All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

ராமனின் மோகனம் ஜானக...
 
Notifications
Clear all

ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்

Page 2 / 2
 

Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 1 year ago
Posts: 150
Topic starter  
ஜானகி மந்திரம் 11
 
மாலை 3:30 PM | ஆங்கிலோ இந்தியன் காபி ஷாப், கண்டாலா
கண்டாலாவின் அந்த ‘ஆங்கிலோ இந்தியன்’ காபி ஷாப், மலைப்பாதையின் வளைவில் ஒரு பெரிய சைஸ் மரக்குடில் போல  அமைந்திருந்தது. அந்த மதிய வேளையிலும் வெளியே மலை முகடுகளை மேகங்கள் முத்தமிட்டுக் கொண்டிருக்க, காபி ஷாப்பின் உள்ளே வறுத்த காபி கொட்டைகளின் வாசனை கதகதப்பாக நிறைந்திருந்தது. தேக்கு மரத்தால் ஆன சிறிய மேஜைகள், குறைவான வெளிச்சம் தரும் மஞ்சள் நிற விளக்குகள், சுவரில் மாட்டப்பட்டிருந்த பழைய இரும்பு சட்டங்கள் என அந்த இடமே ஒரு இதமான சூழலை தந்தது. ஜன்னல் வழியே பார்த்தால், தூரத்தில் மேகக்கூட்டங்கள் மலை சரிவுகளில் மெல்ல இறங்குவது அழகான ஓவிய காட்சி.
 
கவுண்டரில் நின்றிருந்த மேலாளர் சுரேந்தர் சிங், தன் தடித்த கண்ணாடியை சரிசெய்தபடி மைதிலியை ஒருமுறை மேலிருந்து கீழ் வரை பார்த்தார். 
 
"பாரு மைதிலி, நீ ஒரு காலேஜ் ஸ்டூடண்ட்னு தெரிஞ்சுதான் நான் உனக்கு இந்த பார்ட்-டைம் வேலைக்கு ஒத்துக்குறேன். உன்னோட படிப்பு செலவுக்காக வேலை தேடுறேன்னு சொன்னதால மட்டும்தான் இந்த சலுகை," என்று வட இந்திய தொனி கலந்த கனத்த குரலில் ஆரம்பித்தார்.
 
"ஆனா இங்கே சில ரூல்ஸ் இருக்கு. ஈவினிங் கரெக்டா 4 மணிக்கு நீ இங்கே ரிப்போர்ட் பண்ணனும். 9 மணி வரைக்கும் ஷிப்ட். அப்புறம் ரொம்ப முக்கியமானது, இந்த காபி ஷாப் யூனிஃபார்ம் கண்டிப்பா போட்டுக்கணும். ஸ்டூடண்ட் தானேன்னு வேற எந்த சலுகையும் இங்கே கிடையாது. வர்ற கஸ்டமர்ஸ் எல்லாம் கொஞ்சம் ஹை-கிளாஸ் ஆளுங்க, அவங்ககிட்ட ரொம்ப கண்ணியமா நடந்துக்கணும். சிலரு நார்மலா இருப்பாங்க.. சிலர் டென்ஷனா பேசுவாங்க. அதுக்கெல்லாம் ரெஸ்பான்ஸ் பண்ண கூடாது. பொறுமையா ஹேண்டில் பண்ண தெரியணும் புரியுதா?" என்றார் சுரேந்தர் சிங்.
 
மைதிலி நிம்மதியுடன் தலையாட்டினாள். "Yes sir, கண்டிப்பா கவனிச்சுக்கிறேன்," என்றாள்.  
 
மேனேஜர்: சரிமா, நாளையிலிருந்து வேலைக்கு வந்துரு.
 
அம்மாவுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவும், தன் சொந்த செலவுகளைக் கவனித்துக் கொள்ளவும் இந்த வேலை அவளுக்கு ஒரு பெரிய பிடிமானமாக தெரிந்தது.
 
அதே நேரம் | SSG College Campus
 
மாலை மூன்று மணிக்கு காலேஜ் முடிந்திருந்தது.
 
வராண்டாக்களில் காலை முழுக்க குவிந்திருந்த சத்தங்கள், இப்போது ஒரு பழைய ரெக்கார்டு போல தேய்ந்து போயிருந்தது.
 
குப்பை காகிதங்கள் மட்டும் காற்றில் சறுக்கி ஓட, காலேஜ் வளாகம் தன் சுவாசத்தை இழுத்துக் கொண்டு, இரவுக்கான அமைதிக்குத் தயாராகிக் கொண்டிருந்தது.
 
கிரிக்கெட் கிரௌண்ட் —
 
முழுக்க காலி.
 
ஆனால்…
 
பக்கத்தில் இருந்த ஃபுட்பால் கிரவுண்ட் உயிருடன் இருந்தது.
 
மனோ, கோல் போஸ்டுக்கு நேராக நின்றிருந்தான்.
 
சிக்கி — கையுறை போட்டுக் கொண்டு, கோல்கீப்பர் பொசிஷனில்.
 
பெனால்டி சூட் அவுட் ப்ராக்டீஸ்.
 
20 யார்டு தூரத்தில்,
 
பந்து தரையில் வைக்கப்பட்டது.
 
