ரொம்ப டேன்ஞ்சர்! அங்கே போனதும்.. நாம இந்த காரை விட்டுட்டு.. நம்ம தின்க்ஸோட இறங்கி வேற காரை பிடிக்கணும்.” என்றான்.
பவித்ரா “அப்பறம்?” என்று கேட்கவும், விக்ரம் “பிளைட் ஏறும் வரை.. வேற ஹோட்டலில் தங்கலாம் என்ற முடிவை மாத்திட்டு இதே மாதிரி ஒரு காரை பிடிச்சுட்டு.. பிளைட் ஏறும் வரை.. சுத்திட்டே இருக்க வேண்டியது தான்! என்னைக் கேட்ட அதுதான் சேஃப்!” என்றான்.
அபினவ்வும் பவித்ராவும் ஒன்று சேர்ந்த குரலில் “ஓ நோ!” என்றார்கள்.
விக்ரம் தோள்களைக் குலுக்கினான்.
அடுத்த நாள் மதியம் விமானத்தில் ஏறுவதற்குள்.. அவர்கள் நான்கு வாடகை காரை மாற்றி விட்டார்கள். ஒருவர் விழித்திருக்க.. மற்ற இருவர்கள் கண்ணயர்ந்தவாறு பயணம் மேற்கொண்டார்கள்.
விமானநிலையத்திற்கு செல்வதற்கு முன்.. அவர்களது உடைமைகளைச் சரிப் பார்த்தார்கள். அப்பொழுது.. அவள் கண்டுப்பிடித்த அரிய வகை மீன் இறந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தாள்.
கண்களில் கண்ணீருடன் நின்றிருந்த பவித்ராவின் தோளில் ஆறுதலாக தட்டிக் கொடுத்த விக்ரம் “இது இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல் சின்ன குடுவையில் வைத்தால்.. எப்படி உயிருடன் இருக்கும் பவித்ரா? ஆனா நானும் ரொம்ப எக்ஸைட்டா இருந்தேன். ஆனா கொஞ்சம் இப்படி நினைச்சு பாரு.. இந்த மாதிரி அரிய வகை மீன்! அதுவும் மனிதன் முகத்துடன் இருக்கும் மீன் ஆராய்ச்சியாளர்களின் கைகளில் கிடைத்தால்.. அதோட நிலைமை! நீ உண்மையைத் தான் கூறுகிறாய்.. நீ வந்த கப்பலில் உன் கூட வந்தவர்களைக் கொன்றவர்களைக் கொன்றது.. இந்த மீன் வகையைச் சேர்ந்தது தான் என்பதை நிரூபிக்க இது கிடைத்தப் பொழுது மகிழ்ந்தோம். இது உயிருடன் இருக்கும் பொழுது.. ஃபோட்டோ வீடியோ எடுத்திருக்கீங்க தானே!” என்று கேட்டான்.
அபினவ் “ஆமா ஸார்! எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வைத்திருந்தோம்.” என்றான்.
“குட்.. அது போதும்! இதோட ஆயுள் காலம்.. இது கரையில் வந்த போதே முடிந்திருக்கும். ஆனா பவித்ராவிற்கு ஹெல்ப் பண்ணிட்டு இறந்திருக்கு என்று நினைச்சுக்கலாம்.” என்கவும், அவன் கூறியதில் இருந்த உண்மையில் ஆம் என்று தலையை ஆட்டினாள்.
பின்னர் அவளிடம் இருந்து அதை வாங்கிய சிறு ஐஸ் பெட்டியை வாங்கி.. அதற்குள் அதை வைத்தான். பேட்டரி மூலம் இயங்கும் அந்த ஐஸ் பெட்டியின் பேட்டரி முடிய எத்தனை நாட்கள் ஆகும் என்று விசாரித்தான். பத்து நாட்கள் வரை வரும் என்று கடைக்காரர் கூறினார்.
பவித்ராவை திரும்பிப் பார்த்து “அதற்குள் நம்ம மிஷனை முடிச்சுரலாம் பவி!” என்றவன், அந்த பெட்டியை விமானநிலையத்தில் உள்ள லாக்கர் பாக்ஸில் வைத்து பணத்தைக் கட்டிவிட்டு வந்தான்.
பின்னர் மதியம் சரியான நேரத்திற்கு புறப்பட்ட விமானம் ஆஸ்திரேலியா கண்டத்தின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பிரிஸ்பைன் விமானநிலையத்தை நோக்கி சென்றது.
