வர்ணம் - 41
ஐயர் வீட்டு கேட்டருகே, ஜானி நின்றிருக்க... பங்களா கேட்டில் சகாதேவன் கூட்டத்தினருடன் நின்றிருந்தார். பண்ணை வீட்டுக்குள் சென்று கிரி திரும்பி வெளியே வரவில்லை.
ஜானி தெரு முனையை பார்த்தபடியே நின்றான். நொடிகள் நொண்டியபடியே இருக்க.... ஜானி இருப்புக் கொள்ளாமல் தவித்தான்.
டேய்ய்ய்ய்.... யாராச்சும் வாங்கடா சீக்கிரம்!!!!
கேட்டில் செக்யூரிட்டியையும் காணவில்லை.
அடுத்த ஒரு சில நொடிகளில் ரிஷாந்த் பைக்கில் தெருவுக்குள் நுழைய, அவனைத் தொடர்ந்து இரண்டு போலீஸ் ஜீப்புகள். வழக்கமாக கிளைமாக்ஸ் முடிந்த பிறகு தான் போலீஸ் ஜீப் வரும். கிளைமாக்ஸுக்கு முன்னாலே வந்தது இதுதான் முதல் முறை என்று ஜானி நினைத்துக் கொண்டான். போலீசை பார்த்தது, அளவில்லாத மகிழ்ச்சி அடைந்ததும் இதுவே முதல் முறை.
ஜானி பங்களா கேட்டை நோக்கி ஓடினான். போலீஸ் ஜீப்புகளை பார்த்ததும், உட்கார்ந்து இருந்த மக்கள் என்னமோ ஏதோ என்று பயந்து போய் எழும்பி நின்றார்கள்.
ரிஷாந்த் பைக்கை ஓரங்கட்டி நிறுத்த, ஜீப்புகள் கேட்டின் முன்னால் வந்து நின்றது. ஜீப்புகளில் இருந்து போலீஸ்காரர்கள் அனைவரும் இறங்கினார்கள்.
ஜானி கேட்டுக்குள் கை வைத்து, உள்ளே பூட்டப்பட்டிருந்த கொண்டியை எடுத்து கேட்டை திறந்தான்.
"சார் உள்ள ரெண்டு நாய் இருக்கு. பார்த்து போகணும்.."
மரக்காணம் ஸ்டேஷன் எஸ்ஐ சபாபதியும், கான்ஸ்டபிள்கள் நாலு மற்றும் ஐந்து பிசி என ஒட்டுமொத்த ஸ்டேஷனுமே வந்திருந்தது. ரைட்டர், இன்ஸ்பெக்டர் மட்டும்தான் வரவில்லை... எஸ் ஐ சபாவதியை பார்த்ததும், சகாதேவன் சல்யூட் அடித்தார்
"யோவ், காலாப்பட்டு ஸ்டேஷன் தானே... நீ இங்க என்னய்யா பண்ற?"
சகாதேவன் சுருக்கமாக விஷயத்தை சொன்னார்.
"என்னமோ சொல்றீங்க? தப்பாச்சின்னா நமக்கு ஆப்பு தான். சரி வாங்க போய் பார்ப்போம்...", என்று பெருமூச்சு விட்டு, SI கேட்டை திறந்து உள்ளே நுழைந்தார். போலீஸ் அனைவரும் அவர் பின்னால் சென்றார்கள். கடைசியில் சகாதேவனும் ரிஷாந்த்தும் நுழைந்தார்கள். என்னமோ ஏதோ என்று மக்கள் பதட்டமாக பார்த்துக் கொண்டிருக்க, ஜானி அவர்களை சமாதானப்படுத்தினான்.
"பதட்டமாகாதிங்க. இது ஏற்கனவே போலீசுக்கும், இந்த பங்களாகாரருக்கும் இருக்கிற பிரச்சனை. அதனால் தான் வந்திருக்காங்க. வேற ஒண்ணுமில்ல. கார் ஓட்டிட்டு போன தம்பி, இல்லன்னா நிர்மலா நம்பர் உங்களுக்கு தெரியும்னா, போன் பண்ணி அந்தம்மாவுக்கு என்னாச்சுன்னு கேளுங்க. கார் ரிட்டன் ஆகுற வரைக்கும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க", என்று பொதுவாக அவர்களைப் பார்த்து சொல்லிவிட்டு, ஜானியும் பங்களாவுக்குள் நுழைந்தான்.
