All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except for brief quotations used in critical reviews and certain other non-commercial uses permitted by copyright law.

காற்றில் நிறம் கருப...
 
Notifications
Clear all

காற்றில் நிறம் கருப்பு - (Story Thread)

Page 2 / 4
 

Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 81
Topic starter  

கருப்பு 15

 

மாலை 5 மணி

 

காலேஜில் ஸ்பெஷல் கிளாஸ் லேட் ஆகிவிட்டதால், தான் ஏற வேண்டிய பஸ் நிறுத்தத்தை நோக்கி சென்று சித்ரா,  அதே இளைஞனை பார்த்தாள். பஸ் ஸ்டாப்பில் அவள் பார்வையில் படும்படியாக நின்றிருந்த அந்த இளைஞன் ரசனையோடு டிரஸ் பண்ணிருந்தான். சட்டை பையில் குளிர் கண்ணாடியின் ஒரு காது மட்டும் வெளியே பார்த்துக் கொண்டிருந்தது.

 

சித்ராவை பார்த்ததும், அவனிடம் ஒரு பதட்டம். சாயங்கால நேரம் என்பதால், பஸ் ஸ்டாப்பில் நிறைய கூட்டம். இரண்டு வாரமாகவே இந்த விஷயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அவள் காலேஜுக்கு வரும் டைம்ல அவன் வந்து பஸ் ஸ்டாப்பில் நிற்பது, காலேஜ் முடிந்து போகும் டைமில் கரெக்டாக வந்து நிற்பது, பஸ் ஏறும் வரை பார்த்துக் கொண்டிருப்பது, சில நேரங்களில் அதே பஸ்ஸில் ஏறி பஸ் ஸ்டாண்ட் வருவது,  என்னவோ சொல்ல முயற்சிக்கிறான்? பாக்கெட்டில் இருந்து லெட்டர் எடுக்கிறான், அவன் கை படபடக்கிறது. உள்ளே வைத்து விடுகிறான் வேறு என்னவாக இருக்கும்? ரோமியோக்கள் ஐ லவ் யூ தான் சொல்வார்கள். வேறு பெரிதாக என்ன இருக்கப் போகிறது?

 

தினமும் பின்தொடர்ந்தாலும், ஒரு தடவை  கூட மனம் சுளிக்கும்படி எதுவும்  பண்ணியதில்லை, கலாய்த்ததில்லை. பஸ் ஸ்டாப்பில் கூட்டம் அதிகமாக இருப்பதால் நேரடியாக வந்து பேசுவதற்கு தயக்கப்படுகிறான்.

 

சித்ராவுக்கு அவனை பார்க்கும்போது கோபத்தை விட பரிதாபம் தான் ஏற்பட்டது.

 

என் மேல் இவனுக்கு எப்படி காதல் ஏற்பட்டது? என்னை பற்றி என்ன தெரியும்? அக்காவே இன்னும் கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் இருக்கிறா? அன்றைக்கு நான் அரவிந்துடன் பைக்கில் நெருக்கமாக போனதை வேறு பார்த்தான். பார்த்தும் புரியவில்லையா? அண்ணன்னு நெனச்சிட்டானோ என்னவோ தெரியல்லை.

 

ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தாள். அரவிந்த் ஏன் இரண்டு நாட்களாக பேசவில்லை? இன்றைக்கு அவன் ஷோரூமுக்கு கால் பண்ணி விட வேண்டியது தான். மீனாட்சிபுரத்தில் அவர்களின் யமஹா டீலர்ஷிப் ஷோரூம் இருக்கிறது. அவன் அப்பா தான் பார்த்துக் கொள்கிறார். இருந்தாலும் அரவிந்தும் அவ்வப்போது கவனித்துக் கொள்வது உண்டு. அவளுக்கு ஒரு வருட சீனியர். ஹிந்து காலேஜை சேர்ந்தவன். இன்டெர் காலேஜ் காம்பெடிஷனல் பார்த்து தான் பழக்கம் ஏற்பட்டது.

 

பஸ் ஸ்டாப் இளைஞன்  அவளை பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.

 

இன்றைக்கு இவனிடம் நேரடியாக பேசி விட வேண்டியது தான்.

 

ரோட்டை கிராஸ் பண்ணி, பஸ் ஸ்டாப்புக்கு போவதற்காக சாலையின் மறுமுனையில் நின்றிருந்தாள். அவனைத்தான் பார்க்கிறாள் என்று தெரிந்ததும், அந்த இளைஞன் அவசரமாக வேறு பக்கம் பார்வையை திருப்பிக் கொண்டான். வாகனங்கள் ஓய்வதற்காக நின்றிருந்தவள், கொஞ்சம் போக்குவரத்து மெலிந்ததும், ரோட்டை கிராஸ் செய்து மறுபக்கம் சென்றாள்.

 

நேராக அவனை நோக்கி தான் சென்றாள். அவன் பதட்டத்தில் கை குட்டை எடுத்து முகத்தில் ஒற்றிக் கொண்டான். அவன் கால்கள் தடுமாறின.

 

அவனை நெருங்கி, கூர்மையாக அவனை பார்த்தாள்.

 

"சார், கொஞ்ச நாளாவே பாக்குறேன், நீங்க என்னை ஃபாலோ பண்றீங்கன்னு தெரியுது...உங்களுக்கு என்ன வேணும்?"

 

அவன் பதட்டமாக,

 

"மேடம், வந்து... நீங்க... நான்..."

 

"சும்மா பதட்டப்படாம சொல்லுங்க.. என்ன என்னை லவ் பண்றீங்களா?"

 

"இல்ல... அது வந்து..."

 

"இதோ பாருங்க, ஆல்ரெடி நான் commited. ஏற்கனவே ஒருத்தர லவ் பண்றேன். அது போக, என் குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் இருக்கு. So நீங்க என் பின்னால சுத்தி உங்க டைமையும் வேஸ்ட் பண்ண வேண்டாம். எனக்கு எந்த பிரச்சனையும் வர வேண்டாம். அதனால் உங்க கிட்டயே நேரடியா பேசி கிளாரிஃபை பண்ணிரலாம்னு நினைச்சு தான் வந்தேன். தயவுசெய்து புரிஞ்சுக்கோங்க. உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்."

 

பஸ் ஸ்டாப்பில் நின்றவர்கள், அவர்கள் பேசுவதில் எந்த அக்கறையும் காட்டவில்லை. அவர்கள் பஸ் பிடித்து கிளம்பும் அவசரத்தில் நின்றிருந்தார்கள்.

 

"இல்ல, அதுக்கு வரல.."

 

"வேற எதுக்கு வந்தீங்க?"

 

சுற்றிலும் பார்த்தான். அவன் முகம் இறுக்கமாக இருந்தது பின்னர்,

 

"நான் சொல்றது ரகசியமா இருக்கட்டும்... கடந்த ஒரு சில நாட்களாக உங்ககிட்ட இந்த விஷயத்தை எப்படியாவது சொல்லணும்னு நினைச்சுக்கிட்டே இருக்கேன். நேரடியா பேச முடியலன்னா லெட்டர்ல எழுதி குடுத்துரலாம்னு, லெட்டர் கூட எழுதி வச்சிருக்கேன் பாருங்க... என்று எடுத்து நீட்டினான்.

 

"சரி, அதான் பேசிட்டிங்களே. நீங்களே என்ன விஷயம்னு சொல்லுங்க?" 

 

அவன் சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்ல சொல்ல சித்ராவின் முக எக்ஸ்பிரஷன்கள் மாறியது. சற்று முன்னால் அவனுக்கு இருந்த பதட்டம், சித்ராவுக்கு தொற்றிக் கொண்டது.

 

"என்ன சொல்றீங்க? நீங்க சொல்றது உண்மைதானா? நம்ப முடியலையே?", 

 

பிரபாவதி போனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள்.

 

மறுமுனையில் சொல்லப்படும் தகவல்கள், அவ்வளவு நல்ல செய்தி இல்லை என்பது கேட்டு கொண்டிருந்த அவளின் முகம் போன போக்கை பார்த்தாலே தெரிந்திருக்கும், ஆனால் பார்ப்பதற்கு யாருமே இல்லை... முழு தகவலையும் கேட்டுவிட்டு போனை வைத்தாள்.

 

அவள் கோபப்படுகிறாளா, வருத்தப்படுகிறாளா என்னவென்று தெரியாத அளவுக்கு, அவள் முகம் சுணங்கி போயிருந்தது.

 

தொடரும்

 

உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது

https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 81
Topic starter  

 

கருப்பு 16

 

போன் பேசி முடித்ததும் பிரபாவதி பெட்ரூம் நோக்கி சென்றாள். கண்ணாடி முன்னால், உட்கார்ந்து மேக்கப் போட்டுக் கொண்டிருந்த ராகினி தலையில் வெறுப்பாக தட்டினாள்.

 

"ஏண்டி, எப்ப பாரு சும்மா சீவி சிங்காரிச்சுட்டு வீட்டுக்குள்ளேயே உட்கார்ந்து, தின்னு தூங்கிட்டு இருக்கியே. இதுக்கு பதிலா முத்துப்பாண்டி கிட்ட போய் சிரிச்சி பேசேன். உன் முறை பையன் தானே..."

 

"போமா, அவன் எத்தனை ஊர்ல சின்ன வீடு வச்சிருக்கான். உனக்கு தான் தெரியுமே. பாதி சொத்தை சீட்டு, சின்ன வீடுன்னு அழிச்சிட்டான். அவன் கூட பேசி பழகுறதுக்கு பாழுங் கிணத்தில் குதிச்சுருவேன்..:

 

"அடியே அது எனக்கு தெரியாதா? உன் புருஷனும் உன்னை கை விட்டுட்டான். பாண்டி பொண்டாட்டியும் விட்டுட்டு போயிட்டா. அவன் ஆளு கொஞ்சம் சோக்கு பேர்வழியா இருந்தாலும், நம்ம ரத்த சொந்தம். அவனுக்கு தான் நியாயப்படி உன்னை கட்டி வச்சிருக்கணும். ஆனா அவன் வேற ஒருத்தியை கட்டிக்கிட்டதனால பண்ண முடியல. இப்ப சும்மா தானே இருக்கான்.  அவனுக்கு உன்னை கட்டி வச்சுட்டா, இருக்கிற பாதி சொத்தும் உனக்கு வந்துரும். நாளைக்கு என் காலத்துக்கு அப்புறம், உனக்கு ஒரு பிடிமானம் வேண்டாமா? இப்படியே தனி கட்டையா உன்னை விட்டுட்டு போனா, என் கட்ட எப்பிடிடி வேகும்."

 

ராகினி சலித்துக் கொண்டாள்.

 

பிரபாவதி: தண்டச்சோறு நான் சொல்றத செய். சரி எனக்கு மேட்டு வீட்ல, ஒரு வேலை இருக்கு. நான் போயிட்டு வரேன்...

 

என்று சொல்லிவிட்டு, வீட்டை விட்டு வெளியே கிளம்பினாள்.

 

மேட்டு வீடு,

அதே நேரம்

 

காவண வீட்டுக்கு வெளிய பெரிய கருப்பன் பயபக்தியுடன் நின்றிருந்தார். காவண வீட்டுக்குள் மந்திர உச்சாடனங்கள் கேட்டுக் கொண்டிருந்தது. சித்ராவும், அகல்யாவும் இன்னும் வீடு வந்து சேரவில்லை. கார்த்திகாவை மேட்டு வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு சொல்லிருந்தார். அவள் மொபைல் போனில் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.

 

காவண வீட்டுக்கு எதிரே மேட்டு தெருவில் நின்றிருந்த சிக்னி என்ன நடக்கிறதென்று ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தது. தெருவில் டேக்ஸி ஒன்று நின்றிருக்க, அதற்கு பக்கத்தில் டிரைவர் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்தான்.

 

20 வருடங்களுக்கு முன்னால், முனிக்கு வீட்டை நேர்ந்து விட்டு, அதன் பிறகு மந்திர கட்டு போட்டு முனியை வீட்டுக்குள் வராமல் செய்த பிறகு, இரண்டாவது முறையாக மறுபடியும் மந்திர கட்டு போடுவதற்காக பெரிய கருப்பன் விஜயாபதியில் இருந்து சந்திர சூடனை கூப்பிட்டு இருந்தார். 

 

அந்த வட்டாரத்திலே ரொம்ப புகழ் பெற்ற சாமியார் கம் மந்திரவாதி.

 

சமீபத்தில் ஊருக்குள் முனி பற்றிய பேச்சுகள் கிளப்பிவிட்டது முத்துப்பாண்டி வேலை தான் என்று பெரிய கருப்பன் நினைத்தாலும், எதற்கும் ஒரு சேப்டிக்காக இருக்கட்டும் என்று மந்திரவாதியை கூப்பிட்டு இருந்தார். 

 

வீடு வாடகைக்கு விடும் விஷயத்தில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பது தான் அவருடைய பிரதான எண்ணம்.

 

காவண வீட்டுக்குள் மந்திர உச்சாடனங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன.

 

"ஓம் பஹவதி பைரவி 

இந்த வீட்டை எதிர்த்து வந்த எதயும் கட்டு

கடுகென பட்சியை கட்டு மிருகத்தை கட்டு

ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி

அடங்கலும் கட்டினேன். சபையை கட்டு.

சத்ருவை கட்டு, எதிரியை கட்டு.

எங்கேயும் கட்டு.

சிங்க் வங்க் லங்க் லங்க்

ஸ்ரீம் ஓம் 

சிவாய நம சிவாய நம

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் வாமே நம: ஸ்வாஹா"

 

ஹரி   ஓம்   அவ்வும்  சிவாய  நம  அங் அங்  அகோர  வீர பத்திர காளி  

விரித்த சடையும், மூன்று கண்ணும், இருண்ட  மேனியும், ஆயிரம் கையும்,  உன்  திரிசூலமும்  நீ ஏரிய.  வேதாளமும் குந்தமும்  பாசமும்  பாச  பந்தமும்  காப்பு. கங்கணமும்  கடகவாளும்  வல்லயமும்  உடுக்கையும்  வீரதண்டாயுதமும் கையில்  பிடித்து,

பூத படை சூழ, 

என் தாயே  வா  வா,

பூத  பிரேத  பிசாசுகளையும்  சர்வ  கிரகங்களையும்  கட்டு.  கட்டு. 

தூரு  தூரு  இருக்கு  இருக்கு. முட்டு  முட்டு  இடி  தாக்கு  தாக்கு  மோது  மோது  ஜயும்  கிலியும்  சவ்வும்  சண்ட  பிரசண்டி  ஜாடு  ஜாடு  

அகோர  மாங்காளி என்னுடைய  சத்திராதி இன்னானை  ஜாடு  ஜாடு  

 

ஓம்  ஆம்  றீம்  மங்  சிங்  வங்  யங்  யங்  யங்  நங்  கிலியும்  றீயும்  ஆனந்த  பத்ரகாளியே  நமஹ  

விரித்த சடை,  மேல்நோக்கிய ரோமம், எதிர்த்த  விழியும், இளம்பிறை நெற்றியும், சவுந்தரமேனியும், சிரித்த  முகமும், சீரிய  பார்வையும், சிங்கப்பல்லும்,  காதில்  ஒலையும், கழுத்தில் மாங்கல்யமும்,  

பட்டுப்பாவாடையும், 

பரமா  ஆபரணமும், முருக்கின  கழுத்தில்   அமரா தூணியும், கையில்  வில்லும், தாங்கிய  பரதமும், லங்கைகேகிய  லஷ்ஷயோசனை  தூரம் எங்கும்  அதிர்ந்திட...

என்  முன்  வா வா   சிங்கவாகனமேறி  கையில்  சூலமேந்தி  பூதப்படை  சூழ.  பேய்  முனியாட 

 

என் முன்னே  வா  வா... 

ஓம்  பத்திரகாளி   ஓம்  பிடாரி.  நமசிவாய  பாதத்தாணை  ஒடி.  வா. 

அங்  இங். உங்.  எங்.  ஜயும். கிலியும். சவ்வும். அகோர.  வீர. மாங்காளி  உன்னையும்  முன்னையும் படைத்த  ஆதி  பரமேஸ்வரன் ஆணை. சீக்கிரம்  என்  முன்  ப்ரசன்னமாக  ஸ்வாஹா...

 

15 நிமிடங்களுக்கு பிறகு, சந்திர சூடன் வெளிப்பட்டார். பிரஷர் குக்கர் போல் தடதடவென அதிர்ந்து கொண்டிருந்த காவண வீடு கொஞ்சம் கொஞ்சமாக அமைதியானது. பின்னாலேயே அவர் சிஷ்யன் ஒருவன் வந்தான்.

 

சந்திர சூடன் நல்ல வாட்ட சாட்டமான உருவம். அடர்ந்த தாடி, பாம்பின் பார்வை உள்ள கண்கள், கழுகு அலகு போல் சற்றே வளைந்த மூக்கு, காவி உடை, தலைப்பாகை, கழுத்தில் ருத்ராட்ச மாலை.

 

பெரிய கருப்பன்: சாமி எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?

 

சந்திர சூடன்: எல்லாம் முடிஞ்சுது. இந்த வீட்டுக்குள்ள  முனி மட்டுமல்ல, எந்த தீய சக்தியும் நுழைய முடியாதவாறு மந்திர கட்டு போட்டுருக்கேன். அதனால நீங்க பயப்பட வேண்டாம்.

 

பெரிய கருப்பன்: ரொம்ப நன்றி சாமி.... அப்புறம் உங்க காணிக்கை..

என்று கவரில் பணத்தை வைத்து நீட்டினார்.

 

சந்திர சூடன் சிஷ்யனை திரும்பிப் பார்க்க, அவன் வாங்கிக் கொண்டான். பின்னர் வணக்கம் வைத்துவிட்டு, சந்திர சூடன் விடை பெற்றுக்கொண்டார்.

 

சந்திர சூடனை கூப்பிட்டு வருவதற்காக, பெரிய கருப்பன் ஏற்பாடு செய்திருந்த டாக்ஸியில் போய் ஏறிக்கொண்டார். சிஷ்யன் ஏறிக்கொள்ள டாக்ஸி கிளம்பியது.

 

"என்னப்பா, மந்திர தந்திரம்னு இறங்கிட்டீங்க. என்கிட்டேயும் ஒரு வார்த்தை கூட சொல்லல", என்று குரல் கேட்க பெரிய கருப்பன் திரும்பி பார்த்தார். மேட்டு வீட்டிலிருந்து காவண வீட்டுக்கு வரும் வழியில் பிரபாவதி நின்றிருந்தாள்.

 

தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து உதறி, மறுபடியும் தோளில் போட்டபடி அவளை நோக்கி சென்றார்.

 

"ஆமா, ஊருக்குள்ள கண்டதெல்லாம் பேசிட்டு இருக்காங்க. எனக்கு இந்த வீட்டை விக்கிறது ரொம்ப முக்கியம். அதனால எதுக்கும் இருக்கட்டுமேன்னு  மந்திர கட்டு போட்டேன்."

 

"நல்லதுதான்பா... நானே சொல்லனும்னு நினைச்சேன்."

 

இருவரும் பேசிக் கொண்டே சிட் அவுட்டை நோக்கி நடந்தார்கள்.

 

"தூத்துக்குடிக்காரி இப்பதான் போன் பண்ணிருந்தா, அதை சொல்லத்தான் வந்தேன். குமார் ஆபீஸ்ல வேலை பாக்குற ஏதோ ஒரு பொண்ணைத்தான் கல்யாணம் பண்ணிக்குவானாம். ரெண்டு பேரும் லவ் பண்றாங்களாம்.  நல்லவேளை அகல்யா கிட்ட நான் சொல்லும் போதே அவ முடியாதுன்னு சொல்லிட்டா, அதனால நல்லதா போச்சு... ரெண்டு பேருக்கும் பேசி முடித்ததற்கு அப்புறம் அவன் லவ் மேட்டர் தெரிஞ்சிருந்தா ஏற்கனவே வெறுத்து போயிருக்கும் அகல்யா நிலைமை என்ன ஆயிருக்கும்?" 

 

பெரிய கருப்பன் சற்று ஏமாற்றத்துடன் பிரபாவதியை பார்த்தார்.

 

"அந்தப் பையன் சின்ன வயசுல அவ கூட பழகுனவன், எப்படியாவது பேசி அகலை சம்மதிக்க வச்சிருலாம்ன்னுல  நெனச்சேன். இப்படி பண்ணிட்டானே!!! இந்த விஷயத்தை யார் கிட்டயும் சொல்ல வேண்டாம். சொன்னா இன்னும் அவளுக்கு கோபம் தான் அதிகமாகும். நீ அவசரப்பட்டு எதுவும் சொல்லிடாதே..."

 

எதேச்சையாக வெளியே வந்த கார்த்திகா, இருவர் பேசுவதையும் கேட்டுவிட்டு, திரும்பி உள்புறமாக கதவருகே நின்றாள். விஷயம் என்னவென்று அவளுக்கு புரிந்து விட்டது.

 

பிரபாவதி: இந்த பையன் இல்லன்னா என்ன? கொஞ்ச நாள் போகட்டும். நம்ம ஊரு பக்கத்துல, இல்ல, ஊருக்குள்ள ஏதாவது ஒரு பையனை பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்.

 

பெரிய கருப்பன் எதுவும் சொல்லவில்லை. ஏமாற்றத்தின் கசப்பு தொண்டை குழியில் இறங்கிக் கொண்டிருந்ததால், பேசாமல் அமைதியாக இருந்தார்.

 

அன்றிரவு 12 மணி

 

கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த சித்ரா திடுக்கென்று விழிப்பு வர முழித்துக் கொண்டாள்.

 

சே! என்ன ஒரு பயங்கரமான கனவு

 

தலையணை கழுத்து வியர்வையால் நனைந்திருந்தது. அவள் அணிந்திருந்த டி-ஷர்ட் நீரில் துவைத்து எடுத்தது போல் மாறியிருந்தது. எழும்பி கட்டிலில் உட்கார்ந்தாள்.

 

பஸ் ஸ்டாப் இளைஞன் சொன்ன விஷயங்கள் எல்லாம் உண்மைதானா என்று நினைத்து, குழம்பி, தூக்கம் வராமல், சற்று முன்னால் தான் தூங்கியிருந்தாள்.

 

கொட்டாவி விட்டபடி சைடில் திரும்ப திகைத்தாள்.

 

சற்று தள்ளி போடப்பட்டிருந்த கட்டிலில், கார்த்திகா தூங்காமல் எழும்பி உட்கார்ந்து இருப்பதை பார்த்தாள்.

 

கட்டிலில் உட்கார்ந்தபடி எங்கே பார்த்துக் கொண்டிருக்கிறாள் என்று சித்ரா பார்க்க, கார்த்திகா ஜன்னலை வெறித்துக் கொண்டிருந்தாள்.

 

வெறிக்க வெறிக்க அப்படி ஜன்னலில் என்ன பார்க்கிறா?

 

அவள் இதயம் பறவையின் இறக்கைகள் போல் படபடவென அடித்துக் கொண்டது.

 

ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். செடி கொடிகளை தவிர வேறு எதுவுமே தெரியவில்லை.  சுவர் கோழிகளின் இடைவிடாத ரீங்காரம் கேட்டது. மரக்கிளைகள் நிலவை அரித்திருந்தன.

 

ஜன்னல் வழியாக பார்த்தபடி, சிலை போல் உட்கார்ந்திருந்த கார்த்திகாவை பார்ப்பதற்கு சித்ராவுக்கு ரொம்ப கலவரமாக இருந்தது.

 

சித்ரா: ராத்திரி எழும்பி உக்காந்துட்டு அப்படி என்ன பார்த்துட்டு இருக்க?

 

கார்த்திகா சித்ராவை திரும்பி ஸ்லோ மோ வில் பார்க்க, அவள் முகம் பூராவும் திகில் அப்பி இருந்தது.

 

உதட்டருகே சுட்டு விரலை வைத்து, உஷ் என்று சைகை காண்பித்தாள்.

 

சித்ரா: என்னடி என்னாச்சு??

 

கார்த்திகா பதில் சொல்லவில்லை.

 

சித்ரா:  அக்கா கேக்குறேன்ல, சொல்லு.

 

கார்த்திகா முகம் பீதியில் வெளுத்திருக்க, எதுவும் பேசாமல் ஜன்னலை கை காட்டினாள். 

 

வெறும் இருட்டை பார்த்து கார்த்திகா பயப்பட கூடியவள் இல்லையே!!! சித்ரா மறுபடியும் திரும்பி ஜன்னலை பார்க்க, அவளுக்கு எதுவுமே வித்தியாசமாக தெரியவில்லை.

 

"அங்க என்ன தாண்டி இருக்கு", என்று கேட்டபடியே, திரும்பி மறுபடியும் கார்த்திகாவை பார்க்க,

 

சித்ராவுக்கு தூக்கி வாரி போட்டது. 100 சதவீதம் அதிர்ந்தாள்.

 

தொடரும்

 

உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது

https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 81
Topic starter  

காற்றின் நிறம் கருப்பு 17

 

கட்டிலில் கார்த்திகாவை காணவில்லை. 

 

எங்கே போய்ருப்பாள்!! பரபரவென்று அவள் எங்கே என்று சித்ரா தேட, கட்டிலுக்கு கீழே கார்த்திகா பதுங்கி இருந்தது, நைட் லேம்ப் வெளிச்சத்தில் தெரிந்தது.

 

உஷ் உஷ் என்று சைகை காட்டிக் கொண்டிருந்தாள்.

 

நைட் லேம்பின் வெளிச்ச ரேகைகள் அவள் கண்களில் பிரதிபலித்தது. ஜன்னலுக்கு வெளியே என்னமோ இருக்கத்தான் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் எதற்கு இப்படி பயப்பட போகிறாள். சுதாரித்த சித்ரா  கட்டிலில் இருந்து எழும்பி, ஜன்னலை பார்த்தபடியே, பூனை போல் கார்த்திகா கட்டிலை அடைந்து, கீழே உட்கார்ந்தாள்.

 

ஜன்னல் கம்பிகளுக்கு வெளியே, இருட்டும், நிலவு வெளிச்சமும், மரங்களின் கிளைகளும் வழக்கம் போல் தெரிந்தது. வெகு தூரத்தில் இருந்து கடல் அலைகளின் இடைவிடாத ஹோ ஹோ என சன்னமான மூச்சிரைப்பு. ரஸ்தா காட்டில் முந்தி இருந்ததை விட நிறைய வீடுகள் வந்து விட்டாலும், மேட்டு தெரு மாதிரி மரங்கள் அடர்ந்த பிரதேசத்தில் வீடு இருப்பதால், ஊருக்குள் இருக்கும் ஒரு உணர்வு வரவில்லை. மூடப்பட்டிருந்த ரூமுக்குள் சிறைபட்ட காற்று கனத்திருந்தது.

 

கார்த்திகா அவளை கட்டிலுக்கு கீழே இழுக்க, அவளும் நுழைந்தாள்.

 

சித்ரா கிசுகிசுப்பாக,"பயந்து போய் ஒளிர அளவுக்கு என்னடி ஆச்சு?  திருட்டு பசங்க யாராச்சும் பாத்தியா?"

 

கார்த்திகா இல்லை என்று தலையாட்டினாள்.

 

"ஜன்னலுக்கு வெளியே என்னமோ இருக்கு."

 

கார்த்திகா கிசுகிசுத்தாள்.

 

கட்டிலுக்கு கீழே பதுங்கியிருந்த சித்ராவின் கண்களுக்கு ஜன்னலுக்கு வெளியே எதுவும் தெரியவில்லை.

 

கார்த்திகாவுக்கு உடல் பயத்தில் துடித்தது. மயிர்கால்கள் குத்திட்டு நின்றன. இதயம் படபடவென அடித்து கொண்டிருந்தது. 

 

பயம் அலை அலையாய் அவள் உடல் முழுவதும் பரவியிருந்தது.

 

சித்ராவுக்கு எதுவும் தெரியவில்லை என்றாலும், கார்த்திகாவின் கண்களுக்கு நன்றாக தெரிந்தது. ஜன்னலுக்கு வெளியே, பூச்செடிகளுக்கு பின்னால், இருட்டுக்குள்ளே இருட்டாய் காற்று போல் சுழன்று கொண்டிருந்தது. அந்தக் கருப்பு காத்துக்குள் தீக்கங்கு போன்று இரண்டு கண்கள், சிறிய கண்கள், அந்தரத்தில் மிதந்தன.

 

பெண்களுக்கே இருக்கும் இயல்பான அச்ச உணர்வு காரணமாக, அனிச்சை செயலாக, பாதுகாப்பான இடத்திற்கு போக வேண்டும் என்று நினைப்புடன், கட்டிலுக்கு கீழே பதுங்கிக் கொண்டாள்.

 

அந்திரத்தில் மிதந்து கொண்டிருந்த தீ கங்குகள், ஆக்ரோஷமாக மிதந்து கொண்டிருந்தது போல் அவளுக்கு தோன்றியது.

 

ஜன்னலுக்கு வெளியே சித்ரா எவ்ளோ கூர்ந்து பார்த்தும், அவள் கண்களுக்கு தெரியவில்லை.

 

உ... உ... ஊஊஊஊஊஊ என்று ஏதோ ஒரு நாயின் ஊளை சத்தம் இருவருக்கும் மிக அருகில் கேட்ட மாதிரி இருந்தது. திடீரென்று கேட்டதால், அவர்களின் இதயம் ஒருமுறை தடம் புரண்டது. சித்ராவே மேலும் அதிர்ந்தாள். அதைத் தொடர்ந்து, மேட்டு தெருவில் சிக்னி முரட்டுத்தனமாக குறைக்கும் சத்தம் கேட்டது.

 

கட்டிலுக்கு கீழே இருந்து எழும்பி, ஜன்னலை நோக்கி சித்ரா சென்றாள். கார்த்திகா "அக்கா வேண்டாம்", என்று கையை பிடித்து இழுக்க, பயப்படாதே என்பது போல் அவள் கையைத் தட்டி கொடுத்துவிட்டு, ஜன்னலை நோக்கி சென்றாள்.  

 

"வேண்டாக்கா வந்துரு.."

 

ஜன்னலுக்கு வெளியே மங்கலான, சோகமான பல்பு வெளிச்சத்தில் பனி இறங்கிக் கொண்டிருந்தது. சித்ராவுக்கு பயம் இருந்தாலும், என்னதான் நடக்கும் பார்த்திரலாமே என்ற பூனை ஆர்வம். ஜன்னலுக்கு வெளியே சுற்றிலும் பார்த்தாள். பரந்த வானத்தில் தூக்கி எறியப்பட்டது போல், நிலா விள்ளல்.

 

பாஸ் பண்ணி வைத்த ஹாரர் படத்தின் காட்சி போல், எந்த அசைவும் இல்லாமல் அமைதியாக தெரிந்தது.

 

தெருவில் சிக்னியின் குறைப்பு சத்தம் தொடர்ந்தது.

 

ஜன்னல் திறந்து இருந்தால் தானே கார்த்திக்கு பயம் வரும், சித்ரா ஜன்னலை  மூடுவதற்காக, கம்பி வழியாக கையை வெளியே விட்டாள். கையை வெளியே விடும்போது யாராவது பக் என்று பிடிப்பார்களோ என்று அவளுக்கு நினைப்பு வந்தது. யாரும் பிடிக்கவில்லை. சிரித்தபடி தலையாட்டிக் கொண்டு ஜன்னலை மூடினாள். 

 

ரூம் லைட்டை போட்டாள். உலகமே பிரகாசமானது.

 

கார்த்திகாவை நோக்கி, திரும்பி,

"ஜன்னலை மூடியாச்சு. லைட்டை போட்டாச்சு. இனிமே இந்த பயமும் இல்லை. அப்படி என்னதான் பார்த்தே?"

 

கார்த்திகா கட்டிலை விட்டு வெளியே வந்தாள். பயம் காரணமாக நெஞ்சில் கை வைத்துக் கொண்டிருந்தாள்.

 

சித்ரா: சரி சரி பயப்படாத. ஒன்னுமில்ல. தண்ணி கொஞ்சம் குடி... என்று வாட்டர் ஜக் எடுத்து கொடுத்தாள்.

 

கார்த்திகா இரண்டு  மிடறு குடித்துவிட்டு, வாட்டர் ஜக்கை டேபிளில் வைத்தாள். இரண்டாவது மிடறு தண்ணீரை விழுங்காமல், வாய்க்குள்ளே வைத்து, இரண்டு பக்கமும் மாத்தி மாத்தி, வாய் கொப்பளிப்பது போல் செய்து கொண்டிருந்தாள். ரூமுக்குள்ளேயே பெரிய மனுஷி போல், யோசித்தபடி, நாட்டாமை நடை நடந்தாள்.  

 

அவள் கொஞ்சம் நிதானமாகட்டும் என்று சித்ரா அவளிடம் எதுவுமே சொல்லவில்லை.

 

சித்ரா வியர்வையில் நனைந்திருந்த டி-ஷர்ட்டை கழட்டினாள். வேறு டீ சர்ட் ஒன்றை எடுத்து, போடுவதற்காக உதறினாள்.  எதேச்சையாக திரும்பி பார்த்த கார்த்திகா, சித்ராவின் வலது மார்பில் சிவப்பாக, சிறியதாக,  வீங்கியிருந்தததைப் பார்த்தாள்.

 

கார்த்திகா அவள் அருகில் வந்து, "என்னக்கா காயம் இது?"

என்று கேட்க, 

 

சித்ரா அவசரமாக: அது ஒண்ணும் இல்லடி. ஏதாவது பூச்சி கடிச்சிருக்கும்... என்றாள்.

 

அவள் வேற என்ன சொல்ல முடியும்? கொஞ்ச நாள் முன்னால, நானும் அரவிந்தும் திருப்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு போனோம். அரவிந்த் நீருக்குள் இறங்காமல் ஓரமாக நின்றிருந்தான். அவன் கையைப் பிடித்து, நான் தான் நீருக்குள் இழுத்துச் சென்றேன். முழுக்க நனைந்து விட்டோம். குளித்து முடித்துவிட்டு உடைல்லாம் ஈரமாகிவிட்டதால், உடை மாற்றுவதற்காக அங்கேயே ஒரு ரூம் போட்டோம். அங்கே அரவிந்த் செய்த சில்மிஷம் என்றா சொல்ல முடியும்?

 

திரும்பிப் பார்க்க மாட்டாள் என்று டி-ஷர்டை அப்படியே கழட்டியது தப்பா போச்சு.   உதறிக் கொண்டிருந்த டி-ஷர்டை பட்டென்று போட்டு விட்டு,

 

"இதை விடு, நீ என்னத்தடி பார்த்து அப்படி பயந்த, நீ அவ்வளவு சாதாரணமாக பயப்படுற ஆள் இல்லையே! அதுதான் ஆச்சரியமா இருக்கு..."

 

கார்த்திகா: இருட்டுக்குள்ளருந்து பயங்கர கண்ணு மாதிரி, எதையோ பார்த்தேன். வெறும் கண்ணு மட்டும். என்னை முறைச்சு பார்த்துட்டு இருந்துச்சு.

 

சித்ரா: கண்ணா? யாராவது வெளியில் நின்னு பார்த்திருப்பாங்களோ?

 

கார்த்திகா: அக்கா உனக்கு புரியலையா? யாராவது நின்னா எனக்கு தெரியாதா? வெறும் கண்ணு மட்டும். காத்துல மிதந்துட்டு இருந்துச்சு. ஜன்னலை நோக்கி மிதந்து வந்துச்சு. அதான் பயந்துட்டேன்.

 

அதைக் கேட்கும் போது, சித்ராவுக்கும் லேசாக பீதியாக தான் இருந்தது.

 

நாம் பார்க்கும் போது எதுவுமே இல்லையே, சித்ரா யோசித்தாள். இவள் வேறு எதையாவது பார்த்து பயந்துருக்கலாம் என்று சமாதானப்படுத்திக் கொண்டாள்.

 

சித்ரா: கன்னம் வைப்பதற்காக திருட்டு பசங்க யாராவது வந்திருக்கலாம். தேவை இல்லாமல் நீ எதையாவது நினைச்சு குழம்பிக்காதே. காலையில் தாத்தா கிட்ட சொல்லலாம்.

 

கார்த்திகா: வேண்டாக்கா சொல்லாதே. தாத்தாவே மனசு சரியில்லாமல் இருக்கிறார். உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லல. சாயங்காலம் பிரபா அத்தை வந்து... 

 

என்று ஆரம்பித்து, அவள் காதில் விழுந்த விஷயத்தை சொன்னாள்.

