All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 38

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 136
Topic starter  

அத்தியாயம்: 38

 

அது இனிய இரவு தான்... 

 

இரு ஜோடிகளுக்கும்.

 

ஒரு ஜோடி, துகிரா-இளவேந்தன். 

 

இளா, துகிராவை டெல்லியில் பார்த்துக் காதல் வயப்பட்டான் என்றால் துகிராவிற்கு இளவேந்தனுடனான முதல் சந்திப்பு சற்று வித்தியாசமானது. 

 

கல்லூரி முடித்து ப்ரஜித்திடம் தொழில் கற்க வந்து சேர்ந்த சமயம் அது. 

 

ஒரு மாலிலிருந்து வெளியே வந்த துகிரா, வாடகை மகிழுந்திற்காக அலைபேசியில் பதிவு செய்திருந்தாள். 

 

சரியாக அது வந்து அவளின் முன் நிற்கும் நேரம், இளவேந்தனும் அந்தக் காரின் கைபிடியை பற்ற, 

 

"எக்ஸ்யூஸ் மீ!. அது நா புக் பண்ண டாக்ஸி." என்றாள். 

 

அவன் காரின் எண் பலகையைப் பார்க்க, அது அவன் புக் செய்திருந்தது அல்ல. ஒரே ஒரு எண் மாறுபாட்டால் அதை இதுவென நினைத்துவிட்டான்.

 

ஆனாலும், அவன் உடனடியாகச் சென்றாக வேண்டிய சூழ்நிலை. அவன் புக் செய்திருந்தது கேன்சலாகி இருந்தது.

 

"மேம், நீங்க வேற டாக்ஸி புக் பண்ணிக்கங்களே. ப்ளீஸ்."

 

"பட் இது நா புக் பண்ணது சார்." என்ற குரலில் கடுமை சுத்தமாக இல்ல. அப்படிப் பேச அவளுக்கு வரவில்லை.  

 

"எமர்ஜென்சி மேம்." என்றபோது அவனின் அழைபேசி இசைத்தது. 

 

"வித் இன் 15 மினிட்ஸ் சார். வந்திட்டே இருக்கேன். கிவ் சம் மினிட்ஸ்." எனக் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

 

கைபிடியை விடாது அவன் ஃபோன் பேசிக் கொண்டிருக்க, இவள் கைக்கட்டிக் கொண்டு வேடிக்கை பார்த்தபடி நின்றாள். 

 

"மேடம் ஓடிபி." என ஓட்டுனர் கூறியதும், 

 

"சார் இவரு டோர ஓப்பன் பண்ண விட மாட்டேங்கிறாரு." என அவரிடம் முறையிட்டாள் துகிரா.

 

"மேம் ட்ரை டூ அன்டர் ஸ்டான்." என்க, அவள் மறுத்து வாதம் செய்ய,

 

"ரெண்டு பேர்ல யாருட்ட ஓடிபி இருக்கோ அவங்க ஏறுங்க. இல்லன்னா ரெண்டு பேருமே ஏறிக்கங்க. இறங்க வேண்டிய இடத்துல இறக்கி விட்டுப் பேமெண்ட்ட வாங்கிக்கிறேன். பீக் ஹவர் ஸார். டிராபிக் குள்ள சிக்கினா என்னாகும்னு தெரியும் தான." என்றார் ஓட்டுனர். 

 

"நானும் டிராபிக்கு பயந்து தான் மேம் கேக்குறேன். லேட்டாகிடுச்சி." என இறைஞ்சியவனுக்காக மனம் இறங்கினாள் துகிரா. 

 

காரின் முன்பக்கம் அவன் ஏறிக் கொள்ள, இவள் மட்டும் பின் சீட்டில் அமர்ந்தாள். 

 

இளவேந்தனுக்கு சொல்லவா வேண்டும். எப்பொழுதாவது சஜித்தின் அலுவலகம் வரும் அவளைத் தூர நின்று அவதானித்தவன், அத்தனை அருகில் இருக்கும் தன்னவளை, ரசனைமிகு பார்வையுடன் பார்த்துக் கொண்டே வர, அதைக் கண்ட துகிராவிற்கு, 'என்னதிது இப்படி பாக்குறான்.' என்றிருந்தது. 

 

வேகமாகக் காதில் ஹெட் செட்டை மாட்டிக் கொண்டு, தன் தோழியுடன் பேசத் தொடங்கினாள்.

 

'நான் தனியாக இல்லை. என்னிடம் வம்பு வளர்த்தால், விளைவுகள் வேறு மாறி இருக்கும்.' என்று மிரட்டுவது போல்.   