பண்ணை வீட்டுக்குள் தடதடவென்று போலீஸ் பட்டாளம் நுழைவதை பார்த்ததும், ரெண்டு நாய்களும் குலைத்துக் கொண்டு, சீறி பாய்ந்து வந்தன.
போலீஸ்காரர்கள் ஜெர்கானார்கள்.
Si: யோவ்... அந்த ரெண்டையும் புடிங்கயா...
பங்களா வாசலில் கிரி வந்து நின்றான். அவன் நடையில், பார்வையில் அசால்ட்டுதனம்.
"Rosy...Rexy....quiet...." என்று சத்தமிட்டான்.
அடுத்த நொடி, இரண்டு நாய்களும் மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல், குறைப்பதை நிறுத்தி, அப்படியே நின்றது.
அவன் முகத்தில் கலக்கமோ பயமோ எதுவுமே இல்லை. செக்யூரிட்டி எங்கே என்று ஜானி சுற்றிலும் பார்த்துக் கொண்டிருக்க, அவன் கண்ணில் படவே இல்லை. எங்கே போயிருப்பான்?
எஸ் ஐ யும்... மற்ற போலீசும் வாசலை நெருங்கியதும்,
கிரி: என்ன எஸ்ஐ சார்? எங்க வீட்டுக்கு அன்டைம்ல வந்துருக்கீங்க. ஏதாவது முக்கியமான விஷயமா?
எஸ் ஐ: நாங்க தேடிட்டு இருக்குற ஒரு குற்றவாளி உங்க பண்ண வீட்டுக்குள்ள எகிறி குதிக்கிறத இவரு பார்த்திருக்காரு...( என்று ரிஷாந்த்தை கை காண்பித்தார்) அதனால ஒரு routine செக் தான். தொந்தரவுக்கு மன்னிக்கணும்.
கிரி ரிஷாந்த்தை உஷ்ணமாக பார்த்தான்.
கிரி மட்டும் தான் இருக்கிறான். தாரிகாவை காணவில்லை, செக்யூரிட்டியை காணவில்லை. ஜானி சுற்றிலும் பார்வையை ஓட்டிக் கொண்டிருந்தான். அவுட் ஹவுஸை பார்த்ததும், திடுக்கிட்டான். அவுட் ஹவுஸின் கதவுகள் திறந்து கிடந்தன.
ஜானி மூளைக்குள் ரத்த குழாய்கள் விரிவடைந்தன. பதட்டமானான். கிரி ஏதாவது சித்து விளையாட்டு காட்டிவிட்டானா?
கிரி: இதோ பாருங்க சார் routine செக்கப்போ என்னவோ... அதை பத்தி எனக்கு கவலை இல்லை. ஆனால் சர்ச் வாரண்ட் இல்லாமல் யாரையும் என்னுடைய வீட்டுக்குள் அனுமதிக்க முடியாது.
எஸ்ஐ: சார், உங்க அனுமதி எனக்கு தேவையில்லை. தப்பிச்சு போன குற்றவாளியை பிடிக்க வேண்டியது எங்களுடைய கடமை. அவனால் உங்களுக்கும், உங்க வீட்ல இருக்குற மத்தவங்களுக்கும் கூட தான் ஆபத்து. அதனால நாங்க செக் பண்ணி தான் ஆகணும்.
கிரி அலட்டி கொள்ளாமல் சர்வ சாதாரணமாக, " சாரி எஸ் ஐ சார். உங்களுக்கு சட்டம் தெரியும்னு நினைக்கிறேன். Crpc la section 93, 94,95 அப்புறம் indian constitution article 19, right to privacy எல்லாம் கேள்விப்பட்டு இருப்பிங்க. வாரண்ட் இல்லாம சர்ச் பண்ண முடியாது. நான் எங்கேயும் போயிற மாட்டேன்.
இங்கே தான் இருப்பேன். ஏதாவது ஒரு magistrate கிட்ட போய் search warrant வாங்கிட்டு வாங்க. அதுக்குள்ள நான் என் லாயரை வர சொல்றேன்.
