All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

சித்திரையில் நீ மார...
 
Notifications
Clear all

சித்திரையில் நீ மார்கழி..!! - Story Thread

Page 2 / 2
 

Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
 
 
சித்திரை – 8
 
 
வேகமாகத் தன் வீட்டில் இருந்து அலுவலகம் கிளம்பிய வர்மாவை அடுத்த ஐந்து நிமிடத்தில் இரண்டு வீதி தள்ளி இருக்கும் ஒரு வளைவில் மூன்று பக்கமிருந்தும் மூன்று கார்கள் சுற்றி வளைத்தன.
 
 
வர்மாவை எங்கும் நகர முடியாதவாறு செய்தவர்கள், விறுவிறுவெனத் தங்கள் காரிலிருந்து இறங்கி வந்து வர்மாவின் காரில் ஏறினர். ஒருவன் முன் இருக்கையிலும் மற்ற இருவர் பின் இருக்கையிலும் ஏறி அமர்ந்து கொள்ள..
 
 
பின் இருக்கையில் ஏறிய வேகத்தில் “அமைதியா நாங்க சொல்றதை கேட்டு காரை நாங்க சொல்லும் இடத்துக்கு விடு..” என்றான் விநாயக். அதில் உண்டான புன்னகையோடு “அடேய் நீ போலீஸ்.. ஏதோ கடத்தல்கரான் போலப் பேசறே..?” என்றான் வர்மா.
 
 
“ஹ்ம்ம்.. போன் போட்டா எடுக்கறது இல்லை, கூப்பிட்டா எங்கேயும் வருவதும் இல்லை.. இதில் போலீஸ் பொறுக்கின்னு விளக்கம் வேற.. ஒழுங்கா வண்டியை எடு..” எனச் சிடுசிடுத்தான் விநாயக்.
 
 
“வேலை இருக்குடா..” என அப்போதும் வர்மா கூறவும், “ஆமா ராசா நாங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாத பசங்க தான்.. சார் தான் இந்த நாட்டையே தூக்கி நிறுத்த போறார்..” என்று எரிச்சலோடு பேசினான் தர்ஷன் தேவ்.
 
 
அதைக் கண்டு திகைத்த வர்மா, “ஹேய் தர்ஷ்.. என்னடா இது இவ்வளவு கோபம்..?” எனவும், “பின்னே நீ செய்யறே வேலைக்குக் கோபப்படாம கொஞ்சுவாங்களா..?” என்றான் இறுக்கமான முகத்தோடு தர்ஷன்.
 
 
அதில் பின்னால் அமர்ந்திருந்த இருவரையும் செய்வதறியாது பார்த்தவன், மெல்ல பார்வையைத் தன் அருகில் இருத்த நிமலன் மேல் திருப்ப.. அவனோ எதிலுமே கலந்துக் கொள்ளவில்லை.
 
 
“ஏன் சார் பேச மாட்டாரோ..?” என்று பின்னால் அமர்ந்திருந்தவர்களைத் தனக்கு முன்னே இருந்தே கண்ணாடி வழியே பார்த்து கேட்டான் வர்மா. அதற்குச் சொல்லி வைத்தது போல் இருவரும் ஒரே மாதிரி எங்களுக்குத் தெரியாது என்பது போல் தோளை குலுக்கினர்.
 
 
இதில் இன்று தப்பிக்க முடியாது என்று புரிய.. ஒரு நீண்ட பெருமூச்சோடு “சரி எங்கே போகணும்..?” என்றான் வர்மா. “அதெல்லாம் சொல்றதுக்கு இல்லை.. லெப்ட் ரைட்னு நாங்க ரூட் மட்டும் தான் சொல்லுவோம்.. நீ போகணும்..” என்றான் தர்ஷன்.
 
 
“சரி..” என்று விட்டு வர்மா கரை எடுக்க.. பின்னால் இருந்த இருவரும் வெற்றி புன்னகையோடு நிமலனை பார்த்தனர். அவனும் எதிரில் இருந்த கண்ணாடி வழியே விழிகளில் புன்னகைக்க.. கார் நிமலனின் கெஸ்ட் ஹவுஸ் நோக்கி சென்றது.
 
 
அதற்காகவே காத்திருந்தது போல், அங்கு நின்றிருந்த தர்ஷன் மட்டும் நிமலனின் ஓட்டுநர்கள் குறுக்கே நின்றிருந்த மூவரின் காரையும் எடுத்து சென்றனர்.
 
 
வர்மாவின் கார் நிமலனின் கெஸ்ட்ஹவுஸிற்குள் நுழைந்து நின்றது. “இப்போ எதுக்குடா இங்கே..?” என்றான் சலிப்போடு வர்மா. “ஏன் சாருக்கு இங்கே வர அவ்வளவு சலிப்பா இருக்கோ..?” என்று தர்ஷனும், “கடைசியா இங்கே நீ எப்போ வந்தே..?” என்று விநாயக்கும் ஒரே நேரத்தில் கேட்டிருந்தனர்.
 
 
“வேலை நிறைய இருக்கு மச்சான்..” என்றான் வர்மா. இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நிமலன் பட்டெனக் காரின் கதவை மூடி விட்டு வேகமாக வீட்டிற்குள் செல்ல.. அவன் செயலை கண்டு திகைத்த வர்மா, ‘என்னடா..?’ என்பது போல் மற்ற இருவரையும் பார்த்தான்.
 
 
அவர்கள் எங்களுக்கு தெரியாது என்று தோள்களைக் குலுக்க.. நிமலன் சென்ற திசையை ஒரு நொடி பார்த்தவன், பின் தன் தலையை ஒருமுறை கோதிவிட்டுக் கொண்டு வேகமாக நிமலனின் பின்னே சென்றான்.
 
 
இதைக் கண்டு குறும்பாகப் புன்னகைத்த இருவரும், வர்மாவின் பின்னே சென்றனர். அங்குப் பால்கனியில் நிமலன் நின்றிருக்க.. வேகமாகச் சென்ற வர்மா, “என்ன மச்சான்..? ஏன் இப்படிச் செய்யறே..?” எனவும், பதிலேதும் சொல்லாமல் நின்றிருந்தான் நிமலன்.
 
 
“என்னதான்டா பிரச்சனை உனக்கு..?” என்று இப்போது கோபமாக வர்மா கேட்கவும், “அதையே தான் நான் உன்கிட்ட கேட்கறேன் என்னடா உன் பிரச்சனை..? இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்கப் போறே..? மூணு வருஷம் முடிஞ்சு போச்சு, அதிலிருந்து வெளியே வராம இருந்தா என்ன அர்த்தம்..?” என்று நிமலன் கோபமாகக் கேட்கவும், பதில் சொல்ல முடியாமல் அமைதியான வர்மா “அது.. நான்..” என்று லேசாகத் தடுமாறினான்.
 
 
“உனக்கு மட்டும் தான் கஷ்டம்னு நினைக்கறியா..? நீ இப்படி இருக்கறதை பார்த்து எங்களுக்கெல்லாம் எப்படி இருக்கும்னு ஒரு நிமிஷம் யோசிச்சு பார்த்தியா..? உன்னை நினைச்சு நாங்க எல்லாம் எவ்வளவு கஷ்டப்படறோம்னு தெரியுமா உனக்கு..? உன்னை எவ்வளவு மிஸ் செய்யறோம்னு தெரியுமா..? எங்களைப் பத்தி எல்லாம் உனக்குக் கொஞ்சமும் கவலை இல்லையில்லை, நடந்ததையே நினைச்சுட்டு வாழ போறியா என்ன..?” என்றான் நிமலன்.
 
 
“நான் அதை நினைச்சுட்டே இருக்கேன்னு உனக்குத் தோணுதா..?” என்றான் வர்மா. “எங்கே இல்லைன்னு சொல்லு பார்க்கலாம்..?” என்று விநாயக் இடையிட்டுக் கேட்டிருக்க.. உடனே பதில் சொல்ல முடியாமல் இடைவெளி விட்டவன், “அதையெல்லாம் மறந்து வெளியே வருவது அவ்வளவு ஈஸி இல்லை விநாயக்..” என்றான் வர்மா.
 
 
இதற்கு மூவரும் அவனைக் கோபமாகப் பார்க்க.. “இல்லை நீங்க நினைக்கறது போலச் சொல்லலை.. சில விஷயங்கள் கொடுக்கும் வலி அதைக் கடந்து வர முடியாது..” என்றான் வர்மா.
 
 
“கடந்து வர முடியாமல் அதுக்குள்ளேயே உட்கார்ந்து என்ன செய்யலாம்னு இருக்க மஹி..? உன் கோபம் ஆத்திரம் எல்லாம் சமீபமா உன் மனநிலையை மட்டுமில்லை உடல் நிலையையும் சேர்த்து பாதிக்குது, இதைச் சொன்னாலும் நீ புரிஞ்சுக்கப் போறதில்லை, ஆனா இப்போ அதனால் உன் மனிதாபிமானம் கூடக் காணாமல் போகுது..” என்றவன், நேற்று பாட்டி சொன்னதையெல்லாம் சொல்லி “உனக்கே தெரியும் நடந்த விஷயத்தில் அந்தப் பொண்ணு மேலே எந்தத் தப்பும் கிடையாது.. அவளும் பாதிக்கப்பட்டவள் தான், ஆனா நீ தண்டனையை அவளுக்குக் கொடுத்து இருக்க..! இது எங்க மஹி செய்யற செயல் இல்லை..” என்றான் நிமலன்.
 
 
“அவங்க குடும்ப விஷயத்தில் என்னை என்னடா செய்யச் சொல்றே..?” என்றான் வர்மா.
 
 
“நியாயமான கேள்வி..! அடுத்தவங்க வீட்டுக்குள்ளே போய் அவங்க பிரச்சனையில் நாம எதுவும் செய்ய முடியாது தான், ஆனா இதுவே எங்க பழைய மஹியா இருந்தா என்ன செஞ்சு இருப்பான் தெரியுமா..? அந்தப் பொண்ணுக்கு எந்த வகையில் உதவலாம்னு தானே முதலில் யோசித்து இருப்பான்..” என்றான் நிமலன்.
 
 
அதில் உடனே பதிலேதும் சொல்ல முடியாமல் வர்மா அமைதியாக.. அவன் மனமோ அங்குத் தன்னை நோக்கி வைக்கப்பட்ட குற்றச்சாட்டை எண்ணி பார்த்தது.
 
 
நிமலனுக்குப் பாட்டி சொன்ன கோணத்தில் இருந்து மட்டுமே இந்தப் பிரச்சனையைப் பற்றித் தெரியுமென நினைத்தவன், நிலாவைப் பற்றி மட்டுமே அவர் சொல்லி இருப்பார் என்றெண்ணினான். ஆனால் நேற்று வர்மா இருந்த நிலையை கண்டு இரவோடு இரவாக நிமலன் அனைத்தையும் விசாரித்து இருந்தான். அதனாலேயே காலையில் இந்த கடத்தல்.
 
 
இதில் வர்மா யோசனையோடு நின்றிருக்க.. “அந்தப் பொண்ணு பாட்டிக்கு அவ்வளவு உதவி செஞ்சு இருக்கு, திரும்பப் பாட்டி அந்தப் பொண்ணுக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கறாங்க.. ஆனா நீ என்ன செஞ்சுட்டு வந்து இருக்கே மஹி..?” என்றான் விநாயக்.
 
 
“இல்லை வினய் உனக்குப் புரியலை, அந்தப் பெண்ணால் எனக்குப் பிரச்சனைகள் தான், அவ எனக்கு உதவிக்கு வந்தது போலத் தெரியலை..” என்ற வர்மாவை மறுப்பாகப் பார்த்தவன், “அவ எல்லாமே திட்டம் போட்டுச் செய்யறது போல உனக்குத் தெரியுதா..?” என்றான் விநாயக்.
 
 
அதற்கு ஆமெனச் சொல்ல முடியாமல் வர்மா அமைதியாக.. “அப்பறம் என்ன மச்சான்..?” என்றான் விநாயக். “ம்ஹும்.. இது எங்க மஹி கிடையாது, ஒரு நிமிஷம் மத்த எல்லாத்தையும் மனசில் இருந்து தள்ளி வெச்சுட்டு நியாயமா யோசிச்சு பார் மச்சான், இந்த வேலை அந்தப் பொண்ணுக்கு எவ்வளவு முக்கியம்னு உனக்கே தெரியும்..
 
 
இப்படி ஒரு சூழ்நிலையில் அங்கு வாழ்ந்துட்டு இருக்க அந்தப் பொண்ணுக்கு வேலையும் போச்சுனா அவ நிலைமை என்னாகும்..? பாட்டி சொல்லும் கோணத்தில் இருந்து உனக்கு யோசிக்கப் பிடிக்கலைனா இப்படி யோசி.. ஆனா நீ என்ன செஞ்சுட்டு வந்து இருக்க..? உதவி செய்யலைனாலும் பரவாயில்லை, இப்படியா அந்தப் பொண்ணுக்கு மேலும் தொந்தரவா ஒரு காரியத்தைச் செய்வே..?” என்றான் நிமலன்.
 
 
“என்னடா இது..? ஏதோ நான் தான் தப்பு செஞ்சது போல எல்லாரும் என்னை நிற்க வெச்சுக் கேள்வி கேட்கறீங்க..?” என்றான் வர்மா. “நீ தப்பு செஞ்சுடக் கூடாதுன்னு பேசிட்டு இருக்கோம் மஹி.. எதிலும் நியாயமா இருக்க நீ இதிலும் நியாயமா இருப்பேன்னு நம்பறோம், உனக்குப் பிடிக்கலை, உனக்கு விருப்பமில்லைன்னு தவறா எந்த முடிவுக்கும் வந்து ஒரு பெண் வாழ்க்கையில் விளையாடிட வேண்டாம்..” என்றான் நிமலன்.
 
 
“மூணு வருஷமா இந்தியா பக்கமே வராம இருந்த நீ திரும்ப இங்கே வந்தியேன்னு சந்தோஷப்பட்டோம், ஆனா எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே வந்து இருக்கேன்னு இப்போ தோணுது..” என்றான் தர்ஷன்.
 
 
அதில் வர்மா அடிபட்ட பார்வை அவனைப் பார்க்க.. “வேற என்ன சொல்ல சொல்றே..? இங்கே நீ இல்லாம பாட்டி எவ்வளவு கஷ்டப்பட்டாங்கன்னு தெரியுமா உனக்கு..? எங்களுக்கு உன்னை நினைச்சு எத்தனை வருத்தமா இருந்தது..? ஆனா உனக்கு எங்க யாரை பத்தியும் கவலையில்லை இல்லை..? எப்போ வர்மா நீ உன்னைப் பத்தி மட்டுமே யோசிக்கும் சுயநலவாதியா மாறினே..? உன் கோபம், உன் கவலை, உன் வருத்தம் இது மட்டும் தான் உனக்கு முக்கியம் இல்லையா..! உன்னை நினைச்சு நாங்க கவலைப்படுவதோ வருத்தப்பவதோ உன்னை மிஸ் செய்யதோ உனக்குத் தெரியலையா..? இல்லை தெரிஞ்சுக்க நீ விரும்பலையா..?” என்றான் விநாயக்.
 
 
இதில் சோர்ந்து போய் வர்மா அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து விட.. நொடியும் தமாதிக்காது மூவரும் வந்து அவனைச் சேர்த்து அணைத்துப் பிடித்துக் கொண்டனர்.
 
 
“ஹே மஹி.. நடந்தது நடந்து போச்சு, அதை இனி நம்மால் மாற்ற முடியாது.. ஆனா நடக்கப் போறது நம் கையில் தான் இருக்கு, முடிந்ததை நினைச்சு நம்ம வாழ்க்கையை வீணாக்கிக் கூடாது..” என நிமலன் கூறவும் “அத்தனை ஈஸியா வெளியில வந்துட முடியும்னு உனக்கு தோணுதா..?” என்றான் வர்மா.
 
 
இதில் சட்டென நிமலனுக்குக் கோபம் வந்துவிட்டது. “நீ யாருன்னு உனக்குத் தெரியும், வேற யாருக்கும் உன்னை நீ நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை..” என்று அழுத்தத்தோடான குரலில் அவன் கூறவும் “நான் நிரூபிக்கணும்னு நினைக்கவே இல்லை..” என்றான் வர்மா.
 
 
“அப்புறம் என்ன பிரச்சனை..? ஏன் திரும்பத் திரும்ப அதையே யோசிக்கறே..? ஏன் எல்லா விஷயத்தில் இருந்தும் ஒதுங்கி போறே..? இதையெல்லாம் செஞ்சு உனக்கே தெரியாம உன்னைக் கஷ்டப்படுத்திப் பார்க்க நினைச்சவங்களை நீ வெற்றி அடைய செஞ்சுட்டு இருக்கே மஹி..” என்றான் விநாயக்.
 
 
யாரும் வேண்டாம் எதுவும் வேண்டாமென அனைத்திலிருந்தும் ஒதுங்கிக் கொண்டவனுக்கு விநாயக் கூறிய கோணத்தில் யோசிக்க மறந்தது தாமதமாகப் புரிய.. யோசனையாக நிமிர்ந்து அவனைப் பார்த்தான் வர்மா.
 
 
“இது உனக்கு இத்தனை நாள் புரியலையில்லை, உன்னை இப்படிப் பார்க்க தானே அவங்க ஆசைப்பட்டாங்க, இப்போ நீ இதையே தான் அவங்களுக்குச் செஞ்சுட்டு இருக்கே.. அப்போ அவங்களை நீயே வெற்றி அடைய செஞ்சுட்டு இருக்கேன்னு தானே அர்த்தம்..?” என்றவன் சிறு இடைவெளி விட்டு “பிசினஸில் மட்டும் அடிச்சு வீழ்த்தினா போதாது மஹி.. நம் வாழ்க்கையிலும் அதைச் செஞ்சு காட்டணும்..” என்றான் தர்ஷன்.
 
 
“என்ன செஞ்சா நீ உடைஞ்சு போவே.. திரும்ப எழுந்தே வர மாட்டேன்னு தெரிஞ்சே திட்டமிட்டு அவங்க செஞ்சதோட வலி ரொம்பப் பெருசா தான் இருக்கு.. ஆனா அவங்களுக்கு அதைச் சிந்தாம சிதறாம நாம திரும்பத் தர வேண்டாம்..” என்றான் தர்ஷன்.
 
 
“அவங்களைப் போல என்னையும் தரம் தாழ்ந்து போகச் சொல்றியா..?” என்றான் வர்மா. “நிச்சயமா இல்லை.. என்ன செஞ்சு உன்னை உடைச்சுட்டதா நினைச்சு சந்தோஷப்பட்டுட்டு இருக்காங்களோ அது அப்படி இல்லைன்னு அவங்களுக்குப் புரிய வை.. நீங்க எதிர்பார்த்தது போல நான் உடைந்து போகலைடா என் பொட்டேட்டோன்னு காட்டு.. இன்னும் நிமிர்வா வாழ்ந்துட்டு தான் இருக்கேன்னு அவங்களுக்கு நிரூபி..” என்ற தர்ஷனை வியப்பாகப் பார்த்தவன், “இவன் என்னடா இப்படிப் பொறுப்பா எல்லாம் பேசறான்..?” என்றான் ஆச்சர்யமாக வர்மா.
 
 
“ஹாஹா.. பையனுக்குப் பொறுப்பு வந்துடுச்சு மச்சான்..” என்றான் விநாயக். “இது எப்போ..?” என வர்மா வியப்பாக தர்ஷனை பார்க்கவும், “ஹாங் போன வருஷம்.. மாசம் தேதி எல்லாம் கூட வேணும்னா சொல்லு தரேன்..? இங்கே என்னைப் பத்தி பேச வரலை.. உன்னைப் பத்தி பேச டெம்போ எல்லாம் வெச்சு கடத்தி இருக்கோம்.. முதலில் அதைப் பேசி முடி.. என்னைப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா என் வீட்டுக்கு வா.. வழக்கம் போல் உங்களுக்காக எப்போவும் அது திறந்தே இருக்கும்.. இப்போ டாபிக்கை மாத்தாதே..” என்றான் எரிச்சலோடு தர்ஷன்.
 
 
“சரி இப்போ என்ன செய்யச் சொல்றே..?” என்று அமைதியாகவே வர்மா கேட்கவும், “நம்மைத் தொட்டவங்களை அப்படியே விட்டுடலாமா..?” என்றான் விநாயக்.
 
 
“நான் அப்படி விடலையே..” என்ற வர்மாவை மறுப்பாகப் பார்த்தவன், “அவங்க நினைச்ச எதுவும் நடக்கக் கூடாது..” என்றான் தர்ஷன். “நானும் அதைத் தானே செஞ்சுட்டு இருக்கேன்..! எந்தக் கான்ட்ராக்ட்டுக்காகவும் டெண்டருக்காகவும் இதெல்லாம் நடந்ததோ அது இனியும் அவங்க கைக்கு எப்போவும் போகாது..” என்றான் உறுதியான குரலில் வர்மா.
 
 
“அது மட்டும் அவங்களுக்கான அடியில்லை..” என்று அழுத்தத்தோடு ஒலித்தது நிமலனின் குரல்.
 
 
******
 
 
பெரும் தயக்கத்தோடு அலுவலகத்திற்குள் நுழைந்தாள் நிலா. ‘பாட்டி நேற்றைய பிரச்சனையைப் பற்றிப் பேச அழைத்து இருப்பாரோ..?’ என எண்ணியவளுக்கு, என்ன சொல்லியும் இதை நியாயப்படுத்த முடியாது எனத் தெளிவாகப் புரிந்தது.
 
 
தனக்கு உதவி செய்ய வந்து வர்மா அவமானப்பட்டு நின்றதை எதைச் செய்தும் சரி செய்து விட முடியாது என நினைத்தவள், உமாவின் மூலம் நேற்று மாலையில் இருந்து நடந்த அனைத்தையும் கேட்டு தெரிந்துக் கொண்டிருந்தாள்.
 
 
சரியான நேரத்திற்கு அவர் மட்டும் வந்து என்னைக் காப்பாற்றலைனா இன்னைக்கு என் நிலைமை என்னவாகி இருக்குமென எண்ணும் போதே மனமும் உடலும் சேர்ந்து பதறியது.
 
 
உதவி செய்தவருக்கு நன்றி சொல்லாததோடு அவமானம் செய்து அனுப்பியதை எல்லாம் எந்த வகையிலும் சரி செய்ய முடியாது என்று புரிய.. மெதுவாக நடந்து கொண்டிருந்தவளின் கவனத்தை அங்கே பேசிக் கொண்டிருந்தவர்களின் குரல் கலைத்தது.
 
 
கேப்படேரியாவில் இருவர் நின்று பேசிக் கொண்டிருக்க.. அதில் இவளின் பெயர் அடிபடுவதைக் கண்டு அப்படியே நின்றாள் நிலா.
 
 
“விஷயம் தெரியுமா அந்தப் புதுசா வந்த பொண்ணு ஸ்டோர் ரூமில் நேத்து லாக் ஆகிட்டாளாம்..” என்று வினோத் கூறவும், “அச்சச்சோ அப்படியா அப்பறம் என்னாச்சு..?” என்றான் சுரேஷ்.
 
 
அதன் பின் நடந்ததை எல்லாம் சுருக்கமாக வினோத் விவரிக்க.. “இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்..?” என்றான் சுரேஷ்.
 
 
“காலையில் வாட்ச்மேன் சொல்லித் தான் எல்லாருக்கும் தெரியும்.. ரொம்ப டென்ஷனா இருந்தார், பயந்துட்டாராம்..” என்றான் வினோத். “நல்ல வேலை சார் வந்துட்டார்..” என்றான் நிம்மதி பெரும் மூச்சோடு சுரேஷ்.
 
 
“அந்தப் பொண்ணைப் பார்த்தா அவ்வளவு க்வாலிபையா கூடத் தெரியலை.. ஆனா இவ்வளவு பெரிய வேலை.. சார் ரூமிலேயே டெஸ்க்..” என இழுத்தப்படி அங்கே வந்து நின்றான் நவீன்.
 
 
“உங்களுக்கெல்லாம் காலையில் வேற வேலை எதுவுமில்லையா.. இதுக்குத் தான் உங்களுக்கு இங்கே சம்பளமா..?” என்ற அதிகாரக் குரல் மற்றொரு பக்கம் இருந்து ஒலிக்க.. அனைவரின் கவனமும் அங்குச் சென்றது.
 
 
அங்கு இந்த வயதிலும் அலுவலகத்திற்கான நடை உடை பாவனையோடு மிடுக்கோடு- நின்றிருந்தார் சரோஜாதேவி. திடீரென அவரை இங்கே கண்டதில் உண்டான பதட்டத்தோடு “மேம்.. குட்.. மார்னிங்.. சாரி..” என்று அவர்கள் உளறலாகப் பேசவும், அவர்களை இங்கிருந்து ‘போ’ என்பது போல விரல் அசைத்தவர், தன் பார்வையைத் திருப்ப.. அங்கு நிலா நின்றிருப்பது தெரிந்தது.
 
 
“நீ எப்போ வந்தே..? உன்னை என் ரூமுக்கு வந்து தானே பார்க்க சொன்னேன்..” என்றவர், “என் கூடவா..” என்று விட்டு முன்னே செல்ல.. அவரின் இந்த அதிகார குரலிலும் கடுமையான முகப் பாவத்திலும் பயந்து போனாள் நிலா.
 
 
அவரின் கோபத்தில் கொஞ்சமும் தவறில்லை என அவளுக்கே தெளிவாகப் புரிந்தது. ஆனாலும் உதவி செய்தவர்களுக்கு இப்படி அவப்பெயர் ஏற்படக் காரணமாகி போன குற்றஉணர்வு நிலாவை கொல்லாமல் கொன்று கொண்டிருந்தது.
 
 
இந்த வேலையை வைத்து அவள் எத்தனையோ திட்டங்கள் போட்டிருக்க.. அதெல்லாம் இனி கனவாகி போகும் என நிலாவுக்குமே புரிந்தது. ஆனாலும் என்ன சொல்லியும் திரும்ப வேலை கேட்க முடியாது எனப் புரிந்து, குறைந்தபட்சம் மன்னிப்பாவது கிடைக்கும் என்று நம்பி வந்திருந்தவளுக்கு அதுவும் இனி வாய்ப்பில்லை எனப் புரிய விழிகள் கலங்கியது.
 
 
அதில் கண்ணீரைத் துடைத்தவாறு மின் தூக்கியினுள் நுழைந்தவளை திரும்பி பார்த்தவர், எதுவும் பேசாமல் அமைதியாக.. நான்காம் தளத்திற்குச் சென்றார்.
 
 
தன் அறைக்குள் நுழையும் வரை நிலாவிடம் சரோஜா ஒரு வார்த்தையும் பேசியிருக்கவில்லை. அங்கிருந்த இருக்கையில் சென்று அமர்ந்தவர் அவள் முன் தண்ணீரை நகர்த்தி “ஹ்ம்ம் குடி..” என்றார்.
 
 
“இல்லை.. வேண்டாம்..” என்று நிலா அழுகையோடான குரலில் கூறவும், “நீ அழுவதை வேடிக்கை பார்க்க நான் உன்னை இங்கே கூப்பிடலை.. முதலில் இதைக் குடி..” என்று அதிகாரமாகவே அப்போதும் அவர் கூறவும் நிலாவுக்குக் கண்ணீர் கட்டுப்பாடின்றி வந்தது.
 
 
‘அன்று தன்னிடம் அத்தனை அன்போடு பேசியவரை இந்த அளவிற்குக் கோவப்பட வைத்து விட்டோமே..!’ என்ற எண்ணத்தோடு நீரையும் மறுத்து அதிலும் அவர் கோபமாகி விடக் கூடாதே என்றே வேகமாக அதை எடுத்துக் குடித்தாள் நிலா.
 
