All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

புத்தக வெளியீடு மற்...
 
Notifications
Clear all

புத்தக வெளியீடு மற்றும் அமேசான் லிங்க்

 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  

ஹாய் டியர்ஸ்

இங்கே என் கதைகளின் புத்தக வெளியீடு மற்றும் அமேசானில் உள்ள கதைகளுக்கான லிங்க் கிடைக்கும்


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  
                                   நானே நானா நீயே தானா..!!
 
நம்ம ருத்ரபிரதாப் - நிவேதிதாவை யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கறேன்.. ஒருவேளை இப்படி சொன்னா சிலருக்கு நினைவு வரலாம், அதாங்க நம்ம பிரதிநிதி.
 
 
அவர்களை புத்தக வடிவில் வாங்க விரும்பினாலோ அமேசானில் படிக்க விரும்பினாலோ கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்ங்க..
 
 
இப்போ கதையில் இருந்து ஒரு குட்டி டீ..
 
 
********
 
அவள் கை பிடித்து லேக் அருகே அழைத்து சென்றான் அந்த இரவு நேரத்தில் நிலவு ஒளியில் மின்னும் ஏரியின் அழகை கண்டவளுக்கு பேச வார்த்தைகள் இன்றி போக மெய் மறந்து நின்றிருந்தாள்.
 
 
அவளின் இடையில் கை கொடுத்து தன்னருகே இழுத்தவன் " இந்த குட்டி மண்டைக்குள்ளே இரண்டு நாளா ஒடின கேள்விக்கு பதில் கிடைச்சுதா...??? இன்னைக்கு புல் மூன் டே ....அண்ட் என் தேவதையை நான் முதல் முதலா பார்த்த நாள்...இதுக்காகதான் வெயிட்.பண்ணிட்டு இருந்தேன்..... " என்றான்.
 
 
அவன் இரண்டு நாளாக தன் மனதில் ஒடியதை சொல்லவும் ..." அச்சோ...நம்ம மனசுல நினைச்சத கண்டு பிடிச்சிட்டானே... "  என எண்ணியவள் அவன் இரண்டாவதாக கூறியதை கவனிக்க மறந்தாள்.
 
 
அவளை தன்னை நோக்கி திருப்பியவன் அருகில் இருந்த சிகப்பு நிற அழகிய ரோஜாக்களால் செய்த பெரிய பூங்கோத்தை கைகளில் ஏந்தியபடி அவள் முன் ஒற்றை காலை மடக்கி மண்டியிட்டு...
 
 
உன்னை நான் முதல் முறையாக பார்த்த நாள்
நான் இரண்டாவது முறையாக பிறந்தநாள்
ஏன்னா அன்றிலிருந்து எனக்கு நானே புதுசா தெரியறேன்
நீ என் வாழ்க்கையில் வருவதற்கு முன்பு ஒரு வாழ்க்கையும்
நீ என் வாழ்க்கையில் வந்தபிறகு ஒரு வாழ்க்கையும் நான் வாழறேன்
நீ வருவதற்கு முன்பு சொல்லிக்கும்படியா எதுவுமில்லை என் வாழ்க்கையில்
நீ வந்த பின்பு எல்லாமே மாறி தினம் தினம் புதுசா வாழறேன்
இதுவரை என் வாழ்க்கையில் நான் எதுக்கும் ஆசைப்பட்டதில்லை
ஆனா இப்போ வாழ்க்கை முழுவதும் உன் கையை பிடிச்சிக்கிட்டு இருக்கணும்னு தோணுது
காதலுக்காக நடந்த யுத்தத்தை பத்தி கேளஎவி பட்டப்போ சிரிச்சியிருக்கேன்
ஆனா இப்போ உனக்காக என்ன வேண்டும்னாலும் செய்ய நான் தயாராக இருக்கிறேன்
உன் சந்தோஷத்துக்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு நொடியும் முயற்சி செய்வேன்
என்னை மீறிதான் எதுவும் உன்னை வந்து சேரும்
உனக்கு எல்லாவுமாக இருக்க நினைச்சு இந்த ஐம்பூதங்களின் சாட்சியா கேட்கறேன்
என் வாழ்க்கையா இருப்பியா பேபி.......
என்றபடியே கைகளில் இருந்த பூங்கொத்தை அவளிடம் நீட்டினான்.
 
