All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வனமாலி - Story Therad

 

Parveen Banu
(@parveen-banu)
Active Member Author
Joined: 1 week ago
Posts: 11
Topic starter  

வணக்கம் தோழமைகளே,

வனமாலி இனி உங்களுக்காக தளத்தில் ... 😊

 

This topic was modified 1 week ago 2 times by Parveen Banu
This topic was modified 1 week ago by Kavi Chandra
This topic was modified 4 days ago by Parveen Banu

   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Active Member Author
Joined: 1 week ago
Posts: 11
Topic starter  

வனமாலி

 

’’ கான சிந்தூரி….’’ 

 சுவர்களில் எட்டிமோதிய சத்தம், அறைக்குள் எட்டும்போது முகத்தில் ஒப்பனையை முடித்துக் கொண்டு கழுத்துக்கு இடம் பெயர்ந்திருந்தாள் கான சிந்தூரி.

அடுக்குமாடிக் குடியிருப்புகள் நெருக்கிக் கொண்டு இருந்த நகரத்தில் குறுகலான அந்த தெருவில், ஒருபக்கமாய் சாய்ந்து கொண்டு கண்ணடித்துக் கொண்டு இருந்தது ‘ ஜான்சி பெண்கள் விடுதி.’ 

கைப் பிடிச்சுவரில் அமர்ந்து, காலையிலேயே காதலிக்க ஆரம்பித்திருந்தார்கள் ஒருசில பெண்கள். இருக்கும் மூன்றே மூன்று குளியலறையில் எட்டு மணிக்குள் இடம் கிடைத்து விட்டால், தெருமுனை பிள்ளையார்க்கு, ஒரு தேங்காயை பரிசளிப்பதாய் வேண்டிக் கொண்டு நின்றவர்கள் இன்னும் சிலர்.

‘’கானா, உன்னை கூப்பிடறாங்க பாரு…’’ கட்டிலில் காலைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த, வைசாலி முகத்தை நிமிர்த்தி பார்த்துக் கேட்டாள். 

’’அது எங்களுக்கு தெரியுது. நீயேன் இப்படி குரங்கே குசாலா மாதிரி உட்கார்ந்திருக்க..? ‘’

‘’ பாத்ரூம் போகணும்டி..’’

‘’ போ, அதுக்கு ஏதாவது கெஜட்டட் ஆபிசர்கிட்ட கையெழுத்து வாங்கணுமா..?’’ ஐ லைனரை எடுத்து கோடிழுத்துக் கொண்டாள்.

 ‘’ ஃபுல்லா இருக்குடி. ’’

 ’’ எது வயிறா..?’’

‘’ வயிறும் தான். கொஞ்சம் மிஸ் பண்ணிட்டேன். உன்னை மாதிரி, மூணு மணிக்கு எந்திரிச்சு எல்லா வேலையும் முடிச்சிட்டு வந்திருக்கணும். கொஞ்சம் கனவுல ராணா கூட பிசியா இருந்துட்டேன்.’’ என்றவளை திரும்பிப் பார்த்து அழகாய்ச் சிரித்தாள்.

‘’ கனவிலேயே வாழ்ந்து, கனவிலேயே எல்லாத்தையும் முடிச்சிடு. கனவுல போறதா நினைச்சு, பக்கத்துல படுத்திருக்கேன். பெட்டை நாறடிச்சுடதே.’’ என்றவளின் முகத்தில் டவலை சுருட்டி விசிறி அடித்தாள்.

‘’கான சிந்தூரி….’’ எங்கோ ஒலித்த குரல், மூச்சிரைக்க மாடியேறி வந்து வாசலில் நின்று அழைக்க, கொஞ்சம் பவ்யமாகி பயந்த மாதிரி முகத்தை மோல்டில் போட்டுக் கொண்டு முன்னே வந்து நின்றாள்.

‘’சொல்லுங்க மேடம். கூப்பிட்டீங்களா..?’’

‘’அப்ப, கூப்பிட்டது உனக்கு கேட்கல அப்படித்தானே..? இதை நான் நம்பணும். பாத்ரூம்ல இருக்கிற பக்கெட்டுல துணியை ஊற வச்சிட்டு வெளக்கெண்ணை மாதிரி போயிட்டா, மத்தவங்க எப்படி யூஸ் பண்றது..? எத்தனை தடவை உனக்கு டிசிபிளினை மெயிடென் பண்ணச் சொல்லி சொல்லியாச்சு. இப்படியே போனால், பெட்டியைத் தூக்கி வெளியே வச்சிட வேண்டியதுதான்.’’ கண்ணாடியை மேலேத்திக் கொண்டு சொன்ன மாலதி அக்காவை சிரிக்காமல் பாவமாய்ப் பார்த்தாள்.  

‘’பெட்டியைத் தூக்கி வெளியே வைக்கிறதுக்கு பதிலா, ஊறவச்ச துணியை ரெண்டு கும்மு கும்மி, காயப் போட்டுட்டா, ரெண்டு பேரோட பிரச்சனையும் ஒரே நேரத்துல சரியாகிடும்லக்கா.’’ என்றவள் கன்னத்தில் ஒரு இடி விழுந்தது. வேகமாய்த் தேய்த்துக் கொண்டாள்.

‘’திமிரா..? இன்னும் போனமாசம் ஹாஸ்டல் பீசே கட்டல நீ. எனக்கென்னடி தலையெழுத்து உனக்கெல்லாம் வடிச்சுக் கொட்ட..? இதுல உன் அழுகுத்துணியை வேற நான் துவைச்சு போடணுமாக்கும்..? பிய்ச்சுடுவேன் பிய்ச்சு…’’ மாலதியின் கோபம் தலைக்கேற வார்த்தைகள் தடிமனாய் வந்து விழுந்தது. 

கான சிந்தூரியின் கண்கள் கொப்பளித்துக் கொள்ள, மாலதியின் முகம் ஒரு நிமிசத்தில் நிறம் மாறியது.

‘’சரி, என்ன இந்நேரத்துலயே கிளம்பிட்டே..? சாப்பிட்டியா..,? இட்லி பிடிக்காதே,தோசை ஊத்தச் சொல்லி சாப்பிட்டு இருக்கலாம் இல்ல..’’ வார்த்தைகளில் வலியும் தந்து, மருந்தும் தந்த மாய வித்தையை என்னவென்று சொல்வது..?

பின்னே திரும்பி வைசாலியை பார்த்து கள்ளத்தனமாய்ச் சிரித்தாள் சிந்தூரி.

முறைத்து பார்த்த வைசாலி, இவள் மீதெறிய பொருளைத் தேட, அமைதியாக அறையை விட்டு வெளியில் வந்தாள். எல்லா அறைகளிலும் பரபரப்பு பற்றிக்கொண்டு இருந்தது. ஆங்காங்கு பால்கனி சுவரில் அமர்ந்து கொண்டு காலாட்டிக் கொண்டு பல பெண்கள் பாத்ரூம் கிடைக்க தவமிருந்தார்கள்.

அத்தனை பேருக்கும் கையாட்டிக் கொண்டே சாப்பாட்டு அறைக்கு வந்தாள்;

வழங்கப்பட்ட நான்கு இட்லிக்கு பழக்கப்பட்டு இருந்தது வயிறு. அத்தோடு நிறுத்திக் கொள்கிறது பசி, கையிருப்பை எண்ணி.

   இவள் வராண்டாவிற்கு வர, வாட்ச்மேனுடன் விவாதத்தில் இருந்த மாலதியின் முகம், இவளைக் கண்டதும் கனிந்து போனது.

  ‘’ தோசை சாப்பிட்டியா..? இல்ல இட்லிதானா..?’’

‘’ இட்லி போதும்கா.’’

‘’ஏன் என்மேல கோபமாக்கும்..? நான் இதை சேவையா செய்தால் கண்டிப்பா உன்னைக் கண்டிச்சு காசு கேட்டிருக்க மாட்டேன். இது தொழில். உனக்குமட்டும் சலுகை காட்ட முடியாதுல..? அதேநேரம் ஏனோ உன்னை கண்டிக்கவும் முடியல.’’ 

‘’காசு குடுத்து தங்கினாத்தான் இது ஹாஸ்டல். இல்லாட்டி இதுக்கு பேர் அனாதை இல்லம்..! எனக்கும் அது தெரியும்கா. தம்பி அவசரமா பணம்கேட்டு ஃபோன் பண்ணிட்டான். அதான் அனுப்பி வச்சிட்டேன். கண்டிப்பா ஓவர் டைமாவது பார்த்து உங்களுக்கு பீசை கட்டிடறேன். நான் வரட்டுமா..?’’ துப்பட்டாவை சரிசெய்துகொண்டு பெரிய இரும்பு கேட்டை திறந்துகொண்டு தெருவில் அடியெடுத்து வைத்தாள். கதையின் நாயகி.

மாலதி சின்ன பெருமூச்சை சிந்திக்கொண்டே அங்கிருந்து உள்ளே நகர்ந்தாள்.

  எட்டைத் தொட்டு நேரம் முத்தமிட்டுக் கொண்டிருந்தது. நீண்ட கொஞ்சம் விசாலமான தெரு.ப்ளாட்டுகளும், சிறு வணிக கடைகளும், வழி நெடுகிலும் இருக்கும்.  தெருவை விட்டு வெளியில் வந்தால், நெடுஞ்சாலை. வீரிட்டு பறக்கும் வாகனங்கள். வலப்பக்க திருப்பத்தில் பஸ் ஸ்டாண்டும், இடப்பக்க திருப்பத்தில் ஆட்டோ ஸ்டாண்டும் இருக்கும். 

அத்தனையும் பரிட்சயப்பட்ட முகங்களாக பார்ப்பது ஏதோ உள்ளுக்குள் பாதுகாப்பு உணர்வு.

ஆட்டோ ஸ்டாண்டில் அந்த காலையிலேயே கொட்டப் பாக்கும் கொழுந்து வெத்திலையும் கேட்டுக் கொண்டிருந்தார்.எப்.எம் ரெயின்போவில் எஸ்.ஜானகி. 

ஒன்பதாவது உலக அதிசயமாக கூட்டம் அதிகமில்லை பஸ்ஸில். ஜன்னலோர இருக்கைக்கு மின்னலாய்த் தாவி, அமர்ந்து கொண்டாள். மிகச்சரியாய் அலைபேசி அழைத்தது.

  சரவணன்..! சின்னதாய் முகத்தில் சிரிப்பு வெட்டியது. அதேநேரம் பேருந்தும் மிகச்சரியாய் குலுங்கி கிளம்பியது.

‘’ சரோ, என்னடா இந்நேரத்துக்கே பண்ணி இருக்கே..? காலேஜ் போகல..?;;

‘’ பஸ்ல தான் சிந்து இருக்கேன்.’’

‘’ ஐய்..! சேம் பின்ச்.., நானும் பஸ்ல தான் இருக்கேன். வீட்டில சித்தி, பூரணி எல்லாம் எப்படி இருக்காங்க..?’’

‘’ரெம்ப நல்லா இருக்காங்க. சும்மா உன்கிட்ட பேசணும் போல இருந்துச்சு. அதான்…’’ 

    ‘’ டேய் கேடி, நீ இப்போ வலது காதுல போனை வச்சிட்டு இடது கை நகத்தை பார்க்கிறியா..’’

    ‘’ அய்யோ எப்படி டி..? என் எக்ஸ்ரே கண்ணே…’’

    ‘’ போடா முட்டாள். நீ ரெம்ப குழைஞ்சா இதான் உன்னோட மேனரிசம். எனக்கு உன்னைத் தெரியாது..! சரி சொல்லு என்ன வேணும்..?’’ அத்தனை அன்பும் அந்த கடைசி வார்த்தையில் மொத்தமாய் ரசமாக இறங்கி இருக்க, சரவணனின் கண்கள் நெகிழ்ந்து கொண்டது

   ‘’ ஒண்ணும் வேணாம் சிந்து… சும்மாதான்… பாட்டுக் கேட்டனா உன் நியாபகம் வந்திடுச்சு…’’ குரல் அவனின் நெகிழ்ச்சியைக் காட்டிக் கொடுத்தது.

   ‘’ என்ன பாட்டுடா…’’

   ‘’ நானொரு சிந்து… காவடிச் சிந்து…’’

  சென்னையும், அருப்புக் கோட்டையும் மொத்தமாய் மெளனமாகிக் கொண்டது இப்போது.

   ‘’ சிந்து…’’

   ‘’ ம்….’’

