All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

போகனின் மோகனாங்கி - 11

 

VSV 32 – போகனின் மோகனாங்கி
(@vsv32)
Eminent Member Author
Joined: 4 months ago
Posts: 14
Topic starter  

அத்தியாயம் 11

மேக்னாவும், அகத்தியனும் மெளனமாகவே அமர்ந்திருக்க, நித்யா தான் பேச்சை தொடங்கினாள்.

 

“மிஸ்டர் அகத்தியன், மேகி கதையோட அனிமேஷன் படத்துக்கு தேவையான கேரக்டர்ஸை கற்பனையா வரைய போறீங்களா? இல்லை யாராவது ஆர்ட்டிஸ்டை மேக்கப் போட்டு படம் எடுத்து, அதை அனிமேஷனா மாத்த போறீங்களா?”

 

“மோகனாங்கி கேரக்டருக்கு உன் பிரெண்ட் மோகனாவே இருக்கட்டும்”

 

“அப்போ அகன் கேரக்டருக்கு, யாரை செலக்ட் பண்ண போறீங்க, பாஸ்” என்றான் திலீப் ஆர்வத்துடன்

 

“நான் தான்”

 

“அகத்தியன் நீங்க அகன் கேரக்டர் பண்ண போறீங்களா? வேண்டாமே, எனக்கு உங்க மேல நிறையவே ரெஸ்பெக்ட் இருக்கு. அகனோட இடத்துல உங்கள வைச்சு பார்த்தா, அந்த வெறுப்பு உங்க மேலயும் வந்துடுமோனு பயமா இருக்கு. ப்ளீஸ் வேற யாராச்சும் மாடலை கூப்பிடலாமே” என்றாள் மேக்னா

 

“இல்ல மேகி, சார் சொல்றது கரெக்ட் தான், அவர் தான் அகன் கேரக்டருக்கு ஆப்ட்டா இருப்பாரு. அவரையே மாடலா அவர் வரைஞ்சு வச்ச போஸ்டர்ஸை பார்த்த தானே? அவர் அகன் கேரக்டர் பண்ணா பெர்பக்ட்டா இருக்கும்.

 

மோகனாங்கி மொத்தமா அகனை நம்பி ஏமாந்த மாதிரி, நீயும் அகத்தியனை நம்பிராதே, அவரை கேர்ப்புல்லா வாட்ச் பண்ணு” என்று நித்யா மேக்னாவின் காதுக்குள் கிசுகிசுத்தாள்.

 

அவள் இதழசைவில் தன்னைப்பற்றி என்ன சொல்கிறாள் என்று புரிந்து கொண்ட அகத்தியனுக்கு நித்யாவின் மேல் கோபம் வந்தது. அதை காட்ட முடியாமல் பல்லை கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

 

“சும்மா இரு நித்தி, அகத்தியன் இஸ் எ ஜெம், வீணா சந்தேகப்படாத” என்றாள் மேக்னா

 

“மோகனா, இருட்டிடுச்சு, கிளம்பலாமா?” என்று எழுந்து கொண்டான் அகத்தியன்.

 

மற்ற மூவரும் அவன் பின்னால் சென்று காரில் ஏறிக் கொண்டனர்.

 

அடுத்தடுத்த நாட்களில் அகத்தியனின் பேலஸிற்கு முன்னால் வடிவமைக்கபட்டிருந்த பெரிய பூங்காவில் மேக்னாவை இளவரசி உடையில் நிற்க வைத்து பலவிதமான போஸ்களில் படம் பிடித்தான் அகத்தியன்.

 

படம் பிடிக்கும் போது அகத்தியன் கண்களில் இருந்த ரசனையை பார்த்து மேக்னாவின் கன்னங்கள் சிவந்தன. அவள் எந்த பக்கம் சென்றாலும் அகத்தியனின் பார்வை நிழல் போல அவளை தொடர்வதை அவளால் உணர முடிந்தது. அவள் நித்யா, திலீப்போடு ஏதும் பேசிக் கொண்டிருந்தாலும் அகத்தியன் அவளை விழுங்குவது போல பார்த்து கொண்டிருப்பான்.

