All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

அனகனின் அன்போடு நான் -03

 

VSV 49 – அனகனின் அன்போடு நான்
(@vsv49)
Active Member Author
Joined: 4 months ago
Posts: 3
Topic starter  

அத்தியாயம்-03

"ரொம்ப அக்வேர்டா ஃபீல் பண்ண வைக்கிறேனா என்ன? "என்று கேட்கவும் இல்லை ஆமென எல்லா பக்கமும் தலையாடியது அவளுக்கு.

அவள் செய்கையில் புன்னகை மிளிர ,"ஓகே ரிலாக்ஸ் எழுந்துக்கோ வா" என்று அழைக்க, 'எங்கே அழைக்கிறான்? 'என்று புரியாமலேயே எழுந்து அவன் அணைப்பிலிருந்து விலகினாள்.

அவளைக் கண்ணாடி இருந்த பீரோ முன்பு நாற்காலி போட்டு அமர்த்தியவன், "இந்த ஜிவெல்ஸ் எல்லாம் கழட்டிடு அகீ." என்றவன் தானே அதைத் துவங்கிட ஏதோ மந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் போல செயல்பட்டாள்.

காலையில் அவன் அணிவித்த மாங்கல்யமும் கூடவே கழுத்திற்கு சற்று இறங்கிய மெல்லிய சங்கிலி மட்டுமே அவள் கந்தரத்தோடு உறவாடி நின்றது. அவளது தோள்பட்டையில் இரு கைகளையும் மென்மையாக பதித்தவன் உச்சந்தலையில் தனது தாடையை பதித்தான்.

"வொன்டர்ஃபுல் அகீ!"கண்களை மூடி அந்த நொடியை ஆழ்ந்து கிரகித்தான்.

கூச்சத்துடன் அவள் நெளிந்திட அவளின் அசைவினில் புன்னகைத்து,"ஓகே ஓகே கூல்" என்று எழுப்பி விட்டு," ட்ரெஸ் மாத்திட்டு படுத்துக்கோ" என்று நகர்ந்து கொண்டான்.

"ஹப்பா !"என்று பெருமூச்செறிய இதழ் பிரியா புன்னகை அவனிடத்தில்.
"இதுக்கேவா? "என்று உள்ளூர நகைத்துக் கொண்டவன் திரும்பி," ட்ரெஸ் மாத்தலையா நான் வெளியே எதுவும் போகணுமா? "என்று கிண்டல் செய்ய,

'இல்லை இல்லை' என்று தலையாட்டி விட்டு தனது பெட்டி இருந்த இடத்திற்கு விரைந்தாள்.
"ஹோய் அங்கே இல்லை. அலமாரி பாரு" என்று கண்ணால் திசையைச் சுட்டிக் காட்ட

"என் பெட்டி? "என்று நிற்க

"அலமாரியில் செட் பண்ணியாச்சு. அது எம்ப்டி" என்றான்.

'கேட்காம எடுத்து..'என்று மனதில் திட்ட

"உன் சித்தி தான் எடுத்து வச்சாங்க" என்றான் அவளின் மனதின் போக்கை உணர்ந்து.

அலமாரியில் சென்று அவளுக்கான உடைகளை எடுத்துக் கொள்ள

செல்வா, "பார்க்கலை பார்க்கலை போ" என்றவன் கட்டிலில் மல்லாந்து படுத்துக் கொண்டு விழிகளில் கையை மடக்கி மூடியபடி படுத்து கொண்டான்.

அனு திரும்பி புன்னகையுடன் நின்றவள், புடவையை அவிழ்த்த மாயத்தில் நைட்டியை அணிந்து கொண்டே இதர உடைகளை களைந்தாள்.

'ரொம்ப ஸ்மார்ட் தான்' என்று முணுமுணுத்தவன் விழிகள் மேலிருந்து கையை மட்டும் எடுக்கவில்லை.

வந்து அலுங்காமல் குலுங்காமல் படுத்தவள், போர்வையை கால் முதல் தலை வரை இழுத்துப் போர்த்திக் கொண்டு ஏதேனும் தெரிகிறதா என்று பார்க்க

"ரொம்ப பண்ணாதடி அருக்காணி. அப்புறம் இன்னைக்கே கடிச்சு தின்னுடப் போறேன்" சட்டென முகிழ்ந்த கோபத்துடன் போர்வையை விலக்கிவிட்டு அவளுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.

