All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

மயக்கம் 37

 

VSV 11 – கள் விழி மயக்கம்
(@vsv11)
Reputable Member Author
Joined: 4 months ago
Posts: 136
Topic starter  

அத்தியாயம்: 37

 

தன் இலையில் இருந்த சாதத்தை அழகாய் கோடிட்டு பிரித்து, சிறிய கின்னத்தில் இருந்த பருப்பை ஊற்றிப் பிசைந்தாள் கோகோ. 

 

அது மத்திய சாப்பாட்டு நேரம். அவளுடன் சேர்ந்து உணவருந்த யாரும் முன் வராத போதும், தனியே தன் துணை அதான், ஃபோன். அதன் திரையின் மீது விழிகளைப் பதித்துக் கொண்டு, உண்ணத் தொடங்கினாள்.

 

"ம்!!... எந்த ஊரா இருந்தாலும் பருப்பு மம்மம் தான் பெஸ்ட்." என்று விரைந்து காலி செய்தவள், அடுத்த கின்னத்தில் இருந்த குழம்பை வாயில் வைக்க, அதன் சுவை பிடிக்கவில்லை போலும். 

 

"என்ன குழம்பு இது?. நல்லாவே இல்ல." என முகம்‌ சுழித்தாள். 

 

"இது ரைஸ்க்கு செட்டாகாது. ஓரத்துல ஒதுக்கி வச்சிருக்கியே சப்பாத்தி, அதுக்கு தா இது நல்லா இருக்கும்." என்ற ஆண் குரலில் தலை உயர்த்த, அரண்டு விட்டாள் கோகோ. 

 

"ப்ரஜித் சார்!... நீங்க எங்க இங்க.?" என்று தலைமை ஆசிரியரைக் கண்ட மாணவிபோல் எழுந்து நின்றாள். 

 

"உன்ன பாக்கத்தா வந்தேன்." என்றபடி அவளின் எதிரில் இருந்த காலி இருக்கையில் அமர்ந்தான். 

 

"என்னையா! எதுக்கு?" என்றவளுக்கு நாற்காலியில் அமர்வதா! வேண்டாமா! என்ற யோசனை ஓடிக் கொண்டிருந்தது‌.

 

"மார்க்கெட்டிங் ஐடியா தர்றேன்னு சொன்னியே. மறந்திட்டியா?. சிட் டவுன்... ஏ ஸ்கூல் பொண்ணு மாறிப் பிகேவ் பண்ற." என்றதும்,

 

 'இதுக்காகவெல்லாமா ஒரு கம்பெனி MD நேர்ல வருவாரு' என யோசித்தவள், தலையை இடம் வலமாகத் திரும்பி, ஒரு பார்வை பார்த்து விட்டு அமர்ந்தாள். 

 

"நேத்து உனக்காக நான் ரொம்ப நேரமா காத்திட்டு இருந்தேன்‌." எனக் கடைசி வரியை அழுத்திச் சொல்ல, சட்டென எழுந்து கொண்டாள். 

 

"என்ன!? காத்திட்டு இருந்திங்களா!" விழிகள் அதிர்ச்சியைக் காட்டின.

 

"நீ வருவன்னு துகி சொன்னா. நானும் அவளும் தான் வெய்ட் பண்ணிட்டு இருந்தோம். உனக்குக் காலடிச்சிட்டே இருந்தா. பதிலில்ல. நீ வர முடியலன்னா இன்பார்ம் பண்ணிருக்கலாம். அட்லீஸ்ட் துகி‌ பண்ண காலுக்கு ரெஸ்பான் பண்ணி சொல்லிருக்கலாம். ஏமாந்து போய்ட்டேன்." என்றபோது மீண்டும் முழிக்க, 

 

"ஐ மீன் துகி ஏமாந்திட்டான்னு சொன்னேன்."

 

"ஐ ஆம் சாரி. நா அவளுக்கு ஃபோன் பண்ணிருந்திருக்கனும்." என்றபடி அமர்ந்தவள், நிஜமாகவே கவலை கொண்டாள் துகிராவை ஏமாற்றியதற்கு. 

 

"ஏன் என்னப் பாக்க வரல.?" என்றதும் தலை தூக்க, "என்னன்னா! என்ன மட்டுமில்ல இந்த இடத்துல துகியவும் சேத்து தான் சொல்றேன். ஒவ்வொரு முறையும் பிரிச்சி பிரிச்சி சொல்லிட்டு இருக்க முடியாது. நீயா புரிஞ்சுக்கனும். ஓகே." 

 

"ஓகே…”

 

“ஏ வரல?”

 

“அது... கொஞ்சம் வேலை இருந்தது."