 
“உட்கார்..” என்றவரின் பார்வை அவளின் கன்னத்தில் இருந்த விரல் தடத்தில் பதிய.. முகமும் விழிகளும் அழுது சிவந்து வீங்கி இருப்பது தெளிவாகப் புரிந்தது.
 
 
“என்னாச்சு..?” என்று சரோஜாதேவி அவளையே கூர்மையாகப் பார்த்தபடி கேட்கவும், அதுவரை கூடக் கட்டுப்படுத்த முயன்று கொண்டிருந்தவள் அதன் பின் முடியவே முடியாது என்பது போலக் கதறி விட்டாள்.
 
 
ஐந்து நிமிடங்கள் அவள் அழுது முடிக்க நேரம் கொடுத்து காத்திருந்தவர், டிஷ்யூவை அவள் பக்கம் நகர்த்தி விட்டு “ம்ம், இப்போ சொல்லு என்னாச்சு..?” என்றார் பாட்டி.
 
 
“பாட்டி மேடம்.. சாரி, சாரி.. என் தப்பு தான்.. நான் தான் சரியில்லை.. நான் செஞ்சது ரொம்பப் பெரிய தப்பு.. ஆனா..” என்று அதற்கு மேல் பேச முடியாமல் நிலா திணறவும் “தவறு எல்லாருமே செய்வாங்க நிலா, நம்மை அறியாம நடக்கும் தவறுக்கு நாம காரணமாக முடியாது..
 
 
நீ அந்த அறைக்குள்ளே வேணும்னே போய் உட்காரலையே இது எதிர்பார்க்காமல் நடந்த ஒரு பிரச்சனை, அது முடிஞ்சு போச்சு.. அதுக்காக இவ்வளவு வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை..” என்றார் சரோஜா.
 
 
அதில் சிறு திகைப்போடு அவரைப் பார்த்தவள் “இல்லை.. நான்.. அது..” என்று ஆரம்பித்து எப்படிச் செல்வது எனப் புரியாமல் திணறவும், “என்ன மஹி ரொம்பத் திட்டிட்டானா..?” என்றார் பாட்டி.
 
 
“இல்லையில்லை.. சார் என்னை எதுவும் சொல்லலை..” என்று உடனே மறுப்பாகப் பதறிக் கொண்டே அவள் கூறவும் “அப்புறம் என்ன..? வேலை போச்சுன்னு வருத்தமா..?” என்றார் பாட்டி.
 
 
அதுவும் தான் அவளின் மனதை வருத்திக் கொண்டிருந்தாலும், அதைவிட அதிகமாக வலிக்கச் செய்வது வர்மாவுக்குத் தன் வீட்டில் நடந்த விஷயங்கள் தான் என்பதால் உடனே பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள் நிலா.
 
 
இதிலேயே வேறு ஏதோ பெரிதாக இருப்பதை அவரின் அனுபவம் பாட்டிக்கு உணர்த்த.. “என்னாச்சு நிலா..? எதுவா இருந்தாலும் சொல்லு..” என்றார்.
 
 
“அது.. அது வந்து..” எனத் தொடங்கி, எப்படியும் மறைக்க முடியாது சொல்லி தானே ஆக வேண்டுமெனப் புரிந்து, அனைத்தையும் ஒரே மூச்சில் வேகமாக நிலா சொல்லி முடிக்கவும், அப்படி ஒரு அமைதி அங்கு நிலவியது.
 
 
சட்டென அவளிடம் எதுவும் பேசாமல் பாட்டி திகைப்போடு பார்த்திருக்க.. “தப்பு தான் பா.. பாட்டி.. மே.. மேடம்.. நா.. நான் அப்.. அப்போ.. மயக்கத்தில் இருந்தேன்..” என்று தன் மனதில் இருப்பதைச் சரியான வார்த்தைகளில் கொண்டு வர முடியாமல் திணறினாள் நிலா.
 
 
இப்படி ஒரு சூழ்நிலையில் சிக்கி, தன் வீட்டுப் பெண் எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் நல்லபடியாக வீடு வந்து சேர்ந்திருக்கும் நிலையில், இத்தனை பிரச்சனை செய்திருப்பவர்களை எந்த வகையில் சேர்ப்பது எனப் புரியாமல் பாட்டி அமர்ந்திருக்க.. அவரின் பார்வையைத் தவறாகப் புரிந்து கொண்டவள், “தப்பு தான்.. ரொம்பப் பெரிய தப்பு தான்.. பாட்டி மேடம் நான் உங்க காலில் விழுந்து கூட மன்னிப்பு கேட்டுக்கறேன்.. என்னை மன்னிச்சிடுங்க.. நீங்க எனக்குச் செஞ்சது எவ்வளவு பெரிய உதவின்னு உங்களுக்குத் தெரியாது.. ஆனா அதுக்குப் பதிலா நான்.. உங்களுக்குச் செஞ்சு இருக்கறது வாழ்க்கைக்கும் மன்னிக்க முடியாத ஒண்ணு..
 
 
ஆனாலும் எனக்கு மன்னிப்பை தவிர, வேற என்ன சொல்லன்னு தெரியலை.. தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க..” என்று கையெடுத்து கும்பிட்டவளின் கையைப் பிடித்துக் கீழே இறக்கியவர் “இதில் உன் தப்பு என்ன இருக்கு..?” என்றார் பாட்டி.
 
 
இப்படி ஒரு வார்த்தையை அவரிடமிருந்து எதிர்பாராதவள் சிறு திகைப்போடு பாட்டியை பார்த்திருக்க.. “பேசினது நீயா இருந்தா பரவாயில்லை.. உன்னைச் சுத்தி இருக்கறவங்க பேசினதுக்கு நீ எப்படிப் பொறுப்பாக முடியும்..?” என்றவர், “நடந்தது தப்பு தான்.. அதை நான் சரின்னு சொல்லவே மாட்டேன், ஆனா இதுக்கும் உனக்கு எந்த சம்பந்தமும் இல்லை.. இதை நான் வேற வகையில் பார்த்துக்கறேன்.. இப்போ அதைப் பத்தி நாம பேச வேண்டாம், நான் உன்னை இங்கே கூப்பிட்டது வேற விஷயமா..” என்று பாட்டி தொடங்கவும், வர்மா அந்த அறையின் கதவை திறந்து கொண்டு உள்ளே வரவும் சரியாக இருந்தது.
 
 
அப்போதே அலுவலகத்திற்குள் நுழைந்தவன், இன்று பாலுவும் விடுமுறை நிலாவும் வேலையில் இல்லை என்பதால் ப்ராஜெக்ட் ஹெட்டை தன்னை வந்து சந்திக்குமாறு கூறி விட்டு மின் தூக்கியை நோக்கி செல்ல.. அதே நேரம் பாட்டி அலுவலகம் வந்திருக்கும் தகவல் அவனுக்குச் சொல்லப்பட்டது.
 
 
அதைக் கேட்டு ஆச்சரியமானவன், சமீபமாக அலுவலகத்திற்கு வராதவர் இன்று வந்திருப்பதற்கான காரணம் என்னவெனப் புரிய.. வேகமாக அவரைச் சந்திக்கச் சென்றான் வர்மா.
 
 
திடீரென அறைக்குள் வர்மா நுழையவும் உண்டான பதட்டத்தோடு நிலா தன் கையில் இருந்த பையைத் தவறவிட்டவாறே எழுந்து நிற்க.. அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் “என்ன விஷயம் பாட்டி..? இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க..” என்றான் அக்கறையான குரலில் வர்மா.
 
 
காலையில் அவன் பேசி சென்ற விதத்திற்கும் இப்போது பேசுவதற்கும் உள்ள வித்தியாசம் புரிய.. அவ்வளவு சீக்கிரம் கிளம்பியும், இவ்வளவு நேரம் அவன் அலுவலகத்திற்கும் வந்திருக்கவில்லை என்பதை அறிந்தே இருந்தவர் “நிலா விஷயமா பேச வந்தேன் மஹி..” என்றார் பாட்டி.
 
 
அதில் தன் பார்வையை அவன் பக்கம் திரும்பிய வர்மா, அப்போதே நிலாவின் கன்னத்தில் பதிந்திருந்த விரல் தடத்தைக் கவனித்தான். வார்த்தைகளால் வலிக்கச் செய்தது போதாது என அவர்கள் கை நீட்டியும் இருப்பது அவனுக்குப் புரிய.. “நீங்க அப்புறமா பேசுங்க.. எனக்கு ஒரு அவசர வேலை இருக்கு, அதை நான் உடனே முடிச்சாகணும்..” என்று பாட்டியிடம் கூறியவன், நிலாவை திரும்பிப் பார்த்து “ஆர்ஆர் பிராஜெக்ட் சம்பந்தமான டீடெயில்ஸ் எடுத்துட்டு உடனே ரூமுக்கு வா..” என்று விட்டு வேகமாக அங்கிருந்து நகர.. புரியாத குழப்பத்தோடு வர்மா சென்ற திசையையே அப்படியே பார்த்தபடி என்றிருந்தாள் நிலா.
 
 
அவளின் நிலைப் புரிய.. “ஹ்ம்ம், என்ன நிற்கறே போ, கூப்பிடறான் இல்லை..” என்றார் பாட்டி. அதில் வேகமான ஒரு தலையசைப்போடு அவன் பின்னே சென்றாள் நிலா.
 

தொடரும்...

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

 

 
This post was modified 4 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்..
 
 
CNM - 8
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
This post was modified 3 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
 
 
 
சித்திரை – 9
 
அதன் பின் பெரிதாக எந்த மாற்றமும் இல்லாமல் நிலாவின் நாட்கள் சென்றது. இது அலுவலகத்தில் மட்டுமே..!
 
 
வீட்டில் அதே போல் ஏச்சும் பேச்சும் தொடர்ந்து கொண்டிருக்க.. இப்போது சமீபமாக எதற்கெடுத்தாலும் நிலாவை கை நீட்டும் பழக்கமும் சேகரிடம் வந்திருந்தது.
 
 
இதற்கு முழுக்க ராணியே காரணம். அவள் வேலைக்குச் செல்ல தொடங்கி இருப்பதால் திமிர் அதிகமாகி விட்டதாகவும், இப்படியே விட்டால் அவர்களை மதிக்காமல் வீட்டில் ஒரு வேலையும் செய்யாமல் சுற்ற தொடங்கி விடுவாள் என்றும் பணம் வந்துவிட்டதென அவள் ஆடாமல் இருக்க.. நிலா தங்கள் கைக்குள் இருக்க வேண்டுமெனவும் சொல்லி சொல்லியே சேகர் இப்படி நடந்து கொண்டிருந்தார்.
 
 
வழக்கம் போல் இதையெல்லாம் பார்த்து மௌனமாக அழ மட்டுமே உமாவால் முடிந்தது. மகளுக்கு ஆறுதல் சொல்ல முயல்பவரை அவள் பார்க்கும் ஒரு வெற்று பார்வைக் கொல்லாமல் கொல்லும்.
 
 
ஆனால் துணிந்து ஒரு முடிவெடுக்க முடியா நிலையில் தன்னை வைத்திருக்கும் வாழ்க்கையை என்ன சொல்வது என்பது போல் அவர் வழக்கம் போல் மௌனமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.
 
 
ஆனால் என்ன தான் வீட்டில் பிரச்சனைகள் நடந்தாலும் அதையெல்லாம் மறைத்து ஒட்ட வைத்த ஒரு புன்னகையோடு அலவலகம் வந்து தன் வேலைகளை முடிந்தவரை எந்தக் குறையும் இல்லாமல் செய்ய முயன்றுக் கொண்டிருந்தாள் நிலா.
 
 
அவளின் முயற்சி பாலுவுக்கு மட்டுமில்ல வ்ர்மாவுக்குமே புரிந்து தான் இருந்தது. ஆனால் அதை இருவருமே கண்டு கொண்டது போல் காண்பித்துக் கொள்ளவில்லை.
 
 
அதே நேரம் நிலாவின் மதிய உணவு பாலுவின் மூலம் இங்குள்ள ஊழியர்கள் சாப்பிட ஏற்பாடாகி இருந்த கேஃப்டேரியாவிற்கு மாறி இருந்தது.
 
 
அன்று ராஜுவின் மூலம் கேள்விப்பட்ட விஷயங்களிலேயே நிலாவின் நிலை புரிந்து வருத்தமானான் பாலு. வேலைக்கு வந்த புதிதில் எல்லாம் அவள் பேசியதை எண்ணி பார்த்தவனுக்கு மனம் கணத்தது.
 
 
அதேநேரம் இதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலை இல்லாமல் விதவிதமாகக் கிடைக்கும் உணவை, கேஃப்டேரியாவில் அமர்ந்து ஒரு கை பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.
 
 
இங்கு வழக்கமாக ஊழியர்களுக்கு உணவு கொடுத்துக் கொண்டிருந்தாலும் ஒரு சிலர் உடல்நிலை காரணமாகாவோ, டயட் காரணாமாகவோ வீட்டில் இருந்து கொண்டு வந்து உண்பர். அதில் யாரையும் இங்குக் கட்டாயப்படுத்துவதில்லை.
 
 
தேவையானவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற வழக்கம் இருந்தது. நிலாவுக்கு ஆரம்பத்தில் இதைப் பற்றி எதுவும் தெரியாது. அதனாலேயே வீட்டில் இருந்து கொண்டு வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இப்போது பாலுவின் மூலம் இந்த விஷயம் தெரிந்ததும் அவளுள் அப்படி ஒரு மகிழ்ச்சி.
 
 
நல்ல உணவு என்பதே அவள் வாழ்வில் கிடையாது. வீட்டில் விதவிதமாகச் சமைத்தாலும், அதிலும் இவளே அதையெல்லாம் செய்தாலும், எதையும் சாப்பிடும் உரிமை நிலாவுக்கோ அவளின் அன்னைக்கோ கிடையாது.
 
 
ராணி கொடுக்கும் நேற்றைய பழைய உணவை தான் இவர்கள் சாப்பிட வேண்டும். காலை உணவென்பதே இவர்கள் இருவருக்கும் கிடையாது. பால் இல்லா பிளாக் டீ மட்டுமே குடித்துக் கொள்ள அனுமதி உண்டு.
 
 
இப்போது அந்த வீட்டில் அவர்களின் நிலை என்னவெனப் புரிந்து இருந்தாலும், சிறு வயதில் அதையெல்லாம் புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லாமல் உணவை கண்டு ஆசைப்பட்டுக் கையேந்தி நின்று இருக்கிறாள் நிலா.
 
 
அப்போதெல்லாம் உமா தான் சமைப்பார் என்பதால் “ம்மா எனக்கும் பூரி வேணும்..” என்று சென்று நிற்கும் குழந்தைக்கு என்ன சொல்வதெனத் தெரியாமல் கலங்கி நிற்பார் உமா.
 
 
ஏனெனில் இவர்களைக் கண்காணிக்கவே அப்போதெல்லாம் ராணியின் அன்னை ரமணி சமையல் அறை முன்பு தன் கயிற்று கட்டிலை போட்டு படுத்திருப்பார். குழந்தை ஆசைப்படுதே என ஒருமுறைச் சின்னதாக ஒரு பூரியை எடுத்து கொடுத்து விட்டு அன்று முழுக்க ராணியிடமும் ரமணியிடமும் அவர் வாங்கிய ஏச்சுக்களை அவரால் காலத்துக்கும் மறக்க முடியாது.
 
 
அதோடு அன்று மாலை சேகரிடமும் இந்தச் செய்தி சொல்லப்பட.. “என்ன உமா இது திருடி சாப்பிடறது எல்லாம் என்ன பழக்கம்..? வீட்டுக்குள்ளேயே இப்படிச் செஞ்சா உன்னை எப்படி நம்பி வீட்டில் வெச்சு இருக்கறது..? இன்னைக்கு இதைத் திருடின நீ, நாளைக்கு எதைத் திருடுவேன்னு எல்லாம் பார்த்துட்டே இருக்க முடியாது.. உனக்கே நல்லா தெரியும் ராணிக்கு நீயும் உன் பொண்ணும் எங்க கூட இருக்கறது கொஞ்சமும் விருப்பமில்லை.. நான் தான் பேசி சம்மதிக்க வெச்சு இருக்கேன்.. அதையும் கெடுத்துக்காதே.. அது என்ன வாயை கட்ட தெரியாம இருக்கறது..? ஒழுங்கா இருக்க முடிஞ்சா இரு.. இல்லைனா நான் எதுவும் செய்ய முடியாது..?” என்றிருந்தார் கறார் குரலில் சேகர்.
 
 
முன்பே இங்கு அவர்களை நடத்திக் கொண்டிருக்கும் விதத்தில் பேசா மடந்தையாகி போய் இருந்த உமா, அன்றைய சேகரின் பேச்சுக்குப் பின் முற்றிலும் தனக்குள் சுருண்டு கொண்டார்.
 
 
தன் உடன் பிறந்தவனே திருடியதாகக் கூறிய வார்த்தைகள் அவரைப் பெரிதும் மனதளவில் பாதித்து இருந்தது. மற்ற இருவரும் எவ்வளவு பேசினாலும் அதை ஒரளவு மனதளவில் தள்ளி வைக்கப் பழகி விட்டிருந்த உமாவுக்கு சேகரின் வார்த்தைகளை அப்படி ஒதுக்கி தள்ள முடியவில்லை.
 
 
அதில் தன் மகளிடம் அதிகப்படியாகக் கட்டுப்பாடுகளை உமா கடைப்பிடிக்க.. குழந்தையான நிலாவுக்கோ இதையெல்லாம் புரிந்து கொள்ளும் வயதோ பக்குவமோ துளியும் இல்லை.
 
 
அதில் தான் இப்போதும் மீண்டும் சென்று உமாவிடம் பூரி கேட்டு நின்றாள் நிலா. அதில் மகளிடம் எந்த விளக்கமும் கொடுக்க விரும்பாதவர், “எத்தனை முறை சொல்றது நிலா இது நாம சாப்பிட கூடாது..” என்று கண்டிக்கவும், “ஏன் ம்மா..? எல்லாரும் சாப்பிடறாங்க.. நாம ஏன் சாப்பிடக் கூடாது..?” எனச் சிணுங்கினாள் நிலா.
 
 
அதற்கு உமா பதில் சொல்வதற்கு முன் “நாங்களும் நீங்களும் ஒண்ணா..? கேட்கறா பார் கேள்வியை இந்த வயசிலேயே..! அப்படி என்ன குடல் அலையுது ஓசியில் திண்ணு உடம்பை வளர்க்க..” என்று வசைப்பாடினார் ரமணி.
 
 
இதில் மனம் வாடிய உமா, மேலும் நிலா இதையே பேசி அவரும் இப்படியே ஏதாவது சொல்லிக் கொண்டு இருப்பவதை விட.. மகளை இங்கிருந்து அப்புறப்படுத்துவதே சரியென உணர்ந்து, “ஒருமுறை சொன்னா உனக்குப் புரியாதா நிலா..? நாம இதைச் சாப்பிடக் கூடாது அவ்வளவு தான்.. இங்கே நின்னு கேள்வி கேட்காம முதலில் இங்கே இருந்து போ..” என்று அதட்டினார்.
 
 
அதில் எப்போதும் அதட்டாத தன் அன்னையின் இந்தக் கோபம் கண்டு மிரண்டு அங்கிருந்து நகர்ந்திருந்தாள் நிலா. அவளுக்கு அப்போதும் அழுகை தான் வந்தது. ஆனால் உமாவின் இந்த அதட்டலுக்கான காரணம் புரியவில்லை.
 
 
இதில் அழுது கொண்டே ஒரமாகப் படுத்திருந்தவள், அப்படியே உறங்கிப் போனாள். ஆனால் அன்று உமாவால் புரிய வைக்க முடியாத ஒன்றை சேகரும் அவரின் மகன் வெங்கட்டும் எளிதாகத் தங்கள் ஒரே செயலில் நிலாவுக்கு புரிய வைத்து விட்டிருந்தனர்.
 
 
**********
 
 
அன்று காலையிலேயே வர்மாவை பார்க்க வந்திருந்தாள் அபரஞ்சி. அப்போதே அலைபேசியில் பேசியப்படியே அலுவலகம் செல்ல கீழே இறங்கி வந்து கொண்டிருந்த வர்மா, அவளைக் கண்டு முகம் மலர, “ஹே அபி.. வா வா..” என்று அழைத்தான்.
 
 
“அடேயப்பா.. சாருக்கு என் பெயர் எல்லாம் ஞாபகம் இருக்கு போலவே..! அதிலும் சிரிக்கறீங்க..! சிரிக்கக் கூடத் தெரியுமா சார் உங்களுக்கு..?” என்று நக்கல் செய்தவாறே உள்ளே வந்தவளை பார்த்து “என்ன அபி..?” என்று வர்மா தொடங்கவும், “நொண்ண அபி..” என்றாள் எரிச்சலோடு அபி.
 
 
அதற்குள் இந்தப் பேச்சு குரல் கேட்டு சமையல் அறையில் இருந்து வெளியே வந்திருந்த பாட்டி, “அபிம்மா.. எப்போடா இங்கே வந்தே..? எப்படி இருக்கே..?” என்று அன்போடு விசாரிக்க.. “நான் சூப்பரா இருக்கேன் பாட்டி.. நீங்க எப்படி இருக்கீங்க..? அதுவும் இப்படி ஒரு மியூசியம் பீஸை எல்லாம் வீட்டில் வெச்சுட்டு எப்படிச் சமாளிக்கறீங்க..?” என்றாள் அபி.
 
 
அதில் சிரித்து விட்ட சரோஜா, “சாப்பிட வாடா கண்ணா..” என அவளின் கை பிடித்து உணவு மேஜையை நோக்கி அழைத்துச் செல்ல.. இருவரையும் முறைத்துக் கொண்டே பின்னே சென்றான் வர்மா.
 
 
அவளின் எதிரில் அமர்ந்தவன், இங்கே ஒருவன் இருப்பதையே மறந்து அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு, “நீ இங்கே என்னைப் பார்க்க வந்தியா..? இல்லை பாட்டியையா..?” என்றான் கடுப்போடு வர்மா.
 
 
“கண்டிப்பா உன்னைப் பார்க்க இல்லை, அப்போ என் பதில் என்னன்னு நீயே யோசிச்சுக்கோ..” என்றவள், “வாவ்.. இந்தப் பூரியும் சிக்கன் கிரேவியும் சும்மா கிழி கிழி.. வேற லெவல் பாட்டி நீங்க..” என்றவாறே பாட்டியின் சமையலை ருசித்துச் சாப்பிட.. “இன்னும் இரண்டு வெச்சுக்கோடா கண்ணா.. நல்லா சாப்பிடு, பார் எப்படி இளைச்சு போய் இருக்கே..” என்றார் பாட்டி.
 
 
“யாரு இவ இளைச்சு இருக்காளா..? நாளைக்கு உங்களுக்கு ஐ செக்கப் செய்ய அப்பாயின்மென்ட் போடறேன்.. ஒரு டாக்டர் போலவா சாப்பிடறே நீ..? காலையில் இத்தனை ஐட்டம் அதுவும் ஆயில் ஃபுட் வெச்சு சாப்பிட்டுட்டு இருக்கே..!” என்றான் வர்மா.
 
 
“ஏன் டாக்டர் இப்படித் தான் சாப்பிடணும்னு எதுவும் ரூல் இருக்கா என்ன..? நான் இப்படித் தான் சாப்பிடுவேன், அப்பறம் நாளைக்கு அப்படியே உனக்கும் ஒரு நியூரோ ஸ்பெஷலிஸ்ட்கிட்ட ஒரு அப்பாயின்மென்ட் போட்டுக்கோ..” என்றாள் அபி.
 
 
“ஏன் எனக்கு என்ன..?” என்று கோபமாகக் கேட்டவனை, அலட்சியமாகப் பார்த்தவள், “இல்லை வெளிநாட்டில் இருந்த மூணு வருஷத்தில் தலையில் எதுவும் அடிப்பட்டுப் பழசை மறந்துட்டியோன்னு செக் செய்யத் தான்..” என்றாள் அபி.
 
 
“அப்படி எதைடி மறந்தேன் நான்..?” என வர்மா கோபமாகத் தொடங்கவும், “இதோ முழுசா உன் முன்னே உட்கார்ந்து இருக்க என்னைத் தான்..” என்றாள் அபி.
 
 
“நான் சொன்னேனா அப்படி..?” என்றவனைக் கேலியாகப் பார்த்தவள், “ஆமாமா.. சார் தான் தினமும் நாலு கால், வாரத்துக்கு இரண்டு மீட் அப், மாசத்துக்கு ஒரு கெட் டூ கேதர்னு என்னை மறக்கமா இருக்கீங்களே..! நான் தான் மறந்துட்டேன்..” என்றாள் அபி.
 
 
அதில் “அபி..” என்று தவறு செய்து விட்ட பாவனையில் நெற்றியை நீவியவாறே அழைத்தான் வர்மா. ஆனால் அவனைக் கண்டு கொள்ளாமல் “பாட்டி எனக்கு முறுகலா இரண்டு தோசை..” எனக் குரல் கொடுத்தாள் அபி.
 
 
“நீ கேட்பேன்னு எனக்குத் தெரியும்..” என்றப்படியே முறுகலான நெய் தோசையோடு வெளியே வந்தார் பாட்டி. “வாவ் ச்சோ ஸ்வீட்..” என அவரின் கன்னம் கிள்ளி முத்தமிட்டாள் அபி.
 
 
“நீயும் தான்டா கண்ணா ஸ்வீட்..” எனப் பாட்டியும் அவளைக் கொஞ்ச.. இதையெல்லாம் கண்டு கடுப்பான வர்மா, “நானும் இங்கே தான் இருக்கேன்..” என்றான்.
 
 
“உன்னை யார் இருக்கச் சொன்னா கிளம்பு..” என்றாள் சலிக்காமல் அபி. அதில் அவன் முறைக்க.. “இந்த உருட்டல் மிரட்டலை எல்லாம் உன் ஆபீஸில் இருக்கறவங்ககிட்ட வெச்சுக்கோ.. அதிலும் உனக்குன்னே செஞ்சு வெச்சது போலப் புதுசா ஒரு டால் உன் அசிஸ்டென்ட்டா வந்து இருக்காமே..! அந்த டால்கிட்ட காட்டு உன் இந்த மிரட்டல் எல்லாம்..” என்றாள் அபி.
 
 
“இவ்வளவு டீடெயில்ஸ் தெரியுமா உனக்கு..?” என்று வியந்தவனைக் கண்டு கொள்ளாமல் அபி சாப்பிட்டுக் கொண்டிருக்க.. “இதெல்லாம் அவனுங்க வேலை தானே..! அடங்க மாட்டானுங்களே..!” என்றான் வர்மா.
 
 
“ஏன்..? எதுக்கு அடங்கணும்..? அடங்கற அளவுக்கு அவனுங்க என்ன தப்பு செஞ்சுட்டானுங்க..? உன்னை மாதிரியே யாரை பத்தியும் எனக்குக் கவலை இல்லைன்னு இருக்கச் சொல்றியா..?” என்றாள் அபி.
 
 
“என்னைப் பற்றி நிஜமாவே உனக்கு அப்படித் தான் தோணுதா அபி..?” என்றான் உள் அடங்கிப் போன குரலில் வர்மா. “வேற எப்படி யோசிக்கச் சொல்றே மஹி..? நீ இந்தியா வந்து ஆறு மாசமாகுது.. இதில் எத்தனை முறை எங்களை வந்து பார்த்தே..? சரிப்பா நீ பெரிய அப்பாடக்கர் தான், பிசினஸ் மேக்னெட்டுக்கு வந்து பார்க்க தான் நேரமில்லை, எத்தனை முறை கால் செஞ்சே..? சரி, அதுவும் வேண்டாம் நாங்களா கூப்பிட்டப்போ எத்தனை முறை ஃபோன் எடுத்தே..?” என்றாள் கோபமாக அபி.
 
 
”அது..” என்று வர்மா, சட்டென எதுவும் சொல்ல முடியாமல் தடுமாறவும், “போடா..” என்று கடுப்போடு சொல்லி விட்டு சாப்பிட தொடங்கினாள் அபி.
 