"ப்ம்ச் இப்படி தூங்கி தான் பழக்கம் "என்று மீண்டும் போர்வையை எடுத்தவளை," ஜூட்டி (பொய்காரி) அண்ட புளுகு ஆகாச புளுகா இருக்கே மார்கழி மாதத்தில் காத்து வரலைனு மொட்டை மாடியில் டேபிள் ஃபேன் வச்சு தூங்கின ஆள் தானே நீ?!" என்று சிரித்தான்.

"உங்களுக்கு யார் சொன்னாங்க?" தயக்கம் ஓடிப் போய் சினம் வந்து ஒட்டிக் கொண்டது அவனது கிண்டலினால்.

"யாரோ?" என்று சிரித்தவன் அவளைப் பார்த்தபடி வாகாய் படுத்துக் கொண்டான்.

'அச்சச்சோ இப்படி படுக்கிறாங்களே' என்று அவள் திரும்பி படுக்கும் முன்பே அவளைத் தன் பக்கம் இழுத்திருந்தான்.

"நானும் நல்ல பையனா தூங்கலாம்னு நினைச்சா என்னை உசுப்பேத்தற நீ?" என்க

"இல்லை இல்லை அதெல்லாம் இல்லை" என்று தயங்கி அவனிடம் இருந்து விடுபட முயன்றவளை விடாது பிடித்தபடி," நோ சான்ஸ் என் கூடவே தூங்கு" என்றான் கண்களை மூடிக்கொண்டு.

"ப்ளீஸ் எனக்கு அப்படி தூங்கி பழக்கமே இல்லை" என்று இறைஞ்சியவளைப் பார்த்து இதழ் விரிக்காமல் புன்னகை சிந்தியவன்," ஓகே ஓகே தூங்கு டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்" என்று தள்ளிப் படுத்தான்.

ஆசுவாசமாய் அவள் விழிகளை மூடவும் அவனும் விழிகளை மூடினான்.

சில நிமிடங்கள் கழித்து சீரான மூச்சு காற்று மட்டுமே இருவரிடையிலும்.

*********
என்னவோ ஊரில் இல்லாத அழகியைத் தேடி பிடிச்ச மாதிரி இத்தனை அவசரமாக கட்டிட்டு வந்திருக்கான் உங்க பேரன் நொடித்துக் கொண்ட செல்வாவின் அத்தையை சலிப்பாக பார்த்தார் அவனின் தாத்தா.

அவனுக்கு பிடிச்ச பொண்ணை கட்டி இருக்கான். கல்யாணம் முடிஞ்ச பிறகு இதென்ன பேச்சு வாசுகி என்று அதட்ட ஆமாம் இது ஒன்னைச் சொல்லிடுங்க. எத்தனை தரம் கேட்டேன் சித்தப்பா என் மகளை வந்து பொண்ணு கேளுங்கன்னு. காதிலேயே வாங்கிக்கலை நீங்க. ஏன் என் பொண்ணு இங்க இருக்க பவுசை அனுவிக்க (அனுபவிக்க)கூடாதோ என்று சடைத்துக் கொண்டவர் பின் அவரே உங்க பேரனுக்கு குடுத்து வைக்கலை நான் என்ன செய்ய என்றார்.

செல்வாவின் தாத்தா அமைதி காத்தார். மேலும் பேசினால் இந்த பேச்சு எங்கே போய் முடியும் என்று தெரியும் அதனாலேயே சட்டென்று அமைதியாகிவிட்டார்.

என்ன சித்தப்பா அமைதியா இருக்கீங்க என்றவரிடம் வந்து அமர்ந்தான் செல்வா.

சொல்லுங்க அத்தை ஏதோ பேசிட்டு இருந்தீங்க போல புன்னகையுடன் அவன் கேட்க
சும்மா சித்தப்பா கிட்ட பேசிட்டு இருந்தேன்ப்பா என்று அவர் பம்ம
ஓஓஓ சும்மா மட்டும் பேசுங்க சரியா. சும்மா இருக்கறவனைப் பத்தி எல்லாம் பேசக் கூடாது என்றவன் முகம் புன்னகையுடன் இருந்தாலும் வார்த்தையிலும் குரலிலும் அத்தனை அழுத்தம்.