 

"ஓ!!... அப்ப இப்ப வா. துகிய நேரடியா ஷோ ரூம்க்கு வரச் சொல்லிடலாம். கம்." என்று எழ, 

 

'இது சரி வராது. உண்மைய உடைச்சி பேசிட வேண்டியது தான்.' என நினைத்தவள்,

 

"ப்ரஜித் ஸார்... அது வந்து... ஸ்போர்ட்ஸ் ப்ராடெக்டுக்கு இப்போதைக்கி மார்கெட்டிங் பண்ற ஐடியா இல்லன்னு..." என்றவள் தயக்கத்துடன் இழுத்து பேச, அதை முடிக்கவிடாது,

 

"உ ராஜமாதா சொன்னாளா!." என்க ஆம் என்பது போல் தலையசைத்தாள். 

 

"ஐடியா இல்லன்னு சொன்னது ஸ்போர்ட்ஸ் ப்ராடெக்டுக்கா இல்ல எனக்கா?..." 

 

"அத அவங்க கிட்ட தா கேக்கனும்." 

 

"இட்ஸ் ஓகே..." என அவன் தோள்களைக் குளுக்கியதும்,

 

"ரொம்ப நன்றி சார். எங்க நீங்க இத தப்பா எடுத்துப்பிங்களோன்னு நினைச்சேன். நல்ல வேள. யூ ஆர் ரியலி ஜென்டில்மேன். ஓகே சார். நாம அப்றமா முடிஞ்சா பாக்கலாம். லன்ச் டயம் முடியப் போகுது." என்றபடி எழ, சட்டென அவளின் மணிக்கட்டைப் பற்றியவன்,

 

"நா இன்னும் பேசி முடிக்கலயே." என்க, 

 

"இப்ப எதுக்கு நீங்கக் கையெல்லாம் பிடிக்கிறிங்க." என்று கூறியவளின் குரல் நடுக்கத் தொடங்கியது. 

 

இது அலுவலக கேன்டின். யாராவது ரிபேக்காவிடம் போட்டுக் கொடுத்து விட்டால். அவ்வளவு தான் என்ற பயம் அவளை வியாபிக்க, அவனின் கரத்திலிருந்து உருகப் பார்த்தாள்.

 

"விடுங்க சார்." என்றாள் அதட்டலாக.

 

"ஏ பிடிக்கக் கூடாதா.!" என்றவன் விடவில்லை.

 

"ஹா...ங்... கூடாது தான் ஸார்."

 

"கையத் தான பிடிச்சேன்."

 

"கல்யாணமான நீங்கப் பிடிக்கிறது ரொம்ப தப்பு ஸார்."  

 

"ஆகலன்னா தப்பில்லயா.?" என்றவனுக்கு என்ன பதில் சொல்வது. 

 

"ஷீ... துகி ஃப்ரெண்டோட பொட்டிங்கு நீ டெய்லியும் ஒரு கண்டென்ட் க்ரியேட் பண்ணி இன்ஸ்டால போடுற வீடியோவ பாத்து, இன்ப்ரஸ் ஆகி தான் உன்னப் பாக்கவே ஒத்துக்கிட்டேன். உன்னோட திறமை என்னோட பிஸ்னஸ்க்கு யூஸ் ஆகும்."

 

"ஆனா ரிபேக்கா மேம்க்கு இதுல இஷ்டமில்லயே." என்றவளை கூர்ந்து பார்த்தான் ப்ரஜித். 

 

அந்தப் பார்வை 'அவளுக்குப் பிடிக்கலன்னா நா என்ன பண்றது?' என்பது போல் இருந்தது.

 

"நீங்கத் தான் ரிப்பேக்கா மேம்மோட ஹஸ்பெண்டுன்னு ஏ சார் சொல்லல.?"

 

"நேஸ்ட் டயம் வரும்போது கழுத்துல போர்டு மாட்டிட்டு வர்றேன். I am the husband of rebeka-னு." என்றவனை முறைக்க, 

 

“அவள உன்னோட குருன்னு சொல்ற. அவளோட பேமிலயப் பத்தி தெரியாதா?”

 

“நா அவங்களோட திறமைக்கி தான் ஃபேன். அவங்களோட பர்ஸ்னல் பத்தி தேடினது இல்ல. நீங்கச் சொல்லாததுனால எனக்கு எவ்ளோ பெரிய ஆபத்து வந்ததுன்னு தெரியுமா?.”

 

“என்ன ஆபத்து?.”

 

“உங்க கூடப் பேசக் கூடாது, பழகக் கூடாது, அஞ்சடி இடைவெளி விட்டு நா நிக்கனும்னு ஆர்டர் போட்டிருக்காங்க. அதுவும் கன்னத்துல கை நாட்டு வச்சி."