 

சித்ரா: எனக்கு அப்பவே தெரியும். ஊர்லருந்து போனதுக்கப்புறம் குமார் கண்டுக்கவே இல்ல. மெட்ராஸ்லயே தெருவுக்கு தெரு அழகான பொண்ணுங்க இருப்பாங்க. அதை விட்டுட்டு எதுக்கு திரும்ப அவன் ஊரு பக்கம் வரப்போறான். இந்த காலத்து பசங்க கிட்ட நம்பிக்கையை எதிர்பார்க்கிறது ரொம்ப கஷ்டம் தான்.  அவன் வந்திருந்தா கூட அக்கா ஒத்துக்கிட்டுருக்க மாட்டாங்க. அது வேற விஷயம். எதுக்கும் அக்கா கிட்ட தப்பித்தவறி கூட இந்த விஷயத்தை சொல்லிராத.

 

கார்த்திகா: இதே தான் தாத்தாவும் சொன்னார். பாவம் அக்கா!! நமக்காக எல்லாத்தையும் இழந்துட்டாங்க. கல்யாணமும் பண்ணிக்க மாட்டேன்னு சொல்றாங்க. அட்லீஸ்ட் இனிமே நம்மால அவளுக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது. இப்ப நடந்த விஷயம் எதுவும் தாத்தா கிட்டையோ, அக்கா கிட்டையோ சொல்ல வேண்டாம். நாமளே பார்த்துக்கலாம்.

 

சித்ராவுக்கு சுருக்கென்று இருந்தது.

 

"நம்மால அவளுக்கு எந்த கஷ்டமும் வரக்கூடாது", என்று அவள் சொன்னது சித்ரா காதுக்குள் ஒரு சில முறை எதிரொலித்தது.

 

கார்த்திகா: எனக்கு ஒரு ஆசைக்கா...  சினிமாவில் காட்டுவாங்களே, கஷ்டப்படுற சிண்ட்ரெல்லாவை காப்பாத்த வர்ற ராஜகுமாரன் மாதிரி, நம்ம அக்காவுக்காக எவனாவது ஒரு ராஜகுமாரன் வர மாட்டானா?

 

அவள் குரலில் நிஜமான ஏக்கம்.

 

சித்ரா சிரித்தாள்.

 

"கேட்க நல்லாத்தான் இருக்கு. சினிமாவுக்கு ஓகே... நிஜ வாழ்க்கையில் சிண்ட்ரெல்லாக்களுக்கு ராஜகுமாரன்கள் தேவைப்படுவதில்லை. சிண்ட்ரெல்லாவுக்கு அவளைப் பார்த்துக் கொள்ள தெரியும்."

 

"கரெக்டு தான் இல்ல" என்பது போல், கார்த்திகா தலையாட்டினாள்.

 

"சரி வாக்கா தூங்கலாம்.."

 

கொஞ்ச நேரத்துக்கு முன்னால் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தவளுக்கு எப்படி சட்டென்று மனநிலையை மாற்றிக் கொள்ள முடிகிறது. சித்ரா ஆச்சரியமாக அவளை பார்த்தாள்.

 

கார்த்திகா அவள் கட்டிலில் போய் படுக்க போக,

 

சித்ரா: என்கூட வந்து படுத்துக்கோ.

 

கார்த்திகா: வேண்டாங்கா, அதான் ஜன்னலை மூடிட்டியே. நீ லைட் ஆஃப் பண்ணு... நான் கண்ணை மூடிகிட்டு பேசாம தூங்கிடுவேன்... என்றாள் உறுதியான குரலில்.

 

ரூமுக்குள் பேச்சு சத்தம் நின்றதும்,

 

பூட்டப்பட்டிருந்த ஜன்னலுக்கு வெளியே, சரசரவென செடிகள் அசைந்தன.

 

இருட்டுக்குள் கருப்பு காற்றாய், நெகிழ்வுத் தன்மையுடன், மினுமினுப்பாய், ஏதோ ஒன்று சுழன்று கொண்டிருந்தது. மூர்க்கத்தனமான மெல்லிய உறுமல் சுழல் காற்றுக்குள் கேட்டுக் கொண்டிருக்க, 

 

விஷ்க் என்று சுழண்டு, துள்ளி துள்ளி, செடிகளை தாண்டி, மரங்களை தாண்டி, மதில் சுவரைத் தாண்டி,  கடந்து சென்றது.

 

மேட்டு தெருவில்,

 

சிக்னியின் குறைப்பு சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.

 

தொடரும்

 

உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது

 

https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 81
Topic starter  

கருப்பு 18

 

அரசு மேல்நிலைப்பள்ளி பனையூர்

மறுநாள் காலை 10 மணி

 

ரஸ்தா காட்டில் இருந்து பனையூர் போகும் வழியில் இருந்தது அந்த அரசு மேல்நிலை பள்ளி. அரசு பள்ளிகளை பற்றி சலிக்க சலிக்க பல படங்களில், பல கதைகளில், வர்ணித்து விட்டார்கள். அந்த வர்ணனைகளுக்கு இம்மி கூட பிசகாமல், அப்படியே இந்தப் பள்ளியும் இருந்தது.

 

குப்புற போட்ட ப வடிவில் மூன்று கட்டிடம். நடுவே ஒரு சிறிய மைதானம். முதல் கட்டிடத்தில் மட்டும் ஒரு மாடி. பக்கவாட்டில் மற்றும் எதிரே இருப்பவை தலை மேல் மாடி எதுவும் இல்லாமல்  இருந்தது. ப வின் ஆரம்பத்திலேயே தலைமையாசிரியர் அறை. அவர் அறையின் படிக்கட்டுகளை விட்டு கீழே இறங்கினால், கொஞ்சம் முன்னால் கொடி கம்பம்.

 

கிளாஸ் ரூம்கள் இயங்கிக் கொண்டிருந்ததற்கு அடையாளமாக மாணவர்கள் சத்தமும், அவ்வப்போது வாத்தியார்களின் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. தலைமையாசிரியர் அறையில், 

 

50 சதவீத நரை முடியுடன், வெள்ளெழுத்து கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து கொண்டு கையில் வைத்திருந்த பேப்பரை பார்த்துக் கொண்டிருந்தார் ஹெட் மாஸ்டர் ஜானகிராமன். எதிரே அமர்ந்திருந்தவனை நிமிர்ந்து பார்த்தார். டேபிளுக்கு மறுபுறம் அமர்ந்திருந்த இளைஞன், உதட்டோரம் புன்னகையுடன் அவரை பார்த்துக்கொண்டிருந்தான்.

 

மேலே மின்விசிறி கிர் என்று சுத்தி கொண்டிருந்தது. சுவரோரமாக இரண்டு மர செல்ஃபுகள். அதில் நிறைய பைல்கள். டேபிளில் பாட புத்தகங்கள், அட்டனன்ஸ் ரெஜிஸ்டர், இன்னும் வேறு ஏதோ ரெஜிஸ்டர்கள்.

 

ஹெட் மாஸ்டர் ஜானகிராமன் அந்த லெட்டரை மறுபடியும் படித்தார்.

 

Name: Thomas Ittiyvarah Nedumparambil

 

என்ன பெயர் இது? வாயிலேயே நுழைய மாட்டேங்குது!

 

அமர்ந்திருந்த இளைஞன் புதிய வாத்தியாராக இந்த ஊர் ஸ்கூலுக்கு வந்திருக்கிறான். அதற்குரிய அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தான் ஹெட் மாஸ்டர் கையில் இருந்தது.

 

ஹெட் மாஸ்டர்: தம்பி, தப்பா நினைச்சுக்காதீங்க. உங்க பேருல தாமஸ் மட்டும் தான் புரியுது. மத்தது எனக்கு வாயில நுழையல. கேரளாக்காரர் மாதிரி தெரியுது. தமிழ் தெரியுமா உங்களுக்கு?

 

அவன் புன்னகை சிந்தினான். சிந்தினான் என்று சொல்வதை விட, புன்னகையை தவழ விட்டான்னு சொல்றது தான் சரி.

 

அவன்:  சார் என்னோட பேரு தாமஸ் இட்டிவரா நெடும்பரம்பில்... நெடும்பரம்பில் என்பது குடும்பப் பேர். நான் ஒரு கிறிஸ்டின். அம்மா கேரளா, அப்பா தமிழ். சொந்த ஊர் நெய்யாற்றின்கரா. ஆனா மார்த்தாண்டத்தில் செட்டில் ஆகி ரொம்ப நாளாச்சு. தமிழ் எனக்கு  சரளமாகவே வரும்.

 

உட்கார்ந்திருந்தாலும், நல்ல உயரம் என்று பார்த்த மாத்திரத்திலேயே தெரிந்தது. உறுதியான முகம், கூர்மையான பார்வை. கருமையான புருவங்கள். சற்று சிறிய மூக்கு, புஷ்டியான கன்ன மேடுகள், கவர்ச்சிகரமான சிவந்த உதடுகள், ஆரோக்கியமான பற்கள், ஏதோ ஒரு மலையாள நடிகருக்கு இருப்பது போல் முகவாய் குழிவு.

 

ஹெட் மாஸ்டருக்கு அவனை பார்த்ததும், இயல்பாகவே நல்லெண்ணம் தோன்றியது. தான் செல்லும் கூட்டங்களில் தனியாக தெரிவான். எல்லோரையும் தன் பக்கம் ஈர்த்து கொள்வான். கவர்ச்சியாக செயல்படுவான்.... என்று கூடவே இவை அனைத்தும் தோன்றியது.

 

ஹெட் மாஸ்டர்: எப்படி பனையூர் மாதிரி, காஞ்சாங்காட்டிற்கு வாத்தியாரா வர சம்மதிச்சீங்க?

 

தாமஸ்: நான் எங்க சார் சம்மதிச்சேன்? போர்டுல ரெக்ரூட்மெண்ட் ஆர்டர் கொடுக்கும் போதே, கிராம பள்ளிக்கூடம் ஏதாவது ஒன்றில், ரெண்டு வருஷமாவது வேலை பார்க்கணும்னு எழுதி வாங்கிட்டாங்க. மார்த்தாண்டத்தில் தான் போஸ்டிங் கேட்டேன். குடுக்கல. DEO வரைக்கும் போய் பார்த்தேன். ஒன்னும் நடக்காததனால, வேற வழி இல்லாம வந்தேன்.

 

ஹெட் மாஸ்டர்: அதானே பார்த்தேன், மார்த்தாண்டம் எவ்வளவு செழிப்பான ஊரு. அதை விட்டுட்டு இந்த காஞ்சாங்காட்டுக்கு வந்திருக்கிறாரேன்னு நெனச்சேன். எப்படியோ வெல்கம் டு அவர் ஸ்கூல். உங்களுக்கு ஜாயினிங் டேட் நாளையிலிருந்து தானே. ஏன் இன்னைக்கே வந்தீங்க?

 

தாமஸ்: தெரியும் சார், தங்குவதற்கு இடமில்லை. நல்ல வீடா பார்க்கணும். அதான் ஒரு நாள் முன்கூட்டியே வந்தேன்.  வீடு கிடைக்கிற வரைக்கும் அஞ்சு கிராமத்தில் ஏதாவது லாட்ஜில் தங்கியிருந்து தான் வரணும்.

 

ஹெட் மாஸ்டர்: நம்ம ஏரியாவுல வீட்டுக்கா பஞ்சம். அதெல்லாம் நிறையவே கிடைக்கும். நான் ஒரு புரோக்கர் நம்பர் தரேன். நீங்க அவரை காண்டாக்ட் பண்ணுங்க. ஒரே நாளில் கிடைச்சிரும்.

 

"தேங்க்யூ சார்", என்று சொல்லிவிட்டு தாமஸ் எழும்பி நின்று கைநீட்ட, ஹெட் மாஸ்டரும் எழும்பி நின்று, கை குலுக்கினார்.

 

மாலை 5 மணி

 

காவண வீட்டின் முன்னால், திருமுடியும் தாமஸும் நின்றிருந்தார்கள்.

 

திருமுடி: இதுதான் சார் நான் சொன்ன வீடு. காவண வீடுன்னு சொல்லுவாங்க. ஊருக்குள்ள பேசுவதெல்லாம் பெருசா எடுத்துக்காதீங்க. ரொம்ப நாளா ஒரு வீடு பூட்டி போட்டுருந்தா, ஏதாவது பேச்சு வரத்தான் செய்யும்.  வீட்டுக்கு சொந்தக்காரர் எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவரு. பக்கத்துல இருக்குற அந்த வீட்டுல தான் இருக்கிறார். அதை மேட்டு வீடுன்னு சொல்லுவாங்க. அவருக்கு மூணு பொண்ணுங்க. ரொம்ப நாளா வீடு பூட்டி போட்டு சும்மா கிடக்குதுன்னு எங்கள மாதிரி ஒரு சில பேர் சொல்ல போய் தான், வாடகைக்கு விட ஒத்துக்கிட்டார். 

 

திருமுடி போனை எடுத்து பேசினான்.

 

"ஆமாங்கய்யா, கூட்டிட்டு வந்துட்டேன். அருமையான இடம். பனையூர் ஸ்கூல்ல வாத்தியாரு. வீட்டு முன்னால தான் நிக்கிறோம். நீங்க சாவி எடுத்துட்டு காவண வீட்டுக்கு வந்துருங்க.."

 

திருமுடி தாமசை பார்த்து, "சொல்லிட்டேன் வந்துருவாரு. இந்த மாதிரி ஒரு பெரிய வீடு உங்களுக்கு இந்த சுற்றுவட்டாரத்தில் இவ்வளவு கம்மி வாடகையில் கிடைக்காது. கம்மி வாடகைக்கு கிடைக்கிறதுனால லேசு பாசா நினைச்சுறாதீங்க. ஒரு காலத்துல இந்த ரெண்டு வீடும் தான் இந்த சுற்று வட்டாரத்திலேயே பிரபலமான வீடுகள். எல்லாம் கல்யாணங்களும் காவண வீட்ல தான் நடக்கும். இப்பதான் ஊருக்கு நாலு திருமண மண்டபம் வந்துடுச்சே. ஆள் யாரும் இல்லாமல் சும்மா பூட்டி போட்டுருக்காங்க. அவ்வளவுதான் வேற ஒரு விஷயம் இல்லை... ஐயா சும்மா யாருக்கு வேணாலும் வாடகைக்கு விட்ற மாட்டார். நீங்க வாத்தியார்ன்கிறதால ஒத்துக்கிட்டார்.."

 

தாமஸ் காவண வீட்டை ஏறிட்டுப் பார்த்தான். 

 

ரகசியங்கள் அனைத்தும் ஒளித்து வைத்துக்கொண்டு, திருட்டு முழி முழிக்கும் குற்றவாளியை போல் தான் காவண வீடு தோன்றியது.

 

தாமஸ் முகத்தில், வீடு பிடிக்காதது மாதிரி, திருப்தியின்மை தெரிந்தது.

 

தொடரும்

 

உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது.
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 19
 
தாமஸ் முகத்தில் வெளிப்பட்ட அதிருப்தியை திருமுடி பார்த்ததும், 
 
"இவ்வளவு பெரிய வீடு, குறைஞ்ச வாடகை, இந்த சுற்று வட்டாரத்திலேயே கிடைக்காது. உங்களுக்கும் ஸ்கூலுக்கு போயிட்டு வர்றதுக்கு வசதியா இருக்கும். பைக் எடுத்தீங்கன்னா பத்து நிமிஷத்துல ஸ்கூலுக்கு போயிடலாம்", என்றான்.
 
தாமஸ் பதில் சொல்வதற்குள்,
 
"வணக்கம் தம்பி" என்று குரல் கேட்க, தாமஸ் திரும்பி பார்த்தான்.  பக்கத்து வீட்டின் கேட்டை திறந்து கொண்டு  பெரியவர் ஒருவர் வெளிப்பட்டார்.
 
மரியாதை நிமித்தம் தாமஸும் திரும்பி வணக்கம் வைத்தான்.
 
"என் பேரு பெரிய கருப்பன். இரண்டுமே நம்ம வீடுதான்.."
 
தாமசின் பெயர், ஊர், இன்ன பிற விஷயங்களை விசாரித்து தெரிந்து கொண்டார்.
 
பின்னர்,
 
"தம்பி நீங்க வாத்தியாரு. உங்ககிட்ட பொய் சொல்ல விரும்பல. என்ன பிரச்சனை என்பதை சுருக்கமா சொல்றேன். ஊருக்குள்ள முனி நடமாட்டம் இருக்குங்கிறது ரொம்ப காலமா பேச்சு அடிபட்டுட்டுருக்கிற ஒரு விஷயம். 
 
என்று ஆரம்பித்து 20 வருஷத்துக்கு முன்னால் நடந்த முனி பிரச்சனை, சொத்து பிரச்சனைகள், காவண வீட்டை மறுபடியும் முத்துப்பாண்டி கேட்பது, சிமெண்ட் கம்பெனி காரர்கள் நிலங்களை வளைக்க பார்ப்பது, அதனால் முத்துப்பாண்டி மறுபடியும் முனி பிரச்சனையை கிளப்பி விட்டது என்று அனைத்தையும் சுருக்கமாக சொன்னார்.
 
பிரச்சனைகளை கேட்கும் போது தாமஸ் முகத்தில், திகைப்பும் சலிப்பும் வந்து வந்து விலகியது.
 
மேலும்,
 
"ஆதரவு இல்லாம இருக்குற என்னுடைய மூணு பேத்திகளுக்கும், இந்த வீட்டை வித்துதான் ஏதாவது நான் செய்யணும். அதற்காக, இந்த வீட்ல எந்த பிரச்சினையும் இல்லைன்னு நிரூபிக்கணும். அதான் வாடகைக்கு விடுறதுக்கு நான் ஒத்துக்கிட்டேன். இதுதான் உண்மை. என்னை பொறுத்த வரைக்கும் முனி பிரச்சனையோ, பேய் பிரச்சனையோ எதுவுமே வீட்டில் கிடையாது.  எல்லாம் முத்துப்பாண்டியின் வேலை. உங்கள பார்த்தவுடன் எனக்கு நல்ல குடும்பத்து புள்ளனு தோணுச்சு. அதனால தான் எல்லா உண்மையும் சொன்னேன். இதுக்கு மேல நீங்க வாடகைக்கு வர்றதும் வராததும் உங்க விருப்பம்."
 
தாமஸ் திருமுடியை திரும்பிப் பார்த்தான். 
 
திருமுடி, "யோவ் கிழவா, அருமையான ஒரு பார்ட்டியை அதை இதைப் பேசி கூட்டிட்டு வந்தேன். இப்படி உண்மையை சொல்லி கெடுத்துட்டியே", பார்வை பார்த்தான்.
 
தாமஸ்:  சார் நீங்க உண்மையை சொன்னதுக்கு ரொம்ப நன்றி. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க. நான் யோசிச்சு சொல்றேன்.  நான் கிளம்பட்டுமா?
 
அவரிடம் விடை பெற்று கிளம்பினான். திருமுடியும் அவன் பின்னால் சென்றான்.
 
பெரியகருப்பன் முகத்தில் சலனமில்லாமல் இருவரையும் பார்த்துக் கொண்டே நின்றார்.
 
திருமுடி: என்ன சார் வீடு புடிக்கலையா?
 
தாமஸ்: பெரியவர் பெருந்தன்மையா உண்மையை சொல்றாரு. அவருக்காகவாவது தங்கலாம் தான். ஆனா நம்ம வீட்டை விட்டு தனியா இவ்வளவு தூரம் வந்திருக்கோம். பேய் பிரச்சனை இருக்கிற வீட்டில் தங்கனுமா?
 
இருவரும் பேசிக் கொண்டே போவது பெரிய கருப்பனுக்கு சன்னமாக கேட்டது. ரோட்டோரமாக நிறுத்தியிருந்த அவனின் பைக்கில் ஏறி, தாமஸ்  கிக்கரை மிதித்து, ஸ்டார்ட் செய்தான். திருமுடி பைக் பின்பக்கம் ஏறிக்கொண்டான்.  பைக் மேட்டு தெருவில் இருந்து, வலது பக்கமாக திரும்பி, கீழத்தெரு பெரிய வீதியில் நுழைந்தது.
 
பைக் மேட்டு தெருவின் வலது பக்கமாக திரும்பிய அடுத்த ஒரு சில நொடிகளில், அகல்யா இடது பக்கத்திலிருந்து மேட்டு தெருவுக்குள் நுழைந்தாள்.
 
தாத்தா தெருவிலேயே நின்றிருப்பதை பார்த்ததும்,
 
"என்ன தாத்தா வெளியவே நின்னுட்டு இருக்கீங்க?"
 
"இல்ல, வீட்ட பாக்குறதுக்காக வாத்தியார் ஒருத்தரை திருமுடி கூட்டிட்டு வந்தான். அவர் கிட்ட வீட்ட பத்தின உண்மை நிலவரங்களை சொன்னேன். அவரு கொஞ்சம் பயந்துட்டாரு போல. அதனால யோசிச்சு சொல்றேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு..."
 
அகல்யா: தாத்தா விடுங்க. நீங்க பண்ணது தான் சரி. நாம உண்மையை சொல்லிட்டோம். அப்புறம் அவங்க விருப்பம்.
 
பெரிய கருப்பன்:  நீ எங்க போய்ட்டு வர?
 
அகல்யா: சந்தனமேரி அக்கா வீடு வரைக்கும் போயிட்டு வரேன். அவங்க பையன் நாலாம் கிளாஸ் ஓட படிப்பை நிறுத்தி ரெண்டு வருஷம் ஆச்சு. அதான் அஞ்சாங்கிளாஸ்ல சேர்க்கலாமானு கேட்டாங்க. நான் ஸ்ட்ரைட்டா ஆறாம் கிளாஸ்லையே சேர்க்கலாம் பேசி பார்க்கிறேன்னு சொல்லிட்டு வந்தேன்.
 
"என்ன தாத்தாவும் பேத்தியும் தெருவில் நின்னு பேசிட்டுருக்காங்க?... எந்த கோட்டையை பிடிக்க திட்டம் போடுறீங்க?", என்று குரல் கேட்க, இருவரும் திரும்பி பார்த்தார்கள்.
 
சுந்தரராமன் வாத்தியார்.
 
அகல்யா: ஆமா, கோட்டையை பிடிக்க தான் திட்டம் போடுறாங்க!!! வாத்தியாருக்கு வாயை திறந்தாலே கிண்டல் தான். உங்க கூட்டாளி வந்துட்டாரு. நான் கிளம்புறேன்...
 
வீட்டை நோக்கி சென்றாள். சிக்னி அவள் பின்னாலேயே ஓடியது.
 
அகல்யா அங்கிருந்து நகர்ந்ததும்,
 
ராமன் வாத்தியார்: வந்தது யாரு?  காவண வீட்டை பார்க்க வந்த ஆளா?
 
கருப்பன்: ஆமாப்பா, ஆனா ஏனோ வீட்ட பார்த்ததும், அந்தப் பையனுக்கு பிடிக்கல போல. அப்புறமா சொல்றேன்னு கிளம்பிட்டான்.
 
வாத்தியார்: கருப்பு நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காத. என்னதான் நீ வீட்டுக்கு பூஜை போட்டாலும்,  என்னமோ சரில்லன்னு தான் எனக்கு தோணுது. வீட்டை வாடகைக்கு விடுவதையும், விக்கிறதையும்  கொஞ்சம் ஓரங்கட்டி வச்சா நல்லதுன்னு நினைக்கிறேன்.
 
கருப்பன்  எதுக்காக என்பது போல் கேள்விக்குறியுடன் அவரைப் பார்க்க,
 
வாத்தியார்: "நம்ம ஊர்ல அங்கொன்னும் இங்கொன்னுமா ஒரு சில சம்பவங்கள் நடந்திருக்கு. ஊர் காரங்களை பொருத்தவரையில் அது சம்பந்தமில்லாத சம்பவங்கள். இவ்வளவு நாள் இல்லாத முனி ஓட்டம் பற்றிய பேச்சு, ஊருக்குள்ள மறுபடியும் ஆரம்பிச்சிருக்கு. 
 
கடற்கரை ரோட்ல அன்னைக்கு சைக்கிள்ல வந்த ராமசாமி கீழே விழுந்து செத்ததும், சுடுகாட்டில் வெட்டியான் இரத்தம் கக்கி செத்து கிடந்ததுக்கும், ஒண்ணுக்கு ஒண்ணு சம்பந்தம் இருக்கு."
 
கருப்பன் சிரித்தார். "வெட்டியான் குடிக்கிற குடி ஊருக்கே தெரியும். குடிச்சு குடிச்சு ஈரல் வெந்து போய், இரத்தம் கக்கி செத்திருக்கான். அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்ல.."
 
வாத்தியார்: இல்ல கருப்பு, கடற்கரை முனி கோயிலருந்து முனி ஓட்டம் இருக்கிறதா சொல்லப்படுற வழியில தான் சுடுகாடு இருக்கு. கடற்கரை ரோடு இருக்கு. ரெண்டு சம்பவமும் முனி பாதையில் தான் நடந்திருக்கு. அது மட்டுமில்லாம சண்டி முனி குடியுரிமை  இருக்கிற முனி. அதோட பாதையில யாரு வந்தாலும் சும்மா விடாதுன்னு சொல்லுவாங்க. அனாவசியமா காவண வீடு விக்கிறதை பத்தி பேசி அதை கிளப்பி விட்டுட்டோமோன்னு தோணுது.
 
வாத்தியார் கூற்றை மறுப்பது போல் கருப்பன் தலையசைத்து, ஏதோ சொல்வதற்காக வாய் திறக்க, அவர் போன் அடித்தது. எடுத்துப் பார்த்தார்.
 
தூத்துக்குடி கல்யாணி எதற்காக எனக்கு கால் பண்றா?
 
போனை காதுக்கு கொடுத்தார்.
 
"பெரியப்பா சுகமா இருக்கீங்களா?"
 
"சுகத்துக்கு என்ன குறைச்சல் உனக்கு இப்பவாவது ஞாபகம் வந்துச்சே, நீங்க எப்படி இருக்கீங்க? வீட்லல்லாம் சௌக்கியமா?"
 
"எல்லாம் சௌக்கியம். பெரியப்பா ஞாபகம் இல்லாம இல்ல. சீட்டு கம்பெனி நடத்துறேன். அத பத்தி தெரியும் இல்லையா? பணத்தை வசூல் பண்றது சிக்கலான வேலை. விட்டா புடிக்கவே முடியாது. எப்பவுமே அதையே பாத்துட்டு இருக்க வேண்டியதா இருக்கு."
 
"புரியுது, நானும் சும்மாதான் கேட்டேன். சரி என்ன விஷயமா போன் பண்ணுன?
 
"எப்படியாவது நம்ம அகல்யாவை குமாருக்கு கட்டி வச்சிடலாம்னு தான் நெனச்சேன். ஆனா திடீர்னு அவன் ஆபீஸ்ல வேலை பாக்குற ஒரு வடநாட்டுகாரிய இழுத்துட்டு வந்து இவளை தான் கட்டிக்குவேன்னு நிக்கிறான். இப்படி பண்ணுவான்னு நான் நினைக்கவே இல்லை. கல்யாணத்துக்கு ஒத்துக்கலைன்னா ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு தனியா போயிருவேன்னு மிரட்டுறான். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல. அதனால் தான் பிரபா கிட்ட  சொன்னேன். இருந்தாலும் நம்மளே நேரடியா பேசிரலாம்ங்கறதுக்காக   போன் பண்ணேன்.. பெரியவங்க என்னை தப்பா நினைச்சுக்க கூடாது", என்றாள் வருத்தம் தோய்ந்த குரலில்.
 
கருப்பன்: சரி விடு விடு. அதுக்கு என்ன பண்றது? ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு விருப்பம். அவங்க விருப்பத்தை மீறி கட்டி வைக்கவா முடியும்.  அகல் கிட்ட பேசும் போது கூட, கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு தான் சொன்னா. எப்படியாவது பேசி முடிச்சிரலாம்னு தான் நானும் ஆசைப்பட்டேன். எல்லாம் நல்லதுக்குன்னு நினைச்சுக்க வேண்டியதுதான். 
 
கல்யாணியும் கருப்பனும் மாத்தி மாத்தி சமாதானம் பேசி விட்டு போனை வைத்தார்கள்.
 
பக்கத்தில் நின்றிருந்த சுந்தர்ராமனுக்கு சங்கதி தெரியும். அதனால் அவர் எதுவுமே கேட்கவில்லை. 
 
கருப்பன்: கல்யாணிக்கு எப்படியாவது முடிச்சிடலாம்னு தான் நினைப்பு இருக்கு. இந்த காலத்து பசங்க என்ன ஆசைப்படுறாங்கன்னு சொல்லவா முடியுது. 
 
வாத்தியார் ராமன்: அதை விடு. அதான் தெரிஞ்ச விஷயமாச்சே. காவண வீடு வாடகைக்கு விடுற யோசனையை முதலில் நிப்பாட்டு. வீடு பார்க்க வந்தவன் கூட பார்த்ததுமே ஓடிப் போயிட்டான். விஷயம் தெரியாத வெளியூர்க்காரனே பார்த்ததும் பயந்துட்டான். வீடு பத்தி பேச்சு எடுத்ததுக்கப்புறம் ஏதாவது நல்ல விஷயம் நடக்குதா? நான் சொல்றதை தயவுசெய்து கேளு.
 
வாத்தியார் இதே விஷயத்தை அழுத்தம் திருத்தமாக பலமுறை சொல்லி இருக்கிறார். தொடர்ந்து அவர் சொல்வதைக் கேட்டதும், 
பெரிய கருப்பன் காவண வீடு விஷயத்தை கைவிடலாமா என்று யோசிக்க ஆரம்பித்தார்.
 
அவர் நெற்றியில் யோசனை சுருக்கங்கள் பளிச்சிட்டன.
 
இதற்கிடையே,
 
தாமஸ் பைக்கை பஸ் ஸ்டாப்பில் நிறுத்தினான். திருமுடி இறங்கிக் கொண்டு,
 
"சரிங்க சார், நாளைக்கு பாக்கலாம். காவண வீடு உங்களுக்கு காமிக்கும் போது நீங்க ஒத்துக்குவீங்கன்னு நினைச்சேன். இப்படி சொல்லுவீங்கன்னு எதிர்பார்க்கலை...", என்றான்.
 
"நானும் ஒத்துக்கலாம்ன்னு தான் நெனச்சேன். ஆனா.....",  காரணத்தை சொல்லாமல் யோசித்தபடி நிறுத்தினான்.
 
பஸ் ஸ்டாப்பில் யாருடனோ பேசிக் கொண்டிருந்த முத்துப்பாண்டி, காவண வீடு பேர் அடிபட்டதும், திரும்பி பார்த்தான். 
 
திருமுடிக்கு பக்கத்தில் ஊருக்குள் புதுசாக வந்திருப்பவனை பார்த்ததும், என்ன விஷயமாக வந்திருப்பான் என்று அவனால் யூகிக்க முடிந்தது.
 
முத்துப்பாண்டி ஆவேசமாக அவர்களை நோக்கி சென்றான்.
 
"ஏல திருமுடி, நான் உன்கிட்ட எவ்வளவு தடவை சொன்னேன். காவண வீடு எனக்கு தான் வரப்போகுது. பெரியவர் என்னதான் திருங்கினாலும், அவருக்கு வேற வழியே கிடையாது. 
 
வாடகைக்கு ஆள் கூட்டிட்டு வர்ற வேலைல்லாம் வச்சுக்காத. இதுதான் கடைசி எச்சரிக்கைன்னு நினைச்சுக்கோ. இனிமே வாயால பேச மாட்டேன்... சொல்லிட்டேன்",
 
என்று சொல்லிவிட்டு, தாமசை ஒரு முறை உஷ்ணமாக பார்த்துவிட்டு, விசுக்கென்று திரும்பி சென்றான்.
 
திருமுடி தாமஸிடம்: இவன் தான் பெரியவரோட மூத்த பேரன் முத்துப்பாண்டி. முனி பிரச்சனையை கிளப்பி விட்டது இவன் வேலையாத்தான் இருக்கும்னு பெரியவர் சந்தேகப்படுகிறார். இவன் எப்பவுமே இப்படித்தான். இதை பெருசா எடுத்துக்காதீங்க.
 
தாமஸ் முகம் இறுக்கமானது. யோசித்தபடியே தலைமுடியை கோதிக்கொண்டான். ஏதோ முடிவெடுத்த தீர்க்கம் முகத்தில் தெரிந்தது.
 
தாமஸ் திருமுடியை பார்த்து, "பைக்ல ஏறு. மறுபடியும் அந்த பெரியவரை போய் பார்க்கலாம்."
 
திருமுடி ஒரு நொடி புரியாமல் அவனைப் பார்க்க, மறு நொடி உற்சாகமாக ஏறிக்கொண்டான். அவனுக்கு புரிந்து போனது.
 
தாமஸ் பைக்கை திருப்பி, கீழ தெருவுக்குள் புகுந்து, மேட்டு தெருவை நோக்கி பைக்கை ஓட்டினான்.
 
கீழத் தெருவில் பேசிக் கொண்டிருந்த ஒரு சில பெண்கள், போகும்போதும் வரும் போதும், தாமசை தகவல் தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் பார்த்தார்கள்.
 
"யாருப்பா இது?? நெடு நெடுன்னு உயரமா ஜெயம் ரவி மாதிரி இருக்கிறது?"
 
"யாரது ஜெயம் ரவி?"
 
"சந்தோஷ் சுப்ரமணியம் படம் பாக்கலையா?"
 
பைக்கின் ஆரோக்கியமான தடதட சத்தத்தை கேட்டதும், மேட்டு தெருவில் பேசிக் கொண்டிருந்த கருப்பனும் வாத்தியாரும் திரும்பி பார்த்தார்கள்.
 
பைக்கை ஓரமாக நிறுத்திவிட்டு, தாமசும் திருமுடியும் அவர்களை நோக்கி சென்றார்கள்.
 
தாமஸ்: சார் யோசிச்சு சொல்றேன்னு சொன்னேனே... யோசிச்சிட்டேன். நாளையிலருந்தே உங்க வீட்டுக்கு குடி வரலாம்னு நினைக்கிறேன். (பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து) இந்தாங்க சார் அட்வான்ஸ் தொகை.
 
கருப்பனும் வாத்தியாரும் ஒருவரை ஒருவர் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டார்கள்.
 
பின்னர் கருப்பன் தயக்கமாக அட்வான்ஸ் தொகையை வாங்கிக் கொண்டார்.
 
திருமுடி அவர்களின் ஆச்சரியத்தை போக்கும் விதத்தில்,
 
"நானும் சாரும் பஸ் ஸ்டாப்பில் நின்னுட்டு இருந்தோம். முத்துப்பாண்டியும் நின்னுட்டு இருந்தான். சாரை வாடகைக்கு தான் கூட்டிட்டு வந்தேன்னு தெரிஞ்சுகிட்டான் போலிருக்கு. இனிமே வாடகைக்கு யாரையுமே கூட்டிட்டு வரக்கூடாதுன்னு மிரட்டுனான். சார் என்ன நினைச்சாரோ தெரியல. நேரா பைக்கை திருப்பி வந்து, உங்க கையில வந்து அட்வான்ஸ் கொடுத்துட்டார்", என்றான்.
 
கருப்பன் தாமசை ஏறிட்டு பார்க்க,
 
"சார் இங்கே பேய் பிரச்சினை கிடையாது. அவன் தான் பிரச்சனைன்னு, அவன் மிரட்டினதுமே தெரிஞ்சு போச்சு. அதான் வீட்டை விட்டுற கூடாதுன்னு உடனடியாக வந்து அட்வான்ஸ் கொடுத்தேன். பெட்டி படுக்கையின்னு பெருசா எதுவும் இல்லை. துணிகளும், புத்தகங்களும், கொஞ்சம் பாத்திரங்களும் தான். நாளைக்கே வீட்டுக்கு வந்துடறேன்."
 
கருப்பன்: ரொம்ப சந்தோஷம் தம்பி. வீட்டுக்குள்ள போய் பார்க்க வேண்டாமா?
 
தாமஸ்: அதெல்லாம் எதுக்குங்க? நான் ஒண்டிக்கட்டை. எனக்கு ஒரு ரூம் கிடைச்சாலே போதும். இவ்வளவு பெரிய வீடு தாராளம். அது மட்டுமில்லாம உங்க நேர்மையான பேச்சு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உண்மைய சொல்லனும்னா அதுக்காக தான் திரும்பி வந்தேன்...
 
என்று சொல்லிவிட்டு வசீகரமாக சிரித்தான்.
 
சுந்தரராமன் தாமசை  பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
 
அவர் மைண்ட் வாய்ஸ்:
 
'எவ்வளவோ சொல்லி பாத்தாச்சு. இதுக்கு மேல அவங்கவங்க தலையெழுத்து பிரகாரம் தான் நடக்கும். பாவம்!! பார்த்தா நல்ல பையன் மாதிரி தெரியுறான், என்னெல்லாம் நடக்க போகுதோ!!!'
 