   ‘’அமைதியாயிட்டயே…’’

‘’என்னத்தைச் சொல்றது..? சரி சரி. பாட்டுக் கேட்டுட்டு இருக்காம காலேஜ் போய் ஒழுங்கா படிக்கிற வழியைப் பாரு. எனக்கு நீ தரவேண்டிய பாக்கி ஏறிட்டே போகுது.! ஒரு லட்சத்து முப்பதாயிரத்தி ஏழுநூத்தி முப்பது ருபாய். கூடப்பிறந்த பாவத்துக்கு ஏழுநூத்தி முப்பது வேணா தள்ளுபடி பண்ணிடு. மீதியை செட்டில் பண்ணுடா சீக்கிரம்.’’

 அவள் அடித்த ஜோக்கில் அருப்புக்கோட்டை லேசாக, சென்னையில் சின்னதாய் தென்றல் அடித்தது இதழோரம்.

 ‘’ ஸ்டாப்பிங் வந்திடுச்சு. நான் அப்புறம் பேசறேன்.’’ இணைப்பை துண்டித்து விட்டு பைக்குள் அலைபேசியை பத்திரப்படுத்திக் கொண்டாள்.

காலியான பக்கத்து சீட்டை ஜாலியாக பார்த்தாள். பக்கத்தில் துணை இல்லாத பேருந்து பயணம் காலை நேரத்தில் வரம். தான் இறங்கும் வரைக்கும் அந்த இருக்கை காலியாக இருக்கவேண்டும் என்று பேருந்து ஓட்டத்தில் கடந்துபோன திருச்சபை தேவாலயத்தில் விண்ணப்பம் வைத்தாள். 

 ஆனால், அவள் பயணம் முழுக்க பக்கத்து இருக்கை காலியாகவே தான் இருக்கப் போகிறது என்பதுதான் அந்த தேவனின் தீர்ப்பு என்பது அவள் அறியாதது.   

தி.நகரில் இறங்கி அப்படி இப்படி நாலைந்து திருப்பங்களில் போக்கு காட்டிவிட்டு. ராஜாபாதார் தெருவிற்குள் நுழைந்தாள். பெரிய போர்ட்டிக்கோவும், வெளியில் நின்ற கார்களும் அவளை வரவேற்றது. நிற்க. அவள் இல்லாமல் யார் வந்தாலும் அவை வரவேற்கத்தான் போகிறது. 

ஒற்றை இறக்கை கொண்ட நீல வண்ணப் பறவையின் தலையில் ஒரு பந்தைச் சுமப்பது போன்ற லோகோவின் கீழ், நிலா எப்,எம் என்ற மெர்குரி எழுத்துக்கள் பகலிலேயே மின்னியது.

 ஐடி கார்டை எடுத்து மிசினில் தேய்த்து தன்னை ருஜுபடுத்திக் கொண்டு உள்ளே நடந்தாள்.

பெரிய ஹாலை மடக்கிக் கொண்டு நிறைய நிறைய அறைகள், ஒவ்வொரு அறைக்கும் பெயர் அதனதன் முகப்பில் நீல நிறத்தில் எழுதப்பட்டு இருந்தது.

‘’ சிந்தூரி…’’ குரல் கேட்டு திரும்பிப் பார்த்தவள் முகம் நொடியில் மலர்வை நாட, நிகழ்ச்சி தயாரிப்பாளர் நான்சி மேடம் இவளை நோக்கி வந்தார்.

‘’ எத்தனை மணிக்கு உனக்கு இன்னைக்கு ப்ரோக்ராம் இருக்கு..?’’

‘’ பதினொன்று டூ பனிரெண்டு மேடம். அப்புறம் ஈவினிங் ஃபோர் டூ ஃபைவ்.’’ 

‘’முடிச்சிட்டு வாங்க. அதுக்கு முன்னாடி கொஞ்சம் அபிசியல் ஓர்க் இருக்கு அதையும் முடிங்க, எடிட்டிங்கல கணேசன் நிற்கிறாரு, அவருக்கு கொஞ்சம் கைட் பண்ணுங்க. நம்ம யாரும் நிற்காததால, போன சமையல் நிகழ்ச்சியை சொதப்பி வச்சிருந்தாரு. தேவையில்லாத பகுதிகளை பன்ச் பண்ணி எடுத்திடச் சொல்லுங்க. ‘’ அவர் நடந்து கொண்டே பேசிக் கொண்டிருக்க, அத்தனையையும் காதிலும் மனதிலும் ஏற்றிக் கொண்டு தலையசைத்தபடி நடந்தாள்.

மார்பிள் தரைகளில் நிழலுக்கு பதில் இவர்கள் முகங்களே விழுந்து கிடந்தது.

மிகச் சரியாய் அலைபேசி சத்தம் காட்டி சிணுங்க பேச்சு இடை வெட்டியதில் கொஞ்சம் எரிச்சலாய் பார்த்தார் நான்சி. சன்னமாய் உதடு கோணி சிரித்துக் கொண்டாள்.

 ‘’ சாரி மேம்..! ‘’ என்றாள் வேகமாய் அலைபேசியை எடுத்து அதன் குரல்வளையை அடைத்து பூட்டி வைத்தாள்.

 ‘’ மூணு வருசமா இங்கே வேலை செய்றே. உன்னுடைய சின்சியாரிட்டி, டெடிகேசன் இதைப் பார்த்துத் தான் உனக்கு இங்கே அறிவிப்பாளர் வேலையோடு நிற்காம அபிசியல் ஓர்க்கும் தந்தது. ஆனால் அப்பப்போ நீ சிறுபெண்ணுனு காட்டிடற..’’ நான்சியின் குரலில் இருந்த கண்டிப்பு, சரோஜ் நாராயண் சாமியை நினைவூட்ட, முட்டி வந்த சிரிப்பை பற்களுக்குள் கட்டிப் போட்டுக் கொண்டு நின்றாள்.

‘’இங்கே எல்லா ரூம்லயும், ஏதாவது ஒரு நிகழ்ச்சியோட, ரெகாடிங் போயிட்டு இருக்கும். என்னதான் சவுண்ட் ப்ரூப் ரூம்ல இருந்தாலும், சட்னு கதவை திறந்தால், வெளியில் இருக்கும் சத்தம் உள்ளே கசியும். அது எடிட்டிங்ல ம்யூட் பண்றது பெரிய தலைவேதனை. அதனாலதான் இங்கே எல்லாரையும் மொபைலை வைப்ரேசன்ல போடச் சொல்றது. பேசறதாக இருந்தா வெளியில போய் பேசுங்கன்னு சொல்றது.’’ நூத்தி பத்தாவது முறையாய் அதே பல்லவியை சுதி தப்பாமல் பாட, தோளைக் குலுக்கிக் கொண்டு மன்னிப்பு சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.

 அவளுடைய அன்றாடம் அலைகற்றைகளின் ஒலிக்கற்றைகள் வழியாக ஊசலாட ஆரம்பித்து விட்டது.

நிறைய மரங்கள் அப்பிக் கிடந்த வெளிப்பகுதிக்கு வந்தாள். நீண்ட சிமெண்ட் பெஞ்சுகள், காய்ந்து போன பறவை எச்சத்தோடு படுசுத்தமாக இருந்தது. இலைகள் மோதும் சத்தம் கிலுகிலுப்பை ஆட்டுவது போல் இருந்தது. 

பையை எடுத்து நிதானமாக அலைபேசியை எடுத்துப் பார்த்தாள்.

வனமாலி…’ என்ற பச்சை நிற எழுத்துக்கள் ஒளிர்ந்து அடங்கி இருந்தது. தன்னால் ஒரு புன்னகை இதழில் படிந்தது…

 

“.....எழில்தரும் ஜோதி
மறந்திடுவேனா
இகமதில் நானே பிரிந்திடுவேனா
என்னை மனம் நாடிட சமயம் இதானா
கனிந்திடும் என்னாளுமே
கண்ணான என் ராஜா அழைக்காதே.., நினைக்காதே… அவைதனிலே என்னையே ராஜா…

 ஆருயிரே உன்னையே மறவேன்….’’

This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Active Member Author
Joined: 1 week ago
Posts: 11
Topic starter  
  1.  

கருத்து க்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்து கொள்ளுங்கள்..

https://kavichandranovels.com/community/topicid/396/

This post was modified 1 week ago by Kavi Chandra
This post was modified 4 days ago by Parveen Banu

   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Active Member Author
Joined: 1 week ago
Posts: 11
Topic starter  

கருத்து க்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்து கொள்ளுங்கள்..

https://kavichandranovels.com/community/topicid/396/


   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Active Member Author
Joined: 1 week ago
Posts: 11
Topic starter  

னமாலி - 3

மெல்லிய அருவிக் கோடாய் மழை ஜன்னல் கண்ணாடிகளின் அழுக்கு கழுவிக் கொண்டு இருந்தது.

கோப்பைகளின் கழுத்துவரைக்கும் ததும்பிய தேநீர்கள் மழைக்கு மாற்று மருந்தாக அமையும் போல் தோன்றியது.

ரூம் ஹீட்டரை உயிர்பித்து அறையின் வெப்பநிலையை சீதோஷணமாக்கி வைத்தார்கள்.

மழையும் பனியும் சேர்ந்தே பொழியும் ஹுஸ்டனின் நெல்சன் பாரடைஸ் நட்சத்திர ஹோட்டலின் உயர்தர அறை அது. ஒற்றை அறையே ஒரு மொத்த குடியிருப்பின் சகலத்தையும் உள்ளடக்கி இருந்தது. 

 பூனைக் கண் மருத்துவ விஞ்ஞானிகள் ஸ்காட்சில் இருக்க, டாக்டர் மாதூர் மட்டும் டீயை ரசித்துக் கொண்டு இருந்தார்.

‘’அந்த ஜன்னல் கம்பிகளையே ஏன் பார்த்துட்டு இருக்கீங்க மிஸ்டர் மாதூர்..? உங்க பார்வை லயிப்பை பார்க்கும்போது உங்க மூளை ஏதோ எசகு பிசகா யோசிக்குதுன்னு நினைக்கிறேன்…’’ ஸ்காட்ச் தெறிக்க சிரித்தார் டாக்டர் டேவிட்.

 “இயற்கையை எதிர்த்து நாம அரண் அமைச்சு பாதுகாத்துக்க முடியும், ஐ மீன், இயற்கைக்கு மாற்று ஏற்பாடு மனிதனால் செய்து கொள்ள முடியும்னு நீங்க நம்பறீங்களா..?’’

அத்தனை பேரும் ஆங்கிலத்தில் சிரித்தார்கள்.

‘’ ஐ திங்க். இந்த சூழ்நிலை, மழை, இதம், நம்மை சுற்றி இருக்கிற ஏஞ்சல்ஸ் எல்லாம் சேர்ந்து டாக்டர் மாதுரை பெரிய கவிஞரா மாத்திட்டு இருக்குன்னு நினைக்கிறேன்…’’ சியர்ஸ்கள் பறந்தது.

மாத்தூர் வேகமாக தலை அசைத்தார். அறிவியல் புத்தகங்களில் பார்த்த ஐஸ்டினின் படத்தின் சாயலில் இருந்தார். அல்லது விஞ்ஞானப் பூர்வமான சிந்தனைகள் உள்ளவர்கள் எல்லாம் ஒரே சாயலில் இருக்கலாம். வெள்ளை வெளேர் என்ற தலைமுடி தோளைத் தொட்டுக் கொண்டு இருந்தது… பார்ப்பதிற்கு அதுவே சிற்றருவி ஒன்று குன்றில் இருந்து வழிந்து இறங்குவது போல் இருந்தது.

  எழுந்து போய் ஜன்னல் அருகில் நின்றார். வழிந்து கீழ் இறங்கிய மழையை கண்ணாடி வழியே மெல்லத் தடவியவர், மெதுவாக ஜன்னலைத் திறக்க, சில்லென்ற குளுமை வந்து உள்ளே இருந்த வெப்பத்தை களவாடிக் கொண்டு பறந்தது.

ஒரு முப்பது நொடிகளுக்குள்ளேயே அந்த அறையே குளுமை குடிகொள்ள, 

‘’ ஹே மாதூர். என்ன பண்ணிட்டு இருக்கீங்க. ஹீட்டர் ஓடிட்டு இருக்கு…’’ குளுமையை ஒதுக்கிவிட்டு ஜன்னலை இழுத்து அடைத்தார்.

‘’ இப்போ நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க. இயற்கையை ஜெயிக்க முடியுமா..?’’