 
தன் முன் மண்டியிட்டு பேச ஆரம்பித்ததிலிருந்து பிரம்மித்து போய் நின்றிருந்தவள் அவனின் கடைசி வரியில் உருகி உள்ளம் சிலிர்க்க ஆனந்தத்தில் கலங்கிய கண்களில் இருந்து வழிந்த கண்ணீரை இதழ் கடித்து கட்டுபடுத்தியவள் " எஸ்...." என்றபடியே பூங் கொத்தை வாங்கிக் கொண்டாள்.
 
************
 
 
 
 
 

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

This post was modified 2 weeks ago 2 times by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  
                              என் காதல் உன்னோடு தான்..!!
 
 
அவர்களை புத்தக வடிவில் வாங்க விரும்பினாலோ அமேசானில் படிக்க விரும்பினாலோ கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்ங்க..
 
 
இப்போ கதையில் இருந்து ஒரு குட்டி டீ..
 
************
 
அந்த வீடு முழுவதும் ஆட்கள் நிரம்பி வழிந்தனர் . அனைவர் முகமும் சோகமும் துக்கமும் நிரம்பி இருந்தது . ஆண்கள் வெளியில் சேர் போட்டு அமர்ந்து கொண்டும் அங்கங்கே நின்று கொண்டும் இருக்க...பெண்கள் அனைவரும் உள்ளே குழுமியிருந்தனர்.
 
 
ஹாலில் அங்கங்கே குழுக்களாக பெண்கள் அமர்ந்திருந்தனர்.. அழுக்குரல் சத்தமாக கேட்டுக் கொண்டிருக்க.....நடு ஹாலில் சுவர் ஒரமாக சிறு மேஜை போடபட்டு இரு படங்கள் பொட்டு வைத்து மாலை போடபட்டிருந்தது . அதில் ஒரு படத்தில் முப்பது வயது நிரஞ்சன் வசீகரமாக புன்னகைத்து கொண்டிருக்க....அடுத்த படத்தில்  இரண்டு வயது பால் மனம் மாறாத அத்விக் குறும்புடன் புன்னகைத்து கொண்டிருந்தான் .
 
 
அந்த மேஜைக்கு அருகில் தரையில் சுவரில் தலை சாய்த்தபடி எங்கோ பார்வையை பதித்தபடி அமர்ந்திருந்த மித்ராவின்  விழிகளிலிருந்து கண்ணீர் நிற்காமல் வழிந்துக் கொண்டிருந்தது.
 
 
அவளை சுற்றி அமர்ந்தபடி அவளை தேற்றி ஆறுதல்படுத்த சிலர் முயன்று கொண்டிருந்தனர் .அவ்வளவு சீக்கிரம் மனம் தேறக்கூடிய இழப்பா அவளுடையது.....அந்த நேரம் வெளியிலிருந்து ஒருவர் நேரமாவதை சுட்டிக்காட்ட....அடுத்து நடக்க வேண்டிய சடங்குகளுக்கு பெண்கள் தயாராகினர்.
 
 
வயதான சில பெண்மணிகள் அவளருகில் வந்து அமரவும்....அதை கண்டு அவளின் இருபுறம் அமர்ந்திருந்த பெண்மணிகளும் துக்கம் தாளாமல் புடவை முந்தனையை வாயில் வைத்துபடி கதறி அழுதனர்.
 