 

அகனோடு போர்பயிற்சி பெற்ற காட்சிகளையும் படமாக்க வேண்டும் என்பதால் அகத்தியனிடம் சென்றவள், “என்னையே படம் பிடிச்சிட்டு இருந்தா எப்படி ஓவியரே? நீங்களும் அகன் போல டிரஸ் பண்ணிட்டு வாங்க. போர்பயிற்சி கொடுக்கற மாதிரி போஸ் கொடுப்போம். திலீப் போட்டோ எடுக்கட்டும்” என்றாள் மேக்னா

 

“இல்ல மோகனா, தனித்தனியா எடுத்துக்கலாம். அதுக்கப்புறமா அனிமேஷன்ல எடிட் பண்ணி ஒண்ணா போட்டுக்கலாம்”

 

“ஏன்? நம்ம இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி கற்பனை அண்ட் கதையோட காட்சியும் மனசுல நல்லா பதிஞ்சு இருக்கு. அதுல வர்ற மாதிரி நாம போஸ் கொடுத்தா அது நல்லா வருமே. சோ ரெடி ஆயிட்டு வாங்க, அகத்தியன்”

 

“இல்ல மோகனா, வேண்டாம்” என்றான் எங்கேயோ பார்த்துக் கொண்டு

 

“ஏன்? என்கூட ஒண்ணா போஸ் கொடுக்க பிடிக்கலையா?”

 

“என் கை சும்மா இருக்காது, போஸ் கொடுக்கறதோட நிறுத்த மாட்டேன், அதான் யோசிக்கறேன்”

 

“என்ன சொன்னீங்க?”

 

“இல்ல ஒண்ணுமில்ல, சரி நான் போய் ரெடியாயிட்டு வரேன்” என்று கிளம்பி சென்றவன் அடுத்த அரைமணி நேரத்தில் அகனாக வந்து நின்றான். 

 

அகத்தியனின் நடை உடை பாவனை என அனைத்துமே மேக்னாவின் அகக்கண்ணில் இருந்த அகனை அப்படியே கண்முன்னாடி நிறுத்தியது போல இருக்கவே இமைக்கவும் மறந்து அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

மோகனாங்கியின் ஆடை அலங்காரத்தில் இருந்த மேக்னாவின் கரம் பற்றி, “மோகனா பயிற்சிக்கு தயாரா?” என்றான் அவள் கண்களை ஆழ்ந்து பார்த்தபடி

 

பதில் பேசாது அவனையே பார்த்தபடி அவன் பின்னால் சென்றாள். வேலை ஆட்கள் இரண்டு வாளை கொண்டு வந்து கொடுத்தார்கள். 

 

“பாஸ், என்ன இது? நிஜமான வாளை கொண்டு வந்திருக்காங்க. போஸ் கொடுக்கறதுக்கு தானே? அட்டையில தயார் பண்ணியிருக்கலாமே” என்றான் திலீப்

 

“இல்ல திலீப், மோகனா தான் ரியலிஸ்டிக்கா இருந்தா நல்லா இருக்கும்னு பீல் பண்ணாங்க. அது தான் உண்மையான வாளையும் வில்லையும் வரவழைச்சேன்” என்றான் 

 

அகத்தியனை மோகன புன்னகையுடன் பார்த்துக் கொண்டே அவன் கொடுத்த வாளை கையில் வாங்கினாள் மேக்னா. கதையில் வந்த அன்றைய அகன் மோகனாங்கியே நேரில் வந்தது போல இருக்கவும் நித்யாவும் திலீப்பும் ஒரு வித பிரமிப்புடன் இருவரையும் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

 

அகத்தியனின் கம்பீரமான ஆண்மையும் மேக்னாவின் அறிவும் அழகும் அவர்களின் ஆடை அலங்காரங்களும் பார்ப்பவர்களை அந்த காலத்துக்கே கூட்டி சென்றது போல இருந்தது. திலீப் கேமரா வழியே இருவரையும் பார்த்தான். 