 
“ஹேய்..” என அவளின் கையை வர்மா சமாதானம் செய்யும் விதமாகப் பிடிக்க.. கோபமாக அதைத் தட்டி விட்டவள், “போ.. போய், மூலையில் உட்கார்ந்து அழுதுட்டே இரு.. எங்ககிட்ட வரவே வேண்டாம் நீ..” என்றாள் எரிச்சலோடு அபி.
 
 
“இல்லைடா அபி..” என்றவனோடு அவள் சண்டைக்குத் தயாராக.. இதையெல்லாம் முகத்தில் உறைந்த புன்னகையோடு பார்த்தப்படியே வர்மாவுக்குத் தோசை ஊற்றிக் கொண்டிருந்தார் பாட்டி.
 
 
சிறு வயதில் இருந்தே இவர்கள் இருவரும் இப்படித் தான். எலியும் பூனையுமாக அடித்துக் கொள்வார்கள். ஆனால் மனதளவில் அவ்வளவு பாசம் இருவருக்குமே உண்டு.
 
 
அதனால் அவர்கள் இடையில் செல்லாமல் தன் வேலையில் கவனமாக இருந்த பாட்டிக்கு, இத்தனை நாட்கள் இருந்த இறுக்கம் எல்லாம் தளர்ந்து இப்படி இயல்பாக வர்மா பேசிக் கொண்டிருப்பதே போதுமெனத் தோன்றியது.
 
 
அன்று அவனின் நண்பர்கள் வர்மாவை அழைத்துச் சென்ற பின் லேசாக அவனுள் தெரிந்த மாற்றம் இன்று அபி வந்த பின் அப்பட்டமாகத் தெரிந்ததில் பாட்டியின் மனம் நிறைந்தது.
 
 
இது இப்படியே தொடர்ந்தால் விரைவில் அவன் பழைய மாதிரி மாறி விட வாய்ப்புகள் அதிகம் எனப் புரிய.. அதுவே இத்தனை வருட அவரின் தவிப்பை குறைக்கப் போதுமானதாக இருந்தது.
 
 
**********
 
 
பெரும் தயக்கத்தோடே அந்த ஏழு நட்சத்திர ஹோட்டலுக்குள் வர்மாவின் பின்னே சென்றாள் நிலா. அந்த இடத்துக்கு கொஞ்சமும் பொருத்தமில்லா தன் காட்டன் குர்தியை குனிந்து பார்த்துக் கொண்டாள் நிலா.
 
 
முன்பு வேலைக்கு சேர்ந்த புதிதில் அணிந்திருந்த அளவுக்கு அவ்வளவு மோசமில்லை என்றாலும், இந்த இடத்தில் அணியும் அளவுக்கான உடையும் அது இல்லை.
 
 
“நம்மகிட்ட இல்லைனாலும் நாம் வேலை செய்யும் இடத்திற்கும், நம் பதவிக்கும் ஏற்றது போல் நம் தோற்றம் இருக்கணும் மூன்.. இல்லைனா அது உனக்கு மட்டுமில்லை நம்ம சாருக்கும் அவமானம் தான்.. உன் சூழ்நிலை எனக்கு புரியுது.. இப்போ நான் கொஞ்சம் பணம் தரேன், நீ உனக்கு தேவையானதை வாங்கிக்கோ.. உன் சம்பளம் வந்ததும் திருப்பிக் கொடுத்துடு.. வட்டி எல்லாம் கேட்க மாட்டேன், ஆனா கொடுத்த் பணம் கண்டிப்பா திரும்ப வேணும்..” என்று பாலு சொல்லி இவள் சில உடைகளை வாங்கி இருந்தாள்.
 
 
இப்போது வரை இங்கு அவளுக்கு நியமித்திருக்கும் சம்பள விவரம் எதுவும் நிலாவுக்கு தெரியாது. அன்று அவள் சென்ற நேர்கானலின் ஊதியத்தை மனதில் வைத்தே, அதற்கு தகுந்தது போல் நான்கு உடைகளை மட்டும் வாங்கிக் கொண்டு மீதி பணத்தை பாலுவிடமே திரும்ப கொடுத்திருந்தாள் நிலா.
 
 
அதற்கு மேல் அவளை வற்புறுத்த விரும்பாதவனும், அப்படியே விட்டிருக்க.. இப்போது அதில் ஒன்றை தான் அணிந்திருந்தாள் நிலா.
 
 
இது போன்ற இடங்களுக்கு எல்லாம் அவள் வந்ததே இல்லை. இதுவே முதல்முறை என்பதில் உண்டான பதட்டமும், பாலு வர முடியாமல் போனதில் இறுதி நேரத்தில் கிளம்பி வர வேண்டி இருந்ததில் உண்டான படபடப்பும் இன்னும் அவளுக்குக் கொஞ்சமும் குறையவில்லை.
 
 
இதில் வர்மா வேறு காரில் வரும் வழியெல்லாம் அத்தனை கட்டளைகளையும் குறிப்புகளையும் சொல்லிக் கொண்டிருக்க.. நிலாவுக்கு நடுக்கமே எடுத்து விட்டது.
 
 
ஆனால் ஒருமுறை வேலை போய் திரும்பக் கிடைத்ததிலேயே உஷாராகி இருந்தவள், இப்போதெல்லாம் எதையும் முகத்தில் காண்பித்துக் கொள்வதே கிடையாது. அதிலும் வர்மா முன்பு இதில் மிகவும் கவனமாக இருப்பாள் நிலா.
 
 
இன்றும் அப்படியே வர்மா சொல்லிய அனைத்தையும் கேட்டு கொண்டவள், கொஞ்சம் கலக்கத்தோடே அவனோடு சென்றாள் நிலா. கிளம்பியதில் இருந்தே அவளிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தை கவனித்திருந்த வர்மா, இங்கே நுழைந்ததில் இருந்து மேலும் அவளின் பயம் அதிகமாகி இருப்பதையும் கண்டு கொண்டான்.
 
 
அதில் சட்டென நின்று திரும்பி அவளைப் பார்த்தவன், “தேன்நிலா ஏன் இவ்வளவு பதட்டம்..? ரிலாக்ஸ், முதலில் நான் சொல்றதை சரியா புரிஞ்சுக்கோ.. இங்கே வர ஒவ்வொருத்தர் பார்வையும் நம்மை எடை போடும், நம் பயமும் பதட்டமும் தான் அவங்க ஆயுதம்..
 
 
அதை வெச்சு தான் நம்மைத் தாக்க முயற்சி செய்வாங்க.. அதுக்கு நாம வாய்ப்பே கொடுக்கக் கூடாது, இங்கே நீ செய்யற ஒரு சின்னத் தப்பும் உன்னை இல்லை என்னைப் பாதிக்கும்.. இங்கே யாருக்கும் கேலி பொருளா இருக்க நான் விரும்பலை..
 
 
இதை மனசில் நல்லா பதிய வெச்சுக்கோ.. புது இடம், புது முயற்சி எல்லாருக்கும் ஒரு பயத்தைக் கொடுக்கத் தான் செய்யும்.. ஆனா அதை நாம எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் இருக்கு நம் வெற்றி..
 
 
சுற்றி நடக்கும் எதையும் யோசிக்காதே, என்னை மட்டுமே பார்.. என் தேவை என்ன..? நான் எதுக்காக உன்னைப் பார்க்கறேன் எல்லாம் புரிந்து உடனே செயல்படணும்.. ஒரு நொடி நீ தாமதிச்சாலும் அது இங்கே பலரின் பார்வையில் பதியும்..
 
 
இது எனக்கான அசிங்கமா மாறும்.. இதெல்லாம் நடக்கக் கூடாதுனா அது உன் கையில் தான் இருக்கு.. புரியுதா..” என்றான் இத்தனை நாள் அவளிடம் காண்பித்த கடுமை எல்லாம் காணாமல் போன குரலில் வர்மா.
 
 
அதில் அமைதியாக அனைத்தையும் கேட்டுக் கொண்டவளுக்கு, கிளம்பும் முன் பாலு சொல்லிய எச்சரிக்கைகள் நினைவுக்கு வந்தது. இதில் இன்று எந்த தவறும் நடந்து விடக் கூடாது என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டவளாக நிமிர்ந்து வர்மாவை பார்த்து “எந்த தப்பும் நடக்காம நான் பார்த்துக்கறேன் சார்..” என்றிருந்தாள் நிலா.
 
 
அவளின் குரலில் தெரிந்த உறுதியில் ஒரு தலையசைப்பை மட்டும் கொடுத்து விட்டுக் கான்பரன்ஸ் நடக்கும் பகுதியை நோக்கி சென்றான் வர்மா.
 
 
வழியில் எதிர்பட்டவர்கள் எல்லாம் அவனிடம் நலம் விசாரிக்க.. அனைவருக்கும் கொஞ்சமும் தன் மிடுக்கு குறையா உடல் மொழியோடே பதிலளித்தவாறு வர்மா நடந்து கொண்டிருக்க.. முதல் முறையாக அவன் மீதிருந்த பயம் என்ற உணர்வை புறம் தள்ளி சற்று முன் வர்மா பேசிய விதத்தை நினைத்தவளுக்கு அதில் தன் மேலான அக்கறையை விட, அவனின் வேலை சரியாக நடக்க வேண்டும் என்ற எண்ணமே பெரிதாக இருப்பது தெரிந்தும் நிலாவுக்கு அது தவறாகத் தோன்றவில்லை.
 
 
இங்கே அது தானே அவளின் வேலை. அதைச் சரியாகச் செய்ய வேண்டுமென எண்ணியவள், வர்மாவுக்கு அங்கே கிடைக்கும் மரியாதை அவனின் மிடுக்கான தோற்றம் என அனைத்தும் இத்தனை நாள் பயத்தோடு ஏதோ வில்லனை போல் பார்த்திருந்தவனை இன்று கதாநாயகனாக அவளின் கண்ணுக்கு காண்பித்தது..
 
 
அதில் வர்மாவையே புதிதாகப் பார்ப்பது போல் பார்த்தப்படி நிலா பின் தொடர்ந்து கொண்டிருந்தவளின் கவனத்தை “ஹே மஹி.. வாட் எ சர்ப்ரைஸ்..” என்ற ஆரவாரமான ஒரு பெண்ணின் குரல் கலைக்க.. அந்தப் பக்கம் திரும்பி பார்த்தாள் நிலா.
 
 
அங்கு கேரமில்க் நிறத்தில் முட்டிக்கு மேல் ஸ்கர்ட் அணிந்து அதே நிறத்திலான ஓவர் கோட்டும் அலையலையாய்ப் படர்ந்திருக்கும் கலர் செய்யப்பட்ட கேசமுமாக நின்றிருந்தாள் நேஹா.
 
 
பெண்ணான நிலாவே நேஹாவை கண்டு இமைக்க மறந்து திறந்த வாய் மூடாமல் பார்த்திருந்தாள். இப்படி ஒரு அழகியை இதற்கு முன் நிலா நேரில் பார்த்ததே இல்லை எனலாம்.
 
 
அதில் அசைய மறந்து நிலா நின்றிருக்க.. வர்மாவோ இப்படி ஒருத்தி தன்னிடம் பேசிக் கொண்டிருப்பதை கொஞ்சமும் கண்டுக் கொள்ளாமல் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்க.. “மஹி டியர்.. நீங்க எப்போ இந்தியா வந்தீங்க..? எனக்கு தெரியவே தெரியாது..” என வேகமாக அவனை நெருங்க முயன்றவளை தவிர்த்து விட்டு கான்பரன்ஸ் அறைக்குள் சென்றான் வர்மா.
 
 
இதை கண்டு அவன் சென்ற திசையை முறைத்தாலும், அருகில் பலர் இருப்பதை உணர்ந்து அமைதியாகவே அந்த அறைக்குள் நுழைந்தாள் நேஹா.
 
 
இதையெல்லாம் குழப்பமாக பார்த்தப்படியே நிலாவும் உள்ளே செல்ல.. அங்கிருந்தவர்களின் பார்வை அவளை அளவிட்டது. வர்மா சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வர.. கொஞ்சமும் தயக்கமில்லா நடையோடு சென்று வர்மாவின் அருகில் அமர்ந்தாள் நிலா.
 
 
இதை அவர்களுக்கு எதிரே அமர்ந்திருந்த நேஹா ஒற்றை புருவத்தை உயர்த்தி பார்க்க.. வர்மா முதலில் பேச தொடங்கினான்.
 
 
தொடரும்...
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
 
 
 
சித்திரை – 10
 
அந்த மீட்டிங்கில் வர்மா சொன்னதை நிலா அச்சுப் பிசகாமல் செய்திருந்தாள். அனுபவம் வாய்ந்தவர்கள் கூடச் சில நேரங்களில் தடுமாறும் நிலையில், முதல்முறை என்பதையெல்லாம் மறந்து நிலா நடந்து கொண்ட விதம் வர்மாவுக்குப் பிடித்தே இருந்தது.
 
 
இத்தனை நாள் செய்த சொதப்பல்களை எல்லாம் இன்றைய ஒரே நாளில் தன் நடவடிக்கையின் மூலம் துடைத்து விட்டிருந்தாள் நிலா.
 
 
அந்த அளவிற்கு வர்மா எதிர்பார்த்தபடியே அனைத்தும் நிறைவாக நடந்து முடிந்திருந்தது. அதில் அவளின் பக்கம் திரும்பி சிறு புன்னகையோடு “குட்..” என்றிருந்தான் வர்மா.
 
 
அவனின் இந்தப் புன்னகை நிலாவுக்கு எட்டாவது அதிசயமாகத் தெரிய.. ‘இது நிஜம் தானா..!’ என்பது போல் இமை தட்டி மீண்டும் அவனைப் பார்த்தாள் நிலா.
 
 
அதைக் கண்டு வர்மாவின் புன்னகை மேலும் லேசாக விரிய.. “அன்னைக்கு பாலுவை கிள்ளி வெச்சது போல எதுவும் செஞ்சுடாத.. இது ட்ரீம் இல்லை, நிஜம் தான்..” என்றிருந்தான் வர்மா.
 
 
இதில் நிலாவுக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை தான். ‘இவருக்கெல்லாம் சாதாரணமா பேசவே தெரியாதா..?’ என்று பல நாள் வர்மாவை பார்த்து நினைத்து இருக்கிறாள் நிலா.
 
 
அதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் இன்று இத்தனை இயல்பாக அவளிடம் பேசிக் கொண்டிருந்தவனின் இந்தக் கேலி பேச்சு அதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் இருந்தது.
 
 
இதே திகைப்போடு நிலா கொண்டு வந்திருந்த கோப்புகளை எல்லாம் சரி பார்த்து அடுக்கிக் கொண்டு எழுந்து நிற்க.. “கிளம்புவோமா..?” என்றிருந்தான் வர்மா.
 
 
‘சரி’ எனத் தலையசைத்தவள், வர்மா எழுந்து கொள்ள இடம் விட்டு நகர்ந்து நிற்க.. அவன் எழுந்து வேகமாக வாயிலை நோக்கிச் செல்லவும், வழக்கம் போல் அவன் பின்னே ஓடினாள் நிலா.
 
 
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நேஹாவுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை. ‘வர்மா பக்கத்தில் ஒரு பொண்ணா..? அதுவும் இவ்வளவு க்ளோசா பேசி பழகும் அளவுக்கு யார் இவ..?’ என அவள் மனதில் பல கேள்விகள் அணிவகுக்க.. வேகமாக வர்மாவின் பின்னே எழுந்து சென்றாள் நேஹா.
 
 
அதற்குள் வர்மா வேகமாக அந்தக் காரிடாரில் பாதித் தூரத்தை கடந்து விட்டிருந்தான். “மஹி, ஒன் மினிட்..” எனக் குரல் கொடுத்தபடியே வேகமாக அவனிடம் விரைந்தாள் நேஹா.
 
 
இந்தக் குரலில் திரும்பி பார்த்த நிலா, கேள்வியாக வர்மாவை பார்க்க.. அவனோ தன் காதில் எதுவுமே விழவில்லை என்பது போல் சென்று கொண்டிருந்தான். இந்த நொடி சுற்றிலும் இருப்பவர்களைப் பற்றி எல்லாம் நேஹாவுக்குத் துளியும் கவலையில்லை.
 
 
கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்குப் பிறகு வர்மாவை நேரில் காண்கிறாள். எத்தனையோ முறை அவனைப் பார்த்து பேசி புரிய வைக்க முயற்சி செய்து விட்டாள் நேஹா. தன் மேலான அவனின் கோபத்தின் அளவு புரிந்திருந்தாலும், நிச்சயம் இந்த அளவுக்கான புறக்கணிப்பை அவனிடம் இருந்து கொஞ்சமும் நேஹா எதிர்பார்த்து இருக்கவில்லை.
 
 
வர்மாவை சந்திக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த இரண்டரை வருடங்களில் ஆஸ்திரேலியாவிற்கு ஆறு முறை சென்று வந்திருந்தாள் நேஹா. ஆனால் வர்மா ஒரு முறையும் அவளைப் பார்த்திருக்கவே இல்லை.
 
 
இப்போதும் அவன் இந்தியா திரும்பியிருந்த தகவல் தனக்குத் தெரிய வரவே இல்லை என்ற கோபமும், வர்மா தன்னை இப்படித் தவிர்த்து விட்டுச் செல்வதில் உண்டான தவிப்புமாக நேஹா அவன் பின்னே சென்றாள்.
 
 
இதை அங்கிருந்த பலரின் கண்கள் நோட்டமிட்டது. ஒரு சிலர் தங்களுக்குள் கிசுகிசுத்தும் கொண்டனர். ஆனால் அதையெல்லாம் கவனிக்கும் மன நிலையில் நேஹா இல்லை. இந்தச் சந்தர்ப்பத்தை விட்டு விட்டால் மீண்டும் வர்மாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்காது என அவளுக்கு நன்றாகவே தெரியும்.
 
 
வேகமாக வர்மாவை நேஹா நெருங்கவும், அவளின் நல்ல நேரமாக இன்றைய தொழில் பேச்சு வார்த்தையை ஏற்பாடு செய்திருந்த நிறுவன தலைவரின் மகன் அகில், அங்கு வரவும் சரியாக இருந்தது.
 
 
அவர் வர்மாவிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு இன் முகமாகக் கை கொடுத்து பேசிக் கொண்டிருக்க.. அதைத் தனக்கான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக் கொண்ட நேஹா வேகமாகச் சென்று அவர்கள் அருகில் நின்றாள்.
 
 
அது வர்மாவுக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை என்றாலும் அவன் முகத்தில் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை. அதேநேரம் நேஹாவின் பக்கம் திரும்பியிருந்த அகில், “ஹாய் நேஹா.. ப்ளீஸ் டூ மீட் யூ..” என்றான் புன்னகையோடு.
 
 
அவனுக்கு “ஹாய்..” என ஒரு அவசர புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்தவள், வர்மாவின் பக்கம் திரும்பி எதுவோ சொல்ல வர, “ஓகே அகில், அப்புறம் பார்ப்போம்..” என்று விட்டு அங்கிருந்து நகர்ந்தான் வர்மா.
 
 
இதில் உண்டான கோபத்தோடு வேகமாக ஓடிச் சென்று அவன் வழியை மறிப்பது போல் நின்ற நேஹா “எதுக்கு என்னை அவாய்ட் செய்யறே மஹி..?” என்றாள்.
 
 
சுற்றிலும் பலரின் கண்கள் தங்கள் மேல் இருப்பதை உணர்ந்து, “யாரு நானா..?” என அவளின் கேள்விக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல் வர்மா கேட்டிருக்க.. அவனின் இந்த வகையான பேச்சு நேஹாவுக்குப் புதிதாக இருந்தது.
 
 
அதில் ஒரு நொடி அடுத்து என்ன பேசுவது எனப் புரியாமல் நின்றவள், “ஆமா நீ தான்.. ஏன் என்னை அவாய்ட் செய்யறே..? உன்கிட்ட பேசணும்னு எத்தனை முறை கூப்பிடறேன், போயிட்டே இருந்தா என்ன அர்த்தம்..?” என்று படபடத்தாள் நேஹா.
 
 
அவளின் அந்த வகைப் படபடப்புக்கெல்லாம் துளியும் சம்பந்தமில்லாத குரலில் “இதுக்கு இரண்டு அர்த்தம் இருக்கு, உங்களை நான் அவாய்ட் செய்ய வேண்டிய எந்த அவசியமும் எனக்கில்லை, ஏன்னா நமக்குள்ளே அந்த அளவுக்குப் பழக்கமில்லை.. அடுத்து உங்ககிட்ட பேச எனக்கு விருப்பமில்லை.. இதில் உங்களுக்கு எது வேணுமோ அந்த அன்சரை க்ளிக் செஞ்சுக்கோங்க, காட் இட்..” என்று ஒருவித அழுத்தத்தோடு பதிலளித்து விட்டு அங்கிருந்து நகர முயன்றான் வர்மா.
 
 
“நமக்குள்ளே பேச எதுவும் இல்லையா மஹி..? அப்படினா என்கிட்ட பேச உங்களுக்கு விருப்பம் இல்லையா..? அப்போ இவ கூடப் பேச தான் ரொம்ப விருப்பமோ..! அப்படிச் சிரிச்சு சிரிச்சு பேசுறீங்க..” என்றாள் நேஹா.
 
 
“அதைத் தெரிஞ்சு நீங்க என்ன செய்யப் போறீங்க..? உங்க லிமிட் க்ராஸ் செய்யாதீங்க, இட்ஸ் நன் ஆப் யுவர் பிசினஸ்..” என்று அழுத்தம் திருத்தமான குரலில் கூறினான் வர்மா.
 
 
தன்னிடம் வர்மா நடந்து கொள்ளும் விதத்தில் உண்டான வருத்தத்தோடு “மஹி..” என்று விழிகள் கலங்க நா தழுதழுக்க அழைத்தாள் நேஹா. இதையெல்லாம் அருகில் நின்று எதுவும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.
 
 
அதேநேரம் திரும்பி நிலாவை பார்த்திருந்த நேஹா “இவ எப்படி இருக்கா பாருங்க.. அவளும் அவ மூஞ்சியும்.. அவ டிரஸும்..” என்று முகத்தில் அத்தனை ஒவ்வாமையோடு நேஹா பேசிக் கொண்டே செல்ல.. “இனஃப்..” என்று பல்லைக் கடித்துக் கொண்டு சொல்லி இருந்தான் வர்மா.
 
 
ஆனால் இவ்வளவு நேரத்திற்கு வர்மாவின் முகத்தில் எந்த ஒரு உணர்வும் வெளிப்படவே இல்லை. ஆரம்பத்திலிருந்து குரலில் மட்டுமே வித்தியாசத்தைக் காண்பித்துத் துடைத்து வைத்த முகப் பாவத்தோடு பேசிக் கொண்டிருந்தான் வர்மா.
 
 
தூரத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு நேஹா மட்டுமே படபடப்பு, வருத்தம், கோபம் எனப் பல்வேறு உணர்வுகளோடு அவனிடம் பேசிக் கொண்டிருப்பது போல் இருந்தது.
 
 
“இன்னும் இவங்களுக்குள்ளே எதுவும் முடியலையா..?”
 
 
“இவ்வளவு நடந்தும் அந்தப் பொண்ணு எப்படிப் போய்ப் பேசுது..?”
 
 
“என்ன இருந்தாலும் வர்மா பெரிய மனுஷன் தான், இத்தனைக்குப் பிறகும் நின்னு பதில் சொல்லிட்டு இருக்காரே..!”
 
 
“அதெல்லாம் நிஜமா இருக்குமா..? இல்லை ரூமரா..? அப்போவே ரூமருன்னு தான் சொன்னாங்க..”
 
 
“ஒரு பொண்ணு அவ்வளவு ஓப்பனா அத்தனை பேர் முன்னே சொல்லி இருக்குனா அது உண்மையா தானே இருக்கும்..!”
 
 
“எனக்கும் உண்மையா இருக்கும்னு தான் தோணுது, ஆனா அதை மூடி மறைக்கத் தான் பார்க்கறாங்க..”
 
 
“ஆனா ஆளை பார்த்தா அப்படித் தெரியலையே..!”
 
 
“இன்னைக்கு நடக்கும் பல விஷயங்களில் வெளித்தோற்றத்தை வெச்சு எதுவும் முடிவு செய்ய முடியாதுப்பா..”
 
 
என்பது போலான பேச்சுகள் ஆங்காங்கே குழுமி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களிடம் இருந்து வந்தது.
 
 
தாங்கள் எத்தனை பெரிய அந்தஸ்த்தில் இருக்கும் தொழில் ஜாம்பவான்கள் என்பதை எல்லாம் மறந்து, வீதியில் நின்று புரளி பேசும் ஆட்கள் போல் நடந்து கொண்டிருந்தனர்.
 
 
இவை எல்லாம் தவறாமல் வர்மாவின் காதிலும் விழ, தன் வலக்கையை இறுக மூடி, தன் கோபம் முகத்தில் தெரிந்து விடாமல் கட்டுப்படுத்திக் கொண்டவன், “இன்னொரு முறை இப்படி என் முன்னே வந்து நின்னு என்னைத் தொந்தரவு செய்ய முயற்சிக்காதீங்க..! அப்போவும் இதே போல அமைதியா போவேன்னு மட்டும் எதிர்பார்க்காதீங்க..!” என்று கிட்டத்தட்ட மிரட்டும் தொணியில் அவளிடம் கூறிவிட்டு, அருகில் இதையெல்லாம் புரியாமல் நின்று பார்த்துக் கொண்டிருந்த நிலாவை “கம், லெட்ஸ் கோ..” என்றவாறே கையைப் பிடித்துக் கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு அங்கிருந்து சென்றான் வர்மா.
 
 
**************
 
 
தன் அலுவலக அறையில் அமர்ந்திருந்த வர்மாவின் முகம் கடுக்கடுவென இருந்தது. கோபத்தில் விழிகள் சிவக்க தனக்கு இடது புறம் இருந்த காலி மேஜையை முறைத்துக் கொண்டிருந்தான் வர்மா.
 
 
நேற்று இங்கிருந்து கிளம்பும் முன் அத்தனை முறை இது முக்கியமான வேலை, உடனே முடித்துக் கொடு எனச் சொல்லியும் தேன்நிலா அதை முடித்து அனுப்பாததோடு, இன்று காலை 10:30 மணியாகியும் இப்போது வரை அவள் அலுவலகம் வந்து சேராததில் உண்டான ஆத்திரம் வர்மாவுக்குத் தலைக்கேறி இருந்தது.
 
 
‘கொஞ்சம் கூட பொறுப்பே இல்லை.. எல்லாம் திமிர், பாட்டி கொடுக்கும் இடம்..’ எனப் பல்லை கடித்தவன், இன்று மாலை நடக்கவிருக்கும் பேச்சு வார்த்தை சம்பந்தமான தகவல்களை ஒன்றிணைத்து ஒரு ரிப்போர்ட் தயாரிக்கச் சொல்லி அவளிடம் கொடுத்து விட்டு சென்றிருந்ததை அவள் சரியாகத் தயார் செய்திருக்கிறாளா எனச் சரி பார்க்கவே இன்று சீக்கிரம் அலுவலகம் கிளம்பி வந்திருந்தான் வர்மா.
 
 
ஆனால் தகவல்களைத் தயாரித்துக் கொடுக்க வேண்டியவளோ இப்போது வரை வந்திருக்கவில்லை. அதில் கண் மண் தெரியாத கோபம் உண்டாக.. இன்டர்காமை எடுத்து பாலுவுக்கு அழைத்தான் வர்மா.
“வேர் இஸ் ஷி..?” என்று எடுத்ததும் வர்மா கத்தவும், முதலில் யாரைப் பற்றிக் கேட்கிறான் எனப் புரியாமல் தடுமாறினாலும் சட்டென யோசித்து “மூன்..” என்று தொடங்கிப் பின் அப்படியே நிறுத்தி லேசான தடுமாற்றத்தோடு “நிலா.. நிலா இன்னும் வரலை சார்..” என்றான் பாலு.
 