 
இவை எதுவும் அவளை பாதிக்கவில்லை....சுற்றுபுறம் மறந்த நிலையில் அமர்ந்திருந்தவளின் நினைவுகள் இங்கில்லை . ஒப்பாரி பாடலை ஒரு முதிய பெண்மணி பாட...அவள் நெற்றியில் இருந்த பொட்டை ஒருவர் எடுக்க....மற்றவர் அவள் கழுத்திலிருந்த திருமாங்கல்யத்தை இறக்கினார்.
 
 
அடுத்த நொடி புயல் போல் உள்ளே நுழைந்து அவளருகில் வந்த ரிஷி தன் சட்டை பையிலிருந்து திருமாங்கல்யத்தை எடுத்து அவள் கழுத்தில் அணிவித்தான் . இதில் அனைவரும் அதிர்ந்து அவனை பார்க்க....அவனோ யாரையும் சட்டை செய்யாமல் அருகிலிருந்த குங்குமத்தை  எடுத்து நடப்பை எதையும் உணராது அமர்ந்திருந்தவளின் நெற்றியிலும் வகிட்டிலும் அழுத்தமாக வைத்தான்.
 
 
அந்த அழுத்தத்தில் உணர்வு வர பெற்றவள் தன் பார்வையை திருப்ப....தன்னிடமிருந்து கைகளை விலக்குபவனின் கைகள் கண் முன் தெரிய மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள் மொத்தமாக அதிர்ந்தாள்.
 
 
அந்த அதிர்வோடே அவனை காண அதே நேரம் அவனும் கூர்மையாக அவள் கண்களையே பார்த்திருந்தான் . அவன் பார்வையின் கூர்மையை தாங்க முடியாமல் பார்வையை திருப்பியவளுக்கு எதிர்பக்க கண்ணாடி கதவில் தெரிந்த  தன் பிம்பம் விழ ....தன் கழுத்தில் தெரிந்த புத்தம் புது மாங்கல்யத்தை கண்டு அதிர்ந்து உடல் பதற தலையில் நெருப்பள்ளி கொட்டியது போல் துடித்து போய் அவனை காண....அவன் அப்போதும் எந்த மாற்றமுமின்றி அவளையே பார்த்திருக்க....அவனுக்கு  அருகில் தன் ஆறு மாத கை குழந்தையுடன் அதிர்ந்து நின்றிருந்தாள் ரிஷியின்  மனைவி வர்ஷா.
 
 
**********
 
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 1 month ago
Posts: 104
Topic starter  

                                            "தழலாய் நின் நேசம்..!!"

கதையை இனி அமேசான் கிண்டிலில் படிக்கலாம்..

இதோ கதையில் இருந்து ஒரு குட்டி டீசர்..

*****

எந்தன் காதல் என்னவென்று…
சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது…
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும்…
என்றெண்ணும் போது வந்த அழுகை நின்றது…
மனிதர் உணர்ந்து கொள்ள…
இது மனிதக் காதலல்ல…
அதையும் தாண்டிப் புனிதமானது…

என அந்த காரில் இருந்த மியூசிக் பிளேயரின் வழியே கமலஹாசன் உருகி பாடிக் கொண்டிருக்க.. அதனோடு சேர்ந்து மெல்ல முணுமுணுத்தவாறே ஸ்டேரிங்கில் தன் விரல்களால் தாளமிட்டப்படியே மிதமான வேகத்தில் பயணித்துக் கொண்டிருந்தான் நிமலன்.

அந்த அதிகாலை மூன்று மணியளவில் ஊர் உலகமே அமைதியாக இருக்க.. அந்த தனிமையும் குளுமையும் மனதிற்கு பிடித்த இசையுமாக ஆள் அரவமற்ற சாலையில் பயணித்துக் கொண்டிருந்தவனின் மனம் பல மாதங்களுக்கு பின் அமைதியாக இருந்தது.

பெங்களூர் நெடுஞ்சாலையின் வழியே சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தவன், இன்னும் ஒரு மணி நேரத்தில் சென்னையை சமீபிக்க இருந்த போது திடீரென அதீத வேகத்தில் வந்த கார் ஒரு திருப்பத்தில் நிமலனின் கார் மேல் மோதுவது போல் வந்து கடைசி நொடியில் சுதாரித்து விலகி ஒடித்து திரும்பியது.

