All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

வாகை சூடவா ரிவ்யூ

 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 4 months ago
Posts: 204
Topic starter  

வாகை சூடவா போட்டி கதைகளின் விமர்சனங்களை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் 


   
ReplyQuote
Gowri
(@gowri-karthikeyan)
New Member Registered
Joined: 1 week ago
Posts: 2
 

#கௌரிவிமர்சனம்

 

  1. #நம்_காதல்_நாணலன்றோ….
  2.  

விக்ரமன் சார் படம் பார்த்த ஃபீல்….

 

முக்கியமா ஒரே positivity தான் கதை முழுக்க…..

 

சூப்பர் சாய்ஸ் ஃபார் ஃபீல் குட் ஸ்டோரி…

 

அதிவீரன் அண்ணன் குடும்பம் ரொம்ப பெருசு…அவரோட சேர்த்து நாலு தம்பி….

 

முக்கியமா, அவங்க எல்லாருக்கும் ஒரே தங்கை பொற்றாமரையாள்…அதும் அவளை அவங்க அன்னையா பார்க்கறாங்க…..

 

கடிந்து ஒரு சொல் சொல்ல மாட்டேங்கராங்க பா…..

 

அவளும் சும்மா இல்ல செம்ம பாசம் தான் அண்ணன்ஸ் மேல…..

 

அண்ணன்ஸ் மட்டும்னா பரவால்ல….அவ அண்ணிங்க கூட தன் குழந்தையா தாங்கராங்க டா…..

 

இப்படி இருக்கும் போது, படிக்க போன இடத்தில் காதல்….

 

ஆதி மீது…..

 

ஆதியும் தான்…

 

காதலை கூட, அவ படிப்பு முடியும் வரை காத்திருந்து சொல்றான்….

 

அவளோ அக்கறை அவ படிப்பின் மீதும்…அவளின் மீதும்…

 

யாரும் இல்லா வளர்ந்த இவனுக்கும், அவனின் யாழ் என்றால் உயிர் தான்….

 

அண்ணன்ஸ் எல்லாம் ஓகே சொல்லி கல்யாணமும் நடக்குது….

 

ஆன….

 

இந்த இவளோ பாசமே அவர்களிடம் பிரிவை உண்ணடாக்குது….

 

ஏன்????

 

எப்படி சேரறாங்க அப்படிகறது மீதி கதை….

 

அதிவீரன் & கோ, அர்ச்சனா & கோ, அங்கை, திலகா, காயு, செழியன், பொழியன், துர்கா & சங்கர்…

 

எல்லாத்துக்குமே யாழ்னா ரொம்ப ரொம்ப பிரியம் தான்….

 

அதை அப்படியே அவங்க வர இடம் எல்லாம் உணர்த்தராங்க…..

 

அக்னி, அதி & கோல யாழ் மேல பாசம் நிறைய இருந்தாலும்…அவளோட நியாயமான ஆசைகளை கண்ட்ரோல் பண்ண மாட்டான்….

 

அவங்களும் அப்படி இல்ல தான்…பட் கொஞ்சம் ட்ரெண்ட் லா இருக்கரவன்…..

 

அதும் அக்னி & ஆதி பாண்டிங், அவங்க ஃப்ரெண்ட்ஸ் ஷிப் அவளோ அழகு…..

 

இவங்க பார்ட் படிக்கும் போது ரொம்ப பிடிச்சது….

 

கதை ரொம்ப அழகா, full of positive vibe ஓட இருக்கு…..

 

கண்டிப்பா recommended to all….

 

எண்டிங் வரை வெயிட் பண்ண முடியல…படிச்சதும் சொல்லிரும்னு நினைச்சேன்….

 

இன்னும் ஒரே ஒரு எபி தான் இருக்கு…. complete ஆக….

 

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

 

லிங்க்👇👇👇👇

 

https://kavichandranovels.com/community/vsv-15-%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%8b-01/


   
ReplyQuote
Gowri
(@gowri-karthikeyan)
New Member Registered
Joined: 1 week ago
Posts: 2
 

#கௌரிவிமர்சனம்

 

#உயிர்_உள்ளவரை_யான்_உனதே 

 

கம்ப்ளீட் ஃபேமிலி டிராமா 🥰🥰🥰🥰

 

மாரி & பூமா தான் குடும்பத்தின் ஆணி வேர்….

 

இவங்க பையன் கணேஷ், பொண்ணு லக்ஷ்மி எல்லாமே ஒரே ஃபேமில்யா இருக்காங்க ஒரே வீட்டில்…

 

விஷ்ணு & ரேணு கணேஷ் சீதா பசங்க, விஷ்வா & ரேகா லக்ஷ்மி பசங்க….