மனோ சில அடிகள் பின்னால் சென்று நின்றான்.
 
ஒரு கணம் கோல் போஸ்டை பார்த்தான்.
 
அடுத்த நொடி — சிக்கியின் கண்களை.
 
பந்து அடிக்கப் போகும் காலின் முனை,
 
கோணத்தை சரி பார்த்து,
 
உடல் எடை forward-ஆ shift ஆனது.
 
Run-up.
 
Strike.
 
பந்து —இடது மூலையை நோக்கி, தரையோடு ஒட்டியபடி சென்றது.
 
சிக்கி டைவ் அடித்தான்.
 
ஆனால் அவன் கைகளை உரசிக்கொண்டு சென்று பந்து கோல் போஸ்ட்க்குள் நுழைந்தது.
 
கோல்.
 
“அட பாவி…”
 
சிக்கி பல்லைக் கடித்தான்.
 
அதே நேரம்,
 
கிரவுண்டில் சில ஜூனியர் பசங்க passing drills செய்து கொண்டிருந்தார்கள்.
 
கிரவுண்ட் ஓரத்தில் —
 
பாபி, சந்தீப், மனிஷ் மற்றும் டைரக்டர் ஜேம்ஸ் கேமராமேன்.
 
புல் மேல் உட்கார்ந்து  வம்பளந்து கொண்டிருந்தனர்.
 
சந்தீப் சிரித்தான்.
 
“டேய்… பிரேம் எங்கே?”
 
மனிஷ்: மனிஷாவை ட்ராப் பண்ணுவதற்காக போயிருக்கான்.
 
பாபி: அதுக்குள்ள டிரைவர் டூட்டியா?
 
எல்லாரும் சிரித்தார்கள்.
 
அப்போது, இரண்டு ஜூனியர் பசங்க தலையை சொரிந்தபடி தயங்கி தயங்கி வந்து நின்றார்கள்.
 
ஒருவன் முகத்தில் கடுப்பு தீற்றல்.
 
“சார்... சிக்கி சார் ரொம்ப ரோதன பண்ணுறாரு…”
 
சந்தீப் புருவங்களை உயர்த்தினான்.
 
“என்னடா?”
 
“கேர்ள் ஃப்ரெண்ட் கூட பேசவே முடியல சார்… ரொம்பவே டார்ச்சர் பண்றாரு..."
 
சந்தீப் அவனை சமாதானப்படுத்தும் விதத்தில் தோளை தட்டி,
 
“நம்ம பையனா போயிட்டா…
அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கடா. அவன் கண்ணு முன்னால கடலை போடாதீங்க..." என்றான்.
 
ஆனா அந்த ஜூனியர் விடவில்லை.
 
"இவரை பார்த்து மிரண்டு,
எங்க கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் எங்களையே avoid பண்ணுறாங்க.”
 
மனிஷ் சிரித்தபடி சொன்னான்:
 
"ஓ!!! அந்தளவுக்கு ஜூனியர் பசங்கள மிரட்டி வச்சிருக்கானா?"
 
ஜூனியர் இருவரும் பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
பாபி முகம் சற்று சீரியஸ் ஆனது.
 
“இல்லடா… இவனுங்க சொல்றது கரெக்டு தான். ரொம்ப ஓவர் டார்ச்சர் தான் பண்றான். ஜூனியர் பசங்கள மிரட்டுறது ஓகே நம்மளையே ஆடர் போடுறானே. எத செஞ்சாலும் இவனுக்கு தெரியாம பண்ண வேண்டியிருக்கு... இல்ல, கொசு மாதிரி காதுக்குள்ள சத்தம் போட்டுக்கிட்டே இருப்பான்.
 
சந்தீப் சந்தேகமாக:
 
“என்னடா அப்படி இவனுக்கு தெரியாம பண்ற?" என்று கேட்க,
 
பாபி: சேட்டிங்கில் ஒரு பிகர் உஷாராகிருக்கு.. பேச்சு பழக்க வழக்கம் எல்லாம் பாத்தா ஏதோ பாரின் பிகர் மாதிரி தெரியுது.  ஆனா இவனுக்கு தெரிஞ்சா டென்ஷன் ஆயிருவானேன்னு மறைச்சு மறைச்சு chat பண்ண வேண்டியதா இருக்கு. 
 
அந்த ஜூனியர் பையன்:
 Kya aap unse darrte ho?” (என்னது... நீங்க அவரைப் பார்த்து பயப்படுறீங்களா?)
 
பாபி:  பயம் ஒரு மயிரும் கிடையாது, பேசியே கழுத்தறுப்பான்.
 
சந்தீப்: “ நான் அப்பவே சந்தேகப்பட்டேன். ஃபாரின் ஃபிகர் மாடர்ன் பிகர்னு மூஞ்ச பாக்குறதுக்கு முன்னாடியே நம்பி chat பண்ணி, நம்ம பசங்க நிறைய பேர் பல்பு வாங்குறாங்க. நீயும் ஏமாந்து போயிராத.
ஏண்டா இவ்ளோ நாளா சொல்லல?"
 
பாபி: “இல்லடா…  just நார்மலா தான் ஓடிட்டு இருக்கு. பிக்கப் பண்ணல. பண்ணுனா…
சொல்ல மாட்டேனா?”
 