அதே நேரம் தன் மேல் மோத வந்த காரில் இருந்து தப்பிப்பது போல் நிமலனும் காரை சடன் பிரேக்கிட்டு அந்த காருக்கு எதிர் பக்கமாக திருப்பி இருந்ததில் பெரும் விபத்து ஒன்று தவிர்க்கப்பட்டது.

அதில் உண்டான படபடப்போடு நிமிர்ந்து அந்த காரை பார்த்தவன், “ஏய் அறிவில்லை உனக்கு..?” என்றான் எரிச்சலோடு நிமலன்.

அதில் அந்த காரின் ஓட்டுனர் இருக்கைக்கு அருகில் இருந்தவன், “சாரி சார்.. டிரைவர் திடீர்னு கண் அசந்துட்டான்.. நான் தான் காரை ஒடிச்சு திருப்பினேன்.. ரொம்ப சாரி..” என்று மிக பணிவாக பேசவும், இரவு நேர பயணங்களில் சில சமயம் இதையெல்லாம் தவிர்க்க முடியாது என்பதால் அப்படியே அமைதியானான் நிமலன்.

அதே நேரம் அந்த கார் ஒடித்து திருப்பியதில் அங்கிருந்த சாலை தடுப்பில் மோதி இருந்ததில் முன் பக்கம் லேசாக இடித்து அதிலிருந்து புகை வர துவங்கி இருக்க.. “நீங்க கிளம்புங்க சார்.. நாங்க பார்த்துக்கறோம்..” என்றான் அந்த காரில் வந்தவன்.

அதில் நிமலன் தன் காரை நகர்த்த முயல.. அதற்கு வாய்ப்பே இல்லாமல் நிமலனின் வழியை பாதிக்கு மேல் மறைத்துக் கொண்டிருந்தது அந்த கார். அவர்கள் நகர்ந்தால் மட்டுமே நிமலனால் காரை எடுக்க முடியும்.

பின்னுக்கு நகர்த்தி எடுக்கவும் முடியாதவாறு அங்கு ஒரு பள்ளம் இருந்தது. இதில் உண்டான சலிப்போடு “எங்கே போறது..? நீங்க நகர்ந்தா தான் நான் போக முடியும்..” என்றான் நிமலன்.

அதற்கும் மிக பணிவாகவே “இதோ சார், நகர்த்திடறோம்..” என்றவன் டிரைவர் இருக்கையில் இருந்தவனை பார்த்து, “இறங்கி காரை தள்ளு பாபு.. அப்பறம் இதெல்லாம் பார்த்துக்கலாம்..” என்றான் சிறு கட்டளை குரலில்.

அதில் அவர்கள் இருவரும் காரை நகர்த்த முயல.. பின்னால் நிமலனின் கார் இருந்ததோடு முன் பக்கம் சாலை தடுப்பில் எக்குதப்பாக மோதியும் இருந்ததால் அந்த காரை அத்தனை எளிதாக நகர்த்தவே முடியவில்லை.

இதை கண்டு பொறுமை காணாமல் போக.. ஒரு உஷ்ண பெருமூச்சோடு அவர்களையே வெறித்திருந்தான் நிமலன். ஏற்கனவே இந்த அதிகாலை நேரத்து அமைதியையும் நிம்மதியையும் கலைத்திருந்தவர்களின் மேல் உண்டான கோபத்தோடு காரை வெறித்திருந்தவனுக்கு அப்போதே பின் இருக்கையில் ஒரு பெண்ணும் இரு ஆண்களும் இருப்பது தெரிந்தது.

அவர்கள் இறங்கி தள்ளினால் இன்னும் வேகமாக வேலை முடியுமே என்று தோன்றவும், அவர்களையே பார்த்தவாறு, “இப்படியே இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்கிறது..?” என்றான் நிமலன்.