அவர் யோசித்த வேளையில் பெருமூச்சு ஒன்று தப்பித்து வெளிப்பட்டது.
 
தாமஸ் காவண வீட்டை ஒருமுறை திரும்பி பார்த்தான். வீடு சமத்துப் பிள்ளை போல், அப்பாவியாக அவனை பார்த்தது.
 
சமத்துப் பிள்ளைகளாக நடிப்பவர்கள் தான்,  
 
சில சமயம் பயங்கர வினை பிடித்தவர்களாக இருப்பார்கள்.
 
                 இடைவேளை
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது.
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 20
 
மறுநாள் காலை 
 
மேட்டு வீட்டில் காலை நேர பரபரப்பு. அகல்யா யாருடனோ போனில் சத்தமாக பேசிக் கொண்டிருக்க, சித்ரா கிச்சனில் பாத்திரங்களை உருட்டி கொண்டிருந்தாள். 
 
அன்றைக்கு இரவு நடந்த சம்பவத்துக்கு பிறகு ரூம் ஜன்னலை சித்ரா மறக்காம பூட்டி விடுவாள். கார்த்திகா முன்னால், உடையும் மாற்றுவதில்லை.
 
தூங்கி எழும்போதே என்னமோ சரியில்லை என்று கார்த்தி உணர்ந்தாள். லேசாக முதுகு வலி,  இடுப்பு கடுப்பு இருந்தது. 
 
போச்சு!! இன்னைக்கு பீரியட்ஸ் போலருக்கு என்று தெரிந்து போனது. 
 
ஜன்னலை திறந்து வைத்து தலை சாய்த்தபடி மரங்களை வெறித்து பார்த்துக்கொண்டிருந்தாள்... அவள்
எதிர்பார்த்தபடி நடக்கவும் செய்தது.
 
ஜன்னலின் கண்களுக்கு வெளியே வழக்கமான பூச்செடிகள் தான், வழக்கமான மரங்கள் தான். அதில் வழக்கம்போலவே சில குருவிகள் கீச்சிட்டு கொண்டிருந்தன. குருவி கவனிப்பு அவளின் வாடிக்கையான விஷயம். குருவிகள் சத்தத்தை விட அதன் நிசப்தம் அதிகமாக அவள் காதில் விழுந்தது.
 
குருவிகள் எங்கிருந்தோ கொண்டு வந்த தானியங்களை மரக்கிளையில் வைத்து கொத்தி தின்னும் அழகில்,
அவள்
மனசினுள்ளும் தானியங்கள்
தூவப்பட்டன.
 
“ஏய் கார்த்தி எவ்வளவு நேரம் கூப்பிடுறேன்..  காதுல விழலையா?” இதுவும் வழக்கமான சித்ராவின் கத்தல் தான்.
 
பாத்திரங்கள் கழுவுவதற்காக கூப்பிடுகிறாள்...
 
இவ ஒருத்தி!!! என்று சலித்தபடி, கிச்சனை நோக்கி சென்றாள்.
 
போகும் வழியில் அகல்யா ரூமில் இருந்து வெளிப்பட, கார்த்திகாவை பார்த்துவிட்டு,
 
“ஏண்டி முகம் அசதியா இருக்கு?... கண்ணு முழியல்லாம் அசந்திருக்கு?” 
 
ஒரே செகண்டில் அக்கா முகத்தின் மாற்றங்களை கவனித்துவிட்டாள்.
 
“ஒண்ணுமில்ல... "
 
"ராத்திரி ஒழுங்கா தூங்கலையா?"
 
"அதெல்லாம் தூங்கினேன்க்கா. மாசா மாசம் வர்ற வலிக்கா... கூடவே இன்னிக்கி முதுகு வலி, அடிச்சு போட்ட மாதிரி அசதியா இருக்கு... எரிச்ச எரிச்சலா வருது”, தெம்பு இல்லாதவளாக அக்காவை கட்டிப்பிடித்து, அவள் மார்பில் தலை சாய்த்தாள்.
 
அவளை அணைத்துக் கொண்டு தலையை வாஞ்சையாக வருடிவிட்ட அகல்யா,
 
“என்னமோ நேத்திக்கு வயசுக்கு வந்த மாதிரி சொல்றியே... இதான்  மாசா மாசம் வருதே... இன்னும் சின்ன பிள்ளையாட்டம் சலிச்சிக்கிற?  நீ சின்ன பொண்ணு கிடையாது. பெரிய பொண்ணு.  இனிமே இப்படித்தான் இருக்கும். எல்லாம் தாங்கிக்கணும். போய் தலைக்கு குளிச்சுட்டு வா, சித்ரா கிட்ட வெந்தயக்கஞ்சி வச்சித்தர சொல்றேன்...” 
 
“சே!!!... மாசத்துல இந்த மூணு நாள் மட்டும் இல்லைன்னா எவ்வளவு சந்தோஷமா இருக்கும்! பேசாம பையனா பிறந்திருக்கலாம்”, அவள் குரலில் ஏகப்பட்ட எரிச்சல்.
 
"பேடு இருக்கல்ல?... போன மாசம் தானே வாங்கி தந்தேன். இன்னும் தீந்திருக்காதே."
 
"இருக்குக்கா..." 
 
"என்ன உனக்கு இந்த மாசம்  20 நாள்லயே வந்திடுச்சா?” 
 
பதில் சொல்லாமல், சடைவாக அக்காவை கட்டி பிடித்து, அவள் முதுகுக்கு பின்னால் கை கோர்த்தபடி கார்த்திகா நின்றிருக்க,
 
அவளை சமாதானப்படுத்தி பாத்ரூமுக்கு போக சொல்லிவிட்டு, அகல்யா சமையலறைக்கு சென்றாள்.
 
வேலையா இருந்த சித்ராவை பார்த்து, வெந்தயக் கஞ்சி போட்டுரு என்றாள்.
 
"அக்கா எனக்கு ஏற்கனவே லேட் ஆயிருச்சு.. பஸ்ஸ விட்டுருவேன்."
 
"வைடி, பத்து நிமிஷம் ஆகுமா!!!", என்று அகல்யா சொன்னதன் பின் சித்ராவால் மறுபேச்சு பேச முடியவில்லை.
 
கார்த்திகா காக்கா குளியல் போட்டுவிட்டு, டிரஸ் சேஞ்ச் பண்ணிவிட்டு, சமையலறைக்குள் நுழைந்தாள்...
 
சித்ரா பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள்.
 
“என்னக்கா பண்ணிட்டு இருக்க?”
 
“குளிச்சுட்டியா?... கஞ்சி போட்டுருக்கேன் குடி."
 
"கஞ்சி அப்புறமா குடிக்கிறேன். டிபன் ரெடியா?"
 
சித்ரா அவளுக்கு முதுகு காட்டி நின்று, ஏதோ வேலை செய்து கொண்டிருந்தாள்.
 
"ரெடி ஆயிட்டே இருக்கு. அப்ப இன்னிக்கு ஸ்கூலுக்கு போக மாட்ட...இப்பவல்லாம் என்னென்னமோ நாப்கின் விளம்பரமல்லாம் போடுரானுக, அதை வச்சுட்டு பொண்ணுங்க டான்ஸ் ஆடுறாங்க, ஓடுறாங்க, பிளைட் ஓட்டுறாங்க... நீ என்னடான்னா, பீரியட்ஸ் வந்துச்சுன்னா, இதான் சாக்குனு ரெண்டு நாளைக்கு ஸ்கூலுக்கு போகாமல் படுத்துகிற. அப்படியே உலக அதிசயமா இவளுக்கு மட்டும் தான் வர்ற மாதிரி.."
 
கிச்சன் ஸ்லாபில் உட்கார்ந்து படி கஞ்சியை குடித்துக்கொண்டிருந்த கார்த்திகா, சித்ரா வேலை செய்து கொண்டிருப்பதற்கு ஏற்ப, அவளின் பின்புறம் நளினமாக அசைவதை பார்த்தாள்.
 
எழும்பி சித்ராவின் பின்புறத்தில் பட்டென்று அடித்தாள்.
 
சமையல் மேடையில் காய்கறி நறுக்கிக் கொண்டிருந்த சித்ரா, அதிர்ந்து, திரும்பினாள்.
 
"அடி கழுத...", என்ற அடிப்பதற்காக கையை ஓங்கினாள். அடிக்கவில்லை. இருவருக்கும் இது வழக்கமான செயல்தான்.
 
"பேசாம வேலைய பாருக்கா... இன்னும் டிபன் ரெடியா இல்லை. பேச்சு தான் ஜாஸ்தியா இருக்கு."
 
காலை 11 மணி
 
மேட்டு வீட்டில் காலை நேர பரபரப்பு ஓய்ந்து, அகல்யா வெளியே சென்றிருக்க, சித்ரா காலேஜுக்கு சென்றிருந்தாள்.  பெரிய கருப்பன் சிற்றூரில் உட்கார்ந்து வரிக்கு வரி பேப்பரை படித்துக் கொண்டிருந்தார்.
 
கார்த்திகா படுக்கையில் ஒருக்களித்து சாய்ந்தபடி படித்திருந்தாள்  அசதி முழுமையாக அவளை ஆட்கொண்டிருந்தது. ஒரு குட்டி தூக்கம் போட்டு எழும்பினால் மட்டுமே அவளால் அசதியிலிருந்து விடுபட முடியும் போல தோன்றியது. ஏதேதோ யோசித்து விட்டு அப்படியே தூங்கிப் போனாள்.
 
ஒரு டெம்போ ஆட்டோ காவண வீடு முன்னால் வந்து நிற்க, சத்தம் கேட்டு பெரிய கருப்பன் பேப்பரை மடித்து விட்டு வெளியே வந்து எட்டிப் பார்த்தார். தாமஸ் தான் பெட்டி படுக்கையோடு வந்து இறங்கி இருந்தான். கூடவே திருமுடியும் இருந்தான்.
 
பெரிய கருப்பன்: வாங்க, வாங்க... இப்பவே வந்துட்டீங்களா? இருங்க சாவி எடுத்துட்டு வரேன்....
 
என்று சொல்லிவிட்டு சாவியை எடுப்பதற்காக உள்ளே சென்றார்.
 
காவண வீடு குளிர்ந்திருந்தது. மேட்டு தெரு மரங்கள் காரணமாக வெயிலால் அதிகமாக பாதிக்கப்படவில்லை.
 
பெரிய கருப்பன் சாவியை எடுத்து வந்தார். தோட்டத்து வழியாக காவண வீட்டுக்குள் நுழையும் வாசலுக்கு வந்து சேர்ந்தார்.
 
கருப்பன்: சாயங்காலம் தான் வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
 
தாமஸ் கேட் வழியாக உள்ளே நுழைந்தான்.
 
"இன்னைக்கு தான் ஆக்சுவலா ஸ்கூல்ல ஜாயினிங்.  ஆனா நேத்தே ஜாயின் பண்ணிட்டேன். அதனால இன்னைக்கு வீடு ஷிப்ட் பண்றதுக்காக பெர்மிஷன் போட்டுட்டு வந்துட்டேன்.."
 
கருப்பன் காவண வீட்டின் கதவை பிறந்து உள்ளே சென்டர் அவரைத் தொடர்ந்து தாமஸ் நுழைந்தான். ரொம்ப நாட்களாக பூட்டிபோட்ட வீடு என்பதால், குப்பென்று ஈரமும் வெப்பமும் கலந்த ஒரு வாடை அடித்தது.
 
கருப்பன்: ஜன்னல் கதவெல்லாம் பூட்டியே போட்டிருந்ததால், கசகசான்னு இருக்கும். கொஞ்ச நேரம் திறந்து வையுங்க. சுத்தமான காத்து வந்துச்சுன்னா எல்லாம் சரியாயிடும்.
 
தாமஸ் சரிங்க சார் என்றான்.
 
மேட்டு வீடு மாதிரியே ஒரு சிறிய சிட் அவுட். பெரிய ஹால். பெட்ரூம், இன்னும் இரண்டு சிறு ரூம்கள் இருந்தன. கிராமத்தில் இப்படி ஒரு வீடு கிடைப்பது அதிசயம் தான். தாமசை பொருத்தவரை அவனுக்கு போதுமானதாக இருந்தது அவன் முகத்தில் திருப்தி.
 
கருப்பன்: சமையல் பாத்திரங்கள் எல்லாம் கொண்டு வந்திருக்கிறீர்களா? பால் காச்சுவீங்களா?
 
தாமஸ்: சார், எங்களுக்கு அந்த பழக்கம்ல்லாம் கிடையாது. சிம்பிளா ஒரு பிரேயர் மட்டும் பண்ணுவாங்க. இன்னும் பாரம்பரியமான கிறிஸ்தவர்கள், சர்ச் பாதர் யாரையாவது கூட்டிட்டு வந்து ஜெபம் பண்ணிட்டு, புனித நீர் தெளிப்பாங்க.
 
கருப்பன்: அப்படியா சரி சரி. நீங்க உங்க விருப்பம் போல பண்ணுங்க.
 
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது திருமுடி பெட்டியை தூக்கி கொண்டு உள்ளே நுழைந்தான்.
 
கருப்பன்: உங்க குடும்பத்தை பத்தி நான் ஒண்ணும் கேட்கலையே.
 
தாமஸ்: சார், மார்த்தாண்டம் என் ஊரு... அப்பா EB-ல வேலை பாத்துட்டு இருந்தாரு. ரெண்டு வருஷத்துக்கு முன்னால, ஒரு டிரான்ஸ்பார்மர் ரிப்பேர் பண்றதுல ஈடுபட்டு இருக்கும் போது கால் தவறி மேலிருந்து கீழே விழுந்து இறந்து போனார். அம்மா ஹவுஸ் ஒய்ஃப் தான். எனக்கு ரெண்டு தங்கச்சி, ஒரு தம்பி. அப்பா இறந்ததுக்கப்புறம் அவங்களைப் பார்த்துக்க வேண்டிய பொறுப்பு. Msc Bed படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் மார்த்தாண்டத்திலேயே கவர்மெண்ட் ஸ்கூல்ல வேலை கிடைக்குமான்னு முயற்சி பண்ணேன்.  ஏதாவது கிராமத்து ஸ்கூல்ல ரெண்டு வருஷம் வேலை பார்த்துட்டு வந்தா தான், சொந்த ஊர்ல கிடைக்கும்னு போர்டுல சொல்லிட்டாங்க. அதான் வந்தேன்... சிரித்தபடியே சொன்னான். 
 
நிமிஷத்துக்கு இரண்டு முறை சிரிக்கிறான், அதுவும் வசீகரமாக சிரிக்கிறான். 
 
கருப்பனுக்கு  அவனைப் பார்த்ததுமே பிடித்துப் போனது.
 
"இந்த சின்ன வயசுல குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்புகள் இருந்துச்சுன்னா, நாம நெனச்சபடி இருக்க முடியாது. பொறுப்பு தான் ஒருத்தனுக்கு வாழ்க்கையை கற்றுக் கொடுக்கக் கூடிய விஷயம். நீங்களும் என் பேத்தி அகல்யா மாதிரி தான் போலிருக்கு. ரொம்ப சந்தோஷம் தம்பி. நீங்க எல்லாத்தையும் அரேஞ்ச் பண்ணுங்க. நான் அப்புறமா வந்து பார்க்கிறேன்..", என்று சொல்லிவிட்டு கருப்பன் நகர்ந்தார்.
 
தாமஸ் வீட்டின் பின்பக்க கதவை திறந்து எட்டிப் பார்த்தான். நிறையவே இடம் இருந்தது. சமீபத்தில் தான் சுத்தப்படுத்தி இருப்பது நன்றாகவே தெரிந்தது. பின்பக்கம் இருந்த வேப்ப மரமும், முருங்கை மரமும், செம்பருத்தி செடியும் நிழலையும் காற்றையும் கொடுத்தது.
 
திரும்பி உள்ளே வந்தவன், ஒவ்வொரு ரூமாக நுழைந்து ஜன்னல்களையும் கதவையும் திறந்து வைத்தான். கடைசி ரூமுக்குள் நுழைந்து பார்த்தான். ஈரமாக இருக்கும் அறையில் இருக்கும் ஒரு பிரத்யோக வாசனை, ஈரம்மில்லாத அந்த அறையிலும் அடித்தது.
 
பழைய மர சாமான்கள், நாற்காலிகள் ஒன்றிரண்டு கிடந்தது. ஜன்னலை திறந்து வைத்தான். மரங்கள் காரணமாக ரூம் அரை இருட்டில் இருந்தது.  சுவரோரமாக இருந்த சுவிட்சை போட்டான். லைட் எரியவில்லை. 
 
கரண்ட் இல்லையா?
 
திரும்பி வெளியே நடக்கப் போனவன், அப்படியே நின்றான்.
 
பின்னால் யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போல் ஒரு குறுகுறுப்பு.
 
யாரோ அல்லது எதுவோ...
 
மார்புக்குள் பொத்தி வைக்கப்பட்ட இதயம் துடிதுடிப்பாக இயங்கியது.
 
அவன் மயிர் கால்கள் பயத்தில் சிலிர்த்தன.

 

தொடரும்

 

உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது.

 

https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/

 


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 21
 
சித்ரா கிளாசுக்கு போகாமல், காலேஜ் கேம்பஸ்குள்ளயே கேண்டினில் இருந்தாள். காலையில் பஸ்சை மிஸ் பண்ணியதால் வருவதற்கும் லேட் ஆகிவிட்டது. சரியாக வந்திருந்தால் கூட அவளுக்கு கிளாசுக்கு போவதற்கு மனசில்லை.
 
ஃபர்ஸ்ட் ஹவர் நடந்து கொண்டிருப்பதால், கேண்டினில் அவ்வளவாக கூட்டமில்லை.
 
அரவிந்த் மொபைல் மூன்று நாட்களாக சுவிட்ச் ஆப் என்று வருகிறது.  கடைக்கு போன் செய்தால் வேறு யாரோ எடுக்கிறார்கள்.
 
ஒருவேளை அன்றைக்கு பஸ் ஸ்டாப் இளைஞன் சொன்னது உண்மையா? அரவிந்தை பார்த்தால், அப்படி நடக்கக் கூடியவன் போல் தெரியவில்லை.
 
அன்றைக்கு அவன் சொன்னது மறுபடியும் மனதிற்குள் டெலிகாஸ்ட் ஆனது.
 
"சிஸ்டர் என் பேரு, ஊரு இதெல்லாம் உங்களுக்கு தேவையில்லை. உயிருள்ள மொட்டை கடுதாசின்னு நினைச்சுக்குங்க. ஆனா உங்களுக்கு நல்லது செய்ற மொட்டை கடுதாசி. அரவிந்த் எனக்கு நல்ல பழக்கம். ராஜேஷ் தியேட்டர் முன்னால ஒரு நாள் பைக்ல, உங்களையும் அவனையும் பார்த்தேன். நல்ல குடும்பத்து பொண்ணு மாதிரி தெரிஞ்சது. அன்னையிலிருந்து உங்களை எப்படியாவது கண்டுபிடித்து எச்சரிக்கனும்னு முயற்சி பண்ணினேன். சமீபத்தில் தான் நீங்க இந்த காலேஜ்ன்னு தெரியும்.
 
எப்படி கண்டுபிடிச்சேன், என்ன ஏதுன்னு கேட்காதீங்க. அரவிந்த் நல்லவன் இல்லை. உங்கள மாதிரி நிறைய பொண்ணுங்களோட அவனுக்கு பழக்கம் இருக்கு. அவன பொருத்தவரைக்கும் விதவிதமா பொண்ணுங்க கூட பழகணும். ஜாலியா இருக்கணும். நிச்சயமாக உங்களை கல்யாணம் பண்ணிக்க மாட்டான். எனக்கு நல்லா தெரியும். நான் கண்கூடாக பார்த்துருக்கேன். அதனால அவன் கிட்டருந்து விலகிக்கிறது தான் உங்களுக்கு நல்லது.."
 
சித்ரா சந்தேகமாக, குழப்பமாக, "உங்களுக்கு என்ன அவ்வளவு?......."
 
அவன்: அக்கறைன்னு கேக்குறீங்களா? தேவையில்ல தான்.  உங்கள முதல் தரம் பார்க்கும்போது என் தங்கச்சி மாதிரி தெரிஞ்சது.  அதே முகவெட்டு. அதனால் தான் வந்து சொன்னேன். கேட்பதும் கேட்காததும் உங்க விருப்பம். Good bye.
 
அவன் கண்கள் லேசாக கலங்க, மேற்கொண்டு எதுவும் பேசாமல், பஸ் ஸ்டாண்ட் நோக்கி செல்லும் சாலையில் நடந்தான். கொஞ்ச தூரம் சென்றதும் திரும்பிப் பார்த்தான். சித்ரா அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
கேண்டின் டேபிள் மேல் தலை சாய்த்து அப்படியே படுத்தாள்.  அவனைப் பார்த்தால் சும்மா கோள் இழக்கிவிட்டு, ஆட்டையை கலைக்கும் கூட்டத்தை சேர்ந்தவன் போல் தெரியவில்லை. அவன் பேச்சில், கண்களில் உண்மை தெரிந்தது.
 
அவனை சந்திப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னால் தான், சித்ராவும் அரவிந்தும் திருப்பரப்பு ஃபால்ஸ்க்கு சென்று இருந்தார்கள். லாட்ஜில் முதல் இரவு சம்பவம் நிறைவேறி இருந்தது. இதற்காகவா என்னுடன் பழகினான்? ஒரு முறை சம்பவம் நிறைவேறிய பிறகு ஏன் போனை எடுக்க மாட்டேங்கிறான். ஒரு தடவையே முடிந்து போகிற விஷயமா இது?? அவன் கண்களில் தெரிந்தது காதல் இல்லையா, வெறும் பாலியல் ஈர்ப்பு தானா?
 
இன்னமும் அந்த இளைஞன் சொன்னது பொய்யாக இருக்க கூடாதா என்று தான், அவள் நினைத்துக் கொண்டிருந்தாள்.
 
ஆனால் எல்லோரும் சொல்வது போல்,
 
விதி தான் வலியது ஆயிற்றே!!!
 
அதே நேரம்,
 
ரூமுக்குள் நின்றிருந்த தாமஸ் திரும்பி பார்த்தான். ரூமுக்குள் யாருமே இல்லை என்பது தெளிவு. மிகத் தெளிவு.
 
பின்னர் எனக்கு ஏன் இந்த குறுகுறுப்பு?
 
ஜன்னலை நோக்கி சென்றான். ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். சுவர் ஓரமாக மரங்கள்.
 
பின்பக்க காம்பவுண்டின் ஒரு மூலையிலிருந்த குரோட்டன்ஸ் செடி பக்கத்தில் உற்று நோக்கினான். அங்கே என்னவோ அசைவு நிகழ்ந்த மாதிரி இருந்தது. ஏதோ வேகமாக கடந்து சென்றது போல்.... அசைவு.
 
மூலையில் கிடந்த ஏதோ கிழிந்த காகிதம் ஒரு முறை காற்றில் புரண்டது. 
 
வேப்ப மரத்தின் இலைகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தது.  வேப்ப மரத்தின் மேல் வெயில் பட்டு அதன் ஊடாக பாய்ந்த கதிர்கள், மண்ணில் நிழல்களை உற்பத்தி செய்திருந்தது. 
 
கிளைகளின் நிழல்கள் காற்றில் அசைந்திருக்கலாம். இப்போதும் அசைந்து கொண்டிருந்தது. அதை நான் தவறாக புரிந்து கொண்டிருக்கலாம்!
 
தாமஸ் சிரித்தபடி, திரும்பி ரூமை விட்டு வெளியே வந்தான். திருமுடி எல்லா பெட்டிகளையும், பேக்குகளையும் எடுத்து வைத்துவிட்டு,
 
"எல்லாத்தையும் எடுத்து வச்சுட்டேன். ஆட்டோக்காரன் 200 ரூபா கேட்டான்..."
 
தாமஸ் 500 ரூபாய் எடுத்துக் கொடுத்து,
"மீதியை வச்சுக்கோ" என்றான்.
 
திருமுடி தலையை சொரிந்தபடி, "என்ன சார் அவ்வளவுதானா?" என்றான்.
 
தாமஸ்: இன்னும் நான் ATMல்ல பணம் எடுக்கல. நாளைக்கு உனக்கு கண்டிப்பா தர்றேன்.
 
திருமுடி ஓகே சார் என்று மகிழ்ச்சியாக நகர்ந்தான். தாமஸ் பெட்டிக்குள் இருந்து, ஜார்ஜியார் படத்தையும், சந்தியாகப்பர் படத்தையும், எடுத்து ஹாலில் எங்கே மாட்டலாம் என்று பார்த்தான். ஏற்கனவே மேல் பக்க சுவரில் நடு நாயகமாக அடித்து வைக்கப்பட்ட ஆணிகள் இருந்தது. நல்லதா போச்சு என்று அதில் மாட்டினான்.
 
இதற்கிடையே,
 
ஜன்னல் பக்கமாக கீச் கீச் என்ற கீச்சொலியை கேட்டு தூங்கிக் கொண்டிருந்த கார்த்தி முழித்தாள்.
 
எழும்பி உட்கார்ந்து சோம்பல் முறித்தாள். இடுப்பு கடுப்பு இப்போது கொஞ்சம் பரவாயில்லை. ஜன்னல் பக்கமாக நின்றிருந்த அக்காகுருவி அவளை பார்த்து அதி உற்சாகமாக கத்தி கொண்டு இருந்தது.
 
கார்த்தி: நீ தான் என்னை எழுப்பி விட்டியா?
 
"கீச் கீச்’ என்று பதில் உரைத்தது.
 
உள்ளே வரட்டுமா என்று கேட்காமல், ரூமுக்குள் நுழைந்த குருவி இங்குமங்கும் பறந்தது. கார்த்திக்கு விளையாட்டு காட்டுவது போல், பறந்து கொண்டிருந்தது. 
 
எதிர்பாராமல் சுழன்று கொண்டிருந்த ஃபேனின் இறக்கையில் அடிபட்டு பொத்தென விழுந்தது.
 
ஐயோ!!!!! கார்த்திகா பதறிப்போனாள். 
 
ஓடிப்போய் அந்த அக்காகுருவியை தூக்கினாள். தலையை அசைத்தபடி நெளிந்து கொண்டிருந்தது. நடுநடுங்கிக் கொண்டிருந்த அந்தக் குருவியை பார்த்ததும், அவள் மனம் உருகியது. 
 
‘நல்ல வேளை, சாகவெல்லாம் இல்லை'
 
ஓடிக்கொண்டிருந்த ஃபேனை பார்த்து முறைத்தாள். குருவியை மெல்லமாக தடவி கொடுத்தாள். பின்னர் கட்டில் மேல் வைத்துவிட்டு,
 
அரங்கு வீட்டுக்குள் சென்றாள். 
 
ஐ ப்ரோ பென்சில், கிளிப் என்று பழைய பொருட்கள் போட்டு மூடி வைத்திருந்த கூடையை எடுத்து, அதில் இருந்த பொருட்களை இன்னொரு கூடைக்குள் கொட்டி விட்டு, ரூமுக்கு கொண்டு வந்தாள்.  குருவியை அதற்குள் வைத்து, மேலே இருந்த வயர் மூடியை கீழிறக்கி மூடினாள்.
 
சற்று முன்னால் சந்தோஷ கீச்சுகளை எழுப்பிக் கொண்டிருந்த குருவி, சத்தங்களை தொலைத்து விட்டு, தலையசைப்பையும் நிறுத்தி இருந்தது. 
 
பரிதாபமான நிலையிலிருக்கும் இந்தக் குருவி எப்படிப் பிழைக்கப் போகிறதோ?? கார்த்திகா மனதின் இளகிய பகுதிகள் ரொம்பவே வலித்தது.
 
பணம் கொடுத்து, ஆட்டோ காரனை வழி அனுப்பி விட்டு வந்த திருமுடி,
 
"போட்டோல யார் சார் இது? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு?", என்று கேட்க,
 
தாமஸ்:  ஒருத்தர் எங்க ஊரு பாதுகாவலர். இன்னொருத்தர் எங்க குடும்ப பாதுகாவலர். இங்கிலீஷ்ல சொல்றதா இருந்தா saint George அப்புறம் saint James. இந்துக்களுக்கு குலதெய்வம்ன்னு சொல்றது  மாதிரி, கிறிஸ்தவர்கள் பாதுகாவலர்கள்ன்னு சொல்லுவாங்க.
 
திருமுடி: சரி அதெல்லாம் இருக்கட்டும். புதுசா இப்பதான் வீட்டுக்கு குடி வந்துருக்கீங்க. புதுசா வேலையில வேற சேர்ந்துருக்கீங்க. என்ன நல்ல விஷயம் நடந்தாலும் பார்ட்டி வைக்கிறது தான் சம்பிரதாயம். பார்ட்டி எப்ப வைப்பீங்க?
 
தாமஸ்: பார்ட்டி ன்னா எப்படி? சரக்கு பார்ட்டியா?
 
திருமுடி, தமிழ் எழுத்து ஈ யே தேயும் அளவுக்கு இளித்தான்.
 
"ஆமா சார், நாங்க வேறன்ன கேட்க போறோம்?"
 
தாமஸ்: எனக்கு இந்த தம்மு, தண்ணி பழக்கம் இல்லை. குடிக்கிற மத்தவங்களையும் நான் ஆதரிக்கிறது இல்லை. பார்ட்டி வைக்கிற அபிப்ராயமும் இல்லை. வேணும்னா நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் பிரமாதமா சாப்பாடு வாங்கி தரேன். அதுவும் பார்ட்டி தானே.
 
திருமுடி யோசித்தான்.
 
'இது கூட ஓகே தான். ஏதாவது பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு கூட்டிட்டு போயி, இதுவரைக்கும் வாழ்க்கையில பாக்காத ஐட்டமா வாங்கி சாப்பிடரலாம்..'
 
அவன் யோசிப்பதை பார்த்து விட்டு,
தாமஸ், 
"அஞ்சு கிராமத்திலேயே நாகர்கோவில்லயோ பைவ் ஸ்டார் ஹோட்டல் கிடையாது, தெரியுமில்ல.."
 
திருமுடி m.v:  மைண்ட் வாய்ஸ்ல நினைச்சது இவருக்கு எப்படி தெரியும்?
 
தாமஸ் சிரித்தான்.
 
"மைண்ட் வாய்ஸ்ல நினைச்சது இவருக்கு எப்படி தெரியும்ன்னு யோசிக்கிறியா?"
 
திருமுடி அதிர்ந்தான்.
 
தாமஸ்: நான் என்ன சந்திரமுகி ரஜினிகாந்த்தா? சும்மா குத்துமதிப்பா சொன்னேன்.
 
திருமுடி: அதானே பார்த்தேன்.
 
தாமஸ்: கமிங் சண்டே போகலாம். இப்ப எனக்கு ஸ்கூலுக்கு போகணும். சாயங்காலம் ஃப்ரீயா இருந்தா வா. ஓகேவா?"
 
இருவரும் வீட்டை விட்டு வெளியே வந்தார்கள். கதவை  பூட்டப் போனவன்,
 
தாமஸ்: சார் கிட்ட சொல்லிட்டு போயிருவோம் என்றான்.
 
திருமுடி: சரிங்க சார்.. அப்ப நான் போயிட்டு அப்புறமா வரேன்... என்று விடைபெற்று கிளம்பினான்.
 
தாமஸ் செடி வேலியை கடந்து, மேட்டு வீட்டை நோக்கி நடந்தான். சிட் அவுட்டிலேயே கருப்பன் உட்கார்ந்து இருந்தார். தாமசை பார்த்ததும் சிரித்தார்.
 
தாமஸ்: சார், நான் கொண்டு வந்த பூட்டை போட்டுக்குவா?? நீங்க போட்டுருக்கிற பூட்டு, சாவி வேணுமா?
 
கருப்பன்: அதெல்லாம் வேண்டாம். நீங்களே வச்சுக்கங்க.
 
தாமஸ்: வீட்ல கரண்ட் வரல, யாரையாவது எலக்ட்ரீசியன கூட்டிட்டு வந்து செக் பண்ண சொல்லுங்க.
 
கருப்பன்: எலக்ட்ரீசியன் எதுக்கு? என் பேத்தி அகல்யாவே பாத்துருவா. அவள் வந்ததும் சொல்றேன். பனையூர் ஸ்கூலுல சொந்தக்கார  பையனை  சேர்த்து விடுறது சம்பந்தமா போய்ருக்கா... நீங்க வேலை பாக்குற ஸ்கூல் தான். பையன் உடம்பு சரியில்லாமல் படிப்பை பாதியில் விட்டுட்டான். இப்ப படிக்க ஆசைப்படறான். 
 
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, கூடையை தூக்கிக் கொண்டு வெளியே வந்த கார்த்தி, தாத்தாவை பார்த்து,
 
"தாத்தா,  ஃபேன்ல குருவி அடிபட்டு விழுந்துருச்சு. ரொம்ப பாவமா இருக்கு. சீக்கிரம் செத்துடும் போலிருக்கு", என்று அழும் குரலில் சொன்னாள்.
 
தாமஸ் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் ஒப்பாரி வைத்திருப்பாள்.  வெளிநபர் இருப்பதால் அழுகையை அடக்கிக் கொண்டாள்.
 
தாத்தா அவளைப் பார்த்து சிரித்து விட்டு, தாமசை பார்த்து, "இவ என் கடைசி பேத்தி. கார்த்திகா. இன்னைக்கு உடம்பு சரியில்லாமல் ஸ்கூலுக்கு போகல... காக்கா, குருவி, மைனா எதையுமே விடுவதில்லை. வெளியே ஒரு நாய் நிக்குதே இவளோட சிஷ்யன் தான் அது..."
 
கண்களில் நீர் தழும்ப நின்றிருந்த கார்த்திகாவை பார்த்ததும், தாமஸுக்கு மனசு கேட்கவில்லை.
 
"எங்க குருவியை காட்டு பாப்போம்.."
 
கார்த்திகா மூக்கை உறிஞ்சிய படி, கூடையைத் திறந்து, குருவியை காட்டினாள்.
 
கூடைக்குள் கையை விட்டு, ஜாக்கிரதையாக குருவியை தாமஸ் எடுத்தான்.
 
குருவியின் இறகுகளைப் பார்த்தே அது ஒரு பெண் குருவியென தெரிந்து கொண்டான். குருவி மயங்கி கிடந்தது. வயிற்றுப் பகுதியில், இறக்கைகளுக்கு கீழே அடிபட்டு இருந்தது. இப்படியே விட்டால் நிச்சயமாக தாங்காது என்று புரிந்து கொண்டான். கண்கள் கலங்கியபடி நிற்கும் கார்த்தியை ஏறிட்டு பார்த்தான்.
 
"கவலைப்படாதம்மா.. இன்னும் சாகல. மயங்கி கிடக்குது. காப்பாத்திடலாம். கொஞ்சம் மஞ்சளை தண்ணில கரைச்சு எடுத்துட்டு வா.."
 
கார்த்திகா குடுகுடுவென்று உள்ளே ஓடினாள். அடுத்த இரண்டாவது நிமிடத்தில், ஒரு சின்ன தட்டில் மஞ்சளை கரைத்து எடுத்து வந்தாள். தாமஸ் அதை வாங்கி அடிபட்ட இடத்தில் தடவி விட்டான்.
 
பின்னர் குருவியை கூடையில் விட்டு கூடையை அவளிடம் கொடுத்தான்.
 
"கொஞ்ச நேரம் கழிச்சு ஒரு கொட்டாங்குச்சியில் சோறு நல்லா மசிச்சு உள்ள வை. சாப்பிடட்டும். அடி கொஞ்சம் பலம் தான். சரியாவதற்கு நாளாகும். சாயங்காலம் வந்து பார்க்கிறேன். சரியா?"
 
சரி என்றாள்.
 
கார்த்தி: நீங்க வாத்தியாரா? டாக்டரா?
 
தாமஸ் சிரித்தபடி, 
"நானும் சின்ன வயசுல உன்னை மாதிரி தான். எங்க வீடே ஒரு பறவைகள் சரணாலயமா தான் இருந்துச்சு... குருவியை காப்பாத்திடலாம். சரியா?
கண்ணை தொடச்சிகிட்டு சிரி பார்ப்போம்.
 
கார்த்தி கண்ணை துடைத்துவிட்டு மெலிதாக
சிரித்தாள்.
 
தாமஸ்: good girl... என்று அவள் கன்னத்தில் தட்டி விட்டு, பெரிய கருப்பனை பார்த்து, 
 
"ஸ்கூலுக்கு போகணும் வரேன் சார்", என்று சொல்லிவிட்டு, காவண வீட்டை நோக்கி சென்றான்.
 
