All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

Notifications
Clear all

கனவுகள் வெல்ல காரியம் துணை

Page 2 / 2
 

VSV 10 – கனவுகள் வெல்ல காரியம் துணை!
(@vsv10)
Member Author
Joined: 3 months ago
Posts: 23
Topic starter  

அத்தியாயம் 14

(ஹிந்தியில் பேசுகிறார்கள்..)

 

“என்ன சொல்றீங்க? அங்கே யாரும் இல்லையா? இரவோடு இரவா எல்லாரும் போகிற வரை.. அங்கே என்ன பண்ணிட்டு இருந்தீங்க?”

 

“ஸார்! நாங்க கண்காணிக்கிறதுக்கு யாருக்கும் தெரியக் கூடாதுனு சொன்னீங்க! அந்த விக்ரம் ஏற்பாடு செய்த ஆட்களுக்கு தெரியாம கண்காணிக்கிறதுக்கு எவ்வளவு கஷ்டம் என்று தெரியுங்களா! போதாக்குறைக்கு அவன் நேத்து நைட் வந்த போது..  மேலும் நாலு பேரோட வந்தான். காலையில நடந்த இன்ஷிடன்ட்டை விசாரிக்க வந்திருப்பான் என்று நாங்களுக்கும் சற்று தள்ளி இருந்துட்டோம். அப்பறம் அவன் கிளம்பிப் போனான். பின்னே எப்படினு தெரியலை. காலையில் வீட்டில் யாரும் இல்லை ஸார்! நாங்க எங்கேயோ மிஸ் செய்துட்டோம் ஸார்! டொன்ட் வெர்ரி! அவங்க மேரேஸ் முடிச்சுட்டு ஸ்ரீலங்காவிற்கு தானே போவதாக இருந்தது. அங்கே அவங்களைப் பிடிச்சுரோம் ஸார்!”

 

“முட்டாள்! முட்டாள்! நான் சொன்னது ஞாபகம் இல்லையா! அவங்களுக்கு மேரேஜ்.. ஹனிமூனுக்கு ஸ்ரீலங்கா என்பதெல்லாம்.. நம்மளை ஏமாற்ற பரப்பப்பட்ட கட்டுக்கதைகள்! அவங்க அங்கே ஒன்றும் போயிருக்க மாட்டாங்க! அவன் அவளைக் குணமாக்க.. அந்த ரீசர்ச்சை தொடர இருந்தான். இப்போ அவனைக் கொல்ல முயற்சி.. அப்பறம் பவித்ராவை கொல்ல நடந்த முயற்சி எல்லாம் பார்த்து.. இதுல என்னமோ இருக்கு என்று.. கண்டுப்பிடிச்சுருப்பான். அதனால் தான் போலீஸ் கிட்டக் கூடப் போகலை. எதோ புதையல் என்று நினைச்சுருப்பான் போல! முட்டாள். ஆனா இது புதைக்குழி! அந்த அபினவ்வை வச்சு ரீசர்ச் செய்யப் போகிறான். அதை நாம கண்டுப்பிடிச்சுட்டோம் என்று அவனுக்கு தெரிஞ்சுருச்சுனு நினைக்கிறேன். அதனால தான் இரண்டு நாட்களுக்கு முன்பே கிளம்பிட்டான். ஆனா ஸ்ரீலங்காவிற்கு போயிருக்க மாட்டாங்க! அது நம்மளை ஏமாற்றப் போடப்பட்ட திட்டம்! பவித்ரா எழுதி வச்ச புத்தகத்தில்.. முதலில் கடல்ல என்று தான் இருக்கு! சோ அவங்க அங்கே தான் போயிருப்பாங்க! நைட் கிளம்பியிருந்தால்.. அவங்களால் ரொம்ப தொலைவு போயிருக்க முடியாது. சீக்கிரம் ஆட்களை அனுப்பி.. அவர்களைத் தடுக்க வேண்டும். கவுர்மென்ட்டில் இருந்து சில முக்கிய பிரமுகர்கள் தான் நமக்கு சப்போர்ட்டா இருக்காங்க! எல்லாரும் இல்லை. மற்றவங்க கவனத்திற்கு போவதற்குள் இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” என்றான்.

 

“எஸ் ஸார்! டூரிஸ்ட் என்ற பெயரில் நம்ம ஆட்கள் வெவ்வேறு பகுதிகளில் இருந்து கடலுக்குள் கிளம்பிருவாங்க!” என்றான்.