சரியாக அதை கவனித்து விட்ட அந்த காருக்கு உரியவனும், “அது எல்லாரும் தூங்கிட்டு இருக்காங்க சார்.. இதோ எழுப்பிடறேன்..” என்று அவசரமாக பின் பக்க கதவை திறந்து ஏதோவோ சொல்ல.. அதற்கு அங்கிருந்தவன் ஏதோ பதிலளித்தான்.

இப்போது வார்த்தைகளால் இல்லாமல் விழியால் நிமலனை சுட்டி காண்பித்து வெளியே நின்றிருந்தவன் எதையோ புரிய வைக்க முயல.. அதில் உள்ளே இருந்தவனும் உடனே இறங்கி வந்தான்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த நிமலனுக்கு எதுவோ சரியில்லை என மனம் அடித்து கூறியது. அவர்கள் இருவரையும் பார்த்தால் தூங்குவது போல தெரியவில்லை.

ஆரம்பத்தில் இருந்தே அந்த காரில் இருந்தவன் காண்பித்த அதீத பணிவும், எந்த பிரச்சனையும் வேண்டாம் என்பது போல உடனே தணிந்து வருவதுமாக அவன் பேசியதிலேயே முரணை உணர்ந்திருந்தவன், இப்போதே அவர்களின் தோற்றத்தை நன்கு கவனிக்க தொடங்கினான்.

கடோத்கஜன் போல் இருந்த நால்வரும் அவர்களுக்கு கொஞ்சமும் சம்பந்தமே இல்லா வகையில் பட்டு வேட்டி சட்டை அணிந்திருப்பதும், இத்தனை குளுமையிலும் வேர்த்து வடிய அவர்கள் நிற்பதோடு அவ்வபோதான அவர்களின் கள்ள பார்வை தன் மேல் படித்து விலகுவதும் என எல்லாம் சேர்ந்து நிமலனின் சந்தேகத்தை அதிகமாக்கியது.

அதற்கேற்றார் போல் இப்போதும் அவர்களில் ஒருவன் காரிலிருந்து இறங்காமலே இருக்க.. அவனுக்கு அருகில் அந்த பெண் உறங்கிக் கொண்டிருந்தது எதுவோ இங்கு தவறாக இருப்பதை உறுதியாக்க.. “என்ன நடக்குது இங்கே..?” என்றவாறே கீழிறங்கி வந்தான் நிமலன்.

அதில் நிமலனை காருக்கு அருகில் வர விடாமல் செய்ய முயன்றவாறே முதலில் பேசியவன், “ஒண்ணுமில்லை சார்.. இப்போ நகர்த்திடுவோம்.. நீங்க உள்ளே உட்காருங்க..” என்று நிமலனின் வழியை மறித்தது போல் வந்து நின்றான்.

இதில் கூர்மையாக நிமலன் அவனையே பார்த்துக் கொண்டிருக்க.. அவனுக்கு அலைபேசியில் அழைப்பு வந்தது. அதை ஒரு பதட்டத்தோடே பார்த்தவன், எடுக்காமல் தவிர்க்க.. அதே நேரம் அந்த காரை நோக்கி செல்ல இருந்த நிமலனை கண்டவனுக்கு ஆத்திரம் தலைக்கேற “சொல்லிட்டே இருக்கேன்.. எங்கே போறே..?” என்று மரியாதை இல்லாமல் பேசியப்படியே நிமலனின் தோளை பிடித்து நிறுத்தினான்.

அதில் தன் மேல் கை வைத்தவனை விழியை மட்டும் திருப்பி ஒரு பார்வை பார்த்தவன், அடுத்த நொடி ஒரே சுழற்றில் அவனை தூக்கி கீழே வீசி அவன் மார்பில் காலை வைத்து நின்றிருந்தான் நிமலன்.

இதை கண்டு திகைத்த, மற்றவர்களும் வேகமாக நிமலனை தாக்க வர.. மொத்தமாக ஒரு ஐந்து நிமிடத்திற்குள் மற்ற மூவரையும் கூட சுருண்டு கீழே விழ செய்திருந்தான் நிமலன்.