 

முறை பசங்க அப்படிக்கரதில், அவங்க வீட்டில் இவங்க நாலு பேருக்கு கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கரங்க….

 

அதில் விஷ்வா & ரேணு லவ் பன்றாங்க… 

 

விஷனுக்கு அவளோ இன்டர்ஸ்ட் இல்ல ரேகா மேல….

 

இந்த விஷ்ணு சரியான சைகோ….

 

தென்றல் கிட்ட மட்டும்….

 

ஏன்????

 

தென்றல் அந்த வீட்டில் வேலை செய்யும் பெண்….

 

ரேகாக்கு தென்றல் கிட்ட விஷ்ணுவை தோத்து போயிருவோம்னு பயம்….

 

அந்த பயமே, அவளுக்கு வெறியை உண்டாக்குது….

 

விஷ்ணுக்கு தென்றல் மேல என்ன வெறுப்பு.????

 

அவன் சைகோத்தனதை ஏன் தென்றல் தாங்கனும்?????

 

அது எல்லாம் மீதி கதை…..

 

விஷ்ணு, உண்மையா இவனை எனக்கு பிடிக்கவே இல்ல…

 

ஆன்டி ஹீரோ அப்படினா கூட ஓகே….இவன் சைகோ….

 

தென்றல்…பாவமா இருந்தாலும் பல சமயம் கோவம் தான் வந்தது…..

 

அப்படி என்ன காதல் வேண்டி இருக்கு????

 

தன்மானத்தையும், தன் உயிரானவங்களையும் விட்டுட்டு????

 

பூமா, என்ன பெரிய மனுஷி இவங்க???? அவங்க பேரனுக்காக ஒரு பொண்ணு எவளோ தான் தாங்குவா????

 

இதுவே இவங்க வீட்டு பெண்ணை இன்னொரு வீட்டுக்கு அவ கணவனுக்காக இப்படி அனுப்புவாங்களா?????

 

அந்த ரேகா கொரங்கு அவளோ பண்ணுது….எல்லாத்துக்கும் சும்மா மோரச்சி மட்டும் பார்க்க வேண்டியது இந்த பாட்டி….

 

அதும் அவளோ கேவலமான விசயத்தை பண்ணி இருக்கா…

 

அதுக்காக என்ன தண்டனை கொடுத்தாங்க அவ வீட்டில்….

 

நல்லா இருக்கு பூமா உங்க நியாயம்…..

 

தென்றலுக்கு நீங்க செய்தது கொஞ்சம் கூட நல்லது இல்ல….

 

உங்க குடும்பத்தால் அவளுக்கு கிடைச்சது எல்லாம் வெறும் அவமானமும், கண்ணீரும் தான்….

 

லக்ஷ்மி, உங்களை கூட எண்ணமோனு நினைச்சேன்….ஆன உங்க பொண்ணு பாவம்னு சொன்னிங்க பாருங்க….

 

சூப்பர் போங்க….அவ எல்லாம் செய்வா…

 

அவ பாவமாம்….

 

இன்னொரு வீட்டு பொண்ணுனா, அவ கணவனுக்காக எல்லாம் தாங்கணும் அப்படி தானே?????

 

ரேணு, உனக்கு தென்றலே பரவில்லைனு நினைக்க வெச்சிட்ட…..

 

இப்படியா காதலுக்காக மனகெட்டு இருக்கறது….

 

இவ செய்யரதில் கொஞ்சம் கூட எனக்கு உடன்பாடு இல்ல…..

 

கதை நல்லா இருக்கு….

 

ஆன தென்றல், ரேணு கேரக்டர் எல்லாம் இன்னும் முதுகெலும்போட படைச்சி இருக்கலாம் ரைட்டர்….

 

இனி வரும் கதைகளில் female characters ஸ்ட்ராங் ஆ கொடுங்க டா…..