 

"எங்க! இந்தக் கன்னத்துலயா!" என மணிக்கட்டை விட்டவன், கன்னம் தீட்டக் கரத்தை உயர்த்த, ஆவெனக் கத்தியபடி தூரம் நின்றாள்.  

 

"வேண்டாம் சார். உங்க புருஷெ பொண்டாட்டி சண்டைல என்ன பகடையா ஆக்காதிங்க. நா பாவம். விருது வாங்குற கனவ கலச்சிடாதிங்க... ப்ளீஸ்." என்றபடி விழி சுருக்கி கெஞ்ச, 

 

“எஸ் அதேதா நானும் சொல்றேன். பர்ஷ்னல் லைஃப் வேற. பிஸ்னஸ் வேற. ரெண்டையும் எப்பவும் தனித்தனியாத்தா வச்சிருக்கனும். அந்த வகைல நீ உன்னோட கரியர்ல இப்பத்தா அடியெடுத்து வச்சிருக்க. அதுக்குள்ள ஏன் அடுத்தங்களோட பர்ஷ்னல் லைஃப்க்காக வருத்தப்படுற.? நமக்குள்ள தா பர்ஷ்னலா எதுவுமே கிடையாதே.” என்றபோது கோகோவின் முகம் சிந்தனையைத் தந்தெடுத்தது.

 

"துகி உன்னப்‌பத்தி சொன்னா. ரிபேக்காக்கு திறமை அதிகம். அவள மீறி நீ சைன் ஆனாத்தா விருது கிடைக்கும். அது அவ சொல்ற வேலைய பாத்தா மட்டும் வராது. இது உனக்கு ஒரு நல்ல வாய்ப்பு. கிடைக்கும்போது யூஸ் பண்ணிக்க." என்க, கோகோ யோசித்தாள். 

 

இந்தியாவில் மட்டுமல்லாது உலகளாவிய சந்தையிலும் நல்ல பெயர் இருக்கும் ஒரு நிறுவனத்திற்காக வேலை செய்வது அவளுக்கு நல்ல அனுபவத்தைத் தரும். அது அவளின் லட்சியப் பாதைக்கு உதவியாக இருக்கும். 

 

ஆனாலும்....

 

"உன்னோட ஜாப் பர்மணெட்டா ஆகனும்னா 5 க்ளைண்ட்ட கூட்டீட்டு வரனுமாமே. இப்ப நீ உன்னோட ராஜ‌மாதாட்ட பேசி, என்ன உன்னோட அஞ்சாவது க்ளைண்டா எடுத்துக்கிற. இல்லன்னா..." என்றவனின் தோரணை வந்த சிந்தனையை விரட்டிவிட்டது.

 

"என்ன சார் மிரட்டுறீங்களா.?" 

 

"நா மிரட்டல. ஜஸ்ட் ஒரு எச்சரிக்கை.?

 

"நீங்க இல்லன்னா ஊருக்கு வேற யாருமே பிஸ்னஸ் வச்சி நடத்தலயாக்கும்." 

 

"நடந்துறாங்க தா. ஆனா உனக்கு யாரும் கிடைக்க மாட்டாங்களே. கிடைக்க விடமாட்டேன்." என்றவன், மேஜையில் கரம் ஊன்றி,

 

"நீ என்ன நினைச்சிட்டு இருக்க?. என்னோட ஆஃபர ரிஜக்ட் பண்ணிட்டு, அந்த இடத்துல இன்னொருத்தன நீ பில் பணணுவ. அத நா பாத்திட்டு இருப்பேன்னா! நா டர்கெட் பண்ணா அது என்னோடது. இல்லன்னா யாருக்கும் அது கிடைக்காது." என வில்லன்போல் பேச, முழித்தாள் கோகோ. 

 

அவளின் பார்வை அவனைக் கவர்ந்திருக்க வேண்டும். அவளின் உச்சந்தலையில், உள்ளங்கை வைத்து ஆட்டியவன், 

 

"சும்மா... மிரளாத..." என்றுவிட்டு ஒரு கார்டை அவளிடம் நீட்டினான்.

 

"நம்ம மீட்டிங் பிஸ்னஸ்காக மட்டும் தான். மத்தபடி பர்ஷ்னலா நம்ம ரெண்டு பேருக்குள்ளயும் ஒன்னுமில்ல. அத நீயே உன்னோட ராஜ மாதாட்ட சொல்லிடு." என்றவன் கண்களில் கருப்பு வண்ண கண்ணாடியை மாட்டிக் கொண்டு, 

 

"உன்னோட ராஜமாதா சொன்ன மாறி 5 அடி இடைவெளிய மெயின்டன் பண்றது கஷ்டம். அதையும் சேத்து சொல்லிடு." என்று புன்னகைத்து விட்டுச்‌ செல்ல, கோகோவிற்கு பயங்கர குஷி. 