 
“அவங்க வரலைன்னு எனக்கும் தெரியும் மேன், ஏன் வரலை..? டைம் என்ன ஆகுது..? லீவ் எதுவும் சொல்லி இருக்காங்களா..?” என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே சென்றான் வர்மா.
 
 
நேரம் செல்ல செல்ல.. வர்மாவின் குரலில் கோபமும் அழுத்தமும் அதிகரித்துக் கொண்டே செல்வதை உணர்ந்த பாலு “இல்லை.. இல்லை சார், இப்போ வரைக்கும் எதுவும் சொல்லலை..” என்று கூறிய அடுத்த நொடி ரிஸிவரை பட்டென வைத்திருந்தான் வர்மா.
 
 
அந்தச் சத்தத்தில் தன் காதில் வைத்திருந்த ரிசீவரை எடுத்து திகிலாகப் பார்த்த பாலு ‘செம காண்டில் இருக்கார் போலவே..! இப்போ மட்டும் மூன் அவர் கையில் சிக்கினா கைமா தான்.!!’ என்று எண்ணிக் கொண்டான்.
 
 
இன்று வர்மாவுக்கு அடுத்தடுத்து மூன்று தொழில் சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தைகள் இருந்தது. அதில் மாலை நடக்க இருக்கும் பேச்சு வார்த்தை மிக முக்கியமானது மட்டுமல்ல அவனின் கௌரவம் சம்பந்தப்பட்டதும் கூட.. அதனாலேயே இதற்காகப் பார்த்துப் பார்த்து அனைத்தையும் தயார் செய்திருந்தவன், அதை முழுமையாகத் தொகுத்து ஒரு கோப்பாகக் கொடுக்கும் பணியை தேன்நிலாவிடம் கொடுத்திருந்தான்.
 
 
அதை இத்தனை கவனக்குறைவாக அவள் கையாண்டு இருப்பதோடு இப்போது வரை அலுவலகத்திற்கும் அவள் வராமல் இருப்பது என எல்லாம் சேர்ந்து வர்மாவின் ஆத்திரத்தை உச்சத்திற்குக் கொண்டு சென்று இருந்தது.
 
 
‘கொஞ்சம் கூடப் பொறுப்போ அக்கறையோ இல்லாம எனக்கென்னன்னு இருக்கா.. இதில் பாட்டி சப்போர்ட் வேற..! வேலையை விட்டும் தூக்க முடியலை..’ என்று எண்ணியவனுக்கு கோபத்தில் தன் முன் இருந்தவற்றையெல்லாம் தூக்கிப் போட்டு உடைக்கும் அளவுக்கான ஆத்திரம் உண்டாக.. சமீபமாக அனைத்தும் தன் கையை மீறி நடப்பது போலான எண்ணத்தில் விருட்டென அங்கிருந்து கிளம்பி விட்டான் வர்மா.
 
 
***
 
 
டெண்டர் சம்பந்தமான பேச்சு வார்த்தையை முடித்துக் கொண்டு அடுத்த மீட்டிங்கில் பங்கேற்க சென்று கொண்டிருந்த வர்மாவின் அலைபேசி அடித்தது. காரை ஓட்டிக் கொண்டே அழைப்பது யார் எனப் பார்த்தவன் பாலுவிடமிருந்து அழைப்பு என்றதும் ஒரு நொடி நெற்றியை சுருக்கி விட்டு அதை எடுத்திருந்தான்.
 
 
முக்கியமான விஷயம் தவிர வேறு எதற்கும் இது போலான மீட்டிங் நேரங்களில் பாலு அழைப்பது இல்லை என்பது தெரிந்தே அதை எடுத்திருந்தவன், “ஹலோ சார், மூன் இல்லை நிலாகிட்ட பேசினேன்..” என்று பாலு தொடங்கவும், “ஷட் அப் பாலு.. உங்களுக்குள்ளே இருக்கும் பெட்நேம் எல்லாம் உங்களுக்குள்ளேயே வெச்சுக்கோங்க..” என்றான் கடினமான குரலில் வர்மா.
 
 
அதில் சட்டென அந்தப் பக்கம் நாக்கை கடித்துத் தடுமாறிய பாலு “சாரி, சாரி சார்.. நான் தேன்நிலாகிட்ட பேசினேன் சார்..” என்றான் பதட்டமும் தடுமாற்றமுமான குரலில் பாலு. “ஓஹோ, என்ன மேடம் ஆபீஸ் வரலாமா வேண்டாமான்னு யோசிக்கிறாங்களா..?” என்றான் நக்கலாக வர்மா.
 
 
“இல்.. இல்லை சார், நிலா.. ஐ மீன் தேன்நிலா அம்மா ஹார்ட் அட்டாக் வந்து ஹாஸ்பிடலில் இருக்காங்களாம்.. அதனால் தான் அவங்களால் ஆபீஸ் வர முடியலைன்னு சொன்னாங்க..” என்று ‘எங்கே வர்மா கோவத்தில் அழைப்பை துண்டித்து விடப் போகிறானோ..!’ என அவசரமாகச் சொல்லி முடித்தான் பாலு.
 
 
“ஓ..” என்று மட்டும் கேட்டுக் கொண்ட வர்மா, வேறு எதையும் பேசாமல் இருக்க “பாவம் சார் அந்தப் பொண்ணு, தனியா அங்கே துணைக்கு யாரும் கூட இல்லாமல் ஹாஸ்பிடலில் கிடந்து தவிக்குது..” என்றும் சேர்த்துக் கூறினான் மனம் தாங்காமல் பாலு.
 
 
அதற்குப் பதிலேதும் சொல்லாமல் அழைப்பை துண்டித்திருந்த வர்மா, காரை அதே வேகத்தில் செலுத்திக் கொண்டிருக்க.. அவன் மனமோ காரை விட வேகமாக அன்று இரவு நடந்ததை எல்லாம் வர்மாவின் அனுமதி இல்லாமல் அவன் மனதிற்குள் ஓட விட்டுக் கொண்டிருந்தது.
 
 
அதில் தன்னையும் அறியாமல் காரை மருத்துவமனை இருந்த பக்கம் திருப்பி இருந்தான் வர்மா. அந்த அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த வர்மாவுக்கு எங்குச் சென்று யாரிடம் கேட்பது என எதுவுமே புரியவில்லை.
 
 
தேன்நிலாவை பற்றி அவனுக்கு எதுவுமே பெரிதாகத் தெரியாது. அவன் அன்னையின் பெயர் உட்பட.. அனுமதிக்கப்பட்டிருப்பவரின் பெயரை சொல்லி விசாரித்தாலே இங்குப் பெரிதாக யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள்.
 
 
இதில் எதுவும் தெரியாமல் இங்கு வந்து விட்ட தன் அவசர தனத்தை எண்ணி அவனே வருந்திக் கொண்டு கால் போன போக்கில் செல்ல.. அவன் பார்வையில் பட்ட காட்சிகள் அனைத்தும் வர்மாவின் மனதை ஏதோ செய்தது. இதுவே அரசு மருத்துவமனைக்குள் அவன் வருவது முதன்முறை.
 
 
அங்கு இருக்கும் அவலநிலையைக் கண்டவாறே முன்னேறிச் சென்றவன், எதிரில் தேன்நிலா வந்து கொண்டிருப்பதைக் கண்டு தன் நடையை நிறுத்தினான்.
 
 
கையில் மருத்துவர் எழுதிக் கொடுத்திருந்த மருந்து சீட்டை இரு கைகளாலும் இறுக பற்றியப்படி கசங்கிய உடை, கலைந்த தலை, அழுதுழுது வீங்கி இருந்த முகம் எனச் செய்வதறியாது வழி தெரியாமல் பரிதவிக்கும் குழந்தையைப் போல் அவள் வந்துக் கொண்டிருந்த கோலம் கண்டு தன்னையும் மீறி “தேன்நிலா..” என்று அழைத்திருந்தான் வர்மா.
 
 
அதில் தன்னை மறந்த நிலையில், ‘என்ன செய்து தன் அன்னையின் உயிரை காப்பாற்றப் போகிறோமோ..!’ என்ற பரிதவிப்போடும் நடந்து வந்து கொண்டிருந்தவள் சட்டெனப் பார்வையை உயர்த்திக் குரல் வந்த திசையில் பார்க்க.. எதிரில் வர்மா நிற்பதை கண்ட நொடி என்ன நினைத்தாளோ அப்படி ஒரு வேகத்தில் ஓடி சென்று அவனை அணைத்துக் கொண்டு கதறி விட்டாள் தேன்நிலா.
 
 
இதை வர்மாவே எதிர்பார்த்து இருக்கவில்லை. அவளின் மனநிலை புரிந்தாலும், ஆதரவுக்காகக் கூடத் திரும்பத் தேன்நிலாவை அணைக்க அவன் கைகள் உயரவே இல்லை.
 
 
மாறாக இப்படித் தன்னிடம் உரிமை எடுத்துக் கொள்ளும் அளவிற்கு எப்போது இவளிடம் நடந்து கொண்டோம்..?’ என அவன் மனம் எண்ண.. சட்டென அவளை தன்னிடம் இருந்து பிரித்து தள்ளி விட முயன்ற தன் கைகளை மிக சிரமப்பட்டு அழுந்தமூடி கட்டுப்படுத்தியவாறு நின்றிருந்தான் வர்மா.
 
 
ஆனால் நிலாவுக்கோ திக்கு தெரியாத காட்டில் இருளில் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு கிடைத்த ஒளியாக தான் இந்த நொடி வர்மா தெரிந்தான்.
 
 
தொடரும்...
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்..
 
 
CNM - 9 & 10
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
This post was modified 3 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
 
ஹாய் டியர்ஸ் 
 
இரண்டு நாளா நல்ல காய்ச்சல்.. எழுந்துக்கவே முடியலை.. முதல் முறையா படுத்துட்டே மொபைலில் டைப் செஞ்சு இருக்கேன்.. ஏதாவது மிஸ்டேக் இருந்தா மன்னிச்சு..
 
 
 
சித்திரை - 11
 
ஐந்து நிமிடம் அவள் அழுது முடிக்க அவகாசம் கொடுத்து பொறுமையாக காத்திருந்தவன் பின் “தேன்நிலா..” என்றான் சற்று அழுத்தமான குரலில் வர்மா.
 
 
அந்தக் குரலிலே தன் உணர்வு வர பெற்றவள், பார்வையை உயர்த்திப் பார்க்க.. அவள் நின்றிருக்கும் நிலை நிலாவுக்கு புரிந்தது.
 
 
அதில் வேகமாக அவனிடமிருந்து விலகி நின்றவள், “சா.. சாரி.. சாரி நா.. ஏதோ..” என்று வார்த்தை வராமல் அவள் தடுமாறவும், ‘பரவாயில்லை’ என்பதாக தலையை மட்டும் அசைத்தவன் “என்னாச்சு..?” என்றான் வர்மா.
 
 
அந்த வார்த்தையை கேட்ட நொடி அவளுக்கு அனைத்தும் நினைவு வர.. மீண்டும் வெடித்துக் கொண்டு கிளம்பி அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் போராடினாள் நிலா.
 
 
“தேன்நிலா லிசன்.. ஹாஸ்பிடல் இருக்க ஒவ்வொரு நொடியும் நமக்கு ரொம்ப பிரீஷியஸான டைம்.. இப்போ அழுதுட்டு இருந்தோம்னா எதுவும் செய்ய முடியாது, அடுத்து என்ன செய்வதுன்னு தான் யோசிக்கணும்..” என்றவன், “என்னாச்சுன்னு நீ சொன்னா தான் அடுத்து என்ன செய்யறதுன்னு நாம பார்க்க முடியும்..” என்றான் பொறுமையை இழுத்து பிடித்த குரலில் வர்மா.
 
 
“அ.. அம்மா.. அம்மா ஹார்ட் அட்டாக்.. திடீர்னு மயங்கி விழுந்துட்டாங்க.. டாக்டர் ஏதேதோ சொல்றாங்க, எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. உடனே ஆபரேஷன் செய்யணுமாம், இல்லைனா பிழைக்க மாட்டாங்கன்னு..” என்ற போது அதற்கு மேல் பேச முடியாமல் திணறியவளை சமாதானம் செய்ய முயலாமல் அமைதியாக நின்றான் வர்மா.
 
 
அதில் இரண்டு நொடி அழுது முடித்து மீண்டும் நிமிர்ந்து அவனை பார்த்தவள், “இந்த மருந்தெல்லாம் அவசரமா வேணுமாம்.. ஆனா என்கிட்ட ஒரு ரூபாய் கூட இல்லை..” என தன் கையில் இருந்த காகிதத்தை அவன் முன்னே நீட்டியப்படி கூறினாள் நிலா.
 
 
அதை வாங்கி வேகமாக படித்தவன், நிலாவிடம் எதுவும் பேசாமல் தன் அலைபேசியை எடுத்து யாருக்கோ அழைத்தான் வர்மா.
 
 
அந்தப் பக்கம் அழைப்பு ஏற்கப்பட்டதும் “ஹலோ தர்ஷ்.. உன் ஹாஸ்பிடலில் சிசியூவில் ஒரு பெட் இமிடியட்டா அலாட் செய்.. உன் ஹாஸ்பிடலின் சீனியர் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்டை ரெடியா இருக்க சொல்லு.. இன்னும் 15 மினிட்ஸில் நான் அங்கே பேஷண்ட்டோட இருப்பேன்..” என்றவன், விவரம் ஏதும் சொல்லாமல் அழைப்பை துண்டித்து இருந்தான் வர்மா.
 
 
அந்தப் பக்கம் இருந்த தர்ஷனுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் உடனே வர்மாவின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து, செயல்பட தொடங்கினான். அதற்குள் பாலுவை அழைத்து “இம்மீடியட்டா.. தர்ஷ் ஹாஸ்பிடலுக்கு போக ஒரு ஆம்புலன்ஸ் அரேஞ்ச் செய்.. தர்ஷ் ஹாஸ்பிட்டலில் இருந்து ஆம்புலன்ஸ் வந்து இங்கிருந்து கிளம்ப லேட்டாகும்.. அதனால பக்கத்தில் எங்கேயாவது உடனே அரேஞ்ச் செய்..” என்றவன் “நீயும் கிளம்பி உடனே வா..” என்று விட்டு அழைப்பை துண்டித்தான் வர்மா.
 
 
அடுத்த சில நிமிடங்களில் அங்கிருந்த மருத்துவரிடம் பேசி உமாவை வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதி வாங்கி இருந்தவன் வெளியில் வரவும், பாலுவும் அவன் ஏற்பாடு செய்திருந்த ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருந்தது.
 
 
தன்னை சுற்றி நடக்கும் எதையும் புரிந்து கொள்ளாமல் நிலா விழித்துக் கொண்டிருக்க.. அடுத்தடுத்து அனைத்தும் வேகமாக நடந்து முடிந்து தர்ஷனின் குடும்ப மருத்துவமனையான “லைப் கேர்” மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் உமா.
 
 
வர்மாவின் குரலில் இருந்த அவசரம் புரிந்து அவன் சொன்னதை எல்லாம் தயார் நிலையில் வைத்திருந்த தர்ஷன், அவனும் அங்கு வர்மாவுக்காக காத்திருந்தான்..
 
 
தர்ஷினின் நேரடி தலையீடு இருப்பதை உணர்ந்து அனைத்தும் துரிதமாக நடந்து முடிய.. உமாவின் பிரச்சனை எனவென கண்டறியப்பட்டு அதற்கான மருத்துவமும் உடனடியாக தொடங்கியது.
 
 
அரசு மருத்துவமனையில் சொல்லி இருந்தது போல் உமாவின் நிலை மிக மோசமாகத்தான் இருந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்தாலும் பிழைக்க வாய்ப்பு 30 சதவீதம் தான் என ஸ்பெஷலிஸ்ட் சொல்லி விட.. இதைக் கேட்டு நிலா மீண்டும் கதறி அழ தொடங்க.. அவளை ஒரு பார்வை பார்த்தவன் தர்ஷனின் பக்கம் திரும்பி “ட்ரீட்மென்ட் ஸ்டாட் செஞ்சுடு..” என்றான் வர்மா.
 
 
இந்த அறுவை சிகிச்சை செய்ய சில லட்சங்களாவது தேவைப்படும். அதுவும் தர்ஷினின் மருத்துவமனை விவிஐபிக்களுக்கு மருத்துவம் பார்ப்பதில் மிக பிரசித்தி பெற்ற ஒன்று. இங்கிருக்கும் மருத்துவர்கள் எல்லாம் அவரவர் துறையில் மிகப் பிரபலம்.
 
 
மற்ற மருத்துவமனையில் ஆவதை விட இங்கு செலவும் அதிகம். அதற்கேற்ற மருத்துவமும் கிடைக்கும் என்றாலும் இதற்கு என செலவு செய்ய தயாராக இருப்பவர்கள் யோசிக்காமல் இங்கு வருவார்கள். ஆனால் நிலாவை பார்க்கும் போது அவளின் நிலை என்ன என தர்ஷனுக்கு நன்றாகவே புரிந்தது.
 
 
ஆனால் வர்மா கூறிய பின் ஒரு வார்த்தையும் அதைப்பற்றி பேசாமல் உடனே அடுத்த கட்ட நடவடிக்கைகளில் இறங்கி விட்டான் தர்ஷன். பாலுவிடம் உடன் நின்று அனைத்தையும் பார்த்துக் கொள்ள சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டான் வர்மா. இதையெல்லாம் உணரும் நிலையில் கூட நிலா இல்லை.
 
 
அறுவை சிகிச்சை அறைக்கு எதிரில் இருந்த இருக்கையில் அழுகையோடு அமர்ந்திருந்தவளைத்தான் பாலுவின் விழிகள் அவ்வப்போது தொட்டு தொட்டு மீண்டு கொண்டு இருந்தது.
 
 
ஆனால் அவனுக்கு அடுத்தடுத்து செய்ய வேண்டிய வேலைகள் வரிசை கட்டி நிற்க.. அதையும் கவனித்துக் கொண்டே அவ்வப்போது நிலாவையும் பார்த்துக் கொண்டான் பாலு.
 
 
தர்ஷனின் மருத்துவமனையே என்றாலும் உமாவின் மருத்துவத்திற்கு ஆகும் செலவை முறைப்படி கொடுத்து விட சொல்லி இருந்தான் வர்மா. அதை தர்ஷன் மறுக்க பார்க்க.. “நீ கூட இருந்து எல்லாம் சரியா செய்வேன்னு தான் இங்கே வந்தேன்.. திரும்ப கிளம்ப வெச்சுடாதே..” என்று விட்டு சென்றிருந்தான் வர்மா.
 
 
இன்று வர்மா செல்ல வேண்டிய முக்கியமான ஒரு மீட்டிங் இருந்தது. அதற்கான தகவல் அடங்கிய கோப்பை தான் நேற்று நிலாவிடம் தயார் செய்ய சொல்லி இருந்தான் வர்மா.
 
 
அதை அவள் முடித்து வைத்திருந்ததை அறிந்து கொண்டவன், நேராக அலுவலகம் சென்று அவளின் மடிக்கணினியில் இருந்து அதன் ஒரு பிரதியை எடுத்துக் கொண்டவன், மீட்டிங் நடக்கும் இடத்திற்கு சென்று விட்டான்.
 
 
அங்கு வாயிலையே பார்த்தபடி மாபெரும் ஆவலோடு காத்திருந்தாள் நேஹா. அதே நேரம் அவளின் அலைபேசி அடிக்க.. எடுத்து பார்த்தவள் அழைப்பது தன் தந்தை ஆளவந்தான் என்றறிந்து லேசான சலிப்போடு அதை ஏற்றிருந்தாள்.
 
 
“ஹலோ..” என்ற அவளின் குரலில் இருந்தே அவளின் விருப்பமின்மையை புரிந்து கொண்டவர், “எங்கே இருக்கே நீ..?” என்றார் அழுத்தமான குரலில் ஆளவந்தான்.
 
 
“நான் என்ன குழந்தையாடேட் காணாம போறதுக்கு..? இங்க லானில் தான் இருக்கேன்..” என்று நேஹா கூறவும், “அங்கே என்ன வேலை உனக்கு..? நீ மீட்டிங் அட்டென்ட் செய்ய தானே இங்கே வந்தே..! உள்ளே வா ..” என்றி ருந்தார் ஆளவந்தான்.
 
 
“வரேன் டேட், என்ன அவசரம்..” என்று அப்போதும் தன் விருப்பமின்மை கலந்த குரலிலேயே நேஹா சொல்லவும் “என்ன அவசரமா..? இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு மீட்டிங் ஸ்டார்ட்டாக.. இது நமக்கு எவ்வளவு முக்கியமான ஒரு மீட்டிங்ன்னு உனக்கு தெரியும் இல்லை.. கிட்டதட்ட 20 வருஷமா இந்த டீல் ஒரு முறையாவது நமக்கு வரணும்னு எவ்வளவு போராடிட்டு இருக்கோம், மிஸ்டர் மந்திரன் டைம் கீப் அப் செய்யறதில் வல்லவர், உடனே உள்ளே வா..” என்றார் எரிச்சலோடு ஆளவந்தான்.
 
 
அவர் பல்லை கடித்துக் கொண்டே மற்றவர்களுக்கு கேட்டு விடாத குரலில் தொடர்ந்து பேசிக் கொண்டே செல்ல.. வேறு எதுவும் பேச தோன்றாமல் அழைப்பை துண்டித்திருந்தாள் நேஹா.
 
 
அவளுக்கு அப்படி ஒரு கோபம் உண்டானது. இன்னும் எத்தனை வருடம் இப்படி அவருக்கு கட்டுப்பட்டு அவர் சொல்வதை மட்டுமே செய்து கொண்டு வாழ முடியும்..? நான் என்ன பொம்மையா..? எனக்கென ஒரு ஆசை, தேவை, கனவு இருக்காதா என்ன..? எப்போ பார் பிசினஸ்.. பிசினஸ்.. பிசினஸ்.. அதுலேயும் இந்த டீல்.. ஷிட், இதுக்காக இது கிடைக்க தானே அத்தனையும் செஞ்சீங்க..? ஆனா நல்லா தெரிஞ்சுக்கோங்க டேட், இப்போ மட்டுமில்லை எத்தனை வருஷம் நீங்க முட்டி மோதினாலும் இந்த டீல் உங்களுக்கு கிடைக்காது.. என் மஹி அதை கிடைக்கவும் விட மாட்டார்.. அதை எப்போ நீங்க புரிஞ்சுக்க போறீங்கன்னு தான் எனக்கு தெரியலை..
உங்க விருப்பம் உங்க கௌரவம் உங்கள் லட்சியம்னு என் வாழ்க்கையை வீணாக்கிட்டு, அதைப்பற்றிய கவலை துளியும் இல்லாமல் எப்படி உங்களால் இருக்க முடியுது டேட்..? இந்த நிமிஷம் வரை அதை நினைச்சு ஒரு முறையாவது வருத்தப்பட்டு இருக்கீங்களா..? நிச்சயமா மாட்டீங்க.. எனக்கு உங்களை பத்தி நல்லா தெரியும்..” என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டவள், பார்வையை உயர்த்தவும் தன் வேக நடையில் அந்த மீட்டிங் நடக்கும் இடத்திற்குள் நுழைந்தான் வர்மா.
 
 
அவனை அங்கு கண்டதும் தனக்குள் சட்டென தொற்றிக் கொண்ட ஒரு பரபரப்போடு எழுந்து நின்றவள், தன்னை ஒருமுறை மீண்டும் சரி பார்த்துக் கொண்டு ஆவலாக வர்மாவை பார்க்க.. அவனின் கவனமும் அந்தப் பகுதியில் எங்குமே இல்லை. நேராக மீட்டிங் நடக்கும் ஹாலை நோக்கி சென்றவனை ஏமாற்றமாக பார்த்தவள், இன்று வர்மா இங்கு வருவான் என்பதற்காகவே நேரம் எடுத்து தன்னை பார்த்து பார்த்து அலங்காரித்துக் கொண்டு வந்திருந்தவள், அவன் தன்னை துளியும் கண்டுகொள்ளாததில் மனம் சோர்ந்தாள்.
 
 
இதற்கு மேலும் இங்கு நின்றிருந்தால் தன் தந்தையிடம் இருந்து வசவுகள் வரும் என புரிந்து வர்மாவின் பின்னே கிட்டதட்ட அந்த மீட்டிங் ஹாலுக்கு ஓடினாள் நேஹா.
 
 
வர்மா ஹாலுக்குள் நுழைந்ததும், அங்கிருந்த பலர் அவனை மரியாதை நிமித்தமாக திரும்பிப் பார்த்து தலையசைத்துக் புன்னகைக்க.. இதை பார்த்துக் கொண்டிருந்த ஆளவந்தானுக்கு கடுப்பானது.
 
 
அதே நேரம் அவன் பின்னே நேஹாவும் அங்கு வர, அவளை முறைத்தவர் ‘இதுக்குத்தான் இவ்வளவு நேரம் அங்கே இருந்தியா..?’ என்பது போல் பார்த்து வைக்க.. அந்த பார்வையை வேண்டுமென்றே தவிர்த்தவள் அமைதியாகச் சென்று தன் தந்தைக்கு அருகில் அமர்ந்தாள் நேஹா.
 
 
வழக்கம் போல் சரியான நேரத்திற்கு மீட்டிங் ஸ்டார்ட் ஆனது. ஒவ்வொருவரும் அவர்கள் தயார் செய்திருந்த ப்ராஜெக்ட் டீடைல்ஸை சமர்ப்பித்து அந்த நிறுவனத் தலைவரான மந்திர மூர்த்தியை கன்வின்ஸ் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தனர்.
 
 
அவரும் முகத்தில் எதையும் வெளிப்படுத்திக் கொள்ளாத முகத்தில் உறைந்த லேசான புன்னகையோடு அமர்ந்து அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தார்.
 
 
எப்போதுமே அவரின் முகத்தில் இருந்து விருப்பு வெறுப்பு எதையும் அறிந்து கொள்ள முடியாது. 80 வயதாகும் அவரின் தொழில் அனுபவம் 55 வருடங்கள். இதில் பலதரப்பட்ட நிறுவனங்களையும் மனிதர்களையும் பார்த்து இருந்தவர், எப்போதுமே தன் விருப்பு வெறுப்புகளை மற்றவர் அறியாமல் மறைப்பதில் திறமையானவர்.
 
 
அவராக சொன்னால் தவிர அவர் மனதில் நினைப்பதை யாராலும் அறிந்து கொள்ள முடியாது. இப்போதும் அதே போல் அமர்ந்திருந்தவர் ஒவ்வொருவராக பேசி முடிக்கவும், அனைத்தையும் கேட்டுக் கொண்டு அவ்வப்போது தன் உதவியாளரை திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவரும் அனைத்தும் இங்கு குறிப்பெடுக்கப்பட்டு விட்டது என்று சைகையால் சொல்லிக் கொண்டே இருக்க.. அதற்கு ஒரு தலையசைப்பை பதிலாக கொடுத்தவர், “ஓகே ஜென்டில்மேன்ஸ் உங்க ப்ரோபோசல் எல்லாம் கேட்டேன்.. நீங்க மென்ஷன் செஞ்சு இருக்க பட்ஜெட், டிசைன்ஸ், டைம் பீரியட், இதெல்லாம் பார்த்து டிசைட் செய்ய எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் தேவைப்படுது..
இன்னும் இரண்டு நாளில் நான் உங்களை ரீச் செய்ய றேன்.. நம்பிக்கையுடன் காத்திருங்க.” என்று தனக்கேயான அமைதியான குரலில் பேசி முடித்தவர், “நீங்க எல்லாரும் இங்கே வந்ததுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.. உங்க எல்லாருக்கும் லஞ்ச் ஏற்படாகி இருக்கு, சாப்பிட்டு தான் கிளம்பணும்..” என்றார்.
 