 

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

 

லிங்க்👇👇👇👇

 

https://kavichandranovels.com/community/vsv-52-%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87/%e0%ae%89%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b5%e0%ae%b0%e0%af%88-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a9%e0%ae%a4%e0%af%87/


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Estimable Member Registered
Joined: 2 months ago
Posts: 110
 

நம் காதல் நாணலன்றோ கதை அருமை. கூட்டுக் குடும்பம் பற்றிய கதை. தாமரை இவள் தான் குடும்பத்தின் ஆணிவேர் அண்ணன்கள் அண்ணிகள் பசங்களுடன் வசிக்கும் பெண்ணவள் காலேஜ் சென்று ஆதியை பிடிக்க காதலை சொல்லாமலே காதல் புரிந்து கொள்வது சூப்பர். கல்யாணம் ஆகி பிரிவு ஏற்பட அவர்களின் காதல் எப்படி ஏற்பட்டது அதன் பின்னர் அவர்களின் வாழ்க்கை சிறு சிறு சச்சரவு வந்தாலும் மனதில் வைத்து கொள்வது அதனால் வரும் பிரச்சினை என்று அழகாக கொண்டு போயிருப்பது சூப்பர். அண்ணன்கள் அவர்களின் உணர்வுகள் செம எதற்கு பிரிந்து இருக்கிறார்கள் என்பதை கேட்காமல் பிரச்சினை தள்ளி இருந்து யோசிக்க வைப்பது சூப்பர். மருமகன்களும் அத்தைக்காக மாமாவுடன் போயிருப்பது சூப்பர். அக்னி ஆதியை நண்பன் அவனின் உணர்வுகளை புரிந்த உறவு செம. பிரிவு கடைசி வரை என்ன காரணம் சஸ்பென்ஸ் போனது சூப்பர். ஆதி தாமரை ரொமான்ஸ் மற்றும் அந்நியோன்யம் அழகு. பேசியது காயப்படுத்தி இருக்கும் என்று பேசாமல் இருப்பது உணர்ந்து இணைவது அதற்கான சந்தர்ப்பம் மற்றும் துணையாக  இருந்தது சூப்பர். குழந்தைகள் வருவது அக்னி கல்யாணம் சுபமாக முடித்தது அருமை. வாழ்த்துகள். வாழ்க வளமுடன். 


   
ReplyQuote
KalaiKarthi
(@kalaikarthi)
Estimable Member Registered
Joined: 2 months ago
Posts: 110
 
  1. உயிர் உள்ளவரை யான் உனதே கதை சூப்பர். இது கூட்டு குடும்பம் பற்றிய கதை. பாட்டி தான் இங்கு எல்லாம் அவர் சொன்னால் என்று மருமகள் மருமகனும் ஏற்றுக் கொள்வது சூப்பர். காதல் இங்கே சுயத்தை இழந்து காதலை பெறுகிறது. தென்றல் வேலைக்காரி இருந்தாலும் பாட்டி சப்போர்ட் பண்ணுவது நமக்கு சந்தேகத்தை உண்டு பண்ணுகிறது. விஷ்ணு  அத்தை பொண்ணு  பையன் மூவரும் டூ மச். ரேணுகா 👍. கார்த்தி செம நட்புக்காக செய்வது சூப்பர். ரேணுகா தென்றல் காதல் ஜெயிக்க சுயத்தை இழப்பது கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. கார்த்தி அதிரடியான காதல் சூப்பர். விஷ்ணு பழசு மறந்தாலும் காதலித்து இருக்கிறோம் என்பது ஞாபகம் இருப்பது சூப்பர் அந்த வகையில் அவன் சூப்பர் தான். ரேணுகா காதலன் டூ மச் இவன்தங்கைக்காக என்று உணர்வை கொலை செய்வது டூ மச். பின்னர் திருந்துவது 👍. குழந்தைகள்வுடன் சுபமாக முடிகிறது. வாழ்த்துகள். வாழ்க வளமுடன். கார்த்தி ரொம்ப பிடிச்சிருக்கு. 

   
ReplyQuote
Saranya
(@kumarsaranya)
New Member Registered
Joined: 2 months ago
Posts: 1
 

நம் காதல் நாணலன்றோ-ஐந்து அண்ணன்களின் ஒரே தங்கை பொற்றாமரையாள்,அண்ணன் அண்ணிகளின் பாசமழையில் வளர்ந்தவள் ஆதிவருணேஷ்வரன் இல்லத்தில வளர்ந்தவன்,தாமரை ஆதி இருவரின் காதலும் கல்யாணத்தில்

கைகூட,அழகாக செல்லும் வாழ்க்கையில் இருவரும் பேசக்கூடாத பேச்சை பேசி பிரிந்துவிட,பின்பு இருவரும் தங்கள் இணைமீது வைத்திருக்கும் காதலாலும் அன்பாலும் இணைகிறார்கள் இருவரின் காதலும் மிக அழகு 🥰ஆதி மற்றும் அக்னியின் உறவு அருமை 😍இந்த கதையில் வரும் உறவுகள் எல்லோருமே சூப்பர் 🥰🥰🥰அழகான நிறைவான கதை சிஸ் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள் 🤩🤩🤩


   
ReplyQuote

You cannot copy content of this page