 

'நல்ல மனுஷனாத்தான இருக்காரு. இவர ஏ விட்டுடு போனாங்க?.' என்ற யோசனையுடன் அலுவலகம் வர, அங்கு ரிபேக்கா நின்றிருந்தாள் சுவாலையாக,

 

'இது என்னடா வம்பாப் போச்சு. இவங்க பர்ஸ்னல் சண்டைக்கு, என்னோட கனவ இரையா ஆக்கனுமா?. கூடாது... நமக்கு நம்ம ஆவார்டு தா முக்கியம். அதுனால கிடைச்ச ஆப்பர்சூனிட்டிய விட்டுடக் கூடாது.' என்ற முடிவுடன் ஞாயிறு துகிராவை அழைத்துக் கொண்டு ப்ரஜித்தின் சோ ரூமிற்கு சென்றாள். 

 

ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த ஒரு வெட்ட வெளியை வாடகைக்கு பேசி, நாலாப் பக்கமும் கூடாரமிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து, அவர்களின் அனைத்து வகையான தயாரிப்பையும் வரிசையாகக் கடை விரித்திருந்தனர்.

 

அது விற்பனைக்கான இடம் இல்லை. 

 

ஒரு மாதம் இந்த இடத்தில் இருக்கும். அடுத்த மாதம் வேறிடம். வேறு ஊர், வேறு மாநிலம் என்று இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும்.

 

உங்களுக்கு அதன் தயாரிப்புகள் வேண்டுமென்றால் நேரடியாக, அதன் தலைமை இடத்தில் மட்டும் சென்று வாங்க வேண்டும். கிளைகள் எங்கும் கிடையாது. 

 

இரண்டு நொடிக்கு ஒரு முறையென டீவியில் அதிகமாக விளம்பரப்படுத்தியது கிடையாது.

 

விளையாட்டு மைதானங்கள், விமான நிலையங்கள் போன்ற இடங்களில் போஸ்ட்டர்கள் ஃப்ளெக்ஸ்களை காணலாம். 

 

ப்ரஜித் அவனின் தயாரிப்புகளின் தரத்தை வேறு விதமாகச் சந்தைப்படுத்தியது கோகோவை நிச்சயமாகக் கவர்ந்தது. 

 

கோகோவின் கேமரா சூடாகிவிட்டது என்று சொல்லுமளவிற்கு புகைப்படங்களை எடுத்துக் கொண்டே இருந்தாள். 

 

ஒரு சிறுவன், ஒரு சைக்கிளின் முன் பக்க சக்கரத்தை உயர்த்தி, அதைச் சுழற்றி ஓட்டிக் காட்டிய வித்தையை அழகாய் படம் எடுத்தாள். 

 

அவனின் சோ ரூமிற்கு வரும் யாவரும், எந்தப் பொருளை வேண்டுமானாலும் எடுத்து உபயோகிக்கலாம். வில் அம்பு, கிரிக்கெட் பேட், பால், ஸ்கேட்டிங் எனப் பல பொருட்களை எடுத்து விளையாடும்போது, அத்தனை நபர்களின் முகத்திலும் புன்னகையை காண முடிந்தது. 

 

நேரம் செல்வதே தெரியாது துகிராவும் கோகோவும் விளையாட, அவர்களை அழைத்துச் செல்ல இளவேந்தன் வந்தான். 

 

"அத்தான், ப்ரஜித் சார் நிஜமாவே புத்திசாலி தான். இந்த மாறி ஒரு மார்கெட்டிங் டெக்னிக்க நா இப்பத்தா பாக்குறேன்." என ஃபோனில் இருந்த வீடியோக்களைப் பார்த்தபடி காரில் ஏற, துகிராவும் எறி அமர்ந்தாள். அவளைப் புருவ முடிச்சுடன் பார்க்க,

 

"அத்தான், என்ன ஸ்டேஷன்ல இறக்கி விட்டுட்டு துகிய ட்ராப் பண்ணிடுங்க. அவளோட கார் ரிப்பேர்." என்க, இளா துகிராவை பார்த்தான். 

 

அவளும் அவனைக் குறுநகையுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். 

 

கோகோவை ரயில் ஏற்றி விட்டுவிட்டு துகிராவுடன் பயணப்பட்டான் இளவேந்தன்.

 

இவள் வந்தது ரிபேக்காவிற்கு தெரிந்தால் என்னாகும்?

 

மயக்கம் தொடரும்...

 

  https://kavichandranovels.com/community/vsv-11-%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%ae%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-comments

 

மயக்கம் 38

https://kavichandranovels.com/community/postid/1295/


   
ReplyQuote

You cannot copy content of this page