 
அனைவரும் அதற்கு சம்மதமாக தலையசைத்து அங்கிருந்து எழுந்து கொள்ள.. அவர்களை உணவு ஏற்பாடு செய்திருந்த பகுதிக்கு அழைத்துச் செல்ல என இருந்த ஊழியர்கள் முன்னே வந்து நின்றனர்.
 
 
அங்கிருந்தவர்களின் வழிகாட்டுதலின்படி ஒவ்வொருவரும் சென்று கொண்டிருக்க.. அதே நேரம் தன் கோப்பை எடுத்துக் கொண்டு வேகமாக அங்கிருந்து வெளியேறியவனை ஊழியர் உணவுப் பகுதியை நோக்கி அழைத்துச் செல்ல முயல… “இல்லை எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு தேங்க்யூ..” என்று விட்டு வெளிப் பக்கம் நகர்ந்தான் வர்மா.
 
 
இதைக் கண்டு பதட்டமான நேஹா அவன் பின்னே செல்ல முயல.. “நேஹா என்ன செய்யறே..? என அவளை அங்கிருந்து நகர விடாமல் கையைப் பிடித்து இறுக்கி நிறுத்தினார் ஆளவந்தான்.
 
 
“டேட்.” என்று அவள் கிசுகிசுப்பாக ஏதோ சொல்ல வர, “ஷட்அப்..” என்றவர் தன் உதவியாளனிடம் திரும்பி “எல்லாத்தையும் எடுத்துட்டு போய் காரில் வை..” என்று கட்டளை குரலில் சொல்லி விட்டு அவளை அழைத்துக் கொண்டு உணவுப் பகுதியை நோக்கி செல்ல முயன்றார் ஆளவந்தான்.
 
 
“எனக்கு சாப்பிடும் மூட் இல்லை டேட்.. நான் வீட்டுக்கு போறேன்..” என்று நேஹா சொல்லவும் “நீ வீட்டுக்கு போக ஏன் இவ்வளவு துடிக்கறேன்னு எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா..? அவன் பின்னே போக தானே..!” என அவர் மற்றவர்களுக்கு கேட்காத குரலில் மகளை கண்டித்தார்.
 
 
“நோ டேட்.. நீங்க நினைக்கறது போல எதுவும் இல்லை.. நான் வீட்டுக்கு போறேன்..” என்று நேஹா தொடங்கவும் “வீட்டுக்கு போய் என்ன செய்யப் போறே..? இங்கே நாம விளையாட வா வந்திருக்கோம்..! இல்லை என்ன செய்யறதுன்னு தெரியாம டைம் ஸ்பென்ட் செய்ய வந்திருக்கோமா..! இப்போ இங்கே இருக்க அத்தனை பெரிய மனுஷங்களும் எதுக்கு சாப்பிட போயிருக்காங்க..
அவங்களுக்கு எல்லாம் சாப்பிட வசதி இல்லையா என்ன..? இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மிஸ்டர் மந்திரமூர்த்தி கூட தனியா பேச ஒரு வாய்ப்பு கிடைச்சிடாதானு பார்க்க தான்..
 
 
இது அவர் ஏற்பாடு செஞ்சிருக்கா லஞ்ச், இங்கே இருக்க கடைசி கெஸ்ட் கிளம்பும் வரைக்கும் அவர் ஹாலில் தான் இருப்பார்.. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அவரோட பேசி பழகி நட்பு உருவாக்கிக்க தான்.. அவருக்கு யங்ஸ்ட்ரஸை ரொம்ப பிடிக்கும்.. அவங்க தொழிலில் ஆர்வமா இருக்கறதை பார்த்தா அவங்க கூட ஆர்வமா பேசுவார்..
 
 
போன வருஷம் தான் நீ மீட்டிங் வரலை.. உடம்பு சரியில்லை, அது இதுன்னு காரணம் சொன்னே.. இந்த முறை நீ அவரை பார்த்து பேசறே அவ்வளவு தான்..” என்று மகளின் விருப்பு வெறுப்பை பற்றி எல்லாம் எப்போதும் கவலைப்படாத ஆளவந்தான் இப்போதும் அவளின் கையைப் பிடித்து தரதரவென அந்த பகுதிக்கு இழுத்துச் சென்றார்.
 
 
அதேநேரம் மருத்துவமனைக்குள் நுழைந்தான் வர்மா. நேராக ஆபரேஷன் நடக்கும் இடத்திற்கு வர்மா வரவும், அங்கு பாலுவோடு சேர்ந்து தர்ஷன் நின்றிருந்தான்.
 
 
வேறு எந்த பேச்சும் இல்லாமல் எடுத்ததும் “ஹவ் இஸ் ஷி.?” என்ற வர்மாவை பார்த்து தர்ஷன் “ஆப்ரேஷன் நடந்துட்டு இருக்கு..” எனவும் அவன் கைகளை வர்மா பிடித்துக் கொண்டான்.
 
 
தர்ஷனுக்கு அவன் பதட்டம் தெளிவாக புரிந்தது.. அதில் வர்மாவின் கையை இறுக்கமாக பிடித்தவன் “பயப்படற அளவுக்கு எதுவுமில்லை, நம்ம டாக்டர்ஸ் பார்த்துப்பாங்க..” என்றான்.
 
 
அதற்கு ஒரு தலையசைப்பை பதிலாக கொடுத்து விட்டு வர்மா நின்றுவிட.. அதே நேரம் ஆப்ரேஷன் முடிந்து மருத்துவர் வெளியே வந்தார. அவரை நிலா வேகமாக நெருங்கவும், மற்றவர்களும் எதிர்பார்ப்போடு அவரின் அருகில் சென்றனர்.
 
 
“ஆப்ரேஷன் சக்சஸ், பேஷன்ட் நல்லா இருக்காங்க.. அவங்களை ஒரு மணி நேரத்தில் ரூமுக்கு மாத்திடுவாங்க, அதுக்கு பிறகு நீங்க போய் பார்க்கலாம்.. ஆனா அவங்களை தொந்தரவு செய்ய வேண்டாம்.. “ என்று விட்டு தர்ஷனை பார்த்தவர் “எனக்கு ஒரு முக்கியமான அப்பாயிண்ட்மெண்ட் இருக்கு, நான் கிளம்பணும்.. “ என்றார்.
 
 
இன்று அவர் விடுப்பு எடுத்து இருக்க.. வர்மாவின் கட்டளைக்காக வேறு வழியின்றி அவரை தொந்தரவு செய்து வரவழைத்து இருந்த தர்ஷன் குற்ற உணர்வோடு அவரின் பின்னே சென்று “சாரி மிஸ்டர் சித்திக்.. நா ன் உங்களை ரொம்ப டிஸ்டர்ப் செஞ்சுட்டேன், இன்னைக்கு நீங்க லீவுன்னு தெரிஞ்சும் நான் டிஸ்டர்ப் செய்ய வேண்டிய சிட்சுவேஷன்..” என்று மனமார்ந்த மன்னிப்பு கேட்கவும், “ஹே நோ இஸ்யூ, நம்ம பீல்டில் இதெல்லாம் சகஜம் தர்ஷன்..” என்று அவன் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார் சித்திக்.
 
 
இப்போது நிலாவின் பக்கம் தன் கவனத்தை திருப்பிய வர்மா நேராக அவள் முன் சென்று நின்றான். உமா பிழைத்து விட்டதாக மருத்துவர் சொன்ன நொடி முதல் தன் மார்பில் கைவைத்து ஒரு ஆசுவாச பெருமூச்சை வெளியிட்டவாறே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தவளுக்கு நேற்று நள்ளிரவில் இருந்து அவள் அனுபவித்த வலியும் துடிதுடிப்பும் காணாமல் போய் அங்கு ஒரு நிம்மதி பரவியது.
 
 
அதில் விழிமூடி நிலா அப்படியே அமர்ந்திருக்க.. “என்னாச்சு திடீர்னு எப்படி ஹார்ட் அட்டாக..?” என்றான் வர்மா.
 
 
அந்தக் குரலில் விழிகளை திறந்தவள் வர்மா, தனக்கு எதிரில் நின்றிருப்பதை கண்டு மெதுவாக எழுந்து நிற்க.. “பரவாயில்லை உட்கார்..” என்றான் அவளின் நிலை உணர்ந்தவனாக வர்மா.
 
 
ஆனாலும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்றவள் சரியாக நிற்க முடியாமல் கை, கால்களில் உண்டான நடுக்கத்தோடு தடுமாறவும், “உன்னை உட்கார சொன்னேன்..” என்று சிறு அதட்டல் போட்டவன் நிலா அதில் பயந்து அமரவும், அவளுக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான் வர்மா.
 
 
“ஹ்ம்ம் இப்போ சொல்லு என்னாச்சு..?” என்றான் வர்மா. அதில் அவ்வளவு நேரம் இடைவெளி எடுத்திருந்த அவளின் அழுகை மீண்டும் வெடித்துக் கொண்டு கிளம்பியது.
 
 
“நே.. த்த.. நேத்து.. நைட் நான்.. “ என்று அவள் தடுமாறவும், இப்போது வரை அவள் கையில் அரசு மருத்துவமனையில் கொடுத்திருந்த மருந்து சீட்டை இறுக்கமாக பிடித்துக் கொண்டிருப்பதை கவனித்த வர்மா அதை வெடுக்கென நிலாவின் கையில் இருந்து பறித்து இருந்தான்.
 
 
“இந்த மெடிசன்ஸ் எல்லாம் காஸ்ட்லி தான்.. ஆனா ஒரு பத்தாயிரம் தான் செலவாகும்.. அதுக்கு மேலே போக வாய்ப்பில்லை, நேத்து தான் உனக்கு சேலரி வந்திருக்கு.. ஆனா ஹாஸ்பிடலில் நீ இதை வாங்க கூட என் கையில் காசு இல்லன்னு சொல்றே.. 1 என்ன நடக்குது இங்கே..?” என்றான் அழுத்தம் திருத்தமாக நீ அனைத்தையும் சொல்லித்தான் ஆக வேண்டும் என்ற குரலில் வர்மா.
 
 
நேற்று தான் அவளுக்கு நாற்பதாயிரம் சம்பளமாக கொடுத்திருந்தார்கள்.. அப்படி இருக்கும் போது இன்று காலையில் மருந்து வாங்க பத்தாயிரம் இல்லை என சொன்னால் யாருக்குத்தான் கோபம் வராது.
 
 
அதில் வர்மாவை தயக்கத்தோடு விழிகளை உயர்த்திப் பார்த்தவள் நேற்று இரவு நடந்ததை சொல்லத் தொடங்கினாள்.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்..
 
 
CNM - 11
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
This post was modified 2 weeks ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
 
 
சித்திரை – 12
 
நிலா அழுகையோடு அமர்ந்திருக்க, அவளின் அருகில் அமர்ந்து வர்மா நேற்றைய நிகழ்வை கேட்டுக் கொண்டிருந்தான். சிறு தயக்கத்திற்குப் பின் நிலா நேற்று நடந்ததைப் பற்றிச் சொல்ல தொடங்கும் முன் அவளின் அருகில் வந்து நின்றிருந்தான் தர்ஷன்.
 
 
சிறு ட்ரேயில் வைத்த இரண்டு காபி கோப்பைகளோடு வந்து நின்றவன், முதலில் வர்மாவுக்கு ஒன்றை கொடுக்க.. “ஹே, தேங்க்ஸ் தர்ஷ்.. இப்போ எனக்கு இது நிஜமாவே தேவைப்படுது..” என எடுத்துக் கொண்டான் வர்மா.
 
 
அடுத்து தர்ஷன் காபியை நிலாவின் முன் நீட்ட.. அதை இப்போது எடுத்துக் கொள்ளும் மனநிலையில் இல்லாதவள், ‘வேண்டாம்’ என்பது போலவே விழிகளைத் துடைத்தபடியே தலையசைத்தாள் நிலா.
 
 
அதைக் கண்டு அவளை முறைத்தவன் “தேன்நிலா..” என்று அழுத்தத்தோடு அழைக்கவும், அந்தக் குரலில் இருந்த கோபத்தில் பார்வையை உயர்த்தி அவனைப் பார்த்தாள் நிலா. “உன் முன்னே காபி டிரேவோட நிற்கறானே.. இவன் இந்த ஹாஸ்பிடல் ஓனர், இப்போ இப்படி அவன் உன் முன்னே நிற்கறது உனக்காக இல்லை எனக்காக.. இது என் மரியாதை சம்பந்தப்பட்ட விஷயம் அதை எடு..” என்றான் கடுமையான குரலில் வர்மா.
 
 
அதில் உண்டான லேசான பதட்டத்தோடு “சாரி..” என்றப்படியே வேகமாக அந்தக் காபியை நிலா எடுத்துக் கொள்ளவும், “ஹே, நோ இஷ்யூ..” என்றவாறே வர்மாவின் பக்கம் திரும்பி “ஏன்டா..?” என்றான் தர்ஷன்.
 
 
ஆனால் அதற்குப் பதில் சொல்லாமல், “உனக்கு..?” என வர்மா தர்ஷனிடம் கேட்கவும், தன் பின்னே விழியால் காண்பித்தான் தர்ஷன். அந்தப் பக்கம் வர்மா பார்க்க.. ஒரு ஊழியர் தர்ஷனுக்கும் பாலுவுக்குமான காபியை வைத்தபடி அங்கே நின்று கொண்டிருந்தார்.
 
 
அதில் பாலுவை பார்த்து எடுத்துக்கோ என்பது போல் சைகை செய்த வர்மாவின் கவனம் இப்போது நிலாவின் பக்கம் திரும்பியது. அவர்கள் இருவரும் பேசட்டும் எனத் தனிமை கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான் தர்ஷன்.
 
 
இரண்டு நாட்களுக்கு முன்.. அடுத்து வரவிருக்கும் மூன்று டெண்டர் சம்பந்தமான வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருந்ததால் பாலுவுக்கும் நிலாவுக்கும் நேரம் இறக்கை கட்டி பறந்து கொண்டிருந்தது.
 
 
காலை முதல் தொடர் வேலைகளில் இருந்தவர்கள், மாலை அனைத்தையும் முடித்துக் கொண்டு கிளம்பும் போது தான் பாலுவுக்கு நினைவு வர.. “ஹே மூன், கேட்கவே மறந்துட்டேன்.. உன் பேங்க் அக்கவுண்ட் டீடெயில்ஸ் கொடு..” என்றான் பாலு.
 
 
“அக்கவுண்ட் டீடெயிலா..?” என்று நிலா புரியாமல் கேட்கவும், “பேங்க் டீடெயில்ஸ் தானேம்மா கேட்டேன்.. ஏதோ பேங்க்கையே கொள்ளை அடிக்கக் கூப்பிட்டது போல எதுக்கு இப்படி ஒரு ரியாக்ஷன்..?” என்றான் பாலு.
 
 
“ஆனா எனக்கு தான் பேங்க்கில் அக்கவுண்ட் இல்லையே..!” என்று நிலா சாதாரணமாகத் தோள்களைக் குலுக்கியப்படி கூறவும், “என்னது..?” என்று அவளை நம்பாமல் பார்த்தவன், “விளையாடாதே மூன்.. உனக்கு நாளைக்கு மறுநாள் சேலரி போடணும், அக்கவுண்ட் டீடெயில்ஸ் கொடு..” என்றான் பாலு.
 
 
அதில் அவன் கேட்டதை விடுத்து “என்னது நாளைக்கு அடுத்த நாள் எனக்குச் சேலரியா..?” என்று நிலா குதுகலிக்க.. “ஆமாமா.. அதுக்குத் தான் பேங்க் டீடெயில்ஸ் கேட்கறேன்..” என்றான் பாலு.
 
 
“நிஜமாவே எனக்குப் பேங்க்கில் அக்கவுண்ட் இல்லை..” என்றாள் இப்போது லேசான பதட்டத்தோடு நிலா. “ஏய் விளையாடாதே..!” என்று தொடங்கிய பாலு, நிலாவின் முகத்தில் இருந்த தீவிரத்தைக் கண்டு “நிஜமா நான் சொல்றியா..? உண்மையாவே உனக்குப் பேங்க்கில் அக்கவுண்ட் இல்லையா..?” என்று நம்பாமல் மீண்டும் மீண்டும் பாலு அதையே கேட்டுக் கொண்டிருக்க.. இப்போது லேசாகச் சிரித்திருந்த நிலா “பேங்க்கில் போடும் அளவுக்கு என்கிட்டே காசு ஏது பாஸ்..?” என்று முகத்தில் படர்ந்த சோகத்தோடு சொல்லி முடித்தாள்.
 
 
அதைக் கேட்டுக் கொண்டிருந்த பாலுவுக்கு மனம் வாடியது. சிரித்துக் கொண்டே கூறினாலும் அந்த வார்த்தைகளில் உள்ள வலி அவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.
 
 
“சரி இன்னும் ஒரு நாள் இருக்கு, அக்கவுண்ட் ஆரம்பிக்கறது அவ்வளவு பெரிய விஷயமில்லை.. நாளைக்கு நீ பேங்க்குக்குப் போய்ப் புதுசா ஒரு அக்கவுண்ட் கிரியேட் செஞ்சுடு..” என்றான் பாலு.
 
 
“ஆனா எனக்கு இதைப் பத்தி எதுவும் தெரியாதே..!” என்ற நிலாவை அவன் யோசனையாகப் பார்த்து “சரி நீ ஆபீஸுக்கு வா, நாம வேலை முடிஞ்சதும் பேங்க் கிளம்பி போவோம்.. ஒரு இரண்டு மணி நேர வேலை தான், சீக்கிரம் முடிச்சுடலாம்..” என்றான் பாலு.
 
 
“சரி..” என்றிருந்த நிலாவுக்கும் பாலுவுக்கும் மறுநாள் அதற்கான சந்தர்ப்பமே அமையவில்லை. அத்தனை வேலைகள் அவர்களைச் சூழ்ந்து கொண்டிருந்தது.
 
 
இதில் அவர்கள் பேங்க் பற்றி மறந்தே போயிருந்தனர். இரண்டாம் நாள் காலை தான் பாலுவுக்கு மீண்டும் அது நினைவுக்கு வர.. அன்று அவர்களால் வெளியே எங்கும் செல்லவே முடியவில்லை. மதியத்திற்கு மேல் அலுவலகத்தில் உள்ள அனைவருக்கும் அவர்களின் ஊதியம் போடப்பட்டுக் கொண்டிருக்க.. அப்போதே நினைவு வந்தவனாகத் தலையில் கை வைத்துக் கொண்டான் பாலு.
 
 
‘இனி என்ன செய்வது..?’ எனப் புரியாமல் விழித்தவன், நேராக வேறு வழியின்றி வர்மாவின் முன் சென்று நின்றான் பாலு. தன் முன் வந்து நின்றவனை வர்மா கேள்வியாக நிமிர்ந்து பார்க்க.. பாலுவின் பார்வை ஒருமுறை அங்கு அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த நிலாவின் மேல் படிந்து மீண்டது.
 
 
அதில் அவளையும் திரும்பி பார்த்துக் கொண்ட வர்மா “எஸ்..” என்று பாலுவை பார்த்து கேட்க.. “சார் ஒரு இஷ்யூ..” என்றான் தயக்கத்தோடான குரலில் பாலு.
 
 
“என்ன..?” என்று தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அவன் சொன்ன விதத்தில் நெற்றியை சுருக்கினான் வர்மா. “அது சார் மூன்.. மப்ச் நிலாவுக்குப் பேங்க்கில் அக்கவுண்ட் இல்லை..” என்று பாலு தொடங்கவும், “அதுக்கு..?” என்றான் அப்போதும் புரியாமல் வர்மா.
 
 
“சார் இன்னைக்குச் சேலரி போடணும்..” எனவும், எரிச்சலோடு திரும்பி நிலாவை பார்த்தவன் “இதுக்குக் கூட நான் தான் வரணுமா..? அக்கவுண்ட் இல்லைன்னு தெரிஞ்சா ஓபன் செய் மேன்..” என்று கடுப்போடு கூறினான் வர்மா.
 
 
“இல்லை சார் டூடேஸ் முன்னே தான் எனக்கு இதைப் பத்தி தெரிய வந்தது.. நேத்து கூட்டிட்டு போய் ஓபன் செய்யலாம்னு தான் இருந்தேன், ஆனா போக நேரம் தான் அமையலை, அவளுக்கு இதைப் பத்தி எதுவுமே தெரியலை..” என்றவன் சுருக்கமாக அவள் கூறியதையும் சேர்த்து சொல்லி முடிக்க.. இப்போது வேறு எதுவும் பேச விரும்பாமல் நெற்றியை யோசனையோடு ஒற்றை விரலால் கீறி விட்டுக் கொண்டவன், “அதுக்காகச் சேலரி கொடுக்காம இருக்க முடியாது இல்லையா, இந்த ஒருமுறை கேஷா கையில் கொடுத்துடு.. நெக்ஸ்ட் வீக்குள்ளே ஒரு அக்கவுண்ட் ஓபன் செஞ்சு கொடுத்துடு..” என்று இந்தப் பேச்சை அதோடு முடித்துக் கொண்டான் வர்மா.
 
 
அதன்படி அன்று மாலை நிலாவுக்கு அவளின் அந்த மாத ஊதியம் கையில் மொத்தமாகக் கொடுக்கப்பட்டது. பாலுவுக்கு நாற்பதாயிரம் ரூபாயை மொத்தமாக அவளிடம் இப்படிக் கையில் கொடுக்கத் தயக்கமாகத் தான் இருந்தது.
 
 
‘பேங்கில் இருந்தாலாவது பணம் பாதுகாப்பாக இருக்கும். இந்தப் பெண் இவ்வளவு பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்யும்..?’ என்று யோசித்தவன், “பத்திரமா வீட்டுக்குப் பணத்தை எடுத்துட்டு போயிடுவியா நிலா..?” என்றான்.
 
 
ஆனால் தன் கையில் இருந்த பணத்தைத் தான் நம்ப முடியாத திகைப்போடும், ஒரு இனிய அதிர்வோடும் விழி விரிய திறந்த வாய் மூடாமல் பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் நிலா. சத்தியமாக இவ்வளவு பணம் தனக்கு மாத சம்பளமாகக் கிடைக்குமென அவள் கனவிலும் ஒரு துளி கூட நினைத்ததில்லை.
 
 
முன்பு அவள் செல்ல இருந்த வேலைக்குச் சம்பளமாகப் பத்தாயிரம் ரூபாய்க் கொடுப்பதாகத் தான் குறிப்பிடப்பட்டிருந்தது. இங்கு வேலை கிடைத்ததும் அதே அளவு வருமானம் தான் தனக்கு வரும் என்று எண்ணிக் கொண்டிருந்தவள், அதற்கு நான்கு மடங்கு அதிகமாகத் தன் கையில் கொடுக்கப்பட்ட பணத்தைத் திகைப்பும் நம்ப முடியா அதிர்வுமாகப் பார்த்து கொண்டிருந்தாள் நிலா.
 
 
“இவ்வளவும் எனக்கா..? எனக்கே எனக்கா..?” என்றவளின் கேள்வியில் புன்னகைத்து, “இல்லை அதில் பாதி எனக்கு..” என்றான் பாலு. “ம்ப்ச் விளையாடாதே பாலு.. நிஜமா தான் கேட்கறேன், சொல்லு இவ்வளவும் எனக்கா..?” என்று அவள் மீண்டும் கேட்கவும், “ஆமா, உனக்குத் தான்.. நீ என்ன வேலை செய்றேனாவது உனக்குத் தெரியுமா..?” என்று கேட்டவன் அவளின் பதவியைப் பற்றிச் சுருக்கமாக நிலாவுக்குப் புரிய வைக்க.. சந்தோஷத்தில் ஒருமுறை துள்ளி குதித்தவள் அப்படியே அந்தப் பணத்தை மார்போடு அணைத்தபடி அங்கிருந்த இருக்கையில் சோர்ந்து போய் அமர்ந்தாள் நிலா.
 
 
அவளின் கலவையான உணர்வு புரிய, அமைதியாக நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான் பாலு. “இவ்வளவு பணத்தை.. இவ்வளவு பணத்தை எல்லாம் இதுவரை மொத்தமா நான் பார்த்ததே இல்லை பாலு..” எனும் போதே நிலாவுக்கு விழிகள் கலங்கியது.
 
 
அது அவனுக்கும் சரியாகப் புரிய.. “மொத்தமா நீ எடுத்துட்டு பத்திரமா வீட்டுக்கு போயிடுவியா மூன்..? எதுக்கும் ஆபீஸில் பாதிப் பணத்தை வெச்சுடேன், இரண்டு நாளில் பேங்க்கில் நாம அக்கவுண்ட் ஓபன் செஞ்சு போட்டுக்கலாம்.. இப்போதைக்கு அவசர தேவைக்கு மட்டும் கொஞ்சம் பணம் கையில் வெச்சுக்கோ..” என்றான் பாலு.
 
 
“இல்லை, நான் மட்டுமில்லை.. எங்க அம்மா கூட இவ்வளவு பணத்தை மொத்தமா பார்த்ததே இல்லை பாலு.. அவங்களுக்கும் இந்தச் சந்தோஷத்தை நான் கொடுக்கணும், நான் மொத்தமா வீட்டுக்கு எடுத்துட்டு போறேன்..” என்றாள் நிலா.
 
 
“உன்னால் கொண்டு போயிட முடியுமா..?” என அப்போதும் அவன் கேட்க, “அதெல்லாம் கொண்டு போய்டுவேன்.. ஒரு பிரச்சனையும் இல்லை..” என்றவள், சட்டென விழிகள் கலங்க “தேங்க்ஸ் பாலு..” என்றாள் நிலா.
 
 
“ஹேய் எனக்கு எதுக்குத் தேங்க்ஸ் சொல்றே..? சார் கொடுக்கச் சொன்னார், நான் கொடுத்தேன்.. நீ தேங்க்ஸ் சொல்லணும்னா சாருக்கு தான் சொல்லணும்..” என்றான் பாலு. அதற்கு ‘ஆம்’ என்பதாகத் தலையசைத்தவள் பின் ‘இல்லை’ என மறுப்பாகத் தலையசைத்து, “தேங்க்ஸ் சொல்லணும்னா நான் பாட்டி மேடமுக்கு தான் சொல்லணும்.. இவருக்கு ஏன் சொல்லணும்..? இவரா எனக்கு வேலை கொடுத்தார்..?” என்றாள் நிலா.
 
 
“மேடம் சொல்லி தான் உன்னை வேலையில் வெச்சு இருக்காருன்னு தோணுதா உனக்கு..? சார் நினைச்சிருந்தா அன்னைக்கே உன்னை வேலையை விட்டு விரட்டி இருப்பார், போனா போகுதுன்னு உன்னை இருக்க விட்டு இருக்கார்..” என பாலு கூறவும், “அதுவும் பாட்டி மேடமுக்கு பயந்து..” என்றாள் நிலா.
 
 
“ஒரு மாசம்.. முழுசா ஒரு மாசம் அவரைப் பக்கத்தில் இருந்து பார்த்து இருக்கே.. இன்னும் உனக்குச் சாரை பத்தி புரியலை இல்லை.. யாருக்கோ பயந்து உன்னை வேலையில் வெச்சுக்கும் ஆள் போலவா உனக்கு அவரைப் பார்த்தா தெரியுது..?” என்றான் பாலு.
 
 
“இல்லை தான்..” என்று இழுத்தவள், “ஆனா ஆமா..” எனவும் சேர்த்து கூற அவளின் அந்த வகையான பேச்சில் சிரித்து விட்டவன், “சரி நேரமாகுது கிளம்பு, இருட்டி போச்சுனா பணம் எடுத்துட்டுப் போறது ரிஸ்க்..” என்றான் பாலு.
 