 

—----------------

 

இதே நேரத்தில் ஸ்ரீலங்காவில் மிசிரி என்று அழைக்கப்படும் கிழக்கு கடற்கரை பகுதியில் அபினவ், விக்ரம் மற்றும் பவித்ரா அடைந்திருந்தார்கள்.

 

அங்கு இருந்த ஹோட்டலில் விக்ரம், பவித்ராவிற்கு ஒரு அறையும் அபினவ்வுக்கு ஒரு அறையும் என்று பதிவு செய்யப்பட்டது. விக்ரமும் பவித்ராவும் ஆளுக்கு ஒரு திசையை பார்த்தார்கள்.

 

விக்ரம் எங்கோ பார்த்தவாறு “முதல்ல வேற மாதிரி பிளென் போட்டிருந்ததால்.. இப்படி புக் செய்யச் சொன்னேன்.  நானும் அபினவ்வும் ஒரு அறையில் தங்கிக்கிறோம். நீ ஒரு அறையில் தங்கிக்கோ! பட் பீ கேர் புல்! எங்க இரண்டு பேரில் யாராவது ஒருத்தர் ஃபோன் போட்டு பேசிக் கதவைத் திறக்கச் சொன்னால் மட்டுமே கதவைத் திறக்கணும்.” என்று வேண்டுக்கோள் வைத்தான். 

 

பின் மூவரும் தங்களது அறையை நோக்கி நடந்தனர். சிறிது நேரம் அமைதியாக வந்த அபினவ் “உங்க இரண்டு பேருக்கும்.. ஒருத்தருக்கு ஒருத்தர் தான் என்பதில் இருந்து மாற்றம் இல்லை தானே! அப்பறம் ஏன் இப்படி தடுமாறுகிறீங்க! ப்ரீயா பர்சனல் மேட்டரை பற்றிப் பேசிட்டா நல்லதுன்னு நினைக்கிறேன். அஃப்கோர்ஸ்.. இப்போ நாம தொடங்கியிருக்கிற மேட்டர் தான் முக்கியம். அதுக்குன்னு.. உங்க பர்சனல் ஸ்பெசை விட்டுத் தரணும் என்றில்லையே!” என்றான்.

 

உடனே விக்ரம் பவித்ராவின் கையில் இருந்த சாவியை வாங்கி.. அபினவ்வின் கையில் திணித்து விட்டு.. “வா பவி! அப்போ இப்போவே பேசி முடித்திரலாம்‌.” என்றுவிட்டு.. அவளது கரம் பற்றி அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட அறைக்குள் செல்லவும், அவர்களது பொருட்களும் அந்த அறையில் வைக்கப்பட்டன.

 

அறையின் கதவுச் சாத்தப்பட்டதும்.. இனம் புரியாத உணர்வு ஆட்கொண்டாலும்.. அபினவ் கூறுவது போல்.. இது பேசி முடித்து விட வேண்டிய விசயம் என்று தோன்றியது. 

 

“விக்ரம்..” என்று அவனைப் பார்த்து திரும்புகையில் அவனும் “பவி!” என்று ஆரம்பித்திருந்தான்.

 

உடனே விக்ரம் “சொல்லு பவி!” என்றான்.

 

“இல்லை நீங்க முதல்ல..” என்று ஆரம்பித்தவள், சிறு மூச்சை இழுத்துவிட்ட பின் “ஒகே விக்ரம்! நானே சொல்றேன். அதுக்கு முன்னாடி.. ஒன்றை சொல்லிடரேன். என் வாழ்க்கையில் கல்யாண லைஃப் என்று வந்தால் அது நீங்க மட்டும் தான்.. அதுல எந்த மாற்றமும் இல்லை. முதலேயேயும் சரி இப்பவும் சரி.. எனக்கு உங்க கிட்ட இருந்து எனக்கு கிடைச்ச பர்ஸ்ட் இம்பரெஷன்.. நீங்க என்னோட கனவை நிறைவேற்ற போறீங்க என்கிறது தான்! அதனால முதல்ல நன்றி தோணுச்சு.. பிறகு மரியாதை தோணுச்சு. எஸ் கண்டிப்பா உங்களுக்கு என் மனசுல ஸ்பெஷல் இடம் இருக்கு! எனக்கு கஷ்டம் வந்த போதெல்லாம் உங்களைத் தேடியதும் நிஜம்! ஆனா..” என்று நிறுத்தியவள், அவனது முகத்தை பார்க்க இயலாது.. நெற்றியில் கையை வைத்து முகத்தை கொண்டு தலை குனிந்தாள்.