கார்த்தி கண்களில் மத்தாப்பு மின்ன அவனை பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னர் தாத்தாவை பார்த்து,
 
"தாத்தா காவண வீட்டை வாடகைக்கு விட்டது  முதலில் புடிக்கல.. ஆனா இப்ப புடிச்சிருக்கு...", என்றாள்.
 
பெரிய கருப்பன் அவள் சொன்னதை புரிந்து கொண்டு: நான் சொன்னா எப்பவுமே சரியா இருக்கும்... என்றார் பெருமித குரலில்
 
காவண வீட்டின் கதவை பூட்டிவிட்டு தாமஸ் கிளம்பினான்.
 
அவன் கேட்டருகே சென்றதும்,
 
வீட்டுக்குள் தட்டார் தட்டார் என்று பெருஞ் சத்தம்.
 
கேட்டருகே சென்றவன் நின்றான்.
 
என்னடா சத்தம் இது???
 
அதுவும் ஆள் இல்லாத வீட்டுக்குள்...
 
வீட்டின் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். ஹாலுக்கு சென்றவன் சுற்றிலும் பார்க்க,
 
திடுக்கிட்டான்.
 
சுவரில் மாட்டி வைத்திருந்த இரண்டு பாதுகாவலர்களின் போட்டோக்களும், 
 
சொல்லி வைத்தது போல் கீழே விழுந்து,
 
கண்ணாடி சில்லு சில்லாக  நொறுங்கி இருந்தது.
 
தொடரும்
 
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 22
 
மெயின் ரோட்டில் இருந்த ஜோசப் டீக்கடையை நோக்கி திருமுடி சென்றான். வெயில் டீக்கடையை ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருக்க, டீக்கடை பெஞ்சில் வழக்கமாக தென்படும் அமிர்தம், செல்லப்பா, மற்றும் பெரியவர் தங்கதுரையும் இருந்தார்கள்.
 
எதிர் பெஞ்சில் பேப்பர் படித்துக் கொண்டிருப்பது யாரென்று பார்த்தான்.
 
அட நம்ம சித்தப்பு சகாயராஜ்!!
 
திருமுடி நேராக, சகாயராஜ் பக்கத்தில் இடிப்பது போல் உட்கார்ந்தான். சகாயராஜ் அவனை அரை கண்ணால் பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் அமர்ந்திருந்தார். திருமுடி கால் மேல் கால் போட்டான். பாக்கெட்ல இருந்து சிகரெட்டை எடுத்து பத்த வைத்தான். குப்பு குப் பென்று சகாயராஜ் முன்னாலே வளையம் வளையமாக புகை விட்டான்.
 
அவன் சேட்டையை பார்த்ததும், அமிர்தமும் செல்லப்பாவும்  திகைத்து போனார்கள்.
 
சகாயராஜ் எதுவும் பேசாமல் சற்று தள்ளி உட்கார்ந்தார்.
 
செல்லப்பா: என்னல... உங்க சித்தப்பா முன்னால அப்படியே பம்முவ... இன்னைக்கு என்னடான்னா திமிரா கால் மேல கால் போட்டு சிகரெட் அடிக்கிற? குடிச்சிருக்கியாலே?
 
திருமுடி வாயில் வைத்த சிகரெட்டை எடுக்காமல்: நீங்க கேக்குறீங்களே? சித்தப்பூவை கேட்க சொல்லுங்க பாப்போம்.. என்றான்.
 
அமிர்தம்: அதானே... என்ன சகாயம், வழக்கமா திருமுடி ஏதாவது தப்பு பண்ணா கண்டிப்ப.... இப்ப கண்டுக்காம இருக்கிற?
 
சகாயராஜ் திருமுடியை அடி கண்ணால் பார்த்துவிட்டு, அமிர்தத்தை நோக்கி, "தலைக்கு மேல் வளர்ந்த புள்ளையை என்னத்த கண்டிகிறது??", என்று பேப்பரை மடக்கி வைத்தான்.
 
சந்தன மேரி விஷயம் திருமுடிக்கு தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் சகாயராஜ்க்கு...
 
ஊரில் இதற்கு முன்னால், கவுண்டமணி மாதிரி சகாயராஜ் திட்டுவதும்.. செந்தில் மாதிரி திருமுடி பம்முவதும் தான் நடக்கும் காட்சிகள். இன்னைக்கு தலைகீழாக மாறிவிட்டதே என்று அமிர்தமும், செல்லப்பாவும் புரியாமல் பார்த்தார்கள்.
 
அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்த டீக்கடைக்காரர் ஜோசப்பை பார்த்து,
திருமுடி:  என்ன மேன் வாய பார்த்துட்டு இருக்க??? கிளாசை நல்லா கழுவிட்டு, ஸ்பெஷல் டீ ஒண்ணு போடு.... என்றான் தெனாவட்டாக.
 
ஜோசப்: ம்ம்ம்ம்ம்.... முதல்ல பழைய பாக்கிய செட்டில் பண்ணுல.
 
திருமுடி தெனாவட்டாக: How much man?
 
ஜோசப்: மூணு மாச பாக்கி. 400 ரூபாயை நெருங்கிடுச்சு.
 
திருமுடி:  சில்லி பெல்லோ.... என்று இளக்காரமாக சிரித்துவிட்டு, " சித்தப்பு, ஒரு 400 ரூபீஸ் இவன் மூஞ்சில விட்டெரி", என்று சகாயராஜை பார்க்காமல் அசால்டாக சொன்னான்.
 
சகாயராஜ் திருமுடியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பாக்கெட்டில் இருந்து 500 ரூபாய் எடுத்து ஜோசப்பிடம் கொடுத்துவிட்டு, எதுவும் பேசாமல் நடையை கட்டினான்.
 
ஜோசப் மீதி 100 ரூபாய் எடுத்து நீட்ட... 
 
"அண்ணே, மீதி வாங்கிட்டு போங்க.."
 
திருமுடி, "மீதி டிப்ஸ்... நீயே வச்சுக்க...."
 
என்று சொல்லிவிட்டு, 
"சந்தன காற்றே.. செந்தமிழ் ஊற்றே" என்ற பாட்டு பாடியபடியே எழும்பி நடந்து, மறுபக்கமாக சென்றான்.
 
எச்சில் சோத்துக்கு காக்காயை விரட்டாதவன், 500 ரூபாயை இந்த வெட்டிப் பயலுக்காக எடுத்து நீட்டுகிறானே!!! பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் வாயடைத்து போனார்கள்.
 
அதே நேரம்,
 
பாதுகாவலர்களின் போட்டோக்கள் கீழே விழுந்து உடைந்து கிடப்பதை பார்த்ததும், என்ன நினைப்பதென்று தாமசுக்கு தெரியவில்லை. 
 
Patron saints படங்கள் கீழே விழுந்து உடைவது துர் சகுனம் என்று நினைக்கலாம். பாதுகாவலர்களுக்கே பாதுகாப்பு இல்லையா என்றும் நினைக்கலாம். என்னவென்று நினைத்துக் கொள்வது?
 
ஒருவேளை எல்லாரும் சொல்வது போல்...
 
Does it mean Kaavana veedu is  haunted???
 
அந்த எண்ணத்தை உடனே சுத்தமாக துடைத்தெறிந்தான்.
வாய்ப்பே இல்லை. எழுத்தாளர் Dean koontz சொன்ன விஷயம் தான் அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது.
 
"Houses are not haunted. We are haunted, and regardless of the architecture with which we surround ourselves, our ghosts stay with us until we ourselves are ghosts."
 
கரெக்ட் தானே... வீடுகளுக்கு பேய் பிடிப்பதில்லை... அதில் வசிக்கும் மனிதர்களுக்கு தான் பேய் பிடிக்கிறது.
 
போட்டோ மாட்டி வைத்திருந்த ஆணியை ஆராய்ந்தான். ஆணிகளும் கழண்டு கீழே விழுந்திருந்தன. 
 
Shit!! யாரோ எப்பவோ அடித்து வைத்து ஆணி,  லூசா இருக்கா என்று பார்க்காமல் போட்டோவை மாட்டி வைத்தது என்னுடைய தவறு.  போட்டோக்களின் கண்ணாடி பிரேம்கள் உடைந்திருந்தன. பிரேம் மாற்றி மறுபடியும் மாட்ட வேண்டும். பாதுகாவலர்களின் போட்டோக்களை சுவரோரமாக கீழே சாத்தி வைத்துவிட்டு, வீட்டை விட்டு வெளியே வந்து, கதவை பூட்டிவிட்டு,
ரோட்டில் நிறுத்தி வைத்திருந்த பைக்கருகே வந்து, 
ஸ்டார்ட் செய்து,
வீட்டை ஒரு முறை பார்த்து,
பெருமூச்சு விட்டு,
கிளம்பினான்.
 
கீழ வீதியின் வேப்பமரத்தடியில் இருந்த சடைசாமி, தாமஸ் போவதை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டிருந்தான்.
 
ரஸ்தா காடு 
பஸ் ஸ்டாப் அதே நேரம்
 
எம்எல்ஏவின் தொகுதி நிதியில் கட்டப்பட்ட பஸ் ஸ்டாப் முன்னால், பஸ்க்காக ஒரு சிறிய கூட்டம். சற்று நேரத்தில், அவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த மினி பஸ் புகையை கக்கியபடி வந்து, ரிவர்ஸ் எடுத்து திரும்பி நின்றது. ரஸ்தா காட்டில் இறங்க வேண்டியவர்கள் இறங்கினார்கள்.
 
பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த நீல கலர் பாவாடை மற்றும் இளஞ்சிவப்பு ரிப்பன் கட்டியிருந்த மாணவிகள். பஸ்ஸைப் பார்த்ததும் தேனீக்களைப் போல பஸ்ஸை மொய்த்தார்கள். பின்பக்கமாக ஏறிய இரண்டு மாணவர்களில் ஒருவன் நைசாக உள்ளே நகர்ந்து, மாணவிகள் அருகில் வர, " பக்கத்துல வர்றாண்டி உன் ஆளு'' என ஒரு மாணவி உதடு அசையாமல் பக்கத்தில் இருந்த மற்றொரு மாணவிக்கு கேட்குமாறு வாய்க்குள் பேசினாள்.  அவர்கள் பக்கத்தில், சீட்டில் அமர்ந்திருந்த பெருசு ஒருவர் நடப்பதை கண்டும் காணாமலும் பார்த்துக் கொண்டிருக்க, அதைப் பார்த்த மாணவி நெருங்கி வந்த மாணவனிடம் கண் ஜாடை காட்டினாள். நல்ல பிள்ளையாகப் பின்பக்கமாகவே நகர்ந்து சென்றான் அவன்.
 
பஸ் ஸ்டாப்பில் முகம் நிறைய சுருக்கங்களுடன், ஜாக்கெட் போடாத எழுபது வயதைத் தொட்ட ஆச்சி, கண்டக்டரை பார்த்து,
"ஏன்யா ராசா... அஞ்சுகிராமம் ஆஸ்பத்திரில பஸ் நிப்பாட்டுவியளா?" 
 
கண்டக்டர்: ''ம்...ம்... ஏறு''
 
வாய் நிறைய சிரிப்புடன், உயரமான படிக்கட்டில் ஏற முடியாமல், தவழ்ந்து முக்கி ஏறி "ஆத்தா" என சீட்டில் உட்காந்தார் ஆச்சி. 
 
அனைவரும் ஏறியதும் பஸ் நகர்ந்தது.   பஸ் ரஸ்தா காடு விலக்கை நோக்கி புழுதியை கிளப்பி விட்டு கிளம்பிய அடுத்த நிமிடம், நான்கைந்து பெண்களும், கொஞ்சம் இளைஞர்களும்  மூச்சிரைக்க ஓடிவந்து பஸ் ஸ்டாப்பில் நின்றார்கள். அனைவரின் முகத்திலும் அதீத பதட்டம். ராஜாமணி அக்கா கையில், அவளின் இரண்டரை வயது குழந்தை புரியாமல் முழித்துக் கொண்டிருந்தது. 
 
அய்யய்யோ என்று கதறி கொண்டிருந்தாள். அம்மா அழுவதை பார்த்ததும், குழந்தை சிரிப்பதை நிறுத்தி என்னவென்று புரியாமல் முழித்துக் கொண்டிருந்தது.
 
ஓடி வந்த பெண்களில் ஒருத்தி டீக்கடையை பார்த்து,
 
"வேலன் பஸ் போயிருச்சா?", கத்தினாள்.
 
"இப்பதானே போச்சு... ஏம்மோ என்னாச்சு?"
 
அவர்கள் அழுகுரலையும், பதட்டத்தையும் பார்த்து.. டீக்கடையில் இருந்த அமிர்தமும் செல்லப்பாவும் இன்னும் ஒரு சில பேரும், பஸ்ஸிலிருந்து இறங்கிய  கூட்டமும்  அவர்களை சூழ்ந்தார்கள்.
 
ராஜாமணி: ஐயோ!!! நான் என்ன சொல்லுவேன். என் புள்ள சிலுவை மோதிரத்தை முழுங்கிருச்சு.
 
எப்படி ஆச்சு? என்ன நடந்துச்சு?
என்ற குரல்கள்.
 
ராஜாமணி: பிள்ளையை நடு வீட்ல விட்டுட்டு, சமய கட்டுல வேலைய பாத்துட்டு இருந்தேன். இருந்தாலும்,  கவனிச்சுக்கிட்டு தான் இருந்தேன். திடீர்னு  பாப்பா கையில எதையோ எடுத்து வாய்க்குள்ள போட்டான். என்னன்னு ஓடிப்போய் தடுக்கிறதுக்குள்ள போட்டுட்டான். சிலுவை மோதிரம். விரலை விட்டு எடுக்குறதுக்குள்ள மோதிரத்தை முழுங்கிட்டான்.  எவ்வளவோ முயற்சி பண்ணினேன். வரலை. அப்புறம் வாழைப்பழம் கொடுத்தேன். வெறும் சோறு ஒரு கவளம் கொடுத்தேன். அப்புறம் புள்ளைய தூக்கிட்டு ஓடி வந்தோம்.
 
அழுகைக்கு இடையே பேசினாள்.
 
அவள் குழந்தை எதுவும் தெரியாமல் மலங்க மலங்க முழித்து கொண்டிருந்தது.
 
செல்லப்பா: அய்யய்யோ!!! மோதிரதுக்கு முன்னால சிலுவை பதிச்சிருக்குமே, அந்த மாதிரி மோதிரம் தானே?
 
ராஜாமணி அழுது கதறி கொண்டே... ஆமா என்று தலையாட்ட,
 
அமிர்தம் பதட்ட குரலில்: அந்த மோதிரம், முள்ளு மாதிரி மூணு பக்கமும் கூர்மையா இருக்குமே, தொண்டையை கிழிச்சாலும் கிழிச்சுருமே... என்றான்.
 
சுத்தியிருந்த கூட்டத்தினர் பரிதாபமாக உச்சி கொட்டினார்கள். குழந்தையின் பால் வடியும் முகத்தை பார்த்ததும், மேலும் பரிதாபம் அதிகமாகியது.
 
"புள்ள நல்லா தானே இருக்கான். ஒண்ணும் ஆகலையே... மோதிரத்தை முழுங்கிருப்பான்."
 
"ஆமா, வயித்துக்குள்ள போய்ருக்கும்."
 
"வயித்துக்குள்ள போனாலும் வயித்த கிழிச்சுருமே.."
 
"குழந்தை காலை பிடிச்சி தூக்கி, தலை கீழ தொங்கவிட்டு- முதுகுல தட்டி பார்க்கலாம்.."
 
"நீ வேற... வேணாம், சொல்ல முடியாது. தொண்டையில்  சிக்கிக்கிச்சுன்னா மூச்சு திணறி, ஏதாவது கெடுதியாயிரும். ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போறது தான் சரி."
 
"ஆமாமா... ஹாஸ்பிடலுக்கு எடுத்துட்டு போறது தான் கரெக்ட்..."
 
"எக்ஸ்ரே எடுத்து பார்த்து, தேவைன்னா ஆப்ரேஷன் பண்ணி எடுத்துடுவாங்க.."
 
"நம்ம ஊர் ஆஸ்பத்திரியில் அந்த வசதி கிடையாது. நாகர்கோவில் கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போ..."
 
"பஸ் போயிருச்சே, என்ன பண்றது?"
 
"நம்ம கென்னடி டிரக்கர் வச்சிருக்கான்ல. அவனை போன் பண்ணி கூப்பிடுறேன். பணம் கூட அப்புறம் கொடுத்துக்கலாம்."
 
எல்லோரும் பேசி பேசி ஒரு முடிவுக்கு வந்தார்கள். அமிர்தம் கென்னடிக்கு போன் பண்ணினான். குழந்தை அனைவரையும் மாத்தி மாத்தி பயத்துடன் பார்த்து, அழுவதற்கு தயாராகிக் கொண்டிருந்தது.
 
தடதடவென்று ஒரு பைக் கூட்டத்தின் அருகே ரோட்டில் வந்து நிற்க... அனைவரும் ஒரு சேர திரும்பி பார்த்தார்கள்.
 
நீளமான கோடுகள் போட்ட மெரூன் முழுக்கை சட்டையை கருப்பு பேண்டுக்குள் கைது செய்து, பெல்டால் விலங்கிட்டு, பைக்கில் இருந்தான் தாமஸ்.
 
"என்னம்மா ஆச்சு? ஏன் பதட்டமா நிக்கிறீங்க?"
 
விஷயத்தை சொன்னார்கள்.
 
பைக்கில் இருந்து இறங்கி, குழந்தையை வாங்கி பார்த்தான்.
 
அழுவதற்கு தயாராகிக் கொண்டிருந்த குழந்தையை பார்த்து சிரித்தான். அவன் சிரிப்பை கன்னங்கள் அதிகமாக அறிவித்தது. குழந்தை முகம் நிர்மலமாக இருந்தது. வலியின் ரேகைகள் எதுவும் தெரியவில்லை. குறிப்பாக அழவில்லை.
 
குழந்தை நாடியை பிடித்து பார்த்தான்.
 
குழந்தை சீராக மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. நாடித்துடிப்பு சரியாக இருந்தது.
 
பின்னர்,
 
தாமஸ்: நீங்கதான் குழந்தையோட அம்மாவா? மோதிரத்தை முழுங்கி எவ்ளோ நேரம் ஆகியிருக்கும்
 
கண்ணீரை துடைத்தபடி ராஜாமணி,
 
"ஆமா, அரை மணிக்கூர் இருக்கும்", என்றாள்.
 
தாமஸ்: ஒண்ணும் பதட்டப்படாதீங்கமா. குழந்தை நல்லா தான் இருக்கு. தொண்டையில சிக்கல. சிக்கியிருந்தா இந்நேரம் மூச்சு விட சிரமப்பட்டுருக்கும். இன்னும் வேறு சிம்டம்ஸ் எல்லாம் தெரிந்திருக்கும். அனேகமா மோதிரத்தை முழுங்கிருக்கும்.  அதனால இப்போதைக்கு ஆபத்து இல்லை. நான் சொல்ற மாதிரி பண்ணுங்க. குழந்தையை மறுபடியும் வீட்டிற்கு எடுத்துட்டு போங்க. 
 
ஒரு காட்டு நெல்லி, மணத்தக்காளி கீரை ஒரு கைப்பிடி, எடுத்து அரைச்சு தேன் கலந்து ரெண்டு ஸ்பூன் குழந்தைக்கு குடுங்க. 12 மணி நேரத்துக்குள்ள பேதி வழியா வெளியே வந்துரும். வரலன்னா இன்னொரு தடவை குடுங்க.
 
ராஜாமணி மற்றவர்களும் இவன் சொல்வதைக் கேட்கலாமா வேண்டாமா, என்று முழித்துக் கொண்டிருக்க,
 
தாமஸ்: என்ன பாக்குறீங்க? ஒரு தடவை இந்த மாதிரி பிரச்சனை வந்தப்ப, அதாவது மார்த்தாண்டத்தில் எங்க வீட்டு பக்கத்துல இருந்த குழந்தை, அஞ்சு ரூபா காயினை முழுங்கிருச்சு. எங்க அம்மா சொன்ன வைத்தியம். அடுத்த நாளே மலத்துல அந்த குழந்தை முழுங்குன அஞ்சு ரூபா காயின் வந்துடுச்சு. கண்டிப்பா ஒர்க் அவுட் ஆகும். மணத்தக்காளி கீரை வயித்துல புண்ணு ஏற்பட்டுச்சுன்னா கூட ஆத்திரும். நம்பி பண்ணுங்க.
 
அமிர்தம் தயங்கியபடி, 
"தம்பி, ஒருவேளை நீங்க சொல்றபடி நடக்கலன்னா பிரச்சனை தானே.. எதுக்கும் ஹாஸ்பிடல் கொண்டுட்டு போயிரோமே.."
 
தாமஸ் சிரித்தான்: உங்க விருப்பம்... ஹாஸ்பிடல் தூக்கிட்டு போனீங்கன்னா அட்மிஷன் போட்டு, எல்லா டெஸ்டையும் எடுத்து ஒரு நாளோ, ரெண்டு நாளோ கழிச்சு தான் ஆபரேஷன் பண்ணுவாங்க.  எக்ஸ்ரே எடுக்கிறேன், அதை எடுக்கிறேன், இதை எடுக்கிறேன், endoscopy பண்றேன்னு தொண்டையையும் வயித்தையும் புண்ணாக்கிருவாங்க. சிம்பிளா முடிய வேண்டிய விஷயம் இது. உங்களுக்கு மனதிருப்திக்காக வேணும்னா,  நீங்க தாராளமா குழந்தையை ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போங்க... ஆனா அதுக்கு முன்னால, இந்த சின்ன விஷயத்தை மட்டும் பண்ணிட்டு தூக்கிட்டு போங்க. ஹாஸ்பிடல்ல இருக்கும் போது குழந்தை பேதி போறத செக் பண்ணிட்டே இருங்க.... நான் சொல்றேன் பாருங்க, ஆப்ரேஷன் பண்ண வேண்டிய அவசியமே இருக்காது...
 
என்று சொல்லிவிட்டு பைக் கிக்கரை உதைத்தான். வரேன் என்று தலையாட்டி விட்டு பைக்கில் கிளம்பினான்.
 
கூட்டத்தில் நின்றவர்கள்," யார் இவர், ஊருக்கு புதுசா இருக்காரே?"
 
செல்லப்பா: நம்ம திருமுடி  தான் கூட்டிட்டு வந்தான். பனையூர் ஸ்கூலுக்கு புதுசா வந்திருக்க வாத்தியாரு. காவண வீட்டுக்கு வாடகைக்கு வந்துருக்கிறார்.
 
காவண வீடா என்ற அனைவரும் வாயை பிளக்க... கூட்டத்தின் நடுவே நின்றிருந்த அகல்யா  வெளிப்பட்டு போக்கஸ் ஆனாள்.
 
ராஜாமணி: காவண வீட்டுக்கே தைரியமா வந்துருக்காருன்னா அப்ப  விவரமானவராத்தான் இருப்பார். எதுக்கும் அவர் சொன்ன கசாயத்தை கொடுத்துட்டு அதுக்கப்புறம் ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போறேன்.
 
செல்லப்பா அகல்யாவை பார்த்து: ஓ!!! நீயும் இங்க தான் இருக்கியாமா!! பதட்டத்தில் கவனிக்கல.
 
அவன் பேசியதையே அகல்யா கவனிக்காமல், பைக்கில் போய்க் கொண்டிருந்த தாமசை பார்த்துக் கொண்டிருந்தாள். 
 
தாமஸ் பேச்சிலிருந்த நட்பு,  நாசூக்கு, நாகரீகம், கண்களில் வெளிப்பட்ட கூடுதல் பிரகாசம் அவளுக்கு பிடித்திருந்தது..
 
தொடரும்
 
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 
 
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு  23
 
மேட்டு வீடு
இரவு 7 மணி
 
Focus ஸில்,
 
பாத்திரத்தில் தேநீருக்காக வைக்கப்பட்டிருந்த நீர் கொதித்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஏலக்காய், இஞ்சி எல்லாம் ஸ்பெஷல் மசாலா டீக்காக காத்திருந்தது.
 
Tilt up to reveal...
 
கிச்சனில் சித்ரா ஸ்டவ் அருகே ஏதோ யோசனையாய் நின்றிருந்தாள். அவள் முகத்தில் கவலை ரேகைகள்.
 
ஓவர்லாப்பில் பேச்சுக் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் அவள் யோசனையை அது பாதிக்கவில்லை.
 
பயாஸ்கோப்பில் வரும் ஸ்லைடுகள் போல்,
 
அரவிந்தின் சிரிப்பு,
இருவரும் ஒருவரை ஒருவர் காதலுடன் பார்த்துக் கொள்வது,  ஆளில்லாத பிரதேசத்தில் அவனை இருக்கக் கட்டிக்கொண்டு பைக்கில் போவது, நீர்வீழ்ச்சியில் இருவரும் நனைந்தபடி உற்சாக கூச்சலிட்டது...
 
என காட்சிகள் மின்னலடித்தது போல் வந்து வந்து மறைந்தது.
 
சித்ராவின் கண்கள் கலங்க....
 
Scene Dissolve...
 
சித்ராவை தவிர மீதி எல்லோரும் சிட் அவுட்டில் இருந்தார்கள். பெரிய கருப்பன் அவருடைய வழக்கமான பிரம்பு சேரில் உட்கார்ந்திருக்க, அவருக்கு எதிரே சேரில் தாமஸ் அமர்ந்திருந்தான். அகல்யாவும், கார்த்தியும்  பக்கவாட்டு தடுப்பு சுவரில் சாய்ந்து நின்றிருந்தார்கள்.
 
காம்பவுண்ட் வழியாக வெளியே எட்டிப் பார்த்த மல்லிக்கொடி மேட்டு தெருவில் மல்லிகை பூக்களை சிதறி விட்டிருந்தது. தோட்டத்தில் நந்தியாவட்டையின் வாசம் தவழ்ந்தது. இருட்டுக்குள்ளும் வாடாமல்லி வனப்புடன் தெரிந்தது.
 
சுற்றிலும் ஒரு முறை பார்த்த தாமஸ், நட்பு புன்னகையை முகத்தில் தீற்றிக்கொண்டு: உங்களுக்கு தோட்டம்னா புடிக்குமா?.. அதனால்தான் தோட்டத்துக்கு இவ்வளவு இடம் ஒதுக்கிருக்கீங்கங்களா?.. என்றான்
 
கருப்பன்: சேச்சே!!! நான் பண்ணல. இந்த இடமெல்லாம் சும்மாதான் கிடந்துச்சு. எல்லாம் அகல் பாப்பா கைங்கரியம்.
 
தாமஸ்: ஓஹோ அகல் பாப்பாவா!!! என்று அவளை சிரித்தபடி திரும்பிப் பார்க்க, அவன் மறுமொழியில் இருந்த கேலியை புரிந்து கொண்டு,
 
அகல் பாப்பா அடக்கமாக புன்னகைத்தாள்.
 
அகல்யா மற்றும் கார்த்தியின் ஆரம்ப தயக்கத்தை, தாமஸ் அவனுடைய சகஜமான பேச்சால் தகர்த்திருந்தான்.
 
கருப்பன்: தம்பிக்கு சித்த மருத்துவத்துல ஒரு இன்ட்ரஸ்ட் இருக்கு போல... காலைல குருவிக்கு மருந்து போட்டீங்க. மத்தியானம் குழந்தைக்கு மருந்து சொன்னீங்க.
 
தாமஸ்: அப்படில்லாம் இல்லைங்கயா.... எங்கம்மா மருந்து நிறைய சொல்லுவாங்க. அதை கேட்டு கேட்டு பழக்கம் ஆயிருச்சு.
 
கருப்பன்: ஓ!!! அப்படியா... பாத்திர பண்டம்ல்லாம் இப்பதான் எடுத்து வச்சிருப்பீங்க. அதனால இன்னைக்கு நைட்டு நம்ம வீட்லருந்தே சாப்பாடு கொடுத்து அனுப்புறேன். நீங்க கூச்சப்பட வேண்டாம். உங்க வீடு மாதிரி நினைச்சுகுங்க.
 
தாமஸ்: உங்களுக்கு எதுக்குங்கய்யா சிரமம்?
 
அகல்யா இடைமறித்து: இதுல என்ன சிரமம்? சித்து நாலு பேருக்கு வழக்கமா தோசை ஊத்துவா. இன்னிக்கி உங்களுக்கும் சேர்த்து ஊத்திட்டா போச்சு. 
 
தாமஸ் கார்த்தியை பார்த்து, "குருவி எப்படி இருக்கு?"
 
கார்த்தி சோகமாக,
"இன்னும் வலியோடு தான் கிடக்கு. பார்க்கவே பாவமா இருக்கு..."
 
தாமஸ்: ஒண்ணும் கவலைப்படாதே, சாப்பாடு மட்டும் வேளா வேளைக்கு வச்சுரு. அப்பப்போ புண்ணுக்கு மட்டும் மருந்து போடுறேன். தானாவே சரியாயிடும். மறுபடியும் சிறகடிச்சு பறக்குதா இல்லையான்னு மட்டும் பாரு. இன்னுமா சோகமா இருக்கே? காலையிலேயே உன்னை சிரிக்க சொன்னேனே. 
 
அகல்யா அவள் தோள் மேலே கை போட்டபடி,
"அதெல்லாம் எப்பவோ சிரிச்சிட்டா. குருவிய பத்தி கேட்டதும் மறுபடியும் மூடு அவுட் ஆயிட்டாப்ல."
 
சித்ரா ஒரு சிறிய தட்டில் டீ கப்புகளுடன் வீட்டுக்குள்ளே இருந்து வெளிப்பட்டாள்.
 
அகல்யா: இவதான் நடுவுல உள்ளவ. சித்ரா... நாகர்கோவில் வுமென்ஸ் காலேஜ்ல ஃபர்ஸ்ட் இயர் படிக்கிறா.
 
சித்ரா தட்டை நீட்ட, தாமஸ் "Hi சித்ரா" என்று சொல்லியப்படியே, காபியை எடுத்துக் கொண்டான்.
 
சித்ரா முகத்தில் ஒரு குறுகிய சிரிப்பை பரவ விட்டபடி, ஹாய் என்றாள்.
 
தாமஸ் ஒரு சிப் டீயை சாப்பிட்டு விட்டு,
 
"ம்ம்ம்ம்ம்ம்.... அட அட என்ன அற்புதமான டீ... இந்த மாதிரி ஒரு டீ என் வாழ்க்கையில் நான் சாப்பிட்டதே இல்லை... மசாலா டீயா?"
 
ஆமா என்று சொன்ன சித்ராவின் சிரிப்பு இப்போது அகலமாகியது.
 
கார்த்தி: சத்தியமா சொல்லுங்க. டீ உண்மையிலே நல்லாவா இருக்கு?
 
தாமஸ்: நெஜமா சூப்பரா இருக்கு. இந்த டீ மேலேயே சத்தியம் பண்ணவா?
 
அனைவரும் சிரித்தார்கள்.
 
கருப்பன்: நான் உங்ககிட்ட கேட்கணும்னு நெனச்சேன். ஊருக்குள்ள முனி நடமாட்ட பேச்சு... காவண வீட்டு பிரச்சனைகள் எல்லாம் கேள்விப்பட்டு இருப்பிங்க. உங்ககிட்ட நானே சொன்னேன். ஆனா எப்படி உங்களுக்கு இவ்வளவு தைரியம்?
 
தாமஸ் காபியை ரசித்து குடித்தபடி,
"பெரிய தைரியசாலில்லாம் ஒண்ணும் இல்லைங்கயா... அதான் உங்ககிட்ட சொன்னனே, பேய் புரளி இல்லாத ஊரே கிடையாது. முத்துப்பாண்டி வந்து மிரட்டுன உடனேயே இது வெறும் புரளிதான்.... எல்லாம் அவன் வேலையா தான் இருக்கும்னு புரிஞ்சுகிட்டேன். அப்புறம் நான் ஒரு கிறிஸ்டின். உங்க மதத்தில் இருக்கிற குலதெய்வங்கள் மாதிரி, எங்களுக்கு பாதுகாவலர்கள்... என்ன பிரச்சனை வந்தாலும் அவங்க பாத்துக்குவாங்கன்னு ஒரு நம்பிக்கை தான்..."
 
கருப்பன்: முதல் நாள் நம்ம ஊரு பள்ளிக்கூடத்துல பசங்க எப்படி இருந்தாங்க?
 
தாமஸ்: அதை ஏன் கேக்குறீங்க? இன்னைக்கு நாலாங் கிளாசுக்கு போனேன். எல்லா பயல்களும் நமக்கு மேல பேசுறானுங்க.
ஒரு பையன் கிட்ட உங்கப்பா என்ன வேலை பார்க்கறாருன்னு கேட்டால்....
 
எங்கம்மா சொல்ற எல்லா வேலையையும் பாப்பாருன்கிறான்.
 
இது கூட பரவால்ல,
 
சும்மா ஒரு பேச்சுக்கு, கணக்கு சொல்லிக் கொடுப்பதற்காக, ஒரு ரூபாய்க்கு ஒரு ஆப்பிள், அப்படின்னா
பத்து ரூபாய்க்கு எத்தனை ஆப்பிள்?ன்னு கேட்டா,
 
“ஒரு ரூபாய்க்கு எந்த கடையில ஆப்பிள்
விக்குதுன்னு ஃபர்ஸ்ட் சொல்லு, அப்புறம் பத்து ரூபாய்க்கு நான் போய் வாங்கி வறேன்”, அப்படிங்கிறானுங்க. நாலாங்கிளாஸ் பசங்களே இப்படி இருக்காங்க. எட்டாம் கிளாஸ் பசங்க எப்படி இருப்பாங்களோ. இவனுங்க கிட்ட எப்படி குப்பை கொட்ட போறேன்னு தெரியலையே... என்றான் பரிதாபமாக.
 
அவன் சொன்ன விஷயத்திற்கு சிரிப்பு வரவில்லை என்றாலும், அவன் நிலைமையை நினைத்து அனைவரும் சிரித்தார்கள்.
 
தாமஸ்: காலையில் வீட்ல கரண்ட் பிரச்சினை இருந்துச்சே. நீங்க தான் சரி பண்ணீங்களா? என்று அகல்யாவை பார்த்து கேட்டான்.
 
அகல்யா: ஆமா, மெயின் பியூஸ் போய்ருந்துச்சு. நானே சரி பண்ணிட்டேன்.
 
தாமஸ்: ரொம்ப நன்றி... அப்ப நான் கிளம்புறேன். 
 
கிளாசை சித்ராவிடம் கொடுத்துவிட்டு, அனைவருக்கும் பொதுவாக ஒரு வணக்கத்தை வைத்து விட்டு கிளம்பினான்.
 
சிட்டவுட்டில் இருந்து இறங்கி, செடி வேலியை நோக்கி நடந்து சென்று, காவண வீடு காம்பவுண்டுக்குள் இறங்கினான். அனைவரும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
சித்ரா: டீசண்டா இருக்காரு. நல்லா பேசுறாரு. தாத்தா, முதல்ல காவண வீட்டை வாடகைக்கு விடலாம்ன்னு சொன்னப்ப, எனக்கு பிடிக்கல. இப்போ எனக்கு டபுள் ஓகே.
 
அகல்யா புன்சிரிப்புடன் தலையாட்டினாள்.
 
கிராமத்தின் சந்தடிகள் எல்லாம் அடங்கி விட்ட இரவு 12 மணி.  
 
ஆகாயம் கருப்பு ஜமக்காளமாக நீண்டிருக்க, சின்னதும் பெரியதுமாக நட்சத்திர பொத்தல்கள். மேட்டு தெருவின் மரங்களுக்கு இடையே நிலா வெள்ளிக் காசுகளை இறைத்திருக்க... காற்றில் குளிர்.  வானத்தில் பிடிவாத வெள்ளை மேகங்கள்  நகராமல் நின்ற இடத்திலேயே நின்றன. தூரத்திலிருந்து  சோ சோ என்று கடல் அலைகளின் சத்தமும் சன்னமாக கேட்டுக் கொண்டிருந்தது. மரத்தடியில் சிக்னி சோர்வாய் படுத்திருந்தது.
 
துணிமணிகள், புத்தகங்கள், கொஞ்சம் பாத்திரங்கள், ஸ்டவ் என்று அனைத்தையும் எடுத்து, அடுக்கி வைத்துவிட்டு, கடைசி ரூமில் இருந்து இரண்டு நாற்காலிகளை எடுத்து ஹாலில் போட்டிருந்தான். ஊர் நிலவரங்களையும், பள்ளி சமாச்சாரங்களையும் அம்மாவிற்கும், நண்பர்களுக்கும் போன் செய்து பேசி விட்டு, சற்று முன்னால் தான் ஹாலில் பாயை விரித்து படுத்தான்.
 