ஸ்ரீலங்கா விமான நிலையத்தில் கஸ்டம்ஸிடம் அவர்கள் கொண்டு வந்த பொருட்கள் தேக்கம் கொண்டன. அவர்கள் ஆராய்ச்சி குழுவை சேர்ந்தவர்கள்.. என்று வேறு வழியில்லாமல் தங்களைப் பதிவு செய்துவிட்டு அனுமதி வாங்கிக் கொண்டு சென்றார்கள். அப்பொழுதே.. அவர்களுக்கு தெரிந்துவிட்டது. இதை எப்படியும் மோப்பம் பிடித்துக் கொண்டு ஆஸ்திரேலியாவை நோக்கி வருவார்கள். இங்கு ஆட்களை ஏற்பாடு செய்தது போல்.. அங்கேயும் ஆட்களை ஏற்பாடு செய்து இவர்களைத் தடுக்க முயலலாம். எனவே கவனமாகவும், எல்லாவற்றிக்கும் தயாராகவும் இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு புரிந்தது.
அட்லாண்டிக் கடலின் மேல் விமானம் பயணம் செய்துக் கொண்டிருக்கையில் எதையோ நினைத்து சிலிர்த்த அபினவ் பீதியுடன் விக்ரமை பார்த்து “மை காட்! கொஞ்சம் மிஸ் ஆகிருந்தாலும்.. அவன் கையில இருக்கிற கத்தியால உங்களை குத்தியிருப்பான். நினைச்சு பார்த்தாலே பயமா இருக்கு!” என்றான்.
விக்ரம் “அப்போ நினைக்காதே!” என்று அசட்டையுடன் கூறினான்.
அபினவ் “என்ன ஸார்!” என்கவும்.. விக்ரம் “அபினவ்! எப்போ பவியோட ஆராய்ச்சி வெளி வராமல் இருப்பதைத் தடுக்க அவளை பைத்தியமாக வச்சுருக்கிறாங்க.. என்ற கேவலமா சதியைக் கண்டுப்பிடித்தேனோ! அப்பவே இது சாதாரண விசயம் இல்லை.. என்று தெரிஞ்சுருச்சு! அப்பறம் இந்தியாவுல நம்மை கொல்ல சதி நடந்த போது.. இவங்க எந்தளவுக்கு வேணும்னாலும் போவாங்கன்னு தெரிஞ்சுருச்சு! எல்லாத்துக்கும் தயாராக தான் இதுல இறங்கியிருக்கேன். இவங்க இப்படி நெருக்கடி கொடுக்க கொடுக்க தான்.. இந்த விசயத்துல ஜெயிக்கணும் என்கிற வெறி எனக்கு ஏறிட்டே போகுது. ஜெயிக்கணும் என்றால்.. ரொம்பவும் கவனமாகவும் இருக்கணும் என்பதிலும் தெளிவாக தான் இருக்கிறேன். டொன்ட் வெர்ரி அபினவ்! அவங்களோட தோல்வியை நாம பார்க்க தான் போகிறோம்.” என்றான்.
பின் விக்ரம் தொடர்ந்து “நீயும் சும்மா இல்லை அபினவ்! நீ கார் ரேஸரா என்ன.. செமையா கார் ஓட்டறே! துரத்திட்டு இருந்தவங்களை காரை வச்சே அட்டேக் பண்ணியதால் தான்.. அவங்க கிட்ட இருந்து தப்பித்தோம்.” என்றான்.
அபினவ் “எஸ்! அங்கே கன்னியாகுமரியில் கூட எங்களை அட்டேக் பண்ணிட்டு இருந்தவங்க கிட்ட இருந்து காரில் தான் தப்பித்து வந்தோம்.” என்றவன், தொடர்ந்து “ஆக்சுவலா கார் நார்மலா எல்லாரும் மாதிரி தான் ஓட்டுவேன். ஆனா இப்படியெல்லாம் ஸ்டென்ட் செய்வதற்கு காரணம்.. உயிர் பிழைக்கணும் என்கிற பயம் தான்! மற்றபடி.. உங்களை மாதிரி வெறி எல்லாம் இல்லை..” என்கவும், விக்ரம் சிரித்தான்.
அப்பொழுதே இவர்கள் இருவர் மட்டும் பேசிக் கொண்டிருக்க.. பவித்ரா அவர்களின் பேச்சில் கலந்துக் கொள்ளாமல் சன்னலின் வழியாக தெரிந்த கடலை வெறித்தவாறு அமர்ந்திருந்தாள்.