 
“சரி..” எனத் தன் கைப்பையின் அடியில் பணத்தை அடுக்கியவள், அதற்கு மேல் மற்ற பொருட்களை வைத்துக் கொண்டு “நான் கிளம்பறேன்..” என்று எழுந்து நிற்க.. “நான் வேணும்னா உன்னை வீட்டில் விடட்டுமா மூன்..?” என்றான் பாலு.
 
 
அவளுக்கும் சரி எனச் சொல்லத்தான் ஆசை. ஆனால் அதன் பின் வீட்டில் நடக்கும் களைபரங்களை எண்ணும் போது அவளால் உடனே சம்மதிக்க முடியாமல் மறுப்பாக நிலாவின் தலை அசைந்தது. அவளின் அந்தத் தயக்கத்தோடான மறுப்பு பாலுவுக்கும் எதற்கு எனப் புரிய.. “சரி பார்த்து போ.. வீட்டுக்குப் போனதும் எனக்கு ஒரு கால் செய்..” என்றான் பாலு.
 
 
அதன்படி வீட்டுக்குச் சென்றவள், முதல் வேலையாக பாலுவுக்கும் அழைத்துச் சொல்லி விட்டு மற்ற வேலைகளைச் செய்து கொண்டிருந்த உமாவை நெருங்கி “ம்மா.. உங்ககிட்ட ஒண்ணு காட்டணும் சீக்கிரம் வாங்க..” என்று ஆர்வத்தோடு அழைத்தாள் நிலா.
 
 
“எதுவா இருந்தாலும் அப்புறம் நிலா, முதலில் வேலையை முடிச்சுடலாம்..” என்றார் உமா. “உங்ககிட்ட இப்போவே எனக்கு அதைக் காட்டணும்..” என்றாள் நிலா.
 
 
“வேலை நடக்குதோ இல்லையோ.. வெட்டி கதை மட்டும் சிறப்பா நடக்குது..” என்று அங்கு வந்தப்படியே சிடுசிடுத்தார் ராணி. அதில் இருவரும் அப்படியே அமைதியாகி வேலையில் கவனம் செலுத்தினர்.
 
 
அதன் பின் இரவு வரை இருவருக்கும் நேரமே அமையாமல் போனது. அனைவரும் சாப்பிட்டு முடியும் வரை சமையலறையில் வேகமாகச் சுழன்று கொண்டிருந்த உமாவின் சோர்வு புரிந்து “ம்மா.. எல்லாரும் சாப்பிட்டு முடிச்சாச்சு, நீங்க போய்க் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க.. நான் இதெல்லாம் சுத்தம் செஞ்சுட்டு வரேன்..” என்றாள் நிலா.
 
 
“இல்லை, நீயும் தான் ரொம்பச் சோர்வா தெரியறே.. ஆபீஸில் நிறைய வேலையா..? இரண்டு பேரும் சேர்ந்து செய்வோம், சீக்கிரம் முடிஞ்சிடும்..” என்றவரை மறுப்பாகப் பார்த்தவள், “அது எல்லாம் வேண்டாம், இப்போ தான் உங்க உடம்பு கொஞ்சம் சரியாகி இருக்கு, திரும்ப அதிக நேரம் நின்னு மறுபடியும் உடம்பை கெடுத்துக்காதீங்க.. சொன்னா கேளுங்க..” என்று லேசான கண்டிப்போடு கூறி அவரை அறைக்குள் அனுப்பி வைத்து விட்டு, சமையலறையை முதலில் சுத்தம் செய்யத் தொடங்கினாள் நிலா.
 
 
பசி வேறு அவளுக்கு வயிற்றைக் கிள்ளியது. சாப்பிட என்ன மீதம் இருக்கிறது என்று பார்த்தவள், மதியம் செய்திருந்த சாதமும் ரசமும் மட்டும் ராணி இவர்களுக்கு என ஒதுக்கி வைத்திருப்பதைக் கண்டு அதை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றாள்.
 
 
அங்கு அதற்குள் களைப்பில் உமா உறங்கி விட்டிருக்க.. இருவரும் சேர்ந்து சாப்பிடலாம் என்று அறைக்குள் எடுத்துக் கொண்டு வந்திருந்தவள், இப்போது அவரை எழுப்ப மனமில்லாமல் சாதத்தை அங்கேயே வைத்து விட்டு வெளியில் சென்றாள்.
 
 
மீதம் உள்ள வேலைகளை முடித்துக் கொண்டு வந்து பிறகு சாப்பிட்டுக் கொள்ளலாம் என எண்ணியவள், சமையலறையில் சென்று பாத்திரங்களைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள்.
 
 
வீடு மொத்தமும் இருளில் மூழ்கி இருக்க.. சமையலறையில் மட்டும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அங்குத் தன் வேலையிலேயே நிலா கவனமாக இருக்க.. அதே நேரம் “இன்னும் இங்கே என்ன செஞ்சுட்டு இருக்கே..?” என்றவாறே அங்கு வந்து பின்னாலிருந்து அவளை அணைத்தான் வெங்கட்.
 
 
அதில் பதறி விலகியவள், அங்கிருந்து வெளியேற முயல.. “ஹேய் என்னாச்சு..? சாப்பிட என்ன இருக்குன்னு கேட்க வந்தேன்..” என்றான் வெங்கட். “அது..” என்று தடுமாறியவள், “அம்.. அம்மாவை கூப்பிடறேன்..” என அங்கிருந்து வேகமாகச் செல்ல முயல.. “ஏன் நீ கொடுக்க மாட்டியா..? எனக்குப் பசிக்குது, இப்போவே செஞ்சு கொடு..” என்றான் வெங்கட்.
 
 
அவளால் முடியாது என மறுக்கவும் முடியவில்லை. இது போல் ஒருமுறை வெங்கட் கேட்டு நிலா மறுத்தது பெரும் பிரச்சனையாகி இருந்தது வேறு நினைவுக்கு வர.. “ச.. சரி நீங்க அங்கே உட்.. உட்காருங்க..” என்றாள் தடுமாற்றமாக நிலா.
 
 
அதற்குச் சரி என்பது போன்ற தலையசைப்போடு சென்று வெங்கட் உணவு மேஜையில் அமர்ந்து கொள்ள.. பதட்டத்தில் கைகள் லேசாக நடுங்க தோசை ஊற்றத் தொடங்கினாள் நிலா.
 
 
அவளின் கவனம் முழுக்க உணவு மேஜையில் அமர்ந்திருந்தவனின் மேலேயே இருக்க.. அடிக்கடி ஓரப்பார்வையில் பதட்டமாக அவனைப் பார்த்துக் கொண்டவள், மீண்டும் அவன் சமையல் அறைக்குள் வந்துவிடக் கூடாதே என்ற பதட்டத்தோடே ஒவ்வொன்றையும் செய்து கொண்டிருந்தாள் நிலா.
 
 
முதல் இரண்டு தோசை ஊற்றிக் கொடுக்கும் வரை திரும்பி திரும்பி பார்த்தபடியே இருந்தவள், வெங்கட் அங்கேயே அமர்ந்திருப்பதைக் கண்டு உண்டான நிம்மதியோடு அடுத்தத் தோசையில் கவனம் செலுத்த.. “ஒரு தோசை ஊத்த உனக்கு இவ்வளவு நேரமா..?” என்று வெகு அருகில் கேட்ட வெங்கட்டின் குரலில் பதறி தன் கையில் இருந்த தோசை கரண்டியை கீழே தவறி விட்டிருந்தாள் நிலா.
 
 
“ஏய் என்னாச்சு..?” என்று அவன் ஒன்றுமறியா பாவனையில் கேட்க.. “இல்லை நீங்க அங்கே உட்காருங்க, நான் எடுத்துட்டு வரேன்..” என்றாள் முகம் வேர்க்க பயத்தோடு நிலா.
 
 
“ஏன் நான் இங்கே நின்னுட்டு சாப்பிடறேன், உனக்கும் இங்கேயும் அங்கேயும் நடக்கும் வேலை குறையும் இல்லை..” என்று அவன் கூறவும் பதட்டத்தில் நிலாவுக்குக் கால்கள் நடுங்கியது.
 
 
அவசரத்திற்கு இங்கிருந்து ஓட கூட அவளால் முடியாது. அவளின் வழியை மறிப்பது போல் நின்றிருந்தான் வெங்கட். பல நாட்களுக்குப் பின் இப்படி வசமாக அவனிடம் தனியே சிக்கிக் கொண்டதில் அவளுக்கு மனம் பதறத் தொடங்கியது.
 
 
பல நாட்களாகத் தனிமையில் அவனைச் சந்திக்கும் தருணங்களை முயன்று தவிர்த்துக் கொண்டிருந்தாள் நிலா. வெங்கட் வீட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து அனைத்து வேலைகளையும் முடித்துக் கொண்டு அறைக்குள் சென்று பதுங்கிக் கொள்வாள் நிலா.
 
 
வெங்கட்டும் இவ்வளவு சீக்கிரம் பெரும்பாலும் வீட்டிற்கு வருவதில்லை. இன்று இப்படி வசமாகச் சிக்கிக் கொள்வோம் என எதிர்பாராத நிலா செய்வதறியாமல் திகைத்து நிற்க.. “என்ன நிலா தோசை கருகறது கூடத் தெரியாம கனவு கண்டுட்டு இருக்கே.. கனவில் யாரு நானா..?” என்றான் வெங்கட்.
 
 
“ஹாங்.. இல்லையில்லை..” என்று பதறியவள், அடுத்தத் தோசை ஊற்ற மாவை எடுத்துப் பதட்டத்தில் அதையும் தவறு விட்டிருந்தாள். “அச்சோ..” எனக் கீழே சிந்தி இருந்ததைக் கண்டு கவலையானவள், அதைக் குனிந்து சுத்தம் செய்ய முயல.. அவளின் இடையில் கை கொடுத்து தன்னோடு சேர்த்து அணைப்பது போல் இறுக்கிக் கொண்டவன், “நிலா.. நான் சொன்ன மாதிரி மட்டும் நீ நடந்துகிட்டா உனக்கு இவ்வளவு கஷ்டமே இல்லை தெரியுமா..!” என்று காதோரம் கிசுகிசுத்தான்.
 
 
அதில் அவனிடமிருந்து வேகமாக அவள் விலக முயலவும், “என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு நிலா.. நான் ரொம்ப நாளா காத்திருக்கேன், அதிரடியா அன்னைக்கு போல் என்னை எதையும் செய்ய வெச்சுடாதே..” என்றான் வெங்கட்.
 
 
இதில் நிலாவுக்கு அழுகையே வந்து விட்டது. அவனிடமிருந்து விலகப் போராடியவள், கண்கள் கலங்க, “விடுங்க, என்னை விடுங்க..” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே “என்ன நடக்குது இங்கே..?” என்று ராணியின் குரல் சமையலறையின் வெளியில் இருந்து கேட்டது.
 
 
“சாப்பிட்டுட்டு இருக்கேன் ம்மா..” என்றான் வெங்கட். “ஆனா பார்த்தா அப்படித் தெரியலையே..!” என்று கீழே சிந்தி இருந்த மாவையும் கருகி இருந்த தோசையையும் கண்டு ராணி முறைப்போடு நிலாவை பார்த்துக் கொண்டிருக்க.. “தூக்க கலக்கத்தில் எல்லாம் தப்புத் தப்பா செஞ்சுட்டு இருக்காம்மா..” என்றான் வெங்கட்.
 
 
“ஆமா கலெக்டர் மேடம் ரொம்ப டயர்டா தான் இருப்பாங்க..” என்று சிடுசிடுத்த ராணி, “செய்யறது ஒரு வேலை, அதையும் ஒழுங்கா செய்யத் துப்பில்லை..” என்றார்.
 
 
“ஆமாம்மா.. எவ்வளவு நேரமா பசியில் இருக்கேன் தெரியுமா.. ஒரு தோசை கொடுக்க அவ்வளவு நேரம் செய்யறா.. அதான் நானே இங்கே வந்து வாங்கிக்கலாம்னு பார்த்தா அதையும் கருக்கி வெச்சு இருக்கா.. நிம்மதியா ஒரு வாய் சாப்பிட முடியுதா..?” என்று கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி அவளை ராணியிடம் சிக்க வைத்தான் வெங்கட்.
 
 
இதில் தொடர்ந்து ராணி வசைப்பாட தொடங்கவும், அது கூட அப்போது நிலாவுக்குப் பெரிதாகத் தோன்றவில்லை. இப்படியே திட்டிக் கொண்டு இருந்தால் கூடப் பரவாயில்லை. ஆனால் இங்கேயே ராணி இருந்தால் போதுமென அவளுக்குத் தோன்றியது.
 
 
அப்படியே ஒருவழியாக வேலையை முடித்து விட்டு அறைக்குள் ஓடினாள் நிலா. இப்போதும் உமா உறங்கிக் கொண்டிருக்க.. அவரை எழுப்பவோ சாப்பிடவோ மனமில்லாமல் அமைதியாகச் சுருண்டுக் கொண்டாள் நிலா.
 
 
நள்ளிரவில் விழித்த உமா, மகள் சாப்பிடாமல் உறங்கி இருப்பதைக் கண்டு மனம் வருந்தி அவளை எழுப்ப.. சோர்வோடு உறக்கம் கலையாமல் எழுந்து அமர்ந்தவள், “சாப்பிடாமலே தூங்கிட்டியா நிலாம்மா..?” எனக் கவலை குரலில் உமா கேட்கவும், “ம்ப்ச்..” எனச் சிணுங்கினாள் நிலா.
 
 
“கொஞ்சமா சாப்பிட்டு படுத்துக்கோ.. காலையில் ஆபிஸ் போகணும் இல்லை..” என்று மகளுக்கு உமா ஊட்ட.. மறுக்க விரும்பாமல் அதை வாங்கிக் கொள்ள நினைத்த நிலாவுக்கு அப்போதே அவளின் ஊதியம் பற்றிய நினைவு வந்தது.
 
 
“ம்மா.. உங்ககிட்ட நான் ஒண்ணு காட்டணும்..” என்ற நிலா அவளின் கைப்பையை எடுத்து தன் ஊதியத்தை இரு கைக்களிலும் அள்ளி, உமாவின் முன்னே நீட்டினாள். அதை விழிகள் விரிய உமா பார்த்துக் கொண்டிருக்க.. “என் முதல் சம்பளம் ம்மா..” என்றாள் விழிகள் கலங்க நிலா.
 
 
சட்டென அவள் கையில் இருந்த பணத்தை “இவ்வளவு பணமா..? நிஜமா நீ வேலைக்குத் தான் போறியா..? இல்லை, வேற தொழில் எதுவும் செய்யறியா..?” என்றவாறே வெங்கட் தட்டி பறித்த்திருந்தான்.
 
 
அதைக் கேட்டு நிலா கண்கள் கலங்க நின்றிருக்க.. “வெங்கட்..” என்றார் அதட்டலோடு உமா. ஆனால் அப்போதும் “ஏன்டி என் கூட அட்ஜஸ்ட் செய்யச் சொன்னா பத்தினி வேஷம் போட்டே.. இப்போ இதுக்கு என்ன அர்த்தம்..?” என வெங்கட் கேட்டிருக்க.. ‘பளார்’ என அவனை அறைந்திருந்தார் உமா.
 
 
அதே நேரம் அங்கு வந்த ராணி இதைக் கண்டு கொதித்து விட்டார். “உனக்கு எவ்வளவு திமிர் இருந்தா என் பையன் மேலேயே கை வைப்பே..?” என அவர் உமாவை அடிக்கப் பாய.. இடையில் புகுந்து அதைத் தடுக்க முயன்றாள் நிலா.
 
 
அதன் பின் நடந்த தள்ளு முள்ளில் வெங்கட் அவனை நல்லவன் எனக் காண்பித்துக் கொள்ள.. நிலா செய்த பெரிய தவறை கண்டு பிடித்ததாகச் சொல்லி அந்தப் பணத்தைக் கொடுக்க.. “எனக்கு அப்போவே தெரியும்.. லைனா நடு ராத்திரியில் வரிசை கட்டி வந்தானுங்க.. நான் அன்னைக்கே சொன்னேன்.. என்னவோ என் பொண்ணு கண்ணகிக்கு அடுத்த வாரிசுன்னு சீன் போட்டா, இப்போ என்ன சொல்றே..? ஒழுங்கா காலேஜ் கூட முடிக்காத உன் பொண்ணுக்கு எப்படி இவ்வளவு பணம்..? அவ என்ன தொழில் செய்யறான்னு உனக்கும் தெரியும் தானே..! எனக்கு ஒரு சந்தேகம்..? இதெல்லாம் அவ மட்டும் தான் செய்யறாளா..? இல்லை நீயுமா..?” என்று ராணி பேசிக் கொண்டிருக்கும் போதே நெஞ்சை பிடித்துக் கொண்டு சாய்ந்தார் உமா.
 
தொடரும்..
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் 
கவி சந்திரா 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்..
 
 
CNM - 12
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
This post was modified 1 week ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
 
 
சித்திரை – 13
 
 
உமா நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சரியவும், “போதும் உன் நடிப்பு, கையும் களவுமா சிக்கினதும் நடிச்சு ஏமாத்த பார்க்காதே..” என்று வெறுப்போடு கூறியிருந்தார் ராணி.
 
 
ஆனால் உமா வலியில் துடிப்பதை கண்டு நிலா கதறி அழவும், அந்தச் சத்தம் கேட்டு வெளியில் வந்தார் சேகர்.
 
 
“என்ன இங்கே சத்தம்..? நிம்மதியா தூங்க கூட விட மாட்டீங்களா..? இது என்ன வீடா இல்லை சந்தை கடையா..?” என்று அவர் சிடுசிடுக்கவும் “நான் அன்னைக்கே சொன்னேன்.. இவ போற போக்கே சரியில்லை வீட்டுக்கு கண்ட நேரத்தில் கண்டவனும் வரான்.. நம்ம வீட்டிலும் ஒரு வயசு பொண்ணு இருக்குன்னு, நீங்க தான் கேட்கலை.. இன்னைக்குப் பாருங்க இவ்வளவு பணத்தோட வந்து நிற்கறா.. என்ன இதுன்னு கேட்டா இவளுக்கு இந்த மாசம் சம்பளமா கொடுத்தாங்களாம்.. சின்னக் குழந்தைகிட்ட சொன்னா கூட நம்பாது..” என்று ராணி, வெங்கட் கையில் இருந்த பணத்தைக் காண்பித்துச் சொல்லவும், நிலாவை திரும்பி முறைத்தார் சேகர்.
 
 
ஆனால் அதை எல்லாம் கவனிக்கும் நிலையிலேயே இல்லாத நிலா “ம்மா.. ம்மா கண்ணை திறங்க..” என உமாவை எழுப்ப முயன்று கொண்டிருக்க.. “ஏய் நிலா..” என்று அதட்டலோடு அவளை அழைத்தார் சேகர்.
 
 
அதில் அவசரமாக சேகரை நெருங்கிய நிலா, “மாமா அம்மாக்கு என்னவோ செய்யுது.. அவங்க நெஞ்சை பிடிச்சுட்டு சாஞ்சுட்டாங்க.. கண்ணைக் கூடத் திறக்கலை, கொஞ்சம் சீக்கிரம் வாங்க அம்மாவை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகணும்.. ப்ளீஸ் மாமா கொஞ்சம் சீக்கிரமா ஆட்டோ ஏதாவது கூப்பிட்டு வரீங்களா..?” என்று அழுகையோடு அவள் கெஞ்சவும், “என்னது ஆட்டோ கூப்படணுமா..? இவரைப் பார்த்தா என்ன உனக்கு இந்த வீட்டு வேலைக்காரன் மாதிரி இருக்கா..? நாலு காசை நீ பார்க்க ஆரம்பிச்ச உடனே எல்லாரும் உனக்கு அடிமைன்னு நினைப்போ..! எவ்வளவு திமிர் இருந்தா இவரை ஆட்டோ பிடிச்சுட்டு வர சொல்லுவே..?” என்று ராணி ஆத்திரத்தில் கத்த தொடங்கினார்.
 
 
“அம்மா கட்டுக் கட்டா பணத்தைப் புதுசா பார்க்கறா இல்லை, அந்தத் திமிர்..” என்று வெங்கட் எடுத்துக் கொடுக்கவும், இப்படியே ஒவ்வொருவரும் மாறி மாறி பிரச்சனையைப் பெரிதாக்கி கொண்டே செல்ல.. இதற்கு மேல் இங்கே நின்று பேசி நேரத்தை வீணாக்குவதை விட, அடுத்து நடக்க வேண்டியதை பார்ப்பதே சரி என்ற முடிவுக்கு வந்தவளாக வேகமாக வெளியில் ஓடினாள் நிலா.
 
 
நள்ளிரவில் எந்தப் பக்கம் சென்று என்ன செய்வது எனப் புரியாமல் ஒரு நொடி தடுமாறி நின்றவள், பின் வேகமாக மெயின் ரோடை நோக்கி ஓடவும், நல்லவேளையாக அவள் இருந்த வீதிக்குள் ஒரு ஆட்டோ வந்தது.
 
 
அதை அவசரமாகச் சென்று நிறுத்தியவள், தன் நிலைமையைத் தட்டு தடுமாறி விவரிப்பதற்குள் ஓட்டுனருக்கு சூழ்நிலை ஓரளவு புரிந்து அவளுக்கு உதவ முன் வந்தார்.
 
 
அவரின் உதவியோடு அருகில் இருந்த மருத்துவமனைக்கு உமாவை அழைத்துச் சென்றவர், அங்கு இருந்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உமாவை அனுமதித்தார்.
 
 
இத்தனைக்கும் யார் எனத் தெரியாத அந்த ஆட்டோ ஓட்டுனர் தான் முழுதாக அந்த நள்ளிரவில் நிலாவுக்கு உதவினார். உமா வலியில் துடித்துக் கொண்டிருப்பதையும் இந்தப் பெண் செய்வதறியாது பரிதவிப்பதையும் நேரில் கண்டவர், ஒரு குடும்பமே அங்கு நின்று வேடிக்கை பார்ப்பதை கண்டு உண்டான பரிதாபத்தோடு அவளுடன் நின்று நிலாவுக்கு அத்தனை உதவிகளையும் செய்து விட்டே அங்கிருந்து கிளம்பி இருந்தார்.
 
 
இத்தனைக்கும் நிலாவிடம் பணம் இல்லை என அவருக்கு எப்போதோ புரிந்து விட்டிருந்தது. ஆனால் கண்ணீரோடு அவள் தன் தாயை காப்பாற்ற போராடுவதைக் கண்டு மனம் இளகி அவர் உதவி செய்திருந்தார்.
 
 
ஆனால் அவருக்கு இருந்த மனிதாபிமானம் கூட உறவு என்ற பெயரில் உடன் இருந்த யாருக்கும் இல்லை. இதில் அவளின் கையில் இருந்த பணத்தையும் பறித்துக் கொண்டு நள்ளிரவில், அந்த நிலையில் இருவரையும் தனியே தவிக்க விட்டு இருந்தனர்.
 
 
அதன் பின் முழுதாக ஒரு நாள் கடந்திருக்க.. இப்போது வரை அவர்களிடம் இருந்து ஒரு அழைப்பும் உமாவை பற்றி விசாரித்து வந்திருக்கவில்லை.
 
 
இதையெல்லாம் எந்த உணர்வும் பிரதிபலிக்காத முகத்தோடு அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த வர்மா “அந்த ரோஃக் பேர் என்ன சொன்னே..?” என்று திடீரெனக் கேட்கவும், அவன் கேட்பது புரியாமல் திருதிருத்தாள் நிலா.
 
 
“அதான் உன்கிட்ட இருந்து பணத்தைப் பறிச்சானே.. உன் வீட்டில் இருக்க ஒருத்தன், அவன் பேர் என்னன்னு கேட்டேன்..” என்றான் இப்போது நிறுத்தி நிதானமாக வர்மா.
 
 
“வெ.. வெங்கட்..” என்று நிலா தடுமாற்றத்தோடு கூறவும், “அவனைத் தனியா பேஸ் செய்ய நீ பயந்து இருக்கேனா.. அப்போ இதுக்கு முன்னேயும் இப்படி உன்கிட்ட நடந்து இருக்கானா..?” என்றான் வர்மா.
அவனின் இந்தத் திடீர் கேள்வியில் திகைத்தவள், இதை எப்படிச் சொல்வது எனத் தெரியாமல் தடுமாறி “இல்லை.. அது.. நான்..” என்று கைகளைப் பிசைய பெரிதாக ஏதோ பிரச்சனை இருப்பது வர்மாவுக்குப் புரிந்தது.
 
 
அதிலும் வெங்கட்டின் வார்த்தைகளை வைத்தே அவனின் எண்ணத்தைத் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்த வர்மா, “சரி டென்ஷன் ஆகாம இரு, உங்க அம்மாவுக்கு எதுவுமாகாது அவங்களை ட்ரீட் செய்யற டாக்டர்ஸ் இந்த ஹாஸ்பிடலிலேயே பெஸ்ட் டாக்டர்ஸ் புரியுதா..?” என்றான் வர்மா.
 
 
அதற்குப் புரிந்தது என்பது போல் தலையசைத்த நிலாவின் விழிகள் நன்றியில் கலங்கியது. இவர்கள் இருவரும் இப்படி அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைச் சற்று தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த தர்ஷன், தன்னருகில் இருந்த பாலுவை திரும்பிப் பார்த்து ‘என்ன நடக்கிறது அங்கே..?’ என்பது போல் விழியாலே கேட்க.. அவனும் தனக்குத் தெரியவில்லை எனத் தோள்களைக் குலுக்கினான்.
 
 
‘நிஜமாவா..?’ என்பது போல் இதழ் வளைத்த தர்ஷனுக்கு, வர்மா இப்படி உதவி செய்வதெல்லாம் வித்தியாசமாகத் தெரியவில்லை. அவன் எப்போதுமே இப்படித்தான். தேவைப்படுபவர்களுக்கு முன் நின்று உதவி செய்ய ஒரு நொடியும் யோசிக்க மாட்டான்.
 
 
ஆனால் இதெல்லாம் மூன்று வருடங்களுக்கு முன்பு வரை. இப்போது முற்றிலும் தன்னை மாற்றிக் கொண்டு அனைத்திலிருந்தும் மொத்தமாக ஒதுங்கிக் கொண்டவன், மீண்டும் நிலாவுக்கு இப்படி முன் நின்று உதவுவது தர்ஷனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
 
 
இப்படி ஒரு உதவியை இவர்களிடமிருந்து நிலா எதிர்பார்த்தே இருக்கவில்லை. இவர்களெல்லாம் இப்படி உதவிக்கு வருவார்கள் என்று கூட அவள் நினைக்கவில்லை.
 
 
உறவும் உரிமையும் இருந்தும் அவர்கள் செய்யாத உதவியை அழைக்காமலே முன் வந்து நின்று இவர்கள் செய்திருப்பதற்கு நன்றி என்ற ஒரு வார்த்தையைச் சொல்லி விட முடியாது என அவளுக்குப் புரிந்தாலும் அதைத் தவிர அவளாலும் வேறு என்ன இப்போது சொல்லி விட முடியும்..?
 
 
அதில் விழிகள் கலங்க, கை எடுத்து கும்பிட்டு வார்த்தைகளின்றி வர்மாவை பார்த்தாள் நிலா. அதற்கு ஒரு தலையசைப்பை மட்டும் பதிலாக வர்மா கொடுக்கவும், அபி அங்கு வேகமாக வரவும் சரியாக இருந்தது.
 
 
நேராக வர்மவை நெருங்கியவள், “என்னாச்சு மஹி..? ஒரு சிசரியன் கேஸ், நான் இவ்வளவு நேரம் தியேட்டரில் இருந்தேன்.. இப்போ தான் எனக்கு விஷயம் தெரிஞ்சது, இப்போ அவங்க ஓகேவா..?” என்று விடாமல் தொடர்ந்து பேசிக் கொண்டே செல்ல.. அவளை அமைதிப்படுத்தும் விதமாகத் தன் தோளோடு சேர்த்துப் பிடித்துக் கொண்ட வர்மா “ஷி இஸ். ஓகே நொவ்..” என்றான்.
 