கூர்மையான கேள்வியால் அவர்கள் குழப்பமாய் ஒருவர் முகத்தில் மற்றவர் விடைதேடி ஆராய,

 ‘’ நம்ம சுற்றி இயற்கை குளுமையா வச்சிருக்கு. ஆனால் நாம கொஞ்சம் புத்திசாலித் தனதோடு யோசித்து ஹீட்டரை உருவாக்கி வச்சுக்கிட்டதாலே இயற்கையில் இந்த தொந்தரவான காலநிலையில் இருந்து நம்மை பாதுகாக்கிறோம். சோ, எல்லாத்துக்கும் மாற்று இருக்கு.’’ பென்சிலை எடுத்து தலையில் தட்டிக் கொண்டார்.

மருத்துவர்கள் விசித்திரமாகப் பார்த்தார்கள்.

‘’ மிஸ்டர்  மாத்தூர் நிறைய சிந்திக்கிறீங்களோ…’’ சிரிப்பு மீண்டும் சிதறியது.

‘’எஸ்…இயற்கையை வெல்ல, இயற்கையின் கோரத்தின் மீது நின்று ஆதிக்கம் செலுத்த… நெஞ்சை நிமிர்த்தி மரணத்துக்கு மாற்று அறிமுகப்படுத்த….’’ மாதூரின் குரல் கூர்மையானது.

 தோள்களை குலுக்கிக் கொண்டார்கள். இதொன்றும் இந்த அறை சீதோஷ்ண நிலையை மாற்றி மிஸ்டர் மாதூர் ஆட்டம் காட்டி தன் மேதாவித்தனத்தை பறைசாற்றும் விசயமில்லை. இது பேரண்டத்தில் இதுவரை பரிசோதனையிலேயே சிக்கல்களை விளைவித்து தேங்கித் தேங்கி போனநிலை.

அறைக்குள் இருந்த தொலைபேசி சிணுங்கி ஏதோ தகவலைப் பரிமாற, மருத்துவக் குழுவில் இருந்து இருவர் விடைபெற்று வெளியில் வந்தார்கள்.

 அறையில் இருந்த மிச்ச நபர்களும் தகவல்களை சேகரிக்க, தத்தம் அறைக்கு நகர, இந்தியாவில் இருந்து பிரதிநிதியாக கலந்து கொண்ட டாக்டர் சுஷில் மாத்தூரும், பூர்வகுடி இந்தியரான டாக்டர் ஜெரால்டும் மட்டுமே அறைக்குள் மிச்சம் இருந்தார்கள்.

இன்னும் இரண்டு மணிநேரமே இருந்தது. உலக மூளை மற்றும் நரம்பியல் நிபுணர்களின் மாநாட்டிற்காக. ஹூஸ்டனின் நட்சத்திர விடுதியில் பிரமாண்டமாய் ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டு இருக்க, அத்தனை மூளைகளையும் வென்று சவால்விடும் மாதூரின் இந்திய மூளை மாநாட்டுக்கு தயாராகாமல் மனசெல்லாம் மழையிலேயே லயிக்க நின்றிருந்தார்.

‘’ மாதூர் ஜி… என்ன யோசனை..?’’

’’ வெளியில் மழையும், உள்ளே கதகதப்பையும் மாற்றி வைக்க முடியும்னா எல்லாமே முடியும்தானே…’’ மீண்டும் மழைக்குள்ளேயே தொலைந்து கொண்டு இருந்தார்.

‘’ மே பீ..! முடியலாம். முடியாமலும் போகலாம்.’’

‘’நெவர். அதுக்கு வாய்ப்பு இல்லை. முடியும். முடியணும்…’’ நரைத்த வெள்ளித் தலையை சிலுப்பிக் கொண்டார். 

டெல்லி சுக்லா மருத்துவமனையில் நாற்பதாண்டு கால பழுத்த அனுபவமும், இந்த ஆய்வில் அவருக்கிருந்த காதலும் உலக பிரசித்தம்.

மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி இருக்க, ஒவ்வொருவராக வர ஆரம்பித்து இருந்தார்கள். மருத்துவத்தை சுமக்கும் அவர்களின் முகங்களில் அத்தனை தீர்க்கம். அவர்களைப் பார்த்த டாக்டர் ஜெரால்டின் இதழ்கள் தன்னால் கேலி புன்னகையைச் சிந்தியது.

‘’ வாட் ஹேப்பண்ட் டாக்டர் ஜெரால்ட்…’’ மாதூர் மென்மையாக கேட்டார்.

‘’கான்ப்ரன்ஸ்ல இருக்கிற டாக்டர்ஸ் பார்க்கிறேன். அதான் கொஞ்சம் ஏதோ சிந்தனை…’’ திரும்பிச் சிரித்தவரைப் பார்த்து தானும் கண்களால் அந்தப் பகுதியை அளந்தவர், மெல்ல இதழ்களை நீட்டி கர்வமாய்ச் சிரித்தார்.

‘’மகத்துவமான மருத்துவம் செய்யும் காப்பாளார்கள். அதனால் அவங்க முகத்தில் கர்வம் இருக்கும் தான்.’’ மாதூர் தன்னுடைய வெண்பஞ்சு மீசையை தடவிக் கொண்டார்.

‘’ இப் யூ டோண்ட் மைண்ட். நான் கொஞ்சம் சிரிச்சுக்கலாமா…’’ என்ற ஜெரால்டின் கண்களில் மின்னிய குறும்பை ரசிக்காமல், நின்றிருந்தார் மாதூர்.

‘’ வாட் நான்சென்ஸ் திஸ்…’’

 ‘’ இல்ல மிஸ்டர் மாதூர். நீங்க சொன்னமாதிரி காப்பாளர்களே இத்தனை கர்வமா இருந்தா படைப்பாளர் எவ்வளவு கர்வமா இருப்பார். அதான் யோசிச்சேன்…’’ 

ஜெரால்டின் பதிலை ரசிக்கவில்லை டாக்டர் மாதூர்.

‘’ இது திருச்சபை கூட்டமில்லை டாக்டர் ஜெரால்ட்… உங்க பிரசங்கத்தை நிறுத்துங்க.’’      

‘’ சாரி மிஸ்டர் மாதூர். மருத்துவத்தை சேவைன்னு சொன்னா, மருத்துவரா இருக்க கர்வம் கொள்ள வேண்டியதில்லை. அதேநேரம் நமக்கு மேலே ஏதாவது ஒண்ணு இருக்கிறதா நம்பணும். அது என்னுடைய பாலிசி.’’

 மாதூர் முகம் திருப்பிக் கொள்ள, டாக்டர் ஜெரால்ட் அங்கிருந்து விலகி நகர்ந்தார்.

 பெரிய முன்னுரையுடன் டாம்பீகமாக ஆரம்பமானது மூளையின் பெருத்த நிபுணர்களின் மாநாடு.

அத்தனை உரைகளுக்கும் இறுதியில் பேச ஆரம்பித்தார் கொக்குதலை டாக்டர் மாத்தூர்.

மெல்லிய குரலில் புலமையான ஆங்கிலத்துடன் அவர் பேச ஆரம்பித்ததும், மூலை முடுக்குகள் அந்த மூளை நிபுணத்துவனை உற்று நோக்க ஆரம்பித்தது.

‘’ மனித உடலின் செயலில் மூளைதான் பிரதானம், மூளையைக் கொண்டே உடலின் செயல் அடங்கி இருக்கிறது. மூளையோடு தொடர்பு கொண்டு எண்ணற்ற நியூரான்களும், எலெக்ட்ரான்களும் இருந்தாலும், அவைகளின் பிரதான செயலியே மூளை மட்டும் தான். அத்தகைய மூளை மட்டும் சேதாரம் இல்லாமல் மீட்கப்பட்டால், அது மீட்கப்பட்ட முப்பதாறு மணிநேரம் அதனை வெளிப்புற காரணிகளின் உதவியால் பாதுகாக்க முடியும். அப்படி பாதுகாத்த மூளை, மூளைச் சாவடைந்த மற்றொரு மனிதனின் உடலில் பொருத்தி அவனை  உயிர்பித்து எழுப்பிக் காட்ட முடியும். இட்ஸ் சேலஜ்….’’ மாதூரின் குரலில் உறுதி கொப்பளித்தது.  

                      ❤️    

டெல்லி. மியான் குதூஸ் வீதியை ஒட்டி நீண்டு வளர்ந்திருந்த தார்சாலை. இளம்பெண்ணின் அடர் கருங்கூந்தலைப் போல் நீண்டு இருந்தது.

நல்ல தித்திப்பான பணக்காரர்களின் பகுதி என்பது மேற்பூச்சு வர்ணத்திலேயே வசீகரித்தது.

 கொஞ்சம் உள்ளடங்கி இருந்த பங்களாவில், தன்னுடைய பொலோரோவின் முன்னாக காத்திருந்தவன், மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்துக் கொண்டான்.

அவன் நிறமும் நிகுநிகுத்த உயரமும், இன்னும் வாழ்க்கையில் வறுமை என்பதை வழியில் சந்தித்தது கூடயில்லை என்று அவனுடைய போஷாக்கு சொன்னது.

‘’ அஜெய் கிளம்பிட்டேன். ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்…’’ உள்ளிருந்து பால்கோவா குரல் கேட்டது.

தலையை அழகாக குலுக்கி சிரித்துக் கொண்டான். கழுத்தில் படர்ந்திருந்த பச்சை நரம்புகள், உள்ளோடும் உதிரத்தை செவ்வரியாய்க் காட்டியது கண்ணாடி நிறமேனியில்.

 ‘’ இப்படி நீ அஞ்சு அஞ்சு நிமிசமா தவணை வாங்க ஆரம்பிச்சு, இருப்பத்தைஞ்சு நிமிசம் ஆச்சு. கமான் பேபி, மாலுக்குத் தானே போறோம்..? இல்ல எனக்குத் தெரியாம எதுவும், ஃப்யூட்டி கான்செப்ட்டுக்கு போகப் போறோமா..?’’ 

 அவன் முடித்த நிமிசம், தன்னுடைய இறுதி சுற்று ஒப்பனையை முடித்துக் கொண்டு அப்படி இப்படி பெல்ஜியத்தில் தன்னை புரட்டி பார்த்துக் கொண்டு சின்ன புன்னகையுடன் அறையை விட்டு வந்தவளை, சோப் விளம்பரத்தில் வருவதுபோல் ஓடிவந்து காலைக் கட்டிக் கொண்டாள் மதுரீமா.

 வெள்ளை வண்ணத்து புசு புசு கவுனில், ஒரு பேரழகு துண்டுபோல் தன் காலடியில் தவழ்ந்த குழந்தையை எடுத்து தோளில் கிடத்திக் கொள்ள, இத்தனை நேரத்து அலங்காரமும் மெல்ல மெல்ல கசங்க ஆரம்பித்தது. ஆனால் அம்மா என்ற நினைப்பும், பதவியும் அவளை அலங்காரத்தை விட அழகாக மாற்றியது.

‘’ எங்கே போறோம் மம்மி…’’

‘’ மாலுக்குடா. உனக்கு நிறைய சாக்கி, வாங்கிட்டு வரலாம். டாய்ஸ் வாங்கிட்டு வரலாம்…’’ குழந்தையோடு குழந்தையாய் தன்னை உருமாற்றிக் கொண்டு இருந்தாள்.

வெளியில் வரவும், தோளை குலுக்கிக் கொண்டு மணிக்கட்டை உயர்த்திக் காட்டினான்.

‘’சாரி அஜெய்… அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க.’’ அவள் சிணுங்கியபடி வண்டியில் ஏறிக் கொள்ள, வண்டியை உசுப்ப போனவனை சகுந்தலாவின் குரல் நிறுத்தியது.

 ‘’ அஜெய், இந்நேரத்துல எங்கே…’’ அக்காவின் அழைப்பிற்கு அனிட்சையாய் அவன் கண்கள் அபரஞ்சி மீது தவள, அவள் உதட்டை சுளித்து வெறுப்பை பதிந்தாள்.

 ‘’ சும்மா மால் வரைக்கும் சக்கு. பத்து பதினைஞ்சு நாளா ஓவர் ஓர்க் லோடு. இப்படி அப்படி நகர முடியல. மதுரி, ரெம்பவே ஏங்கிட்டா. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு வரலாம்னு. ஹே சக்கு நீயும் வாயேன்.’’ கையசைத்து அழைக்க, இளமையின் முதிர்வான முப்பதுகளின் மத்தியத்தில் இருந்த சகுந்தலா. மென்மையாகச் சிரித்தாள்.