 

இருவரின் விழிகளும் வாளின் கூர்மையோடு ஒன்றையொன்று மோதிக்  கொண்டிருந்தன. அகத்தியனின் அழுத்தமான ஊடுருவும் பார்வைக்கு சற்றும் குறையாமல் மோகன பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் மேக்னா. அகத்தியன் அவள் பார்வையில் கட்டுண்டு கிடந்தான். இருவருக்கும் காதல் தீ பற்றிக் கொண்டது. இனி பாஸ் தன் காதலுக்காக மெனக்கெட வேண்டியதில்லை. மேக்னா என்னும் பேரழகி அகத்தியனை தன் அகத்திற்குள் ஏற்றுக் கொண்டாள் என்பதை அவள் பார்வையே சொன்னது.

 

இருவரும் வாளை ஏந்தி போஸ் கொடுக்காமல் தங்களுக்குள் பார்வையால் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் மோன நிலையை கலைக்கவும் மனம் வராமல் பொறுத்து பொறுத்து பார்த்த திலீப் நித்யாவை துணைக்கு அழைக்கலாம் என்று அவளை பார்த்தான். அவளோ திறந்த வாயை மூடாமல் கண்ணிமைக்கவும் மறந்து இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

அகனை கண்டு மோகனாங்கி மயங்கியதிலும், மோகனாங்கியை கண்டு அகன் மயங்கியதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை. இருவருக்கும் அத்தனை ஜோடி பொருத்தம் இருந்தது. அகத்தியனின் கண்களில் அளவில்லா காதலும் ஏக்கமும் தெரிந்தது. கண்களால் அகத்திலிருக்கும் எல்லா அன்பையும் காட்டிவிட முடியுமா என்ற சந்தேகம் இருப்பவர்கள் அகத்தியனின் கண்களை பார்த்தால் நிச்சயமாக கண்களில் வழியே காதலை மட்டுமல்ல அன்பையும் காட்டமுடியும் என்று உறுதியாக நம்புவார்கள்.

எப்போதும் அவனை ஒரு சந்தேக கண்ணோடு பார்த்த நித்யாவிற்கே இப்போது அகத்தியனின் மேல் ஒரு நம்பிக்கை பிறந்தது. அவன் மூலமாக அகனின் அகத்தையும் காண முடிந்தது. அகன் பக்கமும் நியாயம் இருக்குமோ? என்ன நடந்திருக்கும்? என்ற கேள்வி எழுந்தது.

 

திலீப் நித்யாவின் அருகே வந்தவன் அவளை நோக்கி குனிந்து, “என்ன இது? பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பாக்கறது போல வாயை பொளந்துட்டு பார்த்துட்டு இருக்க? அவங்க இரண்டு பேரும் என்ன இங்கிலீஷ் கிஸ்ஸா அடிச்சிட்டு இருக்காங்க?” என்றான்

 

“ச்சீ, வாயை மூடுங்க, ஏன் இப்படி அசிங்கமா பேசறீங்க?” என்று அவனை முறைத்தாள் நித்யா

 

“பின்ன என்ன? அவங்க தான் லவ் அதிகமாகி அப்படியே பார்த்துட்டு இருக்காங்க. நீ என்னை பார்த்தா கூட அதுல ஒரு நியாயம் இருக்கு. அவங்களை பார்த்து என்ன பண்ண போறே?”

 

“ஏன்? நான் ஏன் உங்களை பார்க்கணும்? என்ன மிஸ்டர் பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு?” 

 

“இல்ல, நாமளும் இந்த மாதிரி ஒரு லுக் விட்டுக்கிட்டா எப்படி இருக்கும்னு யோசிச்சேன்”

 

“ம், படு கேவலமா இருக்கும்”

 

“பார்க்காமலே சொன்னா எப்படி நித்தி? ஜஸ்ட் டிரை பண்ணி பார்க்கலாமே, என்ன சொல்றே?” என்று ஒற்றை கண்ணை அடித்தான்.

