All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

போகனின் மோகனாங்கி - 05

 

VSV 32 – போகனின் மோகனாங்கி
(@vsv32)
Eminent Member Author
Joined: 4 months ago
Posts: 16
Topic starter  

அத்தியாயம் 5

மேக்னாவின் பேச்சை கேட்டு அகத்தியனின் முகமும் உடலும் இறுகியது. அதே நேரம் திலீப்பும் நித்யாவும் கடைசியாக மேக்னா பேசியதை கேட்டுக் கொண்டே அவர்கள் அருகே வந்தனர்.

 

“என்ன மேக்னா, ஏதோ பச்சை துரோகினு சொல்லிட்டு இருக்கீங்க? யாரை திட்டிட்டு இருக்கீங்க?” என்றான் திலீப்

 

“ப்ச் யாரையும் திட்டல திலீப், என் கதையில வர்ற வில்லனோட கேரக்டரை பத்தி இவர்கிட்ட பேசிட்டு இருந்தேன்” 

 

“யாரு மேகி, அந்த நம்பிக்கை துரோகி அகன் கேரக்டரையா சொல்லிட்டு இருந்தே” என்று இடைபுகுந்தாள் நித்யா

 

மேக்னா ஆமாம் என்று தலையாட்ட அகத்தியன் முகமோ உணர்ச்சியற்று பாறை போல இறுகி இருந்தது. திலீப் தன் பாஸையே யோசனையோடு பார்க்க, நித்யாவோ அவனை ஓர விழியால் பார்த்துக் கொண்டே,

 

“ஒரு விஷயம் கவனிச்சியா மேகி? அகத்தியன்ங்கிற பேரையும் போகன்ங்கிற பேரையும் சுருக்கினா அகன்னு வருது, உன் கதையோட வில்லன் பேரும் அகன் தான், சார் கிட்ட எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு” என்று கேலி போல பேசி சிரித்த நித்யாவை எரித்து விடுபவன் போல முறைத்தான் அகத்தியன்.

 

அவன் கைகள் கோபத்தில் முறுக்கேறுவதை கண்டுக்கொண்ட திலீப் சட்டென்று சூழ்நிலையை மாற்றும் பொருட்டு, “மேக்னா உங்க கதையை பத்தி கிட்டத்தட்ட உங்க மூணு பேருக்கும் தெரியும். எனக்கு தான் தெரியாது. ப்ளீஸ் முதல்ல இருந்து சொல்லுங்களேன் நானும் கேக்கறேன்” 

 

“சொல்றேன் திலீப்” என்றவள் அகத்தியனை பார்த்து, “சாரி போகன், நித்யா பேசினதுக்கு கோபப்படாதீங்க. அவ இப்படி தான் மனசுல பட்டத யோசிக்காம படபடன்னு பேசிடுவா” 

 

“இதுல கோப பட என்ன இருக்கு மோகனா? உன் கதையோட வில்லன் பேரு எனக்கு இருக்கறதால நான் வில்லனாகிடுவேனா என்ன?” என்றான் விட்டேற்றியாக.

 

“ஆனா உன் கதையில வர்ற அகனை வில்லன்னு சொல்றத தான் என்னால ஏத்துக்க முடியல” என்றான் உணர்ச்சியற்ற குரலில்.

 

“என் கதையை சொல்றேன், அப்போ தான் உங்களுக்கு அகனோட சூழ்ச்சி புரியும்” என்றவள் தன் கதையை சொல்ல தொடங்கினாள்

 