ஒரு நொடி pause.
 
“ஆனா சிக்கி மேல இந்த விஷயமா, நிறைய complaint வருது. சிங்கிள் தான் கெத்துன்னு தெனாவெட்டா சுத்திட்டு இருக்கான்.  அவனுக்கு ஒரு வழி பண்ணணும்.”
 
ஜூனியர்கள் இருவரும் அழாத குறையாக, "ஆமாண்ணா, ஏதாவது பண்ணுங்க"என்று கதறினார்கள்.
 
அவர்கள் சொல்லி முடிப்பதற்குள்— ஜேம்ஸ் மந்தகாசமாக சிரித்தான்.
 
“ஏண்டா அழுகுறீங்க? main hoon na... புதுசா directorial touch ஓட ஒரு சீன் வச்சிருக்கேன்.”
 
அனைவரும் அவனை திரும்பிப் பார்த்தார்கள்.
 
ஜேம்ஸ் தொடர்ந்தான்:
 
“கவலைப்படாதீங்க. சிக்கியோட சிங்கிள் ஸ்டேட்டஸை காலி பண்ணா இந்த பிரச்சனை…
smooth-ஆ சரியாகிடும்.”
 
கிரவுண்டுக்குள் கோல் போஸ்டில் நிற்கும் சிக்கியை அவன் பார்த்தபடியே சொல்கிறான்.
 
சிக்கி நெற்றியில் ஆரஞ்சு திலகம். கைகளில் அனுமார் உருவம் பொறித்த ஸ்டோன் பிரேஸ்லெட். கழுத்தில் சில்வர் வயர் வேலைப்பாடுடன் கூடிய அனுமான்–துளசி மாலை.
 
Cut
 
ஜேம்ஸின் மனசுக்குள் Flash.
 
விஷ்—
 
நெற்றியில் இருந்த திலகம் மங்குகிறது… மறைகிறது.
 
கையில் இருந்த பிரேஸ்லெட் காற்றில் கரைந்து விடுகிறது.
 
கழுத்திலிருந்த மாலை மெதுவாக புகையாய் சிதறி மறைகிறது.
 
Cut.
 
அதே சிக்கி.
 
எந்த திலகமும் இல்லை.
 
எந்த சாமி அடையாளமும் இல்லை.
 
அப்போதுதான் வெளியாகி இருந்த "தேரே நாம்" படத்தில் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருக்கும் சல்மான்கான் போல தோற்றம். (நம்மூரில் வெளியான விக்ரம் நடித்த "சேது" படத்தின் ஹிந்தி பதிப்பு)
 
Cut.
 
ஜேம்ஸ்—
 
“இதான் சரியான ஃப்ரேம்…”
 
என்ன பேசுகிறான் என்று புரியாமல் மற்றவர்கள் அவனை பார்த்துக் கொண்டிருந்தனர்.
மாலை 6 PM | SSG லேடீஸ் ஹாஸ்டல்
 
ரூமில் மைதிலி மட்டுமே இருந்தாள். சஞ்சுவும் இந்துவும் பார்லர் போயிருந்தார்கள். அப்போது ரூம் கதவை தட்டிய லேடி அட்டெண்டர், "மைதிலி... ஆபீஸ்ல உனக்கு ஒரு போன் வந்திருக்கு. சீக்கிரம் வா," என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
  
மைதிலி பதட்டத்துடன் ஓடினாள். அலுவலகத்திற்கு பக்கத்தில் இருக்கும் அந்த  ‘டெலிபோன் ரூமில்’ ஏற்கனவே இரண்டு மாணவிகள் பேசி கொண்டிருந்தார்கள். மைதிலி தன் முறைக்காக காத்திருந்தாள். சரியாக பத்து நிமிடம் கழித்து லேண்ட்லைன் ஃபோன் மீண்டும் சிணுங்கியது.
 
ரிசீவரை எடுத்த மைதிலி, "ஹலோ..." என்றாள்.
மறுமுனையில் மெல்லிய விம்மலுடன் கலந்த ஒரு குரல், 
 
"கண்ணா... மைதிலி..."
 
"அம்மா! நீங்களா? எப்படி இருக்கீங்கம்மா? எங்கருந்து பேசுறீங்க?"
 
மைதிலியின் குரலில் உற்சாகம் கரைபுரண்டது.
 
"நான் நல்லா இருக்கேன்டா. நீ எப்படி இருக்க? கோயிலுக்கு வந்தேன். வெளியே காயின் பாக்ஸ்ல இருந்து பேசுறேன்... அங்க சாப்பாடெல்லாம் எப்படி இருக்கு? வசதியா இருக்கா?" 
 
ஜான்சியின் குரலில் எப்போதும் இருக்கும் அந்தத் தாய்க்குரிய கவலை தெரிந்தது.
 
"எல்லாம் சூப்பரா இருக்கும்மா. நான் கூட ஒரு பார்ட்-டைம் வேலைக்கு சேர்ந்துட்டேன். கண்டாலாவிலேயே ஒரு காபி ஷாப். அங்க மேனேஜர் strict ஆனா பாக்க நல்ல டைப் மாதிரி தான் தெரியுது," என்று தன் கஷ்டங்களை மறைத்து சொன்னாள் மைதிலி.
 