ஹாலில் ஒரே ஒரு நீல ஸிரோ வாட்ஸ் பல்ப். ஹாலின் இருட்டை போக்க முடியாமல் சிரமப்பட்டு கொண்டிருந்தது. 
 
புது இடம் என்பதால் தாமஸ் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான். ஏதேதோ யோசனைகள். ஃபேன் இன்னும் மாட்டவில்லை. நாளை அகல்யாவிடம் கேட்க வேண்டும்...
 
காற்றுக்காக ஹால் பக்கவாட்டு ஜன்னலை திறந்து வைத்திருந்தான்.
 
பைக்கில் இருந்து சாவியை எடுத்தோமா என்று திடீரென்று ஞாபகத்துக்கு வர... சாவியை பைக்லயே விட்டுவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்தது.
 
தலையில் அடித்துக் கொண்டு எழும்பி, லைட்டை போட்டு, கதவை திறந்து கொண்டு வெளிப்பட்டான். குளிர்ந்த காற்று சில்லென்று முகத்தில் பட்டது.
 
ரோட்டில், வீட்டின் சுவரோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கில் இருந்து சாவியை எடுத்துக்கொண்டு, கேட்டை பூட்டப்போன வினாடி, 
 
தூரத்தில் படபடவென சத்தம்.
 
தாமஸ் வெளியே வந்து, சத்தம் கேட்ட திசையில் எட்டிப் பார்த்தான்... சோர்வான டியூப் லைட்டுகள் அவனைப் பார்த்து சிரமப்பட்டு சிரித்தன. மேட்டு தெருவின் மறுமுனையில் யாரும் வந்த மாதிரி தெரியவில்லை. திரும்பி, உள்ளே போகவிருந்த வினாடி, மறுபடியும் யாரோ ஓடி வருவது போல் தடதடவென சத்தம். தாமஸ் மறுபடியும் தெருவின் இடது முனையை எட்டிப் பார்க்க, அரை இருட்டுக்குள் ஏதோ ஒரு கருப்பு நிழல் மரங்களுக்கு பின்னே ஓடுவதை கவனித்தான்.
 
சந்தேகமாய் நின்றவன்
“யாரது”, என்று கேட்டு கொண்டு, சுற்றிலும் ஒரு அவசர பார்வை பார்த்தான். 
 
மேட்டு தெருவின் மறுபுறம் இருந்த மரங்கள் அவனுக்கு பதிலளிக்க விரும்பாமல் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தன.
 
ஓடியதா அல்லது பறந்து சென்றதா என்று திடீரென்று அவனுக்கு ஒரு சந்தேகம்!!! அவ்வளவு வேகமாக ஓடி மறைய முடியுமா???
 
வீட்டுக்குள் போய் டார்ச்சையோ அல்லது மொபைலையோ எடுத்து வந்து அடித்து பார்க்கலாமா என்று யோசித்தான். இப்போது சத்தம் வரவில்லை. ஆனால், யாரோ அல்லது ஏதோ ஒன்று மரங்களின் பின்னால் ஓடி  ஒளிந்திருக்கிறது என்பதை யூகித்துக் கொண்டான். 
 
இருட்டுக்குள், சராசரி மனிதர்களின் உயரத்தை விட அதிக உயரத்தோடு, கருப்பாய் இருந்தது மாதிரி அவனுக்கு தோன்றியது.
 
ஒருவேளை, இந்த ஊர் பெருசுகள் காலங்காலமாக சொல்லிக் கொண்டிருக்கும்  முனியாக இருக்குமோ!!! 
 
முனியின் பெயர் என்னமோ சொன்னார்களே!!!
 
ஞாபகம் வரவில்லை.
 
நாம் தான் நேரம் கெட்ட நேரத்தில் வந்து மாட்டிக் கொண்டோமோ என்று விஷமத்தனமாக ஒரு எண்ணம் மண்டைக்குள் கிராசில் ஓடியது . உடனே அதை ஒதுக்கி தள்ளினான்.
 
முனியாவது, சனியாவது.... எவனாவது திருட்டு பசங்க, குடிகார பசங்க, நம்மள பாத்து பயந்து ஒளிந்திருக்கலாம்.
 
தாமஸ் தெருவில் நின்று இரண்டு பக்கமும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருப்பதையும் பார்த்த சிக்னி, எழும்பி நின்று, சோம்பல் முறித்தபடி பார்த்தது.
 
அவன் பார்த்த திசையிலேயே சிக்னியும் பார்த்தபடி, திடீரென்று குறைக்க ஆரம்பித்தது. அடுத்த ஒரு சில நொடிகளில் அதன் குறைப்பு சத்தம் அதிகமாக, அந்த திசையிலேயே பார்த்து வெறித்தனமாக குறைத்துக் கொண்டிருந்தது.
 
மேட்டு தெருவை சாராத யாரோ அந்நியனாகத்தான் இருக்க வேண்டும். வந்த முதல் இரவே ஆராய்ச்சி பண்ண வேண்டாம்... இந்த ஏரியாவின் ஹிஸ்டரி ஜாகிராபியை இன்னும் அதிகமாக தெரிந்து கொண்டு அதற்கு பிறகு பார்க்கலாம்!
 
That should be the right thing to do!!!
 
கேட்டை நோக்கி அவன் செல்ல எத்தனித்த போது,
 
அவன் எதிர்பார்க்காத வலது புறம் இருந்து, ஏதோ ஒன்று வேகமாக காற்றில் விர்ரென  வருவதை, கடை கண்ணில் உணர்ந்த தாமஸ் வலது பக்கம் பார்க்க....
 
அதேநேரம்,
 
தெருவின் இடது முனையில் இருந்து இவ்வளவு நேரம் அவன் பார்த்துக் கொண்டிருந்த அந்த இருள் உருவம், அவனை நோக்கி சீறிப்பாய்ந்தது.
 
தொடரும்
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு  24
 
காற்று வீசவில்லை. எங்கே போனதென்று தெரியவில்லை. காற்றில்லாமல், ஆவேசமான தடதடப்பு மட்டும் இருட்டில் நிறைந்திருந்தது.
 
வலது புறமாக வந்த ஏதோ ஒன்று, தாமஸ் முழுவதுமாக  திரும்புவதற்குள் கையைப் பிடித்து இழுத்து வீச, அவன் தூக்கி வீசப்பட்டான். முக்கால் இருட்டுக்குள் சரியாக பார்க்க முடியவில்லை. காம்பவுண்ட் சுவரில் போய் மோதினான். 
 
தட்ட்ட்ட்....
 
ரோட்டில் விழுந்தான். பின் தலையில் அடிபட்டான்.
 
முனி அடித்து விட்.....????
 
விட்டதா என்று முழுவதுமாக யோசிப்பதற்குள்,  கண்கள் முழுவதுமாக இருளடைந்தது.... அப்படியே பொத்தென்று தலை சாய்ந்தது.
 
....................
 
சிக்னியின் குறைப்பு சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருக்க, முரட்டுத்தனமாக எதையோ விரட்டிக் கொண்டு ஓடியது. குறைப்பு சத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக  தேய்ந்தது.
 
காற்று வீசும் சத்தம் கேட்க ஆரம்பிக்க.... சருகுகள் சரசரவென இடம் பெயரும் சத்தம். மேட்டு தெருவின் இடம் வலமாக சென்று சிக்னி பார்த்துக் கொண்டிருக்க... வேறு எந்த போக்குவரத்தும் இல்லை.
 
ஒரு மணி நேரத்திற்கு பிறகு,
 
தாமசுக்கு மயக்கம் தெளிந்த போது சுற்றிவர இன்னும் இருட்டாக தான் இருந்தது. எதிரே இருந்த மரங்களில் இரவு பட்சிகள் கீச்சு கீச்சு என சத்தமிட்டு கொண்டிருந்தன. தன்னை சுற்றி கண்களை சுழல விட்டான். காவண வீடு கேட்டுக்குள்ளே விழுந்து கிடந்தான். பின்னந்தலை லேசாக வலித்தது. தடவி விட்டுக் கொண்டே எழும்பினான்.
 
நடந்த சம்பவங்கள் வரிசையாக ஞாபகத்துக்கு வர... வெளியே தானே விழுந்தோம். எப்படி உள்ளே வந்தோம் என்ற ஞாபகம் அவனுக்கு இல்லை. மயக்கத்தில் கிடந்த போது யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் செய்திருக்கலாம் என்று நினைத்தபோது அவன் வயிற்றில் கத்தியை சொருகி விட்ட மாதிரி இருந்தது.
 
நாம் நினைத்தது போலில்லை!!! காவண வீட்டை சுற்றி என்னமோ ஆபத்து இருக்கிறது.
 
யோசிக்கும் போது, தலை விண்ணு விண்ணென்று வலிக்க... அப்புறம் யோசித்துக் கொள்ளலாம் என்று, வீட்டுக்குள் சென்று கதவை மூடிக்கொண்டான். 
 
மறுநாள் காலை.
 
ரஸ்தா காட்டில் வழக்கமான குற்றாலக் குளுமையுடன் காலை. விடுமுறை காலையில் கண்விழிக்க சோம்பல் பட்டு படுக்கையில் புரளும் நபர்களைப் போல் சூரியன் கண் முழிக்க சிரமப்பட்டு, கடற்கரை பனியை இழுத்துப் போர்த்திக் கொண்டிருந்தது. வானத்தில் ஆரஞ்சு நிற பூவிதழ்களாய் மேகங்களின் சிதறல். புதர்களிலும் மரங்களிலும் ஈரம். நனைந்திருந்த சாலைகள். கடலில் அலைகளின் நடனம்.  காயப்படாத காலை காற்று.  
 
மேட்டு வீட்டில் காலை நேர விஸ்வரூபம். ஸ்கூல் பசங்களை ரெடியாகி பள்ளிகூடத்திற்கு கிளப்பி விடுவதற்குள் தாய்மார்கள் அசதியாவதை போல், மூன்று பெண்கள் ரெடியாகி வெளியே கிளம்புவதற்குள் வீடு அசதியாகி விடுகிறது. 
 
எட்டரை மணிக்கு எல்லாம் தாமஸ் ஸ்கூலுக்கு கிளம்பினான். இரவு நடந்த சம்பவங்கள் அவனுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாலும் அதிகமாக பாதிக்கவில்லை. கார்த்தி, சித்ரா, அகல்யா என்று ஒவ்வொருவராக வெளியே கிளம்பினார்கள். அகல்யாவுக்கு வேலை இல்லை என்றாலும், இன்டர்வியூக்கு போவதும் வருவதுமாகவே ஒரு நாள் முடிந்து விடுகிறது.
 
அனைவரும் வெளியே சென்ற பிறகு,  சித்ரா ரெடி பண்ணி வைத்திருந்த சேமியா கிச்சடியை, கருப்பன் சாப்பிட்டு விட்டு சிட் அவுட்டில் வந்து உட்கார்ந்தார்.  பிரபாவதி வந்திருந்தாள். ரொம்ப நேரமாக பேசிக் கொண்டிருந்தார்.
 
கருப்பன்: நீ என்ன சொல்லு... எனக்கு இந்த சம்பந்தத்தில் விருப்பமே கிடையாது. அவன் என்னதான் என் பேரனா இருந்தாலும், முதல்ல இருந்தே அவனை பத்தி நல்லா அபிப்பிராயம் எனக்கு கிடையாது. உன் பொண்ண அவனும் கட்டிக் கொடுக்குறதுக்கு பதிலா பேசாம வீட்டிலேயே வச்சுருக்கலாம். நான் இருக்கிற வரைக்கும் ஒத்துக்கவே மாட்டேன்.
 
பிரபா: அதுக்கு இல்லப்பா என் காலத்துக்கு அப்புறம் என் பொண்ண யாரு பாத்துக்குவா? சொத்து பத்து எதுவும் இல்ல. எல்லாம் அந்த பாவி வரதட்சணையா வாங்கிட்டு வித்து தின்னுட்டு இப்போ புள்ளைய அனாதையா விட்டுட்டான். மனசுக்குள்ள ரொம்ப கிலேசமா இருக்கு. இப்பவே அங்கங்க எனக்கு இழுத்துக்குது, பிடிக்குது. இந்த புள்ளையும் விவரம் கெட்டவ. எப்படி பிழைக்க போறாளோ  தெரியல.
 
கருப்பன்: நீ ஏன் கவலைப்படுற... மூணு பேத்திகளோட இவளும் ஒண்ணு, மொத்தம் நாலு.  இவங்களுக்கெல்லாம் ஏதாவது நல்லது நடக்காமலா போய்டும். வீணா மனசு போட்டு கெடுத்துக்காதே. மூத்தவங்க குடும்பத்தை அஞ்சு பைசாவுக்கு கூட நம்ப முடியாது. எனக்கு அப்புறம்  இந்த குடும்பத்துக்கு நீ தான் அதனால தைரியமா இரு.
 
கண்ணோரம் துளிர்த்திருந்த கண்ணீரை பிரபா துடைத்துக் கொண்டே சரி என்று தலையாட்டினாள்.
 
கருப்பன்: மேற்கால இருக்கிற அந்த 50 சென்ட் நிலத்தோட பத்திரம் உன்னிடம் தானே இருக்குது.
 
பிரபா ஆமாவென்று தலையாட்ட,
 
கருப்பன்: நாளைக்கு எடுத்துட்டு வா. யாரையாவது கூட்டிட்டு வந்து அளந்து நிலத்தை விக்கிறதுக்கு ஏற்பாடு பண்றேன். நாலு சம பங்கா பிரிச்சி, உன் மகளுக்கும் ஏதாவது பேங்க்ல போடுறேன். அது என் சொந்த சம்பாத்தியத்தில வாங்குன நிலம். அதனால முத்துப்பாண்டி அதுக்கு பிரச்சனை பண்ண முடியாது.
 
கேட்டருகே சத்தம் கேட்க, இருவரும் திரும்பி பார்த்தார்கள். ராஜாமணி கையில் குழந்தையுடன், அவளுடன் இரண்டு பெண்களும் கேட்டை திறந்து உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர்.
 
கருப்பன்: வாங்க வாங்க... என்னாச்சு குழந்தைக்கு சரியாயிடுச்சா?
 
ராஜாமணி முகம் நிறைய சிரிப்புடன்: அந்த தம்பிக்கு நன்றி சொல்லிட்டு போலாம்னு தான் வந்தோம். அவர் சொன்ன மாதிரி கசாயத்தை கொடுத்து தான் ஹாஸ்பிடலுக்கு தூக்கிட்டு போனோம். அங்க போயி சீட்டு எடுத்து, டெஸ்ட்ல்லாம் எடுக்கணும். அப்புறம் தேவைப்பட்டா ஆப்ரேஷன் பண்ணனும் ஒரு நாள் டைம் ஆகும் அட்மிட் ஆயிடுங்கன்னு சொன்னாங்க. நேத்து ராத்திரி அங்கதான் தங்கி இருந்தோம். காலையில குழந்தை வெளிக்கு போகும்போது, பேதியிலேயே மோதிரம் வந்துருச்சு. உங்க ஆப்பரேஷனும் ஆச்சு, நீங்களும் ஆச்சுன்னு கிளம்பி வந்துட்டோம்.
 
கருப்பன்: வாத்தியாரு ஸ்கூலுக்கு போய்ருக்காரு. சாயங்காலம் தான் வருவாருன்னு நினைக்கிறேன். நான் சொல்லிடுறேன். உனக்கு கண்டிப்பா பாக்கணும்னா சாயங்காலம் வந்து பாருங்க...
 
ராஜாமணி மற்ற பெண்களும் சரிங்கையா என்று சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
 
கருப்பன் பிரபாவை திரும்பிப் பார்த்து,
 
"அந்த தம்பி எல்லார்கிட்டயும் நல்லா பேசுது, பழகுது. வந்த உடனேயே எல்லாருக்கும் அவர ரொம்ப புடிச்சி போச்சு... அவரால காவண வீட்டுக்கு ஒரு எதிர்காலம் வந்தா நல்லாருக்கும்", என்றார்.
 
அதே நேரம், 
 
அஞ்சு கிராமம் பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் ஆபீஸ் அவசரங்கள் குறைந்து இருந்தாலும், வாகன இரைச்சல்கள் இருந்தது. பஸ் ஸ்டாண்டுக்கு பக்கத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு குறைவாக இருந்தது. ஸ்டாண்டுக்கு செல்லும் ரோட்டின் முனையில், இரண்டு டிராபிக் கான்ஸ்டபிள்கள் கடமையே கண்ணாக நின்றிருந்தார்கள்.
ஹெல்மெட் போட்டவர்கள், போடாதவர்கள், லைசன்ஸ் வைத்திருப்பவர்கள், இல்லாதவர்கள் அனைவரையும் பிடித்து நிறுத்திய போலீஸ்காரர்கள், கஷ்டப்படும் அவர்கள் குடும்பத்திற்காக நிதி வசூல் செய்து கொண்டு இருந்தார்கள். வசூல் அதிகாரிகளை தூரத்தில் இருந்தே பார்த்த யமஹா இளைஞன் பைக்கை நிறுத்தி, திருப்ப முயற்சிக்க, அதைப் பார்த்த டிராபிக் கான்ஸ்டபிள் அவனை நோக்கி ஓடி அவனை பிடித்தார்.
 
பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே இருந்த கூல் ட்ரிங்ஸ் கடையில், சர்பத் கிளாசை டேபிளில் வைத்த தாமஸ், எதிரே நின்றிருந்த இருவரையும் பார்த்து சிரித்தான்.
 
"நீங்க சொன்னபடியே செஞ்சிருவோம்", என்று சிரித்தான். எதிரே நின்றிருந்த இருவரும் நம்ப முடியாமல் பார்த்தார்கள். 
 
சாதுவாய் வாழைப்பழ தோலை சாப்பிட்டபடி எருமை மாடு ரோட்டை கிராஸ் செய்ய, வாகனங்கள் பிரேக்கடித்து நின்றன. நாகர்கோவில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றும் நிற்க, ஜன்னலோர சீட்டில்  இருந்த திருமுடி எதார்த்தமாக சர்பத் கடையை திரும்பிப் பார்க்க, தாமசை பார்த்தான். இவர் ஸ்கூலுக்கு போகாம, இங்க என்ன பண்றாரு,  என்று அழுத்தமாக பார்க்க, அவனுக்கு எதிரில் நின்றிருந்த இருவரையும் பார்த்ததும், அதிர்ந்தான்.
 
இவனுங்க ரெண்டு பேரும் சிமெண்ட் கம்பெனிகார பினாமி பசங்களாச்சே? ஒண்ணு பவர் ஏஜென்ட் ராகவன், இன்னொன்னு சிமெண்ட் கம்பெனி கைக்கூலி மாணிக்கம். இவனுங்க கூட எதுக்கு தாமஸ் பேசிட்டு இருக்காரு?
 
காவண வீட்டில் ஆரம்பித்து, ஊரில் உள்ள  நிலங்களை எல்லாம் வளைக்க நினைக்கும் சிமெண்ட் கம்பெனி காரர்களுக்கும், தாமஸ்க்கும் எப்படி அறிமுகம்? 
 
யமஹா இளைஞனை பிடித்துக் கொண்டு வந்து கான்ஸ்டபிள் கறாராய் பேசிக் கொண்டிருக்க, மாணிக்கம் பார்த்துவிட்டு, தாமஸிடம் ஏதோ சொன்னான். தாமஸ் டிராபிக் கான்ஸ்டபிளை நோக்கி சென்று பேச, கான்ஸ்டபிள் சல்யூட் அடித்து விட்ட,  யமஹா இளைஞனை விட்டார்.
 
கண்ணால் மோப்பம் பிடித்தபடியே திருமுடி பார்த்துக் கொண்டிருந்தான்.
 
யமஹா இளைஞனும் சிமெண்ட் கம்பெனி ஆள் தான் என்று பார்த்த மாத்திரத்தில், திருமுடிக்கு தெரிந்தது.
 
டிராபிக் கான்ஸ்டபிள்  சொன்ன உடனேயே சல்யூட் அடித்து பம்முறானே!!! அப்படி என்ன தாமசுக்கு செல்வாக்கு?
 
உண்மையிலேயே இவன் ஸ்கூலுக்கு வந்திருக்கும் வாத்தியார் தானா? இல்லை, வேறு எதற்காகவாவது வந்திருக்கிறானா?
 
பஸ் நகர்ந்து, அவர்களை கடந்து, நாகர்கோவில் ரோட்டில் விரைந்தது.
 
நாகர்கோவில் கோர்ட் ரோடு,
SK legal firm
 
ஒரு நீளமான ரூம் மற்றும் இரண்டு கண்ணாடி கேபின்கள் தான் ஆபீஸ். நீளமான ரூமில் நான்கு டேபிள்கள். டேபிள் நிறைய பைல்கள். பைல்கள் நிறைய பேப்பர்கள், பேப்பர்கள் நிறைய கேஸ்கள், கேசுகள் நிறைய டைவர்ஸ், வெட்டு, குத்து, கொலை.
 
சீனியர் லாயர்கள் இருவரும் கோர்ட்டுக்கு சென்றிருக்க, மத்த டேபிள் களில் இருந்த மூவரும் கதை அடித்து கொண்டிருந்தார்கள். ஹேமா அவள் டேபிளில் இருந்த கம்ப்யூட்டரில் பெட்டிஷனை டைப் அடித்து கொண்டிருந்தாள்.
 
அடர் நீல கலர் புடவை. கான்ட்ரஸ்டிங்காக சில்வர் கலர் ரவிக்கை.
 
கழுத்தில் தாலி போன்ற தங்கச் செயின். முடிவில் ஒரு லாக்கெட். லாக்கெட்டுக்குள் திருப்பதி ஏழுமலையான். லாக்கெட் இருந்த இடம் நிச்சயம் ஏழுமலையானுக்கு தர்ம சங்கடமான இடம்தான்.
 
மொபைல் போன் அடிக்கவும் எடுத்து பார்த்தாள். ஏதோ ஒரு புது நம்பர்.
 
யாரா இருக்கும்?
 
எடுத்து பேசினாள்.
 
"ஹலோ....?"
 
"ஹலோ ஹேமா தானே பேசுறது..?"
 
"ஆமா... நீங்க யாரு?"
 
"உனக்கு வேண்டப்பட்டவன் தான் பேசுறேன்.."
 
"நீங்க யாருன்னு தெரியலையே?"
 
"உன் பிரச்சினைகள் எல்லாமே தெரியும். ஏரியாவுல ஹஸ்பண்ட் துபாய்ல இருக்காருன்னு  நீ கதை விட்டாலும், எனக்கு எல்லாமே தெரியும்.. உன் புருஷன் இன்னொருத்தி கூட போய்ட்டான். நீ தனியா குழந்தையை வச்சிக்கிட்டு கஷ்டப்படுறது, எல்லாமே தெரியும்."
 
ஹேமா குழப்பமாக: நாம சந்திச்சிருக்கோமா?
 
எதிர்முனை: பல தடவை பார்த்திருக்கோம். பழகுறதுக்கு தான் சந்தர்ப்பம் கிடைக்கல. இனிமே பழகலாம். அதற்கான நேரம் வந்திருச்சு.
 
ஹேமா எரிச்சலாக "உங்களுக்கு இப்ப என்ன வேணும்?"
 
எதிர்முனை: நீதான் வேணும். 
 
ஹேமா: என்ன விஷயமா கால் பண்ணிருக்கீங்க. தெளிவா சொல்லுங்க? இல்ல, போனை வைங்க.
 
எதிர்முனை : அதுக்குள்ள என்ன அவசரம்?  கூடிய சீக்கிரம் நேர்ல சந்திக்கலாம். அப்ப எல்லாத்தையும் தெளிவா சொல்றேன்... என்னை நிச்சயமா உங்களுக்கு பிடிக்கும். இனிமேதான் நாம அதிகமா சந்திக்க வேண்டி வரும்.
 
எதிர்முனை இறந்து போக, ஹேமாவின் முகம் அவசரமாக பய ரேகைகளை பூசிக் கொண்டது.
 
யார் இவன்? குரலே சரி இல்லையே. எங்கேயாவது போகும் போது, வரும் போது என்னை பார்த்திருப்பானா? 
 
உள்ளுக்குள் திடுக் திடுக்கென்று இருந்தது.
 
எதிர் டேபிள் இளவரசு குறுகுறுவென அவளை பார்த்தபடி:
 
"என்ன மேடம், ஏதோ போன் பேசினீங்க? வேர்த்து ஊத்துது யார் என்ன சொன்னாங்க?"
 
இவன் வேற! வேலைய பாக்காம நம்மள தான் பாத்துட்டு இருப்பான். டென்ஷனில் அதிகமாக ஏறி தாழ்ந்த மார்பை அடக்க சிரமப்பட்டாள்.
 
கணவன் துணை இல்லாமல் தனியாக இருக்கும் பெண்களுக்கு தொல்லைகள் வரும் என்ற காரணத்திற்காகத்தான், கணவன் துபாயில் இருக்கிறான் என்று சொல்லி வைத்திருந்தாள். அந்த விஷயம், அகல்யாவை தவிர யாருக்குமே தெரியாது. 
 
மறுபடியும் டைப் அடிக்க ஆரம்பித்தாள். டைப்பிங்கில் அவள் கவனம் செல்லவில்லை.
 
மாலை 6 மணி வாக்கில், பைக்கில் தாமஸ் தடதடவென மேட்டு தெருவில் நுழைய, மாலை சூரியன் முற்றிலும் வானத்தை விட்டு விலகாததால், தேய்ந்த வெளிச்சம் மிச்சம் இருந்தது.
 
கீழ தெரு வேப்ப மரத்தடியில் இருந்த சடைசாமி அவனைப் பார்த்து கரைப்பற்களோடு சிரித்தான்.
 
நேற்றிரவு மேட்டு தெருவில், இடது பக்கமாக அவன் பார்த்துக் கொண்டிருந்தபோது, வலது பக்கமாக வந்த ஏதோ ஒன்று அவனைப் பிடித்து இழுத்து வீசி எறிந்தது. அதனால் தான் சுவரில் போய் மோதினான். ஒருவேளை அவனை பிடித்து இழுத்து, வீட்டுக்குள் தூக்கி போட்டது சடை சாமியாக இருக்குமோ?
 
பைக்கை நிறுத்தினான். தாமஸ். ஸ்டாண்ட் போட்டு விட்டு அவனை நோக்கி சென்றான்.
 
"ஐயா, நேத்து ராத்திரி வெளியே மயங்கி கிடந்த என்னை, வீட்டுக்குள் நீங்களா தூக்கி போட்டீங்க?"
 
சடைசாமி அவனைப் கூர்ந்து பார்த்தான். அவன் பார்வையில் அதிக தீவிரம். இவனிடம் பேசலாமா வேண்டாமா என்று யோசித்தது போலிருந்தது.
 
சடைசாமி பதில் ஏதும் சொல்லாததால், தாமஸ் அங்கிருந்து நகர்ந்தான். போனவன் திரும்பி பாக்கெட்டில் இருந்து 100 ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினான்.
 
"இந்தாங்க வச்சுக்குங்க" என்று எவ்வளவு சொல்லியும் அவன் வாங்கவில்லை. 
 
சடைசாமி விரல்களில் மெலிதான நடுக்கத்தை பார்க்க முடிந்தது. ஏதோ ஒரு எண்ணத்தை தொண்டைக்குள் வைத்துக் கொண்டு சொல்ல பிரியம் இல்லாமல், விழுங்கவும் முடியாமல் தடுமாறுகிறான்.
 
தாமஸ் அங்கிருந்து யோசித்தபடியே கிளம்பினான்.
 
'முனி ஓட்டம் இருக்குதா இல்லையான்னு நிரூபிக்கிற அளவுக்கு நேத்து நடந்த சம்பவங்களில் சத்தில்லை. இன்னும் கூடுதல் தகவல்கள் தேவை. அதுவரை இரவு வீட்டிலிருந்து வெளியே வராம இருக்கிறதுதான் நல்லது..'
 
காவண வீட்டின் முன்னால் பைக்கை நிறுத்திவிட்டு, கேட்டை திறக்கும் போது,
 
திருமுடி எதிர்ப் பக்கமாக வந்தான்.
 
"காலையில அஞ்சு கிராமத்தில் சிமெண்ட் கம்பெனி பினாமி பசங்க கூட நீங்க பேசிட்டு இருந்தத பார்த்தேனே. உங்களுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர்களா? ஏற்கனவே அவங்களை தெரியுமா?"
 
தாமஸ் நெற்றியில் குழப்ப சுருக்கங்கள்.
 
"நான் காலையில அஞ்சு கிராமத்துக்கு போகவே இல்லையே. இப்பதான் ஸ்கூல் முடிஞ்சு வர்றேன். நீ வேற யாரையாவது பார்த்துருக்கலாம்."
 
திருமுடி குழப்பமானான்.
 
"வேற யாராச்சும்மா? நீங்க தான் சார். உங்களை தான் பார்த்தேன். ரெண்டு கண்ணால பார்த்தேன்..."
 
தாமஸ்: இல்ல, நான் அந்த பக்கம் போகவே இல்லை.... இப்பதான் ஸ்கூல்லருந்து வர்றேனே.
உள்ள வரியா? 
 
கன்பூஷன் ஆப் தி கான்ஸ்டிடியூஷன் ஆப் தி லூஸ் மோஷன்.
 
திருமுடி: இல்ல, நான் அப்புறமா வரேன்... என்று சொல்ல, தாமஸ் கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றான்.
 
உள்ளே செல்பவனை பார்த்தபடியே யோசித்து கொண்டிருந்தான் திருமுடி,
 
'இவனை நம்பலாமா??'
 
'இல்லை. இவனிடம் ஏதோ தப்பு இருக்கிறது!  இவன் மீது ஒரு கண் வைத்துக் கொள்ள வேண்டும்.'
 
தொடரும்
 
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 25
 
அடுத்த ஒரு வாரத்திற்கு வழக்கம் போல் சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் ரத்த களரியாக இறங்கினான். கடல் அரை கொந்தளிப்புடன் அமைதியாக இருந்தது. வெள்ளை நுரை கொண்டையுடன் அலைகள். காலையிலும் மாலையிலும் நத்தை கொத்தி நாரைகளும், நீர் காகங்களும் கடற்கரையை ஆக்கிரமித்து இருந்தன. காவண வீட்டிலும் மேட்டு தெருவிலும் ஒரு வாரமாக அமைதி. 
 
பெருமழைக்கும், புயலுக்கும் முன்னால் ஏற்படுமே ஒரு சொல்ல முடியாத புழுக்கம். காவண வீட்டில் அதே மாதிரி ஒரு புழுக்கம்.
 
ராஜாமணி சம்பவத்திற்கு பிறகு, ஊர்க்காரர்கள் முக்கால்வாசி பேர் சுலபமாக தாமஸிடம் முகம் கொடுத்து பேசினார்கள். வழியில் பார்க்கும்போது சிரித்தார்கள். டீக்கடையில் ஸ்டூல் எடுத்து போட்டு டீ சொன்னார்கள். ஆர்வமாக அவன் குடும்பத்தை பற்றி விசாரித்தார்கள்.
 
அந்த வாரத்தில் ஒரு நாள் மாலை, முத்துப்பாண்டியும் தாமஸும் நேருக்கு நேராக சந்தித்துக் கொண்டார்கள். சினிமாவில் வரும் ஹீரோ வில்லன் சந்திப்பு ரேஞ்சுக்கு தீப்பொறி எதுவும் பறக்கவில்லை. 
 
அஞ்சுகிராமத்திலிருந்து ரஸ்தா காடு விலக்கில் திரும்பி, தாமசும் திருமுடியும் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, முத்துப்பாண்டி புல்லட்டில் குறுக்கிட்டான். குடித்து குடித்து அவன் கண்களில் சிகப்பு கலர் பிக்ஸ் ஆகி, இயல்பாகவே அவன் பார்க்கும் பார்வையில் மூர்க்கத்தனத்தை ஏற்படுத்தியிருந்தது.
 
முத்துப்பாண்டி புல்லட்டில் இருந்து இறங்கி வேஷ்டியை கோபமா மடித்து கட்டிக் கொண்டான்.
 
எச்சில் இலையை சாப்பிட வந்த நாயை பார்ப்பது போல், தாமசை பார்த்து, "அனாவசியமா நீ என் வழியில் குறிக்கிடுற... உசுர காப்பாத்திக்கனும்னா, உடனடியாக வீட்டை காலி பண்ணிட்டு ஊரை விட்டு ஓடிரு..", என்றான்.
 
தாமஸ் பைக்கில் இருந்து இறங்காமல, "நான் எங்க உன் வழியில் குறுக்கிடறேன். நீ தான்  புல்லட்டில் என் வழியில் குறுக்கிடறே...  வீடு எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு... நீ என்ன சொல்றது? வீட்டுக்காரங்களே காலி பண்ண சொன்னாலும், இனிமே பண்ண போறதில்லை ", என்றான்.
 
கடைசியாக தாமஸ் சொன்ன வாக்கியத்திற்கு, பின்னால் இருந்த திருமுடி, பட்டென்று ஏறிட்டு அவனை எட்டி பார்த்தான்.
 
தாமஸ் கண்டுகொள்ளவில்லை.
 
பாண்டி: "எங்கிருந்தோ வந்து தனியா  ஊருக்குள்ள தங்கிட்டு, இவ்வளவு தெனாவெட்டா பேசி, எங்களைல்லாம் எதிர்க்கிறது அவ்வளவு நல்லதுக்கில்ல..."
 
"இதோ பாரு... மிரட்டுறது மூலமா என்னை நீ காலி பண்ண வைக்க முடியாது. கொலை மிரட்டலுக்கு Sec 506 ipc. தெரியும்ல்ல??? கம்ப்ளைன்ட் பண்ணுனா ரெண்டு வருஷம் கம்பி எண்ண வேண்டி வரும்."
 
முத்துப்பாண்டி முஷ்டியை மடக்கி, உயர்த்தி காமித்து, வெறியில் "ஏய்ய்ய்ய்ய்" என்று கத்தினான்.
 
"சும்மா கத்தாதே.... இந்த சீன்ல்லாம் பழைய படங்களிலேயே பார்த்தாச்சு. வேற ஏதாவது புதுசா ட்ரை பண்ணு. வரட்டா..",
 
அவன் மனபாரம் நீங்குமளவுக்கு கத்திக் கொண்டே இருக்கட்டும் என்று அவனை அங்கேயே தனியாக விட்டுவிட்டு, பைக்கை திருப்பி, தாமஸ் ஊரை நோக்கி செலுத்தினான்.
 
பைக் பின்னாலிருந்த திருமுடி, இவன் சிமெண்ட் கம்பெனி ஆளா? போலீசா? இல்ல உண்மையிலேயே வாத்தியாரா? 
ஒண்ணுமே புரியலையே?
 
தலையை வரட் வரட்டுன்னு சொரிந்து, குழம்பினான்.
 
நீங்க உண்மையிலேயே வாத்தியார் தானா என்று அவனிடம் கேட்கவும் செய்தான்.
 
இதற்கு தாமஸ் சொன்ன பதில், "மூணு வித்தியாசம் இருக்கு, கண்டுபிடி."
 
மேற்கொண்டு அவனிடம் எதுவும் கேட்கவில்லை. கேட்டாலும் பதில் வரப் போவதில்லை.
 
திருமுடி மைண்ட் வாய்ஸ்:  ஸ்கூலில் கிளர்க்காக இருப்பது நம்ம பரமசிவம் தானே... ஜாயினிங் போது கொடுத்த போட்டோ, ஆதார் கார்டு, இன்ன பிற விஷயங்கள் எல்லாம்  ஆபீஸ் ரெக்கார்டில் இருக்குமே! பரமசிவன் கிட்ட இவனை பற்றி விசாரிக்கணும்.
 
முத்துப்பாண்டி தாமசை வழிமறித்து மிரட்டிய விஷயத்தை, திருமுடி பெரிய கருப்பனிடம் சொன்னான். ஏற்கனவே கருப்பன் தாமசுக்கு 'good' என்று காண்டாக்ட் சர்டிபிகேட் கொடுத்திருக்க, அது 'very good' என்று மாறியது. ஆனால் அவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை திருமுடி தெரிவிக்கவில்லை.
 
முதல் நாள் கார்த்தி குருவிக்கு பால் சோறு வைத்தாள். கூடைக்குள் அசையாது படுத்துக்கிடந்த அந்தக்குருவி  கால்களை உதைத்து முன்வந்து பார்த்தது. பின்னர் தளர்நடை போட்டு, ஒன்றிரண்டு பருக்கைகளை கொத்தித்தின்ன முயன்றது. 
 