“குமரி கண்டத்தின் சிறப்பு மிக்க நகரமான தென்மதுரையை ஆண்ட அரசர் வேங்கையன்னு எல்லாராலும் அழைக்கப்பட்ட புலிப்பாண்டியன். அவர் காலத்துல தான் தமிழ் சங்கங்கள் எல்லாம் நிறுவப்பட்டது. சிறப்பான ஆட்சியை நடத்தி வந்தார். அவரோட மனைவி பேரு நிலவழகி. வேங்கையன் மிக சிறந்த வீரன். எல்லா நாட்டோடயும் போர் புரிந்து வெற்றியும் பெற்று மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே ஆட்சி செஞ்சிட்டு வந்தார். எத்தனையோ நாடுகளோடு சண்டை போட்டு அந்த நாட்டை அடைஞ்சிருந்தாலும், அவர் தன்னோட மனைவி நிலவழகிய தவிர எந்த பெண்ணையும் திருமணம் செஞ்சுக்கல. அந்த காலத்துல எல்லாம், தோல்வி அடைஞ்ச நாட்டோட அரசன் தன்னோட பெண்ணை வெற்றி பெற்ற அரசனுக்கு மனைவியாக்கி அனுப்பறது வழக்கம். ஆனாலும் வேங்கையன் யாரையும் திருமணம் செஞ்சுக்காம ஏகப்பத்தினி விரதனா இருந்தாரு.

 

எல்லா செல்வமும் இருந்த அவருக்கு குழந்தை செல்வம் மட்டும் இல்லாம இருந்தது. அதுக்காக பல யாகங்களையும் தானங்களையும் செஞ்சாரு. எத்தனையோ பேரு வேற கல்யாணம் செஞ்சுக்க சொல்லியும் அதையெல்லாம் கேக்காம தன் மனைவி நிலவழகி கர்ப்பம் தரிப்பானு பரிபூரணமா நம்பினார். அதுக்காக பல யாகங்களையும் செஞ்சாரு

 

அவர் நம்பிக்கை நிறைவேறிச்சு, ஆனா காலம் கடந்து போய் இருந்தது. அவருக்கு வயதான காலத்துல தான் அவரோட மனைவி கரு தரிச்சாங்க. ஏதோ சாகற காலத்துக்குள்ள ஒரு வாரிசு பிறக்க போகுதே, அதுவரைக்கும் சந்தோஷம்னு தன்னோட வாரிசை பார்க்க ரொம்ப ஆவலா இருந்தாரு.

 

பிறக்க போறது ஆணா இருக்கணும், அப்போ தான் அந்த நாட்டை வேங்கையனோட வாரிசே ஆள முடியும்னு எல்லாரும் எதிர்பார்த்து இருந்தாங்க. ஆனா நிலவழகிக்கு பிறந்தது என்னவோ பெண் பிள்ளை தான். ஆனாலும் வேங்கையன் தன் மகளோட பிறப்பை அந்த நாட்டோட திருவிழாவா கொண்டாடினாரு.

 

அவ பிறந்தப்பவே அவ்வளவு அழகா இருந்தா, அழகின் பெயரோடு சேர்ந்து அவளுக்குள் அசாத்திய தைரியமும் இருக்கணும்னு நினைச்ச வேங்கையன் தன் மகளுக்கு மோகனாங்கினு பேரு வச்சாரு. மோகனா பேருக்கு ஏத்த மாதிரி பேரழகி மட்டுமில்ல அதி புத்திசாலி. சின்ன வயசுலயே தன்னோட அப்பாவுக்கு மந்திரி போல ஆலோசனை சொல்லிட்டு இருந்தாள். அப்படி இருக்கும் போது ஒரு நாள் ஒற்றன் வந்தான்.

 

“அரசரே, நம்ம நாட்டோட போரிட, எதிரி நாட்டு அரசர்கள் எல்லாம் ஒண்ணு கூடி திட்டம் போடறாங்க. உங்களுக்கும் வயசாயிடுச்சு, ஆண்வாரிசு இல்லாம பெண்வாரிசு இருக்கறதால, சுலபமா போர் செய்து இளவரசியை திருமணம் செய்து நாட்டை அடையணும்னு பேசிக்கிறாங்க. இதுல யார் இளவரசி மோகனாவை திருமணம் பண்ணிக்கிறதுனு தான் அவங்களுக்குள்ள பெரிய சண்டையா இருக்கு. அது முடிவுக்கு வரதுக்குள்ள, நாம எதாவது செய்தாகணும் அரசே” என்றான் ஒற்றன்.