எனவே விக்ரம் “பவி! ஆர் யு ஒகே!” என்று கேட்டான்.
அதற்கு திரும்பி அவனைப் பார்த்த பவித்ரா “ஐயம் நாட் ஒகே! எனக்கு என்னோட இலட்சியத்தில வெற்றிப் பெறணும் என்கிற வெறி இருக்கு! அதுக்காக என் உயிரைக் கூடத் தர ரெடியா இருக்கேன். ஆனா அதுல உங்க இரண்டு பேரையும் இழுத்து விட்டுட்டேனோன்னு எனக்கு ரொம்ப கில்டி ஃபீலா இருக்கு!” என்றாள்.
விக்ரம் “ஏன் உனக்கு மட்டும் தான் தமிழ், தமிழர் பற்றிய பற்று இருக்கணுமா.. எங்களுக்கு எல்லாம் இருக்க கூடாதா! அதற்கு நாங்க உயிரைக் கொடுக்கக் கூடாதா!” என்று ஜோக் போல பேச முயன்றான்.
பவித்ரா அமைதியாக இருக்கவும், விக்ரம் ஒரு கரத்தால் அவளைத் தோளோடு அணைத்தவன் “பவி! நீ சொல்ல வருவது புரியுது. உனக்கு என்ன ஆனாலும் பரவாலை. ஆனா எங்களுக்கு ஒன்றும் ஆகி விடக் கூடாது என்று நினைக்கிறே! அதே மாதிரி என்கிட்ட கேட்டா.. எனக்கு என்ன ஆனாலும் பரவாலை.. உனக்கு ஒன்றும் ஆகிட கூடாதுன்னு சொல்வேன். பட் ஃபீலிவ் மீ! யாருக்கும் ஒன்றும் ஆகாது. நான் ஆகவும் விட மாட்டேன்.” என்றான்.
அவனைப் பார்த்த பவித்ராவின் கண்களில் ஏனோ கண்ணீர் வழிந்தது.
அதை விக்ரம் மெல்ல துடைத்து விடவும், பவித்ரா “இதை நான் பிராமிஸா எடுத்துக்கலாமா!” என்று கேட்டாள்.
“தாராளமா!”
“அப்போ இன்னொரு பிராமிஸும் செய்துக் கொடுங்க!”
“சொல்லு!”
“நான் உங்க கூட நிறையா காதலோட வாழணும்.” என்றாள்.
கண்கள் பனிக்க அவள் கூறிய வார்த்தைகள்.. அவனது இதயத்தை நனைத்தது.
விக்ரம் “முதல்ல எதைப் பார்த்து உன்னை லவ் செய்தேன்னு எனக்கு தெரியலை. முதல்ல என்னவோ ஒண்ணு என்னைக் கவர்ந்துருச்சு! ஆனா.. இப்போ எவ்வளவோ விசயங்களைத் தைரியத்தோட தாங்கிட்டு போராடிட்டு இருக்கிற இந்த பவித்ராவை நான் ரொம்பவும் லவ் செய்யறேன். நானும் என்னோட லவ் லைஃப்பை இப்படி இன்டியனா ஜோன்ஸ் படம் மாதிரி ஓடிட்டு வாழ்வதை விட.. ப்ரென்ச் கிஸ் மாதிரி வாழ ஆசைப்படறேன்.” என்றான்.
அவன் கூறியதைக் கேட்டு.. பவித்ராவின் முகத்தில் முறுவல் மலர்ந்தது.
அப்பொழுது அபினவ் “நீங்க பேசறீங்கன்னு நான் அந்த பக்கம் பார்த்து திரும்பி உட்கார்ந்துட்டேன். ஆனா அப்பவும் நீங்க பேசுவது கேட்குது. திரும்பி உட்கார்ந்ததில் இடுப்பும் வலிக்குது. நான் அப்படியே ஒரு ரவுண்ட் அடிச்சுட்டு வரேன்.” என்றவாறு எழுந்தான்.
அவனது கையைப் பிடித்து அமர வைத்த விக்ரம் “எங்களுக்கு பேசுவதற்கு நிறையா காலம் இருக்கு! இதை முடிச்சுட்டா தான் நாங்க ப்ரீ ஆக முடியும் சரி சப்ஜெக்ட்டுக்கு வரேன். இப்போ நாம ஆஸ்திரேலியா பழங்குடி மக்களை சந்திக்க போகிறோமா?” என்று கேட்டான்.