ஊமத்தை இலையை தாமஸ் பறித்து வந்து,
அம்மியில் வைத்து மைய அரைத்து, முட்டையின் வெள்ளைக்கரு, அரிசி மாவு கலந்து குழைத்து புண் இருக்கும் இடத்தில் பற்று போல் போட்டான். குருவி அடுத்து வந்த நாட்களில் தின்னும் பருக்கைகள் எண்ணிக்கை அதிகமானது. கார்த்தியின் முகத்தில் மலர்ச்சியை பார்க்க முடிந்தது.
 
வீடு தானே என்பதால், இரவு நேரங்களில் டி-ஷர்ட்டும், short பைஜாமாவும் அணிந்து வலம் வருவது சித்ராவின் வழக்கம். பளீர் இடுப்பும், வழவழ கால்களும் தெரிவது பற்றி அவள் கவலைப்படுவதில்லை. வீட்டில் தான் அப்படி, வெளியே செல்வதென்றால் உடை மாற்றிக் கொள்வாள்.
 
வெளியே நாய்க்கு சோறு வைக்க, வீட்டின் முன்னால், அல்லது தெருவுக்கு செல்ல வேண்டுமென்றாலும் கூட உடை மாற்றாமல் செல்வதில்லை. ஆனால் காவண வீட்டிற்கு அதே கெட்டப்பில் செல்வாள். கருப்பனும் அகல்யாவும் எதுவும் சொல்வதில்லை. தாமசை வேற்று மனிதனாக இல்லாமல், அவர்கள் வீட்டு ஆளாகவே நினைத்து விட்டார்கள் என்பதற்கு இந்த பைஜாமா விஷயமே ஒரு எடுத்துக்காட்டு.
 
காலை பரபரப்பை, அவன் கேட்காமலேயே வரும் சித்ராவின் டிபன் குறைத்திருந்தது. மாலை நேரங்கள் அவளின் பேச்சுத் துணையால் நிரம்பியிருந்தது.
 
என்னமோ சொல்ல முடியாத இறுக்கம் அவளிடம் குறைந்திருந்ததை அகல்யா உணர்ந்தாள். என்ன காரணம் என்று அவளுக்கு தெரியவில்லை.
 
அடுத்த வாரத்தில் தமிழ்நாட்டில் என்னென்னவோ நடக்கலாம்.  தங்கம் விலையும், பெட்ரோல் விலையும் அதிகரிக்கலாம். தமிழ்நாட்டிற்கு நலம் பயக்கும் திட்டங்களை முதல்வர் அறிவிக்கலாம், ஏதாவது ஒரு மந்திரி ஊழல் புகாரில் மாட்டலாம், வெயில் தமிழ்நாட்டை வாட்டி வதைக்கலாம். சட்டசபையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்யலாம். ஆயிரக்கணக்கான காதல்கள் உருவாகலாம். ஆயிரத்தி ஒரு காதல்கள் பிரேக்கப் ஆகலாம். சாதாரண தினங்களில் ஒரு வாரம் இப்படித்தானே போகும். 
 
ஆனால் அடுத்த வாரத்தில், ரஸ்தா காடு ஊரை புரட்டி போடுமளவுக்கு அதிர்ச்சிகரமான சம்பவங்கள்  நடந்தது.
 
சனிக்கிழமை 
காலை 11 மணி
 
பெரிய கருப்பன் தோட்டத்துச் செடிகளுக்கு ஹோஸ் மூலமாக தண்ணீர் பாய்ச்சி கொண்டிருக்க, தாமஸ் கைவிரல்களில் பைக் சாவியை சுழட்டியபடி,செடி வேலியை கடந்து வந்தான்.
 
தண்ணி பாச்சியப்படியே  அவனை திரும்பி பார்த்த பெரிய கருப்பன்,
 
"என்ன தம்பி? எங்கேயோ வெளியே கிளம்பிட்டீங்க போல... இன்னைக்கு சனிக்கிழமை ஸ்கூல் லீவு தானே?"
 
"லீவுதான் சார், அஞ்சுகிராமத்தில் ஒரு அவசர வேலை வந்துருச்சு. குக்கர்ல சோறு போட்டுருக்கேன். இன்னும் ரெண்டு விசில்ல இறக்கி வைக்கணும். கார்த்தி இருந்தான்னா கொஞ்சம் இறக்கி வைக்க சொல்றீங்களா?"
 
"அதனால் என்ன தம்பி போயிட்டு வாங்க"
 
தாமஸ் மேட்டு வீட்டின் கேட்டை திறந்து கொண்டு வெளியே சென்றான். பெரிய கருப்பன் உள்ளே திரும்பிப் பார்த்து "கார்த்தி, கார்த்தி" என்று கூப்பிட்டார். வீட்டுக்குள் இருந்து சித்ரா டீ சர்ட்டில் வெளிப்பட்டு, கார்த்தி விளையாட போயிருக்கிறா என்றாள்.
 
கருப்பன்: வாத்தியார் வெளியில போறாராம். குக்கரில் சோறு வச்சிருக்காரு. ரெண்டு விசில்ல ஆஃப் பண்ண சொன்னாரு.
 
சித்ரா: சரி தாத்தா நான் பண்ணிடுறேன்.
 
கருப்பன்: அப்படியே வீட்டு பின்னாலயும் முன்னாலையும் கொஞ்சம் பெருக்கி போட்ருமா.. இலையா விழுந்து கிடக்கும். வீட்டுக்குள்ள குப்பை இருந்தாலும், கொஞ்சம் பெருக்கி விட்டுறு. மேற்கால  நிலத்தை அளப்பதற்கு இன்னைக்கு ஆள் வருது. நான் ஒரு எட்டு போய் பாத்துட்டு வந்துடறேன். சரியா?
 
சரி தாத்தா என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குள் சென்று தொடப்பத்தை எடுத்துக்கொண்டு வெளிப்பட்டாள். பழுப்பு டீ ஷர்ட்டும், கருப்பு பைஜாமாவும் அணிந்திருந்தாள். டி-ஷர்ட்டை வயிற்றுப் பகுதியில் முடிச்சுட்டு இருந்தாள். 
 
கருப்பன் நீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட்டு, வெளியே கிளம்புவதற்காக வேஷ்டி சட்டை மாத்த சென்றார்.
 
சித்ரா காவண வீட்டு தோட்டத்தில் நுழைந்தாள். காவண வீட்டு கதவை சும்மா பூட்டி வைத்துவிட்டு தான் தாமஸ் சென்றிருந்தான்.
 
விசில் வந்ததும், இண்டக்ஷன் ஸ்டவ்வை அணைத்துவிட்டு, வீட்டை பெருக்கினாள். வீட்டின் பின்புறமாக வந்து, பெருக்கிக் கொண்டிருக்கும் போது அரவிந்துக்கு போன் பண்ணினால் என்ன என்று தோன்றியது. பைஜாமா பாக்கெட்டில் வைத்திருந்த போனை எடுத்து கால் செய்தாள்.
 
எப்படியும் சுவிட்ச் ஆப் தான் வரும், இருந்தாலும், அவள் முயற்சியை கைவிடவில்லை.
 
போன் செய்தாள். ஆச்சரியம்!!! ரிங் போனது.
 
படபடப்பாக காத்திருந்தாள். மறுமுனையில் போன் அட்டென்ட் செய்யப்பட்டதும்,
 
"ஹலோ அரவிந்த்... ஏன் இவ்வளவு நாளா போன் அட்டென்ட் பண்ணல? நம்பர் ஏன் சுவிட்ச் ஆப்னு வருது? உனக்கு என்னாச்சு? உடம்புக்கு எதுவும் பிரச்சினை இல்லையே?"
 
மறுமுனையில் ஒரு சில நொடிகள் அமைதி. 
 
சித்ராவின் ஒரு சில ஹலோக்களுக்குப் பிறகு,
 
அரவிந்த் பதட்டமான, கிசுகிசுப்பான குரலில்:
i'm fine... எனக்கு ஹெல்த் பிராப்ளம் எதுவும் இல்ல. வீட்ல தான் நம்ம விஷயம் தெரிஞ்சிருச்சு. அப்பா கிட்ட யாரோ பத்த வச்சிட்டாங்க. ரொம்ப டென்ஷன் ஆயிட்டார். அப்பாவை பத்தி தெரியும்ல்ல? உன்ன பார்த்தாலோ, பேசினாலோ, உன்னையும் உன் பேமிலியையும் வெட்டி போட்டுருவேன்னு மிரட்டினார். உங்களுக்கு ஆபத்து வரக்கூடாதுன்னு அமைதியா இருக்கிறேன். 
 
என் போனை புடுங்கிட்டாங்க. இப்பதான் கையில் கிடைச்சது. என்னுடைய நடவடிக்கைகளை க்ளோசா வாட்ச் பண்றதுக்கு ஆள் ஏற்பாடு பண்ணிருக்கிறார். அதனால்தான் உன்னை வந்து பார்க்க முடியல, பேச முடியல. இப்ப ரொம்ப நேரம் பேச முடியாது. ரூமுக்கு வெளியேவே ரெண்டு பேர் நின்னுட்டு இருக்கானுங்க. என்ன பண்ணாலும், உடனே தகவல் அப்பாவுக்கு போயிருது.
 
சித்ரா அதிர்ந்து போனாள். அரவிந்தின் அப்பாவை பற்றி அவளுக்கு ஏற்கனவே தெரியும். ஏரியாவுக்குள் கட்டப்பஞ்சாயத்து எல்லாம் அவர் தலைமையில் தான் நடக்கும். அவன் சொல்றபடி, அவன் அப்பா செய்யக்கூடியவர் தான், இருந்தாலும் இவ்வளவு சீக்கிரம் பிரச்சனை வரும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை.
 
அரவிந்த்: முதலில் இப்படித்தான் ரொம்ப டென்ஷன்ல இருப்பாங்க. கொஞ்ச நாள் போகட்டும், பிரச்சனை ஒஞ்சதும் பொறுமையா பேசலாம். என்னை நம்பு... 
வேகவேகமாக பேசினான்.
 
இவன் சொல்வதை நம்பலாமா? பஸ் ஸ்டாண்ட் இளைஞன் சொன்ன விஷயத்தை இவனிடம் கேட்கலாமா? இல்லை, இப்போது வேண்டாம்.
 
அரவிந்த் : உன்ன வந்து பார்க்க முடியாது. அடிக்கடி பேச முடியாது. கொஞ்ச நாள் போகட்டும், சூடு ஆறுனதும் பொறுமையா பேசுறேன்.
 
இரண்டு பேருக்கும் பொதுவான நண்பர்கள் யாருமே கிடையாது. அதனால அவனைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்றால் கூட யாரிடமும் கேட்கவும் முடியாது. அவனை நம்புவதை தவிர வேறு வழியில்லை.
 
சித்ரா: நீ பேசாதத நினைச்சு தான் எனக்கு கவலையாகத்தான் இருந்துச்சு. ஆனா நீ இப்ப சொன்ன விஷயத்தை கேட்டதும், நிலைமையை புரிஞ்சுகிட்டேன். உன் மேல எனக்கு முழு நம்பிக்கை இருக்கு... வாய்ப்பு கிடைக்கும் போது என்கிட்ட பேசாம மட்டும் இருந்துடாதே.  எனக்கு இன்னொரு கஷ்டம் என்னன்னா, இந்த மாசம் வழக்கமா 10ஆம் தேதி வர வேண்டிய டேட்... இவ்வளவு நாள் தாண்டிருச்சு. இன்னும் பீரியட்ஸ் வரல. அதான் ரொம்ப பயமாருக்கு.
 
அவள் குரலில் நிஜமான பதட்டம்.
 
மறுமுனையில் அரவிந்த் அதிர்ந்து போனாலும், உடனே சுதாரித்து,
 
"சரி ஓகே ஓகே பயப்படாத, வழக்கமா மென்சஸ் முன்ன பின்ன நடக்கிறது தானே. மத்தபடி வேற ஒரு பிரச்சனையும் இருக்காது. நீ பயப்படுறதாலேயே கூட கொஞ்சம் லேட் ஆகும். ஆக்சுவலா அன்னைக்கு அவசரமா பண்ணதனால காண்டம் யூஸ் பண்ண முடியல.  ஒருவேளை பிரகனண்ட் ஆனா கூட... பயந்துடாத. அடுத்த வாரம் நான் கால் பண்ணுவேன், எனக்கு தகவல் சொல்லு.  நான் பாத்துக்குறேன். ரிலாக்ஸா இரு.."
 
சித்ராவின் கண்களில் குபுக்கென்று கண்ணீர் வர, 
"எனக்கு கரெக்டா வந்துடும். இதுக்கு முன்னால் இப்படி தள்ளி போனதே கிடையாது. அதான் பயமாருக்கு", என்றாள்.
 
அரவிந்த்: எதுனாலும் பயப்படாதே. வெயிட் பண்ணி செக் பண்ணி பாரு. உனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நான் பார்த்துக்கிறேன். சரியா ?
 
"சரி அரவிந்த்..."
 
அரவிந்த் பேசிய விதத்தில், அவளுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
 
"அப்புறம் நீயா எனக்கு கால் பண்ணாத. நானே உனக்கு பண்றேன். Ok va?
 
தயக்கத்துடன் "OK....." என்றாள்.
 
"Next week பண்றேன். Takecare.. bye", என்று போனை பட்டென்று கட் பண்ணினான்.
 
சித்ராவின் மனதிற்கு ஏனோ நெருடலாக இருந்தது. வழக்கமாக போனை வைக்கும் போது லவ் யூ என்று சொல்லிவிட்டு, நான்கைந்து முத்தமாவது கொடுப்பான். சித்து என்ற நூறு முறையாவது சொல்வான். இப்போது அதையெல்லாம் செய்யவில்லை. பேச்சில் வழக்கமான தொனி இல்லை. காதல் இல்லை. ஏதோ கடமைக்கு பேசிய மாதிரி தான் இருந்தது. பிரச்சனையில் இருக்கிறான். வெளியே ஆட்கள் இரண்டு பேர் இருக்கிறார்கள். அதனால் அவசரத்தில், பதட்டத்தில் பேசுகிறான். இதெல்லாம் எதிர்பார்க்க முடியாது என்று அவளே சமாதானமும் சொல்லிக் கொண்டாள்.
 
போனை பைஜாமா பாக்கெட்டில் போட்டுவிட்டு, வீட்டுக்குள் போவதற்காக திரும்ப, திடுக்கென்று இருந்தது.
 
டிரான்ஸ்பார்மரில் கை வைத்தது போல் அவளுக்கு அதிர்வலைகள்.
 
வீட்டின் பின்பக்க வாசலில், இடது பக்க தோளால் சாய்ந்த படி, கால்களை கிராஸ் செய்து, தாமஸ் பார்த்து கொண்டிருந்தான்.
 
அதே நேரம்,
 
பெரிய கருப்பன் பிரபாவதி வீட்டிற்கு சென்று, அவளை கூட்டிக்கொண்டு, நிலத்தை பார்ப்பதற்காக, இருவரும் ஊருக்கு மேற்கு பக்கமாக செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்கள்.
 
கருப்பன்:  அளக்குறதுக்கு யாரு வராங்க? கவர்மெண்ட்ல இருந்து வர ஆளா?
 
பிரபாவதி: இல்லப்பா.. இப்போதைக்கு நமக்கு தெரிஞ்ச ஆளை தான் கூப்பிட்டுருக்கேன். ரொம்ப நாளா கிடப்பிலேயே போட்டாச்சு. எப்படியும் பக்கத்து நிலத்துக்காரன் நம்ம இடத்துல கொஞ்சம் வளச்சிருப்பானு நினைக்கிறேன். அதனால நம்ம ஆட்கள் மூலம் அளந்துட்டு, அதுக்கப்புறம் கவர்மெண்ட் சர்வேயரை கூப்பிடலாம்.
 
கருப்பன்: "பக்கத்து நிலம்  யாருடையது???" யோசித்தபடியே கேட்டார்... ஞாபகம் வந்தது.
"அந்த சண்முகம் பயல் தானே?"
 
பிரபா: ஆமப்பா...
 
கருப்பன்: அவன் செஞ்சாலும் செஞ்சிருப்பான். இவ்வளவு நாள் நீ சும்மா விட்டுருக்க கூடாது. அளந்து ஒரு வேலியாவது போட்டுருக்கணும். கோட்டை விட்டுட்டே.
 
பிரபா: எங்கப்பா செய்ய முடிஞ்சது? எனக்கு இருக்கிற பிரச்சினையை பாக்குறதுக்கே நேரம் சரியா இருந்தது.
 
இருவரும் நடந்தபடியே பேசிக் கொண்டு போய்க் கொண்டிருக்க, டப டப வென  புல்லட் வரும் சத்தம் கேட்டது. முத்துப்பாண்டியின் புல்லட்டு தான் என்று திரும்பி பார்க்காமலேயே இருவருக்கும் தெரிந்தது. 
 
பாண்டி: ஒரு நிமிஷம் நில்லுங்க, பேசணும்.
 
இருவரும் நின்று, திரும்பினார்கள்.
 
புல்லட்டை ரோட்டோரமாக நிறுத்திவிட்டு, அவர்களை நோக்கி சென்றான். எப்படியும் கன்னாத பின்னாவென்று  திட்டுவான். மரியாதை கெட்ட பயல், அடிக்கக் கூட வரலாம் என்று பெரிய கருப்பன் தயாரானார்.
 
நேராக அவரை நோக்கி வந்த முத்துப்பாண்டி, பட்டென்று காலில் விழுந்தான்.
 
பெரிய கருப்பனுக்கு அதிர்ச்சி. அவர் இதை எதிர்பார்க்கவில்லை.
 
"ஐயோ எழும்புபா... எதுக்கு இதெல்லாம்...", என்று அவன் தோளை தொட்டு தூக்கி விட்டார்.
 
"என்ன மன்னிச்சிட்டேன்னு சொல்லுங்க. அப்பதான் எழும்புவேன்", அவர் காலை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
 
கருப்பன்: மன்னிக்கிறதுக்கு என்ன இருக்கு? இப்ப என்ன திடீர் மரியாதை. நீ பஸ்ட் எழும்புபா.
 
முத்துபாண்டியன் எழும்பினான். திமிரான பாடி லாங்குவேஜ் முற்றிலுமாக மாறி குழைந்து கொண்டு நின்றான்.
 
பிரபாவதிக்கு ஆச்சரியம். முத்துப்பாண்டியை இப்படி ஒருநாளும் அவள் பார்த்ததில்லை.
 
"தாத்தா, எனக்கு இனிமே வேற வழியில்ல. நீங்க தான் என்னை காப்பாத்தணும். நான் பெரிய சிக்கலில் இருக்கேன். தயவுசெய்து காவண வீட்டை விற்பதற்கான அனுமதியை தரணும். நிச்சயமா பெரிய தொகை கிடைக்கும். அதில் வருகிற பணத்தை பாதி தங்கச்சிங்களுக்கு கொடுத்துடறேன்."
 
பெரிய கருப்பன் சிரித்தார்.
 
"இவ்வளவு நாள் என்னை மிரட்டினே, அகலை மிரட்டினே, வாத்தியாரை மிரட்டினே, எதுவும் நடக்கல. அதனால இறங்கி வந்து, கெஞ்சுரியா?"
 
"இல்ல தாத்தா, உண்மையிலேயே எனக்கு என்ன செய்றதுன்னு தெரியல. ரொம்ப இக்கட்டுல இருக்கேன். அவங்க உங்களுக்கு பேத்திங்கன்னா... நான் உங்களுக்கு பேரன் தானே. நான் மட்டும் என்ன வேற்று ஆளா? எனக்கு இரக்கம் காட்ட மாட்டீங்களா?"
 
"டேய் டேய் நிறுத்துடா? நான் உன் அப்பனுக்கு அப்பன். மொச புடிக்கிற நாயை மூஞ்ச பாத்தாலே தெரியாதா? சொத்து பிரிக்கும் போதே உனக்கு தேவைக்கு அதிகமா கொடுத்தாச்சு. அதை நீ சீட்டாட்டத்திலும், குடிலயும், கூத்தியாகிட்டயும் கொடுத்து அழிச்சுக்கிட்டு, இப்போ அந்த பாவப்பட்ட பிள்ளைகளுக்கு கொடுத்த காவண வீட்டை கேட்டா எப்படி? வீட்டை வித்து பாதி பணம் கொடுப்பதை ஏத்துக்க முடியாது. முழு பணமும் அவங்க கைல கிடைக்கணும். அதுக்கு  நாங்க தான் நேரடியா விற்கணும். எனக்கு வேலை இருக்கு. நீ இடத்தை காலி பண்ணு"
 
பாண்டி: "சிமெண்ட் கம்பெனி காரங்க கிட்ட அட்வான்ஸ் வாங்கிட்டேன். அவங்க பெரிய இடம். இப்ப நான் சொன்னபடி செஞ்சு கொடுக்கலைன்னா என்னை உண்டு இல்லைன்னு ஆக்கிருவாங்க. அட்வான்ஸ் திரும்பி கேப்பாங்க. அதுவே பெரிய தொகை. இல்ல, இப்ப நீங்க அளக்க போயிட்டு இருக்கீங்களே! இந்த நிலத்தையாவது எனக்கு எழுதி கொடுங்க", என்று பரிதாபமாக கெஞ்சும் குரலில் கேட்டான்.
 
கருப்பன் மைண்ட் வாய்ஸ்: இந்த விஷயம் இவனுக்கு எப்படி தெரியும்?
 
"என்கிட்ட கேக்காம எப்படி நீ அட்வான்ஸ் வாங்கலாம்? நீ வேறு வகையில் இழந்த பணத்தை, காவண வீட்டை, அப்புறம் நான் சொந்தமா சம்பாதித்த நிலத்தை வைத்து மீட்கலாம்னு நினைச்சா எப்படி? இப்பவும் ஒண்ணு கெட்டு போகல. நீ வாங்குன அட்வான்ஸ் தொகையை எனக்கு கொடுக்க கூட வேண்டாம்.  சிமெண்ட் கம்பெனிகாரங்க கிட்ட நான் நேரடியாவே பேசுறேன். முழுத் தொகையும் எனக்கு தான் வரணும். வீட்டை சிமெண்ட் கம்பெனிக்காரங்களுக்கே  வித்துடுறேன். 
 
மேற்கு நிலத்தையும் உனக்கு கொடுக்குற மாதிரி அபிப்பிராயம் இல்லை. இது என்னுடைய நாலு பேத்திகளுக்கு தான் போகும்.  மேற்கொண்டு பேசுறதுக்கு ஒண்ணுமில்ல. யோசிச்சு சொல்லு", என்று பெரிய கருப்பன் வேஷ்டி நுனியைப் பிடித்துக் கொண்டு, நடையை கட்ட... 
 
சற்று நேரம் நின்ற பிரபாவதி, முத்துப்பாண்டியை சமாதானப்படுத்தலாமா என்று யோசிக்க, பின்னர் யோசனையை மாற்றிக் கொண்டு, பெரிய கருப்பன் பின்னால் ஓட்டமும் நடையுமாக சென்றாள்.
 
விசுக் விசுக்கென இருவரும் போய்க் கொண்டிருப்பதை பார்த்ததும், பரிதாப முக முடியை பாண்டி கழட்டி எறிந்தான். கருப்பனையே உக்கிரமாக பார்த்துக் கொண்டிருந்தான். சில பல முடிவுகளை எடுத்தான்.
 
அடுத்த வாரத்தில், 
 
எபிசோடு ஆரம்பத்தில் சொல்லப்பட்ட, ரஸ்தா காடு ஊரை புரட்டி போட்ட  அதிர்ச்சிகரமான சம்பவங்கள்  நடந்தது.
 
அடுத்த எபிசோடு வரைக்கும் காத்திருக்க முடியாதவர்களுக்கு,
 
அந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள் என்னவென்று இப்போதே நியூஸ் சேனல் தலைப்பு செய்தி போல், சொல்லிவிடலாம்.
 
"ரஸ்தா காட்டில் தொடர் கொலைகள்.....  தனிப்பட்ட பகையா? அல்லது முனி ஆட்டம் காரணமா? மக்கள் பீதி..."
 
தொடரும்
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 26
 
தாமஸ் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்ததும், சித்ராவுக்கு அபரிதமாக வியர்த்தது. கொஞ்சம் பயம், கொஞ்சம் பதட்டம், கொஞ்சம் சங்கடம் எல்லாம் சேர்ந்து கொண்டது அவளை.
 
அவனை நோக்கி வந்தாள்.
 
தாமஸ் எதுவும் பேசாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
 
காற்று அவள் டிரஸ்சை உடலோடு ஒட்ட வைத்தபடி கூந்தலை கலைத்துக் கொண்டிருந்தது.
 
சித்ரா: Toms, சும்மா பிரெண்ட் கூட பேசிகிட்டு இருந்தேன்...
 
அவளின் செழிப்புகள் மேலோங்கி தெரிந்ததால், வயிற்றினருகே போட்டிருந்த டீசர்ட்  முடிச்சை அவிழ்த்தபடியே சொன்னாள். 
 
சித்ராவுக்கு உள்ளுக்குள் படபடப்பாக இருந்தாலும், வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பதற்காக சிரமப்பட்டாள்.
 
தாமஸ் எதுவுமே பதில் சொல்லவில்லை. ஆனால் அவள் மேல் பதித்திருந்த பார்வையை எடுக்கவில்லை.
 
சித்ரா: எங்கேயோ அவசரமா போகணும்னு சொன்னீங்க. சீக்கிரமா வந்துட்டீங்க? போகலியா?.... என்று கேட்டு விட்டு அசட்டு சிரிப்பு சிரித்தாள்.
 
தாமஸ் பேசவில்லை.
 
சித்ரா வெற்று பார்வை பார்த்தாள். ஒரு சில வினாடிகள் தர்ம சங்கட மௌனத்தில் கரைய,
 
சித்ரா: என்ன அப்படி பாக்கறீங்க?
 
துளிர்க்க துடித்த கண்களை சித்ரா அடக்கினாள். அதையும் மீறி கண்களில் கண்ணீரின் பளபளப்பு. அவள் உதடுகள் துடித்தது.
 
தாமஸ் பார்த்துக் கொண்டே இருந்தான்.
 
சித்ரா தடுமாற்றமான குரலில்,
"நான் ஒரு பையன லவ் பண்றேன். வீட்ல யாருக்கும் தெரியாது. அவன் கூட தான் பேசிகிட்டு இருந்தேன். தயவு செய்து நீங்க யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. தாத்தா இருந்ததுனால வீட்ல வச்சு பேச முடியல. அதனால தான் இங்க வந்து பேசினேன்." 
 
அடுத்தவரின் பர்சனல் விஷயங்களில் பிரவேசித்து, கேள்வி கேட்பதில், விளக்கம் பெறுவதில் இருந்த ஆரம்ப சங்கடங்கள் ஏற்கனவே இருவருக்கும் விலகியிருந்தன. ஆனால் அவளுடைய காதல் பற்றி சித்ரா சொல்லாததுக்கு காரணம், அவள் லவ் மேட்டரில் இருக்கும் குழப்பமான நிலைமைதான்.
 
ஓஹோ அப்படியா? யார் அந்த பையன்? எவ்வளவு நாளா லவ்? என்று சாதாரண கேள்விகள் அவன் கேட்பான் என்று எதிர்பார்த்தாள்.
 
தாமஸ் எதுவும் பேசாமல் அவள் கண்களுக்குள் ஊடுருவி பார்த்துக் கொண்டிருந்தான். அவன் பார்வை அவளை எடை போட்டுக் கொண்டிருந்தது.
 
சித்ரா: சரி நான் கிளம்புறேன்... என்று சொல்லிவிட்டு கிளம்பி போக முயற்சித்தாள். அவன் வாசலை மரித்து கொண்டு நின்றதால், வீட்டுக்குள் போக முடியாமல் அங்கேயே நின்றாள். வீட்டை சுற்றி தோட்டத்து வழியாக போய்விடலாமா என்று திரும்பி பார்த்தாள். அவள் கால்களும் தடுமாறியது.
 
தோட்டத்து வழியாக போக திரும்பியவள், ஏனோ நின்றாள். வெடித்துக்கொண்டு அழுதாள்.
 
தாமஸ் பார்த்துக் கொண்டே இருந்தான்... எதுவுமே கேட்கவில்லை.
 
சித்ரா குற்றவாளி கூண்டில் நிற்பதைப் போல் உணர்ந்தாள். சொல்ல ஆரம்பித்தாள்.
 
"நாகர்கோவில் அரவிந்த் மோட்டார்ஸ் ஓனர் பையனை தான் லவ் பண்றேன். வசதியான குடும்பம். அவங்க அப்பா கொஞ்சம் செல்வாக்கானவரு. நாலு மாசமா எந்தப் பிரச்சினையும் இல்லாம தான் போயிட்டு இருந்துச்சு. இப்ப விஷயம் அவங்க வீட்டில் தெரிஞ்சிட்டதுனால,  என்கூட பழக்கம் வச்சிக்கிட்டா, என்னையும், என் குடும்பத்தையோ காலி பண்ணிடுவேன்னு அவங்க அப்பா மிரட்டிருக்காரு.  அதைத்தான் இப்ப போன் பண்ணி சொன்னான். கொஞ்ச நாள் போகட்டும் பொறுமையா இருக்கலாம்னான்... நாளாவட்டத்தில் பேசி புரிய வச்சுக்கலாம்னு சொன்னான். தயவுசெய்து அக்கா கிட்டையோ, தாத்தா கிட்டையோ சொல்லிடாதீங்க.. அவங்க என் மேல வச்சிருந்த நம்பிக்கையே போயிரும். உடைஞ்சு போய்டுவாங்க..."
 
கதவில் சாய்ந்து நின்றிருந்த தாமஸ் நிமிர்ந்து நின்றான். தொண்டையை செருமி கொண்டான். பின்னர் அவளைப் பார்த்து,
 
"சேச்சே!!! இந்த விஷயத்தைல்லாம் நான் சொல்லுவேனா? நீ பயப்பட வேண்டாம்", என்றான்.
 
சித்ரா நன்றி பெருக்குடன் அவனைப் பார்த்தாள்.
 
"Thank you toms...."
 
தாமஸ் ஏளன புன்னகையுடன்: ஆனா அதுக்கப்புறம் நீ பேசுனியே...  பீரியட்ஸ், பத்தாம் தேதி டேட்.... தள்ளி போயிருச்சு... பயமாருக்கு... இந்த விஷயத்தை மறக்காம சொல்லுவேன்.
 
சித்ரா பதறி போய், வேகமாய் சென்று அவன் கையை பிடித்துக் கொண்டாள்.
 
"அய்யய்யோ என்ன சொல்றீங்க? வேண்டாம் Toms. அந்த விஷயம் வெளியே தெரிஞ்சா, அக்காவும் தாத்தாவும் உயிரையே விட்டுடுவாங்க " என்று கதறினாள்.
 
தாமஸ்: அப்ப என்ன நடந்துச்சுன்னு ஃபுல்லா சொல்லு?
 
சித்ரா கண்ணீரை துடைத்துக் கொண்டு, மிடறு விளங்கியபடி சொல்ல ஆரம்பித்தாள். அவள் கழுத்தில் பச்சை நரம்பு ஒன்று அகஸ்மாத்தாக துடித்தது.
 
ஐந்து நிமிடத்திற்கு பிறகு,
 
சித்ரா எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டு, எந்த கோணத்தில் தாமஸ் பேசப்போகிறான் என்று தெரியாததால், கண்ணில் நீர் மல்க தலை குனிந்தபடி நின்றிருந்தாள்.
 
தாமஸ் முகத்தில் எந்த உணர்ச்சிகளையும் காட்டாமல், அமைதியாக யோசித்து கொண்டிருந்தான்.
 
ஒரு சில நொடிகள் கழித்து,
 
தாமஸ்: உன் ஸ்டேட்மெண்ட் பிரகாரம் பார்த்தா, நாலஞ்சு மாசமா சித்து சித்துன்னு உன் பின்னால சுத்தி லவ் பண்ணினவன்..... திருப்பரப்பு ட்ரிப் போயிட்டு வந்ததுக்கப்புறம் உன் கூட பேசுவதை நிறுத்திருக்கான். இதுக்கிடையில் எவனோ ஒருத்தன்,  அரவிந்த் கேரக்டர் சரியில்லன்னு உனக்கு வார்னிங் கொடுத்திருக்கான்.  நீ சொல்ற எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பார்க்கும் போது, அரவிந்த் நடவடிக்கைகள் சந்தேகம் ஏற்படுத்துது. அவன் நல்லவனா இருந்தா அவனுக்காக வெயிட் பண்றதுல அர்த்தம் இருக்கு. ஆனா அதுக்கு முன்னால இருக்கிற மிக முக்கிய பிரச்சனை. நீ பிரக்னண்டா இருக்கியா இல்லையானு தெரியல. அதுதான் முதலில் தெரிஞ்சுக்கணும்.
 
சித்ரா: ஐயோ!!! நான் ஹாஸ்பிடலுக்கு வரமாட்டேன்.
 
தாமஸ்: வீட்லருந்தே தெரிஞ்சிக்கிறதுக்கு நிறைய வழிகள் இருக்கு. அது இப்போ பிரச்சனை இல்லை. ஆனால் அரவிந்த் விஷயம் தான் குழப்பமா இருக்கு.
 
சித்ரா கலவர முகத்துடன்...  "அரவிந்த் என்னை ஏமாத்த மாட்டான்னு நம்பிக்கை இருக்கு. ஆனா பஸ் ஸ்டாப் இளைஞன் ஏன் அப்படி சொல்லணும்னு தான்    குழப்பமாயிருச்சு... அரவிந்த்னால இப்ப சுதந்திரமா வெளியில் வர முடியல. பேச முடியல. காவலுக்கு ஆள் போட்டுருக்காங்க. எவ்வளவு நாளானாலும் காத்திருக்க சொல்லிருக்கான். பிரக்னன்சி விஷயத்துல கூட நான் பாத்துக்குறேன்னு நம்பிக்கையா சொன்னான்... தயவு செய்து நீங்க யார்கிட்டயும் சொல்லிடாதீங்க. அக்காவும் தாத்தாவும் உயிரையே விட்டுடுவாங்க", என்றாள் கை கூப்பியபடி.. அவள் கைகள் நடுங்கி கொண்டிருந்தது.
 
தாமஸ்: எவ்வளவு பெரிய விஷயம், அவங்க கிட்ட சொல்லாம எப்படி இருக்கிறது? நிச்சயமா முடியாது.
 
சித்ரா ப்ளீஸ் ப்ளீஸ் என்று அவன் கையைப் பிடித்தபடி கெஞ்ச,
 
தாமஸ்: அப்ப நீ நான் சொல்றபடி நடக்கணும்.
 
சித்ரா அவனை பரிதாபமாக பார்த்து, "நான் என்ன பண்ணனும்?" என்று கேட்க...
 
தாமஸ் அவளைப் பார்த்து  புன்னகைத்தான்.
 
"திருப்பரப்புக்கு போய், ரூம் போட்டு ஒரு தடவை தப்பு பண்ணினேல்ல. இரண்டாவது தடவையும் பண்ணுனா என்ன?"
 
பிடித்திருந்த அவன் கைகளை பட்டென்று விட்டு விட்டு, சித்ரா அவனை திகைத்துப் போய் பார்க்க,
 
தாமஸ்  விஷமத்தனமாக சிரித்து விட்டு, சொல்ல ஆரம்பித்தான். சித்ராவின் கண்களில் கலவரம்.
 
பின் குறிப்பு: நிலத்தை அளப்பதற்காக வெளியே சென்றிருந்த பெரிய கருப்பன், நிலத்தின் வரைபடம் தேவைப்பட்டதால், திரும்பவும் வீட்டுக்கு எடுப்பதற்காக வர....
 
வரைபடத்தை தேடி எடுத்து, கொடுத்து விடுவதற்காக சித்ராவை தேடியதையும்,
 
சித்ரா வீட்டில் இல்லாததை பார்த்து, அவளைத் தேடி காவண வீட்டிற்கு சென்றதையும்,
 
அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்டதையும்,
 
படார் படார் என்று அவர் உள்ளம் எரிமலையாய் வெடித்ததையும், அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை....
 
மாலை 6.30 மணி
 
ஆபீஸ் முடிந்து வரும் போது, டே கேரில் இருந்து காவ்யாவை கூட்டிக்கொண்டு சற்று முன்னால்தான் வீடு வந்து சேர்ந்தாள் ஹேமா.
 
முகம் கை கால் கழுவி விட்டு அவளுக்கு டீ போட்டாள். குழந்தைக்கு ஹார்லிக்ஸ் கலந்து கொடுத்தாள். சற்று ஓய்வாக சேரில் அமர, காவியா ஓடி வந்து அவள் காலை பிடித்துக் கொண்டாள்.
 
காவியா: மம்மி, இன்னைக்கு என்ன பாக்குறதுக்கு ஒரு அங்கிள் வந்துருந்தாரு. சாக்லேட்ல்லாம் கொடுத்தார்.
 