"அம்மா... மாமா, அத்தை எல்லாம் எப்படி இருக்காங்க? உங்களை ரொம்ப வேலை வாங்குறாங்களா?"
 
மறுமுனையில் ஜான்சி ஒரு கணம் மௌனமானாள். அத்தை கமலினியின் சுடுசொற்களும், அமில நாக்கும் அவளது மனதை அன்றாடம் புண்ணாக்கி கொண்டிருந்தாலும், மகளிடம் அதை சொல்ல அவளுக்கு மனம் வரவில்லை. சமீப காலமாக ஆஸ்துமா தொந்தரவு அதிகமாகி இருந்தாலும், "அவங்க எல்லாரும் நல்லா இருக்காங்கடா. என்னைப் பார்த்துக்கிறாங்க. நீ எதைப்பத்தியும் கவலைப்படாம நல்லா படி," என்று பொய் சொன்னாள்.
 
மைதிலிக்குத் தெரியும், அம்மா பொய் சொல்கிறாள் என்று. "அம்மா... எனக்கு இங்க சாப்பாட்டுக்கு எல்லாம் பிரச்சனை இல்லை. காபி ஷாப்ல கிடைக்கிற பணத்தை வச்சு நான் சமாளிச்சுக்குவேன். மீதி பணத்தை உங்களுக்குச் செலவுக்கு அனுப்பி வைக்கிறேன். கொஞ்ச நாள் மட்டும் எப்படியாவது பொறுத்துக்குங்கம்மா," என்றாள்.
 
"வேண்டாம்மா. அங்க இருக்கிற பசங்க எல்லாம் பெரிய இடத்து புள்ளைங்க. அவங்க கூட இருக்கும்போது உனக்கு ஏதாவது தேவைப்படும். பணத்தை நீயே வச்சுக்கோ. நான் எப்படியோ சமாளிச்சுக்குவேன்," என்ற ஜான்சியின் குரல் கம்மியது.
 
மைதிலியின் மனக்கண்ணில் எட்டாம் வகுப்பு படிக்கும்போது அம்மாவிடம் செய்த அந்த சத்தியம் மின்னியது.
 
'பெரிய ஆபீஸராகி உங்களைச் சந்தோஷமா வச்சுக்குவேன்...'
 
"அம்மா... சீக்கிரம் நான் பெரிய ஆளா வந்துருவேன். அப்புறம் உங்களுக்கு அந்த நரகத்திலிருந்து விடுதலை," என்று சொல்லும்போதே மைதிலியின் கண்கள் பனித்தது.
 
"எனக்குத் தெரியும்டா. என் புள்ளை கண்டிப்பா சாதிப்பா. நீ அழாதம்மா..." என்று சொன்ன ஜான்சி, தன் கண்களில் வழியும் கண்ணீரைத் தன் கிழிந்த முந்தானையால் துடைத்து கொண்டாள்.
 
இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருந்தாலும், இருபுறமும் மௌனம் தான் அதிகம் பேசியது. ரிசீவரை வைக்கும்போது இருவரது இதயம் கனத்திருந்தது. அந்த டெலிபோன் அறையில் மைதிலி மனசுக்குள் பல விஷயங்களை அசை போட்டபடி அசையாமல் நின்றிருந்தாள். எவ்வளவு அடி வாங்கியிருந்தாலும், தளர்ந்து போயிருந்தாலும், அம்மாவின் குரலை கேட்கும்போது அவளுக்குள்  போராட்ட குணம் அதிகரிக்கும்.
வணக்கம்.
 
அத்தியாயம் 11-ன் முக்கிய தலைப்பு செய்திகளை முதலில் சுருக்கமாக காணலாம்:
 
  1. நட்பின் தாராளத்தில் நனைந்து புதிய பொலிவு பெறும் மைதிலி.
 
  1. சுயமரியாதையுடன் மைதிலி தொடங்கும் உழைப்பின் முதல் அத்தியாயம்!
 
  1. கல்லூரி மென்ஸ் ரெஸ்ட் ரூமில் ரகசிய உரையாடல்கள்: ஸ்ரேயாவின் பிடியில் சிக்கத் தயங்கும் மனோ.
 
  1. காபி ஷாப்பில் விரியும் ராஜதந்திர வலை: மனோவை வளைத்து போட ஸ்ரேயா முன்னெடுக்கும் அதிரடியான ‘ஸ்குவாட் க்ரஷ் பார்ட்டி’ திட்டம்.
 
தலைப்பு செய்திகளை இப்போது விரிவாக காணலாம்:
 
Scene 1 – அர்பன் கேர்ள்ஸ் ஷோரூம் | மதியம் இரண்டு மணி
பெரிய ஷோரூம். கண்ணைக் கவரும் நிறங்களில் உடைகள்.
 
ரேக்குகளில் தொங்கும்—
 
Pastel floral குர்த்திகள்
 
Indigo ப்ளாக்-பிரிண்ட் நீளமான டாப்கள்
 
மெல்லிய சிஃபான் துப்பட்டாக்கள்.
 