 

“என்ன? வெறும் பதிமூன்றே வயதான பெண், அதுவும் பூப்படையாத என் குழந்தையை கல்யாணம் பண்ண, திட்டம் போடறாங்களா?” என்றார் அரசர் அருவெருப்புடன். “வரட்டும், அவர்களை ஒரு கை பார்த்துக் கொள்கிறேன்” என்று கறுவினார்

 

“அப்பா, நீங்கள் போர் செய்யும் வயதை தாண்டி விட்டீர்கள். நான் பெரியவளாகி போர் செய்ய தயாராகற வரைக்கும் நமக்கு போர் எல்லாம் சரிப்படாது. நம்ம நாட்டை சுத்தியும் பாதுகாப்பு அரணை அமைக்க சொல்லுங்க. யாராலும் அந்த பாதுகாப்பு அரணை தாண்டி நம்ம கோட்டைக்குள் வரவே முடியாது” என்றாள் மோகனா

 

“ஏற்கனவே கோட்டை சுவர் இருக்கே மோகனா, அதன் மேலே நம்ம வீரர்கள் இரவு பகலா காவலுக்கு இருக்காங்களே. போதாதா?” என்றார் வேங்கையன்.

 

“போதாது தந்தையே. சக்கர வியூகம் போல நம் அரண்மனையை சுற்றிலும் பலவிதமான அரண்கள் இருக்கணும். நீங்க நம் அரசாங்கத்தின் கட்டிட கலைஞரை அழையுங்க, நான் அவரிடம் சொல்கிறேன்” என்றாள் மோகனா

 

“பார்த்தியா நிலவழகி, என் பெண்ணோட புத்திசாலிதனத்தை. அரசருக்கே ஆணையிடுகிறாள். அவளுக்கு தகுந்த முறையில் போர்பயிற்சியும் கொடுத்தால், அவளே நாட்டையும் ஆள தகுதியானவள். என்ன சொல்கிறாய்? பயிற்சி அளிக்க சிறந்த ஆளை வரச்சொல்லட்டுமா?” என்றார் வேங்கையன் அரசியை பார்த்து

 

“தேவையில்லை, நல்லதொரு அரசரை பார்த்து அவளுக்கு திருமணம் செய்து வையுங்கள், வரப்போகிற மாப்பிள்ளை நம் அரசாங்கத்தையும் உங்கள் மகளையும் சேர்த்தே பார்த்துக் கொள்வார்” என்றார் நிலவழகி

 

“அப்பா அரசியாரை கொஞ்ச நேரம் அமைதியாக இருக்க சொல்லுங்கள், அரசவை என்று பார்க்காமல் அன்னையை எடுத்தெறிந்து பேசிவிட்டாள் இளவரசி என்ற அவப்பெயர் எனக்கு வேண்டாம்” என்றாள் மோகனா கோபத்தோடு

 

“நீ கோபப்படாதே மகளே, உன் விஷயத்தில் நான் அரசியின் பேச்சை கேட்க போவதில்லை. நீ உன் தோழிகளுடன் விளையாடிக் கொண்டு இரு, அரசவை கட்டிட கலைஞர் வந்ததும் உனக்கு தகவல் சொல்கிறேன்” என்றார் அரசர்.

 

மோகனாங்கி அரசியை பார்த்து முறைத்து விட்டு தோழிகளுடன் சென்று விட்டாள். “நீங்க உங்க பெண்ணுக்கு ரொம்ப செல்லம் கொடுக்கறீங்க” என்று எப்போது போல அலுத்துக் கொண்டார் நிலவழகி.