 
“ஓ, தேங் காட்..” என்றவளின் பார்வை அங்கிருந்தவளின் மேல் பதிய.. “இவங்க தான் நிலாவா..?” என்று அடுத்து வர்மாவிடம் கேட்டாள் அபி. அதில் வந்ததில் இருந்து அபி படபடத்துக் கொண்டிருந்ததையும், வர்மா அவளை அமைதியாகக் கையாள்வதையும் கண்டு இவர்கள் இருவரையும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் நிலா.
 
 
அதேநேரம் ‘ஆம்’ என்பது போல வர்மா தலையசைக்கவும், மற்றொரு பக்கம் நின்றிருந்த தர்ஷன் அங்கு வரவும் சரியாக இருக்க.. “நீ இங்கே தான் இருக்கியா..? ஆல் ஓகே தானே..?” என்று கவலையோடு அபி கேட்கவும், “ஆப்ரேஷன் இப்போ தான் முடிஞ்சு இருக்கு, அவங்க கம்ப்ளீட் ரெஸ்ட்டில் இருக்கணும்.. இப்போ தான் ரூமுக்கு மாத்த போறாங்க..” என்றான் சுருக்கமாக தர்ஷன்.
 
 
“ஏதாவது ஹெல்ப் வேணும்னா கால் செய்ய மாட்டியா நீ..? அது என்ன உனக்கு அவ்வளவு வீம்பு..” என்று வர்மாவை திரும்பி அபி முறைக்கவும் “ஹே எனக்கே தெரியாது..” என்றான் வர்மா.
 
 
“என்ன தெரியாதோ போ..” என்று சலிப்போடு கூறியவள், “அதுவரைக்கும் வீம்பு பிடிக்காம உடனே தர்ஷுக்கு கூப்பிடணும்னு தோணுச்சே..” எனச் சிடுசிடுத்து விட்டு நிலாவின் பக்கம் திரும்பியவள் “நானும் ஒரு டாக்டர் தான்.. உங்களுக்கு எப்போ எந்த ஹெல்ப் தேவைனாலும் தயங்காம என்னைக் கூப்பிடுங்க.. இவன்கிட்ட என் நம்பர் இருக்கு, வாங்கிக்கோங்க..” என்றாள் வர்மாவை கை காண்பித்து அபி.
 
 
அதில் அபியின் வேகமான பேச்சு புரியாமலே நிலா சம்மதமாகத் தலையசைத்து வைக்க.. “ஏய் லூசு, நீ ஒரு கைனி.. அவங்க அன்மேரிட்.. அவங்களுக்கு உன்கிட்ட என்ன தேவை இருக்கப் போகுது..?” என்று அவள் தலையில் தட்டினான் தர்ஷன்.
 
 
“ஏன் கைனினா இதுக்கு மட்டும் தானா..? வேறு எவ்வளவோ இருக்கு, நீ எல்லாம் ஒரு டாக்டர்னு சொல்லாதே.. போய் உன் வேலையைப் பார்..” என அவனிடம் சண்டைக்கு நின்றவளை நிலா கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
 
“அபி இது ஹாஸ்பிடல் ஞாபகம் இருக்கா..? பேஷன்ட்டுக்கு எல்லாம் டிஸ்டர்பா இருக்கும் வா போகலாம்..” என அவளின் தோளில் கை போட்டு தன்னோடு சேர்த்துப் பிடித்துக் கொண்ட வர்மா நிலாவின் பக்கம் திரும்பி “நான் கிளம்புறேன், பாலு இங்கே இருப்பான், ஏதாவது ஹெல்ப் வேணும்னா யோசிக்காம அவன்கிட்ட கேளு, தைரியமா இரு..” என்று விட்டு அபியை அழைத்துக் கொண்டு நகர்ந்தவன், பாலுவின் அருகில் சென்றதும் ஒரு நொடி நின்றவன் ‘பார்த்துக்கோ’ என்பது போல் தலையசைக்க.. “ஓகே சார்..” என்றிருந்தான் பணிவாக பாலு.
 
 
“ஹ்ம்ம் உனக்குன்னு எங்கே இருந்தது தான் இப்படி எல்லாம் அடிமை சிக்கறாங்களோ..” என்று அபி குறைப்பட்டுக் கொள்ளவும் “அடங்கவே மாட்டியா நீ..” என அவளின் தலையில் தட்டியப்படி அங்கிருந்து அபியை இழுத்துச் சென்றான் வர்மா.
 
 
இருவரும் அப்படிச் செல்வதைப் புன்னகையோடு பார்த்துக் கொண்டிருந்த தர்ஷன் நிலாவின் பக்கம் திரும்ப.. அவளும் அவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்..
 
 
“பாலு இங்கே உங்களுக்கு ஹெல்ப்புக்கு இருப்பார்.. எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு, நானும் கிளம்புறேன்.. இன்னும் பைவ் மினிட்ஸில் அம்மாவை ரூமுக்கு மாத்திடுவாங்க, கவலைப்பட எதுவுமில்லை தைரியமா இருங்க, அவங்க சீக்கிரம் குணமாகிடுவாங்க..” என்றான் தர்ஷன்.
 
 
அதற்குச் சரி என்பதாகத் தலையசைத்தவள், மீண்டும் அவனுக்குக் கை கூப்பி நன்றி தெரிவிக்க வார்த்தை வராமல் நிற்க.. “அட என்ன இது..? இப்படி எல்லாம் செஞ்சு என்னை வயசானவன் ஆக்கிடாதீங்க, ஐ அம் ஸ்டீல் யூத் யூ நோ..” என்ற கேலியாகக் கூறியவன், “எனி திங் பார் மஹி.. இதுவும் அப்படித் தான்.. அப்புறம் பார்ப்போம்..” என்று விட்டு அங்கிருந்து சென்றான் தர்ஷன்.
 
 
அதன் பின் ஓய்ந்து போய் அங்கிருந்து இருக்கையில் நிலா அமரவும், அவள் அருகில் வந்து அமர்ந்தான் பாலு.
 
 
இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் பாலு இப்படித் தன்னருகில் அமர்ந்திருப்பதே அவளுக்கு ஒருவித தைரியத்தைக் கொடுக்க.. நிலாவும் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
 
 
அவளின் நிலை புரிந்தது போல் அந்த அமைதியை கலைக்க பாலுவும் விரும்பவில்லை.
 
 
****
 
 
தீக்ஷாவின் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த நேரம் அது. நிமலன் அந்த வேலைகளில் பரபரப்பாக இருக்க.. நிகிலனும் அன்று காலை தான் சென்னைக்கு வந்திருந்தான்.
 
 
அதில் மூவருமாக தீக்ஷாவுக்குத் தேவையான ஆடைகள், நகைகள் வாங்குவதற்காக ஷாப்பிங் சென்று இருந்தனர். கிட்டத்தட்ட அனைத்தும் முடிந்து கிளம்பும் நேரம், அதே ஷாப்பிங் மாலில் தமயா தன் அண்ணன் கிருபாவோடு வந்திருப்பதைக் கண்டான் நிமலன்.
 
 
தமயா ஜெயதேவனின் மகள் என்று தெரிந்த பிறகு அவள் முன் செல்வதை அடியோடு தவிர்த்துக் கொண்டிருந்தான் நிமலன். இப்போதும் அப்படியே தூரத்தில் இருந்தே அவளைப் பார்த்து விட்டிருந்தவன் அலைபேசியில் பேசுவது போல் பின் தங்கி நின்றுவிட.. நிகிலன் திரும்பி கேள்வியாக நிமிலனை பார்த்தான்.
 
 
‘நீ முன்னே போ.. நான் பேசிவிட்டு வரேன்..’ என்பது போலச் சைகை செய்தவன், நிகிலன் தீக்ஷாவோடு பேசியபடியே அங்கிருந்த கடையை நோக்கிச் செல்லவும், சற்று மறைவாக நின்றான் நிமலன்.
 
 
அப்போதே எதிர்பக்கம் தமயா நடந்து வருவதைக் கவனித்தான் நிகிலன். அதில் ஒரு நொடி அவன் நடை தடைப்பட்டது.
 
 
ஆனால் முன்பு போல் சென்று அவளோடு பேசி பழக முடியாது என்பதால் வேதனையோடு அவளைத் தூரத்தில் இருந்தே பார்த்தவன், அவள் தன்னைப் பார்ப்பதற்குள் அங்கிருந்து நகர்ந்து விட.. அதே நேரம் நிகிலன் வற்புறுத்தி இருந்ததில் பிரணவுக்கு அழைத்திருந்தாள் தீக்ஷா.
 
 
நிகிலன் இருவருக்குமாக ஆடையும் நகையும் பரிசாக எடுத்துக் கொடுக்க நினைத்திருக்க.. அவனுக்கு விருப்பமானவற்றைத் தேர்வு செய்யச் சொல்லி காணொளி அழைப்பில் வருமாறு பிரணவ்வை அழைக்கச் சொல்லி இருந்தான் நிகிலன்.
 
 
அதில் தீக்ஷா அவனிடம் அனைத்தையும் கூற... “கிப்ட் தானே அவர் விருப்பப்படி என்ன வேணும்னாலும் வாங்க சொல்லு..” என்று சிம்பிளாக முடித்துக் கொண்டான் பிரணவ்.
 
 
“இல்லை.. அது நிக்கி தான் உங்க விருப்பம் தெரிஞ்சு உங்களுக்க்கு பிடிச்சதா வாங்கிக் கொடுக்க நினைக்கறான்.. உங்களுக்கு எப்படி வேணும்..” என்று அவள் மீண்டும் கேட்கவும், “எனக்கு அதெல்லாம் ஐடியா இல்லை.. ஆல்ரெடி கல்யாணத்துக்கு நாம நிறைய எடுத்து இருக்கோம் தானே.. இதில் திரும்ப எடுக்கணுமா..?” என்று பிரணவ் கேள்வியாக நிறுத்த.. “அப்போ வேண்டாம்னு சொல்றீங்களா..?” என்றாள் தீக்ஷா.
 
 
“அப்படியில்லை.. உங்க அண்ணா வாங்கிக் கொடுக்கும் கிஃப்ட் வேண்டாம்னு சொன்னா அவர் மனசு வருத்தப்படும்.. அதனால் அவருக்குப் பிடிச்சது போல ஏதாவது வாங்கிக் கொடுக்கச் சொல்லு..” என்று பிரணவ் பேசிக் கொண்டிருக்க.. தீக்ஷா அந்தக் கடையின் உள் நின்று பேசுவதை அங்கிருந்த கண்ணாடி கதவின் வழியே கிருபா பார்த்தான்.
 
 
எதிர்பாராமல் சில வருடங்களுக்குப் பிறகு தீக்ஷாவை இங்குக் கண்டதும் அப்படியே நின்று விட்டான் கிருபா. இதில் கிருபாவோடு வளவளத்துக் கொண்டே நடந்த தமயா அவன் திடீரென நின்று விடவும், திரும்பி அவனைக் கேள்வியாகப் பார்த்து “என்ன அண்ணா..?” என்றாள் தமயா.
 
 
“ஒண்ணுமில்லை, தெரிஞ்சவங்க போல இருந்தது அதான்..” என்று சமாளிப்பாகக் கூறியவன், தமயாவோடு அங்கிருந்து நகர.. இதையெல்லாம் தூரத்தில் இருந்து அலைபேசியில் பேசுவது போல் அலங்கார தூணுக்குப் பின் நின்று பார்த்துக் கொண்டிருந்தான் நிமலன்.
 
 
ஆனால் அவன் கவனம் முழுக்க தமயா மேல் மட்டுமே இருந்ததில் அருகில் இருந்த கிருபாவின் பார்வை அவனுக்குப் புரியமாலே போனது.
 
 
அதேநேரம் அங்கு வந்தான் விநாயக். அவனை அங்குக் கண்டதும் உற்சாகமான தீக்ஷா “வினய் ண்ணா.. நீங்களும் வந்திருக்கீங்களா..?” என்று புன்னகை முகமாக வரவேற்க.. “உங்க நிக்கி அண்ணாவும் நிமலன் அண்ணாவும் உனக்குக் கிப்ட் கொடுக்கலாம்.. இந்த வினய் அண்ணா கொடுக்கக் கூடாதா..?” என்றான் விநாயக்.
 
 
“கூடாதுன்னு யார் சொன்னா..? கண்டிப்பா கொடுக்கணும்.. இருங்க நான் ஒரு பெரிய லிஸ்ட் போட்டு உங்க பர்ஸை காலி செய்யலை.. என் பேரு தீக்ஷா இல்லை..” என்று அவள் அணிந்திருந்த சட்டை காலரை தூக்கி விட்டுக் கொண்டாள் தீக்ஷா.
 
 
“நானும் நீ கேட்கறதெல்லாம் வாங்கிக் கொடுக்க ரெடி..” என்று விநாயக்கும் தன் சட்டை கலரை தூக்கி விட்டுக் கொண்டான். இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே நிமிலன் அங்கு வந்து இணைந்து கொள்ள.. மூவரிடமும் வளவளத்துக் கொண்டே உடைகளை வாங்கி முடித்த தீக்ஷா அடுத்து விநாயக் தனக்கு நகை வாங்கிக் கொடுப்பதாகக் கூறவும் அங்கிருந்து நகைக் கடைக்குள் அவர்களை அழைத்துக் கொண்டு நுழைந்தாள்.
 
 
அதேநேரம் வர்மாவிடமிருந்து விநாயக்குக்கு அழைப்பு வந்தது. அவன் அலைபேசியைக் கையில் எடுக்கவும், திரும்பி விநாயக்கை முறைத்த தீக்ஷா “வேலைன்னு இப்போ எங்கேயாவது ஓடினீங்க கொன்னுடுவேன்.. எனக்குக் கிப்ட் வாங்கிக் கொடுத்துட்டு தான் கிளம்பணும்..” என மிரட்டலாகக் கூறவும், “வேலை இல்லைடா, மஹி தான் கூப்பிடறான்..” என்று தன் அலைபேசியைத் திருப்பிக் காண்பித்தான் விநாயக்.
 
 
“மஹி அண்ணாவா..? என்னவாம்..?” என்று தீக்ஷா அதுவரை பார்த்துக் கொண்டிருந்த நகைகளைத் தள்ளி வைத்து விட்டு அவனிடம் திரும்பி கேட்க.. “தெரியலை..” என்றவாறே அழைப்பை ஏற்று “சொல்லு மஹி..” என்றான் விநாயக்.
 
 
“எங்கே இருக்கே வினய்..?” என்று வர்மா எடுத்ததும் கேட்கவும், நிமலா கூட தீக்ஷுவுக்கு மேரேஜ் கிப்ட் வாங்கிட்டு இருக்கோம்..” என்றான் விநாயக். இதைக் கேட்டு தன் தலையில் தட்டிக் கொண்டவன், “ஓ காட், சாரி மச்சான் எனக்கு அது ஞாபகத்திலேயே இல்லை..” எனக் கூறவும் “இதை மட்டும் அவ கேட்டா நீ செத்தடா..” என்றான் விநாயக்.
 
 
“ஒகே, எங்கே இருக்கீங்கன்னு சொல்லுங்க.. நான் கிளம்பி வரேன்..” என்று வர்மா உடனே கூறவும், அவனிடமிருந்து வேகமாக அலைபேசியை வாங்கி இருந்த நிமலன் “நீ என்ன விஷயமா கால் செஞ்சே அதை முதலில் சொல்லு..” என்றான்.
 
 
“என்னடா குரல் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு..?” என்று வர்மா கேட்கவும், “தர்ஷ் பேசினான், நீ என்ன விஷயமா கால் செஞ்சே..” என்று சுருக்கமாக நிமிலன் கேட்க.. “அது வினய் ஹெல்ப் வேணும், அதான்..” என்றான் வர்மா.
 
 
“ஓகே உடனே அவனைக் கிளம்பச் சொல்றேன்..” என்ற நிமிலனை தீக்ஷா முறைக்கவும், “அவனுக்கு ஒரு எமர்ஜென்சிடா.. நாம நாளைக்குக் கூடக் கிப்ட் வாங்கிக்கலாம், கல்யாணத்துக்கு இன்னும் இருபது நாள் இருக்கே..” என்றான் நிமலன்.
 
 
“அதெல்லாம் சரி மஹி அண்ணாகிட்ட நான் பேசணும் ஃபோனை கொடுங்க..” என்று தீக்ஷா கேட்கவும், அலைபேசியை அவளிடம் கொடுத்தான் நிமிலன்.
 
 
அதற்குள் இங்கு நடந்த பேச்சை எல்லாம் கேட்டிருந்த வர்மா “தீக்ஷு சாரிடா..” என்று தொடங்கவும் “நீங்க பேசாதீங்க, இந்தியா வந்த பிறகு என்னை வந்து நீங்க பார்க்கவே இல்லை.. எனக்குக் கல்யாணம் பிக்ஸ் ஆகி இருக்கறது தெரிஞ்சும் நீங்க இதுவரை விஷ் கூடச் செய்யலை.. எல்லாரும் எனக்குக் கிப்ட் வாங்கிக் கொடுக்கறாங்க, நீங்க அதுவும் செய்யலை..” என்று தீக்ஷா குற்ற பத்திரிக்கை வாசித்துக் கொண்டே செல்ல.. “எல்லாம் என் தப்பு தான் சாரி.. சாரி..” என்றான் வர்மா.
 
 
“எனக்கு உங்க சாரி எல்லாம் வேண்டாம்..” என்றாள் தீக்ஷா. “சரி வேற என்ன வேணும்னு சொல்லு, உன் மஹி அண்ணா உனக்குக் கண்டிப்பா செய்வேன்..” என்றான் உறுதியான குரலில் வர்மா.
 
 
“ஆமா எதிர் வீட்டிலேயே இருந்தும் ஒருமுறை கூட வந்து பார்க்கலையாம்.. இதில் இவர் எனக்குச் செய்வாராம்..” என்று அவள் வேண்டுமென்றே குறை சொல்ல.. “சாரிடா தீக்ஷு.. தப்புதான் என் மைண்ட் செட் அப்படி..” என்று அவன் தொடங்கவும், “போங்க நீங்களும் உங்க மைண்ட் செட்டும்..” என்றாள் கடுப்போடு தீக்ஷா.
 
 
அதில் அவளிடம் இருந்து அலைபேசியை வாங்கிய விநாயக் “என்ன மஹி இப்படி ஆகிடுச்சே உன் நிலைமை..” என்று கேலியாகப் பேசவும் “ண்ணா..” என்று விநாயக்கை முறைத்தாள் தீக்ஷா.
 
 
‘சும்மா உல்லலாய்க்குடா..’ என்று அவளிடம் சைகையில் கூறி, மற்றவர்களிடம் கையசைவில் விடை பெற்றுக் கொண்டு சற்று தள்ளி சென்று நின்று “ஹ்ம்ம் சொல்லு மஹி..” என்று விநாயக் கேட்கவும். “ஒருத்தனை சிறப்பா கவனிக்கணும்..” என்றான் வர்மா.
 
 
அவன் குரலில் இருந்த பேதத்தைக் கண்டு கொண்டிருந்த விநாயக், “அவ்வளவு தானே சிறப்பா கவனிச்சுடுவோம்.. ஆமா அஃபீஷியலாவா..? இல்லை அன் அஃபீஷியலாவா..?” என்று விநாயக் கேட்க.. “அன் அஃபீஷியலா தான், ஆனா பார்க்கறதுக்கு அஃபீஷியலா தெரியணும்..” என்றான் வர்மா.
 

தொடரும்...

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா

 


   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்..
 
 
CNM - 13
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 
This post was modified 1 day ago by Kavi Chandra

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
 
 
சித்திரை – 14
 
உமா கண் விழித்துப் பார்க்க மறுநாள் ஆகி இருந்தது. தன் முன் கண்ணீரும் தவிப்புமாக நின்ற நிலாவை கண்டவருக்கு ஒரு நொடி ‘இது கனவா..? இல்லை நிஜமா..!’ என புரியவில்லை.
 
 
அதேநேரம் “ம்மா..” என்ற நிலாவின் பரிதவிப்பான குரல் அவரின் செவியைத் தீண்ட.. சூழ்நிலை புரிந்து, தன் கரங்களைப் பிடித்துக் கொண்டிருந்த நிலாவின் கையை ஆதரவாகத் தட்டிக் கொடுத்தார் உமா.
 
 
அன்று நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே சாயும் போது மீண்டும் நிலாவை பார்ப்போம் என்று நம்பிக்கை உமாவுக்குத் துளியும் இல்லை. அதில் இப்போதும் பிழைத்து விட்டோம் என்ற நம்பிக்கை அவருக்கு வர மறுக்க.. சுற்றிலும் பார்வையைச் சுழற்றியவர், அந்த மருத்துவமனை அறையைப் பார்த்தார். அங்கிருந்த வசதியை கண்டு யோசனையாக விழிகளைச் சுருக்கினார் உமா.
 
 
“நிலா நாம எங்கே இருக்கோம்..?” என்று மெல்லிய குரலில் உமா கேட்கவும், “ம்மா.. உங்களுக்கு எதுவுமில்லை எல்லாம் சரியாகிடுச்சு..” என வார்த்தைகள் வராமல் தழுதழுத்தாள் நிலா.
 
 
“ஆனா நாம..” என்று அப்போதும் அங்கிருந்த வசதிகளைக் கண்டு உமா விழிகளைச் சுருக்க.. “இப்போ இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு..? அமைதியா ரெஸ்ட் எடுங்கம்மா..” என்றாள் நிலா. அதே நேரம் அவருக்கும் மருந்தின் வீரியத்தில் மீண்டும் உறக்கம் கண்களைத் தழுவியது.
 
 
அது அவர் தூங்கி விட, சில நொடிகள் அவரையே அமைதியாகப் பார்த்துக் கொண்டு நின்றவள், சற்று தள்ளி இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தாள் நிலா.
 
 
அன்று இரவு தனியே உமாவை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்பிய போது திரும்ப அவரை உயிரோடு பார்ப்போம் என்று நம்பிக்கை நிலாவுக்கே இல்லை. அந்த அளவு அருகில் இருந்த மருத்துவமனையில் உமாவின் உடல் நிலையைப் பற்றிச் சொல்லி பயம் காண்பித்து இருந்தனர்.
 
 
அது ஓரளவு நிஜமும் கூட. அன்றைய உமாவின் நிலை அப்படித்தான் இருந்தது. வர்மா மட்டும் இதில் தலையிடவில்லை என்றால் இன்று அவளின் நிலை எப்படி இருந்திருக்கும் என நிலாவால் ஒரு நொடி கூட யோசித்துப் பார்க்க முடியவில்லை.
 
 
அதில் உண்டான சோர்வோடு அப்படியே விழிமூடி அமர்ந்திருந்தவளின் தோளை மெல்ல தொட்டான் பாலு.
 
 
அதில் விழிகளைத் திறந்தவள், அவனைக் கேள்வியாகப் பார்க்க.. “இப்படியே எவ்வளவு நேரம் இங்கே உட்கார்ந்து இருக்கப் போறே..? வா சாப்பிட்டு வரலாம்..” என்றான் பாலு.
 
 
“இல்லை, நான் வரலை.. எனக்கு எதுவும் வேண்டாம்..” எனச் சோர்வாக நிலா கூறவும், “இப்போவே நீ எவ்வளவு சோர்வா இருக்கேன்னு உனக்குத் தெரியுதா..? சாப்பிடாம இருந்தா அடுத்து பக்கத்து ரூமில் உனக்கும் ஒரு பெட் போடணும்.. நீ நல்லா இருந்தா தான் உங்க அம்மாவை பார்த்துக்க முடியும், நீயும் படுத்துட்டா உங்க இரண்டு பேரையும் யார் பார்த்துப்பாங்க யோசி..” என்றான் பாலு.
 
 
அதில் மறுப்பேதும் சொல்லாமல் அமைதியாக அவனோடு எழுந்து சென்றவளை, அங்கிருந்து கேண்டினுக்கு அழைத்துச் சென்றவன், இரண்டு இட்லியும் ஒரு காபியும் மட்டும் வாங்கி அவளின் முன் வைத்தான்.
 
 
அதற்கு ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்தவள், மெதுவாகச் சாப்பிட தொடங்க.. பாலுவும் அவளோடு சேர்ந்து சாப்பிட்டான். சிறு தயக்கத்திற்குப் பிறகு அவனை நிமிர்ந்து பார்த்தவள், “இதுக்கெல்லாம் எவ்வளவு செலவாகி இருக்கும்..?” என்றாள் நிலா.
 
 
அதில் அவளைக் கேள்வியாகப் பார்த்தானே தவிர பாலு எதுவும் பேசவில்லை. அவனின் அமைதியை கண்டு, “நிறைய ஆகி இருக்கும் இல்லை..?” என்று நிலா தயக்கத்தோடு இழுக்கவும், பாலுவின் தலை ஆமென அசைந்தது.
 
 
“அதான் எவ்வளவுன்னு தெரிஞ்சுக்கிட்டா..” என நிலா தொடங்கவும், “தெரிஞ்சுகிட்டா..?” என்று பாலு கேள்வியாக அவள் முகம் பார்த்து நிறுத்த.. “இல்லை, உடனே என்னால் எதுவும் கொடுக்க முடியாது தான்.. ஆனா கொஞ்சம் கொஞ்சமா.. இதை எல்லாம் கொடுத்து நான்..” என்று தயங்கி நிறுத்தினாள் நிலா.
 
 
“இங்கே பாரு மூன், இதெல்லாம் நீ சார்கிட்ட பேச வேண்டிய விஷயம், அவர் சொல்றதை செய்யறது தான் என் வேலை.. எவ்வளவு செலவாகி இருக்கு, அதை நீ எப்போ எப்படிச் செட்டில் செய்யப் போறேன்னு எல்லாம் எனக்குத் தெரியாது.. இன்னும் சொல்லப் போனா இப்போ நீ இதைப் பத்தி யோசிக்காம இருக்கறது தான் நல்லது.. எல்லாம் சார் பார்த்துக்குவார் கவலைப்படாதே..” என்றான் பாலு.
 
 
“இல்லை பாலு, அதெல்லாம் எனக்குப் புரியுது.. ஆனா அவருக்கு நாம ரொம்பத் தொந்தரவு கொடுக்கக் கூடாது இல்லை..” என்று நிலா தயக்கத்தோடு நிறுத்தவும், “அவர் அப்படி நினைச்சு இருந்தா உனக்கு உதவி செஞ்சு இருக்க வேண்டிய அவசியமே இல்லை.. நீ நினைக்கும் அளவுக்கு சார் கிடையாது, இது உனக்குக் கொஞ்சம் கொஞ்சமா புரியும்..” என்று விட்டு அமைதியாகி போனான் பாலு.
 
 
அதற்கு மேல் நிலாவும் எதுவும் பேசவில்லை. இருவரும் அமைதியாகச் சாப்பிட்டு முடித்து மேலே வரவும், வர்மாவிடமிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது.
 
 
அதை உடனே ஏற்றுப் பாலு பேசவும், சில கட்டளைகளை அவனுக்குக் கொடுத்தான் வர்மா. “ஓகே சார்..” என்று பவ்யமாகக் கூறிய பாலு, நிலாவிடம் சொல்லிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.
 
 
வர்மாவின் கட்டளையின் படி அலுவலகத்திற்கு அருகில் உள்ள பகுதியில் நிலாவும் உமாவும் தங்கிக் கொள்ளும்படியான ஒரு வீட்டை அடுத்த இரண்டு மணி நேரத்தில் வாடகைக்குப் பேசி முடித்திருந்தான் பாலு.
 
 
இரண்டு பெண்கள் தனியே அங்கே தங்க வேண்டும் என்பதால் பாதுகாப்பான பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு படுக்கை அறைகள் கொண்ட வீடாகப் பார்த்து வாடகைக்கு எடுத்திருந்தான் பாலு.
 