இத்தனைக்கும் தன்புறமே திரும்பாமல் நின்ற அபரஞ்சியின் மீது பார்வை பதிந்து மீண்டது.

‘’ நோ நோ..! நீங்க போயிட்டு வாங்க. ஐ ஹேவ் ஏ அபிசியல் ஓர்க். கேரி ஆன்.’’ தோள்களை குலுக்கிக் கொண்டு உள்ளே நடந்தவளின் முதுகிற்கு முன்னால் இருந்த முகத்தில் வழிந்த வெறுமையை முதுகை வெறித்த அஜெய்யால் பார்க்க இயலாது தான்.

‘’கிளம்பலாமா…’’ என்றாள் அபரஞ்சி அதிகார குரலில்.

‘’என்ன பிகேவியர் அபரஞ்சி. சகுந்தலா மனநிலையைப் பத்தி யோசிக்க மாட்டியா..?’’

   ‘’ பட் ஒய் அஜெய்..?’’

  ‘’ பிகாஸ், சீ இஸ் மை சிஸ்டர்.’’

 ‘’அதுக்கு..? நான் எப்பவும் அவங்களுக்கு ரெடிமேட் மரியாதையைத் தரணுமா..? ஐ காண்ட்..’’ கைகளை கட்டிக் கொண்டு எங்கோ வெறிக்க, இவர்களின் வாக்குவாதத்தை தவிர்த்து, தலையில் இருந்த ப்ளாஸ்டிக் க்ளிப்பை உருவி வீசுவதில் கவனமாக இருந்தது மதுரிமா.

மெல்லிய இறுக்கம் இருவருக்கும் நடுவில் இடைவெளியை நிறைக்க, அதற்கும் அபரஞ்சிக்கு சகுந்தலா மீதே கோபம் வந்தது.

‘’எனக்கு அப்பவே தெரியும்…’’ என்றாள் அழுத்தமாக கைகளை மடக்கி நெற்றியில் தட்டிக் கொண்டு. திரும்பி ஒரு வார்த்தை கூட பேசாமல் சாலையில் கவனத்தை திருப்பி இருந்தான் 

’’அஜெய் என்னை கவனிக்கிறீங்களா, இல்ல,கவனிக்காதது போல நடிக்கிறீங்களா..? ‘’

‘’கவனிக்கறேன். ஆனால் ரசிக்கல…’’ கையில் ஓடித்த ஸ்டியரிங்கில் அவனுடைய கோபத்தின் கனம் தெரிந்தது.    

முகத்தை திருப்பி தெருவை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள் அபரஞ்சி. தீராத கோபம் அவள் முகத்தில் வளையமிட, எப்போதும் ஒரு சைலண்ட் கில்லர் போல் தன் வாழ்க்கையில் அகிம்சையாய் இம்சை செய்யும் சகுந்தலாவின் மேல் பெரும் கோபம் வந்தது. 

 

' தன்னம் தனியே இருப்பவன் வாழ்வில் சஞ்சலம் இல்லையடா… இன்னொரு உயிரை தன்னுடன் சேர்த்தால் என்றும் தொல்லையடா.. இத்தனை சிறிய இதயத்திலே எத்தனை சுமைகளடா… இருபதில் தொடங்கி எழுபது வரைக்கும் என்றும் மயக்கமடா…

படைத்தானே… மனிதனை ஆண்டவன் படைத்தானே...

 


   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Active Member Author
Joined: 1 week ago
Posts: 11
Topic starter  

கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்து கொள்ளுங்கள்..

https://kavichandranovels.com/community/topicid/396/


   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Active Member Author
Joined: 1 week ago
Posts: 11
Topic starter  

வனமாலி - 4

அருப்புக்கோட்டை. புதிய பேருந்து நிறுத்தத்தில் வந்து ஒரு குலுக்கு குலுக்கி வண்டி நின்றபோது மணி காலை ஐந்தைத் தொட்டு இருந்தது. உடலை வளைத்து ஒரு சோம்பல் முறித்தால் நன்றாக இருக்கும் போல் இருந்தது.

   ஐந்து மணிக்கே தூக்க கலக்கத்தில் விழித்திருந்தது பேருந்து நிலையம். நிறைய பேர் காத்திருந்தனர். 

‘’….நான் சொன்னது எல்லாம் நினைப்புல வச்சுக்கணும். ஆரம்பத்துலயே உஷாரா இல்லாட்டி, தலையில மிளகா அரைச்சுடு வாங்க…’’ மகளுக்கு ஏதொவொரு தாய் உபதேசித்துக் கொண்டு இருந்தார்.

இரைச்சல் குறைவாகவும் ஒலி அதிகமாகவும் இருந்தது. நடைமேடையில் ஏறி நடந்தாள். விழித்துக் கொண்டு இருந்த தேனீர் கடைகளில் கூட்டம் வரத் தொடங்கி இருந்தது.

‘சரவணனைக் காணோமே….’’ மெல்ல முணுமுணுத்துக் கொண்டிருக்கும் போது, விளக்கு கம்பத்திற்கு கீழ் பைக்கில் சாய்ந்து நின்று கொண்டு இருந்தான். 

 பக்கத்தில் போய் நின்று ஏற இறங்க பார்த்த அக்காவைப் பார்த்து தூக்க கண்களுடன் சிரித்தான்.

‘’ என்னடா. எனக்காக வந்துட்டு காலையிலேயே எதுக்கு ஃபோனை நோண்டிட்டு இருக்க. கேர்ள் ஃப்ரெண்டுக்கு குட்மார்னிங் சொல்லிட்டு இருக்கியாக்கும்.’’ அவன் கையில் இருந்த மொபைலை பறிக்கப் போக, வேகமாக அதை லாவகமாக தடுத்து தன்னுடைய பாக்கெட்டில் போட்டுக் கொள்ள, சிந்தூரி இன்னும் சந்தேகமாய் அவனைப் பார்த்தாள்.

 ’’ என்னடா மேட்டரு…’’

‘’ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. முதல்ல வண்டியில ஏறு.’’

    ‘’ வண்டி ஏதுடா..?’’

 ‘’ ம்…! எங்க அக்கா வாங்கிக் கொடுத்தா.’’ ஸ்டார்ட் செய்தும் ஏறாமல் நின்றவளை, பார்த்து குறும்பாகச் சிரிக்க,

 ‘’ நான் உனக்கு எதுவுமே வாங்கித் தந்ததில்லை அப்படித்தானே..?’’ 

’’யார் அப்படிச் சொன்னா..? இப்போ பேச்சு இந்த வண்டியை பத்தி மட்டும்தான். காலையில வரணும்னு வாங்கி வச்சேன்.’’ பேசிக் கொண்டே வண்டியை உதைக்க, ஏறிக் கொண்டாள். சரவணனின் தோள்களை பற்றிக் கொள்ள, வண்டி சாலைகளில் கரைந்தது.

 ‘’ இன்னும் மூணு மாசம் பொறுத்துக்க, வண்டி வாங்கித் தர்றேன்.’’ ஒளிக்குள் கரைந்து கொண்டிருக்கும்  இருளில், அரவம் துவங்கி இருக்காத சாலைகளில் பயணம் செய்வது அத்தனை இதம். 

  ‘’ நான் கேட்டனா..?’’

‘’ நீ என்னத்தை கேட்டு இருக்கே..? நானா பார்த்துச் செய்ததுதான் எல்லாம்.’’

’’ நீயே செய்துட்டு இருந்தா, நாங்க எப்போ செய்றதாம்…’’ அந்த அணுசரணையில் அவள் இதயம் வழிதடத்திலேயே தொலைந்து போனது போல் குளிர்ந்து இருந்தது.

‘’சரவணா, பிடிச்சிருக்குடா நீ இப்படிப் பேசி கேட்க…’’ தம்பியின் தோளில் அன்பாய் நாடிபதித்துக் கொண்டாள் இடைவெளிவிட்டு அமர்ந்து.

‘’நாங்க வளர்ந்துட்டோம்ல…’’ காலரைத் தூக்கி விட்டுக்கொண்டு சிரித்தான்.

 ’’ சித்தி, பூரணிமா எப்படி இருக்காங்க.’’

 ‘’ அதான் வர்றியே வந்து பாரு. எல்லாம் எப்படி இருக்காங்கன்னு.’’

‘’ஏன்டா இப்படிப் பேசறே..? ‘’

‘’சிந்து, எல்லாரும் அப்படி அப்படியேதான் இருக்காங்க. சின்ன மாற்றம் கூட இல்லாம. குணம் மாறுணும்னா மனம் மாறணும். அது நடக்கிற காரியமா…’’ வண்டி தெருக்களில் புகுந்திருந்தது.

வாசல் தெளித்துக் கொண்டிருந்த தெரிந்த முகங்கள் நிமிர்ந்து பார்த்து சிரித்தார்கள். அறிமுகமான சின்ன ஊரில் இருக்கும் வாத்சல்யமே இதுதான். வழித்தடத்துக்கு முகங்கள் எல்லாவற்றிலும் அறிமுகம் இருக்கும்.

பெரிய திண்ணை வைத்த நடுத்தரமான வீடு. நீர்தெளித்து இருந்தது. இன்னும் கோலம் போடவில்லை.

உள்ளே நுழைந்தவர்களை பார்த்ததும், எதிர்ப்பார்த்தே இருந்த ரேணுகாவின் முகத்தில் சின்னதாய் புன்முறுவல் உண்டானது.

‘’ சரவணா, வண்டியை குடுத்திடாத. நல்லா விடிஞ்சதும், மார்கெட்டுக்கு போய் மீனு வாங்கிட்டு வந்துடு. சொல்லிட்டு தான் வந்திருக்கேன் நீ வருவேன்னு.’’ சின்ன சின்ன புள்ளிகளை விதைத்து கோடிழுத்து கோலமாக்கி விட்டு ரேணுகா உள்ளே வந்தாள்.

    அதற்குள் பல் துலக்கி விட்டு வந்து முற்றத்தில் கிடந்த ஈசி சேரில் அமர்ந்து துப்பட்டாவால் முகம் ஒற்றிக் கொண்டு இருந்தாள் சிந்தூரி.

  ‘’ பஸ் லேட்டா..?’’

  ‘’ ஆமாம் சித்தி. எப்படி இருக்கீங்க..?’’

’’ம் இருக்கேன் இருக்கேன். நீ எப்படி இருக்கே. ஆளு ரெம்ப இளைச்ச மாதிரி இருக்கே. சாப்பாடு சரியில்லையா..? அப்படினா ஹாஸ்டலை மாத்து’’ 

கை முற்றத்தை பெருக்கிக் கொண்டு இருந்தது. வாய் சிந்தூரியுடன் பேசிக் கொண்டு இருந்தது. 

‘’இல்ல சித்தி அப்படில்லாம் இல்லை. வேலை அதிகம். ஹாஸ்டல்ல எந்தப் பிரச்சனையும் இல்லை.’’

ஈசி சேரில் சாய்ந்து கண்மூடிக் கொண்டாள். முழு இரவும் பஸ்ஸில் அமர்ந்து கொண்டே வந்தது முதுகு வலித்தது. கால்நீட்டி படுத்தால் சரியாக வரும். அறையை எட்டிப் பார்த்தாள். முழுக் கட்டிலையும் அடைத்துக் கொண்டு பூரணி படுத்திருந்தாள். 

திரும்பி வந்து ஈசி சேரில் சரிந்து கண்களை மூடிக் கொண்டாள்.

அசதியில் அரைமணி நேரம் கடந்திருக்க, காப்பி கொண்டு வந்து வைத்துவிட்டு ரேணுகா எழுப்பி விட்டாள்.

‘’ காப்பியைக் குடிச்சிட்டு குளிச்சிட்டு வா.’’

  கசந்து கிடந்தது காப்பி, சித்தியின் அன்பைப் போலவே.

பின்கட்டில் மாமரத்தோடு கூடிய கிணறு இருந்தது. நல்ல பரிணாமமான வீடு. அழகான தோட்டம். நான்கு விரல்கடை ஜரிகை வைத்த பட்டுப் புடவையைப் போல் சின்ன தோட்டம்தான். ஆனால் வெகு அழகாக இருந்தது.

அப்பா இருந்த நாள்களில் இந்த வீடே உலகமாக இருந்தது. இந்த துவைகல்லில் அமர்ந்துதான் நிலாகாட்டி சோறூட்டுவார்.