 

“நான் செல்லம் கொடுக்கவில்லை, அவளுக்கான உரிமையை கொடுக்கிறேன். இந்த நாட்டை ஆளப்போகும் அரசி அவள், அதற்காக அவளை தயார் படுத்த நினைக்கிறேன். நான் இறப்பதற்குள் என் மகளை வீரத்தமிழச்சியாக மாற்ற வேண்டும்” என்றார்

 

“இங்கே அரசர்கள் எல்லாம் ஆண்கள், ஆண்களோடு உங்க பெண் சண்டையிட்டு போரில் ஜெயிக்க முடியுமா? பெண்கள் போர்களத்தில் நின்றால், ஆண்கள் முதலில் அவர்களின் மானத்தையல்லவா வாங்க நினைப்பார்கள், அது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது” என்று குறைப்பட்டார் நிலவழகி.

 

“நம் மகள் மோகனாங்கி, அதையெல்லாம் கையாளக்கூடிய தைரியசாலி மட்டுமல்ல, புத்திசாலி. நீ இந்த விஷயத்தில் இனி தலையிடாதே நிலவழகி” என்றார் வேங்கையன் முடிவாக

 

“எப்படியோ செய்யுங்கள்” என்றுவிட்டு நிலவழகி எழுந்து சென்று விட்டார்.

 

சற்று நேரத்தில் காவலாளி கட்டிட கலைஞர் வந்திருப்பதாக தகவல் சொல்ல, “வரச்சொல்” என்றார் வேங்கையன்.

 

அவர் வந்ததும் மோகனாங்கிக்கு தகவல் சொல்லப்பட, “அவரை அழைத்துக் கொண்டு தந்தையை மட்டும் என்னிடம் வரச்சொல்லுங்கள்” என்று கட்டளையிட்டாள் மோகனாங்கி.

 

மகளின் கட்டளையை கேட்டு புன்முறுவலோடு மீசையை நீவிக் கொண்ட அரசர், கட்டிட கலைஞரை அழைத்துக் கொண்டு மகளிடம் சென்றார்.

 

மோகனாங்கி குளத்தின் அருகே இருந்த மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தாள்.

 

“என்ன? இந்த விளையாட்டு பெண், கட்டிடத்திற்கான திட்டத்தை சொல்ல போகிறாளா?” என்ற யோசனையோடு கட்டிட கலைஞர் அரசரோடு சென்றார்.

 

மோகனா வந்தவர்களை உணர்ந்தும் தன் வேலையில் மும்பரமாக இருந்தாள். வேங்கையனும் பொறுமையாக காத்திருந்தார். ஒரு மணி நேரத்திற்கு பின்பே தலை நிமிர்ந்த மோகனாங்கி, கட்டிட கலைஞரை பார்த்து, தன் மணல் வீட்டை காண்பித்தாள். அப்போது தான் அவர் அதை கவனித்தார். அவர்கள் இருந்த அரண்மனை போன்ற தோற்றத்தில் இருந்தது அந்த மணல் சிற்பம்.

 

ஆச்சரியத்தோடு அவர் மோகனாங்கியை பார்க்க, அவள் கட்டளைகளை பிறப்பிக்க தொடங்கினாள். “இது தான் அரண்மனையை சுற்றியுள்ள கோட்டை சுவர், இதை சுற்றிலும் நீரின் அமைப்பு இருக்க வேண்டும். ஆழம் பலநூறு அடிகளில் இருக்க வேண்டும், மேலே நீர் இருந்தாலும், போக போக புதைக்குழி போன்று சேறு நிறைந்திருக்க வேண்டும். மேலும் அதைச்சுற்றியுள்ள நீர்தேக்கத்தில் ஆயிரக்கணக்கான முதலைகள் உயிர்வாழ ஏதுவாக இருக்க வேண்டும். அதை தாண்டி வெளியே செல்லவோ உள்ளே வரவோ வழி வேண்டுமென்றால் அது நம் மூவரை தவிர யாருக்கும் தெரிந்திருக்க கூடாது. பாதுகாப்பு அரண் கட்டி முடிந்த பிறகு நீங்கள் அரண்மனையின் கோட்டையிலேயே வாழ வேண்டும். வேறு இடத்திற்கு செல்ல உங்களுக்கு அனுமதி கிடையாது.