காரை சுற்றி விழுந்திருந்தவர்களை பார்த்தவாறே சென்று காரின் பின் பக்க கதவை நிமலன் திறக்கவும், நிமலன் தன்னை சேர்ந்தவர்களை அடிப்பதை கண்ட பதட்டத்தில் வேகமாக இறங்கியதில், கிட்டத்தட்ட இருக்கையில் சரிந்த நிலையில் இருந்த அந்த பெண், இப்போது மொத்தமாக சரிய.. அவளின் முகத்தை தன் வலது உள்ளங்கையில் தாங்கி பிடித்து நிறுத்தியிருந்தான் நிமலன்.

மணப்பெண் அலங்காரத்தில் அழகோவியமாக தேவதை போல் இருந்தவளையே சில நொடிகள் இமைக்காமல் பார்த்தவன், அவள் மயக்கத்தில் இருப்பதை பார்த்தவுடன் புரிந்துக் கொண்டிருக்க.. ஒரு நொடி தயக்கத்தோடு யோசித்தவன் பின் சட்டென அவளை தன் கைகளில் ஏந்திக் கொள்ள.. அதற்காகவே காத்திருந்தது போல் நிமலனின் மார்பில் சாய்ந்தது தமயந்தியின் முகம்.

இதில் ஒரு நொடி அதிர்ந்து அவளை பார்த்தவன், பின் தன் காரை நோக்கி நகர.. அடிபட்டதில் எழுத்துக் கொள்ள முடியாமல் இருந்த ஒருவன், சட்டென இந்த காட்சியை படமெடுத்து தனக்கு இந்த வேலையை கொடுத்திருந்தவனுக்கு அனுப்பி வைத்தான்.

அதே நேரம் இங்கு திருமண மண்டபமே அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. “என்ன நடக்குது இங்கே..? செக்யூரிட்டின்னு இத்தனை பேர் இங்கே எதுக்கு இருக்கீங்க..? நம்ம இடத்துக்குள்ளேயே நுழைஞ்சு நம்ம பொண்ணையே தூக்கிட்டு போயிருக்காங்கனா என்ன அர்த்தம்..? முன்னாள் முதல்வர் பொண்ணுக்கே இந்த நிலைமைனா அப்போ மத்தவங்க நிலை எல்லாம் என்னவாகும்..?” என்று ஆத்திரத்தில் கத்திக் கொண்டிருந்தான் கிருபாகரன்.

இதையெல்லாம் கண்டு வேதனையோடு இருக்கையில் சாய்ந்திருந்த ஜெயதேவுக்கு மனம் முழுக்க மகளையே சுற்றி வந்துக் கொண்டிருக்க.. “நீ நினைச்சதை நடத்தின காலம் எல்லாம் மலையேறி போச்சு.. இப்போ இது நிமலனோட காலம்.. நான் நினைச்சது மட்டும் தான் இங்கே நடக்கும் பார்க்கறியா..?” என்று சொடக்கிட்டு சவால் விட்ட நிமலனின் முகம் மன கண்ணில் வந்து நின்றது.

https://www.amazon.in/dp/B0DM8M9PGZ

https://www.amazon.com/dp/B0DM8M9PGZ

https://www.amazon.co.uk/dp/B0DM8M9PGZ

https://www.amazon.de/dp/B0DM8M9PGZ

https://www.amazon.fr/dp/B0DM8M9PGZ

https://www.amazon.com.br/dp/B0DM8M9PGZ

https://www.amazon.mx/dp/B0DM8M9PGZ

https://www.amazon.au/dp/B0DM8M9PGZ

படித்து விட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் என்னோடு ரேட்டிங் மற்றும் ரிவ்யூ மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்..

இப்போதைக்கு இந்த கதை ப்ரீ இல்லை..

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா

This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote

You cannot copy content of this page