அதுக்கப்புறம் நீங்க தாராளமா சர்ச் பண்ணிக்கலாம். அதுக்கு முன்னால, என் ஆட்களை விட்டு நான் சர்ச் பண்ண சொல்றேன். அப்படி யாராவது என் பார்ம் ஹவுஸில் நுழைந்து இருந்தால், நானே பிடித்துக் கொண்டு வந்து போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கிறேன். Now i could not allow you inside my premises.
Do you understand?"
என்னடா இவன் crpc section எல்லாம் பேசுறான் என்று எஸ்ஐ சபாபதியும், கூட வந்த போலீஸ்காரர்களும் வாயடைத்து பார்த்துக் கொண்டிருக்க,
"Sir, one minute...." என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.
கிரி உட்பட அனைவரும் சப்தம் வந்த திசையை திரும்பி பார்த்தார்கள்.
மீசை சகாதேவனின் வாய்ஸ் தான் அது.
"SI sir ஏற்கனவே சொல்லிட்டாரு...they are in hot pursuit of an accused they have the authority to arrest, so they can enter your home without a warrant or permission. This is as per Crpc 165....Also, ஒரு போலீஸ் ஆபிசரை அவருடைய டூட்டியை செய்ய விடாம தடுத்தாலோ இல்ல தாக்க முயற்சித்தாலோ, ஐபிசி செக்சன் 353 பிரகாரம், உங்களை இப்பவே அரெஸ்ட் பண்ண முடியும். அதனால தயவு செய்து வழியை மரிக்காம கொஞ்சம் கோ ஆப்ரேட் பண்ணுங்க."
கிரிக்கு மினி அதிர்ச்சி. ஜானிக்கும் ரிஷாந்த்துக்கும் நிஜமாகவே ஆச்சரியம். என்னடா பாக்குறதுக்கு கிராமத்துக்காரன் மாதிரி இருக்காப்புல.... அசால்ட் பண்ணிட்டாரே. மற்ற போலீஸ்காரர்களுக்கு அவர் எதைப் பற்றி பேசுகிறார் என்றே தெரியவில்லை.
ரிஷாந்த் ஜானி காதுக்குள் கிசுகிசுத்தான்.
"சட்டத்தையும் இங்கிலீஷையும் பிச்சு உதறுறாரே... இதான் ஆளைப் பார்த்து எடை போடக்கூடாதுன்னு சொல்றது."
ஜானி: உண்மைதான். எங்க ஊர்ல ஒரு பழமொழி கூட சொல்லுவாங்க....
ரிஷாந்த்: அண்ணா... இப்ப வேண்டாம் plssss. டென்ஷனா போயிட்டுருக்கு அப்புறமா கேட்டுக்குறேன்.
சகாதேவன் ஜானியை திரும்பி பார்த்து, பெருமையாக மீசையை நீவி விட்டுக் கொண்டார்... ஜானி, 'பிரமாதம் அண்ணா' என்பது போல் விரல்களை காண்பித்தான்.
பங்களாவின் சைடில் காலடி சத்தங்கள் கேட்க, செக்யூரிட்டி வந்து கொண்டிருந்தான். அவன் காக்கி உடையில் ஆங்காங்கே திட்டு திட்டாக அழுக்கு ஒட்டியிருந்தது. தட்டிக் கொண்டே வந்தான்.
கிரி: ஓகே... நீங்க சொல்ற பாயிண்ட்ஸ் நான் ஏத்துக்கிறேன். சர்ச் வாரண்ட் இல்லாம சோதனை போடணும்னா, மரக்காணம் ஸ்டேஷன் லிமிட்ல இந்த ஏரியா வர்றதுனால, உங்க ஸ்டேஷன் இன்சார்ஜ் தான் வரணும். ஆனா எஸ் ஐ வந்துருக்காரு. இன்ஸ்பெக்டரை வர சொல்லுங்க. நான் வெயிட் பண்றேன். அப்படி இல்லன்னா, ஸ்டேஷன் இன்சார்ஜ் அதாவது உங்க இன்ஸ்பெக்டர், எழுத்துப்பூர்வமா, எனக்கு பதிலா எஸ்ஐ வந்து சோதனை இடுவார்னு எழுதி கொடுத்துருக்கணும். அப்படி ஏதாவது எழுதி கொடுத்து இருக்கிறாரா காட்டுங்க... என்றான்.