 

இதற்காக செல்வ செழிப்புடன் உங்கள் பரம்பரை முழுவதும் வாழ தேவையான பொன்னும் பொருளும் அளிக்கப்படும். என்ன சொல்கீறீர்கள்?” என்றாள் ஆளுமையான குரலில்.

 

கட்டிட கலைஞர் ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக மோகனாவை பார்க்க, அவள் மேலும் தொடர்ந்தாள். “நீரால் நீங்கள் அமைக்க போகும் பாதுகாப்பு அரணை சுற்றி மேலும் ஏழு விதமாக அரண்கள் அமைக்க வேண்டும்” என்று தன் மணல் சிற்பத்தை காட்டி விளக்கினாள்

 

கோட்டையை சுற்றி நீர் இருப்பதாக தான் வெளியே தெரியணும், ஆனா நமக்கு மட்டும் தான் உள்ளே புதைகுழி இருக்கறது தெரியும். நீச்சல் அடித்து வரலாம்னு முயற்சி செய்யறவங்க, அந்த புதைகுழில மாட்டி இறந்துடுவாங்க. புதைக்குழி நீர் வேலியை சுற்றிலும் பெரிய கோட்டை சுவர் இருக்கணும். சுவர்களுக்கு இடையே குறிப்பிட்ட இடைவெளியில பெரிய மாடங்கள் இருக்கணும், அதுக்கிடையில கருங்கல்லால் ஆன உருண்டைகள் பதிக்கணும், யாராச்சும் போர் தொடுக்கணும்னு என்னத்தோட வந்தா போர்வீரர்கள் அந்த உருண்டைகளை உருட்டி வேகமா வீசறத்துக்கு ஏற்ற மாதிரி அதை வடிவமைக்கணும், அதையும் மீறி உள்ளே வர்றவங்க, புதைகுழில மாட்டிக்குவாங்க.

 

அதுமட்டுமில்லாம கோட்டை சுவர்களுக்கு மேலே போர்வீரர்கள் நின்று, அமர்ந்து காவல் காக்க ஏதுவாக ஆங்காங்கே ஒரு சிறு குடிலை அமைக்கணும். அந்த குடில்ல இருக்கற தீப்பந்தம் வெளிச்சத்துக்காகவும் அழகுக்காகவும்னு தான் மத்தவங்க நினைக்கணும். அதுக்குள்ள ஒரு போர்வீரன் காவல் காக்கறது யாருக்கும் தெரியக்கூடாது. யாராவது பகைவர் வந்தா போர்வீரன் அந்த தீப்பந்ததையே அம்பாக அவர்கள் மேல் செலுத்துவாங்க” என்று மேலும் பல யுக்திகளை பேசிக் கொண்டே சென்ற மோகனாங்கியை பார்த்து அந்த கட்டிட கலைஞர் கையெடுத்து கும்பிட்டு விட்டார்.

 

“மன்னிக்கணும் இளவரசி, உங்களை பார்த்ததும், இந்த சின்ன பெண் என்ன சொல்லிவிட போகிறாள்? பல ராஜ்ஜியங்களுக்கு கட்டிட கலைஞரா இருக்கும் என்னை போயும் போயும் இந்த சின்ன பெண்ணிடம் ஆலோசனைக்கு கூட்டி வருகிறோரே இந்த அரசர் என்று நினைத்தேன். ஆனால் ராஜ தந்திரியாக இருக்கிறீர்கள் இளவரசி” என்று அரசரிடமும் மோகாங்கியிடமும் மன்னிப்பு கேட்டார்.

 

அரசர் வேங்கையனோ மீசையை தடவி பெருமிதத்துடன் மகளை பார்த்தார்.