High waist பலாசோ பேன்ட்கள்
 
Slim-fit ankle ஜீன்ஸ்
 
Rust நிற ஸ்டைலிஷ் ஷ்ரக்
 
பாட்டில்-கிரீன் நிறத்தில் மென்மையான ஜரி வேலைப்பாடுடன் கூடிய ஸ்ட்ரெயிட் குர்த்தி.
 
லாவெண்டர் நிற காடன் கோ-ஆர்ட் செட் (மேல்-கீழ் ஒரே டிசைன் உடை)
 
இன்னும் எக்கச்சக்கமாக....
 
சஞ்சு ஒரு டிரஸ்ஸை மைதிலி மார்புக்கு முன் பிடித்து பார்த்துவிட்டு, ஃபோல்ட் பண்ணி பில்லிங் கவுண்டருக்கு  போடுகிறாள்.
 
இந்துவும் ஒரு டிரெஸ்ஸை எடுத்து மைதிலி முன்னால் வைத்து பார்க்கிறாள்.
 
மைதிலி தயக்கத்துடன்: “வேண்டாம் ப்ளீஸ்… இதெல்லாம் ரொம்ப காஸ்ட்லியா இருக்குற மாதிரி தோணுது…”
 
சஞ்சு: 
“அன்னைக்கே சொன்னோம்ல… நாங்க என்ன செஞ்சாலும் உன்னோட நல்லதுக்குத்தான். இப்ப எங்க கிட்ட இருக்கு — நாங்க பண்றோம். நாளைக்கு உனக்கு வரும்போது எங்களுக்கு செய். இப்ப நாங்க சொல்றதை கேள்.”
 
இந்துவும் அன்பு கட்டளையாக: “No arguments” என்றாள்.
 
மைதிலி கண்களில் கண்ணீரின் பளபளப்பு.
 
Cut.
 
Changing room கர்ட்டன் திறக்கிறது.
 
மைதிலி — soft peach kurti, straight pants அணிந்து வெளிப்பட,
 
சஞ்சு & இந்து அவளை  உற்சாகமாக நெருங்கி— ஆளுக்கொரு side-ல இருந்து அவள் தோள்களில் கை போட்டு குலுக்குகிறார்கள்.
 
திரும்பி கண்ணாடியை பார்க்கிறார்கள் கண்ணாடியில் மூன்று பேரின் ரிப்லெக்ஷன்.
 
சிரிப்பு.
 
பில்லிங் மெஷின்
 
“ட்ர்ர்ர்…” என்று ரசீது வெளியே வருகிறது.
Cut.
 
Scene 2 – Anglo Indian Coffee Shop | மாலை 6 PM
 
காபி ஷாப் பில்லிங் மெஷின்.
 
“ட்ர்ர்ர்…” என்று ரசீது வெளியே வருகிறது.
 
மைதிலியின் கையில் —
காபி ட்ரே.
 
பழுப்பு apron.
 
நீட்டாக பின்னி கட்டப்பட்ட முடி.
 
யூனிஃபார்மில் Name tag – “ மைதிலி”.
 
கையில் வைத்திருந்த ட்ரேயில் இரண்டு cappuccino.
 
காபியில் நுரையால் வரையப்பட்ட ஹார்ட் ஆர்ட்.
 
“டேபிள் நம்பர் ஐந்து.”
 
அவள் ஸ்டெடியாக நடந்து செல்கிறாள்.
 
கப்பை டேபிள் மேல் வைக்கும் போது சிக்கனமான ஒரு ஸ்மைல்.
 
“Thank you, ma’am.”
 
சுற்றிலும் மற்ற டேபிள்களில்,
 
ஒரு லவ் ஜோடி ரகசியம் பேசிக் கொண்டிருந்தது.
 
ஒரு பிஸ்னஸ்மேன் டைரியை பார்த்தபடியே போனில் அப்பாயிண்ட்மெண்ட் சொல்லி கொண்டிருந்தார்.
 
ஒரு இளம் பெண் போன் பேசியபடி யாருக்காகவோ காத்திருந்தாள்.
 
மேனேஜர் சுரேந்தர் சிங் கவுண்டரில் இருந்து மைதிலியை பார்த்து, சின்ன தலையசைப்பு...
பதிலுக்கு மைதிலியின் புன்சிரிப்பு.
 
Cut.
 
Scene 3 – SSG College Rest Room | மாலை 3 PM
 
பழைய டைல்ஸ் சுவர்கள்.
 
எக்ஸாஸ்ட் ஃபேன் — கர....கர
 
தண்ணீர் டேப் — சள...சள
 
பேக்ரவுண்டில் சந்தீப், மனிஷ், பிரேம் — யூரினலில் வரிசையாக கதை பேசியபடி வேலையை பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
ஃபோர்கிரவுண்டில் பேசினருகே கண்ணாடி முன்னால் மனோ மற்றும் பாபி.
 
மனோ — கண்ணாடியை பார்த்தபடியே பேசினான்.
 
“அந்த ஸ்ரேயா ரொம்ப தொந்தரவு பண்றாடா…  தனியா மீட் பண்ணனும்னு அடிக்கடி insist பண்றா.”
 