 

“யூ, என்னை பார்த்தா கண்ணடிக்கறே, இரு மேன் உன் கண்ணை நோண்டாம விடறதுல்ல இன்னைக்கு” என்று எழுந்து கொண்டு சண்டைக்கு தயாரானாள்

 

இடையில் கையை வைத்துக் கொண்டு அவனை பார்த்து முறைத்தவளை ஏறஇறங்க பார்த்து “பார்க்க தான் டீசன்டா இருக்க, பேசினா பக்கா லோக்கலா இருக்கியே” என்றான். 

 

அவள் அடிக்க கை ஓங்கி கொண்டு வரவும் அங்கிருந்து தப்பி ஓடினான். “திலீப், இந்த நித்யாவை சீண்டிட்டு தப்பிச்சு போகலாம்னு மட்டும் நினைச்சிடாதீங்க” என்று கத்திக் கொண்டு அவன் பின்னால் துரத்திக் கொண்டு ஓடினாள்

இந்த சத்தத்தில் அகத்தியனும் மேக்னாவும் சுயநினைவுக்கு வந்து திரும்பி பார்த்தனர், அங்கே திலீப் முன்னால் ஓட அவனை துரத்திக் கொண்டு நித்யா ஓடவும்,

 

“திலீப், வாட் இஸ் கோயிங் ஆன் ஹியர்?” என்றான் அகத்தியன் சத்தமாக

 

சடர்ன் பிரேக் போட்டது போல நின்றான் திலீப். திரும்பி வந்து, “சாரி பாஸ்”  என்றான் தலையை குனிந்து கொண்டு

 

“சரி, நாங்க போஸ் கொடுக்கறதை போட்டோவும் வீடியாேவும் எடு, மோகனா, முடிஞ்சா வாளை நாலா பக்கமும் சுழற்று, வேணும்னா நான் ஒரு முறை டெமோ காட்டட்டுமா?”

 

“இல்ல அகத்தியன், நான் டிரை பண்றேன், தப்பா இருந்தா சொல்லுங்க” என்றாள் மேக்னா

 

“அப்ப ஓகே, திலீப் நாங்க பொஷிஷன்ல போய் நிக்கறோம். கவனத்தை வேறெங்கேயும் சிதறவிடாம எங்க மேல போகஸ் பண்ணு, புரியுதா?” என்றான் 

 

‘உங்கள போகஸ் பண்ணதால தான் பாஸ் கவனமே சிதறுச்சு’ என்று மனதிற்குள் நினைத்தவன் “ஓகே பாஸ்” என்றான்.

 

அகத்தியன் மேக்னாவின் கரம் பற்றி புல்தரையில் நடந்து ஓரிடத்தில் நின்றான். “மோகனா, நான் பிடிச்சிருக்கற மாதிரி வாளை பிடிச்சிட்டு என்னை டார்கெட் பண்றது போல வா, நான் உன்னை தடுக்கறேன்”

 

மேக்னா அகத்தியனை பாேல வாளை கையில் ஏந்திக் கொண்டு அப்படியே நின்றாள்.  “பயப்படாதே மோகனா, மெதுவா வாளை சுழட்டு போதும், எதுவும் ஆகாது. ரொம்ப வெயிட்டா இருக்குதா? இல்லைனா அட்டையிலேயே வாளை ரெடி பண்ணிக்கலாமா?”

 

“இல்ல, ஓவர் வெயிட்லாம் இல்ல. ஐயம் ரெடி” என்றாள்

 

“குட்” என்றபடி அகத்தியன் வாளை ஒரு கையில் ஏந்திக்கொண்டு, அவள் தாக்குதலை எதிர்கொள்ளும் பாவனையில் நின்றான். மேக்னாவின் கண்களில் இதுவரை தெரிந்த காதல் இப்போது மெல்ல மெல்ல மறைவது போல தெரிந்தது, கண்களில் இருந்த சிரிப்பில் ஒரு வித்தியாசம். என்ன அது?

