All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வாகை சூட வா - கதைப் போட்டி 2024

 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 289
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த நல்ல நாளில் நல்லதொரு தொடக்கமாக கதைப் போட்டியை பற்றிய அறிவிப்போடு உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்..
 
வாகை சூட வா – (கதைப் போட்டி 2024)
 
 
 
This topic was modified 8 months ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 289
Topic starter  
 
 
டிசம்பர் 1 தொடங்கி பிப்ரவரி 14 வரை நடைப்பெற இருக்கிறது.
  • போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் நவம்பர் பதினைந்தாம் தேதிக்குள் உங்கள் பெயரை பதிவு செய்துக் கொள்ளுங்கள்.
  • எழுத்தாளர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து போட்டியில் பங்கேற்க வேண்டும்.
  • கதையின் வார்த்தைகள் முப்பத்தைந்து ஆயிரத்துக்கு மேலும் ஐம்பது ஆயிரத்துக்குள்ளும் இருக்க வேண்டும்.
  • பிப்ரவரி பதினான்காம் தேதி அன்று இரவுக்குள் கதையின் இறுதி அத்தியாயத்தை பதிவிட்டிருக்க வேண்டும்.
  • ஏப்ரல் முதல் தேதி அன்று கதைக்கான வாக்கு பதிவுகள் தொடங்கும்.
  • ஏப்ரல் பதினான்கு அன்று போட்டி முடிவுகள் வெளியிடப்படும்.
 
கதை வகைகள் :
  • சமூக மேம்பாட்டு கதைகள்
  • பெண்ணிய கதைகள்
  • நகைச்சுவை கதைகள்
  • சரித்திர கதைகள்
  • மனோதத்துவக் கதைகள்
  • திரில்லர் கதைகள்
  • ஹாரர் கதைகள்
  • காதல் கதைகள்
  • அறிவியல் புனைவு கதைகள்
  • ஆன்டி ஹீரோ கதைகள்
  • ஆன்டி ஹீரோயின் கதைகள்
  • பேன்டஸி கதைகள்
  • குடும்ப கதைகள்
 
பரிசு விபரங்கள் :
 
எழுத்தாளர்களுக்கு :
  • முதல் பரிசு பத்தாயிரம் ரூபாய் (Rs 10,000) மற்றும் தேர்வாகும் கதை புத்தகமாக பதிப்பிக்கப்படும். 
  • இரண்டாம் பரிசு ஏழாயிரத்து ஐநூறு ரூபாய் (Rs 7,500) மற்றும் தேர்வாகும் கதை புத்தகமாக பதிப்பிக்கப்படும்.
  • மூன்றாம் பரிசு ஐயாயிரம் ரூபாய் (Rs 5,000) மற்றும் தேர்வாகும் கதை புத்தகமாக பதிப்பிக்கப்படும்.
  • பரிசு பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள் வேறு பதிப்பகத்தில் வந்துக் கொண்டு இருந்தால் அவர்கள் விருப்பம் போல் அங்கேயே புத்தகத்தை வெளியீட்டுக் கொள்ளலாம்..  இங்கு புத்தகம் போட்டேயாக வேண்டும் என்ற எந்த கட்டாயமும் இல்லை.. யாரையும் வற்புறுத்தவும் மாட்டோம். பொதுவாக பரிசு பெறும் புத்தகங்களை பதிப்பிப்பது வழக்கம் என்பதாலேயே அதை சேர்த்துள்ளேன்.
 
வாசகர்களுக்கு :
  • கதையை தொடர்ந்து படித்து, விமர்சனங்கள், போஸ்ட், மீம், வீடியோ என தொடர்ந்து போட்டு எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் 3 வாசகர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசும், அவர்கள் விரும்பும் புத்தகம் ஒன்றும் அன்பளிப்பாக கொடுக்கப்படும்.
  • உங்களின் எல்லா வகையான விமர்சனங்களும் தளத்திலும், பேஸ்புக்கிலும் பதிவிடப்பட வேண்டும்.
 
விதிமுறைகள் :
  • இந்த போட்டியில் பங்கேற்கும் கதைகள் வேறு எங்கும் இதற்கு முன்பு பதிவிட்டதாகவோ புத்தகமாக வந்ததாகவோ இருக்கவே கூடாது.
  • வரம்பு மீறிய உறவுமுறை, முறையற்ற உறவு சம்பந்தப்பட்ட கதைக்களமாக இருக்க கூடாது.
  • ரொமான்ஸ் அழகான ஒரு விஷயம். அதை கவிதை போல் ரசிக்கும்படி கொடுத்தால் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும். எல்லை மீறிய ரொமான்ஸ் காட்சிகள் மற்றும் அப்பட்டமான 18+ வர்ணனைகளை தயவு செய்து தவிர்த்து விடுங்கள்.
  • கதைகள் உங்கள் சொந்த கற்பனையாக இருக்க வேண்டும்.
 