பாபி கைகளை துடைத்துக்கொண்டு:
 
“அவளை ஏன் avoid பண்ற? உன் level-க்கு ஈக்குவலா தான் இருக்கா… status-லும், personality-யும் match ஆகுதுல? ஓகே சொல்ல வேண்டியது தானே.”
 
மனோ மெதுவா சிரித்து, மறுப்பது போல் தலையாட்டினான்.
 
“தெரியலடா… அவளை பார்க்கும்போது எந்த feel-யும் வரல. I just don’t feel anything. You can’t force yourself to love someone just because everything looks perfect.”
 
பாபி பேசின் சுவரில் டிக்கியை சாய்த்து திரும்பி நின்று, அவனைப் பார்த்தபடி பேசினான்.
 
“சரி… ஆனா ரொம்ப ignore பண்ணாத. Tomorrow it might turn into something… or it may not. Either way, you can’t cancel things that affect the campus.  அவளையும் மேனேஜ் பண்ணணும்.”
 
சிறிய இடைவேளை விட்டு தொடர்ந்தான்.
 
“Common place-ல meet பண்ணு. Public-ஆ. Neutral-ஆ இருக்கும்.”
 
மனோ புருவம் சுருக்கி:
 
“நான் meet பண்ண ஒத்துக்கிட்டேனா… நான் close ஆகுறேன்னு அவ நினைச்சுக்கலாம்", என்றான்
 
பாபி புன்முறுவலுடன்,
 
“ஓவர் திங்க் பண்றேடா. Coffee shop-ல meet பண்ணலாம்ன்னு சொல்லு. We’ll also be around. Chill.”
 
அப்போதுதான் வேக வேகமாக பாத்ரூமுக்குள் நுழைந்து, ஜிப்பை திறந்தபடியே ஒரு யூரினலை நெருங்கிய  சிக்கி,
 
“டேய் எவன்டா அது? ஒழுங்கா flush பண்ணாம போனது?!” என்று கத்த,
 
பாபி எரிச்சலாக: கொசு தொல்லை தாங்க முடியலடா...
 
Tap திறக்கப்படும் சத்தம். 
தண்ணீர் சுழலும் சத்தம் frame-ஐ நிரப்புகிறது.
 
Cut.
Scene 4 – khandala...High class bistro
 
ஒரு கிரிஸ்டல் கிளாசில் தண்ணீர் நிரம்புகிறது.
 
கண்டாலா மலைச்சரிவை நேராக பார்த்து கொண்டிருக்கும் ஒரு ஹை-கிளாஸ் பிஸ்ட்ரோ.
 
கண்ணாடி சுவர்கள்.
 
மாலையின் பொன் நிற ஒளி கண்ணாடி சுவர்களைத் தாண்டி உள்ளே சரிந்து வந்து, ஸ்ரேயாவின் முகத்தின் ஓரத்தை மெதுவாக தொட்டது.
 
ஸ்ரேயா போன் பேசி முடித்துவிட்டு, போனை  மேசையின் மீது வைத்தாள்.
 
பின்புறம் மெதுவான ஜாஸ் இசை.
 
டேபிள் மீது கிரிஸ்டல் வாட்டர் கிளாஸ் மற்றும் white linen napkin.
 
டேபிளின் மறுபக்கம் சலோனி & பிரணவி அமர்ந்திருந்தனர்.
 
சலோனி சற்று முன்னால் வந்து:
 
“He said yes...?” என்று கேட்க,
 
ஸ்ரேயா சேரை பின்னால் இழுத்து அமர்கிறாள்.க்ரீம் நிறம் கலந்த soft satin crop top; அதற்கு மேட்சிங் ஆன high-waist beige trousers.
 
அவள் மார்புப் பகுதியின் neckline-ல் சொருகி வைத்திருந்த sunglasses-ஐ  மெதுவாக எடுத்தாள்.
 
அந்த அசைவில் விரலில் இருந்த வைர மோதிரம் — சூரிய ஒளியைப் பிடித்து சின்ன தீப்பொறி போல ஜொலித்தது.
 
Sunglasses-ஐ மேசையின் மேல் வைத்தாள் — கவனத்தை ஈர்க்காத மாதிரி… ஆனா கவனத்தை முழுக்க பிடித்த மாதிரி
 
“Yes. Coffee shop. Public place",
 
என்றாள் ஒரு புன்னகையுடன்.
 
உடனே பிரணவி உருவங்களை உயர்த்தி:
 
“Interesting… he wants to be safe," என்றாள் குறும்பாக.
 
ஸ்ரேயா: “எஸ்... காபி ஷாப்... பப்ளிக் மீட் ஓகே தான். அவன் safe ஆ இருக்குறதா பீல் பண்ணட்டும்!”
 
சில நொடிகள்  பேச்சற்ற இடைவெளி.
 
ஸ்ரேயா கிளாசை எடுத்து தண்ணீர் ஒரு சிப் குடித்துவிட்டு,
 
“மீட்டிங் நடக்கும் போது…  Krush பார்ட்டிக்கு பர்சனலா அவனை இன்வைட் பண்ணுவேன்", என்றாள்.
 
சலோனி புன்முறுவலுடன் கிளாசை விரலால் சுற்றிக்கொண்டு,
 
“So… the game begins-aa?” என்று கேட்க,
 
ஸ்ரேயா ஜன்னலுக்கு வெளியே மலைகளை ஒரு நொடி பார்த்தாள்.
 