 

அவன் அவள் பார்வையின் அர்த்தத்தை ஆராய்ந்து உணரும் முன்னே மேக்னா அகத்தியனை நோக்கி வேகமாக வீசிய வாள் அவன் தோளை பதம் பார்த்தது. 

 

தோள்பட்டையில் நீளமான ஆழமாக வெட்டு விழுந்ததில் இரத்தம் பிய்த்துக் கொண்டு வந்தது. திலீப்பும் நித்யாவும் பதறியடித்து, அவனருகே வர, “சாரி கைஸ், மோகனாவோட வாள் வீச்சை கவனிச்சு தடுத்திருக்கணும், நான் தான் கவனம் தவறிட்டேன். சின்ன காயம் தான். இதோ இப்போ கரெக்டா பண்றேன், திலீப் நீ போய் வீடியோ எடு”

 

“போஸ் தான் இப்போ ரொம்ப முக்கியமா பாஸ்? கையில ரத்தம் வந்துட்டு இருக்கு, முதல்ல பர்ஸ்ட் எய்டாவாது பண்ணிக்கோங்க” என்று மறுத்துக் கொண்டே அருகில் வந்த திலீப்பை பார்த்து,

 

“டு வாட் ஐ சே” என்று கர்ஜித்தான் (do what I say)

 

திலீப் மெளனமாக சென்று அவன் இடத்தில் நின்று கொண்டான்.

 

“மோகனா, இப்போ நான் ரெடி” என்று வாளை கையிலேந்தி அவளுடைய தாக்குதலுக்காக தயாராக நின்றான்.

 

மேக்னா அவனை தாக்க ஒரு இலக்கை நோக்கி கையை ஓங்கினாள். அகத்தியனும் தயாராக அவள் வாள் வரும் இலக்கை நோக்கி கையை நீட்ட, அடுத்த நொடி தன் இலக்கை மாற்றி அகத்தியனின் மார்பில் வாளை வீசினாள்.

 

அங்கேயும் கிழித்துக் கொண்டு இரத்தம் பீறிட்டு கிளம்ப, இப்போது நித்யாவும் திலீப்பும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். ஒருமுறை நடந்தால் தெரியாமல் நடந்த விபத்து எனலாம். இரண்டாவது முறை, அதுவும் திடீரென்று இலக்கை மாற்றி மேக்னா எதற்காக வாளை அகத்தியனின் மார்பில் வீச வேண்டும்?

 

இருவருமே ஒரு வித சந்தேகத்தோடு மேக்னாவை பார்க்க, அவர்கள் சந்தேகம் சரி என்பது போல, அவள் குரூரத்துடன் அகத்தியனை பார்த்து ஏளனமாக சிரித்தாள்.

 

“மேகி! என்னடி பண்ணிட்டு இருக்க? அகத்தியனோட சண்டை போடற மாதிரி நடிக்கறதுக்கு பதிலா, நிஜமாவே அவரோட சண்டை போட போறீயா? அவருக்கு ரத்தம் வருது பாரு” என்றாள் நித்யா பதட்டத்தோடு

 

“வரட்டும், இரத்தம் வர்றதுக்கு தானே நிஜமான வாளை வரவழைச்சதே” என்றாள் மேக்னா ஆத்திரத்துடன்

 

“மேகி என்ன சொல்றே? ஒருவேளை சந்திரமுகி படத்துல வர்ற கங்கா, தன்னை சந்திரமுகியா நினைச்சிகிட்டது போல, மோகனாங்கியா நடிச்ச நீ மோகனாங்கியாவே மாறிட்டியா? அதனால தான் அகனா உன் முன்னாடி நிக்கிற அகத்தியனை தாக்கறீயா?” என்றாள் நித்யா பதட்டமாக

 

'இந்த நித்யா நிறைய சினிமா பார்ப்பா போலிருக்கே!' என்று நக்கலாக நினைத்த திலீப், தன் பாஸை பார்க்க, அவனோ அடி வாங்க தயார் என்பது போல இரு கைகளையும் நீட்டிக் கொண்டு நின்றிருந்தான்.