செல்வா என்றதும் உங்க பொண்ணைக் கூப்பிடுங்க என்றான் அடுத்ததாக.

செல்வா ஏன் டா என்று தாத்தா சங்கடம் கொள்ள

இருங்க தாத்தா பேசுவோம் என்று அவரிடம் சொல்லியவன் வாசுகி பக்கம் திரும்பினான்.

வரச் சொல்லுங்க அத்தை என்றதும் அவர் தயங்கியபடி மகளுக்கு அழைக்க அவளும் அவ்விடம் வந்து சேர்ந்தாள் .

"என்னம்மா கூப்பிட்டீங்களா?" என்று கேட்க

" ஜானகி" என்று அழைத்தான்  செல்வா.

" சொல்லுங்கண்ணா!" என்றதும் செல்வா அப்படியே திரும்பி வாசுகியைப் பார்த்தான்.

"இப்போ அவ என்னை என்னன்னு கூப்பிட்டா?" என்று கேட்க வாசுகி முகம் சுருங்கிப் போனது.

" சொல்லுங்க அத்தை என்னன்னு கூப்பிட்டா?" என்று பதட்டலாக கேட்கவும்," அண்ணான்னு" என்றார் அவர்.

" அண்ணான்னு கூப்பிட்டா எனக்கு அவ தங்கச்சி தானே அதுக்கப்புறம் நீங்களே முடிவு செய்யுங்க" என்று எழுந்து போய் விட்டான்.

இதை கேட்டிருந்த அனு கீர்த்திகாவோ, சற்று சுணங்கித் தான் போனாள்.

காலையில் இருந்த ஒரு மகிழ்ச்சி இப்போது இல்லவே இல்லை. உறங்கி எழும் போதே அவனின் காலை வணக்கம் செவியை நிறைக்க தானாய் புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது அவளுக்கு.

"குளிச்சுட்டு ஏதாவது சாரி எடுத்து கட்டிக்கோடா. இங்கே இருக்கிற வரைக்கும் சாரி அப்புறம் சென்னை போனதும் யுவர் விஷ்" என்றவன்

"உனக்கு எதுவும் இஷ்யூ இல்லையே?" என்றான் அடுத்ததாக.

"சாரி எனக்கு பழக்கம் தான் மேனேஜ் பண்ணிக்கறேன்" என்றாள் போர்வையை மடித்தபடி.

"போர்வை அப்படியே இருக்கட்டும் அகீ. நாத்தனார் ஐ மீன் எனக்கு அக்கா முறை உள்ளவங்க வந்து எடுப்பாங்க. இங்கே அது சம்பிரதாயம்" என்றான்.

அவனைப் பார்த்திடாமலேயே,' சரி' என்றாள்.

குட் மார்னிங் சொல்லும் போது அவனது உடையை கவனிக்கவில்லை அவள். வெள்ளை பனியனும், வேட்டியும் அணிந்திருக்க கழுத்தில் கிடந்த சங்கிலி அவன் நெஞ்சு முடியோடு உறவாடி நிற்க, அது ஒரு மாதிரி கூச்சத்தைக் கொடுத்தது அவளுக்கு.

முறுக்கேறிய புஜங்களுக்கும் அவன் அணிந்திருந்த பனியனுக்கும் விளம்பர மாடல் போலவே இருந்தான்.

"போய் குளிம்மா டைம் ஆகுது பாரு. கோவிலுக்கு போகணும்" என்றவன் கவனத்தை கைபேசியில் வைத்திட அவசரமாய் உள்ளே சென்றாள்.

அதற்குள் கதவுத் தட்டப்பட செல்வா எழுந்து," வர்றேன்" என்றபடி கதவைத் திறக்க, சொன்னது போல அவனது பெரியம்மா மகள் நின்றிருந்தாள்.