அப்போதும் சித்திக்கு பாசமெல்லாம் இருக்காது. ஆனால் சிந்தூரியைக் காட்டி மணமுடித்து வந்திருந்ததால், இவளை பார்த்துக் கொள்ளும் கடமை இருந்ததை ஒவ்வொரு இடத்திலும் உணர்த்துவார்.

ஏனோ சித்தியிடம் ஒட்டவே இயலவில்லை. அல்லது ஒட்ட சித்தி அனுமதிக்கவில்லை. பூரணிமாவும், சரவணனும் பிறந்தபிறகு இன்னும் இன்னும் விலகிப் போனாள் சிந்தூரியிடம் இருந்து.

   ப்ளஸ் டூ படிக்கும்போது அப்பாவின் மரணம். மெல்ல மெல்ல தனிமரமாகிப் போனாள் சிந்தூரி. அங்கேயே இருந்தாலும் தண்ணீர் மீது மிதக்கும் எண்ணெய்யாய் வாழ்க்கை பட்டும் படாமலும் மிதந்து கொண்டே இருந்தது.

வேலைக்கு போனபிறகு அந்தக் குடும்பத்தை தாங்க வேண்டிய கடமை இருந்தது. ரேணுகாதான் அப்படி இருந்தாள் என்றாலுமே தம்பி தங்கை இருவருமே, சிந்தூரி மீது பிரியமாக இருந்தார்கள். அதிலும், சரவணன், அப்பாவை உரித்துக் கொண்டு வந்திருந்தான் இவள் மீது பாசம் காட்டுவதில்.

   ‘’ சிந்து…’’

 துவைகல்லில் அமர்ந்து நினைவுகளில் மூழ்கிக் கிடந்தவளை சித்தியின் குரல் எழுப்பியது.

‘’ ஒரு ஆயிரம் ருபாய் இருந்தா, சரவணன்கிட்ட குடுத்துவிடு. மீன் வாங்கிட்டு வரட்டும்.’’

சட்டையை மாட்டிக் கொண்டே வந்த சரவணன் இதைக் கேட்டதும் அடாது கோபம் கொண்டு முறைத்துப் பார்த்தான்.

‘’ சிந்துகிட்ட காசு வாங்கி சமைச்சுப் போடறதுக்கு சும்மாவே இருக்கலாம். இது ஹோட்டலா..? உன்கிட்ட காசு இருக்குமே…! நேத்துத் தான் குத்தகைக்காரு பணம் தந்துட்டுப் போனாரு.’

‘’அது இந்தமாச செலவுக்கு. ஒரேநாள்ல செலவு பண்ணிட்டா நாம தான்  திண்டாடணும்.’’

   ‘’ இது அநியாயம் மா. எல்லாத்துலயும் சிந்துவுக்கும் பங்கு இருக்கு’’ சீறிக் கொண்டு நின்றவனின் கைகளில் ஆயிரத்தைக் கொண்டு வந்து திணித்தவள் அவன் தலைகோதி வம்பு செய்ய. சிலிர்த்துக் கொண்டு நின்றான்.

‘’ தரமாட்டேன்னு சொல்ல வேண்டியது தானே..! இன்னும் எத்தனை நாளைக்கு இபபடி ..‘’ 

" விடுடா நம்ம வீடுதானே…’’."‘’ 

"அதுதான் கோபம் வருது. '

பையை எடுத்து வந்து நீட்டிய ரேணுகாவின் முகபத்தில் எந்தச் சலனமும் இல்லை. . 

"வாங்கிக்க. நேரத்தோட வா, எனக்கு வேலை இருக்கு.’’ உள்ளே போய்விட்டாள். சிந்துவுக்கு தொண்டை அடைத்தது. 

எதிர்பார்ப்புகள் இல்லைதான். ஆனால் எங்கிருந்து ஏமாற்றம் வந்து முளைத்து முறுவலிக்கிறது.

‘’ உன் தலையெழுத்து அந்த ஹாஸ்டல்ல இருந்து இந்த ஹாஸ்டலுக்கு வந்து காசு தந்து சாப்பிட்டு போறே… எல்லாம் மாறணும்னா ஒண்ணு நடக்கணும்…’’ சரவணன் முறுக்கிக் கொண்டு சொல்ல, சிந்தூர் கலகலவென சிரித்தாள்.

 ‘’ அதென்னடா தம்பி…’’

‘’அது இவனுக்கு கல்யாணம் நடக்கணும்னு சொல்லுவான் சிந்து. கல்யாணம் ஆன அடுத்தநாளே இவன் தனியா போயிடுவானாம்.’’ பின்னால் இருந்து பேசிக் கொண்டே வந்த பூரணி, சிந்தூரியின் கழுத்தை வளைத்துக் கொண்டாள்.

அவள் புறங்கையை இழுத்து முத்தம் வைத்து தன்னோடு இறுக்க, அக்காவின் தோளில் சரிந்து கொண்டாள்.

‘’இவனுக்கு கல்யாணமா..? காலக் கொடுமை. அப்புறம் இந்த அக்காளுங்களை காப்பத்துவேன்னு அடிச்ச டயலாக் எல்லாம்….’’

‘’ சரிதான்டி பூரணி. நான் தனியா சுதந்திரமா இருந்தாத்தான் என்னால முடிவெடுக்க முடியும்.’’

‘’ நீ சுதந்திரமா இருக்கவே ஒரு சுதந்திரப் போராட்டம் நடத்தணுமே ராசா.சரி சுதந்திரம் வாங்கி என்ன செய்யப் போறே..? ‘’

   ‘’ தனி வீடு. அதுல சகல வசதியோட ஒரு ரூம். அது என் சிந்துக்கு. எப்பவேணா சிந்து வரலாம். அந்த ரூம்ல தங்கலாம். நினைச்சதை சாப்பிடலாம். வாசல்ல சிந்துவுகே சிந்துவுக்குன்னு ஒரு கார். எடுத்துட்டு அருப்புக்கோட்டையை சுத்தி வர.’’ கண்களை மூடி அந்த விடலைப் பையன் கண்ட கனவை வேடிக்கை பார்த்தார்கள் இருவரும் கன்னத்தில் கைவைத்து.

’’ அப்போ எனக்கு..?’’ பூரணி பாவமாய்க் கேட்க.

‘’ உனக்கு ஒரு மண்ணும் இல்லை. நீ என்ன சிந்து மாதிரியா பொறுப்போட இருக்கே..? வேணா உனக்கு ஹால்ல ஒரு பாய் தலையணை தர்றேன் படுத்துக்க….’’ அவன் காலரை தூக்கிக் கொண்டு சொல்லவும் முதுகில் ஓங்கி ஒரு அடி விழுந்தது.

‘’ வாய் அடிக்காம எழுந்து போடா. எப்பப்பாரு கனவுல கோட்டை கட்டிட்டே.’’ ரேணுகா தட்டிய தட்டில் எழுந்து நகர்ந்தான். பூரணியும் அலைபேசியோடு நகர, கால்களை கட்டிக் கொண்டு அமர்ந்திருந்த சிந்தூரியின் அருகில் வந்து அமர்ந்தாள்.

‘’குத்தகை கணக்கெல்லாம் சொல்லட்டுமா சிந்து…’’ வறண்ட குரலில் சித்தி கேட்டபோது, அயர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தாள்.

’’ எதுக்குச் சித்தி எனக்கு அதெல்லாம்..? பூரணிக்கிட்டயும், சரவணன் கிட்டயும் தினமும் சொல்லிட்டா இருக்கீங்க..?’’

‘’ அவங்களும் நீயும் ஒண்ணில்ல சிந்தூரி. உன் விசயத்துல ஏதாவது தப்பானால் நாளைக்கு அதுவே ஒரு பேச்சா நிற்கும்.’’ ரேணுகா முற்றத்தில் கிடந்த மிளகாயைத் தூலாவிக் கொண்டே சொன்னபோது சிந்தூரியின் தொண்டைக்குழி ஏறித் தாழ்ந்தது.

ஒதுக்கி ஒதுக்கி வைத்தாலும் முகத்தில் வந்து விழும் முடிக்கற்றை போலல்லவா தன்னுடைய நிலை… அமைதியாகவே கால்விரல்களை பார்த்துக் கொண்டிருந்தவளை, திரும்பிப் பார்த்தாள் ரேணுகா.

   ‘’ என்ன அமைதியா இருக்க…’’

‘’ என்ன சொல்லணும்னு தெரியல சித்தி.’’

‘’ கரெக்டா குத்தகைச் சமயத்துல வந்திருக்கே. அதான் எனக்கு எரிச்சல். என்ன நடக்குது ஏது நடக்குதுன்னு தெரிஞசுக்கத் தானே இப்படி வந்தது…?’’ குரலில் ஆங்காரம் மிக, இதற்குள் இத்தனை விசயம் இருப்பது இப்போதுதான் புரிந்தது சிந்தூரிக்கு.

‘’சரவணன் வரச்சொன்னான் சித்தி பார்க்கணும்னு. அதுதான் வந்தேன். எனக்கும், வேலை, ஓட்டம்னு சலிப்பு. சரிவிடுங்க இனி பார்த்துக்கறேன்.’’ எழுந்து உள்ளே போனாள்.

எப்போதும் போல இதுவும் ஒரு நிகழ்வுதான். சில உறவுகள் கண்ணாடிப் பேழை போல. எந்நேரமும் உடைந்து சிதறி, அந்தச் சிதறலில் பலமுகம் காட்ட காத்திருந்தன. அதை பேணுவது என்பது பெரிய விசயம்தான்.

    கண்ணாடிக் கரகத்தை தலையில் ஏற்றி சுழன்றாடுவது போல், ரசித்து ஆடவிடாமல், கவனம் முழுவதையும் கரகமே எடுத்துக் கொள்ளும் கையாலாகாத நிலைமை இது. வரவும், இருப்பும், அத்தனையுமே ஒருவித சல்லடை வழியே பார்க்கும்போது தெளிவான காட்சிகள் தெரியப் போவதில்லை…

இந்த கரகாட்டம் இன்னும் எத்தனை நாள் என்று அயர்ச்சியாக இருந்தது சிந்தூரிக்கு.

"".....பிறவி என்னும் பாதையிலே உன்னுடன் வந்தேன் அந்த பயணத்திலே கடமை செய்யும் துணிவை அடைந்தேன்

சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன்

சிறகடிக்கும் ஆசைகளை சிறையில் பூட்டுவேன்

நீ சிரித்திருக்கும் காட்சியிலே மனதைத் தேற்றுவேன்

ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா பிறந்ததம்மா...

     

   வனமாலி -5

 

இரவு டூட்டி முடித்து விட்டு வர, பத்தைத் தாண்டிவிட்டு இருந்தது. பியட்டை உசுப்பிக் கொண்டு கிளம்பிய சகுந்தலாவின் கண்களில் சோர்வின் மிச்சம் மிகுத்தமாக இருந்தது. சலிக்காமல் சேவை செய்வதுகூட சலிப்புத்தான்.

சோர்ந்து கிடக்கும் பூக்களின் தலையில் நீர்தெளித்து மலர வைக்கும் தருணங்களில் ஒரு ஆனந்த ஊற்று பெருக்கெடுப்பது போல் ஏதாவது ஒரு மாற்றம், அதுவும் ரசனையாய் ரம்மியமாய்… 

நாள் முழுவதும் மற்றவர்களுக்காக ஒப்படைத்தாலுமே, ஏதாவது ஒரு கட்டத்தில் மனம் நமக்கென்று எதையோ கேட்கத்தான் செய்கிறது. விருப்பமே இல்லாமல வாழவேண்டும் என்பதும் கூட, ஒருவகையில் விருப்பம் தானே…

அலைபேசி சிணுங்கியது. டாஷ்போர்டில் இருந்து எடுத்து பார்த்தாள்.

அஜெய் தான்..! சின்னதாய் புன்னகை.

‘’ சொல்லு அஜெய். ஆன் தி வே டூ ஹோம்…’’

‘’ லேட்டாயிடுச்சே டா. அதான் ரெம்ப கவலையாகிடுச்சு…’’ 

அஜெய் இப்படித்தான் நெகிழ்ந்து கனிந்த தருணங்களில் அவன் அணுசரணை வெடவெடக்க வைக்கும்.