 

பின் “ஆனா.. ஸாரி விக்ரம்! ரியலி ஸாரி! எனக்கு இன்னும்.. அந்த லவ் வரலை. நீங்க என் மேலே வச்சுருக்கீங்க பாருங்க! அந்த லவ் வரலை. ரியலி ஸாரி!” என்றாள்.

 

விக்ரம் சட்டென்று தனது கையை நீட்டி.. தலையை தாங்கியிருந்த அவளது கரத்தின் மணிக்கட்டை பற்றியவன், விடாது கரத்தை இழுத்து அவளை அணைத்துக் கொண்டான்.

 

நிலைகுலைந்த பவித்ராவோ அவனது மார்பில் வந்து விழுந்தாள்.

 

விக்ரம் அவளை அணைத்தபடி “நான் சொல்ல வேண்டியதை இந்த அணைப்பு சொல்லுதா பவி! உன்னோட மதிப்பு நன்றிக்காக என் கூட இணைந்திருக்க என்பது எனக்கு தேவையில்லாத விசயம் என்று உணர்ந்துதா பவி! நன்றி மரியாதையும் தாண்டி.. ஸ்பெஷல் என்ற வார்த்தையை கேட்டு எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தை இந்த அணைப்பு உணர்த்துதா பவி! இது எல்லாத்தையும் விட.. நீ எப்படியிருந்தாலும்.. என்னால் உன்னை விட முடியாது என்பதை இந்த அணைப்பு உணர்த்துதா பவி!” என்று கூற கூற அவனது அணைப்பு இறுகிக் கொண்டே சென்றது.

 

தனது மார்பு சட்டையில் ஈரத்தை உணர்ந்ததும்.. விக்ரமின் அணைப்பு மேலும் இறுகியது. 

 

சிறிது நேரம் அப்படியே இருவரும் இருந்தனர். அவர்களும் அந்த நிலையை விரும்பினர். சிறிது நேரத்திற்கு பிறகு.. பவித்ரா மெல்ல நிமிரவும், விக்ரம் தனது அணைப்பைத் தளர்த்தினான். நிமிர்ந்த பவித்ரா தனது கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

 

அவளது கலைந்த முன்னுச்சி முடியை ஒதுக்கி விட்டு விக்ரம் அவளது தோள்கள் இரண்டையும் இறுகப் பற்றி.. “பவித்ரா! இந்த மாதிரி குன்றலை எல்லாம் விடு.. எனக்கு முழு நம்பிக்கை இருக்கு! நீ என்னை விடவும் வெறித்தனமா என்னைக் காதலிக்கப் போகிறே! நாம் இப்போ பெரிய விசயத்தில் இறங்கியிருக்கோம். கொஞ்சம் நம்மளோட வேகம் குறைந்தாலோ, தடுமாறினாலோ.. நம்மை துரத்திட்டு இருக்கிற கும்பல் நம்மை அடக்கி அமுத்திருவாங்க! நம்மளோட சுவடே இல்லாம செய்திருவாங்க! அழிந்து போன பெரிய கண்டத்தோட சுவடுகளை தேடிப் போகப் போகிறோம். சோ நம்மளோட உயிரும், மனமும், திடமும் ரொம்ப முக்கியம். அதுல கவனம் செலுத்து! ஒகே!” என்றுவிட்டு சிறு அழுத்தத்துடன் கரங்களை அகற்றினான்.

 

விக்ரம் கூறியதைக் கேட்டு.. பவித்ராவின் நெஞ்சில் நிம்மதி மட்டுமில்லாமல் திடமும் பரவுவதை உணர்ந்தாள்.

 

சிறு புன்னகையும் அவளது முகத்தில் தோன்றியது.

 

“ஒகே! நான் அந்த ரூமுக்கு போயிட்டு அபினவ்வை அனுப்பறேன். அவன் கிட்ட என்னை மேம் என்று கூப்பிட வேண்டான்னு சொல்லுங்க!” என்று தனது உடைமையைத் தூக்கப் போனவளைத் தடுத்த விக்ரம் “ஏன் அங்கே இங்கேயே படுத்துக்கோயேன்! டொன்ட் ஜெர்ரி! நான் கவுச்சில் படுத்துக்கிறேன்.” என்றான்.