ஹேமா: யார் அந்த அங்கிள்?
 
காவியா: உங்க பிரண்டுன்னு சொன்னார். போன்ல கூட பேசினாராமே.
 
ஹேமா: வேற என்ன சொன்னார்?
 
காவியா தலையை ஒரு சைடு சாய்த்து ஒரு விரலை நாடியில் தட்டியபடி யோசித்தாள். "வேற ஒண்ணும் சொல்லல,  காவியா பாப்பாவுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாதுல்ல, எப்பவும் இதே மாதிரி ஜாலியா இருக்கணும்லன்னு கேட்டார்... நான் ஆமான்னு சொன்னேன். அப்ப உங்க அம்மா கிட்ட நான் சொல்றபடி செய்யச் சொல்லுன்னு சொல்லிட்டு போனார்"... என்றாள்.
 
ஹேமா சடாரென்று நிமிர்ந்தாள். 
 
போன் செய்தவனுக்கு எப்படி காவியா இருக்கும் day care தெரியும்?
 
எப்படி பார்க்க அனுமதித்தார்கள்?சாயங்காலம் குழந்தையை கூப்பிட போகும்போது கூட day care attender, அந்த லேடி ஒன்றும் சொல்லவில்லையே...
 
யோசித்தாள்.
 
கரெக்ட், அவள் போகும்போது அந்த லேடி யாரோ கெஸ்ட்களிடம் பேசிக் கொண்டிருந்தாள். அதனால் சொல்ல மறந்திருப்பாள்.
 
போனில் பேசும் போது, என்னைப் பற்றி எல்லா விஷயமும் தெரியும் என்று சொன்னானே!! நீதான் வேணும். இனிமேல் பழகலாம் என்று அதிகார தோரணையில் ஒருமையில் வேறு பேசினான்.
 
யார் இவன்? இவனின் நோக்கம் என்ன?
 
அகல்யாவிடம் சொல்ல வேண்டும்.
 
ஹேமாவுக்கு நடுங்கியது.
 
 
தொடரும்
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது.
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 27
 
ஜோசப் டீக்கடை 
அதே நேரம்
 
டீக்கடையில் இருக்கும் அட்மாஸ்பியர் கேரக்டர்ஸ் செல்லப்பன், அமிர்தம், பெருசு தங்கதுரை இருந்தார்கள். இம்முறை அவர்களோடு சகாயராஜும் இருந்தான். காரசாரமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலில் குழப்படிகள், டெல்லி அரசியல், காவிரி நீர் பங்கீடு, ஸ்டெர்லைட் பிரச்சனை, இதெல்லாம் அலசி ஆராய்ந்து கடைசியில்...
 
தங்கதுரை: கடற்கரையில் இருக்கிற சண்டி முனி கோயிலில் இருந்து தான் முனிவோட்டம் ஆரம்பிக்கும். அங்கிருந்து வடக்கு பக்கமா சுடுகாடு தாண்டி, ஊருக்குள்ள நுளையிற முள்ளு காடு வழியா சுத்தி, அப்படியே ஒரு ரவுண்டு அடிச்சு, திரும்ப கடற்கரை வழியா முனி கோயிலுக்கே வந்து சேரும். இதுல என்ன ஆயிப்போச்சுன்னா.... கரெக்டா அந்த வழியில் இருளாயி கோவில் கட்டினதாலையும், காவண வீட்டை முனிக்கு நேர்ந்து விட்டதுனாலயும், முனி ஓட்டம் தடம் மாறிடுச்சு. வடக்கு பக்கம் போகாமல் தெற்கு பக்கம் திரும்பி, புது கடற்கரை ரோடு வழியாக போயி, கீழ வீதி கடைசி தெரு வழியா ஊருக்குள்ள நுழைஞ்சு, காவண வீட்டை தொட்டு, அப்படியே மேட்டு தெரு வழியா முனி கோயிலுக்கு வந்து சேர்ற மாதிரி மாறிப்போச்சு.... என்று சொல்லி, டீயை குடிக்க ஆரம்பித்தார்.
 
செல்லப்பன்: கரெக்டுதான். இப்ப ராத்திரி மீன் பிடிக்க போறவங்க கூட... கீழ வீதி தாண்டி தான், கடற்கரையில் படகைல்லாம் நிறுத்தி வச்சிருக்காங்க. யாருமே ராத்திரி அந்த பாதையில் போகாததால் தான், இப்போ ரெண்டு வாரமா ஊர் அமைதியா இருக்கு. இல்லன்னா இந்நேரம் யாரையாவது போட்டுருக்கும்.
 
ஜோசப்: என்னண்ணே கூகுள் மேப் மாதிரி, கரெக்டா முனி ஓட்டத்துக்கு மேப் போட்டு சொல்றீங்க?
 
தங்கதுரை கடைசி சொட்டு வரை டீயை குடித்துவிட்டு கிளாசை கீழே வைத்தார். "ஜோசப்ப்பு... காலங்காலமா இப்படித்தான் நடந்துகிட்டு இருக்கு. முன்னாலல்லாம் அந்தப் பாதையில தான் நிறைய சாவுகள் விழுந்துச்சு. முனி ஓட்டம் போது யாரு குறுக்கிட்டாலும், ஒரே அறை. அவ்வளவுதான் காலி. ஊருக்குள்ள பெரியவங்க எல்லாருக்குமே இந்த விஷயம் தெரியும். ரொம்ப நாளா முனி ஓட்டம் இல்லாததுனால, இப்ப இருக்குற பசங்களுக்கு விஷயம் தெரியாது. இப்ப திடீர்னு ஆரம்பிச்சிருக்கு. செல்லப்பன் சொன்ன மாதிரி கொஞ்ச நாளா அந்த பாதையில ராத்திரி யாரும் பரிமாறதில்லைங்கறதுனால சாவு எதுவும் விழல.
 
சற்று தூரத்தில், "வெற்றி கொடி கட்டு" வடிவேலு போல் கை விரல்களில் சிகரெட் புகைந்து கொண்டிருக்க, திருமுடி வந்து கொண்டிருந்தான்.
 
செல்லப்பன் அமிர்தம் காதில்,
"இப்ப வேணும்னா பாரு சகாயராஜி எழும்பி நடையை கட்டுவான்..."
 
அவன் சொல்லி முடிக்கும் முன்னரே, சகாயராஜ் எழும்பி லுங்கியை மடித்து கட்டிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.
 
செல்லப்பன் 'நான் சொன்னேன்ல' என்பது போல் அமிர்தத்தை பார்த்தான்.
 
சகாயராஜ் திருமுடியை கடந்து செல்லும்போது,
 
திருமுடி புகையை வானத்தை நோக்கி ஊதி விட்டு, "சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டிப்பது நியாயமா?" என்று பாட்டு பாடினான்.
 
சகாயராஜ் ஒன்றும் பேசாமல் நடந்து செல்ல, திருமுடி டீக்கடை பெஞ்சில் வந்து அசால்டாக உட்கார்ந்தான்.
 
செல்லப்பன்: என்னப்பா, இப்பல்லாம் உங்க சித்தப்பா உன்ன பார்த்தாலே, வேறு பக்கமா போய்டராரு, என்ன சமாச்சாரம்?
 
திருமுடி நெற்றியில் விரல்களை தேய்த்து,
"Its all fate" என்றான்.
 
செல்லப்பனும் அமிர்தமும்... புரியாமல் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.
 
இரவு பத்து மணி
 
சமையல் கட்டில் வேலையை முடித்துக் கொண்டு முந்தானையால் கையை துடைத்தபடியே வீட்டை விட்டு வெளியே சிட் அவுட்டுக்கு வந்தாள் அகல்யா.
 
அவள் வந்ததை கவனிக்காமல், 
 
பெரிய கருப்பன், கோபம், எரிச்சல், வெறுப்பு என்ற உணர்ச்சி கலவையில் அமைதியாக இருந்தார். 
 
என்ன நடக்கிறதென்று பார்த்ததும், நியாயப்படி அவர் பொங்கியிருக்க வேண்டும். ஆனால் அவர் வயதிற்கும் அனுபவத்திற்கும் அமைதியாக இருந்தபடி,
முள்ளு மேல் விழுந்த சேலையை எப்படி எடுப்பது என்று யோசித்துக் கொண்டிருந்தார்.
 
அகல்யா: என்ன தாத்தா பயங்கர யோசனையா இருக்கீங்க? கண்ணெல்லாம் சிவந்து போய்ருக்கு? ஏதாவது பிரச்சனையா?
 
கருப்பன் அவளை விரக்தியாய் திரும்பிப் பார்த்தார். முகத்தை சாதாரணமாக வைக்க முயற்சி செய்தார். 50 சதவீதம் சாதாரண முக பாவனையை ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது.
 
"ஒண்ணுமில்லம்மா... வழக்கமா இருக்கிற பிரச்சினைகள் தான்... நீ இன்னைக்கு போன இன்டர்வியூ என்னாச்சு?"
 
அகல்யா:  ஓகே தான் தாத்தா...GIFT ங்கிற ngoல அட்மினிஸ்ட்ரேடிவ் ஆபிஸர் வேலை. திங்கட்கிழமையிலிருந்து ஜாயின் பண்ண சொன்னாங்க. சம்பளம் தான் கட்டுபடி ஆகல. பேசி இருக்கேன். நாளைக்கு NGO டைரக்டரை போய் பார்க்கணும்.
 
கருப்பன் பெருமூச்சுடன் எழுந்து நின்றார்.
 
கருப்பன்: சித்ரா என்ன பண்றா?
 
அகல்யா: என்னமோ தெரியல, சாயங்காலத்திலிருந்து பார்க்கிறேன், என்னமோ தலையில் இடி விழுந்த மாதிரி  சோகத்துல இருக்கிறா. என்னன்னு கேட்டா உடம்பு சரியில்லைன்னு சொன்னா. காலேஜ்ல பிரண்ட்ஸ்ங்க கூட ஏதோ பிரச்சினை போலிருக்கு...  ஏற்கனவே ஒரு தடவை, இப்படித்தான் சண்டை போட்டுக்கிட்டு, இரண்டு நாள் உம்முன்னு இருந்தா. இந்த காலத்து  பசங்கள புரிஞ்சுக்கவே முடியல.
 
கருப்பன் சுருதி குறைந்த குரலில், "ஆமா, யாரையும் புரிஞ்சிக்கவே முடியல..." என்றார்.
 
பின்னர் அகல்யாவை பார்த்து,
 
"சரி, அப்ப நீ போய் சீக்கிரமா தூங்கு."
 
அகல்யா: நீங்களும் தூங்குங்க. பிரச்சனையை நினைச்சு ராத்திரி குழப்பிக்காதீங்க... தூக்கம் போயிரும்.... என்று சொல்லிவிட்டு வீட்டுக்குள் சென்றாள்.
 
ஹாலுக்குள் நுழைந்த அகல்யா, டிவி பார்த்துக் கொண்டிருந்த கார்த்தியை பார்த்து,
 
"10 மணிக்கு மேல்
என்ன டிவி வேண்டி கிடக்கு. ஆப் பண்ணுடி... கழுத...."
 
டிவி ஆஃப் பண்ணப்பட்டது.
 
கருப்பன் அகல்யாவை கவலையாக பார்த்துக் கொண்டிருந்தார். 
 
இந்த சின்ன பெண்ணுக்கு எவ்வளவுதான் பிரச்சினைகள் வரும்? இவளை சுற்றி எவ்வளவு சதி வலை தான் பின்னுவார்கள்?
 
முத்துபாண்டியிடம் பேசிப் பார்க்கலாமா? 
 
மொபைல் போனை கையில் எடுத்தபடி யோசித்தார். திரும்பவும் கீழே வைத்தார். தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண பிரச்சினை, ஏற்கனவே இருந்த பிரச்சினைகளை மறக்கடித்து இருந்தது.
 
என்னென்னவோ யோசித்து, அவர் உள்ளம் இரும்பு உலை போல், கொதித்துக் கொண்டிருந்தது. சிட் அவுட்லயே உலாத்தி கொண்டிருந்தார்.
 
பேத்திகளை, தன்னை நம்பி விட்டுட்டு போன மகனையும், மருமகளை நினைத்துக் கொண்டார்.
 
அவர் கண்களில் ஈரம் கசிந்தது. துண்டை எடுத்து கண்களை ஒற்றிக்கொண்டார்.
 
காவண வீட்டிலிருந்து வெளிப்பட்ட தாமஸ், கேட் பூட்டியிருக்கிறதா என்று பார்த்தான். அன்றைக்கு இரவு சம்பவம் நடந்த பிறகு, இரவு நேரங்களில் அவன் கேட்டை தாண்டி வெளியே செல்வதே இல்லை. திரும்பி வீட்டை நோக்கி நடக்கும் போது, மேட்டு வீட்டை பார்க்க, சிட்டவுட்டில் பெரிய கருப்பன் தூங்காமல் உலாத்தி கொண்டிருப்பது தெரிந்தது.
 
தாமஸ் நெற்றியில் சந்தேக சுருக்கங்கள்.
 
கடற்கரையோரமாக,
 
தென்னை மரங்களும், பெயர் தெரியாத வேறு சில மரங்களும் தலை விரித்தும் விரிக்காமலும் நின்றிருந்தன. ராத்திரி நேரத்தில் மேலிருந்து பார்த்தால் கடற்கரை அழகா இருக்கும் என்று யாரோ சொன்னதை கேள்விப்பட்டு, நிலவு நடுவானில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. 
 
அலைகள் இளநீரை பறிக்க ஆசைப்பட்டு, தென்னைகளின்  கால்களை தொட்டு தொட்டு விளையாடி கொண்டிருந்தன.
 
ரஸ்தா காடு தூக்கத்தில் ஆழ்ந்திருந்தது. 
 
இரவு செக்கலுக்கு செல்பவர்கள் கடற்கரையில் தங்கள் இருப்பிடத்தை மாற்றி, கீழ வீதிகளை தாண்டி, மற்றொரு இடத்திற்கு படகுகளை இடம் மாற்றி இருந்தார்கள். 
 
ரஸ்தா காடு சாலைகள் கைவிடப்பட்டு வெறிச் என்றிருந்தது.
 
30 நிமிடத்திற்கு பிறகும்.... வெறிச்
 
31 ஆவது நிமிடம், கடற்கரை சாலையில் திடீர் அதிர்வுகள். கருப்பாக ஏதோ சுழல் காற்று  தடதட வென அதிர்வுடன் வேகமாக வந்தது. சுழல் காற்று சுழண்டோ நகர்ந்தோ  வராமல், பந்து போல் துள்ளித் துள்ளி வந்தது. 
 
கடற்கரை சாலையில் பொங்கி வழிந்து கொண்டிருந்த ஒரு குப்பைத் தொட்டி அருகே படுத்திருந்த கருநாய், திடீரென துள்ளி எழும்பி சுற்றிலும் பார்க்க.... 
 
தூரத்தில் டங்கு டங்கு என்று பந்து போல் துள்ளிவரும் கருப்பு காத்தை பார்த்ததும், மூர்க்கத்தனமாக குறைக்க ஆரம்பித்தது.
 
காத்து கருப்பு நெருங்கிக் கொண்டிருக்க, நாய் விடாமல், துள்ளி குதித்து ரோட்டின் நடுவே சென்று, அதைப் பார்த்து குறைக்க ஆரம்பித்தது.
 
காத்து கருப்பு நாயை நெருங்கியது....
 
பட்டார்....
 
வள் வள் என்று வினோதமாக சத்தமிட்ட நாய், காற்றில் தூக்கி எறியப்பட.... பல அடி தூரம் பறந்து, கடற்கரை மணலில் விழுந்து புரண்டது. புளிச்சு புளிச்சென்று அபரிதமாக இரத்தம் கக்கி, உயிரை விட்டது.
 
அதே நேரம், 
 
ஏதோ முடிவு எடுத்தவராய், பெரிய கருப்பன் கேட்டை நோக்கி நடந்தார். கேட்டை நெருங்கியதும், கேட் கொண்டியில் கைவைத்த படி ஒரு நொடி யோசித்தார். 
 
ஏதோ முடிவு எடுத்த தீர்க்கம், அவர் முகத்தில் தெரிந்தது. 
 
கேட்டை திறந்து கொண்டு,  வெளிபட்டார்.
 
தெரு காற்று வாங்கிக் கொண்டிருந்தது.
 
மேட்டு தெருவில் கால் பதித்ததும், ஒரு நொடி நின்று, மேட்டு வீட்டை திரும்பி பார்த்தார். 
 
மேட்டு வீட்டை பார்ப்பது, அதுதான் கடைசி தடவை என்று அவருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.
 
தொடரும்
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது
 

   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு  28
 
அரைகுறையாக துடைத்த  அழுக்கு முகமாக வானம் கலங்கலாக இருந்தது.  ரஸ்தா காட்டில் மரங்கள் கருப்பு நிறத்தில் இருந்து பச்சை நிறத்திற்கு மாறிக் கொண்டிருந்தன. மரங்களில் இருந்த பட்சிகள் எல்லாம் கீச் கீச் சென்று நிற மாற்றத்தை சந்தோஷப்பட்டு அறிவித்துக் கொண்டிருந்தன. வானத்தில் ஆங்காங்கே பஞ்சு மேக ஒத்தடங்கள். எங்கேயோ சுதந்திரமாக இடம் பெயர்ந்து கொண்டிருந்தது ஒரு பறவை கூட்டம்.
 
அதிகாலை நடைபயிற்சிக்காக வீட்டை விட்டு வெளியே வந்தார் சுந்தர் ராமன் வாத்தியார். சூழ்நிலையில் வெளிச்சம் ஏறிக் கொண்டிருந்தது. மேட்டு வீட்டை தாண்டும் போது வழக்கமாக திரும்பிப் பார்ப்பது போல் பார்த்தார். 
 
திடுக்கிட்டு நின்றார். வீட்டுக்குள் கேட் பக்கத்தில் யாரோ விழுந்து கிடப்பது தெரிந்தது.
 
அவசரமாக கேட்டை நோக்கி சென்று பார்க்க, விழுந்து கிடந்தது பெரிய கருப்பன். வாயெல்லாம் ரத்தம் வழிந்திருக்க, நாக்கு வெளி தள்ளியபடி, உயிரற்ற பார்வையுடன், சில்லிட்டு, சர்வ நிச்சயமாக செத்துப் போயிருந்தார்.
 
அடுத்த நொடி,
 
"ஐயோ....."
 
சுந்தர் ராமனின் அலறல் சத்தம்... ரஸ்தா காட்டை ஸ்தம்பிக்க வைத்தது.
 
விஷயம் கேள்விப்பட்ட அனைவரும் போட்டது போட்டபடி ஓடி வந்தார்கள். ரஸ்தா காடு அல்லோல கல்லோல பட்டு கலகலத்து போனது.
 
மதியம் ஒரு மணி 
 
பிரேத பரிசோதனை முடிந்து ஒப்படைக்கப்பட்டிருந்த கருப்பனின் உடல், அவர் வழக்கமாக அமரும் சிட் அவுட்டில் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு இருந்தது. 
 
முகம் தவிர மற்ற பகுதிகளில் மாலைகள். தலைமாட்டில் விளக்குகள், ஊதுபத்தி. கூட்டமாக பெண்கள் உட்கார்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தனர். ஊரிலேயே பெரிய சாவு என்பதால், உறவினர்களும் நண்பர்களும் அனைவரும் வேலை வெட்டியை விட்டுவிட்டு கலந்து கொண்டனர். கடலுக்கு யாரும் மீன்பிடிக்க செல்லவில்லை.  
 
மேட்டு வீட்டுக்கு வெளியே மைக் செட் கட்டிப் துக்க பாடல்கள் ஓடிக் கொண்டிருந்தது. மாலை போட்டு மரியாதை செய்வதற்காக சிட்டவுட்டுக்கு வெளியே ஒரு சிறிய வரிசையே உருவாகி இருந்தது. வெளியே போட்டிருந்த அவசர பந்தலில், ஒரு ஓரமாக சேரில் சுந்தர்ராமன் பேச்சு மூச்சற்று உட்கார்ந்து இருந்தார்.
 
கருப்பனின் உடல் போஸ்ட்மார்ட்டம் முடிந்து வந்ததும், மடேர் மடேர் என்று தலையில் அடித்துக் கொண்டு கார்த்திகாவும் சித்ராவும் அழ... இருவரையும் ஊர் பெண்கள் ஆறுதல் படுத்தினார்கள். சித்ரா அழ ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே மயங்கி விழுந்தாள். கார்த்திகா அவளை தாங்கி பிடித்துக் கொள்ள, அவளை ரூமுக்குள் தூக்கி சென்று படுக்க வைத்தார்கள். 
 
கார்த்திகாவிடம், ரூமை விட்டு தேவைப்பட்டால் வந்தால் போதுமென்று பிரபாவதி சொல்லியிருந்தாள்.
 
அகல்யா சிவந்திருந்த கண்களுடன், அழாமல், கைகட்டி, சிலை போல் நின்றிருந்தாள்.  யார் வருகிறார்கள், யார் போகிறார்கள், சுற்றிலும் என்ன நடக்கிறது எதுவுமே அவளுக்கு தெரியவில்லை. துக்கம் விசாரிப்பவர்களிடம் கூட பதில் பேசாமல் உறைந்து நின்றிருந்தாள்.
 
விஷயம் கேள்விப்பட்டு வந்திருந்த ஹேமா, கருப்பனுக்கு மாலை போட்டு விட்டு, அவர் காலை தொட்டு கும்பிட்டாள். அகல்யாவுக்கு ஆறுதலாக இரண்டு வார்த்தை பேசினாள். பதிலுக்கு அவள் பேசவே இல்லை. முன்னால் சேரில் இருந்த சுந்தர் ராமன் வாத்தியாரும், சரஸ்வதியும் முறைத்து கொண்டிருப்பதை பார்த்ததும்,
 
சற்று நேரம் நின்று விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பினாள்.
 
"அனாதையா எங்களை விட்டுட்டு போயிட்டீங்களே, தாத்தா", என்ற எண்ணம் மட்டும் அகல்யா மனசுக்குள் திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டிருந்தது. எல்லாமே ஏதோ கனவு போல் தோன்றியது. வேறு உலகத்தில், வேற்று கிரகத்தில் நடப்பது போல் பிரம்மை. நிகழ்காலமும் எதிர்காலமும் சந்தித்துக் கொள்ளாமல் பிரிந்து நிற்பது போன்ற உணர்வு.
 
நிழல் கொடுக்கும் ஆலமரம், வீட்டுக்கே மூலக்கல், தாங்கி பிடிக்கும் தூண், சுமைகளை தாங்கும் சுமைதாங்கி சாய்ந்தால் எப்படி இருக்கும்? சிறுவயதில் அப்பாவை அம்மாவையும் பறி கொடுத்தாள். அந்த நாள் அவளுக்கு என்றென்றைக்கும் ஞாபகம் இருந்தது. தோள் மேலே கை போட்டபடி அன்றைக்கு பூராவும் கருப்பன் தான் அவளுக்கு துணையாக இருந்தார். அன்றைக்கு அவள் தோள் மேலே போட்ட ஆதரவு கரம், இன்றைக்கு எங்கே போச்சு?
 
தாத்தா இறந்துவிட்டாரா? அந்த செய்தியை சுந்தர் ராமன் சொன்னதும், இடிந்து போய் நின்றவள், அதன்பிறகு வேறு யோசிக்கவே இல்லை. அதிலிருந்து அடுத்த எண்ணத்திற்கு அவள் போகவே இல்லை. யோசிக்கவே முடியவில்லை, ஸ்தம்பித்து போனாள்.
 
வழிந்த கண்ணீரைத் துடைத்து, மூக்கை உறிஞ்சி கொண்டு பிரபாவதி: 
"ஏண்டி இப்படி உறைஞ்சு போயிருக்க! மனசுல இருக்குற சோகத்தைல்லாம் கொட்டிரு, அழுதுரு.... என்று அவளை பிடித்து உலுக்கினாள். 
 
உலுக்கும்போது அவளின் தலையும் உடலும் ஆடியதே தவிர முகத்தில் எந்த சலனமும் இல்லை.
 
சுந்தர் ராமனின் மனைவி சரஸ்வதியும், "ஆமாம்மா அத்தை சொல்றது சரிதான். தயவுசெய்து எல்லாத்தையும் மனசுக்குள்ளே வச்சுக்காத. அழுது தீத்திரு. மனசுக்குள்ள பாரத்தை வச்சுக்கிட்டு இருந்தா தாங்க முடியாது."
 
அகல்யா அழவில்லை. உடைந்து போயிருந்தாலும், கல்லு மாதிரி பார்த்துக் கொண்டிருந்தாள். பிரபாவுக்கு சரஸ்வதிக்கும்... துக்கத்துக்கு வந்தவர்கள் ஏதாவது தப்பாக நினைப்பார்களே என்ற சங்கடம் வேறு.
 
ஒரு சொட்டு கண்ணீர் சிந்தாமல், எந்த துக்கத்தையும் வெளிப்படுத்தாமல், கை கட்டி அவள் நின்றிருப்பதை பார்த்ததும், சுத்தி இருந்தவர்கள் திகைத்துப் போனார்கள். 
 
அவள் அழாமல் உறைந்து போயிருந்ததால், அவளை அழ வைப்பதற்காக பல முயற்சிகள் செய்தார்கள். தாத்தாவின் அருமை பெருமைகளை பற்றி  பேசினார்கள். அவர் எவ்வளவு உன்னதமான  பிறவி என்று மாரில அடித்துக் கொண்டு அழுதார்கள். ஆனால் அவர்களின் முயற்சிகள் அனைத்தும் வீணானது.
 
துஷ்டிக்கு வந்த பெண்களிடையே லேசான சலசலப்பு.
 
என்ன இப்படி கல்லு மாதிரி இருக்கிறாள்? 
கொஞ்சம் கூட பாசமே இல்லையா?
சேச்சே!அப்படி இருக்காது! சின்ன பொண்ணு எவ்வளவு கஷ்டத்தை தான் தாங்குவா?
அவளுக்கு என்ன பண்றதுனே தெரியல. 
ரொம்ப உடைஞ்சு போயிட்டா.
மனசு விட்டு அழலைனா ஏதாவது ஆயிரப்போகுது!
 
மேட்டு வீடு வெளியே சேர் போட்டு உட்கார்ந்திருந்த ஆண்கள் மத்தியில் முனி அடிச்சிருச்சா? முத்துப்பாண்டி வேலையா? என்ற சந்தேக பேச்சுகள்.  போலீஸ்காரர்களும் அவர்கள் பங்குக்கு வந்து விசாரித்து விட்டு போயிருந்தார்கள்.
 
ஊர்க்காரர்களுக்கு அவர்களையும் அறியாமல் முனி பயம் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தது.
 
முதல் ஆளாக தாமஸ் வந்து, மாலை போட்டு விட்டு அகல்யாவிடமும் சித்ரா மற்றும் கார்த்திகாவிடவும் தைரியமா இருங்க என்று ஆறுதல் சொல்லிவிட்டு வந்திருந்தான். சித்ரா அவனை ஏறிட்டு பார்க்கவே தைரியம் இல்லாமல், தலை குனிந்து இருந்தாள்.
 
சிட் அவுட்டில் நின்றிருந்த சகாயராஜும் திருமுடியும்... உண்மையிலேயே வருத்தத்தில் இருந்தார்கள். துஷ்டிக்கி வந்திருந்த சந்தனமேரியையும், பரிமளாவையும் கூட இருவரும் சீண்டவில்லை.
 
சகாயராஜ் திருமுடியிடம் கிசுகிசுப்பாக: என்னல... முத்துப்பாண்டி கடைசி மரியாதை செய்யறதுக்காக வருவானா? மாட்டானா?
 
திருமுடி: தெரியல சித்தப்பு. எல்லாரும் அவன் மேல கோவமா இருப்பாங்க. வருவானா இல்லையான்னு தெரியல. 
 
சகாயராஜ்: முத்துப்பாண்டி பண்ணிருப்பான்னு நினைக்கிறியா? கருப்பன் தாத்தா செத்தா, சொத்து விஷயங்கள்ல முத்துப்பாண்டிக்கு லாபம்ன்னாலும், அன்னைக்கு தான் நாம முனிய கண்ணால பார்த்தோமே.  ராத்திரி ரொம்ப நேரமா தாத்தா தூங்காமல் வெளியே சிட்டவுட்டிலேயே உட்கார்ந்து இருந்ததா கார்த்தி சொன்னா. அப்படி என்ன பிரச்சனையை பற்றி யோசிச்சிட்டு இருந்தாரோ தெரியல. ஒருவேளை வெளியில போயிருப்பாரோ! முனி தான் அடிச்சிருக்குமோ!
 
திருமுடி பதில் சொல்ல வாய் திறப்பதற்கு முன், தாமஸ் அவர்களை கடந்து சென்றான். அவனை சந்தேகமாக பார்த்த  திருமுடி,
 
"எல்லோருக்கும் முனி மேலயும், முத்துப்பாண்டி மேலயும் சந்தேகம். எனக்கு வேற ஒருத்தன் மேல சந்தேகமா இருக்கு", என்றான்.
 
சகாயராஜ்: யார் அது?
 
திருமுடி துப்பறியும் சாம்பு போல் தலையாட்டிக்கொண்டே "சீக்கிரம் சொல்றேன்", என்றான்.
 
சற்று நேரத்திற்கெல்லாம் மேட்டு தெருவில் புல்லட் சத்தம் கேட்க, முத்துப்பாண்டி பெரிய மாலையோடு வந்து இறங்கினான். 
 
துஷ்டி வீட்டில் கிசுகிசுப்பு சத்தங்கள் அடங்கின.  ஒரு சிலர் அவனை  முறைத்தார்கள். மற்றவர்கள் அவன் என்ன செய்கிறான் என்று ஆர்வமாக பார்த்தார்கள். பெரிய மாலையை கொண்டு வந்து கருப்பன் மேல் போர்த்தினான். அகல்யா அவனை பார்க்கவே இல்லை. அவள் உலகத்துக்குள் உறைந்து போயிருந்தாள்.
 
முத்துப்பாண்டி ஒரு சில வினாடிகள் நின்று அமைதியாக கண்ணாடி பெட்டிக்குள் தாத்தாவை பார்த்தான். தாத்தாவை சுற்றியிருந்த கூட்டத்தை ஒரு முறை பார்த்தான். யாருடைய பார்வையிலும் சினேகம் இல்லை. வீட்டை ஒரு முறை பார்த்துவிட்டு,  வந்த வழியே அமைதியாக திரும்பி சென்றான். 
 
அவன் தாய் ராஜலட்சுமி, சம்பிரதாயத்துக்கு கொஞ்ச நேரம் வந்து உட்கார்ந்து விட்டு, யாரிடமும் பேசாமல் கிளம்பி விட்டாள்.
 
நேரம் போய்க் கொண்டே இருந்தது. தாத்தாவை எடுக்க வேண்டிய நேரம் வந்தது. அகல்யாவிடம் இன்னமும் எந்த சலனமும் இல்லை. சிட் அவுட் ஓரமாக சுவரில் சாய்ந்து நின்றிருந்தாள்.
 
சுந்தர்ராமனும் தாமஸும் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.
 
சரஸ்வதி சுந்தர்ராமனிடம்: என்னங்க இவ?... காலையிலிருந்து நின்னது நின்னபடி ஒரே இடத்துல ஆடாம அசையாம நிக்கிறா. புத்தி கித்தி பேதலிச்சிட போகுது. எனக்கு ரொம்ப பயமா இருக்கு... என்றாள் பதட்ட குரலில்.
 
சுந்தர்ராமன் தலையில் அடித்துக் கொண்டு, கண்ணீர் சிந்தினார்.
 
"என்ன பண்ண சொல்ற? நானும் பல தடவை கூப்பிட்டு பாத்துட்டேன். அசையவே இல்லை. அவளால இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வர முடியுமா இல்லையான்னு கூட எனக்கு தெரியல. சரி காரியம் முடியட்டும், அதுக்கப்புறம் பேசிக்கலாம்னு விட்டுட்டேன்.
 
எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அவங்க அப்பா அம்மா இறந்தன்னைக்கு, கட்டுப்படுத்த முடியாம அழுதுகிட்டு இருந்த அகல் கிட்ட... இனிமே உனக்கு என்னைக்குமே துணைக்கு நான் இருக்கிறேன் தாயி. அப்பாவும் நான் தான். அம்மாவும் நான் தான்னு கருப்பன் சொன்னார். அதுவரைக்கும் அடக்க முடியாம அழுதுகிட்டு இருந்த அகல்யா, கண்ணை தொடச்சிகிட்டு ஒரு முறை நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். அந்த காட்சி இன்னும் எனக்கு ஞாபகத்துல இருக்கு."
 
சரஸ்வதி: அதெல்லாம் சரிங்க, காலையிலிருந்து பேச்சு மூச்சில்லாம நிக்கிறா... அடுத்தது ஏதாவது ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆச்சுன்னா என்ன பண்றது? 
 
அவள் பங்குக்கு ஏதேதோ புலம்பிவிட்டு  உள்ளே சென்றாள்.
 
சுந்தர் ராமனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தாமசை பரிதாபமாக பார்த்தார்.
 
"போஸ்ட்மார்ட்டம் பண்ண பாடி ரொம்ப நேரத்துக்கு தாங்காது.
 
அதான் பார்க்க வேண்டியவங்கல்லாம் பார்த்தாச்சே... எடுத்திடலாம். 
 
ஏற்கனவே சாயங்காலம் அஞ்சு மணி ஆயிடுச்சு"
 
என்று கூட்டத்தில் ஒரு சாரார் பேசிக் கொண்டிருந்தார்கள்.
 
ஏதோ பேசிக் கொண்டிருந்த சுந்தர் ராமனுக்கும் தாமஸ்க்கும் மேற்படி விஷயம் காதில் விழுந்தது.
 
திடீரென்று ஏதோ முடிவெடுத்தராய் சுந்தர்ராமன் கண்ணீரை துடைத்துக் கொண்டு எழும்பினார். கூட்டத்தை எல்லாம் விலக்கி கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்.
 
ஹாலில் ஒரு சில பெண்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களை கடந்து சித்ராவின் ரூமுக்குள் நுழைந்தார். சித்ரா கட்டிலில் உட்கார்ந்து இருக்க, கார்த்திகா ரூமின் ஒரு ஓரமாக தரையில் உட்கார்ந்து இருந்தாள். இருவருமே அழுதழுது முகம் சிவந்திருந்தது.
 
சுந்தர்ராமன் இருவரையும் பார்த்து," ரெண்டு பேரும் என் கூட வாங்க?"
 
சித்ரா புரியாமல்: எதுக்கு அங்கிள்?
 
சுந்தர் ராமன்: வாங்க சொல்றேன்...
 
இருவரும் கண்ணீரை துடைத்தபடி எழும்பி நிற்க, இருவர் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு, ஹாலைத் தாண்டி சிட்டவுட்டுக்கு வந்தார்.
 
துக்கத்துக்கு வந்த கூட்டத்தினர், என்னவோ ஏதோ என்று பார்க்க,  சித்ராவையும் கார்த்தியையும் அகல்யா முன் கொண்டு போய் சுந்தர்ராமன் நிப்பாட்டினார்.
 
பின்னர் அவர் அகல்யாவை பார்த்து,
 
"தாயி, இனிமே இவங்களுக்கு  நீதான்  துணை. இவங்களுக்கு அப்பாவும் நீதான். அம்மாவும் நீதான். தாத்தாவும் நீதான். இனிமே இவங்க உன் தங்கச்சிங்க இல்ல, உன் புள்ளைங்க."
 
அவர் சொன்னது தான் தாமதம், 
 
எங்கேயோ அவளை கட்டிப் போடப்பட்டிருந்த கயிறு விடுபட்டது. முரட்டுத்தனமாக வளைத்துப் பிடித்திருந்த வலை பிய்ந்தது. பூட்டப்பட்டிருந்த கதவு பட்டென்று திறந்தது. 
 
வெறித்திருந்த அகல்யாவின் விழிகளில் சலனம் தென்பட்டது.  டிராபிக் ஜாமாகிருந்த அவளின் எண்ண ஓட்டங்கள், க்ளியராகி ஓட ஆரம்பித்தன. உதடுகள் துடிக்க, கண்களில் கண்ணீர் தழும்ப ஆரம்பித்தது. சிறிய அலைகளாக புறப்பட்ட  விம்மல்கள் ஒன்று சேர்ந்து பேரலையாக மாறியது.
 
கூட்டத்தினர் கவலையாக  பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
அக்காவை பரிதாபமாக பார்த்தபடி நின்றிருந்த சித்ராவையும் கார்த்தியையும்... மாறி மாறி பார்த்தாள்.
 
அடைத்து வைத்திருந்த துக்கம், அணையை உடைத்து விட்டு, பெரும் பிரவாகமாய் வெளிப்பட்டது.
 