 
அந்த வீட்டிற்கான அட்வான்ஸ் தொகையை வர்மா கொடுத்திருக்க.. இதைப் பற்றி வர்மாவிடம் பாலு விளக்க முயன்றான். ஆனால் அதையெல்லாம் கொஞ்சமும் கேட்டு கொள்ளாத வர்மா, “நீ பார்த்துப் பிக்ஸ் செஞ்சுட்டே இல்லை.. அது போதும், நீ தேன்நிலாவை கூட்டிட்டு போய் அவங்க திங்ஸ் எல்லாம் கொண்டு வந்து இந்த வீட்டில் வெச்சுடுங்க..” என்று பேச்சை முடித்துக் கொண்டான் வர்மா.
 
 
பாலுவுக்கும் இப்போது அதைச் செய்வது தான் சரி என்று தோன்றியது. அனைத்தும் சரியான பிறகு, நிலா மட்டும் சென்று பொருட்களை இடம் மாற்றம் செய்ய முயன்றால், அங்கு வேறு விதமான பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று புரிந்து கொண்ட பாலு, நேராக மருத்துவமனைக்குச் சென்றான்.
 
 
அங்கு உமா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க.. அவருக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து உமாவின் கைகளைப் பிடித்தப்படியே படுக்கையில் தலை சாய்த்து உறங்கிக் கொண்டிருந்தாள் நிலா.
மெதுவாக இரு முறை அவளை அழைத்துப் பார்த்தவன், நிலா எழுந்து கொள்ளாததில் அவளை நெருங்கி லேசாகத் தோளை தட்ட.. அதில் உறக்கம் கலைந்து கண்விழித்தாள் நிலா. இரண்டு நாட்களாகக் கொஞ்சமும் ஓய்வின்றித் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு உமா குணமாகிவிட்ட நிம்மதியில் நல்ல உறக்கம் வந்திருந்தது.
 
 
அதில் சுற்றும் முற்றும் பார்த்தப்படி புரியாமல் சில நொடிகள் விழித்தவள், பின்பு பாலுவை கண்டு அவசரமாக எழுந்து நிற்க.. “மெதுவா, மெதுவா.. என்ன அவசரம்..?” என்றான் பாலு.
 
 
“சாரி அப்படியே தூங்கிட்டேன்..” என்று அவள் குற்றஉணர்வோடு சொல்லவும், “தூங்குறதுக்கு எல்லாமா சாரி சொல்லுவே..? உனக்கும் ரெஸ்ட் வேணும்..” என்றவன் “சரி இப்போ நாம உங்க வீட்டுக்கு போய் உங்க திங்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துடலாம்..” என்றான் பாலு.
 
 
இதைக் கேட்டு திகைத்த நிலா, “என்.. என்னது..?” எனப் புரியாமல் விழிக்கவும், “சார் உனக்கு ஆபீஸ் பக்கத்திலேயே ஒரு வீடு பார்க்க சொன்னார், நானும் வீடு பார்த்து அட்வான்ஸ் கொடுத்துட்டேன்.. அந்த வீட்டுக்கு உங்க பொருட்களை எல்லாம் எடுத்துட்டு வரணும் இல்லை..” என்றான் பாலு.
 
 
“ஐயோ சார் ஏன் எனக்கு மேலே மேலே உதவி செஞ்சுட்டே போறார்..? இதுக்கு எல்லாம் நான் எப்படி நன்றி சொல்றது..? இந்தப் பணத்தை எல்லாம் நான் எப்படித் திரும்பக் கொடுக்கப் போறேன்..? என்கிட்ட எதுவுமே இல்லை பாலு, திரும்பக் கொடுக்கறதுக்கு நான் இனி உழைச்சு தான் சம்பாதிக்கணும்.. ஆனா கண்டிப்பா கொடுத்துடுவேன்..” என்று கலக்கத்தோடு பேசினாள் நிலா.
 
 
“இதெல்லாம் சாருக்கு தெரியாதுன்னு நினைக்கறியா நீ..? உன்கிட்ட அவர் பணம் கேட்டாரா..? இன்றைய உன் நிலைமையும் தேவையும் புரிஞ்சு தான் உனக்கு உதவி செய்ய நினைக்கறார்.. அது புரியலையா உனக்கு..?” என்றான் பாலு.
 
 
“அதெல்லாம் புரியுது..” என்று அப்போதும் நிலா தயங்கி நிற்கவும், “சரி நீ என்ன தான் செய்யலாம்னு இருக்கே.. உங்க அம்மா டிஸ்சார்ஜ் ஆனதும் திரும்ப அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போகலாம்னு நினைக்கறியா..?” என பாலு கேள்வியாக அவள் முகம் பார்த்து நிறுத்தினான்.
 
 
இதற்குச் சட்டென அவளால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை. இதற்கு முன்பு தயக்கத்தோடு பேசிய வார்த்தைகள் கூட இப்போது அவளுக்கு வரவில்லை. நிச்சயமாகத் திரும்ப அந்த வீட்டிற்குள் அவளால் செல்ல முடியாது என அன்றே நிலாவுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்திருந்தது.
 
 
தன் உழைப்பில் வந்த ஊதியத்தையும் பறித்துக் கொண்டு, உடல்நலம் சரியில்லாத உமாவை எப்படியோ போகட்டும் என்று விட்டு வேடிக்கை பார்த்த அரக்கர்களை எண்ணி மனம் அருவருத்துப் போனது. மீண்டும் அவர்கள் முகத்தைப் பார்க்க கூட நிலாவுக்கு விருப்பமில்லை அதில் அவள் அப்படியே நின்றிருக்க.. “உனக்கே புரியுது இல்லை, திரும்ப நீ அங்கே போய் இருக்க முடியாது மூன்..” என்றான் பாலு.
 
 
அதற்கு ஆம் என நிலாவின் தலை அசைய.. “அதுக்காகத் தான் சார் இப்படி ஒரு ஏற்பாட்டை செஞ்சு இருக்கார்.. இதுக்கெல்லாம் நீ எப்படித் திரும்பத் தரணும்னு அவரே உன்கிட்ட சொல்லுவார்.. அப்போ நீ இதைப் பத்தி சார்கிட்ட பேசிக்கோ, இது என் பணம் இல்லை.. நான் இதுக்கு எதுவும் சொல்ல முடியாது..” என்றான் பாலு.
 
 
அவன் சொல்வதில் உள்ள உண்மை புரிய.. இதெல்லாம் முடிந்த பிறகு வர்மாவிடம் நேராக இதைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவள் “இப்போ நாம என்ன செய்யணும்..?” என்றாள்.
 
 
“என் கூட வா அந்த வீட்டுக்கு போய் உன் பொருள் எல்லாம் எடுத்துட்டு வந்துடலாம்..” என்றான் பாலு. “பொருள்னு எங்களுக்கு அங்கே பெருசா எதுவுமில்லை பாலு..” என்று நிலா கூறவும், “அப்போ அங்கிருந்து உனக்கு எதுவும் வேண்டாமா..?” என்றான் பாலு.
 
 
அவளின் சான்றிதழ்கள், நிலாவின் தந்தை நடராஜனின் நினைவாக இருக்கும் ஒரே புகைப்படம், இவர்கள் இருவரின் உடைகள் என்று சொற்பமாகக் கொஞ்சம் பொருட்களே அங்கு இவர்களுக்குச் சொந்தமாக இருந்தது.
 
 
அதை எல்லாம் வேண்டாம் என விட்டு விடவும் நிலாவால் முடியாது என்பதால் “சரி போகலாம், ஆனா அம்மா..? அவங்களை இங்கே நாம தனியா விட்டுட்டு..” என்று நிலா சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அறையின் கதவை லேசாகத் தட்டி விட்டு மருத்துவமனையில் வேலை செய்யும் பெண்மணி ஒருவர் உள்ளே நுழைந்தார்.
 
 
“டாக்டர் தர்ஷன் என்னை அனுப்பினார், எனக்கு டியூட்டி முடிஞ்சுருச்சு, நீங்க எங்கேயோ வெளியே போகணும்னு சொன்னார்.. நீங்க திரும்ப வர வரைக்கும் நான் இங்கே இருக்கேன், நீங்க போயிட்டு வாங்க..” என்றார் உறுதியான குரலில் அந்தப் பெண்மணி.
 
 
அவரை யோசனையாகப் பார்த்த நிலாவுக்கும், இதெல்லாம் வர்மாவின் ஏற்பாடு என்று தெளிவாகப் புரிந்தது. அதே நேரம் இவரை நம்பி உமாவை ஒப்படைத்துச் செல்லலாம் என்ற நம்பிக்கையும் அவரைப் பார்த்தவுடனே நிலாவுக்கு வந்தது. பல வருடங்களாக மருத்துவமனையில் வேலை செய்யும் அனுபவம் அவரின் பேச்சிலேயே தெரிந்தது.
 
 
அதில் நம்பிக்கையோடு பாலுவை திரும்பி நிலா பார்க்கவும், அவனுக்கும் அதே எண்ணம் தான் என்பதால் ஒரு தலையசைப்பை மட்டும் அவளுக்குப் பதிலாகக் கொடுத்தவன், அந்தப் பெண்மணியின் பக்கம் திரும்பி “உங்க பேர் என்ன..?” என்றான்.
 
 
“கலாவதி..” என்று அவர் கூறவும், “சரிங்க அக்கா, நாங்க வர வரைக்கும் கொஞ்சம் பத்திரமா பார்த்துக்கோங்க.. சீக்கிரம் வந்துடறோம்..” என்று விட்டு நிலாவை அழைத்துக் கொண்டு வெளியேறினான் பாலு.
 
 
வழியெங்கும் அமைதியாக ஏதோ யோசனையோடே நிலா பயணிக்க.. அவளை இரு முறை திரும்பி பார்த்தவனும் வேறு இதுவும் பேசி அவளைத் தொந்தரவு செய்யவில்லை.
 
 
நேராக நிலாவின் வீட்டு முன்னே சென்று பாலு காரை நிறுத்தவும், அதில் இருந்து இறங்கியவள் “இங்கே இருக்கறவங்க எப்போ எப்படி நடந்துப்பாங்கன்னு என்னால் மட்டுமில்லை யாராலயுமே சொல்ல முடியாது.. அவங்க உன்னை ஏதாவது பேசிட்டா தப்பா எடுத்துக்காதே, எனக்காகத் தயவு செய்து அமைதியா இரு, என்னை மன்னிச்சுடு இது எல்லாருக்குமே சங்கடமான ஒரு விஷயம் தான்.. ஆனா என்னால் இதில் எதுவும் செய்ய முடியாது..” என்று முன் கூட்டியே நிலா பாலுவை தயார்படுத்துவது போல் பேசிக்கொண்டிருந்தாள்.
 
 
“அன்னைக்கு இங்கே நடந்ததை ராஜன் சொன்னான்.. இப்போ சமீபமா நடந்ததை நீ சொல்லும் போது கேட்டேன்.. அப்போவே இங்கே இருக்கறவங்க எல்லாம் மனுஷங்களே இல்லைன்னு எனக்குப் புரிஞ்சு போச்சு.. அதனால் இவங்க பேச்சும் செயலும் என்னை எந்த வகையிலும் பாதிக்காது.. இதையெல்லாம் யோசித்துக் குழம்பாம சீக்கிரம் போய் உன் பொருட்களை எல்லாம் எடுத்துட்டு வா..” என்று விட்டு வெளியில் நின்று கொண்டான் பாலு.
 
 
நிலாவும் வேகமான ஒரு தலையசைப்போடு வீட்டிற்குள் செல்ல.. அது மாலை நேரம் என்பதால் ராணியும் அவரின் மகள் ஸ்ருதியும் மட்டுமே வீட்டில் இருந்தனர்.
 
 
சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ராணியின் பெண் ஸ்ருதி நிலாவை கண்டதும் “வாங்க மகாராணி.. இப்போ தான் இந்தப் பக்கம் வர வழி தெரிஞ்சுதா..? கொஞ்சமாவது வீட்டில் இத்தனை பேர் இருக்காங்களே அவங்க சாப்பிட கஷ்டப்படுவாங்களே நேரத்துக்குப் போய் எல்லாம் செஞ்சு கொடுக்கணுமேன்னு யோசனை இருக்கா..? இல்லை நம்ம வேலையை நாம பார்க்கணுமேன்னு பொறுப்பு தான் இருக்கா..?” என்று தன் வயதுக்கு மீறின தோரணையோடு எரிச்சலோடு நிலாவைப் பார்த்து கத்திக் கொண்டிருந்தாள்.
 
 
வழக்கமாக இதற்கெல்லாம் நின்று பதில் சொல்லியோ, இல்லை பொறுமையாகப் பதிலின்றி நின்றோ மட்டுமே பழகி இருந்த நிலா, இன்று அவளைக் கண்டு கொள்ளாமல் விறுவிறுவென அவர்கள் தங்கி இருந்த அறையை நோக்கிச் செல்லவும். “திமிரை பார்..” என்றவள் “அம்மா..” என்று சத்தமாக அழைத்தாள்.
 
 
இதில் இரண்டு நாட்களாக வெளியில் வாங்கிச் சாப்பிட்டு உடல்நலம் சரியில்லாமல் போயிருந்த ராணி, இரவுக்காவது வீட்டில் சமைக்கச் சொல்லி சேகர் கோபமாகப் பேசி சென்றிருந்த கடுப்பில் சமையல் அறையில் எதையோ உருட்டிக் கொண்டிருந்தார்.
 
 
திடீரெனக் கேட்ட மகளின் குரல் அவளுக்கு மேலும் எரிச்சலைக் கூட்ட “என்னடி இப்போ..?” எனச் சிடுசிடுப்போடு கேட்டபடியே சமையலறை வாயிலில் வந்து நின்றார் ராணி.
 
 
“அந்தத் திமிர் பிடிச்சவ வந்திருக்கா, நான் எங்கேடி போனேன்னு கேட்டுட்டு இருக்கேன்.. பதிலே சொல்லாம உள்ளே போயிட்டா..” என்றாள் ஸ்ருதி.
 
 
“என்ன வந்துட்டாளா..! இரண்டு நாளா வேலை செய்யாம சோம்பேறி கழுதை எங்கே ஊர் சுத்திட்டு இருந்தாளோ..?” என்று முந்தானையை இழுத்து சொருகியப்படியே கிட்டதட்ட நிலாவை அடித்து விடும் வேகத்தில் அந்த அறையை நோக்கிச் சென்றார் ராணி.
 
 
அதே நேரம் பெரிதாக இவர்களின் உடமைகள் எதுவுமில்லை என்பதால் தங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் இரண்டு கட்டைப் பைகளில் வைத்துக் கொண்டபடி அந்த அறையின் வாயிலுக்கு வந்திருந்தாள் நிலா.
 
 
அவளையும் பையும் மாறி மாறி பார்த்த ராணி “எங்கேடி போறே..? இது என்ன மடமா உன் இஷ்டத்துக்கு வரதுக்கும் போறதுக்கும்..? வீட்டில் இருந்து நீயும் உங்க அம்மாவும் கிளம்பி போய் இரண்டு நாள் ஆகுது, எங்கே போனே எப்போ வருவேன்னு எதுவும் தெரியாம இப்போ வந்து சமைப்போ அப்போ வந்து வேலையைப் பார்ப்பேன்னு நான் உட்கார்ந்துட்டு இருக்க வேண்டி இருக்கு..
கொஞ்சமாவது பொறுப்பும் நம்ம வேலையை நாம தானே செய்யணும்ன்ற அக்கறையும் இருக்கா உனக்கு..?” என்று ராணி திட்டி தீர்த்துக் கொண்டிருக்க.. ‘இப்போதும் கூட உமா எப்படி இருக்கிறார்..?’ என ஒரு வார்த்தை கேட்க தோன்றாமல், தன் சுயநலத்தை மட்டுமே எண்ணிப் பேசிக் கொண்டிருக்கும் ராணியை நிலா வெற்று பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
 
 
“ஏய் நில்லுடி, நான் பேசிட்டே இருக்கேன் எங்கே போறே நீ..?” என ராணி, அதட்டலாகக் குரல் கொடுக்கவும், நின்று அவரைத் திரும்பி பார்த்த நிலா, “நான் எங்கே போனா உங்களுக்கு என்ன..? எங்கே மேலே உங்களுக்கு அக்கறை ஏதாவது இருக்கா..! இல்லையே அப்புறம் நான் எங்கே போறேன்னு உங்ககிட்ட எதுக்குச் சொல்லணும்..?” என்றாள் நிலா.
 
 
“என்னடி வாய் ரொம்ப நீளுது..?” என ராணி கேட்கவும், “அம்மா வெளியே கார் ஒண்ணு நிற்குது..” என்று எடுத்துக் கொடுத்தாள் ஸ்ருதி.
 
 
“ஓஹோ அதான் விஷயமா..? கூட ஆள் இருக்கும் தைரியம் தான் இப்படிப் பேசறாளா..? இப்போ எல்லாம் மகாராணி கால் தரையிலேயே படறதில்லை போலேயே..! கார்லேயே போறது என்ன..? கார்லேயே வரது என்ன..? அது தான் கட்டுக் கட்டா பணத்தைக் கொட்டி கொடுக்கறானுங்க..” என்று எகத்தாளமாகப் பேசினார் ராணி.
 
 
எத்தனை முறை கேட்டிருந்தாலும் இப்படியான வார்த்தைகள் மனதை வலிக்கச் செய்தது. அதில் நிலாவுக்கும் லேசாக விழிகள் கலங்கி விட.. ஆனால் அதை இவர்கள் முன் காண்பித்து விடக் கூடாது என்ற உறுதியோடு நின்றவள், “நான் இல்லைன்னு சொன்னா மட்டும் நீங்க நம்பிட போறீங்களா..? உங்களுக்கு எப்படித் தோணுதோ அப்படியே நினைச்சுக்கோங்க..” என்றாள் நிலா.
 
 
“அடடா பேச்செல்லாம் பலமா இருக்கே..! இதெல்லாம் யாரு அன்னைக்கு வந்தவன் சொல்லிக் கொடுத்தானா..? இல்லை இன்னைக்கு வந்திருக்கவன் சொல்லிக் கொடுத்தானா..?” என்று வேண்டுமென்ற ராணி ஒரு மாதிரி இழுத்து கேட்டார்.
 
 
இதற்கெல்லாம் பதில் சொல்லி மேலும் தன்னைத் தாழ்த்திக் கொள்ள விரும்பாத நிலா, திரும்பி வாயிலை நோக்கி நடக்கத் தொடங்க.. “உன் இஷ்டத்துக்குப் போகவும் வரவும் இது மடமில்லை.. என் பேச்சைக் கேட்காமல் திமிர் எடுத்து இந்த வீட்டு வாசப்படியை தாண்டி ஒரு அடி நீ எடுத்து வெச்சாலும் திரும்ப இந்த வீட்டுக்குள்ளே வர முடியாது..” என்றார் திமிராக ராணி.
 
 
அதேநேரம் வாயிலுக்கு நேராக நின்றிருந்த பாலுவும், ஓரளவு உள்ளே நடப்பதை கவனித்திருந்தான். அவர்கள் பேசுவது தெளிவாகக் கேட்கவில்லை என்றாலும் நிலாவை வெளியே வர விடாமல் அவர்கள் நிறுத்தி பேசுவதும் ராணியின் முகபாகமும் ஏதோ சூழ்நிலை சரியில்லை என அவனுக்கு உணர்த்தியது.
 
 
அதில் வேகமாக உள்ளே வந்தவன், “எல்லாம் எடுத்தாச்சா..? கிளம்புவோமா..!” என்று அவள் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டான் பாலு.
 
 
“பாருடா இவளுக்கு மட்டும் புதுசு புதுசா ஒவ்வொருத்தனும் எங்கிருந்து தான் கிடைக்கிறாங்கன்னு தெரியலையே..! இவன் யாருடி புதுசா..?” என்று நக்கலாகக் கேட்டார் ராணி. இதில் பாலு அவரின் பக்கம் திரும்பி முறைக்கவும் அவன் கைகளைப் பற்றித் தடுத்த நிலா “வேண்டாம் பாலு, போகலாம்..” என்றாள்.
 
 
“போடி, போ.. அப்படியே போயிடு, இந்தப் பக்கம் வந்துடாதே.. உனக்கும் உங்க அம்மாவுக்கும் இனிமேல் இந்த வீட்டில இடம் கிடையாது..” என்று தன் இறுதி ஆயுதத்தை அவளை நோக்கி வீசினார் ராணி.
 
 
அதில் நிதானமாக நின்று ராணியைத் திரும்பிப் பார்த்த நிலா “இனி நீங்களே கூப்பிட்டாலும் நாங்க இங்கே திரும்ப வருவதா இல்லை.. இதையெல்லாம் எடுத்துட்டுப் போகத் தான் வந்தேன்..” என்றாள் நிலா.
 
 
அவளின் வார்த்தைகளைக் கேட்டு திகைத்து நின்ற ராணி சட்டெனச் சுதாரித்துக் கொண்டு ‘சம்பளம் இல்லாமல் வீட்டில் இத்தனை வேலைகளைப் பார்க்க இனி யார் கிடைப்பார்கள்..?’ என்ற பதட்டத்தோடு “போறதுனா நீ போ, என் வீட்டில் இருந்து ஒரு பொருளையும் நீ எடுத்துட்டு போக நான் அனுமதிக்க மாட்டேன், அந்தப் பையைக் கொடுடி..” என்று அவளின் வழியை மறிப்பது போல் வந்து நின்றார்
 
 
“இது எல்லாம் எனக்கும் எங்க அம்மாவுக்கும் சொந்தமானது..” என்று நிலா கூறவும், “திருடிட்டுப் போறதும் இல்லாம திமிரா வேற பேசறியா நீ..? இந்த வீட்டில் உங்களுக்குச் சொந்தமா என்னடி இருக்கு..? எல்லாமே என்னோடது..” என்றார் ராணி.
 
 
“உங்களைப் போல அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படற ஆள் நான் கிடையாது..” என்று நிலா கூறிய நொடி அவளை அடிக்கக் கை ஓங்கி இருந்தார் ராணி.
 
 
ஆனால் சட்டென பாலு அவரின் கையைப் பிடித்து நிறுத்தி இருந்தான். “இதுக்கு மேலே உங்களுக்கு மரியாதை இல்லை.. இவ்வளவு நேரமும் நிலாவுக்காகத் தான் சும்மா இருந்தேன்.. இனி ஒரு வார்த்தை பேசினாலும் அதுக்குப் பிறகு வயசை எல்லாம் பார்க்க மாட்டேன்..” என்று மிரட்டலாகக் கூறினான் பாலு.
 
 
அவன் பேசிய விதமே சொன்னதைச் செய்வான் என்பதை ராணிக்கு உணர்த்தி இருக்க.. இருந்தாலும் தன் வீம்பை கைவிடாது “ஆமா அப்படியே பயந்துட்டேன் போடா..” என எரிச்சலாக அவனைப் பார்த்து கூறியவர், “இவன் பேசறதை எல்லாம் நம்பி இவன் கூடக் கிளம்பி போனா அவன் முடிஞ்ச வரைக்கும் உன்னைப் பயன்படுத்திட்டு தூக்கி வீசிட்டுப் போயிடுவான்.. அப்பறம் நடுதெருவில் பிச்சை தான் எடுக்கணும்..” என்று சாபம் போல் பேசினார் ராணி.
 
 
அதற்குக் கோபமாக பாலு ஏதோ பதில் சொல்ல முயல.. அவனின் கையைப் பிடித்துத் தடுத்திருந்த நிலா “பரவாயில்லை.. அப்படியே பிளாட்பார்மில் தங்கினாலும் தங்குவோமே தவிர, இனி இந்த வீட்டுக்குள்ளே வரமாட்டோம்..” என்று உறுதியான குரலில் கூறிவிட்டு வெளியேறி இருந்தான்.
 
 
இவர்களிடம் எப்படி இத்தனை உறுதியும் திடமும் எங்கிருந்து வந்தது எனப் புரியா அதிர்வோடு ராணி பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, அங்கிருந்து கிளம்பி இருந்தாள் நிலா.
 
 
****
 
 
ஒரு வாரத்திற்குப் பிறகு..
 
 
உமா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி இருக்க.. அவருக்கு ஆயிரம் புத்திமதிகள் சொல்லி விட்டு, தேவையான உணவையும் மருந்துகளையும் நேரத்துக்கு எடுத்துக் கொள்ள வசதியாகக் கைக்கெட்டும் தூரத்தில் வைத்துவிட்டு அலுவலகத்திற்கு வந்திருந்தாள் நிலா.
 
 
நிலாவுக்கு தேவையான விடுமுறையை எடுத்துக் கொள்ள சொல்லி பாலுவின் மூலம் முன்பே கூறி இருந்தான் வர்மா. ஆனால் இதற்கு மேலும் உதவி கிடைக்கிறது என்று அதை வீணடிக்க கூடாது என்ற எண்ணத்தோடே கிளம்பி வந்திருந்தாள் நிலா.
 
 
அன்று ஒரு தொழில் சம்பந்தமான பேச்சுவார்த்தைக்காகக் கிளம்பிக் கொண்டிருந்தான் வர்மா. அது சம்பந்தப்பட்ட வேலைகளில் பிஸியாக இருந்தவன், தயக்கத்தோடு தன் அறையின் கதவை தட்டி விட்டு உள்ளே நுழைந்தவளை விழிகளை உயர்த்திப் பார்த்தான்.
 
 
இன்று நிலா அலுவலகத்திற்கு வருவாள் என அவன் எதிர்பார்த்து இருக்கவில்லை. அதில் உண்டான ஆச்சரியத்தோடு “இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்க..! ஆல் ஓகே..?” என்றான் வர்மா.
 
 
“ஆமா சார், அம்மா இப்போ நல்லா இருக்காங்க..” என்று கைகளைப் பிசைந்தபடியே நிலா பேசவும், அவளைப் புரியாமல் பார்த்தான் வர்மா.
 
 
“உங்களுக்கு, உங்களுக்கு எப்படி நன்றி..” என்று அவள் மெல்லிய குரலில் தொடங்கவும், “அப்புறம் பேசிக்கலாம், நல்லவேளை நீங்க இன்னைக்கு வந்துட்டீங்க.. அந்த ரத்தன் குரூப்ஸ் டீல் ஞாபகம் இருக்கா..?” என்றான் அவசர குரலில் வர்மா.
 
 
“எஸ் சார்..” என்று நிலா கூறவும், “அந்தப் பைலை எடுத்துக்கோங்க.. இப்போ நாம கொஞ்சம் வெளியே போக வேண்டி இருக்கு.. உங்களுக்கு அதில் இருக்கும் டீடைல்ஸ் எல்லாம் தெரியும் இல்லை..” என்று அவன் தன் போக்கில் எதிரில் இருந்த கணினியிலேயே கவனமாக இருந்தவாறு கேட்கவும், நிலாவும் சட்டென வேலைக்குத் தாவி, வர்மா கேட்பதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
 
 
அடுத்த அரை மணி நேரத்தில் பாலுவுக்குச் சில வேலைகளைக் கொடுத்து விட்டு வர்மா நிலாவோடு அங்கிருந்து கிளம்பி இருக்க.. இருவரும் ரத்தன் குரூப்சை நோக்கி சென்றனர்.
 
 
அங்கு வர்மாவை பார்க்கும் ஆவலோடு காத்திருந்தாள் நேஹா.
 
தொடரும்...
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா
 
 

   
ReplyQuote
Kavi Chandra
(@kavi-chandra)
Member Admin
Joined: 5 months ago
Posts: 250
Topic starter  
ஹாய் டியர்ஸ்
 
 
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இதோ புது கதையோடு உங்களை சந்திக்க வந்துவிட்டேன்.. இத்தனை நாள் பொறுமையாக காத்திருந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்..
 
 
CNM - 14
 
இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..
 
 
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்
கவி சந்திரா 

   
ReplyQuote
Page 2 / 2

You cannot copy content of this page