 

அது தெரிந்தவனுக்கு அவளின் எச்சரிக்கை உணர்வைக் கண்டும், அவளின் பிள்ளை மொழி பேச்சையும் கேட்டும், சிரிப்பு தான் வந்தது.  

 

அலுவலகம் வந்ததும் பணத்தை‌ டிரைவருக்குக் கொடுத்து விட்டு இறங்கியதும் நிம்மதியடைந்தவளுக்கு பயம் வந்து ஒட்டிக் கொண்டது.  

 

காரணம், டாக்ஸி சில மீட்டர் சென்று நின்றதும், உள்ளிருந்து இளவேந்தன் இறங்கியதையும் கண்டதும்.

 

அத்தோடு இளா இவளையே பார்த்தபடி நெருங்கி வர, 'ஃபாலோ பண்றானா?' என உள்ளே வேகமாக ஓடினாள். 

 

அவளின் ஓட்டத்தை ஈடுசெய்யும் வகையில் இருந்தது இளாவின் நடை. 

 

அவள் லிப்ட்டில் ஏறினால், அவனும் கதவு மூடும் முன் தடுத்து நிறுத்தி ஏறிக் கொண்டான். 

 

படிக்கட்டில் ஏற, அவனும் பின்னாலேயே ஏற, ப்ரஜித்திற்கு அழைத்தபடி அவனின் அலுவலகத்தை நோக்கி ஓடினாள். 

 

"ப்ரஜி இவெ என்ன ஃபாலோ பண்றான்." எனப் போட்டுக் கொடுக்க, அவனும் கோபமாக, 

 

"ஒரு ஃபைல எடுத்திட்டு வர இவ்ளோ நேரமா வேந்தன்?. பாஸ் மாறியே எம்லாயியும் யூஸ்லஸ் தான போல." எனக் கடிந்து கொண்டு முன்னே நடக்க,

 

"சாரி சார். பைக் ரிப்பேர். டாக்ஸிக்காகக் காத்திருந்து, டிராபிக்குள்ள சிக்கி வர நேரமாச்சி." எனக் கதை சொன்னபடி ப்ரஜித்தின் பின் ஓடினான். 

 

 முக்கியமான மீட்டிங் என்று ஹாலிற்குச் சென்றவர்கள் திரும்பி வெளியே வரச் சில மணிநேரம் எடுத்தது. 

 

அலுவலகம் திரும்பிச் செல்ல டாக்ஸ்ஸிக்காகக் காத்திருக்கும்போது, "லிஃப் வேணுமா?." என்றபடி காருடன் வந்தாள் துகிரா. 

 

"நா நல்லாவே ட்ரைவ் பண்ணுவேன். நம்பி ஏறலாம். கம்..." என்று ப்ரஜித்தின் காரை எடுத்துக் கொண்டு அழைக்க, தயங்காது ஏறிக் கொண்டான். 

 

"சாரி வேந்தன். நீங்க என்ன ஃபாலோ பண்ணிட்டு ஆஃபிஸ் வரைக்கும் வந்துட்டிங்கன்னு நினைச்சேன்‌. வெரி சாரி..." என்க, அவன் கரையாமலா இருப்பான். 

 

கரைந்து போனான். பாதை முழுவதும் அவள் தான் செய்த தவறிற்கு மன்னிப்பைக் கேட்டபடி வர, இளா எதுவும் பேசாது அந்த நொடிகளை உள்வாங்கினான்‌. அந்தப் பயணம் இருவருக்குமான நட்பிற்கும் பழக்கத்திற்கும் அடிபோட்டது. 

 

அதன் பின் எத்தனையோ முறை இருவர் மட்டும் காரில் தனித்துச் சென்றிருக்கின்றனர். ஆனாலும் அந்த முதல் பயணம் மறக்க முடியாததாக இருந்தது.

 

இன்றும் அது நினைவில் வந்து நின்றது துகிராவிற்கு.

 

காரில் மௌனமாய் பேசாது இளா இருக்க, "ஞாபகம் இருக்கா வேந்தன் நம்மோட ஃபஸ்ட் டிரைவ்." என்க, புன்னகைத்தான் அவன். 

 

"மறக்க முடியாதது தான் மேம். ஆனா மறக்கனும்." 