சகாதேவன் மீசையை நீவி விட்டுக் கொண்டிருந்ததை நிறுத்தி, கிரியை ஆச்சரியமாக பார்த்தார். பதிலுக்கு ரிவிட் அடிச்சிட்டானே.
எதற்கோ பேசியே அவன் நேரத்தை போக்கிக் கொண்டிருப்பது போல், ஜானிக்கு தோன்றியது.
கடைசியில் நின்றிருந்த இரண்டு பிசிகள் அவர்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
"ஏன்யா.... இன்னைக்கு வீட்டுக்குள்ள பூந்து சர்ச் பண்ண முடியுமா, முடியாதா?"
"முடியும்.... ஆனா..... முடியாது", என்று வடிவேலு பாணியில் இழுத்தான்.
"கிரி, ஏன் போலீஸ் கூட நாம பிரச்சனை பண்ணனும். அவங்க செக் பண்ணினால் பண்ணிட்டு போகட்டும்", என்று வீட்டுக்குள் குரல் கேட்க, திரும்பி பார்த்தான். தாரிகா, சரசரக்கும் ஒரு மெல்லிய சாரி அணிந்து, கேட் வாக்கிங்கில் வந்தாள்.
தாராளமான இரக்கம் மிகுந்த ஜாக்கெட், மார்பின் ரோஸ் நிற துவக்கம், பளிச்சென்ற இடுப்பு என பளபளப்பாக வந்தவளை பார்த்ததும், போலீஸ்காரர்கள் அனைவரின் கண்களும் டாலடித்தன.
எப்படி இருவருமே பதட்டப்படாமல் இருக்கிறார்கள் என்று ஜானிக்கு சந்தேகம்.
தாரிகா: எஸ் ஐ சார். நீங்க தேடி வந்தது குற்றவாளியா அல்லது வேற என்னமோ... அது என்னனு எங்களுக்கு தெரியல... ஆனா ஒண்ணு எப்படியும் வெறுங்கையை வீசிட்டு தான் திரும்ப போகிறீர்கள். Search warrant இல்லாமல் இரவு நேரத்தில் அதுவும் பெண்களில் இருக்கும் ஒரு வீட்டில், எங்களுடைய பிரைவசியை நீங்கள் intrude செஞ்சீங்கன்னு உங்க மேல கேஸ் போடுவேன். சும்மா இல்ல, உள்துறை அமைச்சர் வரைக்கும் போவேன். காக்கி சட்டையை நீங்கள் போட்டிருக்கிறது இன்னைக்கு தான் கடைசி நாள்... தெரிஞ்சுக்கோங்க..
எஸ்ஐ உட்பட அனைத்து போலீஸ்காரர்களும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். இதெல்லாம் நமக்கு தேவையா என்பது போல் மிடறு விழுங்கி கொண்டார்கள்.
சகாதேவன்: அட வாங்க சார்... எவ்வளவு பேரை பார்த்தாச்சு. நமக்கு என்ன புதுசா??? இந்த ஊரு இல்லன்னா வேற ஏதோ ஒரு தண்ணியில்லாத காடு... இல்லன்னா, இருக்கவே இருக்கு, ஆயுதப்படைக்கு மாத்துவாங்க... நாம பார்க்காததா!!!...", என்று உந்தி தள்ள..
பங்களா வாசலில் நின்ற கிரியையும் தாரிகாவையும் விலகிக் கொள்ள சொல்லி, அவர்களை கடந்து... எஸ்ஐ வீட்டுக்குள் நுழைந்தார்.
அவர் நுழைந்ததும், மற்ற போலீஸ்காரர்களும் உள்ளே நுழைந்தார்கள்.
ஜானி: அவுட் ஹவுஸ்ல போய் பாக்கணும். யாராவது ரெண்டு பேர் அங்க போங்க. அப்படியே பங்களா பின்பக்கம் யாராவது ரெண்டு பேர் போய் பாருங்க.