பவித்ரா “ஆமாம் விக்ரம்! இந்த உலகத்துல இன்னும் வசிச்சுட்டு இருக்கிற பழங்குடியினர்களில் இவங்க தான் பழமையானவங்க! அத்தோட.. ஆஸ்திரேலியா கண்டத்தோட புவியியல் பற்றிய ஆராய்ச்சி குழுவை சந்தித்து சில டிடெய்ல்ஸ் வாங்கணும்.” என்றாள்.
விக்ரம் “எதுக்கு?” என்று கேட்டான்.
“விக்ரம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா பெரிய கண்டம் இல்லை என்றாலும்.. அதுல அறுபது பர்சேன்டேஜ் தான் மக்கள் வசிக்க தகுதியான இடங்கள்.. மீதி பகுதி எல்லாம்.. பீடப் பகுதி.. அதாவது பாலைவனம் சூழ்ந்த பகுதி! இப்படி ஒரு கண்டத்தில்.. கிட்டத்தட்ட பாதி பகுதி.. இப்படி இருப்பது விசித்திரம் தானே! அதோட பின்னணி பற்றி விபரங்கள்.. குமரி கண்டத்தோட அந்த கண்டம் இணைந்த பகுதியாக இருக்கலாம் என்பதை நிரூபிக்க சாட்சியாக கிடைத்தாலும் கிடைக்கலாம்.” என்றாள்.
அபினவ் “எஸ் ஸார்! அதோட ஆஸ்திரேலியா மற்றும் நீயூலாந்து இருக்கிற மக்களோட பூர்விகம் அந்த கண்டமே இல்லை. அவங்க இங்கிலாந்து வம்சவளியை சேர்ந்தவங்க! அவங்க தான் கப்பல்ல பயணம் செய்யப் பழகிட்டதும்.. உலகத்தையே சுற்றி வந்து.. எங்கே எல்லாம் நிலத்தை பார்த்தாங்களோ.. அங்கே எல்லாம் வாழ ஆரம்பிச்சுட்டாங்களே! அப்படிப் போய் வாழ்ந்தவங்க தான் அவங்க! உண்மையான ஆஸ்திரேலியா கண்டத்து குடிமக்கள் இன்னும் பழமை மாறாமல் இருக்கும் அந்த பழங்குடியினர் தான்! அவங்க குமரி கண்டத்தோட மீதி குடிமக்களாக இருக்கலாம் என்று பவித்ரா அவங்க கட்டுரையில குறிப்பிட்டு இருக்காங்க! அவங்க முகச்சாயல் பார்த்தீங்கன்னா.. நம்மளோடது மாதிரி தான் இருக்கும். அவங்க மட்டுமில்ல இந்தோனிஷியா, பாலி மாதிரி கிழக்காசிய நாடுகளில் வாழும் மக்களுக்கும் நம்ம தமிழ் மக்கள் தான் முன்னோர்கள்! ஆனா அவங்க கூட புத்த மதத்தினர் கலந்துட்டதாலே.. அவங்க முகத் தோற்றம்.. கொஞ்சம் கொஞ்சமாக மாறிடுச்சு!” என்றான்.
விக்ரம் “அப்போ நம்ம சொந்தக்காரங்களைப் பார்க்க போகிறோன்னு சொல்லு!” என்று சிரிக்கவும், “அதுவும் உண்மை தான்!” என்று அபினவ் சிரித்தவாறு ஒத்துக் கொண்டான்.
குறிப்பிட்ட நேரத்தில் பிரிஸ்பைன் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது. அங்கிருந்து ஹர்ன் தீவில் இருக்கும் விமான நிலையத்திற்கு சார்ட்டர் விமானத்தின் மூலம் சென்று இறங்கினார்கள். இவ்வாறு விமான பயணத்தில் இரண்டு நாட்கள் கழிந்தன.
பழங்குடியினர் வாழும் டோராஸ் ஸ்ட்ரெய்ட் தீவில் அவர்களது அடுத்த ஆராய்ச்சியை மேற்கொள்ள பயணித்தார்கள். அங்கு அவர்கள் சந்திக்க போகும் நிகழ்வுகளின் வீரியம் தெரியாமல் பயணித்தார்கள்.
Latest Post: கனவுகள் வெல்ல காரியம் துணை Our newest member: Mohanraj Recent Posts Unread Posts Tags
Forum Icons: Forum contains no unread posts Forum contains unread posts
Topic Icons: Not Replied Replied Active Hot Sticky Unapproved Solved Private Closed
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.
You cannot copy content of this page