 

அப்பொழுதும் பவித்ரா சிறு தயக்கத்துடன் நிற்கவும், “ஒருத்தரை ஒருத்தர் பார்த்ததுட்டு இருந்தா.. எதாவது மேஜீக் நடக்குதான்னு பார்க்கலாம்.” என்று சிரிக்கவும், பவித்ரா அதற்கு மேல் மறுக்கவில்லை‌. அங்கேயே தங்கிக் கொண்டாள்.

 

—------------------

 

அடுத்த நாள் காலையில் மூவரும் மிசிரி கடற்கரையில் நின்றிருந்தனர். பவித்ரா கூறியதைக் கேட்கும் முன் அந்த கடற்கரை எப்படித் தெரிந்திருக்குமோ என்னவோ.. தற்பொழுது.. இந்த பகுதியுடன் இணைந்திருந்த நிலப்பரப்பு அழித்துப் போனதே நினைவிற்கு வந்தது.

 

அங்கு தெரிந்த சிறு பாறைத் தீவை சுட்டிக்காட்டிய அபினவ் “அது பேரேட் ராக் தானே!” என்றான்.

 

“எஸ்..”

 

விக்ரம் “இந்தியாவுல விவேகானந்தர் பாறைக்கு இருப்பது மாதிரி இதற்கும்.. நிலப்பரப்பு இருந்ததிற்கான தொடர்பு உண்டா!” என்று கேட்டான்.

 

அதற்கு பவித்ரா “கண்டிப்பாக உண்டு. ஆனா இதோட கதை வேறாக இருக்கலாம்‌.” என்றாள்.

 

அபினவ் “என்ன சொல்ல வறீங்க பவித்ரா மே…! சொல்லுங்க பவித்ரா!” என்றான்.

 

அதற்கு விக்ரமை பார்த்து முறுவலித்துவிட்டு “அதற்கு முன்னாடி இன்னொரு விசயம் சொல்கிறேன். அக்டோபர் 2023ல் ஜப்பானில் கடலுக்கு அடியில் இருக்கிற எரிமலை வெடிச்சதுல செயின் மாதிரி இருக்கிற ஒகசவாரா தீவுகளுக்கு அருகே ஒரு புதிய தீவு உருவாகியிருக்கு! இது அந்த மாதிரி பல நூறு ஆண்டுகளுக்கு முன் உருவானதாக இருக்கலாம். இது மட்டுமில்லை. தீவுகள் என்பதே பொதுவாக.. ஒன்று இணைந்திருந்த நிலப்பரப்புடன் சுனாமி நீரலைகளால் தனியாக பிரிக்கப்பட்டதாக இருக்கும். அல்லது கடலுக்கு அடியில் இருக்கிற எரிமலை வெடித்து புவி தட்டில் அதிர்வு ஏற்பட்டு மேலே வந்த நிலப்பரப்புகளாக இருக்கலாம். ஜப்பானில் இருக்கிற தீவுகள் மட்டுமில்ல இலட்சத்தீவுகளும் அந்தமான் தீவுகளும் அப்படித்தான். ஸ்ரீலங்காவையும் இந்தியாவையும் இணைந்திருந்த நிலப்பரப்பும் சுனாமி அலைகளால் தான் காணாமல் போயிருக்கும் என்பது என்னோட கணிப்பு! இப்போ நான் சொன்னது எல்லாம்.. சையின்ஸ் மூலம் அதிகாரபூர்வமாக எல்லாராலும் ஒத்துக் கொள்ளப்பட்டவை. ஆனா குமரி கண்டம் என்று ஒன்று இருக்கிறதை மட்டும் ஏன் ஏத்துக்க மாட்டேன்கிறாங்க! அது வெறும் கற்பனை.. இதிகாசத்துல கற்பனையா எழுதியதுனு சொல்றாங்க!” என்றவளின் குரலில் வருத்தம் இருந்தது.

 

அதற்கு விக்ரம் “மனிதர்கள் தோன்றியதற்கு முன் வாழ்ந்த டைனோசர் இருப்பதையே ஒத்துக்கிட்டாங்க! பல்வேறு இதிகாங்களால் இராமர், கிருஷ்ணர், அனுமான் போன்ற கடவுள்கள் இங்கே வாழ்ந்திருக்காங்க! என்றும் முருகர் கோவிச்சுட்டு போய் அமர்ந்த மலை பழனி மலை என்பதை ஏற்றுக் கொண்ட மக்கள் இதற்கு மட்டும் ஏன் ஆதாரங்களை கேட்கிறாங்க!” என்று சிரித்தான்.