மாலை நேர பொன்னிற சூரிய ஒளி அவள் முகத்தை பாதியாகத் தொட்டது.
 
“He thinks he’s unreachable…”
 
[“அவன் யாராலும் அவனை touch பண்ண முடியாதுன்னு நினைக்கிறான்.”]
 
பிறகு திரும்பி இருவரையும் நேராகப் பார்த்தாள்.
 
“Let’s see… how long that lasts.”
 
[எவ்வளவு நாள் அந்த distance maintain பண்ணுறான் என்று பாத்துக்கலாம்.]
 
பிரணவி மைண்ட் வாய்ஸில் " நமக்கு நல்ல என்டேர்டைன்மென்ட்... ஜாலி" என்று தோன்ற, ஆனால் ஸ்ரேயாவை தூண்டிவிடும் விதமாக,
 
“This is going to be interesting… the beautiful vs the handsome" என்றாள்.
 
ஸ்ரேயா அவள் சொன்னதுக்கு இறுமாப்புடன் தலையாட்டியபடியே  sunglasses-ஐ மீண்டும் அணிந்து கொண்டாள்.
 
11வது எபிசோடு தலைப்புச் செய்திகள் இத்துடன் நிறைவடைந்தது.
 
தொடரும்…
 

உங்களின் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவிடவும்

https://kavichandranovels.com/community/topicid/636/



   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 1 year ago
Posts: 150
Topic starter  

ஜானகி மந்திரம் 11 A

 

Anglo Indian Cafe– மறுநாள் மாலை 5 pm

 

மலைச்சரிவின் பனி, கஃபேயின் கண்ணாடிகளில் ஒரு 'Face Mist போலத் தூவப்பட்டு, வெளியுலகை ஒரு 'செட்டிங் பவுடர்' போல மங்கலாக்கியிருந்தது. ஒரு தேர்ந்த ஒப்பனை கலைஞரின் 'பிளெண்டிங்' வேலைப்பாடு போன்ற அந்தப் பனிப்படலம், கண்ணாடிக்கு ஒரு 'ஏர்-பிரஷ்' பொலிவை கொடுத்திருந்தது.

 

கஃபேயின் உள்ளே மிருதுவான மஞ்சள் லைட்டிங் மற்றும் இதமான ஜாஸ் இசை.

 

பெரிய ரவுண்ட் டேபிளில் —

 

ஸ்ரேயா, சலோனி, பிரணவி.

 

மனோ இன்னும் வந்திருக்கவில்லை.

 

“Practice முடிஞ்சு வர்றேன்… 10 minutes,” என்று அவன் போன் பண்ணி சொல்ல, பேசிவிட்டு ஸ்ரேயா போனை மேசை மீது வைத்தாள்.

 

“Let him come,” என்றாள் பொறுமையாக.

 

ஆனால் அவள் விரல்கள்  கிளாசை மெதுவாக தட்டின — பொறுமையின்மை.

 

பேண்ட்ரி அருகே நின்றிருந்த மைதிலிக்கு லப் டப்...

 

இவங்களா…? இங்க…?

 

அவள் order pad-ஐ கையில் எடுத்தாள்.

 

இந்த table — அவளுடைய section.

 

வேலைதான். Professional-ஆ இரு.

 

மனதை தேற்றிக்கொண்டு அவள் மெதுவாக நடந்து அவர்கள் டேபிள் அருகே சென்றாள்.

 

“Good evening, ma’am...What would you like to have? ”

 

ஸ்ரேயா அவளை நிதானமாக பார்த்தாள்.

 

அவள் வீட்டு வேலைக்காரர்களை பார்ப்பது போல் அந்த பார்வை — 

 

இவளை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குதே!

 

பிரணவி அடையாளம் கண்டுபிடித்து விட்டாள்.

 

“நீ SSG காலேஜ் தானே?"

 

மைதிலி ஆமாவென்று மெதுவாக தலையசைத்தாள்.

 

“yes, ma’am.”

 

ஸ்ரேயா நக்கலாக: “Interesting career choice.”

 

பிரணவி:

“Scholarship பத்தலையா? அதனால தான் வேலைக்கு வந்துட்டியா?”

 

சலோனி: காலேஜ் பேர் இப்படில்லாம் கெட்டுப் போகணுமா?

 

மூவரின் குரலும் மென்மை.

ஆனா கத்தி கூர்மை.

 

மைதிலி:

 

“Order சொல்லுங்க ma’am.”

 

ஸ்ரேயா: “Water first. கெஸ்ட் வந்ததும் இதைத்தான் செய்யணும். இது தெரியாதா உனக்கு?"

 

மைதிலி ஜக்கை எடுத்து glass-ஐ நிரப்பினாள்.

 

அவள் glass-ஐ வைக்க முயன்ற அந்த நொடியில்,

ஸ்ரேயா வேண்டுமென்றே கையை நீட்ட, கிளாஷ் ஆகி தண்ணீர் தெறித்து டேபிள் மேலும்

மைதிலியின் apron-லும் சிந்தியது.

 

ஸ்ரேயா: shit!!! பார்த்து பண்ண கூடாதா?