 

“பரவாயில்லை, உங்களுடைய கட்டிட கலைத்திறனை எங்கள் அரண்மனையை சுற்றி கட்டப்படும் பாதுகாப்பு அரணில் காட்டுங்கள். உங்கள் பரம்பரையே உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு பொன்னும் பொருளும் சன்மானமாக வழங்கப்படும். ஆனால் ஒரு நிபந்தனை, கட்டுமான பணி முடிவடைந்ததும், நீங்கள் அரண்மனையிலேயே தங்கி விடணும், தந்தையே இவருக்கு ஒரு பதவியை கொடுத்து விடுங்கள்” என்று மோகனாங்கி இருவருக்கும் கட்டளைகளை பிறப்பித்து விட்டு, தன் தோழிகளுடன் விளையாட சென்று விட்டாள்.

 

“அரசரே உங்களுக்கு ஆண் வாரிசே தேவையில்லை. இளவரசியாரே நாட்டை ஆளும் வல்லமை உடையவர். அவரையே நாட்டின் அரசியாக்கி விடுங்கள்” என்றார் அவர்

 

“நானும் அதையே தான் யோசித்து கொண்டிருக்கிறேன். போர் பயிற்சிகளில் சிறந்தவர் யாரேனும் இருந்தால் சொல்லுங்கள், மோகனாங்கிக்கு பயிற்சி அளிக்க வேண்டும்” என்றார் அரசர்.

 

“அப்படியே ஆகட்டும் அரசே” என்று விட்டு விடைப்பெற்றுக் கொண்டார் அந்த கட்டிடகலைஞர் விஸ்வகர்மா.

 

அவர் கட்டிட பணியை ஆரம்பித்த வேளையில், மோகனாங்கி பூப்படைந்து விட்டதால், பயிற்சியை தள்ளிப்போட்டார் வேங்கையன். சில ஆண்டுகளில் அரண்மனையை சுற்றிலும் பாதுகாப்பு அரண்கள் மோகனாங்கி சொன்னது போலவே அமைக்கப்பட்டு விட்டது. 

 

கட்டிடப்பணியை பார்வையிட மோகனாங்கி வரும் போது அரசவை பணிப்பெண்கள் மஞ்சள் நிற மெல்லிய துணியை கையில் பிடித்து இளவரசியை சுற்றி நடந்தனர். அந்த மஞ்சள் நிற மெல்லிய அரணுக்குள் நடந்து வந்த மெல்லிடையாளின் அழகை கண்டுவிட பெண்களே ஏக்கம் கொண்டிருந்தனர்.

 

மஞ்சள் துணியின் மேல் மஞ்சள் சூரியனின் ஒளிப்பட்டு, மோகனாங்கியின் வரிவடிவம் தங்க தாரகையாக ஜொலிக்க, அதை பார்த்தே அங்கே வேலை செய்ய வந்த பெண்களும் ஆண்களும் மயங்கி நின்றனர். இளமையின் வனப்போடு அரண்மனைக்குள் சுற்றி திரிந்த மோகனாங்கியின் அழகைப்பற்றி நாடு முழுக்க பேச்சானது.

 

அவளை இதுவரையில் எந்த இளைஞனும் நேரில் பார்த்தில்லை. ஆனாலும் அவள் அழகை பற்றி கவிஞனாக இல்லாதவன் கூட கவி எழுதி, அதை மற்ற நாட்டு அரசர்களிடம் பாடி பரிசை பெற்று சென்றனர்.

 

ஏற்கனவே நாட்டையும் மோகனாங்கியையும் அடைவதற்காக காத்திருந்த பக்கத்து நாட்டு அரசர்கள் எல்லாம் இனி தாமதிக்க கூடாது என்று போர் தொடுக்க முடிவு செய்தனர்.

 

(தொடரும்)


   
ReplyQuote

You cannot copy content of this page