 

அபினவ் “பவித்ரா சொன்ன மாதிரி.. மெஜெரிட்டி ஆனா ஆட்கள் சொல்வது தான் வேதா வாக்கு கான்செஃப்டில் இந்த விசயங்கள் அடக்கிப்‌ போயிருது ஸார்! உலகத்தை பொருத்தவரை.. அமெரிக்காகாரன் சொல்வது தான் சரி.. முதல்ல இரஷ்யா அந்த இடத்துல இருந்தது.. இப்போ அமெரிக்கா இருக்கு! அதுக்கு காரணம் பரப்பளவில் பெரிய பகுதி என்பது தான்! இந்தியாவை பொருத்தவரை வட மாநிலங்கள்!” என்றான்.

 

பவித்ரா “எஸ்! இதைத் தான் இந்த உலகத்திற்கு உணர்த்த விரும்பினேன். உலகத்துல முதலில் தோன்றிய இனம் தமிழர் இனம் தான்! அதை நிரூபிக்க ஆதாரங்களைத் தேடித் தான் நாம் வந்திருக்கிறோம்.” என்றாள்.

 

விக்ரம் “ஆல் ரைட்! முதல்ல எங்கிருந்து ஆரம்பிக்கலாம்?” என்று கேட்டான்.

 

அதற்கு பவித்ரா எதிரே இருந்த காட்டை காட்டினாள்.

 

அபினவிற்கு புரிந்து விட.. தோளில் மாட்டியிருந்த பையில் இருந்து மூன்று கையுறைகள், மாஸ்க் மற்றும் மூன்று பாலீத்தின் பைகளை, மூன்று வேறு இடுப்பில் பையுடன் கட்ட கூடிய பெல்ட்டை எடுத்தான். 

 

அதில் ஒன்றை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த விக்ரமிடம் கொடுத்தவன்  “இந்த க்ளோவ்ஸையும் மாஸ்க் கையும் போட்டுக்கோங்க ஸார்! இந்த பிளாஸ்டிக் பேக்கும் வாங்கிக்கோங்க! அப்பறம் சின்ன கத்தி, மண் தோண்டுற கருவி, சிசர், சின்ன டார்ச் லைட், தோல் அலர்ஜீக்கு போடர ஆயின்மென்ட், சின்ன வாட்டர் பாட்டில், சின்ன நோட் புக், பென், பூதக்கண்ணாடி,  இதெல்லாம் வச்சுருக்கிற சின்ன க்ராஸ் பேக்கும் ஒண்ணு தரேன். போட்டுக்கோங்க!” என்றான்.

 

பவித்ரா “நம்ம இந்தியாவில் கிழக்கு பக்கம் இருக்கிற கடற்கரை.. பகுதிக்கு அடியில் கடல் உப்பு சேர்ந்து சேர்ந்து அரிச்சுருக்கு! அங்கே விட.. இங்கே அந்த அரிப்பு குறைவாக தான் இருக்கும்.. பார்க்கலாம். எதாவது கிடைக்குமான்னு..” என்றாள்.

 

அதற்கு சிரித்த விக்ரம் “ஸாரி டு சே திஸ் பவி! டிஸ்கேரேஜ் செய்யலை. நீங்க பல்லாயிரம் வருஷதுக்கு முன்னாடி இருப்பதாக கருதப்படும் குமரி கண்டதோட அடையாளங்களைத் தேடப் போறீங்க! அது அவ்வளவு சீக்கிரம் கிடைச்சுரும் என்று நினைச்சுட்டியா! இல்லை.. எப்படிக் கண்டுப்பிடிப்பே?” என்று கேட்டான்.

 

பவித்ரா “கஷ்டம் தான்! ரொம்ப கஷ்டம் தான்! ஆனா ட்ரை செய்து பார்க்காம விடக் கூடாது இல்லையா!” என்றாள்.

 

விக்ரம் “தட்ஸ் த ஸ்பிரிட்!” என்று முறுவலித்தான்.

 

பின் இருவரும் திரும்பிப் பார்க்கையில் அபினவ் தனது தேடுதலைத் தொடங்கியிருப்பதைக் கண்டனர். புன்னகையுடன் அவர்களும் இணைந்துக் கொண்டார்கள்.