போட்டிக்கு பெயரை பதிவு செய்ய விரும்புபவர்கள் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக் கொள்ளுங்கள் :
 
kcnovelsvaagaisoodava@gmail.com
 
மின்னஞ்சலில் பகிர வேண்டிய தகவல்கள் :
 
பெயர் :
புனை பெயர் :
கதையின் தலைப்பு :
அலைபேசி எண் :
 
(அலைபேசி எண் உங்களுக்கு விருப்பமிருந்தால் மட்டும் பகிர்ந்தால் போதும்.. தகவல்களை எளிதாக பகிர்ந்துக் கொள்ள மட்டுமே அது.)
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
 
 
This post was modified 8 months ago by Kavi Chandra
This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 289
Topic starter  

ஹாய் டியர்ஸ்

வாகை சூட வா கதைப் போட்டி சம்பந்தமான கேள்விகள் சந்தேகங்களை கீழே உள்ள லிங்கிலோ மெயில் ஐடியிலோ என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..

https://kavichandranovels.com/community/announcements-2024-comments-and-discussions/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%88-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%be-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf-2024-2/

kcnovelsvaagaisoodava@gmail.com

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 9 months ago
Posts: 289
Topic starter  
  1. ஹாய் டியர்ஸ் 

 

  1. அனைவருக்கும் வணக்கம்

 

  1. நம் வாகை சூடவா 2024 போட்டி நிறைவடைந்து உள்ளது.. ஆர்வமோடு போட்டியில் பங்கேற்று கதையை சரியான நேரத்திற்கு முடித்த அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

 

  1. இது முழுக்க முழுக்க வாசகர்கள் தேர்ந்தெடுத்த கதைகளை வைத்து வந்துள்ள முடிவுகள்..

 

  1. முதல் பரிசு (₹10,000)

 

  1. VSV - 48 -  என்றென்றும் அன்புடன் சந்தனா 
  2.  
  3.  
  4. இரண்டாவது பரிசு (₹7,500)
  5.  
  6. VSV - 11 - கள்விழி மயக்கம் 
  7.  
  8.  
  9. மூன்றாம் பரிசு (₹5000)
  10.  
  11. VSV - 15 - நம் காதல் நாணலன்றோ
  12.  
  13.  
  14. நான்காம் பரிசு (₹3000)
  15.  
  16. VSV- 32 - போகனின் மோகனாங்கி 
  17.  
  18.  
  19. ஐந்தாம் பரிசு (₹2000)
  20.  
  21. ஒரே அளவு வோட் வாங்கி இருவர் இந்த இடத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.
  22.  
  23. VSV - 41 - வரமாய் வந்த உயிரே
  24.  
  25. &
  26.  
  27. VSV- 22 - நேசம் வளர்க்க நெஞ்சம் தாராயோ
  28.  
  29.  
  30. விமர்சனங்களுக்கான பரிசு :
  31.  
  32. (₹1000 & புத்தகப்பரிசு)
  33.  
  34. தொடர்ந்து கதைகளுக்கு விமர்சனம் கொடுத்து எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தியதற்கான பரிசு நான்கு நபர்களுக்கு வழங்கப்படுகிறது..
  35.  
  36.  
  37. 1.  கலை கார்த்தி 
  38. 2. கௌரி 
  39. 3. ஜீனத் சபீஹா 
  40. 4. சாஹித்யா வருண் 

  1. வெற்றி பெற்றவர்களின் கதைகள் அவர்களின் விருப்பத்துடன் புத்தகமாக வெளிவரும்..

 

  1. போட்டி தொடங்கியதில் இருந்து சில காரணங்களால் என்னால் இந்தப் பக்கம் வர முடியாமல் போனாலும் அமைதியாகவும் அழகாகவும் இந்த போட்டியை நடத்தி முடிக்க உதவிய எழுத்தாளர் மற்றும் வாசகத் தோழமைகளுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்..
  2.  
  3. இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
  4. கவி சந்திரா 
This post was modified 2 weeks ago 2 times by Kavi Chandra

   
ReplyQuote
Zeenath Sabeeha
(@zeenath)
Active Member Registered
Joined: 2 months ago
Posts: 18
 

@kavi-chandra வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 

போட்டி கதையை திறம்பட முடித்த உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

விமர்சனப் பகுதியில் எனக்கும் பரிசு கொடுத்ததற்கு மிக்க நன்றிகள்


   
ReplyQuote
VSV 45 – கனலை அணைக்க வா கவியே
(@vsv45)
Trusted Member Author
Joined: 8 months ago
Posts: 47
 

வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉 🎉 


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Reputable Member Registered
Joined: 7 months ago
Posts: 285
 

வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். வாழ்க வளமுடன். உங்களுக்கு வாழ்த்துகள் கவி sis.

This post was modified 2 weeks ago by KalaiKarthi

   
ReplyQuote

You cannot copy content of this page