 தம்பி தான் ஐந்தாறு வயதிற்கு சின்னவன் தான். ஆனால் ஆண் பெண்ணை அன்பு செய்யும் போதும், ஆளுமை கொள்ளும் போதும் தன்னை முந்தி இருக்க வைப்பதையே விரும்புகிறான். அது நேர்மறையாக இருக்கும்போது அவனால் ஆளப்படும் பெண் வாழ்க்கையை ஜெயிக்கிறாள். அதுவே எதிர்மறையாக இருக்கும் போது அந்த குடும்பம் சின்னபின்னமாகிறது… இதுதான் வாழ்க்கையில் வெகுசின்ன தாத்பர்யம்.

‘’ எதுக்கு பயம்..? உன் அக்கா டாக்டர். சின்ன குழந்தை இல்லை.’’ சிரித்தபோது அவனுக்கு முசுக்கென கோபம் வந்தது.

‘’ எனக்கு சின்ன புள்ளைதான்.’’

‘’ நானே சின்ன புள்ளைன்னா நீ எனக்கு எப்படிடா..?’’

‘’ போதும் சக்கு. லேட்டானாப் பரவாயில்லே. ஆனால் ஒரு கால் பண்ணி சொல்லக் கூடாதா…’’ 

‘’ ஒரு எமர்ஜென்சி அஜெய். நான் டிரைவ் பண்ணிட்டே இருக்கேன். வந்து பேசட்டுமா…’’ சகுந்தலா கேட்டபோது, 

‘’ ஓ சாரி..! பதறிப் போய் அலைபேசி இணைப்பை துண்டித்து விட்டான்.

நிலா கூடவே துணைக்கு வந்தது. வீடு வந்ததும் வாசலிலேயே நிலாவையும் பியட்டையும் நிறுத்திவிட்டு உள்ளே வர, அஜெய் முழங்காலைக் கட்டிக் கொண்டு லானில் இருந்து சற்றே உயரமாக இருந்த வீட்டிற்க்குள்  செல்லும் வாயிற்படிகளில் அமர்ந்திருந்தான்.

நீண்ட வட்டவடிவ படிமேடை அது. மூன்று படிக்கட்டுகளில் ஏறி, நீண்ட வராண்டாவில் நடந்தால் தான் வீட்டிற்குள் போக முடியும். அவனுக்கு பின்னாக பிரம்பு ஷேரில் சரிந்து கொண்டு மதுரிமா தூங்கி விட்டு இருந்தது. நெஞ்சின் மீது பஞ்சுப் பொதியாய் கரடி பொம்மை.

 ‘’ ஓய்..! என்னய்யா நீ இன்னும் தூங்கலயா..?’’ தம்பியின் கன்னத்தில் தட்ட, அவன் கோபமாய் முறைத்தான்.

‘’ எவ்வளவு நேரம் சக்கு..? எனக்கு ரெம்ப பதட்டமா இருக்கு.’’ 

எதை இழந்தால் என்ன… எதுவோ இருக்கிறது இந்த உலகத்தில் பிடித்துக் கொண்டு வாழ.

‘’நான் ப்ரெஸ்ஸாகிறேன் அஜெய். நீ பாப்பாவை தூக்கிட்டு உள்ளே வா…’’

உள்ளே நகர்ந்தவள், அரைமணியில் குளித்து நைட்டிக்கு மாறி, தலைமுடியைத் தளர்த்தி விட்டுக் கொண்டு வந்தவள், அங்கே டைனிங் டேபிளில் சாப்பாடு எடுத்து வைத்துக் கொண்டிருந்த அஜெய்யைப் பார்த்ததும் பதறிப் போனாள். வழக்கமாக அமமாதான் எடுத்து வைப்பார். அம்மா உறங்கி இருந்தால், தானே எடுத்துப் போட்டுக் கொள்வாள். இது இன்று புதுமையாக அஜெய் எடுத்து வைத்துக் கொண்டு இருக்க, சின்னதாய் பதறிப் போனாள்.

‘’ என்ன அஜி இது… நான் பார்த்துக்கறேன்.’’

‘’ நான் வைக்கிறேன் சக்கு. அம்மாக்கு தலைவலினு படுத்தாச்சு.’’ சப்பாத்தியும் சப்ஜியும் எடுத்து வைத்தான். மறுமுறை சூடாக்கி இருக்கிறான் சப்பாத்தியை. அவசரமாக மிருதுவாக மாறி இருந்தது. ஆறி அது மறுபடியும் வறட்டி ஆவதிற்குள் சாப்பிட்டாக வேண்டும்.

விள்வி வாயில் வைத்து, வாய் மூடி நாகரிகமாக மென்றாள்.

‘’ அஜு, மேலே ரூம்ல லைட் எரியுது. உன் பாஸ் இன்னும் தூங்கலயா..?’’ சின்னக் குரலில் கேட்டுக் கொண்டே தம்பிக்கு ஒருவாய் ஊட்ட, மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.

‘’ அவ என் பாஸா..? சரியான லூசு…’’ சொன்னான் தான். ஆனால் சன்னமான குரலில்.

‘’ அட..! அதை சத்தமாத்தான் சொல்லேன்.’’ சக்கு சிரிக்க, அவனும் அதில் தன்னை பொருத்திக் கொண்டான்.

   ‘’ நல்லவதான். ஆனால் கொஞ்சம் ராங்கி. வீட்டில ஒரே பொண்ணா இருந்துட்டா இல்ல, அதனால, ஒவர் பொசசிவ்னென்ஸ்…’’

 ‘’ இப்போ நான் சாப்பாடு ஊட்டறதைப் பார்த்தா திட்டுவாளோ…’’ சகுந்தலா மென்மையான குரலில் கேட்க, பதில் சொல்லாமல் சிரித்தான்.

‘’உண்மையைச் சொல்லவா சக்கு, ஆணா இருக்கிறது ரெம்ப ரெம்ப கஷ்டம்.’’ உணர்ந்து சொன்ன வார்த்தைகளில் அதிர்ந்து போனாலும், அதையும் சிரித்தே கடந்தாள்.

‘’ வாஸ்தவம் தான். எதுலதான் கஷ்டமில்லை. தொழில், உயிர், வாழ்வியல்னு அத்தனையுமே கஷ்டம்தான். சுகமான சுமைகள்னு என்ன இருக்கு இந்த உலகத்துலே.’’ 

சாப்பிட்டு முடித்து சோபாவில் வந்து அமர்ந்த சகுந்தலா கை சூப்பிக் கொண்டே உறக்கத்தை தழுவி இருந்த குழந்தையின் கைகளை பிரித்து விட்டு எடுத்து தன் கைகளில் ஏந்திக் கொண்டாள்.

 அதன் பால் இதழ்களில் வழிந்த எச்சில் ஒழுக்குகளை சுத்தம் செய்து உறங்கும் குழந்தையை தன்னோடு சேர்த்து இறுக்கிக் கொள்ள, அது சிணுங்கிக் கொண்டே உறக்கத்தை தொடர்ந்தது.

 கன்னத்தில் கைவைத்து அத்தனையையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டே இருந்தான் அஜெய். எத்தனை அன்பு குழந்தைகள் மீது… மிகுந்த எதிர்ப்பார்ப்பின் மிச்சத்தில் தான் காதல், கல்யாணம் என்று தன்னை புகுத்திக் கொண்ட சகுந்தலாவின் காதல் மலராமலே போய்விட்டது.

‘’ சக்கு… நீ வேணா, மதுரியை தத்து எடுத்துகறியா..?’’ அன்பைக் கொண்டே புனையப்பட்ட குரலில், கேட்டவனை பார்த்து வலியாக சிரித்தாள்.

 ‘’ ஏன் இப்போ என்ன குறை..?’’

‘’ குறைன்னு இல்ல. சொல்லத் தெரியல.’’

‘’தெரியாமயே போகட்டும். காகிதத்துல ஏற்படுத்திக்கிறது இல்லடா சில பந்தங்கள். இதயத்தில் ஏத்துகிட்ட பிறகு எதுவுமே சின்னதும் இல்ல, பெரிதும் இல்ல. என்னோடதுன்னு அன்பு செலுத்த சட்டம் சொன்னாத்தான் ஆச்சா..? நான் காம்பெண்டுக்குள்ளே வரும்போதே கையைத் தூக்கிட்டு அத்தை’னு ஓடி வர்ற அன்பு பத்தாது…’’ பிஞ்சின் ஒவ்வொரு விரலாய் எடுத்து முத்தம் விதைத்தாள்.

   ஆசைப்படுவர்களுக்குத் தான் இயற்கை பெருசாய் ஆசிர்வதிப்பதில்லை. நிறைய ஆசையோடு காதலித்து கைபிடித்து, அவனை இழந்து, இப்போது எதன்மீதும் பற்றுக் கொள்ளாமல்…

‘’ அஜி, போய் படு. அபரா, அபாரமான கோபத்துல இருப்பா போல இருக்கு.’’ குழந்தையை ஆட்டுக் குட்டிபோல் அஜெய்யின் கைகளில் கொடுக்க, அதை ஏந்திக்கொண்டு மாடிக்குப் போனான்.

   ஏ.சி. தன்னால் ஓடிக் கொண்டு இருந்தது. பால்கனி கதவு சன்னமாய் திறந்திருக்க, சிலிவ்லெஸ் சாட்டின் நைட்டியில்,முதுகு முழுக்க முடிக் கற்றையை விரித்து படர்த்தி இருந்தாள். கைகளை கட்டிக் கொண்டு, இவர்கள் வாசலில் கட்டிபோட்டு விட்டு வந்த, முக்கால் துண்டு நிலவை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

திரும்பாமலே நிற்கும்போதே அவள் கோபத்தின் கூடுதல் டோஸ் புரிந்தது.

குழந்தையை படுக்கையில் விட்டுவிட்டு வெளியில் வந்தவன், மென்மையாக அவள் தோளில் கைவைத்தான்.

   ‘’ இன்னும் தூங்கலயா.. ரஞ்சி…’’

‘’ ப்ச்…’’ அவனுடைய கைகளை தட்டிவிட்டாள்.

‘’என்னாச்சு..? பத்து நாளைக்கு ஒருமுறை கோபம் வந்தால் ரசிக்கலாம். ஒருநாளைக்கு பத்துமுறை வந்தா, அதுக்குபேர் கோபமில்லை, கொடுஞ்சூர் குணம்.’’ தோளைக் குலுக்கிக் கொண்டு நகர விளைந்தவனை வேகமாய் பற்றி தன்புறமாக திருப்பினாள்.

’’அவ்வளவு ஆயிடுச்சா…’’ 

‘’ ரஞ்சி…முதல்ல கையை எடு…’’

‘’அவங்க வந்தா சாப்பிட்டு படுக்க மாட்டாங்களா..? அவங்க என்ன இந்த வீட்டு விருந்தாளியா..? நீங்களும், குழந்தையை தூக்கி வச்சிட்டு மணிக் கணக்கா அங்கே உட்கார்ந்து தேவுடு காக்கிறதுதான் வேணுமா..? என்ன அஜெய் இது இயல்பா இருக்க மாட்டீங்களா..?’’

‘’ இதுதானே என் இயல்பு… மனிதர்கள் இப்படித்தான் இருக்கணும்னு பொது இயல்புன்னு ஒண்ணு இருக்கா என்ன..?’’ தோளைக் குலுக்கிக் கொண்டு வேகமாய் அங்கிருந்து வந்து படுக்கையில் விழுந்தான்.

கோபமெல்லாம் வரவில்லை. இதுதான் அவள் இயல்பு. வருத்தப்பட எதுவுமில்லை. பொறாமையோ, எரிச்சலோ இல்லாதவள் தான். ஆனால் அதீதமான சுயநலவாதி. 

படுத்த ஷணத்தில் அடுத்த சிந்தனை இல்லாமல் உறங்கிப் போனான். ஆனால் அபரஞ்சி தான் உறங்மாலே அந்த இரவை தண்டித்துக் கொண்டு இருந்தாள்.

                    ❤️

   சுக்லா மருத்துவமனை. கொஞ்சம் உள்ளே கடந்து சென்றால் தனிமையாக இருந்தது கெஸ்ட் ஹவுஸ். பெரிய தோட்டம் இல்லை. ஆனால், சின்ன பாத்திகளில் டேபிள் ரோஸ் மட்டும் கவாத் செய்யப்பட்டு அப்பிக் கிடந்தது.

நடுவில் இருந்து செந்தட்டு பதித்த நடைபாதையில் இரண்டு பக்கமும் போன்சாய்கள் வளர்ச்சியை குறுக்கிக் கொண்டு இருந்தன. அவ்வளவுதான். 