 

பவித்ரா கூறியது போல்.. கன்னியாகுமரியில் சிம்மாசனம் போன்ற பாறை கிடைத்ததை போன்று கூட எதுவும் அவர்களுக்கு அங்கே கிடைக்கவில்லை. எல்லாம் நவீன உலகத்தின் பாலீதின் குப்பைகளாக கிடைத்தது.

 

சிறு கற்கள் சங்குகளை கூட பவித்ரா விடவில்லை. அதன் தன்மையை ஆராய்ந்தவாறு சென்றாள்.

 

அபினவிற்கும் சங்கு தான் கிடைத்தது. வடிவில் வித்தியாசமாக இருக்கவும், அதை எடுத்துப் பார்த்தவனின் கண்கள் திகைப்பில் விரிந்தன.

 

அது சாதாரண சங்கு தான்! ஆனால் மிகவும் அரிய வகையை சார்ந்தது. அவற்றை எல்லாம் விட.. அவனைத் திகைப்படைய செய்தது‌.. அதில் வரையப்பட்ட சிறு ஓவியம்! நடுவில் நீளமாக ஒரு கோடு.. அதன் மேல்.. நெளிநெளியாக கதிர்கள் போல் இருந்தன. அதன் அருகே வரையப்பட்டவைகள் சிறியதாக தான் இருந்தது. ஆனால் அழிந்திருந்தது. அபினவ் கண்கள் பளபளக்க அதைப் பத்திரமாக பையில் வைத்தான்.

 

—-------------------

சற்று தொலைவில் ஆராய்ந்தவாறு சென்று கொண்டிருந்த பவித்ராவின் கண்ணில் பாறையின் இடுக்கில் பாசிப் படர்ந்திருப்பதை பார்த்தாள். பின் தனது பார்வையை அகற்ற முயன்றவளின் பார்வை நிலைக்கொத்தி நின்றன. ஏனெனில் வால் போல் எதோ ஆடியது. பாசி நிறத்தில் உள்ள சிறு மீன் மாட்டிக் கொண்டு விட்டது என்று புரிய.. மெல்ல குனிந்து அவற்றை கையில் எடுத்துப் பார்த்தவள், அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள்.  

 

ஏனெனில் அவளது உள்ளங்கை அளவில் துடித்துக் கொண்டிருந்த மீனின் முகம் மனிதனை போல் இருந்தது. ஆனால் உடல் முழுவதும் செதில்கள் இருந்தன.  இடுப்பிற்கு கீழோ மீனை போல் வால் இருந்தது. முழுக்க முழுக்க பாசிப்படர்ந்த பச்சை வண்ணத்தில் அவளது உள்ளங்கையில் துடித்துக் கொண்டிருந்தது.

 

—---------

 

பவித்ராவும் அபினவ்வும் கடற்கரையில் ஆராய்ந்துக் கொண்டிருக்க.. ஏசி அறையில் அமர்ந்துக் கொண்டு நாட்டின் பொருளாதாரத்தை பற்றிப் பேசிப் பழகிமவனுக்கோ.. இப்படித் தேடுவது போரடித்தது. எனவே காட்டிற்குள் சென்றான்.

 

அடர்ந்த காட்டுக்குள் சென்றுக் கொண்டிருந்தவனுக்கு மிகுந்த குளிர் எடுத்தது. எனவே மார்பிற்கு குறுக்கே கரங்களைக் கட்டியவாறு சென்றுக் கொண்டிருந்தான். ஆனால் ஒரு இடத்திற்கு சென்ற பொழுது.. ஏனோ‌ உஷ்ணமாக இருந்தது. கட்டிக் கொண்டிருந்த கரங்களை நீக்கிக் கொண்டான். அப்பொழுதும் வெம்மையாக இருக்கவும், அணிந்திருந்த லெதர் ஜாக்கெட்டையும் கழற்றி விட்டான். கவனமாக நடந்துக் கொண்டிருந்தவனுக்கு ஒரிடத்தில் கால் இடறி விடவும் தடுமாறி விழுந்தான். தரையில் விழுவோம் என்று நினைத்தவனுக்கு.. உடல் தரையில் பட்டு நிற்காமல் சறுக்கி கொண்டே நீண்ட இருளுக்குள் செல்லவும் அதிர்ந்தான்.

 

ஆம் விக்ரம் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பூமி பிளவுக்குள் சறுக்கி விழுந்துவிட்டான்.


   
ReplyQuote
Page 2 / 2

You cannot copy content of this page