சகாதேவன் பிசி ஒருத்தரை கூப்பிட்டுக்கொண்டு அவுட் ஹவுஸை நோக்கி சென்றார். மேலும் இரண்டு பேர் பின்பக்கமாக சென்றார்கள்.
எல்லா போலீஸ்காரர்களும் சென்றதும், கடைசியில் நின்றிருந்த ரிஷாந்த்தும் ஜானியும் மட்டுமே மிச்சமிருந்தார்கள். அவர்களும் பங்களாவுக்குள் நுழைந்தார்கள். நால்வரையும் சுற்றி அதிர்வலைகள். டென்ஷன் எகிறி கொண்டிருந்தது.
கிரி அவர்களைப் பார்த்து,
"Ek minute...", என்றான்.
இருவரும் நின்றார்கள்.
தாரிகா இருவரையும் ஆக்ரோஷத்துடன் வெறித்து கொண்டிருந்தாள். தனியாக மாட்டினால் நிச்சயமாக கடித்து குதறி விடுவாள்.
கிரி: இதுக்கெல்லாம் நீங்க ரெண்டு பேரு தான் காரணம்னு எனக்கு தெரியும். தாரிகா உங்க விஷயத்துல கோட்டை விட்டுட்டா... நானும் கொஞ்சம் careless ஆ இருந்துட்டேன். கரண்ட் பிரச்சனை அன்னைக்கு நீங்க உள்ள வந்தப்பவே... நான் அலர்ட் ஆயிருக்கணும். But one thing,
எங்களை புடிச்சிரலாம்னு மட்டும் நினைக்காதே!!! அது மட்டும் நடக்காது. இன்னைக்கு போலீஸ் ஒண்ணுமே கிடைக்காமல் வெறுங்கையுடன் திரும்பி போகட்டும்... அதுக்கப்புறம் நீங்க எழுதின இந்த கதைக்கு நான் முடிவுரை எழுதுறேன்.
கிரியும், தாரிகாவும்... எதிரே நின்றிருந்த ஜானியையும் ரிஷாந்தையும் கொலை வெறியோடு பார்த்துக் கொண்டிருக்க,
ஜானி ஒன்றுமே பேசாமல் , இதழோரம் சிரிப்புடன் நின்றிருந்தான்.
ரிஷாந்த் கிரியை நேருக்கு நேராக பார்த்து: Best of luck ... என்றான்.
இருவரும் சிறிது நேரம் வெறித்து பார்த்துக் கொண்டார்கள்.
"வாடா போலாம்", என்று ஜானி அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான்.
பங்களா முழுவதும் பூட்ஸ் சத்தங்கள். எல்லா ரூம்குள்ளும் நுழைந்து இருந்தார்கள். கிச்சனுக்கு வெளியே வேலைக்காரி தேனு பதட்டமாக நின்றிருந்தாள்.
ஜானியும், ரிஷாந்தும்... ஹால் கடைசியில் இருந்த ரெஜினா ரூமை நோக்கி ஓடினார்கள். ரூம் கதவு திறந்தே கிடந்ததும், திக்கென்று இருந்தது.
ரிஷாந்த் ரூமுக்குள் நுழைய, ரெஜினா இல்லை. அதிர்ச்சியாக ஜானியை பார்த்தான். உள்ளே சென்று பாத்ரூம் கதவை திறந்து எட்டிப் பார்த்தான். உள்ளேயும் அவள் இல்லை.
ஜானி: என்னடா ஆள காணல. இந்த ரூம் தானே?
ரிஷாந்த்: இந்த ரூம் தாண்ணா.
அவளை என்ன செய்திருப்பார்கள்???
இருவரும் ரூமை விட்டு பதட்டமாக வெளியே வந்தார்கள்.
ஹாலில், சிரிப்பு சத்தம்.
முதுகு பக்கமாக உரசியபடி திரும்பி நின்று, இடுப்பில் கைவைத்து சைடு ப்ரோபைலில் தாரிகாவும், கிரியும் சிரித்துக் கொண்டிருந்தனர்.
அலட்சியமான, ஏளனமான, எகத்தாளமான சிரிப்பு.
தொடரும்