ஒரு நீண்ட ஹால், அதனைத் தொட்டுக்கொண்டு மூன்று தனியறைகள். ஒரு சின்ன சமையலறை. பார்க்க இவ்வளவுதான் அந்த கெஸ்ட் ஹவுஸ்.

ஜன்னல்களில் நவீனமான கண்ணாடிகள் பதிக்கப்பட்டு இருந்தன. சுவற்றில் பாதியை விழுங்கிக் கொண்டு டி.வி, கண் திறக்காமல் அமைதியாக இருந்தது.

மாதூர் சோபாவில் சரிந்து சிந்தனை வயப்பட்டவராக இருந்தார், 

ஒருநாளின் இருபது மணிநேரத்துக்கு மேலாய் மருத்துவ ஆராய்ச்சியிலேயே தொலைந்து போகிறார். மருத்துவமனையை கடந்து அவருடைய உலகம் எதுவுமே இல்லை. கெஸ்ட் ஹவுஸ்ஸை ஒட்டி அவருடைய ஆய்வுக்கூடம் இருந்தது. 

எலிகளில் சாத்தியமானது, பன்றிகளில் சாத்தியமானது இன்னும் குரங்களில் சாத்தியமாகுமா என்ற முயற்சியில் இருப்பது… இதற்கு அடுத்து மனிதன் தான்… 

எழுந்து நிமிர்ந்து நின்றார். வெள்ளை முடியை ஒருபக்கமாய் தடவிக் கொண்டார். குதிங்கால்களை உயர்த்தி எழும்பிக் கொண்டார். உதடுகளில் கம்பீரப் புன்னகை துளிர்த்தது.

பேரண்டத்தின் மீது, விழுந்து தெறித்துக் கொண்டிருக்கும் மரணத்தின் கோரக் கரங்களை முறித்துப் போட வேண்டும் என்ற அவரின் லட்சியங்கள் மெல்ல மெல்ல முலாம் பூசிக்கொண்டு வருவது புரிந்தது.

‘’ ஹே மாதூர் பேட்டா. இன்தஜார் கரோ, மை தும்ஹாரா பாஸ் ஆ ரஹா ஹும்…’’  பாபுஜி சொன்ன வார்த்தைகள் காதுகளுக்குள் அப்படியே இருக்கிறது. ஆனால் காத்திருக்கச் சொன்ன அவர்தான் கடைசி வரைக்கும் வரவே இல்லை. வழியிலேயே மரணம் அவரை காவு வாங்கிக் கொண்டது.

பேசிக் கொண்டிருந்தவர் பேச்சை நிறுத்தியது எத்தனை பரிதவிப்பு. அப்போது மாதூருக்கு பத்து வயது நிரம்பி இருந்தது. மாஜியும், தாதியும் இவனை கட்டிக்கொண்டு அழுத போதுகூட அத்தனை புரியவில்லை. ஆனால் மரணத்தை சபித்துக் கொண்டு அம்மா அழுதபோதுதான் இனி அப்பா திரும்பவே மாட்டார் என்று புரிந்தது, மரணம் எத்தனை கொடுமையானது என்று. இறைவன் இரக்கம் இல்லாதவன் என்று… அன்றிலிருந்து இறைவனை வெல்ல வேண்டும் என்ற குரூரம் மனசிற்குள் புகுந்து ஆட்டி வைக்கத் தொடங்கியது.

ஆனால் மரணத்தை வெல்ல முடியுமா..? மரணமில்லாத உலகம் என்ன ஆகும்..? இயற்கை அதன் வழித்தடத்தில் பயணிப்பது தானே வாழ்க்கை… அதை நிறுத்தி வைப்பதால் என்ன விளைவுகள் வரும்..? வீசி சுழலும் காற்றையும், பொங்கி வழியும் அருவியும், இரவையும், பகலையும் இயங்காமல் நிறுத்தி வைத்தால், இந்த உலகம் என்ன ஆகும்..?

கேள்விகள் யுகம் யுகமாக தொடர்கிறது… ஆனால் பதில் கிடைத்ததும் இல்லை… கிடைக்க போவதும் இல்லை...

 "எங்கே வாழ்க்கை தொடங்கும்... அது எங்கே எவ்விதம் முடியும்....

இதுதான் பாதை;      இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது

பாதையெல்லம் மாறிவரும் பயணம் முடிந்துவிடும்

மாறுவதைப் புரிந்து

கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்…"

              

 


   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Active Member Author
Joined: 1 week ago
Posts: 11
Topic starter  

கருத்து க்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்து கொள்ளுங்கள்..

https://kavichandranovels.com/community/topicid/396/


   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Active Member Author
Joined: 1 week ago
Posts: 11
Topic starter  

            வனமாலி - 6

’’நீங்கள் கேட்டுக் கொண்டு இருப்பது கானமும், கவிதையும். நேயர்களே உங்களோடு இணைந்து இருப்பது உங்கள் கான சிந்தூரி. ஸ்டே டூ டுயுன் அஸ் 88.8 உங்கள் நிலா எப்.எம். இப்போ லைன்ல ஒரு நேயர் காத்திருக்காங்க. அவங்ககிட்ட பேசுவோம்…’’

சென்னை முழுக்க அந்தத் தேன்குரல் ஒலித்துக் கொண்டு இருந்தது. ஆட்டோக்களும், கால் டாக்சிகளும், மெல்லிய ஒலியில் அந்தக் குரலோடு பயணப்பட. வழக்கமான உற்சாகத்தில் இருந்தாள் சிந்தூரி.

‘’வணக்கம் நிலா எப்.எம்… நான் உங்கள் கானசிந்தூரி லைன்ல இருக்கீங்களா…’’ ரெக்கார்டிங் அறையில் இருந்த, தலைகுப்புற தொங்கிய மைக்கின் முன்னாக சவுகரியமாக அமர்ந்து கொண்டு இருக்க, அவள் முன்னே அமர்ந்திருந்த ஆப்ரேட்டர், பரவி கிடந்த கருவிகளில் சத்தத்தை கூட்டியும் குறைத்தும் வித்தை செய்து கொண்டு இருந்தான்.

‘’ஹலோ லைன்ல இருக்கீங்களா….’’ இரண்டு பக்க காதையும் கவ்வி இருந்த உள்ளங்கை அகல, ஹெட் ஃபோன் வழியாக கேட்க, அவள் குரலே அவளுக்கு நாதமாக கேட்டது.

‘’ இருக்கேன் மேடம், நீங்க எப்படி இருக்கீங்க…’’ அந்தக் குரலைக் கேட்டதும், அத்தனை மென் நரம்புகளும் பின்னிக் கொண்டு, அப்படியே மயங்கி நிற்க, தொடர்ந்து பேச நாவு ஒத்துழையாமை இயக்கம் நடத்திக் கொண்டு இருந்தது.

 ‘’ என்ன மேடம், என்னை பேசச் சொல்லிட்டு நீங்க அமைதியா இருக்கீங்க… பேசுங்க மேடம்…’’ மறுபக்க குரல் நக்கல் செய்ய, டேப் ஓடிக் கொண்டு இருக்கிறது என்ற பயம் வந்து கவ்வ, வேகமாக சுதாரித்தாள்.

  '’ உங்க குரல்ல மயங்கி நின்னுட்டனோ… இருக்கலாம் இருக்கலாம். உங்க பேர் என்னங்க..? என்ன பண்ணிட்டு இருக்கீங்க..? நீங்களே அறிமுகப் படுத்திக்கங்க…’’ சிந்தூரி சுதாரித்துக் கொண்டாள்.

  ‘’ என் பேர் வனமாலி…’’

’’ வாவ் பேரு ரெம்ப வித்யாசமா இருக்கே…’’

‘’அப்படில்லாம் இல்லீங்க. விஷ்ணு சகஸ்ரநாமத்தில் பகவான் கிருஷ்ணனின் 1000 பெயர்களில் ஒன்று. அப்படின்னா காட்டில் பூக்கும் பல்வேறு மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையை அணிபவன்னு அர்த்தம்’’

‘’ அற்புதமாக இருந்தது உங்களுடைய விளக்கம். பரவாயில்லயே இந்த சின்ன வயசுல இத்தனை விசயங்களை தெரிஞ்சு வச்சிருக்கீங்களே…’’

‘’எனக்கு சின்ன வயசுன்னு உங்களுக்கு எப்படி மேடம் தெரிஞ்சது..’’ அவன் இடக்காக கேட்க, ஆப்ரேட்டர் பார்க்காமல் தலையில் தட்டிக் கொண்டாள்.

‘’இத்தனை இளமையான குரல்ல பேசறீங்களே அதை வச்சுத்தான்.’’ என்றவள் மைக்கை விட்டு லேசாய் நகர்ந்து பற்களை கடித்துக் கொண்டாள்.

 ‘’ சொல்லுங்க வனமாலி என்ன பண்ணிட்டு இருக்கீங்க..? முதல்ல எங்கிருந்து பேசறீங்க..?’’

‘’ நான் கே.கே நகர்ல இருந்து பேசறேன்ங்க. நான் உங்களை மாதிரி பெரிய ஆளெல்லாம் இல்லீங்க. சாதாரண எம்ப்ளாயி. ஒரு கெமிஸ்ட் கம்பெனியில வேலை பார்க்கிறேன்ங்க.’’

 ‘’ அப்படி சொல்லாதீங்க மிஸ்டர் மாலி, நீங்களும் நிச்சயம் பெரிய ஆளா ஆவீங்க… நம்பிக்கையை தளரவிடாதீங்க.’’

 ‘’ ரெம்ப நன்றிங்க. நீங்க அப்படி சொல்றது சோளவந்தான்ல இருக்கிற எங்க அலமு பாட்டி ஆசிர்வாதம் பண்ற மாதிரியே இருக்கு.’’ குரலில் சிரிப்பைக் காட்டாமல் சொல்ல, சிந்துவுக்கு கோபம் முட்டிக் கொண்டு வந்தது.

‘’ ரெம்ப நல்லதுங்க, இப்போ பாட்டு உங்களுக்கா இல்ல அலமு பாட்டிக்கா..? யாருக்கு டெடிகேட் பண்ணப் போறீங்க..?’’

‘’என் காதலி சிந்தூர்க்குங்க…’’ அவன் சிரிக்காமல் சொல்ல, சிந்தூவுக்குத் தான் சிவக்காமல் இருக்க இயலவில்லை.

   ‘’ சிந்துவா…?’’

‘’ ஆமாங்க அவங்க பேரும் சிந்துதான். ‘’

‘’என்ன பாட்டு வேணும்..?’’

‘’ மூன்றாம் பிறை படத்திலே வர்ற, பூங்காற்று புதிதானது… புதுவாழ்வு சதிராடுதுங்கிற பாட்டு…’’

‘’ இந்த பாட்டு உங்க காதலிக்கு பிடிக்குமா..?’’

‘’ ரெம்ப. அவங்க வாய்ஸ் ரெம்ப நல்லா இருக்கும்ங்க. நாங்க எப்போ தனியா சந்திச்சாலும், அவங்க என் தோள்ல சாய்ஞ்சுட்டு ஹஸ்கி வாய்ஸ்ல, அந்தப் பாட்டு பாடுவாங்க. நான் கண்மூடி கேட்டுட்டே இருப்பேன்ங்க. அதுல நடுவில ஒரு லைன் வரும் பாருங்க, ‘ நீ எந்தன் உயிரன்றோ…’னு அப்போ, அவங்க முகத்தை நிமிர்த்தி என்னைப் பார்ப்பாங்க. அச்சோ அந்த ஒரு பார்வைக்கு இந்த அரசியல் அமைப்பு சட்டம் அனுமதிச்சா, எங்க சோளவந்தானையே எழுதி தந்திடலாம்னு இருக்கும்…’’ குலோப்ஜாமூன் வார்த்தைகளில் அப்படியே முழுதாய் மூழ்கிக் கிடந்தாள் சிந்தூரி. கண்கள் தன்னால் மூடிக் கொண்டது. உணர்வுகள் கால்களை தரையை விட்டு எழும்ப சொன்னது. உதடுகள் சத்தமில்லாமல், ராட்சசன்..’ என்று முணுமுணுத்துக் கொண்டது.

 ‘’ மாலி, நீங்க பேசுறதை சிட்டி முழுக்க கேட்டுட்டு இருப்பாங்க.’’ என்றாள் தவிப்பாக.

‘’ கேட்கட்டும்ங்க. நான் யாரோ மாலி… அது யாரோ சிந்து…’’ சொல்லி விட்டு சிரிப்பை உதடு கடித்து மறைத்தான்.