கண்களில் தாரைதாரையாக நீர் வழிய இருவரையும் பார்த்து கையை நீட்ட... அக்கா என்று கதறிக்கொண்டு இருவரும்  சென்று அவளைக் கட்டிக் கொண்டார்கள்.
 
"ஐயோ மக்களே!
நான் என்ன பண்ணுவேன்! தாத்தா நம்மள அனாதையா விட்டுட்டு போயிட்டாரே! இனிமே நமக்கு யார் இருக்கா? உங்கள எப்படி கரை சேர்க்க போறேன்... ஒண்ணும் தெரியலையே!"
 
பெருங்குரலெடுத்து மேட்டு வீடதிர, காவண வீடதிர, ஊரதிர கதறினாள்.
 
அவளுடைய இழப்பையும், இயலாமையும் ஒப்பாரி வைத்தாள். யாரும் அவளை தடுக்கவில்லை. சுந்தர்ராமனுக்கும் சரஸ்வதிக்கும் அப்பாடா என்றிருந்தது.
 
அக்கா கன்னத்தில் வழிந்த கண்ணீரை,  சித்ராவும், கார்த்தியும் மாறி மாறி துடைத்து விட்டார்கள். அழாதேக்கா என்று இருவரும் சமாதானம் சொன்னார்கள்.
 
பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் கண்களும் குளமாகின.
 
சுந்தர்ராமன் தூரத்தில் நின்றிருந்த தாமசை பார்த்து, "எப்படி?" என்று இரு புருவத்தையும் உயர்த்தி கேட்க, சூப்பர் சார் என்று சைகை செய்தான்.
 
மொத்தத்தில் பெரிய கருப்பனின் சாவு, ரஸ்தா காட்டை புரட்டி போட்டது. முனி ஓட்டம் மறுபடியும் பேசு பொருளானது.
 
இரண்டு நாட்களுக்குப் பிறகு,
காலை 10 மணி
 
திருமுடி பனையூர் பள்ளிக்கூடத்தை நோக்கி சென்று கொண்டிருந்தான். கிளர்க் பரமசிவத்தை பார்த்து, தள்ள வேண்டியது தள்ளினால், எல்லாத்தையும் கக்கி விடுவான்.
 
தாமஸ் பத்தி  விசாரிப்பது தான் அவன் நோக்கம். 
முக்கியமா அவன் அப்ளிகேஷன் ஃபார்ம், ஃபோட்டோ, ஆதார் கார்டு, எல்லாவற்றையும் செக் பண்ணும் நோக்கத்தில் சென்று கொண்டிருந்தான்.
 
அதே நேரம்,
 
அஞ்சுகிராமத்திலிருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில் ஒதுக்குப்புறமான இடத்தில் இருந்த அந்த வீட்டிலிருந்து தாமஸ் வெளிப்பட்டான். அவன் பின்னலையே மற்றொருவன் பார்ப்பதற்கு அடியாள் அம்சங்கள் அனைத்தும் தெரிந்தன. இருவரும் வெளியே வந்ததும், அவன் கதவை மூடினான். 
 
அவன் மூடுவதற்குள் உள்ளே எட்டிப் பார்த்து விடலாம். வீட்டுக்குள் சேரில் ஒருவன் கட்டி வைக்கப்பட்டிருந்தான். மயங்கி கிடந்ததால், அவனிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லை.
 
தாமஸ்:
 
"ஏலே, நான் சொல்ற வரைக்கும் இன்னும் கொஞ்ச நாள் ஜாக்கிரதையா பாத்துக்க. வந்த வேலை பாதி தான் முடிஞ்சிருக்கு. மீதி முடிகிற வரைக்கும், இவன் தப்பிச்சு போகாம  இருக்கணும்.."
 
"நான் பாத்துக்குறேண்ணே.."
 
"துரை, பேமெண்ட் பத்தி கவலைப்படாத. நீ கேக்குறதுக்கு மேலேயே செய்றேன்."
 
"சரிண்ணே..." என்று சொல்லிக் கொண்டே, தலையை சொரிந்தபடி அசிங்கமாக சிரித்தான்.
 
தாமஸ் சிரித்தபடி, பைக்கில் ஏறி ஸ்டார்ட் செய்து கிளம்பினான்.
 

தொடரும்

 

உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது.

https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/


   
ReplyQuote
Dennis jegan
(@dennisjegan)
Estimable Member Author
Joined: 5 months ago
Posts: 81
Topic starter  
கருப்பு 29
 
பனையூர் பள்ளிக்கூடம் வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது.  வகுப்பறைகளில் இருந்து ஆசிரியர்களின் குரலை விட, மாணவர்களின் பேச்சு குரல்கள் அதிகமாக கேட்டது. முன்னே இருந்த மைதானத்திலும் ,பின்னே இருந்த வெட்டவெளியிலும் நிறைய பசங்க சுத்தப்படுத்திக் கொண்டும்...செடிகளுக்கு, மரங்களுக்கும், தண்ணீர் விட்டுக் கொண்டும் இருந்தார்கள். அதுதான் அவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்பு.
 
தலைமை ஆசிரியருக்கு பக்கத்திலிருந்த சிறிய ஆபீஸ் ரூம் வாசலில், திருமுடி நின்றான். உள்ளே பரமசிவம் உட்கார்ந்திருக்க, வாசலில் நின்றபடி, " அண்ணன் ஒரு நிமிஷம், வெளிய வாங்க..", என்று கூப்பிட்டான்.  திருமுடி வந்தாலே ஏதாவது விவகாரமாக தான் இருக்கும் என்று பரமசிவத்துக்கு தெரியும். அதனால் பக்கத்தில் இருந்த மற்றொரு கிளார்க் லட்சுமியை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, வெளியே நில்லென்று கண்ணை காட்டினார். தீக்குச்சி வெளியே வராண்டாவில் நின்று ஸ்கூலை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
 
இன்றைக்கு ஸ்கூலுக்கு  தாமஸ் வரவில்லை என்று அவனுக்கு தெரியும்.  அஞ்சு கிராமத்திற்கு அவன் பைக்கில் போவதை பார்த்துவிட்டு தான் தீக்குச்சி வந்திருந்தான்.
 
ஐந்து நிமிடத்தில் வெளியே வந்து, பரமசிவம் என்ன விஷயமென்று கேட்க,
 
"அண்ணே உங்களால் ஒரு காரியம் ஆகணும். புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கிறாரே தாமஸ், அவர பத்தி கொஞ்சம் விசாரிக்கணும். அப்புறம் அவரு ஜாயின் பண்ணும் போது கொடுத்த அப்ளிகேஷன் ஃபார்ம், ஆதார் கார்டு, இதெல்லாம் ஒரு தடவை பார்க்கணும்.."
 
பரமசிவம் ஒரு சைடு புருவத்தை உயர்த்தி, எதுக்காக என்று கேட்க,
 
"நல்ல வரன் ஒண்ணு வந்திருக்கு. ரொம்ப வேண்டப்பட்ட குடும்பம். வாத்தியாரும் எப்படிப்பட்ட குடும்பம், என்ன ஏதுன்னு தெரிஞ்சுச்சுன்னா... அதுக்கப்புறம் போய் பேசிக்கலாம்ன்னு பார்க்கிறேன். நான் விசாரிச்ச விஷயம் அவருக்கு தெரிய வேண்டாம். இந்தாங்க  செலவுக்கு வச்சுக்குங்க", என்று பாக்கெட்டில் 200 ரூபாயை திணித்தான்.
 
பரமசிவம்: வீட்டு புரோக்கர் தானே நீ, எப்ப கல்யாணம் புரோக்கரா மாறுன? சரி அது இருக்கட்டும். ஆனா அவர் டீடைல்ஸ்ல்லாம் ஸ்கூல் ஆபீஸ்ல இருக்காது. அப்பாயின்மென்ட் ஆர்டர் மட்டும்தான் இருக்கு. மத்தபடி வேற தகவல் வேணும்னா நாகர்கோவில் DEO ஆபீஸ்ல போய் தான் கேட்கணும்.
 
திருமுடி: அப்பாயின்மென்ட் ஆர்டர்ல போட்டோ ஒட்டி இருந்துச்சா?
 
பரமசிவம்: ஆமா...
 
திருமுடி: அதையாச்சி பாக்கலாமா?
 
பரமசிவம் அவன் கொடுத்த 200 ரூபாய்க்காக, கடமை உணர்வுடன் உள்ளே சென்று பைல்கள் சிலவற்றை புரட்டி, ஒரு பேப்பரை எடுத்துக் கொண்டு வந்து நீட்டினார். திருமுடி ஆர்வமாக வாங்கி பார்க்க, தாமஸின் அப்பாயிண்ட்மெண்ட் லெட்டரும், அவனுடைய போட்டோவும் ஒட்டப்பட்டு இருந்தது.
 
திருமுடி சோர்வடைந்தான். அவனைப் பற்றி விசாரிக்க வேறு வழியே இல்லையா? 
 
திருமுடி: ஆள் எப்படிண்ணே?
 
பரமசிவம்: ஆள் நல்ல மிடுக்கன். எல்லார்ட்டயும் நல்ல பழகுறாப்புல. வந்த ஒரே வாரத்தில், நல்ல பேர் வாங்கிட்டாரு. என்ன ஒரே விஷயம், நிறைய லீவு போடுறாரு. கேட்டா வேற ஊர்லருந்து வந்திருக்கிறதுனால, தங்கறது, சாப்பிடறதுன்னு எதுவும் செட் ஆகல. முதலில் கொஞ்ச நாள் அதிக லீவ் போடற மாதிரி இருக்கும்னு சொல்லி ஹெட் மாஸ்டரை வளச்சி போட்டுருக்கிறார். வழக்கமா எதுக்கும் வளஞ்சி கொடுக்காத ஹெட் மாஸ்டர், என்னவோ தெரியல, இவன் பேச்சுக்கு மட்டும் தலையாட்டுறாப்புல.
 
திருமுடி மேலும் பல கேள்விகள் கேட்டுவிட்டு உருப்படியாக எதுவும் தேராததால், அவரிடம் விடை பெற்றுக் கொண்டு ஊரை நோக்கி சென்றான்.
 
தாமஸ் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு இடமா இருக்கு. ஆனா எந்த ஆதாரமும் கிடைக்கல்லையே! நமக்கு எதுக்கு வேண்டாத வேலை, பேசாம விட்டுடலாமா? 
 
அதெப்படி விடறது? கருப்பன் தாத்தா குடும்பம் நமக்கு எவ்வளவு வேண்டப்பட்ட குடும்பம். தாத்தா இல்லாம, அந்த பொண்ணுங்க பாவம் அனாதையா நிக்குதுக. இந்த பய வேற ஏதோ பெரிய திட்டத்தோட வந்திருக்கிற மாதிரி தெரியுது!!!
 
யோசித்தபடியே வெயிலில் காய்ந்த அனாதை சாலையில் சென்றான். அவன் அடிக்கடி லீவ் போடும் விஷயம் அவனை உறுத்தியது.
 
எப்படி இந்த விஷயத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வருவது? 
 
ஐடியா!!! 
 
பிரகாசமானான், கை விரல்களில் சொடக்கு போட்டு, வானத்தைப் பார்த்து உற்சாகமாக சுட்டு விரலை நீட்டி,
 
"மவனே!!! இரு... நாளைக்கு உனக்கு வலை விரிக்கிறேன்டா",  என்று யாருமில்லாத சாலையில் கத்தினான்.
 
நாகர்கோவில் கோர்ட் ரோடு,
SK legal firm
மதியம் ஒரு மணி
 
பக்கத்து டேபிள்களில் இருந்தவர்கள் சாப்பிட சென்றிருக்க, ஹேமாவும் மூச்சு முட்டி கொண்டிருந்த கம்ப்யூட்டருக்கு ஓய்வு கொடுத்து விட்டு, நெட்டி முறித்துக் கொண்டாள்.
 
அகல்யாவின் ஞாபகமாகவே இருந்தது. பாவம் என்ன கஷ்டப்படறாளோ தெரியலையே! போய் பார்க்கலாம் என்றால், அப்பாவும் அம்மாவும் இன்னும் விரோதத்துடன் இருந்தது தெரிந்தது. கருப்பன் தாத்தா துஷ்டி அன்றைக்கு, இருவரும் அவளை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தது, அவளுக்கு மனசுக்குள் ரத்தக்கீரலை ஏற்படுத்தியது.
 
நான் மட்டும் என்ன சாதாரண காரியமா பண்ணினேன்.  ஜென்மத்துக்கும் மறக்க முடியாத மாதிரி நம்பிக்கை துரோகத்தையும், கேவலத்தையும் தானே ஏற்படுத்தினேன். எனக்கு இன்னும் வேணும்!
 
சாப்பிடுவதற்காக எழும்பிய போது, செல்போன் சிணுங்கியது. எடுத்து பார்த்தால். புது நம்பர். தெரியாத நம்பர்களில் இருந்து கால் வந்தாலே கொஞ்சம் இப்போது பதட்டமானது.
 
போனை எடுத்து ஹலோ என்றாள்.
 
எதிர்முனை: நல்லா இருக்கியா? அன்னைக்கு உனக்கு கால் பண்ணிருந்தேனே!
 
ஹேமா கடுப்பாக: தெரியுது, சொல்லுங்க. உங்களுக்கு என்ன வேணும்? முதல்ல நீங்க யாரு? உங்க பேர் என்ன?
 
எதிர்முனை: ஊரோ பேரோ முக்கியமில்ல.. நான் சொல்ற விஷயம் தான் முக்கியம். Listen to me. நீ என்ன பண்ற? எங்க போற? எங்க வர்ற? எல்லாமே வாட்ச் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன். உனக்கே தெரியாம, நாள் பூராவும் நிழல் மாதிரி உன்னை பின் தொடர்ந்துகிட்டு தான் இருக்கேன். இன்னைக்கு நீ உடுத்திட்டு வந்திருக்கிற ஸ்பைஸ் கிரீன் கலர் புடவையும் கான்ட்ராஸ்டிங்கான பிரவுன் ரவிக்கையும் கூட தெரியும். அதென்ன எப்பவும் கான்ட்ராஸ்டிங்காவே உடுத்துற? மேட்சிங்கா உடுத்துறது உனக்கு பிடிக்காதா?
 
ஹேமா அதிர்ந்து போனாள். வயிற்றுக்குள் பயப் பட்டாம்பூச்சிகள் படபடத்தது. யார் இவன்? எதற்காக என் பின்னாலேயே சுற்றுகிறான்?
 
ஹேமா பதட்ட குரலில், "யார் நீ? உனக்கு என்னதான் வேணும்? அன்னைக்கு எதுக்கு என் மகளை பார்க்க போன?"
 
எதிர்முனை சிரித்தது. சிரிப்பில் இகழ்ச்சி இழையோடியது.
 
"எனக்கு என்ன வேணும்?Good. இப்பதான் நேரா விஷயத்துக்கு வந்திருக்க. அதான் அன்னைக்கே சொன்னேனே! எனக்கு நீதான் வேணும். பயப்படாத! பெர்மனென்டால்லாம் வேண்டாம். ஆசை தீர வரைக்கும் சும்மா கொஞ்ச நாள். May be few times... அவ்வளவுதான். அதன்பிறகு உன்ன தொந்தரவு பண்ண மாட்டேன்.."
 
ஹேமாவுக்கு அவன் சொன்னது புரியவில்லை என்றாலும், ஏதோ நமக்கு வேட்டு வைக்கிறான் என்றளவுக்கு புரிந்தது.
 
"நீ என்ன சொல்ல வர்ற? எனக்கு புரியல!"
 
"புரியலையா... நீ என்ன சின்ன பாப்பாவா? சரி உனக்கு புரியிற மாதிரி சொல்றேன். எனக்கு நீ பெர்மனெண்டா செட்டப்பா இருக்க வேண்டாம். ஒரு சில நாட்கள் மட்டும் வந்து என் ஆசையை தீர்த்துட்டு போ.."
 
அவன் முடித்ததும், இவள் வெடித்தாள்.
 
"டேய் பொறுக்கி!!! என்ன பேச்சு பேசுற?" என்று உணர்ச்சி வசப்பட்டு சீறினாள். பின்னர் சூழ்நிலையை உணர்ந்து, குரலை தாழ்த்தினாள்.
 
"என்னடா நினைச்சு பேசிட்டு இருக்க? ராஸ்கல். போனை வைடா..."
 
ஹேமாவின் முகத்தில் சிகரெட் வைத்து கொளுத்திக் கொள்ளலாம்ன்கிற அளவுக்கு உஷ்ணத்துடன் கனன்று கொண்டிருந்தது.
 
"இருமா, உணர்ச்சிவசப்படாதே. உன் குழந்தையை டே கேர்ல போய் பார்க்க தெரிஞ்ச எனக்கு, தூக்கிட்டு போறதுக்கு ரொம்ப நேரம் ஆகாது, புரியுதா? அதெல்லாம் யோசிச்சு பேசணும். உன் வளைவுகள் என்ன கிரங்கடிக்குது. மார்பு, இடுப்பு, பேக்ல்லாம் அளவா இருக்கு. உன் சம்மதத்தோட உன்னை அனுபவிக்கணும்னு நினைக்கிறேன். அதனால தான் இவ்வளவு பொறுமையாக பேசுறேன்."
 
ஹேமாவின் உடம்பின் ஒவ்வொரு செல்களிலும் சில்லென்ற பயம் ஊடுருவியது. அவள் உதடுகள் ஒட்டிக்கொண்டது.
 
அவன் தொடர்ந்தான்.
 
"நான் என்ன பெர்மனெண்டா என் கூட இருன்னா சொன்னேன். ஏதோ ஒரு தடவையோ, ரெண்டு தடவையோ ஆசைக்கு ஊறுகாய் மாதிரி தொட்டுகுறேன்னு தானே   சொன்னேன். நீ வர்றதும் தெரியாது, போறதும் யாருக்கும் தெரியாது. சாதாரண வேலை, சாதாரண வீடு, ஏன் கஷ்டப்படுற? நான் சொல்றபடி செய் பத்து லட்ச ரூபாய் தரேன். அதை வச்சி செட்டில் ஆயிரு... போலீசுக்கு போலாம், இல்ல வேற யார்கிட்டயாவது சொல்லி உதவிக்கு கூப்பிடலாம்னு நினைச்ச...."
 
மறுபடியும் சிரிப்பு.
 
"உன் குழந்தை பெயர் என்னது?? ஆங்.... காவியா. அதோட உன் குழந்தையை மறந்துரு. எவ்வளவு நாள் போலீஸ் உனக்கு பாதுகாப்பா இருக்க முடியும்?"
 
கோபத்தில், பயத்தில், வெப்ராளத்தில் ஹேமாவின் மார்புகள் விம்ம, என்ன செய்வது, என்ன பேசுவதென்று தெரியாமல், உதடுகள் துடித்தது. கண்களில் நீர் முத்தாக மாற தயங்கி, மிரண்டு கட்டிக் கொண்டிருந்தது.
 
"ஒண்ணும் அவசரம் இல்ல. யோசிச்சு பார்.  என் கெஸ்ட் ஹவுஸ்ல யாரும் இருக்க மாட்டாங்க. ஒரு மணி நேரம் தான். வேலை முடிந்ததும், எந்த சேதாரமும் இல்லாமல் உன்னை அனுப்பி வைக்கிறேன். உன் பேக் ஸ்டோரி விசாரிச்சு தெரிஞ்சுகிட்டேன். எவனுக்காகவோ அப்பா அம்மாவை விட்டுட்டு ஓடி வந்தவ தானே நீ... அவனும் என்ன மாதிரி தான், ஆசை தீர்ந்ததும் உன்ன விட்டுட்டு வேற எவ கூடயோ போயிட்டான். அவனாவது சும்மா போனான். நான் உனக்கு பணம் தரேன்னு சொல்றேன். நல்லா யோசிச்சு பார். ஒரு வாரம் தான், என் ஆசை தீர்ந்ததும், அதற்குப் பிறகு நீ யாரோ, நான் யாரோ... ஓகேவா? நாளைக்கு கால் பண்றேன். Bye darling."
 
லைன் கட்டானதும், விக்கித்து, பொம்மை போல், சேரில் பட்டென்று உட்கார்ந்தாள். சாதாரண மிடில் கிளாஸ் குடும்பத்தை சேர்ந்தவள்.  இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் அவள் சினிமாவில் தான் பார்த்திருக்கிறாள்.
 
என் கூட வந்து படு... இல்லன்னா உன் குழந்தை காலின்னு மிரட்டுறான். துணை இல்லாமல், நான் இருப்பதை தெரிந்து வைத்திருக்கிறான். இப்ப என்ன செய்வது?
 
Lunch time. ஆபீசுக்குள் யாரும் இல்லை. 
 
"நாள் பூராவும் நிழல் மாதிரி உன்னை பின் தொடர்ந்துகிட்டு தான் இருக்கேன்...." 
 
அவன் குரல் அவள் தலைக்குள் ராட்சசதனமாக ஒலித்தது. யாரோ பார்த்துக் கொண்டிருப்பது போல் குறுகுறுத்தது. யாருமே இல்லாத ஆபீசுக்குள் யார் பார்க்க முடியும் என்று அவளுக்கு தெரிந்திருந்தாலும், விளக்கவும் விளங்கவும் முடியாத பயம். 
 
முந்தானை சேலையை இழுத்து போர்த்திக் கொண்டாள். நெற்றி வியர்வையை முந்தானை தலைப்பால் துடைத்துக் கொண்டாள். பயத்தில் மூச்சிரைக்க, நெஞ்சில் கை வைத்து அடக்க முயற்சித்தாள். படபடப்பு அடங்கவில்லை. வாட்டர் பாட்டிலை திறந்து, இரண்டு வாய் குடித்தாள். 
 
அய்யய்யோ!!! இதை எப்படி மறந்தேன்! தலையில் அடித்துக் கொண்டாள்.
 
உடனடியாக டே கேருக்கு கால் பண்ணி, காவியாவை யார் பார்க்க வந்தாலும், அனுமதிக்க கூடாதுன்னு சொல்லணும். பட்டென்று செல்போனை எடுத்து போன் செய்ய ஆரம்பித்தாள்.
 
மேட்டு வீடு 
மாலை 6.30 மணி
 
இருள் இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு ஊரை  அரவணைப்பதற்காக ஓடி வந்து கொண்டிருந்தது. மேட்டு தெரு மரங்களில் பறவைகளின் கீச்சொலிகள். பகல் டூட்டியை முடித்துக் கொண்டு அடைந்து கொண்டிருந்தன.  காலேஜுக்கு சென்றிருந்த சித்ரா இன்னும் வந்திருக்கவில்லை. காலேஜுக்கு போக மாட்டேன் என்றவளை, அகல்யா தான் வற்புறுத்தி அனுப்பி  வைத்திருந்தாள். 
 
ஸ்கூலுக்கு சென்று வந்த கார்த்திகா,  குருவிக்கு பால் சோறு வைத்துக் கொண்டிருந்தாள்.
 
"யாருமா வீட்ல?" 
 
வாசலில் குரல் கேட்க, வீட்டுக்குள் இருந்து வந்து அகல்யா எட்டிப் பார்த்தாள். சிட் அவுட்டுக்கு முன்னால், முத்துப்பாண்டியும், வேறு யாரோ இரண்டு பேரும் நின்றிருந்தார்கள்.
 
முத்துப்பாண்டியை பார்த்ததும், வழக்கமாக அகல்யா புன்னகைப்பாள். ஆனால் தாத்தா சாவுக்கு அவன் காரணமாக இருக்கலாம் என்ற பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்ததால், புன்னகை மிஸ்ஸிங்.
 
அகல்யா சுரத்தில்லாமல்: என்னண்ணே, என்ன விஷயம்?.. என்று கேட்க,
 
முத்துப்பாண்டி: இந்த விஷயத்தை இந்த சமயத்தில் பேசுவது சரி இல்ல தான். இருந்தாலும், வேறு யாருக்கும் எந்த ஆபத்தும் வந்துறக்கூடாது ங்கறதுக்காக, வேறு வழிஇல்லாம வந்தேன். தாத்தா கிட்டயும், உன்கிட்டயும் நான் எவ்வளவோ சொன்னேன், நீங்க கேட்கல. காவண வீடு பிரச்சனையை என்கிட்ட விட்ருங்க, நீங்க தலையிடாதீங்க, நான் பாத்துக்குறேன்னு சொன்னேன்... இப்ப என்னாச்சு பாத்தியா? இப்பமாச்சும் நான் சொல்றதை கேளு. காவண வீடு விஷயத்தை என்கிட்ட விட்டுரு. இந்த பவர் பத்திரத்தில் கையெழுத்து போட்டு குடு, மிச்சத்தை நான் பாத்துக்குறேன்.
 
வழக்கமாக அவளிடம் மூஞ்சி கொடுத்து பேசாதவன், ஏனோ முகத்தைப் பார்த்து பேசினான்.  ஆனாலும் காவண  வீடு விஷயத்தில் அவளுக்கு ஒரு முடிவுக்கு வர முடியவில்லை, தாத்தாவை பலிக் கொண்டது காவண வீடா? இல்லை, ஊரில் சந்தேகப்படுவது போல் முத்துபாண்டியா என்று உறுதியாக தெரியாத சூழ்நிலையில், காவண வீடு விஷயத்தில் முடிவெடுக்க முடியவில்லை.
 
அவள் தயக்கத்தை புரிந்து கொண்டவன் போல்,
 
முத்துப்பாண்டி:
"தாத்தா சாவுல  நிறைய பேருக்கு, என் மேல சந்தேகம் இருக்கு. என்னோட தனிப்பட்ட பிரச்சினைகளுக்காக வீட்டை உரிமையா கேக்குறேன்... அதுக்காக தாத்தாவை கொலை செய்கிற அளவுக்கு நான் மோசமானவன் கிடையாது. அதை நீ புரிஞ்சுக்கணும்... அதனால என்னை நம்பி கையெழுத்து போட்டு கொடு...."
 
அகல்யாவுக்கு தடுமாற்றம். காவண வீட்டினால் தான் இவ்வளவு பிரச்சனை? கையெழுத்து போட்டு கொடுத்துறலாமா? அல்லது, தாத்தா சாவில் இவனுக்கு தொடர்பு இல்லைன்னு முதலில் நிரூபணம் ஆகட்டும், அதன் பிறகு கொடுக்கலாமா?
 
அகல்யாவை தெளிவாக யோசிக்க விடாமல், பேப்பரை எடுத்துக் கொண்டு வந்து அவள் முன்னால் நீட்டிக்கொண்டே இருந்தான். கையெழுத்து போடு என்று திரும்பத் திரும்ப வற்புறுத்தினான்.
 
ஏற்கனவே தாத்தாவை இழந்ததில் உடைந்து போயிருந்தவள், இவனிடம்  மேற்கொண்டு மல்லு கட்டிக் கொண்டிருக்க விருப்பப்படாமல், பத்திரத்தை கையில் வாங்கினாள்.
 
அரை மனதோடு  அவள் கையெழுத்து போட போகும் நேரத்தில்,
 
டப் டப் பென்று.... யாரோ பின்னால் கைதட்டும் சத்தம் கேட்க... அனைவரும் திரும்பி பார்த்தார்கள். கேட் வாசலில் தாமஸ் நின்றிருந்தான்.
 
முத்துப்பாண்டி முகத்தில் உலக மகா எரிச்சல்.
 
"கரெக்டான நேரத்துல வந்து கெடுத்துட்டானே ..... மவன்!"
 
தாமஸ்: தாத்தா இறந்து இரண்டு நாள் கூட முழுசா ஆகல. அதுக்குள்ள தனியா இருக்குற பொண்ணுங்க கிட்ட, வீட்ட ஆட்டைய போடுறதுக்கு வந்துருக்கியே, நீயெல்லாம் ஒரு மனுஷனா?... என்று பேசியபடியே அவர்களை நோக்கி வந்தான். அகல்யாவை நோக்கி சென்றான். அவள் கையில் வைத்திருந்த பாத்திரத்தை வாங்கி, சரக் சரக் என்று கிழித்து காற்றில் பறக்க விட்டான்.
 
முத்துப்பாண்டி இதை சற்றும்  எதிர்பார்க்கவில்லை: "லேய், இது எங்க குடும்ப விஷயம், நீ யார் இதெல்லாம் கேக்குறதுக்கு?"
 
தாமஸ் சிரித்தான்.
 
"நான் ரோட்டில் போறவனாவே இருந்துட்டு போறேன். நான் கேக்குறதுக்கு மட்டும் நீ பதில் சொல்லு? வீட்ட வாடகைக்கு விடக்கூடாதுன்னு தாத்தாவை மிரட்டிருக்க.  அகலை மிரட்டிருக்க... என்ன காலி பண்ண சொல்லி மிரட்டினே...  இந்த வீட்ல என்ன பிரச்சனை நடந்தாலும், என்ன சாவு விருந்தாலுமே அதுக்கு நீ தான் காரணம்ன்னு சந்தேகப்படுவதற்கு நிறையவே முகாந்திரம் இருக்கு. இந்த சூழ்நிலையில் எந்த தைரியத்தில் நீ வந்து வீட்ட கேக்குற?"
 
முத்துப்பாண்டி ஆக்ரோஷமாக குரலை உயர்த்தி, " லே லேய்... போல உன் சோலிய பார்த்துகிட்டு... போலீஸ்காரங்களே என் மேல தப்பில்ல. முனி தான் காரணம்ன்னு பைலை க்ளோஸ் பண்ணிட்டாங்க. உனக்கு என்ன மயிர்ல வந்துச்சு? என் வழியில குறுக்க வராதே. ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டேன்", சுட்டு விரலை உயர்த்தி எச்சரிப்பது போல் சொன்னான்
 
தாமஸ் ஃபுல் ஸ்லீவ் சட்டையை மடக்கி விட்டுக்கொண்டு, என்ன பண்ணுவ என்று கேட்க, முத்துப்பாண்டி ஆக்ரோஷமாக தாமசை நோக்கி சென்றான்.
 
அகல்யா பதறினாள்.
 
"ஐயோ பிரச்சனை எதுவும் வேண்டாம்...."
 
முத்துப்பாண்டி கூட வந்த இருவரும், சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்கப்பா என்பது போல் சலிப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
 
முத்துப்பாண்டியும் தாமஸும் நேருக்கு நேராக, மிக அருகில், இருவர் மூச்சுகளும் கைகுலுக்கும் தூரத்தில், வந்ததும், நின்றார்கள். ஒருவரை ஒருவர் கடித்து குதறுவது போல் பார்த்துக் கொண்டார்கள்.
 
முத்துப்பாண்டி கண்கள் ரத்த சிவப்பாக, பற்களை நறநறவென கோவத்தில் கடிக்கும் சத்தம், தாமசுக்கு கேட்டது. தாமஸ் கண்களில் அனல் பறந்தது.
 
முத்துப்பாண்டி குரலை தழைத்து மற்றவர்களுக்கு கேட்காமல், ஆனால் 100% சதவீதம் ஆக்ரோஷத்துடன்,
"டேய், வீணா என் வழியில் வராத, பொலி போட்டுருவேன்..", என்றான்.
 
தாமஸ்: வாத்தியார்ன்னா ஒயிட் அண்ட் வெயிட் போட்டுட்டு, டக்கின் பண்ணிக்கிட்டு, சோடாபுட்டி கண்ணாடி மாட்டிகிட்டு, சட்டை பாக்கெட்ல கண்ணாடி கவரை சொறிகிட்டு, சண்டை போடாம சாத்வீகமாக பேசுவாங்கன்னு நெனச்சியா? நான் அப்படி இல்லடா. மவனே! ஓவரா பேசினா தவடா சைடு வாங்கிக்கும்.
 
என்னடா இப்படி பேசுறான் என்று முத்துப்பாண்டிக்கு அதிர்ச்சியாக இருந்தாலும், அவன் காட்டிக் கொள்ளாமல்,
 
"யார்ரா நீ? உண்மையிலேயே வாத்தியார் தானா? எதுக்குல வந்திருக்க..... தே மவனே?"
 
"நீ எதுக்கு வந்திருக்கியோ அதுக்கு தான்ல நானும் வந்துருக்கேன்...தே மவனே ", என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்ன தாமஸ்,  அவனுக்கு எரிச்சலூட்டும் படி சிரித்தான்.
 
முத்துப்பாண்டி,"லே..." என்று கூச்சலிட்டு, அவன் சட்டை காலரில்  கை வைக்க,
 
எடுல கைய என்று தாமஸ் கையை பிடித்து வளைத்தான். கைகலப்பு ஏற்படுவதற்குக்குண்டான அனைத்து சாத்தியக் கூறுகளும் தெரிய, அகல்யா பதை பதைத்தாள்.
 
உதவிக்கு வந்த மரியாதைக்குரிய வாத்தியாரை, முத்துப்பாண்டி தாக்கிருவானோ என்று அவளுக்கு பயம்.
 
"நிறுத்துங்கப்பா... கருப்பன் தவறி போய் முழுசா ரெண்டு நாள் கூட ஆகல, அதுக்குள்ள இங்க என்ன சண்டை?",  என்று கேட்டபடி, கேட்டை திறந்து கொண்டு வந்தார் சுந்தர்ராமன். 
 
அவருக்கு பின்னால், கேட்டுக்கு வெளியே நின்று சடைசாமி எட்டி பார்த்துக் கொண்டிருந்தான்.
 
தாமஸ் சட்டை காலரில் இருந்த முத்துப்பாண்டியின் கையை தட்டி விட்டபடி,  
 
"இவன்தான் தனியா இருக்கிற  பொண்ணு கிட்ட தேவையில்லாம பிரச்சனை பண்றான்?", என்றான்.
 
சுந்தர் ராமன்: பாண்டி, உனக்கு இதே வேலையா போச்சு. வீணா பிரச்சனை பண்ணாத போயிரு.
 
முத்துப்பாண்டி: என்ன வாத்தியாரே, நீயும் இந்த வெளியூர்க்காரனுக்கு  சார்பா பேசிட்டு இருக்கியா?
 
சுந்தர்ராமன்: தம்பி, வெளியூர்க்காரன் சார்பாக பேசல, நியாயத்தின் சார்பாக பேசுறேன். நான் மதியம் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் விசாரிச்சேன். பிரேத பரிசோதனை அறிக்கையில் தலையில் அடிபட்டதனால  சாவு ஏற்பட்டுருக்குன்னு சொல்லிருக்காங்க. முனி அடிச்சதனாலயா? இல்ல, வேறு யாராவது அடிச்சதுனாலையான்னு முதலில் கண்டுபிடிக்கட்டும்? அந்தப் பிரச்சினைல்லாம் ஓய்ந்த பிறகு வீடு விஷயத்தை பார்த்துக்கலாம். தாத்தா இறந்து போன சோகம் தாங்காம இருக்கிற அந்த பச்சை புள்ளைங்கள கொஞ்ச நாள் நிம்மதியா இருக்க விடு.
 
பாண்டி அகல்யாவை, தாமஸ்சை, சுந்தர்ராமனை,  மாத்தி மாத்தி வெறியுடன் பார்த்தான்.
 
"எல்லாரும் என்ன பண்றீங்கன்னு தெரியாம பண்றிங்க. அனாவசியமா காவண வீட்ட இழுத்து, முனி  கோபத்துக்கு ஆளாயிட்டீங்க. கருப்பன் தாத்தாவையும் பலி கொடுத்துட்டீங்க.  தடுக்கலாம்னு நினைச்சா என்னையும் மதிக்காம எடுத்தெரிஞ்சு பேசுறீங்க. எவனோ வெளியூர்க்காரணை நம்புறீங்க.என்னென்ன பண்ண போறான்னு தெரியல. அந்த முனிக்கு தான் வெளிச்சம். இனி என்னென்னல்லாம் நடக்க போகுதோ.... யாரெல்லாம் சாகப் போறாங்களோ.... வாங்கய்யா போலாம்..."
 
என்று சொல்லிவிட்டு முத்துப்பாண்டி விருட்டென்று கேட்டை நோக்கி நடந்தான். அவன் கூட வந்த மற்ற இருவரும், அவனை பின் தொடர்ந்தார்கள்.
 
சுந்தர் ராமன் தாமசின் தோளில் ஆதரவாக தட்டி கொடுத்தார்.
 
தாமஸ் வாட்சை பார்க்க மணி இரவு ஏழு.
 
அன்றைய இரவு, அடுத்த பலிக்காக அமைதியுடன் காத்திருந்தது.
 
தொடரும்
 
உங்களின் மேலான கருத்துக்களுக்காக கீழே உள்ள லிங்க் காத்து கொண்டிருக்கிறது.

https://kavichandranovels.com/community/dennis-jegans-novels-comments-and-discussions/


   
ReplyQuote
Page 2 / 4

You cannot copy content of this page