 

நித்யா அளவுக்கு இல்லை என்றாலும் திலீப்பிற்கும் மேக்னாவின் மேல் சின்ன சந்தேகம் எழுந்தது. இரண்டாவது முறையும் வாள் தவறுதலாக அகத்தியனின் மேல் பட்டிருக்க வாய்ப்பில்லை. ஒரு வேளை மேக்னா வேண்டுமென்றே வாளை வீசியிருப்பாளோ என்று தோன்றியது.

 

ஆனால் அவன் பாஸிற்கு அப்படி தோன்றவில்லையோ? அப்படியே சிலையாக நிற்கிறாரே? அதுவும் மேக்னா இரத்தம் வர்றதுக்கு தான் நிஜமான வாளை வரவழைச்சதுனு சொன்ன பின்னாடியும் அசையாம நிக்கிறாரே? என்ன நடக்குது இங்கே? திலீப்பிற்கு ஒன்றும் புரியவில்லை. அகத்தியன் எதிர்வினை புரியாததால் அவனால் மேக்னாவை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியவில்லை.

 

அகத்தியன் தன் கையிலிருந்த வாளை வீசியெறிந்து விட்டு “மோகனா, அவர்களை விடு, நீ வாளை வீசு” என்றான்.

 

கேமரா வழியே பார்த்துக் கொண்டிருந்த திலீப் அதிர்ச்சியில் கேமராவை தரையில் வீசி விட்டு வந்தான். “பாஸ் என்ன விளையாடறீங்களா? நீங்க வாளை வச்சிட்டு இருக்கும் போதே, அவங்க இரண்டு முறை உங்க மேல காயம் ஏற்படுத்திட்டாங்க. இப்போ கையில எந்த ஆயுதமும் இல்லாம நிராயுதபாணியா நின்னா எப்படி? என்ன நடக்குது இங்கே?” என்றான்

 

“திலீப், நீ போய் ஓரமா நில்லு. இது எனக்கும் மோகனாவுக்கும் இடையில நடக்கறது. நீங்க யாரும் குறுக்க வர வேணாம். மோகனா ஐயம் ரெடி” என்றான்.

 

இப்போது மோகனா பாய்ந்து வந்து வாளை அகத்தியனின் கழுத்தை நோக்கி வீச எத்தனித்தாள். அவளின் பாய்ச்சலை பார்த்து பயந்து போன திலீப்பும், நித்யாவும் அவளை எட்டிப்பிடித்து தடுக்க பார்க்க, அவர்கள் இருவரால் அவளை கட்டுப்படுத்தவே முடியவில்லை.

 

அகத்தியனோ கைகளை விரித்துக் கொண்டு அசையாமல் நின்றிருந்தான்.

 

“விடுங்க என்னை? என்னையும் என் குடும்பத்தையும் நாசமாக்கினவனை கொல்லாம விட மாட்டேன் விடுங்க” என்று கத்திக் கொண்டு அவர்கள் பிடியிலிருந்து விலக போராடினாள் மேக்னா.

 

“மேக்னா கன்ட்ரோல் யுவர் செல்ப். நீங்க மேக்னா, அவர் அகத்தியன், என்னோட பாஸ், நீங்க தேடி வந்த ஆர்டிஸ்ட். உங்க கதையில வர்ற அகன் அவர் இல்ல” என்றான் திலீப்

 

“என்னோடது கதையில்ல, நிஜம். 

நான் தான் மோகனாங்கி, 

இதோ இவன் தான் என் வாழ்க்கைய சீரழிச்ச அகன். 

இவனை கொன்னா தான் என் ஆத்திரம் தீரும்” என்று வேங்கையென துள்ளி குதித்தவள், அகத்தியனை நோக்கி வாளை வீசினாள்.

 

அகத்தியன் மேக்னாவை ஆழ்ந்து பார்த்தபடி “உன் ஆத்திரம் தீருமானால் என் உயிரையும் விட தயார் மோகனா” என்று சொல்லியபடி அசையாமல் நின்றான்.

(தொடரும்)


   
ReplyQuote

You cannot copy content of this page