 

சலோனி: “Oops.”

 

மைதிலி அவள் மேல் பட்டிருந்த தண்ணீரை துடைக்க முயல,

 

பிரணவி;

 

“Careful. This place is expensive. முதல்ல டேபிளை கிளீன் பண்ணு"

 

“Sorry ma’am” என்று மைதிலி சொல்லிவிட்டு நாப்கின் எடுத்து டேபிளை துடைக்க ஆரம்பித்தாள்.

 

ஸ்ரேயா அவளைப் பார்த்து தெனாவட்டாக,

 

“Refill. Cold water. வேற கிளாஸ் எடுத்துட்டு வா", என்றாள்.

 

மைதிலி சட்டென்று திரும்பி நடக்க ஆரம்பிக்க, அவள் நடையில் சிறிது கலக்கம்.

 

சில நொடிகளில் திரும்பி வந்தாள்.

 

Glass நிரம்பி இருந்தது.

 

ஸ்ரேயா கிளாசை வாங்கி ஒரு வாய் குடித்துவிட்டு,

முகம் சுளித்தாள்.

 

“i said...i need cold water"

 

பிரணவி நக்கலாக சிரித்தாள்.

 

"இவளுக்கு இந்த  மாதிரி இடங்கள் புதுசா இருக்கலாம். அதனால கெஸ்ட்டை எப்படி கவனிக்கணும் தெரியல.."

 

சலோனி: yes, training கொஞ்சம் வேணும்.

 

மைதிலி:

 

“சாரி.  நான் வேற கொண்டு வர்ற மேடம்.."

 

“Wait.”

 

ஸ்ரேயா அவளை நிறுத்தினாள். அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தாள். அவளுடைய ஈரமான மேலாடையை பார்த்து மேலும் முகம் சுளித்தாள்.

 

“Uniform wet ஆயிருக்கு. Presentation matters my dear SSG girl... ஃபர்ஸ்ட் டைம்ங்கறதுனால விட்டுடுறேன், இல்லன்னா நான் உங்க மேனேஜர் கிட்ட கம்பளைண்ட் பண்ண வேண்டிருக்கும்.."

 

மைதிலி அமைதியாக நின்று கொண்டிருக்க,

 

சலோனி கைகளை மேசை மீது வைத்து முன்னால் வந்து:

 

“Stand straight. Shoulders back", என்று ஆர்டர் போடும் விதமாக சொன்னாள்.

 

மைதிலி அவள் சொன்னபடி செய்தாள்.

 

பிரணவி:

 

“Smile. High-class customers prefer pleasant staff.”

 

மைதிலி தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அவள் சொன்னபடி புன்னகை முகமாக நின்றாள்.

 

ஸ்ரேயா சொடக்கு போட்டு சுட்டு விரல் நீட்டி

 

“Thats better” என்றாள்.

 

அவள் கிளாசை எடுத்து தட்டி காண்பித்து,

 

“Now refill. Properly chilled. And don’t rush. We are waiting", என்றாள்.

 

மைதிலி திரும்பி செல்லும்போது—

 

சலோனி:

 

“இதே மாதிரி இவ கூட இருக்காங்களே, அந்த திமிரு புடிச்ச ரெண்டு கழுதைகளையும் parade எடுக்கணும். அப்பதான் திருந்துவாளுங்க."

 

பிரணவி:

 

“எங்க போயிர போறாளுங்க நிச்சயமா மாட்டத்தான போறாளுங்க"

 

மைதிலி அவர்கள் பேசுவதை கேட்கும் தூரத்தில் தான் இருந்தாள்.

ஆனா திரும்பிப் பார்க்கவில்லை.

 

கண்கள் நனைய முயற்சித்தன. கட்டுப்படுத்தி கொண்டாள்.

அவள் கிளாசில் கோல்ட் வாட்டரை நிரப்பி கொண்டு வந்து அவர்கள் டேபிளில் வைத்தாள்.

 

ஸ்ரேயா கிளாசை எடுத்து ஒரு சிப்.

 

பின்னர் சாவதானமாக சாய்ந்து அமர்ந்தாள்.

 

“Good. See? You can improve.”

 

பிரணவி:

 

“Stand there. இன்னும் ஒரு கெஸ்ட் வரணும். Then we’ll order.”

 

அவர்கள் கட்டளைக்கு கட்டுப்பட்டு, மைதிலி சற்று தள்ளி அமைதியாக நின்றாள்.

 

நேரம் நகர்ந்தது.

 

அவர்களுக்கு அது நேரம் போவதற்கான சிறிய கேளிக்கை. 

 

அவளுக்கு — முழு அவமானம்.

 

ஆனா முகத்தில் — வலிகள் எதையும் வெளியே கசியவிடாதபடி, மிக லாவகமாக அணிந்து கொண்ட ஒரு முகமூடி புன்னகை.

 

ஆனால் அந்த புன்னகையின் பின்னால், உள்ளே ஏதோ ஒன்று மெதுவாக கடினமாகி கொண்டிருந்தது.

 

தொடரும்

 

 

உங்களின் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் பதிவிடவும்

https://kavichandranovels.com/community/topicid/636/



   
ReplyQuote
Page 2 / 2

You cannot copy content of this page