"எங்கே என் தம்பி பொண்டாட்டி?" என்று அப்பெண் சிரிக்க
"குளிக்க போயாச்சு" என்று புன்னகையுடன் கூற

"வெவரம்டா நீயி. சரி தள்ளு துணிமணியை எடுக்கிறேன்." என்றவர் போர்வை தலையணை உறைகளை உருவி விட்டு மெத்தைக்கு அடியில் பார்க்க ஒரு கட்டு இருநூறு ரூபாய் நோட்டுகள் இருந்தது.

தன் தம்பியை பார்த்து சிரித்து விட்டு போனாள் அவள்.

"அவங்க போயிட்டாங்களா?" என்று எட்டிப் பார்த்தவளைக் கண்டு சிரித்தவன்," போயாச்சு போயாச்சு "என்றான்.

'ஏதேனும் கேட்பார்களோ?' என்ற அச்சம் அவளுக்கு.

"நீ ட்ரஸ் மாத்து நான் வெளியே இருக்கேன்" என்றபடி சட்டையை அணிந்து கொண்டவன், வெளியே வந்த அவளிடம் நெருங்கி," அருக்காணி வித்தவுட் மேக்கப்ல ஆளை அசத்தறடி, லெட் மீ கிஸ்" என்றவன் பட்டென்று பட்டும் படாமல் இதழில் பதிந்து விலகி பின் நெற்றியில் முத்தமிட்டு," சீக்கிரம் வா" என்று சொல்லி அங்கிருந்து வெளியேறி விட்டான்.

'ஒரு நிமிடம் என்ன நடந்தது?' என்று திகைத்தவள்," இவர் எல்லாம் என்ன மேக்?" என்று சொல்லிக் கொண்டே தயாராகி வரவும் தான், வாசுகியிடம் அவன் பேசியதைக் கேட்டிருந்தாள்.

"செல்வா சாமி கும்பிட்டு வந்திருங்க சாப்பிட்டு கோவிலுக்கு போகணும். ம்மா அனு நீயும் வாம்மா" என்று அவனது தாத்தாவின் குரல் கேட்க நிதானத்திற்கு வந்து அவன் அருகில் சென்றாள்.

செல்வாவோ அவளது முகச் சுணக்கம் உணர்ந்து,' என்னாச்சு?' என்று கண் ஜாடையில் அவளை விசாரிக்க ஒன்றுமில்லை என்று தலையாட்டினாள்.

"ஹ்ம்ம்" என்றவன்," விளக்கேத்து" என்றான் மெலிதான குரலில்.

"உங்கத்தை மாமா கிட்ட நல்லா வேண்டிக்க ம்மா. சீக்கிரமே ரெண்டு பேரும் உங்க மடியில் பிள்ளைகளா தவழணும்." என்றார் தாத்தா.

செல்வாவோ," தாத்தா யாராவது ஒருத்தர் பிறந்தா போதும் இன்னொரு வீட்டில் மத்தவங்க பிறந்து ஜோடி சேர்ந்துக்கட்டும்" என்று சொல்ல ,"போடா கிறுக்கா!" என்று சிரித்தார் அவர்.

"உங்க பையனை சமாளிக்க என் அம்மா தானே சரி அதுக்கு தான் சொன்னேன். "என்று அடுத்ததாய் கூற, அவன் இலகுவாய் இருக்க முயல்கிறான் என்று புரிந்தது அவருக்கும்.

செல்வாவின் பெற்றோர் சமீபத்தில் ஒரு விபத்தில் இணைந்தே இறந்திருந்தனர். கல்லூரி முடித்து அவன் தொழிலை கவனிக்க வந்த நேரம் தான் அந்த விபத்து நிகழ்ந்திருந்தது.  அந்த ஒரு விபத்து அவனது வாழ்வையே தலைகீழாக புரட்டிப் போட்டிருந்தது.

அனைவரும் சாமி கும்பிட்டு வெளியே வர ,"உங்க வாசுகி அத்தை மகள் அண்ணா னு சொல்லலைன்னா நீங்க அவங்களையே மேரேஜ் பண்ணி இருப்பீங்களா?" என்று அனு கேட்க சட்டென்று திகைத்துப்போய் பார்த்தான் செல்வா.

...... தொடரும்


   
ReplyQuote

You cannot copy content of this page