 

'ஏன்?.' என்ற கேள்வியைத் தாங்கி அவள் பார்க்க, 

 

"நமக்குச் சொந்தமில்லாத, உரிமை இல்லாதவங்களோட நினைவுகள பத்திரப்படுத்தி வைச்சிருக்குறது முட்டாள்தனம். மனசு ஒன்னும் குப்பத் தொட்டி இல்ல மேடம். அப்படியே அது குப்பைத் தொட்டியா இருந்தாலும், அப்பப்ப அத க்ளின் பண்ணிடனும்." என்க, 

 

"அப்ப என்னோட நினைவுகள் உங்களுக்குக் குப்பன்னு சொல்றிங்க." என்றாள் வேகமாக,

 

"உரிமை இல்லாதவங்களோட நினைவுகள சொன்னேன்."

 

"நா அந்த உரிமைய உங்களுக்குத் தந்திட்டேன் வேந்தன். ஐ ஆம் லவ் வித் யூ." என்க இளா சத்தமாகச் சிரித்தான். அதை விசித்திரமாகப் பார்த்தபடி இருந்தவளிடம்,

 

"உங்கம்மாட்ட இதப்பத்தி சொன்னிங்களா.?"

 

"அவங்கிட்ட எதுக்கு சொல்லனும்?" என்றபோது கார் நிறுத்தப்பட்டிருந்தது. 

 

வீடு வந்து விட்டதை உணர்ந்தாலும் இறங்கிச் செல்ல மனம் வரவில்லை. எதுவும் பேசாது ஸ்டெரிங்கில் விரல்களால் தாளம் தட்டிக் கொண்டிருந்தவனை சில நொடிகள் உற்றுப் பார்த்தவள்,

 

"என்ன இப்படியே எங்கயாவது கூட்டீட்டு போய்டுங்க வேந்தன்.? ப்ளீஸ்." என்றவளுக்கு அவனுடன் இருக்கும் தருணங்களில் கிடைக்கும் நிம்மதியான உணர்வு, வாழ்நாள் முழுவதும் வேண்டும் என்பது போல் இருந்தது. 

 

சட்டென அவளின் புறம் திரும்பியவன்,

 

"இந்த வார்த்தைய கேட்டதும், கண்டிப்பான்னு சொல்லிக் கூட்டீட்டு போக ஆச தான் மேடம். ஆனா அடுத்தார் பேச்ச கேக்குற கிளிப்பிள்ள கூட வாழ்க்க நடத்த முடியாது. காதலிச்சா, அத வெளில சொல்ற அளவுக்காது தைரியம் வேணும். யார்க்கிட்டயும் சொல்ல முடியாம, ரகசியமா லவ் பண்ணா அது பொழுதுபோக்கு காதல். உங்க பொழுதுபோக்குக்கு எங்கூட விளையாடாதிங்க மேடம்."

 

"ஏ வேந்தன் இப்படி பேசுறிங்க?. நா உங்கள சீரியஸ்ஸா விரும்புறேன். பொழுதுபோக்கு இல்ல." என்றாள் கண்ணீருடன்.

 

"அப்ப உங்க மனசுல இருக்குற காதல, தைரியமா உங்க வீட்டுல சொல்லிட்டு, எனக்கு ஒரு கால் பண்ணுங்க. உங்க வாழ்க்கை நானா இருப்பேன். இப்ப இறங்குங்க மேடம்." என்றதும் மனமே இல்லாது இறங்கிச் சென்றாள் துகிரா.

 

அவன் கூறுவதிலும் ஒரு உண்மை உள்ளது. இதுவரை துகிரா தன் வாழ்வில் தனக்கென, தன் விருப்பத்திற்கென எந்த முடிவையும் எடுத்தது இல்லை. 

 

உனக்கு இது தான் சிறந்தது என்று அவள் தாய், தந்தை எடுக்கும் முடிவுகளை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறாளே தவிர்த்து, தன் விருப்பத்தை அவள் யோசித்தது இல்லை. 

 

'வாவ்!... இந்த ஹன்சம் தா உன்னோட வுட்பியா.? அந்த ரேவன் குடும்பத்துக்கு நீ மருமகளா?' என்று சஜித்தை பார்க்கும் அவளின் தோழிகள் வடிக்கும் ஜொல்லிற்காகவே, 

 

'எஸ் ஆஃப் கோஸ். நாந்தா சஜித் வைஃப். இந்தர் அங்கிளோட செல்ல மருமகள் நாந்தா.' என்று பெருமை பேசி இந்தத் திருமணத்திற்கு சம்மதம் சொன்னவள் அவள். 

 

இப்போது 'வா...' என்கிறாள் என்பதற்காக அவளின் காதலை ஏற்று அவளை அழைத்துச் சென்று விடலாம் தான். யாரையும் எதிர்த்து நிற்கும் துணிவு அவனுக்கு உண்டு. 