‘’எனக்காக அந்த பாடல்ல இரண்டு வரிகள் பாடிக்காட்ட முடியுமா..?’’

‘’ உங்களுக்காக பாடாம இருக்க முடியுங்களா..? அந்த சுதி, ஸ்கேல் எல்லாம் தெரியாதுங்க… ஏதோ பாடறேன் கேட்டுக்கங்க…

‘…நதியெங்கும் செல்லும் 

கடல்தன்னைத் தேடி…

 பொன் வண்டோடும் மலர்த் தேடி…

  என் வாழ்வில் நீ வந்தது விதியானால்… 

 நீ எந்தன் உயிரன்றோ….’’

 

சிந்துவின் உயிரெல்லாம் புல்லரித்துக் கொண்டது. அந்த ஷணம் அவன் பார்வை தன்மீது படர்ந்து தவழ்ந்து, கிளர்ந்து முடிந்தது போல் உடல் கூச்செறிந்தது…

தன்னுடைய இடம் பொருள், சூழல், வேலை அத்தனையும் மறந்து அந்த வனமாலியின் தோளில் ஒரு கதம்பமாய் தன்னை கடத்தி விட உயிர் துடித்தாள்.

‘’ நீங்க கேட்ட பாட்டு வந்துட்டே இருக்கு மாலி. எப்போதும் இணைஞ்சு இருங்க. இது உங்கள் நிலா எப்.எம். 88.8… கானமும் கவிதையும்… நான் உங்கள் கானசிந்தூரி…’’

 அவள் முடிப்பதிற்குள் பீஜியத்தோடு பாடல் ஒலி அலையில் ஏறத் தொடங்க, வேகமாய் அங்கிருந்து நகர்ந்து நாற்காலியில் வந்து தொப்பென்று விழுந்தாள்

‘ இன்னைக்கு இருக்கு அவனுக்கு…’ மனசுக்குள் சொல்லிக் கொண்டாலும், இருவரும் பணி நிமித்தம், ஊர் சென்றது என்று பல காரணங்களால், பத்து நாட்களாய் குரலால் கூட காதலித்து கொள்ளவில்லை. இந்த நிமிசம் அந்த குரல் ஸ்பரிசம் அவளை கரைய வைத்துக் கொண்டிருந்தது. ஏன் அவனை இத்தனை காதலிக்கிறோம் என்ற கேள்விக்காவது விரைவில் விடை கண்டாக வேண்டும்.

                     ❤️           

கே.கே நகர் சாரதா அவென்யூ. மொட்டை மாடி சுவரில் அதே தென்னங்கீற்று. அறை பூட்டிக் கிடந்தது. இன்னும் இருவருமே வேலையில் இருந்து வந்திருக்கவில்லை.

   மணி நாலுதான் ஆகி இருந்தது. கொஞ்சமாய் வெயில் தூவி இருந்த பூமியில் காற்று பன்(க்)கா போட்டுக் கொண்டிருந்தது. வெயிலிலும் வீரியம் இல்லை. ஆனால் வீராப்பு குறையாமல் வேகம் காட்டிக் கொண்டிருந்தாலும், தரை காற்று கடலில் தழுவி வரத் தொடங்கி இருந்ததால், ஜம்பம் வேகாத சூரியன் கீழிறங்கிக் கொண்டு இருந்தான்.

 ஒரு பக்கமாய் சுவற்றில் அழுத்தி மற்றொரு காலை தரையில் ஊன்றி அமர்ந்திருந்தாள். மாலிக்கு நான்கு முறை அழைத்தும் எடுக்கவில்லை. சத்தத்தை கட்டி சயிலன்சில் போட்டு இருப்பானாக இருக்கும்.

  மணிக்கட்டைத் திருப்பி மணி பார்த்த சமயம், ரோட்டில் வனமாலியின் பல்சர் தடதடப்பது கேட்டது. அவள் குனிந்து பார்க்க, அவன் நிமிர்ந்து பார்த்துக் கொண்டேதான் காம்பெளன்டிற்குள் நுழைந்தான்.

சில சொற்ப நிமிடங்களில் படியேறி வந்தவன், ஹெல்மெட்டை கக்கத்தில் வைத்துக் கொண்டபடி, சுளிரென அவள் முதுகில் அடிக்க, அவள் முதுகை தேய்த்துக் கொண்டே அவனை முறைத்தாள்.

‘’ எதுக்குடா அடிக்கிறே..?’’

‘’இப்படி உட்கார்ந்து தூக்க கலக்கத்தில விழுந்தால், ஆசைக்கு எடுத்து பார்க்க ஒரு எலும்பு கூட மிச்சம் இருக்காது.’’

‘’ ம்க்கும். நாங்க எல்லாம் உட்கார்ந்துட்டே தூங்கறவங்களாக்கும்..?’’

‘’ கெட்ட நேரம் வந்தா, கொட்டப் பாக்குலயும் குட்டித் தேள் இருக்கும்.’’ அவன் இப்படிச் சொல்ல, இணக்கமாய் அவள் தோளில் சாய்ந்து கொண்டாள்..

‘’ என்னவாம்…’’ என்றான் கேலியாய். கேட்டுக் கொண்டே இருந்தாலும், கைகள் அவள் கன்னத்தை காதலாய் தடவ. ஒற்றைக் கையை வளைத்து அவன் இன்னொரு தோளில் மாலையாக்கி கொண்டாள்.

‘’ சிந்தூர், இது மொட்டை மாடி. என்னதான் வெயில் நேரமாவே இருந்தாலும் யாரும் பார்க்கவே மாட்டாங்கன்னு கேரண்டியாலாம் சொல்ல முடியாது. இரு கதவு திறக்கிறேன்.’’ 

 அவன் குரலில் வழிந்த கேலியில் அவள் விலகி நிற்க, பாக்கெட்டில் இருந்து சாவியை எடுத்து கதவு திறந்தான்.

 உள்ளே நுழைந்ததும் நாற்காலியை நகர்த்தி போட்டுவிட்டு, எதிரில் அமர்ந்து கொண்டான் இடைவெளிவிட்டு.

கண்ணியக்காரன்..! மெல்லிய சிரிப்பு அவளுள் விளைந்தாலும் அந்த கண்ணியத்துக்குத் தான் இத்தனை பைத்தியமாய் சுற்றுகிறாள் என்பது அவளுக்கு மட்டும் தானே தெரியும்.

‘’ ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க சிந்தூர்..?’’

‘’ இருக்காங்க. சரவணன் தான் ரெம்ப மிஸ் பண்றான். ஏன்னு தெரியல அவனுக்கு என்மேல அத்தனை பாசம்.’’

‘’ ஏன்னு தெரியாம எத்தனையோ இருக்கு உலகத்துல. இரு வர்றேன்.’’ வெளியில் சென்றவன் ஐந்து நிமிடத்தில் முகம் அலம்பி, புத்துணர்வாகிக் கொண்டே வந்து நின்றான்.

‘’ நீங்க பண்ணினது நியாயமா..?’’

 ‘’ எது இப்போ பாத்ரூம்ல இருந்து வர்றதா..?’’ அவன் சிரிக்காமல் கேட்க, பற்றிக் கொண்டு வந்தது சிந்தூரிக்கு.

‘’ அடேய்..! என்கிட்ட இப்படில்லாம் பேசுவாங்களா..?’’

சின்னதாய் குனிந்து அவளுடைய மூக்கைப் பற்றி நிமிண்டியவன்,

 ‘’ உன்கிட்ட கூட பேசாட்டி நான் இருபத்தியேழு வயசு வாலிபன்னு சொல்லிக்கிறது என்னடி நியாயம்..?’’

‘’ டி போட்டா கோபம் வரும்…’’

‘’ நீ மட்டும் டா’ போடலாமோ..? ஆம்பளைங்களுக்கு கேட்க யாருமில்லைன்னு அர்த்தமா..? ஆணியவாதிகளே உடனே வாருங்கள், எந்த ஆணியை பிடுங்கிக் கொண்டு இருந்தாலும்…’’ கைகளை விரித்து மேலே தூக்கி அவன் விண்ணப்பம் வைக்க, உள்ளங்கையில் ஓங்கி அடித்தாள்.

 ‘’ நான் போறேன் அப்ப..”’

  ‘’ இரு டீ போடறேன்.’’

‘’ நான் போடறேன் மாலி.’’

‘’வேண்டாம் நானே போடறேன். நீ ரெம்ப சுமாரா போடுவே…’’ சிரித்துக் கொண்டே மினி ஃப்ரிட்ஜில் இருந்து பால் பாக்கெட்டை எடுத்துக் கொண்டு உள்ளே நகர்ந்தான்.

 வெளியில் வந்தாள். காற்று பிய்த்துக் கொட்டியது. நிறைய காலிமனைகள் வீடுகளாக முளைக்கத் தொடங்கி இருந்தன. இந்த ஏரியா அவளுக்கு நிறையவே பிடித்தது. வாழ்க்கை ரசிப்பவர்களுக்கு ஒவ்வொரு அணுவும் இணைவாக இருக்கும். 

‘’ டீ ப்ளீஸ்…’’ இரண்டு கப்புகளுடன் முன்னே வந்து நின்றான். எடுத்துக் கொண்டாள். காற்றின் வேகத்திற்கு கோப்பையில் இருந்த டீ, சூடாய் ஆடியது.

இரண்டு கைகளால் பற்றிக் கொண்டு ஒரு மிடறு விழுங்கினாள். ஏலக்காய் மணந்தது. அவளுக்காக அவன் தயாரித்தது என்று உணர்ந்த நிமிசம் ஏகத்துக்கும் மணந்தது.

‘’நல்லா இருக்கா சிந்தூர்…’’

‘’ம்..! மாலி, நாம கல்யாணம் பண்ணினா, இந்த ஏரியாவலேயே வீடு பார்த்து இருக்கணும்.’’

‘’ அடேங்கப்பா..! நான் இன்னும் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிற முடிவுக்கே வரலியே கண்ணம்மா…’’

‘’உன்கிட்ட யார் கேட்டா…’’

  ‘’ அப்பசரி…’’

‘’ அதோ அங்கே அடிக்கல் போட்டு வச்சிருக்காங்க இல்ல, அந்த வீடு கட்டி முடிக்கறதுக்குள்ள நாம கல்யாணம் பண்ணிக்கணும்.’’

‘’பாருடா அப்புறம்…’’ டீயை உறிஞ்சிக் கொண்டே சுவாரஸ்யமாய்க் கேட்டான்.

 ‘’ அந்த வீட்டுக்குத் தான் நாம குடிபோறோம்.’’

‘’அது அந்த வீட்டுக்காரனுக்குத் தெரியுமா..?’’

‘’ மாலி… எப்ப பாரு கேலியா..! நமக்கு அந்த வீடெல்லாம் வேண்டாம் மாலி. என்ன வீடா இருந்தாலும், இதுமாதிரி ஒரு மொட்டை மாடி இருக்கும்ல. அதுல ஒரு ஷெட்டை போட்டு, எட்டிப் பார்க்கிற தென்னை மரத்தோட, எப்பவும் உன் பக்கத்துல இருக்கணும்…’’ அவன் தோளில் சாய்ந்த பிறகு, விழுங்கிய தேநீர் தேவாமிர்தமாக தொண்டையில் இறங்கியது.’’

‘’ கற்பனை நல்லாத்தான் இருக்கு. பார்க்கலாம் விதிக்கும், விதிச்சதுக்கும் இருக்கிற தூரத்தை.’’ மெல்ல அவள் கன்னத்தை தட்டிச் சொன்னான்.

காற்று வந்து கார்குழலோடு சேர்த்து  கண்ட கனவுகளையும் கலைக்க முயற்சி செய்து கொண்டு இருந்தது. 

.உன் மடியில் நானுறங்க கண்ணிரண்டும் தான் மயங்க

என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும்

சொந்தம் இந்த சொந்தமம்மா

வாழ்விருக்கும் நாள் வரைக்கும்

தஞ்சம் உந்தன் நெஞ்சம்


   
ReplyQuote
Parveen Banu
(@parveen-banu)
Active Member Author
Joined: 1 week ago
Posts: 11
Topic starter  

கருத்து க்களை கீழே உள்ள லிங்கில் சென்று பகிர்ந்து கொள்ளுங்கள்..

https://kavichandranovels.com/community/topicid/396/


   
ReplyQuote

You cannot copy content of this page