 

ஆனால் தன் காதலியையே எதிர்த்து நின்று தன் காதலுக்காகப் போராட முடியாதே.

 

அவளின் தாய் வந்து பேசினாள் இளாவை விட்டுப் பிரிய யோசிக்க மாட்டாள் துகிரா. அவரின் பேச்சிற்கு ஆடும் பொம்மை அவள். அதைத் தான் இளா சொல்கிறான்.

 

செல்லும் அவளை வெறிக்க நோக்கியவன், காரை எடுத்துக் கொண்டு சென்றான்.

 

இனிய இரவு என்றாயே இவர்களுக்கா! என்று நீங்கள் கடுப்பாவது புரிகிறது. இந்த ஜோடிக்கு அது இனிய இரவாகிப் போகவில்லை என்றாலும் மற்றொரு ஜோடிக்குக் கட்டாயம் அது இனிய இரவு தான். 

 

இளாவிடம் சொல்லி விட்டு ரயில் ஏறியவள் வந்து நின்ற இடம் சஜித்தின் கடை. 

 

"ஹாய் சத்யா…" என்றபடி வந்தவளை புருவ முடிச்சுடன் ஏறிட்டான் சஜித்.

 

"இங்க என்ன பண்ற?"

 

"உன்னப் பாக்கத்தா வந்தேன்.” என்றபோது ஏன் என்ற கேள்வி அவனிடம் எழவில்லை.

 

“டெய்லி உங்கூட சாப்டுட்டு பழகிட்டேன்னா‌, தனியா சாப்பிட பிடிக்கல. இதோ டின்னர் வாங்கிட்டு வந்திருக்கேன். பிரியாணி..."

 

"ஆனா கடை மூடக் கொஞ்ச நேரம் தான் இருக்கு. இங்க வந்ததுக்கு வீட்டுலயே வெய்ட் பண்ணலாமே." 

 

"அங்க சாப்பிட்டா நீ உ வீட்டு பால்கனில இருப்ப, நா என்னோட பால்கனில இருப்பேன். நடுவுல கேப் இருக்கும். அத்தோட வீடு போய்ச் சேருற வர உங்கைய பிடிச்சிட்டு, யாருமில்லாத ரோட்டுல நடக்குறது சுகத்த நான் இழக்க விரும்பல." என்றவளை ஒற்றை புருவம் உயர்த்தி பார்க்க, அவளும் அவனைப் பார்த்துக் கண் சிமிட்டினாள்.

 

சின்னச் சிரிப்புடன் காத்திருக்கச் சொன்னவன், அவளுடன்‌ தான் ரயிலில் ஏறினான்.  

 

கடந்த சில நாட்களாகவே அவன் எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கிறான் என்றது அவளின் புத்தி. அவனைக் கூல் செய்ய, கண்டதையும் பேசி, சேட்டைகள் செய்து அவனின் முகத்தில் உண்டாகும் சிந்தனைக் கோடுகளைப் போக்கி, சில நொடி சிரிப்பைப் பார்க்காது, அவளுக்கு உறக்கம் வருவதில்லை.

 

அத்தோடு யாருமற்ற சாலையிலும், ரயிலிலும் அவனின் புஜத்தை இறுகப் பற்றிக் கொண்டு நடந்தபடி, அன்றைய நிகழ்வுகளை அவனிடம் மழையாய் கொட்டித் தீர்ப்பது அவளின் வாடிக்கையாகிப் போயிருந்ததே. 

 

“சத்யா! அந்த நாய் என்ன உத்து உத்து பாக்குது. ஏன்?” 

 

“ஐ திங்க் உன்னோட டிரெஸ் அதுக்கு பிடிச்சிருக்கலாம்.” என்பான் குறுநகையுடன்,

 

“ரெட் கலர் மாட்டுக்குத்தான ஆகாது. நாய்க்கும் ஆகாதா?” 

 

“மே பீ. உன்னோட உடம்புல எங்க கடிச்சா, கொத்தோட கறி கிடைக்கும்னு ஆராய்ச்சி பண்ணுதுன்னு நினைக்கிறேன்.” என்றவனின் முதுகில் பயத்துடன் தொற்றிக் கொண்டு செல்வாள். அவளைக் கேலி செய்ய, பதிலுக்கு இவள் ஒன்று சொல்ல, குறுநகை, புன்னகையாக விரிந்து சிரிப்பாக மாறும். 

 

அதை எப்படி இழப்பது?

 

மயக்கம் தொடரும்...

 

https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

 

மயக்கம் 38

https://kavichandranovels.com/community/postid/1305/


   
ReplyQuote

You cannot copy content of this page